வரைவு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு மேலும் திருத்தங்கள் தேவை

                                        - லக்சிறி பெர்ணாண்டோ

ஸ்ரீலங்காவின் கடந்தகால மற்றும் தற்போதைய சர்வதேச சூழ்நிலைகள் மற்றும் நாட்டினுள் நிகழும் பதட்டமான அரசியல் சூழ்நிலைகள் என்பனவற்றினால் சிறுபான்மை இterroract2ன அல்லது மத சமூகத்தைச் சேர்ந்த தீவிரவாத இளைஞர்கள் மற்றும் அங்கத்தவர்கள் குறிப்பாக தவறான அல்லது பிழையான குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படுகிறார்கள். மறுபுறத்தில் வன்மையான அரசியல் போக்குகள் எங்கள் சமூகத்தில் தோன்றியுள்ள ஒரு நோயாக பல பகுதிகளிலும்  வெளிப்பட்டுள்ளது.  முன்மொழியப்பட்ட சட்டத்தின் கீழ் எந்தவொரு காவல்துறை அதிகாரி, ஆயுதப்படையின் ஒரு அங்கத்தவர் அல்லது ஒரு கடலோர காவற்படையினைச் சேர்ந்தவர், பயங்கரவாதச் சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை  பிடியாணை எதுவுமின்றி கைது செய்ய முடியும். பயங்கரவாத சந்தேக நபர்களைக் கைது செய்யும் விஷயத்தில் ஆயுதப்படையின் அங்கத்தவர்கள் மற்றும் கடலோரக் காவற்படையினர் அதற்கு அவசியமான சட்ட அமலாக்கத் திறன்களைக் கொண்டிருப்பார்களா என்பது மிகவும் கேள்விக்கிடமான ஒரு விஷயம்.  (மேலும்)  31. 10.18

._______________________________________________________________________

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை . எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

 

"நீங்கள் பிரதமராக தேர்வு செய்யப்பட்டது, அரசியலமைப்புக்கு முரணானது" என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மஹிந்த ராஜபக்ஷவிடம் அவரை சந்தித்தபோது கூறினார் sampanthan-mrஎன கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.  இலங்கையில் பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவை, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் செவ்வாய்க்கிழமை காலை சந்தித்துப் பேச்சு நடத்தியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்பதையும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். "பெரும்பான்மை இருக்குமாயின் அதனை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இவ்வாறு நாடாளுமன்றத்தை தள்ளிப்போடுவது சட்டத்திற்கு முரணானது. நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு மகிந்த ராஜபக்சவும் ஆதரவளிக்க வேண்டும்.  (மேலும்)  31. 10.18

._______________________________________________________________________

சிறிசேன எதற்குத் துணிந்து நிற்கிறார்?

இலங்கையில் அரங்கேறியிருக்கும் அரசியல் நாடகம் நிச்சயமற்றநிலையைத் தோற்றுவித்திருக்கிறது. அதன் தாக்கங்கள் கடல்கடந்தும் உணரப்படும். தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் இருந்து தனது கட்சியை வாபஸ்பெற்றுக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததன் மூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு நெருக்கடியைத் தோற்றுவித்திmahinda-maithri-ranil2ருக்கிறார். பதவிநீக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறியிருக்கிறார். இலங்கையின் அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதியல்ல, பாராளுமன்றமே பிரதமரைப் பதவியிலிருந்து அகற்றமுடியும். அதனால் விக்கிரமசிங்கவை சிறிசேன பதவிநீக்கியது சட்டவிரோதமானது.106 ஆசனங்களுடன் விக்கிரமசிங்க தலைமையலான ஐக்கிய தேசிய முன்னணியே பாராளுமன்றத்தில் கூடுதலான ஆசனங்களைக் கொண்ட கட்சியாக விளங்குகிறது. சிறிசேனவுக்கும் ராஜபக்சவுக்கும் 95 எம்.பி.க்களின் ஆதரவே இருக்கிறது.  (மேலும்)  31. 10.18

._______________________________________________________________________

புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை  கௌரவிக்கப்பட்டனர்.

கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலத்தில் இவ்வருடம் தரம் ஜந்து புலமை பரிசு பரீட்சையில்  சித்தியடைந்த மாணவர்கள் இன்று(30)  கௌரவிக்கப்பட்டுள்ளIMG_5668னர்  வடக்கு மாகாண  ஆளுநர் றெஜினோல்ட் குரே அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சித்தியடைந்த  மாணவர்களை  வாழ்த்தி கௌரவித்துள்ளார். இவ்வருடம் கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்தில் 71 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 15 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதோடு,மாணவன் சூ.சத்தியன் 191 புள்ளிகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 9ம் நிலையை பெற்றுள்ளான். அத்தோடு 70 புள்ளிக்கு மேல் நூறு வீத சித்தியும், 100 புள்ளிக்கு மேல் 90 வீத சித்தியும் பாடசாலை பெற்றுள்ளதோடு, 65 மாணவர்கள் நூறு புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.  (புகைப்படங்கள்)

._______________________________________________________________________

ஜனாதிபதி அரச ஊழியர்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

அரச நிறுவனங்களினுள் மோதல் நிலைமைகளை தவிர்த்து சமாதானத்தை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.    ்ரீலங்கா சுதந்தர கட்சியின் மற்றும் பொதுஜன முன்னணியின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.கடந்த தினங்களில் அரச நிறுவனங்கள் சிலவற்றினுள் இடம்பெற்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் நாட்டிற்கு அவதூறு ஏற்படும் வகையில் சில அரசியல் கட்சிகள் செயற்படுகின்றன. இவ்வாறான நிலைமையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் சமாதானத்தை நிலைநாட்டி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.இதற்கமைய, அரச நிறுவனங்களினுள் வன்முறைக்கு இடமளிக்காதிருப்பது தொழிற்சங்க பிரதிநிதிகளின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

._______________________________________________________________________

சுரேஸ் பிரேமச்சந்திரனிடம்  ஆதரவு  கேட்ட ரணில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி விட்டதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அறிவித்துள்ள நிலையில் அக்கட்சியின் செயலாளரும், வன்னி மாவட்suresh-pட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனின் ஆதரவை தமது பக்கத்திற்கு பெற்றுக்கொள்வதற்காக ரணில், மஹிந்த தரப்புக்கள் பரஸ்பர முயற்சிகளை எடுத்துள்ளன.ரணில் விக்கிரமசிங்க ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரனை நேரடியாக தொலைபேசியில் அழைத்து ஆதரவினை கோரியதாக தெரியவருகின்றது. இதன்போது சுரேஸ்பிரேமச்சந்திரன், தங்களின் கட்சியிலிருந்து சில உறுப்பினர்கள் வெளியேறி விட்டதாக அறிய முடிகின்றது என்றும் எமது கட்சியின் மத்திய குழுவில் பேசியே அவ்விடயம் சம்பந்தமாக முடிவுகளை எடுக்க முடியும் என்றும் அவ்வாறு எடுப்பதென்றாலும் மக்கள் சார்ந்து நிபந்தனைகள் காணப்படுவதாகவும் பதிலளித்துள்ளார்.  இந்நிலையில் அந்த உரையாடல் முடிவடைந்துள்ளதாகவும் மீண்டும் ரணில் விக்கிரமசிங்க தொடர்பு கொள்வதாக கூறியதாகவும் அறிய முடிகின்றது.

._______________________________________________________________________

பாராளுமன்றத்தை பிற்போடும் வர்த்தமானியை இரத்து செய்ய கோரி மனு

பாராளுமன்றத்தை பிற்போடுவது சம்பந்தமாக வௌியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். பாராளுமன்றத்தை எதிர்வரும் 16ம் திகதி வரை ஒத்தி வைப்பதற்கான அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விஷேட வர்த்தமானி மூலம் கடந்த சனிக்கிழமை வௌியிடப்பட்டது.

._______________________________________________________________________

இந்தோனேசிய விமான விபத்து: 24 பைகளில் மீட்கப்பட்ட மனித உடல் பாகங்கள்

ஜகார்த்தா: இந்தோனேசிய லையன் ஏர் விமானம் விழுந்த ஜாவா கடindonற்பரப்பில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் 24 பைகளில் மனித உடல் பாகங்களை மீட்டுள்ளனர்.   விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல் பாகங்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் 132 பேரிடம் இருந்து மரபணு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பாகங்களை அடையாளம் காணும் பணி நடைபெறும் என்றும், ஒவ்வொரு பையிலும், ஒன்றுக்கும்  மேற்பட்ட மனிதர்களின் உடல் பாகங்கள் வைக்கப்படுவதால், ஒவ்வொரு உடல் பாகத்தையும் அடையாளம் காண்பது என்பது மிகவும் சிக்கலானது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.    (மேலும்)  31. 10.18

._______________________________________________________________________

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே அரசாங்கத்தை அமைத்தோம் - விஜேதாச ராஜபக்ஷ

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே ஜனாதிபதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தார் எனத் தெரிவித்த கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, அடுத்த வருடத்திற்கான வரவு, செலவுத் திட்டத்தினைத் தோற்கடித்து, புதிய அரசாங்கத்தை அமைத்திருக்கலாம். ஆனால் அதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தேவைப்படும். அதுவரை பொறுத்திருந்தால் நாடு மோசமான நிலையை அடையும் என்பதாலேயே உடனடியாக புதிய பிரதமரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது எனவும் குறிப்பிட்டார்.புதிய அமைச்சரவையின் கீழ் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் முதலாவதாக இன்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

._______________________________________________________________________

பி.பி.ஸி  சுந்தா  சுந்தரலிங்கம்  நினைவுகள்:

இன்றுடன் அவர் மறைந்து 16 வருடங்கள் நிறைவு

                                                   பேராசிரியர் சி. மௌனகுரு

(என் மனதில் பதிந்த ஆளுமைகளுள் ஒருவர்  அப்பலோ  சுந்தா  எனவும் பி.பி.ஸி சுந்தா எனவும் அழைக்கப்பட்ட  சுந்தரலிங்கம்  அவர்கள். சுந்தரலிங்கம்  அவர்களுக்கு 1999 sunthaஆம் ஆண்டு அக்டோபர். மாதம் அவுஸ்திரேலிய வானொலி சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தொலை பேசி  மூலம்  நான்  நிகழ்த்திய உரை. )

இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள மட்டக்களப்பு எனும் நகரில் இருந்து நான் பேசுகிறேன்.  அண்மையில் திறந்த இருதய சத்திரசிகிச்சைக்கு உள்ளாகி மறு உயிர்  பெற்ற நான் முதன் முதலாகச் சுந்தா அண்ணர் பற்றிப் பேச நேர்ந்ததது எனக்கும் அவருக்குமிடையேயுள்ள ஆறாத பந்தத்தின் ஓர் அம்சமாகவே கருதுகிறேன்.  சுந்தா அண்ணரின் வாழ்க்கையை மூன்றாக  வகுக்கலாம்  ஒன்று அவரது  வானொலி வாழ்வு.  இரண்டு  அவரது கலை  வாழ்வு.    மூன்று அவரது சமூக வாழ்வு.     அவரது வானொலி வாழ்வு மூளை என்றால்,   அவரது  கலை வாழ்வு இதயம் எனலாம்.   அவரது சமூக வாழ்வை உடல் எனலாம்.   (மேலும்)  30. 10.18

._______________________________________________________________________

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க : விஷேட உரை

குறுகிய அரசியல் வாதங்களில் இருந்து விலகி இலங்கையின் எதிர்காலத்திற்காக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு முன்னாள் ranil.vபிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று (29) மாலை இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  மனித உரிமைகளை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  நேற்று (28) மாலை ஜனாதிபதி மேற்கொண்ட விஷேட உரையில் தனக்கும் அமைச்சரவைக்கும் குற்றம் சுமத்தியதாகவும், 19 ஆவது சீர்திருதத்தின் அடிப்படையில் நாட்டில் நிறைவேற்று அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  பிரதமர் ஒருவரை தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பு சீர்திருத்தின் 42(4) சரத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வெல்லக்கூடிய அமைச்சரே நியமிக்கப்பட வேண்டும் எனவும் இருப்பினும் மஹிந்த ராஜபக்ஷவின் நியமனம் அரசியலமைபிற்கு முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   (மேலும்)  30. 10.18

._______________________________________________________________________

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டும்

ஐக்கிய தேசிய கட்சியினால் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தில், முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை தலைவராக்க முனைபவர்களே கலந்து கொள்ளவுள்ளதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸ பண்டார ஹேரத் தெரிவித்துள்ளார்.  இதனை விடுத்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பதற்காக எவரும் முன்னிலையாக போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டும். அவருக்காகவே நாளைய போராட்டத்தில் மக்கள் கலந்து கொள்கிறார்கள். அவர் இல்லாமல் ஸ்ரீ கொத்தவுக்கும் செல்வதில்லை, அலரிமாளிகைக்கும் செல்வதில்லை, அரசியலுக்கும் செல்ல போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

ஜனாதிபதிக்கு  எதிராக நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ; ஐக்கிய தேசியக் கட்சி

அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரான வகையில் நாட்டின் புதிய பிரதமரை நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நாளை கொழும்பில் பாரிmaithiri1ய எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் தீர்மானம் நாட்டின் கௌரத்தையும், அரசியலமைப்பினையும் மீறும் வகையிலும்  சுயநலமான தன்னாதிக்கமானதும் ஜனநாயகத்துக்கு முரணானது என கருதும் அனைத்து மக்களும் கட்சி மற்றும் நிற பேதமின்றி இந்த ஆர்பாட்டாத்தில் கைகோர்ரக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு விடுத்துள்ளது.  நாளை  இடம்பெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பதவியினை பாதுகாப்பதற்கோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை நிலைநாட்டும் சுயநலத்துக்காகவோ இந்த ஆர்பாட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கவில்லை. இருதரப்பு முரண்பாடுகளுக்காக மக்களின் ஆணையை துஷ்பிரயோகம் செய்யும் உரிமை ஜனாதிபதிக்கு இல்லை. ஜனாதிபதியின் சர்வாதிகார தீர்மானம் நாட்டின் ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் சீர்குழைத்துவிட்டதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியள்ளனர்

._______________________________________________________________________

உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு   ஜே.வி.பி கோரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள உறுதியற்ற நிலமை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை மேற்கொள்ள உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு மக்கள் விடுதலை முன்னணி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கோரிக்கை கடிதம் ஒன்றை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்க்க வேண்டியது அரசியலமைப்பினால் இல்லை, மக்கள் சக்கியினால் என டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

 28 வருடங்கள் இராணுவ வசம் இருந்த கட்டிடம் மீண்டும் ஒப்படைப்பு

மன்னார் நகர நுழைவாயிலில் சுமார் 28 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் இன்று (29) mannar fort1மதியம் மன்னார் நகர உதவி பிரதேசச் செயலாளர் திருமதி. சிவசம்பு கணகாம்பிகையினால் கூட்டுறவு திணைக்கள அதிகாரியிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.   மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான அவசர கலந்துரையாடல் கடந்த சனிக்கிழமை (27) காலை 10 மணி அளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.  இதன் போது கலந்து கொண்டிருந்த வடமாகாண ஆளுனர் ரெஜினோலட் குரே, மன்னார் நகர நுழைவாயிலில் இராணுவத்தின் வசம் காணப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்தினை உடனடியாக பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திடம் கையளிக்குமாறு பிரதேசச் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.   வடமாகாண ஆளுனரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த கட்டிடம் இன்று (29) மதியம் இராணுவத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டது.     (மேலும்)  30. 10.18

._______________________________________________________________________

இரு வாள்களுடன் யாழில் இளைஞன் கைது

யாழில்.இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில்  தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரையே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞனை கைது செய்யும் போது அவரிடமிருந்து இரண்டு வாள்களை தாம் கைப்பற்றியதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். மேலும் , மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது குறித்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு தொடர்பு இருப்பதாக கண்டறிந்ததை அடுத்தே இளைஞனை கைது செய்ததாகவும் , கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

._______________________________________________________________________

பிரேசில் அதிபர் தேர்தல்: சர்ச்சைக்குரிய வலதுசாரி தலைவர் பொல்சொனாரோ வெற்றி

பிரசாரத்தின்போது பொல்சொனாரோ.

பிரேசிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், சர்ச்சைக்குரிய வலதுசாரி தலைவர் ஜெயிர் பொல்சொனாரோ (63) வெற்றி பெற்றுள்ளார்.பிரேசிலில் 30 ஆண்டுகளுக்கு மbrazுன்னர் நடைபெற்ற சர்வாதிகார ஆட்சியை ஆதரித்துப் பேசியதற்காக கடும் கண்டனத்துக்குள்ளான அவர், ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பின் பேரில் மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.  பிரேசிலின் புதிய அதிபர், துணை அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த மாதம் 7-ஆம் தேதி நடைபெற்றது. இதில், அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட ரியோ டி ஜெனீரோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயிர் பொல்சொனாரோ முதலிடத்தைப் பிடித்தார். எனினும், வெற்றி பெறுவதற்குத் தேவையான 50 சதவீத வாக்குகளை அவர் பெறவில்லை. அதையடுத்து, அவருக்கும், அவருக்கு அடுத்த இடத்தைப் பிடித்த ஹெச்பிஏ கட்சி வேட்பாளர் ஃபெர்னாண்டோ ஹதாதுக்கும் இடையே இரண்டாவது சுற்றுத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 55 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று ஜெயிர் பொல்சொனாரோ வெற்றி பெற்றார். ஃபெர்னாண்டோவுக்கு 45 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே கிடைத்தன.    (மேலும்)  30. 10.18

._______________________________________________________________________

முன்னாள்  பிரதமருக்கான பாதுகாப்பு நீக்கம்; ரணிலுக்கு 10 பேர் பாதுகாப்பு

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட பிரதமருக்கான பாதுகாப்பு பிரிவு அகற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிரதமர் பதவிக்கான பாதுகாப்பை நீக்குமாறு, பிரதமர் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமசிங்கவிற்கு குறித்த உத்தரவை கடிதம் மூலம் அனுப்பியுள்ளார். அதற்கமைய முன்னாள் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள பிரதமருக்கான பாதுகாப்பு மற்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலதிகமான விசேட அதிரடிப்படை பாதுகாப்பை நீக்குமாறு அவர் அவ்வுத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.அதன் அடிப்படையில் பிரதமரின் பாதுகாப்புக்காக 10 பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்குமாறு அவர் மேலும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

._______________________________________________________________________

விக்கினேஸ்வரனின் புதிய கட்சி –ஒன்றும் புதிதல்ல

கவிஞர். எழுத்தாளர, சுயாதீன ஊடகவியலாளர் கருணாகரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்

நேர்கண்டவர்: ஆர். ராமகிருஸ்ணன் (இந்தியா)

 

விக்கினேஸ்வரனைப் பொறுத்தவரை அவருக்கு அப்படியான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய சூழல் தவிர்க்க முடியாத நிலையாகும். ஆனால் அதனால் மக்களுக்கு என்னkarunakaran interview பயன் என்றே நாங்கள் பார்க்க வேண்டும். தமிழரசுக் கட்சிக்கு எதிரான ஆவேசத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழரசுக் கட்சி தனக்கு உருவாக்கிய நெருக்கடி, செய்த அநீதி என்பவற்றுக்கான பதிலடியாகவே இதைச் செய்துள்ளார். தமிழரசுக் கட்சி மீதும் கூட்டமைப்பின் மீதும் - குறிப்பாக சுமந்திரன், சம்மந்தன் போன்றோர் மேலுள்ள - அதிருப்தியாளர்கள் விக்கினேஸ்வரனின் நிலைப்பாட்டை ஏற்றிருக்கிறார்கள்.  ஆனால், விக்கினேஸ்வரன் தன்னுடைய புதிய கட்சியின் கோட்பாடு, நிலைப்பாடு, செயற்பாட்டு வழிமுறைகள், அதன் கட்டமைப்பு போன்ற எதைப்பற்றியும் தெளிவாக்கவேயில்லை.  பிராந்திய, சர்வதேச அரசியல் சூழல் பற்றியோ, உலகளாவிய பொருளாதார நிலைமைகளைப் பற்றியோ அக்கறைப்பட்டிருப்பதாகவும் தெரியவில்லை.  “தமிழ் மக்களின் விடுதலைக் குரலையும் அரசியல் அபிலாஷையையும் விட்டுக் கொடுக்க முடியாது. இன்று தமிழர்களுக்கு சுய பாதுகாப்பு அவசியம்...” என்பதை மட்டும் வலியுறுத்தியிருக்கிறார்.  இதுவொன்றும் புதிய சேதியல்ல. இதைத்தான் முன்பிருந்தவர்களும் சொன்னார்கள். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர முன்னணி (சுரேஸ் பிரேமச்சந்திரன்) போன்றோரும் இதையே இப்பொழுது சொல்லி வருகிறார்கள்.   (மேலும்) 29. 10.18

._______________________________________________________________________

உடனடியாக மாகாணசபைதேர்தல்கள்- மகிந்த அறிக்கை

மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதே தனது நோக்கம் என  புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.mahinda amd srisena    புதிய ஜனநாய ஆரம்பமும் வெறுப்புணர்வு அரசியலை நிராகரித்தலும் என்ற அறிக்கையொன்றை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி அந்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.   பிரதமர் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவதுஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கூட்டணியிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து ஐக்கியதேசிய கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் முடிவிற்கு வந்தது. இதன் பின்னர் புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பு ஜனாதிபதியின் தோள்களில் சுமத்தப்பட்டது.புதிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்துடன் பிரதம மந்திரி பதவியை ஏற்குமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இலங்கை இன்று நிச்சயமற்ற  நிலையில் காணப்படுகின்றது. ஜனாதிபதியையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் கொலை செய்வதற்கான சதி முயற்சிகள் குறித்த தகவல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன.இந்த சதி முயற்சியில் ஈடுபட்டவர்கள் தங்கள் நடவடிக்கைகளால் தங்களை அம்பலப்படுத்துகின்றனர்.நாடு தொடர்ச்சியாக குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளது.     (மேலும்) 29. 10.18

._______________________________________________________________________

வேலிக்கு வைத்த முள் காலுக்குத் தைத்த கதை

எஸ்.எம்.எம்.பஷீர்

.chandrika    இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னரான அரசியல் வரலாற்றில் இப்படியும் நடக்குமா என்று இலங்கை மக்களை  ஒரு புறத்தில் அதிர்ச்சியிலும் மறுபுறத்தில் ஆச்சரியத்திலும்  ஆழ்த்திய  சம்பவங்கள் பல அவற்றில் எல்லாம் குறிப்பிடத்தக்க சில சம்பவங்கள் , இன்றுவரை அரசியலில் சமூக , இன சிந்தனைத் தளங்களில் , காரண காரிய விளைவுகளுடன் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டவை. பரந்தளவில் செல்வாக்கு செலுத்துபவை.   அவற்றில் ஒன்று இலங்கையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்து , சிங்கள மொழியை அரசகரும மொழியாக்க வாக்குறுதி அளித்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ,பௌத்த சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்று ஆட்சி பீடம் ஏறிய சுதந்திரக் கட்சியின் முதல்  பிரதமர் எஸ். டப்ளியு .ஆர்.டி பண்டாரநாயகாவை   , அவரின் வீட்டில் வைத்து   , தல்டுவ சோமராம தேரோ எனப்படும் ஒரு பௌத்த பிக்கு  1959 இல் சுட்டுக் கொன்றது.    (மேலும்) 29. 10.18

._______________________________________________________________________

தன் இனத்தை அழிக்கிற கோடாலிக் காம்புகள்!

ஒரு கதை சொல்லட்டா............?

ஒரே ஒரு பூமி பந்தில் கனடா என்று ஒே ஒரு நாடு உள்ளதாம். அதில் ஒந்தாரியோ என்ற பெயரில் ஒரு மாகாணம் இருக்குதாம். அதில் மார்க்கம் என்ற ஒரு சிறு நகரமும் அதில்vote here  Ward 7 என்று ஒரு வட்டாரமும் அமைந்து உள்ளதாம்.  உந்த வட்டாரம் 7 இல் அதிகப்படியாக வாழ்வது கல், மண், புல், புடுக்கு எல்லாம் தோன்ற முன் தோன்றின என்று தன்னை தானே பெருமைப்படும் தமிழ் இனத்தை சார்ந்தவர்களாம்.   மார்க்கம் நகருக்கு உள்ளுராட்ச்சி தேர்தல் அறிவித்தவுடன் இந்த வட்டாரத்தில் அதிகப்படியாக தமிழ் மக்கள் வாழ்வதால் அவர்களில் இருந்து திறமையான ஒருவரை தெரிவு செய்து மாநகர சபைக்கு அனுப்ப 100 வீத வாய்ப்புகள் இருந்ததாம். ஆனால் அப்படி வெல்வதற்கு ஒரே ஒரு தமிழர் தான் போட்டியிட்டல் வேண்டும் என்றும் அப்படி இல்லாவிடின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டுவிடும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாம்.  (மேலும்) 29. 10.18

._______________________________________________________________________

ரணில் மீது ஜனாதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்!!


2015 ம் ஆண்டு பெற்றுக்கொண்ட அரசியல் வெற்றியை சிறுமைப்பmaitjiripala Sடுத்தும் , கண்ணியமற்ற அரசியல் செயற்பாடுகளில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் இன்றி மாலை விசேட உரையொன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி கொலை முயற்சியில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரும் மற்றுமொரு அமைச்சரும் தொடர்பு கொண்டுள்ளனர். மேலும், ஈஏபி உடன்படிக்கை மோசடியானது, அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். புதிய பிரதமர் நியமனம் அரசியல் அமைப்புக்கு அமைவானதெனவும், அரசில் நிபுணர்களின் ஆலோசனையுடனேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் வாக்குறுதிக்கு பொருந்தாத அரசியலை முன்னேடுக்க முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சித்த காரணத்தினாலேயே அவர் பதவி நீக்கப்பட்டார். மேலும், மத்திய வங்கியின் முறி மோசடி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் பதற்றமடைந்தார் என ஜனாதிபதி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

._______________________________________________________________________

அரசாங்க ஊடகங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிப்பு

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக சரத் கோன்கஹ நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இலங்கை சுயாதீன தொலைக்காட்சி மற்றும் இலங்கை ஔிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக பேராசிரியர் சோமரத்ன திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பதில் தலைவராக வசந்த பிரியா ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

._______________________________________________________________________

இலங்கை மாணவர் கல்வி நிதியம் 30 ஆண்டுகள் நிறைவு

2018 - 2020 பரிபாலனசபை தெரிவு

இலங்கையில் நீடித்த போர் அநர்த்தங்களினால் பெற்றவர்களையும் குடும்பத்தின் மூல உழைப்பாளியையும் இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு  கடந்த30-1 1988 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவிலிருந்து உதவி வரும் தன்னார்வ தொண்டுநிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் முப்பது ஆண்டு நிறைவு நிகழ்வும்  30 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டமும் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை மெல்பனில் நடைபெற்றது.  நிதியத்தின் தலைவர் திரு. விமல் அரவிந்தனின் தலைமையில் மெல்பனில்,  வேர்மண் தெற்கு சமூக மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தின் தொடக்கத்தில்  போர் அநர்த்தங்களினாலும் இயற்கையின் சீற்றத்தினலும் மடிந்த இன்னுயிர்களின் ஆத்மசாந்திக்காக மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. (மேலும்) 29. 10.18

._______________________________________________________________________

பேஸ்புக் களியாட்டம் - பெண் ஒருவர் உட்பட 58 பேர் கைது

ஹப்புதளை, ஹெரகல வீதியின் விகாரகல பகுதியில் வாடகை வீடு ஒன்றில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்றில் பெண் ஒருவர் உட்பட 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ஹெரோயின், கஞ்சா, போதை மாத்திரை, மதுபானம் மற்றும் பல்வேறு வகையான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். இவர்கள் பதுளை, இரத்தினபுரி, பஸ்ஸரை மற்றும் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் ஹப்புதளை ​பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

._______________________________________________________________________

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் மஹிந்தவிற்கு ஆதரவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பிரதமர் மஹிந்த ராmahinda-1ஜபக்ஷவின் பங்குபற்றுதலுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் சகல கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.  அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.  மேலும் அந்த எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்ற பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவினால் இதன்போது முன்வைக்கப்பட்டது.  (மேலும்) 29. 10.18

._______________________________________________________________________

சிரியாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது; மனிதகுலத்துக்குப் பாகிஸ்தானால் அதிகபட்ச தீவிரவாத அச்சுறுத்தல்: ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வில் தகவல்

‘‘உலகில் மனிதகுலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக, சிரியாவை பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் இருக்கிறது’’ என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெoxfordரிவிக்கப்பட்டுள்ளது.  ‘மனித குலத்துக்கு ஆபத்து - உலக தீவிரவாத அச்சுறுத்தல்’ என்ற தலைப்பின் கீழ் (ஜிடிடிஐ), இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ‘ஸ்ட்ரேடஜி போர்சைட் குரூப்’ (எஸ்எப்ஜி) என்ற அமைப்பும் இணைந்து உலக அளவில் தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து விரிவான ஆய்வு நடத்தின. எந்தெந்த நாடுகளில் எத்தனை தீவிரவாத இயக்கங்கள் உள்ளன, அவற்றின் செயல்பாடுகள், அச் சுறுத்தல்கள் போன்ற அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இதன் 80 பக்க அறிக்கை வெளியாகி உள்ளது.  தற்போது சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் வன்முறை அதி கரித்துள்ளது. ஆனால், சிரியாவை விட பாகிஸ்தான் மனித குலத்துக்கு 3 மடங்கு அதிகமாக தீவிரவாத அச்சுறுத்தலாக உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. (மேலும்) 29. 10.18

._______________________________________________________________________

கிளிநொச்சில் புதிய பிரதமரை வரவேற்கும் மகிழ்ச்சி கொண்டாட்டம்

கிளிநொச்சியில் பொதுஜன முன்னணியின் ஏற்பாட்டில் புதிய பிரதமரை வரவேற்கும் மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இன்று பிற்பகல் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பொதுஜன முன்னணி கட்சி அலுவலகத்திற்கு முன்பாக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் க.ஜெயகுமாரன் அவர்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது பட்டாசுகள் கொழுத்தி தமது மகிழ்ச்சியை தெரிவித்ததுடன், பொங்கலும் பரிமாறப்பட்டது. இதன்போது கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

._______________________________________________________________________

பெற்றோலிய வள கூட்டுத்தாபன ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!

தெமடகொட பெற்றோலிய வள கூட்டுத்தாபன வளாகத்தினுள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யுமாறு தெரிவித்து அதன் ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.இன்று இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சம்பவத்தில் ஒருவர் பலியான நிலையில் மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணத்துங்க இன்று பிற்பகல் பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தினுள் செல்ல முயற்சித்த போது பணியாளர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.அதனை தொடர்ந்து, அர்ஜுன ரனத்துங்கவின் மெய்பாதுகாவலர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

புதிய பிரதமர் நியமனம்;  அரசியலில் எதுவும் நடக்கும். எப்படியும் நடக்கும்”

-          கருணாகரன்

மழை தூறிக்கொண்டிருந்த முன்னிரவில், இயக்கச்சியில் கடையொன்றின்  விறாந்தையில் நின்றபடி தேநீர் பருகிக் கொண்டிருந்தோம். எங்களுக்குப் பக்கத்தில் இன்னும் இரhoppersண்டுபேர் வெளி இருக்கையில் உட்கார்ந்திருந்தனர். இருந்தாற்போல ஒருவர் துடித்துப் பதைத்தபடி எழுந்து “மகிந்தவைப் பிரதமராக்கீட்டாங்கள்... இந்தா செய்தி வந்திருக்கு. படமும் போட்டிருக்கு...” என்றபடி கையிலிருந்த மொபைலைக் காட்டினார். முகமும் குரலும் பரபரத்துக் கிடந்தது.   இதை யார்தான் நம்புவார்கள்?  ஆனால், அவர் சொன்னது உண்மையே. கடைக்காரர் தொலைக்காட்சியை இயக்கினார். நேரலையில் பதவியேற்புக் காட்சிகளும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. கூட்டம் கூடியது. ஆளாளுக்கு வியப்பில் ஆழ்ந்து கிடந்தார்கள்.  “அரசியலில் எதுவும் நடக்கும். எப்படியும் நடக்கும்” என்பதற்கு இன்னொரு சாட்சிபூர்வமான உதாரணம் இந்தச் சம்பவம். 26.10.2018 வெள்ளிக்கிழமை இரவு இலங்கையில் நடந்திருக்கும் புதிய பிரதமர் நியமனம், அண்மையில் ஏற்பட்ட இரண்டாவது அரசியல் ஆச்சரியம   (மேலும்) 28. 10.18

._______________________________________________________________________

யாருக்கு யார் ஆதரவு ?

 

பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியின் பின்னணியில் சிறுபான்மைக்RM கட்சிகள் பல தமது ஆதரவை வௌிப்படையாக அறிவித்துள்ள நிலையில், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இதுவரை தமது இறுதித் தீர்மானத்தை வௌியிடவில்லை.  இந்நிலையில், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தேசிய தொழிலாளர் சங்கம் என்பனவும் தமது ஆதரவை ரணில் விக்ரமசிங்கவிற்கு அளிப்பதாக இன்று (27) முற்பகல் அலரிமாளிகையில் இடம்பெறற் ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தனர். எனினும், தமிழ் முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் வே. இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி தனது ஆதரவை இதுவரை வௌியிடாத நிலையில், நாட்டிற்கு நன்மை பயக்கக்கூடிய விதத்தில் இருக்கும் எவர் பிரதமராக வந்தாலும் ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்திருந்தார்.     (மேலும்) 28. 10.18

._______________________________________________________________________

இலங்கை நெருக்கடி: 'படுமோசமான அரசியல் கலாசாரத்திற்குள் நாடு வீழ்ந்துவிட்டது'

வீரகத்தி தனபாலசிங்கம்

இலங்கையின் இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் தேசிய ஐக்கிய அரசMahinda-Maithripala-Hug2 (1)ாங்கத்தை அமைத்தபோது தேசிய இனப்பிரச்சனை உட்பட நாடும் மக்களும் எதிர்நோக்குகின்ற முக்கியமான பிரச்சனைகளுக்கு கருத்தொருமிப்பின் அடிப்படையில் இணக்கபூர்வமான தீர்வுகளைக் காண்பதற்கான அரிதான வாய்ப்பு இது என மக்கள் நம்பினார்கள்.  அரசாங்கத்தின் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனநாயகத்தை மீட்டெடுத்து புதியதொரு அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிக்கப் போவதாகவும் உறுதியளித்தார்கள். ஆனால், இன்று நாட்டில் தோன்றியிருக்கும் அரசியல் நெருக்கடி முன்னெப்போதையும்விட படுமோசமான அரசியல் கலாசாரத்திற்குள் நாடு வீழ்ந்துவிட்டது என்பதையே வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. கட்சி அரசியல் போட்டிக் கலாசாரத்தில் இருந்து விடுபட்டு, கடந்த கால அனுபவங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்று ஆரோக்கியமான சிந்தனைகளை அரவணைத்துக் கொள்ளக்கூடியவர்களாக இலங்கை அரசியல்வாதிகள் ஒருபோதும் மாறப்போவதில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.   (மேலும்) 28. 10.18

._______________________________________________________________________

பல்துறை ஆற்றலாளரான இளங்கோவனது எழுத்துப் பணி மிகவும் பாராட்டத்தக்கது..! 

மதுரையில் நடைபெற்ற நூலறிமுக நிகழ்வில் கருத்துரை. .!

"ஈழத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் குறித்து நாம் அறிந்துகொள்வதற்கு மிகச்சிறந்த ஆவணமாக வி. ரி. இளங்கோவனின் "ஈழத்து மண்மாறவா மனிதர்கelangovanள்"  நூல் விளங்குகிறது. சர்வதேசப் புகழ்பெற்ற அரசியல் ஆசான், தலைசிறந்த எழுத்தாளர்கள் - கலைஞர்கள், கல்விமான்கள் - புத்திஜீவிகள், சிறந்த சமூகப் பணியாளர்கள், தமிழ் ஆய்வறிஞர்கள் உட்பட பலர் குறித்து நாம் தெரிந்துகொள்வதற்கான வரலாற்றுப் பதிவாக இந்நூலைத் தந்துள்ளார். இந்த ஆளுமைகள் எல்லோருடனும் இளங்கோவன் நன்கு பழகி அறிந்து பெற்றுக்கொண்ட அனுபவங்களை இந்நூலில் விவரித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த எமக்கு இந்த ஆளுமைகள் குறித்து பல புதிய தகவல்களை நாம் தெரிந்துகொள்ள இந்நூல் உதவுகிறது. பல்துறை ஆற்றலாளரான இளங்கோவனது இப்பணி மிகவும் பாராட்டத்தக்கது."    (மேலும்) 28. 10.18

._______________________________________________________________________

 தனக்கே அதிக பெரும்பான்மை; உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டவும்

பாராளுமன்றத்தில் தனக்கே அதிக பெரும்பான்மை இருப்பதாகவும், உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிranil.vங்க கூறியுள்ளார். தற்போது அலரி மாளிகையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் இணைந்து தற்போது அலரி மாளிகையில் தற்போது விஷேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவரே பிரதமர் என்றும், அந்தப் பெரும்பான்மை தனக்கு இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இந்த ஊடக சந்திப்பில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஹெல உறுமயவின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

._______________________________________________________________________

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர்களுக்கு எதிர்ப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதனை தொடர்ந்து நேற்று இரவு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. புதிய பிரதமரின் நியமனத்திற்கு எதிராக விசேட உரையொன்றை நிகழ்த்துவதற்காக முன்னாள் அமைச்சர்கள் சிலர் அங்கு செல்ல முற்பட்ட நிலையில், பணியாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் பின்னரே அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

._______________________________________________________________________

இலங்கை பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஷ; “நான்தான் பிரதமர்” என்கிறார் ரணில்

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார்.Ranil and sridena  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவியேற்றுக்கொண்டதாக ஜனாதிபதி செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இலங்கையில் ஜனாதிபதியாக இலங்கை சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன பதவி வகிக்கின்ற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக பதவி வகித்தார். அந்தக் கட்சியின் போட்டிக்கட்சியான மைத்திரிபால சிரிசேனவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஒரு கூட்டணி அரசாங்கத்தை   ஆனாலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் நீடித்து வந்தன.   (மேலும்) 27. 10.18

._______________________________________________________________________

புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்றார்:  ஜனாதிபதியிடம் இருந்து ரணிலுக்கு விஷேட கடிதம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுRanilmahindaள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்.ரணில் விக்ரமசிங்கவை உடன் அமுலுக்கு வரும் வகையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயாளர் கடிதம் ஒன்றை அனுப்பி ரணில் விக்ரமசிங்கவிற்கு இதனை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அரசியலமைப்பு திருத்தின் 42(4) சரத்தின் பிரகாரம் இலங்கை சோசலிச குடியரசின் பிரதமர் தன்னால் நியமிக்கப்படுவதாகவும், தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இலங்கை சோசலிச குடியரசின் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

‘த ஹிந்து’வின் குழப்பம் மற்றும் றோ விவகாரத்தில் என்.ராமின் ட்வீட் செய்தி

                                              லக்சிறி பெர்ணாண்டோ

காலை ( மு.ப 00.00, 22ஒக்ரோபர் 2018) த.ஹிந்துவில் ஏ.எஸ். பன்னீர்செல்வன் “தூதரைக் குற்றம் சொல்லாதீர்கள்” என்கிற தலைப்பில், ஐந்து நாட்களுக்கு முன்பு அதே பத்தLaksiri-Fernandoிரிகையின் முன் பக்கத்தில் மீரா சிறினிவாசன் என்கிற நிருபரினால் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய முன் பக்கச் செய்தியான “றோ அமைப்பு தன்னைக் கொலை செய்யச் சதித்திட்டம் வகுத்துள்ளது என்;று ஸ்ரீலங்கா ஜனாதிபதி குற்றம் சாட்டுகிறார்” என்பதைக் குறித்து ஒரு செய்தியை எழுதியிருந்தார், அதில் போலித்தனமான கூற்றுகளுக்காக ஒரு பொறுப்பான ஊடக அமைப்புக்கு செயல்திறனற்ற பேச்சாக இருந்தாலும் உண்மையைச் சொல்வதற்காக அதை அறிவிக்கவேண்டியது தவிர்க்க முடியாததாகும் என்றும் எழுதியிருந்தார். த ஹிந்து அல்லது மீரா சிறினிவாசன்தான் அந்த தூதர். அந்தச் செய்தி என்ன?  மிகவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதான ஒரு செய்தியை அறிவிப்பது அல்லது அதை எழுதிய ஊடகவியலாளர் நியாயமான சரிபார்ப்பை மேற்கொண்ட பின்னரே வெளியிடுவது கட்டாயமாகும். எனினும் அந்தச் செய்தி முற்றிலும் உண்மை அல்லது உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை என்று கோரிக்கை விடுவது ஏற்றுக்கொள்ள முடியாததும் மற்றும் நியாயமற்றதும் ஆகும்.   (மேலும்) 27. 10.18

._______________________________________________________________________

நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 19

மூவின மக்களும் செறிந்து வாழும் தலைநகரில் மூவினத்திலிருந்தும் நகரபிதாக்கள்

கொழும்பு மாநகரின் முதல் மேயர் இரட்ணசோதி சரவணமுத்து

                                                                                              ரஸஞானி

களனி கங்கைக்கும் காலிமுகத்தை தழுவும் இந்து சமுத்திரத்தாய்க்கும் மத்தியில் இலங்கையின் தலைநகரமாக மிளிரும் கொழும்பில் மூவின மக்களும் செறிந்துவாழ்கினold town hall்றமையால் இங்கு 1865 ஆம் ஆண்டு முதல் தெரிவாகும் நகரபிதாக்களை நினைத்துப்பார்க்கும்போது, சுதந்திரத்திற்கு முன்னர் இங்கு பிரித்தானிய பிரஜைகள் தலைவர்களாகவும் அதன் பின்னர் இலங்கைப்பிரஜைகளான மூவினத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் மேயர்களாகவும் தெரிவாகியிருக்கும் தகவலை அறிந்துகொள்ள முடிகிறது.கடந்த 2015 ஆம் ஆண்டு, கொழும்பு மாநகர சபையின் 150 ஆவது பிறந்த தின கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாகவும் நடந்திருக்கிறது. பிரித்தானியாவின் ஆளுகைக்குள் இருந்தமையால் இந்த விழாவுக்கு பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் பிரதம விருந்தினராக வருகைதந்திருந்தார். முன்னைய தொகுதிவாரி தேர்தல் முறையின்போது, கொழும்பு மத்தி - கொழும்பு வடக்கு - கொழும்பு தெற்கு என மூன்று பிரதேசங்களிலுமிருந்து நாடாளுமன்றிற்கு பிரதிநிதிகள் தெரிவாகினர். மாநகர சபைத்தேர்தல்களிலும் வட்டார ரீதியில் உறுப்பினர்கள் தெரிவாகினர்.   (மேலும்) 27. 10.18

._______________________________________________________________________

 

அரசியலமைப்பு நெருக்கடி உருவாகலாம்- டைம்ஸ் ஒவ் இந்தியா

இலங்கையில் அரசமைப்பு நெருக்கடியொன்று உருவாகலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிப்பதாக இந்தியாவின் டைம்ஸ் ஒவ் இந்தியா தெரிவித்துள்ளது. மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றுள்ள செய்தி குறித்த தனது செய்தியிலேயே டைம்ஸ் ஒவ் இந்தியா இதனை தெரிவித்துள்ளது. அரசமைப்பின் 19 வது திருத்தம் பெரும்பான்மை இல்லாத நிலையில் பிரதமரை பதவிவிலக்குவதற்கு அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ள அரசியல் ஆய்வாளர்கள் இதன் காரணமாக மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்கும் சிறிசேனவின் முடிவினால் அரசமைப்பு நெருக்கடி ஏற்படலாம் என தெரிவிக்கின்றனர் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.  ராஜபக்சவிற்கும் சிறிசேனவிற்கும் 95 ஆசனங்களே உள்ளன ரணில் விக்கிரமசிங்கவிற்கு 106 ஆசனங்கள் உள்ளன என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

._______________________________________________________________________

வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளை நேற்று (25) மாலை அழைத்து கலந்துரையாடியுள்ளார்.

மகளீர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள் கூட்டுறவு உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறை உள்ளிட்டவற்றின் அதிகாரிகளை அழைத்த ஆளுநgovernor-261018ர் மாகாணசபை ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப்பணிகள் தொடர்பிலும் பணிகள் முடிவடையாது இருக்கும் விடயங்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். மகளீர்விவகார அமைச்சின் ஊடாக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் மக்களுக்கான சேவைகள் உடனடியாக மக்களுக்கு முன்னுருமை அடிப்படையில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். மக்களுக்கு சிறந்த சேவையினை பெற்றுக்கொடுப்பதற்காக அனைத்து அதிகாரிகளும் தம்மை தயார் படுத்திக் கொள்வது அவசியமாகின்றது என்று தெரிவித்த ஆளுநர். சிறு சிறு தொழிற்சாலைகளை, கைத் தொழில்களை மேற்கொள்ள முன்வருபவர்களுக்கு சிரமம் கொடுக்காது அனைத்து வசதிகளையும் அனுமதிகளையும் விரைவாக வழங்கக் கூடிய வகையிலான அலுவலகம் ஒன்றினை அமைச்சில் நிறுவிக்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் ஆளுநரின் செயலர் இலட்சுமணன் இளங்கோவன், உதவிச் செயலர் ஏ.எக்ஸ்.செல்வநாயகம், ஆளுநரின் பிரதியேக செயலர் மற்றும் இணைப்புச் செயலர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.     (மேலும்) 27. 10.18

._______________________________________________________________________

கண்ணன் கோவில்  நிதி மோசடி ஒரு மாத்திற்குள் பதிலளிக்க வேண்டும் கரைச்சி உதவி பிரதேச செயலர் தமிழினி

கிளிநொச்சி கண்ணன் கோவிலில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் எழுப்பட்ட குற்றச்சாட்டுக்கள்  தொடர்பில் ஒரு மாதத்திற்குள்  பழைய நிர்வாகம் பதிலளிக்க வேண்tamiliniடும், அத்தோடு மாவட்டச் செயலக  உள்ளக கணக்காய்வுக்கும் உட்படுத்தப்படும் எனவும்  கரைச்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சண்முகலிங்கம் தமிழினி தெரிவித்துள்ளார். இன்று 26-10-2018  கிளிநொச்சி கண்ணன் கோவில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. இதன் போது  நீண்ட காலமாக  செயற்பட்டு வந்த நிர்வாகத்தின் மீது   கணக்கறிக்கையினை ஆதரமாக கொண்டு உறுப்பினர்கள் நிதி மோசடிக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதன் போது  நிர்வாகத்திற்கு எதிராக 16 க்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கணக்கறிக்கையின் படி 15 இலட்சத்திற்கு மேற்பட்ட நிதி மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.   (மேலும்) 27. 10.18

._______________________________________________________________________

படையினர் வசமுள்ள காணிகளை மீள ஒப்படைக்கும் பணிகள் தீவிரம்

வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்தார்.டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.அவரது உத்தரவை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திரு.திருஞானசோதி குறிப்பிட்டார். காணிகளை விடுவிப்பதில் நிலவுகின்ற நடைமுறை சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. தீர்வு வழிகளும் ஆராயப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

._______________________________________________________________________

மனித உரிமைகள் விடயத்தில் கடந்த அரசை விட தற்போதைய அரசாங்கம் அதிக கரிசணையுடன் செயற்படுகிறது: இந்தியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

யுத்தம் காரணமாக இந்திய அகதிமுகாம்களில் வாழும் இலங்கைத் தrauff indiaமிழர்களை மீள்குடியேற்றுவதில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அடிப்படை மனித உரிமைகள் விடயத்தில் கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசு அதிக கரிசணையுடன் செயற்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.  இந்தியாவில் நடைபெறும் “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இஸ்லாமிய சமுதாயம் நிகழ்த்தும் நினைவேந்தல்” நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (26) சென்னை சென்றடைந்தார்.   (மேலும்) 27. 10.18

._______________________________________________________________________

ஜனாதிபதி கொலை சூழ்ச்சி தொடர்பில் 89 பேரிடம் வாக்குமூலம்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் சதிதிட்டம் தொடர்பில் இதுவரையில் 89 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக, காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அவர்களுள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர்கள் உட்பட 47 காவற்துறையினர் உள்ளடங்குகின்றதாக அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இந்த கொலை முயற்சி சதிதிட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் நாலக்க டி சில்வா எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

காலிமுகத்திடலில் கறுப்புச் சட்டைப் போராட்டம்

அரசைக் கலங்க வைத்த மக்களின் உணர்வோட்டம்

- ஸர்மிலா ஸெய்யித்

காவி எழுச்சியை மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்ட பேரினவாத அரசுக்கு கறுப்புச் சட்டையின் எழுச்சி பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.t90-   ஆர்பாட்ட நேரம் காலை பத்து மணி என்றிருந்தபோதும் 9.30க்கெல்லாம் அவ்விடத்தில் இருந்தேன். துடிப்பான இளைஞர் படையைக் கண்டபோது உற்சாகமாகவும் நிறைவாகவும் இருந்தது. இந்தப் போராட்டத்தை யார் ஏற்பாடு செய்தார்கள் என்ற விபரங்கள் தெரிந்திருக்கவில்லை. ஆனால் எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்ற முடிவில்தான் அவ்விடம் சென்றிருந்தேன்.   சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வருகை தருவோரை ஒழுங்குபடுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். பாதையை மறைக்க வேண்டாம், போக்குவரத்துக்குத் தடைஏற்படக் கூடாது, அனைவரும் மைதானத்திற்கு வாருங்கள் என்று கிட்டத்தட்ட கத்திக் கொண்டிருந்தார்கள்.   ”நாங்கள் கற்ற சமூகம், அதன் படி நடப்போம்” என்றும் பல முறை சொன்னார்கள்.   (மேலும்) 26. 10.18

._______________________________________________________________________

me too''    மீ ரூ என்கிற கோஷம்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-25.10.18


'மீ டூ'என்ற கோஷத்துடன் உலகில் உள்ள பல பெண்கள், வேலைசெய்யme too handுமிடங்களிலும், படிக்குமிடங்களிலும்.அத்துடன் அவர்கள் நம்பிக்கையாகப் பழகும் ஆண்கள்; அவர்கள் அனுபவித்த பாலியல் கொடுமைகளைச் சொல்ல அக்டோபர் மாதம் 5ம் திகதி 2017ம் ஆண்டிலிருந்து முன்வந்திருக்கிறார்கள்.  2017ம் ஆண்டு அமெரிக்காவின் ஹொலிவுட் படவுலகின் பிரபலமான ஹார்வி வெயின்ஸ்ரெயின் என்பரின் பாலியல்க் கொடுமைகளைச் சொல்வதை நியுயோர்க் டைம்ஸ் என்ற பத்திரிகை வெளியிட்டது. வேயின் ஸ்ரெயினின் காமலீலைகள் பற்றிய கொடுமைச் செயல்களை அமெரிக்க நடிகைகளான றோஸ் மக்கோவன்,ஆஷ்லி றட் என்ற நடிகைகள் அம்பலப் படுத்த முன்வந்தனர். அதைத் தொடர்ந்து பிரித்தானிய நடிகையான றொமெலா கைரி என்பவரும் 9.10.18ல் முன்வந்தார்.   அதைத் தொடர்ந்து,மெரில் ஸ்ரிப், ஆன்ஜலீனா ஜோலி,க்னவுத் பாhல்ட்ரொவ் போன்ற நடிகைகளின் போராட்டக் குரல்களுக்கு, அமெரிக்க முன்னாள் ஜானாதிபதி பராக் ஓபாமா, ஹெலிவுட் நடிகர் லியனாடோ டிகாப்பிரியோ, பிரித்தானிய நடிகர் பெனிட்க்ட் கம்பபார்ச் என்போர் 'மீ டூ' பெண்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வெயின்ஸ்ரெயினுக்கு எதிர்ப்புக் குரல்களை எழுப்பினர்.   (மேலும்) 26. 10.18

._______________________________________________________________________

கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் கைவிடப்பட்டுள்ளது

கிளிநொச்சி நகரில் அமைக்கப்பட்டு வந்து மத்திய பேரூந்து நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள்  பல மாதங்கள் கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகிறது.klinochchi bus stand    வடக்கு மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள மாவட்டமான கிளிநொச்சியில் ஏனைய மாவடங்கள் மற்றும் தென்னிலங்கையின் பல மாவட்டங்களிலிருந்து வரும் பேரூந்துகள்   நிறுத்தி செல்கின்ற இடமாக காணப்படுகிறது. ஆனால் இங்கு ஒரு  பேரூந்து நிலையம் இதுவரை அமைத்து முடிக்கப்படவில்லை   கடந்த வருடம் கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் மாவட்டத்திற்கான மத்திய பேரூந்து நிலையம் அமைக்கும் பணிகள்  ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் குறித்த பேரூது நிலையம்  எந்த திணைக்களத்தினால், எவ்வளவு நிதி ஒதுக்கீட்டில், என்ன வடிவமைப்பில் அமைக்கப்படுகிறது என்ற எந்த விபரங்களும் காட்சியப்படுத்தப்படவில்லை.     (மேலும்) 26. 10.18

._______________________________________________________________________

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை :

பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பில் மாற்று யோசனைகளை முன்வைக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் நீதியமைச்சர் கோரிக்கை

 

பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பில் மாற்று யோசனைகளை முன்வைக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் நீதியமைச்சர் கோரியுள்ளாjustice ministerர்.   தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.   பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 103 கைதிகளுள் தற்போது 54 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு, வழக்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கின்றன.  அவர்களில் 45 பேர் தமிழர்களும், 6 பேர் சிங்களவர்களும், 3 பேர் முஸ்லிம்களுமாவர்.     (மேலும்) 26. 10.18

._______________________________________________________________________

 அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கையெழுத்து வேட்டை

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தன்னிச்சையான செயற்பாட்டிற்கு எதிராக மனு ஒன்று கையெழுத்து இடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. சுகாதார அமைச்சர் வைத்திய கட்டளைச் சட்டத்தை இரத்து செய்வதற்கு மற்றும் மருத்துவ சபையின் நடவடிக்கைகளுக்கு அடிக்கடி தலையீடு செய்வதற்கு எதிராக இந்த மனு கையெழுத்திடப்படுவதுடன், நாடு பூராகவுமுள்ள அனைத்து பிரதான வைத்தியசாலைகளினதும் வைத்தியர்கள் கையெழுத்திடுகின்றனர். அனைத்து வைத்தியர்களும் கையெழுத்திடும் மனு எதிர்வரும் வாரங்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

._______________________________________________________________________

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஆபத்தானது - ஜே.வி.பி எச்சரிக்கை

"ஐ.நா சபையின் மனித உரிமைகள் பேரவையை ஏமாற்றி மீண்டும் 1979 ஆம் ஆண்டை நோக்கி பயணிக்கும் புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை ஏற்றுகொள்ள முடியாது" என plfபாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை  முன்னணியின் பிரசார செயலாளருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.   அரசாங்கத்தால் புதிதாக கொண்டுவர எதிர்பார்க்கப்படும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று  இடம்பெற்ற போதே விஜித ஹேரத்  மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு உரையாற்றிய விஜித ஹேரத்,"பயங்கரவாததடைச்சட்டத்தை ஒழிப்பதாக கூறி பழைய சட்டத்தில் உள்ள ஒரு சில ஏற்பாடுகளை நீக்கி அதற்கு மாறாக புதிய பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டத்தில் மேலும் பயங்கரவாதத்தினை உருவாக்கும் வகையிலும் மக்களின் உரிமைகளுக்கு பாரதூரமான பாதிப்பினை ஏற்படுத்தி மனித உரிமைகள் பேரவையை ஏமாற்றும் வகையிலான சட்ட மூலத்தினையே அரசாங்கம் தயார் செய்துள்ளது.     (மேலும்) 26. 10.18

._______________________________________________________________________

விக்கியுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இல்லை”; செ.கஜேந்திரன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பொறுத்தளவில் அது தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய காலம் தொடக்கம் கொள்கைரீதியான ஒன்றுமை என்பதில் உறுதியாக Kajendran1இருக்கின்றது. முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கட்சி விடயத்திலும் அதுவே நடந்திருக்கின்றது.  குறிப்பாக முன்னாள் முதலமைச்சருடைய தரப்பினர் தமிழ் மக்கள் கூட்டணியில் இணைந்து கொள்வது தொடர்பாக எங்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார்கள். அப்போது நாங்கள் கூறிய விடயம் தமிழ் மக்கள் கூட்டணியில் சுரேஸ் பிறேமச்சந்திரன் இருப்பாராக இருந்தால் குறிப்பாக கொள்கைரீதியான தீர்மானம் எடுக்கும் நிலையில்,இருப்பாராக இருந்தால் அவ்வாறான கூட்டணியில் இணைந்து கொள்ள நாங்கள் தயாராக இல்லை. அவ்வாறு நாங்கள் கூறியதற்கு நியாயம் இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு அவ்வாறான கருத்தை நாங்கள் கூறவில்லை. அல்லது ஒற்றுமையை விரும்பாமல் அவ்வாறான கருத்தை நாங்கள் கூறவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் இணைந்து உள்ளுராட்சிசபை தேர்தலில் ஒரு ஆக்க பூர்வமான கூட்டனியை உருவாக்க முயற்சித்தபோது அதனை அவர் குழப்பினார். இதனால் எதிர்காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூட்டணி அமைப்பதில்லை என்பது எமது கட்சியின் தீர்மானம்.   (மேலும்) 26. 10.18

._______________________________________________________________________

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான மற்றொரு வழக்கு ஒத்திவைப்பு

15 மில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்namal Rajapakhaபினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிரான வழக்கு மார்ச் மாதம் 07ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று (25) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.கடந்த அரசாங்க காலத்தில் சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட 15 மில்லியன் ரூபா நிதி N.R Consultancy நிறுவனத்தில் முதலீடு செய்ததன் ஊடாக நிதி மோசடி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்ட மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மா அதிபரின் ஆலோசனைப் படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

._______________________________________________________________________

 மீண்டும் இயங்கவுள்ள பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை

 பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அடுத்த வருடம் முதல் மீண்டும் இயங்கவுள்ளது. இதற்காக முன்வைக்கப்பட்ட பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வணிக அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, காங்கேசன்துறை பிரதேசத்தில் 300 ஏக்கரில் தொழில்பேட்டை அமைக்கப்படவுள்ளது. முல்லைத்தீவில் ஓட்டுத்தொழிற்சாலையும் மட்டக்களப்பு – வாழைச்சேனையில் கடதாசித் தொழிற்சாலையும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.

._______________________________________________________________________

வர்த்தக தாராளமயமாக்கம் அல்லது முறைப்படுத்தல் எது அதிகம் விரும்பத்தக்கது?

                                                                                                                           -  லக்சிறி பெர்ணாண்டோ

ஐதேக தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய அரசாங்கம், 2015 ஆகஸ்ட் தேர்தல்களுக்கு முன்னர் வெளியிட்ட தனது தேர்தல் அறிக்கையில் பொருளாதாரத்தைப் பலப்investபடுத்துவதற்கான ஒரு மூலோபாயத்தை வெளியிட்டது ஆனால் அதை தாராளமயமாக்குவதாகச் சொல்லவில்லை. அதில் 16 திட்டங்கள் இடம்பெற்றிருந்தன, ஆனால் அவற்றில் எதுவும் தாராளமயமாக்கல் பற்றிய அர்த்தத்தில் பேசவில்லை,சர்வதேச சந்தையில் ஸ்ரீலங்காவின் நிலையை பலப்படுத்துவோம் என்று மட்டுமே சொன்னது. ஐதேக எப்போதும் அதிகம் தாராளமயமான பொருளாதாரக் கொள்கையைக் கொண்டிருந்தது, ஆனால் தேர்தல்களில் அவர்கள் பேசியது சமூகச் சந்தைப் பொருளாதாரம் பற்றியே தவிர தாராளச் சந்தைப் பொருளாதாரம் பற்றி அல்ல. இப்போது வெறும் தாராளமயமாக்கலுக்காக அந்தப் பேச்சு நிறுத்தப்பட்டு விட்டது. ஆகஸ்ட் 2015க்குப் பிறகு அமைக்கப்பட்ட அரசாங்கம்  ஒரு ஐதேக அல்லது நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அல்ல ஆனால் சரியோ அல்லது தவறோ வித்தியாசமான  பொருளாதார முன்னோக்கங்களைக் கொண்ட ஸ்ரீ.ல.சு.க உடனான ஒரு கூட்டணி அரசாங்கம். ஆகவே அநேகமான பாரிய பொருளாதார முயற்சிகளைக் கட்டவிழ்த்து விடுவதற்கு முன்பே முறையான ஆலோசனைகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் கலப்பான சமிக்ஞைகள் வருங்கால சர்வதேச பங்காளிகளுக்கும் மற்றும் முதலீட்டாளர்களுக்கும் தொடர்பு படுத்தப்படும்.   (மேலும்) 25. 10.18

._______________________________________________________________________

காலி முகத்திடலில் இன்று முன்னெடுக்கப்பட்ட 'ஒக்டோபர் 24' போராட்டம்..!  காவற்துறையினரால் கலைப்பு

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான அடிப்படை வேதனத்protest galle faceதை 1000 ரூபாவாக அதிகரிக்க கோரி கொழும்பு வாழ் மலையக இளைஞர் , யுவதிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காவற்துறையினரால் கலைக்கப்பட்டுள்ளது.  இதன் போது காவற்துறையினர் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டு போராட்டக்காரர்களை கலைத்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த போராட்டம் காலை 10 மணிமுதல் 12 மணி வரையில் காலி முகத்திடலில் கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.   12 மணியுடன் இந்த போராட்டம் நிறைவுபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும், முன்னறிவிப்புகள் இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் ஜனாதிபதி செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.  இதன்போது, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னதாக வீதித் தடைகளை ஏற்படுத்திய காவல்துறையினர், போராட்டக்காரர்களை அந்த இடத்திலேயே தடுத்து நிறுத்தினர்.   (மேலும்) 25. 10.18

._______________________________________________________________________

வடபகுதியை  குறிவைத்துள்ள போதைவஸ்துப் பயன்பாடு

ஆயுதப் போருக்கு முடிவு கட்டி விட்டோம். அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கண்டு விடுவோமென அரசு கூறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இன்று மாற்றுவடிவில் உருheroin smugglingவாகியிருக்கும் பிரச்சினையாக, போதைப்பொருள் வர்த்தகம் அரங்கேறியுள்ளது.  நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்ற நிலையில் நாட்டின் அடிப்படைக் கட்டுமானங்களையே உடைத்து விடுவோம் என்று சவால்விடுமளவுக்கு நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதை  அண்மைய செய்திகள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. 
உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சுமார் 9 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்னமும்  தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகளோ மேலும் அவர்களுக்கான வாழ்வாதார திட்டங்களோ முற்றுமுழுதாக நிறைவேற்றப்படாத நிலையில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இந்த போதைப்பொருள் பாவனை என்பது அதிகரித்துள்ளமையை எம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது.    (மேலும்) 25. 10.18

._______________________________________________________________________

எம்மை காலனித்துவ ஆட்சி செய்தவர்களை புலம்பெயர் தமிழர்கள் ஆள் கின்றார்கள்

- ஆளுநர் தெரிவிப்பு

மாணவர்கள் இலகுவான வழிமுறையில் ஆங்கில கல்வியினை கற்பதற்கு ஆசிரியர்கள் தமது கற்கை முறைமையினை இலகுபடுத்துவது அவசியமானது என வடமாகாணreginold251018 ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ் இந்து ஆரம்ப பாடசாலையின் ஆங்கிலமொழி தின விழா பாடசாலை அதிபர் திரு. என்.மகேந்திராஜா தலைமையில் இன்று (23.10.2018); நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர் தமிழ் சிங்கள மொழியினை நாம் கற்றுக்கொள்ளும்போது இலக்கண முறையினை ஆரம்பத்தில் பயன்படுத்துவது கிடையாது பேச்சு வழக்கில் சிறு சிறு வசனங்களை முதலில் கற்றுக்கொண்டே பின்னர் எழுத வாசிக்க கற்றுக்கொள்கின்றோம். அதேபோன்று ஆங்கில கல்வியிலும் முதலில் பேசுவதற்கு கற்றுக்கொடுத்தால் பின்னர் எழுதுவது வாசிப்பது இலகுவானதாக இருக்கும் மாணவர்கள் இலகாக ஆங்கில மொழியினை கற்றுக் கொள்வர்.  (மேலும்) 25. 10.18

._______________________________________________________________________

கசோகி கொலை; சவூதி தூதரக தோட்டத்தில் உள்ள கிணற்றில் சோதனை செய்ய துருக்கி போலீசாருக்கு அனுமதி மறுப்பு


பத்திரிகையாளர் கசோகி கொலை வழக்கில் சவூதி தூதரக தோட்டத்தில் உள்ள கிணற்றில் தேடுதல் பணி மேற்கொள்ள துருக்கி போலீசாருக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.Saudis-deny-permission-to-search   சவூதி அரேபியாவை சேர்ந்தவர் ஜமால் கசோகி (வயது 59).  அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்த அவர், தனது கட்டுரைகளில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்தும், அந்நாட்டின் மன்னராட்சி முறை பற்றியும் கடுமையாக விமர்சித்து எழுதி வந்துள்ளார்.   இந்த நிலையில் கடந்த 2–ந் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்றபோது கசோகி கொல்லப்பட்டார். இதை முதலில் மறுத்து வந்த சவூதி பின்னர் சண்டையில் அவர் கொல்லப்பட்டார் என தெரிவித்தது.  அதன்பின்னர் சவூதியிலிருந்து அனுப்பட்ட குழு அவரை கொன்றது என தெரியவந்தது.  (மேலும்) 25. 10.18

._______________________________________________________________________

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, ஹிலாரிக்கு வெடிகுண்டு அனுப்பிவைப்பு

அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பொதிகள் உளவுப்படை பொலிஸார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.அவ்வகையில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோரின் அலுவலக முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிப்பொருள் பொதிகளை இடைமறித்து, கைப்பற்றியதாக அமெரிக்க உளவுப்படையினர் தெரிவித்துள்ளனர்.அந்த பார்சல்களில் இருந்த வெடிப்பொருள் அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரரும் கொடையாளருமான ஜார்ஜ் சோரோஸ் வீட்டில் கடந்த திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்ட வெடிப்பொருட்களை ஒத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

"அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல்மோசடிகளுக்கு ஐ.தே.க.வே துணை போகிறது"

ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள vasudevaகருத்தில் பல விடயங்கள் மறைந்து காணப்படுவதாக தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி டி.எஸ்.சேனாநாயக்கவின்  காலத்தில் மோசடிகள் இடம் பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.  ஆனால்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின்  தலைமைத்துவத்தில்  பாரிய மோசடிகள்   இடம் பெற்றுள்ளது. உதாரணமாக மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தினை குறிப்பிடலாம் எனவும் குறிப்பிட்டார்.மேலும் கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் கொள்கைகள் சிறப்பானதாக காணப்பட்டது. அதன் காரணமாகவே   ஒன்றிணைந்தேன்.  ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக காணப்படுகின்றது என்ற ரீதியிலும் குறித்த விடயத்தினை கருதலாம்.  அரசாங்கத்தில் இடம்பெறுகின்ற  ஊழல்மோசடிகள் அனைத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சியே துணைபோயுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

._______________________________________________________________________

கஞ்சா போதைப்பொருளுடன் சிறைச்சாலைக்கு சென்ற  பெண்

கஞ்சா போதைப்பொருளுடன் சிறைச்சாலைக்கு சென்ற பெண்ணொருவர் எதிர்வரும் ஐந்தாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.40 வயதான குறித்த பெண் கடத்தல் சம்பவம் ஒன்று தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது கணவரை சந்திக்க திருகோணமலை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.சிறைச்சாலையினுள் அனுமதிக்கும் பொருட்டு குறித்த பெண்ணை சோதனை செய்த சிறைச்சாலை அதிகாரிகளால் குறித்த பெண்ணிடம் இருந்து 152 மில்லி கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

பத்திரிகையாளர் கஷோக்கியின் உடல் பாகங்கள் சவூதி தூதரக அதிகாரி வீட்டில் கண்டெடுப்பு

பத்திரிகையாளர் கஷோக்கியின் உடல் பாகங்கள் சவூதி அரேபிய தூதரக அதிகாரியின் வீட்டில் கிடைத்திருப்பதாக பிரிட்டன் நாட்டு செய்தித் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. கஷோகி உடல் பாகங்கள் பல கூறுகளாக வெட்டப்பட்ட நிலையில், சவூதி தூதரக அதிகாரியின் வீட்டின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் வீசப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கஷோக்கியின் உடல் பல கூறுகளாக, துண்டு துண்டாக வெட்டப்பட்டும், முகம் சிதைக்கப்பட்ட நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

சிறிதரனின் இரட்டை முகம்

(2)

- கருணாகரன்

சம்மந்தனையும் சுமந்திரனையும் மாவையையும் விட மனோ கணேசனுSritharan_pressம் இராதாகிருஸ்ணனும் சுவாமிநாதனும் தன்னுடைய அரசியலுக்கு உதவக் கூடியவர்கள் என்று சிறிதரன் போட்ட கணக்கும் எடுத்த முயற்சிகளும் இப்பொழுது நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.  மனோவுக்கும் சுமந்திரனுக்குமிடையில் (தமிழ் முற்போக்கு முன்னணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும்) ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் சிறிதரனின் அரசியல் தேவைகளில் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இருந்தாலும் “முடிந்தவரையில் செய்வோம், முடியுமானவரையில் வென்றெடுக்கலாம்” என்ற எண்ணத்தில் அவர் மலையகத் தலைமைகளோடு உறவுகளைப் பேணி வருகிறார். இதன் மூலம் பெறக்கூடியவற்றைப் பெற்றுவிட முயற்சிக்கிறார்.இதற்காக அண்மையில் தலவாக்கலையில் நடந்த போராட்டத்தில்கூடப் பங்கேற்றிருந்தார்.இதிலும் சிறிதரனதும் = தமிழரசுக் கட்சியினதும் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்) இரட்டைத்தன்மையைக் கவனிக்கலாம்.   சுமந்திரன் அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, மனோவுடனும் தமிழ் முற்போக்கு முன்னணியோடும் மோதிக்கொண்டிருக்கும்போது சிறிதரன் இந்தத் தரப்புகளோடு இணக்கமாக இருக்கிறார்.   (மேலும்) 24. 10.18

._______________________________________________________________________

கடந்த 5 வருடத்தில் நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் எதையாவது நடைமுறைப்படுத்தியுள்ளோமா -

 இதுவரை 544 பிரேரணைகள் நாங்கள் நிறைவேற்றியிருக்கின்றோம். இவற்றில் ஒரு சிலவற்றை தவிர பெரும்பான்மையானவை எதுவித பிரயோசனமற்றவை.

வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வில் எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா ஆற்றிய உரை

எம்மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்கக் கூடிய விதத்தில் அன்று கூறியthavarasaதில் ஏதாவது ஒன்றையேனும் கடந்த ஐந்து வருட காலத்தில் நடைமுறைப்படுத்தி இருக்கின்றோமா என்று இத் தருணத்தில்  மீளாய்வு செய்வதில் தவறில்லையென்று கருதுகின்றேன். அதற்கு முன் ஒருவிடயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பான விடயங்களோ, இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் காணிதொடர்பான விடயங்களோ, காணாமற்போனோர் தொடர்பாக உண்மையைக் கண்டறியும் விடயங்களிலோ மாhகாணசபை தலையிட வேண்டாம் என்று நான் கூறவில்லை. இவ்விடயங்களில் எமது கருத்தினை பதிவு செய்தததில் எந்தவிதமான தவறும் இல்லை. ஆனால், இவ்வாறான விடயங்களில் மட்டும் எமது நேரத்தை முழுமையாக செலவழித்துக் கொண்டு மாகாணசபையின் நிறைவேற்று செயற்பாடுகளினையும் மக்களுக்கான அபிவிருத்தியினையும் புறந்தள்ளுவது தான் எனது குற்றச்சாட்டு.    (மேலும்) 24. 10.18

._______________________________________________________________________

சமூக சீர்திருத்தமே நமது மரபு

-தோழர். பிணராயி விஜயன் (கேரள முதலமைச்சர்)

(16.10.2018 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த இடது ஜனநாயக முன்னணி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து....)

(2)

முன்பிருந்த நிலை என்னவாக இருந்தது? பிராமணர்களிடமிருந்து 64 அடி தூரத்தில் பறையர் நிற்க வேண்டும். 54 அடி தூரத்தில் புலையர் நிற்க வேண்டும். 36 அடி Kerela chiefministerதூரத்தில் ஈழவர் நிற்க வேண்டும். ஈழவர்களிடத்திலும் தீண்டாமை வழக்கமிருந்தது. ஈழவர்களிடமிருந்து 30 அடி தூரத்தில் புலையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நிற்க வேண்டும். என்னவெல்லாம் தவறான பழக்கவழக்கங்கள் நமது மாநிலத்தில் நடைமுறையில் இருந்தன? இதுபோன்ற சமூக சீர்திருத்த இயக்கங்களின் பலனாகத்தானே, இவையெல்லாம் மாறின? அதற்கு உறுதியான தொடர்ச்சிகளும் ஏற்பட்டன. நமது மாநிலத்தில் மேலோங்கி வந்த பலவேறு இயக்கங்கள் விவசாயிகளின் இயக்கம், தொழிலாளர்களின் இயக்கம், இடதுசாரி இயக்கம் போன்றவற்றின் தலையீடுகள், இந்த சமூக சீர்திருத்தக் கருத்துக்களை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு முன்னேறிச் சென்றன. அதுதானே இந்த மாநிலத்தை மாற்றின? இந்த மாநிலத்தின் இதுபோன்ற மாற்றங்களை உள்வாங்க முடியாத ஒரு நிலை இப்பொழுதும் உள்ளன என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.     (மேலும்) 24. 10.18

._______________________________________________________________________

வத்தளையில் தேசிய தமிழ் பாடசாலை அருண் மாணிக்கவாசகம் இந்து வித்தியாலயம் அமைச்சர் மனோ கணேசனின் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்  

கம்பஹா மாவட்ட வத்தளையில் தமிழ் பாடசாலை என்ற நீண்டகால இழுபறிக்கு ஒரு தீர்வாக, வத்தளையில், அருண் மாணிக்கவாசகம் இந்து வித்தியாலயம் என்ற பெயரில் தேசmanoganesan060918ிய தமிழ் பாடசாலை உருவாக்க வேண்டும் என்ற தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சின் சார்பாக  மனோ கணேசன் முன்வைத்த இந்த அமைச்சரவை பத்திரத்துக்கு ஜானதிபதி மைத்திரபால சிறிசேன,  கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், நிதி அமைச்சர் மங்கள சமரவீர, சுற்றுலா அமைச்சர் ஜோன் அமரதுங்க, மலையக புதிய கிராமங்கள் அமைச்சர் பழனி திகாம்பரம்  ஆகியோர் தமது ஆதரவுகளை  அமைச்சரவையில் தெரிவித்துள்ளனர்.    (மேலும்) 24. 10.18

._______________________________________________________________________

இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிதி அதிகாரி விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி எதிர்வரும் நவம்பர் 01ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.  இலங்கை கிரிக்கெட் நிறுவனம் செய்த முறைப்பாட்டுக்கமைய மேற்கொண்ட விசாரணைகளின் படி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பியல் நந்தன நேற்று கைது செய்யப்பட்டார். இங்கிலாந்து அணியுடனான போட்டித் தொடரிற்கான ஔிபரப்பு உரிமத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுமார் 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி செய்ய முற்பட்டமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

._______________________________________________________________________

புலிகளின் அரசியல், சர்வதேச தலைமைத்துவங்கள் தொடர்ந்தும் இயங்குகின்றன - பொதுபலசேனா

இறுதி யுத்தம் நிறைவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் மூன்று தசாப்தகாலமாக நாட்டில் காணப்பட்ட பயங்கரவாதம் முடிவடைந்து விட்டது என்றே அனைவரும் கருதினார்கள்.எனினும் புலிகள் அமைப்பில் யுத்தத்திற்கு தலைமை வகித்த பிரிவு மட்டுமே தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனினும் புலிகள் அமைப்பின் அரசியல் தலைமைத்துவம், சர்வதேச தலைமைத்துவம் என்பன தொடர்ந்தும் இயங்கி வருகின்றன. எனவே யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்படவில்லை என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறப்பட்டது. இதன்போது உரையாற்றிய விகாரந்தெனியே நந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனும் பரிந்துரை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. உலகத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனும் கோரிக்கைக்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது நாட்டுப் பாராளுமன்றத்திலேயே உள்ளனர்.

._______________________________________________________________________

இன்று இடம்பெற்ற முதலாவது வடமாகாண சபையின், இறுதி அமர்வு

முதலாவது வடமாகாண சபையின், இறுதி அமர்வு இன்று நடைபெற்றது.  நாளை நள்ளிரவுடன் மாகாண சபை கலைகின்ற நிலையில், இன்றையதினம் இடம்பெறும் கூட்டம் சபையின் 134வது அமர்வாக அமைகிறது.இன்றையதினம் மாகாண சபைக்கான கீதம் இசைக்கப்பட்டு, சகல உறுப்பினர்களாலும் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டதாக எமது வடமாகாண சபை செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ள வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை இன்று கையளித்துள்ளார். ஈழத் தமிழர் சுயாட்சி கழகம் என்ற பெயரில் அனந்தி சசிதரன் தமது புதிய கட்சியை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

யாழில் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய  இளைஞர் ஒருவர் கைது

யாழ். கோண்டாவில் உப்புமட சந்தியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் இளைஞர் ஒருவரை நேற்றைய தினம் பொலிஸ்  விசேட அதிரடிப்படையினர் கைது செய்து யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கோண்டாவில் உப்புமட சந்தியில் உள்ள உணவகம் மற்றும் அதன் முன்பாக நின்ற முச்சக்கர வண்டி என்பவற்றின் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தது. குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் மற்றும் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததுடன் பொலிஸ் விசேட அதிரடி படையினரும் விசாரணைகளை முன்னேடுத்து வந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றின் பதிவிலக்கத்தை அடையாளம் கண்டு அது தொடர்பில் விசாரணைகளை முன்னேடுத்த பொலிஸ் விசேட அதிரடி படையினர் நேற்று திங்கட்கிழமை மாலை குறித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸாரிடம் நேற்று இரவு ஒப்படைத்துள்ளனர். குறித்த சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

._______________________________________________________________________

குழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள்

 மு.தமிழ்ச்செல்வன்

அப்பப்பா சொல்வார் பத்து அல்லது பதினைந்து அடிகள் கிணறு வெட்டினால் போதும் தண்ணிக்குப் பிரச்சினை வராது என்று. இதனையே எனது அப்பா சொல்லும் போது நாற்t4பது அல்லது ஜம்பது அடிகள் கிணறு ஒன்று வெட்டினாள் போதும்  தண்ணீருக்குப் பிரச்சினை ஏற்படாது என்றார். இதனையே இப்போது நான் சொல்லும் போது குறைந்தது ஒரு நூறு அடிக்கு கிணறு வெட்டவேண்டும் என்றே கூறுவேன் அப்போதுதான் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. இதனையே நாளை எனது பிள்ளைகள் எப்படிக் கூறப் போகின்றார்கள்?!   இதுதான் கடந்த ஜந்துதசாப்த் தங்களுக்குள் நிலத்தடிநீரில் ஏற்பட்டமாற்றம். உலகமெங்கு நிலத்தடிநீரில் பாரியளவில் மாற்றம் ஏற்பட்டுவருகிறது. நாளாந்தம் அதிகளவு நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு ஈடாக நிலத்தில் நீர் சேமிக்கப்படுவதில்லை. பருவமழை வீழ்ச்சியும்  கடந்த காலங்கள் போன்றுதற்போது இல்லை,பெய்கின்ற மழைநீரும் நிலத்தடிக்கு சென்றுசேமிக்கப்படுவதனை விட ஆறுகளில் சேர்ந்து கடலுக்கு செல்வது அதிகமாகியுள்ளது.  (மேலும்) 23. 10.18

._______________________________________________________________________

சமூக சீர்திருத்தமே நமது மரபு

-தோழர். பிணராயி விஜயன் (கேரள முதலமைச்சர்)

(16.10.2018 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த இடது ஜனநாயக முன்னணி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து....)

சமூக சீர்திருத்த மரபு தான் நமது மகத்தான மரபு...

நாம் அத்தகைய சமூக சீர்திருத்த மரபைத் தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறோம். இங்கு மேலோங்கி நிற்கும் சமூக சீர்திருத்த இயக்கங்கள் அனைத்தும் ஸ்ரீ நாராயணkerala chief minister குரு, சட்டம்பி சுவாமிகள் போன்றவர்களால் தலைமை தாங்கி வழிநடத்தப்பட்டவை. அதனால்த்தான் “இது ஒரு பைத்தியக்காரர்களின் கூடாரம்”, என்று விவேகானந்தரால் விமர்சிக்கப்பட்ட இந்த மாநிலம், இன்று மத பேதமற்ற, ஜாதி பேதமற்ற சமூகமாக முன்னேறி நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  இங்கே நமது நாட்டின் வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், நமது மாநிலத்தின் வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், எந்த காலகட்டங்களில் எல்லாம் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் உருவெடுத்தனவோ அந்த காலகட்டங்களில் எல்லாம் அதற்கெதிரான ஒரு பகுதியினரும் களத்திலிறங்கி இருக்கிறார்கள். அந்த பிரிவினரில் பிற்போக்கு சக்திகள் மட்டும் பங்கெடுக்கவில்லை.    (மேலும்) 23. 10.18

._______________________________________________________________________

தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னத்துடன் அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழ்களுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை

தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னத்துடன் அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழ்களுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. தTiger logoமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நாளை மறுதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழ்கள் தமிழ் மக்கள் பேரவையின் பெயரால் அனுப்பபட்டிருந்தன. இந்த அழைப்பிதழ்கள் சந்தேகத்தை தோற்றுவித்த நிலையில் இது குறித்து எமது செய்தி சேவை தமிழ் மக்கள் பேரவையிடம் வினவியது. அதற்கு பதிலளித்த அதன் பேச்சாளர் ஒருவர், இந்த அழைப்பிதழ்களுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என மறுதலித்தார்.தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தை குழப்புவதற்காக திட்டமிட்டு யாரே இந்த செயற்பாட்டை மேற்கொண்டிருக்க கூடும் என தமிழ் மக்கள் பேரவை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

._______________________________________________________________________

17 ஆயிரம் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை; மன்னிப்பு கோரிய  ஆஸ்திரேலியப்  பிரதமர்

பாலியல் கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காக்கத் தவறியaustralia primeministerமைக்காக, ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். ஆஸ்திரேலியாவில் 4 ஆண்டு கால ஆய்வு முடிவில் 17 ஆயிரம் குழந்தைகள் பாலியல் தொல்லைகளையும், கொடுமைகளையும் எதிர்கொண்டு வாழ்வதாகஅதிர்ச்சித் தகவல் வெளியானது. இதையறிந்த ஸ்காட் மாரிசன், பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் உரையாற்றினார்.  நம் தேச குழந்தைகள் ஏன் காக்கப்படவில்லை? ஏன் அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டது? குழந்தைகளின் அழுகை ஏன் புறக்கணிக்கப்பட்டது? நீதியின் கண்கள் ஏன் பார்வையிழந்தது? செயல்பட இவ்வளவு காலம் தாமதமானது ஏன்? அப்பாவிக் குழந்தைகளை பாதுகாப்பதை விட வேறு என்ன முக்கிய பணி இருந்தது? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி குழந்தைகளிடம் மன்னிப்பு கோரினார். இதையடுத்து அங்கு அமைதி நிலவியது. குழந்தைகளைக் காப்பதற்கான ஆய்வுக் குழுக்கள் அமைத்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டார்.

._______________________________________________________________________

யாழில் படையினர் விவசாயம் செய்து அவற்றை விற்பனை செய்வது இல்லை

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வசமிருக்கின்ற பொதுமக்களின் காணிகளில் படையினர் விவசாயம் செய்து, அதனை சந்தைகளில் விற்பனை செய்வது இல்லை என angajanவிவசாய பிரதி அமைச்சர் அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.  மேலும், அவ்வாறு படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால் அதனை உடனடியாகத் தான் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். கோவில் வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது பொதுமக்களின் காணிகளில் படையினர் விவசாயம் செய்வதால் பல்வேறு பாதிப்புக்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.  அங்கு விவசாய பிரதி அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் படையினர் வசமிருக்கின்ற காணிகளை விடுவிப்பதற்கு வழங்க வேண்டும் என படையினர் கோரியிருக்கின்ற போது அதற்கு எவ்வளவு நிதி வேண்டும் என ஆராய்ந்து அதனை அரசாங்கம் வழங்க வேண்டு மென்று கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் சொல்லி இருக்கின்றனர்.    (மேலும்) 23. 10.18

._______________________________________________________________________

 மலேரிய நோய் மீண்டும் பரவக் கூடிய அபாயம்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டில் ஒழிக்கப்பட்ட மலேரிய நோய் மீண்டும் பரவக் கூடிய அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேரிய ஒழிப்பு இயக்கத்தின் மருத்துவர் மனோநாத் மாரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.நாட்டிற்கு குடியேறுபவர்கள் மூலம் இந்த நோய் மீண்டும் பரவக் கூடிய அபாயம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள், ஆபிரிக்க மற்றும் அமெரிக்க நாடுகளில் இந்த நோய் பரவலாக காணப்படுகிறது.இந்தநிலையில் அந்த நாடுகளில் இருந்து வருகை தந்து நாட்டில் குடியேறுகின்றவர்கள் மூலம் இந்த நோய் தொற்றக் கூடும் என மலேரிய ஒழிப்பு இயக்கத்தின் மருத்துவர் மனோநாத் மாரசிங்க தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பிற்கான ஒப்பந்தத்தில் 3 கட்சிகள் கைச்சாத்து!


கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கட்சிகள் இணைவு தொடர்பான ஒப்பந்தத்தில் ஈ.பி.டீ.பி, ரி.எம்.வீ.பி., அகில இலங்கை தமிழர் மகா சபை ஆகிய கட்சிகள் ஒப்பமிட்டுள்ளதாeastunityக கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் செ. கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.  மட்டக்களப்பு கல்லடியில் உள்ள அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஒப்பந்தம் கைச்சாத்திடல் தொடர்பான கலந்தரையாடலை அடுத்து நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே செ. கோபாலகிருஷ்ணன் இதனை தெரிவித்தார். இந்த ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்த சங்கரி தமது கட்சி இணைந்து கொள்வது தொடர்பில் எங்களது மத்திய குழு கூடி ஆராய்ந்து எடுக்கப்படும் முடிவின் அடிப்படையிலே முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.முன்னாள் வட கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் ஈழத் தமிழர் சமூக ஜனநாயக் கட்சி, ரி.எம்.வீ.பி, ஈ.பி.டீ.பி, அகில இலங்கை தமிழர் மகா சபை, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.     (மேலும்) 23. 10.18

._______________________________________________________________________

 சீனா-ஹாங்காங்கை இணைக்கும் உலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை திறக்கப்படுகிறது

 ஹாங்காங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்ல ஏதுவாக பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சீனா-ஹாங்காங்கை இணைக்கும் உலகின் மிக நீண்ட கடல் பாலம் இதுவாகுhonkhong chinaம் உலகின் மிக நீளமான கடல் பாலமாக கருதப்படும் இந்த பாலம், நீண்ட இடைவெளிக்கு பிறகு நாளை திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பாலத்தின் உதவியால் சீனா-ஹாங்காங் இடையேயான பயண நேரம், 3 மணியிலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் வளைகுடா பகுதிக்கான சீன திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த பாலம் உள்ளது.68 மில்லியன் மக்களை இணைக்கும் இந்த பாலம், சுற்றுலாப் பயணிகள் எளிதாக கடந்து செல்ல வழி வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் பயணம் செய்ய சிறப்பு வாடகை கார்களை பயன்படுத்த வேண்டும் அல்லது விரைவுப் பேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டிலேயே திறக்கப்பட இருந்த இந்த பாலம், மீண்டும் மீண்டும் ஏற்பட்ட தாமதங்களால் தள்ளிப்போடப்பட்டு வந்த நிலையில், நாளை திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

இந்தியாவிலிருந்து 35 இலங்கையர் நாடு திரும்பினர்

இந்தியாவின் தமிழ்நாட்டு அகதிமுகாமில் இருந்த 35 இலங்கை தமிழர்கள்  விமானம் மூலம்  இன்று திங்கட்கிழமை (22) யுனிசெவ் நிறுவனத்தினால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர் கடந்த கால யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இந்தியா தமிழ் நாட்டில் தஞ்சமடைந்த வடக்குகிழக்கைச் சேர்ந்த பலர்  அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழலில் தமது தாய்நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தவர்களை மீள்குடியேற்ற யுனிசெப் நிறுவனம் செயற்பட்டு வருகின்றது இதன் அடிப்படையில் கிளிநொச்சி,வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த 15 குடும்பங்களைச் சேர்ந்த35 பேரை இன்று திங்கட்கிழமை காலையில்  தமிழ் நாட்டில் இருந்து இரண்டு விமானங்கள் மூலம் இலங்கை சர்வதேச பண்டாரநாயக்கா விமான நிலையத்திற்கு அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

கேரள கன்னியாஸ்திரி வன்கொடுமை வழக்கில் முக்கிய சாட்சியான பாதிரியார் மர்ம மரணம்

முன்னாள் பேராயர் பிராங்கோ முலக்கலுக்கு எதிராக கேரள கfrancoன்னியாஸ்திரி தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய சாட்சி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பேராயர் பிராங்கோ நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.வழக்கின் முக்கிய சாட்சியான பாதிரியார் சூரியகோஸ் கட்டுதாரா பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மரணம் மர்ம மரணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை பேராயராக இருந்த முலக்கல், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலகட்டத்தில், பல்வேறு தருணங்களில் தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக, கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதையடுத்து போலீஸார் பேராயர் மீது வழக்கு பதிவு செய்தனர்.  (மேலும்) 23. 10.18

._______________________________________________________________________

விடுதலைப் புலிகளின் கொடியை காண்பித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை- சம்பிக்க வலியுறுத்தல்

பிரிட்டனில்  சமீபத்தில் விடுதலைப்புலிகளின் கொடியை காண்பித்தமைக்காக கைதுசெய்யபட்ட நான்கு தமிழர்களிற்கு எதிராக அந்த நாடு கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எsambikka-ranavakka1ன அமைச்சர் சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரிட்டனிற்கான விஜயத்தின் போது ஆசிய பசுவிக்கிற்கான அமைச்சர் மார்க் பீல்டை சந்தித்தவேளை சம்பிக்க ரணவக்க இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் நால்வர் விடுதலைப்புலிகளின் கொடியை காண்பித்து ஆர்ப்பாட்டம் செய்தமைக்காக கைதுசெய்யப்பட்டமை குறித்தே  அமைச்சர் தெரிவித்துள்ளார்.பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அமைச்சர் விடுதலைப்புலிகளின் கொடிகளை காண்பித்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் பிரிட்டிஸ் அரசாங்கம் ஆதரவளித்து வரும்  இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்ககூடியவை என அமைச்சர் தெரிவித்தள்ளார் பிரிட்டன் தனது பயங்கரவாதத்திற்கு எதிரான  சொந்த சட்டத்தினை கடுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ள சம்பிக்க ரணவக்க ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

._______________________________________________________________________

மலர்ந்தும் மலராத வடமாகாணசபை

 -          கருணாகரன்


எதிர்வரும் 23.10.2018 நள்ளிரவோடு விக்கினேஸ்வரன் தலைமையிலான வடமாகாணசபையின் இந்த ஆட்சிக்காலம் முடிகிறது. uthayan  இதையிட்டுச் சிலருக்குப் பெருங்கவலைகள் உண்டாகும். பென்ஸன் எடுத்துக் கொண்டு வெட்டிப் பேச்சுப் பேசி, மாகாணசபை நிதியிலேயே உண்டு, களித்துக் கொண்டாடி, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஊரில் நாட்டாமை செய்து, பையையும் கையும் நிரப்பிய வாழ்க்கைக்கு முடிவு வரப்போகிறது என்றால் கவலைகள் வரத்தானே செய்யும்.   சிலருக்குக் குற்றவுணர்ச்சி ஏற்படும். இதனுடைய வெளிப்பாடே, “ஐந்து ஆண்டுகளை வீணடித்து விட்டோம்” என்று சபை முதல்வர் சி.வி.கே சிவஞானம் உள்பட பலரும் கவலையோடு சொல்லத் தொடங்கியிருப்பது.  இந்தக் குற்றவுணர்ச்சி மெய்யாகவே ஏற்பட்டது என்றால் அடுத்த தடவை இதே மாதிரித் தவறுகள் செய்யாத தொலைவுக்குப் போக வேண்டும். சிலர் மகிழ்ச்சியடைவர். விக்கினேஸ்வரனுடைய அணி பெட்டியைக் கட்டிக் கொண்டு போக, அந்த இடத்தில் கவர்னர் ஆட்சி வரும். கவர்னரைக் கொண்டு ஆகவேண்டிய காரியங்களைப் பெறலாம் என்று.     (மேலும்) 22. 10.18

._______________________________________________________________________

பத்திரிகைகளுக்கான அறிக்கை 22-10-2018

புதிய அரசியல் யாப்பு வரும் என்ற கற்பனையில் காலத்தை வீணடிக்காமல் இப்போது இருக்கின்ற மாகாண சபை ஆட்சி முறையை சுயாதீனமும் ஆற்றலும் கொண்டதாக ஆக்குவதே தமிழ் மக்களின் உடனடித் தேவை

- அ.வரதராஜா பெருமாள்

2016ம் ஆண்டுக்குள் அரசியற் தீர்வு கிடைக்கும்! 2017ம் ஆண்டுக்குள் அரசியற் தீர்வு வரும்! பின்னர் தமிழர்களின் பிரச்சினைக்கு 2018ம் ஆண்டுக்குள் முடிவுகள் கிட்டும்! என தvarathar4மிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியற் தீர்வு பற்றி ஆண்டுக்காண்டு மாற்றி மாற்றி ஆரூடம் கூறி சத்தியமளித்தனர்.  புதிய அரசியல் யாப்புக்கான பிரேரணை அடுத்த மாத நடுப்பகுதியில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படலாம் என சில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறான அரசியல் யாப்பு திட்டத்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பான பிரேரணைகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பது பற்றி இன்று வரை, அரசியல் அவதானிகள் கூட சரியாக அறிய முடியாத அளவுக்கு மர்மங்களே நிலவுகின்றன. முன்வைக்கப்படவுள்ள பிரேரணையானது அரசியல் யாப்பு மாற்றத்திற்கான சட்ட மூல வடிவத்தில் இருக்குமா அல்லது வெறுமனே அரசியல் யாப்புக்கான பாராளுமன்ற வழிகாட்டல் குழுவின் மற்றுமொரு அறிக்கையாக இருக்குமா என்பவற்றிற்கான பதில் இதுவரை தெளிவாக வெளிவரவில்லை.   (மேலும்) 22. 10.18

._______________________________________________________________________

siva-meeting

._______________________________________________________________________

அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி வடக்கு கிழக்கிலும் ஆர்ப்பாட்டம்

அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்துமாறு வலியுறுத்தி போராடும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தprotest for estate workersில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  யாழ் பேருந்து நிலையம் முன்பாக  (21) காலை 10 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.   சமூக வலைத்தள நண்பர்களின் ஏற்பாட்டில் “தோட்டத் தொழிலாளருக்காய் வடக்கில் இருந்து ஓர் உரிமை குரல்” என்ற தொனிப் பொருளின் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.  இதன்போது, தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும், தோட்ட கம்பனிகளுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்களை எழுப்பியிருந்தனர்.   இதேவேளை, மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வினை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.    (மேலும்) 22. 10.18

._______________________________________________________________________

சுற்றிவளைப்புக்களில் 36,255 பேர் கைது

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் காவற்துறை மா அதிபரின் உத்தரவின் கீழ் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 12 ஆயிரத்து 99 பேர் உள்ளிட்ட 36 ஆயிரத்து 255 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறை ஊடக பேச்சாளர், காவற்துறை அத்தியட்சகர் ருவண் குணசேகர இதனை தெரிவித்தார். மேலும் , 64 ஆயிரத்து 143 போக்குவரத்து குற்றங்கள் பதிவாகியுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார். இதேவேளை , இன்று அதிகாலை 3 மணி தொடக்கம் காலை 7 மணிவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 3560 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது , அனுமதிபத்திரமின்றிய துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

._______________________________________________________________________

யெச்சூரியுடன் டீஸ்டாசெதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி எனசங்பரிவார் பொய்பிரச்சாரம்

பொய்பிரச்சாரத்தை கைவிடாத சங்பரிவார் அமைப்பினர்,

சிபிஎம்பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரியுடன் நியூயார்க்டைம்ஸ் தில்லிசெய்தியாளர் சுகாசினி இருப்பது போன்றபடத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டு பரப்பி வரsitaram-1ுகின்றனர். உண்மையில் அந்தபடம் சமூகசெயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாத்- சீத்தாராம் யெச்சூரியுடன் இருக்கும் படமாகும்.   சபரிமலைக்கு  ‘நியூயார்க்டைம்ஸ்’ செய்தியாளர் சுகாசினி சென்றது சிபிஎம் ஏற்பாடு என்பதாகவும், பக்தர்களின் உணர்வை மதிக்காமல் அவர்கள் வேண்டுமென்றே சபரிமலையில் இளம்பெண்களை நுழைக்க முயற்சிப்பதாகவும் இந்தபடத்துடன் பொய்பிரச்சாரத்தை பல்வேறுகுழுக்களில் நடத்திவருகின்றனர். உண்மையில் இந்தபடம்  2015 ஆகஸ்ட் 2ஆம்தேதி மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுநிகழ்ச்சியில் டீஸ்டாவும், யெச்சூரியும் பங்கேற்றபோது எடுக்கப்பட்டதாகும். இதையே சுகாசினியுடன் யெச்சூரி என்கிற பொய்பிரச்சாரத்துக்கு சங்பரிவார் அமைப்பினர் பயன்படுத்தி வருகின்றனர். (மேலும்) 22. 10.18

._______________________________________________________________________

சவுதி பத்திரிகையாளர் கசோக்கி கொலை: ‘நம்பத்தகுந்த, வெளிப்படையான விசாரணை வேண்டும்’ ஐரோப்பிய கூட்டமைப்பு வலியுறுத்தல்

துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணைத்தூதரகத்தில் காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார்.jamal1  துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணைத்தூதரகத்தில் காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார். இதை 17 நாட்களுக்கு பிறகு சவுதி அரேபியா ஒப்புக்கொண்டுள்ளது.  ஆனால், இஸ்தான்புல் துணை தூதரகத்துக்கு கசோக்கி சென்றபோது, அவருக்கும் அங்கு இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது சண்டையாக மாறி, அந்த சண்டையில் அவர் உயிரிழந்தார் என்று சவுதி அரேபியா கூறியது.  ஆனால் இந்த விளக்கம் திருப்திகரமாக இல்லை, நாங்கள் இதில் விடையைக் கண்டுபிடிப்போம். ஆனால் அந்த நாட்டுடனான ஆயுத பேரத்தை நாங்கள் நிறுத்த மாட்டோம். அப்படிச்செய்தால் அது அவர்களை விட நமக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இப்போது கூறி உள்ளார்.  (மேலும்) 22. 10.18

._______________________________________________________________________

Mee too 'நானும்' இயக்கம்

சுசித்ரா

மீ டூ இயக்கத்தின் செயல்பாடுகளை கவனித்து வருவதில் சில புரிதல்களை பகிர நினைத்து எழுதுகிறேன்.ஒன்று, மீ டூ இயக்கம் பெண்களால் பெண்களுக்கு நடத்தப்படும் ஓர் உரிமைசார் அரசியல் இயக்கம். பெண்கள் வீட்டிலும் பொதுஇடத்திலும் வேலையிடத்திலும் இடையூறுகள், பயmeம் இல்லாமல், இயல்பாக, உற்சாகமாக, தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றி தங்களுடைய முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும்விதமாக இயங்குவது என்பது அவர்களது அடிப்படை உரிமை. யாரும் குனிந்து கொடுக்கவேண்டிய சலுகை அல்ல. “பாதுகாப்புணர்வு” இந்த அடிப்படை உரிமையின் மிகஅடிப்படையான ஓர் அலகு ஒன்று மட்டுமே.  வேலையிடத்தில் பாலியல் துன்புறுத்தல் அந்த உரிமையை வெகுவாக மட்டுப்படுத்துவது. அப்பட்டமான அதிகார ஆணவத்தால் இங்கு அந்த உரிமை தொடர்ந்து பறிக்கப்படுகிறது. மீ டூ வின் குரல்கள் இந்த அதிகார ஆணவ புத்திக்கு எதிராக எழுபவை. இந்த இயக்கத்தை கிண்டல்கள், அவதூறுகள் மூலம் முடக்கிப்பேசும் குரல்கள் எல்லாமே அதே அதிகார ஆணவச் சகதியிலிருந்து எழுபவை.  தவிர இங்கு பல இடங்களில் நிகழும் பாலியல் மீறல்கள் நாசூக்கானவை. வாய்வார்த்தையில் மட்டும் நிகழ்பவை, எனவே ஆதாரம் கிடையாது. அதிகாரத்தை காட்ட பயன்படுத்தப்படுபவை. ஆனால் அதுவும் இங்கு பணிபுரியும் பெண்களின் பாதுகாப்புணர்வை, இயல்புத்தன்மையை குலைத்துவிடுகிறது.    (மேலும்) 21. 10.18

._______________________________________________________________________

படித்தோம் சொல்கின்றோம்:

ஜேம்ஸ் அகஸ்தி எழுதிய "முகாமைத்துவமும் மனித மாண்பும்"

வாழ்க்கை மீதான தேடுதலில் ஈடுபடுபவர்களின் கேள்விகளுக்கு பதில் தருவதற்கு முனையும் நூல் 

                                                                                           முருகபூபதி

ஒவ்வொருவர் மனதிலும் அன்றாடம் பல கேள்விகள் உதயமாகிக்கொண்டேயிருக்கும். அனைத்துக்கும் பதில் கிடைப்பதில்லை. சிலவற்றுக்கு தத்தமது வாழ்வனுபங்கள் பதில் சொJames Akastiல்லும். சிலவற்றுக்கு படித்த நூல்கள் பதில் தரும். சிலவற்றுக்கு அறிஞர்களின் மேற்கோள்கள் உதவும்.  அத்துடன்  மற்றவர்களையும்  நாடுவார்கள். சிலசமயம் பதில் கிடைக்கும், சிலவற்றுக்கு பதில் கிடைக்காமலும் போகலாம். கேள்விகளும் முற்றுப்பெறாமல் தொடரும்!   மானுட விழுமியங்கள் தொடர்பாக கேள்விகளையும் எழுப்பி,  அவற்றுக்கு பதில்தேடும் முயற்சியில் இறங்கியிருக்கும்  மெல்பனில் வதியும் ஜேம்ஸ் அகஸ்தி,   முகாமைத்துவமும் மனித மாண்பும் என்ற நூலை எழுதியிருக்கிறார்.  இந்நூலை  ஜேம்ஸ் அகஸ்தி, சற்று வித்தியாசமாக சமர்ப்பணம்  செய்திருக்கிறார். "எமக்கு பொன்னும் பொருளும் வேண்டாம். எமது உள்ளத்தின் அடி ஆழத்தில் இருந்து குமுறி எழும் கேள்விகளுக்கு பதில் கிடைத்தாலே போதும், எனும் வேட்கை கொண்டவர்களுக்கு " தனது நூலை சமர்ப்பணம் செய்துள்ளார்.      (மேலும்) 21. 10.18

._______________________________________________________________________

ஐ.நா திருப்பியனுப்பிய இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர் குற்றங்களில் ஈடுப்பட வில்லை : இராணுவ தலைமையகம்

ஐக்கிய நாடுகள் அமைதிக்காக்கும் படையணியிலிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ள இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர் குற்றங்களில் ஈடுப்படவில்லை என இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்காக்கும் படையில் இணைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ அதிகாரி திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.குறித்த அதிகாரி போர் குற்றச்சாட்டுகளுக்குள்ளனவர் என்பதாலேயே திருப்பி அனுப்பியதாக ஐ.நா பொதுச்செயளாலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.ஐ.நா அமைதி காக்கும் படையில் மாலியில் பணியாற்றிய லெப்.கேணல் கலன பிரியங்கர லங்காமித்ர அமுனுபுர என்ற அதிகாரியே திருப்பியனுப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.

._______________________________________________________________________

மொஹமட் நிசாம்டீன் கைதான சம்பவத்தில் பிரபல கிரிக்கட் வீரரின் சகோதரரன்

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இலங்கை இளைஞர் மொஹமட் நிசாம்டீன் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டு சம்பவத்தில் அவுஸ்திniza1ரேலிய கிரிக்கட் வீரர் ஒருவரின் சகோதரருக்கு தொடர்பிருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மொஹமட் நிசாம்டீன் பயங்கரவாத தாக்குதலுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும் அத் திட்டம் தொடர்பான ஆவணம் ஒன்றை வைத்திருந்ததாகவும் கூறி கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்டார். குறித்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த மொஹமட் நிசாம்டீன் தற்போது முழுமையாக பயங்கரவாத குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் அவுஸ்திரேலிய வீரர் ஒருவரின் நெருங்கிய சகோதரர் ஒருவர் குறித்த பயங்கரவாத குற்றச்சாட்டில் மொஹமட் நிஸாம்தீனை சிக்க வைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  தற்போது இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் தற்போது திரட்டப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

._______________________________________________________________________

V.N. MathiyalakanBanner

._______________________________________________________________________

மாயமான பத்திரிகையாளர் ஜமால் காசோஜி இறந்ததை ஒப்புக்கொண்டது சௌதி அரேபியா

காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியிjamal1ல் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிப்பதாக சௌதி அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.   இந்த விவகாரம் தொடர்பாக புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அஹ்மத் அல்-அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மானின் மூத்த ஆலோசகர் சௌத் அல்-கத்தானி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள வெள்ளை மாளிகை, விசாரணைகளை நெருக்கமாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.  ஜமால் காசோஜி இறந்துள்ளதை முதல் முறையாக சௌதி அரசு ஒப்புக்கொண்டுள்ளது. சௌதி புலனாய்வு அமைப்புகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக இளவரசர் முகமத் பின் சல்மான் தலைமையில் அமைச்சரவைக் குழு ஒன்றை சௌதி மன்னர் சல்மான் அமைத்துள்ளார்.    (மேலும்) 21. 10.18

._______________________________________________________________________

நகைகளை திருடிய பெண் கைது

பதுளை மாநகரின் தங்க நகை கடையொன்றில்  எட்டு இலட்சத்து நாற்பத்தேழாயிரத்து ஐநூறு ரூபாவுக்கு பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய பெண் ஒருவர் கொழும்பைச் சேர்ந்த ஹொரன என்ற இடத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.ஹொரனயில் கைது செய்யப்பட்ட பெண் தங்கியிருந்த வீட்டின் அலுமாரியிலிருந்து 32 தங்கத் தோடுகள்,ஆறு தங்க மோதிரங்கள் ஆகியவற்றையும்,பதுளைப் பொலிசார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டிருக்கும் இப்பெண் பிறிதொரு பெண்ணுடன் கைக்குழந்தையொன்றையும் தூக்கிக்கொண்டு பதுளை மாநகரின் தங்க நகையகமொன்றில்,தங்க நகைகள் எடுக்கும் தோரணையில் தங்க நகைகள் திருடப்பட்டன.   இத்திருட்டுக்கள் மேற்படி தங்க நகை விற்பனை நிலைய சி.சி. டி.வி. கெமராவின் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தன. இப் பதிவினடிப்படையில் பதுளைப் பொலிசார் மேற்கொண்ட தேடுதலின் பயனாகவும் தகவலொன்றினையடுத்தும் விரைந்த பொலிசார் கொழும்பைச் சேர்ந்த ஹொரணை என்ற இடத்தில் குறிப்பிட்ட ஒரு பெண்ணைக் கைது செய்து,திருடப்பட்ட ஒரு பகுதி தங்க நகைகளையும் மீட்டனர்.திருடப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி எட்டு இலட்சத்து நாற்பத்தேழாயிரத்து ஐநூறு ரூபாவென்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட பெண்ணுடன்,கைக்குழந்தையுடன் வந்த பெண்ணைக் கைது செய்யவும் பதுளைப் பொலிசார் துரித நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.அத்துடன், கைது செய்யப்பட்ட பெண் விசாரணையின் பின்னர் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று பதுளை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பாளர் எரிக் ரோகித்த தெரிவித்தார்.

._______________________________________________________________________

12க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேருக்கு சிறைத்தண்டனை

இங்கிலாந்தில் 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேர் கொண்ட கும்பலுக்கு மொத்தம் 221 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரeng-20டி தீர்ப்பினை வழங்கியுள்ளது. வடக்கு இங்கிலாந்தின் ஹடர்ஸ்பீல்டு பகுதியில் கடந்த 2007 முதல் 2011 வரை, 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை 20 பேர் கொண்ட கும்பல் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். வெறும் 11 முதல் 15 வயது மட்டுமே உடைய அந்த சிறுமிகளை மது குடிக்க வைத்து சீரழித்துள்ளனர். இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் 20 பேரையும் கடந்த 3 ஆண்டுகளில் அடுத்தடுத்து போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதில் 22 வயதான குற்றவாளி அமர்சிங் தலிவாலுக்கு இந்த ஆண்டு ஆரம்பத்தில் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் குற்றவாளிகள் மீது பதியப்பட்டிருந்த 120 வழக்குகளையும் விசாரித்த நீதிபதி ஜியோஃப்ரி மார்ஸன், ஒவ்வொரு குற்றவாளிக்கும் 5 முதல் 18 ஆண்டுகள் வரை என 221 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளார். இதில் இங்கிலாந்தில் வசித்து வரும், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஆசியாவை பூர்வீகம் ஆக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

சாவகச்சேரியில் உள்ள வீடென்றுக்குள் புகுந்த கும்பல் பெண்கள் மீது தாக்குதல்

சாவகச்சேரியில் உள்ள வீடென்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று, அங்கிருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.தாக்குதலுக்கு இலக்கான பெண்களின் அபயகுரல் கேட்டு அவர்களை காப்பாற்ற சென்ற அயலவர்கள் மீதும் கும்பல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இச்சம்பவம், சாவகச்சேரி கச்சாய் வீதியில் உள்ள உதயசூரியன் கிராமத்தில் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த 15க்கும் மேற்பட்ட நபர்கள் அத்துமீறி உள்நுழைந்து வீட்டில் இருந்த இரு பெண்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்துள்ளார்கள். அதன் போது தாக்குதலுக்கு இலக்கான பெண்கள் அபயகுரல் எழுப்பியதை அடுத்து, அயலவர்கள் உதவிக்கு சென்ற போது கும்பல் அயலவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்ட போதிலும், இருவர் மாத்திரமே சாவகச்சேரி வைத்திய சாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.கடந்த வியாழக்கிழமை இரவு இரு இளைஞர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் தொடர்ச்சியாகவே, இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில், சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

._______________________________________________________________________

சிறிதரன்: இரட்டை முகம்

-    கருணாகரன்

(1)

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் எப்போதும் தனி ஆவர்த்தனம் வாசிப்பவர் சிவஞானம் சிறிதரன். அவருடைய அரசியல்(?) அணுகுமுறையே வேறு. அது கூட்டமைப்பின் சாயல்,s.sritharan சம்பிரதாயங்கள், கட்டமைப்பு (கூட்டமைப்புக்குக் கட்டமைப்பு என ஒன்று இருக்கிறதா? என்று யாரும் கேட்கலாம்) போன்றவற்றுக்கு அப்பாலானது. ஏன், தமிழரசுக் கட்சிக்கும் அப்பாலானதே. தனக்கென்றொரு நிகழ்ச்சி நிரலைத் தனியாகவே வைத்துக் கொண்டு செயற்படுவது சிறிதரனின் வழமை. கூட்டமைப்பின் தலைமைப்பீடம் அரசாங்கத்தோடு இணைந்தும் கலந்தும் பிணைந்தும் கூடிக் குலவுகிறது என்றால் சிறிதரன் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிப்பார். அரசாங்கத்துக்குச் சவால் விடுவார். சம்மந்தனும் சுமந்திரனும் புலிகளை விமர்சித்தால், சிறிதரனோ புலிகளை ஆராதிப்பதாகக் காட்டிக் கொள்வார். போர்க்குற்ற விசாரணையிலிருந்தும் சர்வதேச நெருக்கடியிலிருந்தும் அரசாங்கத்தைக் கூட்டமைப்புக் காப்பாற்றுகிறது என்றால், சிறிதரனோ ஜெனிவாவில் போய் நின்று கொண்டு அரசாங்கத்தை உள்ளே தள்ள வேண்டும் என்பார். எதிலும் கூட்டமைப்பு மென்போக்கைக் கடைப்பிடிக்குமென்றால், சிறிதரன் வன்போக்கைப் பிரதிபலிப்பார்.    (மேலும்) 20. 10.18

._______________________________________________________________________

மெல்பன் தமிழ் எழுத்தாளர் விழாவில் விமல். அரவிந்தனின் ஒளிப்படக் கண்காட்சி

 ரஸஞானி

கணினி எமக்கு வரப்பிரசாதமானதும் தினமும் காலையில் அதனை திறந்து நாளாந்த கடமைகளை தொடங்கும்போது, திரையில் தோன்றியிருக்கும் இயற்கைக்காட்சிகள் மVimal aravinthanனதை கவரும்.  காலையில் துயில் எழுந்ததும் கண்களுக்கு குளிர்ச்சிதரும் ஒளிப்படத்தை பரவசத்துடன் தரிசித்துக்கொண்டே எமது மின்னஞ்சலுக்கான வாயிலை திறக்கின்றோம். அவுஸ்திரேலியாவில் அழகிய பூங்காக்கள், நீர் நிலைகள், வாவிகள், நதிகள், ஏரிகள், கடற்கரை இருக்கும் பகுதிகளில் வீடுகள் வாங்கவிரும்புபவர்களும் காலைத்தரிசனத்திற்காகவே அத்தகைய இடங்களை தெரிவுசெய்வர்.  வீடுகளில் மீன் தொட்டி வைத்து அழகிய மீன்களை காலையில் எழுந்ததும் பார்க்கும்போது புத்துணர்ச்சி வருவதாக சொல்லியிருக்கிறார்கள்.     மனித வாழ்வில் காலைப்பொழுது மிகவும் முக்கியமானது. அன்றாடம் ஏதும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது தமது மனதிற்குள் " இன்று யாருடைய முகத்தில் விழித்தேன்?" என்று பிதற்றுபவர்களின் உளவியலும் காலைத்தரிசனத்தில் இழையோடியிருக்கிறது.  (மேலும்) 20. 10.18

._______________________________________________________________________

மொஹமட் நிசாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை

பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர், மொஹமட் நிசாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். மொஹமட் நிசாம்தீன் எனும் 25 வயதுடைய இளைஞர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணம் ஒன்று அவரிடம் இருந்துள்ளதாகவும் அந்த இளைஞர் மீது அவுஸ்திரேலிய பொலிஸார் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

._______________________________________________________________________

விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 07ம் திகதி

தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என சர்ச்சைக்குvijayakalaறிய கருத்தை வௌியிட்ட விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கை டிசம்பர் 07ம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் இன்று இது தொடர்பான வழக்கு அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அனைத்து அறிக்கைகளும் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது. அதன்படி வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் முன்னேற்ற அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

._______________________________________________________________________

முன்னாள் கடற்படை தளபதியை கைதுசெய்வதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன-

முப்படைகளின் பிரதானியும் முன்னாள் கடற்படை தளபதியுமான ரியர் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவை கைதுசெய்வதற்கு போதுமான ஆதாரங்கள் உraveendra.1ள்ளன என  இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்  நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் முக்கிய குற்றவாளியென கருதப்படும் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தொடர்பான  வழக்கு விசாரணைகள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றவேளை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். ; முக்கிய சந்கேதநபரிற்கு முப்படைகளின் பிரதானி அடைக்கலம் கொடுத்தமை தொடர்பாக முன்னாள் கடற்படை தளபதி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இன்றைய நீதிமன்ற விசாரணையின் போது கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ண முப்படைகளின் பிரதானியை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். முப்படைகளின் பிரதானியை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை அவர் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜராகவில்லை என நீதவான் தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். ஒரு பஸ்ஸில் போதை மருந்துகளை கொண்டு வந்தபோது திடீரென நடத்திய தேடுதல் வேட்டையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் வைத்திருந்த 1670 போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை பிரதேசத்தைச் ​சேர்ந்த 23 மற்றும் 25 வயதான இரு இளைஞர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், ஓமந்தை பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

._______________________________________________________________________

மன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு

வடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் பாவனைக்காக சுமார் 87 ஏக்கர்களை விடுவிக்க கடந்த  புதன்கிழமை அமைச்சரவை அனுமதி வmannar land releaseழங்கியுள்ளது.இந் நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை புதைகுழி பகுதியின் அருகில் அமைந்திருந்த இராணுவத்தின் வசம் காணப்பட்ட சுமார் 5 ஏக்கர் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்கப்பட்டுள்ளது.மேலும் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி  முருங்கன் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம் காணப்பட்ட பொது மக்களின் 4 ஏக்கர் காணியும் இராணுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.இந்த இராணுவ முகாம் கடந்த 2006 ஆம் ஆண்டளவில் முருங்கன் பகுதியில் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக சுமார் 12 வருடங்கள் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த நிலையில் கடந்த புதன் கிழமை முழுதாக அகற்றப்பட்டு மக்களுடைய பாவனைக்காக  கையளிக்கப்பட்டுள்ளது. முருங்கன் பகுதியில் காணப்பட்ட குறித்த இராணுவ முகாமை அகற்ற கோரி பல்வேறு தடவைகள் மாவட்ட மற்றும் பிரதேச  ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மக்களால் முன் மொழிவுகள் முன்வைக்கப்படமையும் குறிப்பிடத்தக்கது.

 ._______________________________________________________________________

2017-இல் அமெரிக்க குடியுரிமை பெற்ற 50,000 இந்தியர்கள்: அதிகாரப்பூர்வ அறிக்கையில் தகவல்

கடந்த ஆண்டில் 50,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருப்பதாக அந்நாட்டு அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளusacitizenது. இதுதொடர்பாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்ட வருடாந்திர குடியேற்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டில் 50,802 இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். 2016-இல் இந்த எண்ணிக்கை 46,188-ஆக இருந்தது. 2015-ஆம் ஆண்டில் 42,213 இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றனர்.இதேபோல், 2017-இல் மொத்தம் 7,07,265 வெளிநாட்டவர்களும், 2016-இல் 7,30,259 வெளிநாட்டவர்களும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றனர். 2015-ஆம் ஆண்டில் 7,30,259 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது.வெளிநாட்டவர்களில் அதிகபட்சமாக மெக்ஸிகோவைச் சேர்ந்தவர்களே அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் இந்தியர்கள் இரண்டாவது இடத்திலும், சீனர்கள் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். அடுத்த இடங்களில் பிலிப்பின்ஸ், டொமினிக்கன் குடியரசு, கியூபா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிக அளவில் அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருக்கின்றனர்.குடியுரிமை பெற்ற இந்தியர்களில் 12,000 பேர் கலிஃபோர்னியாவிலும், 5,900 பேர் நியூ ஜெர்ஸியிலும், 3,700 பேர் டெக்ஸாஸிலும் குடியேறியுள்ளனர் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

ஸ்ரீலங்காவில் நெருக்கடி: அரசியல் ரீதியாக அசாத்தியமானது எதுவோ, அது அரசியல் ரீதியாக தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது

பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவுடன் ஒரு நேர்காணல்

                                             சி.ஏ.சந்திரபிரேம

டொலருக்கு ஈடான ரூபாயின் பெறுமதி 173 ஐத் தொட்டுவிட்டது மற்றும் எரிபொருட்களின் விலை இந்த வருடம் ஐந்தாவது முறையாக அதிகரிக்கப் பட்டுள்ளது. தtissa vitaranaங்களுக்கான ஆட்சிக்காலம் முடிவடைந்துவிட்டதால் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டுவரும் மாகாணசபைகளுக்கான தேர்தல்களை ஏன் நடத்தமுடியாமல் இருக்கிறது என்பதை விளக்குவதற்காக, தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மற்றுமொரு கூட்டத்தை நடத்தியுள்ளார். மத்திய மற்றும் வட- மத்திய மாகாணசபைகளின் ஆட்சிக்காலம் இந்த மாத ஆரம்பத்துடன் முடிவடைந்து விட்டன. வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலமும் அடுத் பத்து நாட்களுக்குள் தானாகவே கலைந்துவிடும் நிலையில் உள்ளதினால், மாகாணசபைகள் செயலாற்றாமல் உள்ள மாகாணங்களின்  எண்ணிக்கை ஆறு ஆக அதிகரித்துள்ளது.  புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்கிற கட்சியின் தலைவரான மைத்திரி குணரட்ன, கட்சிகளின் தலைவர்களுடனும் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுடனும் நடைபெற்ற கூட்டத்திலிருந்து வெளியே வந்த பின்பு, மாகாண சபைகளுக்கான தேர்தல் இந்த வருடமோ அல்லது அடுத்த வருடமோ நடைபெறாது என்று தான் நம்புவதாகத் தெரிவித்ததுடன், மற்றும் அரசாங்கமும் மற்றும் சுதந்திரமான தேர்தல் ஆணைக்குழு என்று சொல்லப்படுவதும் அடுத்த வருடமும் மற்றும் அதற்கடுத்த வருடமும் வரவேண்டிய ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களைக் கூட நடத்துமா என்று தனக்குச் சந்தேகம் தோன்றுவதாகவும் கூறியுள்ளார்.  (மேலும்) 19. 10.18

._______________________________________________________________________

விபத்தில் ஒருவர் பலி - ஐவர் காயம்

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று (18) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். நெல் அறுவடை செய்யும் இயந்திரம் ஒன்றை ஏற்றிச்சென்ற டிரக்டர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  விபத்தில் லொறியில் மற்றும் டிரக்டரில் பயணித்தவர்கள் காயமடைந்துள்ளதுடன் லொறியில் பயணித்த மரியதாஸ் மோஹனதாஸ் என்பவர் உயிரிழந்துள்ளார்.விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

._______________________________________________________________________

காணி விடுவிப்பு குறித்து அடுத்தவாரம் யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஒரு கலந்துரையாடல்

காணி விடுவிப்பு குறித்து அடுத்தவாரம் யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில், எதிர்வரும் திங்கட்கிழமை இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக காணி தொடர்பான யாழ்ப்பாணreginold 1 மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுப்ரமணியம் முரளிதரன் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார். காணி விடுவிப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், முப்படையினர், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கொழும்பைச் சேர்ந்த சில முக்கிய அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கடந்த கூட்டத்தில் காணி விடுவிப்பு குறித்து இறுதியான தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், பாடசாலைகளின் காணிகள் உள்ளிட்ட சில காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக காணி தொடர்பான யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார். இதற்கமைய, பாதுகாப்பு தரப்பினரின் மறுமொழிக்கு அமைய, தொடர்ந்துவரும் காலங்களில் இடம்பெறவுள்ள கலந்துரையாடல்களில் காணி விடுவிப்பு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

._______________________________________________________________________

நானும் கூட...  (Me too) - வக்கிரமா? ஆத்திரமா?


கோதை ஜோதிலட்சுமி 

இந்த நூற்றாண்டின்மிகப் பெரிய பிரச்னையாக முன்வைக்கப்படுவது பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், சீண்டல்கள்தான். ஆனால், இது இன்று நேற்றme tooு ஏற்பட்ட பிரச்னை அல்ல. புராண இதிகாச காலம் தொடங்கி பெண் மீதான இந்த வன்முறை மற்றும் சீண்டல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. மகாபாரதத்தில் அஞ்ஞாதவாசத்தின்போது திரெளபதி பணிப்பெண்ணாகப் பணியில் இருக்கும்போது கீசகன், அவளுக்குத் தரும் தொந்தரவுகளில் தொடங்கி காலம் காலமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பிரச்னை.  இத்தகைய பாலியல் சீண்டல்கள், கொடுமைகள், வன்முறைகள் பெண்களால் சகித்துக் கொள்ளப்பட்டு அல்லது வேறு வழியின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. தங்கள் கல்வியைத் தொடர்வதற்கும் பணியிடத்தில் பணிசெய்வதற்கும் தொடர்ந்து அவர்கள் தங்கள் மீதான இத்தகைய தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை சில ஆண்டுகள் முன்வரை இருந்தது என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை.   (மேலும்) 19. 10.18

._______________________________________________________________________

7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை - ஆதாரம் உள்ளது துருக்கி

துருக்கியில் பத்திரிகையாளர் ஜமால் கசோகி தலை துண்டித்து கொலை jamalசெய்யப்பட்டதாகவும், இதற்கு ஆடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும் துருக்கியின் அரசு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.  அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்டில் பணிபுரிந்து வந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி, சவுதி அரசு குறித்து விமர்சனம் செய்து பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், தனது திருமணத்தை முன்னிட்டு சில ஆவணங்களை வாங்குவதற்காக துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு கடந்த 2ம் தேதி கசோகி சென்றுள்ளார்.அதன் பின்னர் அவர் மாயமானார். இந்த சம்பவத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரசிடம் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். கசோகி கொல்லப்பட்டதற்கான வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கடந்த வாரம் துருக்கி அரசு தெரிவித்தது.  (மேலும்) 19. 10.18

._______________________________________________________________________

மாந்தையில் இராணுவத்தினர் வசமிருந்த 5 ஏக்கர் காணி கையளிப்பு

மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் பாதுகாப்பு தரப்பினர் வசமிருந்த 5 ஏக்கர் காணி நேற்று மன்னார் பிரதேச செயலாளரிம் கையளிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச செயலக காணி அலுவலகர் க.வசந்தன் இதனை தெரிவித்துள்ளார். குறித்த 5 ஏக்கர் காணியில் 15 குடும்பங்களுக்கான காணிகளும், திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன சபைக்கான காணி, மற்றும் வைத்தியசாலைக்கான காணிகளும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  1990 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்த குறித்த 5 ஏக்கர் காணி சுமார் 28 வருடங்களின் பின்னர் கையளிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?

பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.mark-zuckerberg   சமூக வலைதளங்களில் ராஜாவாக திகழும் பேஸ்புக், கடந்த  2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மார்க் சூகர்பெர்க் உள்ளிட்ட மேலும் சில நபர்களால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று உலக அளவில் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாக திகழுகிறது. கோடிக்கணக்கான மக்கள், பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சமீப காலமாக பேஸ்புக் நிறுவனம் கடும் சர்ச்சையில் சிக்கி வருகிறது. அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு, கேம்பிரிட்ஜ் அனலடிகா சர்ச்சை என அடுத்தடுத்த சர்ச்சையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியதால், அந்நிறுவனம் கடும் நெருக்கடிக்குள்ளானது. இந்த நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் சேர்மன் பொறுப்பில் இருந்து மார்க் சூகர்பெர்க்கை நீக்குவதற்கான முன்மொழிவை, அந்நிறுவனத்தில் பொது பங்குகளை கொண்டுள்ள பங்குதாரர்கள் முன்மொழிவை கொண்டு வந்துள்ளனர்.     (மேலும்) 19. 10.18

._______________________________________________________________________

அரசியல் கைதிகளின் விடுதலை: செய்திருக்க வேண்டியது

    கருணாகரன்

சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டிய அவசியம், சிலதரப்புகளைப்பற்றி மறுபடி மறுபடி எழுத வேண்டிய நிலை எல்லாம் பெருங்கொடுமையானது. ஆனால்tpp என்ன செய்வது? தமிழ்ச்சமூகத்தின் விதி அப்படித்தானே உள்ளது.  எவ்வளவுதான் சொன்னாலும் அதையெல்லாம் காதிலே போட்டுக்கொள்ளாமல், திரும்பத்திரும்பத் தவறுகளைச் செய்கிறவர்களாகத்  தமிழ்ப்பெருங்குடி மக்களும் அவர்களுடைய ‘மேய்ப்பர்’களும் உள்ளனர்.  இதனால் திரும்பத்திரும்பச் சிலவற்றைச் சொல்லியே ஆக வேண்டியுள்ளது. ஆகவே, நம்முடைய விதியும் இப்படித்தான், ஏற்கனவே சொன்னவற்றையே சலிக்கச் சலிக்க மறுபடி மறுபடி பேச வேண்டியதாக உள்ளது. ஒரு சிறிய உதாரணத்தைப் பாருங்கள், கடந்த இரண்டு வாரங்களாக பலருடைய கவனத்தையும் ஈர்த்திருந்த “அரசியல் கைதிகள்” என்று சொல்லப்படும் சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களுக்கான ஆதரவுப் போராட்டங்களின் முடிவு கேள்விக்கிடமாகி விட்டது என்பதை.     (மேலும்) 18. 10.18

._______________________________________________________________________

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் விசேட அறிவித்தல்

ஜனாதிபதியை படுகொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் சதித்திட்டம்

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய புலனாய்வு சேவை ஒன்றுடன் தொடர்புபடுத்தி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாக வெளியிடப்பட்டுள்ள உள்ளூர் மறslprasident்றும் சர்வதேச ஊடகப் செய்திகள் தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதியை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதி முயற்சியில் இந்திய உளவுத்துறையின் எந்தவொரு ஈடுபாடு குறித்தும் ஜனாதிபதி இதன்போது கருத்து தெரிவிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.  ஜனாதிபதியை படுகொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் சதித்திட்டம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.  (மேலும்) 18. 10.18

._______________________________________________________________________

புதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...?


அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ்  கடந்தவாரம் சீனாவுக்கு எதிராக புதியதொரு பனிப்போரைப்  ( Cold War)பிரகடனம் செய்தார். ஏற்கெனவே நிலைபெற்றுவிட்ட new coldwarவல்லரசொன்றுக்கும் வளர்ந்துவருகின்ற வல்லரசொன்றுக்கும் இடையிலான மோதல் பெரும்பாலும் எப்போதும் தவிர்க்கமுடியாதது என்ற சான்று ஆதாரங்களுடனான கருதுகோளை பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர் துசிடைட்ஸ் முன்வைத்த காரணத்தால் வளர்ந்துவரும் வல்லரசிடமிருந்து போட்டியை எதிர்நோக்குகின்ற பழைய வல்லரசு ' துசிடைட்ஸ் பொறியில்'  ( Thucidides Trap )காலடி வைக்கிறது என்று வர்ணிப்பது வழக்கில் இருந்துவருகிறது. அமெரிக்கா இப்போது  அத்தகைய பொறியில் கால்வைத்துவிட்டது என்பது தெளிவானது.  (மேலும்) 18. 10.18

._______________________________________________________________________

 தம்மை  கொல்ல ரா திட்டமிட்டதாக ஜனாதிபதி கூறவில்லை:  அரசு மறுப்பு

இந்திய உளவுத் துறையான ரா அமைப்பு தம்மை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருப்பதாக அதிபர் மைத்ரிபால சிறீசேனா குற்றம்சாட்டியதாக ஊடகங்களில் வெளியான சmaithiri1ெய்திகளில் உண்மையில்லை என்று இலங்கை அரசு மறுத்துள்ளது.  ஜனாதிபதி  மைத்ரிபால சிறீசேனா, இந்தியாவில் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது அவர், தில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது இலங்கையில் இந்தியாவால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விரைவு படுத்தும்படி அவர் வலியுறுத்த முடிவு செய்துள்ளார். இந்நிலையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய திட்டத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க தாம் எதிர்ப்பு தெரிவித்ததால், ரா உளவு அமைப்பு தன்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருக்கிறது என்று சிறீசேனா கூறியதாக அந்நாட்டின் தி எக்கானமிநெக்ஸ்ட்.காம் இணையதளத்தில் செய்திகள் வெளியாகின. அமைச்சரவை வட்டாரத் தகவலை மேற்கோள்காட்டி, இந்த செய்தியை அந்த இணையதளம் வெளியிட்டிருந்தது.   (மேலும்) 18. 10.18

._______________________________________________________________________

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ;   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சந்திப்பில் முன்வைக்கப்பட்ட விடயங்கள்


அரசியல் கைதிகளின் விடயம் சட்ட ரீதியாக மாத்திரம் பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல. இது தமிழ் தேசிய பிரச்சினையுடன் தொடர்புடைய விடயம். ஆதலால் இது அரசியல் ரீதிMயாக அணுகப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச் சந்திப்பின்போதே கூட்டமைப்பினர் மேற்கண்ட கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.  இச் சந்திப்பின்போது கூட்டமைப்பினர் மேலும் தெரிவித்ததாவது,  யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்து விட்டன. யுத்தம் முடிவடைந்தவுடன் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறையில் இருக்கிறார்கள்.   (மேலும்) 18. 10.18

._______________________________________________________________________

தமிழ் சமூகத்தில் சத்தமில்லாத யுத்தம் ஒன்று இடம்பெறுகிறது அருட்தந்தை அந்தோனிமுத்து குரூஸ்

எமது தமிழ்ச் சமூகத்தில் தற்போது சத்தமில்லாத யுத்தம் ஒன்று இடம்பெற்று வருகிறது.இது எங்களை மிகப்பெரும் பாதிப்புக்கு கொண்டு சென்றுவிடும் என கிளிநொச்சி கனகாமgroos்பிகைகுளம் அன்னை இல்லம் இயக்குநர் அருட்தந்தை அந்தோனிமுத்து குரூஸ்  கவலை தெரிவித்துள்ளார்.  இன்று புதன் கிழமை அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் வாணி விழா நிகழ்வில் ஆசியுரை வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் எங்களுடைய சமூகம்  குறிப்பாக இளம் சமூகம் போதைப் பொருளுக்கு அடிமையாகிக்கொண்டிருக்கின்றார்கள், பல  குடும்பங்களில் எழுதப்படாத விவாகரத்துகள் எழுதப்பட்டு கொண்டிருக்கின்றன. பிள்ளைகள் தற்கொலைக்கு தங்களை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள், சமூகம் ஆன்மீகத்தில் இருந்து விடுப்பட்டு சென்றுக்கொண்டிருக்கிறது. திருநீறு பூசிய முகங்களை காண்பது அரிதாக இருக்கிறது. நவீன உலகில் பெற்றோர்கள் சதா பிசியாக இருக்கின்றார்கள் இதனால் பிள்ளைகளை முறையாக கவனிக்க முடியாது போகிறது எனத் தெரிவித்த அருட்தந்தை அவர்கள்  இந்த நிலைமைகள் கவலையளிக்கிறது இதுவொரு ஆபத்தான நிலைமை சத்தமில்லாமல்  தமிழ் சமூகத்தை அழிக்கின்ற யுத்தம் இவ்வாறே  இடம்பெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

._______________________________________________________________________

தலைமன்னார் வரையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

கொழும்பில் இருந்து தலைமன்னார் வரையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள ரயில் சேவை அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் நிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இந்த பாதையில் 3 புதிய பாலங்கள் பொருத்தப்படுவதனால் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி முதல் மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரை ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

கொழும்பில் 130 நபர்கள் காணாமல் போயுள்ளனர்

கொழும்பு பிரதேசத்தில் 130 நபர்கள் காணாமல் போயுள்ளதாக தகவலmissing-colombo்கள் கிடைத்துள்ளதென்று காணாமல் போனவர்கள் சம்பந்தமான அலுவலகம் கூறியுள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் 1989 இல் காணாமல் போனவர்கள் என்று தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த அலுவலகம் கூறுகிறது. காணாமல் போனவர்கள் சம்பந்தமான அலுவலகம் மேல் மாகாணத்தில் காணாமற்போன குடும்ப அங்கத்தவர்களை சந்தித்து, நேற்று 16 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தது. மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளன. அந்த அலுவலகம் மக்களுடன் நடத்துகின்ற இந்த சந்திப்பு மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு, திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் நாட்டிலுள்ள ஏனைய மாவட்டங்களிலும் இந்த கலந்துரையாடல் நடைபெறும் என்று காணாமல் போனவர்கள் சம்பந்தமான அலுவலகம் கூறியுள்ளது.

._______________________________________________________________________

கனடா அனுப்புவதாக கூறி நிதி மோசடி!!

கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபரொருவர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். நபரொருவர் பணியகத்திற்கு மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இணையத்தில் பதிவிட்டிருந்த அறிவித்தலுக்கு அமைய முகவர் நிலையமொன்றுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தினை செலுத்திய நிலையில் , பின்னர் கனடாவில்கன தொழில் கிடைக்காமையினால் குறித்த நபர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் , அவருக்கு நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த முகவர் நிலையத்தின் உரிமையாளரான பெண்ணுக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

._______________________________________________________________________

முஸ்லிம் சமூகமும் ஓட்டை வாளியும்

முகம்மது தம்பி மரைக்கார்

இலங்கையின் அரசியல், விசித்திரமானதாகும். இங்கு, அமைச்சர்களால் முடியாததை, எதிர்க்கட்சியினர் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.   asraffnagar  சிலவேளைகளில், தமது அமைச்சர்கள் பற்றி அலட்டிக் கொள்ளாத அரசாங்கத் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் முன்பாக மண்டியிடத் தொடங்குகின்றனர். அரசியல் என்பது, வியாபாரமாக மாறியதன் விளைவே, இந்த முரண்பாடுகளின் அடைப்படையாக உள்ளது.   உதாரணமாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகத் தமிழர்கள் இருந்து கொண்டு, தமது மக்களிடமிருந்து, அரசாங்கம் அபகரித்த காணிகளை, விடுவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.   ஆனால், அரசாங்கத்தில், முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருக்கத்தக்க நிலையில், அவர்களுடைய சமூகத்தவர்களின் காணிகளை, அரசாங்கம் அபகரித்துக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால், முஸ்லிம் தலைவர்கள், அமைச்சர்களாக இருப்பதில், முஸ்லிம் சமூகத்தவர்களுக்கு என்ன பலன் என்கிற கேள்வி முக்கியமானதாகும்.  இலங்கையில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்றனர். அதனால், பேரினவாதத்தின் பார்வை எப்போதும், இந்த மாவட்டத்தில் கூர்மையாக இருந்து கொண்டே இருக்கிறது.       (மேலும்) 17. 10.18

._______________________________________________________________________

மெல்பனில் ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி

                                                                         ரஸஞானி

மெல்பனில் வதியும் ஓவியர் மொஹம்மட் நஸீர் அவர்கள் நீண்டகாலமாக ஓவியத்துறையில் ஈடுபட்டுவரும் கலைஞர். இவர் யாழ்ப்பாணத்தில் 1955 ஆம் ஆண்டு காலத்தில்  நகரபிதnazeerாவாக ( மேயர்) பதவியிலிருந்த (அமரர்) எம்.எம். சுல்தான் அவர்களின் புதல்வராவார்.  இவருடைய தாய் மாமனார்தான் இலங்கையின் மூத்த தமிழ் அறிஞரும் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபரும்  செனட்சபை உறுப்பினருமான ( அமரர்) ஏ. அஸீஸ் அவர்கள்.  இவ்வாறு புகழ்பூத்த குடும்பத்திலிருந்து வந்திருக்கும் ஓவியர் நஸீர் யாழ்ப்பாணத்தில் மத்திய கல்லூரியில் பயின்ற காலத்தில் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் திகழ்ந்தவர்.  மத்திய கல்லூரியின் கிரிக்கட்  அணியின் தலைவராகவும் பல கிரிக்கட் போட்டிகளில் கல்லூரிக்கு பெருமை தேடித்தந்தவர். அன்று கிரிக்கட் மட்டையும் பந்தும் இருந்த இவரது கரத்தில் தற்பொழுது இருப்பது ஓவியம் வரையும் தூரிகைதான்.    (மேலும்) 17. 10.18

._______________________________________________________________________

அழிவை நோக்கிய நகர்வு...

பருவநிலை மாற்றம் என்கிற பேராபத்தை உலகம் எதிர்கொள்கிறது. 2052-க்குப் பிறகு, உலக வெப்பநிலையில் 0.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தாலுமNatur caters்கூட அதன் விளைவு பேரழிவை நோக்கி இட்டுச்செல்லும் அபாயம் காத்திருக்கிறது. அனல் காற்று, கடுமையான மழை, பெரும் வறட்சி, வெள்ளப்பெருக்கு என்று பல்வேறு இயற்கைப் பேரிடர்களை உலகம் சந்திக்க நேரிடும்.   2015-இல் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்போது நிர்ணயிக்கப்பட்ட தட்பவெப்பநிலை அளவும்கூடப் போதுமானதல்ல என்கிற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. 1850 முதல் 1900 ஆண்டு வரையிலான இயந்திரப் புரட்சிக் காலத்துக்கு முற்பட்ட அளவைவிட, இரண்டு டிகிரி செல்சியஸ் அதிகமான அளவுக்கு உலகின் சராசரி வெப்பநிலையை இலக்காக்கி இருந்தது பாரீஸ் ஒப்பந்தம். இப்போது ஏற்கெனவே 150 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலையைவிட, உலகம் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பம் அடைந்திருக்கிறது. இன்னும் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்தால், வறட்சியும் வெள்ளப்பெருக்கும் புயலும் கடல் அமிலமயமாதலும் மேலும் அதிகரிக்கக்கூடும்.   பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேசக் குழுவான ஐபிசிசி அறிக்கை சில அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறது.    (மேலும்) 17. 10.18

._______________________________________________________________________

டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் மாதம் 10ம் திகதி

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பி.​ டெனிஸ்vignes2வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனுவுக்கு எதிர்த்து தாக்கல் செய்துள்ள அடிப்படை எதிர்ப்பு தொடர்பான உத்தரவு டிசம்பர் மாதம் 10ம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.  மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான குமுதினி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.   வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.​டெனிஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க கடந்த ஆண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.   இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பி.​ டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார்.   (மேலும்) 17. 10.18

._______________________________________________________________________

ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த இருவருக்கு மரண தண்டனை

ஹெரோயின் போதைப் பொருள் 122.68 கிராம் உடமையில் வைத்திருந்த குற்றவாளிகள் இரண்டு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆரச்சி இன்று இந்த தீர்ப்பை வழங்கியதாகசெய்தியாளர் கூறினார்.2010 டிசம்பர் மாதம் 09ம் திகதி மிரிஹானை பிரதேசத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த இரண்டு பிரதிவாதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி சட்டமா அதிபரால் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த வழக்கு விசாரணைகளின் படி இன்றைய தினம் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கும் நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

._______________________________________________________________________

இந்த வருடத்தில் வீதி விபத்துகளால் 2,368 பேர் உயிரிழப்பு

 வீதி விபத்துக்களினால் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பRoad accidentகுதியில் 2,368 பேர் உயிரிழந்துள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நலின் பண்டார இன்று தெரிவித்தார்.இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் சிக்கிய 778 பேர் அடங்குவதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் நலின் பண்டார குறிப்பிட்டார்.உயிரிழந்தவர்களில் பாதசாரிகள் 722 பேர் அடங்குகின்றனர்.கடந்த 7 வருடங்களில் வீதி விபத்துக்களில் சிக்கிய 18,491 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த மரணங்களை தவிர்த்துக்கொள்வதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பிரதியமைச்சர் நலின் பண்டார தெரிவித்தார்.இதேவேளை, பொலிஸ் மா அதிபர் தொடர்பிலும் பிரதியமைச்சர் இதன்போது கருத்துத் தெரிவித்தார்.

._______________________________________________________________________

த.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க  மறியல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை judgement1உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார்.   கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபை உறுப்பிப்பினர் உள்ளிட்ட குழவினர் தாக்கியதில் சகோதரர்கள் இருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.  காயமடைந்தவர்கள் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்திருந்த சுன்னாகம் பொலிஸார் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நான்கு பேரையும் காயமடைந்தவர்கள் தரப்பில் இரண்டு பேர் உட்பட ஆறு நபர்களை இன்று காலை கைது செய்திருந்தனர்.  கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார் மாலை 5.00 மணியளவில் மல்லாகம்  நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் முற்படுத்தினர்.   (மேலும்) 17. 10.18

._______________________________________________________________________

கஷோகி மாயமான விவகாரம்: சவூதிக்கு அதிகரிக்கிறது நெருக்கடி

துருக்கியிலுள்ள சவூதி தூதரகத்தில் செய்தியாளர் ஜமால் கஷோகி மர்மமான முறையில் மாயமான குறித்து விளக்கமளிக்க, சவூதி அரேபியாவுக்கு சர்வதேச அளவில் நெருக்கடி அjamalதிகரித்து வருகிறது.   இந்த விவகாரம் குறித்து சவூதி மன்னர் சல்மானை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்போயோ செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், சவூதி தூதகரத்துக்கு சட்ட நடவடிக்கைகளிலிருந்து அளிக்கப்படும் விதிவிலக்கை ரத்து செய்ய வேண்டுமென்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:இந்த மாதத் தொடக்கத்தில் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்குச் சென்ற செய்தியாளர் ஜமால் கஷோகி, அதற்குப் பிறகு மாயமானது தொடர்பான விவகாரத்தில் மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது.  சவூதியிலிருந்து வந்திருந்த நபர்கள், அந்தத் தூதரகத்தில் ஜமால் கஷோகியை படுகொலை செய்ததாக துருக்கி குற்றம் சாட்டி வருகிறது. எனினும், அந்தக் குற்றச்சாட்டை சவூதி அரேபியா கடுமையாக மறுத்து வருகிறது.   (மேலும்) 17. 10.18

._______________________________________________________________________

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பால் ஆலன் காலமானார். அவருக்கு வயது 65.  அமெரிக்காவின் பெரும் தொழிலதிபர், முதலீட்டாளர், அறப்பணியாளர், pailமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் என பன்முகங்களை கொண்ட  இவர், புற்றுநோய் காரணமாக  உயிரிழந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.  மைக்ரோ சாப்ட்' மென்பொருள் வடிவமைப்பு நிறுவனம் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ரெட்மாண்ட் நகரத்தில் தலைமை இடம் உள்ளது கம்ப்யூட்டருக்கு தேவையான பல வகை மென்பொருட்களை தயாரிப்பது, மேம்படுத்துவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்ற செயற்பாடுகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.  இதனை பில்கேட்சும், பவுல் ஜிஆலன் ஆகிய இருவரும் 1975-ம் ஆண்டு நிறுவினர்.  பவுல் ஜி ஆலன் கடந்த 9 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதியுற்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று .சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆப்ரிக்க நாடுகளில் எபோலோ நோய் பரவல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை பவுல் ஜி வழங்கியுள்ளார். ‘ஐடியா மேன்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ள இவர் பல்வேறு விருதுகளைம் பெற்றுள்ளார்.

._______________________________________________________________________

லட்சக்கணக்கில் கப்பம் கோரிய உயர் தர மாணவர்கள் விளக்கமறியலில்

கப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது

._______________________________________________________________________

ரூ.40 கோடி வங்கி மோசடி: தப்பி ஓடிய இந்திய தொழில் அதிபர் நாடு கடத்தல் - இந்தோனேசியா நடவடிக்கை

ரூ.40 கோடி வங்கி மோசடி செய்து தப்பி ஓடிய தொழில் அதிபரை, இந்தியாவுக்கு நாடு கடத்தி இந்தோனேசியா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.கார்ப்பரேசன் வங்கி, பஞ்சாப் நே‌ஷனல் வங்கி ஆகியவற்றில் மொத்தம் ரூ.40 கோடி கடன் வாங்கி மோசடி செய்த தொழில் அதிபர் வினய் மிட்டல். அந்த வங்கிகளின் கோரிக்கையை ஏற்று, அவர் மீது 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில், சி.பி.ஐ. 7 வழக்குகளை பதிவு செய்தது. டெல்லி மற்றும் காசியாபாத் கோர்ட்டுகளில் குற்றப்பத்திரிகைகளையும் தாக்கல் செய்தது.இதையடுத்து, வினய் மிட்டல், நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் தலைமறைவானதாக கோர்ட்டு அறிவித்தது. அவருக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.இதற்கிடையே, அவர் இந்தோனேசியா நாட்டின் பாலியில் குடும்பத்துடன் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் அடிப்படையில், அவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தோனேசியா போலீசார் கைது செய்தனர். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு அதிபர் சமீபத்தில்தான் ஒப்புதல் அளித்தார்.அதன்படி, இந்தியாவுக்கு வந்து சேர்ந்த வினய் மிட்டல் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

._______________________________________________________________________

சூதாட்ட அரசியலாக மாறும் அரசியல் கைதிகளின் விடுதலை

    கருணாகரன்

மீண்டும் சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களின் விடயத்தைப் பற்றி எழுத வேண்டியிருக்கிறது. ஆனால், இது சற்று வேறுபட்டது. சிறைப்படுத்தப்பட்ட வanurathaoura jailிடுதலையாளர்களைச் சுற்றி நிகழும் அரசியலைப்பற்றியது.  சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களின் விடுதலை தொடர்பாக ஆராய்வதற்கென்று  12.10.2018 அன்று வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு கூட்டம், கைதடியிலுள்ள மாகாணசபை வளாகத்தில் அவசர கதியில் நடந்திருக்கிறது.   இதில் அரசியற் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பொது அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டிருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில், சிறைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதலையாளர்களின் விடுதலையைப் பற்றியும் அவர்களில் ஒரு தொகுதியினர் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது.  இறுதியில் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு மறுப்பில் ஈடுபடும் சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களின் நிலையைக் கருத்திற் கொண்டு அவர்களுடைய போராட்டத்தைக் கைவிடக் கோருவது. இதற்காக வண.பிதா சக்திவேல் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் செல்வது.     (மேலும்) 16. 10.18

._______________________________________________________________________

பத்திரிகைகளுக்கான அறிக்கை 15-10-2018

வரவு செலவுத்திட்டம் : தமிழ் அரசியற் கைதிகள் விடயத்தில் ஒரு காத்திரமான கருவியாக அமையமாட்டாது.

அ. வரதராஜா பெருமாள்,

அடுத்த மாதம் அரசாங்கம் சமர்ப்பிக்கப் போகும் வரவு செலவுத் திட்டமானது 2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு உரிய வகையில் தமது வாக்கு வங்கிகளைக் காப்பாறv.perumal்றிக் கொள்வதற்காகவும் அவற்றை விரிவுபடுத்துவதற்குமான தந்திரங்களைக் கொண்ட ஒன்றாகவே அமையப் போகின்றது. எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை மேலும் மோசமானதாகவே ஆக்கும். அத்துடன் பொருளாதார நிலையில் கீழ்மட்டத்திலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்;தை மேலும் கீழேயே தள்ளும். ஆந்த வகையில் தமிழ் மக்களும் பாதிக்கப்படப் போகின்றார்கள். அவ்வாறான ஒரு வரவு செலவுத் திட்டத்தை ஒரு பொறுப்பான எதிர்க் கட்சியாகச் செயற்பட்டு விமர்சித்து, எதிர்த்து வாக்களிப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடமையாகும். தமிழ் அரசியற் கைதிகள் விடயத்தில் வரவு செலவுத் திட்டத்தை அரசுடன் தமிழ் அரசியற் கைதிகள் தொடர்பாக பேரம் பேசுவதற்கான ஒரு கருவியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் பயன்படுத்த முடியாது. மாறாக கடந்த காலங்களைப் போல அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்கு மட்டுமே பயன்படலாம்;. வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையினால் அரசாங்கத்தினால் நிறைவேற்றிட முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இல்லாமலேயே அரசாங்கத்தினால் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியும். எனவே அது தமிழ் அரசியற் கைதிகள் விடயத்தில் ஒரு காத்திரமான கருவியாக அமையமாட்டாது. அவ்வாறான அணுகுமுறை தமிழர் தரப்புக்குத் தோல்வியாகவே முடியும்.    (மேலும்) 16. 10.18

._______________________________________________________________________

100 ரூபா தான் அதிகரிக்க முடியும் - நிறைவடைந்த கூட்டு ஒப்பந்தப் பேச்சுக்கள்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடு இன்றி நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றthondamanது.   முதலாளிமார் சம்மேளனம் 100 ரூபாய் சம்பள அதிகரிப்பிற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. எனினும் அதற்கு தாம் இணங்கப் போவதில்லை என தொழிற்சங்க பிரதிநிதகள் தெரிவிக்கின்றனர்.  ராஜகிரியவில் இன்று (15) மாலை இடம்பெற்ற முதலாளிமார் சம்மேளனத்துடனான கலந்துரையாடலின் பின்னர் அதில் கலந்து கொண்ட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், பிரதித் தலைவர் முத்து சிவலிங்கம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.   (மேலும்) 16. 10.18

._______________________________________________________________________

போலி முகநூல் செயற்பாடு சர்ச்சை தாக்குதலாக மாறியதில் பெண் படுகாயம் - 11 பேர் கைது

போலி முகநூல் ஊடாக அவதூறுகளைப் பரப்பிய விடயத்தில் facebook attackதொடங்கிய சர்ச்சை நபர்களுக்கிடையிலான நேரடித் தாக்குதலாக மாறியதைத் தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் காத்தான்குடி காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  போலி முகநூல் குழுவைச் சேர்ந்த இருவர் உட்பட தாக்குதலில் ஈடுபட்ட 9 பேருமாக மொத்தம் 11 பேர் நேற்றிரவு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட போலி முகநூல் குழுவைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் சந்தேக நபர் ஒருவரின் தாயார் தாக்குதலின் போது காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நீண்ட காலமாக போலி முகநூலின் ஊடாக உருவாகி வந்த முகநூல் சண்டை நேற்றிரவு நேரடிக் கைகலப்பில் ஈடுபடுமளவுக்கு விஸ்வரூபம் எடுத்து அதன் மூலமாக தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.    (மேலும்) 16. 10.18

._______________________________________________________________________

லிற்றில் எய்ட்  திறன் விருத்தி நிலையத்தில் கற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

 கிளிநொச்சி திருநகரில் அமைந்துள்ள லிற்றில் எய்ட் திறன் விருத்தி நிலையத்தில் இலவச  கற்கை நெறிகளை பூர்த்தி செய்த  மாணவர்களுக்கு  சான்றிதழ் வழங்கும் நிlittle aid1கழ்வு நேற்று(14) இடம்பெற்றது  ஆசிரியர் தயாளன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் கிளிநொச்சி மாவடட அரச அதிபரும், கல்வி அமைச்சின் முன்னாள்  மேலதிக செயலாளருமான உடுவை எஸ் தில்லை நடராஜா, யாழ் போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், லிற்றில் எய்ட் நிறுவனத்தின் லண்டன் இணைப்பாளர் ஜெயபாலன், ஓய்வுப்பெற்ற கோட்டக் கல்வி அதிகாரி யோகநாதன், ஒய்வுப்பெற்ற கரைச்சி பிரதேச சபை செயலாளர் அருள்சோதி  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன் போது கண்ணி கற்கை நெறியில்  பல்வேறு துறைகளில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களும், தையல் பயிற்சியை பூர்த்தி செய்த மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

._______________________________________________________________________

முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வொன்றில- 12 யுவதிகள் உட்பட 36 பேர் கைது

இரத்தினபுரி, துரேகந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்ட 12 யுவதிகள் உட்பட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த களியாட்ட நிகழ்வின் போது பிரதேசவாசிகளுடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் இருவரிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 530 மில்லிகிராம், கஞ்சா 4 கிராம் மற்றும் விஷத்தன்மையுடைய போதை மாத்திரைகள் 4 உம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.அவர்கள் இருவரைத்தவிர ஏனையவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வத்தளை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரும் களுத்துறை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

._______________________________________________________________________

யாழ்ப்பாணம் - கோப்பாய் - ஊரெழு மேற்கு பகுதியில் நேற்றிரவு பெண்ணொருவர், தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 2 பேர் கைது

யாழ்ப்பாணம் - கோப்பாய் - ஊரெழு மேற்கு பகுதியில் நேற்றிரவு பெண்ணொருவர், தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் நுழைந்த 8 பேர் கொண்ட குழுவினர், குறித்த பெண்ணின் மகன் மீது, தாக்குதல் நடத்தியுள்ளனர்.அதனை தடுக்க முயற்சித்த போது, 58 வயதான பெண் மீது, குறித்த குழுவினர் தடி மற்றும் இரும்பு கம்பியினால் தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளனர்.இதனையடுத்து, 8 பேரும் தப்பிச் சென்ற நிலையில், அவர்களுள் பிரதான சந்தேகநபராக கருதப்படும் இருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக, கோப்பாய் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.அவர்கள், அதே பிரதேசத்தை சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது அவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

._______________________________________________________________________

‘சொர்க்கத்தில் பேய்கள்’: யாழ்ப்பாணம் முழு அளவிலான சுதந்திரத்துக்குத் தயாரா?

                                       ரங்க ஜயசூரிய

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச ரீதியில் பாராட்டுக்களைப் பெற்றிருந்த ஜூட் ரத்தினத்தின் “சொர்க்கத்தில் பேய்கள்” என்கிற பdemonடத்தை திரையிடாமல் நீக்கியது. அதை நீக்குவது தொடர்பான முடிவு - தமிழ் போர்க்குணத்தின் படிப்படியான ஆனால் கணிக்கக்கூடியதான சீரழிவு அதன் சொந்த குணநலன்களை குலைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒன்று என்று அந்தப்படம் சித்தரிக்கிறது - தெற்கில் ஒரு முடக்கப்பட்ட எதிர்வினையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. வடக்கில் நேர்மையான மற்றும் நீண்ட காலமாக திறமையான ஆர்வலர்கள் என்று நிரூபணமான ராஜன் கூல் போன்ற ஒரு சிலரைத் தவிர, பெரும்பான்மையானவர்கள் அந்தப்படத்தினை தணிக்கை செய்ததை நியாயப்படுத்த முனைந்தார்கள்.  தெற்கில் உள்ள குடியியல் ஆர்வலர்களின் மௌனம், சில நபர்கள் மற்றும் சமூகங்கள் (மற்றவர்கள் அல்ல) பாதுகாப்பான இடங்களில் இருந்துகொண்டு எச்சரிக்கை தூண்டப்பட வேண்டும் என்கிற பிரபலமான நம்பிக்கை காரணமாக இருக்கலாம். அமெரிக்க பல்கலைக்கழகங்களின் இடதுசாரி மாணவர் ஆர்வலர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து நிறுத்தப்படுவதை நியாயப்படுத்தி ஜனரஞ்சக மற்றும் தேசியவாதிகளின் எதிர்ப்புக்குரல் எழுப்புவதை இந்தக்கருத்து மேற்கோள் காட்டுகிறது.    (மேலும்) 15. 10.18

._______________________________________________________________________

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கிளிநொச்சி கல்வி வலயம் முன்னேற்றம்

தற்போது வெளியான தரம் ஐந்து புலமை பிரிசில்  பரீட்சை பெறுபேறுகளின்  அடிப்படையில் கிளிநொச்சி கல்வி வலயம் முன்னேற்றகரமான நிலையினை அடைந்துள்ளது.Kilinochchi grade 5  இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கிளிநொச்சி கல்வி வலயத்தின் நிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  அந்த வகையில்  கிளிநொச்சி கல்வி வலயத்தில்  இவ்வருடம் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 2723 மாணவர்களில் 1998 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். அதனடிப்படையில் சித்தி வீதம் 73.37 ஆக காணப்படுகிறது. கடந்த வருடம் 55.77 வீதமாக காணப்பட்ட கிளிநொச்சியின் சித்தி வீதம்  தற்போது  மேற்படி நிலைக்கு உயர்ந்துள்ளது.  அதேவேளை வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் கணிப்பீட்டின் படி கடந்த வருடம் 3102 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 225 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.இது  7.25 வீதமாக காணப்பட்டது.      (மேலும்) 15. 10.18

._______________________________________________________________________

அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவது நோக்கமா? - ‘பேஸ்புக்’ உபயோகிப்பாளர்களின் தகவல்கள் திருட்டு

அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், 3 கோடி பேஸ்புக் உபயோகிப்பாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதா என தகவல் வெளியாகியுள்ளது.facebook fraud  இந்தியா உள்பட உலகம் முழுவதும் சுமார் 200 கோடிப்பேர் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தை தீவிரமாக பயன்படுத்தி தகவல்களையும், படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் ‘பேஸ்புக்‘ உபயோகிப்பாளர்கள் 5 கோடிப்பேரின் கணக்குகளுக்குள் ‘வியூ ஆஸ்’ என்னும் அம்சத்தின் மூலம் ஹேக்கர்கள் (சட்ட விரோதமாக இணையதளங்களில் புகுந்து திருடுகிறவர்கள், தாக்குதல் நடத்துகிறவர்கள்) புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கலாம் என தெரிய வந்தது. ஏற்கனவே ‘பேஸ்புக்‘ உபயோகிப்பாளர்கள் 8 கோடியே 70 லட்சம் பேரின் தகவல்கள், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தால் திருடப்பட்டதாக தெரிய வந்து உலகமெங்கும் சர்ச்சை உண்டானது.  (மேலும்) 15. 10.18

._______________________________________________________________________

மகனைத் தாக்க வந்தவர்களை தடுக்க முற்பட்ட தாய் அடித்துக் கொலை

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரெழு, மேற்கு சரஸ்வதி சன சமூக நிலைய பகுதியில் மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை சிலர் பொல்லு மற்றும் கம்பியால் அடித்து கொலை செய்துள்ளனர்.இன்று இரவு 08 மணியளவில் இந்த கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீட்டுக்குள் புகுந்த 08 பேர்கள் கொண்ட கும்பல் ஒன்று இந்தக் கொலையைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சந்திர ராசா விஐயகுமாரி எனும் 58 வயதுடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த பெண்ணின் சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

._______________________________________________________________________

யாழில் இரவு நேர விஷேட தேடுதல் நடவடிக்கை

யாழ் குடாநாட்டில் அதிகரித்திருக்கும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு நேர விசேட தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று (14) இரவு police-bike-1முதல் இந்த விசேட நடவடிக்கை ஆரம்பமானதுடன் இந்த விசேட தேடுதல் மற்றும் வீதி சோதனை நடவடிக்கைகளுக்கு வடமாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் 200ற்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வடமாகாணத்துக்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கட்டளையின் கீழ் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிருந்து மேலதிக பொலிஸார் யாழ்ப்பாணத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸார் இரவுநேர வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடாநாட்டில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

._______________________________________________________________________

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கட்டுப்படுத்த மத்திய வங்கி விதித்துள்ள தடை

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கட்டுப்படுத்த அத்தியாவசியம் அல்லாத பெருட்களை இறக்குமதி செய்கின்றபோது அதற்கான பணத்தை டொலரில் செலுத்துவதை cbsதடைசெய்ய இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி, குளிரூட்டி, சலவை இயந்திரம், வாசனை பொருட்கள் மற்றும் காலணி போன்ற பொருட்களுக்கு டொலரின் மூலம் பணம் செலுத்த இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. வணிக வங்கிகள் மற்றும் அதிகாரம் பெற்ற நிதி நிறுவனங்கள் என்பவற்றிற்கு இது தொடர்பிலான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  வருடாந்தம் 22 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான, அத்தியாவசியம் அற்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.மத்திய வங்கியின் இந்த தீர்மானத்தினால் சிறு மற்றும் மத்திய பரிமான இறக்குமதியாளர்கள் பாதிக்கப்படலாம் என்றும், இதன் காரணமாக எதிர்காலத்தில் குறித்த பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடுகள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும், உள்நாட்டில் உள்ள கைத்தொழில் துறையினர் இதன்மூலம் சாதகமான நிலையை எட்டுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

._______________________________________________________________________

அரசாங்கம் உள்ளூர் உற்பத்திகளை அபிருத்தி செய்யாது வரியையும், தண்டப்பணத்தையும் மக்களுக்கு திணிக்கின்றது ரில்வின் சில்வா  (JVP)


நாட்டு மக்கள் மீது அரசாங்கம் அளவுக்கு அதிகமாக கடன் சுமையை ஏற்றுகின்றது. உள்ளூர் உற்பத்திகளை அபிருத்தி செய்யாது வரியையும், தண்டப்பணத்தையும் மக்களுக்கு திணிகsilva்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.  நேற்று கொத்மலை மேத்தகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.    அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,நாட்டில் அமெரிக்க டொலரின் ஊடாக செய்யப்படும் செலவீனத்தை குறைக்க வேண்டுமென தெரிவிக்கும் நாட்டு தலைவர்கள் மாறி மாறி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு உறவினர்களையும், நண்பர்களையும் கூடவே அழைத்து செல்வதற்கு ரூபாவின் செலவைவிட டொலரின் செலவினத்தையே மேற்கொள்கின்றனர். அண்மையில் நியூயோர்க்கில் சர்வதேச தலைவர்களின் மாநாட்டுக்கு நாட்டின் ஜனாதிபதிக்கே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  நாட்டின் தலைவர்கள் என்ற வகையில் இவர் அங்கு சென்றதில் தவறில்லை. ஆனால் கூடவே குடும்பத்தாரையும், நண்பர்களையும் அதிகாரிகளுமாக 62 பேரை அழைத்து சென்றதை நாம் குறை கூறுகின்றோம்.    (மேலும்) 15. 10.18

._______________________________________________________________________

வவுனியாவில் கஞ்சாவுடன் சிக்கிய நபர்

10 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் வவுனியா – நொச்சிமூட்டை பிரதேசத்தில் வைத்து நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் கஞ்சாவை கொண்டு சென்ற போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சியை சேர்ந்த 31 வயதான சந்தேக நபருக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த மோசடியாளர் ஒருவர் கஞ்சாவை வழங்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை தெரியவந்துள்ளது.

._______________________________________________________________________

அரசியற்தீர்வும் அரசியல் கைதிகளின் விடுதலையும்

 -          கருணாகரன்

“தமிழ் அரசியற் கைதிகளின் வழக்கு விசாரணைகளும் விடுதலையும் காலவலையறையற்று நீடிக்கிறது. இதனால் அரசியற் கைதிகளின் அடிப்படை உரிமைகளும் அவர்political-prisionersகளுடைய குடும்பத்தினரின் வாழ்வும் மோசமாகச் சிதைக்கப்படுகின்றன. இது அரசியல் உள்நோக்கமுடைய அநீதியான செயற்பாடாகும். யுத்தம் முடிவடைந்து ஒன்பது ஆண்டுகள் கடந்த பிறகும்  யுத்தகால வன்முறை அரசியற்சூழலுக்கான காரணங்கள் இல்லாதொழிந்த பின்பும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரசாங்கம் நீக்காமல் நீடிப்பது மக்களின் மீதும் சுதந்திரமான அரசியல் உணர்வின் மீதும் விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் அரசியல் கைதிகள் நீதியற்ற முறையில் அரசியல் பழிவாங்கல்களுக்குட்படுத்தப்படுகிறார்கள். இது கண்டனத்துக்குரிய  நீதிமறுப்புச் செயற்பாடாகும்” என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமார்.  இது உண்மையே. ஏனெனில் அவர் மேலும் குறிப்பிடுவதைப்போல, “அரசியற் கைதிகள் அரசியற்பிரச்சினைகளாலேயே கைதிகளாக்கப்பட்டவர்கள். அரசியற் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தினாலும் அதனுடைய நீதித்துறையினாலும் சர்வதேச சமூகத்தினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை.   (மேலும்) 14. 10.18

._______________________________________________________________________

சிறுவர் துஸ்பிரயோகம் அற்ற தேசத்தை உருவாக்குவோம் சமாதான நடைபயணம்

கிளிநொச்சியில் இன்று(13) காலை சிறுவர் துஸ்பிரயோகம் அற்ற kprotest4தேசத்தை உருவாக்குவோம் என்ற தொணிப்பொருளிலும், சிறுவர் பெண்களுக்கான, பரிபூரணமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்ற வகையிலும்  சமாதான நடைப்பயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஊர்வலமானது இன்று  காலை பத்து மணியளவில் கிளிநொச்சி காக்கா கடைச் சந்தியிலிருந்து கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானம வரை ஊர்வலமாக சுமார் ஜயாயிரம் வரையான சிறுவர்கள் கலந்துகொண்ட சமாதான ஊர்வலம் இடம்பெற்றது. சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு எதிரான பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு  ஊர்வலம்  இடம்பெற்றது.  (புகைப்படங்கள்)

._______________________________________________________________________

தற்காலிகமாக உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்தியுள்ள அரசியல் கைதிகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனanurathapuram jailாதிராஜா கொடுத்த வாக்குறுதி மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் வாக்குறுதியை அடுத்து அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.  அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளை இன்றைய தினம் சனிக்கிழமை சிவில் சமூக பிரதிநிதிகள் சந்தித்தனர்.  குறித்த சந்திப்பின் பின்னர் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா. சக்திவேல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்தோம். அதன் போது அவர்கள் காலையில் தம்மை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் சிவமோகன் ஆகியோர் சந்தித்ததாக தெரிவித்தனர்.    (மேலும்) 14. 10.18

._______________________________________________________________________

நிலவில் மனிதன் கால்பதித்தது உண்மையில்லை: மற்றுமொரு வீடியோவில் தகவல்

நிலவில் மனிதன் கால்பதித்தது மானுடகுலத்தின் ஆக உயர்ந்த சாதனmoon1968ையாகக் கருதப்பட்டு வரும் நிலையில் நிலவில் மனிதன் கால்வைத்தது உண்மையில்லை என்ற இன்னொரு வீடியோ வெளியானது.  நிலவில் மனிதன் கால்பதித்தான் என்பது பொய், அது ஏதோ ஒரு இடத்தில் ஷூட்டிங் எடுக்கப்பட்டதாகும் என்றும், நாசா உண்மையைக் கூறவில்லை என்றும் பலரும் விமர்சித்தே வந்துள்ளனர்.   1969ஆம் ஆண்டு அப்பல்லோ நிலவில் இறங்கியதிலிருந்தே பலரும் நிலவில் மனிதன் கால் வைத்ததாகக் காட்டப்படும் வீடியோ போலியானது, நாசா ஏமாற்றுகிறது என்று விமர்சித்து வந்தார்கள்.  சமீபத்தில் நிலவில் கால் வைத்த விண்வெளி வீரர்களின் ஹெல்மெட்டின் கண்ணாடியில் பலரது உருவங்கள் தெரியும் வீடியோ ஒன்று வெளியானது.   இந்நிலையில் 1966க்கும் 72க்கும் இடையே படம் பிடிக்கப்பட்டதாகக் கருதப்படும் இன்னொரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.   (மேலும்) 14. 10.18

._______________________________________________________________________

அரசியல் கைதிகளுக்கான நடை பவனி ; பெரும்பான்மையின இளைஞர்களின் குழப்பத்தால் பரபரப்பு

அரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் அநுராதபுரம் பகுதியில் நடுவீதியிலanurathapur-protest் நின்று தர்க்கத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுர சிறைச்சாலைக்கு நடைபயணம் மேற்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் சிறையில் அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் சிறைச்சாலை முன்பாக கூடியிருந்த போதே இந்தத் தர்க்கம் ஏற்பட்டது. சிறைச்சாலை முன்பாக பெருமளவான சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் , பொலிஸார் நின்றிருந்த வேளை இரண்டு காரில் மது போதையில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட பெரும்பான்மையின இளைஞர்கள் நடைபயணம் வந்த பல்கலைக்கழக மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். சிறையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. இங்கே உள்ளவர்கள் விடுதலைப்புலிகள் என கூறி தகாத வார்த்தைகளை கூறியதுடன், இனவாத கருத்துக்களையும் தெரிவித்து மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். அதன் போது அங்கிருந்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்களை சமாளித்து அழைத்து சென்றனர். அந்த இளைஞர்கள் மாணவர்களை அச்சுறுத்திய போது, பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தமைக்கு அங்கிருந்த பலரும் விசனம் தெரிவித்தனர்.

._______________________________________________________________________

அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவது நோக்கமா? - ‘பேஸ்புக்’ உபயோகிப்பாளர்களின் தகவல்கள் திருட்டு

அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், 3 கோடி பேஸ்புக் உபயோகிப்பாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதா என தகவல் வெளியாகியுள்ளது.hack    இந்தியா உள்பட உலகம் முழுவதும் சுமார் 200 கோடிப்பேர் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தை தீவிரமாக பயன்படுத்தி தகவல்களையும், படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் ‘பேஸ்புக்‘ உபயோகிப்பாளர்கள் 5கோடிப்பேரின் கணக்குகளுக்குள் ‘வியூ ஆஸ்’ என்னும் அம்சத்தின் மூலம் ஹேக்கர்கள் (சட்ட விரோதமாக இணையதளங்களில் புகுந்து திருடுகிறவர்கள், தாக்குதல் நடத்துகிறவர்கள்) புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கலாம் என தெரிய வந்தது.  ஏற்கனவே ‘பேஸ்புக்‘ உபயோகிப்பாளர்கள் 8 கோடியே 70 லட்சம் பேரின் தகவல்கள், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தால் திருடப்பட்டதாக தெரிய வந்து உலகமெங்கும் சர்ச்சை உண்டானது. (மேலும்) 14. 10.18

._______________________________________________________________________

03 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதுடைய பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவரே இன்று அதிகாலை 2.25 மணியளவில் விமான நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சுமார் 02 கிலோவும் 426 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 30 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளதது.

._______________________________________________________________________

பிரிட்டன்: இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர் மருத்துவ காப்பீட்டு கட்டணம் உயர்கிறது

இந்தியா உள்பட ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான மருத்துவ காப்பீட்டுக் கட்டணம், பிரிட்டனில் வரும் டிசம்பர் மாதம் முதல் உயர்கிறது. இதனால், பிரிட்டனுக்கு கல்வி கற்பதற்காக செல்லும் வெளிநாட்டு மாணவர்கள், தொழில் நிமித்தமாக செல்வோர் விசா பெற விண்ணப்பிக்கும்போது கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.  பிரிட்டனில் தேசிய சுகாதார சேவைகள் திட்டத்தின் கீழ் அந்நாட்டு மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்நாட்டில் 6 மாதத்துக்கு மேல் தங்கும் இந்தியர்கள் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத வெளிநாட்டினருக்கு மருத்துவ காப்பீட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்திட்டம், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.  அதன்படி, பிரிட்டனில் தொழில் நிமித்தமாக தங்கும் வெளிநாட்டினருக்கு ஆண்டொன்றுக்கு 200 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களுக்கு சற்று சலுகை அளிக்கும் விதமாக ஆண்டுக்கு 150 பவுண்டுகள் வசூலிக்கப்படுகிறது. இந்தத் தொகையை பிரிட்டன் செல்வதற்காக விசா பெற விண்ணப்பிக்கும்போதே வெளிநாட்டினர் செலுத்தியாக வேண்டும்.  (மேலும்) 14. 10.18

._______________________________________________________________________

அரசிடமிருந்து அச்சுறுத்தல்? 4 மாலத்தீவு தேர்தல் ஆணைய அதிகாரிகள் இலங்கை தப்பியோட்டம்

மாலத்தீவில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள அதிபர் அப்துல்லா யாமீனால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அந்த நாட்டுத் தேர்தல் ஆணையக் குழுவைச் சேர்ந்த 4 அதிகாரிகள் இலங்கைக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   இதையடுத்து, 5 உறுப்பினர்களைக் கொண்ட மாலத்தீவின் தேர்தல் ஆணையக் குழுவில் தற்போது ஒருவர் மட்டுமே எஞ்சியுள்ளார்.  இலங்கை சென்றுள்ள 4 அதிகாரிகளில் 3 பேர், தலைநகர் கொழும்பில் தங்கியுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதுகுறித்து அந்த நான்கு பேரில் பெயர் வெளியிட விரும்பாத ஓர் அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மாலத்தீவு அதிபர் தேர்தல் தொடர்பாக, எங்களுக்கு மிரட்டல்கள் வந்ததால் அங்கிருந்து தப்பி வந்துள்ளோம்.  அந்த நாட்டில் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

._______________________________________________________________________

ஆபத்தில் சிக்கியிருக்கும் உண்மை

பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடுமையாக அதிகரித்து வருவதுடன் அந்த குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள் அநேகமானோர் தjournalistண்டிக்கப்படாமல் தப்பிச்செல்லக்கூடிய கவலைக்குரிய சூழ்நிலை தோன்றியதையும் அடுத்து 21 வருடங்களுக்கு முன்னர் ஊடகத்துறைக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து யூனெஸ்கோ தீர்மானமொன்றை நிறைவேற்றியது. பத்திரிகையாளர்களின் கொலைகள் தனிமனிதர்களின் வாழ்வை இடைநடுவில் முடிப்பது மாத்திரமல்ல, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகவும் இருக்கிறது என்றும் அதன் விளைவாக சமுதாயத்துக்கு பரந்தளவிலான பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அந்த தீர்மானத்தில் யூனெஸ்கோ கவலையுடன்  சுட்டிக்காட்டியது. அந்த கவலை இன்று மிகவும் பாரதூரமானதாகவும் முனனென்றும் இல்லாத அளவுக்கு பரந்ததாகவும் உணரப்படுகிறது. 2006 -- 2017 காலகட்டத்தில் யூனெஸ்கோவினால் கண்டிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான பத்திரிகையாளர் கொலைகளில் பத்தில் ஒன்பது தொடர்பில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.    (மேலும்) 13. 10.18

._______________________________________________________________________

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி

ஊடகங்களுக்கான அறிக்கை  – 12-10-2018

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி சாதாரணமக்களின் வயிற்றைக் கட்டுகின்ற திட்டங்களை நிறுத்தவேண்டும்;

நாட்டில் ஜனநாயகக் சூழலை ஏற்படுத்தியிருப்பதாக பெருமைகொள்ளும் இன்றையஅரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதில் தனது இயலாமையvarathar3ையே தொடர்ந்து காட்டிவருகின்றது. நாட்டின் பருமட்டான பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கும்,–சாதாரணமக்களினது வாழ்க்கைத் தரம் தொடர்ந்து வீழ்ச்சி அடைவதற்கும் கடந்த அரசாங்கம் பெருமளவில் பெற்றுக் கொண்ட வெளிநாட்டுக் கடன் சுமைகளையும், அமெரிக்காவின் அண்மைக்கால பொருளாதாரக் கொள்கைகளையும், சர்வதேசசந்தையில் தற்காலிகமாக ஏற்;பட்டிருக்கும் எரிபொருட்களின் விலைஉயர்வையும் காரணங்களாகக் காட்டிதனது பொறுப்பிலிருந்து இந்தஅரசாங்கம் தப்பித்துக் கொள்ள முற்படுவதாகவே தெரிகின்றது. பெற்றோலியப் பொருட்களின் விலைகளை உடனடியாகமிகப் பெரியஅளவில் உயர்த்துவது அரசின் அநாவசிமான பதட்டத்தையே காட்டுகிறது. அமெரிக்கடொலர் தொடர்பான ரூபாயின் பெறுமதிவீழ்ச்சி 5சதவீதமளவிலேயே ஏற்பட அரசாங்கமோ பெற்றோலியப் பொருட்களின் விலைகளையும் போக்குவரத்து கட்டணங்களையும் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளையும்; 10 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.   . (மேலும்) 13. 10.18

._______________________________________________________________________

சவூதி தூதரகத்தில் செய்தியாளர் கொல்லப்பட்டதற்கு விடியோ, ஆடியோ ஆதாரங்கள்: துருக்கி அதிகாரிகள் அதிர்ச்சித் தகவல்

துருக்கியின் இஸ்தான்புல் நகரில், செய்தியாளர் கஷோகி மாயமானதாகக் கூறப்படும் சவூதி அரேபிய துணைத் தூதரகம் முன்பு வெள்ளிக்கிழமை குழுமியிருந்த ஊடகத்தினரjamalை நோட்டமிடும் சவூதி பாதுகாவல் அதிகாரி.  துருக்கியிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில், செய்தியாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கான விடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.    இதுகுறித்து அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:  துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய தூதரத்துக்கு இந்த மாதம் 2-ஆம் தேதி சென்ற சவூதி நாட்டு செய்தியாளர் ஜமால் கஷோகி, அங்கு கொல்லப்பட்டதை நிரூபிக்கும் வகையிலான விடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் துருக்கி அதிகாரிகளிடம் உள்ளன.  அங்கு ரகசியமாக பதிவு செய்யப்பட்ட ஆடியோவில், சவூதியிலிருந்து வந்திருந்த ஆள்கள் கஷோகியிடம் விசாரணை நடத்தும் உரையாடல்களும், அவரை அடித்துத் துன்புறுத்தும் சப்தமும் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.  கஷோகியை அந்த இடத்திலேயே படுகொலை செய்த சவூதி ஆள்கள், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி அங்கிருந்து அப்புறப்படுத்தியதாகவும் தெரிகிறது.   . (மேலும்) 13. 10.18

._______________________________________________________________________

 குப்பை திட்டத்தை எதிர்த்து புத்தளத்தில் அணிதிரண்ட மக்கள்

புத்தளத்தை நாட்டின் குப்பை தொட்டியாக மாற்றும் முயற்சிக்கு எதிராக, புத்தளத்தில் தொடராக மேற்கொள்ளப்பட்டு வந்த சத்தியாக கிரக போராட்டம் இன்று(12) மprotest in puttalamாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியாக விஸ்வரூபமெடுத்தது.புத்தளம் அறுவாக்காட்டில் கொட்டப்படவுள்ள கொழும்பு குப்பை கூளங்களுக்கு எதிராக, புத்தளத்தில் 13 நாட்களாக தொடராக மேற்கொள்ளப்பட்டு வந்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் 14 வது நாளான இன்று, சர்வமத பிரார்த்தனை நிகழ்வும் ஆர்ப்பாட்ட பேரணியும் இடம்பெற்றது.புத்தளம் கொழும்பு முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த விஷேட மேடையில் இருந்தவாறு சர்வமத தலைவர்களின் உரைகளும், பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் புத்தளம் பிரதான சுற்று வட்டத்துக்கு வருகை தந்து அங்கிருந்து, குருநாகல் வீதி வழியாக புத்தளம் மாவட்ட செயலகத்தை அடைந்து புத்தளம் மாவட்ட சர்வமத ஒன்றிய தலைவர்களால் புத்தளம் மாவட்ட செயலாளரிடம் நான்கு பக்கங்களை கொண்ட மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

._______________________________________________________________________

மெல்பனில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கும் தமிழ்கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் வேண்டுகோள்

அவுஸ்திரேலியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில்,  எதிர்ATLAS Logo01வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி ( 04-11-2018)  ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு மெல்பனில் " தமிழ் எழுத்தாளர் விழா 2018 "   நடைபெறுகிறது.

            முகவரி:       Keysborough Secondary College மண்டபம்
                                   (28 Isaac Road, Keysborough, Vic 3173)                      

  இவ்விழாவில்  ஓவியக்கண்காட்சி - மறைந்த தமிழ் அறிஞர்கள் - படைப்பாளர்கள்  ஒளிப்படக்காட்சி -  அவுஸ்திரேலியாவில் வெளியான தமிழ் நூல்கள் - இதழ்கள் - பத்திரிகைகள் கண்காட்சி  - நாவல் இலக்கிய கருத்தரங்கு - கவிஞர்கள் அரங்கு - மெல்லிசை அரங்கு என்பன இடம்பெறவுள்ளன.  . (மேலும்) 13. 10.18

._______________________________________________________________________

வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பால் பாடசாலையில் பரபரப்பு

நீர்கொழும்பு, நகரத்தில் பிரதான மகளிர் பாடசாலை ஒன்றில் குண்டு ஒன்று இருப்பதாக பாடசாலையின் அதிபருக்கு இன்று காலை கிடைத்த அநாமேதய தொலைபேசி அழைப்பு காரணமாக பாடசாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. பாடசாலைக்குள் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், 20 நிமிடத்திற்குள் மாணவிகளை அங்கிருந்து வௌியேற்றி விடுமாறும் அநாமேதய தொலைபேசி அழைப்பு ஒன்று பாடசாலை அதிபருக்கு வந்துள்ளது.  இதனால் அங்கு சற்று அமைதியற்ற நிலை தோன்றியுள்ளதுடன், மாணவிகள் பாதுகாப்பாக அங்கிருந்து வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த அநாமேதய தொலைபேசி அழைப்பு சம்பந்தமாக பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

._______________________________________________________________________

கருந்துளை மற்றும் மென்மையான முடி: ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி ஆராய்ச்சி கட்டுரை

கருந்துளை மற்றும் மென்மையான முடி என்ற தலைப்பில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி ஆராய்ச்சி கட்டுரை ஆன்லைனில் வெளியிடப்பட்டு உள்ளது.stefan    ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி ஆய்வுக் கட்டுரை ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டால் தீர்வு காணப்படாத சில மர்மமான புதிர்களை அதில் அவர் விளக்கி உள்ளார். ஸ்டீபன் ஹாக்கிங் 40 ஆண்டுகளாக வேலை செய்தார், இந்த ஆண்டு மார்ச் மாதம் தனது மரணத்திற்கு சில நாட்களுக்கு முன் பதில் அளித்தார். நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே போக போகிறோம்? இந்த பிரபஞ்சம் எப்போது தொடங்கியது? இவை பண்டைய நாட்களிலிருந்து அடிப்படை கேள்விகளை கேட்கின்றன. ரிக் வேதம், பைபிள் மற்றும்  இதே போன்ற வேதங்களில்  இந்த கேள்விகளை கேட்டு உள்ளன. ஐசக் நியூட்டனைப் போன்ற விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தை புரிந்து கொள்ளும் ஒரு புதிய பாதையை வகுக்கும் வரை இத்தகைய கேள்விகள் எண்ணங்கள்  மதத்தின் எல்லைக்குள் இருந்தது. 1915 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆல்பெர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு, முதன்முறையாக இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க ஒரு கணித சூத்திரத்தைக் கொடுத்தது.   (மேலும்) 13. 10.18

._______________________________________________________________________

 அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி 4 ஆவது நாளாக நடைபவனி

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்றும் ஆர்ப்பாmarch-to anurathapuramட்டமும் நடைபவனியும் இடம்பெற்றது.  அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வட மாகாண பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்துக் கலந்துரையாடினர்.  இந்த சந்திப்பு கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.   இதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு நடைபவனி நான்காவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டது.  இன்று காலை வவுனியா – ஓமந்தையிலிருந்து ஆரம்பமான பேரணி மதவாச்சியை சென்றடைந்தது.  வீதிகளின் இருமருங்கிலிருந்தும் தமது ஆதரவைத் தெரிவித்த பாடசாலை மாணவர்கள் பேரணியுடனும் இணைந்து கொண்டிருந்தனர்.  சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமற்போனோரின் உறவினர்களும் இந்த நடைபவனிக்கு ஆதரவு நல்கினர்.  வவுனியா நகர மத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த நடைபவனி, அநுராதபுரத்தை சென்றடையவுள்ளது. இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை தொடர்பிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு பேரணியொன்று இன்று இடம்பெற்றது.

._______________________________________________________________________

விளம்பரத்திற்காக வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறவில்லை: சின்மயி விளக்கம்

விளம்பரத்திற்காக கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறவில்லை என்று பாடகி  சின்மயி விளக்கம் அளித்துள்ளார். Chinmayi   நாடெங்கும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்கொடுமைகள் குறித்து, அவர்கள் "மீ டு" என்ற ஹேஷ் டேகை பயன்படுத்தி தங்கள் கருத்துக்களை வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து 2005-ஆம் ஆண்டு வெளிநாடு ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது தன்னை பாலியல் ரீதியாக அணுகியதாக புகார் கூறினார். இது மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் விளம்பரத்திற்காக கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறவில்லை என்று பாடகி  சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.   (மேலும்) 13. 10.18

._______________________________________________________________________

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 12 பேர் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு சவுக்கடிப் பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 12 பேரை நேற்று (11) இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தை சம்பவதினமான நேற்று இரவு சுற்றிவளைத்த​ போது புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 12 பேரை கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு , நீர்கொழும்பு, சிலாபம், அக்குறனை போன்ற பிரதேசங்களை சேர்ந்த 12 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஸ்கானர் மற்றும் புதையல் அகழ்வுக்குப் பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

._______________________________________________________________________

பதிலற்ற கேள்விகளோடு மக்கள்

 -          கருணாகரன்

“எங்கடை பிரச்சினையள் தீராதா தம்பி? இதுக்கொரு வழியே இல்லையா? அப்பிடியெண்டால் எங்கடை எதிர்காலத்தின்ர நிலைமை என்ன ராசா? நாங்கள் இனி ஆரை நம்பிறதுfrage1? ஆர் எங்களுக்கு உதவப்போகினம்” என்று கேட்டார் காணாமலாக்கப்பட்ட மகன் ஒருவரின் தாய்.  அவருக்கு வயது 72. ஆனால் 85 க்கு மேல் ஆகிவிட்டதைப்போலத் தோற்றம். அந்தளவுக்கு மகனுடைய பிரிவுத் துயர் அவரை வதைத்து உருக்கி விட்டது. நன்றாகவே தளர்ந்துவிட்டார். ஏறக்குறைய உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்றே சொல்ல முடியும். ஆனால், இந்த நிலையிலும் மகனைத் தேடுவதில் அவர் தளரவில்லை. அதற்கான தீவிரத்தைக் குறைக்கவுமில்லை. பிள்ளைப்பாசம் அதற்கான வலிமையைக் கொடுத்துள்ளது.  இருந்தாலும் அவருடைய நம்பிக்கைகள் தளர்ந்து கொண்டிருக்கின்றன. முக்கியமாக அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அரசியல் சக்திகளின் மீது அவர் நம்பிக்கையிழந்துள்ளார். நம்பிக்கை இழந்திருக்கிறார் என்று சொல்வதை விட ஏமாற்றமடைந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இதனால்தான் மேற்படி கேள்விகள் அவருக்குள்ளே முளைத்திருக்கின்றன. ஏனென்றால், இந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாகவே தீர்வு காண முடியும். (மேலும்) 12. 10.18

._______________________________________________________________________

துமிந்த சில்வாவின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தdumindaால் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தால் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.   இதனையடுத்து துமிந்த சில்வா உட்பட பிரதிவாதிகள் நால்வரினால் தமது தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.   பிரதம நீதியரசர் பிரியசத் டெப், புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் நலிண் பெரேரா ஆகிய ஐந்து நீதியரசர்கள் அடங்கிய குழாம் இன்று (11) ஒருமனதாக மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பபை வழங்கியுள்ளனர்.   (மேலும்) 12. 10.18

._______________________________________________________________________

யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில்  எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் மின்சார கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அச்சுவேலி, பத்தமேனி சூசborneையப்பர் வீதியில் இலங்கை மின்சார சபையினர் மின் கம்பத்தை நாட்டுவதற்கு நிலத்தை தோண்டியுள்ளனர்.இதன் போது நிலத்துக்குள் இருந்து கை, கால், மண்டையோடு என மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.இந் நிலையில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை, இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.மேலும் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் எந்தக் காலப் பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம், இவை யாருடையனவாக இருக்குமென்ற சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளன.

._______________________________________________________________________

புலிகளை ஒழித்தமைக்காக மகிந்தவை இந்தியர்கள் மெச்சுகின்றனர்- சுப்பிரமணியன் சுவாமி

விடுதலைப்புலிகளை ஒழித்தமைக்காக இந்தியர்கள் மகிந்தராஜபswamy1க்சவையும் இலங்கை மக்களையும் மெச்சுகின்றனர் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்   கொழும்பின் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு வழங்கியுள்ள மின்னஞ்சல் பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்  சுப்பிரமணியன் சுவாமி மேலும் தெரிவித்துள்ளது.   முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தது போன்று இந்தியர்களும்  இலங்கையர்களும் உறவினர்கள் என்பது எனது கருத்து.நாங்கள் ஒரு குடும்பமாக வாழ பழகிக்கொள்ளவேண்டும்.  விடுதலைப்புலிகளை முன்னாள் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் அழித்தமைக்காக  இந்தியர்களாகிய நாங்கள் உங்களை மெச்சுகின்றோம்.  இதன் மூலம் நீங்கள் இலங்கையை மாத்திரம் பாதுகாக்கவில்லை இந்தியாவையும் பாதுகாத்துள்ளீர்கள்.    (மேலும்) 12. 10.18

._______________________________________________________________________

தமிழரசுக் கட்சியின்  சட்டதிட்டங்களுக்கு உட்படாவிடின் சிவசக்தி ஆனந்தனுக்கு சபையில் உரையாற்ற நேரம் ஒதுக்க முடியாது – சுமந்திரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயற்படாவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு சபையில் உரையாற்ற நேர ஒதுக்sumanthiran2கீடு செய்ய முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இன்று நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்தார்.   இதன்போது கருத்துரைத்த அவர், தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும், தமக்கு சபையில் உரையாற்ற நேரம் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.   இதன்போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய அவர் உரை ஒன்றை நிகழ்த்த முடியாது என்று குறிப்பிட்டார்.   (மேலும்) 12. 10.18

._______________________________________________________________________

ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிரான மனு 25ம் திகதிக்கு ஒத்தி வைப்பு

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு எதchamaraிர்வரும் 25ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.   ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து தன்னை திட்டியதுடன் அச்சுறுத்தியதாகவும் குற்றம் சுமத்தி பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் ஆர். பவானி தாக்கல் செய்த மனு இன்று (11) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக் அழைக்கப்பட்டிருந்தது.   சம்பவத்தில் உள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் 25ம் திகதி திறந்த நீதிமன்றத்தில் மனுவை அழைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   இந்த வழக்கில் பிரதிவாதியான ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க உள்ளிட்டவர்கள் சார்பாக நீதிமன்றில் ஆஜராவதற்கு சட்ட மா அதிபர் மறுப்புத் தெரிவித்ததையடுத்து தனிப்பட்ட சட்டத்தரணி ஆஜராகியுள்ளார்.   (மேலும்) 12. 10.18

._______________________________________________________________________

பாடகி சின்மயி குற்றச்சாட்டுகள் தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: சுவிஸ் தமிழர் சுரேஷ் எச்சரிக்கை


பாடகி சின்மயி குற்றச்சாட்டுகள் தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்த தமிழரும்,"வீழ மாட்டோம்" என்ற ஈழ சுனாமிChinmayi பாடல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான சுரேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  மீ டூ (நான் கூட) எனும் ஹேஷ்டேக் கடந்த திங்கள்கிழமை முதல் கோலிவுட்டை உலுக்கி வருகிறது. அதிலும் குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்துக்கும் பத்திரிகையாளர் சந்தியா மேனன் வெளியிட்ட ட்வீட் முதன்மையானதாக அமைந்துவிட்டது. அதில், தன்னுடன் பணியாற்றிய 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுக்கு கவிஞர் வைரமுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று சந்தியா மேனன் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.  இதனைத் தொடர்ந்து பிரபல பின்னணிப் பாடகி சின்மயி, வைரமுத்துவால் தனக்கும் பாலியல் ரீதியாக தொல்லைகள் ஏற்பட்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தைரியமாகப் பதிவிடத் தொடங்கினார்.  (மேலும்) 12. 10.18

._______________________________________________________________________

900  பாலியல் துஷ்பிரயோகம்- பாலியல் தாக்குதல் உலகில் மோசமான குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை

ரஷ்யாவில் தன்னுடைய பாதுகாப்பில் இருந்த 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளை 900க்கும் அதிகமான முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரனை வரலாற்றிலேயே மோசrussia 22மான ஒரு குற்றவாளி என நீதிமன்றம் கூறியிருக்கிறது. ரஷ்யாவை சேர்ந்த விக்டர் லிஷாவ்ஸ்கி (37) - ஓல்கா  தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மேலும் இந்த தம்பதியினர் ஒன்பதுக்கும் அதிகமான சிறுவர்-சிறுமிகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இவர்களுக்கு மாநில அரசின் சார்பில் மாதம் தோறும்  265 பவுண்டுகள் நிதியாக வழங்கப்படுகிறது. காலணி கடை ஒன்றினை நடத்தி வந்த விக்டர்  தான் வளர்த்த 12 முதல் 17 வயது சிறுமிகளை ஐந்து ஆண்டுகளாக துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் இந்த சம்பவம் குறித்து சிறுமி ஓல்காவிடம் கூறியுள்ளார். இதனையடுத்து ஓல்கா உடனடியாக போலீசாருக்கு  தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  குற்றவாளி விக்டரை  கைது செய்தனர்.    (மேலும்) 12. 10.18

._______________________________________________________________________

ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்கத்துடன் மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வாயிலாக தங்கம் கடத்திய மூவர் கைது செய்ப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கோடியே 60 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகம் பெறுமதியுடைய தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மாபோல, கண்டி மற்றும் கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் சுங்கப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

._______________________________________________________________________

வாழ்வை எழுதுதல் - அங்கம் 06

சிங்கள சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து அற்பாயுளில் மறைந்த நல்லிணக்கத் தூதுவர்

இன்று விஜயகுமரணதுங்கவின் ( 1945 - 1988)  பிறந்த தினம்

மறைகரங்களினால்  அழிக்கப்பட்ட மனிதநேயவாதி

                                                                           முருகபூபதி

(2)

1978 இல் நடந்த ஜனாதிபதித்தேர்தலில் ஶ்ரீல.சு.கட்சியின் சாMGR Vijayakumaraர்பில் ஹெக்டர் கொப்பேகடுவ போட்டியிட்டபோது அநுரா பிரசாரங்களுக்கு வரவில்லை. விஜயகுமாரணதுங்க  யாழ்ப்பாணம் உட்பட நாடெங்கும் சென்று கட்சிக்காகவும் ஹெக்டர் கொப்பேகடுவவுக்காகவும் தீவிரமாக பிரசாரம் செய்தார். மைத்திரி - அநுரா வசம் கட்சி சென்றபோது, வீட்டில் அணிந்திருந்த சாரத்துடனேயே தனது ஆதரவாளர்களுடன் ஓடிவந்து மருதானை டார்லி வீதியிலிருந்த கட்சியின் தலைமையகத்திற்கு முன்னால் போராட்டம் நடத்தினார். சரிந்துகொண்டிருந்த கட்சியை நிமிர்த்துவதற்கு பாடுபட்ட விஜயகுமாரணதுங்க,  இறுதியில் அக்கட்சியிலிருந்து வெளியேறி மக்கள் கட்சியை தொடங்கி தனிவழிசென்றார். சந்திரிக்காவும் ஒஸி அபேகுணசேகராவும் அவருக்கு பக்கபலமாக நின்றனர். அன்றைய ஜே. ஆர். தலைமையிலான ஐ.தே. கட்சி 1977 இல் பதவிக்கு வந்த  காலம் முதல்  1977 - 1981 - 1983  முதலான ஆண்டுகளில் இலங்கையில் இனக்கலவரம் வந்தது.    (மேலும்) 11. 10.18

._______________________________________________________________________

பிரான்சில் புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்த வடக்கு மாகாண ஆளுநர்.

ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்திவரும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே கடந்த இரண்டு நாட்களாக பிரான்ஸ் நாட்டregi-franceில் வாழும் புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்து வருகிறார். நேற்று முன்தினம் பிரான்ஸின் புறநகர் பகுதியான மொன்ரினி நகரில் தமிழ் வர்த்தகப்பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் சிலரைச் சந்தித்த ஆளுனர், வடக்கின் தற்போதைய நிலைமை, தேவைகள் குறித்து விளக்கமளித்தார்.  யுத்தம் முடிவடைந்த பின்னரான காலத்தில் வடக்கு கிழக்கில் பாரிய அளவில் உட்கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மக்களின் அன்றாட வாழ்வை வளப்படுத்துவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படவில்லை. மக்களுக்கு வருமானத்தை பெற்றுத்தரக்கூடிய வகையில் தொழிற்சாலைகளோ அல்லது தொழில் வழங்கும் வர்த்தக நடவடிக்கைகளோ ஆரம்பிக்கப்படவில்லை. இவையே இன்றைய அவசிய தேவை என்பதை ஆளுனர் விளக்கினார். கல்வியாளர்கள், புத்திஜீவிகள், வசதிபடைத்தவர்கள் எல்லோரும் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து இங்கு வாழுகின்றபோது, அங்கே மிக வறிய மக்களே எஞ்சியிருக்கின்றனர்,   (மேலும்) 11. 10.18

._______________________________________________________________________

கிளிநொச்சியில் தாக்குதலுக்குள்ளான தொலைக்காட்சி  ஊடகவியலாளர் வைத்தியசாலையில்

கிளிநொச்சியில் பணிபுரிகின்ற பிராந்திய  தொலைக்காட்சி ஒள்றிkilinochchi-mediaன் கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மேற்கொள்ள்பபட்ட இத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மோகன் திணேஸ் என்ற ஊடகவியலாளர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வருகின்றார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது  நேற்று செவ்வாய் கிழமை மாலை கிளிநொச்சி நகரிலிருந்து திருநகரில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு உந்துருளியில் சென்றிருக்கொண்டிருந்த போது திருநகர் சுடலை வீதியில் அரசியல் கட்சி ஒன்றின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தலைமையிலான குழுவினர் குறித்த ஊடகவியலாளரை  சுடலை வீதிக்குள் அழைத்து சென்று   கடுமையாக தாக்கியுள்ளனர்.தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் உடனடியாக  கிளிநொச்சி மாவட்ட  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு  பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலீஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

._______________________________________________________________________

பாலியல் தொல்லை' - வைரமுத்து மீதான சின்மயி '  குற்றச்சாட்டு

அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்: வைரமுத்து

ஹாலிவுட், பாலிவுட்டை சமீபகாலமாக உலுக்கி வரும் மீ டூ (நான் கூட) எனும் ஹேஷ்டேக் மூலம் திரைத்துரையில் நடிகை, பாடகி என பல்வேறு துறைகளைச் சேர்chinmayi_vairamuthuந்த பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக சமூக வலைதளங்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர். இந்த அதிர்வு தற்போது கோலிவுட்டிலும் ஏற்பட்டுள்ளது. மீ டூ (நான் கூட) எனும் ஹேஷ்டேக் கடந்த திங்கள்கிழமை முதல் கோலிவுட்டை உலுக்கி வருகிறது. அதிலும் குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்துக்கும் பத்திரிகையாளர் சந்தியா மேனன் வெளியிட்ட ட்வீட் முதன்மையானதாக அமைந்துவிட்டது. அதில், தன்னுடன் பணியாற்றிய 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுக்கு கவிஞர் வைரமுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று சந்தியா மேனன் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.    (மேலும்) 11. 10.18

._______________________________________________________________________

அக்குறணை வெள்ளிப் பிரச்சினைக்கு தீர்வுகாண விசேட செயலணி

அக்குறணையில் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் இன்று புதன்கிழமை (10) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சுக்கள், திணAkurana Flood Meeting 1ைக்களங்கள் அதிகாரிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளடங்கிய விசேட செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.  மழை காலங்களில் அக்குறணை பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் நோக்கில் இன்று புதன்கிழமை (10) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அமைச்சர்களான எம்.எச்.ஏ. ஹலீம், கபீர் ஹாசீம்  ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்தனர். முறையற்ற பாலங்களும் கட்டிடங்களும் அமைத்திருப்பதானாலும் ஆறுகளின் மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாலங்கள் போதியளவு உயரத்தில் நிர்மாணிக்கப்படாமல் இருப்பதனாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக அடையாளம் காணப்பட்டன.    (மேலும்) 11. 10.18

._______________________________________________________________________

ஜனாதிபதியுடன் நான் கலந்துரையாடவில்லை - மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கத்தை கவிழ்ப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் எவ்வித கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (09) கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

._______________________________________________________________________

அரசாங்கத்தின் இனவாதமே அழிவுகளுக்கு காரணம், ஆகவே அரசாங்கம் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்   ; ஜே.வி.பி


யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு  எந்த கால எல்லைக்குள் முழுமையாக  இழப்பீடு வழங்கப்படும்.  வடக்கு கிழக்கில் மக்களுக்கு மிகவும் இலகுவாக இலபjvpீடுகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி சபையில் கோரிக்கை விடுத்தது. அரசாங்கத்தின் இனவாதமே அழிவுகளுக்கு காரணம், ஆகவே அரசாங்கம் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் ஜே.வி.பி சபையில் சுட்டிக்காட்டியது.  இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில். வடக்கில் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மக்களை தமிழர்கள் பாதுகாத்து அனுப்பிய சம்பவங்களும் பல உள்ளது. தெற்கிலும் அவ்வாறே  பல சம்பவங்களும் உள்ளது. இந்த இனவாதத்தை சட்டத்தின் மூலமாக தீர்க்க முடியாது.    (மேலும்) 11. 10.18

._______________________________________________________________________

போரில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கும் சட்டம்: நிறைவேற்றம்

 

இலங்கையில் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வகை செய்யும் சட்டம், அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.srilanka war   இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நீடித்து வந்த உள்நாட்டு போர் கடந்த 2009}ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இப்போரில் உயிரிழந்துவிட்டனர். போரின் இறுதி மாதங்களில் மட்டும் 40,000 தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் தாக்குதல்களில் உயிரிழந்தனர். இந்நிலையில், இலங்கை அதிபராக மைத்ரிபால சிறீசேன பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகியும், பெரும்பான்மை மக்களான சிங்களர்கள், சிறுபான்மையினரான தமிழர்கள் இடையிலான பாகுபாடு நீடிப்பதாக சர்வதேச பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். அதிபராக பொறுப்பேற்றபோது, போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்படும்; போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று சர்வதேச சமூகத்திடம் சிறீசேன உறுதியளித்திருந்தார்.    (மேலும்) 11. 10.18

._______________________________________________________________________

இலங்கை போக்குவரத்துச் சபையால்  140 மில்லியன் நட்ட ஈடு கோரி மஹிந்தவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 06ம் திகதி

140 மில்லியன் ரூபா நட்டத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி இலங்கை போக்குவரத்துச் சபையால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 06ம் திகதி பதில் வழங்குவதற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (10) வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை பயன்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட நட்டத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தியதன் மூலம் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 140 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

டொலர் - ரூபா புதிர் மற்றும் ஒரு சமநிலைப் பொருளாதார கொள்கைக்கான தேவை

                                               - லக்சிறி பெர்ணாண்டோ

சுதந்திரமடைந்த காலந்தொட்டு வருடந்தோறும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகிறது மேலும் மற்றைய நாடுகள் மற்றும் அவற்றின் நாணயங்களுடன் ஒப்பிடுகையிலdollar-rs் குறிப்பாக மேற்கு மற்றும் இப்போது இந்தியா மற்றும் சீனா, ஒரு குறிப்பிட்;ட அளவுவரை ஸ்ரீலங்காவுக்கு ஏற்படக்கூடிய பலவீன மற்றும் பாதிப்படையக்கூடிய நிலமை தவிர்க்க முடியாத ஒன்றாகும். சுதந்திரமடைந்த 1948ல் ஒரு டொலரை 3.32 ரூபாவுக்கு கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்தது மற்றும் ஒப்பீட்டளவில் 30 வருடங்கள் அது நிலையாக இருந்தது. இப்போது அது சுமார் 170 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன் இன்னும் மதிப்பிறங்கி வருகிறது. எனினும் பொதுவான போக்கு, தவிர்க்க முடியாத காரணங்களான (உள்நாட்டு யுத்தம், இடைவிடாத இயற்கைப் பேரழிவுகள், தீவிரமான சர்வதேசப் போட்டிகள் போன்றவை) மற்றும் தவிர்க்கக் கூடிய காரணங்கள் (அளவுக்குமீறிய அரசியல் செலவினங்கள், ஊழல்கள், நிர்வாகச் சீர்கேடு, ஆர்வம் குறைந்த கலாச்சாரம் போன்றவை)  ஆகிய இரண்டினாலும் ஸ்ரீலங்காவின் அபிவிருத்தியில் வேகக் குறைவை பிரதிபலிக்கின்றன.ஆகவே முக்கியமாக எழும் கேள்வி என்னவென்றால், ஸ்ரீலங்கா ரூபாவின் பெறுமானத்தைச் சமாளிப்பது உட்பட, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் அல்லது பொருளாதாரத்தின் வெளிப்புறத் துறைகளை நிர்வகிப்பதற்கும் ஏற்றதான முடிந்தவரை இரு கட்சிகள் சார்ந்த அடிப்படையில் முறையான பொருளாதாரக் கொள்கைகள் அல்லது திட்டங்களை எப்போதாவது கொண்டிருந்ததா என்பதுதான். (மேலும்) 10. 10.18

._______________________________________________________________________

இலங்கை அரசாங்கம் மீது குற்றம்சாட்டியுள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களது hrwநிலவுரிமையை இன்னும் அரசாங்கம் முழுமையாக சீரமைக்கவில்லை என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றின் ஊடாக குற்றம் சுமத்தியுள்ளது.  2015ம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னரும், தேசிய பாதுகாப்பை மையப்படுத்தியும், வெளிப்படைத் தன்மை அற்ற செயற்பாடுகள் இல்லாமையாலும், இந்த பணிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.  'எங்களால் ஏன் வீடு செல்ல முடியாது, இலங்கையில் இராணுவத்தின் காணி சுவீகரிப்பு' என்ற பெயரில் 80 பக்க அறிக்கை ஒன்றை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது.  இதில், காணி விடுவிப்பு விடயங்களில் வெளிப்படைத் தன்மை இல்லாமை, உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமை, சுவீகரிக்கப்பட்ட காணிகளது தரவுகள் இல்லாமை, பாதிக்கப்பட்ட சமுகத்துக்கு ஒத்துழைப்பு வழங்காமை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டயீட்டை வழங்க பாரிய காலத் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளமை போன்ற விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.   (மேலும்) 10. 10.18

._______________________________________________________________________

யாழில் 03 பேர் கைது: 21 வீடுகள் சோதனை -

யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகjaffna.roundupளில் இன்று (9) செவ்வாயக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 81 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  அதேவேளை, வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 21 பேரின் வீடுகள் சோதனையிடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  இந்த நடவடிக்கை வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலில் யாழ்ப்பாணப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் ஏற்பாட்டடில் இடம்பெற்றது.   “வாள்வெட்டு வன்முறைகள் அதிகரித்த பகுதிகள் எனவும் வன்முறைகளில் ஈடுபடுவோரின் வதிவிடங்கள் உள்ள பகுதிகளாக இனங்காணப்பட்ட யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் கொக்குவில் - அதனை அண்டிய பகுதிகள், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் சுன்னாகம் பொலிஸ் பிரிவு ஆகியவற்றில் சிறப்பு பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.  (மேலும்) 10. 10.18

._______________________________________________________________________

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’- புதியஅரசியல் கூட்டுஉதயம்

கிழக்குத் தமிழர்ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழர்விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக்கட்சி, தமிழர்சமூக ஜனநாயகக்கetoட்சி, அகிலஇலங்கை தமிழர்மகா சபை ஆகிய ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளும் 05.10.2010 அன்றுஒன்று கூடி ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரில் புதியஅரசியல் கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கிழக்குமாகாணத் தமிழர்களின் சார்பில் அதிஉச்சபட்சஉறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒருபொதுச் சின்னத்தின் கீழ் ஓரணியில் போட்டியிட வைப்பதற்காகக் கிழக்குத் தமிழர்ஒன்றியம் எடுத்துக் கொண்டமுயற்சியின் ஒரு முக்கியகட்டமாக இந்த அரசியல் கூட்டணி உருவாகியுள்ளது. இந்தமுயற்சியின் முதற்கட்டமாக அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் கிழக்குத் தமிழர்ஒன்றியம் தனித்தனியே சந்தித்துப் பேசியது. அடுத்தகட்டமாக 22.08.2018 அன்று களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரிடத்தி;ல் கூட்டிக் கலந்துரையாடியது.   (மேலும்) 10. 10.18

._______________________________________________________________________

அரசியல் தலையீடு இல்லாமல் ரபீந்திரநாத் தாகூர் கேட்போர் கூடம் திறந்து வைப்பு

ருகுணு பல்கலைக் கழகத்தில் 300 மில்லியன் இலங்கை ரூபாraveendraய் செலவில், இந்திய நன்கொடை நிதியுதவியினால் கட்டப்பட்ட ரபீந்திரநாத் தாகூர் கேட்போர் கூடம், இலங்கை மக்களுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. இந்தக் கேட்போர் கூடம் இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து மற்றும் ருகுணு பல்கலைக் கழக உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் காமினி சேனநாயக்கா ஆகிய இருவரினாலும் கூட்டாகத் திறந்து வைக்கப்பட்டது. பல்கலைக் கழக ஆசிரியர்கள், உதவிப் பணியாளர்கள், பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் ஏனைய அழைக்கப்பட்ட விருந்தினர்கள் உட்பட 1000 இற்கும் அதிகமானோர் இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர். கடந்த தினத்தில் இந்த கேட்போர் கூடத்தை அரசியல்வாதிகளின் தலைமையில் திறப்பதற்கு திட்டமிட்டிருந்த போதும் மாணவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து திறப்பு விழா பிற்போடப்பட்டிருந்தது. அரசியல்வாதிகளின் தலையீட்டுடன் குறித்த கேட்போர் கூடம் திறக்கப்படுமாக இருந்தால் அதனை மாணவர்கள் நிராகரிப்பதாக தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில் இன்று அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் இந்திய உயர் ஸ்தானிகர், பல்கலைகழக பேராசியர்கள் மற்றும் மாணவர்களின் தலையீட்டுடன் குறித்த கேட்போர் கூடம் திறந்து வைக்கப்பட்டது.

._______________________________________________________________________

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புணர்வு நடைபவனி

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புணர்வு நடைபவனியை ஆரம்பித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாடுகளையடுத்து, நடைபவனி ஆரம்பமானது. பலாலி வீதியூடாக யாழ். நகரை சென்றடைந்த நடைபவனி, ஏ9 வீதியூடாக பயணித்து அநுராதபுரத்தை சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

 தென்கொரியாவில் கைதான   இலங்கை இளைஞர்

தென்கொரியாவில் உள்ள ஜியோங்கி மாகாணத்தின் கொயாங் நகரில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைதாகியுள்ளார். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள கட்டுமானப்பணி இடம்பெற்ற பகுதி ஒன்றில் இருந்து, 27 வயதான இலங்கை இளைஞர் ஒருவர், விளக்கினை ஏந்தியபடி பறக்கும் பலூனை பறக்கவிட்டுள்ளார். அது தரையிறங்கிய பகுதி எரிபொருள் நிரப்பு நிலையம் அமைந்திருந்த பகுதி என்பதால், உடனடியாக தீப்பற்றியுள்ளது. பின்னர் பாதுகாப்பு கெமராக்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வை அடுத்து குறித்த இளைஞர் கைதாகியுள்ளார். தீப்பரவலில் மனித பாதிப்புகள் எவையும் ஏற்படவில்லை என்றாலும், 3.78 மில்லியன் டொலர்கள் அளவில் எரிபொருள் நிலையத்துக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த இலங்கையர் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் என்று அந்த நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் தாம் விளையாட்டாகவே குறித்த பலூனை செலுத்தியதாக இலங்கையைச் சேர்ந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

வடமாகாண சபையில் 5 வருடத்தில்  437 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன

வடமாகாண சபையின் 5 வருட காலப்பகுதியில் 437 பிரேரணைகளும் 19 நியதிக் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவிதsivagnam்துள்ளார். இது குறித்து மேலும் கூறுகையில்,வடமாகாணசபை தனது 5 வருட ஆட்சிக்காலத்தில் 133 அமர்வுகளை இதுவரை நடாத்தியுள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள அமர்வு 134 வது இறுதி அமர்வாகும். இதுவரை நடைபெற்ற 133 அமர்வுகளில் 437 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.இவற்றுள் தமிழ்ர்கள் மீதான இனப்படுகொலை மற்றும் தாக்குதல்கள் தொடர்பான 6 முக்கியமான பிரேரணைகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் மக்கள் நலன் சார்ந்த 437 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதேபோல் குறைநிரப்பு நியதிச்சட்டங்களும் உள்ளடங்கலாக இதுவரை 29 நியதிச்சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களில் பாலி ஆற்றிலிருந்து யாழ்.குடாநாட்டுக்கு நீரை கொண்டுவரும் தீர்மானம் எனக்கு ஆத்ம திருப்தியை கொடுத்துள்ளது.அதனை நான் கொண்டுவந்தேன் என்பதற்கும் அப்பால் அதன் ஊடாக மக்கள் அடையவுள்ள நன்மைகளின் அடிப்படையில் அந்த தீர்மானம் மிக முக்கியமானது. மேலும் அந்த தீர்மானமாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தப்படுகின்றது. இந்த திட்டம் எந்த பிரச்சினையும் இல்லாமல் நிறைவேற்றப்படும் என மேலும் தெரிவித்தார்.

._______________________________________________________________________

பத்திரிகைகளுக்கானசெய்தி

9.10.2018


கடந்த 2000ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றவடமாகாண முஸ்லிம்களின் அமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபாகத்தலைவர் மர்கூம் அஸ்ரப் அவர்களுடன் 2000 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மர்கூம் நூர்தீன் மசூர் அவர்கள் அத்தேர்தலில் எமது அமைப்பு சார்பாக போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். வடமாகாண முஸ்லிம்களின் அமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கை;கு அமைவாக ஸ்தாபகத ;தலைவரின் திடீர் மரணத்தின் பின்னர் இன்றைய தலைவரால் வன்னிப் புனர்வாழ்வு அமைச்சு மர்கூம் மசூர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவ் வடமாகாண முஸ்லிம்களின் அமைப்பின் கூட்டம் கடந்த 7.10.2018 ஞாயிறு காலை 10 மணிக்கு கொழும்பு மருதானை 10,  டேவிட் மாவத்தையில் இலக்கம் 5 அமைந்துள்ள காரியாலயத்தில் இவ் அமைப்பின் பிரதித்தலைவர்களில் ஒருவரான ஆரம்பகால உறுப்பினரான டாக்டர். யு.டு தஸ்தகீர் தலமையில் நடைபெற்றது. அமைப்பின் செயளாலர குவைதிர்கான், உதவிசெயளாலர்களான கைசர்கான் (முல்லைத்தீவு), சிராஜூதீன் நிப்ராஸ் (முசலி) ,பிரச்சார செயளாலரானர். ஆநியாஸ் (மன்னார்),உறுப்பினர்களான  காமால்தீன், ாகீர், நவ்ஷாத் சகாப்தீன், தாகீர் சஹ்ரான், சகீர்தீன் போன்றவர்ளின் பங்களிப்புடன் கூட்டம் மதியம் இரண்டுமணிவரையும் நடைபெற்று சிலதீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.  (மேலும்) 10. 10.18

._*

Theneehead-1

   Vol:17                                                                                                                               31.10.2018