Theneehead-1

   Vol:17                                                                                                                               29.09.2018

நிகழ்த்துதல் கலைகளும் மாணவமும்

- பெருமாள் கணேசன்

பாடசாலை மாணவர்களில் அருகிவரும் தேர்ச்சிகளாக அழகியல் தேர்ச்சிகளை சுட்ட வேண்டியுள்ளது
tamilstudents
பாடசாலை கலைத்திட்டம் எவ்வளவுதான் முளுமையான ஆளுமையை பிள்ளையில் வளர்க்க ஏற்பாடுகள் கொண்டிருந்தாலும் பரீட்சைபுள்ளிகள் சார் சிந்தனை மட்டுமே எமது பிரதேச பாடசாலை சார் சமூகத்தில் தேறி இருக்கிறது.
.
பாடசாலை எவ்வளவுதான் அழகியல் முயற்சிகளை முன்னெடுக்க முனைந்தாலும் அவற்றின் மீதான கரிசனை ஆசிரியர்களிடம் மாணவர்களிடம் பெற்றோரிடம் தொற்றுவதில்லை

அதனால் பிள்ளைகளிடம் தலைமைத்துவ பண்பு இல்லாது போகிறது பாடசாலையில் உயிரோட்டம் இல்லாது போகிறது பன்முக நுண்மதி கோட்பாடு கவனத்தில் இல்லாது போகிறது ஆளுமை பிள்ளைகளில் இல்லாது தன்னம்பிக்கை நாளுக்கநாள் வற்றி விடுகிறதுபாடசாலை உற்பத்தியில் ஒரு நல்ல பிரசைக்கான ஆரம்பத்தை கொடுக்கத் தவறிவிடுகிறது பாடசாலை என்ற நவீன சமூகத்துக்கான நிறுவனம் பல இளம் சமூகத்தின் பொழுதை வீணடிக்கிறதுஆற்றலை சிதைக்கிறது.. என பலவற்றை குறிப்பிடலாம்

இவ்வாறான அழகியல் முயற்சிகள் வெறும் பாடவேளைகளில் மாத்திரம் சாத்தியமாவதில்லை

குறிப்பாக பாடசாலை நாடகம் மிகவும் கனதியான புறப்பாடவிதான செயற்ப்பாடாகும் இதனை பாடசாலைகள் மறந்துவிட்டன அதற்கு காரணம் ஆசிரியர் வளத்தை பயன்படுத்த முடியாமை

இன்று பல நாடகப்பட்டதாரிகள் பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தும் அவர்கள் நாடகத்தை பாடமாக வகுப்பறையில் கற்பிக்க எடுக்கும் முனைப்பைத்தவிர பரீட்சைக்கான ஒரு பாடமாக கற்பிக்க முனைவதைத்தவிர அதனை அழகியல் முயற்சியாக கருதுவதில்லை

இது இந்த சமூகத்தினை நவீன உலகோடு இணைப்பதை தடுக்கிறது
வெளிநாடுகளில் இன்று நாடகம் பரிசோதனைக்க உள்ளாகி புதிய முனைப்புகளோடு திகழ்கிறது

ஏன் எமது பல்கைலைக்கழகங்களில் நாடகத்துறை முக்கிய பட்டப்பயில்கைத்துறையாக இருக்கிறது

அவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பட்டதாரிகள் பாடசாலையில் நாடக ஆற்றுகைக்கு எந்தவித அக்கறையும் அளிக்காது நாடக வரலாற்றை பொறிமுறைகளை கற்பித்து விட்டு செல்கிறார்கள்

இந்த நிலைமை பாடசாலை என்பது சமூகத்தை உருவாக்கும் நிறுவனம் என்ற கோட்பாட்டை மறுதலித்தலின் பாற்படும்

இந்த மாவட்டத்தில்1989- 1990 களில் பாடசாலை ஆசிரியர்களுக்கான களப்பயிற்சிகளை கல்விப்பணிப்பாளர் திரு கந்தசாமி அவர்கள் மிகவும் முன்மாதிரியாக ஏற்பாடு செய்து அந்தக்கால கல்விப்புலத்தை உயிர்ப்பித்தார் என்பதை நினைவு கொள்ள வேண்டும்

யாழ்பல்கலைக்கழக் பேராசிரியர் சிதம்பரநாதன் பல முன்னோடி பட்டதாரிகளை இதில் இணைத்து கிளிநொச்சி பாடசாலை ஆசிரியர்களுக்கான நாடக களப்பயிற்சிகளை வழங்கியது இன்றும் ஆங்காங்கே அந்த களப்பயிற்சி பெற்றவர்களாலும் அவர்களின் சந்ததி மாணவர்களாலும் நாடக எண்ணத்தை பேண வைத்துள்ளது ஏறத்தாழ 30 வருடம் இந்த பிரதேசத்தில் நாடகம். கனதியாக பேணப்படாது போனது..

பாடசாலையில் மட்டுமல்ல கிளிநொச்சியில் சமூகத்திலும் நாடகம் பேணப்படவில்லை ஏன்? அண்ணாவிகள் கூத்தர்கள் அரசர் , வரலாற்று நாடக ஆர்வலர்கள் தயாரிப்பாளர்கள் இன்று மறைந்தும் இயற்றை அடைந்தும் அந்த நாடகச் சிந்தனைகளை கொடுக்கும் வாய்ப்பை பெறமுடியாதும் போகிறார்கள்..

ஆனால் குறிப்பாக கிளிநொச்சிப் பாடசாலைகளி்ல் இன்று அதற்கான வளம் இருந்தும் முயற்சி இல்லாது போயுள்ளது.

அதற்கான துாண்டலை கல்விப்புலத்தில் காண முடியவில்லை . கிளிநொச்சி கல்விப்புலம் இவற்றுக்கான விசையை வழங்க முனையவேண்டும்.

நாடகம் பிள்ளையில் வளர்க்கும் ஆளுமையை பெற்றோர் அறிவதில்லை.
தமது பிள்ளைகளை படிக்கவா விட்டோம் நடிக்கவாவிட்டோம் என்ற சிந்தனைகள் பெற்றோரிடம் இருந்து களைய பாடசாலை முனைய வேண்டியுள்ளது...

இன்றுள்ள சமூகச்சீரழிவுளை எல்லாம் களைய நாடக வடிவம் மிகவும் விளைதிறன் மிக்க பொறிமுறையாகும்

ஆசிரியர் கலாசாலைகள் கல்விக்கல்லுாரிகள் தமது மாணவர்களிடம் இந்த சிந்தனையை வளர்த்து அவர்களை பாடசாலைக்கு அனுப்பவேண்டும்.

ஒருபாடசாலையில் நாடக ஆசிரியர் மட்டும் தனியே நாடக உருவாக்கம் செய்ய முடியாது ஆர்வமுள்ள வேறு சகபாடிகள் சமூகத்தில் உள்ளவர்கள் இதில் கைகொடுக்கவேண்டும்.

இதனை நடைமுறைப்படுத்த கல்விப்புலம் ஆர்வம்காட்ட வேண்டும் அதிபர்களின் ஆசிரியர்களின் முனைப்புகள் ஊக்கவி்க்கப்பட வேண்டும்

வெறும் சிறுவர் நாடகப்போட்டி

தமிழ்த்தினப்போடடி என்ற போட்டிகளைக்கொண்டு மட்டும் பாடசாலை மாணவர்களை இத்துறையில் ஈடுபடுத்த முடியாது அதேபோலவே ஆசிரியர்களையும் இதன்மூலம் மட்டுமே ஊக்கவிக்க முடியாது.

நாடகம் தொடர்ந்து பேணப்படவேண்டும்

நாடகம் மனித சமூகத்தில் உயிர்ப்பான கலை.

நாம் மனித சமூகத்தில் இருப்பவர்களாயின் எமது பிள்ளைகளுக்கு இந்த அழகியலை கடத்தவேண்டும்

இந்த மரபுரிமையை தொற்ற வைக்கவேண்டும்...

அப்போதுதான்
கீழ்ப்படிவு
நேர்மை
கிரகித்தல்
சிந்தித்தல்
ஒற்றுமை
தேடல்
உலகை புரியும்
இயற்கையை ரசிக்கும் பாதுகாக்கும் தலைமைத்துவம்
பரோபகாரம்
மனிதர்களை நேசிக்கும்
இளம் சமூகத்தை நாம் உருவாக்கலாம் கல்வியின் இலக்குகளை அடையலாம்..

கலைத்திட்டத்தை பரீட்சைபுள்ளிகளுக்காக மட்டும் நடைமுறைப்படுத்தாது பாடசாலை பிள்ளைகளின் ஏனைய தேர்ச்சிகளுக்காகவும் பயன்படுத்த வேண்டும்.
வாழ்வதுக்கான தேர்ச்சிகளாக புறப்பாடவிதானங்களை அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டும் .
மனிதக்குழந்தைகளை அதுவே சீராக்கும் பாடசாலை என்ற நிறுவனம் அப்போதே வெற்றிபெறும்.