Theneehead-1

Vol: 14                                                                                                                                                27.12.2016

கயட்டையில் சுனாமியால் உயர்நீத்தோர் நினைவேந்தல் நிகழ்வு-

2004ஆம் ஆண்டில் சுனாமி அனர்த்தத்தால் காவுகொள்ளப்பட்ட மக்களை நினைவுகூறு26.12 (1)ம் 12ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு முள்ளியவளை (கற்பூரப்புல்வெளி) கயட்டையில் இன்று 26.12.2016 பிற்பகல் 4.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.   மேற்படி சுனாமி நினைவேந்தல் நிகழ்வானது கயட்டை பிரதேசத்தில் சுனாமியில் உயிர்நீத்தவர்களை நல்லடக்கம் செய்த இடத்தில் வனியா மாவட்ட செயலகத்தின் அனுசரணையில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. நினைவஞ்சலி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், வட மாகாணசபை பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், துணுக்காய் பிரதேச செயலாளர், ஐங்கரநேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

வட மாகாண இயற்கைப் பேரிடர் தணிப்பு தினம் அனுஸ்டிப்பு-

வட மாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினம் இன்று(26.12.2016) திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்டம் செம்மலைiயில் நினைவுகூரப்பட்டது. வட மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களும், விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சாந்தி சிறீஸ்கந்தராஜா, வைத்தியக்கலாநிதி சிவமோகன், வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், வட மாகாணசபை பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி என்பன இடம்பெற்றன.

26.12 (6)
26.12 (3)
dantv