Theneehead-1

   Vol:17                                                                                                                               11.10.2018

டொலர் - ரூபா புதிர் மற்றும் ஒரு சமநிலைப் பொருளாதார கொள்கைக்கான தேவை

                                               - லக்சிறி பெர்ணாண்டோ

சுதந்திரமடைந்த காலந்தொட்டு வருடந்தோறும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகிறது மேலும் மற்றைய நாடுகள் மற்றும் அவற்றின் நாணயங்களுடன் ஒப்பிடுகையிலdollar-rs் குறிப்பாக மேற்கு மற்றும் இப்போது இந்தியா மற்றும் சீனா, ஒரு குறிப்பிட்;ட அளவுவரை ஸ்ரீலங்காவுக்கு ஏற்படக்கூடிய பலவீன மற்றும் பாதிப்படையக்கூடிய நிலமை தவிர்க்க முடியாத ஒன்றாகும். சுதந்திரமடைந்த 1948ல் ஒரு டொலரை 3.32 ரூபாவுக்கு கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்தது மற்றும் ஒப்பீட்டளவில் 30 வருடங்கள் அது நிலையாக இருந்தது. இப்போது அது சுமார் 170 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன் இன்னும் மதிப்பிறங்கி வருகிறது. எனினும் பொதுவான போக்கு, தவிர்க்க முடியாத காரணங்களான (உள்நாட்டு யுத்தம், இடைவிடாத இயற்கைப் பேரழிவுகள், தீவிரமான சர்வதேசப் போட்டிகள் போன்றவை) மற்றும் தவிர்க்கக் கூடிய காரணங்கள் (அளவுக்குமீறிய அரசியல் செலவினங்கள், ஊழல்கள், நிர்வாகச் சீர்கேடு, ஆர்வம் குறைந்த கலாச்சாரம் போன்றவை)  ஆகிய இரண்டினாலும் ஸ்ரீலங்காவின் அபிவிருத்தியில் வேகக் குறைவை பிரதிபலிக்கின்றன.ஆகவே முக்கியமாக எழும் கேள்வி என்னவென்றால், ஸ்ரீலங்கா ரூபாவின் பெறுமானத்தைச் சமாளிப்பது உட்பட, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் அல்லது பொருளாதாரத்தின் வெளிப்புறத் துறைகளை நிர்வகிப்பதற்கும் ஏற்றதான முடிந்தவரை இரு கட்சிகள் சார்ந்த அடிப்படையில் முறையான பொருளாதாரக் கொள்கைகள் அல்லது திட்டங்களை எப்போதாவது கொண்டிருந்ததா என்பதுதான். (மேலும்) 10. 10.18

._______________________________________________________________________

இலங்கை அரசாங்கம் மீது குற்றம்சாட்டியுள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களது hrwநிலவுரிமையை இன்னும் அரசாங்கம் முழுமையாக சீரமைக்கவில்லை என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றின் ஊடாக குற்றம் சுமத்தியுள்ளது.  2015ம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னரும், தேசிய பாதுகாப்பை மையப்படுத்தியும், வெளிப்படைத் தன்மை அற்ற செயற்பாடுகள் இல்லாமையாலும், இந்த பணிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.  'எங்களால் ஏன் வீடு செல்ல முடியாது, இலங்கையில் இராணுவத்தின் காணி சுவீகரிப்பு' என்ற பெயரில் 80 பக்க அறிக்கை ஒன்றை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது.  இதில், காணி விடுவிப்பு விடயங்களில் வெளிப்படைத் தன்மை இல்லாமை, உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமை, சுவீகரிக்கப்பட்ட காணிகளது தரவுகள் இல்லாமை, பாதிக்கப்பட்ட சமுகத்துக்கு ஒத்துழைப்பு வழங்காமை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டயீட்டை வழங்க பாரிய காலத் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளமை போன்ற விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.   (மேலும்) 10. 10.18

._______________________________________________________________________

யாழில் 03 பேர் கைது: 21 வீடுகள் சோதனை -

யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகjaffna.roundupளில் இன்று (9) செவ்வாயக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 81 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  அதேவேளை, வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 21 பேரின் வீடுகள் சோதனையிடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  இந்த நடவடிக்கை வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலில் யாழ்ப்பாணப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் ஏற்பாட்டடில் இடம்பெற்றது.   “வாள்வெட்டு வன்முறைகள் அதிகரித்த பகுதிகள் எனவும் வன்முறைகளில் ஈடுபடுவோரின் வதிவிடங்கள் உள்ள பகுதிகளாக இனங்காணப்பட்ட யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் கொக்குவில் - அதனை அண்டிய பகுதிகள், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் சுன்னாகம் பொலிஸ் பிரிவு ஆகியவற்றில் சிறப்பு பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.  (மேலும்) 10. 10.18

._______________________________________________________________________

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’- புதியஅரசியல் கூட்டுஉதயம்

கிழக்குத் தமிழர்ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழர்விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக்கட்சி, தமிழர்சமூக ஜனநாயகக்கetoட்சி, அகிலஇலங்கை தமிழர்மகா சபை ஆகிய ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளும் 05.10.2010 அன்றுஒன்று கூடி ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரில் புதியஅரசியல் கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கிழக்குமாகாணத் தமிழர்களின் சார்பில் அதிஉச்சபட்சஉறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒருபொதுச் சின்னத்தின் கீழ் ஓரணியில் போட்டியிட வைப்பதற்காகக் கிழக்குத் தமிழர்ஒன்றியம் எடுத்துக் கொண்டமுயற்சியின் ஒரு முக்கியகட்டமாக இந்த அரசியல் கூட்டணி உருவாகியுள்ளது. இந்தமுயற்சியின் முதற்கட்டமாக அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் கிழக்குத் தமிழர்ஒன்றியம் தனித்தனியே சந்தித்துப் பேசியது. அடுத்தகட்டமாக 22.08.2018 அன்று களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரிடத்தி;ல் கூட்டிக் கலந்துரையாடியது.   (மேலும்) 10. 10.18

._______________________________________________________________________

அரசியல் தலையீடு இல்லாமல் ரபீந்திரநாத் தாகூர் கேட்போர் கூடம் திறந்து வைப்பு

ருகுணு பல்கலைக் கழகத்தில் 300 மில்லியன் இலங்கை ரூபாraveendraய் செலவில், இந்திய நன்கொடை நிதியுதவியினால் கட்டப்பட்ட ரபீந்திரநாத் தாகூர் கேட்போர் கூடம், இலங்கை மக்களுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. இந்தக் கேட்போர் கூடம் இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து மற்றும் ருகுணு பல்கலைக் கழக உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் காமினி சேனநாயக்கா ஆகிய இருவரினாலும் கூட்டாகத் திறந்து வைக்கப்பட்டது. பல்கலைக் கழக ஆசிரியர்கள், உதவிப் பணியாளர்கள், பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் ஏனைய அழைக்கப்பட்ட விருந்தினர்கள் உட்பட 1000 இற்கும் அதிகமானோர் இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர். கடந்த தினத்தில் இந்த கேட்போர் கூடத்தை அரசியல்வாதிகளின் தலைமையில் திறப்பதற்கு திட்டமிட்டிருந்த போதும் மாணவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து திறப்பு விழா பிற்போடப்பட்டிருந்தது. அரசியல்வாதிகளின் தலையீட்டுடன் குறித்த கேட்போர் கூடம் திறக்கப்படுமாக இருந்தால் அதனை மாணவர்கள் நிராகரிப்பதாக தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில் இன்று அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் இந்திய உயர் ஸ்தானிகர், பல்கலைகழக பேராசியர்கள் மற்றும் மாணவர்களின் தலையீட்டுடன் குறித்த கேட்போர் கூடம் திறந்து வைக்கப்பட்டது.

._______________________________________________________________________

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புணர்வு நடைபவனி

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புணர்வு நடைபவனியை ஆரம்பித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாடுகளையடுத்து, நடைபவனி ஆரம்பமானது. பலாலி வீதியூடாக யாழ். நகரை சென்றடைந்த நடைபவனி, ஏ9 வீதியூடாக பயணித்து அநுராதபுரத்தை சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

 தென்கொரியாவில் கைதான   இலங்கை இளைஞர்

தென்கொரியாவில் உள்ள ஜியோங்கி மாகாணத்தின் கொயாங் நகரில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைதாகியுள்ளார். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள கட்டுமானப்பணி இடம்பெற்ற பகுதி ஒன்றில் இருந்து, 27 வயதான இலங்கை இளைஞர் ஒருவர், விளக்கினை ஏந்தியபடி பறக்கும் பலூனை பறக்கவிட்டுள்ளார். அது தரையிறங்கிய பகுதி எரிபொருள் நிரப்பு நிலையம் அமைந்திருந்த பகுதி என்பதால், உடனடியாக தீப்பற்றியுள்ளது. பின்னர் பாதுகாப்பு கெமராக்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வை அடுத்து குறித்த இளைஞர் கைதாகியுள்ளார். தீப்பரவலில் மனித பாதிப்புகள் எவையும் ஏற்படவில்லை என்றாலும், 3.78 மில்லியன் டொலர்கள் அளவில் எரிபொருள் நிலையத்துக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த இலங்கையர் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் என்று அந்த நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் தாம் விளையாட்டாகவே குறித்த பலூனை செலுத்தியதாக இலங்கையைச் சேர்ந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

வடமாகாண சபையில் 5 வருடத்தில்  437 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன

வடமாகாண சபையின் 5 வருட காலப்பகுதியில் 437 பிரேரணைகளும் 19 நியதிக் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவிதsivagnam்துள்ளார். இது குறித்து மேலும் கூறுகையில்,வடமாகாணசபை தனது 5 வருட ஆட்சிக்காலத்தில் 133 அமர்வுகளை இதுவரை நடாத்தியுள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள அமர்வு 134 வது இறுதி அமர்வாகும். இதுவரை நடைபெற்ற 133 அமர்வுகளில் 437 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.இவற்றுள் தமிழ்ர்கள் மீதான இனப்படுகொலை மற்றும் தாக்குதல்கள் தொடர்பான 6 முக்கியமான பிரேரணைகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் மக்கள் நலன் சார்ந்த 437 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதேபோல் குறைநிரப்பு நியதிச்சட்டங்களும் உள்ளடங்கலாக இதுவரை 29 நியதிச்சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களில் பாலி ஆற்றிலிருந்து யாழ்.குடாநாட்டுக்கு நீரை கொண்டுவரும் தீர்மானம் எனக்கு ஆத்ம திருப்தியை கொடுத்துள்ளது.அதனை நான் கொண்டுவந்தேன் என்பதற்கும் அப்பால் அதன் ஊடாக மக்கள் அடையவுள்ள நன்மைகளின் அடிப்படையில் அந்த தீர்மானம் மிக முக்கியமானது. மேலும் அந்த தீர்மானமாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தப்படுகின்றது. இந்த திட்டம் எந்த பிரச்சினையும் இல்லாமல் நிறைவேற்றப்படும் என மேலும் தெரிவித்தார்.

._______________________________________________________________________

பத்திரிகைகளுக்கானசெய்தி

9.10.2018


கடந்த 2000ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றவடமாகாண முஸ்லிம்களின் அமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபாகத்தலைவர் மர்கூம் அஸ்ரப் அவர்களுடன் 2000 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மர்கூம் நூர்தீன் மசூர் அவர்கள் அத்தேர்தலில் எமது அமைப்பு சார்பாக போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். வடமாகாண முஸ்லிம்களின் அமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கை;கு அமைவாக ஸ்தாபகத ;தலைவரின் திடீர் மரணத்தின் பின்னர் இன்றைய தலைவரால் வன்னிப் புனர்வாழ்வு அமைச்சு மர்கூம் மசூர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவ் வடமாகாண முஸ்லிம்களின் அமைப்பின் கூட்டம் கடந்த 7.10.2018 ஞாயிறு காலை 10 மணிக்கு கொழும்பு மருதானை 10,  டேவிட் மாவத்தையில் இலக்கம் 5 அமைந்துள்ள காரியாலயத்தில் இவ் அமைப்பின் பிரதித்தலைவர்களில் ஒருவரான ஆரம்பகால உறுப்பினரான டாக்டர். யு.டு தஸ்தகீர் தலமையில் நடைபெற்றது. அமைப்பின் செயளாலர குவைதிர்கான், உதவிசெயளாலர்களான கைசர்கான் (முல்லைத்தீவு), சிராஜூதீன் நிப்ராஸ் (முசலி) ,பிரச்சார செயளாலரானர். ஆநியாஸ் (மன்னார்),உறுப்பினர்களான  காமால்தீன், ாகீர், நவ்ஷாத் சகாப்தீன், தாகீர் சஹ்ரான், சகீர்தீன் போன்றவர்ளின் பங்களிப்புடன் கூட்டம் மதியம் இரண்டுமணிவரையும் நடைபெற்று சிலதீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.  (மேலும்) 10. 10.18

._______________________________________________________________________

வாழ்வை எழுதுதல் - அங்கம் 06

சிங்கள சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து அற்பாயுளில் மறைந்த நல்லிணக்கத் தூதுவர்

இன்று விஜயகுமரணதுங்கவின் ( 1945 - 1988)

09.10.1945 பிறந்த தினம்

மறைகரங்களினால்  அழிக்கப்பட்ட மனிதநேயவாதி

                                                                      -     முருகபூபதி

இந்திரா பார்த்தசாரதி எழுதிய சுதந்திரபூமி நாவலை படித்திருக்கிறீர்களா?Vijayakumaradunga

இந்திய அரசியலை அங்கதச் சுவையோடு எழுதப்பட்ட  இந்த நாவலில் வரும் முகுந்தன் என்ற பாத்திரம் முழுமையான சித்திரிப்பு. மத்திய அரசில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவரின் வீட்டுக்கு காப்பி தயாரிக்கும் வேலைக்காரனாக வரும் முகுந்தன்,  படிப்படியாக அங்குவரும் அரசியல் தலைவர்களின் நன்மதிப்பையும் பெற்று பின்னாளில் அவரது வாரிசாக அரசியலுக்குள் பிரவேசித்து தலைவனாகின்றான். அமைச்சராகின்றான். அந்த  முகுந்தன், பிரதமர் தொடக்கம் பல தலைவர்களுக்கு தண்ணி காட்டும் கதை.  அவர்களின் கண்களில் விரலைவிட்டு ஆட்டும் கதைதான் சுதந்திரபூமி.திரைப்படங்களில் தோன்றிவிட்டு, அவற்றின் வசூல் வெற்றியை கொண்டாடும் ரசிகர்களின் மோகத்தை மூலதனமாக்கி, நாளைய முதல்வர்களாக வர முயற்சிக்கும் கனவில் மூழ்கியிருக்கின்றவர்களின் கதைகளை சமகாலத்தில் படித்து வருகின்றோம்.      (மேலும்) 09. 10.18

._______________________________________________________________________

விடுதலை புலிகள் குறித்து பேசிய விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுதலை

இன்று காலை கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.vijayakala10   யாழ்ப்பாணத்தில் கடந்த ஜூலை மாதம் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து குறித்து வாக்குமூலம் வழங்க, திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவிற்கு விஜயகலா எம்.பி. இன்று காலை சென்றிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் கைதுசெய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடந்த ஜுலை மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம் என சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார்.  நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள விஜயகலா யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை குறித்த விசாரணைகள் முடிந்துள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது. இதனால் சாட்சியங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதாலும், விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால், அவர் நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தும் ஏதுநிலை இல்லை என்பதாலும், பிணை வழங்க முடியும் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.   (மேலும்) 09. 10.18

._______________________________________________________________________

ரூ.7 கோடி மதிப்புள்ள விண்கல்லை 30 ஆண்டுகளாக வீட்டின் கதவு முட்டுக்கொடுக்கப் பயன்படுத்திய அவலம்!

சுமார் ரூ.7 கோடி விலைமதிப்புடைய விண்கல்லை, கடந்த 30 ஆண்டுகளmeteoriteாக ஒருவர் தன் வீட்டின் கதவு அசையாமல் இருப்பதற்காக முட்டுக்கொடுக்கப் பயன்படுத்திய சுவாரஸ்யமும், அவலமும் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.  அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளரான மோனா சிர்பெஸ்குவிடம் அதே பகுதியை சேர்ந்த பெயர்கூறப்படாத மனிதர் ஒருவர் தன் வீட்டின் கதவு அசையாமல் இருப்பதற்காக முட்டுக்கொடுக்கப் பயன்படுத்தி வந்த ஒரு கல்லை கொடுத்து அதன் தன்மைகள் குறித்து சோதனை செய்யக் கூறியுள்ளார். சுமார் 10 கிலோ எடைக்கொண்ட அந்த அதிசய கல்லை ஆய்வு செய்ததின் முடிவில் ஆராய்ச்சியாளருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது 30வருடங்களாகக் வீட்டின் கதவிற்கு முட்டுக்கொடுக்கப்பட்டிருந்த விண்கல் எனச் சோதனையில் தெரியவந்துள்ளது.    (மேலும்) 09. 10.18

._______________________________________________________________________

 தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட முல்லைதீவு, கொத்தனி பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியரின் சடலம் மீட்பு

ஆசிரியர் கலாச்சாலை விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று (08) காலையில் மட்டக்களப்பு தாளங்குடா ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.  முல்லைதீவு, கொத்தனி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய எம். பிரதீப் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் கலாச்சாலையில் கடந்த ஜூன் மாதம் ஆரம்பமான முதலாம் பிரிவில் பயிற்சி பெற்றுவரும் இவர் சம்பவதினமான இன்று வழமை போல கலாச்சாலையில் பயிற்சி பெற்றுவந்த நிலையில் காலை 11 மணிக்கு விடப்பட்ட இடைவேளையில் குறித்த நபர் விடுதியில் சென்று அங்குள்ள மின்சார விசிறியில் கயிற்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.   (மேலும்) 09. 10.18

._______________________________________________________________________

முன்னாள் சட்டமா அதிபர் ஷிப்லி அஸீஸ் மறைவுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்

முன்னாள் சட்டமா அதிபரும் இலங்கையின் தலைசிறந்த முன்னணி சட்ட விற்பன்னர்களில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி மர்ஹூம் ஷிப்லி அஸீஸ், நீதித்துறையில்Azis பன்முக ஆளுமை கொண்டவராக வரலாற்றில் தடம்பதித்தவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அன்னாரது மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அனுதாபச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;  தென்னிலங்கை காலியில் புகழ்பூத்த குடும்பம் ஒன்றில், அக்காலத்தில் சிரேஷ்ட உயர் நீதிமன்ற வழக்கறிஞராக திகழ்ந்த மர்ஹூம் எம்.எச். அப்துல் அஸீஸின் மகனாக அவதரித்தார் மர்ஹூம் ஷிப்லி அஸீஸ்.  தனது தந்தையாரால் 1951ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, இளம் சிறார்களின் சன்மார்க்க கல்வி மேம்பாட்டுக்காக நாடளாவிய ரீதியில் கிளை பரப்பி வியாபித்துள்ள அஹதிய்யா இயக்கத்தின் வளர்ச்சியில் கடைசி வரை கண்ணும் கருத்துமாக இருந்து உயரிய பங்களிப்பை செய்துள்ளார   (மேலும்) 09. 10.18

._______________________________________________________________________

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 55 பேர் கைது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 04 மாதங்களாக சுன்னாகம் , மாணிப்பாய் மற்றும் கோப்பாய் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் 42 பேர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பினனர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் , 13 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.இவர்கள் ஆவா , தனுரொக் மற்றும் அஜித் குழுக்களை சேர்ந்தவர்கள் என விசாரணைகளை முன்னெடுக்கும் உயர் அதிகாரியொருவர் எமக்கு குறிப்பிட்டிருந்தார்.காவற்துறை விசேட அதிரடிப்படையினரின் உதவியோடு சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபர்களை கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

._______________________________________________________________________

காலநிலை மாற்ற பேரழிவைத் தவிர்ப்பதற்கு 10 ஆண்டுகள் மட்டுமே உள்ளன - ஐநா எச்சரிக்க

காலநிலை மாற்ற பேரழிவைத் தவிர்ப்பதற்கு 10 ஆண்டுகள் மட்டுமே உள்ளன என ஐநாவின் ஐபிசிசி மைல்கல் அறிக்கை வெளியிட்டு உள்ளது.earth heat   உலகளாவிய காலநிலை குழப்பம் தவிர்க்கப்படுவது சமுதாயத்தின் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும்  மற்றும் உலகப் பொருளாதாரம் "முன்னர் இல்லாத அளவிற்கு உள்ளது" என்று ஐ.நா  ஒரு முக்கிய அறிக்கை ஒன்றின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  பூமியின் மேற்பரப்பு ஒரு டிகிரி செல்சியஸ் (1.8 டிகிரி பாரன்ஹீட்) வெப்பமடைந்துள்ளது . கொடூரமான புயல்களின் ஊடுருவலை கட்டவிழ்த்து, கடல்களின் நீர்மட்டங்களை இது உயர்த்துவதற்கு போதுமானது. கொடிய புயல்கள், வெள்ளம் மற்றும் வறட்சி ஆகியவற்றின் தாக்கத்தை கட்டவிழ்த்துவிட்டு, 3எல்  அல்லது 4சி உயரத்திற்கு ஒரு பாதையில் செல்கிறது.  பசுமை இல்லா வாயு உமிழ்வுகளின் தற்போதைய மட்டங்களில், 2030 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நாம் 1.5 சி- யாக குறைக்க  முடியும்,   (மேலும்) 09. 10.18

._______________________________________________________________________

20 ஆண்டுகளுக்கு முன்பே நீரிழிவின் அறிகுறிகள்!

நீரிழிவு நோய் பாதிப்பு கண்டறியப்படுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே, அந்த நோய்க்கான அறிகுறிகள் உடலில் தோன்றி விடும் என்று ஜப்பானில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து, நீரிழிவால் பாதிக்கப்படாத 27,000 பேரிடம் கடந்த 2005 முதல் 2016-ஆம் ஆண்டு வரை ஜப்பானின் ஷின்ஷு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், நீரிழிவு நோய் கண்டறியப்படுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே உடல் பருமன், இன்சுலின் குறைபாடு போன்ற அறிகுறிகள் தோன்றிவிடுவதாக தெரிய வந்துள்ளது.

._______________________________________________________________________

மைத்திரி - மஹிந்த இடையில் எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லை

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் தன்னுடைய வீட்டில் எந்தவொரு கலந்துரMR Interviewையாடலும் இடம்பெறவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். தன்னுடைய வீட்டில் இடம்பெற்ற இரவு நேர விருந்து ஒன்றிற்கு மட்டுமே முன்னாள் ஜனாதிபதி வருகை தந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதன்போது விஷேடமான அரசியல் கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ திஸாநாயக்கவின் வீட்டில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்தே அவர் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

._______________________________________________________________________

151 மனித எலும்புக் கூடுகள் இதுவரை மீட்பு

கடும் மழையுடனான வானிலைக்கு மத்தியிலும், மன்னார் மனிதப் புதைக்குழியின் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்சmannar bone் மாதம் ஆரம்பமான இந்த பணிகள் இன்று 82வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. இதுவரையில் 154 மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அவற்றுள் 151 மனித எச்சங்கள் தோண்டி வெளியில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள 'சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் புதிய விற்பனை நிலையத்துக்கான கட்டுமான பணி இடம்பெற்ற போது குறித்த வளாக பகுதியில் அகழ்வு செய்யப்பட்ட மண்ணில் இருந்து மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து குறித்த வளாகப் பகுதியில் தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

._______________________________________________________________________

கொழும்பில் குப்பைகள் அகற்றப்படாமைக்கான காரணம்

காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தவேண்டிய கொடுப்பனவை கொழும்பு மாநகர சபை செலுத்தாமையாலேயே கொழும்பு நகரக் குப்பைகள் அwasteகற்றப்படாமைக்கு காரணமாகுமென தெரிவிக்கப்படுகின்றது.காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய 207 மில்லியன் ரூபா கொடுப்பனவில் ஒரு பகுதியேனும் கொழும்பு மாநகர சபை வழங்கினால் குப்பை மற்றும் கழிவு அகற்றல் நடவடிக்கைகளை காணி மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் முன்னெடுக்குமென தெரிவித்துள்ளது.காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு மீளச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை மேற்கோள் காட்டி நேற்று முதல் குப்பைகள் அகற்றும் நடவடிக்கையிலிருந்து காணி மறுசீரமைப்பு அபிவிருத்தி கூட்டுத்தாபனம் விலகிக் கொண்டதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரொஷான் குணவர்த்தன தெரிவித்தார். இதேவேளை, நேற்று முன்தினம் முதல் குப்பை மற்றும் கழிவு அகற்றல் நடவடிக்கை நிறுத்தப்பட்டமைக்கு காணி மறுசீரமைப்பு அபிவிருத்தி கூட்டுத்தாபனமே காரணம் என்று கொழும்பு மாநாகர மேயர் ரோஷி சேனாநாயக்க குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

வரவு செலவு திட்டம்: செத்துப்போன சம்பிரதாயம்

-    கருணாகரன்

இன்னும் சில நாட்களில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அந்த வரவு செலவுத்திட்டத்தில் நிச்சயமாக மBudget2018க்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்கான நீதி கிடைக்கும் என்று நம்புவதற்கில்லை. பதிலாக வாழ்க்கைச் சுமை ஏறியிருப்பதற்கான நியாயப்படுத்தல்களே (காரண காரியங்களை விளக்குவதே) நடக்கப்போகிறது. மேலும் அதைத் தொடரும் வகையிலான திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளுமே இடம்பெறப் போகின்றன. “இதைப்பற்றி எப்படி இவ்வளவு துல்லியமாகக் கூறுகிறீர்கள்?” என்று யாரும் கேட்கலாம்.   “இல்லை. இது வெறுமனே ஊகநிலைப்பட்ட கருத்து. அரசின் மீதான அதிருப்தியின் வெளிப்பாடு. அரசை எதிர்க்கும் மன நிலையில் இருந்து கொண்டு தெரிவிக்கப்படும் கருத்து” எனச் சிலர் மறுத்துரைக்கவும் முற்படலாம்.   இரண்டு தரப்பினருக்கும் சொல்லக் கூடிய ஒன்று, அரசாங்கத்தின் மனதில் சனங்களைக் குறித்தும் நாட்டைக்குறித்தும் நல்லெண்ணங்கள் இருக்குமானால், முதலில் இந்தளவுக்கு நாடு பலவீனப்படும் வகையில் வழிநடத்தப்படாது.     (மேலும்) 08. 10.18

._______________________________________________________________________

பத்திரிகைகளுக்கானஅறிக்கை– 06-10-2018

பிரதேச செயலக நிலப்பரப்புகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபைகளின் அனுமதியில்லாமல்  மாற்றியமைக்கப்படக் கூடாது

அ. வரதராஜா பெருமாள்

வடக்குமாகாணமும் கிழக்குமாகாணமும் கொண்டிருந்த தமிழர்களின் நிலத் தொடர்ச்சியை இல்லாதுசெய்யும் திட்டமிட்ட நோக்குடனேயே முன்னர் வெலிஓயா என ஆரம்பிகvarathar2்கப்பட்ட அரசின் திட்டமிட்ட சிங்களகுடியேற்றத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்தவிடயம் யுத்தத்தின் காரணமாக அரசினால் தொடரமுடியாமற் போய்விட்டது. இப்பொழுது திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் கணிசமானஅளவு நிலப் பகுதிகளை ஒருங்கிணைத்தவகையில் ஓருவிரைந்த திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் நடைபெற்றுவருவது அனைவரும் அறிந்ததே. இந்தப் பகுதிகள் அரசின் குடியியல் நிர்வாகங்களின் கீழில்லாமல் அரசபடைகளின் கட்டுப்பாட்டிலேயேஉள்ளன. 1983க்கு முதல் ஒருசிறிய அளவிலேயே சிங்களவர்கள் வெலிஓயா திட்டத்தில் குடியேற்றப்பட்டிருந்தனர். ஆனால் 2009க்குப் பின்னர் அரசபடையினரின் பாதுகாப்புடனும் துணையுடனும் மிகப் பெருந் தொகையில் தென்னிலங்கை மாவட்டங்களிலிருந்து சிங்களவர்கள் அழைத்துவரப்பட்டு, தேவையானஉதவிகள் அனைத்தையும் அரசுவழங்கி விவசாயமற்றும் குடியிருப்புநில உறுதிப் பத்திரங்களையும் கொடுத்து குடியேற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.    (மேலும்) 08. 10.18

._______________________________________________________________________

அப்பா எப்ப வருவார்?  காணாமல் ஆக்கப்பட்டவரின் மகள் கனியிசை

– மு.தமிழ்ச்செல்வன்

அப்பா எப்ப வருவார்?;, அவர் வருவரா? ஏன் என்ர அப்பாவை இன்னும் விடவில்லை? அப்பா இருக்கிறார்தானே? அப்பா இருக்கிறதாலதானே அம்மா இப்பவும் பொIMG_4938ட்டு வைக்கிறா? எனக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றால் கனியிசை.  2006 ஆம் ஆண்டு பிறந்த கனியிசை தற்போது  ஏழாம் தரத்தில் கல்வி கற்கின்றாள். இவளது தந்தையும் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் பட்டியலில்.  2009.05.16 அன்று உறவினர்களுடன் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இலட்சக்கணக்கான பொது மக்களுடன் வரிசையில் வந்து பேரூந்தில் ஏற முற்பட்ட போது இசையாளன் (கனியிசையின் அப்பாவின் இயக்கப்பெயர்) என பெயர் குறிப்பிட்டு அழைத்துச் செல்லப்பட்டவர்தான் கந்தசாமி திவிச்சந்திரன்(1976). இதுவரை எந்த தொடர்பும் இல்லை. இவருடன் சேர்த்து அழைத்துச் செல்லப்பட்ட பலருக்கும் இதே நிலைமைதான்.  2009 இறுதி நாட்களில் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள், என அனைவரும் தற்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலில்  உள்ளனர்.    (மேலும்) 08. 10.18

._______________________________________________________________________

அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க கோரி ஆர்ப்பாட்டம்

தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க கோரி 06.10.2018 அன்று மஸ்கெலியா பிரவுண்லோ, சீட்டன், லக்கம் ஆகிய மூன்று தோட்டங்களைbasicsalari சேர்ந்த சுமார் 500ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மஸ்கெலியா பிரவுண்லோ மற்றும் லக்கம் ஆகிய பகுதிகளில் இவ் ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலயம் முன்னெடுக்கப்பட்டது. தோட்ட தொழிலாளர்களுக்கு காலம் தாமதிக்காமல் சம்பள உயர்வை அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் அதிகாரிகள் பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சம்பள உயர்வு இன்றி வாழ்வாதாரத்தில் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் மட்டுமன்றி அவர்களின் பிள்ளைகளும் மந்த போஷனத்தினால் பாதிக்கப்பட்டு வருவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். சம்பள உயர்வை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மலையகத்தில் பல பாகங்களில் கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

._______________________________________________________________________

11 தமிழர்கள் கடத்தப்பட்ட விவகாரம்- முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான ஆதாரங்கள்


கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் முக்கிய சந்தேக நபராக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொடவும் காணப்படுகின்றார் எனvasantha இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் கருதுகின்றனர் இதனை அவர்கள் நீதிமன்றத்திற்கும் தெரிவித்துள்ளனர். கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விடயம் குறித்து முன்னாள் கடற்படை தளபதிக்கு நன்கு தெரிந்திருந்தது என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.  இது குறித்த ஆதாரங்களை அவர்  ஒழிக்கின்றார் முக்கிய சாட்சியை கூட மௌனமாக்கியுள்ளார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள்  திருகோணமலையில் உள்ள கடற்படை தளத்தின் இரகசிய வதை முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் இது குறித்து முன்னாள் கடற்படை தளபதிக்கு நன்கு தெரிந்திருந்தது ஆனால் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.    (மேலும்) 08. 10.18

._______________________________________________________________________

வடமராட்சியிலிருந்து வெளியேறும் மீனவர்கள்

வடமராட்சி கிழக்குப் பகுதியிலும் யாழ். மாவட்ட நிர்வாக பகுதிக்குள் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பவர்களையும் 48 மணி நேரத்தில் வெளியேறுமாறு பிரதேச செயலர் அறிவித்தல் விடுத்த நிலையில் பெரும்பாலான வாடிகள் அகற்றப்பட்டு வெளியேறிவருவதாக வடமராட்சி கிழக்கு சமாசத் தலைவர் தெரிவித்தார்.  வடமராட்சி கிழக்கில் தங்கி நின்று கடலட்டைத் தொழிலில் ஈடுபடும் வெளி மாவட்டத்தவர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் அரச நிலத்தை அனுமதியின்றி ஆக்கிரமித்து வாடி அமைத்துத் தங்கியிருந்தனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற எல்லைக்குள் வாடி அமைத்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுஇ அங்கிருந்த மீனவர்களை உடன் வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மீனவர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். வடமராட்சி கிழக்குப் பகுதியின் பருத்தித்துறை நீதிமன்ற எல்லைப்பரப்புக்குள் தொழிலில் ஈடுபடும் வெளிமாவட்ட மீனவர்கள் தொடர்ந்தும் அரச நிலத்தில் அனுமதியின்றி தங்கியிருந்து கடல் அட்டை பிடிப்பதனால் அவர்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யும் வகையில் பிரதேச செயல ரினால் அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து வெளிமாவட்ட மீனவர்கள் வெளியேறி வருகின்றனர்.

._______________________________________________________________________

ஐக்கிய தேசிய கட்சியுடன் மிகவும் நெருக்கமாக தேசிய அரசாங்கத்தை பாதுகாத்ததை தவிர தமிழ் மக்களுக்காக கூட்டமைப்பு ஒன்றும் செய்ய வில்லை.

  - பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ

மாகாண சபை இல்லையென்றால் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். வட மாகாண சபையின் அமைச்சர்களும் வீட்டிற்கு செல்லsampanthan and ranil1 வேண்டிய நிலையே ஏற்படும். அதிகாரங்களை வழங்குவதற்கு பதிலாக இருந்தவற்றை மீண்டும் மத்திய அரசு தன்னகப்படுத்திக்கொண்ட நிலையே ஏற்பட்டுள்ளது. வடக்கு மக்களுக்கு தனது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் நீக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து கிடைக்கப்பெறும் கட்டளைகளின் பிரகாரமே செயற்பட வேண்டிய நிலைமை உருவாகும். அதாவது ஜனாதிபதி ஆளுநருக்கு கூறுவார். கிழக்கு மாகாண சபைக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடகாலமாக கிழக்கு மாகாண சபை இல்லை. ஜனாதிபதியின் கட்டளையின் பிரகாரம் ஆளுநர் செயற்படுகின்றார். 1987 ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர் இருந்த நிலையே எதிர்வரும் 23 ஆம் திகதிற்கு பின்னர் வடக்கிற்கு ஏற்பட போகின்றது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரமே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உருவாகியது. இதனூடாக மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டது. 13 ஆவது அரசியலமைப்பின் 9 ஆவது உப பிரிவில் மூன்று பகுதிகள் காணப்படுகின்றன. அதாவது மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் , மத்திய அரசிற்குறிய அதிகாரங்கள் மற்றும் இருதரப்பிற்கும் உரிய சமநிலை அதிகாரங்கள் என்பனவே அந்த பகுதிகளாகும். (மேலும்) 07. 10.18

._______________________________________________________________________

அருவக்காட்டில் குப்பை கொட்டும் திட்டத்தை அரசாங்கம் மறுபரிசீலிக்க வேண்டும்: புத்தளத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

கொழும்பு குப்பைகளை புத்தளம் மாவட்டத்தில் கொண்டுவந்து கொட்டும் திட்டத்தை மறுபரிசீலித்து, அதற்கான மாற்றுவழி குறித்து அரசாங்கம் சிந்திக்கவேண்rauff.H-puttalamடும். புத்தளம் மக்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பதுதான் இதற்கான பரிகாரமாக அமையும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.  அருக்காடு பிரதேசத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிராக புத்தளம் மக்கள் 7 நாட்களாக சத்தியாக்கிரக போராட்டம் நடாத்திவரும் நிலையில், அமைச்சர் ரவூப் ஹக்கீம் முதலாவது அரசியல்வாதியாக நேற்றிரவு (05) மக்களின் போராட்டக் களத்துக்கு நேரடியாக விஜயம் அங்குள்ளவர்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்துகொண்டார். அதன்பின்னர் புத்தளம் நகரசபை மண்டபத்தில் நகரபிதா கே.ஏ. பாயிஸ் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். (மேலும்) 07. 10.18

._______________________________________________________________________

வடக்கில் கேரள கஞ்சாவின் பாவனை அத்தியவசிய உணவு போல் ஆகிவிட்டது ;

- பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்   வடிவேல் சுரேஷ்

வடக்கு, கிழக்கு பகுதிகளில் 30 வருட கால யுத்தத்திற்கு பின்னர் அதிகளvadivelவு கேரளா கஞ்சாவின் பாவனை அந்த மக்களை ஆதிக்கம் செலுத்துவதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.  பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர் தின நிகழ்வு இன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் பவானி ரகுநாதன் தலைமையில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அதிதியாக கலந்து கொண்டு, பாடசாலையின் கட்டிடத்திற்கு நிதி தொகையினையும், ஆசிரியர்களுக்கான நினைவு பரிசில்களையும் வழங்கி வைத்தார். இதன்போது கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.  இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.    அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் போதை பொருளை ஒழிப்பதற்கும், தடுப்பதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண சபைகளின் உறுப்பினர்களும் சபை கூட்டங்களில் தடுமாறுகின்றனர்.    (மேலும்) 07. 10.18

._______________________________________________________________________

போரில் கையை இழந்த மாணவி பரீட்சையில் சாதனை

இறுதிக்கட்ட யுத்தத்தில் 8 மாத குழந்தைப் பருவத்தில் கையை இழந்த ராகினி எனும் மாணவி புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளாரragini்.   முல்லைத்தீவு – முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவியான இவர், புலமைப்பரிசில் பரீட்சையில் 169 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பின்னால் பொதிந்துள்ள கடின உழைப்பு, விடாமுயற்சிக்கு அப்பால் இந்த மாணவியின் வெற்றியில் துயரும் கலந்துள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது எறிகணைத் தாக்குதலில் தமது தாயார் கொல்லப்பட, ராகினி 8 மாத குழந்தைப் பருவத்தில் தனது இடது கையை இழக்க நேரிட்டது. அதே எறிகணைத் தாக்குதலில் தந்தையும் காயமடைந்த நிலையில், அன்று முதல் ராகினி அப்பம்மாவின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வருகிறார். வறுமையான சூழலில் பிரத்தியேக வகுப்புகள் எதற்கும் செல்லாது பாடசாலைக் கல்வியுடன் வீட்டில் செய்த மீட்டலும் இவரின் இந்தப் பெறுபேற்றுக்குக் காரணம்.   (மேலும்) 07. 10.18

._______________________________________________________________________

அமெரிக்கா உதவியின்றி 2 வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாது-


ஈரான் கச்சா எண்ணெய் விவகாரத்தில் தங்கள் வேண்டுகோளை ஏற்காத நட்பு நாடான சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி  பகிரங்கமாக  தெரிவித்தள்ளார். அமெரிக்காtrumph1 உதவியின்றி 2 வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாது- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 4 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா சமீபத்தில் பொருளாதார தடை விதித்துள்ளது.  மேலும் ஈரானிடம் இருந்து சர்வதேச நாடுகள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என்றும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தள்ளார்.  மீறினால் அந்த நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதனால்தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. பேரலுக்கு 100 டாலருக்கு மேல் விலை ஏறும்பட்சத்தில் சவுதி அரேபியா மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்யும் ‘ஓபேக்‘ நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் எண்ணெய் விலை குறையும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். அதற்கு சவுதி அரேபியா ஒத்துக் கொள்ளவில்லை.    (மேலும்) 07. 10.18

._______________________________________________________________________

பெரமுனவின் தலைமைத்துவத்தை மஹிந்த ஏற்றால் உறுப்புரிமை நீக்கப்படும் - ரோஹன லக்ஷ்மன் பியதாச

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தல‍ைமைத்துவத்தினை முன்னாள் ஜனrajapaksha interviewாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றால் பாராளுமன்ற மற்றும் கட்சி உறுப்புரிமையை நீக்குவதே மத்திய செயற்குழுவின் நிலைப்பாடாகும் எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, எவ்வாறிருப்பினும் மஹிந்த சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்பட மாட்டார் என்ற அதீத நம்பிக்கை உள்ளதாவும் குறிப்பிட்டார்.  மேலும் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை குழப்புவதற்கு பொதுஎதிரணியினர் பல்வேறு வகையிலும் நடவக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையிலேயே பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை மஹிந்த ராஜபக்ஷ ஏற்பார் என தெரிவித்து வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

._______________________________________________________________________

உடைந்த கதிரைக்குக் கீழ் முறிந்த பனைமரம்

                              கீர்த்தி வீரசூரிய

ஸ்ரீலங்கா கீழிருந்து மேல் செல்லும் அணுகுமுறையை கொண்டிருந்தது அது விளைவுகளைத் தந்தது - 1956ல் வாக்குரிமையற்ற பெரும்பான்மை சிங்களவர்கள் சமூகத்தில் தங்களுக்குள்ள இடத்தை தேர்தல் அதிகாரத்தைப் பயன்படுத்தி கோரினர். 1970ல் கிராமப்புற இளைஞர்களpalmera1் தங்கள் கிளர்ச்சியின் மூலமாக, நில உரிமை, வளங்களை நியாயமாகப் பகிருதல் போன்ற பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தார்கள். ஆனால் இது ஒரு தேர்தல் புரட்சி மூலம் உருவானதல்ல. இரண்டாவது ஒரு கிளாச்சி ஏற்பட்டால் தாங்கள் தப்பி பிழைக்க மாட்டோம் என அச்சமடைந்த அரசியல்வாதிகளின் சுயபாதுகாப்பு காரணமாக அது ஏற்பட்டது. 1990 களில் தெற்கில் அரசாங்கத்துக்கும் மற்றும் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கம் கொண்டஒரு சர்வாதிகார அரசியல் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது ஆனால் அது ஒரு சமூக அமைப்பு அல்ல. அந்தக் கட்சி தனது பாடங்களைக் கற்றுக்கொண்டது மற்றும் இப்போது அது கொள்கை மற்றும் நேர்மை என்பனவற்றைக் கொண்ட ஒரே அரசியல் கட்சியாக அது தோற்றம் பெற்றுள்ளது. உள்நாட்டு மோதல் 1980 களில் ஆரம்பித்து மூன்று தசாப்தங்களாக நீடித்தது - பெறுமதியான சில கொள்கைகளைக் கொண்டிருந்த ஒரு இயக்கம் (மற்றும் பெரிய அளவிலான சர்வாதிகாரத் தன்னமைகளையும் கூட) பேச்சுவார்த்தையில் அவர்களது இயலாமை காரணமாக இறுதியில் தோல்வியடைந்தது. (மேலும்) 06. 10.18

._______________________________________________________________________

மகாவலி எல் வலய நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

மகாவலி எல் வலயம் தொடர்பிலான நடவடிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டmahavaliமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.  கடந்த வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணி குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இது குறித்து அறிவுறுத்தலை விடுத்தார் என அவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.  இதேவேளை, மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவை உறுப்பினர்களுக்கும் - ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான சிரேஷ்ட மனித உரிமை ஆலோசகருக்கும் இடையில் முல்லைத்தீவில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  இன்று முற்பகல் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான சிரேஷ்ட மனித உரிமை ஆலோசகர் Juan Fernandez jardon மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலைமாறு கால நீதிக்கான ஆலோசகர் Estelle askew Renaut ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.   (மேலும்) 06. 10.18

._______________________________________________________________________

பாடசாலை கல்வியே காரணம் - கிளிநொச்சியில் முதல் நிலை பெற்ற மாணவன் தேனுசன்

முற்று முழுதான பாடசாலைக் கல்வியே நான் மாவட்டத்தில் முதthenusanல் நிலை எடுப்பதற்கு காரணமாக அமைந்தது என தரம் ஜந்து புலமை பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளை பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் பெற்ற மாணவனான கனகலிங்கம் தேனுசன் தெரிவித்தார். கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவனான தேனுசன் ஏனைய மாணவர்கள் போன்று பிரபல்யமான தனியார் கல்வி நிலையங்களுக்கோ, பிரத்தியேக வகுப்புக்களுக்கோ சென்றது கிடையாது. அமைதியான கற்றல் செயற்பாடுகள், வகுப்பிலும் கற்றல் செயற்பாடுகளில் எப்பொழுதும்  முதல் நிலையிலேயே இருந்து வந்துள்ளான் என பெற்றோர் தெரிவித்துள்ளனர். பாடசாலையில் ஆசிரியர்கள் கற்பிக்கும் போது அதிக கவனம் செலுத்துவேன், அவர்கள் வழங்குகின்ற பயிற்சிகளை தவறாது செய்து முடிப்பதோடு, சிறிது நேரம் கற்றாலும் அவற்றை ஞாபகபப்படுத்தி வைததிக்கொள்வேன்.என்றான் தேனுசன்.

._______________________________________________________________________

 இலங்கை மாணவர் கல்வி நிதியம் (1988 - 2018) அவுஸ்திரேலியா

30 ஆவது ஆண்டு நிறைவு  நிகழ்வும்  வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டமும்


இலங்கையில்  நீடித்த போர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட  தமிழ் மாணவlogoர்களின் கல்வி வளர்ச்சிக்கு,   1988 ஆம் ஆண்டு முதல்  அவுஸ்திரேலியாவிலிருந்து  உதவிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் முப்பதாவது ஆண்டு  நிறைவு நிகழ்வும்,  வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டமும்  இம்மாதம் 27 ஆம் திகதி ( 27-10-2018) சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையில் மெல்பனில் வேர்மண் தெற்கு சனசமூக நிலையத்தில்  ( Vermont South Community House -  Karobran Drive, Vermont South VIC 3133)   நிதியத்தின் தலைவர் திரு. விமல் அரவிந்தன் தலைமையில் நடைபெறும்.இதுவரையில் நூற்றுக்கணக்கான அன்பர்களின் ஆதரவுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவிய கல்வி நிதியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான செயல் அமர்வும், மாணவர்களின் முன்னேற்றம் பற்றிய தகவல் அமர்வும் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு நிதியத்தின் உறுப்பினர்களையும்,  மாணவர்களுக்கு உதவ விரும்பும் அன்பர்களையும் அன்புடன் அழைக்கிறது இலங்கை மாணவர் கல்வி நிதியம்.    (மேலும்) 06. 10.18

._______________________________________________________________________

அரசியல் கைதிகளுக்காக வவுனியா அமைப்புக்களுடன் இணைந்து குரல் கொடுத்த சிங்கள இளைஞர்கள்

அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி வவுனியா அமைப்புக்களுடன் சிங்கள இளைஞர்களும் இணைந்து அனுராதபுரத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்vavuniya protestதனர். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் அனுராதபுரம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று நண்பகல் 12.00 மணியளவில் இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய், புதிய சி.ரி.ஏ சட்டத்தினை உடனே நிறுத்து என்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய தமிழ் பதாதைகளுடனும் சிங்கள மற்றும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட பாதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,  வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் , முற்போக்கு கூட்டணி , அனுராதபுர விவசாய அமைப்புக்கள்  கலந்துகொண்டிருந்தன.போராட்டத்தின் போது வீதி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாமென போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் தள்ளியதினால் பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கிடையே சிறு கருத்து முரண்பாடு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

2018-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு

2018-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு டெனிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.போரின்போது பாலியல் வன்முறைகளை ஒரு ஆயfriedenுதமாக பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர டெனிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகிய இருவரும் போராடியவர்கள். அதற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.  நோபல் கமிட்டி அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயரை அறிவித்து உள்ளது. காங்கோ நாட்டை சேர்ந்த மருத்துவர் டெனிஸ்  முக்வேஜா மற்றும் ஈராக்கை சேர்ந்த பெண் ஆர்வலர் நாடியா முராத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் டெனிஸ் முக்வேஜா காங்கோ குடியரசில் பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பணியாற்றியவர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இதுபோன்ற நற்பணிக்காக பணியாற்றி பெண்களுக்கு மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பதில் ஸ்திரமாக பணியாற்றியவர். பாலியல் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவ சேவையை வழங்கியுள்ளார்.    (மேலும்) 06. 10.18

._______________________________________________________________________

ஞானசார தேரரின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக செய்துள்ள மேன் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் இன்று (05) நிராகரித்துள்ளது.gnasera  இன்று (05) இந்த மனு நீதியரசர்களான ஈவா வனசுந்தர, நலின் பெரேரா மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.  குறித்த மனு மூன்று நீதியரசர்கள் குழாமின் பெரும்பான்மை தீர்மானத்தின்படி நிராகரிக்கப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.  நீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.    (மேலும்) 06. 10.18

._______________________________________________________________________

தமிழ் மொழி மூலம் முதலிடத்தை பெற்ற மாணவன் மகேந்திரன் திகழொலிபவன்

2018 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலிடத்தை பெற்றுள்ளார்.யாழ். இந்து ஆரம்ப பாthigalozhi1டசாலையை சேர்ந்த மகேந்திரன் திகழொலிபவன் எனும் மாணவன் 198 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலிடத்தை பெற்றுள்ளார்.குறித்த மாணவனது தாய் தாதியராக பணிபுரியும் அதேநேரம் தந்தை அரச திணைக்களமொன்றில் பணியாற்றி வருகின்றார்.தனது இவ் வெற்றிக்கு பெற்றோரும் ஆசிரியருமே காரணம் எனஅம் மாணவன் தெரிவித்துள்ளார்.எதிர்கால இலட்சியம் ஒரு வைத்தியராக வரவேண்டும் என்று அந்த மாணவன் கூறியுள்ளார்.சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையின் நவஸ்கன் நதி என்ற மாணவனும் 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியாக தமிழ் மொழி மூலம் முதலிடத்தை பெற்றுள்ளார்.

._______________________________________________________________________

ஊழல் வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபருக்கு 15 ஆண்டு சிறை; ரூ. 8 கோடி அபராதம்

சியோல்: ஊழல் வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் லீ ம்யூங் பாக்கிற்கு 15 ஆண்டு சிறைதணடனையும், ரூ. 8 கோடி அபராதமும் விதித்து தென்கொரிய நீதிமன்றlee_myungம் தீர்ப்பளித்துள்ளது  2008-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை தென் கொரிய அதிபராக இருந்தவர் லீ ம்யூங் பாக். இவர் தனது ஆட்சிக்காலத்தில் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதிலும் குறிப்பாக அவரது சகோதரர் பெயரில் இயங்கி வந்த DAS எனும் நிறுவனத்தில் போலி கணக்குகளை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது பலத்த குற்றசாட்டு எழுந்தது. அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் ஊழல் வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் லீ ம்யூங் பாக்கிற்கு 15 ஆண்டு சிறைதணடனையும், ரூ. 8 கோடி அபராதமும் விதித்து தென்கொரிய நீதிமன்றம் வெள்ளியன்று தீர்ப்பளித்துள்ளது வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நான்காவது அதிபர் லீ ம்யூங் பாக் என்பது குறிப்பிடத்தக்கது. 

._______________________________________________________________________

அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்திற்கு சிறந்த பெறுபேறுகள் 

வெளியாகியுள்ள தரம் ஜந்து  புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்திற்கு  சிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளன.71 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 15 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதோடு,மாணவன் சூ.சத்தியன் 191 புள்ளிகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 9ம் நிலையை பெற்றுள்ளான. அத்தோடு 70 புள்ளிக்கு மேல் நூறு வீத சித்தியும், 100 புள்ளிக்கு மேல் 90 வீத சித்தியும் பாடசாலை பெற்றுள்ளதோடு, 65 மாணவர்கள் நூறு புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.

._______________________________________________________________________

நாட்டின் எந்தப் பகுதியில் பிறந்தவர்களுக்கும் உடன் பிறப்புச் சான்றிதழ்

நாட்டின் எந்தப் பகுதியில் பிறந்தவர்களுக்கு பிறப்புச் சான்றிதழை பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகத்தில் பெற்றுக்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 12 நாட்களுக்குள் மாத்திரம் 4 ஆயிரத்து 200ற்கும் அதிகமான பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளதுயாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை வவுனியா, ஹம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும் இதற்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகம் தெரிவித்துள்ளது.

._______________________________________________________________________

தராகி குடித்த கூழ்

-          கருணாகரன்

“தராகி” என்ற தர்மரத்தினம் சிவராமைச் சிலருக்கு நினைவிருக்கலாம். பலர் மறந்து விட்டிருக்கக் கூடும். ஆனால், 1990 களின் முற்பகுதியில் தராகியின் இராணுவ ஆய்வtarakiுக் கட்டுரைகளுக்கு என்றொரு தனி மதிப்பிருந்தது. அப்பொழுது தராகி கொழும்பிலிருந்து கொண்டு The Island இல் எழுதினார். இலங்கை இராணுவத்துக்கும் புலிகளுக்கும் உச்ச மோதல்கள் நடந்து கொண்டிருந்த நாட்கள் அவை. யாருக்கு வெற்றி என்று மதிப்பிட முடியாத நிலையில் களநிலவரம் இருந்தது. சில இடங்களில் புலிகளின் கை ஓங்கும். சில இடங்களில் படைகளின் கை ஓங்கும். அநேகமாகப் புலிகளை எதிர்கொள்வதற்குப் படையினர் திணறிக் கொண்டிருந்தனர். புலிகளின் முதுகெலும்பை முறிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் அதை எப்படிச் செய்வது எனப் படைத்தலைமையும் அரசாங்கமும் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தன. இந்தச் சூடான களநிலவரத்தைப் பற்றி இக்பால் அத்தாஸ், தராகி சிவராம் போன்றவர்கள் போட்டிபோட்டு எழுதிக் கொண்டிருந்தனர். இருவருடைய கட்டுரைகளையும் புலிகளும் கூர்ந்து படித்து வந்தனர். படைத்தரப்பும் படித்தது. ஒரு கட்டத்தில் தராகி எழுதினார், “மன்னார் வழியாகப் படைத்தரப்பு யாழ்ப்பாணத்தை நோக்கி நகர்வதற்குத் திட்டமிடுகிறது. இந்த வழியாக நகர்ந்தால் படைகளுக்குப் பல அனுகூலங்கள் உண்டு. மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் வழி என்பது பெரும்பாலும் பெரிய வெளிகளையும் சிறிய பற்றைக் காடுகளையும் சிற்றூர்களையும் கொண்டது. இது மரபு வழி இராணுவத்தாக்குதலுக்கு – படையினருக்கு வாய்ப்பாக இருக்கும்.  (மேலும்) 05. 10.18

._______________________________________________________________________

வடக்கிலிருந்த எந்த​வோர் அரசியல்வாதியோ அல்லது, தமிழ்நாட்டின் ஜெயலலிதாவோ கருணாநிதியோ, எவருமே, பிரபாகரனைக் காப்பாற்ற நினைக்கவில்லை.

 பாட்டலி சம்பிக்க ரணவக்க

“இன்று, வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றி, பலரும் பரிதாபமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புப் படையினரால், இறுதி யுத்தத்தில் பிரபாகரன் சுற்றிவளைsambikka-ranavakkaக்கப்பட்ட போது, தமிழ் நாட்டின் அனைத்து அரசியல் தலைமைகளிடமும், இந்திய அரசாங்கத்தால் அது குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது.  இன்னும் சில நாள்களில், பிரபாகரன் கொல்லப்பட்டு விடலாம். அதனால், சர்வதேசத் தலையீடு அவசியமா என்று, தமிழ்நாடு அரசியல் தலைமைகளிடம் கேட்கப்பட்ட போது, அவர்கள் அனைவரும், பிரபாகரனை முடித்துவிடுங்கள் என்று கூறியதாக, இந்திய அரசாங்கத்தின், முக்கிய ஆலோசகர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்” என்று, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். “அன்று, வடக்கிலிருந்த எந்த​வோர் அரசியல்வாதியோ அல்லது, தமிழ்நாட்டின் ஜெயலலிதாவோ கருணாநிதியோ, எவருமே, பிரபாகரனைக் காப்பாற்ற நினைக்கவில்லை. அவர்கள் அனைவருமே, வெளிப்படையாக ஒரு கொள்கையையும் உள்ளுக்குள் வேறொரு கொள்கையையுமே கொண்டிருந்தனர். எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கமானது, சிங்கள சமூகத்தால், தமிழ்ச் சமூகம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்று நினைக்கவில்லை. காரணம், தமிழ்ச் சமூகத்துடன் மிக நெருக்கமாகவே தான், சிங்களச் சமூகம் காணப்படுகின்றது.    (மேலும்) 05. 10.18

._______________________________________________________________________

வலிகிழக்கில் கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் தெரிவான வேலைத்திட்டங்களை பார்வையிட்ட த.சித்தார்த்தன்(பா.உ)

மக்கள் இல்லாத வீதிகளுக்கு கிராம அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய உதயன் பத்திரிகையில் செய்தியொன்று வெளியாகியிருந்ததுsitharthan20. மேற்படி வீதிகளுக்கான திட்டங்கள் யாவும் அங்குள்ள வலிகிழக்கு பிரதேசசபையின் உபதவிசாளர் கபிலன் மூலம் பிரேரிக்கப்பட்டு மாகாணசபை உறுப்பினர் பரஞ்சோதி வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோசன் ஆகியோரின் ஆலோசனைக்கமைய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனால் உள்வாங்கப்பட்டவையாகும். மேற்படி பத்திரிகைச் செய்தியினைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்றுகாலை வலிகிழக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் கபிலனுடன் புத்தூர்m அச்சுவேலி பகுதிகளுக்குச் சென்று குறித்த வீதிகளை நேரில் பார்வையிட்டார். அங்கு பல வீடுகள் இருப்பதைக் குறிப்பிட்டு அந்த வீதிகள் தேவையான வீதிகளே என்றும் குறித்த வேலைத் திட்டத்தில் எந்த தவறும் இல்லையென்றும் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார். பிரதேசசபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர் இரா. செல்வராஜாவும் பாராளுமன்ற உறுப்பினருடன் சென்றிருந்தார்கள்.

._______________________________________________________________________

கடமை தவறிய  17 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடம் மாற்றம்

யாழில் இடம்பெற்ற குற்றசெயல் தொடர்பில் இரண்டு நாட்களாக விசாரணைகள் எதனையும் முன்னெடுக்காது இருந்த யாழ்.பொலிஸ் நிலைய பெருங்குற்ற பிரிவில் கடமைJaffna Police2யாற்றிய 17 பொலிஸாருக்கு இடம் மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.  வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரிலையே இடம் மாற்றம் இன்று (04) வழங்கப்பட்டுள்ளது. யாழ்.நகர் பகுதியில் உள்ள கடையொன்றில் கடந்த 24 ஆம் திகதி 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டன. அது குறித்து மறுநாள் கடை உரிமையாளரால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. தனது முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கடை உரிமையாளர் கொண்டு சென்றார். அதனை அடுத்து யாழ்.மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் குழுவொன்றினை அமைத்து, விசாரணைகளை முன்னெடுக்க வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பணித்தார்.  (மேலும்) 05. 10.18

._______________________________________________________________________

சுமந்திரன் மீதான கொலை முயற்சி ; சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனைக் கொலைசெய்ய முயற்சித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் போராளிகளான 5 சந்தேகநபர்கsumanthiran2ளுக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. பிரமுகர் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் ஐவர் மீதும் தமிழ் மொழியில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. கொழும்பு, இலக்கம் – 6 சிறப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி சம்பத் ஜானகிய ராஜரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேகநபர்களுக்கு குற்றப்பத்திரிகை வாசித்துக் காண்ப்பிக்கப்பட்ட நிலையில் அவர்கள் நிரபராதிகள் என மன்றுரைத்தனர். வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முன்னெடுக்க சம்மதித்த சந்தேகநபர்கள், தங்களின் வழக்கை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை நிராகரித்த மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் ஜானகிய ராஜரத்ன, தேவை ஏற்படும் பட்சத்தில் அரச செலவில் சட்டத்தரணிகளை ஒழுங்குப்படுத்தித் தருவதற்கு மன்று நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தார். அத்துடன், வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு நீதிமன்று ஒத்திவைத்தது.

._______________________________________________________________________

இந்திய நிறுவனங்கள் உள்பட 78 நிறுவனங்களுக்கு உலக வங்கி தடை

மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டது தொடர்பாக, சில தனிநபர்கள் உள்பட 78 நிறுவனங்களுக்கு உலக வங்கி தடை விதித்துள்ளது. இதில் இந்திய நிறுவனங்களும் அடங்கும். இதனworldbank் மூலம் அந்த நிறுவனங்கள், உலக வங்கியின் சார்பாக மேற்கொள்ளப்படும் திட்டங்களில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பல்வேறு வழிகளில் திரட்டப்படும் நன்கொடைகளைக் கொண்டு, உலக வங்கி பல்வேறு நாடுகளில் மக்களுக்கான நலத்திட்டங்களை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தும் பணிகளை, பல்வேறு நிறுவனங்களுக்கு உலக வங்கி அளித்து வருகிறது. இந்நிலையில், நன்கொடைகள் சரியான வகையில் பயன்படுத்தப்படுவது குறித்தும், இந்தத் திட்டப் பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் மோசடி மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கண்டறிந்தும் உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:உலக வங்கியின் நிதியுதவியுடன் பல்வேறு நாடுகளில் திட்டப் பணிகளைச் செயல்படுத்தி வந்த தனிநபர்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள், ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காகத் தடை செய்யப்பட்டுள்ளன.    (மேலும்) 05. 10.18

._______________________________________________________________________

உடபலாத்த, தொழுவ பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்கள்

கம்பளை, உடபலாத்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (04) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் உடபலாத்த Rauff Hakeem 2பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.  ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான கம்பளை நகரசபை தலைவர் சமந்த அனுரகுமார, உடபலாத்த பிரதேச செயலாளர் துஷாரி தென்னகோன், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லா, உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இலங்கவத்தே பிரதேசத்தில் நிலவும் வடிகான் பிரச்சினையை உடனடியாக தீர்த்து தருமாறு இக்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. உடனடியாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறித்த இடத்துக்கு விஜயம்செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து இருதரப்பினருடனும் பேசி உரிய தீர்வினை வழங்குமாறு உத்தரவிட்டார். இதன்பின்னர் கம்பளை, தொழுவ பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் தொழுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான கம்பளை நகரசபை தலைவர் சமந்த அனுரகுமார, தொழுவ பிரதேச செயலாளர் தயானந்த, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லா, உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

._______________________________________________________________________

ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது

கிளிநொச்சியில் இருந்து திருகோணமலைக்கு ஒரு தொகை கேரளா கஞ்சாவை எடுத்துச் சென்று கொண்டிருந்த மூன்று பேர் இன்று வவுனியா மாவட்ட விஷத்தன்மையுடைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வேன் ஒன்றில் கேரளா கஞ்சாவை எடுத்துச் சென்று கொண்டிருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின்படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 07 கிலோவும் 900 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேகநபர்கள் கிளிநொச்சி மற்றும் கின்னியா பிரதேசங்களை சேர்ந்த 28 மற்றும் 30 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசார.ணைகளை ஆரம்பித்துள்ளனர்.

._______________________________________________________________________

அமைதிக்கான நோபல் பரிசை பெறப் போவது யார்?

சமூகத்துக்காக அரிய தொண்டாற்றியவர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அமைதிக்கான நேபால் பரிசு இந்த ஆண்டில் வெள்ளிக்கிழமை (அக். 5) அறிவிக்கப்படவுAlfred_Nobel3ள்ளது.இயற்பியல், மருத்துவம், வேதியியல் ஆகிய பிரிவுகளில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. வரும் வெள்ளிக்கிழமை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது. இந்த பரிசை யார் பெறப் போகிறார்கள் என்பதில் உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி எடுத்ததால் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கலாம் என்று பிரிட்டன் எம்.பி. போரிஸ் ஜான்சனும், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னும் பரிந்துரைத்திருந்தனர்.இதுதொடர்பாக சர்வதேச அமைதிக்கான ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டான் ஸ்மித் கூறுகையில், "வடகொரியாவும்-தென்கொரியாவும் தற்போது நட்பு பாராட்டி வருகிறது.   (மேலும்) 05. 10.18

._______________________________________________________________________

தொடரும் மெகசின் அரசியல் கைதிகளின் போராட்டம்

வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் 43 தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. தங்களது வழக்கு விசாரணைகளை விரைவாக முன்னெடுக்குமாறு கோரி நேற்று முற்பகல் முதல் அவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, கடந்த 22 நாட்களாக அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 12 தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அமெரிக்காவில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமாயின் முதலில் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

மார்க்ஸ் 200 வது ஆண்டு

சிறிதரன் (சுகு)

தமிழ்தேசிய விடுதலைப்போராட்டம் பல இயக்கங்களாக இருந்த நிலை மறுக்கப்பட்டதன் விளைவு அது பாசிசமாகவும் சுத்த இராணுவ வாதமாகவும் உருக்குலைந்தது. தெற்கிலும் வடக்கிலுமான இந்த இராணுவ வாத சன்னத நிலை மனிதம் அதன் வாழிடம் எல்லாவற்றையும் பல ஆண்டுகளாக பேரழிவுக்குள்ளாக்கியது. இன்றளவில் இந்த இராணுவவாத சிந்தனை வெற்றி தோல்விகள் பற்றிய சிந்தனைகள் தொடர்கின்றன. பல சமூகங்கள் வாழும் நாட்டில் சக சமூகத்தின் மீது நிரந்தர மேலாதிக்கம்  இந்த இயக்கமறுப்பயில் எண்ணங்கள் உடைவுகளை வெடிப்புக்களை தங்குதடையில்லா இயக்கத்தின் பேரில் ஏற்படுத்துமsritharan-eprlf்.

இன்றைய உலகளாவிய ஆளும் வர்க்கத்திற்கு இயக்கமறுப்பியல் அவசியப்படுகிறது  உலகின் வெப்பநிலை அதிகரிப்பு மனித குலத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. மத்திய கிழக்கின் எண்ணை வயல்களும் நதிக்கரைகளும் நாகரிகங்களும் எரித்து சாம்பராக்கப்படுகின்றன. முதலாளித்துவம் தனக்குரிய சவக்குழியை தானே வெட்டும் என்ற 19 ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் வெளிவந்த பொதுவுடைமை கட்சி அறிக்கை தெரிவித்தது இன்றளவில் உண்மையே உலகளாவிய அளவில் அது உலகத்தை ஒரு கிராமமாக மாற்றி இருப்பினும் பிரமாண்டமான ஏற்றத்தாழ்வான கிராமம்.  உலகின் அரைபங்கினருக்கான செல்வம் ஒருசிலரின் கைகளில் குவிந்துள்ளது.  இந்த பிரமாண்டமான அளவு ரீதியான மாற்றம் உலகளாவிய அளவில் பிரமாண்டமான வெடிப்பை ஏற்படுத்தலாம் இலங்கையில் சாதாரண பெருவாரியான மக்களின் தேவைகளைப்புறக்கணிப்பது இலங்கையின் பல்லினத்தன்மையான மக்களின் வாழ்வை  நிராகரிக்கும் போக்கின் எதிர் வினையாக மாற்றத்திற்கான தவிர்க்கமுடியாத இயக்கமாக மாறலாம்.   (மேலும்) 04. 10.18

._______________________________________________________________________

அஞ்சலிக்குறிப்பு:

ஒரு தேவதைக் கனவை இலக்கியத்தில் பதிவுசெய்து,  அற்பாயுளில் மறைந்த இலக்கியத்தேவதை   கெக்கிராவ ஸஹானா

மல்லிகை ஜீவா, ஜெயகாந்தனின் ஆசிபெற்று வளர்ந்த இலக்கிய ஆளுமை

                                                                          முருகபூபதி

" திருமதி ஸஹானாவின் ஒரு தேவதையின் கனவு சிறுகதைத்தொsahana5குதி வெளிவருவது குறித்து பெரு மகிழ்ச்சியடைகிறேன். தெளிவுற அறிந்திடவும், தெளிவுபெற  மொழிந்திடவும், சிந்திப்போர்க்கு அறிவுவளர, உள்ளத்தே ஆனந்தக்கனவு பல காட்டலும் கைவரப்பெற்றவர்கள் எழுதும் படைப்புகள் காலத்தால் என்றென்றும் போற்றப்படும். அவை என்றும்  புதியவை. அத்தகு இலக்கியவரிசையில் தேவதையின் கனவும்  இடம்பெற வாழ்த்துகின்றேன்"  என்று 22-01-1997 ஆம் திகதி சென்னையிலிருந்து ஜெயகாந்தன் வாழ்த்தியிருந்த, ஈழத்தின் இலக்கியப்படைப்பாளி  கெக்கிராவ ஸஹானாவும் கடந்த மாதம் எங்கள் இலக்கிய உலகிலிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டார்.  "அற்பாயுள் மரணமும்  மேதா விலாசத்தின் அடையாளமோ? " என்று ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலில் சுந்தரராமசாமி எழுதியிருந்ததுதான் நினைவுக்கு வருகிறது. 1968 இல் பிறந்து 2018 இல் மறைந்துள்ள கெக்கிராவ ஸஹானா, குறுகிய காலத்தில்  ஈழத்து இலக்கிய வானில் சுடர்விட்டு பிரகாசித்த நட்சத்திரம்.  எங்கள் மத்தியில் உதிர்ந்துள்ள இந்த நட்சத்திரம் எம்மிடம் விட்டுச்சென்றுள்ளவை அவருடைய அருமைக்குழந்தைகளும், இலக்கியப்பிரதிகளும்தான்.     (மேலும்) 04. 10.18

._______________________________________________________________________

40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தது. 90-களில் வெற்றிப் பாதையில் பயணித்த இலங்கை கிரிக்கெட் அணி 1996-ம் ஆண்டு உலகக் கோப்vijayakanthபையை முதன்முறையாக வென்றது. அந்த சமயத்தில் கிரிக்கெட் அணியை இலங்கையின் மேற்கு, தெற்குப் பிரதேசங்களைச் சேர்ந்த வீரர்களே பிரதிநிதித்துவப்படுத்தினர்.  இந்த நிலையில், சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் 19 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.  17 வயதான விஜயகாந்த் என்ற இளைஞரே தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார். கிரிக்கெட் வாரியம் தற்போதுதான் அறிவிப்பாக வெளியிட்டிருந்தாலும் கடந்த சில மாதங்களில் இவர் சில சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடிவிட்டார்.  19 வயதிற்குட்பட்ட அணியில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இவர் விளையாடியுள்ளார். ஒருநாள் சர்வதேச அணியில் மேலதிக வீரராக சேர்க்கப்பட்டுள்ள விஜயகாந்த், 19 வயதிற்குட்பட்ட முதலாவது ஆசிய உலகக் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணியிலும் இடம்பிடித்திருந்தார்.    (மேலும்) 04. 10.18

._______________________________________________________________________

தமிழ்இலக்கியத்தில் திறனாய்வு என்ற சொல்திறன் நோக்கு என்பதால் பிரதியீடு செய்யப்படவேண்டும்.

-ஏ.பீர்முகம்மது (இலங்கை)

நூல்மதிப்பீடுகள் தொடர்பிலான கருத்தாடல் வெளியில் விமர்சனம் , திறனாய்வு,  நூல்மதிப்பீடு போன்ற சொற்களுடன் வேறு பல சொற்களும் இன்று பயன்பாட்டtamil.ilaில ்உள்ளன.பின்னமளவிலாயினும் இச்சொற்களுக்கிடையே வேறுபாடுகள் உள்ளன. சினிமா,நாடகம் போன்ற துறைகளில் விமர்சனம் என்றசொல் தற்போதும் பயன்பாட்டில் இருந்தபோதிலும் தமிழ்இலக்கியப்பரப்பில் அச்சொல் காலாவதியாகிவிட்டது என்றேகருதப்படுகிறது.. பதிலாக திறனாய்வு என்ற சொல்லே பெருமளவில் தற்போது பாவனையில் உள்ளது.திறனாய்வுஎன்னும் இச்சொல்லுக்குப் பதிலாக திறன்நோக்கு என்னும் சொல்பிரதியீடு செய்யப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படவேண்டும் என்பதை மையமாக வைத்தே இக்கட்டுரை எழுதப்படுகின்றது.ஆரம்பகாலத்தில் நூல் மதிப்பீடுகளுக்காக விமர்சனம் என்ற சொல்தான் பாவனையில் இருந்தது.ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அ.ச ஞானசம்பந்தன் விமர்சனம் என்ற சொல்லுக்கு இணையாக திறனாய்வு என்ற சொல்லை 1950இல் அறிமுகம் செய்தார். அவரால் அறிமுகமானாலும் திறனாய்வுஎன்ற சொல்லை தமிழ் இலக்கியப்பரப்பில்லாவகமாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தவர் கைலாசபதியே.   (மேலும்) 04. 10.18

._______________________________________________________________________

அடையாளம் காண முடியாத சில தடயப் பொருட்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

மன்னார் மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப் பணிகளில் அடையாளம் காண முடியாத சில தடயப் பொருட்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.மன்னார் 'சதொச' வளாகத்தில் உள்ள மனித புதைகுழியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் இன்று 79ஆவது தடவையாகவும் இடம்பெற்றது.மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவண ராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்றைய அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 151 மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 144 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அகழ்வுப் பணிகளின்போது, அடையாளபடுத்த முடியாத நிலையில் சில தடய பொருட்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், எனினும் அவை எந்த வகையை சேர்ந்தவை என்பது தொடர்பான துல்லியமான தகவல் அறியப்படவில்லை என்றும் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

சொர்க்கத்தின் சாத்தான் யாழ்ப்பாணத்தில்!

-    ஜீவா.

இலங்கை தமிழ் சமூகம் குறிப்பாக யாழ்பாண சமூகத்தின் விழுமியங்கள் ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி’ அதுவும் தேய்ந்து சூனியமாகியிருக்கிறது.demons2    ஒருவருடைய கருத்தை என்ன? அபிப்பிராயத்தைக் கூட செவிமடுக்கமுடியாத முண்டங்களாகிவிட்டது. அப்படியிருந்தும் மாற்று வழிகளில் ஏதாவது ஒரு விடயம் முகிழ்புப் பெறுமாயின் அதனை கருக்கிவிடுவதில் தமிழ் சமூகத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை. இவ்வாறான வன்முறையான செயற்பாடுகளை கண்டுகொள்ளாமல் விடுவதுமட்டுமல்ல இருட்டடிப்புச் செய்து கருக்கிவிடும் - வக்காலத்து வாங்கும் யாழ்பாணிய ஊடகங்களின் பத்திரிகா தர்மத்துக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும்.  மேலும் தமிழ் தேசியப் பால் குடிக்கும் மாற்று, முற்போக்கு சிந்தனையாளர்கள் என்று பறைசாற்றும் ஜாம்பவான்கள் இதற்கெல்லாம் பொங்கி எழுமாட்டார்கள். அதேவேளை இனவாத இலங்கை அரசாங்கம் இதே செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் எப்படி பொங்கியிருப்பார்கள்?    (மேலும்) 04. 10.18

._______________________________________________________________________

விக்னேஷ்வரனுக்கு வாகனம் பெற்றுக்கொள்ள தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் நிராகரிப்பு

 வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு 60,000 டொலர் பெறுமதியான வாகனமொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.அனைவரது வாகன அனுமதிப் பத்திரங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒருவருக்கு மாத்திரம் அதனை வழங்க முடியாது என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டார்.சி.வி.விக்னேஷ்வரனின் அமைச்சரவைப் பத்திரம் நேற்று (02) நிராகரிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு பகுதியில் குண்டுவெடிப்பு ஒருவர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு பகுதியில் உளவு இயந்திரத்தில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வெடிபொருள் வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் கயமடைந்துள்ளார்இன்று மதியம் 2 மணியளவில் பிலவுக்குடியிருப்பு பகுதியில் காணியினை உளவு இயந்திரத்தில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது காணியில் இருந்த வெடிபொருள் ஒன்று வெடித்ததில் கேப்பாபுலவு பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.இவ்வாறு காயமடைந்த நபர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.கேப்பாபுலவு பகுதியை சேர்ந்த 37 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான அரியராசா ஜெகன் என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

._______________________________________________________________________

அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட 4 சந்தேகநபர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்hisbullah எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அவரின் மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லா உட்பட நான்கு சந்தேகநபர்களையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு இன்று உத்தரவிட்டப்பட்டுள்ளது.  சவுதி அரேபியாவின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பில் தனியார் பல்கலைக்கழகம் நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தப்பட்டிருந்த 150 மில்லியன் ரூபா பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் பொருட்களைக் கடத்தியமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களுக்கும் எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை விரட்டியடித்து விட்டு, இயந்திரங்கள் மற்றும் பொருட்களைக் கடத்தியதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபரான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் மன்றில் ஆஜராகவில்லை.   (மேலும்) 04. 10.18

._______________________________________________________________________

தலவாக்கலையில் மண்சரிவு அபாயம் காரணமாக 298 குடும்பங்கள் இடம்பெயர்வு

 தலவாக்கலை – கிரேட் வெஸ்டன் லூசா தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாக சுமார் 298 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் நேற்றிரவு இருப்பிடங்களை விட்டு வௌியேறியுள்ளனர். கிரேட் வெஸ்டன் லூசா தோட்டத்தில் நேற்று (02) மாலை முதல் பெய்த மழையை அடுத்து, இரவு 11 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டனர். இதனை அடுத்து, குடியிருப்புகளில் இருந்து வௌியேறிய மக்கள், தோட்ட ஆலயம், தோட்ட முன்பள்ளி , உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார்.லூசா தோட்டம் அமைந்துள்ள மலைமுகட்டிலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், சில இடங்களில் கற்பாறைகள் சரிந்து வீழ்வதாகவும் மக்கள் குறிப்பிட்டனர்.

._______________________________________________________________________

 மடிக்குள்ளே மருந்து - மலையைச் சுற்றித் தேட வேண்டியதில்லை.

-          கருணாகரன்

“தமிழ் அரசியற் கைதிகளின் வழக்கு விசாரணைகளும் விடுதலையும் காலவலையறையற்று நீடிக்கிறது. இதனால் அரசியற் கைதிகளின் அடிப்படை உரிமைகளும் அவர்கtamil political prisionersளுடைய குடும்பத்தினரின் வாழ்வும் மோசமாகச் சிதைக்கப்படுகின்றன. இது அரசியல் உள்நோக்கமுடைய அநீதியான செயற்பாடாகும். யுத்தம் முடிவடைந்து ஒன்பது ஆண்டுகள் கடந்த பிறகும்  யுத்தகால வன்முறை அரசியற்சூழலுக்கான காரணங்கள் இல்லாதொழிந்த பின்பும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரசாங்கம் நீக்காமல் நீடிப்பது மக்களின் மீதும் சுதந்திரமான அரசியல் உணர்வின் மீதும் விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் அரசியல் கைதிகள் நீதியற்ற முறையில் அரசியல் பழிவாங்கல்களுக்குட்படுத்தப்படுகிறார்கள். இது கண்டனத்துக்குரிய  நீதிமறுப்புச் செயற்பாடாகும்” என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமார்.   இது உண்மையே. ஏனெனில் அவர் மேலும் குறிப்பிடுவதைப்போல, “அரசியற் கைதிகள் அரசியற்பிரச்சினைகளாலேயே கைதிகளாக்கப்பட்டவர்கள்       (மேலும்) 03. 10.18

._______________________________________________________________________

நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 18

பல சொல்ல மறந்த கதைகளைச்சொல்லும் பண்டாரநாயக்கா மாவத்தை

                                                                             ரஸஞானி

கடந்த வாரம் இந்தத் தொடரில் நாம் குறிப்பிட்ட அஸ்பெஸ்டஸ் கூரைத்தகடு உற்பத்தி செய்யும் மஸ்கன்ஸ் நிறுவனத்திற்கு முன்னால் செல்லும் பண்டாரநாயக்கா மாவத்தை பற்றி அறிந்திருக்கிறீர்களா? களனி கங்கை தீரத்தில் தலைநகரில் அமைந்துள்ள ஏனைய வீதிகளைப்பbandaranayake mavathaோன்றதுதான் இந்த மாவத்தையும். ஆனால், இந்த வீதியிலும் பல சுவாரஸ்யமான கதைகள் உள்ளடங்கியிருக்கின்றன.ஏன் இந்த வீதிக்கு இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் பெயர்வந்தது...?அவர் அத்தனகல்லை தொகுதியில் ஹொரகொல்லையில் பிறந்தமையால் அந்தப் பிரதேசத்தை ஹொரகொல்லை வளவ்வை என்றும் அழைப்பர். அவரது தந்தையாரின் பூர்வீகக்காணியில்தான் வியாங்கொடை ரயில் நிலையமும் அமைந்துள்ளது என்றும் ஒரு செய்தி இருக்கிறது.அதனால் அந்தப்பாதையினால் பயணிக்கும் அனைத்து ரயில்களும் அங்கே நிச்சயம் தரித்துச்செல்லும். பண்டாரநாயக்கா குடும்பத்தினருக்கு இந்தப்பத்தியில்  நாம் குறிப்பிடும்  மாவத்தையிலும் ஒரு வளவ்வை  (பெரிய காணி) முன்பிருந்திருக்கிறது.   (மேலும்) 03. 10.18

._______________________________________________________________________

பத்திரிகைகளுக்கான அறிக்கை

அரசியல் கைதிகளின் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

அ. வரதராஜா பெருமாள்   (முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்.)

யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்துவிட்டன. யுத்தத்தை தலைமை தாங்கி நடாத்திய தளபதிகள், யுத்தத்தை நடாத்துவதற்கு தேவையான நிதி மற்றும் ஆயுத pr9தளபாடங்கள் கிடைக்க மூல காரணமாயிருந்தவர்கள், யுத்தத்தை நியாயப்படுத்தும் பிரசாரங்களை முன்நின்று மேற்கொண்டவர்கள் என யுத்தத்தில் முழுமையாக ஈடுபட்ட சுமார் 12000 பேரை கடந்த அரசாங்கம் மன்னிப்பளித்து விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் மீளவும் தமது சமூக பொருளாதார வாழ்வில் ஈடுபடுவதற்கான வாய்;ப்புக்களையும், கணிசமானோருக்கு நேரடி உதவிகளையும் அரசாங்கம் வழங்கியிருக்கிறது. இருந்தும் சுமார் 100 பேரளவான முன்னாள் போராளிகளை தொடர்ந்து சிறைகளில் வைத்திருப்பது துயரமானதாகும்.அவர்களிற் பலர் திட்டவட்டமான எந்தவித குற்றச்சாட்டுக்கும் உட்படுத்தப்படாமல் வெறுமனே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது அநீதியானதாகும்.  , (மேலும்) 03. 10.18

._______________________________________________________________________

மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 13 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்  வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் (02-10-2018)  கிளிநொச்சி தொண்டமானநகர் பொது நோக்கு மண்டபத்தில் கரைச்சி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பதின்மூன்று மாணவர்களுக்கு சுவிஸ் நலம் காப்போம் அமைப்பினரால் மேற்படி துcycle1விச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

cyclecycle2

._______________________________________________________________________

 

அரசியல் கைதிகளையும் இராணுவ வீரர்களையும் சமமாக வைத்து பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி பேசினால் அதனை  ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

தமிழ் தேசிய கூட்டமைப்பு

இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போர் தொடர்பான உண்மைகprasident and sampanthanள் தமக்கு தான் தெரியும் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், அவ்வாறாயின் உண்மை கண்டறியப்பட வேண்டிய பொறிமுறையில் முதலாவதாக ஜனாதிபதியே சாட்சியமளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  மேலும் இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக உண்மை கண்டறியப்படல் மற்றும் பொறுப்பு கூறல் என்பன அத்தியாவசியமாகவுள்ளது. எனவே உண்மை கண்டறியப்பட்ட பின்னர் வேண்டுமானால் இருதரப்புக்கும் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக பேசலாம் எனவும் அதனைவிடுத்து அரசியல் கைதிகளையும் இராணுவ வீரர்களையும் சமமாக வைத்து பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி பேசினால் அதனை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.  தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  , (மேலும்) 03. 10.18

._______________________________________________________________________

எதிர்வரும் வருடத்திற்கான அரச செலவீனம் 4376 பில்லியன் ரூபாய்

2019 முற்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது.       budget2019
அதன்படி, அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 4376 பில்லியன் ரூபாய்கள் என நிதி மற்றும் ஊடக துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதில் பாதீட்டின் துண்டுவிழும் தொகை 644 பில்லியன் ரூபாய்கள் எனவும் அது தேசிய உற்பத்தியில் அண்ணளவாக 4.1 வீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரச பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களின் வேதனம் மற்றும் ஓய்வூதியத்தினை வழங்கும் பொருட்டு ஆயிரம் பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அதேபோல், பாடசாலை சீருடை மற்றும் மருந்துகள், மூத்தோர் கொடுப்பனவு, உர மானியம், போசனை பொதிகள், சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு உள்ளிட்ட சலுகை கொடுப்பனவுகளின் பொருட்டு 220 பில்லியன் ரூபாய்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   (மேலும்) 03. 10.18

._______________________________________________________________________

reginold meeting0610

._______________________________________________________________________

 

2008ம் ஆண்டு குண்டு தாக்குதல் சம்பவத்தில் 04 பேருக்கு சிறைத்தண்டனை

2008ம் ஆண்டு கண்டி, பொல்கொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ் ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி மூன்று பேரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டிய மற்றும் உதவி ஒத்தாசை புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 05 ஆண்டுகளில் நிறைவடையும் விதமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.  இந்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குற்றத்தை ஏற்றுக் கொள்வதாக பிரதிவாதிகள் தெரிவித்துள்ளனர். இந்த தண்டனைக்கு மேலதிகமாக 20,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  2008ம் ஆண்டு ஜனவரி 06ம் திகதி கண்டி, பொல்கொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ் ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நால்வருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடா விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
 

ஸ்டாக்ஹோம்: 2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசானது லேசர் இயற்பியல் குறித்த புதிய ஆய்வுகளுக்காக, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் கனடா நாடுகளpriceைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் திங்கள் முதல் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதலாவதாக திங்களன்று மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசுக் கமிட்டியினர் இதனை வெளியிட்டனர். இந்நிலையில் 2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசானது லேசர் இயற்பியல் குறித்த புதிய ஆய்வுகளுக்காக, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூவருக்கு சற்றுமுன்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸின் ஜெரால்டு மௌரோ மற்றும் கனடாவைச்     சேர்ந்த பெண் விஞ்ஞானியான டோனா ஸ்ட்ரிக்லாண்ட் ஆகிய மூவருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசானது கூட்டாக வழங்கப்படுகிறது.     118 ஆண்டு கால் நோபல் பரிசு வரலாற்றில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் மூன்றாவது பெண் டோனா ஸ்ட்ரிக்லாண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. 

._______________________________________________________________________

வவுனியாவில் ஆவா குழுவின் துண்டுப் பிரசுரங்கள்

வவுனியா நகரின் பல பிரதேசங்களில் ஆவா குழுவின் பெயரில் துண்டுப் பிரசுரங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வவுனியா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவின் குருமங்காடு, வைரவபுலியியங்குளம், புகையிரத வீதி, கண்டி வீதி ஆகிய இடங்களில் இந்த கையேடுகள் பங்கிடப்பட்டுள்ளதாக வவுனியா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஒநாம் மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போதும் உடனிருப்போம், நாம் மக்களின் எதிரியல்ல, எந்தவொரு நேரத்திலும் வவுனியா நகரத்தின் பல இடங்களில் எமது உறுப்பினர்கள் இருப்பார்கள்ஒ என்ற வாசகங்கள் அந்த துண்டுப் பிரசுரங்களில் இருந்துள்ளன. குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த குழுவினரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

._______________________________________________________________________

கிளிநொச்சியில் வேலியே பயிரை மேய்வது போன்று  அழிக்கப்படும் கண்டல் தாவரங்கள்

- மு தமிழ்ச்செல்வன்

இலங்கையில் அம்பாறை, மட்டகளப்பு, காலி, கம்பஹா, அம்பாந்தேk (3)ட்டை, யாழ்பபாணம், களுத்துறை,கிளிநொச்சி, முல்லைத்தீவு, குருநாகல், மாத்தறை,புத்தளம், இரத்தினபுரி, இங்கே கிளிநொச்சி மாவட்டத்தில் 312 ஹெக்ரெயர் பரப்பளவில் கண்டல் தாவரங்கள் காணப்படுவதாக  இலங்கையின் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அவ்வாறே யாழ்ப்பாணத்தில் 539 ஹெக்ரெயரும், முல்லைத்தீவில் 463 ஹெக்ரெயர் பரப்பளவிலும் கண்டல் தாவரங்கள் காணப்படுகின்றன. எவ்வாறு மனித நடவடிக்கைகளால் உலகிலுள்ள தாவரங்களும், உயிரிணங்களும்  அழிவடைந்து அல்லது அருகி வருகின்றனவோ அவ்வாறே கிளிநொச்சியிலும் கண்டல் தாவரங்கள் அழிவை எதிர்நோக்கியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் பளை, பூநகரி பிரதேசங்களில் காணப்படுகின்ற சதுப்பு நிலங்களில் அதிகளவான கண்டல் தாவரங்கள் காணப்படுகின்றன.  கண்டல் தாவரங்கள் பறட்டைக் காடுகளாகவும், வளர்ந்த மரங்களாகவும் அடர்த்தியாக சதுப்பு நிலங்களில் வளர்க் கூடியது. இவ்வகையாக கண்டல் தாவரங்கள் மனிதனுக்கும்  சூழலுக்கும் பல நன்மைகளை தாரளமாக வழங்குகின்றன என்றே சொல்ல வேண்டும்.  , (மேலும்) 02. 10.18

._______________________________________________________________________

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், இப்போது ஏன்? தீய சக்திகள் இங்கு வருகின்றனவா?

                                                 லத்தீஃப் பாரூக்

11 செப்ரம்பர் 2018 செவ்வாய்க்கிழமை, அமைச்சரவை முன்னர் யுத்த காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ யினரைக் கையாள்வதற்காக பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு (பLatheef-Farookி.ரி.ஏ) மாற்றீடாக “பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட மசோதா”(சி.ரி.எல்) ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த வரைவு மசோதா வெளிநாட்டு அமைச்சர் திலக் மாரப்பன அவர்களினால் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ மற்றும் அமைச்சர் சம்பிக ரணவக்க ஆகியோரின் துணையுடன் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது, பின்னைய இரு அமைச்சர்களினதும் முஸ்லிம்களுக்கு எதிரான விரோத மனப்பான்மை நன்கு அறிந்ததே, சட்டம் போதுமானளவு கடுமையாக இல்லை என்று இவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் முணுமுணுப்பதாகக் கூறப்படுகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான அலட்சிய மனோபாவம் கொண்டவர் என அறியப்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் திரு. ராஜபக்ஸ பிரேரித்த திருத்தத்தை ஏற்றுக்;கொண்டார்.  வரைவு மசோதாவில் உள்ளவற்றைப் பற்றி விபரமாகச் சொல்வதற்கு நான் விரும்பவில்லை. எனினும் அமைச்சாகளான சம்பிக ரணவக்க மற்றும் விஜேதாஸ ராஜபக்ஸ ஆகியோர் இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் அதை சிறுபான்மையினருக்கு எதிராகப் பயன்படுத்தி சமூகங்களைப் பிரித்துவைத்து தங்கள் அரசியல் இலக்கை அடைவது சாத்தியமாக இருக்கும் என நம்புவதால் இப்போது இந்தச் சட்டத்திற்கு என்ன அவசியம் என்று கேட்பது முறையானது, (மேலும்) 02. 10.18

._______________________________________________________________________

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய் - கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய் எனும் தொணிப்பொருளில் கிளிநொச்சியில் இன்று 01-10-2018 கண்டன கவனயீர்ப்பு போராட்டமpr1்  ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் காலை பத்து மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில்  குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட இக் கவனயீர்ப்பு போராட்டத்தில்  கலந்துகொண்டவர்கள்   பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்,   சட்டப் பூட்டினை உடை அரசியல் தீர்மானம் எடு  அரசியல் கைதிகளை விடுதலை செய்,   நல்லிணக்கத்துக்கான முதலாவதுபடி அரசியல் கைதிகளின் விடுதலையே,  மண்டேலாவின் விடுதலையே ஆபிரிக்காவில் நல்லிணக்கம் தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையே  இலங்கயில் நல்லிணக்கம்,   எதற்காக இன்னும் அரசியல் கைதிகளுக்குத் தண்டனை?,  ஏன் இன்னும் அரசியல் கைதிகள்?,  விடுதலை செய் அரசியல் கைதிகளை  வெற்றி கொள் தமிழர் மனங்களை   போன்ற  வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்ததோடு  கோசங்களும் எழுப்பியவாறு  கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.  (மேலும்) 02. 10.18

._______________________________________________________________________

 ஊழியர் சேமலாப நிதியை வர்த்தகத்தில் ஈடுபடுத்தியதால் பாரிய நட்டம்

 நாட்டின் உழைக்கும் மக்களின் பணத்தினால் பேணப்படும் ஊழியர் சேமலாப நிதியத்தை கடந்த காலங்களில் பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபடுத்தியமையினால் பாரிய நட்டம் ஏMahinairlankaற்பட்டது.   ஶ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று (01) இது தொடர்பில் பல விடயங்கள் அம்பலமாகின.   ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஊழியர் சேமலாப நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இன்று சாட்சியளித்தார்.   அவர் வழங்கிய தகவல்களின்படி, அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட காகில்ஸ் வங்கியில் ஊழியர் சேமலாப நிதியத்தின் 495 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.   இந்த முதலீட்டுக்காக எவ்வித ஈவுத் தொகையும் கிடைக்கவில்லையென இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.  அத்துடன், கென்வில் ஹோல்டிங் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட 5 பில்லியன் ரூபாவிற்கு எவ்வித இலாபமும் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.   (மேலும்) 02. 10.18

._______________________________________________________________________

கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதியுடன் உடனடி பேச்சுக்கு செல்ல வேண்டும் - வாசுதேவ நாணயக்கார

ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை நிலைநாட்ட கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதியுடன் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும்vasu என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.எமது நாட்டு பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்ள சர்வதேச நாடுகள் இடமளிக்க வேண்டும். பிளவுபடாத கொள்கையையே நாங்கள் கொண்டு செல்கின்றோம். அத்துடன் பலஸ்தீன மக்களுக்கு நாங்கள் ஆதரவளித்து வருகின்றோம் என ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இந்த உரையானது அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அடித்த மறைமுக தாக்குதலாகும். ஜனாதிபதியின் கொள்கையுடன் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு தொடர்ந்து அமைச்சரவையில் இருக்க முடியாது. அதனால் அவர் உடனடியாக அமைச்சுப்பதவியில் இருந்து வெளியேறவேண்டும்.ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை நிலைநாட்ட கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதியுடன் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டும் .சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

._______________________________________________________________________

கிளிநொச்சியில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்

சர்வதேச சிறுவர் தினம் இன்று 01-10-2018 கிளிநொச்சியில் சிறாப்பாக கொண்டாடப்பட்டது. கிளிநொச்சியில் உள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் என பல்வேறு பகுதிகளிலும் சிறுவர்கள் IMG_7324இன்று கௌரவிக்கப்பட்டதுடன. அவர்களிற்கான விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  மாணவர்களை கௌரவிக்கம் வகையில் ஆசிரியர்கள் மாணவர்களோடு மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்ததோடு, மாணவர்களுடன் இணைந்து விளையாட்டு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டனர்.   பாடசாலைகள், முன்பள்ளிகள், தனியார் கல்வி நிலையங்கள் என போன்றவற்றில் சிறுவர்கள் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன் போது தமிழர் பாரம்பரிய மயிலாட்டம், பொம்மலாட்டம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளோடு மழலைகள் அழைத்த செல்லப்பட்டு இனிப்பு வகைள் வழங்கப்பட்டு  சிறுவர்கள் மகிழ்விக்கப்பட்டனர்.

 அந்த வகையில் கிளிநொச்சியில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்ட சிறுவர் தின நிகழ்வுகளின்   காட்சிகள்

._______________________________________________________________________

மூன்று மாகாணங்களின் ஆயுட் காலம் நிறைவு

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆயுட் காலம் நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஒக்டோபர் 8 ஆம் திகதி வடமேல் மாகாணத்தினதும், 10 ஆம் திகதி மத்திய மாகாணத்தினதும், 25 ஆம் திகதி வட மாகாணத்தினதும் ஆயுட் காலம் நிறைவடைய உள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.அதனடிப்படையில் குறித்த மூன்று மாகாணங்களும் ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.குறித்த மூன்று மாகாணங்களின் ஆயுட் காலம் நிறைவடைந்ததும் மொத்தமாக 6 மாகாணங்களுக்கான ஆயுட் காலம் நிறைவடையும் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.இதேவேளை எல்லை நிர்ணய குழு அறிக்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக மாகாண சபை தேர்தலை நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.எவ்வாறாயினும் எல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழு அறிக்கையை முன்வைக்க இரண்டு மாத காலம் செல்லும் எனவும் அதன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

._______________________________________________________________________

மன்னார் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

மன்னார் 'சதொச' வளாகத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள், இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று 77 ஆவது தடmannar borneவையாக மீண்டும், அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவண ராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் அகழ்வு பணிகள் இன்று இடம்பெற்றன.கடந்த 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 76 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம்பெற்ற நிலையில் தொடர்ச்சியாக பணிகள் இடை நிறுத்தப்படிருந்தன.இந்த நிலையில் சுமார் 9 நாட்களின் பின்னர் இன்று அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.தற்போது வரை அங்கிருந்து 141 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 135 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்வு செய்யப்பட்டுள்ளன.அத்துடன், மழைக்காலம் ஆரம்பித்துள்ளதன் காரணமாக, அகழ்வு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்கது.

._______________________________________________________________________

யாழ். மாநகர சபை வேட்பாளர் தயாளன் மீது தாக்குதல்

தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாநகர சபை வேட்பாளராகப் போட்டியிட்ட தயாளன் மீது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் நேற்று (30) இரவு தாக்குதல் மேற்கொண்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையில் போட்டியிட்டு தற்போது மாநகர முதல்வரின் வட்டார இணைப்பாளராகப் பணியாற்றும் இ. தயாளன் சுண்டிக்குழிப் பகுதியில் மண்னைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இதனால் குறித்த விடயத்தில் அப்பிரதேச வட்டாரத்தினை பிரதிநிநித்துவப்படுத்தும் உறுப்பினர் தனக்கு தெரியப்படுத்தவில்லை என்பதாகவே பிரச்சினை அமைந்துள்ளது.  இதனால் குறித்த இடத்திற்கு தொலைபேசியில் அழைத்து மது போதையில் தலைக் கவசத்தினால் நேற்று இரவு 9 மணி அளவில் தாக்கியதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதேநேரம் தாக்குதலிற்கு இலக்காணவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

வாக்குகளுக்கான வாக்குறுதிகள்.

 -          கருணாகரன்

“தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் கைகளில் இன்னும் பத்தோ பதினைந்து ஆண்டுகளை முழுமையாக ஒப்படைத்தாலும் அவர்கள், தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சpeople1ினைகளுக்குத் தீர்வைக் காண்பார்களா? தமிழ் மக்களின் பொருளாதார மேம்பாடு, சமூக விடுதலை, மீள் நிர்மாணம் போன்றவற்றைச் சிறப்பாகச் செய்வார்களா? இதற்கெல்லாம் என்ன உத்தரவாதம்?” என்று கேட்கிறார் ஓய்வு பெற்ற ஆசிரியரான வரதலிங்கம் யோகநாதன்.   யோகநாதன் எந்த அரசியற் கட்சியோடும் தன்னை அடையாளப்படுத்தியவரல்ல. ஆனால், கல்விச் சேவையிலும் சமூகச் செயற்பாடுகளிலும் கடந்த நாற்பது ஆண்டுகளாக தன்னாலியன்ற பங்களிப்புகளைச் செய்துகொண்டிருப்பவர். வன்னியில் யுத்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வாழ்ந்தவர். அரசியலை அதன் பல்பரிமாணங்களுக்கூடாக விளங்கி வைத்திருப்பவர். உணர்ச்சிகரமான எந்த அலையிலும் அள்ளுப்பட்டுவிடாத அறிவுசார் அவதானிப்பை உடையவர்.  ஆகவே இங்கே அவருடைய இந்தக் கேள்வி என்பது, எந்தத் தரப்புக்கும் எதிரானதோ சார்பானதோ இல்லை. இன்றுள்ள யதார்த்த நிலைமைகளை அவதானித்த ஒரு கூர்மையான பொதுமகனுடையதாகவே உள்ளது. மட்டுமல்ல, இது ஏதோ ஒரு யோகநாதனின் கேள்வியுமல்ல. பலருடைய மனதில் உள்ள கேள்வியாகும்.   (மேலும்) 01. 10.18

._______________________________________________________________________

வாழ்வை எழுதுதல் - அங்கம் 05

தண்ணீர் பற்றி கண்ணீருடன்  எழுதவேண்டிய கதைகள்

வடக்கின் தண்ணீர் பிரச்சினையோடு   கோமல் சுவாமிநாதனை நினைவுகூர்ந்து எழுதும் பதிவு

                                                                                  முருகபூபதி

(02)
கொழும்பு மருதானை டவர் மண்டபத்தில் கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் நாடகம் மேடையேறியது. இந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக வீரகேசரி Komal Swaminathanஆசிரிய பீடத்திலிருந்த நண்பர் வர்ணகுலசிங்கம் என்பவருடன் சென்றிருந்தேன்.  1984 ஆம் ஆண்டென நினைக்கின்றேன். கொழும்பு வாழ் இளம் கலைஞர்கள் அந்த நாடகத்தை தயாரித்திருந்தார்கள். அக்காலப்பகுதியில் இந்திய - தமிழக நாடகாசிரியர்களின் நாடகங்களை கொழும்பு கலைஞர்கள் முன் அனுமதி பெறாமலேயே மேடையேற்றினர்.இந்திரா பார்த்தசாரதியின் மழை, மராத்திய  நாடகாசிரியர் விஜய் டெண்டுல்காரின் சக்காராம் பைண்டர், கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் ஆகிய நாடகங்களை மேடையேற்றிக்கொண்டிருந்தனர். அத்துடன் சில மேலைத்தேய நாடகாசிரியர்களின் நாடகங்களும் கவிஞர் இ.முருகையன், தாஸீஸியஸ், நா. சுந்தரலிங்கம், பாலேந்திரா, சுஹேர் ஹமீட்,  கலைச்செல்வன்  ஆகியோரால் தமிழ்ப்படுத்தப்பட்டு அரங்கேறின.(மேலும்) 01. 10.18

._______________________________________________________________________

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் குறைந்தபட்ச சில்லறை விலை நிர்ணயிப்புwater

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் குறைந்தபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து அதி விஷேட வர்த்தமானி ஒன்றை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை வெளியிட்டுள்ளது.அதனடிப்படையில் 350 - 499 மில்லி லீற்றர் நீர் போத்தல்கள் 26 ரூபாவாகவும், 500 - 749 மில்லி லீற்றர் நீர் போத்தல்கள் 35 ரூபாவாகவும், 1 - 1.49 லீற்றர் நீர் போத்தல்கள் 50 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் 1.5 - 4.99 லீற்றர் நீர் போத்தல்கள் 70 ரூபாவாகவும் 5 - 6.99 லீற்றர் நீர் போத்தல்கள் 150 ரூபாவாகவும் 7 லீற்றர் நீர் போத்தல்கள் 170 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துதற்கு  இராணுவத்தினரின் ஈடுபாடு முழுமையாக அவசியமில்லை...

-எம்.ஏ.சுமந்திரன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துதற்கு இராணுவத்தினரின் ஈடுபாடு முழுமையாக அவசியமில்லை.Sumanthiran MP   அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.   வடக்கில் இடம்பெறும் வன்முறைகளை கட்டுப்படுத்த இராணுவத்தினருக்கு மேலதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என இராணுவ தளபதி அண்மையில் கோரியிருந்தார்.   இது குறித்து கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதியமைச்சர் அஜித் பீ பெரரே, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இராணுவத் தளபதி கோரிய வகையில் மேலதிக அதிகாரத்தை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.   இந்த நிலையில், இராணுவத்தினர் மேலதிக அதிகாரம் கோருவது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.   (மேலும்) 01. 10.18

._______________________________________________________________________

ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது

ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான 20 தங்க பிஸ்கட்டுக்களுடன் இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.  நிட்டம்புவஇ திஹாரிய பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று அதிகாலை 8 மணியளவில் டுபாயில் இருந்து வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான ருடு 226 என்ற விமானத்தில் குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். குறித்த நபர் எடுத்து வந்த பயணப் பையில் 02 கிராம் நிறையுடைய 20 தங்க பிஸ்கட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

._______________________________________________________________________

 வடமராட்சி கிழக்கு சட்டவிரோத மீன்படி மற்றும் போதைப் பொருள் என்பவற்றால் அழிவடைகிறது.

வடமாகாணத்தில் வடமராட்சி கிழக்கு பகுதியே போதைவஸ்து தரையிடக்கப்படும் களமாக மாறியுள்ளது என: யாழ் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் குற்றச்சாட்டியுள்ளார்.  vadamrachi  வடமாகாணத்தில் வடமராட்சி கிழக்கு பகுதியை போதைவஸ்து தரையிறக்கப்படும் இடமாக இருக்கிறது. இதனை அரசாங்கம் கட்டுப்படுத்த தவறியுள்ளது என யாழ் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு  இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.  வவுனியாவில் நேற்று மாலை இடம்பெற்ற தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஊடகசந்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ் மாவட்டத்தின் வடமராட்சி கிழக்குப் பகுதியில் தான் சட்டவிரோத மீன்பிடித் தொழில் காணப்படுகின்றது. சுருக்கு வலைகள் பயன்படுத்தப்படுவதுடன், அட்டை பிடிக்கும் நடவடிக்கையும் இடம்பெறுகிறது. மக்கள் இது தொடர்பில் போராடி தற்போது, பிரதேச செயலாளர் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  (மேலும்) 01. 10.18

._______________________________________________________________________

 கேரள கஞ்சா பொதிகளை வீசிய இளைஞர்கள் - வாகனமும் மீட்பு

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில்  (29) இரவு 7 மணி அளவில் சந்தேகத்திடமான வாகனம் ஒன்று செல்வதனை கண்ட இளைஞர்கள் அந்த வாகனத்தை பின்தொடர்kerala kanjaந்துள்ளனர்.அவர்கள் பின் தொடர்வதனை அவதானித்த வாகனத்தில் பயணித்தோர், குறுக்கு வீதிகள் ஊடாக வேகமா பயணித்துள்ளனர். பின்னர் வழி தவறி குளப் பாதை ஒன்றினுள் நுழைய, குறித்த வாகனம் வாகனத்தில் இருந்து 4 பொதிகளை எறிந்து விட்டு குள எல்லைக்குள் சென்று அங்கு பாதை முடிவடைந்ததினால் வாகனத்தை விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.  பின்னர் அவர்கள் வீசிய பொதிகளைப் பார்வையிட்ட பொழுது சுமார் 1 கிலோ அளவிலான 4 கேரள கஞ்சா பொதிகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட பொலிஸாரால், சட்டவிரோத மது ஒழிப்புப் பிரிவு விசேட குழுவினருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர், குறித்த கஞ்சா பொதிகளையும் வாகனத்தையும் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

._______________________________________________________________________

இந்தோனேஷியாவில் சுனாமி தாக்குதல்: பலி எண்ணிக்கை 832 - ஆக அதிகரிப்பு

இந்தோனேஷியாவில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அலைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 832 - ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பindtsunamiணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை செய்தித் தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுக்ரோஹோ கூறியதாவது: சுனாமி பேரலை பாலூ நகரை மிக மோசமாக தாக்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சுனாமிக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 832 - ஐ தொட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாலூ நகரில் பெரும்பாலான கட்டடங்கள் நிலநடுக்கத்தில் சிதைந்து போயுள்ளன. இந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளது.   போதிய  வசதிகள் இன்றி மீட்பு பணிகளில் குழுவினர் ஈடுபட்டுள்ளதால்  இலக்கை  அடைவது சவாலானதாக உள்ளது.    (மேலும்) 01. 10.18

._______________________________________________________________________

ரஜனியின் கேள்விகளுக்கு தமிழ் உயரடுக்கினர் பதில் கூற மறுத்துவிட்டார்கள்

                                            ராஜன் ஹ_ல்

(2)

2009ன் ஆரம்பம் முதலே, இராணுவம் முன்னேறி வருவதன் காரணமாக அதற்கு முகம் கொடுக்காமல் எந்த வழியிலும்; தப்பிச் செல்ல பொதுமக்கள் விரும்பினார்கள் என்excel 2009பது பெரும்பாலான தமிழர்களுக்குத் தெளிவாகத் தெரிந்து இருந்தது, மற்றும் தப்பிச் செல்ல முயலும் தமிழர்களை எல்.ரீ.ரீ,ஈ கொலை செய்தது. இருந்தும் பல முன்னணித் தமிழர்கள் மற்றும் ரி.என்.ஏ தலைவர்கள் ஆகியோர், தமிழர்களின் துன்பங்களுக்கு பிரத்தியேகமாக இராணுவம் மட்டுமே காரணம் என்று குற்றம்சாட்டி வந்தார்கள். 20 வருடங்களுக்குள் சின்ன விஷயங்கள் கூட எப்படி மாறியுள்ளன. 21 ஒக்ரோபர் 1987ல் இந்திய இராணுவம் யாழ்ப்பாண மருத்துவ மனையில் எவ்வாறு படுகொலைகள் புரிந்தன என்பதனை ரஜனி விளக்கியுள்ளார்.“ புலிகள் அங்கு இருந்தனர், அது எல்.ரீ.ரீ.ஈ பக்கமிருந்து வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட ஒரு சதியாகவும் இருக்கலாம். அவர்கள் இரண்டு தொகுதிகளாக உள்ளே வந்தார்கள். மருத்துவாகள் அவர்களை அங்கிருந்து வெளியேறும்படி கெஞ்சியபோது, புலிகள் பரவலாக சில சுற்று துப்பாக்கிச் சூடுகளை நடத்திவிட்டு, சில ஆயுதங்களை உள்ளே வைத்துவிட்டதன் பின்னரே புறப்பட்டுச் சென்றார்கள். இந்திய இராணுவம் ஒரு மணி நேரமோ அல்லது அதற்குப் பின்னரோதான் அங்கு வந்தார்கள், அந்த நேரம் எதிர்த்து பதிலடி கொடுப்பதற்கு உள்ளே யாரும் இருக்கவில்லை”.  .  (மேலும்) 30. 09.18

._______________________________________________________________________

எக்சைல் 84 :- மீண்டும் வெளியேறுதல்

- நடேசன்

ஈழத்திலிருந்து இந்தியா வந்த அகதி மக்களுக்காகவும், ஈழ விடுதலை இயக்கங்களின் தேவைக்காகவும் அமைந்த எமது நிறுவனம், மேலும் போரில் அங்கங்களை இழந்தவர்களJaipoor footுக்கும் உதவ விரும்பினோம். காலிழந்தவர்களுக்கான சேவையை அளிப்பதற்காக ஜெய்ப்பூர் காலை உருவாக்க,அதைத் தயாரித்த மருத்துவர் சேத்தியை சந்தித்து செய்த உடன்படிக்கையில் ஜெய்ப்பூர் வைத்தியசாலையில் பல இளைஞர்களுக்கு செயற்கைக் கால்களை செய்வதற்குப் பயிற்றுவித்தோம். அவர்களில் பலரை அழைத்துக்கொண்டு ஜெய்ப்பூர் சென்றோம். ஆனால் நானும் டாக்டர் சிவநாதனும் அக்காலத்தில் பலதடவை சென்றபோது கூட ஜெய்ப்பூர் நகரத்தில் எந்த இடத்தையும் பார்க்கவில்லை. இப்பொழுது நினைத்துப் பார்த்தால் கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது.  இரு காரணங்கள்- எமது சேவையில் ஒரு முகப்பட்டிருந்தோம். இரண்டாவது பொதுப்பணத்தில் எமது பிரயாணம் அமைந்திருந்தது. பிற்காலத்தில் அவுஸ்திரேலியா வந்தபின் இரு முறை உல்லாசப் பிரயாணியாக ஜெய்ப்பூர் சென்று பார்த்தேன்.   ஜெய்ப்பூருக்கு செல்வது இரண்டு நாட்கள் நீண்ட இரயில்ப் பயணம் . இரயிலில் செல்லும்போது இடையில் புதுடில்லியில் தங்கி நிற்பது வழக்கம். அது பற்றிய சில நினைவுகளை எழுதுவது இங்கு பொருத்தமாக இருக்கும்.  (மேலும்) 30. 09.18

._______________________________________________________________________

அரசியல் கைதிகளை சிறையில் வைத்துக் கொண்டு அரசியல் தீர்வை எட்டவே முடியாது.

 - சந்திரகுமார்

 அரசியல் கைதிகளை சிறையில் வைத்துக் கொண்டு அரசியல் தீர்வை எட்டவே முடியாது, மண்டேலாவின் விடுதலையே ஆபிரிக்காவில் நல்லிணக்கம் ஏற்பட வழிவகுத்தது  எனவchandrakumar0518ே தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையே அரசியல் தீர்வுக்கான வாசலை திறக்கும் என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.  அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தமிழ் அரசியற் கைதிகளின் வழக்கு விசாரணைகளும் விடுதலையும் காலவலையறையற்று நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் அரசியற் கைதிகளின் அடிப்படை உரிமைகளும் அவர்களுடைய குடும்பத்தினரின் வாழ்வும் மோசமாகச் சிதைக்கப்படுகின்றன. இது அரசியல் உள்நோக்கத்தின்பாற்பட்ட அநீதியான செயற்பாடாகும். (மேலும்) 30. 09.18

._______________________________________________________________________

யாழ்ப்பாணத்தில் பெண் ஊடகவியலாளர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி அச்சுறுத்தல்

பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணத்தில் பெண் ஊடகவியலாளர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பகுதியில்  வெள்ளிக்கிழsumithiமை இரவு 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் புங்கங்குளம் பகுதியைச் சேர்ந்த சுமித்தி தங்கராசா (வயது-33) என்ற சுயாதீன ஊடகவியலாளருக்கே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  நாயன்மார்கட்டு பிள்ளையார் கோவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் வழிபாட்டுக்குச் செல்வேன். இன்றும் வழமைபோன்று அங்கு வழிபாடு முடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது, இனந்தெரியாத நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு தப்பிச் சென்றார்.அவர் என்னை மோத வருகிறார் என்று எண்ணி வீதியைவிட்டு விலகிச் சென்றேன். எனினும் என்னை இலக்கு வைத்து வந்து மோதிவிட்டு, அச்சுறுத்தும் வகையில் பேசிவிட்டு அவர் தப்பித்தார். நிலை தடுமாறி விபத்துக்குள்ளான நான் காயங்களுக்குள்ளானேன்.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவித்தேன். நாளைக் காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்குவேன் என்று சுயாதீன ஊடகவியலாளர் செல்வி சுமித்தி தங்கராசா தெரிவித்தார்.

._______________________________________________________________________

அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்கள் வாகன இறக்குமதி செய்ய தடை

அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்கள் எதிர்வரும் ஓராண்டு காலத்துக்கு வௌிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சveichlesு கூறியுள்ளது. அத்துடன் அரச துறை உத்தியோகத்தர்கள் 06 மாதங்களுக்கு வாகன இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த தடை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று நிதியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   அதேவேளை வாகன இறக்குமதிக்காக கடன் பத்திரம் ஆரம்பிக்கும் போது அவற்றின் பெறுமதியின் 200 வீத பணம் வைப்புச் செய்யப்பட வேண்டும் என்றும் நிதியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   அத்துடன் கொள்வனவு செய்யும் வாகனத்தின் மொத்தப் பெறுமதியில் 70 வீதத்தை லீசிங் செய்ய இதுவரை முடியுமாக இருந்ததுடன், தற்போது அந்த தொகை 50 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.    (மேலும்) 30. 09.18

._______________________________________________________________________

பிள்ளையானை சந்தித்துள்ள நாமல்..

மட்டகளப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசன்துறை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு, இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ் தலைமையிலான குழுவினர் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.இதன்போது அவர்களுக்கு இடையில், அரை மணிநேரம் உரையாடல் இடம்பெற்றதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பிள்ளையான் சிறைவாசம் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

பிறப்புச் சான்றிதழில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என இன ரீதியாக அடையாளப்படுத்துவதை மாற்றம் செய்ய வேண்டும்

பிறப்புச் சான்றிதழில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என இன ரீதியாக அடையாளப்படுத்துவதை மாற்றம் செய்து இலங்கையர்கள் என அடையாளப்படுத்தும் நடைமுறையை எதிர்காலBD1த்தில் ஆரம்பிக்க வேண்டும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவரத்தன யோசனை முன்வைத்துள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் மக்கள் சேவை நிகழ்வில் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தப் புதிய யோசனையை முன்வைத்துள்ளார். சிங்களம், தமிழ், முஸ்லிம்கள் என பிரிந்திருப்பதை தவிர்த்து, மனிதர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் செயற்பட்டால் இலங்கையை ஒன்றிணைக்க முடியும். இந்த நிலையில், பிறப்புச் சான்றிதழ் வழங்குவது தமது அமைச்சின் செயற்பாடாகும்.  இந்த நிலையில், இயலுமானால், பிறப்புச் சான்றிதழில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று இன ரீதியாக அடையாளப்படுத்துவதை தவிர்த்து, இலங்கையர் என எதிர்காலத்தில் அடையாளப்படுத்த வேண்டும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.இதேநேரம், ஐனாதிபதியின் மக்கள் சேவை உத்தியோக பூர்வ பணி யாழ்ப்பாணம் சங்கானையில் இன்று நடைபெறவுள்ளது.

._______________________________________________________________________

நைஜீரிய நாட்டுப் பிரஜை ஒருவர் கைது

செல்லுபடியான வீசா மற்றும் கடவுச்சீட்டு இன்றி இலங்கையில் தங்கியிருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.29 வயதுடைய நைஜீரிய நாட்டுப் பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன

._______________________________________________________________________

வாழ்வை எழுதுதல் - அங்கம் 05

தண்ணீர் பற்றி கண்ணீருடன்  எழுதவேண்டிய கதைகள்

நன்னீருக்கு கோயிலை நாடிய காலத்தில் சாதிபேசிய சமூகம் உவர்நீர்  காலத்தில்  மௌனமானதேன்?

                                                                                  முருகபூபதி

(01)

" அடுத்த ஐம்பது வருடங்களில் மக்கள் முழுமையாக வெளியேற வேண்டிய  அபாயத்தை யாழ். குடாநாடு எதிர்நோக்கியுள்ளதாக வடமாகாண ஆளுநர் அலுவலக இணைப்புச்சdrinkwater33ெயலாளர் சுந்தரம் டிவகலாலா தெரிவித்துள்ளார். எனத்தொடங்கும் இச்செய்தியில்,  மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:  குடிக்கத்தண்ணீர் இன்றி யாழ். குடாநாடு வனாந்தரமாக மாறிக்கொண்டிருக்கிறது. வெளியிலிருந்து வரும் சுத்திகரிக்கப்பட்ட  குடிநீர் பாவனை அதிகரித்து வருகிறது. இங்குள்ள நீர்த்தேக்கங்கள் புனரமைக்கப்பட்டு, மழை நீர் சேமிக்கப்படவேண்டும். நன்னீர் நிலைகள் பாதுகாக்கப்படவேண்டும். ஆனால், அவை நடைபெறுவதில்லை.  யாழ். குடாநாட்டின் குடிதண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்கு முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயற்படுத்தப்படவேண்டும்.  புத்தி ஜீவிகள் இதைப்பற்றி சிந்தித்து செயற்படாவிட்டால், இன்னும் ஐம்பது வருடங்களில் யாழ். குடாநாட்டை விட்டு மக்கள் முழுமையாக வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்"   (மேலும்) 29. 09.18

._______________________________________________________________________

சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்புவை தாக்கத் திட்டமிட்ட  விடுதலைப்புலிகள்:  ஜனாதிபதி

நியூயார்க்: கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்புவை விடுதலைப்புலிகள்  தாக்கத் திட்டமிட்டிருந்ததாக  ஜனாதிபதி் மைத்ரிபால சிறீசேனா தெரிவltte flightித்துள்ளார்.  இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு இறுதிக்கட்டப் போர் நடந்தது. இறுதியில் விடுதலைப்புலிகள் ராணுவத்தால் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டனர். இந்த உள்நாட்டுப் போரில் இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் லட்சக்கணக்கான தமிழர்கள் குண்டுவீச்சில் கொல்லப்பட்டனர்.  இந்நிலையில் கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்புவை விடுதலைப்புலிகள்  தாக்கத் திட்டமிட்டிருந்ததாக  ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனா தெரிவித்துள்ளார்.  தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐ.நா.சபையின் பொது அவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனா பங்கேற்றுப் பேசினார். (மேலும்) 29. 09.18.

._______________________________________________________________________

நிகழ்த்துதல் கலைகளும் மாணவமும்

- பெருமாள் கணேசன்

பாடசாலை மாணவர்களில் அருகிவரும் தேர்ச்சிகளாக அழகியல் தேர்ச்சிகளை சுட்ட வேண்டியுள்ளது   tamilstudents  பாடசாலை கலைத்திட்டம் எவ்வளவுதான் முளுமையான ஆளுமையை பிள்ளையில் வளர்க்க ஏற்பாடுகள் கொண்டிருந்தாலும் பரீட்சைபுள்ளிகள் சார் சிந்தனை மட்டுமே எமது பிரதேச பாடசாலை சார் சமூகத்தில் தேறி இருக்கிறது.  பாடசாலை எவ்வளவுதான் அழகியல் முயற்சிகளை முன்னெடுக்க முனைந்தாலும் அவற்றின் மீதான கரிசனை ஆசிரியர்களிடம் மாணவர்களிடம் பெற்றோரிடம் தொற்றுவதில்லை.  அதனால் பிள்ளைகளிடம் தலைமைத்துவ பண்பு இல்லாது போகிறது பாடசாலையில் உயிரோட்டம் இல்லாது போகிறது பன்முக நுண்மதி கோட்பாடு கவனத்தில் இல்லாது போகிறது ஆளுமை பிள்ளைகளில் இல்லாது தன்னம்பிக்கை நாளுக்கநாள் வற்றி விடுகிறதுபாடசாலை உற்பத்தியில் ஒரு நல்ல பிரசைக்கான ஆரம்பத்தை கொடுக்கத் தவறிவிடுகிறது பாடசாலை என்ற நவீன சமூகத்துக்கான நிறுவனம் பல இளம் சமூகத்தின் பொழுதை வீணடிக்கிறதுஆற்றலை சிதைக்கிறது.. என பலவற்றை குறிப்பிடலாம்.    (மேலும்) 29. 09.18

.*