ஈரான் மீதான பொருளாதாரத் தடையை தவிர்ப்பது எதிர்விளைவுகளை உண்டாக்கும்: ஐரோப்பிய யூனியனுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஈரானுக்கு எதிராக தாங்கள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் முயன்றால், அது எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று அமெரிக்கா எச்சரிusairanத்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ கூறியதாவது: ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக, புதிய பணமாற்ற முறையை உருவாக்க சில நாடுகள் திட்டமிட்டு வருவதாக வெளியாகும் தகவல்கள் அதிருப்தி அளிப்பதாக உள்ளன.இத்தகைய நடவடிக்கைகள் உண்மையில் எதிர்விளைவுகளைத்தான் உருவாக்கும்.மேலும், மண்டல மற்றும் உலக அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் என்றார் அவர்.

தனது அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த 2015}ஆம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டன. ஒபாமா அதிபராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சியின் பலனாக உருவான இந்த ஒப்பந்தம், ஈரானை அணு ஆயுதங்கள் செய்யவிடாமல் தடுப்பதற்கு போதுமானதாக இல்லை என்று டொனால்ட் டிரம்ப் விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில், அந்த ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக டிரம்ப் கடந்த மே மாதம் 8}ஆம் தேதி அறிவித்தார். இதற்கு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிற நாடுகளான ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தச் சூழலில், அந்த அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக விலக்கிக் கொள்ளப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள், மீண்டும் செயல்படுத்தப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி, அமெரிக்க டாலர்களை ஈரான் பெறுவதற்கும், கார்கள், தரைவிரிப்புகள் உள்ளிட்ட முக்கிய பொருள்களை அந்த நாடு ஏற்றுமதி } இறக்குமதி செய்வதற்குமான தடை கடந்த மாதம் அமலுக்கு வந்தது.

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த மற்ற நாடுகளின் ஒப்புதலின்றி இந்தத் தடையை டிரம்ப் தன்னிச்சையாக அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, ஈரான் மீதான மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகள் வரும் நவம்பர் மாதம் 4}ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்தச் சூழலில், ஈரான் மீதான அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்கும் வகையில், அந்த நாடுடன் வர்த்தகம் மேற்கொள்வதற்கான புதிய பணப்பரிமாற்ற முறைகளை உருவாக்குவது குறித்து ஐரோப்பிய யூனியன் நாடுகள் பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகின. அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலேயே மைக்கேல் பாம்பேயோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Theneehead-1

   Vol:17                                                                                                                               27.09.2018