Theneehead-1

                            Vol: 15                                                                                                                23.12.2017

புளொட்: அடையாளத்தை தக்க வைக்குமா?

         கருணாகரன்

“சகிப்புக்கும் பொறுமைக்குமான சர்வதேச விருது” புளொட் (PLOT) என்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துக்கு (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) கிடைக்கவுள்ளSiddharthan_CIது. அந்தளவுக்கு புளொட்டின் சகிப்புணர்வும் பொறுமையும் அரசியற் பரப்பில் காணக்கிடைக்கின்றன. அரசியல் ரீதியாக இன்று புளொட் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகள் சாதாரணமானவை அல்ல. அந்த இயக்கத்தினுடைய - அந்த அரசியற் கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு இன்றைய நெருக்கடிகள் உள்ளன.   உண்மையில் புளொட் மிகச் சாதாரண நிலையில் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாது. அதைப் பதற்றமடையச் செய்யுமளவுக்கான நெருக்கடிகள் இவை. கட்சி திட்டமிட்டுத் தமிழரசுக் உருவாக்கும் நெருக்கடிகளாக இருப்பதால், இந்த இடத்தில் புளொட் எதிர் நடவடிக்கைளுக்குத் தள்ளப்பட்டேயாகும் என்ற நிலை உருவாகியுள்ளது.        (மேலும்)   23.12.2017

____________________________________________________________________________________

முற்றவெளியில் விகாராதிபதியின் உடலத்தை தகனம் செய்ய நீதிமன்றம் அனுமதி

யாழ்ப்பாணம் முற்றவெளியில் விகாராதிபதியின் உடலத்தை தகனம் செய்ய யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதியை வழங்கியிருக்கின்றது.     யாழ்ப்பாணம் ஆரியகvikaapathyுளம் -  நாகவிகரை விகாராதிபதி மரணமான நிலையில் அவரது பூதவுடலை யாழ்ப்பாண முற்றவெளியில் தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.    தனை எதிர்த்து தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்ன சிங்கம் தலைமையில் 12 சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.    இதன்போது விகாராதிபதியின் உடல் தகனம் செய்யப்படும் பகுதியில் கொட்டடி பொது சந்தை, எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் இருப்பதால், அந்த இடத்தில் தகனம் செய்ய கூடாது என சுட்டிக்காட்டியிருந்தனர்     எனினும் இந்த தகன கிரிகையை தடுத்தால் அமைதியின்மை உருவாகும் எனவும், இராணுவத்தினர் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றே இந்த தகனக்கிரியைக்கான ஏற்பாட்டை மேற்கொண்டதாகவும் தெரிவித்தனர்.    இதனையடுத்து இரண்டு தரப்பு கருத்துக்களையும் ஆராய்ந்த நீதிமன்றம் தகன கிரியையை திட்டமிட்டபடி நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

____________________________________________________________________________________

 கக்கன்: அரசியல் நேர்மையின் முகம்

ஆர்.முத்துக்குமார்

நேர்மையான அரசியலின் அடையாளம் என்று தமிழகமே கொண்டாடும் தலைவர் கக்கன். இப்படியொரு தலைவர் தமிழகத்தில் ரத்தமும் சதையுமாக இருந்திருக்கிறார், இயங்கியிருக்கிறாKakkanர் என்று சொன்னால் அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பார்களா என்பது மிகவும் சிரமம்தான். 1909 ஜூன் 18-ல் மதுரை அருகே தும்பைப்பட்டியைச் சேர்ந்த பூசாரி கக்கன் - குப்பி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் கக்கன். ஆம், தந்தைக்கும் மகனுக்கும் ஒரே பெயர். வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை இடையிடையே விட நேர்ந்தது. எனினும், பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பள்ளிப்படிப்பை முடித்தார் கக்கன்.சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்துகொண்டிருந்த காலகட்டம் அது. பள்ளி மாணவரான கக்கனுக்கும் சுதந்திர வேட்கை தொற்றிக்கொண்டது. காந்தியும் காங்கிரஸும்தான் கக்கனுக்கான ஈர்ப்புப் புள்ளிகள். படிக்கும் நேரம் போக எஞ்சிய நேரங்களில் அரசியலில் ஆர்வம் செலுத்தினார். படிப்பு சரியாக வரவில்லை. என்றாலும், கக்கனின் காங்கிரஸ் பாசத்தையும் மக்களுக்குத் தொண்டாற்றும் ஆர்வத்தையும் புரிந்துகொண்ட வைத்தியநாதய்யர், மதுரையில் உள்ள சேவாலயம் என்கிற விடுதியில் காப்பாளர் வேலையைக் கக்கனுக்கு வாங்கிக் கொடுத்தார்.         (மேலும்)   23.12.2017

____________________________________________________________________________________

இலங்கையின் விஷேட குழுவொன்று ரஷ்யா செல்கிறது

ரஷ்யா நாட்டில் இலங்கை தேயிலை தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் இtea exportலங்கையிலிருந்து விசேட குழுவொன்று ரஷ்யா பயணமாகவுள்ளதாக தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய தலைவர் கலாநிதி ஜெயந்த கவரம்மான தெரிவித்தார். ரஷ்யா நாட்டினால் இலங்கை தேயிலைக்கு ஏற்பட்டுள்ள தடை தொடர்பில் தேயிலை சிறுபோக உற்பத்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்   தலாவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய கேட்போர் கூடத்தில் 22.12.2017 இடம்பெற்ற கலந்துரையாடலில் ரஷ்ய நாட்டிற்கு 18 ஆயிரம் மெட்ரிக்டொன் தேயிலை தூள் தாங்கியில் ஒரு வகை பூச்சியினம் இருந்ததையிட்டு தற்காலிக தடையை ரஷ்யா விதித்துள்ளது.      இந் நிலையில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் நவீன் திசாநாயக்க ஆகியோரின் ஆலோனைக்கமைய விசேட குழுவென்று எதிர்வரும் 25 ம் திகதி ரஷ்யா பயணமாகவுள்ளனர்.       தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரி கலாநிதி கீர்த்தி மோட்டி உட்பட ஆய்வு குழுவொன்று இவ்வாறு பயணமாகவுள்ளது.

____________________________________________________________________________________

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும் அரசியல் வாரிசுகளும் களத்தில்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சில மாகாண சபை உறுப்பினர்கள் பதவிகளை இராஜினாமா செய்து களமிறங்குகின்ற அதேவேளை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும் களத்தில் குதித்துள்ளனர்.    இம்முறை தேர்தலில் அரசியல் வாரிசுகளின் அறிமுகங்களும் இடம்பெறுகின்றன.வட மாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட், தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு யாழ். மாநகர சபைத் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன் ஒருங்கிணைந்த முற்போக்கு கூட்டணி சார்பில் கொழும்பு மாநகர சபை தேர்தலில் மேயர் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார்.முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாவிதன் பிரதேச சபையில் போட்டியிடுகின்றார்.     (மேலும்)  23.12.2017

____________________________________________________________________________________

எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் வைத்தியசாலையில்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரா சம்பந்தன் வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுகயீனமுற்றிருந்த நிலையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக அதிகமாக பணியாற்றியதாலேயே உடல் நலம் குன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     ுகோணமலையில் வைத்து எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் சகயீனமுற்றதாகவும். மிகவும் கடினமான நிலையிலேயே கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரா சம்பந்தன் தற்பொழுது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் எதிர் கட்சி தலைவர் இன்றைய தினம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில் சுகயீனமுற்றமையினால் குறித்த பயணமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

____________________________________________________________________________________

பரந்தன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி - பூநகரி பரந்தன் வீதியில் நேற்று (22) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதுடன், மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.    சாவகச்சேரியில் இருந்து பூநகரி ஊடாக பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், பரந்தன் பகுதியிலிருந்து பூநகரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    ற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிசைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

____________________________________________________________________________________

தமிழ் பேசும் இஸ்லாமியர்களால் தயாரித்து வழங்கப்படும் இரு வானொலி நிகழ்ச்சிகள் ஒரு கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

தாய்மொழியை பேசுவதற்கு கூச்சப்பட்டுக்கொண்டு ஆங்கில மோகத்தில் டாம்பீகமாக வாழ்ந்து வருபவர்கள் அதிகம். அந்நிய நாடுகளுக்குச் சென்ற சிலருக்கு தனது சொந்த நFINAL-BGாட்டின் பெயரை சொல்தற்கே வெட்கம். அப்படிச் சென்று அங்கு தொழில் புரிபவர்கள் மத்தியில் ஒரு சிலர் சொந்த பந்தங்களை அனுசரித்துப் போவதும் அரிது.    தையெல்லாம் தாண்டி, நாடுவிட்டு நாடு சென்று கடந்த வருடங்களாக பெரும்பாலும் ஆங்கிலம் பேசும் நாடான அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தாலும் தமிழ் மீது, தான் கொண்ட பற்றினால் தமிழ் வளர்க்கும் வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரித்து, இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சியாக அதை மெருகேற்றி, உள்நாட்டுக் கலைஞர்கள் பலருக்கும் களம் அமைத்துக் கொடுத்து உதவி செய்து வருகின்றார் அவுஸ்திரேலியாவிலிருந்து தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்கள்.     (மேலும்)   23.12.2017

____________________________________________________________________________________

ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்கா முடிவு: இந்தியா உள்பட 127 நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களிப்பு

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவை ஐ.நா.சபையின் பொதுக்குழு நிராகரித்து விட்டது. jeru1      ஜெருசலேமை தமது நாட்டின் தலைநகராக பிரகடனப்படுத்தியது இஸ்ரேல். இதற்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. அத்துடன் டெல் அவிவ்- நகரத்தில் உள்ள தமது நாட்டின் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றுவோம் எனவும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஜெருசலேம் குறித்து ஐநா.சபையின் பொதுக்குழு வாக்கெடுப்பு நடத்தியது. ஐ.நா.வில் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளுக்கு பொருளாதார உதவிகள் கிடைக்காது என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.       (மேலும்)   22..12.2017

____________________________________________________________________________________

படித்தோம் சொல்கின்றோம்:

சிவனுமனோஹரனின் ' மீன்களைத் தின்ற ஆறு'

விளிம்பு நிலை மாந்தரின் விழுமியங்களை சித்திரிக்கும் சிறுகதைகள்
பசுமைபோர்த்திய மலையகத்தில் நீறு பூத்த அக்கினிக்குஞ்சுகள்

                                                                     முருகபூபதி

இலங்கைத்தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்ததை அறிநsivano்ததும், இலங்கை அரசு பதறிக்கொண்டு தனது பிரதிநிதிகளை அங்கு அனுப்புவதற்கும் தயாராகிக்கொண்டிருக்கிறது.    இதற்கான அமைச்சர் செய்தியாளர் மாநாடு நடத்துகிறார். ஜனாதிபதியும் ரஷ்ய அதிபர் புடினுக்கு கடிதம் எழுதுகிறார்.    லங்கை மலையக மக்களின் உதிரமும் வியர்வையும் கலந்ததுதான் நாம் அருந்தும் சுவையான தேநீர். ஏற்றுமதி செய்யப்பட்ட பொதிக்குள் வண்டு வந்துவிட்டதால் அது எந்த நாட்டின் வண்டு என்ற ஆராய்ச்சி வேறு நடக்கிறது. அஸ்பஸ்டஸ் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடைவிதித்தமையால்தான் ரஷ்யா இலங்கைத்தேயிலையை வாங்குவதை நிறுத்த முயற்சிக்கிறது என்றும் செய்திகள் கசிகின்றன.இந்தப்பதற்றம்,  நூற்றாண்டு காலமாக அந்த மலைகளில் அட்டைக்கடிகளுக்கு மத்தியில் ஒரு அறை மாத்திரமே கொண்ட லயன் காம்பராக்களில் குடித்தனம் நடத்தும்,  பிரசவம் பார்க்கும், வசதிக்குறைவுடன் வாழ்க்கை நடத்தும், மண்சரிவு அபாயங்களை சந்திக்கும், இலங்கைக்கான அந்நியசெலாவணியை ஈட்டித்தரும் அம்மக்கள் குறித்து, மாறி மாறி பதவிக்கு வந்த அரசுகளுக்கு என்றைக்குமே வந்ததில்லை.        (மேலும்)   22..12.2017

____________________________________________________________________________________

 நேபாளம் வானில் ஒரு சிவப்பு நட்சத்திரம்

-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

நேபாளத்தில் நேபாளம் கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைக்கப்பட்ட மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியும், நேபாளம் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட் மைய) கட்சியும் இணைந்த கூட்டணிக்கு நடைnepal com.partyபெற்ற கூட்டாட்சி மற்றும் மாகாணங்களுக்கான தேர்தல்களில்  மாபெரும் வெற்றி கிடைத்திருப்பது, நேபாளத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் வளர்ச்சிப் போக்காகும். இவ்வெற்றியானது தெற்காசியா முழுவதுமே அது எதிரொலித்திடும்.    கம்யூனிஸ்ட் கூட்டணி, 2015 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட புதிய அரசமைப்புச்சட்டத்தின்கீழ் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் ஒரு தீர்மானகரமான பெரும்பான்மையை வென்றிருக்கிறது.  2008இல் புதிய அரசியல் நிர்ணயசபை அமைக்கப்பட்ட பின்னர், கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்போடு ஏராளமான அரசாங்கங்கள் ஆட்சியிலிருந்திருக்கின்றன. ஆனால், இப்போதுதான் முதன்முறையாக முழுமையாக ஓர் இடதுசாரி அரசாங்கம் அமைய இருக்கிறது. நேபாளத்தின் இரு பெரிய இடதுசாரிக் கட்சிகளான, நேபாளம் கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைக்கப்பட்ட மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியும், நேபாளம் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட் மைய) கட்சியும் [CPN (UML) மற்றும் CPN (MC)] கூட்டணி அமைத்ததன் மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது.      (மேலும்)   22..12.2017

____________________________________________________________________________________

யாழ். நாக விகாரை விகாராதிபதியின் உடலை தகனம் செய்வது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்

யாழ். நாகவிகாரபதியின் உடலை, தமிழராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபி மற்றும் முனியப்பர் ஆலயத்திற்கு அருகாமையில் அடக்muniyapparகம் செய்வதற்கு பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை தடை செய்யுமாறு யாழ். மாநகர சபை மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு கடிதம் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடல் தகனம் செய்வது என்பது தமிழ் மக்களது உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும். அத்துடன் இந்துக்கள் மரணமடையும் உடல்களை அதற்காக ஒதுக்கப்பட்ட மயாணங்களில் தான் தகனம் செய்கின்றார்கள். பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் இந்து ஆலயங்களுக்கு அருகில் சடலங்களை தகனம் செய்வதில்லை.       (மேலும்)   22..12.2017

____________________________________________________________________________________

நாடளாவிய ரீதியில் விசேட பஸ் சேவைகளை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட பஸ் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தது.   எதிர்வரும் ஜனவரி 03 ஆம் திகதி வரை இந்த விசேட சேவை நடைமுறைபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் டி. ஏ. சந்திரசிரி தெரிவித்தார்.     இதற்கென 150 இற்கும் மேற்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.     இதேவேளை, கத்தோலிக்கர்கள் அதிகமாக வாழும் வத்தளை, ஜா -எல, நீர்கொழும்பு, வெலிசர, சிலாபம், களுத்தறை மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளுக்கு அதிகமான பஸ்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக டி. ஏ. சந்திரசிரி சுட்டிக்காட்டினார்.

____________________________________________________________________________________

ஆஸ்திரேலியாவில் பாதசாரிகள் மீது கார் தாக்குதல்: இந்தியர் உள்பட 19 பேர் காயம்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், பாதசாரிகள் மீது வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட கார் மோதல் தாக்குதலில் இந்தியர் உள்பட 19 பேர் காயமடைந்தனர்.melporn car       காயமடைந்தவர்களில் 4 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது:மெல்போர்ன் நகர சாலைச் சந்திப்பின் ஓரம் நின்று கொண்டிருந்த வெள்ளை நிற பெரிய வகைக் கார், திடீரென சாலையைக் கடந்து கொண்டிருந்தவர்கள் மீது வேண்டுமென்றே மோதுமாறு வேகமாக ஓட்டிச் செல்லப்பட்டது.அந்தக் காரில் இரண்டு பேர் இருந்தனர். சாலை விளக்கில் சிகப்பு ஒளிரும்வரை காத்திருந்த அந்தக் காரின் ஓட்டுநர், பாதசாரிகள் சாலையைக் கடக்கத் தொடங்கியதும் தனது காரை வேகமாக ஓட்டிச் சென்றார் என்று கூறினர்.இதுகுறித்து விக்டோரியா மாகாண காவல் துறையினர் கூறுகையில், இந்தத் தாக்குதல் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டிருந்தாலும், இதை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருத முடியாது எனவும், இது தொடர்பாக நடைபெறும் விசாரணைக்குப் பிறகு அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.         (மேலும்)   22..12.2017

____________________________________________________________________________________

GCE A/L பரீட்சை பெறுபேறுகள் வௌியாகும் திகதி அறிவிப்பு

2017ம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் திகதி வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.         கடந்த ஓகஸ்ட் 8ம் திகதி முதல் செப்டம்பர் 4ம் திகதி வரை இடம்பெற்ற உயர்தரப்பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 37 ஆயிரத்து 943 பேர் உள்வாங்கப்பட்டனர்.         தேவேளை , 77ஆயிரத்து 284 தனியார் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றியமை குறிப்பிடத்தக்கது.நாடாளாவிய ரீதியில் 2230 மத்திய நிலையங்கள் மற்றும் 305 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களின் கீழ் இந்த பரீட்சை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

____________________________________________________________________________________

எமது மக்களுக்குப் பாதிப்பினையும் இந்தியாவுடனான முரண்பாட்டையும் ஏற்படுத்தும் வகையில் இலங்கை அரசு நடந்து கொள்ளக் கூடாது!

எமது நாட்டில் ஏற்படவிருக்கும் மின் தட்டுப்பாட்டினை முன்வைத்து, திருகோணமலை மாவட்டத்தில் அனல் மின் நிலையத்தினை அமைப்பது தொடர்பிலான திட்டமானது, அப்பகுதி வாழ் மக்களுக்கdoiglasு சூழல் ரீதியலான பாதிப்பினை உண்டு பண்ணும் அதே நேரம், எமது அயலக நட்பு நாடான இந்தியாவுடன் வீண் முரண்பாட்டினை ஏற்படுத்தும் என்பதால் இத்தகைய திட்டங்கள் தொடர்பில் அவதானங்களை செலுத்துவதிலிருந்து இலங்கை அரசு தவிர்ந்து கொள்ள வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்த காலத்தில் திருகோணமலைஇ சாம்பூர் பகுதியில் அனல் மின்நிலையத் திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோது, அப்பகுதி பொது மக்களும், சூழலியலாளர்களும், அதனது பாதிப்பு தொடர்பில் தங்களது எதிர்ப்புகளை பாரியளவில் வெளிக்காட்டியிருந்தனர். இதன் காரணமாகவேஇ மேற்படி முயற்சியை மேற்கொண்டிருந்த இந்திய அரசுடன் இலங்கை அரசு சாதகமாகக் கலந்துரையாடியதால், இத் திட்டம் கைவிடப்பட்டிருந்தது.     (மேலும்)   22..12.2017

____________________________________________________________________________________

தேர்தல் விதிகளை மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை

உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது தேர்தலுக்கான நியதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.    இதற்கமைய தேர்தல் விதிகள் குறித்து அனைத்து கட்சியின் தலைதை;துவத்திற்கும் சுற்றறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ேர்தல் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.      மேலும் தேர்தல் பிரசாரம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுமாயின் பாரபட்சம் பாராது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் கண்காணிப்பு நிலையம் அறிவித்துள்ளது.

____________________________________________________________________________________

யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் இருதய சத்திரசிகிச்சை வெற்றி

யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் நடத்தப்பட்ட திறந்த இருதய சத்திர சிகிச்சையொன்று வெற்றி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    போதனா மருத்துமனையின் விசேட மருத்துவ நிபுணர்களால் நேற்று முன்தினம் (20) மேற்கொள்ளப்பட்ட இருதய சத்திரசிகிச்சையே இவ்வாறு வெற்றியளித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வவுனியாவைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவருக்கே குறித்த சத்திரசிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.     சத்திரசிகிச்சையின் பின்னர் அவர் மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் நலமாக இருப்பதாக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் எம்.சத்தியமூர்த்தி தெரிவித்ததாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

____________________________________________________________________________________

இலங்கை உள்ளூராட்சி தேர்தல்களின் தேசிய முக்கியத்துவம்

வீரகத்தி தனபாலசிங்கம் மூத்த பத்திரிகையாளர்

 

இலங்கையில் 2018 பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களில் municipal election1போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. இரண்டரை வருடங்களுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டுவந்த இந்த தேர்தல்கள் ஒரு பொதுத் தேர்தலுக்குரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.      ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இயங்கிவரும் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் மீதான நாட்டு மக்களின் தற்போதைய அபிப்ராயத்தை அளவிடுவதற்கான ஒரு பரீட்சையாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது. மேலும், பழைய வட்டார ரீதியான தேர்தல் முறையும் விகிதாசாரத் தேர்தல் முறையும் கலந்த புதிய முறையொன்று பரீட்சித்துப் பார்க்கப்படவிருக்கின்ற முதல் சந்தர்ப்பமாகவும் உள்ளூராட்சித் தேர்தல்கள் அமைவதால் அவை கூடுதல்முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.    (மேலும்)   21..12.2017

____________________________________________________________________________________

வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் மழை: கடும் காற்றினால் மன்னாரில் வீடுகள் சேதம்

வட கிழக்கு பருவப்பெயர்ச்சியினால் வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைweatherக்களம் எதிர்வுகூறியுள்ளது.   இந்நிலையில், நேற்று (19) முதல் வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.மன்னார் – மாந்தை மேற்கு, தேவன்பிட்டி கிராமத்தில் நேற்று மாலை வீசிய கடும் காற்றினால் வீடுகள் சில சேதமடைந்துள்ளன.இதன்போது, 13 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வை.எம்.எஸ் தேசப்பிரிய குறிப்பிட்டார். இந்த வீடுகளின் சேத விபரங்கள் தொடர்பான மதிப்பீடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.  (மேலும்)  21..12.2017

____________________________________________________________________________________

ஜெயிக்குமா 'புதினிஸம்'? 

 சு. வெங்கடேஸ்வரன்  | 

சர்வதேச அளவில் சரிந்து கிடந்த ரஷியாவின் செல்வாக்கை மீட்டெடுத்தவர் அதிபர் விளாதிமிர் புதின் என்பதில் மாற்றுக் கருத்துகள் எதுவும் இருக்க முடியாது. இப்போதும் ரஷியாputin1வின் முகமாக அறியப்படும் ஒரே தலைவர் புதின் மட்டுமே.    1999-ஆம் ஆண்டில் முதல்முறையாக பிரதமராகப் பதவியேற்றதில் இருந்து இப்போது வரை சுமார் 18 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமர், அதிபர் என பதவியை மாற்றி, ரஷியாவில் அதிகாரத்தைத் தொடர்ந்து தன் கையில் வைத்துள்ளார். ரஷிய உளவுத்துறையான கேஜிபி-யில் 16 ஆண்டுகள் பணியாற்றியதும், அதன் பிறகு அரசியலில் களமிறங்கி எதிர்கொண்ட அனுபவங்களும்தான் புதினை சாமர்த்தியமான அரசியல் தலைவராக மாற்றியுள்ளது. கேஜிபி-யில் தன்னுடன் பணியாற்றிய திமித்ரி மெத்வதேவ் உள்ளிட்ட நம்பிக்கைக்குரியவர்களை மட்டுமே அரசியலில் தன்னருகில் வைத்துள்ளார்.   'புதின் சர்வாதிகாரியுமல்ல, கம்யூனிஸவாதியுமல்ல, ரஷியாவில் ஒற்றை அதிகார மையத்தைக் கொண்ட ஜனநாயகத்தை வடிவமைத்தவர்' என்று ஆதரவாளர்களால் புகழப்படுபவர்.     (மேலும்)  21..12.2017

____________________________________________________________________________________

 கனவு தேசம்  - ரஸ்சியப் பயணக்குறிப்புகள்

நோயல் நடேசன்

ஹெல்சிங்கியில் இருந்து மூன்று மணி நேரத்தில் எம்முடனிருந்த ஐம்பது பேருடன் பஸ் சென்ட் பீட்டர்ஸ்பேக் அடைந்தது. ரஸ்சிய எல்லையில் எங்கள் கடவுச்சீட்டுகள் பரிசோதிக்கrussiaப்பட்டன. எமது வழிகாட்டியான வெரோனிக்கா முப்பது வருடங்களாக ரஸ்சியாவிற்கு வந்து போவதோடு ரஸ்சிய மொழியையும் தெரிந்தவர். சோவியத் யூனியன் இருந்த காலத்தில் தரைபாதையால் செல்லும்போது மூன்று இடங்களில் இறக்கி ஏற்றுவார்கள் என்றார். எங்கள் பஸ்சை மூன்று இடத்தில் மறித்தாலும ஒரு இடத்தில் மட்டும் எம்மை இறக்கிப்பாஸ்போட்டைப் பரிசோதித்தார்கள். மற்றைய இடத்தில் பஸ்சின் உள்ளே வந்து பாஸ்போட்டை வாங்கிப் பார்த்துவிட்டுத்தந்தார்கள். கடைசியாக ஒரு இடத்தில் எதுவும் கேட்காமல் சாரதியிடம் பேசிவிட்டு வாகனத்தடையை உயர்த்திஅனுமதித்தார்கள்.இதைத்தான் அக்காலத்தில் இரும்புத்திரை என்றார்களா?     (மேலும்)   21..12.2017

____________________________________________________________________________________

இலங்கை தலைநகரில் புத்தாண்டு முதல் பிச்சை எடுக்கத் தடை!

இலங்கையின் தலைநகரான கொழும்பு முழுவதும் வருகிற 2018-ம் ஆண்டு ஜனவரstreet beggerி மாதம் 1-ந் தேதி முதல் பிச்சை எடுக்க நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை இலங்கையின் வளர்ச்சி மேம்பாட்டுத்துறை அமைச்சர் சம்பிகா ரணவகா வெளியிட்டார்.     இதுதொடர்பாக அவர் கூறியதாவது:சூழ்நிலை காரணமாக இங்கு பிச்சை எடுப்பவர்களிடம் அன்புடனும், கனிவுடனும் நடந்துகொள்வதில் உறுதியாக இருக்கிறோம். மாறாக இதையே தொழிலாக வைத்துள்ளவர்கள் வேறு வேலையை தேடிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்கள் கண்டறியப்பட்டால் தக்க தண்டனை வழங்கப்படும். முதல்கட்டமாக பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக கல்வி வசதி ஏற்படுத்தித் தரப்படும். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும         (மேலும்)  21..12.2017

____________________________________________________________________________________

யாழ். மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளது

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் jaffna districtஇன்றைய தினம் (21) அதிகரிக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.    யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.     ுறிப்பாக இந்த உள்ளுராட்சி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கு அதிகளவான கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.      அதனால் அதிகளவானோர் வேட்புமனுவினை தாக்கல் செய்ய வருவார்கள் எனவும் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.     (மேலும்)   21..12.2017

____________________________________________________________________________________

புத்தளத்தில் இளம் தாய் எரியூட்டிக் கொலை: சந்தேகநபரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

புத்தளத்தில் இளம் தாய் ஒருவர் எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.          சம்பவம் தொடர்பான வழக்கு புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் லக்மால் விக்ரமசூரிய முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.        வழக்கு தொடர்பான ஆவணங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பான பரிந்துரைகள் கிடைக்காமையால் சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய , சந்தேகநபரை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

____________________________________________________________________________________

வியாபார நிலையம் உடைத்து பணம், பொருள் கொள்ளை ; வவுனியாவில் சம்பவம்

வவுனியா, தோணிக்கல் ஆலடிப்பகுதியிலுள்ள வியாபார நிலையமொன்றை உடைத்து அங்கிருந்து பணம், பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.    சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது,        நாம் நேற்று இரவு 9.20 மணியளவில் வியாபார நிலையத்தினை மூடிவிட்டுச் சென்றோம். இன்று காலை 7 மணியளவில் கடையைத்திறப்பதற்குச் சென்றபோது கடை உடைக்கப்பட்டு திருட்டு போயுள்ளமை தெரியவந்துள்ளது.   இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம் என்று வியாபார நிலைய உரிமையாளர் தெரிவித்தார்.  வவுனியாவில் நேற்று மழையுடனான கால நிலையைப் பயன்படுத்தி திருடர்கள் கடையை உடைத்து பணம், பொருட்கள் என்பனவற்றை திருடிச் சென்றுள்ளதாகவும் கடையில் நேற்று இடம்பெற்ற வியாபாரத்தால் கிடைத்த பணமும் அங்கர் போன்ற பால்மா பொருட்களையுமே திருடர்கள் திருடிச் சென்றுள்ளதாக வியாபார நிலைய உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.   இந்நிலையில், முறைப்பாட்டையடுத்து பொலிசார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.    குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லையென்பது குறிபபிடத்தக்கது.

____________________________________________________________________________________

மெழுகுதிரி சின்னத்தில் தமிழ் சமூக ஜனநாயகக் கட்சி போட்டியிடுகிறது

உள்ளூராட்சி மன்ற தேர்தலானது ஜெனிவா சம்பந்தப்பட்டதோ காணாமல் போனோvarathar3ர் சம்பந்தப்பட்டதோ அரசியல் கைதிகள் சம்பந்தப்பட்டதோ அல்லது அரசியல் தீர்வு சம்பந்தப்பட்டதோ அல்ல என முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.   மட்டக்களப்பு பாலமீன்மடுவில் உள்ள அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் செயலாளர் சிறிதரன், மட்டக்களப்பு மாநகரசபை வேட்பாளர் குகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி சபை என்பது நுளம்புகளை ஒழிப்பதற்கான சபையாகும். நல்ல தண்ணீர், நல்ல வீதிகள் கொடுப்பதற்கான சபையாகும். எங்களுடைய நகரங்களையும் பிரதேசங்களையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பதே உள்ளூராட்சி மன்றங்களின் கடமையாகும்.   (மேலும்)  20..12.2017

____________________________________________________________________________________

தேர்தல்கள்: தெரிவுகள் மேற்கொள்வது, குணாதிசயங்களை வெளிப்படுத்துவது

                                               தயான் ஜயதிலகா

ராஜபக்ஸவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுனராக இருந்தபோது, நடந்த மத்திய வங்கி பிணைமுறிகள் வினியோகம் தொdayanடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா ஒரு ஆணைக்குழுவை நியமிக்க விரும்புகிறார். உண்மையில் நல்லது மிகவும் சிறப்பானது. அவர் விசாரணையை நடத்துவதற்கு பரிந்துரை செய்யவேண்டிய ஒரு பெரிய விடயம் என்னிடம் உள்ளது. அது உயர் அரசாங்கப் பதவி வகிக்கும் தீவினைக்கு அஞ்சாத ஒரு கெட்ட மனிதரைப்பற்றியது அவர் ஒரு ஒற்றை நடவடிக்கை மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களை மரணம், அங்கவீனம் மற்றும் துயரங்களில் இருந்து முன்கூட்டியே காப்பாற்றி இருக்கலாம் - அந்த நடவடிக்கையை அவர் செய்யவேண்டிய அவசியம் இல்லை ஆனால் அதற்கு அனுமதி அளித்து அல்லது தடுக்காமல் இருந்திருக்கலாம். ஒரு அப்பாவியான மனிதர் துன்பம் அனுபவிப்பதையும் மற்றும் கொடூர மரணம் அடைவதையும் தன்னால் தடுக்க முடிந்தபோதும் அப்படிச் செய்யாமல் தவறுபவர் எவரும் ஒரு குற்றவாளி மற்றும் தீமையான மனிதர். ஒரு நீண்ட இரத்தக்களரி இடம்பெறுவதையும் மற்றும் ஒரு அரக்கனால் அப்பாவிகள் படுகொலை செய்யப்படுவதையும்  முடிவுக்கு கொண்டுவர அல்லது அதைக் குறைக்கும்; தகுதி பெற்ற எவரும் அதைச்செய்யாமல் செயலிழக்க அனுமதிப்பதன் மூலம் ஒரு பொறுப்பற்ற மனிதர் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்.       (மேலும்)  20..12.2017

____________________________________________________________________________________

" இனிவரும் சனிமாலை சந்திக்கும் வரை இங்கித வந்தனங்கள் தந்து விடைபெறுவது சண்முகநாதன் வாசுதேவன்"

புத்தாண்டு மலரும் வேளையில் சொல்லாமல் விடைபெற்ற எனதருமை "மச்சான் " வானொலிக்கலைஞன்

                                                                முருகபூபதி

"சோகங்கள் கதையாகிச் சோர்வு எனை வாட்டும்போது
தாகமெனைத்தழுவுவதால் நாடுகிறேன் போதையினைshan
 பாவங்கள் சுமையாகிப் பலவீனம் சேரும்போது
பாவி நான் தேடுகின்றேன் மரணத்தின் தேவனை
கடந்தவைகள் மறந்தபோது காலங்கள் சென்றபோது
காசுபணம் சேரும்போது - மீண்டும்
கல்லறையால் எழும்புகிறேன்
சில்லறையாய் மாறுகிறேன்"

இப்படி ஒரு கவிதையை  03-07 - 1975  ஆம் திகதி எழுதிய கவிஞன் 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டான்.       ஈழத்து கவிஞி சிவரமணி, தமிழகக்கவிஞர் ஆத்மநாம் வரிசையில் அவுஸ்திரேலியாவில் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் தனக்குத்தானே தூக்கிட்டு மறைந்த எனது இனிய நண்பன் சண்முகநாதன் வாசுதேவன் எங்களைவிட்டுப்பிரிந்து 24 வருடங்களாகின்றன.    (மேலும்)   20..12.2017

____________________________________________________________________________________

கிளிநொச்சியில்  மு. சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பாக வேட்பு மனுத் தாக்கல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பாக சுயேட்சை  குழுவே   தனது வேட்பு மனுவை kili election தாக்கல் செய்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி , பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைளுக்கும்  மேற்படி குழு சுயேட்சை போட்டியிடுகின்றது. வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார்   மக்கள் ஒரு வினைத்திறன் மிக்க பிரதேச சபையை ஏற்படுத்த விரும்புகின்றனர். கடந்த காலங்கள் போன்று  பிரதேச சபைகளின் செயற்பாடுகள் இருக்க கூடாது என மக்கள் விரும்புகின்றனர்  எனவே தான் அவர்கள்  இந்த முறை தங்களின் வட்டாரங்களிலிருந்து சிறந்த மக்கள் பணியாற்றக் கூடிய பிரதிநிதிகளை எமக்கு தெரிவு செய்து வழங்கியுள்ளனா். எனவே நாம் பிரதேச  சபைகளின்  அதிகாரத்திற்கு வருகின்ற போது மக்களின் விருப்பத்திற்கு அமைவாக வினைதிறன் உள்ள சபையாக மாற்றி செயற்படுத்தி காட்வோம் எனத் தெரிவித்த அவர் கடந்தகாலத்தில் மாவட்டத்தில் எங்களுடைய செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக இருந்ததன் காரணமாகவே  மக்கள் மத்தியில் எமக்கான  ஆதரவு தளமும் அதிகம் காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

____________________________________________________________________________________

நியாயம் கேட்டதற்காக அவதூறு செய்தி வெளியிட்ட யாழ் தினக்குரல் பத்திரிகையின் செயல் கவலைக்குரியது! வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

பாதிக்கப்பட்ட மக்களிற்காக மக்கள் பிரதிநிதியாக நியாயம் கேட்ட காரணத்திற்காக அவதூறு செய்தி வெளியிட்ட யாழ் தினக்குரல் பத்திரிகையின் செயல் மிகவும் கவலைananthi sasitharanக்குரியது என்பதை மிக வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.      “வடக்கு கூட்டுறவு அமைச்சர் அனந்திக்கு வந்த ஆசை - வேலை பறிபோன பாதுகாப்பு உத்தியோகத்தர்” என்ற தலைப்பிட்டு 17.12.2017 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பத்திரிகையின் முன்பக்க செய்தியாக யாழ் தினக்குரல் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியானது அடிப்படை ஆதாரம் ஏதுமற்றதென்பதுடன், அரச திணைக்களத்தில் பணியாற்றும் ஒருவருக்கு மக்களுடன் பழகும் முறைபற்றி எடுத்துக் கூறியதற்காக என்னை தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதற்காக பிரசுரிக்கப்பட்டதாகவே நான் கருதுகின்றேன்.      கடந்த வாரம் வட மாகாண பிரதம செயலாளர் அவர்களை சந்திப்பதற்காக பிரதம செயலாளர் செயலகத்திற்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்னிடம் பண்பற்று ஒருமையில் பேசியிருந்தார்.      (மேலும்)   20..12.2017

____________________________________________________________________________________

யாழ்ப்பாணத்திலுள்ள வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு: புளொட் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் கைது

யாழ். நகரிலுள்ள வீடொன்றிலிருந்து சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.plote     சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்டவர் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 55 வயதான, புளொட் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆயுதங்கள் மீட்கப்பட்ட வீடு புளொட் இயக்கத்தின் அலுவலகமாக ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.     எனினும், வீட்டின் உரிமையாளர் வௌிநாட்டில் உள்ளதுடன், அதனை மீட்டுத்தருமாறு வீட்டு உரிமையாளரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த வழக்கின் நிமித்தம் விசாரணைகளுக்காக வீட்டை சோதனையிட்ட போதே அங்கிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.     (மேலும்)  20..12.2017

____________________________________________________________________________________

இராமநாதபுரத்தில் நிலத்திற்கடியில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்கை வரலாறு தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.


வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்கை வரலாறு தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.praba4      தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு அடங்கிய இறுவட்டுக்கள் சில மீட்கப்பட்டுள்ளன.   கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியிலேயே நிலத்திற்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.குறித்த இடத்தில் விடுதலை புலிகளின் முகாம் ஒன்று காணப்பட்டதாகவும், யுத்தம் நிறைவு பெற்றதை தொடர்ந்து குறித்த பகுதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.     (மேலும்)   20..12.2017

____________________________________________________________________________________

மருந்துப் பொருட்களின் விலை 5 வீதத்தால் அதிகரிப்பு

மருந்துப் பொருட்களின் விலையை 5 வீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.slmedicine        அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், உலக சந்தையில் மருந்துப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், இறக்குமதியாளர்களுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக மருந்துகளின் விலையை அதிகரிக்க நேர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஔடதங்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் வர்த்தக சங்கம் என்பனவற்றின் கோரிக்கைக்கு அமைய தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், ஔடதங்களின் விலையை 5 வீதத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.       (மேலும்)   20..12.2017

____________________________________________________________________________________

வவுனதீவில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கைக்குண்டுகள்

வவுனதீவு - பாவக்குடிச்சேனை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் 18 கைக்குண்டுகள் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.        இவற்றில் எஸ்.எப்.ஜி 87 வர்க்க கைக்குண்டுகள் 13ம், என்.ஆர்.423 வர்க்க கைக்குண்டுகள் இரண்டும், டீ 82 ரக கைக் குண்டு ஒன்றும், கே.400 ரக கைக்குண்டு ஒன்றும் உள்ளன. அத்துடன், வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட பெயர் தெரியாத கைக்குண்டு ஒன்றும் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகள் மேலதிக விசாரணைகளுக்காக வவுனதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

____________________________________________________________________________________

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் 2,000 கையடக்க தொலைபேசிகள் பறிமுதல்

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் 2,000 கையடக்க தொலைபேசிகள் இன்று காலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சீனா மற்றும் டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த மூன்று இலங்கை பிரஜைகளிடமிருந்து கைப்பற்றப்ப்டடுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி குறித்த கையடக்க தொலைபேசிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

____________________________________________________________________________________

தமிழ் கட்சிகளும் தேர்தல்கால கூத்துகளும்

           கருணாகரன்

தேர்தல் காலங்களில்தான் அதிகமான அரசியல்தரப்புகளின் உண்மையானtamil political p முகம் வெளித்தெரியும் என்று சொல்வார்கள். இது நூறு வீத உண்மை. இந்த அனுபவம் வாசகர்களாகவும் வாக்காளர்களாகவும் இருக்கும் உங்களுக்கும் நிச்சயமாக ஏற்பட்டிருக்கும்.   தேர்தல் அறிவிப்பு வந்த கையோடு ஒவ்வொரு அரசியற் தரப்பினரும் படுகின்ற பாடுகளையும் அடிக்கிற கூத்துகளையும் பார்த்தால், சிரிப்புச் சிரிப்பாகவே வருகிறது. சிரிப்பு மட்டுமல்ல, கோபமும் கூட வருகிறது. ஒரு தேர்தலுக்காக, அது தருகின்ற பதவிகளுக்காக இந்தளவுக்குச் சின்னத்தனமாகச் சீரழிந்திருக்கிறார்களே என்று நினைக்கச் சிரிப்பு வருகிறது.தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சனங்களை எப்படியெல்லாம் ஏமாற்றலாம், சனங்களுக்கு எதைப்பற்றியும் எப்படியும் சொல்லலாம், என்று மிகச் சாதாரணமாகவே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது கோபம் வருகிறது. அதிலும் மிகப் பெரிய உயிர்த்தியாகங்களைச் செய்த மக்களை இப்படி ஏமாற்ற முற்படுகிறார்களே!     (மேலும்)   19..12.2017

____________________________________________________________________________________

மோடியின் சர்வாதிகாரப்போக்கு மேலும் அதிகரிக்கும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

குஜராத், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாலcm1், பிரதமர் மோடியின் சர்வாதிகாரப்போக்கு மேலும் அதிகரிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் எஸ்.சுதாகர் ரெட்டி கூறினார்.  இதுதொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது:குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள போதிலும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இந்தத் தேர்தலில் பாஜகவை மதச்சார்பற்ற சக்திகளால் வெல்ல முடியாதது வருத்தம் அளிக்கிறது.மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடுவதற்கு, பாஜகவுக்கு எதிரான சக்திகள் ஒன்றிணைய வேண்டும். மதச்சார்பற்ற சக்திகள் மேலும் வலிமையுடனும், ஒற்றுமையுடனும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றி மூலம், பிரதமர் மோடியின் சர்வாதிகாரப் போக்கு மேலும் அதிகரிக்கக் கூடும். ஆனால், அது இந்திய ஜனநாயகத்துக்கு நல்ல அறிகுறி அல்ல. பாஜகவும் தனது ஹிந்துத்துவக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்த முயலும் என்றார் அவர்.     (மேலும்)   19..12.2017

____________________________________________________________________________________

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இருந்து  விலகியது தமிழீழ மக்கள் விடுதலை கழகம்

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ப்ளொட் என்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஒதுங்கியுள்ளது.     இந்த உள்ளாட்சி மன்றங்களின் ஆசனப் பங்கீடு தொடர்பில், இலங்கை தமிழரசு கட்சியுடன், டெலோ மற்றும் பளொட் ஆகிய கட்சிகள் முன்னர் இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தன.       இதன்படி உள்ளாட்சி சபையில் தலைவராக பதவி வகிக்கக்கப் போகும் தமிழரசு கட்சிக்கு 60 சதவீத ஆசனங்களும், ஏனைய இரண்டு கட்சிகளுக்கும் தலா 20சதவீத ஆசனங்களும் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் இன்று குறித்த இரண்டு கட்சிகளுக்கும் கிளிநொச்சியில் உள்ள கரைச்சி, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளில் தலா ஒரு ஆசனமே வழங்கப்படும் என்று தமிழரசு கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.      (மேலும்)   19..12.2017

____________________________________________________________________________________

முல்லைத்தீவில் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று வாரங்களில் 9 பேர் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் பரவி வரும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று வாரங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்..  முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக்காலமாக இன்புளுயன்சா வைரஸ் காய்யச்சல் பரவி வருகின்றது இந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலைக்கு வருபவர்களுக்கு இந்த விடயம் தொடர்பில் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் கடந்த 11 ஆம் திகதி வரை காய்ச்சல் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் .        (மேலும்)   19..12.2017

____________________________________________________________________________________

மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இமானுவேல் ஆனொல்ட் பதவி விலகல்

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வடக்கு மாarnoldகாண சபை உறுப்பினர் இமானுவேல் ஆனொல்ட் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.    இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்... தனது பதவி விலகல் கடிதத்தை வடக்கு மாகாண சபை உறுப்பினா் இமானுவேல் ஆனொல்ட் கடந்த 14ஆம் திகதி உத்தியோகபூர்வமாக எம்மிடம் கையளித்துள்ளார். பதவி விலகல் முறைப்படியாக எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் ஆணையாளருக்கு முறைப்படி இவ் பதவி விலகல் தொடர்பான அறிவித்தலை அனுப்பி வைக்குமாறு பேரவை செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளேன். அதன் படி இமானுவேல் ஆனொல்ட் பதவி விலகல் தொடர்பான கடிதம் இன்று தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.      (மேலும்)   19..12.2017

____________________________________________________________________________________

கிளிநொச்சியில் உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து

கிளிநொச்சி ஏ.9 வீதியின் ஆனையிறவு தட்டுவன் கொட்டி பகுதியில் இடbikeaccidentம்பெற்ற விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.  கிளிநொச்சியிலிருந்து தட்டுவன்கொட்டி நோக்கி பயணித்த உந்துருளி ஒன்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் பயணித்த உந்துருளி ஒன்றும் மோதிக்கொண்டதினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.  இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.     இதன்போது உயிரிழந்தவர்கள் கிளிநொச்சி மற்றும் கரவெட்டியை சேர்ந்த 28 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

____________________________________________________________________________________

வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சுமார் 100 தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன

வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சுமார் 100 தனியார் பஸ்கள் கொழும்பிலிருந்து தூர பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.     கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் பயணிக்கும் பஸ்களில் சுமார் 30 பஸ்கள் வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடுவதாக சபையின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.         குறித்த வீதி மார்க்கத்தில் அமைந்துள்ள சில பொலிஸ் நிலையங்களின் உதவியுடன், சாரதிகள் வீதி அனுமதிப்பத்திரமின்றி பயணிப்பமதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், வீதி அனுமதி பத்திரமின்றி இயங்கும் பஸ்களை சுற்றிவளைப்பதில் சிரமங்கள் காணப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை மேலும் தெரிவித்துள்ளது.

____________________________________________________________________________________

இளைஞர்களின் எழுச்சி மாகாண ஆட்சியாளர்களுக்கும்   பாடமாக அமைய வேண்டும்!

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் இளைஞர் யுவதிகள் வேலைdouglas-1வாய்ப்புகளில் மத்திய அரசைப் போன்றே, மாகாண அரசினாலும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர். இதற்கெதிராக எமது இளைஞர்கள் - யுவதிகள் கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்த முயற்சிகள் மற்றும் போராட்டங்கள் மத்திய அரசைப் போன்றே மாகாண அரசினாலும் புறந்தள்ளப்பட்டிருந்த நிலையையே காணக்கூடியதாக இருந்தது. இந்த நிலையில், சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக மீண்டும் எமது இளைஞர், யுவதிகளை தூண்டிவிட்டு, அதன் மூலமாக குளிர்காய முயலாமல், இன்றைய மத்திய மற்றும் மாகாண ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள், வடக்கு மாகாண இளைஞர், யுவதிகளது முக்கியப் பிரச்சினையாகவுள்ள வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்வர வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.     (மேலும்)   19.12.2017

____________________________________________________________________________________

மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு

நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக, இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.     மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களை முன்னிருத்தியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, கூட்டமைப்பின் அமைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டுள்ளார். கடந்த 9 நாட்களாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ள போதும், அதற்கு உரிய தீர்வு அளிப்பதில் அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளதாகவும், ஆகவே வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

____________________________________________________________________________________

முறைப்பாடுகளை பொறுப்பேற்க தனி அலுவலகம்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக தேர்தல்கள் செயலகத்தில் தனியான அலுவலகமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.    மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் இதனை தெரிவித்துள்ளார்.    எதிர்காலத்தில் மாவட்ட செயலக மட்டத்திலும் இவ்வாறான அலுவலகங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.     வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள் இரண்டு கட்டமாக இடம்பெற்றாலும் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒரே தினத்திலேயே இடம்பெறும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.      அத்துடன், தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

____________________________________________________________________________________

மக்கள் விரோத அரசியல் =  பதவி மோகக் காய்ச்சல்

        -  கருணாகரன்

ஆறு நாட்களாக மருத்துவமனையிலிருந்ததால், வெளித்தொடர்புகளில்லாமல், ஒருவாரம் கழிந்து விட்டது. தற்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அறிவதற்காகத் தொலைtna3க்காட்சியை இயக்கியபோது, சிவாஜிலிங்கம் பேசிக் கொண்டிருந்தார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை எந்தச் சக்திகளாலும் உடைத்து விடவோ சிதைத்து விடவோ முடியாது. மக்கள் எப்போதும் எங்களோடுதான் நிற்பார்கள். பொறுத்திருந்து பாருங்கள். இதைத் தேர்தல் முடிவுகள் சொல்லும். அப்பொழுது எதிர்க்கட்சிகளுக்கெல்லாம் விளங்கும்” என்று ஏதொவெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்.   மீண்டும் மருத்துவமனைக்கே போகவேண்டும் போலிருந்தது. அதை விடச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. இந்தாள் என்ன பேசுகிறார் என்று உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?ஏனென்றால், ஒரு வாரத்துக்கு முன்பு “கூட்டமைப்பை விட்டு விலகுகிறோம்” என்று ஊடகங்களில் சொல்லிக் கொண்டு திரிந்தது இதே சிவாஜிலிங்கமும் ஸ்ரீகாந்தவுமே. இருவரும் ஏதோ தெருவில் நின்று மாபிள் விளையாடிக் கொண்டிருக்கும் சின்னப்பெடியள் அல்ல. ரெலோவின் உயர் மட்டத்தலைவர்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியொன்றின் முக்கியஸ்தர்கள். சிவாஜிலிங்கம் வடமாகாணசபை உறுப்பினர். ஸ்ரீகாந்தா ரெலோவின் செயலாளர்.    (மேலும்)   18.12.2017

____________________________________________________________________________________

 மௌனித்துவிட்ட  கலகக்குரல் : கவிஞர்  ஏ. இக்பால்  ( 1938 - 2017 ) நினைவுகள்

  கிழக்கிலங்கையிலிருந்து தென்னிலங்கை வரையில்  வியாபித்து  இலக்கிய கலகம் நிகழ்த்திய படைப்பாளி

                                                                    முருகபூபதி

நானறிந்தவரையில் இலங்கையில் பல படைப்பாளிகள் ஆசிரியர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். இவர்களில் சிலர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள்,  பல்கலைக்கழகங்iqbalகள் ஆகியன வற்றில் விரிவுரையாளர்களாகவும், இலக்கியத்துறை சார்ந்த  கலாநிதிகளாகவும் பேராசிரியர்களாகவும் கல்விப்பணிப்பாளர்களாகவும், கல்வி அதிகாரிகளாகவும் திகழ்ந்திருக்கிறார்கள்.      அதனால் இத்தகைய  படைப்பாளிகளிடம் கல்வி கற்ற மாணவர்களும் பின்னாளில் படைப்பாளிகளாகவும் கலைஞர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள்.     அந்தவகையில் இந்தப்பதிவில் சொல்லப்படும் ஏ. இக்பால் அவர்கள் ஆசிரிய பெருந்தகைகளால் வளர்க்கப்பட்ட படைப்பாளியாக மாத்திரம் திகழவில்லை, இவரும் தமது மாணவர்கள் சிலரை படைப்பாளியாக்கியிருக்கிறார்.இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும்போது நண்பரும் பத்திரிகையாளருமான தெய்வீகன் எனக்கு ஒரு குறிப்பை அனுப்பியிருந்தார்.    அதனை பொருத்தம் கருதி இங்கு குறிப்பிடுகின்றேன்.       (மேலும்)   18.12.2017

____________________________________________________________________________________

ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் முகாமைத்துவத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தல்

புதிய முகாமைத்துவத்தின் கீழ் ஶ்ரீலங்கா விமான நிறுவனம் மீள் புனரமைக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவன தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.srilankan_airlines[1]        தற்போது நிலவும் முகாமைத்துவத்தின் கீழ் நிறுவனத்தை புனரமைத்தால் எதிர்ப்பார்க்கும் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாது போகும் என விமான ஓட்டிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் தனது நண்பரை சிங்கப்பூரிலிருந்து வரவழைத்து மத்திய வங்கிக்கு தலைவராக்கியமையால் அது அழிவுக்குள்ளானது.    தற்போது விமான நிறுவனத்தை அழிவுக்கு உள்ளாக்குவதற்கு தனது நண்பனான சரித்த ரக்வத்தவின் மகனான சுரேன் ரக்வத்தவை பிரதான நிறைவேற்று அதிகாரியாக நியமித்துள்ளார்.நட்பின் நிமித்தமே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.       (மேலும்)   18.12.2017

____________________________________________________________________________________

போதைப்பொருட்கள் தொடர்பான குற்றச் செயல்கள் குறித்து கைதானவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி

போதைப்பொருட்கள் தொடர்பான குற்றச் செயல்கள் குறித்து கடந்த 2016 ஆம் ஆண்டில் 79 ஆயிரத்து 378 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர மருத்துவ கட்டுப்பாட்டுச் சdrugs2பை தெரிவித்துள்ளது. தேசிய அபாயகர ஒமருத்துவ கட்டுப்பாட்டுச் சபையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  2015 ஆம் ஆண்டு போதைப்பொருட்கள் தொடர்பான குற்றச் செயல்கள்  தொடர்பில் 82 ஆயிரத்து 482 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.       2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2016 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 சத வீத வீழ்ச்சியை காட்டியுள்ளதாக தேசிய அபாயகர மருத்துவ ் கட்டுப்பாட்டுச் சபை குறிப்பிட்டுள்ளது.   35 வீதமானோர் ஹெரோயின் தொடர்பான குற்றங்களுக்காகவும், 60 வீதமானோர் கஞ்சா போதை வஸ்த்து தொடர்பான குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.    (மேலும்)   18.12.2017

____________________________________________________________________________________

'புலம் பெயர் சுதந்திர எழுத்துக்களும் தமிழ்ச் சமுதாய மாற்றமும்'

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-16.12.17.

தோழர்; திரு பரா குமாரசுவாமி அவர்களின் பத்தாவது ஆண்டின் நினைவாக:

எழுத்துக்கள் என்பன,அவை கதைகள்; கட்டுரைகள் அல்லது கவிதைகளாகவிருக்கலாம்,எழுதப்பட்ட அந்த எழுத்துக்கள் பல, அந்த எழுத்துக்குரியவன் வாழ்ந்த காலத்தின் சரித்திரத்தைpara ஏதோ ஒரு வகையில் பிரதிபலிக்கிறது என்பது எனது அபிப்பிராயம். ஏனென்றால் எனது எழுத்துக்கள் அதாவது சிறுகதைகளும் நாவல்களும் ஒரு நாளும் அப்பட்டமான கற்பனையான காதற் கதைகளைச் சொல்லவில்லை. அவற்றைப் படித்தவர்களுக்கு கடந்த ஐம்பது வருடங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினை மட்டுமன்றி உலகு சார்ந்த பல பிரச்சினைகளம் எனது கதைப் பொருட்களாக அமைந்திருப்பது தெரியும்.   அவை சமுதாயத்தில் நடக்கும் பல விதமான மனித நேயத்திற்கு எதிரான விடயங்களில் கண்டு கொதித்த துயரில், ஆத்திரத்தில், தவிப்பில்,உண்டானவை. புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இருந்த கருத்துச் சுதந்திரம் எழுத்தை எங்கள் ஆயதமாகப் பாவித்து அடக்குமுறைக்குச் சவால் விட்டன.அந்தத் தூய்மையான சுய சிந்தனையின் துடிப்பால் இலக்கியத்துடன் பரிச்சியமானவர் மறைந்து விட்ட எங்கள் நண்பர் பராராஜசிங்கம் அவர்கள்.     (மேலும்)   18.12.2017

____________________________________________________________________________________

யாழ்பாணம் மந்திகையில் வீடு புகுந்து கொள்ளை

யாழ்ப்பாணம் பருத்திதுறை மந்திகை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் தங்காபரணங்கள் மற்றும் பணத்தினை கொள்ளையிட்டுள்ளனர்.    நேற்று நள்ளிரவு 12.30 அளவில் வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத குழுவினர், வீட்டு உரிமையாளர்களை மிரட்டி தங்காபரணங்களையும் பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முகமூடியணிந்து வந்த இருவர் கூரிய ஆயுதம் மற்றும் பொல்லுகளை காட்டி மிரட்டல் விடுத்துள்ளர். 13 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான சுமார் 30 பவுண் தங்காபரணங்களும் 40 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.   சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

____________________________________________________________________________________

இலங்கைத் தேயிலைக்கு ரஷ்யா விதித்த தடை

இலங்கையின் தேயிலைக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை தொடர்பான பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக, பெsl teaருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.இன்று (17) நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,    இலங்கையின் தேயிலைக்கு கெப்ரா என்ற வண்டுகள் காரணமாக ரஷ்யா தடைவிதித்துள்ளமை புதுமையான விடயம். விசேடமாக தானிய உரத்துடன் தொடர்புபட்ட வண்டு இனம் இது. பொதியிடலின் போது இந்த வண்டுகள் கலந்துள்ளன என கூறப்பட்டுள்ளது.     (மேலும்)   18.12.2017

____________________________________________________________________________________

காணாமல் போன கடற்தொழிலாளர் மீட்பு

மன்னார் பேசாலை கடற்பரப்பில் காணாமல் போன கடற்தொழிலாளர்களில் ஒருவர் இராமேஸ்வரம் கடல்பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.     மன்னார் பேசாலை பகுதியில் இருந்து நேற்று காலை கடற்தொழிலுக்காக சென்ற இரு கடற்தொழிலாளர்கள், வீடு திரும்பவில்லை என அவர்களது உறவினர்களால் பேசாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டது.  இந்தநிலையில், அவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளான நிலையில் அவர்களில் ஒருவர் இராமேஸ்வரம் கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்டு, இராமேஸ்வரம் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை தெரிவியவந்துள்ளது.  இருப்பினும் கடற்தொழிலுக்காக சென்றவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 வயதுடையவரே காணாமல் போயுள்ளார். அவரை தேடுப்பணி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேசாலை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

____________________________________________________________________________________

மனிதநேயம் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது!

                                      நந்தக்க மதுரங்க குலகம்பிட்டிய

ஸ்ரீலங்கா பல்கலைக்கழகங்களில் உள்ள கல்வித்துறைகள் மற்றும் திட்டங்கள் கடந்த நான்கு தசாப்தங்களாக சமூகத்திற்குப் பொருத்தமான இடங்களை உற்பத்தி செய்வதிuni students1ல் தோல்வி அடைந்துள்ளதாக  மனிதநேய கண்ணோட்டத்தில் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அந்தத் துறைகளுக்கும் மற்றும் கல்வித்திட்டங்களுக்கும் எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் முதன்மையாக அவர்களின் கண்ணோட்டம் விஞ்ஞ}ன ரீதியானது என்கிற (தவறான) கருப்பொருளின் அடிப்படையில் உள்ளதாகச் சொல்கின்றன. சமூகத்தின் உற்பத்தி நடவடிக்கைகளில் பங்கெடுக்கத் தவறுபவர்கள் மற்றும் அதற்கு சற்றும் பொருத்தமில்லாத தனிநபர்கள் ஆகியோரை உருவாக்கும் இடைவெளிகளையே அவர்கள் பெரும்பாலும் காண்கிறார்கள். அந்தத் துறைகள் மற்றும் திட்டங்களில் உள்ள கல்வியாளர்கள் எப்போதும் இயக்கபூர்வமாக உள்ள சமூக யதார்த்தங்களுடன் தொடர்பு அற்றவர்களாகவும், மாற்றத்தை எதிர்க்கும் பிற்போக்கான சிந்தனை உள்ளவர்களாகவும், மற்றும் தங்கள் பழமையான பாணி மற்றும் அவர்களின் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்கு உள்ளாகும் வகையான காலத்துக்கு ஒவ்வாத தரங்;களை போதிக்கும் சாய்வு நாற்காலி கல்வியாளர்களாகவே உள்ளார்கள்.     (மேலும்)   17.12.2017

____________________________________________________________________________________

பயணக் குறிப்பு -ஹெல்சிங்கி

நோயல் நடேசன்

பின்லாந்து,பல நூற்றாண்டு காலமாக சுவிடனின் அரசின் கீழ் இருந்தது. சுவீடன் 1809 ரஸ்சிய அரசால் தோற்கடிக்கப்பட்டதும் பின்லாந்து, ரஸ்சிய சாமராச்சியத்தின் ஒரு பகுதியாகியது. 1917 இரஸ்சியாவில் போல்சிவிக் ஆட்சிக்கு வந்ததும், பின்லாந்து சுதந்திரமானதாக அறிவிக்கப்பட்டாலும் அங்கு மக்கள் யுத்தம் (Civil War) கம்யூனிஸ்ட்  சார்பானவர்களுக்கும், எதிரானவர்களுக்குமிடையே நடந்து இறுதியில் finland5எதிரானவர்கள் வென்றார்கள். பிற்காலத்தில் இரஸ்சியாவுடன் மூன்று மாதம் போர் நடந்தது. இரண்டாவது உலக யுத்தத்தில் ஜெர்மனிக்கு ஆதரவாக இருந்த நாடுகளில் பின்லாந்தும் ஒன்று. நாஜி படைகளுடன் ஒன்றிணைந்து ரஸ்சியா மீது படையெடுத்தார்கள். இது அறியாத விடயம் மட்டுமல்ல மேற்கு நாடுகள் பேசாத விடயம்.    பின்லாந்து மொழி ஸ்கண்டிநேவிய நாடுகளில் பேசப்படும் மொழியில் இருந்து மாறுபட்டது. பல்கேரிய மொழியை சகோதர மொழியாகக்கொண்டது( தமிழும் மலையாளமும்போல) இப்பொழுது இரஸ்சியப் பகுதியான, யூரல் மலை அடிவாரம் மற்றும் வல்கா நதிக்கரை அருகிலுள்ள பகுதியில் இருந்து வந்த மக்கள் என நம்பப்படுகிறது. இதனால் யுராலி(Uralic) மொழிக்குடும்பம் என்பார்கள். பின்லாந்து கல்விக்கு சிறப்பானது. 7 வயதிலே குழந்தைகள் பாடசாலை செல்வதும் முக்கியமானது. இலத்திரன் துறைசார்நத தொழில்களில் சிறப்படைந்த நாடு    (மேலும்)   17.12.2017

____________________________________________________________________________________

யாழ்ப்பாணத்தில் உணவு திருவிழா ஆரம்பம்

யாழ்ப்பாண மாவட்ட சுற்றுலா ஒன்றியம் - யாழ். மாவட்ட இராணுவ தலைமையகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் யாழ். முற்றவெளி திடலில் உணவு திருவிழா நேற்று ஆரம்பிjaffna foodக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நாள் நிகழ்வில், பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே உணவுத் திருவிழாவைத் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.    மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இந்த உணவுத் திருவிழாவில் ஒன்பது மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் பிரசித்தி பெற்ற சுவை மிக்க உணவுகளை யாழ்.நகரில் ஒன்றாக சுவைக்க யாழ்ப்பாணம் சுவை உதயம் என்னும் பெயரில் இந்த உணவு கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.      (மேலும்)   17.12.2017

____________________________________________________________________________________

தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் பட்டியிலில் கையொப்பமிட்டிருந்த 7 பேர் விலகல்

சாவகச்சேரி நகரசபை தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் பட்டியிலில் கையொப்பமிட்டிருந்த 7 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.    இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மற்றும் செயலாளருக்கு முகவரியிட்ட கடிதத்தினை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் கந்தையா அருந்தவபாலனிடம் கையளித்துள்ளனர்.    இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவில் கையெழுத்திட்ட வேட்பாளர்களில் 7 வேட்பாளர்களே தமது விலகல் கடிதத்தினை கையளித்துள்ளனர். சாவகச்சேரி நகர சபைக்கான தமது கட்சியின் வேட்புமனுப் பட்டியல் தயாரிப்பின் போது கபடநோக்குடன் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளை மறைத்து தம்மிடம் கையொப்பம் பெறப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

____________________________________________________________________________________

முதலமைச்சரின் காணிப் பிணக்கு கூட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் புறக்கணித்துள்ளனர்

வட மாகாணத்தில் காணி பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காக முதலமைசcm jaffna்சரும், மாகாண காணி அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரன் ஒழுங்கமைத்த கூட்டத்தில் பல பிரதேச செயலர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     மாகாணத்தில் உள்ள அரச காணிகள் தொடர்பான பிணக்குகள் மற்றும் மக்களுடைய காணிகளை வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் போன்றன அபகரிப்பதனால் எழும் பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காகவே இன்றைய கூட்டம் முதலமைச்சரினால் ஒழுங்கமைக்கப்பட்டது.     எனினும், பல பிரதேச செயலர்கள் மற்றும் வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மாகாணத்தில் உள்ள காணி பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காக இந்த கூட்டத்தை ஒழுங்மைத்திருந்தோம்.    (மேலும்)   17.12.2017

____________________________________________________________________________________

 லண்டனில் தமிழ் நாடகத்தின் எதிர்காலம்:

தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தின் இவ்வருட நாடகவிழா குறித்து ஒரு உரையாடல்

-மகாலிங்கம் கௌரீஸ்வரன்

சிறுவர்களும் இளையோரும் இணைந்து நடத்திய தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தின் 2017 லண்டன் தமிழ் நாடக விழாவை முன்வைத்து ஒரு கலந்துரையாடல் 02/12/2017 அன்றavai2ு நடைபெற்றது. "பரமார்த்த குருவும் சீடர்களும்", "புதிய பயணம்", "யுகதர்மம்" என்னும் நாடகங்களும்; "கான சாகரம்" இசை நிகழ்ச்சியும் இடம் பெற்ற நிகழ்வு குறித்து கலா ரசிகர்களும்,இலக்கியவாதிகளும் ,அரங்கேறியவர்களும், அவர்களின் பெற்றோரும், ஆர்வலர்களும், அவைக்காற்று கலைக் கழகத்தினரும் அளவளாவிக் கொண்டனர். கருத்துக்கள், கேள்விகள், கேள்விகளிற்கான மறுமொழிகள், ஆலோசனைகள் என பயன் தரும் வகையில் உரையாடல்கள் நிகழ்ந்தன.    அனைவரும் வட்டமாக அமர்ந்திருந்து உரையாடல்களின் பங்கு கொண்டனர்."பரமார்த்த குருவும் சீடர்களும்" நாடகத்தை வயது மிகக் குறைந்த சிறுவர்களைக் கொண்டு மிக நேர்த்தியாக அரங்காடியமை குறித்து பலரும் பாராட்டினார்கள்.     (மேலும்)   17.12.2017

____________________________________________________________________________________

தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பியவர்கள் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்

தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பிய இலங்கை அகதிகளுக்கான குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.    தாயகம் திரும்பியுள்ள அகதிகளில் 21 வயதைப் பூர்த்தி செய்த, தமிழகத்தில் பிறந்தவர்களுக்கான இலங்கை குடியுரிமையைப் பெறுவதற்கு அபராதம் செலுத்த வேண்டியுள்ளதாக ஈழ அகதிகள் மறுவாழ்வு மையத்தின் பொருளாளர் எஸ்.சி.சந்திரஹாசன் தெரிவித்தார்.     சுமார் 25,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.     இதேவேளை, தமிழகத்திலுள்ள 107 முகாம்களில் சுமார் 63,000 இலங்கை அகதிகள் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

____________________________________________________________________________________

அமெரிக்க டொலரை கடத்தி செல்ல முற்பட்ட இலங்கையர் கைது

30 லட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலரை கடத்திச் செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான  நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.     இதன்போது அவரிடம் இருந்த 20 ஆயிரம் அமெரிக்க டொலர்களை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர் 48 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.     இன்று காலை சீனா நோக்கி பயணமாகவிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.    இந்த நிலையில், அவருக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

____________________________________________________________________________________

பொற்கனவுகளும் கோபுர நம்பிக்கைகளும்”?

           கருணாகரன்

தமிழ் அரசியற் களம் குளம்பிக் கிடக்கிறது. சரியாகச் சொன்னால், சந்தி சிரிக்கிற அளவுக்கு வந்துள்ளது. தமிழ் மக்கள் கொண்டிருந்த “பொற்கனவுகளும் கோபுர நம்பிக்கைகelection boxளும்” உடைந்த கண்ணாடித் துண்டுகளாகச் சிதறிக்கின்றன.  இதற்குக் காரணம், தனியே அரசியற் கட்சிகளின் தவறுகள் மட்டுமல்ல. மக்களுடைய தவறுகளும்தான். மக்களுக்கும் அரசியற் சக்திகளுக்கும் இடையில் ஊடாட்டமாக இருக்கும் புத்திஜீவிகள், பல்கலைக்கழகம் போன்ற சமூக நிறுவனங்கள், மதத் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளுமைகள் என்ற அனைவருடையதும்தான். ஆகவே எல்லோரும் ஆளை ஆள் பார்த்துச் சிரிக்க வேண்டியதுதான்.   இப்படி சகல தரப்பின் தொடர் தவறுகளின் திரண்ட வடிவமே இன்றைய அவல நிலையாகும். ஆகவே இது ஏதோ தேர்தல்கால பிணக்குகள் என்று யாரும் தவறாகக் கணிப்பிட வேண்டாம். நீண்ட காலமாகத் திரண்டு வளர்ந்த தவறுகள், பிழைகளின் வளர்ச்சியடைந்த வடிவமே இது. இதை இப்பொழுதாவது, திருத்திக் கொள்ளவில்லை என்றால், இன்னும் இன்னும் மோசமான – கீழ் நிலைக்கே தமிழரின் அரசியல் செல்லும்.    (மேலும்)   16.12.2017

____________________________________________________________________________________

இலங்கையிலிருந்து தேயிலை இறக்குமதி செய்வதை நிறுத்த ரஷ்யா தீர்மானம்


இலங்கையிலிருந்து தேயிலை கொள்வனவு செய்வதை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் இடைநிறுத்த ரஷ்யா தீர்மானித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வௌியிட்டுள்ளது.   நாட்டிலிருந்துtea export ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைப் பக்கெட் ஒன்றுக்குள் வண்டு ஒன்று இருந்ததாக தெரிவித்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இலங்கையின் தேயிலையை இறக்குமதி செய்வதில் ரஷ்யாவும் துருக்கியும் முன்னணி நாடுகளாக உள்ளன.   இலங்கை தேயிலைச் சபையின் அறிக்கைக்கு அமைய, வருடத்தின் முதல் 09 மாத காலப்பகுதிக்குள் துருக்கி 27 மில்லியன் கிலோகிராம் தேயிலையை இலங்கையிலிருந்து இறக்குமதி செய்துள்ளது.   அத்துடன், அதனால் நாட்டிற்குக் கிடைத்த வருமானம் 19.8 பில்லியன் ருபாவாகும்.    735 ரூபாவிற்கு ஒரு கிலோ தேயிலை கொள்வனவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது    எனினும், ரஷ்யா ஒரு கிலோ தேயிலையை 783 ரூபாவிற்கு கொள்வனவு செய்து வந்ததாக இலங்கை தேயிலைச்சபை தெரிவித்தது.

____________________________________________________________________________________

யுத்த இழப்புகளும் யுத்த சூழ்நிலையில் சிறார்கள் அனுபவித்த துன்பியல் வடுக்களை சுமந்த ஓவியக்கண்காட்சி

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக்கழக கற்புல தொழிநுட்பத்துறையில் , இறுதி ஆண்டில் கல்விகற்கும்batti-vive மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட ஓவியங்களைக் காட்சிப்படுத்தும் நிகழ்வுகள் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது.      அந்த வகையில் குறித்த பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்கும் சிந்துசா தவதத்தினத்தின் கைவண்ணத்தில் உருவான INFINITY PAINTING  கடந்த யுத்த இழப்புகளும் யுத்த சூழ்நிலையில் சிறார்கள் அனுபவித்த துன்பியல் வடுக்களை சுமந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தும் ஓவியக்கண்காட்சி இன்று மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் கண்காட்சி மண்டபத்தில் நடைபெற்றது.     இந் நிகழ்வில் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி ஜெயசங்கர். விரிவுரையாளர்களான புஸ்பகாந்தன், மோகனதாஸ், செந்தூரன், பிரியதர்சினி, பீ.ரூபநீதன் திவ்யரூபசர்மா, அசல்யா, மற்றும் கல்லூரியின் மாணவர்களும் நண்பர்களும் கலந்துகொண்டு கண்காட்சியை சிறப்பித்தனர்.    குறித்த கண்காட்சி எதிர்வரும் ( திங்கள் செவ்வாய் ஆகிய தினங்களிலும்) 18, 19 ஆகிய திகதிகளிலும் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

____________________________________________________________________________________

நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்த பெண்ணுக்கு வீடமைத்து கொடுத்து நெகிழ்வூட்டிய பொலிஸார்

கணவனை இழந்த நிலையில் நான்கு பிள்ளைகளை பெரும் வறுமைக்கு மத்தியில் வளர்த்து வந்த ஒரு தாயின் நிலையை உணர்ந்த சமூக நலன் விரும்பிகள் சிலர் அவருக்கு வீடொன்றைhelp அமைத்துக் கொடுத்துள்ளனர்.    அந்த குடும்பம் வாழ்வதற்கு மனையும் வாழ்வாதாரத்திற்கு கோழி பண்ணையும் அமைத்துக் கொடுத்த அனைவரையும் நெகிழ்வூட்டும் நிகழ்வு மஸ்கெலியா முள்ளுகாமம் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையுடன் கணவனை இழந்த நிலையில் வசிப்பிடமின்றி தொழிலின்றி பெரும் துன்பத்தில் வாழ்ந்துவந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு மத்திய மாகாண சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் உதவியுடன் வசிப்பிடத்துடன் வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.    (மேலும்)   16.12.2017

____________________________________________________________________________________

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று நாட்டிற்கு திருப்பியனுப்பப்பட்ட 29 பேர் விளக்கமறியலில்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற குற்றச்சாட்டில் மீண்டும் நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை பிரஜைகள் 29 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.         இவர்களை இன்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.    சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்று அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட 29 இலங்கையர்களுடன் விசேட விமானமொன்று நேற்று (14) நாட்டை வந்தடைந்தது.            இவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குகின்றனர்.    நாடு கடத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

____________________________________________________________________________________

ரஷியாவில் மார்ச் 18 அதிபர் தேர்தல்: 4-ஆவது முறையாக புதின் போட்டி

ரஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் 18-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.putin-      ரஷிய நாடாளுமன்ற மேலவையில் இது தொடர்பான தீர்மானம் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. தீர்மான நிறைவேற்றம் ஒரு சம்பிரதாயமான வழக்கம் என்றாலும் கூட, அந்நாட்டு அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் அதிகாரபூர்வமாகத் தொடங்கியதற்கு இது அறிகுறியாகும்.அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதாக புதின் அண்மையில் அறிவித்திருந்தார். எந்தக் கட்சியையும் சாராமல் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக வியாழக்கிழமை நடைபெற்ற சர்வதேச செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்திருந்தார்.நான்காவது முறையாக அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் எல்லை மாகாணங்களில் ஆதிக்கம், கிரீமியா கையகப்படுத்தியது,       (மேலும்)   16.12.2017

____________________________________________________________________________________

கோட்டாபயவை கைது செய்வதற்கான இடைக்கால தடை மேலும் நீடிப்பு

பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவே எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.     அவர் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கே குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

____________________________________________________________________________________

கோரிக்கைக்கு ஏற்ப ஆசனப்பங்கீடு இடம்பெறாவிட்டால் தேர்தலிலிருந்து விலகுவோம்: த.வி.இயக்கம்

திருகோணமலை நகரசபைத் தேர்தலில் தமது கோரிக்கைக்கேற்ப ஆசனப் பங்கீடு மேற்கொள்ளப்படாவிட்டால், குறித்த நகர சபைக்கான தேர்தலில் இருந்து விலகவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.    இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் திருகோணமலை நகர சபைத் தேர்தலில் டெலோ சார்பில் இரு வேட்பாளர்களுக்கான ஆசன ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில்      இணக்கம் காணப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் ந.ஶ்ரீகாந்தா தெரிவித்தார்.      எனினும், தற்போது தமது கட்சிக்கு ஒரு ஆசனத்தினை வழங்குவதாக இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.    திருகோணமலை நகர சபை தேர்தலில் ஒரு ஆசனம் மாத்திரம் வழங்கப்படுமாயின் அந்த நகரசபைத் தேர்தலில் தமீழீழ விடுதலை இயக்கம் போட்டியிடாது என ந.ஶ்ரீகாந்தா தெரிவித்தார்.

____________________________________________________________________________________

ஊழல் மீதான தாக்குதல்கள் ஜனநாயகத்தின் அடித்தளம்

ஸ்ரீலங்காவில் ஊழல், விசேடமாக அரசியல் ஊழல் தொடர்ந்து புற்றுநோயைப் போல பரவி வருகிறது.  சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தில் (9.12.2017), அனைத்துக் கட்சிகcoruptionளிலும் மற்றும் அனைத்து மட்டங்களிலும் உள்ள அரசியல்வாதிகளுக்கு முக்கியமான பாடங்களை வழங்கவேண்டும்.    ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, ஒவ்வொரு வருடமும் ஒரு ட்ரிலியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சமாக வழங்கப்படும் அதேவேளை, 2.6 ட்ரிலியன் டொலர் மதிப்பிலான தொகை வருடாந்தம் ஊழல் மூலமாகத் திருடப்படுகிறது - இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜி.டி.பி) 5 விகிதத்துக்குமேல் சமமானதாகும். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டப்படி (யு.என்.டி.பி) வளர்ந்து வரும் நாடுகளில் ஊழல் காரணமாக இழக்கப்படும் நிதியின் அளவு உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிக்கான தொகையைவிட 10 மடங்கு அதிகம் என மதிப்பிடப் பட்டுள்ளது. யு.என்டி.பி சொல்வது, ஊழல் ஒரு கடுமையான குற்றம், அது அனைத்து சமூகங்களினதும் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை குறைமதிப்புக்கு உட்படுத்தும். இந்த தொற்றுநோய்க்கு ஆளாகாத நாடோ பிராந்தியமோ அல்லது சமூகமோ கிடையாது.     (மேலும்)   15.12.2017

____________________________________________________________________________________

ஶ்ரீலங்கன் விமான சேவையின் வருமானத்தை விட செலவு அதிகம்

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தை உடனடியாக மூடிவிடும் நிலை: தலைவர் ஊழியர்களுக்குக் கடிதம்

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தை உடனடியாக மூடிவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் அஜித் டயஸ் விசேட கடிதமொன்றின் மூலம் தமது உத்தியோகத்தர்களுக்கு அறிவsrilankan sirlineித்துள்ளார்.    ஶ்ரீலங்கன் விமான சேவை தொடர்பில் அரசாங்கத்திற்கு மேலும் மூன்று மாற்றுத்திட்டங்களே எஞ்சியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஶ்ரீலங்கன் விமான சேவையின் வருமானத்தை விட செலவு அதிகம் என்பதால், அதனை அரசாங்கத்தாலும் நிதி வழங்கும் இரண்டு வங்கிகளாலும் தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விமான நிறுவனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அந்த இரண்டு அரச வங்கிகளும் அவதான நிலைமையை எதிர்கொண்டுள்ளதால், எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதியின் பின்னர் விமான நிறுவன நட்டத்தை ஈடு செய்ய பணம் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   (மேலும்)   15.12.2017

____________________________________________________________________________________

போதைப்பொருள் கடத்தலை இராணுவமே மேற்கொள்கிறது’

“இராணுவத்தினருடைய பஸ்களில்தான் அதிகளவிலான போதைப்பொருட்கள் கடத்திச் செல்லப்படுகின்றன. அவ்விடயம் குறித்து பொலிஸாரும் அறிவர்” என்று, ஐக்கிய தேசியக் கட்drugsசியின் யாழ். மாவட்ட அமைப்பளரும் வர்த்தகருமான தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.  யாழ்ப்பாணத்தில், நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு நாளில் மாத்திரம் 1,000 பயணிகள், பஸ்கள் ஊடாக கொழும்புக்குச் செல்கின்றனர். இந்நிலையில், யாழ்ப்பாணம் - கொழும்புச் சேவையில் ஈடுபடும் பஸ்கள் மீது, கடந்த இரு வாரங்களாக பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கை காரணமாக, பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.       (மேலும்)   15.12.2017

____________________________________________________________________________________

சட்டவிரோதமாக ஆஸி. செல்லும் முயற்சி தோல்வி: நாடுகடத்தப்பட்ட 29 இலங்கையர்கள்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் 29 பேர் நாடுகடத்தப்பட்ட நிலையில், மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய, இன்று காலை அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை, ஹக்மன, தங்காலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நாடு கடத்தப்பட்டவர்களில் 12 மற்றும் 15 வயதான இரு சிறுவர்களும் உள்ளனர். அவர்கள் மாமா மற்றும் தந்தையுடன் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் கடந்த நவம்பர் 27ம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதோடு, நேற்றையதினம் அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரால், Lear Mouth கடற்பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

____________________________________________________________________________________

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கும் இடையில் முரண்பாடு

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிவடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.    தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கும் இடையிலான சந்திப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில், நேற்று (13) மாலை இடம்பெற்றது.       மன்னார் நகரசபையை டெலோவுக்கு வழங்கப்பட்ட போதும், அதனை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக, இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றது.       நீண்ட நேரமாகப் பேச்சு வார்த்தை இடம்பேற்ற போதும், மன்னார் நகரசபையின் ஆட்சி, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வழங்க வேண்டும் எனறக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.  எனினும், குறித்த கோரிக்கையை தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) முற்று முழுதாக நிராகரித்ததோடு, டெலோவுக்கே வழங்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தது. இதனால், பேச்சுவார்த்தை, தீர்வின்றி நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

____________________________________________________________________________________

தனியான கூட்டமைப்பாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டி: மஹிந்த ராஜபக்ஸ அறிவிப்பு

மக்களுக்கு அரசியல் மாற்றுத்திட்டமொன்றை வழங்குவதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தனியான கூட்டமைப்பாக இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக mr-1முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.    இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரையான பயணத்தின் ஆரம்பம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட கூட்டு அரசாங்கத்தின் கட்சியா அல்லது எதிர்க்கட்சியா என்ற விடயத்தை மாத்திரம் ஆராய்ந்து வாக்களிக்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி கூட்டமைப்பிற்கு வந்துவிட்டார் என்ற கருத்துக்களைக் கூறி சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டமைப்பின் செயலாளர்களை ஒரே தடவையில் நீக்கியமை போன்ற காரணங்களால் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.       (மேலும்)   15.12.2017

____________________________________________________________________________________

வட மாகாண சுகாதாரத் தொண்டர்கள் ஆளுநர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

வட மாகாண சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட மாகாண ஆளுநர் அலுவலக வளாகத்தில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.    நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் போதும் அதன் பின்னரும் வட மாகாணத்தின் அரச வைத்தியசாலைகளில் இவர்கள் தொண்டர்களாகப் பணியாற்றியுள்ளனர்.    தமக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும் இதுவரை அவை நிறைவேற்றப்படவில்லை என சுகாதாரத் தொண்டர்கள் குறிப்பிட்டனர்.   தங்களின் நியாயமான கோரிக்கைக்கு உரிய பதில் வழங்கப்பட வேண்டும் எனவும் சுகாதாரத் தொண்டர்கள் வலியுறுத்தினர்.

____________________________________________________________________________________

விடுவிக்கப்பட்ட முகமாலையில் மக்கள் விரைவில் குடியேற்றம்

மிதிவெடிகள் அகற்றப்பட்ட கிளிநொச்சி - முகமாலை பகுதி, கடந்த 12ம் திகதி பளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.    இந்தநிலையில், அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள், மீளவும் அப் பகுதிகளுக்கு சென்று தமது காணிகளில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.      இதேவேளை, அப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் தற்போது தற்காலிக இடங்களில் வசித்து வரும் மக்களை மீள் குடியேற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய, மிதி வெடிகள் அகற்றப்பட்ட 48 ஏக்கர்கள் வரையான நிலங்களில் அரசாங்கம் மீண்டும் மீள்குடியேற்றங்களை மேற்கொள்ளும் திட்டத்தின் கீழ், 38 குடும்பங்களை விரைவாக மீள்குடியேற்ற எதிர்பார்த்துள்ளதாக, பிரதேச செயலாளர் பி.ஜெயரானி குறிப்பிட்டுள்ளார்.

____________________________________________________________________________________

முல்லைத்தீவிலிருந்து தேங்காய் ஏற்றி வந்த லொறியில் 3 கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா

300 கிலோவிற்கும் அதிகமான கேரளக்கஞ்சா வத்தளை ஹூணுப்பிட்டிய பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.mullaitvu    முல்லைத்தீவு – விஸ்வமடு பகுதியிலிருந்து தேங்காய் ஏற்றி வந்த லொறியில் இருந்தே இந்த கேரளக்கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த கஞ்சாத் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.    மூன்று கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட லொறியின் சாரதி இன்று மகர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.இதேவேளை, ஹெரோயின் போதை வில்லை மற்றும் கேரளக்கஞ்சாவுடன் 5 சந்தேகநபர்கள் நாட்டின் பல பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.     (மேலும்)   15.12.2017

____________________________________________________________________________________

ஆவா குழுவை சேர்ந்த அறுவரின் விளக்கமறியல் நீடிப்பு

கொழும்பு மற்றும் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் இக்ரம் உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 28ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.        யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று இதற்கான உத்தரவை பிறப்பித்தது.    யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் தேடப்பட்டுவந்த மூன்று பேர் கொழும்பு புறநகர் பகுதியில் வைத்து கடந்த 28ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.   அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் வவுனியாவில் வைத்து  மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், அவர்கள் ஆறுபேரினதும் விளக்கமறியல் காலத்தை  யாழ்ப்பாணம் நீதிவான் நீடிக்க உத்தவிரட்டார்.

____________________________________________________________________________________

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் ஏழு பேருக்கு 56 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் ஏழு பேருக்கு தலா 56 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.     வில்பத்து தேசிய சரjudgment-1ணாலயத்தில் கெப் ரக வாகனமொன்றின்மீது கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தி மருத்துவர் உட்பட 7 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.      அநுராதபுரம் சிறப்பு மேல்நீதிமன்ற நீதிபதி மஹேஸ் வீரமன் இன்று இந்த தண்டனை உத்தரவை பிறப்பித்துள்ளார்.      மன்னார், சாவகச்சேரி, வவுனியா மற்றும் புத்தளம் முதலான பகுதிகளைச் சேர்ந்த தமிழீழ விடுதலைக் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  எட்டு குற்றச்சாட்டுக்களின்கீழ், சட்டமாஅதிபரால் தனித்தனியாக அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.    கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி ஆய்வுப்பணியொன்றுக்காக குறித்த மருத்துவர் உட்பட சுற்றுலா பயணிகள் ஏழு பேர் பயணித்துக்கொண்டிருந்த கெப் ரக வாகனம் மீது கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

____________________________________________________________________________________

கொள்கை இல்லாத தேர்தல் கூட்டணிகள்

எம்.எஸ்.எம். ஐயூப் /

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான ஆயத்தங்கள் அரசியல் கட்சிகளாலும் தேர்தல் திணைக்களத்தாலும் மேற்கொள்ளப்பட்டு allianceவரும் நிலையில், சிறிய, பெரிய மற்றும் இனரீதியான சகல அரசியல் கட்சிகளும் ஒருவித அச்ச உணர்வோடு, செயற்படுவதாகவே தெரிகிறது.   நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில், மக்கள் விடுதலை முன்னணி மட்டுமே, தமது சொந்தப் பலத்தின் மீது நம்பிக்கை வைத்து, தேர்தல் களத்தில் இறங்கத் தயாராக இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.   ஏனைய சகல கட்சிகளும், கூட்டணிகளை அமைக்க அரசியல் கூட்டாளிகளைத் தேடித் திரிவதையும், சிலர் அந்தக் கட்சியின் பின்னாலும் இந்தக் கட்சியின் பின்னாலும் அலைவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.  அரசியல் கட்சிகளின் இந்தப் பதற்றத்தின் காரணமாக, சாதாரண உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது காட்டும் அக்கறையைப் போலன்றி, நாடாளுமன்றத் தேர்தலின்போது காட்டும் அக்கறையைச் சில கட்சித் தலைவர்கள், இந்தத் தேர்தலுக்குக் காட்டுகிறார்கள்.        (மேலும்)   14.12.2017

____________________________________________________________________________________

இலங்கை மின்சார சபையின் 32 தொழிற்சங்கங்கள் சத்தியாக்கிரகப் போராட்டம்

ரயில்வே தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில், இலங்கை மின்சார சபையின் 32 தொழிற்சங்கங்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துளebworkers strike்ளன.      கொழும்பிலுள்ள மின்சார சபை தலைமையகத்திற்கு முன்பாக மூன்றாவது நாளாகவும் இந்தப் போராட்டம் தொடர்கின்றது. வருடாந்த கொடுப்பனவு குறைக்கப்படுவதையும் வருடாந்த மருத்துவ விடுமுறைக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவு குறைக்கப்படுவதையும் நிறுத்துமாறு இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    அண்மையில் மின்சார சபையில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையின் போது கடமைக்கு சமூகமளித்த பொறியியலாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு நாளாந்த சம்பளத்தின் மும்மடங்கு கொடுப்பனவும், சனிக்கிழமை கடமைக்கு சமூகமளித்த பொறியியலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தின் நான்கு மடங்கு கொடுப்பனவும் வழங்கப்பட்டமைக்கு இந்த தொழிற்சங்கங்கள் எதிர்ப்பை வௌியிட்டுள்ளன.      (மேலும்)   14.12.2017

____________________________________________________________________________________

கிளிநொச்சியில் தொடர்ச்சியாக  வியாபார நிலையங்கள் உடைக்கப்படுகின்றன.

கிளிநொச்சி நகரில் அன்மைக் காலமாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு பணமும் பொருட்களும் திருடப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிளிநொச்சி கனகபுரம் வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களே உடைக்கப்பட்டு வருகின்றன. நள்ளிரவில் வியாபார நிலையங்களை உடைக்கும் திருடர்கள்  பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடிச் செல்கின்றனர்.  இதில் அதிகளவு பணத்தையே எடுத்துச் சென்றுள்ளனா் தெரிவிக்கப்படுகின்றது.   கனகபுரம் வீதியில் உள்ள வியாபார நிலையங்களில் சமீப காலமாக பதினைந்துக்கு மேற்பட்ட கடைகள் உடைக்கப்பட்டுள்ளன. இதில் பலர் கிளிநொச்சி  காவல்துறை  நிலையத்தில்  முறைப்பாடு  பதிவு செய்துள்ள போதும் இதுவரை எவரும்  கைது செய்யப்படவில்லை. நேற்றைய தினமும் கனகபுரம் வீதியில் அமைந்துள்ள தொலைதொடர்பு நிலையம் ஒன்றும் உடைக்கப்பட்டு 25 ரூபா பணம், நான்கு தொலைபேசிகள்,   தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

____________________________________________________________________________________

ஈரான் கடற்படையால் காப்பாற்றப்பட்ட இலங்கை மீனவர்கள் ஐவர் நாடு திரும்பினர்

கடந்த ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி ஈரான் கடல் எல்லையில் 5 மீனவர்கள் விபத்திற்குள்ளாகினர்.     Iran      இதனையடுத்து, ஈரான் நாட்டுக் கப்பல் ஒன்றினால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர். காப்பாற்றப்பட்ட மீனவர்கள் (12) இரவு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.  சுஜித் பிரசன்ன, கே. சுகத், தினேஷ் பிரசன்ன, பிரபாத் குமார மற்றும் ருவன் குமார ஆகியோரே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி மிரிஸ்ஸ துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.மீன்பிடி நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஒக்டோபர் 29 ஆம் திகதி இரவு 10 மணியளவில் ஈரான் கடல் எல்லையில் படகு விபத்திற்குள்ளானது.        (மேலும்)   14.12.2017

____________________________________________________________________________________

மருத்துவ கற்கைகளுக்கு ஆகக் குறைந்த தகைமை தொடர்பான யோசனைக்கு அனுமதி

மருத்துவ கற்கைகளுக்கு ஆகக் குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது. இத் தரத்தினை வெளியிடுவது தொடர்பில் இலங்கை மருத்துவsldoctors சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சட்டமாதிபர் ஆகிய தரப்புகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.  குறித்த கற்கை நெறிகளுக்காக பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக் கொள்ளப்படுகின்ற மாணவர்கள் இந்த நாட்டின் க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் மற்றும் பௌதீகவியல் ஆகிய பாடவிதானங்களில் ஆகக் குறைந்தது Credit Passes (C) சித்திகள் இரண்டினையும் Simple Passes (S) ஒன்றினையும் ஒரே தடவையில் பெற்றிருக்க வேண்டும் என்பதே ஆகக் குறைந்த தகைமைகள் என அமைச்சரவை அங்கீகரித்தது.    இதனடிப்படையில் இலங்கை மருத்துவ கல்விக்கான ஆகக்குறைந்த தரத்தினை வைத்திய கட்டளைகள் சட்டத்தின் கீழ் அமைகின்ற ஒழுங்கு விதிகளாக அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவது தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

____________________________________________________________________________________

ரயில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

அமைச்சரவை உபகுழுவுடன் ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பேச்சுவார்தையை அடுத்து ரயில் ஊழியர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இன்று காலை இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டிருந்தது.     ரயில் ஊழியர்கள் கடந்த ஏழு நாட்களாக முன்னெடுத்து வந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக ரயில் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ரயில்வே ஊழியர்களின் கேரிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான நால்வர் கொண்ட அமைச்சரவை உபகுழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

____________________________________________________________________________________

vimarsana arangu

____________________________________________________________________________________

விஸ்வமடுவில் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர் தப்பியோட்டம்

முல்லைத்தீவு - விஸ்வமடு பகுதியிலுள்ள ரியூசன் ஆசிரியர் ஒருவர், கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.    கடந்த 9ம் திகதி மாலை ரியூசன் வகுப்பு முடிந்து, இரவு 07.00 மணியளவில் வீடு திரும்ப முற்பட்ட குறித்த மாணவியை, வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி, சந்தேகநபர் தனது காரில் ஏற்றியுள்ளார். எனினும், பாழடைந்த பகுதியொன்றில் வைத்து அவர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட போது, மாணவி காரில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பி வீட்டுக்கு வந்துள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும், தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறாத மாணவி, இது குறித்து உறவினர் ஒருவரிடம் குறிப்பிட்டுள்ளார்.    குறித்த நபர், மாணவியின் தாயிடம் இதனைக் கூற அவர், பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு வழங்கியுள்ளார். இதேவேளை, சந்தேகநபரான ஆசிரியர் அப் பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

____________________________________________________________________________________

சிவனொளிபாத மலை யாத்திரை - வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

சிவனொளிபாதமலை யாத்திரையின் போது அதிக விலைக்கு குடிபானங்கள் மற்றும் உணவு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.       நல்லத்தண்ணி மற்றும் சிவனொலிபாதைக்கு இடையில் வர்த்தகநிலையம் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் நேற்று இணைந்த, அதிகார சபையின் மத்திய மாகாண உதவி பணிப்பாளர் எம்.எஸ். நசீர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் அனைதது விற்பனை நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலைப்பட்டியல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருத்தல் அவசியம் எனவும் குறிப்பிட்டார். அதேவேளை, கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க கூடிய விலைகளில் பொருட்களை விற்பனைச் செய்தல், காலாவதியான உணவு பொருட்களை மீள பொதி செய்து விற்பனை செய்தல், உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் உணவு பொருட்களை விற்னை செய்யப்படுபனை தண்டனைக்குரிய குற்றம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

____________________________________________________________________________________

சீன நாட்டு சிகரட்டுக்களை சட்டவிரோதமாக கொண்டு வந்த சீனப் பிரஜை

சட்டவிரோதமான முறையில் சீனாவில் இருந்து ஒருதொகை சிகரட்டுக்களை இலங்கைக்கு கொண்டு வந்த சீனப் பிரஜை ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.   விமான நிலைய சுங்க பிரிவின் போதை தடுப்பு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை விமான நிறுவனத்திற்கு சொந்தமான யூ.எல். - 881 என்ற விமானத்தில் சந்தேகநபர் வருகை தந்துள்ளார். அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் 155 சிகரட் பெட்டிகளில் 31,000 சிகரட்டுக்கள் இருந்துள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 310,000 ரூபா என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.     (மேலும்)   14.12.2017

____________________________________________________________________________________

நாளொன்றுக்கு 45,000 பயனாளிகளுக்கு 4 கிலோ ஹெராயின் : அறிக்கை

                                           கிறிசாந்தி கிறிஸ்ரோப்பர்

புனர்வாழ்வுத் திட்டங்கள் உகந்த அளவில் பயன்படுத்தப் படவில்லை, வறுமை வேலையின்மை மற்றும் குடும்பப் பிரச்சினைகள் போன்ற காரணிகள் மக்களை போதைப் DrugsGraphicபொருட்களை பயன்படுத்தத் தூண்டுகின்றன.

கடந்த வருடம் ஒவ்வொரு 257 ஸ்ரீலங்காவாசிகளிலும் ஒருவர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார், என்று அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று வெளிப்படுத்துகிறது, இந்த விநியோக முறையைக் கண்காணிப்பதற்கு இன்னும் அதிகமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.   ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டுச் சபை தனது 2016ம் ஆண்டு அறிக்கையில், போதை மருந்து தொடர்பான குற்றங்களில் 79,378 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் - 47 விகிதம் - நாட்டில் அதிக சனத்தொகையைக் கொண்ட மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. 60 விகிதமானவர்கள் கஞ்சா தொடர்பான குற்றங்களுக்காகவும் மற்றும் 35 விகிதமானவர்கள் ஹெராயின் தொடர்பான குற்றங்களுக்காகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள்.     (மேலும்)   13.12.2017

____________________________________________________________________________________

வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த 8 பேரின் சிறைத்தண்டனையை உறுதி செய்தது யாழ். மேல் நீதிமன்றம்

யாழ்ப்பாணத்தில் செயற்படும் பிரபல வாள்வெட்டுக் குழுக்களில் ஒன்றான, டில்லு என்பவர் தலைமையிலான வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த 8 பேருக்கான சிறைjudgmentத்தண்டனையை யாழ். மேல் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.    யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளார். வாள்வெட்டுக் குழுவின் தலைவரான டில்லு உள்ளிட்ட மூவருக்கு மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் ஏனைய ஐந்து பேருக்கு ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.   யாழ்ப்பாணம் நீதவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கின் 8 சந்தேகநபர்களும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.      (மேலும்)   13.12.2017

____________________________________________________________________________________

பெண் விடுதலைக்கான பாதையை அமைத்துத்தந்தது ரஷ்யப்புரட்சி

-ஜெயதி கோஷ்

(ரஷ்யப் புரட்சிக்கு முன்பாக நடைபெற்ற மக்கள் எழுச்சியின்போது, பெண்களின் பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்க அளவில் இருந்ததோடு, புரட்சிக்குப் பின்னர் உருவான சோவியத் அரசில் பெண்களின் மனோபாவம் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதிலும் மிக முக்கிய பாத்திரம் வகித்தது.)road to emancipation-12

ரஷ்யப் பெண்களின் பங்களிப்புகள் மற்றும் தியாகங்கள் இல்லாமல் ரஷ்யப் புரட்சி கிடையாது என்று சொன்னால் அது மிகையல்ல, உண்மை. பிப்ரவரி புரட்சி (உண்மையில் அது சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் வெகுஎழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான பெண்கள் “ரொட்டி வேண்டும், அமைதி வேண்டும்” என்ற முழக்கத்துடன் மேற்கொண்ட பிரம்மாண்டமான பேரணியுடன்தான் துவங்கியது. இயக்கத்திற்குள் பல்வேறு சமூகத்திலிருந்தும் பெண்களை அணிதிரட்டிக் கொண்டுவருவதற்கு இப்பேரணி ஓர் உந்துசக்தியாகத் திகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக 1917இன் முந்தைய மாதங்களில் ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சி வீழ்வதற்கும், பின்னர் அமைந்த ஒழுங்கற்ற மற்றும் தாறுமாறான கெரன்சி அரசாங்கமும் அதற்குப் பின்னர் போல்ஷ்விக் புரட்சி நவம்பரிலும்  ஏற்படுவதற்கும் இட்டுச் சென்றது     (மேலும்)   13.12.2017

____________________________________________________________________________________

 பாகிஸ்தானில் எதிர்ப்பை மீறி பிரபலமாகும் யோகா

லாகூர் பூங்காவில் யோகாசனம் மேற்கொள்ளும் முஸ்லிம்கள்.

பாகிஸ்தானில் பழமைவாதிகளின் எதிர்ப்புகளைத் தாண்டி கடந்த சில ஆண்டுகளாக யோகாசனம் பிரபலமாகி வருகிறது.yoga

பாகிஸ்தானில் அதிகாரபூர்வமாக யோகா தடை செய்யப்படவில்லை. ஆனால் பழமைவாத அமைப்புகள் யோகாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த எதிர்ப்பை தாண்டி அந்த நாட்டில் யோகாசனத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட நகரங்களில் பொதுஇடங்கள் மற்றும் பூங்காக்களில் ஆண்களும், பெண்களும் பகிரங்கமாக யோகா பயிற்சியில் ஈடுபடுகின்றனர். லாகூரில் உள்ள ரேஸ் கோர்ஸ் பூங்காவில் நாள்தோறும் காலையில் 400-க்கும் மேற்பட்டோர் யோகாசனம் செய்கின்றனர். தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட முக்கிய நகரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட யோகா பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. பெண்களுக்காக தனியாக யோகா பயிற்சி மையங்களும் உள்ளன.     (மேலும்)   13.12.2017

____________________________________________________________________________________

புதியஉள்ளுராட்சித் தேர்தல் முறைகள் பற்றியசிந்தனைக் கூடத்தின் கருத்தரங்கு

சிந்தனைக்கூடம்  யாழ்ப்பாணம்   ஆய்வு,அபிவிருத்திக்கான    நிறுவனம்

கருத்தரங்கு

•புதியஉள்ளுராட்சித் தேர்தல் முறைகள்
•வேட்பாளருக்கானவிதிமுறைகள்
•பெண்வேட்பாளர்களுக்கானபுதியநடைமுறைகள்
•வாக்காளர்களுக்கானவழிகாட்டல்கள்
கருத்துரை
திரு.தனபாலசிங்கம் அகிலன்
(யாழ் மாவட்டபிரதித் தேர்தல் ஆணையாளர்)

காலம்   16.12.2017–  சனிக்கிழமை
காலை 9.00 மணிமுதல் 11மணிவரை
இடம்: நல்லூர் உதவிஅரசாங்கஅதிபர்,  , பணிமனைக் கேட்போர் கூடம்
பருத்தித்துறைவீதி
(நல்லூர் முருகன் கோவில் முன்பாக )
ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
அழைப்பு :
பேராசிரியர் இரா.சிவசந்திரன்
0777266075,.   0114578037

____________________________________________________________________________________

யாழ்ப்பாணம் அல்வாய் வீதியை சேர்ந்த விவசாயி தீக்குளிப்பு

யாழ்ப்பாணம் அல்வாய் வீதியை சேர்ந்த விவசாயி ஒருவர் விவசாயத்தில் நட்டமடைந்தமையினால் தீக்குளித்துள்ளார்.    இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக  செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பகுதியை சேர்ந்த 60 வயதுடைய மா, உதயதாசன் கடந்த வருடம் வெங்காய பயிர்ச்செய்கை மேற்கொண்டு நட்டமடைந்த நிலையில் இந்த வருடம் கத்தரி பயிர்ச்செய்கை மேற்கொண்டு அதிலும் நட்டமடைந்துள்ளார்.     இந்நிலையில் நேற்றைய தினம் மக விரக்த்தியில் மது அருந்திய குறித்த நபர், வீட்டிற்கு வருகை தந்துள்ளதோடு மனைவியிடம் சண்டையிட்டுள்ளார்.     இந்நிலையில் வீட்டிலிருந்து சென்றவர், தனக்கு தானே தீ வைத்துக்கொண்டுள்ளார்.     தீக்குளித்த நபரை மந்திவில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சோர்க்கப்பட்டுள்ளார். எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல் துறையினர் மேறகொண்டு வருகின்றனர்.

____________________________________________________________________________________

யாழில் கண் சத்திரசிகிச்சை செய்துகொண்டோருக்கு கிருமித்தொற்று: விசாரணைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்பaugen1டுத்தப்பட்ட சிலருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டமை தொடர்பில் இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.    மூவரடங்கிய விசாரணைக் குழுவினர், குறித்த தனியார் வைத்தியசாலையில் ஆய்வுகளை நடத்தினர். கண் சத்திரசிகிச்சையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் கிருமித்தொற்று குறித்து விசாரிப்பதற்காக மூவரடங்கிய விசாரணைக்குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.வடமாகாண சுகாதார அமைச்சு, மத்திய சுகாதார அமைச்சிடம் விடுத்த கோரிக்கைக்கமைய இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட தனியார் வைத்தியசாலையில் ஆய்வுகளை மேற்கொண்ட விசாரணைக்குழுவினர், மாதிரிகளைப் பெற்றுக்கொண்டதாக வட மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.         (மேலும்)   13.12.2017

____________________________________________________________________________________

புத்தளத்தில் டெங்கு நோய் பரவல்: இரண்டு மாதங்களில் சுமார் 800 பேர் பாதிப்பு

புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் டெங்கு நோய் பரவி வdenque-1ருகின்றது. கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 800 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.   அத்துடன், இந்த வருடத்தில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஐவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர். புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.   கடந்த மாதம் மாத்திரம் 600 பேர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.   டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 128 பேர் நேற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதுடன், இன்று 98 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.    (மேலும்)   13.12.2017

____________________________________________________________________________________

pongal

____________________________________________________________________________________

37 வருடங்களின் பின் சவுதி அரேபியாவில் திரையரங்குகளுக்கு தடை நீக்கம்

சவுதி அரேபியாவில் கடந்த 1980 ஆம் ஆண்டில் திரையரங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது.     சுமார் 37 வருடங்களுக்குப் பிறகு அந்த தடையை நீக்க சவுதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது.  அதன்படி, அடுத்த வருடம் முதல் அந்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன.   முதற்கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சவுதி அரேபியா முழுவதும் 300 திரையரங்குகள் செயற்படத் தொடங்கும் என தெரிகிறது.    இதன்மூலம் சுமார் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

____________________________________________________________________________________

தொழில்வாய்ப்புக்காக பெண்கள் வெளிநாடு செல்வதில் பாரிய வீழ்ச்சி

தொழில்வாய்ப்புக்காக பெண்கள் வெளிநாடு செல்வது நூற்றுக்கு 30 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.   இதேவேளை, வெளிநாட்டு தூதரக பாதுகாப்பு விடுதிகளில் அடைக்கலம் பெற்றிருக்கும் தரப்பினரை 100 ஆக குறைப்பதற்கு முடிந்துள்ளதாக அந்தப் பணியகத்தின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்களை வெளிநாட்டு பணிகளுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

____________________________________________________________________________________

செக்ஸ் தேடும் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இலங்கை இப்போது 3ம் இடத்தில்

இணையத்தில் செக்ஸ் என்ற வசனத்தை தேடும் நாடுகளில் இலங்கை மூன்றாம் இடத்திலுள்ளதாக தெரியவந்துள்ளது.    கடந்த சில வருடங்களாக இலங்கை இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய இம்முறை பங்களாதேஷ் முதலிடத்திலும், எத்தியோப்பியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.    மேலும், நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முறையே நான்காம், ஐந்தாம் இடங்களில் உள்ளன. இதேவேளை, இந்தப் பட்டியலில் முதல் நகரமாக இலங்கையின் ஹோமாகம விளங்குவதோடு அதற்கு அடுத்த இடங்களில் சென்னை, டாக்கா என்பன இடம்பிடித்துள்ளன.    அத்துடன், முழு வருடத்திலும் பாடசாலை விடுமுறை மாதங்களான ஆகஸ்ட் மற்றும் ஏப்ரலிலேயே அதிக முறை செக்ஸ் என்ற வசம் தேடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

____________________________________________________________________________________

சுதந்திர சந்தை மற்றும் சமூக நீதி இடையேயான சமநிலை: சீனாவில் இருந்து பாடங்கள்

                                       கலாநிதி லக்சிறி பெர்ணாண்டோ

மற்ற நாடுகளை வெறும் மேலோட்டமாகப் பின்பற்றாமல், எந்த நாட்டிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்வது, ஸ்ரீலங்காவைப் போல அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளchina ceylon-1ுக்கு பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் வளரும் அல்லது மாற்றமடையும் நாடுகள் எதிர்கொள்ளும் பல சவால்களின் பொதுவான தன்மையை அதனால் அறியக்கூடியதாக இருக்கும். கி.மு 5ம் நூற்றாண்டின் பின்னோக்கிய காலத்தில் சீனாவின் பா ஹெயின் இந்த தீவுக்கு விஜயம் செய்த பண்டைய வரலாற்று இணைப்புகளின் காரணங்களினால் மட்டுமல்லாது, இந்த முயற்சியில் சீனா ஸ்ரீலங்காவுக்கு முக்கியமானதாக உள்ளது, எதனாலென்றால் இன்றைய சமகால பண்புகள் அல்லது நமது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் தெளிவாக சீனா வழங்கிவரும் ஐயமற்ற ஆதரவும் இதற்கு ஒரு காரணம்.    எனினும் இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்த பொதுப் பண்புகளைப் பற்றியோ அல்லது அது வழங்கும் அதரவைப் பற்றி அதிகம் பேசவேண்டும் என்பது அல்ல, ஆனால் தற்போது ஸ்ரீலங்கா எதிர்நோக்கும் குறிப்பிட்ட சவால்களுக்கு சீனாவிடமிருந்து சாத்தியமான கொள்கைப் பாடங்களை வரைவு செய்வதற்காகவே. இது சுதந்திர சந்தை பற்றிய கொள்கைகள் மற்றும் சமூக நீதியின் இலக்குகள் அகியவற்றை எப்படிச் சமநிலைப் படுத்துவது என்பதைப் பற்றியது,     (மேலும்)   12.12.2017

____________________________________________________________________________________

 ஒற்றுமையாக வாழ்வதைதான் தமிழ், சிங்கள மக்கள் விரும்புகின்றனர்: இலங்கை திரைப்பட இயக்குநர் தகவல்

ஒற்றுமையாக வாழ்வதைதான் இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களர்கள் விரும்புவதாக, அந்நாட்டு திரைப்பட இயக்குநர் பிரசன்ன வித்தனகே தெரிவித்தார்.Prasana vithanaga    நீலகிரி மாவட்டம் உதகையில் சர்வதேச குறும்பட விழாவை நேற்று முன்தினம் அவர் தொடங்கிவைத்தார்.  அவர் அளித்த சிறப்பு பேட்டியில், ‘1992-ம் ஆண்டு எனது சினிமா வாழ்க்கை தொடங்கியது. இதுவரை 8 படங்கள் இயக்கியுள்ளேன்.   இதன்மூலமாக 26 சர்வதேச விருதுகளை பெற்றுள்ளேன். ‘டெத் ஆன்ட் எ புல் மூன் டே’, ‘ஆகஸ்ட் சன்’, ‘வித் யூ வித் அவுட் யூ’ ஆகிய மூன்று படங்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவை. ஓர் அரசு பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் இனப்போர் குறித்து படம் பண்ணுவது கடினம். ஆனால், இந்த முன்று படங்களையும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் போற்றினர்.    (மேலும்)   12.12.2017

____________________________________________________________________________________

வடக்கு, கிழக்கில் சுமார் 1,67,000 வீடுகளை அமைக்க வேண்டியுள்ளது: மீள்குடியேற்ற அமைச்சு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மேலும் 1,67,000 வீடுகளை அமைக்க வேண்டியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.housew sceme
30 வருட யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கில் இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் வாழ்ந்து வந்தனர்.    இந்நிலையில், அவர்களை மீள்குடியேற்றும் செயற்பாடு இடம்பெற்றதுடன், அவர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மேலும் 1,66,906 வீடுகளை அமைக்க வேண்டியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.   அதற்காக 40,000 மில்லியன் ரூபா தேவையென அரசாங்கத்திடம் கோரிய போதிலும், இந்தத் திட்டத்திற்கு 7000 மில்லியன் ரூபாவே கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.   (மேலும்)   12.12.2017

____________________________________________________________________________________

ஹெரோயின் வைத்திருந்த குற்றம் நிரூபிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்தார்.   2001 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி 11தசம் 8 கிராம் ஹெரோயினுடன் குறித்த பெண் கொழும்பு கிரேன்பாஸ் பகுதியில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

____________________________________________________________________________________

ஆறுமுகன் தொண்டமானின் மகனை கைது செய்ய உத்தரவு!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் முன்னாள் thondaman sonஅமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் புதல்வாரன ஜீவன் ஆறுமுகனை கைது செய்யுமாறு அட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக தெரிவித்து மத்திய மாகாண அமைச்சர் எம் ரமேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் கைது இன்று காலை கைது செய்யப்பட்டனர்.     கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஸ்கெலிய சாமிமலை ஓல்ட்டன் பகுதியில் மரண வீடொன்றில் வைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஆதரவாளர்களுக்கும் தேசிய தொழிலாளர் சங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.      இதன்போது திகாம்பரத்தின் ஆதரவாளர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.         (மேலும்)   12.12.2017

____________________________________________________________________________________

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 200 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 200 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் ராமநாதப்புரம் சுந்தரமுடயான் பகுதியில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.  குறித்த போதைப்பொருள் மகிழூந்து ஒன்றில் கொண்டு செல்ல முற்பட்ட போதே மீட்கப்பட்டுள்ளது.  காவற்துறையினருக்கு கிடைக்க பெற்ற ரகசிய தகவலையைடுத்து குறித்த கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

____________________________________________________________________________________

விமல் வீரவங்சவின் கட்சியை சேர்ந்த மூவர் சுதந்திரக்கட்சிக்கு ஆதரவு

தேசிய சுதந்திர முன்னணியின் பிரதி தலைவர் வீரகுமார திஸாநாயக்க, முன்னாள் செயலாளர் பியசிறி விஜேநாயக்க மற்றும் வடமத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பனர் பீ.டி.குமார ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர்ஜனாதிபதியை சந்தித்து அவர்கள் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர்.  சற்று நேரத்திற்கு முன்னர் அவர்கள் ஜனாதிபதியை சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.

____________________________________________________________________________________

ஆவா குழுவைச் சேர்ந்த மேலும் நால்வர் கைது

ஆவா குழுவைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர்கள் நால்வர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.மானிப்பாய் மற்றும் தெல்லிப்பனை ஆகிய பகுதிகளில் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே அவர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் வசம் இருந்து நான்கு வாள்கள், மோட்டார் சைக்கிள்கள் நான்கு உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் கொள்ளை மற்றும் நபர்களை அச்சுறுத்திய சம்பங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.   மேலும், இவர்கள் யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் தெல்லிப்பனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22, 21 மற்றும் 17 வயதானவர்களாகும்.

____________________________________________________________________________________

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள்

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மகmunaippu்களின் வாழக்கை தரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்கு வாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாக பயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.    மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதர உபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

Organization for Helping the needy People in Srilanka

www.munaippuswiss.com

Donate UsName:Munaippu
Bank : PostFinance Switzerland.
Kontonummer 85-32036-0 IBAN CH12 0900 0000 8503 2036 0BIC POFICHBEXXX

____________________________________________________________________________________

உள்ளுராட்சித் தேர்தல் 2018: அரசியலாக மாற்றும் சூழ்ச்சிகள்

வி.சிவலிங்கம்

உள்ளுராட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் கூடவே பாரிய அங்கலாய்ப்பும் காணப்படுகிறது. குறிப்பாக பத்திரிகையாளர்கள், பத்தி எழுத்தாளர் மத்தியிலே பெரும் ஏமாற்றமmunicipal election் கலந்த எண்ணங்களே வெளிப்படுகின்றன. சமீப காலமாக தூசி படிந்து உறக்கத்திற்குச் சென்ற கட்சிகள், அமைப்பகள் பல உயிருட்டம் பெற்று வருகின்றன. சில தனி நபர்களின் அரசியல் வாழ்வைத் தக்க வைக்கவென கட்சி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்புகள் பல தமிழ் மக்களின் எதிர் காலத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக ஊதிப் பெருப்பித்துக் காட்டப்படுகின்றன. இத் தோற்றப்பாடு காரணமாக மக்களின் உண்மையான பிரச்சனைகள் மறைக்கப்படுவதோடு உள்ளுராட்சித் தேர்தல்களின் அடிப்படை நோக்கங்களும் அடிபட்டுப் போகின்றன. இதில் குறிப்பாக கூட்டமைப்பினர் ஒரு புறமும், ஏனையோர் மறு புறமுமாக அரசியல் அமைப்பிற்கு ஆதரவாகவும், எதிராகவும் என்ற முகாம்களாக தேர்தல் மாற்றப்படும் அபாயங்கள் காணப்படுகின்றன. இதனால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள உள்ளுர் அபிவிருத்தித் தேவைகள் தொடர்ந்தும் கைவிடப்படும் போக்கே தென்படுகிறது.       (மேலும்)   11.12.2017

____________________________________________________________________________________

மண்சரிவு அபாயம் ; 400க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் வெலிமடை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட ஒஹிய, உடவேரிய, லைபோன் ஆbadullaகிய தோட்டங்களில் இருந்த தொழிலாளர்கள் குடும்பங்களை தங்களின் குடியிருப்புக்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.   அண்மையில் பெய்த கடும் மழையை அடுத்து, ஏற்பட்ட அபாயம் காரணமாக ஒஹிய, உடவேரிய, லைபோன் தோட்டங்களின் 120 குடும்பங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.   இவர்கள் தற்காலிகமாக தங்குவதற்காக உடவேரிய தோட்டத்தில் கைவிடப்பட்ட தேயிலை தொழிற்சாலையொன்றில் தங்க வைக்கப்பட்ட போதிலும், அங்கு எவ்வித வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.     (மேலும்)   11.12.2017

____________________________________________________________________________________

ஜெருசலேம் சர்ச்சை: லெபனானில் அமெரிக்கத் தூதரகம் முன் வெடித்த வன்முறை

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவை எதிர்த்து, லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பlebanonு வன்முறை மோதல்கள் வெடித்துள்ளன.     கருப்புக் கொடி ஏந்திய போராட்டக்காரர்களை தடுக்க, கண்ணீர் புகைகுண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கியை அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் பீய்ச்சி அடித்தனர்.முன்னதாக அமெரிக்காவின் இந்த முடிவிற்கு அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.     மத்திய கிழக்கு நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தையின் தரகராக அமெரிக்காவை இனி நம்ப முடியாது எனவும் அரபு நாடுகள் விமர்சித்திருந்தது.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஆக்கர் மாவட்டத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் உள்ள சாலையில் தீவைத்து, கற்களை எரிந்தனர்.       (மேலும்)   11.12.2017

____________________________________________________________________________________

புனித ஜெருசேலம் இஸ்ரவேலின் தலைநகரே...
அமெரிக்ககா பற்ற வைத்துள்ள  புதிய தீ ...

               -ராஜாஜி;

பலஸ்தீனத்தின்  காஸா முதல் துருக்கி  லெபனான் இந்தோனிஷியா ஈரான் என்று இஸ்லாமிய நாடுகள் எங்கும் தீச் சுவாலைகள் கொழுந்து விடுகின்றன.jerusalem-3     பலஸ்தீன ஆதரவு அமைப்புகள் குமுறுகின்றன....... கொந்தளிக்கின்றன.       அமெரிக்க இஸ்ரேல் கொடிகளையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உருவப்படங்களையும்   கொழுத்தியதால் பரவும் ஆத்திரத்தீ ஒரு புறமும் இஸ்லாமிய  அரசுக்கள் மற்றும் அமைப்புக்களின் அனல்  கக்கும்  கண்டனங்களுமாக உலகமெங்கும் அரசியல் பரபரப்பு. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் இருந்து ஜெருசலேத்துக்கு அமெரிக்க தூதரகத்தை இடமாற்றும்  அறிவிப்பை வெளியிட்டதன்  மூலம்  இஸ்ரேலின் தலைநகரமாக  ஜெருசெலத்தை அங்கீகரிக்கும் அமெரிக்காவின்  இந்த திடீர் முடிவுவே தற்போதைய  அரசியல் கொந்தளிப்புக்கு காரணம்.      (மேலும்)   11.12.2017

____________________________________________________________________________________

மனித உரிமை மீறல் சம்பவங்கள் இலங்கையில் குறைவடைந்துள்ளதாக தெரிவிப்பு

இந்த வருட முதல் இரண்டு காலாண்டு பகுதியினில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இலங்கையில் குறைவடைந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.    இந்த காலப்பகுதியில் ஆணையகத்திற்கு 4 ஆயிரத்து 121 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.     கடந்த இரண்டு வருடங்களான 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியினில் முறையே, 8 ஆயிரத்து 946 மற்றும் 9 ஆயிரத்து 171 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.    பாதிக்கப்பட்டவர்களினால் மேற்கொள்ளப்ட்ட முறைப்பாடுகள் எந்த சமூகத்தவர்களால் பதிவுசெய்யப்பட்டது என்பது குறித்த விபரங்கள் தம்வசம் இல்லையென இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.      அதேவேளை, இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 3 மனித கடத்தல்கள் குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

____________________________________________________________________________________

பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.  தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடும் ரயில்களின் எண்ணிக்கை 350 ற்கும் அதிகமாக இருக்கும் நிலையில், இன்று 10 ரயில்கள் மட்டுமே சேவையில் ஈடுபட்டன.     ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ள போதும், அதனைக் கவனத்திற்கொள்ளாது பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.    (மேலும்)   11.12.2017

____________________________________________________________________________________

 ரஷ்ய புரட்சி தற்போதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு புகழாரம்

நூற்றாண்டைக் கடந்தும் ரஷ்ய புரட்சி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத் தலைவருமான ஆர். நல்லகண்ணு கூறியுள்ளார். ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் மற்றும் புகைப்படக் கண்காட்சி சென்னை பிராட்வேயில் உள்ள ஜீவா அரங்கில் நேற்று நடைபெற்றது. அதனை தொடங்கிவைத்து ஆர். நல்லகண்ணு பேசியது:    நவீன உலகின் மீது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது ரஷ்ய புரட்சி. அதை, இந்தியாவில் முதன் முதலில் வரவேற்றவர்கள் தமிழர்கள். மகாகவி பாரதி, யுகப் புரட்சி என்று புகழாரம் பாடினார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்காத காலத்தில், 1922-ல் கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், ரஷ்ய புரட்சியை பாராட்டியும், உலக கம்யூனிஸ்ட் இயக்கம் சார்பாக வாழ்த்தும் தெரிவித்தவர் தமிழர் சிங்காரவேலர். நூற்றாண்டைக் கடந்தும், உலகம் முழுவதும் அப்புரட்சி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், நாடுகளின் புரட்சியாளர்களுக்கும் ஆதர்ஷமாக உள்ளது என்றார்.    (மேலும்)   11.12.2017

____________________________________________________________________________________

தமிழரசுக் கட்சி சின்னத்தில் தேர்தலில் போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 3 கட்சிகளும் இணக்கம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் மீண்டும் தேர்தலில் போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தற்போது அங்கம் வகிக்கும் மூன்று அரசியல் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.      மூன்று கட்சிகளினதும் தலைவர்கள் இன்று கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியபோது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.    கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இந்த மூன்று கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

____________________________________________________________________________________

இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் ஒப்படைப்பு

இலங்கையின் தென் பகுதியில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் சனிக்கிழமை முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.ham.harbour     அந்தத் துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகை விட்டதன் மூலம், சிறீசேனா தலைமையிலான அரசு இலங்கையின் வளங்களை சீனாவிடம் விற்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.   இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் ஆட்சிக் காலத்தில், அவரது சொந்த மாவட்டத்தில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை நகரில் மிகப் பெரிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு கடனுதவி அளிக்க சீனா ஒப்புக் கொண்டது.   அதையடுத்து, கடந்த 2008}ஆம் ஆண்டு அந்தத் துறைமுகம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, பிறகு துறைமுகத்தின் கொள்திறன் மேலும் அதிகரிக்கப்பட்டது. எனினும், அந்தத் துறைமுகத்தால் இலங்கை துறைமுக பொறுப்புக் கழகத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு, சீனாவுக்குத் திருப்பித் தர வேண்டிய கடன் சுமை அதிகரித்தது.     (மேலும்)   10.12.2017

____________________________________________________________________________________

தவறான தகவல்களை தமிழ் மக்களிடம் கூறி அரசியல் நடத்த வேண்டாம். 

வீ. ஆனந்தசங்கரி,

தவறான தகவல்களை தமிழ் மக்களிடம் கூறி அரசியல் பிழைப்பு நடத்த வேண்டாமென, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களsangary17ை, தமிழர் விடுதலைக் கூட்டணி கேட்டுக்கொள்கின்றது. பிற கட்சிகளை விமர்சனம் செய்யும் போது கொஞ்சமாவது வரலாறு அல்லது அக்கட்சியின் நிகழ்வுகளை தெரிந்து கொண்டு விமர்சனம் செய்ய வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அப்பட்டமான பொய்களை அவிழ்த்துவிடக் கூடாது.   தமிழர் விடுதலைக் கூட்டணி வருடாந்தம் நடாத்தும் ஒவ்வொரு மாநாட்டிலும் ஒற்றையாட்சி மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது, என்பதனை ஒரு தீர்மானமாக எடுத்து வலியுறுத்தி வந்துள்ளது. அதுமட்டுமல்லாது இனப்பிரச்சினை தீர்விற்கு இந்திய அரசியலமைப்பிற்கு ஒத்த ஒரு முறைமையையே வலியுறுத்தி ஒவ்வொரு மாநாட்டிலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது சம்மந்தமாக பல தரப்பினருடன் விடுதலைப் புலிகளின் காலத்திலேயே, பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்தது. இவைகள் அனைத்தும் அந்த காலகட்டத்தில் பல ஊடகங்களில் செய்திகளாக  வெளி வந்துள்ளன.       (மேலும்)   10.12.2017

____________________________________________________________________________________

ஆசிரியரால் மாணவி  துஷ்பிரயோகம்: ஓமந்தையில் கண்டன ஆர்ப்பாட்டம்

வவுனியா – ஓமந்தை, அலகல்லுபோட்டகுளம் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கomanthai1ப்பட்டது. ஓமந்தை மத்திய கல்லூரியில் இருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி, ஓமந்தை பொலிஸ் நிலையம் வரை சென்றதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதனையடுத்து, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவி வயிற்றுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் கர்ப்பம் தரித்துள்ளமை தெரிய வந்ததையடுத்து, பொலிஸார் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

____________________________________________________________________________________

சீன- இலங்கை ஒன்றிணைந்த நிறுவனங்களின் கீழ் ஹம்பாந்தோட்டை துறைமுகம்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன- இலங்கை ஒன்றிணைந்த நிறுவனங்கள் இரண்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.china ceylon       இது தொடர்பிலான நிகழ்வு பாராளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கமைய, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நடவடிக்கை மற்றும் சேவைகள் HIPG எனப்படும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமம் மற்றும் HIPS எனப்படும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக சேவைகள் தனியார் நிறுவனம் ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்கும் வகையில், சைனா மேர்ச்சென்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டிய தொகையில் 30 வீதமான 294 மில்லியன் அமெரிக்க டொலருக்கான காசோலையைப் பிரதமரிடம் கையளித்துள்ளது.    (மேலும்)   10.12.2017

____________________________________________________________________________________

கரூரில் இலங்கைச் சிறுமிக்கு நேர்ந்த அவலம்

அகதியாக கரூரில் தங்கியிருக்கும் இலங்கைச் சிறுமி ஒருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற குற்றச்சாட்டில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் பெண்கள்.  வசதியில்லாததால் பாடசாலையைக் கைவிட்டவர் இச்சிறுமி. இவரது குடும்பம் மூன்று தலைமுறைகளாக கரூரில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகிறது.   சிறுமியின் தாய்க்கு ஏற்கனவே அறிமுகமான சரண்யா (27) என்பவர், வீட்டில் இருந்த அச்சிறுமிக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறியிருக்கிறார். ஒருநாள் திடீரென்று சிறுமியுடன் சரண்யா மாயமானார். சிறுமியை திருப்பூருக்கு அழைத்துச் சென்ற சரண்யா, அங்கு மேலும் சிலருடன் சேர்ந்து அச்சிறுமியை பலவந்தமாக ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றிருக்கிறார்.  எப்படியோ அங்கிருந்து தப்பி வந்த சிறுமியின் போக்கில் மாற்றத்தை அவதானித்த அவரது தாய், பொலிஸில் புகார் கொடுத்தார். விசாரணையில், நடந்தவை அனைத்தும் அம்பலமாகின.  இதையடுத்து ஆட்கடத்தல், சிறுவர் துஷ்பிரயோகம், சட்டவிரோதமாகத் தடுத்துவைத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த பொலிஸார், சந்தேக நபர்கள் ஏழு பேரையும் கைது செய்தனர்.

____________________________________________________________________________________

இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா ஜெருசலேமை அங்கீகரித்ததை ஐநா நிராகரித்தது

இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா ஜெருசலேமை அங்கீகரித்ததை ஐநா நிராகரித்து உள்ளது.   ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அjeruselamதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புதன்கிழமையன்று முன்பாக, வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.   மேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.   இந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கையாக கருதமுடியாது என தெரிவித்தார்.         (மேலும்)   10.12.2017

____________________________________________________________________________________

ஊழல் குறித்து பேச அரசாங்த்திற்கு தகுதியில்லை   -   அநுரகுமார திஸாநாயக்க

தற்போதைய அரசாங்கத்திற்கு ஊழல் மோசடிகள் தொடர்பில் பேசுவதற்கோ கடந்anura5த ஆட்சியில் மோசடியில் ஈடுப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கோ உரிமையில்லை என ஜேவிபி தெரிவித்துள்ளது.   அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று இதனை நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றவர்கள் தனிப்பட்ட முறையில் எந்த மோசடியிலும் ஈடுப்படாமல் இருந்தாலும் அவர்கள் ஊழல் மோசடியில் இருந்து விடுப்பட்டவர்களாக முடியாது.     அரசாங்கம் ஊழல் செய்தவர்களையும் ஊழல் மிக்க அரசாங்கம் ஒன்றையும் பாதுகாக்க முயற்சிக்குமானால் அதன் பொறுப்பை அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் அனைவரும் ஏற்க வேண்டும்.      (மேலும்)   10.12.2017

____________________________________________________________________________________

ஒரே வருடத்தில் ஒன்றே முக்கால் இலட்சம் டெங்கு நோயாளர்கள்

நாட்டில், கடந்த ஓராண்டு காலப் பகுதியில் மட்டும் ஒரு இலட்சத்து 76,248denque-1 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.   இதில், மேல் மாகாணத்தில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் அது 42.93 சதவீதமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 8 ஆயிரத்து 340 நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

____________________________________________________________________________________

2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம்  99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் மீதான வாகெடுப்பின் போது ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   தற்கமைய பாதீடு 3 இல் 2 பெறும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.     தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தது.    ஜேவிபி மற்றும் ஒன்றிணைந்த எதிரணி ஆகியன எதிராக வாக்களித்தன.   கடந்த மாதம் 9ஆம் திகதி நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால், 2018 ஆம் நிதி ஆண்டுக்கான பாதீடு, சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.     இதேவேளை, கடந்த மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற பாதீட்டின் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மூன்றிலிரண்டு பெரும்பாhன்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்திருந்ததுடன், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் ஜே.வி.பி எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

____________________________________________________________________________________

திருகோணமலையில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டவர் கைது

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கும்புருபிட்டி - 8ம் fa.geldவட்டாரத்தில் போலி நாணயத் தாள் அச்சிடும் இடமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.  மேலும், இதன்போது புல்மோட்டை பொலிஸ் விஷேட அதிரடி படையினர், சந்தேகநபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.   கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   மேலும், சந்தேகநபர் 24 வயதுடைய இளைஞர் எனத் தெரியவந்துள்ளது.   அத்துடன், இவர் வசம் இருந்து போலி நாணயத்தாள்களை அச்சிடும் கனணி இயந்திரம், பிரதி எடுக்கும் இயந்திரம் மற்றும் 1000 ரூபாய் போலி நாணயத் தாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

____________________________________________________________________________________

கடமைக்கு வராத ரயில்வே ஊழியர்களுக்கு சிக்கல்

கடமைகளுக்கு சமூகமளிக்காத ரயில்வே ஊழியர்களின் பதவி வெற்றிடமாகவுள்ளதாக, கருதப்படும் என, அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.   சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.   இதனால் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுடன் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், இணக்கப்பாடு எட்டப்படாமையால், தொடர்ந்தும் அப் போராட்டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

____________________________________________________________________________________

வீணாகிப்போகும் உயிர்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்?

அதிரதன்

அரசியலை அனைவரும் கையில் பிடித்துக் கொண்டிருக்கையில், சமூக விரோதச் செயல்களின் அதிகரிப்பு பெரும் பொதுப்பிரச்சினையாக மாறிவருகிறது. இதனை ஞாபகப்படுத்தத்தான் australiaவேண்டும் என்றில்லை. இது வெளிப்படையாகவே தெரிகிறது. இதனை எவ்வாறு எதிர்கால சந்ததியினருக்காக எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே கருப்பொருள்.    நகரங்களில், வெளிநாடு என்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பயணங்கள் ஓரளவு குறைந்து போயிருந்தாலும், கிராமங்களில் அதிகரித்தே காணப்படுகின்றது. இந்தக் காய்ச்சலில் இருந்து இன்னமும் மீண்டுவிடவில்லை.  இதனால் ஏற்படும் பல்வேறு சமூக வன்முறைகள் சார் சிக்கல்களை, எப்படி எல்லோருமாகச் சேர்ந்து தீர்த்துவிடப்போகிறோம் என்பது கேள்வியாகவே இருக்கிறது.  இதற்கு, மட்டக்களப்பில் கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற மூன்று சம்பவங்களில் பலியான நான்கு உயிர்களை அடையாளமாகக் கொள்ளவேண்டும்.    “நானும் ஜெயிலுக்குப் போறேன்” என்ற வடிவேலுவின் நகைச்சுவை போன்றுதான், “நானும் வெளிநாட்டுக்குத்தான் போனேன்” என்று சொல்லிக் கொள்வதற்காக பலரும் வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள்; பெருமையடித்தும்கொள்கிறார்கள்.        (மேலும்)    09.12.2017

____________________________________________________________________________________

ரயில்வே வேலைநிறுத்தம் : பஸ் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து.!

ரயில்வே சேவையாளர்களின் வேலை நிறுத்தத்தால் ரயில் சேவைகள் முடங்கிப் போயுள்ள நிலையில், பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு இலங்கை போக்குவரத்துச் சபையில் பணctbியாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படவுள்ளன.குறித்த காலப் பகுதியில், பருவ காலப் பயணச் சீட்டுக்களைப் பயன்படுத்தும் ரயில் பயணிகள், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரி ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்தார். எனினும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஊழியர்கள் தமக்கு இது தொடர்பில் அறிவுறுத்தப்படவில்லை என பயணிகளிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இதன் காரணமாக பருவ காலப் பயணச் சீட்டுக்களைப் பயன்படுத்தும் ரயில் பயணிகள் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.   (மேலும்)    09.12.2017

____________________________________________________________________________________

ஐரோப்பிய யூனியனுடன் இங்கிலாந்து பிரிவினை உடன்படிக்கை பெரும் தொகை வழங்கவும் முடிவு

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வது தொடர்பாக, அந்த அமைப்புடன் இங்கிலாந்துக்கு பிரிவினை உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.ukexit       ஐரோப்பிய யூனியனின் அங்கமாக இங்கிலாந்து இருந்து வந்தது. ஆனால் அதில் இருந்து வெளியேறுவது தொடர்பாக, இங்கிலாந்தில் டேவிட் கேமரூன் பிரதமராக இருந்த போது பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந் தேதி அங்கு மக்கள் கருத்தறியும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் சுமார் 52 சதவீதம் பேர் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது உறுதியானது. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுகிற முதல் நாடு என்ற பெயரை இங்கிலாந்து பெறுகிறது.ஆனால் இது எளிதான நடவடிக்கை அல்ல, பல கட்டங்களை கடந்து செல்ல வேண்டியது இருக்கிறது. இங்கிலாந்து பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டியதிருந்தது. அந்த ஒப்புதலும் கிடைத்து விட்டது.       (மேலும்)    09.12.2017

____________________________________________________________________________________

இனவாதிகளே  வடக்கு கிழக்கில் பொருத்தமற்ற இடங்களில் போதி தேவனை நடுகை செய்கிறார்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்பட வேண்டும் என்ற உண்மையான – பரிசுத்தமான எண்ணங்கள் இருக்கின்ற பௌத்த தேரர்கள், பௌத்த மக்கள் இந்த நாட்டில் நிறையவே இருக்கிdoiglasன்றனர். இத்தகைய நிலையில்தான், சில தீய இனவாத சக்திகளால் - குறுகிய சுயலாப நோக்குடைய அரசியல்வாதிகளால் தூண்டப்படுகின்ற சில கைக்கூலிகள் பௌத்த மக்கள் இல்லாத வடக்கு – கிழக்கு உட்பட்ட பகுதிகளில் இரவோடிரவாக புத்த பெருமானின் சிலைகளைக் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்று விடுகின்றன. இது புத்த பெருமானையும், பௌத்த மதத்தையும் அவமதிக்கும் செயலாகவே நான் காணுகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.    நாடாளுமன்றில் இன்றைதினம் நடைபெற்ற வரவு செலவு திட்ட குழநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில் -குறித்த செயல்கள் தொடர்பில் விமர்சனங்கள் எழுகின்றபோது, 'இந்த பௌத்த நாட்டில் வடக்கு – கிழக்கில் பௌத்த விஹாரைகள் அமைப்பதற்கு தமிழர்கள் - முஸ்லிம்கள் தடை' என அதே இனவாத சக்திகள் பிரச்சாரம் மேற்கொள்கின்றன.      (மேலும்)    09.12.2017

____________________________________________________________________________________

பொருளாதாரச் சுழலில் வெனிசூலா!

 எஸ். இளங்கோ 

தென் அமெரிக்க நாடுகளில் அரசியல் குழப்பங்களும், ஆட்சி மாற்றங்களும் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளன. வெனிசூலா எண்ணெய் வளம் மிக்க நாடு. அveneதன் பொருளாதாரம் முழுக்க முழுக்க கச்சா எண்ணெய் உற்பத்தி, அதன் ஏற்றுமதி மூலம் கிடைக்கிற வருமானத்தைச் சார்ந்தே இருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயருகிறபொழுது அல்லது வீழ்கிற பொழுது வெனிசூலாவின் பொருளாதாரமும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.    வெனிசூலாவின் அரசியல் வரலாற்றில் 1980 மற்றும் 1990 மிகவும் கொந்தளிப்பான காலம். எண்ணெய் ஏற்றுமதியின் மூலம் கிடைத்த வருமானம் எண்ணெய் நிறுவன முதலாளிகளுக்கு மட்டுமே சென்றது. பெரும் செல்வத்தில் கொழித்த அம்முதலாளிகள் தலைநகர் கராகஸில் பெரிய பெரிய மாளிகைகளில் வாழ்ந்து வந்தனர். தங்கள் செல்வத்தைக் கொண்டு அமெரிக்காவின் மயாமி தீவில் மாளிகைகளை, உல்லாசக் கப்பல்களை வாங்கிப் போட்டு களிப்போடு வாழ்ந்து வந்தனர்.         (மேலும்)    09.12.2017

____________________________________________________________________________________

லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு - கோட்டபாயவை சாட்சியாக சேர்க்குமாறு கோரிக்கை

சமூக செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாயவை சாட்சியாக சேர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.      மனுதாரர்கள் சார்பில் இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் வைத்து இந்த கோரிக்கை விடுத்தனர். முன்னிலை சோசலிசக் கட்சியின் சமூக செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகாநந்தன் ஆகிய இருவர் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதி அச்சுவேலி காவல்துறை பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தனர். இதனையடுத்து அவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் தொடர்ந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்தமுறை நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய சம்பவம் இடம்பெற்றவேளை, அச்சுவேலியில் கடமையிலிருந்த காவல்நிலைய பொறுப்பதிகாரி இன்று மன்றில் முன்னிலையானார்.அத்துடன் அந்த தருணத்தில் நாட்டின் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவையும் இந்த வழக்கின் சாட்சியாக இணைக்குமாறு வழக்கு தொடுனர் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.இந்த கோரிக்கையினை தாம் பரிசீலிப்பதாக அறிவித்த நீதவான், வழக்கினை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி வரையில் ஒத்திவைத்தார்.

____________________________________________________________________________________

புகையிரத போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.   ஜனாதிபதி செயலாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். srisena5பல கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி 12 புகையிரத தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் அஞ்சல் சேவை ஸ்தம்பிதம் அடைந்ததுடன், பயணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.   சம்பள பிரச்சினைக்கு இதுவரையில் தீர்மானம் வழங்கப்படாததன் காரணமாக பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுப்பதாக லோகொமோடிவ் செயற்பாட்டு பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார். எவ்வாறாயினும், எதிர்வரும் காலங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக புகையிரத சேவை பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் அதனை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி இன்று கையெழுத்திட்டுள்ளார்.

____________________________________________________________________________________

தீவிரமடையும் கலிஃபோர்னியா காட்டுத்தீ: 2 லட்சம் பேர் வெளியேற்றம்

கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால், சுமார் 2 லட்சம் குடும்பங்கள் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.california    புதிய இடங்களில் தீப்பிழம்பு பரவியதையடுத்து, 10 ஏக்கரில் இருந்து 4,100 ஏக்கர்களுக்கு சில மணி நேரங்களிலேயே காட்டுத்தீ மிக வேகமாக பரவியது. இதனால், சான் டியாகோவில் அவசரகால நிலையை ஆளுநர் ஜெர்ரி ப்ரவுன் அறிவித்தார். இதுவரை மூன்று தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர் மற்றும் சுமார் 500 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.      வென்சுரா நகரத்தில் தீ பரவியிருந்த பகுதியில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் அந்தப் பெண், காட்டுத்தீயால் அல்லாமல் ஒஜாய் நகரத்தில் நடந்த கார் விபத்தில் இறந்திருக்கக்கூடும் என வென்சுரா கன்ட்ரி ஸ்டார் செய்தித்தாளிடம் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.சுமார் 5,700 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.     (மேலும்)    09.12.2017

____________________________________________________________________________________

1288 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்; 297 தமிழ்மொழி மூல பட்டதாரிகள்

நாட்டில் காணப்படும் தேசிய பாடசாலைளுக்கு கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம், தொழில்நுட்பம், விவசாயம் உட்பட உயர்தர தொழில்நுட்ப பாடங்ளுக்கான 1288 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று 08.12.2017 அபேகம வளாகத்தில் நடைபெற்றது.        இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் உட்பட அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.     நியமனம் பெற்ற பட்டதாரிகளில் 1223 பேர் ஆசிரியர் சேவை 3-1 க்கும், 65 பேர் 2-2 க்கும் உள்வாங்கபட்டுள்ளனர்.
இவர்களுக்கு 21 நாட்கள் திசைமுகப்படுத்தல் பயிற்சி வழங்கபடவுள்ளது. அதன் பின்னர் பாடசாலைகளுக்கு நியமிக்கபடுவர். தமிழ்மொழி மூலம் 297 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் பெற்றுள்ளனர். இவர்களில் ஆசிரியர் சேவை 3-1 க்கு 292 பேரும் 2-2 க்கு 05 பேரும் உள்வாங்கபட்டுள்ளனர். இவர்களில் ஆங்கிலமொழி மூலமான 40 பட்டதாரி ஆசிரியர்களும் அடங்குகின்றனர்.

____________________________________________________________________________________

யாழில் சில கட்சிகள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தின

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியினர் எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று செலுத்தியுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையின் கீழ் சமூக அமைக்கள் சிலவற்றை இணைந்து அந்த கட்சி தமிழ் தேசியப்பேரவை என்ற பெயரில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.    அதன்படி, யாழ்ப்பாண மாவட்டம் முழுவதிலுமுள்ள பதினேழு சபைகளிலும் போட்யிடுவதற்கென கட்டுப்பணத்தை அந்த கூட்டணி யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் உதவித்தேர்தல் ஆணையாளரிடம் செலுத்தியது. இதேவேளை ஜே.வி.பியும் யாழ்ப்பாண மாவட்டத்தில் நான்கு சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் மாநகரசபை உள்ளிட்ட மேலும் நான்கு பிரதேச சபைகளில் போட்டியிடுவதன் பொருட்டு ஜே.வி.பி தமது கட்டுப்பணத்தினை செலுத்தியது.  இதனிடையே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று வடக்கு மாகாணத்தில் போட்டியிடுவதன் பொருட்டு கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாட்டங்களில் போட்டியிடுவதற்காகவே கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

____________________________________________________________________________________

அரசியல் கைதிகளை விடுவிப்பதாக உத்தரவாதமளிக்காவிடின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டாம்!

அரசியல் கைதிகளை விடுவிப்பதாக அரசாங்கம் உத்தரவாதமளிக்காவிடின் வரவு செலவுத் திட்ட மூன்றாம் கட்ட வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.    அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதுதேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் அவர்களின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு அரசினால் தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.வரவு செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

____________________________________________________________________________________

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 6 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வந்த வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.     நேற்று (07) இரவு வட்டுக்கோட்டை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. கைது செய்யப்பட்டவர்கள் நேற்று மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி       வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

____________________________________________________________________________________

தேர்தல்  கூட்டணிகள் எதைச் சாதிக்கப்போகின்றன?

கருணாகரன்

“தமிழர்களின்    அரசியல் வந்து நிற்கிற இடம் தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டு வந்தார் நண்பர்  ஒருவர். வாடிச் சோர்ந்திருந்தார். ஒரு வாரத்துக்கு முன், வலு உற்சாsam logoகமாக ஒரு  நாளுக்கு ஐந்தாறு தடவைக்கு மேல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சமகால அரசியற்  சூழலைப் பற்றியும் மாற்று அணியொன்றைப் பற்றியும் புதுப்புதுச் செய்திகளையும் புதிய  புதிய ஐடியாக்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். இப்பொழுது இப்படி வாடிச்சோர்ந்து போயிருக்கிறார் என்றால்....?    இது    டெங்குக் காய்ச்சல் அமளியாக நடக்கிற காலமென்பதால், “உடம்புக்கு ஏதும் ஆச்சுதா?”   என்று கேட்டேன். “அதை  விடப் பெரிய காய்ச்சல் ஊருக்கே  வந்திருக்கய்யா” என்றார் பதட்டத்தோடு.  புரியாமல்  விழித்த என்னைப் பார்த்து அவரே சொன்னார், “40 வருசத்துக்கு முந்தி நிராகரிக்கப்பட்ட அல்லதுகைவிடப்பட்ட சைக்கிள்சின்னமும் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரசும் -   35   வருசத்துக்குமுந்தி நிராகரிக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட வீட்டுச்சின்னமும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் –   30     ருசத்துக்கு முந்திமுந்தி நிராகரிக்கப்பட்ட அல்லதுகைவிடப்பட்ட உதயசூரியன்சின்னமும்தமிழர்விடுதலைக்கூட்டணியும் தான் மீண்டும் தமிழரின்தலைவிதியைத் தீர்மானிக்கப்போகின்றனஎன்றால்...?”        (மேலும்)    08.12.2017வ