சிரியாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது; மனிதகுலத்துக்குப் பாகிஸ்தானால் அதிகபட்ச தீவிரவாத அச்சுறுத்தல்: ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வில் தகவல்

‘‘உலகில் மனிதகுலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக, சிரியாவை பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் இருக்கிறது’’ என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெoxfordரிவிக்கப்பட்டுள்ளது.

‘மனித குலத்துக்கு ஆபத்து - உலக தீவிரவாத அச்சுறுத்தல்’ என்ற தலைப்பின் கீழ் (ஜிடிடிஐ), இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ‘ஸ்ட்ரேடஜி போர்சைட் குரூப்’ (எஸ்எப்ஜி) என்ற அமைப்பும் இணைந்து உலக அளவில் தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து விரிவான ஆய்வு நடத்தின. எந்தெந்த நாடுகளில் எத்தனை தீவிரவாத இயக்கங்கள் உள்ளன, அவற்றின் செயல்பாடுகள், அச் சுறுத்தல்கள் போன்ற அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இதன் 80 பக்க அறிக்கை வெளியாகி உள்ளது.

தற்போது சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் வன்முறை அதி கரித்துள்ளது. ஆனால், சிரியாவை விட பாகிஸ்தான் மனித குலத்துக்கு 3 மடங்கு அதிகமாக தீவிரவாத அச்சுறுத்தலாக உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக நாடுகளில் தீவிரவாத அச்சுறுத்தல் பட்டியலில் பாகிஸ் தான் முதலிடம் பிடித்துள்ளது. அங்குதான் அதிகபட்ச தீவிரவாத இயக்கங்கள் உள்ளன. அத்துடன் தீவிரவாதிகளுக்கு சொர்க்கமாக பாகிஸ்தான் உள்ளது என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள ஆப்கன் தலிபான் மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கங்கள் சர்வதேச பாதுகாப்புக்கு அதிக அச்சுறுத்தலாக உள்ளது தெரிய வந்துள்ளது. சர்வதேச தீவிரவாதத்தை தோற்றுவிக்கும் நாடாகவும், அதற்கு ஆதரவு அளிக்கும் நாடாகவும் பாகிஸ்தான் உள்ளது என்று ஜிடிடிஐ ஆய்வில் வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தான் ஆதரவில் செயல்படுகின்றன என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, ஏமன் போன்ற நாடுகளில் உள்ள தீவிரவாத இயக்கங்கள், அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Theneehead-1

   Vol:17                                                                                                                               29.10.2018