ஸ்ரீலங்காவின் இனவாத அரசியல் காரணமாக 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மரணம் மற்றும் அழிவு ஏற்பட்டுள்ளது

                                                லத்தீப் பாரூக்

இனவாத அரசியல் 200 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மரணங்கள் மற்றும் farookஅழிவுகளை ஏற்படுத்தியுள்ளது: இருந்தும் இனவாத அரக்கன் அதன் அசிங்கமான தலையை உயர்த்த ஆரம்பித்துள்ளான், மற்றும் நாடும் அநேக மக்களும் அது இன்னும் மற்றொரு அழிவை நோக்;கி முன்னேறுவதாக அச்சம் அடைந்துள்ளார்கள்.   இருநூறு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது விசேடமாக சிறந்த இயற்கைச் செல்வங்களால் ஆசீர்வதிக்கப்பட்டதும் மற்றும் படிப்பறிவுள்ள மக்களைக் கொண்டதுமான ஸ்ரீலங்கா போன்ற சிறிய ஒரு நாட்டுக்கு மிகப் பெரிய ஒரு தொகைப் பணமாகும். ஒரு டொலர் ரூபா 145 என்ற விகிதத்தில் அதை மாற்றீடு செய்தால்கூட அது கிட்டத்தட்ட 29,000 மில்லியன் ரூபாவுக்கு சமமாகும்.  இந்த தேசிய செல்வம், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தவும், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய, தொழில் மற்றும் வியாபார நிறுவனங்களை அமைக்க, தொழில்களை உருவாக்க, வறுமையை ஒழித்து மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பயன்படுத்தப்பட்டிருக்குமானால் இந்த நாடு எல்லா வகையிலும் இன்று சொர்க்கபுரியாக மாறியிருக்கும். அது 1948ல் எங்கள் நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்ததைப் போல மூன்றாம் உலக நாடுகளுக்கு ஒரு பிரகாசமான உதாரணமாகத் திகழ்ந்திருக்கும்.      (மேலும்)  02.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

அரச வைத்தியசாலை நோயாளர்கள் தனியார் சேவையை நாடத் தடை

இன்று முதல் அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு தhealth ministryனியார் வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.  அமைச்சர் ராஜித்த சேனாரத்னவால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த 31ம் திகதியளவில் அரசாங்கத்தினால் சகல பரிசோதனை கூட வசதிகளும் உள்ள வைத்தியசாலைகளுக்கு இரத்த பரிசோதனை செய்யும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.அரசாங்கத்திலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் இரத்தப் பரிசோதனைகளை தனியார் பிரிவினரால் மேற்கொள்வதாக தெரியவந்தால், இன்று முதல் சம்பந்தப்பட்ட வைத்தியசாலை (அரச வைத்தியசாலை) பணிப்பாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.மேலும் அனைத்து அரசாங்க வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கும் இது குறித்து விஷேட சுற்றறிக்கை ஒன்றை வௌியிடுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் அனுர ஜெயவிக்ரமவுக்கு, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

_____________________________________________________________________________________________________________________________________

புதிய அரசியல் யாப்பு நாட்டைப் பிளக்கும் ஆவணமல்லஉத்தேச புதிய அரசியலமைப்பில் நாட்டுக்குத் தீமையை ஏற்படுத்தும் எந்தவொரு விடயங்களும் உள்ளடக்கப்படவில்லையென்றும், புதிய அரசியலமைப்பானது நாட்டைத் துண்டாடும் ஆவsrisenaணம் இல்லையென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். கண்டி தலதாமாளிகைக்கு சென்றிருந்த ஜனாதிபதி, மல்வத்துபீட மற்றும் அஸ்கிரியபீட மாகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றபோதே இந்த உறுதிமொழியை வழங்கினார்.அரசியலமைப்பைத் தயாரிக்கும் செயற்பாடுகள் மற்றும் அது தொடர்பில் முன்வைக்கப்படும் யோசனைகளுக்கு சிலர் எதிரான கருத்துக்களை முன்வைக்கின்றபோதும், நாட்டின் ஒற்றுமைக்கோ அல்லது பௌத்த மதத்துக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் எதுவும் அதில் உள்ளடக்கப்படமாட்டாது. அவ்வாறான நடவடிக்கைக்கு தனது பதவிக்காலத்தில் தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென்றும் ஜனாதிபதி கூறினார்.புத்தாண்டை முன்னிட்டு கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி, அஸ்கிரியபீட மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரைச் சந்தித்தபோதே இந்தக் கருத்துக்களை தெரிவித்தார  
(மேலும்)  02.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

அ.தி.மு.க., பொதுச்செயலராகி உள்ள சசிகலா, திருமங்கலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

'சசிகலா முதல்வராக வேண்டும்' என, முதலில் தீர்மானம் நிறைவேற்றிய, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், அவருக்காக, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். அத்துடன், கட்சியsasikala-1ில் பொதுச்செயலருக்கு அடுத்த இடத்திற்கு, தினகரனை கொண்டு வர வசதியாக, அவரை ஆர்.கே.நகரில் களமிறக்க வும், முடிவு செய்யப்பட்டுள்ளது.  முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, பன்னீர்செல்வம் முதல்வரானார். அதேநேரத்தில், ஜெ., வகித்த, அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவிக்கு, சசிகலாவை கொண்டு வர, மன்னார்குடி குடும்பம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, கை மேல் பலன் கிடைத்துள் ளது. பொதுக்குழு தீர்மானப்படி, அ.தி.மு.க., பொதுச்செயலராக, அவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.இதையடுத்து, சசிகலாவின் கவனம், ஆட்சியின் பக்கம் திரும்பியுள்ளது. அதற்கான முயற்சிக ளும், கன கச்சிதமாக நடந்து வருகின்றன. பன்னீர்செல்வத்தை நீக்கி விட்டு, முதல்வராக பொறுப்பேற்பது குறித்து ஆலோ சிக்கும் அதே நேரத்தில், எந்த தொகுதியில் போட்டியிடுவது என்ற, ஆலோசனைகளிலும், அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.'ஜெயலலிதா போட்டியிட்ட, ஆர்.கே.நகர் தொகுதி, பாதுகாப்பானது அல்ல; அங்கு போட்டி யிட்டால், வெற்றி பெறுவது கடினம்' என்ற தகவல், சசிகலாவுக்கு சென்றுள்ளது.   (மேலும்)  02.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

உடுத்துறை பகுதியிலுள்ள சனசமூக நிலையம் தீக்கிரையான சம்பவம் தொடர்பில் விசாரணை

வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியிலுள்ள சனசமூக நிலையம் ஒன்று தீக்கிரையானuduthurai சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  உடுத்துறை பகுதியிலுள்ள வேம்படி முத்தமிழ் சனசமூக நிலையமே தீயினால் முற்றாக எரிந்துள்ளது.  இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாகவும், தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை  எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.   குறித்த சனசமூக நிலையத்திலிருந்த சுமார் 100 புத்தகங்களும் தளபாடங்களும் முற்றாக அழிவடைந்துள்ளன.  இந்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

_____________________________________________________________________________________________________________________________________

5-19 வயதுக்குட்பட்டவர்களுக்கு சுகாதார காப்புறுதி

பிறந்திருக்கும் புதிய வருடத்தில் 5 வயது தொடக்கம் 19 வயது வரையான பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபா சுகாதார காப்புறுதியைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.குடும்பத்திலுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ளாது இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், 2017ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சில யோசனைகள் இன்று முதல் அமுல்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

_____________________________________________________________________________________________________________________________________

வடக்கு கடற்பரப்பினூடான போதைப்பொருள் கடத்தலுடன் இந்திய மீனவர்களுக்கு தொடர்பு

இலங்கையின் வடக்கு கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தலுடன் இந்திய மீனவர்களுக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. கடல் மார்க்கமாக இடம்பெறுகின்ற போதைப் பொருள் கடத்தலுக்கு முற்றுபுள்ளி வைக்க இதுவரை முடியாமற்போனமைக்கு காரணம் என்ன?  மாதகல், வடமராட்சி கிழக்கு, மன்னார், தலைமன்னார் உள்ளிட்ட கடற்பரப்புக்களில் அதிகளவிலான கஞ்சா அண்மைக்காலமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் 1600 கிலோ கிராம் கேரளா கஞ்சா மற்றும் இரண்டு கிலோகிராம் கொக்கேய்ன் ஆகியன வடக்குகடற்பரப்பில் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

_____________________________________________________________________________________________________________________________________

2017: புதிய தளத்திற்கான சிந்தனைகளுடன் நகருவோம்

  கருணாகரன்

புதிய ஆண்டு பிறந்துள்ளது. புதிய ஆண்டினை வரவேற்பதற்கு ஆத்மார்த்தமான வாழ்த்துகளைச் சொல்வோரும் உண்டு. சம்பிரதாயமான வாழ்த்துகளைச் சொல்வோரும் உண்டு. இலங்கையின் அரசியல் தல2017-1ைவர்களுடைய புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள் பெரும்பாலும் சம்பிரதாயபுர்வமானவையே தவிர, ஆத்மார்த்தமானதல்ல. இதனால் தலைவர்களின் வாழ்த்துச் செய்திகளை மக்கள் கருத்திற் கொள்வதில்லை. மக்கள் கருத்திற் சொல்கிறார்களோ இல்லையோ, தலைவர்கள் செய்திகளை விடுப்பார்கள். மக்களுடைய கருத்தையும் கவனத்தையும் எந்த அரசியல்தலைவர்தான் கவனத்தில் எடுத்துக்கொள்கிறார்கள்? தேர்தல் காலத்தின்போது மட்டுமே மக்களைப்பற்றிச் சிந்திப்பதாகச் சற்றுக்காட்டிக் கொள்வது தலைவர்களின் வழமை. அவ்வளவுதான். தேர்தல் முடிந்த பிறகு வென்றவர்களும் சரி. தோற்றவர்களும் சரி, சனங்களைப் பொருட்படுத்துவதில்லை. மாற்று அரசியலைப்பற்றிச் சிந்திப்பவர்களே தொடர்ந்தும் மக்களோடு ஒன்றித்திருக்கிறார்கள். அவர்களே தங்களால் முடிந்தளவுக்குச் சனங்களுக்காக எதையாவது செய்கிறார்கள். குறைந்த பட்சம் சனங்களுடைய பிரச்சினைகளைப்பற்றியும் அவர்கள் வாழ்கின்ற சூழலைப்பற்றியும் அக்கறையோடு பேசி அவற்றுக்காகப் போராடுகிறார்கள். செயற்படுகிறார்கள். இதற்காகத் தங்களை ஆத்மார்த்மாக வருத்திக்கொள்கிறார்கள். எத்தகைய லாபத்தையும் பெறாமல் தங்கள் உழைப்பை மக்களுடைய மேம்பாட்டுக்காகச் செலுத்துகிறார்கள்.   (மேலும்)  01.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

கிளிநொச்சி ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்

அக்காவுக்கு ஏதேனும் நடந்தால் குண்டு வைக்கவும் தயங்க மாட்டேன் எனவும் மிரட்டல்

பிரபாகரன் இருந்திருந்தால் பிரதமராகியிருப்பாா் என  இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் கடந்த வாரம்  தெரிவித்த கருத்து  அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்தது. இந்த நிலையில்  ஆங்கில  பத்திரிகை ஒன்றில்  கிளிநொச்சி ஊடகவியலாளரான எஸ்என். நிபோஜன் எனும் பெயரில்  வெளிவந்த குறித்த செய்தியை அடிப்படையாக    கொண்டு  ஊடகவியலாளாருடன்  தொலைபேசி மூலம்  நேற்று வெள்ளிகிழமை 30-12-2016 முற்பகல்   தொடா்பு கொண்ட இனம் தெரியாத நபா்  ஒருவா் குறித்த செய்தியை ஊடகவியலாளா்கள் கருத்து  திரிபுபட எழுதி விட்டாா்கள் என்றும் சில வேளை அமைச்சா் தடுமாறி தவறாக உச்சரித்தாலும் அதனை ஊடகவியலாளா்கள் திருத்தி சரியாக எழுத வேண்டும்  ஆனால் அ தை விடுத்து வேண்டும் என்றே அமைச்சருக்கு நெருக்கடி ஏற்படும் வகையில்   செய்தி எழுதப்பட்டுள்ளது. எனவே இந்தச் செய்தியினால் அக்காவுக்கு( அமைச்சருக்கு)  ஏதேனும் நடந்தால் தான் கிளிப் சார்ச் ( குண்டு வைக்க) பண்ணக் கூட தயங்க மாட்டேன் எனக்கு எல்லா ஆயுதங்களும் பயன்படுத்த தெரியும் எனவும் கடும் தொனியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளாா். அத்தோடு தனக்கு அனைவருடன்ம் தொடா்புகள் இருக்கிறது என்றும்  எல்லா  இடங்களிலும் தனக்கு ஆட்கள் இருக்கின்றாா்கள் என்றும் மிரட்டல் விடுத்துள்ளாா். இதனையடுத்து குறித்த சம்பவம் தொடா்பில் ஊடகவியலாளா் எஸ்என் நிபோஜன் இன்று சனிக்கிழமை மதியம் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளாா். 

_____________________________________________________________________________________________________________________________________

மன்னிப்பு கோருதல் அருங்குணம்

By ஆர். வெங்கடேஷ்  |  

எழுபதாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பேர்ல் துறைமுகத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2,403 பேர் மரணம், 19 கடற்படை கப்பல்கள் நாசம், 328 விமானப்படை விமானங்கள் அழிப்பு. 353 ஜப்pearl-1பானிய விமானப்படை விமானங்கள் ஏற்படுத்திய நாசத்தால் அமெரிக்கா, இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்துக் கொள்ள நேர்ந்தது. இதற்குப் பதிலடியாகவே அமெரிக்கா, ஜப்பான் மீது அணுகுண்டு வீசியது. 1,29,000 பேர்களை பலிவாங்கிய ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதல் பேரழிவு மனிதகுலத்தையே கலங்கடித்தது.இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இவ்விரு நாடுகளும் வர்த்தக ரீதியான, அரசு ரீதியான உறவுகளை மேம்படுத்திக்கொண்டு வந்தாலும், அடிமனதில் ஆழமான வெறுப்புணர்வும் நம்பிக்கையின்மையும் வேருன்றி இருந்தன.கடந்த சில ஆண்டுகளாக இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட நல்லெண்ண நடவடிக்கைகள் மூலம், இதுநாள் வரை தொடத் தயங்கிய ஒரு விஷயம், தற்போது தொடப்பட்டது.சமீபத்திய தமது அமெரிக்கப் பயணத்தில், பேர்ல் துறைமுகத் தாக்குதலில் மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி பாவத்தைக் கழுவிக்கொண்டார் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே.ஏற்கெனவே அமெரிக்க அதிபர் ஒபாமா மேற்கொண்ட ஜப்பான் பயணத்தில் ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டு மரணமடைந்தவர்களின் நினைவுகளைப் போற்றினார்.   (மேலும்)  01.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

பதவி விலகத் தயாராகும் இரு பிரதியமைச்சர்கள்?

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனவரி இரண்டாம் வாரமளவில் இடம்பெறவுள்ளதென, அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக, அமைச்சுப் பதவி வகிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்த சந்திப்பின் போது, அரசாங்கத்தில் இருந்து விலகுவதா இல்லையா என்பது தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தக் கலந்துரையாடலின் பின்னர் புதிய வருடத்தின் முக்கிய அரசியல் தீர்மானங்கள் சில மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, இரண்டு பிரதியமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகத் தயாராகி வருவதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. எதிர்வரும் வாரத்தில் பெரும்பாலும் குறித்த இருவரும் பதவி விலகலாம் எனவும் தெரியவந்துள்ளது.

_____________________________________________________________________________________________________________________________________

சமத்துவ சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின்  புதுவருட வாழ்த்துக்கள்

மு. சந்திரகுமார்

chandrakumarஆற்றலினாலும் அர்ப்பணிப்பு நிறைந்த உழைப்பினாலும் மாற்றங்களை உண்டாக்கும் உறுதியோடு புதிய ஆண்டினை வரவேற்போம். புத்தாண்டு என்பது மகிழ்ச்சியை நம் முற்றங்களிலும் நம்முடைய மனதிலும் உண்டாக்குவதாகும். அந்த மகிழ்ச்சியையே நாம் கொண்டாடுகிறோம். ஆனால், அந்த மகிழ்ச்சியானது ஒரு நாளுடன் முடிந்து விடாமல், ஆண்டு முழுவதும் நீடித்திருக்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் நீடித்து நிலைக்க வேண்டும். அதுவே சிறப்பானது. புத்தாண்டை நாம் வரவேற்பதன் அர்த்தம் அப்படியானதாகவே அமைய வேண்டும். வெறுமனே சம்பிரதாயமான ஒரு நாள் மகிழ்ச்சியாகவோ ஒரு நாள் கொண்டாட்டமாகவோ அமைந்து விடாமல், ஆண்டு முழுவதும் நம் வாழ்க்கை முழுவதும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்துழைக்க வேண்டும். நம்முடைய கனவுகளையும் நம் முன்னே உள்ள சவால்களையும் நாம் வென்றெடுக்கும்போதே வாழ்க்கை இனிமையாகும். தாயக விடுதலை என்பதும் சமூக விடுதலை என்பதும் எமது கனவாகும். அந்தக் கனவை நிறைவேற்றுவதற்கு நம்முன்னே ஆயிரமாயிரம் சவால்கள் உள்ளன.   (மேலும்)  01.01.2017

_____________________________________________________________________________________________________________________________________

ஐக்கிய நாடுகள் சபையின் 8ஆவது பொதுச் செயலாளர் பான் கீ மூன்  மூன்

ஐக்கிய நாடுகள் சபையின் 8ஆவது பொதுச் செயலாளர் பான் கீ மூன் இன்று தனது பதவியிலிருந்து ஓய்வுபெறுகின்றார்.   2007ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 8வது பொதுச் செயலாளராக பதவியேற்ற பான் கீ மூனின் பதவிகாலம் இன்றுடன் நிறைவடைகின்றது.   இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் 9வது பொதுச் செயலாளராக போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டானியோ கட்டேரஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 12ம் திகதி பதவியேற்ற இவர், நாளை முதல் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார். 

_____________________________________________________________________________________________________________________________________

இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்தினாலும் இந்தியா அமைதியாக இருப்பது ஏன்?”ராஜ பக்சே கேள்வி

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்சே வெளிநாட்டு தொலைக்காட்சி சானலுக்கு பேட்டி அளித்துள்ளார்.அதில் அவர் கூறி இருப்பதாவது:-இலங்கையில் தனிநாடு கேட்டுப் போராடிய விடு தலைMahindaப் புலிகளை அழிப்பதற்காக இந்தியா உதவி கள் செய்தன. தென் இந்தியா வில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக இந்தியாவில் புலிகள் வெளிப்படையாக இல்லை.ஆனால் திடீரென அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக இலங்கைக்கு எதிராக இந்தியா நடந்து கொள்கிறது. நான் பதவியில் இருந்து விரட்டப்பட்டதற்கு சில மேற்கத்திய சக்திகளும், இந்திய உளவு அமைப்பான ராவும் தான் காரணமாகும். விடுதலைப்புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்ட பிறகு இலங்கையில் சீனா நிறைய முதலீடு செய்து வருகிறது. கம்பள் தோட்டா துறைமுகத்தில் மிகப்பெரிய தொழில் பூங்காவுக்கு சீனா திட்டமிட்டது. இது இந்தியா வுக்கு பிடிக்கவில்லை. இதற்கிடையே சீன நீர்மூழ்கிக்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்தன. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது நான் இலங்கை யில் சீனா செலுத்தும் ஆதிக்கத்தால் இந்தியா கவலை கொள்ள தேவை இல்லை என்று கூறி இருந்தேன்.இப்போதும் இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கம் அதிகமாகத்தான் உள்ளது. ஆனால் இந்தியா எலி மாதிரி அமைதியாக உள்ளது. சிறிசேனா அரசு பலாய் விமான நிலையம் அல்லது திரிகோணமலை துறைமுகத்தை தங்களுக்கு தரும் என்று இந்தியா காத்துக்கொண்டிருக்கிறது.  இவ்வாறு ராஜபக்சே கூறியுள்ளார்.

_____________________________________________________________________________________________________________________________________

இலங்கையில் பெயர்களில் உள்ள மதமாற்றங்கள்,முகஸ்துதி மற்றும் வழக்கம்

                                               திஸ்ஸ தேவேந்திரா

நான் ஒரு அறிஞனோ அல்லது ஆய்வாளனோ அல்ல -  எங்கள் வரலாற்றிலும் மற்றும் கலாச்சாரத்திலும் நிரந்தர ஆர்வம் கொண்ட வெறுமே பொதுவான ஒரு வாசகன். இந்தக் கட்டுரை ஒருவேளை தகவலறிந்தவர்களின் விமர்சனத்தை தூண்டக்கூடும், அதையும் நான் வரவேற்கிறேன்.dutch   எங்கள் தாயகத்தில் உள்ள பல்வேறு குடும்ப மற்றும் தனிப்பட்ட பெயர்கள் என்னை எப்போதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளன. பண்டைக்கால சிங்கள அரசர்கள் காமினி,அபயா மற்றும் திஸ்ஸ என எளிய பெயர்களாலும் மற்றும் ஜெத்தா(மூத்த), சத்தா(பக்தியுள்ள). மகா போன்ற அந்தஸ்து மற்றும் பண்புகளைக் குறிச்கும் முற்சேர்க்கைகளாலும் அழைக்கப்பட்டார்கள். பின்னாளில் வந்த அரசர்கள் சிறிய இராச்சியங்கள்மீது குறைந்த சக்தியை பயன்படுத்தி வெற்றிகண்டு தங்களை மிக உயர்வாக ராஜாதி ராஜசிங்க  போன்ற பெயர்களால் அழைத்து ஆறுதல்படுத்திக் கொண்டார்கள்.சிகிரியா சுவர்களில் உள்ள கிறுக்கல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதின்படி பொதுமக்கள் தங்கள் வசனங்களை எழுதி பியால், புதல், கிற், மிற்றல் போன்ற எளிய பெயர்களால் கையொப்பம் இட்டுள்ளார்கள். நூற்றாண்டுகள் கடந்த பின்னர் சிறந்த ஒலியுள்ள சோமபால, பியசேன, சிறிபால போன்ற தனிப்பட்ட பெயர்கள் உயர் சாதிக்காரர்களால் பின்பற்றப்பட்டன. சுவராஸ்யமான முறையில் சாதி குறைவானவர்கள் அநேகமான பண்டைய பெயர்களையே தக்க வைத்துக் கொண்டார்கள், இதனால் அவை தமது சாதியை இழந்தன. சிறின் - ஆ, பானி -யா, குணய் - ஆ போன்ற பெயர்களில் அடிக்கடி இகழ்ச்சியான முறையில் பிற்சேர்க்கையான யா என்பதை சுமக்க வைக்கப்பட்டது.     (மேலும்)  31.12..16

_____________________________________________________________________________________________________________________________________

படித்தோம் சொல்கின்றோம்

கிரிதரனின் குடிவரவாளன் கதை

அகதியாக தஞ்சம் கோருபவர்களின் வாழ்வுக்கோலங்களை சித்திரித்த தன்வரலாற்று நாவல் 

                                                     முருகபூபதி

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திங்கட்கிழமை காலை 7 மணியளவில் நான் மெல்பனில் வாடகைக்கு இருந்த அந்த தொடர்மாடிக்குடியிருப்பில் எனது வீட்டின் வாசல் கதவு தட்டப்பட்டது.kudivaravalan   முதல் நாள் மாலை  வேலைக்குச்சென்று,  அன்று  அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பி,  ஆழ்ந்த உறக்கத்திலிருந்த என்னை,  இந்த நேரத்தில் யார் வந்து  கதவு தட்டி எழுப்புகிறார்கள்...?  எனது கட்டிலுக்கு அருகில் மற்றும் ஒரு படுக்கையில் உறங்கிய அந்தத் தமிழ் இளைஞர் காலை வேலைக்குச்சென்றிருந்தார். சென்றவர்தான் எதனையும் தவறவிட்டுச்சென்று,  மீண்டும் வருகிறாரோ...? அல்லது வீட்டின் சாவியை விட்டுச்சென்றுவிட்டாரோ...?  அந்தக் காலைவேளையில் எவரும் வரமாட்டார்கள். ஆனால், யாரோ கதவை அடித்துத்  தட்டுகிறார்கள். ோர்த்தியிருந்த  போர்வையை விலக்கிக்கொண்டு கதவைத்திறக்கின்றேன். வெளியே இரண்டு அவுஸ்திரேலியர்கள் தாம் குடிவரவு திணைக்களத்திலிருந்து வந்திருப்பதாக தமது அடையாள அட்டையை காண்பித்தார்கள்.   (மேலும்)  31.12..16

_____________________________________________________________________________________________________________________________________

உலகில் பாலியல் குற்றம் அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியல்

உலகில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.violence a.women  வல்லசு நாடான அமெரிக்காவில் 91 சதவீத பெண்களும், 9 சதவீதன ஆண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என அமெரிக்க பீரோ புள்ளியல் தகவலை வெளியிட்டுள்ளது. 6 பெண்களில் ஒருவர் மற்றும், 33 ஆண்களில் ஒருவர் என வாழ்நாள் முழுவதும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதில் அதிகமாக கல்லூரி மாணவிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.அமெரிக்காவில் பொது இடங்களில் பாலியல் சம்பவங்கள் நடைபெற்றாலும், வீடுகளிலும் அதிகமாக பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன.அடுத்ததாக் அதிகமாக பலாத்கார குற்றங்கள் நடைபெறும் நாடுகளில் தென் ஆப்பிரிக்காவும் ஒன்று. கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 65,000 பாலியல் குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன என புகார்கள் பதிவாகியுள்ளன. உலகிலேயே இளம் வயது குழந்தைகள் அதிகமாக பலாத்காரத்திற்கு உள்ளாகும் நாடு தென் ஆப்பிரிக்கா நாடு என்பது குறிப்பிடத்தக்கது.   (மேலும்)  31.12..16

_____________________________________________________________________________________________________________________________________

ரஷியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட மாட்டார்கள்: புதின்

அமெரிக்காவில் உள்ள 35 ரஷிய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டதற்குப் பதிலாக, ரஷியாவில் பணிபுரியும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என ரஷிய அதிபரputin் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார்.இந்த விவகாரத்திற்கு எவ்வாறு பதில் அளிப்பது என்பதற்கு அடுத்த மாதம் புதிய அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்பது வரை, தான் பொறுத்திருக்கப் போவதாக புதின் தெரிவித்துள்ளார்.அமெரிக்க தூதரக அதிகாரிகளின் குழந்தைகளை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கும் அளவிற்கு அவரது பரிந்துரைகள் இருந்தன.அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் இணையத்தில் ஊடுருவி ரஷியா முக்கிய தகவல்களைத் திருடியதாகவும், அதன் மூலம் தேர்தல் முடிவை மாற்ற சதி நடந்திருப்பதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அடுத்து ரஷிய தூதரக அதிகாரிகளை அமெரிக்கா அரசாங்கம் வியாழக்கிழமை, வெளியேற்றியது. ரஷிய அரசு இணையத் திருட்டில் தனக்குத் தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளது.

_____________________________________________________________________________________________________________________________________

சம்பந்தனின் படத்தை எரித்து காணமால் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி இன்று இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.samapanthan  காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக அரசு உடன் பொறுப்பு கூற வேண்டும். தவறினால் வரும் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி முதல் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கப் போவதாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.முந்தைய அரசைப் போலவே நல்லாட்சி அரசும் இந்த விடயத்தில் தங்களை ஏமாற்றி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.உள்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடமும் மாதங்கள் பலவும் கடந்துள்ள போதிலும் வலிந்து காணாமல் போன தங்கள் உறவுகள் தொடர்பாக இதுவரை உண்மை நிலை கண்டறியப்படவில்லை என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.   (மேலும்)  31.12..16

_____________________________________________________________________________________________________________________________________

தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் ஜக்கிய தேசியக் கட்சியின் அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன்


இந்த பிரதேசங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களில் தொண்னூற்று ஒன்பது வீதமானவvijayakalaா்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைக்கு வாக்களிக்க வேண்டும் தவிர துரோகிகளுக்கு வாக்களிக்க கூடாது என ஜக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.  கடந்த புதன் கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் தீயினால் எரிந்த பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே  அவா் இவ்வாறு தெரிவித்தாா். அங்கு அவா் மேலும் உரையாற்றுகையில்  தமிழ் மக்கள் யாருக்கும் வாக்களிக்கலாம், சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு வாக்களிக்கலாம்,ஜக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்கலாம்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு க்கு வாக்களிக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைக்குத்தான்  வாக்களிக்க வேண்டும். என கோருகின்றேன்.   இந்த பிரதேசங்களில் 99 வீதமான மக்கள் தமிழ் மக்கள்தான் வாழ்கின்றனா்.    எனவேதான்  தமிழ் மக்கள் வேறு கட்சிக்களுக்கு வாக்களிக்கும் போது துரோகிகளுக்கு வாக்களிக்காதீர்கள்.  எல்லோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைக்கே வாக்களிக்கவேண்டும்   
(மேலும்)  31.12..16

_____________________________________________________________________________________________________________________________________

பதிவு நடவடிக்கைகள் ஜனவரி 01 முதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பதிவு நடவடிக்கைகள் ஜனவரி 01 முதல் தற்காலிகமாக இடைநிறுத்தம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு செய்யும் கருமபீடத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் 01ம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விமான நிலைய புனரமைப்பு பணிகள் காரணமாக மறு அறிவித்தல் வரும் வரை அந்த நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.அதன்படி இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்கள், பதிவு செய்தல் மற்றும் பதிவுகளை புதுப்பித்தல் நடவடிக்கைகனை பிரதான அலுவலகம் அல்லது பிரதேச அலுவலகங்கள் ஊடாக செய்து கொள்ள முடியும் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.

_____________________________________________________________________________________________________________________________________

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை ஜனவரி மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட ஏற்பாடு

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை ஜனவரி மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அதற்கமைய, பெறுபேறுகளை கணனிமயப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.கடந்த வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் W.M.N.J.புஷ்பகுமார குறிப்பிட்டார்.எனினும், இந்த வருடம் தொழில்நுட்பப் பரீட்சையில் 30,000 பரீட்சார்த்திகள் தோற்றியதுடன், அவர்களுக்கான செயன்முறைப் பரீட்சையை நடத்த காலதாமதம் ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.அதற்கமைய, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.இதேவேளை, 2016 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை நடத்தப்பட்ட போது பரீட்சை முறைகேடுகள் குறைவாகவே பதிவாகியதாகவும் அவர் கூறினார்.முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், குற்றமிழைக்காத பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் எவ்வித தாமதமுமின்றி வெளியிடப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் W.M.N.J.புஷ்பகுமார குறிப்பிட்டார்.

_____________________________________________________________________________________________________________________________________

கண்ணீரைத் துடைப்பதை விட வேறு உயர்வான பணிகள் இந்த உலகத்தில் உண்டா என்ன?

      -  கருணாகரன்

உண்மையில் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களைப் பாதுகாக்க வேண்டிய, பராமரிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கும் தமிழ்ச்சமூகத்துக்குமுண்டு. தமிழ்ச்சமூகம் புலிகளை வைத்துக் கொண்டாடியது. இன்னும் புலிகளின் நினைவுகளையும் அவர்களுடைய புகழையும் வைத்துக் கொண்டே வாழ்கிex-5றது. புலிகள் இயக்கத்திலிருந்து சாவடைந்தவர்களை மதித்துப் போற்றுகிறது. அல்லது அப்படிப் போற்றுவதாகப் பாவனை பண்ணுகிறது. உயிரோடுள்ளவர்களைக் கவனிக்காமல் விடுகிறது. இது ஏன்? உண்மையாகவே புலிகளின் மீது பற்றும் பாசமும் மதிப்புமிருந்தால், அந்த இயக்கத்தில் வினைத்திறனோடு செயற்பட்டு, மிஞ்சியுள்ள போராளிகளையும் அது ஏற்றுப் பராமரிக்க வேணுமே. அவர்களுக்கு உதவவேணுமே. ஆனால், அப்படி ஏதும் நிகழவில்லையே!  முன்னாள் உறுப்பினர்கள் கண் முன்னே எல்லா இடங்களிலும் பலவிதமான வாழ்க்கை நெருக்கடிகளுக்குள்ளாகியுள்ளனர். பலர் தங்களுடைய மாறா உடற் காயங்களுக்கே சிகிச்சை பெற முடியாமல் தவிக்கிறார்கள். சிலர் திருமணத்தை எதிர்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். சிலர் காணியோ, வீடோ தொழிலோ இல்லாமலிருக்கிறார்கள். இப்படியெல்லாம் இருக்கின்ற போராளிகளைத் தமிழ்ச்சமூகம் ஏற்றுப் பராமரிக்கப் பின்னிற்கிறது.  தமிழ் அரசியல்வாதிகளின் நிலை இதில் இன்னும் மோசமானது. அவர்களுக்கு புலிகளின் பெயரும் பிரபாகரனின் பெயரும் அரசியலுக்குத் தேவை. இறந்து போன மாவீர்களின் பெயரும் அவர்கள் புதைக்கப்பட்ட இடங்களும் தேவை. ஆனால், உயிரோடிருக்கும் போராளிகள் தேவையில்லை. இறந்தவர்களுக்காகப் பாடுபடவோ செலவழிக்கவோ தேவையில்லை. அதனால் அவர்களைப்பற்றி எவ்வளவும் பேசலாம். எப்படியும் அவர்களைக் கொண்டாடலாம். உயிரோடிருப்பவர்களைப் பற்றிப் பேசுவது அப்படியல்லவே. உயிரோடிருப்போரைப்பற்றிப் பேசுவதாக இருந்தால் அவர்களுக்கு உதவ வேணும். அவர்களுக்காகப் பாடுபட வேணும். அவர்களுக்குச் செலவழிக்க வேணும். அவர்களைப் பாதுகாக்க வேணும்.    (மேலும்)  30.12..16

_____________________________________________________________________________________________________________________________________

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது பிரதமர்-தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை அரும்பாக் கத்தை சேர்ந்தவர் பி.ஏ.ஜோசப். அ.தி.மு.க. தொண்டரான இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-jeya dead   மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மர்மமான முறை யில் மரணமடைந்தது குறித்து, பல்வேறு சந்தேகங் கள் மக்கள் மத்தியில் நிலவுவதால் இந்த வழக்கை தொடர்ந்துள்ளேன்.  சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று, ஜெயலலிதா ஆட் சிக்கு வந்த 4 மாதங்களில், உடல் நலம் பாதிக்கப்பட்டு, அவர் மரணம் அடைந் துள்ளது மிகப் பெரிய சந்தே கத்தை ஏற்படுத்தியுள் ளது. நல்ல உடல் ஆரோக்கியத் துடன் இருந்த ஜெயலலிதா, திடீரென இரவோடு இர வாக, செப்டம்பர் 22-ந் தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டார். அப்போது அவருக்கு காய்ச்சல், 2 நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்று செய்திகள் வெளியாகின. அதன்பின்னர் செப்டம்பர் 24-ந் தேதி சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாட் டிற்கு அழைத்து செல்லப் போவதாக தகவல்கள் வெளி யாகின. ஆனால், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகமோ, ஜெயலலிதா  விரைவில் வீடு திரும்புவார் என்று அறிக்கை (மேலும்)  30.12..16

_____________________________________________________________________________________________________________________________________

துறைமுக ஊழியர்கள் கறுப்புப் பட்டி போராட்டம்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கை மற்றும் சீன நிறுவனத்துக்கு இடையில் கைச்சாத்திடப்படவுள்ளதாக கூறப்படும் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அகில இலங்கை துறைமுக ஊழியர்கள் சங்கம், பாரிய எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.  இதன்படி ஜனவரி 02ம் திகதி முதல் கறுப்புப்பட்டி அணிந்து கடமைக்கு சமூகமளிக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் ​செயலாளர் சந்திரசிறி மஹகமகே, குறிப்பிட்டுள்ளார்.அதேபோல் வாகனங்களிலும் கறுப்புக் கொடிகளை ஏற்றவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

_____________________________________________________________________________________________________________________________________

விமல் வீரவங்ச இன்றும் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜர்

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனத்தை முறையின்றி பயன்படுத்திய vimalசம்பவம் தொடர்பில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு விமல் வீரவங்சவிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்றும் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிடம் நேற்றும் (28) 5 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.நீதிமன்ற உத்தரவின் பிரகாரமே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நேற்று பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.விமல் வீரவங்ச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் விடுத்த அறிவித்தலுக்கு அமைவாகவே நீதிமன்றம் அவருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது

_____________________________________________________________________________________________________________________________________

ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை தேவை!

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்குத் தெரிவிப்பு!

கடந்த 23ம் திகதி முதல் தங்களது விடுதலையை முன்னிறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ள ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கையினை மனிதாபிமான முறையில் பரிசீலித்து அவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கூடிய நடவடிக்கையினை எடுத்து உதவுமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களுக்கு அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், இந்தியாவுக்கு சுற்றுலா விஸாவில் சென்றிருந்த சமயம் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் இருவர் தங்களது விடுதலையைக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு, தற்போது அங்குள்ள அதிகாரிகளின் வாக்குறுதிகளின் அடிப்படையில் அதனைக் கைவிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.    (மேலும்)  30.12..16

_____________________________________________________________________________________________________________________________________

போலி கடவுச் சீட்டுக்களுடன் இலங்கையர் இருவர் இந்தியாவில் கைது

போலி இந்திய கவுச்சீட்டுகளை வைத்திருந்த இரு இலங்கையர்கள் கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,இலங்கையிலிருந்து சுமார் 10 வருடங்களுக்கு முதல் இந்தியா சென்ற குறித்த நபர்கள் போலி ஆவணங்களை காட்டி இந்தியப் பிரஜைகளுக்குரிய அந்தஸ்துகளை பெற்று வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் தாம் போலி ஆவணங்களுடாக தயாரித்த கடவூசீட்டுகளுடன் சீனாவிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளனர்.பிரான்ஸ் நாட்டு குடிவரவு திணைக்கள அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்க்கவே குறித்த நபர்கள் போலி இந்திய கடவூச்சீட்டில் பிரான்ஸ் வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த குற்றவாளிகளான சுரேஷ் கரனி மற்றும் ஜெபனேஷன் ரமேஷர்வானி இருவரும் உடனடியாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் கொல்கத்தா சுபாஷ்சந்தரபோஸ் சர்வதேச விமான நிலைய குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் போலி ஆவணங்கள் தயாரித்தகுற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

_____________________________________________________________________________________________________________________________________

ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவருக்கு விளக்கமறியலில் நீடிப்பு

பேஸ்புக் வலைத் தலத்தின் மூலம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட இளைஞர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த பதிவுகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இந்தப் பதிவு பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது கட்டாரில் இருந்து எனவும், மேலும் சில நாடுகளில் இருந்தும் சில நபர்கள் சம்பந்தப்பட்ட பதிவினை பேஸ்புக்கில் இணைத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதனையடுத்து விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் சந்தேகநபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

_____________________________________________________________________________________________________________________________________

பேய்முனை: கடற்பாசி வளர்ப்பும் அதன் ஆபத்துக்களும்

சிக்மலிங்கம் றெஜினோல்ட்

பேய்முனைக்குப் போயிருந்தோம். எல்லாமே அங்கு மாறியிருந்தன. மீன்பிடியை விட்டு விட்டுக் கடற்பாசி வளர்ப்பு நடக்கிறது அங்கே. அதற்காகக் கரையெங்கும் மூங்கில் கழிகளைக் கொண்டுalgae வந்து குவித்திருக்கிறார்கள். அந்தக் கழிகளைப் படல்களாகக் கட்டி, அவற்றில் வலைகளைப் படர்த்திக் கடலில் தெப்பமாகப் படிய விட்டிருக்கிறார்கள். கடற்பாசி வளர்ப்பு இன்று உலகத்தின் கவர்ச்சிகரமான தொழில்களில் ஒன்றாக மாற்றப்படுகிறது. கடற்பாசியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கராஜீனன் என்ற பொருள் உணவு மற்றும் பல்வேறு விதமான தேவைளுக்குப் பயன்படுகிறது. உயர்ரக உணவுக்காகவும் அழகுசாதனப் பொருட்களை உருவாக்குவதற்கும் ஜெலியைத் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். ஐஸ்கிரீம், பற்பசை போன்றவற்றை உற்பத்தி செய்தற்கும் கடற்பாசி உதவுகிறது.  இதற்காக வெளிநாடுகளில் இருந்து சில நிறுவனங்கள் இலங்கையின் சதுப்புக் கடல்களை நோக்கியும் குடாக்கடல்களை நோக்கியும் குவிந்திருக்கின்றன. கடற்பாசிகள் பொதுவாக வெப்பமண்டல கடல் பகுதிகளிலேயே வளரும். ஆறுகள் வந்து கலக்கிற இடமும் கடல் சேருகிற இடமுமே கடற்பாசி வளர்ப்புக்குப் பொருத்தம். அதோடு அதிகமாக அலைகள் மோதும்  இடத்தைத் தவிர்த்து, அலைகள் குறைவான குடாக்கடல்களைத் தேர்வு செய்கிறார்கள். குமுறிக் கொண்டிருக்கும் அலைகளையுடைய பெருங்கடல் பொருத்தமானதல்ல. பெரிய அலைகள் கடற்பாசியை வளர விடாது. தண்ணீரின் இயக்கம் சீராக, அமைதியாக உள்ள பகுதியே கடற்பாசிக்குத் தேவை.  (மேலும்)  29.12..16

_____________________________________________________________________________________________________________________________________

எதிர்க்கட்சியினர் வௌியேறிய பின் வாக்கெடுப்பு - சட்டமூலம் தோல்வி

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம், மத்திய மாகாண சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இன்று குறித்த சட்டமூலம் வாக்களிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் இது தொடர்பான விவாதம் அவசியம் எனக் கூறினர்.எனினும் ஆளுந்தரப்பினர் இதற்கு எதிர்ப்பு வௌியிட்டுள்ளனர். இதனையடுத்து எதிர்க்கட்சியினர் சபையில் இருந்து வௌியேறியுள்ளனர்.பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 36 பேரில் 32 பேர் இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.மற்றைய நால்வரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

_____________________________________________________________________________________________________________________________________

மயிலிட்டி உட்பட இன்னும் விடுவிக்கப்படாத  எமது மக்களின் நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும்!

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

மயிலிட்டி மட்டுமல்லாது இன்னும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பல்வேறு தேவைகளுக்கென கையகப்படுத்தப்பட்டுள்ள எமது மக்களுக்குச் சொந்தமான அனைத்து குடியிருப்douglas devaபு, விவசாய மற்றும் கடல்தொழில் சார்ந்த இடங்கள் யாவும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். மயிலிட்டி பகுதியை விடுவிக்கக் கூடாது என தேசிய போர் வீரர்கள் முன்னணி அமைப்பு அண்மையில் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளமை தொடர்பில் சிங்கள ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே செயலாளர் நாயகம் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் அவர்கள், மயிலிட்டி பகுதியில் ஆயுதக் கிடங்குகள் மற்றும் மிக முக்கிய இராணுவ நிலைகள் இருப்பதாகக் கூறியே மேற்படி அமைப்பினர் அப்பகுதியை விடுவிக்கக் கூடாது எனத் தெரிவிக்கின்றனர். இவை எல்லாம் வடக்கில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரான காலகட்டங்களிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கு முந்திய காலங்களில் இவை அப்பகுதியில் இருக்கவில்லை.    (மேலும்)  29.12..16

_____________________________________________________________________________________________________________________________________

பத்திரிகையாளர் சந்திப்பு

மூன்றாம் தலைமுறையினர் சுவிற்சர்லாந்தில் இலகுவாக குடியுரிமை பெறுதலிற்கு ஆம்!

அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களிற்கும்

இரண்டு மில்லியன் மக்கள் எவ்வித அரசியல் உரிமையும் இன்றி சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவருகின்றனர். சோசலிச ஜனநாயக கட்சியின் குடியேற்றவாதிகளின் பிரிவு குடியேற்றவாதிகளிற்கு அரசியல் உரிமைகள் வழங்கும் நோக்கில் குடியுரிமை விண்ணப்பித்தலிற்கான அழைப்பினை அறிவித்துள்ளோம். குடியுரிமைக்கான விண்ணப்பத்திற்கு ஓவ்வொரு கிராம சபைக்கு ஏற்ப கட்டணப்பணம் அதிகம். மூன்றாம் தலைமுறையினர் இலகுவாக குடியுரிமை பெறுதல் என்ற கோரிக்கைக்கு சுவிற்சர்லாந்து அனைத்து கட்சிகளும் ஏக மனதாக ஏற்றுகொண்டு கோரிக்கைக்கு ஆதரவு அளிக்க உள்ளனர். இச்சிறு தடையை நீக்குவதற்கான ஆணையை சுவிற்சர்லாந்து வாழ் மக்களிடம் பெற உள்ளோம். எதிர்வரும் 12 ம் திகதி மாசி 2017 ஆண்டு இக்கோரிக்கை சர்வசனவாக்கெடுப்புக்கு கொண்டு வரப்படப்பட உள்ளது.பத்து மொழிகளில் இச்சர்வசன வாக்கெடுப்பிற்கான எமது நியாயமான காரணங்களை நடைபெற இருக்கும் பத்திரியாளர்கள் சந்திப்பில் முன்வைக்க உள்ளோம்.   (மேலும்)  29.12..16

_____________________________________________________________________________________________________________________________________

இரு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட 25 பேருக்கு பிணை

நீதிமன்ற உத்தரவை மீறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உள்ளிட்ட 25 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். சாலை விதிகளை மீறும் பஸ் சாரதிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்கும் யோசனைக்கு கண்டனம் தெரிவித்து கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதி மற்றும் ரயில் கடவையை மறித்து, கல்கந்த பகுதியில் சிலர் கடந்த 2ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து விலகிச் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.எனினும், அதனை பொருட்படுத்தாத சிலர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமையால், அப் பகுதியிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகை பிரயோகத்தை மேற்கொண்டனர்.    (மேலும்)  29.12..16

_____________________________________________________________________________________________________________________________________

சசிகலா புஷ்பாவின் கணவர் மீது அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல்!

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதpushpaிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் வழக்குரைஞர் மீது அதிமுக தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை வழிநடத்தப்போவது யார்? அதிமுகவின் அடுத்த பொதுச் செயலர் யார்? என்ற கேள்வி நிலவி வந்த நிலையில், அதிமுக பொதுக்குழு நாளை சென்னையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்படலாம் என பரவலாக போசப்பட்டு வருகிறது. இதற்கான வேலைகளில் சசிகலாவின் ஆதராவளர் மற்றும் அவரது உறவினர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.  இருப்பினும் சசிகலாவுக்கு கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனர்.   (மேலும்)  29.12..16

_____________________________________________________________________________________________________________________________________

அடேல், எல்.ரீ.ரீ.ஈ பிரதிநிதிகளின் முகத்திரையை கிழிக்கிறார்

                                             மனெக்ஷா

எல்.ரீ.ரீ.ஈ சார்பான ஒரு புலம்பெயர் தமிழ் அமைப்பு ஒன்றின் மீது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார், அந்த அமைப்பு காலஞ்சென்ற கோட்பாட்டாளரின் உடல் எரிக்கப்பட்ட சாம்பல் கொண்ட எல்.ரீ.ரீ.ஈ கோட்பாட்டாளரான மறைந்த அன்ரன் பாலசிங்கத்தின் விதவையான அடேல் ஆன், தாழியை வைத்துக்கொண்டு அadel1வரின் ஞ}பகார்த்தமாக அதை வைத்து லண்டனில் ஒரு நினைவுச் சின்னம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதற்காக அவர் அந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.  தனது முதல் மனைவியின் மரணத்தை தொடர்ந்து அன்ரன் பாலசிங்கம் அவுஸ்திரேலியாவில் பிறந்தவரான அடேல் ஆனை 1978ல் லண்டனில் வைத்து திருமணம் செய்து கொண்டார். எந்தவித பிரிவும் இல்லாமல் வாழ்ந்த அந்த ஜோடியின் வாழ்க்கை,1983ல் அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் “பாதுகாவல் தேவதூதர்களாக” மாறியதிலிருந்து மூன்று தசாப்தங்களாக தீவிர சாகசம் நிறைந்ததாக மாறியிருந்தது.அடேல் பாலசிங்கம் தனது கணவர் உயிரோடிருந்தபோதே எழுதிய தனது சுயசரிதையில், மூன்று தசாப்பதங்களாக தாங்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக இருந்ததினால் இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவில் தாங்கள் அனுபவித்த இடர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.   (மேலும்)  28.12..16

_____________________________________________________________________________________________________________________________________

சமனிலையை விரும்பும் கவி - அழ பகீரதன்

 - கருணாகரன்

'நீ எதுவாக இருக்கிறாயோ அதுவாகவே உன் அடையாளமும் இருக்கும்'Pagirathan

வாழ்க்கையை ஒருவர் நோக்கும் விதமே அவர் வாழும் விதத்தைத்தீர்மானிக்கிறது.

இது எப்படி அமைகிறது?

ஒரு காலகட்டத்தில் ஒரு சமூகச் சூழலில் பலர் வாழ்ந்தாலும் எல்லோருடைய வாழ்க்கையும் வாழ்க்கை முறையும் ஒன்றாக அமைவதில்லை. எல்லோருடைய நம்பிக்கைகளும் எண்ணங்களும் கூட ஒரேவிதமாக இருப்பதில்லை. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நம்பிக்கைகளிலும் செயற்பாடுகளிலும் அடையாளங்களிலும் நிறவேறுபாடுகள், குணவேறுபாடுகள் ஏராளமுண்டு. எனில் ஏராளம் ஏராளம் நிறப்பிரிகையுடையோரே மனிதர். அவரவர் கொள்கின்ற நம்பிக்கைகள், நம்பிக்கையின்மைகள், கேள்விகள், கண்டடைகின்ற பதில்கள், சிந்தனைகள், கிடைக்கின்ற வளங்களையும் வசதிகளையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளும் முறைகள், அனுபவங்கள் போன்ற பல விசயங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் வாழும் முறையையும் தீர்மானிக்கின்றன. இதில் பிரதான காரணமாக அமைவது மன உருவாக்கமாகும். இந்த மன உருவாக்கமானது, சூழலினாலும் கருத்துகளினாலும் கட்டமைக்கப்படுகிறது. (மேலும்)  28.12..16

_____________________________________________________________________________________________________________________________________

மாற்றுத்திறனாளிகளை மதிக்காது வாசலோடு திருப்பி அனுப்பிய மக்கள் பிரதிநிதிகள்

கடந்த 24 ஆம் திகதி  இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்டச்  அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குwheelchairழு கூட்டத்திற்கு உயிரிழை எனும் அமைப்பினா்  கலந்துகொள்வதற்காக  சென்றிருந்தனா். யுத்தத்தில்  பங்குகொண்டு காயமடைந்து முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்டு இடுப்பு கீழ் இயங்காதவா்களை உள்ளடக்கிய அமைப்பே உயிரிழை எனும் அமைப்பாகும். இவா்கள் கிளிநொச்சியில் முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவ வசதியுடன் தங்கியிருப்பதற்கான இல்லம் ஒன்றை  அமைப்பதற்கு அனுமதி பெறும் நோக்கில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு சென்றிருந்தனா். உயிரிழை அமைப்பின் சாா்பாக அதன் செயலாளா் சு.இருதயராஜாவும் அவருக்கு உதவியாக ஒரு இளைஞனும் மாவட்டச் செயலகத்திற்கு சென்றிருந்த நிலையில் மாவட்டச் செயலக நிா்வாகம் அவா்களை முன் அனுமதி பெறாமல் கூட்ட மண்டபத்திற்குள் அனுமதிக்க முடியாது என மறுத்துவிட்ட நிலையில்  அவா்கள் தகவலை தங்களின் நிா்வாகத்திற்கு தெரியப்படுத்தி விட்டு  தாங்கள் கொண்டு சென்ற  கோரிக்கை கடிதத்தோடு மாவட்ட  செயலக வாசலில் சக்கர நாற்காயில்   கூட்டத்திற்கு சமூகமளிக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்க காத்திருந்தனா். (மேலும்)  28.12..16

_____________________________________________________________________________________________________________________________________

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க காலமானார்

இலங்கையின் முன்னாள் பிரதம மந்திரியான ரத்னசிறி விக்கிரமநாயக்க இன்று செratnayakkeவ்வாய்க்கிழமை தனது 83 வது வயதில் காலமானார்.  கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த சில நாட்களாக அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.இலங்கையின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராக விளங்கிய இவர், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் துணைத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார்.35 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்து வந்த இவர் துணை அமைச்சர் மற்றும் அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார்.2005 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக தெரிவானதையடுத்து பிரதமராக பதவியேற்றுக் கொண்ட ரத்னசிறி விக்கிரமநாயக்கா 2010 ம் ஆண்டு வரை அந்தப் பதவியை வகித்தார்.

_____________________________________________________________________________________________________________________________________

முஸ்லிம்களுக்கான காணி பகிர்ந்தளிப்பில் பாரபட்சம் காட்டப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது

முஸ்லிம்களுக்கான காணி பகிர்ந்தளிப்பில் பாரபட்சம் காட்டப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றதுC-V-Wigneswaran  வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் விடயத்தில் பாரபட்சம் காட்டப்படுவதா சுமத்தப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.வடக்கில் இடம்பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு துரித செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளதை வட மாகாண முதலமைச்சர் இன்று (27) விடுத்துள்ள அறிக்கையில் நினைவுபடுத்தியுள்ளார்.2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை மீள்குடியேற்றத்திற்காக விண்ணப்பித்தவர்களின் தரவுகளின் அடிப்படையில் 2801 முஸ்லிம் குடும்பங்கள் தொடர்ந்தும் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் குறித்த காலப்பகுதியில் 24040 முஸ்லிம் குடும்பங்கள் வடக்கில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.    (மேலும்)  28.12..16

_____________________________________________________________________________________________________________________________________

கருணை காட்டுங்கள்! - கிளிநொச்சியில் கதறும் உறவுகள்

தமிழ்நாடு திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் எமது kilinochi relativesஉறவுகளிடம் இரக்கம் காட்டுங்கள் என, அவர்களது பெற்றோர் மற்றும் மனைவிமார் உள்ளிட்ட உறவினர்கள் இன்று (27) கிளிநொச்சியில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் பத்து பேர் மற்றும் மண்டபம் முகாமில் இருக்கும் பெண்ணொருவர் ஆகியோரின் உறவுகள் கிளிநொச்சியில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்துள்ளனர்.தனது மூத்த மகனை இறுதி யுத்தத்தில் பலிகொடுத்துள்ள நிலையில், தற்போது இருக்கின்ற ஒரு மகன் தமிழ்நாடு சென்றுள்ளதாகவும், அங்கு வைத்து கைதுசெய்யப்பட்டு அவர் தற்போது திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தந்தையொருவர் இதன்போது தனது மனவேதனைகளை பகிர்ந்துள்ளார்.மேலும், சட்ட ரீதியாக விசா எடுத்து சுற்றுலாவுக்குச் சென்ற மகனை சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல வந்துள்ளதாக கூறி அதற்கு ஒப்பம் இடுமாறு தொடர்ந்தும் துன்புறுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.  (மேலும்)  28.12..16

_____________________________________________________________________________________________________________________________________

இயலாமைக்கான மருததுவ சான்றிதழ் வழங்கும் திட்டத்தின் கீழ் 400 பேர் பயனடைந்தனர்.

இயலாமையுடன் கூடிய ஆட்களை அடையாளப்படுத்துவதற்கான வடமாகாண சபையின் மருத்துவ சான்றிதழ் வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட வலுவிழந்தோருக்கான புனர்வாழ்வு நிறுIMG_3674வனம் மேற்கொண்ட நடவடிக்கையில் சுமார் 400 பேர் நன்மையடைந்துள்ளனர்.  வடமாகாண சபையின் சமூக சேவைகள் திணைக்களம் வடமாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகம் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் ஏழு மருத்துவ முகாம்கள் இதற்காக நடத்தப்பட்டதாக வவுனியா மாவட்ட வலுவிழந்தோருக்கான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வவுனியா பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு மருத்துவ முகாம்களும், வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரவில் ஐந்து மருத்துவ முகாம்களும் வவுனியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவகத்தைச் சேர்ந்த டாக்டர் லவன் மற்றும் டாக்டர் மதிதரன் ஆகியோரும், வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த டாக்டர் செந்தூர்பதிராஜா ஆகியோர் தமது மருத்துவ தாதிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய அணியினருடன் இணைந்து இந்த மருத்துவ முகாம்களில் பங்கேற்றிருந்தனர்.   (மேலும்)  28.12..16

_____________________________________________________________________________________________________________________________________

புதிய அரசியலமைப்பில் சமஷ்டி வடக்கு, கிழக்கு இணைப்பு இல்லை

புதிய அரசியலமைப்பின் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீணamaraveera்டும் இணைக்கப்பட மாட்டாதென்றும் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதெனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் மீன்பிடித்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார். அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை உள்வாங்கியே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமே தவிர எவரும் நினைத்தப்படி இதில் மாற்றங்களை செய்ய முடியாது என்றும் அவர் கூறினார். அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் நாடு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுவிடுமென ஒரு சிலர் புரளியை ஏற்படுத்தி வருகின்றனர்.இதில் எவ்வித உண்மையும் இல்லை.புதிய அரசியலமைப்பின்படி நாடு ஒன்பது துண்டுகளாக பிரிக்கப்படமாட்டாது. வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைக்கப்பட மாட்டாது.அரசாங்கம் ஒருபோதும் "பெடரெல்" முறையை அறிமுகம் செய்யாது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தப்பட மாட்டாது. இதை மக்கள் நம்ப வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  (மேலும்)  27.12..16

_____________________________________________________________________________________________________________________________________

இதுவும் இன அழிப்பே

By ஆர்.ஜி. ஜெகதீஷ்  |

நம் நாட்டுப் பாரம்பரியத்தின் மீதும் கலாசாரத்தின் மீதும் வெளிநாட்டவர்களுக்கு எப்போதும் ஒரு வன்மம் இருந்துக்கொண்டே இருக்கிறது. 1990 - களுக்குப் பிறகு, அதாவது உலகமயமாக்கலுக்குப் பjallikattuின் வணித்தின் ஊடாக இந்தியக் கலாசாரத்தின் மீது அவை மறைமுக போர் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. கலாசார அழிப்பினால் நம் நாட்டின் பல மாநிலங்களில் பாரம்பரிய அடையாளங்களை இழந்துள்ளன. அண்மைக்காலமாக, இந்தியாவில் பால் வியாபாரத்தைப் பெருக்க, நாட்டு மாடு இனத்தை அழிக்கும் முயற்சியில், பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து, விலங்குகள் நல அமைப்புகள் என்று கூறிக்கொள்ளும் சில நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.வட மாநிலங்களில் சில நாட்டு மாடு இனங்கள் அழிக்கப்பட்டு, அங்கு வெளிநாட்டு இன பசுக்களின் பால்தான் பயன்படுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது தமிழ்நாட்டில் நாட்டு மாடு இனங்களை அழிப்பதற்காக ஜல்லிக்கட்டு போட்டி முடக்கப்பட்டுள்ளது.சற்று சிந்தித்தால் ஜல்லிக்கட்டில் ஒரு நுண் அரசியல் இருப்பது புரியும். உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. ஆனால், இங்குதான் "காளைகள் துன்புறுத்தப்படுகின்றன' என்று கூறி ஜல்லிக்கட்டு முடக்கப்படுகிறது. என்ன ஒரு நகைமுரண்?   (மேலும்)  27.12..16

_____________________________________________________________________________________________________________________________________

மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றிகுறைக்க அனுமதிக்க முடியாது!

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

சிறப்பு அபிவிருத்திகள் தொடர்பான சட்டவரைபு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் douglas devaநிலவுகின்றன. இதற்கு சில மாகாண சபைகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், ஒரு சில மாகாண சபைகள் பொருத்திருந்து தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. எமது மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைத் தீர்வு தொடர்பில் ஓர் ஆரம்பமாக நாங்கள் ஆரம்பந்தொட்டு கூறிவருகின்றவாறு, 13வது அரசிலமைப்புச் சீர்திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தவதில் ஆரம்பித்து, படிப்படியான அதிகாரப் பகிர்ந்தளிப்பை நோக்கிச் செல்லும் செயற்திட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு கூடிய அதிகாரங்களை வேண்டி நிற்கின்றோம். எனவே, தற்போது மாகாண சபைகளுக்கு இருக்கின்ற அதிகாரங்களை எந்த வகையிலும் குறைத்தவிடாது, மேலும் அதிகாரங்களைப் பகிர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.   .  (மேலும்)  27.12..16

_____________________________________________________________________________________________________________________________________

இலங்கை சிறைகளில் வாடும் 20 இந்திய மீனவர்கள் விரைவில் விடுதலை: அமைச்சர் அறிவிப்பு!

கொழும்பு: இலங்கை சிறைகளில் வாடும் 20 இந்திய மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது;இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இந்திய அரசாங்கம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளது. இதை ஏற்று தற்போது இலங்கை சிறைகளில் தற்பொழுது வாடும் 20 மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை மீன்வளத்துறை அமைச்சகம், அட்டர்னி ஜெனரலுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைகள் கிடைத்தவுடன், நீதிமன்றத்தில் மீனவர்களை விடுதலை செய்ய ஆட்சேபனை இல்லை என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவிப்பார்.   வரும் ஜனவரி 2-ஆம் தேதி அன்று மீனவர் பிரச்சினைகள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய மீன்வளத்துறை அமைச்சர் இலங்கை வரவுள்ள நிலையில், இந்த நடவடிக்கை கண்டிப்பாக ஒரு நல்லெண்ண நடவடிக்கையாகும்.இவ்வாறு அமரவீரா தெரிவித்தார்.

_____________________________________________________________________________________________________________________________________

குற்றவாளிகளை காக்க முற்படுகிறதா அரசாங்கம்?

மத்திய வங்கியின் பிணை முறி மோசடிகள் தொடர்பிலான குற்றவாளிகளை பாதுJVPகாக்க அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது என, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிணை முறி மோசடிகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட கோப் குழுவின் தலைவருமான சுனில் கந்துன்நெத்தி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் 28ம் திகதி கோப் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறிய அவர், இந்த அறிக்கை குறித்த விவாதம் இதுவரை பாராளுமன்றத்தில் நடத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.அத்துடன் தற்போது அந்த அறிக்கை பாராளுமன்றத்தின் ஆவணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எனவே, இதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்து மக்கள் பிரதிநிதிகளிடம் பகிரங்க உரையாடலை நடத்தும் வாய்ப்பை ஏற்படுத்தி, அந்த அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவது குறித்து விரைவில் பொறிமுறை ஒன்றை வௌியிடுவதே பாராளுமன்றத்தின் பொறுப்பு எனவும் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்துள்ளார்.

_____________________________________________________________________________________________________________________________________

கடலலையும் – உணர்வலையும்

(மதியன்பன்)

2004 ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி  காலை ஒரு சில வினாடிகளில் உலகத்தையே  உலுக்கி விட்டுச்  சென்ற  சுனாமி  பேரலையின் நினைவாக எழுதப்பட்ட கவிதைmathi
======================
டிசம்பர் இருபத்தி ஆறு
அன்று
விடுமுறை தினம் என்பதால்
பலர்
வீட்டுக்குள் உறங்கிக் கிடந்தார்கள்.

இன்னும் சிலர்
காலை வேளை என்பதால்
கடற்கரைக்கு
நடை பயில வந்தார்கள்.

குழந்தைகள் விளையாடச் சென்றன
இன்னும் சில
குர்ஆன் மத்ரஸா டியூஷன் வகுப்பென
கரையோர பாடசாலைகளில் காத்திருந்தன.

 (மேலும்)  27.12..16

_________________________________________________________________________________________________________________________

தனியார் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு பொலிஸ் மாஅதிபர் எவ்வித தடையும் விதிக்கவில்லை

தனியார் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு பொலிஸ் மாஅதிபர் எவ்வித தடையும் விதிக்கவில்லைதனியார் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவது தொடர்பில் பொலிஸ் மாஅதிபர் எவ்வித தடையும் விதிக்கவில்லை என பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.இதுதொடர்பாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே பொலிஸ் தலைமையகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.தனியார் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவது தொடர்பாக பொலிஸ் மாஅதிபர் தடை விதித்துள்ளதாக பல்வேறு ஊடகங்களிலும் கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகியிருந்ததாக பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

_____________________________________________________________________________________________________________________________________

கயட்டையில் சுனாமியால் உயர்நீத்தோர் நினைவேந்தல் நிகழ்வு-

2004ஆம் ஆண்டில் சுனாமி அனர்த்தத்தால் காவுகொள்ளப்பட்ட மக்களை நினைவுகூறு26.12 (1)ம் 12ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு முள்ளியவளை (கற்பூரப்புல்வெளி) கயட்டையில் இன்று 26.12.2016 பிற்பகல் 4.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.   மேற்படி சுனாமி நினைவேந்தல் நிகழ்வானது கயட்டை பிரதேசத்தில் சுனாமியில் உயிர்நீத்தவர்களை நல்லடக்கம் செய்த இடத்தில் வனியா மாவட்ட செயலகத்தின் அனுசரணையில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. நினைவஞ்சலி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், வட மாகாணசபை பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், துணுக்காய் பிரதேச செயலாளர், ஐங்கரநேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.  (மேலும்)  27.12..16

_____________________________________________________________________________________________________________________________________

லஞ்சம் வாங்கிய வழக்கில் சீன முன்னாள் மந்திரிக்கு 10ண ஆண்டு ஜெயில்

சீனாவில் 1997–ம் ஆண்டு முதல் 2014–ம் ஆண்டு வரை விளையாட்டுத் துறை துணை மந்தChina-jails-formerிரியாக பதவி வகித்தவர் ஜியாவோ டியான். இவர் சீன ஒலிம்பிக் குழுவிலும் உறுப்பினராக இடம் பெற்று இருந்தவர் ஆவார். இவர் தனது பதவி காலத்தில், தனது செல்வாக்கை தவறாக பயன்படுத்தி விளையாட்டுத் துறையில் பதவி உயர்வு பெற்றுத் தருதல், கட்டிடங்கள் கட்டுவது, விளையாட்டு போட்டிகளை நடத்துவது ஆகியவற்றுக்காக 1.15 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.8 கோடி) லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது ஹெனான் மாகாணத்தில் உள்ள நான்யாங் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது ஜியாவோ லஞ்சம் வாங்கியது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவருக்கு கோர்ட்டு 10ண ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து  தீர்ப்பு கூறியது. இந்த தகவல் கோர்ட்டின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வழக்கு விசாரணையின்போது ஜியாவோ லஞ்சம் வாங்கியதை ஒப்புக் கொண்டதாகவும், தனக்கு குறைந்தபட்ச ஜெயில் தண்டனை வழங்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் அந்த இணையதளத்தில் கூறப்பட்டு உள்ளது.2022–ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெற இருக்கும் நிலையில் விளையாட்டுத்துறை முன்னாள் மந்திரி ஒருவருக்கு 10 ஆண்டுகளுக்கும் மேல் ஜெயில் தண்டனை வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

_____________________________________________________________________________________________________________________________________

1.93 லட்சம் கார்களை திரும்பப்பெறுகிறது பி.எம்.டபிள்யூ.

ஜெர்மனியைச் சேர்ந்த பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சீனாவில் விற்பனைசெய்த 1.93 லட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. காற்றுப்பைகளில் ஏற்பட்ட கோளாறை சரி செய்து தருவதற்காக அந்த நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்து சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளதாவது: கடந்த 2005-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி முதல் 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி வரையிலான கால அளவில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 1,68,861 கார்களை சீனா இறக்குமதி செய்தது. அதேபோன்று, 2005-ஆம் ஆண்டு ஜூலை 12 முதல் 2011 டிசம்பர் 31 வரையில் செடான் வகையைச் சேர்ந்த 24,750 பி.எம்.டபிள்யூ. கார்களும் இறக்குமதியாகின.இந்த கார்களில் முன்பக்க இருக்கையில் உள்ள ஓட்டுநர் மற்றும் பயணிகளின் காற்றுப் பைகளில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்து, பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்த குறைபாட்டை சரி செய்து தர உறுதி அளித்துள்ளது. இதற்காக, அந்த நிறுவனம் 1.93 லட்சம் கார்களை திரும்பப் பெற உள்ளது. பழுதான பாகங்களை இலவசமாக மாற்றித் தர அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

_____________________________________________________________________________________________________________________________________

முஸ்லீம்கள்: யாழ் மீள் குடியேற்ற இடர்பாடுகள்

-          கருணாகரன்

2010 இல் பயணமொன்றின்போது பேருந்தொன்றில் வழிப்பயணியாகச் சந்தித்தேன் ஸகசதுல்ல ஜதூரோஸை. 20 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாணத்துக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தார். பேச்சுக் கொடுத்ததுதான் தாமதம், உடைப்பெடுத்தது துயரணை. மகிழ்ச்சி, துக்கம், நம்பிக்கை, ஏமாற்றம், சலிப்பு அடுத்து என்ன செய்வது என்று தெரியாத தடுமாற்றம் என பலவிதமான உணர்ச்சிக் கொந்தளிப்போடு பேசினார். jaffna muslim-1  1990 இல் யாழ்ப்பாணத்தை விட்டு விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட ஸகசதுல்ல ஜதூரோஸ், இலங்கையின் வடமேற்குக் கடலை அண்மித்த புத்தளத்தில் 20 ஆண்டுகளாக அகதியாக அலைந்து கொண்டிருக்கிறார். அலையும் காலத்தில் புலிகளைக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்த அரசாங்கமும் இவர்களை முறையாகப் பராமரித்ததில்லை. இப்படி அலைந்து கொண்டிருந்தவருக்கு யுத்தத்தின் முடிவு இனித்தது. மீண்டும் யாழ்ப்பாணத்துக்குச் சென்று தன்னுடைய வீட்டில் குடியேறலாம் என்று நம்பினார். இந்த நம்பிக்கை அவருக்கு மகிழ்ச்சியூட்டியது. ஆனால்,  அவருடைய நம்பிக்கைக்கு மாறாகவே ஸகசதுல்ல ஜதூரோஸின் பிள்ளைகள் சிந்திக்கிறார்கள்.அவர்களுக்கு யாழ்ப்பாணம் இனிக்கவில்லை. நம்பிக்கையூட்டவில்லை. எந்தப் பிடிப்பையும் ஏற்படுத்தவில்லை. அவர்களை ஜதூரோஸ், யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து தான் இருந்த வீட்டையும் வாழ்ந்த சூழலையும் காட்டினார். தன்னுடைய இளமைக்காலம் எத்தனை மகிழ்ச்சியாக இருந்தது என்பதையெல்லாம் கதை கதையாக நினைவுட்டிச் சொன்னார்.  (மேலும்)  26.12..16

_____________________________________________________________________________________________________________________________________

இஸ்லாம் பற்றிய ட்ரம்ப்பின் தவறான கண்ணோட்டம்

                                        ஜோநாதன் பவர்

டொனால்ட் ட்ரம்ப்பின் ஒரு நிலையான அச்சம்,; மத்திய கிழக்கில் அதிகாரத்தtrup syriaுக்கு வரப்போகும் சர்வாதிகாரிகளின் வழித்தோன்றல்கள் இஸ்லாமிய போராளிகளாக இருப்பார்கள், அவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை ஒன்றுமில்லாமல் நிறுத்தப்பட்டுவிடும் என்பதாகும். ஒருமுறை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர்களை அணுசக்தி மூலம் அழித்துவிடப் போவதாக அவர் எச்சரித்திருந்தார். மதச்சார்பற்ற எண்ணம் கொண்ட ஜனாதிபதி பசார் அல் அசாத் சிரியாவில் சிவில் யுத்தத்தில் வெல்லக்கூடியதாக தோன்றுகிறபோதிலும் இஸ்லாமியவாதிகள் அவருக்கு நெருக்கமாக இருந்து அவரை இயக்குவார்கள். வன்முறைகளைச் சார்ந்திருப்பதற்கு இஸ்லாமியவாதிகள் குரான் மற்றும் ஹதீத்தை காரணம்காட்டி அவர்களது வன்முறைகளை நியாயப்படுத்துகிறார்கள். அவர்களது விளக்கத்துக்கு நெருக்கமான வசனங்கள் உண்மையில் அவை இரண்டிலும் உள்ளன. இந்தப் பந்திகளை அவர்கள் பெரிதுபடுத்தினாலும் அதிலுள்ள ஏனைய மிகவும் அமைதியான வழிகளை அவர்கள் புறக்கணிக்கிறார்கள், உண்மையில் இஸ்லாத்தில் கடுமையான வழிகளுக்கான ஒரு மரபும் உள்ளது. இருப்பினும் முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் இன்று அதைப் பின்பற்றுவது கிடையாது.   (மேலும்)  26.12..16

_____________________________________________________________________________________________________________________________________

உழைப்பதற்கு அஞ்சுபவர்களல்ல நிலைமாறு கால நீதியும் பொருத்தமான உதவிகளும் வழங்கப்பட வேண்டும் - அமரா பெண் தலைமைதாங்கும் குடும்ப ஒன்றியப் பெண்கள் கோரிக்கை

சொல்லில் அடங்காத பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், உழைப்பதற்கு நாங்கள் அஞ்சுபவர்களல்ல. பொருத்தமான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும். நீதிக்கான நிலைமாறுகால ம15ுறைமையின் கீழ் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்ப ஒன்றியங்களின் தேசிய மாநாட்டில் ஒன்று கூடிய பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கோரியிருக்கின்றார்கள். விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் பெண்கள்,  பெண்கள் அபிவிருத்திக்கான போக்கஸ் ஆகிய நிறுவனங்களின் அனுசரணையில் இந்தத் தேசிய மாநாடு யாழ்ப்பாணம் டில்கோ விருந்தகத்தில் நடைபெற்றது. விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் தலைமையக திட்ட அலுவலர் இந்துமதி ஹரிஹரதாமோதரன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய வடகிழக்கு மாகாண மாவட்டங்களுடன், காலி, மொனராகலை, பதுளை, குருணாகல், அனுராதபுரம் போன்ற நாட்டின் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த பெண் தலைமை தாங்கும் குடும்ப ஒன்றியங்களின் பிரதிநிதிகள் பெரும் எண்ணிக்கையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டன  (மேலும்)  26.12..16

_____________________________________________________________________________________________________________________________________

இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத குண்டை செயலிழக்க வைக்க ஜேர்மனியிலிருந்து 50,000 மக்கள் வெளியேற்றம்

இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத இராட்சத குண்டை செயலிழக்க வைப்பதற்காக ஜேர்மனியின் அவுஸ்பர்க் நகரில் இருந்து சுமார் 50,000 மக்கள் வெளியேற்றப்பட்டன2world bombர்.சுமார் 1800 கிலோ எடையுள்ள அந்த இராட்சத குண்டு 1944 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்து படைகளால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.கடந்த 1944 ஆம் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின்போது இந்த பகுதியின் மீது நடத்தப்பட்ட விமான தாக்குதலில் அவுஸ்பர்க் நகரமே நிர்மூலமாகிப் போனது.பின்னர், மெல்ல,மெல்ல மீண்டும் கட்டமைக்கப்பட்ட இந்த நகரத்தில் இவ்வளவு பெரிய வெடிகுண்டு கிடைத்த தகவல் அந்த நகர மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், கட்டுமானப் பணிக்காக அவுஸ்பர்க் நகரில் சமீபத்தில் பள்ளம் தோண்டியபோது அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த வெடிகுண்டு கிடைத்துள்ளது.   (மேலும்)  26.12..16

___________________________________________________________________________________________________________________________________

ரவிராஜ் வழக்கு விவகாரம் - மேன்முறையீடு செய்ய முடிவு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்குத் தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் என்ற வகையில் தான் இந்த மேன்முறையீட்டை மேற்கொள்ளவுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு கடந்த வௌ்ளிக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.விஷேட ஜூரி சபை முன் நடந்த இந்த வழக்கு விசாரணைகளில், குற்றம்சாட்டப்பட்ட ஐவரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

_____________________________________________________________________________________________________________________________________

வவுனியாவில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்கள் மீட்பு

வவுனியா - நீலியாமோட்டைப் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.வன்னி விமானப் படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, விமானப் படையினர் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் இதன்போது மிதிவெடிகள் 49, கைக்குண்டுகள் மற்றும் 60 மில்லிமீட்டர் மோட்டர் குண்டுகள் போன்ற பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இதேவேளை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் குறித்த ஆயுதங்களை செயழிழக்கச் செய்துள்ளனர்.

_____________________________________________________________________________________________________________________________________

ரஷிய ராணுவ விமானம் கருங்கடலில் விழுந்து 92 பேர் உயிரிழப்பு; விளாடிமிர் புதின் விசாரணைக்கு உத்தரவு

கருங்கடலில் விழுந்து ராணுவம் விமானம் விபத்துக்குள் சிக்கியது தொடர்பாக ரputinஷிய அதிபர் விளாடிமிர் புதின் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷிய படைகளும் களமிறங்கி, கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வருகின்றன. சிரியாவில் ஹமெய்மிம் ராணுவ தளத்தில் முகாமிட்டு, கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வருகிற ரஷிய படையினரின் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இசை நிகழ்ச்சி நடத்த ரஷியா முடிவு செய்தது. இதற்காக இசைக்குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்பட 92 பேருடன் ரஷியாவின் டி.யு-154 ராணுவ விமானம் சோச்சியில் இருந்து புறப்பட்டு சென்றது.  சிரியாவின் லட்டாகியா நகரை நோக்கி சென்ற விமானத்தில் பயணிகள் 84 பேர், சிப்பந்திகள் 8 பேர் என மொத்தம் 92 பேர் பயணம் செய்தனர்.விமானம் சோச்சியில் இருந்து புறப்பட்டு சென்ற 20 நிமிடத்தில் ரேடார் திரையில் இருந்து மறைந்தது. அதைத் தொடர்ந்து அந்த விமானத்தை தேடும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. அதில் அந்த விமானம், கருங்கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. அந்த விமானத்தின் சிதைவுகள், கருங்கடலில் இருந்து 1.5 கி.மீ. தொலைவில் சோச்சி நகர கடலோர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.  (மேலும்)  26.12..16

_____________________________________________________________________________________________________________________________________

கனடா நாட்டில் சீக்கியர்கள் வழிபாட்டு தலத்தில் இனவெறி தாக்குதல்

கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்தில் கால்கரி நகரில் சீக்கியர்கள் வழிபாட்டுத்தலம் (குருத்வாரா) உள்ளது.  அந்த வழிபாட்டுத்தலத்தின் உள்ளேயும், வெளியேயும் 6 இடங்களில் இனவெறி தாக்குதலை வெளிப்படுத்தும் வகையில் சுவற்றில் வர்ணத்தால் வாசகங்களை எழுதி கிறுக்கி உள்ளனர்.இது அங்கு வாழ்கிற சீக்கியர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து கனடாவின் உலக சீக்கிய அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் சீக்கிய சமூகத்தினர் உஷாராக இருக்கும்படியும், வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் ஏதாவது தென்பட்டால் அதுபற்றி அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.இந்த சம்பவம் பற்றி உலக சீக்கிய அமைப்பின் ஆல்பர்ட்டா நகர துணைத்தலைவர் தேஜிந்தர் சிங் சித்து கூறுகையில், ‘‘குருத்வாரா மீது நடத்தப்பட்டுள்ள இனவெறி தாக்குதல் மிகுந்த வேதனையை அளிக்கிறது. கனடாவில் பல இடங்களில் இத்தகைய இனவெறி உணர்வினை எங்களால் பார்க்க முடிகிறது. இந்த வருந்தத்தக்க செயல்கள், அறியாமையால் ஊக்குவிக்கப்படலாம். இத்தகைய இனவெறி தாக்குதல்களை நிராகரிக்கிற வகையில் சீக்கியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்’’ என்று தெரிவித்தார்.இத்தகைய சம்பவம் தொடர்பான வழக்குகளில் புலன்விசாரணையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் ஒத்துழைப்பை போலீசார் நாடி உள்ளனர்.

_____________________________________________________________________________________________________________________________________

குமாரவத்தை தோட்டமும் மனித உரிமைகளும்


மலையக மக்கள் செறிவு குறைவாக வாழ்ந்தாலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மkumarawattaத்தியில் இன்றும் தங்கள் இனத்துவ அடையாளங்களை பாதுகாக்கும் ஒரு பிரதேசமாக மொனறாகலை மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமாக பல தோட்டங்கள் காணப்படுகின்றன. ஒன்பது பிரிவுகளை உள்ளடக்கிய குமாரவத்தை தோட்டமும் இதில் உள்ளடங்குகின்றது.  இங்கு தொழில்புரிகின்ற தொழிலாளர்களுக்கு இன்னும் புதிய கூட்டு ஒப்பந்தத்தின் படி சம்பளம் வழங்கப்படுவதில்லை. அத்தோடு, சம்பளமும் உரிய திகதியில் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாகவும் மக்கள் கூறுகிறார்கள். மேலும், தங்களது அடிப்படை உரிமைகளை கூட நிர்வாகத்தால் மறுக்கப்படுவதாகவும் இம்மக்கள் குறைகூறுகிறார்கள்.இது தொடர்பில் மொனறாகலை மக்கள் அபிவிருத்தி அமைப்பினால் மகஜர் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இம்மகஜர் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களுக்கும் மலையக அரசியல் தலைவர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக அமைப்பு தெரிவித்திருக்கிறது.   (மேலும்)  25.12..16

_____________________________________________________________________________________________________________________________________

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் பாலஸ்தீன ஆதரவு தீர்மானம் நிறைவேறியது

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட நெடுங்காலமாக பகை நிலவி வருகிறது.un.israel  ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதிகளில், குறிப்பாக கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் வலுக்கட்டாயமாக குடியிருப்புகளை அமைத்து வருகிறது.இதை தடுத்து நிறுத்தக்கோரி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மலேசியா, நியூசிலாந்து, செனகல், வெனிசுலா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தன.அந்த தீர்மானத்தில், “கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதிகளில் குடியிருப்பு செயல்பாடுகளை இஸ்ரேல் முழுமையாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இது தொடர்பான சட்டதிட்டங்களை இஸ்ரேல் மதித்து நடக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.இந்த தீர்மானத்தின்மீது நேற்று முன்தினம் ஓட்டெடுப்பு நடைபெற்றது.இந்த ஓட்டெடுப்பில் 15 நாடுகளில் 14 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டது. இதனால் தீர்மானம் நிறைவேறியது.1979-ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான், குடியிருப்பு கொள்கையில் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்று நிறைவேற அமெரிக்கா வழிவிட்டுள்ளது.   . (மேலும்)  25.12..16

_____________________________________________________________________________________________________________________________________

ஜனாதிபதிக்கு சொல்லுங்கள் -

ஜனாதிபதிக்கு சொல்லுங்கள் மக்கள் குறைகேள் அலுவலகத்தினை எதிர்வரும் ஜனவரி மாதம் 04ம் திகதி ஜனாதிபதி யாழில் திறந்து வைக்கவுள்ளார். Reginald  முதன்முதலாக வட மாகாணத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த அலுவலகம் யாழ்.மாவட்டத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் ஜனவரி மாதம் 04ம் திகதி வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டு, தொடர்ச்சியாக மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து ஜனாதிபதி நேரடியாக மக்களுக்கு தீர்வுகளை வழங்கவுள்ளார். கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த மக்கள் குறைகேள் அலுவலகம் ஜனாதிபதி செயலகத்தில் இதுவரை செயற்பட்டு வந்தது. (மேலும்)  25.12..16

_____________________________________________________________________________________________________________________________________

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் fishers protestவிடுவிக்கக் கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மீனவர்களை விடுவிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் வலியுறுத்தியுள்ளதாக எமது இராமேஷ்வரம் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.மீனவர்களை விடுதலை செய்து கொள்ளும் விடயத்தில் இந்திய மத்திய மாநில அரசுகள் அலட்சியப் போக்குடன் செயற்படுவதாகவும் தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.தங்கச்சிமடத்தில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 மீனவர்கள் கலந்துக் கொண்டதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவில், தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியவில்லை என்றால் தங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

_____________________________________________________________________________________________________________________________________

மஹிந்த அணி உறுப்பினர் சு.க. பதவியிலிருந்து இராஜினாமா

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவியிலிருந்து தான் விலகவுள்ளதாக குணரத்ன வீரேகோன் தெரிவித்துள்ளார்.சு.க.வின், காலி மாவட்ட பிரதான அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரேகோன் இது குறித்தான தனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.குறித்த விடயம் தொடர்பிலான கடிதத்தின் பிரதியை சு.க.வின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவுக்கும் அனுப்பிவைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

_____________________________________________________________________________________________________________________________________

 டில்லி அதிரடி: அ.தி.மு.க.,வில் அதிர்வு


மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை, ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வில், அதிர்வை sasikala1ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், தமிழக அரசும், அ.தி.மு.க.,வும் கலகலத்துள்ளன. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், முதல்வராக பன்னீர்செல்வத்தை, ஒருமனதாக தேர்வு செய்தனர்; அவரும் பதவியேற்றார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு, சசிகலாவை, அவரது குடும்பத்தினர் முன்னிறுத்தினர். அவருக்கு, கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர். முதல்வர் பன்னீர்செல்வமும் ஆதரவு தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா வருவதை விரும்பாத மத்திய அரசு, அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. பன்னீர்செல்வம் அல்லது தம்பிதுரையை, அந்த பதவிக்கு கொண்டு வர, காய் நகர்த்துகிறது. இதை, சசிகலா குடும்பத்தினர் ஏற்கவில்லை.மேலும் தாமதமானால், பதவி பறிபோய் விடும் எனக் கருதிய, சசிகலா குடும்பத்தினர், அதற்கான பணிகளைதுரிதப்படுத்தினர்.    (மேலும்)  25.12..16

_____________________________________________________________________________________________________________________________________

பாரீஸ் நகரத்தில் தமிழக என்ஜினீயர் குத்திக்கொலை கொள்ளை முயற்சியில் நடந்த சம்பவமா?

பாரீஸ் நகரத்தில் தமிழக என்ஜினீயர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம், கொள்ளை முயற்சியில் நடந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தின் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 26).  இவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் எந்திர பொறியியல் படித்து பட்டம் பெற்றுவிட்டு, அங்கேயே என்ஜினீயராக வேலை செய்து வந்தார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இவர் தனது நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காக பாரீஸ் பதினைந்தில் உள்ள 12-ம் எண் மெட்ரோவில் உள்ள வாகிரார்டு மெட்ரோ நிலையத்தில் வந்திறங்கினார்.அப்போது அவர் அந்த மெட்ரோ நிலையத்துக்கு வெளியே நெஞ்சிலும், கழுத்திலும் கத்தியால் குத்தப்பட்டார். ரத்தம் வழிந்து கொண்டிருந்த நிலையில் அப்படியே நண்பரின் வீட்டுக்கு சென்று அழைப்பு மணியை ஒலித்து விட்டு, அங்கு சரிந்து விழுந்து மரணம் அடைந்தார்.அழைப்பு மணி ஓசை கேட்டு வெளியே வந்த அவரது நண்பர், தன்னைக் காண வந்த நண்பர் மணிமாறன் ரத்த வெள்ளத்தில் பிணமாக சரிந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் செய்தார்.  (மேலும்)  25.12..16

_____________________________________________________________________________________________________________________________________

அபிவிருத்தி விஷேட ஏற்பாட்டு சட்டமூலம் ஊவா, வடமத்திய மற்றும் வட மாகாணங்களில் தோல்வியடையும் என்று நாங்கள் ஏற்கனவே கூறினோம்

அபிவிருத்தி விஷேட ஏற்பாட்டு சட்டமூலம் ஊவா, வடமத்திய மற்றும் வட மாகாணங்களில் தோல்வியடையும் என்று தான் ஏற்கனவே கூறியிருந்ததாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா கூறினார்.  ஐக்கிய தேசிய கட்சியின் திட்டப்படி அவ்வாறன ஒன்றை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அனுமதிக்கப் போவதில்லை என்று அவர் மேலும் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியும் இதற்காக ஒப்பந்தம் (டீல்) செய்திருக்கும் பசில் ராஜபக்ஷ குழுவினரும், தம்மை அரசாங்கத்தில் இருந்து நீக்கிவிட்டு தனியாக ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு முயற்சிப்பதாகவும, அவ்வாறான முயற்சிகளுக்கு இடமளிக்க தமது குழு தயாரில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா கூறினார்.

_____________________________________________________________________________________________________________________________________

மாவீரர் துயிலும் இல்லங்கள் புனித பிரதேசங்களாக பிரகடனம்

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லMaveerar-Grave meetingங்களை புனிதப் பிரதேசங்களாக பிரகடனப்படுத்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இன்று (24) இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.அபிவிருத்திக் குழுவின்  இணைத் தலைவர்களான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் மற்றும் ஸ்ரீதரன் ஆகியோரின் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்றது.இதன்போது நீர்ப்பாசனம், கால்நடை உற்பத்தி, உள்ளூராட்சி நகர திட்டமிடல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.உள்ளூராட்சி விடயம் குறித்து ஆராயப்பட்ட போது கிளிநொச்சி மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் பராமரிக்கப்பட்டு அதனை புனித பிரதசேமாக பிரகடனப்படுத்த வேண்டும் என பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால்  முன்மொழியப்பட்டது.அதன்படி முன்மொழிவை ஏற்ற இணைத் தலைமைகள், மாவீரர் துயிலும் இல்லங்களை புனிதப் பிரதேசங்களாக பிரகடனப்படுத்துவதாகவும் அவற்றை பிரதேச சபையினூடாக  பராமரிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

_____________________________________________________________________________________________________________________________________

பிரபாகரனை வெளியேற்ற அமெரிக்கா எடுத்த முயற்சியை இந்தியா எதிர்த்ததுக்கு தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் ஆதரவளித்தார்கள்: சிவசங்கர் மேனன்

                                                  தயான் ஜயதிலக

வருடம் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளபோது ஒருவேளை ஸ்ரீலங்கா தdayan jayatilkeொடர்பான பெரியதொரு புதுக் கதை வெளியாகியுள்ளது. அது சர்வதேச ஊடகங்களில் பெரிதாக இடம் பெற்றிருக்க வேண்டும், ஆனால் அப்படி இடம்பெறாதது ஆச்சரியம் தரவில்லை – என்றாலும் முன்பு ஒருமுறை அது இடம்பெற்றிருக்க வேண்டும். எனினும் மிகவும் அதிர்ச்சி தரும் வகையில் உள்ளுர் ஊடகங்களிலும் அது வெளிவந்திருந்தாலும் அந்தப் பெரிய செய்திக்கு முக்கிய கவனம் வழங்கப்படவில்லை. உதாரணத்திற்கு ஒரு ஒற்றை ஆசிரியத் தலையங்கமோ அல்லது அதைப்பற்றிய ஒரு தனிச் சிறப்பு அம்சமான கட்டுரையோ எழுதப்படவில்லை.  அதைப்பற்றிய பின்னணியினை சிறிது விபரிக்கிறேன். ஸ்ரீலங்காவிலுள்ள முதிர்ந்த அனுபவமுள்ள வெளிநாட்டு செய்தியாளரும் உண்மையான ஸ்ரீலங்காவின்  பழைய பாடசாலையின் தயாரிப்புகளில் ஒருவருமாகிய நியு இந்தியன் எக்ஸ்பிரஸின் செய்தியாளர் பி.கே. பாலச்சந்திரன் அதை வெளிக் கொணர்ந்தார், டெய்லி மிரர் பத்திரிகைதான் அதை ஸ்ரீலங்காவில் முதலில் வெளியிட்டது, ஸ்ரீலங்கா பற்றிய விவகாரங்களை வர்ணிப்பவரும் சிறந்த செய்தியாளர் மற்றும் ஊடகவியலாளருமான டிபிஎஸ் ஜெயராஜ் அவர்கள்தான் அந்தக் கதையை வெளிக் கொணர்ந்தவர்.அந்தக் கதை என்ன? உலகம் என்றுமே அறிந்திராத கொடூரமான பயங்கரவாதி என்று  அந்த நேரத்தில் உலகம் முழுவதும் பேசப்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரனை அமெரிக்கா (மற்றும் நோர்வே) வெளியேற்ற முயற்சி செய்தது உறுதிப்படுத்தப்பட்டது என்பதுதான் அந்தக் கதை.     (மேலும்)  24.12..16

_____________________________________________________________________________________________________________________________________

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன?

- சமஸ்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிந்தைய, கருணாநிதியின் தள்ளாமைக்குப் samasபிந்தைய இந்த இரு வாரக் காட்சிகள் மீண்டும் ஒரு கேள்வியைத் திட்டவட்டமாக எழுப்புகின்றன. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன? மாநில நலன்களை விடுத்து, ஒரு சீட்டு நிறுவனம்போல அவரவர் நலன், பாதுகாப்பு சார்ந்து காய் நகர்த்தும் இந்த அரசாங்கத்தை எதிர்கொள்ளத் தொலைநோக்கும் துடிப்பும் செயலூக்கமும் ஒருங்கமைந்த, மக்களிடம் இடைவிடாது சுழலும் ஒரு தலைவர் இன்று இருக்கிறாரா?  தமிழகத்தின் அடுத்த தலைமுறைத் தலைவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய எழுச்சிக்கு கருணாநிதி, ஜெயலலிதா இருவரின் ஆளுமையும் அரசியலும் தடையாக இருப்பதாக எண்ணிப் புலம்புபவர்கள். இருவரும் நேரடியாக இல்லாத அரசியல் களத்தில் தங்களால் மாயாஜாலங்களை நிகழ்த்திவிட முடியும் என்றும் நம்புபவர்கள். இதோ, அப்படியொரு சூழலும் வந்துவிட்டது. என்ன செய்கிறார்கள் எல்லாம்?ஜெயலலிதா மறைவுக்கு ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிப்பதாக அறிவித்த அவருடைய சொந்தக் கட்சியான அதிமுககூட, ஜெயலலிதா காலமான அடுத்த நிமிடத்திலிருந்து தீவிரமான அரசியல் காட்சிகளை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளோ காலவரையற்ற தூக்கத்தில் மூழ்கியிருக்கின்றன. (மேலும்)  24.12..16

_____________________________________________________________________________________________________________________________________

"புதிய அரசியல் யாப்பு விடயத்தில் அரசியல் தலைமைகளின் அசமந்தம் அபாயகரமானது"

NFGG தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்.

(NFGG  ஊடகப் பிரிவு)

"அரசியல் யாப்புருவாக்க விடயத்தில் சிவில் சமூகம் காட்டிய அக்கறையினையும், பொறுப்புணர்வினையும் கூட முஸ்லிம் அரசியல் கட்சிகளும், பிரதிநிதிகளும் வெளிப்படுத்துவதாக இல்லை. இந்த அசமந்NFGG-Press-Meet-05.08.2015-3தப் போக்கு முஸ்லிம் சமூகத்திற்கு அபாயகரமானது" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி - NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.  தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான் தனதறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:"நமது நாட்டின் எதிர் காலத்தையும், சிறுபான்மை மக்களின் ஒட்டு மொத்த நலன்களையும் நேரடியாக தீர்மானிக்கப் போகின்ற ஒன்றாக புதிய அரசியல் யாப்பு அமையப் போகின்றது.  கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம்  மக்கள் வழங்கிய ஆணையானது வெறுமனே ஆட்சி மாற்றம் ஒன்றிற்காக வழங்கிய  ஆணை கிடையாது. அது இந்நாட்டின் ஆட்சி முறையில் மாற்றம் ஒன்றினை எற்படுத்துவதற்காக வழங்கப்பட்ட ஆணையாகும். அந்த மாற்றத்திற்காக சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும் பங்களிப்புச் செய்திருந்தனர்.   (மேலும்)  24.12..16

_____________________________________________________________________________________________________________________________________

58 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கும் திட்டம் நிறுத்தம்

58 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகைக்கு வாகனங்கள் வழங்கப்படவிருந்த திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார்.பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த அரசாங்கத்திலும் இவ்வாறு வாகனங்கள் வழங்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.இன்று கேட்டேகொட கலப்பு அபிவிருத்தி திட்டத்தில் கலந்து கொண்டிருந்த அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.விஷேட அபிவிருத்தி சட்டமூலம் மாகாண சபைகளில் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சரிடம் வினவியபோது, அது அந்தந்த மாகாண சபைகளின் உரிமைகள் என்றும், அது தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் கூறினார்.   (மேலும்)  24.12..16

_____________________________________________________________________________________________________________________________________

லிபியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தல்; 109 பயணிகள் பத்திரமாக தரையிறங்கினர

மால்டாவில் தரையிறக்கப்பட்ட கடத்தப்பட்ட லிபியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 109 பயணிகள் மற்றும் சில பணியாளர்கள் பத்திரமாக தரையிறங்கினர். libia  லிபியாவில் அதிபராக இருந்து வந்த ஜெனரல் கடாபி 2011-ம் ஆண்டு ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பல்வேறு பிரிவினைவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி, சண்டையிட்டு வருவதால் குழப்பான நிலையானது நீடிக்கிறது. இந்நிலையில் லிபியாவின் ‘ஆப்ரிகியா ஏர்வேஸ்’  விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ-320 ரக விமானம் சபா என்ற இடத்தில் இருந்து தலைநகர் திரிபோலிக்கு காலை உள்ளூர் நேரப்படி 8.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 111 பயணிகளும், 7 சிப்பந்திகளும் பயணம் செய்தனர். அந்த விமானம், காலை 9.20 மணிக்கு திரிபோலி போய் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் இருந்த கடத்தல்காரர்கள் இருவர் விமானத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டி, அதை கடத்தினார்.பின்னர் அந்த விமானம், லிபியாவின் அண்டை நாடான மால்டாவில் உள்ள மத்திய தரைக்கடல் தீவில் தரை இறங்கியது.   (மேலும்)  24.12..16

_____________________________________________________________________________________________________________________________________

வட மாகாண சபையினாலும் நிராகரிக்கப்பட்டது மத்திய அரசின் விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம்

மாகாண சபைகளின் அங்கீகரத்தை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்தினால்npc சமர்பிக்கப்பட்ட அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் வடமாகாண சபையினால் நிராகரிக்கப்பட்டது. வடமாகாண சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக அதனை நிராகரித்ததாக வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கூறினார்.அபிவிருத்தி விசேட ஒழுங்குகள் சட்ட மூலத்திற்கு வட மாகாண சபை தமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு மாகாண சபைகளின் அங்கீகரத்தை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்த நிலையில், சகல மாகாண சபைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடமாகாண சபைக்கும் வடமாகாண ஆளுநர் ஊடாக 14.12.2016ம் திகதி அனுப்பி வைக்கப்பட்டிருந்த சட்டமூலம் இன்றைய தினம் சபையில் உறுப்பினர்களின் கருத்துக்களை அறிவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.ஆளுங்கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்களும் இந்த சட்டமூலத்தை எதிர்ப்பதாக கூறியதுடன், அரசாங்கம் ஒரு கையால் கொடுத்து மற்ற கையால் பிடுங்கும் ஒரு நாடகத்தை ஆடி வருவதாக வடமாகாண சபை குற்றம்சாட்டியுள்ளது.

_____________________________________________________________________________________________________________________________________

ஜனாதிபதி தலைமையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு பான் கீ மூன் பாராட்டு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கையில் சமூக, பொBankeemunருளாதார, மற்றும் அரசியல் ரீதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாராட்டியுள்ளார்.ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி பாராட்டுக்களை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவது வரவேற்கத்தக்க விடயம் எனவும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையை புதிய பாதைக்கு இட்டுச் செல்வதற்கு செய்துள்ள அர்பப்ணிப்புகள் கௌரவிக்கப்பட வேண்டியவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பதவியிலிருந்து விலகினாலும், இலங்கைக்கு தன்னால் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார்.

_____________________________________________________________________________________________________________________________________

ஜெர்மன் பெர்லின் நகர் வாகன தாக்குதலில் ஈடுபட்ட ஐ.எஸ் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் சந்தை இயங்கி வந்தது. இந்த சamir-1ந்தையில் கடந்த  19 ந்தேதி இ கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர்.அப்போது அங்கு உருக்கு உத்திரங்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரிஇ கிறிஸ்துமஸ் சந்தைக்குள் சீறிப்பாய்ந்து ஆட்கள் மீது ஏற்றி சுமார் 80 மீட்டர் தொலைவுக்கு சென்று நின்றது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. லாரி சக்கரங்களுக்கு இடையே சிக்கியவர்கள் அலறித்துடித்தனர். பலர் சக்கரத்துடனே இழுத்துச் செல்லப்பட்டனர். இந்த கோர சம்பவத்தில் 12 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.48 பேர் படுகாயம் அடைந்தனர்.  இந்த செயலுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் தானே முன்வந்து பொறுப்பேற்று கொண்டது.   இந்த  தாக்குதலில் ஈடுப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதியை இத்தாலி போலீசார் சுட்டு கொன்றுள்ளனர்.இந்த நிலையில் அனிஸ் அம்ரி என்னும் அவர் இத்தாலிக்கு தப்பி அங்கு மிலன் நகரில் நேற்று அதிகாலை 3 மணிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது போலீசார் வழக்கமான வாகன சோதனைக்காக அவரது காரை நிறுத்தினர். அப்போது அவர் போலீசாரை நோக்கி கைத்துப்பாக்கியால் சுட்டார். உடனே போலீசார் அவரை சுட்டுக்கொன்றனர்.   (மேலும்)  24.12..16

_____________________________________________________________________________________________________________________________________

2016: பொய்த்துப்போன நம்பிக்கைகள்

கருணாகரன்

கடந்த ஏழு ஆண்டுகளுக்குள் யாருமே நம்ப முடியாத இரண்டு ஆச்சரியங்கள் 2016இலங்கையில் நடந்தன. ஒன்று சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2014 டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்றத்துக்கான ஒப்பிரேஷன். (ஜனாதிபதித்தேர்தல் ஜனவரியிலே நடந்தது) மற்றது அதற்கு முன்பு 2009 இல் புலிகளை முற்றாக அழித்தது.  இரண்டின்போதும் பொதுப்பிம்பம் ஒன்று உருவாக்கப்பட்டது. இனிமேல் இலங்கைத்தீவு சொர்க்கத்தீவாக மாறி விடும் என்ற விதமாக. புலிகளில்லாத இலங்கை என்பது இரத்தவாடை நீங்கி அமைதியும் மகிழ்ச்சியும் நிரம்பிய இலங்கை எனவும் இனி நாடு ஒரு குடையின் கீழே அற்புதமாக மலரும் வாசனையுள்ள தாமரையாகவோ வேறு ஏதோ ஒரு மலராகவோ இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.ஆனால், அப்படியான அதிசயங்கள் எதுவுமே நடக்கவில்லை. வெடிச்சத்தங்களும் குண்டுப்புரளிகளும் பாதுகாப்பு நெருக்கடிகளும் உயிரிழப்பும் இல்லாமற்போனதே தவிர, இடவெளிகளும் முரண்களும் இணக்கமின்மைகளும் போர் உருவாகியதற்கான அடிப்படைக்காரணங்களும் அப்படியேதான் உள்ளன. சுருக்கமாகச் சொன்னால் யுத்தம் முடிந்து விட்டதாக பெரும்பாலான மக்கள் இன்னும் உணரவில்லை. குறிப்பாகச் சிறுபான்மைச் சமூகத்தினர். அதிலும் தமிழர்கள    (மேலும்)  23.12..16

__

Theneehead-1

Vol: 14                                                                                                                                                03.01.2017

dantv