Theneehead-1

   Vol:17                                                                                                                               29.10.2018

தன் இனத்தை அழிக்கிற கோடாலிக் காம்புகள்!

ஒரு கதை சொல்லட்டா............?

ஒரே ஒரு பூமி பந்தில் கனடா என்று ஒே ஒரு நாடு உள்ளதாம். அதில் ஒந்தாரியோ என்ற பெயரில் ஒரு மாகாணம் இருக்குதாம். அதில் மார்க்கம் என்ற ஒரு சிறு நகரமும் அதில்vote here  Ward 7 என்று ஒரு வட்டாரமும் அமைந்து உள்ளதாம்.

உந்த வட்டாரம் 7 இல் அதிகப்படியாக வாழ்வது கல், மண், புல், புடுக்கு எல்லாம் தோன்ற முன் தோன்றின என்று தன்னை தானே பெருமைப்படும் தமிழ் இனத்தை சார்ந்தவர்களாம்.

மார்க்கம் நகருக்கு உள்ளுராட்ச்சி தேர்தல் அறிவித்தவுடன் இந்த வட்டாரத்தில் அதிகப்படியாக தமிழ் மக்கள் வாழ்வதால் அவர்களில் இருந்து திறமையான ஒருவரை தெரிவு செய்து மாநகர சபைக்கு அனுப்ப 100 வீத வாய்ப்புகள் இருந்ததாம். ஆனால் அப்படி வெல்வதற்கு ஒரே ஒரு தமிழர் தான் போட்டியிட்டல் வேண்டும் என்றும் அப்படி இல்லாவிடின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டுவிடும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாம்.

ஆனால் இதை நன்கு அறிந்தும் ஐந்து தமிழ் நண்டுகள் ரஇந்த ஒரே ஒரு வட்டாரத்துக்காக போட்டியிட்டனவாம். விடயம் தெரிந்த பலர் பல வழிகளில் பலவாறு வேண்டுகோள் விடுத்தும் செவிமடுக்காமல் ஐந்து நண்டுகளும் ஒற்றை காலில் நின்று போட்டியிட்டனவாம்.  வாக்குகள் பிரிக்கப்பட்டு பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களில் இருந்து ஒரு திறமையானவர் கூட தெரிவு செய்யபட முடியாது என நன்கு தெரிந்தும் இந்த ஐந்து நண்டுகளும் ஒன்றையொன்று எதிர்த்து போட்டியிட்டனவாம்.

ஈற்றில் எதிர்பார்த்த மாதிரி நேற்று நடந்த தேர்தலில் இந்த ஐந்து நண்டுகளில் இருந்து ஒன்றும் தெரிவு செய்யப்படாமல் இஸ்லாம் மார்க்கத்தை சார்ந்த ஒருவர் தெரிவு செயப்பட்டாராம். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 3308 என்றும் தமிழ் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் 6900 என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறனவாம்.

தானும் வெல்லவில்லை தாம் நினைத்த மாதிரி மற்ற ஒரு தமிழ் வேட்ப்பாளரும் வெல்லவில்லை என்பதை அறிந்து அந்த ஐந்து நண்டுகளும் குதித்து கும்மாளம் இடுகின்றனராம்.

------------------
இந்த கதையை கேட்ட ஒரு எலி குஞ்சு சொல்லிச்சாம்: தான் வாழும் பிரதேசத்திலேயே ஒரு பிரதிநிதியை தெரிவு செய்ய ஒற்றுமையில்லாத ஒரு புலம்பெயர் இனம், தமிழகத்தில் யார் வெல்வது, இலங்கையின் வடக்கு கிழக்கில் எந்த கட்சி வெல்வது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக தன்னை இன்னும் நினைத்து கொண்டு இருக்கு ..ஐயோ பாவம் என்று.