Theneehead-1

Vol: 14                                                                                                                                                29.12.2016

சசிகலா புஷ்பாவின் கணவர் மீது அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல்!

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதpushpaிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் வழக்குரைஞர் மீது அதிமுக தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மறைந்த முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை வழிநடத்தப்போவது யார்? அதிமுகவின் அடுத்த பொதுச் செயலர் யார்? என்ற கேள்வி நிலவி வந்த நிலையில், அதிமுக பொதுக்குழு நாளை சென்னையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்படலாம் என பரவலாக போசப்பட்டு வருகிறது. இதற்கான வேலைகளில் சசிகலாவின் ஆதராவளர் மற்றும் அவரது உறவினர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். 

இருப்பினும் சசிகலாவுக்கு கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சசிகலாவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட மனு வாங்குவதற்காக அக்கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவுள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் தமது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தனர்.இந்த நிலையில் சசிகலா புஷ்பாவின் வழக்குரைஞர் ஒருவர் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் வந்தார். அவரை அடையாளம் கண்டு கொண்ட சின்னம்மா என்று கூறப்பட்டு வரும் சசிகலாவின் ஆதரவாளர்கள் அவரை சூழ்ந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அதிமுகவினரின் தாக்குதலில் பலத்த காயமடைந்த வழக்குரைஞரை போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்த வந்த நடிகர் ஆனந்தராஜ், ஜெயலலிதாவால் மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள் எல்லாம் இன்று ஒன்று சேர்ந்து அதிமுகவுக்கு ஒரு தலைமையை காட்டுகின்றனர். அது ஏற்புடையதாக இல்லை. மக்கள் அனைவரும் ஏற்க கூடிய தலைமை ஒன்றுதான் வரவேண்டும். யாரையும் கட்டாயப்பபடுத்தி வர வைக்க கூடாது. சுயலாபத்திற்காக அமைச்சர்கள் செயல்படுகின்றனர். நிகழும் சம்பவங்கள் அனைத்தும் ஏற்புடையதாக இல்லாததால் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

dantv