Theneehead-1

   Vol:17                                                                                                                               26.10.2018

‘த ஹிந்து’வின் குழப்பம் மற்றும் றோ விவகாரத்தில் என்.ராமின் ட்வீட் செய்தி

                                              லக்சிறி பெர்ணாண்டோ

காலை ( மு.ப 00.00, 22ஒக்ரோபர் 2018) த.ஹிந்துவில் ஏ.எஸ். பன்னீர்செல்வன் “தூதரைக் குற்றம் சொல்லாதீர்கள்” என்கிற தலைப்பில், ஐந்து நாட்களுக்கு முன்பு அதே பத்தLaksiri-Fernandoிரிகையின் முன் பக்கத்தில் மீரா சிறினிவாசன் என்கிற நிருபரினால் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய முன் பக்கச் செய்தியான “றோ அமைப்பு தன்னைக் கொலை செய்யச் சதித்திட்டம் வகுத்துள்ளது என்;று ஸ்ரீலங்கா ஜனாதிபதி குற்றம் சாட்டுகிறார்” என்பதைக் குறித்து ஒரு செய்தியை எழுதியிருந்தார், அதில் போலித்தனமான கூற்றுகளுக்காக ஒரு பொறுப்பான ஊடக அமைப்புக்கு செயல்திறனற்ற பேச்சாக இருந்தாலும் உண்மையைச் சொல்வதற்காக அதை அறிவிக்கவேண்டியது தவிர்க்க முடியாததாகும் என்றும் எழுதியிருந்தார். த ஹிந்து அல்லது மீரா சிறினிவாசன்தான் அந்த தூதர். அந்தச் செய்தி என்ன?

மிகவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதான ஒரு செய்தியை அறிவிப்பது அல்லது அதை எழுதிய ஊடகவியலாளர் நியாயமான சரிபார்ப்பை மேற்கொண்ட பின்னரே வெளியிடுவது கட்டாயமாகும். எனினும் அந்தச் செய்தி முற்றிலும் உண்மை அல்லது உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை என்று கோரிக்கை விடுவது ஏற்றுக்கொள்ள முடியாததும் மற்றும் நியாயமற்றதும் ஆகும். நிச்சயமாக அந்தச் செய்தியை அறிவித்த ஊடகவியலாளர் அல்லது முழு பத்திரிகை நிறுவனமும் அந்தக் கதை உண்மையானது என்று நம்பக்கூடும். ஆனால் அவர்கள் கடவுளாக இருந்தாலன்றி அந்தக் கோரிக்கை கேள்விக்குரியது, ஏனென்றால் அந்த தகவல் குறிப்பாக சந்தேகத்துக்கிடமான சூழ்நிலையிலேயே வெளியானது அந்தரங்கமான அந்த செய்திக்கு பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

சந்தேகத்துக்கிடமான சூழ்நிலை

இந்த சந்தேகத்துக்கிடமான சூழ்நிலை எது?

முதலாவதாக இந்தியாவின் கூட்டாண்மையுடன் சேர்ந்து ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் பற்றி ஜனாதிபதிக்கும் மற்றும் பிரதமருக்கும் இடையில் சூடான விவாதங்கள் இடம்பெற்றதாக சொல்லப்படுகிறது.

இரண்டாவதாக ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு எதிரான படுகொலைச் சதித்திட்டம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் சி.ஐ.டி விசாரணைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கும் மற்றும் கூட்டணியில் உள்ள மற்றக் கட்சியான ஐதேகவைச் சேர்ந்த சில அமைச்சர்களுக்கும் இடையே சில குற்றச்சாட்டுகள் பரிமாறப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

நிதியமைச்சரும் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான மங்கள சமரவீர இந்த சதித்திட்டம் பற்றிய குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக மறுத்துள்ளார் என்பது நன்கறிந்ததே, நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு அது ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா அல்லது இல்லையா என்பது தெரியாது.ஆகவே அத்தகைய ஒரு சூம்நிலையில் வரும் தகவல் பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், அதை இறுதி உண்மை என எடுத்துக் கொள்ளக்கூடாது.

பன்னீர்செல்வன் அந்தக் கட்டுரையின் ஒரு தனியான பகுதியின் கீழ் (“சரிபார்ப்பு நடவடிக்கைகள்) தனது சக ஊடகவியலாளரை போதுமானளவு பாதுகாக்கும் ஆதாரங்களை எழுதியுள்ளார், மற்றும் “ஜனாதிபதியின் நம்பமுடியாத அறிக்கை”  என்கிற அவரது கேள்வியைத் தவிர அவரது பாதுகாப்பில் எந்தவித பிரச்சினையும் இல்லை, அத்துடன் ஜனாதிபதி அத்கைய ஒரு அறிக்கையை வெளியிட்டதை அவர் நம்பவில்லை, ஆனால் அந்தக் குற்றச்சாட்டு நம்பக்கூடியதாக இல்லை என்பதையும் கூட அவர் குறிப்பிட்டுள்ளார், இந்த இரண்டாவது உட்குறிப்பு மிகவும் கேள்விக்குரிய ஒன்று.

இந்த விஷயத்தில் ஜனாதிபதி சிறிசேனவின் தொலைபேசி அழைப்பின் பின்னர் இந்திய பிரதமரின் அலுவலகம் சுருக்கமாக பின்வருமாறு கூறியுள்ளது:

“பிரதம மந்திரி, விஷயங்களை பகிரங்கமாக விளக்குவதன் மூலம் தீங்கான அறிக்கைகளை உறுதியாக மறுப்பதற்காக ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட உடனடி நடவடிக்கைகளைப் பாராட்டினார். அவர் மேலும்தெரிவிக்கையில், ‘அண்டை நாடுகள் முதல்’ என்கிற கொள்கையும் மற்றும் முன்னுரிமையும் இந்தியாவின் முக்கியத்துவம் ஆகும், இந்திய அரசாங்கமும் மற்றும் அவரும் தனிப்பட்ட முறையில் இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான அனைத்துச் சுற்று ஒத்துழைப்பையும் அபிவிருத்தி செய்வதில் இணைந்துள்ளதாக வலியுறுத்தினார்”.


இங்கு கவனிக்க வேண்டியது அந்த அறிக்கையில் “தீங்கான அறிக்கைகள்” என்று பெயரிடப்பட்டு உள்ளதே தவிர த ஹிந்துவை மட்டும் அன்றி ஸ்ரீலங்காவில் உள்ள மேலும்பல பத்திரிகை அறிக்கைகளிலும் அதே மூலங்களில் இருந்து வெளிப்படையாக இந்த செய்தி இடம்பெற்றிருந்தது.

செய்தி என்ன

மனதைக் குழப்பும் கேள்வி என்னவென்றால் இன்றைய கட்டுரையில் பன்னீhசெல்வன் ஏன் தூதுரை குற்றம் சாட்டாதீர்கள் என்று முறையிடுகிறார். அதற்கான காரணம் தெளிவற்றதாகவும் மற்றும் குழப்பமானதாகவும்  உள்ளது. அங்கு இரண்டுவிதமான செயல்படுத்தல்கள் இருக்கலாம்.

முதலாவது ஜனாதிபதியின் நம்பமுடியாத அறிக்கையை வெளிப்படுத்தியதற்காக தூதரைக் குற்றம் சொல்லாதீர்கள்.

இரண்டாவது சொல்லப்படும் சதியில் சாத்தியமான றோவின் தலையீடு உள்ளதை அம்பலப்படுத்திய தூதரைக் குற்றம் சாட்டாதீர்கள்.

நிச்சயமாக மீரா சிறினிவாசனின் ஆரம்ப அறிக்கையில் இரண்டாவது வெளிப்படவில்லை, ஆனால் பன்னீர்செல்வத்தின் இன்றைய அறிக்கையில் அது உள்ளது. அவர் சொல்கிறார்:

“ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு(றோ) மற்றும் பாகிஸ்தானின் புலனாய்வு உள்ளக சேவை (ஐ.எஸ்.ஐ) போன்ற நிறுவனங்களின் பாத்திரங்களின் செயற்பாடுகள்பற்றி அறிவிப்பதற்கு அயல்நாட்டு அரசியல் செய்திகளை சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு ஒருபோதும் எளிதானதாக இருந்தது இல்லை. மூன்று தசாப்தங்களாக  பெரும்பாலான இந்தியாவின் அயல்நாடுகளின் செய்திகளை சேகரித்த ஒரு ஊடகவியலாளர் என்கிற வகையில், பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் பெரும்பாலான இரகசியமான மற்றும் வெளிப்படையான செயல்பாடுகளில் - சில சமயங்களில் உண்மைகளின் அடிப்படையில், சில சமயங்களில் தூய கருதுகோளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மற்றும் சில சமயங்களில் உள்நாட்டு அரசியல் யதார்த்தங்களுக்கு பொருந்தும் வகையில் ஈடுபட்டுள்ளதாகப் பெயரிடப்பட்டிருக்கின்றன என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்”.

மேலே குறிப்பிட்டுள்ள பந்தி, ஜனாதிபதியின் நம்பமுடியாத அறிக்கை சில சூழ்நிலைகளின் கீழ் உண்மை இல்லாவிடினும் ஆனால் கருதுகோளின் அடிப்படையில் நம்பக்கூடியதாக இருப்பதற்கு ஒரு அடையாளமா?. அல்லது உள்நாட்டு அரசியல் யதார்த்தங்களுக்கு பொருந்தும் வகையில் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதா? எனினும் அது வெளிப்படுத்துவது, குறைந்தபட்சம் பன்னீர்செல்வன் அவர் சொல்லும் இந்த வழிகளில்தான் செயல்படுகிறாரா அல்லது எழுதுகிறாரா என்பதை.

இந்தச் சூழ்நிலைகளில் அவரது ஆரம்பக் கோரிக்கையான “பொறுப்புள்ள ஊடக அமைப்புகள் உண்மையைச் சொல்கின்றன” என்பது கேள்விக்குரியதாகிறது. தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஊடகங்கள் பொய் சொன்னால், ஊடக சுதந்திரத்தைப்பற்றி கண்டனம் தெரிவிக்கும் கடைசி நபர் நானாகத்தான் இருப்பேன். யுனஸ்கோவினால் பாராட்டப்பட்ட”கல்விச் சுதந்திரம் பற்றிய லீமா பிரகடனத்தை” எழுதியவர்களில் நானும் ஒருவன் மற்றும் கல்விச் சுதந்திரம் ஊடக சுதந்திரத்தில் இருந்து மாறுபட்ட ஒன்றல்ல. ஆகவே சகாக்கள் உண்மையை உடனடியாகக் கோரவேண்டாம், ஆனால் கண்டுபிடித்து அறிவிக்க மற்றும் உண்மைகளை விளக்குவதற்கு முன் இந்த மாதிரியான விடயங்களில் நியாயமான உண்மையைக் கண்டுபிடிக்க  சட்ட அமலாக்க அமைப்புகளை குறிப்பாக நீதித்துறையை அனுமதிக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்கான ஒரு நட்பு ரீதியிலான சிறு மோதல்தான் இது.

என்.ராமின் ட்வீட் செய்தி

நான்,சமூக ஊடகங்களை தேடுவது மற்றும் அதில் தலையீடு செய்யும் ஒருவனல்ல. அவைக்கு முழுதான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இங்கு நான் சமூக ஊடகங்களைத்தான் குறிப்பிடுகிறேன், டொனால்ட் ட்ரம்ப் கூட ட்வீட் செய்கிறார் மற்றும் உலகத்திலுள்ள எல்லா விடயங்களும் ட்வீட் செய்யப்படுகின்றன.

ஆனால் நான் சாதாரணமாக அதிர்ச்சியடைந்தது, இந்த றோ விஷயத்தைப் பற்றி என் ராம் வெளியிட்ட சடுதியான ட்வீட்டைக் கண்டு (19 ஒக்ரோபர் கொழும்பு ரெலிகிராப்பில் வெளியானது), அவர் ஹிந்து நிருபரை மட்டும் பாதுகாப்பதோடு நின்றுவிடாது, ஆனால் அரசாங்கத்தை அல்லது ஜனாதிபதியை பொய் சொல்வதாகவும் குற்றம் சாட்டுகிறார். கேள்வி ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத்தைப் பற்றியதோ அல்ல ஆனால் திரும்பவும் உண்மை பற்றிய என்.ராமின் கோரிக்கை சம்பந்தமானது. நான் இந்தக் கேள்வியைத்தான் குறிப்பாக வினாவுகிறேன். ஒரே நாளான 19ம் திகதி இரண்டு ட்வீட்டுகள் உள்ளன.

முதலாவது: “எங்களது ஸ்ரீலங்கா நிருபர் தனது அறிக்கையை பிரசுரிக்க முன், என்ன நடந்தது என்று சுதந்திரமான பல சாட்சிகளிடம் தான் கேள்விப்பட்டதைப் பற்றி விசாரித்து உறுதிப்படுத்தியுள்ளார். என்ன சொல்லப்பட்டது  என்பதில் இருந்து நழுவுவதற்காக அவர்கள் தங்கள் நொண்டிச் சாக்கான மறுதலிப்புகளை சொல்லட்டும் - ஆனால் நாங்கள் எங்கள் நிருபரின் கவனமாகச் சரிபார்க்கப்பட்ட உண்மையான கதையின் பக்கமே நிற்போம்”

இது ஓரளவிற்குச் சரி, நான் முன்னரே தெரிவித்தது போல த ஹிந்து நிருபரைப் பாதுகாக்கும் விஷயம். என்.ராம் த ஹிந்து பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் மட்டுமன்றி த.ஹிந்துவை வெளியிடும் கஸ்தூரி அன்ட் சண்ஸ் லிமிட்டட்டின் தலைவரும் கூட. ஆகவே அவரது அக்கறை பற்றி விளங்கிக்கொள்ள முடியும். எனினும் இரண்டாவதாக வெளியிடப்பட்ட ட்வீட்  சொல்லப்படும் உண்மை பற்றி கேள்வியை எழுப்புகிறது.

இரண்டாவது: “; சொல்வதற்கு மோசமானதும் மற்றும் வினோதமானதுமான மற்றொரு விஷயம் என்னவென்றால், ஒரு மூடிய அறைக்குள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்துவிட்டு, இதையொட்டி எழுந்த கூச்சல்கள் காரணமாக ஊடகங்கள் மீது பழி போடப்படுகிறது. த ஹிந்து தனது வேலையைச் செய்துள்ளது - உண்மையைச் சொல்வது”

மூடிய அறை என்றால் என்ன? ஒரு நட்புறவான அயல்நாட்டின் அமைச்சரவைக் கூட்டம், ஜனநாயக பாராளுமன்ற மரபுகளுக்கு ஏற்ப அதில் கூட்டு பொறுப்பு உள்ளது இந்தியா ஸ்ரீலங்கா ஆகிய இரண்டும் அதைப் பின்பற்ற வேண்டும். த ஹிந்து உண்மையைச் சொல்வதற்கு தாவிக் குதிப்பதற்கு அப்பால், தனது இரண்டாவது ட்வீட்டில் ராம். சொல்லப்படும் குற்றச்சாட்டு மோசமானதும் மற்றும் வினோதமானதும் என்று குறிப்பிடுவதின் மூலம் எந்த தவறான நடவடிக்கையாக இருந்தாலும் றோவினைப் பாதுகாக்கும் முயற்சி வெளிப்படையாகத் தெரிகிறது. அவருக்கு எப்படி தெரியும் அல்லது அவ்வளவு நிச்சயமாக? இது வெறுமே உண்மை பற்றிய ஒரு விஷயம் இல்லை ஆனால் கொள்கை பற்றியது.


(லக்சிறி பெர்ணாண்டோ கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞ}னம் மற்றும் பொது கொள்கை பற்றிய முன்னாள் பேராசிரியர் ஆவார்)