ரஜனியின் கேள்விகளுக்கு தமிழ் உயரடுக்கினர் பதில் கூற மறுத்துவிட்டார்கள்

                                            ராஜன் ஹ_ல்

(பகுதி - 1)

மழைக்காலமும் முன்னிருட்டும் வருடம் முடியப்போவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகளாக உள்ளன. வயல்கள் உழுது பண்படுத்தப்பட்டு விதைத்து பூமியின் புதுப்பRajiniித்தலுக்காகவும் மற்றும் தாராள விளைச்சலுக்காகவும் தயாராக இருக்கின்றன. அப்படியான ஒரு நேரத்தில்தான் இருபத்தொன்பது வருடங்களுக்கு முன்பு ரஜனி திரணகம எல்.ரீ.ரீ.ஈ இனால் கொல்லப்பட்டார். அவரது கேள்விகளும் மற்றும் உண்மையை பிரதிபலிக்கும் மொழிகளும் பெரும்பாலும் அடிப்படையில் நமது ஊகங்களுக்குச் சவால்விடுத்தன. 1988 ஒக்ரோபரில் அவரால் எழுதப்பட்ட ‘மாயைகளை ஒதுக்கித் தள்ளுதல்’ எனும் கீழ் காணும் மேல்முறையீடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொது அறையில் வைத்து 50 கல்வியாளர்களால் கையெழுத்திடப்பட்டது.

“இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கங்களுக்கு இடையே உள்ள எமது உறவுகளை மட்டுமல்ல ஆனால் எங்களைப் பற்றியும் நாங்கள் ஆராய வேண்டும். சமூகத்தினிடையே உள்ள பயங்கரவாதத்துக்குத் தலை வணங்குதல், நமது சந்தர்ப்பவாதம் மற்றும் பல உள்ளகக் கொலைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலையில் கொள்கைகளின் பற்றாக்குறை, என்பன வெளிச்சக்திகள் அதே ஆயுதங்களைப் பயன்படுத்தி எங்களைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்கியுள்ளன. சமூகத்தினுள்ளேயே ஜனநாயக விரோதப் போக்குகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கும்போது, ஜனநாயகத்துக்கான எங்கள் வேண்டுகோள் அர்த்தமற்ற ஒரு நடவடிக்கையாக மாறிவிடுகிறது. அரசியல் சக்திகளை விமர்சித்து குரலெழுப்பும் பல தனி நபர்கள் மற்றும் இளைஞர்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள், நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இங்கிருந்து அகற்றப்பட்டு அல்லது கொல்லப்பட்டுவிடுகிறார்கள்”.

பல்கலைக்கழகத்தின் தொடக்கம் முதலே அதே பொது அறையில்; எங்களது மறைந்த கல்வியாளர்களின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் ரஜனியின் புகைப்படம் தவிர்க்கப்பட்டிருப்பதைப்பற்றி பல வருடங்களாக அங்கு வரும் வருகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்;. 2014ல் பல்கலைக்கழக அதிகாரிகள் (பின்னோக்கிப் பார்த்ததில் பல்கலைக்கழக உப வேந்தரை மட்டும் தனியாகக் குறிப்பிடுவது தவறு என்று நான் நினைக்கிறேன்) ரஜனியின் கொலையின் 25 வது ஆண்டு நிறைவை நினைவு கூருவதை கடிவாளம் இட்டுத் தடுத்தார்கள். ஒரு நேர அட்டவணையின்படி அவர் பரீட்சைகளை நடத்தியது கொலையாளிகளுக்கு அவரது கொலையை திட்டம்தீட்டுவதை எளிதாக்கியது.

குறுகிய சிறிது கால இடைவெளியில் இதே பொது அறையில், தலைவர் ஒரு அரசியல் பரிசைக் கைப்பற்றுவதற்காக அவரது வற்புறுத்தலின் கீழ் காந்திய வழியில் சாகும்வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த எல்.ரீ.ரீ.ஈ யின் திலீபனின் 31வது ஆண்டு நிறைவு ஒரு தியாகத் திருவிழாவாக பெரும் வைபவமாகக் கொண்டாடப்பட்டது, அதற்கு உப வேந்தரே முன்னின்று உழைத்தார். சிறிது நாட்களின் பின் எல்.ரீ.ரீ.ஈ இனால் ஆரம்பிக்கப்பட்ட பொங்கு தமிழ் நினைவாக ஒரு நினைவுச்சின்னம் நிறுவப்பட்டது, அதிலும் வழக்கம்போல மூத்த பல்கலைக்கழக அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தார்கள்.

அதன் விளைவு மிகை யதார்த்தம் ஆகும். இந்த நடவடிக்கைகள் யாவும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படைகளின் கண்களின் கீழேயே நடைபெற்றன, இதே பாதுகாப்பு படைகள் 2014ல் மருத்துவ மாணவர்கள் சங்கம் ரஜனியின் மரணத்தை நினைவு கூருவதை, பீடாதிபதிக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து நிறுத்தினார்கள்.

மிருகத்தனமான  தீவிரம் நிறைந்த தமிழ் தேசியவாதத்தை மகிமைப்படுத்தும் தற்போதைய விழாக்களில் முக்கியமாகக் கலந்து சிறப்பிக்கும் அதே பல்கலைக்கழக அதிகாரிகள், கொழும்பில் உள்ள அதிகார சக்திகளைக் கையாளும்போது வித்தியாசமான வேறு முகத்தைக் காட்டுகிறார்கள், இப்பேர்பட்டவர்களின் சகிப்புத் தன்மையினால் பல்கலைக்கழகத்தின் பிற்போக்கான சிதைவு நிலை தொடர்கிறது. ஒரு நெருக்கமான பாரம்பரியத்தை வலுப்படுத்துவதற்காக நன்கு தகுதி பெற்ற கல்வியாளர்களை வெளியேற்றிவிட்டு, பொங்கு தமிழ் மற்றும் அதன் வீர வழிபாடு என்பனவற்றை வைத்துக்கொண்டிருக்கிறது இதன் காரணமாக எங்கள் வரலாற்றின் மிகவும் நெருக்கமானதும் வருந்தத்தக்கதுமான அம்சங்கள் வதந்தி நிலைக்கு கீழிறங்கியுள்ளன. ரஜனி ஏன் வெறுக்கப்படுகிறார் என்பதற்கு இதுவும் ஒரு காரணம்

1982ல் ரஜனி ஒரு மருத்துவராகக் கடமையாற்;றிய வேளையில், வேறு யாரும் விருப்பமில்லாமல் இருந்தபோது, எல்.ரீ.ரீ,ஈ தலைவரின் விருப்பத்துக்குரிய ஒருவராக இருந்த சீலன், தவறுதலான ஒரு துப்பாக்கிச் சூட்டுக் காயத்தினால் பாதிக்கப்பட்டிருந்த வேளையில் அவரது seelanஉயிரைக் காப்பாற்றுவதற்காக அவருக்கு சிகிச்சையளிப்பதற்காக இரவு நேரத்தில் சென்றார் (முறிந்த பனைமரம் என்ற நூலைப் பார்க்க). சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்தில் வைத்து, அந்த இயக்கத்தின் உள்ளக மிருகத்தனம் மற்றும் சகிப்புத் தன்மையற்ற நிலை என்பனவற்றையும் மற்றும் சீலன் எவ்வாறு ஒரு கொலை வெறிக்குத் தூண்டப்பட்டார் என்பதையும் அவர் அறிந்து கொண்டதும், சீலனது செயற்பாட்டுக்காக கசப்புடன் வருத்தமடைந்தார்: குறிப்பாக புளொட் இயக்க சுந்தரத்தை அவரது தலைவரின் கட்டளைப்படி கொலை செய்ததுக்காக (அவரும் என்னைப் போன்ற ஒரு சுதந்திரப் போராளி). சீலன் தென்மராட்சியில் உள்ள ஒரு குறிப்பிட்ட முகாமில் தங்கியிருந்தபோது, அங்கிருந்து வெளியேறும்படி அவசர அழைப்புகள் வந்தபோதிலும் அதற்கு மாறாக ஜூலை 1983ல் முகாம் இராணுவத்தின்  திடீர் தாக்குதலுக்கு உள்ளானது.

எல்.ரீ.ரீ.ஈ க்கு உதவி செய்யும் ரஜனியின் ஆர்வம் 1986ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு திரும்பவும் சென்று தனது செயல்பாட்டின் மூலம் சவால் விடுவது என்கிற தீர்மானமாக உருவெடுத்தது. இயக்கத்தில் இருந்து முறித்துக்கொண்ட பின்னர் இயக்கத்தின் மனித நேயமற்ற கலாச்சாரம் காரணமாக எத்தனை இளைஞர்கள் இறந்துபோனார்கள், எங்கள் சிடுமூஞ்சிகளான உயரடுக்கினரால் அவர்கள் மாவீரர்களாக மட்டுமே கொண்டாடப்படுகிறார்கள். ரஜனியின் மரபியலின் முரண்பாடு மற்றும் அச்சம் என்பன திரும்பவும் நலிந்த தரத்தினரான தமிழ் உயரடுக்கினர்மீது அன்பு கொள்ள வைத்தது. அவரது வாழ்க்கை மற்றும் அனுபவம் என்பன, எங்கள் வாழ்க்கை மற்றும் உணர்ச்சிகள் காரணமாக அழிவுற்ற ஒரு மலிவான வரலாற்று சகாப்தத்தை தூய்மைப் படுத்துவதற்காக வேண்டி போராட்டம் நடத்தின.

கல்வியைப் பொறுத்தவரை, யுத்தத்துக்குப் பின்னான ஒரு முன்னுரிமையாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பார்வையை மேம்படுத்துவதுடன் மதச்சார்பற்ற மரபுகளை வலுப்படுத்தி மற்றும் உலகெங்கிலும் உள்ள கல்விமான்களின் சுதந்திரமான இயக்கத்தை ஊக்குவிப்பதாகவும் இருக்கவேண்டும். ஆனால் இன்று அதற்கு மாறாக மத மற்றும் அரசியல் பிரிவினைவாதம் என்பன பல பல்கலைக்கழகங்களில்  அரசாங்கத்தின் ஏமாற்றுத்தனம் மிக்க கனிவான உற்சாகத்துடன் எம்மை முகத்துக்கு நேரே வெறித்துப் பார்க்கின்றன.

ஒரு அரசியல் தீர்வு எழுபது வருடமாகக் காத்துக்கிடக்கிறது ஒருவேளை இன்னும் ஒரு எழுபது வருடங்கள் அதற்காகக் காத்திருக்க வேண்டி ஏற்படலாம். ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மதிப்பிறக்கம் சாத்தியமான சமூகமாக எஞ்சியுள்ள தமிழ் மக்களுக்கு ஆபத்தை உண்டுபண்ணும். என்னுடைய தீர்ப்பின்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மிகப் பெரிய தவறு இலகுவாகத் திருத்தப்படலாம். அது திரும்பவும் தமிழ் தேசியவாதத்தின் பிறப்பிடத்துக்கும் மற்றும் பதில் சொல்லப்படாத ரஜனியின் கேள்விகளுக்கும் செல்கிறது.

இதே கேள்விகள்தான் இளம் தமிழ் ஊடகவியலாளரான ஜூட் ரத்னம் என்பவர் தயாரித்து சர்வதேச ரீதியான பாராட்டுக்களைப் பெற்ற “சொர்க்கத்தில் பேய்கள்” எனும் ஆவணப்படத்திலும் எழுப்பப்பட்டுள்ளது. அதற்கான பிரதிபலிப்பை வசதியான தமிழ் இளைஞர்கள் சிலர் பிபிசி யில் வெளிப்படுத்தியிருந்தார்கள். தமிழர்கள் அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட விடயத்தில் குருடாக இருந்ததுக்காக ஜூட் மீது குற்றம் சொல்ல முடியாது, ஆனால் அவரது படைப்பினைப் பற்றிய பிரதான விமர்சனம், தமிழ் கலாச்சாரத்தின் மிருகத்தனமான செயல்களை ஆராய்ந்து அதைப் படுகுழியில் தள்ளிவிடுவதற்கு மேற்கொள்ளும் எந்த முயற்சிக்கும் முன்னர் ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொடூரமான நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம் என நாங்கள் கருதுகிறோம், இல்லாவிடில் இது எங்கள் மனதைத் திறந்து உலகமும் அதன் பாரம்பரியமும் வழங்கவுள்ளதைக் காண அனுமதிக்காது.

சமூகத்தின் நிலை உண்மையில் பிசாசுக்கு ஒப்பாக இருக்கலாம். இந்த நிகழ்வுக்கு பல்கலைக்கழகம் ஒரு மையமாக இல்லை. அது தமிழ் உயரடுக்கினருடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட போலி உபகாரச்சம்பளம் எனும் உலகளாவிய ஒரு வலையமைப்பால் ஆதரிக்கப்படுகிறது. எங்களது உள்ளகச் சிதைவுகளுன் ஒப்பிடுகையில் அரசாங்கத்தின் கொடூரங்கள் இரண்டாம் நிலையிலேயே உள்ளன, மற்றும் முக்கியமாக  புலிகளின் கொடூரங்கள் மற்றும் சகிப்புத்தன்மையற்ற நிலை என்பன தமிழ் உயரடுக்கினரின் பாராளுமன்ற அரசியலின் திவால்தன்மையின் விளைவுகள் ஆகும் என்று ரஜனி குறிப்பிட்டுள்ளார். இது விவாதங்கள் மற்றும் இணைய உலா போன்ற சௌகரியமான சூழலில் இருந்து அவருக்கு கிடைத்தது அல்ல, இது எல்.ரீ.ரீ.ஈக்கு உதவுவதற்காக அவர் மேற்கொண்ட உயர்ந்த தியாகங்களில் இருந்து ஆரம்பமானது.
 

(தொடரும்)

Theneehead-1

   Vol:17                                                                                                                               28.09.2018