Theneehead-1

Vol: 14                                                                                                                                                10.01.2017

வில்பத்து விவகாரம் ஊடகங்கள் வாயிலாக திரிவுபடுத்தப்படுகின்றது

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் "வில்பத்து தொடர்பான எமது நிலைப்பாடு" எனும் தலைப்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (05) காலை கொழும்பு ரேனுகா ஹோட்டலில் இடvilpadம்பெற்றது.  அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன், இராஜாங்க ஏ.எச்.எம்.பௌசி, பிரதியமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான், தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் அசாத்சாலி உள்ளிட்ட பிரதிநிதிகள், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் N.M. அமீன் தலைமையில் இங்கு ஒன்றுகூடினர்.  "வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இலங்கை நாட்டவர்கள். இவர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அல்லது மாலைத்தீவில் இருந்து வந்தவர்களல்ல. இவர்கள் கள்ள தோணிகள் அல்ல. இவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறும் போது ஆக்கிரமிப்பு செய்வது போல் சூழலியலார்கள் காட்டுகின்றனர்.  30 வருடங்களாக தமது சொந்தக் காணிகளில் வளர்ந்திருக்கும் பற்றைக்காடுகளை அழித்துக்குடியேறும் போது இவர்கள் காடுகளைஅழிப்பதாக காட்ட முயற்சிக்கின்றனர்" என இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.       (மேலும்)  06.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

எதிர்க்கட்சி பாத்திரத்தை காத்திரமான முறையில் வகிக்கும்படி சம்பந்தனுக்கு மக்கள் விடுதலை முன்னணி அழைப்பு

புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டது.  கிளிநொச்சி பொதுச்சந்தை உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் இன்று காலை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.இதன்போது கருத்துத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன், எதிர்க்கட்சி எனும் பாத்திரத்தை காத்திரமான முறையில் வகிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தாம் அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்தார்.

_____________________________________________________________________________________________________________________________________

மாவீரா் துயிலுமில்லத்தில நினைவுச் சமாதி அமைக்கும் பணி பொலிஸாரினால் இடைநிறுத்தம்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று வியாழக்கிழமை 05-01-2017 ஆரம்பிக்கப்பட்டிருந்தது. முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரர்கmaveerarளின் உறவினர்கள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனர்.இந்த நிலையில் பிற்பகல் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்ற கரைச்சி பிரதேச சபையின் செயலலாளர் க. கம்சநாதன் தன்னுடைய அனுமதியின்றி சுடலையில் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என உத்தரவிட்டிருந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த உறவினர்கள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இது பிரதேச சபையின் உரிமைக்குட்பட்ட காணி அல்ல எனச் சுட்டிக்காட்டியதோடு இராணுவம் இவ்வளவு நாளும் இங்கு கட்டிடங்கள் அமைத்து இருந்த போது உங்களுடைய பிரதேச சபையும் சட்டங்களும் எங்கு போனது எனவும் கேள்வி எழுப்பி, தங்களது பணியை தொடா்ந்தும் முன்னெடுத்தனர்.    (மேலும்)  06.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

இந்திய அகதிகள்

-           கருணாகரன்

மாயாண்டி கிருஸ்ணசாமி இந்தியாவிலிருந்து ஜெயபுரத்துக்கு வந்து ஆறு மாதங்கreturnளாகிவிட்டன. இன்னும் அவரால் ஒரு ஒழுங்குக்கு வர முடியவில்லை. ஒழுங்கென்றால், தன்னுடைய காணியைத் துப்புரவாக்கி, அதில் ஒரு வீட்டை அமைத்து, மீளவும் அங்கே வாழத் தொடங்குவது. அதாவது ஒரு மீள்குடியேறியாக வாழ்க்கையை ஆரம்பிப்பதாகும். இதற்கு ஆரம்ப உதவிகள் தேவை. பொதுவாகவே காணியைத் துப்புரவாக்கி, கிணற்றை இறைத்துக் கொள்வதற்கென மீள்குடியேறிகளுக்கு ஆரம்ப உதவியாக ஐம்பதினாயிரம் ரூபாயை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனம் வழங்குவதுண்டு. ஏனைய தொண்டு நிறுவனங்கள் தற்காலி வீட்டையும் மலசல கூடத்தையும் அமைக்க உதவும். நிரந்தர வீட்டுத்திட்ட உதவி கிடைக்கும்வரையில் இந்தத் தற்காலிக வீட்டில் இருக்கலாம். கூடவே வாழ்வாதார உதவிகளும் ஒரு குறிப்பிட்டளவில் கிடைப்பதுண்டு. ஆனால், இதெல்லாம் கிருஸ்ணசாமிக்குக் கிடைக்கவில்லை. அவர் பருவம் தப்பி விதைத்த பயிரைப் போல செழிக்க முடியாமல் தவிக்கிறார்.   (மேலும்)  05.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

கரையில் மோதும் நினைவலைகள்

கள்ளவிசா

நடேசன்

62ஆவது பிறந்ததினம் கடந்த மார்கழி 23 ஆம் திகதியன்று மாலை 6.30 மணிவரையும் வேலை செய்தேன். வெளியே சென்று காலையில்; ரெஸ்ரோரண்ட் ஒன்றில் உணவருந்துவோம் என்று மனைவி கேட்டபோது மறுத்துaustraliaவிட்டேன். கோதில்லாத நண்டு வீட்டில் சமைக்கப்பட்டிருந்தது. வீட்டில் உணவு சிறந்ததாக இருக்கும்போது வெளியில்போகத்தேவையில்லையே? ஆனால், வாய்க்கு இதமாகவும் சமிப்பதற்கு வசதியாகவும் வெள்ளை வைன் போத்தல் ஒன்றை வாங்கிவருவதற்கு நினைத்தேன். நியூசிலாந்து ஓய்ரர் பே சவன் பிலாங் எனக் கேட்டேன். வெள்ளை வைனும் கடல் உணவுக்குப் பொருத்தமானது எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள வைன்கடைக்குச் சென்று காரில் இருந்து இறங்கியதும், வெக்கை முகத்தில் அடித்தது. வெய்யில் எரித்தது. காற்றை யாரோ திருடிவிட்டார்களோ என்பதுபோல் மரங்கள் அசையவில்லை. மெல்பனின் கோடையில் 9 மணிக்குப் பின்பாகவே இரவு ஊர்ந்து வரும். வேறு ஒருவரும் இல்லை. மதுக்கடையில் வேலை செய்பவரை பல முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இதுவரை பேசியதில்லை. அவரது முகத்தில் ஏதோ சோகம் தெரிவதுபோல் எனக்குப் பட்டது. இரவு நேரங்களில் அதிகமாக வேலை செய்பவர். அவர் ஒரு வெள்ளை அவுஸ்திரேலியர். எனது வயதிருக்கும். கண்ணாடி போடாதவர் தீர்க்கமான பார்வையுடன் மிகவும் திடகாத்திரமானவர்.   (மேலும்)  05.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

வளங்களை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விற்க முயற்சி: மக்களைத் தெளிவூட்ட ம.வி.மு நடவடிக்கை

இலங்கையின் வளங்களை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முயற்சிanura dissanayakeப்பதாகத் தெரிவித்து, மக்களைத் தெளிவூட்டும் திட்டமொன்றை மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பித்துள்ளது. இதற்கமைய, மக்களைத் தெளிவூட்டும் வகையில் கையேடுகளை விநியோகிக்கும் நடவடிக்கை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டிருந்தார். அங்கு உரையாற்றிய அவர், கடந்த இரண்டு வருடங்களாக நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் கொள்கையை அரசாங்கம் உருவாக்கி வருவதாகக் குற்றம் சுமத்தினார். புத்தாண்டு ஆரம்பத்திலேயே இயற்கை வளங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளதாக அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். மக்களின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் முயற்சிக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையினை மக்கள் விடுதலை முன்னணி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

_____________________________________________________________________________________________________________________________________

இந்தியாவிற்கு இடம்பெயர்ந்தோர் யாழ் திரும்ப விருப்பம்

யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 1 லட்சம் பேர் இந்தியாவில் இருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் லண்டனின் இலங்கைக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுக்களிmeetingன் தலைவர் லோர்ட் நெசபியிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த லண்டனின் இலங்கைக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுத் தலைவர் லோர்ட் நெசபி இன்று (04) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். சுமார் 1 மணித்தியாலயங்கள் நீடித்த குறித்த சந்திப்பின் போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் பொது நிலைமைகள் மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை ஆராய்ந்தார். அத்துடன், கல்வி, விவசாயம், சுகாதாரம், உட்பட மீள் குடியேற்றங்கள், இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் குறித்தும், விரிவாக ஆராய்ந்தார். அதன்போது, 1 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் இந்தியாவில் இருக்கின்றார்கள். தற்போது, இங்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதேவேளை, மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றதாகவும், அண்மையில் இந்தியாவில் இருந்து 900 குடும்பங்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.அதேவேளை, யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைகள் பற்றியும் எடுத்துக் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

_____________________________________________________________________________________________________________________________________

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு விற்பதால் 330 பில்லியன் ரூபா நட்டம்: முறைப்பாடு பதிவு

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீன நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதால் துறைமுக அதிகார சபைக்கு 330 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகத் தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தது.அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட குழுவினர், துறைமுக அமைச்சின் அதிகாரிகள் மற்றும் செயலாளர்கள் குழுவின் உறுப்பினர்கள் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முறைப்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெப்பமிட்டுள்ளார்.

_____________________________________________________________________________________________________________________________________

இஸ்தான்புல் இரவு விடுதியில் தாக்குதல் நடத்திய நபரை அடையாளம் கண்டுள்ளதாக துருக்கி தகவல்


துருக்கி தலைநகரான இஸ்தான்புல் நகரையொட்டி, ஐரோப்பிய கண்டத்தையும்,istanpul ஆசிய கண்டத்தையும் பிரிக்கும் பாஸ்பரஸ் ஜலசந்தி பகுதியில் ஆர்ட்டாக்கோய் மாவட்டத்தில் உள்ள அந்த பிரபல இரவு விடுதி, உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் அடிக்கடி ஒன்றுகூடி விருந்து நிகழ்ச்சிகளை நடத்தும் பிரசித்தி பெற்ற இடமாகும்.கடந்த முதல்தேதி பிறந்த புத்தாண்டை வரவேற்க இந்த இரவு விடுதியில் சுமார் 500 பேர் திரண்டு, மகிழ்ச்சியுடன் காத்திருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் உச்சகட்ட உற்சாகத்தில் அவர்கள் திளைத்திருந்தபோது, இரவு சுமார் 1.30 மணியளவில் தானியங்கி ரக துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த ஐ.எஸ். பயங்கரவாதி ஒருவன், எதிர்பட்டவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான்.இதில் 35 பேர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர், 70-க்கும் அதிகமானவர்கள் குண்டு காயங்களுடன் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்தது. இவர்களில் 15 பேர் வெளிநாட்டினர் என்றும் அவர்களில் இருவர் இந்தியர்கள் என்பதும் பின்னர் தெரியவந்தது.  (மேலும்)  05.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

கைத்தொலைபேசி

- சிவராசா ஜேர்மனி

ஆகா...கைத்தொலைபேசி என்னும்போது இன்று இது எவ்வளவு அறபுதமான சாதனமாக விளங்குகின்றது. கைத்தொலைபேசியால ; மனிதன் அளப்பரிய நன்மைகளைப் பெற்றுவந்தாலும் தீமைகளும் உண்டுதான். இருப்பினும் அதை ஒவ்வொருவரும் பாவிக்கும்  தன்மைகளைப் பொறுத்தே நனi; ம தீமைகள் அளவிடப்படுகின்றன என்றே சொல்லவேண்டும.; தொலைபேசியைக் கண்டுபிடிக்கமுன் இந்த உலகம்  எப்படி இயஙக் pயிருக்கும் என்று யோசிக்கும்போது நமக்கு ஆச்சரியம் பிறக்குதல்லவா..மார்க்கோனி என்ற விஞ்ஞானி இதை கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவராவர். தொலைபேசிப் பரிவர்த்தனையால் உலகம் பல ஆராய்ச்சிகளை நடாத்திப் பல கண்டுபிடிப்புகளையும் செயது; பல முன்னேற்றஙக்ளை அடைந்திருப்பது நிஜமான விடையமாகும். பல சாதனைகளை, பல வெற்றிகளைகக்ண்டு பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. (மேலும்)  05.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

இந்தியா, சீனா மற்றும் மகிந்த ராஜபக்ஸவின் புதிய அரசியல் திட்டம்

                                                    லசந்தா குருகுலசூரிய

மைத்திரி - ரணில் ஐக்கிய அரசாங்கம் தனது பதவிக்காலத்தின் இரண்டாவது வருட நிறைவை அண்மித்துக் கொண்டிருக்கும்போது, கூட்டரசாங்கத்தின்மீது பொங்கிவரும் எரிச்சலை அடக்கமாட்டாத முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ திரும்பவும் வருவதற்கான முயற்சிகளை வேகமாக இயக்கி வருகிறார்.mahinda R  உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தன்னுடனே உள்ளது, அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வரும் தனியார் மயமாக்கும் முயற்சிகளை தான் எதிர்ப்பதாகவும் மற்றும் கட்சியையும் அதன் நிறுவனர்களின் மதிப்பையும் தான் மீள நிலைநிறுத்தப் போவதாகவும் கூறும் அவர், போர்க்குணத்துடன் இருக்கிறார். கொழும்பை தளமாகக் கொண்ட வெளிநாட்டு நிருபர்களுடன் வியாழன் அன்று தனது அலுவலகத்தில் வைத்து விரிவான வீச்சில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த அவர் நிருபர்களிடம் வலியுறுத்தியதைப் பார்க்கும்போது ஒரு முற்றுகையை ஆரம்பிப்பதற்கான சந்தோஷத்தில் இருப்பதாகத் தோன்றியது.குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மகிந்த ராஜபக்ஸ,கலந்துரையாடலுக்காக தனது குரலைச் சரிப்படுத்திக் கொண்டு முதலாவது கேள்விக்கான தனது பதிலை, தான் புதிய வருடத்தில் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவதாகக் கூறிக்கொண்டு புன்னகையுடன் ஆரம்பித்தார்.   (மேலும்)  04.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

மாகாணசபையின் பெயரால் ...........

-    வடபுலத்தான்

அரசியல்ல ரண்டு வகையிருக்கு. சனங்களுக்குச் சேவை செய்யிற அரசியல் ஒண்டு. சNPCனங்களை வைச்சுப் பிளைக்கிறது அரசியல் இன்னொண்டு. தமிழ்த்தேசியவாத அரசியல் அநேகமா ரண்டாவது வகையைச் சேரும். (இதுக்குள்ள இயக்க அரசியலைக் கொண்டு வந்து செருகப்பிடாது).   இந்த ரண்டாவது வகை அரசியலைச் செய்யிறதில தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்களுக்கு நிகரில்லை. இப்ப எம்பி மாராக இருக்கிறவையாகட்டும் மாகாணசபை உறுப்பினர்களாக இருக்கிறவையில முக்கால்வாசிப்பேராகட்டும், பிரதேச சபை உறுப்பினர்கள், நகரசபை, மாநகரசபை உறுப்பினர்களாக இருந்தவையாகட்டும் எல்லாரும் சனங்களை வைச்சுப் பிழைக்கிற அரசிலைத்தான் செய்து கொண்டிருக்கினம்.இதில நம்பர் 01, நம்பர் 02, நம்பர் 03 எண்டெல்லாம் தரவரிசையும் இருக்கு. ஒண்ணாம் நம்பர்காரர் செய்கிற அட்டகாசங்கள் இதில உச்சம். அதில ஒராள் வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை. இவர் நடிப்பில பெரிய விண்ணன். அந்தக் காலத்தில இருந்து இந்தக் காலம் வரையில எல்லா மேடைகளிலயும் அந்த மாதிரி நடிக்கிற மகா கெட்டிக்காரன். பொச்சுமட்டையோட தேங்காயைப் பிழிஞ்சு பாலெடுக்கக்கூடிய ஆள்.  (மேலும்)  04.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

கடந்த அரசாங்கம் கட்டுமானம் மூலம் திருடியது; இந்த அரசு விற்பனை மூலம் திருடுகிறது

கடந்த அரசாங்கம் கட்டுமான நடவடிக்கைகள் மூலம் திருடியதாகவும், தற்போதைய அரசாங்கம் விற்பனை மூலம் திருடுவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறினார். anura dissanayake ஹம்பாந்தோட்டை துறைமுக கொடுக்கல் வாங்கல் அதுபோன்ற மிகவும் ஊழல்மிக்க கொடுக்கல் வாங்கல் என்றும் அவர் கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஊழல் மோடியில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதே இந்த அரசாங்கத்தின் பிரதான வாக்குறுதியாக இருந்தது. எனினும் ஊழல் மோசடிக்காரர்களுக்கு தண்டனை வழங்குவதற்குப் பதிலாக, திருடப்பட்ட சொத்துக்களை மீள பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக திருடர்களின் பாதுகாவலர்களாக இந்த அரசாங்கம் மாறியுள்ளது. அதேபோல் ஊழல் மோசடிகளில் பங்காளராகியுள்ளது என்று அவர் கூறினார்.  (மேலும்)  04.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களை முன்னிலைப்படுத்துமாறு வழக்குத்தாக்கல்: இன்று விசாரிக்கப்பட்டது

எழிலன் உட்பட இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அனந்தி சசிதரன் உள்ளிட்ட சரணடைந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மனுதாரர்கள் சார்பாக அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்களும், 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்கிய குணவர்தன உள்ளிட்ட பிரதிவாதிகளும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.  பிரதிவாதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சாணக்கிய குணவர்தன இன்று சாட்சியமளித்தபோது, அவரால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் இன்று வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் ஒத்திவைத்தார்.

_____________________________________________________________________________________________________________________________________

இந்து ஆலயங்கள் மீது மீண்டும் தாக்குதல்

இலங்கை கிழக்கு மாகாணத்தில் அடையாளந் தெரியாத ஆட்களினால் இந்து ஆலயமொன்kovilறின் விக்கிரகம் தூக்கி வீசப்பட்டு, மற்றுமோர் ஆலயத்தின் கோபுர கலசமும் சேதமாக்கப்பட்டுள்ளது.  திருகோணமலை மாவட்டம் நிலாவெளிப் பகுதியிலுள்ள கூழாவடி பிள்ளையார் ஆலயம் மற்றும் பத்தினி அம்மன் ஆலயம் ஆகியவற்றின் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது.கூழாவடி பிள்ளையார் ஆலயத்தில் மூலஸ்தானத்திலிருந்த பிள்ளையார் அகற்றிய இந்நபர்கள் அதனை அருகாமையிலுள்ள காணியொன்றுக்குள் வீசி விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை வழமை போல் ஆலய பணிக்கும் வழிபாட்டுக்கும் சென்றிருந்த பெண்ணொருவர், இது தொடர்பாக நிர்வாகத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.மற்றுமோர் சம்பவத்தில் பத்தினி அம்மன் ஆலயம் மீதான தாக்குதலின் போது ஆலயத்தின் கோபுர கலசம் சேதமாக்கப்பட்டுள்ளது.    (மேலும்)  04.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

இலங்கை அரசைக் கவிழ்க்க முடியுமா? ராஜபட்சவுக்கு ரணில் சவால்

இலங்கை அரசை முடிந்தால் கவிழ்த்துப் பார்க்கட்டும் என்று ராஜபட்சவுக்கு அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சவால் விடுத்துள்ளார். தாம் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒரு வார காலranilத்தில் ராஜபட்ச அதை செய்து முடிக்கிறாரா? என்பதை பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசுக்கு எதிரான போராட்டங்களை அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபட்ச முன்னெடுத்து வருகிறார். இலங்கை விடுதலைக் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அரசியல் பிரவேசம் செய்ய இத்தகைய நடவடிக்கைகளில் ராஜபட்ச ஈடுபட்டு வருகிறார்.குறிப்பாக, இலங்கை - சீனா இடையே மேற்கொள்ளப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டல ஒப்பந்தத்தின் சில அம்சங்களுக்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்துக்காக அம்பணத்தோட்டம் பகுதி மக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக ராஜபட்ச போராட்டம் நடத்தி வருகிறார்.   (மேலும்)  04.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்: உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கொழும்பில் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கொழும்பில் நடத்தப்படுகின்றமை ஏமாற்றமளிப்பதாக அவர்கள் கூறினர்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.வடமாகாண சபையின் மொத்த உறுப்பினர்களில் 30 பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களாவர்.அத்தோடு, கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.கிழக்கு மாகாண சபையிலும் கூட்டமைப்பு 11 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

_____________________________________________________________________________________________________________________________________

இங்கிலாந்து நாட்டிற்கு நேரடி சரக்கு ரெயில் சேவையை சீன அரசு அறிமுகம் செய்துள்ளது.

உலகின் 2-வது பெரிய பொருளாதார நாடக விளங்கும் சீனா தற்போது சரக்கு ரெயில் சேவையை இங்கிலாந்து நாட்டிற்கு வரை அறிமுகம் செய்துள்ளது. இந்த சரக்கு ரெயில் சேவை சீனாவின் ஸெஜியாங் மாகாrailணத்தில் உள்ள யுவூ நகரில் இருந்து லண்டன் நகருக்கு இந்த ரெயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் சேவை நேற்று யுவூ நகரிலிருந்து லண்டனுக்கு புறப்பட்டது. இந்த சரக்கு ரெயில் சீனாவில் இருந்து கஜகஸ்தான்,ரஷ்யா,பெலாரஸ்,போலாந்து,ஜெர்மனி,பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை கடந்து லண்டன் நகரை சென்று அடையும். இந்த சரக்கு ரெயில் சுமார் 12,000 கி.மீ தூரத்தை 18 நாட்களில் கடந்து செல்லும். யூவூ நகரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆயத்த ஆடைகள்,சூட்கேஸூகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை அந்த ரெயிலில் அனுப்பி வைக்கப்படும்.  சீன அரசு பிரான்ஸ் நாட்டிற்கு ஏற்கனவே நேரடி சரக்கு ரெயிலை இயக்கு வரும் வேலையில் தற்போது லண்டன் வரை விரிவு படுத்தி உள்ளது. இந்த ரெயில் சேவை சீனாவிற்கும் லண்டன் நாட்டிற்கும் உள்ள வர்த்த உறவை மேம்படுத்துவதாக சீன அரசு கருதுகிறது.

_____________________________________________________________________________________________________________________________________

2016 ஆம் ஆண்டில் இஸ்லாமிய சட்டங்களை மீறிய 153 பேருக்கு மரண தண்டனை

சவுதி அரேபியாவில் கொலை, போதை மருந்து கடத்தல், கற்பழிப்பு மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட காரணங்களுக்காக மரணதண்டனைகள் வழங்கப்படுகின்றன. இதில் கடந்தாண்டு மட்டும் சர்வதேச மன்னிப்பு சபை தகவலின் படி 153 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டில் 158 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதால், இந்தாண்டு குறைவுதான் என்று கூறப்படுகிறது. இதில் 47 பேர் கடந்த ஜனவரி மாதம் ஒரே நாளில் பயங்கரவாத குற்றங்களுக்காக சாகடிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் போதை மருந்து கடத்துதல் மற்றும் கொலை போன்ற வழக்குகளிலே அதிகமானோர் மரணதண்டனைக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது.மேலும் அங்கு மரணதண்டனைகள் ஒரு வாள் கொண்டு குற்றவாளியின் தலையை துண்டாக வெட்டி நிறைவேற்றப்படுகின்றன.

_____________________________________________________________________________________________________________________________________

தெய்வீகன் பதிவு

உடையும் வேலிகள்

- ப. தெய்வீகன்

வட மாகாண சபையில் கடந்த மூன்று வருடத்தில் 337 தீர்மானங்களை நிறைவேற்றிய களைப்புடன் கனடா செல்லவுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கோ அல்லது தமிழர்களுக்கு தீர்வு வழங்குவதாயின் சிங்களவர்களின் மனங்களை வெல்லவேண்டும் என்று தலதா மாளிகையில் பிரதட்டை அடித்துக்கொண்டிருக்கும் சம்பந்தனுக்கோ அல்லது அவரது பரிவாரங்களுக்கெல்லாம் இந்த பிரச்சினை பெரிய அரியண்டமாகத்தானிருக்கும். ஏனென்றால், அவர்கள் ஆளுக்காள் அண்ணா - தம்பி என்று "நாளை நமதே " பாடிக்கொண்டு ஓடுகின்ற அரசியல் வண்டிக்கு இந்த முன்னாள் போராளிகள் பிரச்சினைக்குரிய ஆட்கள். கறைபடிந்தவர்கள். தீட்டுப்பிடித்தவர்கள். தீண்ட தகாதவர்கள். அறிக்கைகளுக்கும் அரசியலுக்கும் மாத்திரம் மங்களகரமானவர்கள்.

தீர்வை பெற்றுத்தராத சம்பந்தனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கரexltte-4ுட புராணத்தின் கடைசிப்பக்கம் வரைக்கும் தடவித்தேடிக்கொண்டிருக்கும் "மாண்பு மிகு" ஈழத்தமிழ் பெருமக்களும் இதயம் பலவீனமானவர்களுக்கும் இந்த பதிவை இதற்கு மேல் வாசிக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா சிறைகளில் கொண்டு சென்று அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சுமார் நூறுக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் இன்று கிளிநொச்சியில் சிறிலங்கா இராணுவத்திடம் சென்று தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு வேலை தருமாறு கேட்டு - இரந்து - விண்ணப்பித்துவிட்டு வந்திருக்கிறார்கள். இராணுவத்தினரின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு ஆட்களை எடுக்கப்போவதாக விடுக்கப்பட்ட அறிவிப்பை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் சிலர் தங்களது கைக்குழந்தைகளோடு போய் நின்று - தங்களை அந்த பிரிவில் இணைத்துக்கொள்ளுமாறு கோரி கையெழுத்திட்ட மகஜரை கையளித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.    (மேலும்)  03.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் வேலைவாய்ப்பு  கோரி ஒன்றுதிரண்ட முன்னாள் போராளிகள்

 சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் திங்கள் (02.01.2017) காலை கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள  exltteபடையினரின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு முன்னால்  ஒன்றுதிரண்டனர். காலை 10.30 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களுமாகத் திரண்ட விடுதலைப் புலிகளின் முன்னாள்  போராளிகள்,  தாங்கள் புனா்வாழ்வுப்  பெற்று வெளியில் வந்த காலம் முதல் நிரந்தர தொழில் இன்றி பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து வருவதாகவும், புனா்வாழ்வு  பெற்றக்  காலத்தில் தங்களுக்கு பண்ணைகளில் வேலை செய்யும் பயிற்சியே வழங்கப்பட்டது என்றும் எனவே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பண்ணைத்திட்ட வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரிநின்றனா்.சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு புதிதாக ஆட்கள் எடுப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது என்று தெரித்த போராளிகள், அதனடிப்படையில்,  தேசிய அடையாள அட்டை மற்றும் புனா் வாழ்வு  பெற்று விடுதலையான கடிதம் ஆகியவற்றுடன் வருமாறு தகவல் வெளிவந்தது. அதற்காகவே இங்கு வந்திருகின்றோம்.  எனவே  எங்களுக்கு வேலைவாய்ப்பை தாருங்கள் என சிவில் பாதுகாப்புத் திணைக்கள  கிளிநொச்சிக்கான  கட்டளை அதிகாரி  மேஜர்  சாகர வீரசிங்கவிடம் கோரிநின்றனா்.  (மேலும்)  03.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

முன்னாள் போராளி தற்கொலை

இனியவன் என்றழைக்கப்படும் தர்மசேனா ரிசிகரன் என்ற முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் சாவகச்சேரியில் தூக்கில் தொங்கி இறந்திருப்பது இன்று திங்கட்கிழமை காலை தெரியவந்துள்ளது.  முன்னாள் விடுதலைப் புலிகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஜனநாயகப் போராளிகள் என்ற கட்சியின் தென்மராட்சி பிரதேச பொறுப்பாளராக இருந்த இனியவன், அந்தக் கட்சியின் சாவகச்சேரி அலுவலகத்திலேயே தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்திருக்கின்றார். சம்பவ இடத்திற்கு விரைந்த ​பொலிஸார் சடலத்தை மருத்துவ பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளராகிய துளசியிடம் இனியவனின் மரணம் குறித்து கேட்டபோது, தமது கட்சி அலுவலகத்தில் அவர் சடலமாகக் கண்டு பிடிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியதுடன், அவருடைய மரணம் மர்மமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டிருந்தனர். எனினும் வெற்றிபெறவில்லை.    (மேலும்)  03.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

வட கடற்பரப்பில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலுடன் மீனவர்கள் தொடர்புபடவில்லை

வடபகுதியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் சமூக சீரழிவை ஏற்படுத்துவதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.fishers
வடக்கு கடற்பரப்பினூடாக நாட்டிற்கு கடத்தப்படுகின்ற போதைப்பொருட்கள் தரைவழியாக விநியோகஸ்தர்களை சென்றடைகின்றமை பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.வடக்கு கடற்பரப்பினூடாக இடம்பெற்றுவரும் போதைப்பொருள் கடத்தலுடன் மீனவர்கள் தொடர்புபடவில்லை என இலங்கை இந்திய மீனவர்கள் கூறுகின்றனர்.மீனவர்கள் என்ற போர்வையில் இந்த சட்டவிரோத செயலை திட்டமிட்டு ஒரு குழுவினர் மேற்கொண்டுவருவதாக மீனவர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.கடல் மார்க்கமாக கடத்தப்பட்ட 1600 கிலோகிராம் கேரள கஞ்சாவும் தரைவழியில் கடத்தப்பட்ட 3200 கிலோகிராம் கேரள கஞ்சாவும் கடந்த ஒருவருட காலத்தில் மறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
(மேலும்)  03.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

புத்தாண்டில் எதிர்கொள்ள வேண்டிய புதிய சவால்கள்

நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியற்றிருக்கும் நிலையிலேயேபுத்தாண்டு தொடங்குகிறது. அவர்கள் தாங்கள் வியர்வை சிந்தி உழைத்துசம்பாதித்த ஊதியங்கள் பறிக்கப்பட்ட நிலையில், தpd editorial log0ங்கள் வாழ்வாதாரங்களைஇழந்து நிற்கிறார்கள். பலர் தங்கள் வங்கிக் கணக்கில் வைத்துள்ள அற்பஅளவிலான சேமிப்புத்தொகையைக் கூட எடுக்க முடியாத நிலையில் இருந்துவருகிறார்கள்.இவ்வாறு மக்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தும் நரேந்திர மோடியின் கற்பனை உலகியல் வாய்ந்த 500 ரூபாய், 1000ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8 அன்று அறிவிப்பு காரணமாக ஏற்பட்டவை களாகும். இவ்வாறு அறிவித்து டிசம்பர் 30உடன்ஐம்பது நாட்கள் நிறைவடைகிறது. ஆயினும், இதன் விளைவாக மக்களுக்கு ஏற்பட்ட துன்பதுயரங்கள் முடிவதற்கான அடையாளம் எதுவும் கண்ணுக்குத்தெரியவில்லை. எனவே, புத்தாண்டு என்பது மக்கள் மீதான ரொக்க யுத்தம் தொடர்வதுடனேயே தொடங்குகிறது. 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று திடீரென்று அறிவித்து, புழக்கத்தி லிருந்த கரன்சி நோட்டுகளில் 86 சதவீதம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டதன் மூலமும்அதற்குப் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிடாததன் மூலமும் ரொக்க நெருக்கடி ஏற்பட்டு நாட்டின் பொருளாதாரமே கடுமை யாகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது,   (மேலும்)  03.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

மஹிந்த விரும்பியதை செய்யலாம் - ஆனால் நானே பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தான் விரும்பியதை செய்ய சுதந்திரம் உண்டு எனவும், எதுஎவ்வாறு இருப்பினும் தானே நாட்டின் பிரதமர் எனவும், ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பிறந்திருக்கும் புதுவருடத்தில் முதன்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக, அரலி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போது, ஊடவியலாளர்களை சந்தித்த வேளையே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.  இதன்போது, 2017ம் ஆண்டு அரசாங்கம் கவிழ்க்கப்படும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, தான் அடுத்த வாரம் சுவிஸர்லாந்து செல்லவுள்ளதாகவும், அச் சந்தர்ப்பத்தில், மஹிந்த ராஜபக்ஷ தான் கூறியதைபோல செயற்பட முயற்சிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்

_____________________________________________________________________________________________________________________________________

ஈழத்துப் பாடலாசிரியர் எச்.எப். ரிஸ்னாவின் கனவு உயிர்பெறும் புதுவருடம்

வருடம் தொடங்கிடும்
புதிய காலையில் வாழ்க்கையில்
நம்பிக்கைத் தோன்றும்..
அந்த நொடியில் துளித்திடும்
கனவு உயிர்பெற
இறையிடம் நெஞ்சம் கேட்கும்..
விலக முனைந்திடும்
கரிய நினைவுகள் உடனடி
வீழ்ந்திங்கு மாயும்..
அருவி போலொரு இனிய ஓசையை
ஆவலாய் இதயம் கேட்கும்.

(மேலும்)  03.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

ஸ்ரீலங்காவின் இனவாத அரசியல் காரணமாக 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மரணம் மற்றும் அழிவு ஏற்பட்டுள்ளது

                                                லத்தீப் பாரூக்

இனவாத அரசியல் 200 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மரணங்கள் மற்றும் farookஅழிவுகளை ஏற்படுத்தியுள்ளது: இருந்தும் இனவாத அரக்கன் அதன் அசிங்கமான தலையை உயர்த்த ஆரம்பித்துள்ளான், மற்றும் நாடும் அநேக மக்களும் அது இன்னும் மற்றொரு அழிவை நோக்;கி முன்னேறுவதாக அச்சம் அடைந்துள்ளார்கள்.   இருநூறு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது விசேடமாக சிறந்த இயற்கைச் செல்வங்களால் ஆசீர்வதிக்கப்பட்டதும் மற்றும் படிப்பறிவுள்ள மக்களைக் கொண்டதுமான ஸ்ரீலங்கா போன்ற சிறிய ஒரு நாட்டுக்கு மிகப் பெரிய ஒரு தொகைப் பணமாகும். ஒரு டொலர் ரூபா 145 என்ற விகிதத்தில் அதை மாற்றீடு செய்தால்கூட அது கிட்டத்தட்ட 29,000 மில்லியன் ரூபாவுக்கு சமமாகும்.  இந்த தேசிய செல்வம், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தவும், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய, தொழில் மற்றும் வியாபார நிறுவனங்களை அமைக்க, தொழில்களை உருவாக்க, வறுமையை ஒழித்து மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பயன்படுத்தப்பட்டிருக்குமானால் இந்த நாடு எல்லா வகையிலும் இன்று சொர்க்கபுரியாக மாறியிருக்கும். அது 1948ல் எங்கள் நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்ததைப் போல மூன்றாம் உலக நாடுகளுக்கு ஒரு பிரகாசமான உதாரணமாகத் திகழ்ந்திருக்கும்.      (மேலும்)  02.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

அரச வைத்தியசாலை நோயாளர்கள் தனியார் சேவையை நாடத் தடை

இன்று முதல் அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு தhealth ministryனியார் வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.  அமைச்சர் ராஜித்த சேனாரத்னவால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த 31ம் திகதியளவில் அரசாங்கத்தினால் சகல பரிசோதனை கூட வசதிகளும் உள்ள வைத்தியசாலைகளுக்கு இரத்த பரிசோதனை செய்யும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.அரசாங்கத்திலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் இரத்தப் பரிசோதனைகளை தனியார் பிரிவினரால் மேற்கொள்வதாக தெரியவந்தால், இன்று முதல் சம்பந்தப்பட்ட வைத்தியசாலை (அரச வைத்தியசாலை) பணிப்பாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.மேலும் அனைத்து அரசாங்க வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கும் இது குறித்து விஷேட சுற்றறிக்கை ஒன்றை வௌியிடுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் அனுர ஜெயவிக்ரமவுக்கு, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

_____________________________________________________________________________________________________________________________________

புதிய அரசியல் யாப்பு நாட்டைப் பிளக்கும் ஆவணமல்லஉத்தேச புதிய அரசியலமைப்பில் நாட்டுக்குத் தீமையை ஏற்படுத்தும் எந்தவொரு விடயங்களும் உள்ளடக்கப்படவில்லையென்றும், புதிய அரசியலமைப்பானது நாட்டைத் துண்டாடும் ஆவsrisenaணம் இல்லையென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். கண்டி தலதாமாளிகைக்கு சென்றிருந்த ஜனாதிபதி, மல்வத்துபீட மற்றும் அஸ்கிரியபீட மாகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றபோதே இந்த உறுதிமொழியை வழங்கினார்.அரசியலமைப்பைத் தயாரிக்கும் செயற்பாடுகள் மற்றும் அது தொடர்பில் முன்வைக்கப்படும் யோசனைகளுக்கு சிலர் எதிரான கருத்துக்களை முன்வைக்கின்றபோதும், நாட்டின் ஒற்றுமைக்கோ அல்லது பௌத்த மதத்துக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் எதுவும் அதில் உள்ளடக்கப்படமாட்டாது. அவ்வாறான நடவடிக்கைக்கு தனது பதவிக்காலத்தில் தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென்றும் ஜனாதிபதி கூறினார்.புத்தாண்டை முன்னிட்டு கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி, அஸ்கிரியபீட மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரைச் சந்தித்தபோதே இந்தக் கருத்துக்களை தெரிவித்தார  
(மேலும்)  02.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

அ.தி.மு.க., பொதுச்செயலராகி உள்ள சசிகலா, திருமங்கலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

'சசிகலா முதல்வராக வேண்டும்' என, முதலில் தீர்மானம் நிறைவேற்றிய, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், அவருக்காக, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். அத்துடன், கட்சியsasikala-1ில் பொதுச்செயலருக்கு அடுத்த இடத்திற்கு, தினகரனை கொண்டு வர வசதியாக, அவரை ஆர்.கே.நகரில் களமிறக்க வும், முடிவு செய்யப்பட்டுள்ளது.  முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, பன்னீர்செல்வம் முதல்வரானார். அதேநேரத்தில், ஜெ., வகித்த, அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவிக்கு, சசிகலாவை கொண்டு வர, மன்னார்குடி குடும்பம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, கை மேல் பலன் கிடைத்துள் ளது. பொதுக்குழு தீர்மானப்படி, அ.தி.மு.க., பொதுச்செயலராக, அவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.இதையடுத்து, சசிகலாவின் கவனம், ஆட்சியின் பக்கம் திரும்பியுள்ளது. அதற்கான முயற்சிக ளும், கன கச்சிதமாக நடந்து வருகின்றன. பன்னீர்செல்வத்தை நீக்கி விட்டு, முதல்வராக பொறுப்பேற்பது குறித்து ஆலோ சிக்கும் அதே நேரத்தில், எந்த தொகுதியில் போட்டியிடுவது என்ற, ஆலோசனைகளிலும், அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.'ஜெயலலிதா போட்டியிட்ட, ஆர்.கே.நகர் தொகுதி, பாதுகாப்பானது அல்ல; அங்கு போட்டி யிட்டால், வெற்றி பெறுவது கடினம்' என்ற தகவல், சசிகலாவுக்கு சென்றுள்ளது.   (மேலும்)  02.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

உடுத்துறை பகுதியிலுள்ள சனசமூக நிலையம் தீக்கிரையான சம்பவம் தொடர்பில் விசாரணை

வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியிலுள்ள சனசமூக நிலையம் ஒன்று தீக்கிரையானuduthurai சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  உடுத்துறை பகுதியிலுள்ள வேம்படி முத்தமிழ் சனசமூக நிலையமே தீயினால் முற்றாக எரிந்துள்ளது.  இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாகவும், தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை  எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.   குறித்த சனசமூக நிலையத்திலிருந்த சுமார் 100 புத்தகங்களும் தளபாடங்களும் முற்றாக அழிவடைந்துள்ளன.  இந்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

_____________________________________________________________________________________________________________________________________

5-19 வயதுக்குட்பட்டவர்களுக்கு சுகாதார காப்புறுதி

பிறந்திருக்கும் புதிய வருடத்தில் 5 வயது தொடக்கம் 19 வயது வரையான பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபா சுகாதார காப்புறுதியைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.குடும்பத்திலுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ளாது இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், 2017ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சில யோசனைகள் இன்று முதல் அமுல்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

_____________________________________________________________________________________________________________________________________

வடக்கு கடற்பரப்பினூடான போதைப்பொருள் கடத்தலுடன் இந்திய மீனவர்களுக்கு தொடர்பு

இலங்கையின் வடக்கு கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தலுடன் இந்திய மீனவர்களுக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. கடல் மார்க்கமாக இடம்பெறுகின்ற போதைப் பொருள் கடத்தலுக்கு முற்றுபுள்ளி வைக்க இதுவரை முடியாமற்போனமைக்கு காரணம் என்ன?  மாதகல், வடமராட்சி கிழக்கு, மன்னார், தலைமன்னார் உள்ளிட்ட கடற்பரப்புக்களில் அதிகளவிலான கஞ்சா அண்மைக்காலமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் 1600 கிலோ கிராம் கேரளா கஞ்சா மற்றும் இரண்டு கிலோகிராம் கொக்கேய்ன் ஆகியன வடக்குகடற்பரப்பில் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

_____________________________________________________________________________________________________________________________________

2017: புதிய தளத்திற்கான சிந்தனைகளுடன் நகருவோம்

  கருணாகரன்

புதிய ஆண்டு பிறந்துள்ளது. புதிய ஆண்டினை வரவேற்பதற்கு ஆத்மார்த்தமான வாழ்த்துகளைச் சொல்வோரும் உண்டு. சம்பிரதாயமான வாழ்த்துகளைச் சொல்வோரும் உண்டு. இலங்கையின் அரசியல் தல2017-1ைவர்களுடைய புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள் பெரும்பாலும் சம்பிரதாயபுர்வமானவையே தவிர, ஆத்மார்த்தமானதல்ல. இதனால் தலைவர்களின் வாழ்த்துச் செய்திகளை மக்கள் கருத்திற் கொள்வதில்லை. மக்கள் கருத்திற் சொல்கிறார்களோ இல்லையோ, தலைவர்கள் செய்திகளை விடுப்பார்கள். மக்களுடைய கருத்தையும் கவனத்தையும் எந்த அரசியல்தலைவர்தான் கவனத்தில் எடுத்துக்கொள்கிறார்கள்? தேர்தல் காலத்தின்போது மட்டுமே மக்களைப்பற்றிச் சிந்திப்பதாகச் சற்றுக்காட்டிக் கொள்வது தலைவர்களின் வழமை. அவ்வளவுதான். தேர்தல் முடிந்த பிறகு வென்றவர்களும் சரி. தோற்றவர்களும் சரி, சனங்களைப் பொருட்படுத்துவதில்லை. மாற்று அரசியலைப்பற்றிச் சிந்திப்பவர்களே தொடர்ந்தும் மக்களோடு ஒன்றித்திருக்கிறார்கள். அவர்களே தங்களால் முடிந்தளவுக்குச் சனங்களுக்காக எதையாவது செய்கிறார்கள். குறைந்த பட்சம் சனங்களுடைய பிரச்சினைகளைப்பற்றியும் அவர்கள் வாழ்கின்ற சூழலைப்பற்றியும் அக்கறையோடு பேசி அவற்றுக்காகப் போராடுகிறார்கள். செயற்படுகிறார்கள். இதற்காகத் தங்களை ஆத்மார்த்மாக வருத்திக்கொள்கிறார்கள். எத்தகைய லாபத்தையும் பெறாமல் தங்கள் உழைப்பை மக்களுடைய மேம்பாட்டுக்காகச் செலுத்துகிறார்கள்.   (மேலும்)  01.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

கிளிநொச்சி ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்

அக்காவுக்கு ஏதேனும் நடந்தால் குண்டு வைக்கவும் தயங்க மாட்டேன் எனவும் மிரட்டல்

பிரபாகரன் இருந்திருந்தால் பிரதமராகியிருப்பாா் என  இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் கடந்த வாரம்  தெரிவித்த கருத்து  அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்தது. இந்த நிலையில்  ஆங்கில  பத்திரிகை ஒன்றில்  கிளிநொச்சி ஊடகவியலாளரான எஸ்என். நிபோஜன் எனும் பெயரில்  வெளிவந்த குறித்த செய்தியை அடிப்படையாக    கொண்டு  ஊடகவியலாளாருடன்  தொலைபேசி மூலம்  நேற்று வெள்ளிகிழமை 30-12-2016 முற்பகல்   தொடா்பு கொண்ட இனம் தெரியாத நபா்  ஒருவா் குறித்த செய்தியை ஊடகவியலாளா்கள் கருத்து  திரிபுபட எழுதி விட்டாா்கள் என்றும் சில வேளை அமைச்சா் தடுமாறி தவறாக உச்சரித்தாலும் அதனை ஊடகவியலாளா்கள் திருத்தி சரியாக எழுத வேண்டும்  ஆனால் அ தை விடுத்து வேண்டும் என்றே அமைச்சருக்கு நெருக்கடி ஏற்படும் வகையில்   செய்தி எழுதப்பட்டுள்ளது. எனவே இந்தச் செய்தியினால் அக்காவுக்கு( அமைச்சருக்கு)  ஏதேனும் நடந்தால் தான் கிளிப் சார்ச் ( குண்டு வைக்க) பண்ணக் கூட தயங்க மாட்டேன் எனக்கு எல்லா ஆயுதங்களும் பயன்படுத்த தெரியும் எனவும் கடும் தொனியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளாா். அத்தோடு தனக்கு அனைவருடன்ம் தொடா்புகள் இருக்கிறது என்றும்  எல்லா  இடங்களிலும் தனக்கு ஆட்கள் இருக்கின்றாா்கள் என்றும் மிரட்டல் விடுத்துள்ளாா். இதனையடுத்து குறித்த சம்பவம் தொடா்பில் ஊடகவியலாளா் எஸ்என் நிபோஜன் இன்று சனிக்கிழமை மதியம் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளாா். 

_____________________________________________________________________________________________________________________________________

மன்னிப்பு கோருதல் அருங்குணம்

By ஆர். வெங்கடேஷ்  |  

எழுபதாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பேர்ல் துறைமுகத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2,403 பேர் மரணம், 19 கடற்படை கப்பல்கள் நாசம், 328 விமானப்படை விமானங்கள் அழிப்பு. 353 ஜப்pearl-1பானிய விமானப்படை விமானங்கள் ஏற்படுத்திய நாசத்தால் அமெரிக்கா, இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்துக் கொள்ள நேர்ந்தது. இதற்குப் பதிலடியாகவே அமெரிக்கா, ஜப்பான் மீது அணுகுண்டு வீசியது. 1,29,000 பேர்களை பலிவாங்கிய ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதல் பேரழிவு மனிதகுலத்தையே கலங்கடித்தது.இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இவ்விரு நாடுகளும் வர்த்தக ரீதியான, அரசு ரீதியான உறவுகளை மேம்படுத்திக்கொண்டு வந்தாலும், அடிமனதில் ஆழமான வெறுப்புணர்வும் நம்பிக்கையின்மையும் வேருன்றி இருந்தன.கடந்த சில ஆண்டுகளாக இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட நல்லெண்ண நடவடிக்கைகள் மூலம், இதுநாள் வரை தொடத் தயங்கிய ஒரு விஷயம், தற்போது தொடப்பட்டது.சமீபத்திய தமது அமெரிக்கப் பயணத்தில், பேர்ல் துறைமுகத் தாக்குதலில் மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி பாவத்தைக் கழுவிக்கொண்டார் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே.ஏற்கெனவே அமெரிக்க அதிபர் ஒபாமா மேற்கொண்ட ஜப்பான் பயணத்தில் ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டு மரணமடைந்தவர்களின் நினைவுகளைப் போற்றினார்.   (மேலும்)  01.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

பதவி விலகத் தயாராகும் இரு பிரதியமைச்சர்கள்?

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனவரி இரண்டாம் வாரமளவில் இடம்பெறவுள்ளதென, அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக, அமைச்சுப் பதவி வகிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்த சந்திப்பின் போது, அரசாங்கத்தில் இருந்து விலகுவதா இல்லையா என்பது தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தக் கலந்துரையாடலின் பின்னர் புதிய வருடத்தின் முக்கிய அரசியல் தீர்மானங்கள் சில மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, இரண்டு பிரதியமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகத் தயாராகி வருவதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. எதிர்வரும் வாரத்தில் பெரும்பாலும் குறித்த இருவரும் பதவி விலகலாம் எனவும் தெரியவந்துள்ளது.

_____________________________________________________________________________________________________________________________________

சமத்துவ சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின்  புதுவருட வாழ்த்துக்கள்

மு. சந்திரகுமார்

chandrakumarஆற்றலினாலும் அர்ப்பணிப்பு நிறைந்த உழைப்பினாலும் மாற்றங்களை உண்டாக்கும் உறுதியோடு புதிய ஆண்டினை வரவேற்போம். புத்தாண்டு என்பது மகிழ்ச்சியை நம் முற்றங்களிலும் நம்முடைய மனதிலும் உண்டாக்குவதாகும். அந்த மகிழ்ச்சியையே நாம் கொண்டாடுகிறோம். ஆனால், அந்த மகிழ்ச்சியானது ஒரு நாளுடன் முடிந்து விடாமல், ஆண்டு முழுவதும் நீடித்திருக்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் நீடித்து நிலைக்க வேண்டும். அதுவே சிறப்பானது. புத்தாண்டை நாம் வரவேற்பதன் அர்த்தம் அப்படியானதாகவே அமைய வேண்டும். வெறுமனே சம்பிரதாயமான ஒரு நாள் மகிழ்ச்சியாகவோ ஒரு நாள் கொண்டாட்டமாகவோ அமைந்து விடாமல், ஆண்டு முழுவதும் நம் வாழ்க்கை முழுவதும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்துழைக்க வேண்டும். நம்முடைய கனவுகளையும் நம் முன்னே உள்ள சவால்களையும் நாம் வென்றெடுக்கும்போதே வாழ்க்கை இனிமையாகும். தாயக விடுதலை என்பதும் சமூக விடுதலை என்பதும் எமது கனவாகும். அந்தக் கனவை நிறைவேற்றுவதற்கு நம்முன்னே ஆயிரமாயிரம் சவால்கள் உள்ளன.   (மேலும்)  01.01.2017__

dantv