இரட்டை பிரஜாவுரிமை பெற முடியாத இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா

இந்த நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வாழும் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் இல்லாத இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா வழங்குவது தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு விசாக் கட்டுப்பாட்டாளர் சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஜப்பான், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இதேவேளை நேற்று 840 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

2015 ஆம் ஆண்டில் இருந்து இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,840 ஆகும். தேசிய அபிவிருத்திக்கு இவர்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்காக இவர்களின் வெளிநாட்டு பணத்தை இலங்கை வங்கியில் வைப்பீடு செய்தல் போன்ற எதிர்பார்ப்பில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதன் மூலம் இவர்களுக்கு இலங்கையில் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்க்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Theneehead-1

   Vol:17                                                                                                                               28.09.2018