பல்துறை ஆற்றலாளரான இளங்கோவனது எழுத்துப் பணி மிகவும் பாராட்டத்தக்கது..! 

மதுரையில் நடைபெற்ற நூலறிமுக நிகழ்வில் கருத்துரை. .!

"ஈழத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் குறித்து நாம் அறிந்துகொள்வதற்கு மிகச்சிறந்த ஆவணமாக வி. ரி. இளங்கோவனின் "ஈழத்து மண்மாறவா மனிதர்கelangovanள்"  நூல் விளங்குகிறது. சர்வதேசப் புகழ்பெற்ற அரசியல் ஆசான், தலைசிறந்த எழுத்தாளர்கள் - கலைஞர்கள், கல்விமான்கள் - புத்திஜீவிகள், சிறந்த சமூகப் பணியாளர்கள், தமிழ் ஆய்வறிஞர்கள் உட்பட பலர் குறித்து நாம் தெரிந்துகொள்வதற்கான வரலாற்றுப் பதிவாக இந்நூலைத் தந்துள்ளார். இந்த ஆளுமைகள் எல்லோருடனும் இளங்கோவன் நன்கு பழகி அறிந்து பெற்றுக்கொண்ட அனுபவங்களை இந்நூலில் விவரித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த எமக்கு இந்த ஆளுமைகள் குறித்து பல புதிய தகவல்களை நாம் தெரிந்துகொள்ள இந்நூல் உதவுகிறது. பல்துறை ஆற்றலாளரான இளங்கோவனது இப்பணி மிகவும் பாராட்டத்தக்கது."

- இவ்வாறு மதுரை "கல்வட்டம்" இலக்கிய அமைப்பு கடந்த புதன்கிழமை (24-10-2018) மாலை நடாத்திய வி.ரி. இளங்கோவன் வெளியிட்ட மூன்று நூல்களின் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி பா. ஆனந்தகுமார் குறிப்பிட்டார்.

"இளங்கோவனது அரசியல், கலை - இலக்கிய நேர்காணல்கள் பல்வேறு சஞ்சிகைகள், வானொலி - தொலைக்காட்சி ஊடகங்களில் வெளிவந்திருந்த போதிலும் தற்போது கையில் கிடைத்த சிலவற்றையே தொகுத்து மதுரை 'தழல் பதிப்பகம்' "என்வழி தனிவழி அல்ல" எனும் பொருளில் அவரது கொள்கைப் பிரகடனம்போல் நூலை வெளியிட்டுள்ளது. இந்நூலிலிருந்து ஈழத்தின் கடந்த பல வருட அரசியல், கலை - இலக்கிய வரலாற்றுத் தடத்தினை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அவரது பல்துறை அனுபவங்களை இந்நூலிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். இந்நூல் தமிழகத்தில் வெளிவந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது." - இவ்வாறு கல்வட்டம் அமைப்பாளர் முனைவர் ஸ்ரீரசா உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

"ஈழத்தின் வடபுலத்தில் கம்யூனிச இயக்கத்தின் வளர்ச்சியில் தelangovan1மிழ்ப் பெண்கள்" - என்ற வீ. சின்னத்தம்பியின் நூல் குறித்து பெண்ணியச் செயற்பாட்டாளர் டி.ஆர். பர்வதவர்த்தினி பேசுகையில் குறிப்பிட்டதாவது: " ஈழத்தின் வடபுலத்தில் பல்வேறு நெருக்கடிகள், பழிப்புரைகள், தூற்றல்களுக்கு மத்தியில் தம் கணவர்மாரின் கம்யூனிச இயக்கப் பணிகளுக்கு முன்னின்று உதவியதோடு அல்லாமல், மாதர் அமைப்புகளைக் கட்டியமைத்து பெரும்பணியாற்றிய சில மாதரசிகள் குறித்து சுருக்கமாகவும், காத்திரமாகவும் எழுதியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.  சீனாவில் 16 வருடங்களுக்குமேலாக தமிழ்ப் பணியாற்றிய தோழர் வீ. சின்னத்தம்பியின் நினைவாக அவரது கட்டுரைகளைச் சிறுநூலாக வெளியிட்டதன் மூலம் இளங்கோவனது தோழமை மனப்பான்மையை நாம் அறிந்துகொள்ள முடிகிறது." - என்றார்.

நூல்களை கலாநிதி ஆனந்தகுமார் வெளியிட, அவற்றின் முதல் பிரதிகளை மூத்த எழுத்தாளர் பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். நூலாசிரியர்  வி. ரி. இளங்கோவன் ஏற்புரையாற்றினார். நூல்களை வெளியிட்ட தழல் பதிப்பக அதிபர் சோழ. நாகராஜன் நூல்களை அறிமுகம்செய்து, நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். முன்னதாக, இசை  ஆசிரியை திருமதி அமுதா இன்னிசை விருந்தளித்தார்.

கடந்தசில வாரங்களுக்கு முன்பு ஈரோட்டில் நடந்த மாபெரும் புத்தகத் திருவிழாவில் இளங்கோவனது கவிதைத்தொகுதி வெளியிடப்பெற்று, அங்கு இளங்கோவன் சிறப்புரையாற்றி பாராட்டுப் பெற்றார். பின்னர், சென்னை புத்தகத் திருவிழாவிலும் பிரபல பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமாரும், இளங்கோவனும் சிறப்புரையாற்றியது குறிப்பிடத்தக்கது. அத்துடன், மதுரை புத்தகத் திருவிழாவில் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட புகழ்பெற்ற நைஜீரியப் பெண்  எழுத்தாளர் சிமாமண்டா எங்கோஜி அடிச்சியின் சிறுகதைத் தொகுதியின் தமிழ் மொழியாக்க நூல் வெளியீட்டு நிகழ்விலும் எழுத்தாளர் கோணங்கி, சோழ. நாகராஜன், வடகரை ரவிச்சந்திரன் ஆகியோருடன் இளங்கோவனும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

Theneehead-1

   Vol:17                                                                                                                               28.10.2018