வாழ்வை எழுதுதல் - அங்கம் 05

தண்ணீர் பற்றி கண்ணீருடன்  எழுதவேண்டிய கதைகள்

நன்னீருக்கு கோயிலை நாடிய காலத்தில் சாதிபேசிய சமூகம் உவர்நீர்  காலத்தில்  மௌனமானதேன்?

                                                                                  முருகபூபதி

(01)

" அடுத்த ஐம்பது வருடங்களில் மக்கள் முழுமையாக வெளியேற வேண்டிய  அபாயத்தை யாழ். குடாநாடு எதிர்நோக்கியுள்ளதாக வடமாகாண ஆளுநர் அலுவலக இணைப்புச்சdrinkwater33ெயலாளர் சுந்தரம் டிவகலாலா தெரிவித்துள்ளார். எனத்தொடங்கும் இச்செய்தியில்,  மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:  குடிக்கத்தண்ணீர் இன்றி யாழ். குடாநாடு வனாந்தரமாக மாறிக்கொண்டிருக்கிறது. வெளியிலிருந்து வரும் சுத்திகரிக்கப்பட்ட  குடிநீர் பாவனை அதிகரித்து வருகிறது. இங்குள்ள நீர்த்தேக்கங்கள் புனரமைக்கப்பட்டு, மழை நீர் சேமிக்கப்படவேண்டும். நன்னீர் நிலைகள் பாதுகாக்கப்படவேண்டும். ஆனால், அவை நடைபெறுவதில்லை.  யாழ். குடாநாட்டின் குடிதண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்கு முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயற்படுத்தப்படவேண்டும்.  புத்தி ஜீவிகள் இதைப்பற்றி சிந்தித்து செயற்படாவிட்டால், இன்னும் ஐம்பது வருடங்களில் யாழ். குடாநாட்டை விட்டு மக்கள் முழுமையாக வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்"   (மேலும்) 29. 09.18

._______________________________________________________________________

சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்புவை தாக்கத் திட்டமிட்ட  விடுதலைப்புலிகள்:  ஜனாதிபதி

நியூயார்க்: கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்புவை விடுதலைப்புலிகள்  தாக்கத் திட்டமிட்டிருந்ததாக  ஜனாதிபதி் மைத்ரிபால சிறீசேனா தெரிவltte flightித்துள்ளார்.  இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு இறுதிக்கட்டப் போர் நடந்தது. இறுதியில் விடுதலைப்புலிகள் ராணுவத்தால் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டனர். இந்த உள்நாட்டுப் போரில் இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் லட்சக்கணக்கான தமிழர்கள் குண்டுவீச்சில் கொல்லப்பட்டனர்.  இந்நிலையில் கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்புவை விடுதலைப்புலிகள்  தாக்கத் திட்டமிட்டிருந்ததாக  ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனா தெரிவித்துள்ளார்.  தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐ.நா.சபையின் பொது அவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனா பங்கேற்றுப் பேசினார். (மேலும்) 29. 09.18.

._______________________________________________________________________

நிகழ்த்துதல் கலைகளும் மாணவமும்

- பெருமாள் கணேசன்

பாடசாலை மாணவர்களில் அருகிவரும் தேர்ச்சிகளாக அழகியல் தேர்ச்சிகளை சுட்ட வேண்டியுள்ளது   tamilstudents  பாடசாலை கலைத்திட்டம் எவ்வளவுதான் முளுமையான ஆளுமையை பிள்ளையில் வளர்க்க ஏற்பாடுகள் கொண்டிருந்தாலும் பரீட்சைபுள்ளிகள் சார் சிந்தனை மட்டுமே எமது பிரதேச பாடசாலை சார் சமூகத்தில் தேறி இருக்கிறது.  பாடசாலை எவ்வளவுதான் அழகியல் முயற்சிகளை முன்னெடுக்க முனைந்தாலும் அவற்றின் மீதான கரிசனை ஆசிரியர்களிடம் மாணவர்களிடம் பெற்றோரிடம் தொற்றுவதில்லை.  அதனால் பிள்ளைகளிடம் தலைமைத்துவ பண்பு இல்லாது போகிறது பாடசாலையில் உயிரோட்டம் இல்லாது போகிறது பன்முக நுண்மதி கோட்பாடு கவனத்தில் இல்லாது போகிறது ஆளுமை பிள்ளைகளில் இல்லாது தன்னம்பிக்கை நாளுக்கநாள் வற்றி விடுகிறதுபாடசாலை உற்பத்தியில் ஒரு நல்ல பிரசைக்கான ஆரம்பத்தை கொடுக்கத் தவறிவிடுகிறது பாடசாலை என்ற நவீன சமூகத்துக்கான நிறுவனம் பல இளம் சமூகத்தின் பொழுதை வீணடிக்கிறதுஆற்றலை சிதைக்கிறது.. என பலவற்றை குறிப்பிடலாம்.    (மேலும்) 29. 09.18

._______________________________________________________________________

நான்கு மில்லியன் ரூபாவில் பரந்தனில் புதிய  பேரூந்து நிலையம்

வடக்கு மாகாண சபையின் போக்குவரத்து அமைச்சின் நான்கு மில்லியparantha busன் ரூபா செலவில் பரந்தன் நகரத்தில் புதிய பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.  இதுவரை காலமும் பரந்த பேரூந்து நிலையம் தனியார் ஒருவரால் அமைக்கப்பட்ட கட்டடமாக காணப்பட்டு வந்தது.  இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண சபையின் போக்கு வரத்து அமைச்சின் நான்கு  மில்லியன் ரூபா செலவில்  வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால்  பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.  இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த  25 ஆம் திகதி இடம்பெற்றது.

._______________________________________________________________________

விக்னேஸ்வரனின் மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டது

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தாக்கல் செய்துள்ள விஷேட மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் மாதம் 19ம் திகதி ஆராய உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.  வடக்கvignes2ு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.​டெனிஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க கடந்த ஆண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.  இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பி.​ டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார்.  அதன்படி பி.​டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை கூறத்தக்கது.  நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.​ டெனிஸ்வரன் மனு தாக்கல் செய்துள்ளார்.

._______________________________________________________________________

இலங்கை ரூபாவின் வீழ்ச்சிக்கு அமெரிக்க ஜனாதிபதியே காரணம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக பல நாடுகளில் பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  ரூபாவின் மதிப்பிறக்கம் இலங்கையின் செயற்பாடுகளினால் இடம்பெறுவது அல்லது.  டொனால்ட் ட்ரம்பின் செயற்பாடுகளினால் டொலரின் பெறுமதி அதிகரிக்கிறது.  இது அனைத்து நாடுகளுக்கும் தாக்கம் செலுத்தும் என சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

கோத்தாவின் பாதுகாப்புக்கான ஒருநாள் செலவு  35 இலட்சம்

அரசாங்கம்  மஹிந்தவின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்று  பொது  எதிரணியினர் குறிப்பிடுவது பொருத்தமற்ற விடயம். முன்னாள் பாதுகாப்பு செயgota-10லாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு  விசேட அதிரடி படையினர்  42 பேரும் , 28  இராணுவத்தினருமென மொத்தமாக 70 பேர்  கடமையில் உள்ளனர். இவரது பாதுகாப்பிற்கு மாத்திரம்  ஒரு நாளைக்கு 35 இலட்சம் செலவாகுகின்றது என  சட்டம் ஒழுங்கு  பிரதி  அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிற்கு 6 அதிரடி படையினரும், 14 பொலிஸ் பிரிவினருமே பாதுகாப்பிற்கு அமர்த்தப்பட்டுள்ளனர். கோத்தபாயவின் விடயத்தில் அரசாங்கம் முழுமையான பாதுகாப்பினையே வழங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகான சிறிகொதாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்

._______________________________________________________________________

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்

 நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கள் கிழமை (01-10-2018) காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் இப் போராட்டம் இடம்பெறவுள்ளது என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் மு. சந்திரகுமார் அறிவித்துள்ளார். அத்தோடு குறித்த போராட்டத்தில் அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரையும் பங்குகொள்ளுமாறும்  அவர் கேட்டுள்ளார். 

._______________________________________________________________________

பயணிகள் முச்சக்கர வண்டிகளுக்கு  மீட்டர் பொருத்துவது அடுத்த மாதம் முதல் கட்டாயமாகிறது

பயணிகள் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது அடுத்த மாதம் முதல் கட்டாய நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாபauto்பு சம்பந்தமான தேசிய சபை கூறியுள்ளது. குறித்த சட்டம் அடுத்த மாதம் இரண்டாம் வாரம் முதல் அமுலுக்கு கொண்டு வரப்படும் என்று வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார்.  மீட்டர் பொருத்துவதற்காக சாரதிகளுக்கு நீண்ட காலம் அவகாசம் வழங்கப்பட்டதாகவும், வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை மேலும் நீடிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.  இந்த சட்டத்தை மீறும் முச்சக்கர வண்டி சாரதிகளை கைது செய்வதற்கு அல்லது அபராதம் விதிப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார்.அத்துடன் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது தவிர பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் சட்டமும் நடைமுறைக்கு வருகிறது.

._______________________________________________________________________

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர் பிணையில் விடுதலை

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவித்து சிட்னியில் கைதான இலங்கை இளைஞர் மொஹமட் நிசாம்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.சதி திட்டங்களை பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படும் குறிப்பு புத்தகத்தில் இருந்த கையெழுத்து அவரின் கையெழுத்துடன் பொருந்தவில்லை என்பதால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.  மேலும் காவல்துறை பொறுப்பில் கையேட்கப்பட்டிருந்த அவரின் கணனியிலோ கையடக்க தொலைபேசியிலோ எவ்வித தீவிர நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் இல்லை என தெரியவந்துள்ளது.அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மெல்கம் டர்ன்புல் மற்றும் முன்னாள் வெளிவிவார அமைச்சர் ஜூலி பிசப் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக கூறி கடந்த மாதம் 30 ஆம் திகதி மொஹமட் நிசாம்தீன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

ரஜனியின் கேள்விகளுக்கு தமிழ் உயரடுக்கினர் பதில் கூற மறுத்துவிட்டார்கள்

                                            ராஜன் ஹ_ல்

(பகுதி - 1)

மழைக்காலமும் முன்னிருட்டும் வருடம் முடியப்போவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகளாக உள்ளன. வயல்கள் உழுது பண்படுத்தப்பட்டு விதைத்து பூமியின் புதுப்பRajiniித்தலுக்காகவும் மற்றும் தாராள விளைச்சலுக்காகவும் தயாராக இருக்கின்றன. அப்படியான ஒரு நேரத்தில்தான் இருபத்தொன்பது வருடங்களுக்கு முன்பு ரஜனி திரணகம எல்.ரீ.ரீ.ஈ இனால் கொல்லப்பட்டார். அவரது கேள்விகளும் மற்றும் உண்மையை பிரதிபலிக்கும் மொழிகளும் பெரும்பாலும் அடிப்படையில் நமது ஊகங்களுக்குச் சவால்விடுத்தன. 1988 ஒக்ரோபரில் அவரால் எழுதப்பட்ட ‘மாயைகளை ஒதுக்கித் தள்ளுதல்’ எனும் கீழ் காணும் மேல்முறையீடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொது அறையில் வைத்து 50 கல்வியாளர்களால் கையெழுத்திடப்பட்டது. “இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கங்களுக்கு இடையே உள்ள எமது உறவுகளை மட்டுமல்ல ஆனால் எங்களைப் பற்றியும் நாங்கள் ஆராய வேண்டும். சமூகத்தினிடையே உள்ள பயங்கரவாதத்துக்குத் தலை வணங்குதல், நமது சந்தர்ப்பவாதம் மற்றும் பல உள்ளகக் கொலைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலையில் கொள்கைகளின் பற்றாக்குறை, என்பன வெளிச்சக்திகள் அதே ஆயுதங்களைப் பயன்படுத்தி எங்களைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்கியுள்ளன.   (மேலும்) 28. 09.18

._______________________________________________________________________

இரு இளைஞர்கள் கைது - கூரிய ஆயுதங்களும் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.vazh  அவர்களால் கொக்குவிலில் உள்ள கோவில் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்களும் மர்ம நபர்கள் அணியும் ஆடைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.  சட்டவிரோத கும்பல் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் இன்று (27) காலை சுன்னாகம் பகுதியில் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 20 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கோண்டாவில் மற்றும் தெல்லிப்பளை பகுதிகளைச் சேர்ந்த இவர்களிடமிருந்து 5 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.   (மேலும்) 28. 09.18

._______________________________________________________________________

40 ஆவது ஆண்டு நிறைவு நாடகவிழா 2018

-லண்டனில் முதல் தமிழ் நாடகப் பள்ளி 15ஆவது ஆண்டில்..

மகாலிங்கம் கௌரீஸ்வரன்

Rehearsal 24th september

நாளை சனிக்கிழமை செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி, லண்டன் வாடேரஸ்மீட் WATERSMEET THEATRE   அரங்கில் க பாலேந்திரா தலைமையில் இயங்கும் தமிழ்   அவைக்காற்று கலைக் கழகத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழா நடைபெறுகிறது.கடந்த 15வருடங்களாக லண்டனில் முதலாவது தமிழ் நாடகப் பள்ளியை நிறுவி வாராந்தம் நாடக வகுப்புகளை நடத்துகிறார்கள். .பயிற்சியாளர்களாக பாலேந்திராவும் ஆனந்தராணியும் செயல்படுகின்றனர்.இந்த நாடகப் பள்ளியின் 15ஆவது ஆண்டு நிறைவும் அதே தினம்  கொண்டாடப் படுகிறது    (மேலும்) 28. 09.18

._______________________________________________________________________

ரணிலை ஜனாதிபதி கதிரையில் அமர இடமளிக்கக் கூடாது

- அநுரகுமார திசாநாயக்க

புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என்பதை ஏற்றுக் கொanura dissanayakeள்வதாக மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.   தற்போது ரூபா மிக வேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதாகவும், பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும், பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கையில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  இவை அனைத்துக்கும் தீர்வு கிடைப்பதில்லை என்பதை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.   20வது அரசியலமைப்பு ரணில் விக்ரமசிங்கவின் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு வேடிக்கையானது என்றும் அவர் கூறினார்.    (மேலும்) 28. 09.18

._______________________________________________________________________

இரட்டை பிரஜாவுரிமை பெற முடியாத இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா

இந்த நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வாழும் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் இல்லாத இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா வழங்குவது தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.   இது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு விசாக் கட்டுப்பாட்டாளர் சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.  ஜப்பான், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இதேவேளை நேற்று 840 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.    (மேலும்) 28. 09.18

._______________________________________________________________________

ஆசி. கந்தராஜாவின் ‘முட்டிக் கத்தரிக்காய்’

சாந்தமூர்த்தி.

பேராசிரியர் ஆசி. கந்தராஜா அவர்களை நான் ஏற்கனவே சந்தித்திருக்கிறேShanthamoorthyன்.முதலில் ஜெயமோகனின் புல்வெளி தேசம் என்ற பயண நூலிலும், பிறகொருமுறை வலைப்பூவில் ஒரு நேர்காணலிலும். 22-09-2018 அன்று விடியும் முன் ஆஸ்திரேலியா வந்த நான் அன்றே மகள் சத்யா-சிவா கைலாசம் இல்லத்தில் "செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்"என்ற பேராசிரியரின் நூலைப் பார்த்தேன். மறுநாள் தூக்க மயக்கமின்றி படித்தேன்.  நல்லதொரு விருந்து. கட்டுரை. கதை, அறிவியல், அங்கதம், வரலாறு,அரசியல், மனிதநேயம், விழிப்புணர்வுஎல்லாம் கலந்த விருந்து. பேராசிரியரின் ஆதர்சம் அ . முத்துலிங்கம் நினைவுக்கு வருகிறார். முன்னர் அறிவியல் கருத்துக்களை தன் கற்றதும்,பெற்றதும் வினாவிடைகளிலும், சிறு கதைகளிலும் சுஜாதா தொட்டுக் கொள்வார். ஆனால் அவற்றில் அறிவியலை, பெரும்பாலான நேரங்களில் சுவாரஸ்யம் ஹைஜாக் செய்து விடும். பலர் அறிவியலை மெல்ல தள்ளி வைத்துவிட்டு சுவாரஸ்யத்தை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்வதுண்டு.    (மேலும்) 28. 09.18

._______________________________________________________________________

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்ட சம்பவம் ; மூவருக்கு அபராதம்

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தலா 9500 மலேசிய ரிங்கிட்கள் (387,000 ரூபா)anzaar அபராதம் விதித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார் தாக்கிய குற்றவாளிகளான கலைமுகிலன், வீ. பாலமுருகன், ரகுநாதன் ஆகியோருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.உயர்ஸ்தானிகரை தாக்கிய சம்பவம் உட்பட நான்கு குற்றங்களை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சட்ட விரோத கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட குற்றத்திற்காக அவர்களுக்கு 2500 மலேசிய ரிங்கிட்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மிரட்டல் மற்றும் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகரின் மூக்கு கண்ணாடியை சேதப்படுத்தியதற்காக 3000 மலேசிய ரிங்கிட்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கோலாலம்பூர் விமான நிலையத்தில் பதற்ற நிலமையை ஏற்படுத்திய குற்றத்திற்காக 3000 மலேசிய ரிங்கிட்கள் அபராதமாகவும் மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சாரை தாக்கியமைக்காக 1000 மலேசிய ரிங்கிட்களும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

._______________________________________________________________________

 

tt

._______________________________________________________________________

 அடுத்து வருகிற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள்?

-    கருணாகரன்

“அடுத்து வருகிற மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்?” என்று ஒரு ஓட்டோக்காரரிடம் கேட்டேன்.voting5   பதில் சொல்லாமல் என்னைக் கூர்ந்து பார்த்தார்.   சற்று நேரத்துக்குப் பிறகு கேட்டார், “நீங்க யாருக்கு போடுவீங்க? அப்பிடிப் போடுவதெண்டால் எதுக்கு போடுவீங்க?”   இப்பொழுது நான் பதில் சொல்ல முடியாமல் அவரைப் பார்த்தேன்.  இன்றைய தமிழ் அரசியல் (கையறு) நிலை இதுதான். இந்த மாதிரிக் கேள்விகளுக்கு யாராலுமே பதில் சொல்ல முடியாது.  இப்படியான கேள்விகள் உங்களுக்கு முன்னே வைக்கப்பட்டால் நிச்சயமாக நீங்களும் இப்படித்தான் எதிர்க்கேள்வியிலேயே உங்களுக்கான பதிலை எதிர்பார்ப்பீர்கள்.   குழப்பமான - நம்பிக்கையீனமான அரசியல் சூழல் ஒன்று உருவாகும்போது இந்த மாதிரியான தடுமாற்ற நிலை ஏற்படுவதுண்டு.  இன்றைய தமிழ் அரசியல் பரப்பு குழப்பமும் தடுமாற்றங்களும் நம்பிக்கையீனங்களுமாகவே உள்ளது. கட்சிகளும் அவற்றின் ஆதரவாளர்களும் இதை மறுக்கலாம். ஆனால், மக்களின் உளநிலை இதுவே.   (மேலும்) 27. 09.18

._______________________________________________________________________

சிறிசேன, ராஜபக்ச கொலை முயற்சி வழக்கு: இலங்கையில் இந்தியர் கைது

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபMa and  Rதி மகிந்த ராஜபக்ச, அவரது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று சந்தேகிக்கக் கூடிய பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சதி முயற்சி குறித்த விசாரணைகளில், இந்தியர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.  இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சதி முயற்சி குறித்து, தொலைபேசி உரையாடல் ஒன்று அண்மையில் வெளியாகியது.   (மேலும்) 27. 09.18

._______________________________________________________________________

காலநிலை மாற்றம் காரணமாக 2050 ஆம் ஆண்டுகளில் இலங்கை தனது மொத்த தேசிய உற்பத்தியின்  7 வீதத்தினை இழக்கலாம்

 உலகவங்கியின் இலங்கைக்கான இயக்குநர் -

காலநிலை மாற்றம் காரணமாக 2050 ஆம் ஆண்டுகளில் இலங்கை தனது மொத்த தேசிய உற்பத்தியின்  7 வீதத்தினை இழக்கலாம் என உலகவங்கியின் இலங்கைக்கான இயக்கdry wheather srilankaுநர் - தெரிவித்துள்ளார்.  கொழும்பில் இன்று ஆரம்பமாகியுள்ள தகவமைப்பு சமூக பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை வறுமையை ஒரு வீதத்தினால் குறைத்துள்ளது. அதன் தற்போதைய தேசிய வறுமை மட்டம் 4.1 வீதமாக காணப்படுகின்றது.   இலங்கையர்கள் அனைவரும் அறிந்த பாரிய ஆபத்தொன்று குறித்து  இந்த மாநாடு கவனம் செலுத்துகின்றது. பேரிடர் ஆபத்தே அது.  இலங்கை வருடாந்தம் இயற்கை அனர்த்தங்களை சந்திக்கின்றது. கடந்த 2016 மற்றும் 2017 இல் அது பல அனர்த்தங்களை சந்தித்தது எனத் தெரிவித்தார்.   கடந்த வாரம் கொழும்பில் வெளியிடப்பட்ட உலக வங்கியின் அறிக்கையின் படி அதிகரிக்கும் வெப்பநிலை, பருவப்பெயர்ச்சி மழை வீழ்ச்சியில் மாற்றங்கள் காரணமாக அடுத்த 2050 ஆம் ஆண்டளவில் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏழு வீதங்களை இழக்க நேரிடும்.    (மேலும்) 27. 09.18

._______________________________________________________________________

வடக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க 215 இடங்கள்

வடமாகாணத்தில் இதுவரை தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்களாக 215 விடயங்கள் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் மொஹன் லால் கிரேறு தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 176 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் 88 இடங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் 64 இடங்கள் உண்டு. இவற்றில் 33 இடங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. வவுனியா மாவட்டத்தில் 50 இடங்களும் யாழ் மாவட்டத்தில் 79 இடங்களும் கிளிநொச்சியில் 18 இடங்களும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளன. வர்த்தமானியில் வெளியிடப்படாத இடங்களை விரைவில் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ராஜாங்க அமைச்சர் மொஹன் லால் கிரேறு மேலும் தெரிவித்தார்.

._______________________________________________________________________

ஏழு தமிழர்களையும் விடுவிக்கக்கூடாது என 15 குடும்பத்தினர் மனு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரையும் விடுவிக்கக்கூடாது என தமிழக ஆளுநரிடம் 15 குடும்பத்தினர் மனு சRajiv murdersமர்ப்பித்துள்ளனர்.உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய, குறித்த 7 பேரையும் விடுவிக்குமாறு தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளபோதும், அது குறித்து ஆளுநர் தற்போதுவரை எவ்வித முடிவையும் மேற்கொள்ளவில்லை.இந்த நிலையில், ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தின்போது உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினர் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து மனு சமர்ப்பித்துள்ளனர்.அதில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கூடாது எனக் கோரியுள்ளனர்.இதன்மூலம் 7 பேரை விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பதில் மேலும் காலதாமதம் ஆகும் என தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

._______________________________________________________________________

ஜனாதிபதி கொலைச் சதி;- கைதுசெய்யப்பட்ட இந்தியர் குறித்து தூதரகம் தகவல்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச ஆகியோரை கொலை செய்யும் முயற்சியுடன் தொடர்புபட்டவர் என கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியர் 2000 ஆண்டு முதல் மனோநிலை பாதிக்கப்பட்டவர் என இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.இலங்கையின் முக்கிய தலைவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சியுடன் தொடர்புபட்டவர் என்ற சந்கேத்தின் பேரில் இந்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என ஊடகங்களில் வெளியான தகவல்களை பார்த்துள்ளதாக இந்திய தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.     (மேலும்) 27. 09.18

._______________________________________________________________________

ஈரான் மீதான பொருளாதாரத் தடையை தவிர்ப்பது எதிர்விளைவுகளை உண்டாக்கும்: ஐரோப்பிய யூனியனுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஈரானுக்கு எதிராக தாங்கள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் முயன்றால், அது எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று அமெரிக்கா எச்சரிusairanத்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ கூறியதாவது: ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக, புதிய பணமாற்ற முறையை உருவாக்க சில நாடுகள் திட்டமிட்டு வருவதாக வெளியாகும் தகவல்கள் அதிருப்தி அளிப்பதாக உள்ளன.இத்தகைய நடவடிக்கைகள் உண்மையில் எதிர்விளைவுகளைத்தான் உருவாக்கும்.மேலும், மண்டல மற்றும் உலக அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் என்றார் அவர்.   தனது அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த 2015}ஆம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டன.     (மேலும்) 27. 09.18

._______________________________________________________________________

சாவகச்சேரி கொள்ளை தொடர்பில் மூவர் கைது

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில் நிதி நிறுவனம் ஒன்றில் ஆயுதமுனையில், சுமார் 18 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் 3 பேர் arrest11இன்று கைது செய்யப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 19ம் திகதி காலை சாவகச்சேரி பிரதேசத்தில் உள்ள குறித்த தனியார் நிதி நிறுவனத்தில் சுமார் 18 21 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைவாக அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.யழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரும் 29 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகைள ஆரம்பித்துள்ளனர்.

._______________________________________________________________________

தமது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வேண்டும் - மஹிந்த கோரிக்கை

தமது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம், மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு விஜயராம பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். தமது குடும்ப உறுப்பினர்களின் கொலை முயற்சி தொடர்பில் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கமைய, தமது பாதுகாப்பை அரசாங்கம் மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

._______________________________________________________________________

 வவுனியாவில் வீட்டிற்குள் நுழைய முயன்ற முதலை

 வவுனியா – பூந்தோட்டம் கல்லூரி வீதியில் உள் வீடொன்றிற்குள் புகுந்த முதலை பிரதேசவாசிகளால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது. கல்லூரி வீதியிலுள்ள வீட்டின் வாசலில் crocodile1காணப்பட்ட நடமாடிய நிலையில் முதலை தொடர்பில் வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, உரிமையாளர் முதலையைப் பிடித்து மரம் ஒன்றில் கயிற்றினால் கட்டி வைத்துள்ளார். சுமார் 6 அடி நீளமான முதலையே இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. பிடிக்கப்பட்ட முதலை தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீர்நிலைகளில் நீர் வற்றியுள்ள நிலையில் முதலைகள் மக்கள் குடியிருப்பிற்குள் நுழைவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

._______________________________________________________________________

நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை!!!

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களினால் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் வசிப்போருக்கு தற்போது இலங்கைப் பிரஜாவுரிமையினையும் வழங்குவதன் மூலம் அslpassportவர்களால் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்ய முடியும். பிரஜாவுரிமையினைப் பெற்றுக்கொண்டவர்கள் வெளிநாடுகளிலேயே வசிக்காமல், அனைத்துத் துறைகளிலும் நாட்டின் மேம்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்தார். இலங்கையினைப் பூர்வீகமாகக் கொண்டிருந்த போதிலும் இலங்கைப் பிரஜாவுரிமை இல்லாதவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமையினை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

._______________________________________________________________________

 வாழ்வை எழுதுதல் - அங்கம் 04

வரலாற்றில் பதிவாகும் காலிமுகத்தைச் சுற்றி முட்கம்பிவேலி அமைத்த கதை!

1953  ஹர்த்தாலும் சமகாலத்து ஆர்ப்பாட்டங்களும்

                                                                                       முருகபூபதி

(2)

1974 ஆம் ஆண்டில் காலிமுகத்திடலில் வீதி அகலமாக்கும் நிர்மாணப்பணிகளில் அங்கு வேலைசெய்த தொழிலாளர்களை  மேற்பார்வை செய்யும்  (மேய்ப்பன் ) ஓவஸீயர் வேலgalleface old Photosை எனக்கும் கிடைத்தது. Territorial Civil Engineering Organization ( T.C.E.O)    என்னும் நிறுவனத்திடம் மைத்திரிபால சேனாநாயக்காவின் வீதி நிர்மாண அமைச்சு காலிமுகத்தில் அந்த வேலையை ஒப்படைத்திருந்தது. நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றினார்கள். அவ்வேளையில் எதிரணியிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சி,  அரசுக்கு எதிராக பெரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகியது. அதற்கு முன்னர் எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து இக்கட்சியின் சில எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு மாட்டு வண்டிகளில் வந்து இறங்கியது  கண்கொள்ளாக்காட்சியானது.ஒரு தடவை தகநாயக்காவும் ஆடைகளின் விலையுயர்வைக ்கண்டித்து கோவணத்துடன் அங்கு வந்திறங்கிய காட்சியை மூத்த தலைமுறையினர் ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.   (மேலும்) 26. 09.18

._______________________________________________________________________

 நீண்ட கால கைதிகளின் விடுவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விசேட சலுகை காட்டி விடுவிக்க முடியாது என உள்ளுர் ஊடகங்களில் வெளியான உங்கள் அறிக்கையே, sangary1என்னை இந்த வேண்டுகோளை விடத் தூண்டியது. சிறைச்சாலைக்குள் தமது விடுதலையைக் கோரி உண்ணாவிரதம் இருப்போரின் துயரம் யாதெனில், நீண்ட காலமாக தாம் எதுவித விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமையேயாகும். அதிகாரிகளின் குறிப்பாக கௌரவ நீதி அமைச்சர் என்ற வகையில் உங்களது அதி கவனத்திற்கு எடுக்க வேண்டிய விடயம் யாதெனில், கடந்த காலத்தில் கடும் குற்றச் செயலில ஈடுபட்டு குற்றவாளியாக இனம் கண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், பல்வேறு காரணங்களினால் அவர்களின் மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு 14 ஆண்டுகளில் விடுதலையாவது சகஜம். அது மட்டுமல்லாமல் ஒழுக்கமாக செயற்பட்டமை மற்றும் பொது விடுமுறை நாட்கள் போன்றவற்றால் இத்தண்டனை ஆண்டுகள் மேலும் குறைக்கப்பட்டு, விடுதலையாவது வழமையாக இருந்து வந்துள்ளது.    (மேலும்) 26. 09.18

._______________________________________________________________________

எக்சைல் 84 : தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் பிடிபட்ட ஆயுதங்கள்

- நடேசன்

சென்னையின் வெப்பகாலம் . ஒரு மதிய நேரத்தில் டாக்டர் சிவநாதன் வேர்வை முகத்தில் சிந்தியபடி வந்து, “இவன் முகுந்தனோடு பெரிய கரைச்சல் ” என்றபோது அவரது முகம் அட்டகuma_maheswaranோணத்தில் இருந்தது.  ஆரம்பத்தில் புரியவில்லை. தமிழ் மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் உமா மகேசுவரனைக் குறிப்பிடுகிறார் எனப்புரிந்ததும் “ஏன் என்ன நடந்தது?’ என்று விசாரித்தேன்  “புளட் – ஒஃபீசில் வேலை செய்த பிள்ளையொன்று இங்கு வந்து வேலை கேட்கிறது. அங்கே இருக்கமுடியாது என்று அழுகிறது. ”     “நாமள் அதுக்கு என்ன செய்வது?”   “பாவம் கலியாணம் கட்டாத பிள்ளை. இவங்களுக்கு நிக்கவரட்டிய வங்கிக் கொள்ளையில் உதவியதால் அங்கிருக்க முடியாது இந்தியா வந்திருக்கு.”   ” உதவியவர்களுக்கு உதவாத இவன்கள் எப்படி மக்களுக்கு உதவப்போகிறார்கள் ” என்று எனது ஆற்றாமையை வெளியிட்டேன்.   எங்களது மருத்துவ நிலயத்தில் ஏற்கனவே ஒரு பெண் லிகிதர் வேலை செய்கிறார் . அதற்கு மேல் ஒருவரை நியமித்து பணம் கொடுக்க வழியில்லை.     (மேலும்) 26. 09.18

._______________________________________________________________________

மெல்பனில்  திரைப்பட இயக்குநர் (அமரர்) தர்மசேன பத்திராஜவின்  இரண்டு திரைப்படங்களின் காட்சிகள்   பம்பரு எவித் ( சிங்களம்) - பொன்மணி ( தமிழ்)

Films ‘Bambaru Avith'  and   'Ponmanie'   In Commemoration of the Life andbambaru-avith-83 Times of Dr Dharmasena Pathiraja   Renowned Sri Lankan Filmmaker and Progressive Thinker     People for Human Rights and Equality (PHRE)   will screen   ‘Bambaru Avith' (the wasps are here) with English subtitles    followed by   'Ponmanie' with English and Sinhala Subtitles

   30 September at 3 pm  Chandler Theatre 28 Isaac road, Keysborough VIC 3173

  Please see the attached flyer for more information, and    spread the message among your friends.  

Entrance - $10 Donation

For reservations, Please contact Nalini on 0433 363 994 or    Ajith on 0409 552 123.

._______________________________________________________________________

இடமாற்றம் வழங்கப்பட்டு புதிய இடங்களில் பணிக்கு செல்லாத  வைத்தியர்களுக்கு சம்பளம் இல்லை

இடமாற்றம் வழங்கப்பட்டு புதிய இடங்களில் பணிக்கு செல்லாத வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களுக்குரிய சம்பளத்தை இடைநிறுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.போசாக்கு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதாரச் செயலாளர் பீ.ஜீ.எஸ். குணதிலகவிற்கு இவ்வாறு அறுவுறித்தியுள்ளார்.அவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களை அவர்களுடைய பழைய பணி இடத்திலிருந்து விடுவிக்காத வைத்தியசாலை பணிப்பாளர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.அத்துடன் வைத்தியாசலைகளுக்கு வழங்கப்படுகின்ற நிதியுதவிகளை இடைநிறுத்தவும், வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது நிர்வாக திறமைகளுக்கு புள்ளி வழங்கும் போது இதுதொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சரின் தலைமையில் நரஹேன்பிட்டி தேசிய இரத்த பரிமாற்ற மையத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

._______________________________________________________________________

அம்பேபுஸ்ஸ இராணுவ சிப்பாய் கொலை / இரண்டு சிப்பாய்கள் கைது

அம்பேபுஸ்ஸ இராணுவ சிப்பாய் கொலை சம்பவம் தொடர்பில் , அந்த முகாமை சேர்ந்த இரண்டு சிப்பாய்கள் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த தினம், அம்பேபுஸ்ஸ இராணுவ காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில், இராணுவ சிப்பாய் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டு, அவரின் துப்பாக்கி களவாடிச் செல்லப்பட்டிருந்தது.  கொள்ளைச் சம்பவத்தின் பொருட்டு, குறித்த சிப்பாயை கொலை செய்து அவரின் துப்பாக்கி களவாடப்பட்டுள்ளதாக விசாரணை மேற்கொண்ட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அத்துடன் களவாடப்பட்ட துப்பாக்கி தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.சம்பவத்தில் பலியான இராணுவ சிப்பாய் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தில் இணைந்துள்ளார்.அவர் அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமின் காவலரண் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.21 வயதான அவர் கேகாலை - புலத்கோஹெபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவரின் இறுதி கிரியைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நிறுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

உயிர்நீத்த திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நிறுத்துமாறு யாsumanthiran260918ழ்ப்பாண காவற்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த கோரிக்கை மனு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபியை சூழவுள்ள சுற்றுவேலிகள் மற்றும் நினைவேந்தலுக்காக போடப்பட்டுள்ள கொட்டகைகள், உருவப்படங்களை அகற்றுமாறும், நினைவேந்தலை நிறுத்துமாறும் மாநகரசபை ஆணையாளருக்கு அவசர உத்தரவினை வழங்குமாறு கடந்த வெள்ளிக்கிழமை குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விளக்கத்தினை முன்வைப்பதற்காக, குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் அந்த மனுவை நிராகரித்தார்.இந்தநிலையில், நாளைய தினம் யாழ்ப்பாண மாநகர சபையினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இந்த வழக்கில் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் சார்பில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ சுமத்திரன் இவ்வாறு ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தார்.

._______________________________________________________________________

'A story of a brief marriage-by Anuk Arudpragasam'.

'ஒரு குறுகிய காலகட்டத்திருமணம்'-ஒரு ஆங்கில நாவலுக்காக எழுதப்பட்ட ஒரு சிறு விமர்சனம்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-22.9.18

இந்நாவலுக்குத் தங்கள் விமர்சனத்தை எழுதிய பல வெளிநாட்டு எழுத்தாளர்கள்,இலங்கையில் நடந்த போரின் கடைசிக் கட்டத்தில் தமிழர் பட்ட அவலத்தை நStory-of-a-Brief-Marriage-Side-by-Side-Cropேரிற்காணாதவர்கள். ஆனால், போர்ப் பிரதேசத்திலிருந்து அரச படையினரின் பகுதிக்குப் பாதுகாப்புத் தேடி ,'இடம் பெயர்ந்தோடிவந்த' தமிழ் மக்களின் துயரை நேரிற் கண்ட அனுபவம் எனக்கிருப்பதால்,இந்நாவலைப் படிக்கும்போது, ஆசிரியரின் கதைப் படைப்பும், தத்ரூபமாக அந்தப் போர்ச் சூழலை விபரித்து எழுதியதையும் படித்தபோது, துயரில் தவித்துக் கதறிக் கொண்டிருந்த இடம் பெயர்ந்த தமிழ் மக்களைக் கண்ட பழைய ஞாபகங்களால் எனது இதயம் துடித்தது. ஒவ்வொரு நாளும் அடிக்கடி நடக்கும் தாக்குதல்களினால்,தன்னுடைய மனைவியையும், ஒரே ஒரு மகனையும் ஒரு நொடியில் இழந்து தவித்துத் துடித்த தகப்பன் சோமசுந்தரம்,அவரின் மகள், கங்காவை, அவளின் பாதுகாப்பை நினைத்து தினேஸ் என்ற இன்னுமொரு'அகதிக்குத்'திருமணம் செய்து வைக்கிறார்.தொடர்ந்து நடக்கும் போரால், மனிதக் கேடயங்களாக்கப் பட்ட ஒரு பிரமாண்டமான மனிதக் கூட்டத்தில்,'நான். எனது' என்ற அடையாளத்தை எப்போதோ இழந்து நடைப்பிணமான ஒரு இளைஞனுக்குத் திடிரென்று ஒரு கல்யாண பந்தம் வருகிறது .    (மேலும்) 25. 09.18

._______________________________________________________________________

வாழ்வை எழுதுதல் - அங்கம் 04

வரலாற்றில் பதிவாகும் காலிமுகத்தைச் சுற்றி முட்கம்பிவேலி அமைத்த கதை!
1953  ஹர்த்தாலும் சமகாலத்து ஆர்ப்பாட்டங்களும்

                                                                                       முருகபூபதி

(1)

கடந்த செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி இலங்கைத் தலைநகரsep 55த்தை முற்றுகையிடும் ஆர்ப்பாட்ட போராட்டத்தை முன்னெடுத்திருந்த பொது எதிரணிக்கு இன்றைய மைத்திரி - ரணில்  கூட்டு நல்லாட்சி(?) யை இல்லாமல் செய்துவிடவேண்டும் என்பதுதான் பிரதான நோக்கமாக இருந்தது. இந்த நல்லாட்சிக்கூட்டணியின்  சூத்திரதாரியான சந்திரிக்கா குமாரணதுங்க பதவியிலிருந்த காலத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.  அவருடைய தாயார் ஶ்ரீமா பிரதமர் பதவியிலிருந்தபோதும்  தந்தையார் பண்டாரநாயக்கா பிரதமராக இருந்தபோதும் ஆர்ப்பாட்டங்களும் குறைவின்றி நடந்துள்ளன. பண்டாரநாயக்காவின் காலத்திலேயே தமிழரசுக்கட்சியினரின் சிங்கள ஶ்ரீ எழுத்துக்களுக்கு தார்பூசி அழிக்கும் போராட்டமும் காலிமுகத்தில் நாடாளுமன்றத்திற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டமும்  நடந்த காலத்தில் எனக்கு ஏழுவயது. அதனை நேரில் பார்க்காது விட்டாலும் அந்தப்போராட்டங்கள் - ஆர்ப்பாட்டங்கள் பற்றிய செய்திகளையும் அவற்றின்  பின்னணி வரலாறுகளையும் படித்து தெரிந்துகொண்டிருக்கின்றேன்.   (மேலும்) 25. 09.18

._______________________________________________________________________

கழிவுநீர் சுத்திகரிப்பு முகாமைத்துவ திட்டம் தொடர்பில் வெளிப்பட தன்மை அவசியம் வேண்டும்

பாறுக் ஷிஹான்

மக்களிற்கான அபிவிருத்திகள் மக்களின் பிரதிநிதிகளுக்கூடாக  வெளிப்படையாக பேசப்பட வேண்டுமே அன்றி அவற்றை மறைத்து தான்தோன்றித்தனமாக செயற்பட எவருமchandra் முயற்சிக்க கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின்    கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.   கனேடிய அரசின் நிதியுதவியுடன்   கல்முனையில் கழிவுநீர் சுத்திகரிப்பு முகாமைத்துவ திட்டம் அமைப்பது தொடர்பில்  மக்களுடனான  சந்திப்பொன்று    இன்று(23)  கல்முனை -1 பல்தேவை கட்டடத்தில்   நடைபெற்ற போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.   மேலும் தனது கருத்தில் கனேடிய அரசின் நிதியுதவியுடன்   220 மில்லியன் டொலர் செலவில் கல்முனை இஸ்லாமாபாத் பிரதேசத்தில்  அமைக்கப்படவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு முகாமைத்துவ திட்டம் குறித்து   திடிரென எமக்கு  அறிவிக்கின்றனர்.  கல்முனை மாநகர சபையில்  த.தே.கூ  சார்பாக 07 உறுப்பினர்கள்  உறுப்பினர்கள் உள்ளோம்.இவ்வாறான அபிவிருத்திகள் மக்களுக்கு நன்மை பெற்று தந்தாலும் அது தொடர்பில்  வெளிப்படையாக பேசப்பட வேண்டுமே அன்றி அவற்றை மறைத்து தான்தோன்றித்தனமாக செயற்பட எவரும் முயற்சிக்க கூடாது .  (மேலும்) 25. 09.18

._______________________________________________________________________

வரலாறு திரும்புகிறது!

ஆர்.எஸ். நாராயணன்  |

இன்றைய மனிதன் நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கிறான். எல்லாம் கணிணிமயம். மடியில் கணினி. கையில் அறிதிறன்பேசி (ஸ்மார்ட்போன்), முகநூல், கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அpotப்), கூகுள், யூட்யூப். டி.வி சீரியல் மவுசு கூடக் குறைந்துவிட்டதுபோல் தோன்றுகிறது.  இருப்பினும் கூட, இந்த அறிதிறன்பேசி வழியாக கூகுள் உலகத்திற்குள் நுழைந்தால் விஷயம் வேறு மாதிரியும் போகிறது! இயற்கை விவசாயம் என்றால் இயற்கையாக என்ன விளைகிறதோ அதைத்தான் மனிதன் உண்ண வேண்டுமாம். உழவு மாடுகளை மறந்துவிட்டு டிராக்டர்களை ஏன் பயன்படுத்துகிறோம் என்று கேட்பது கூடத் தவறு. ஏன் உழ வேண்டும்? இரும்பு யுகம், அதாவது, கற்காலத்தில் இரும்புக் கருவிகள் தோன்றுவதற்கு முன் இயற்கையாக விளைந்ததை சேகரித்தும் மனிதன் வேட்டையாடிய இறைச்சி, மீன் உண்டும் வளர்ந்த காலத்திற்குப் போக வேண்டுமாம்! அரிசி, கோதுமை கூடாது. புஞ்சை தானியங்களை மட்டுமே உண்ண வேண்டுமாம். இது கொஞ்சம் பரவாயில்லை. மானாவாரி விவசாயம் அனுமதிக்கப்படுகிறது.     (மேலும்) 25. 09.18

._______________________________________________________________________

ஓமந்தை ரயில் விபத்து ; படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்கு சுவீடனுக்கு கொண்டு செல்லப்பட்டார்


ஓமந்தை ரயில் விபத்தில் படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் செல்வதற்காக விசேட உலங்குவானூர்தி மூலம் வவுனியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்swedenடார்.   வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கார் மீது ரயில் மோதியதில் படுகாயம் அடைந்த சிறுமியை மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் நாட்டு வைத்தியர் குழாம் விசேட உலங்குவானூர்தி மூலம் இன்று வவுனியா வைத்தியசாலையில் இருந்து அழைத்துச் சென்றனர்.      யாழில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயில் வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 16 ஆம் திகதி காலை 10.20 மணியளவில் பாதுகாப்பற்ற ரயில்க் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சுவீடன் நாட்டில் இருந்து வருகைதந்தவர் உட்பட நான்கு பெண்கள் மரணமடைந்ததுடன், சுவீடன் நாட்டைச் சேர்ந்த தந்தையும், மகளும் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.     (மேலும்) 25. 09.18

._______________________________________________________________________

உண்ணாவிரதம், போராட்டத்தினால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது - தலதா

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள  தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தற்போது  வழக்கு தாக்கல் செய்யப்பபட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பின் நிமித்தமே  இவர்கள் விடுதலை செய்யப்படுவார்களே தவிர உண்ணாவிரதமிருக்கும் போராட்டத்தின் மூலம் அல்ல  என சிறைச்சாலை புனரமைப்பு மற்றும் நீதியமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்தார்.தேசிய அரசாங்கத்தில் நீதித்துறை சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளது ஆகவே சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே   அவ்விடயத்தில் அரசியல் கைதிகள் விதிவிலக்கல்ல எனவும் குறிப்பிட்டார்.

._______________________________________________________________________

 சம்மந்தனின் கையில் திறப்பு எப்போது வந்தது?

-    கருணாகரன்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைப் பற்றி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் பேசப்போவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைsampanthan srisenaவருமான சம்மந்தன் திடீரென அறிவித்திருக்கிறார்.  சம்மந்தனுக்கு அரசியல் கைதிகளின் மீது எதற்காக இந்தத் திடீர்க்கரிசனை? இருந்தாற் போல என்ன இப்படியொரு ஞானோதயம்? எனப் பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். எல்லோருக்கும் ஏனிந்த ஆச்சரியமென்றால், கடந்த ஆண்டு அரசியல் கைதிகளின் விடுதலையைப் பற்றிப் பேசுவதற்காக ஏற்கனவே  விடுதலையானவர்கள்  சம்மந்தனைச் சந்திக்க முற்பட்டனர். அப்பொழுது அவர்களை  உதாசீனப்படுத்தியிருந்தார் சம்மந்தன். அந்தச் செய்தியும் வீடியோ மற்றும் ஒளிப்படக் காட்சியும் இணையத்தளங்களில் வைரலாகப் பரவிப் பெரும் பரபரப்பை உண்டாக்கின. அப்படியே அவை  சம்மந்தனுக்கும் கூட்டமைப்புக்கும் எதிரான உணர்வலைகளையும் உண்டாக்கியிருந்தன. இந்தச் சம்பவத்தையிட்டுச் சம்மந்தனோ கூட்டமைப்போ இதுவரையில் மன்னிப்புக் கோரவும் இல்லை. வெட்கப்படவும் இல்லை. குறைந்த பட்சம் தமது தவறை உணர்ந்த மாதிரியும் இல்லை.  (மேலும்) 24. 09.18

._______________________________________________________________________

போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் மருத்துவமனையில் அனுமதி

- பி.பி.சி

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் கைtamil political prisionersதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார்.  இலங்கையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது வழக்குகளைத் துரிதப்படுத்தக் கோரி உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி ஜெயச்சந்திரன், கிளிநொச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவை சேர்ந்த தங்கவேல் நிமலன் ஆகிய 8 கைதிகளே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.   (மேலும்) 24. 09.18

._______________________________________________________________________

சட்ட சிக்கல்கள் தீர்த்து வைக்கப்பட்ட பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்த பணிப்புரை

சட்ட சிக்கல்கள் தீர்த்து வைக்கப்பட்ட பின்னர் ஆறு மாகாண சபைகளுகranil்கான தேர்தல்களை நடத்தும்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் முறை குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதனால் இந்த நிலைமை உருவாகி உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.மல்வத்துபீட மஹாநாயக்கர் அதிசங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இது விடயம் தொடர்பில் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு ஒன்று எட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

._______________________________________________________________________

சொந்த மக்களுக்கே கொடுமைகள் இழைத்த விடுதலைப் புலிகள் இயக்கம்


தான் ஒரு 'தேசத் துரோகி' என்று ஒப்புக் கொள்கிறார் திரைப்பட இயக்குநர் ஜூட் ரத்தினம்.

இவர் ஒரு தமிழர். எனினும் இலங்கைப் போரின் போது நடந்த பல அட்டூழியங்களுக்கு காரணம் விடுதலைப் புலிகள் அமைப்புதான் என்று குற்றஞ்சாட்டுகிறார் இவர்.Ratnam   இப்படி நினைப்பதற்கு என்ன காரணம் என்பதை செய்தியாளர் நளினி சிவதாசனிடம் (BBC) விளக்குகிறார் ஜூட்.  "இலங்கைப் போர் இறுதிக் கட்டத்தில் இருக்கும் போது, விடுதலைப் புலிகள் வீழ்ச்சியடைய வேண்டும் என்று நினைத்தேன். என் மக்கள் கொலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை, புலிகளுக்கு ஒரு முடிவு வேண்டும் என்று தோன்றியது" எனக் கூறுகிறார் ஜுட் ரத்தினம்.  2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது. இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளை தோற்கடித்தது. ஆனால், அதற்கு ஒரு பெரிய விலை கொடுக்கப்பட்டது. 40,000 மக்கள், முக்கியமாக தமிழர்கள் இந்தப் போரின் இறுதியில் உயிரிழந்ததாக ஐ.நா கணக்கிட்டது.  (மேலும்) 24. 09.18

._______________________________________________________________________

நியாயமான சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று தலவாக்கலை நகரில் ஆயிரக்கணக்கான பெருந்தோட்டத் தொழிலாளர்கள்   போராட்டம்

நியாயமான சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று தலவாக்கலை நகரில் ஆயிரக்கணக்கான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டனர்.  தலவாக்கலை – லிந்துலை நகர சபைக்கு அருகில் இன்று முற்பகல் அதிகளவிலான தொழிலாளர்களும், மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும் ஒன்றுகூடினர்.  நியாயமான சம்பளத்தை கோரும் நீதிக்கான போராட்டம் எனும் தொனிப்பொருளில் அங்கிருந்து ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமானது.  தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிகளவிலான தொழிற்சங்கங்கள் தமது ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவரை அதிகரிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இதன்போது வலியுறுத்தப்பட்டன.  ஆர்ப்பாட்டப் பேரணி தலவாக்கலை ஊடாக நகர பை மைதானம் வரை முன்னெடுக்கப்பட்டது.

._______________________________________________________________________

பிரதேச சபை உறுப்பினரின் தலையீட்டால் மக்கள் போராட்டம் கைவிடப்பட்டது

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை பாதை தொடர்பாக அப்பகுதி மக்கள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத்ததலைanchalaவரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து அவ்வீதி தொடர்பாக தெளிவின்மை நிலை காணப்பட்டுள்ளது இதையடுத்து புகையிரதத்தை மறித்து போராட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கு அப்பகுதி மக்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டனர். எனினும் நிலைமைகளை சீர் செய்வதற்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் கோகிலகுமார் அஞ்சலா ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் அப்பகுதி மக்கள் பிரதேச சபைத் தலைவர் ஆகிய முற்தரப்பினர் ஒன்றிணைந்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து மக்கள் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.    (மேலும்) 24. 09.18

._______________________________________________________________________


ஸ்விட்சர்லாந்து கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

ஸ்விட்சர்லாந்து சரக்கு கப்பல் மீது அதிரடியாக தாக்குதல் நடத்திய கடற்கொள்ளையர்கள் அந்தக் கப்பல் பணியாளர்கள் 12 பேரை கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து மாழ்ஸாயல் கப்பல் நிறுவனம் தெரிவித்ததாவது:   சரக்குகளை ஏற்றிச் செல்லும் எம்பி கிளாரஸ் கப்பல், 19 பணியாளர்களுடன் போனி தீவுக்கு அருகே 45 கடல் மைல் தொலைவில் நைஜீரிய கடற்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, கிளாரஸ் கப்பலை முற்றுகையிட்டு நீண்ட ஏணிகளை பயன்படுத்தி கடற்கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். கப்பலில் இருந்த தொலைத் தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் தீயிட்டு கொழுத்திய கடற் கொள்ளையர்கள் பணியாளர்கள் 19 பேரில் 12 பேரை கடத்தி சென்று விட்டனர். அவர்களை பத்திரமாக மீட்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

._______________________________________________________________________

காத்தான்குடி நகரசபை மக்கள் பிரதிநிதிகளின் செப்டம்பர் மாதத்திற்கான 06 வது அமர்வு.

-ஊடகப்பிரிவு-

காத்தான்குடி நகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் மாதாந்த அkaththankudiமர்வுத் தொடரில் செப்டம்பர் மாதத்திற்கான 06 வது அமர்வு கடந்த 20.09.2018 வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு தவிசாளர் S.H.M. அஸ்பர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.  இவ்வமர்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலான பத்து உறுப்பினர்களும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பிலான நான்கு உறுப்பினர்களும், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு சார்பிலான உறுப்பினர்கள் இருவருமாக மொத்தம் 16 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர், உறுப்பினர்களான பொறியியலாளர் சிப்லி பாறூக் மற்றும் அல்ஹாஜ் A.M.M. மாஹிர் ஆகியோர் சபை அமர்விற்கு சமுகமளித்திருக்கவில்லை.   (மேலும்) 24. 09.18

._______________________________________________________________________

பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு கோட்டாபய தகுதி வாய்ந்தவர் இல்லை

பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தகுதி வாய்ந்தவர் இல்லை என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். sarath.f(22) களனி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கோட்டபய ராஜபக்ஷ தற்போது அரசாங்க உத்தியோக்கதர் ஒருவர் இல்லை எனவும் அவர் மக்கள் தற்போது எந்த ஒரு சேவையையும் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.தனது பாதுகாப்பிற்காக 17 பாதுகாப்பு உத்தியோகத்தர்களே வழங்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இதுவரையில் 25 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை பொலிஸ் மா அதிபருக்கு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நியாயமான விசாரணை ஒன்றை மேற்கொண்டு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொண்ட 25 இளைஞர்கள் கைது

நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொண்ட 25 இளைஞர்கள் கேரளா கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரட்டுகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  நேற்று மாலை, ஹட்டன் குற்றபுலனாய்வு பிரிவினர் அவர்களை கைது செய்துள்ளனர்.  20 முதல் 25 வயதுகளுக்கு இடைப்பட்ட அவர்கள், கொழும்பு, காலி, மாத்தறை, மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இதேவேளை , திருகோணமலை சிறிமா புறப்பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை  எதிர்வரும் 2 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை , திருகோணமலை மாவட்டத்தில் 5 காவல் நிலையங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 13 சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

._______________________________________________________________________

இராணுவ விவகாரங்களில் ஆர்வம் மிகுந்த விசாரணைகள் இடைநிலை நீதிக்கு எதிரான விளைவுகளைத் தரும்

                                          ரங்க ஜயசூரியா

கடந்த வியாழக்கிழமை வழக்கமான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரமான மற்றொரு அமsrisena admiralைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். அவசரம் அவசரமான இந்தக் கூட்டத்துக்கான காரணம் (ஜனாதிபதி இந்த விபரங்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்க வேண்டாம் என தனது அமைச்சர்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்), பாதுகாப்பு படைகளின் தலைவரான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட இருப்பது தொடர்பாகத்தான். அட்மிரல் விஜேகுணரட்ன மீது, முன்னாள் கடற்படை புலனாய்வுப் பிரிவு அதிகாரியும் தற்போது 11 பொதுமக்கள் காணாமற்போன விடயத்தில் முக்கிய சந்தேகநபருமான ஒருவர் கைது செய்யப்படாமல் தப்பிப்பதற்கு உதவினார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கேள்விக்குரிய நபரான இந்த நேவி சம்பத் என அறியப்படும் ஹெட்டியாராய்ச்சி முதியான்சலாகே சந்தனப் பிரசாத் ஹெட்டியாராய்ச்சி என்பவர் ஒரு முன்னாள் கடற்படை லெப்டினன்ட் கொமாண்டராகவும் மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தராகவும் கடமை புரிந்துள்ளார். சிலநாட்களின் முன்னர் திரு. ஹெட்டியாரய்ச்சி லோட்டஸ் வீதியில் வைத்து கைது  செய்யப்பட்டார்.      (மேலும்) 23. 09.18

._______________________________________________________________________

எக்சைல் 1984 ; கெடுகுடி சொற்கேளாது

- நடேசன்

ஜனநாயகமான கட்டமைப்பற்ற ஆயுத அமைப்புகள் தங்களுக்குள் பிரிவதும் அழிவதும், தாயின் வயிற்றில் குறைபாடான கருவொன்று அபோர்சனாக வெளியேற்றப்படுவது போsabaratnamன்ற இயற்கைச் செயல்பாடாகும். அது போல் இயற்கையின் வலிமையானவை நிலைப்பதும், நலிந்தவை அழிவதுமான டரர்வினியன் தத்துவமாகும் .   இப்படியான டார்வினியன் பரிணாம தத்துவம் இலங்கை தமிழ் அரசியலுக்கும் பொருந்தும். சகோதரஇயக்கங்கள் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டது என்று பலராலும் கூறப்பட்டாலும், அது மிகையானது. ஆனால் அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் விடுதலைப்புலிகளால் வேட்டையாடப்பட்டார்கள் என்பதே உண்மையாகும்.  இரண்டிற்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்கலாம்.   மற்ற இயக்கங்கள் உள்ளக உடைவு(Implosion) மூலம் ஏற்கனவே தங்கள் தலைகளில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு விட்டார்கள். இது இயக்க வரலாறு தெரிந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் இனவிடுதலையை நோக்கமாக மட்டுமே வந்த இளைஞர்களைத் துடி துடிக்கச் சுட்டு எரித்ததே விடுதலைப்புலிகள் செய்த பாவகாரியம்.       (மேலும்) 23. 09.18

._______________________________________________________________________

ஜனநாயக ரீதியில் மக்கள் நலனை முதன்மைப்படுத்திச் செயற்படும் தரப்புகளுடன் அரசியல் கூட்டில் இணைவோம்.  

நேர்காணல் - முருகேசு சந்திரகுமார்

தவறாக நடந்தால் அதற்கெதிரான கண்டனங்களும் விமர்சனங்களும் வெளியே எழும் என்பது நியதி. மேற்குறித்த சபைகளில் ஜனநாயகத்துக்கு மாறான முM.Chandrakumarறையிலேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் எதேச்சாதிகாரத்துக்கு எதிரான குரல்கள் ஒலிக்கின்றன. இந்தச் சபைகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் விட ஏனைய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களே அதிகமாக உள்ளனர். வலுக்குறைந்த நிலையிலேயே ஆட்சித்தரப்பினர் உள்ளனர். ஆனாலும் அவர்கள் தமது அரசியல் லாப நோக்கில் தமது விருப்பு வெறுப்புகளுக்கு அமையவே சபையை வழி நடத்துகின்றனர்.  சபையில் எதிர்த்தரப்பினர் முன்மொழிகின்ற வேலைகள், முன்வைக்கின்ற கருத்துகளையே உரிய முறையில் பதிவதில்லை. சபையின் வேலைகள் முழுவதையும் தாமே செய்வதைப்போன்ற ஒரு தோற்றத்தைச் சமூகத்தில் உருவாக்குவதற்காக முயற்சிக்கின்றனர். இதன் மூலம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சரிந்து போயிருக்கும் வாக்கு வங்கியை – அபிவிருத்தி அரசியலை முன்னெடுத்து நிமிர்த்தி விடலாம் என்று நம்புகின்றனர். நாம் வலுவான எதிர்த்தரப்பினர் என்ற அடிப்படையில் மக்களுடைய நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.     (மேலும்) 23. 09.18

._______________________________________________________________________

 சட்ட விரோத மதுபான விற்பனைக்கு எதிராக செயற்பட்ட இளைஞனின்கொலைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்படவேண்டும்

- மனோகணேசன்

இரத்தினபுரி - கொலுவாவில - பாம்காடன் தோட்டத்தில் சட்ட விரோத மதுபான விற்பனைக்கு எதிராக செயற்பட்ட இளைஞனின், கொலைக்கு காரணமான அனைவரும் கைது manoganesan060918செய்யப்படவேண்டும் என அமைச்சர் மனோகணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.   கடந்த 19ஆம் திகதி, 3 முச்சக்கரவண்டிகளில் சென்ற 15 பேர் 36 வயதான குறித்த குடும்பஸ்தரை கடத்திச் சென்று தாக்கி கொலை செய்துள்ளனர்.  கொலை செய்யப்பட்டவர் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு எதிராக செயற்பட்டவர் ஆவார்.   சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபடுபவர்களை கைதுசெய்யுமாறு, காவல்துறையினரை வலியுறுத்தி, இரத்தினபுரி நகரில் உள்ள நீர்த் தாங்கியொன்றின் மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.     (மேலும்) 23. 09.18

._______________________________________________________________________

மூச்சுத் திணறலே  பெண் விரிவுரையாளரின் உயிரிழப்புக்கான காரணம்

திருகோணமலையில் சடலாமக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் நீரில் மூழ்கியமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலே மரணம் சம்பவிப்பதற்கான காரணம் என்பது பிரேத பரிசோதனையின் ஊடாக தெரியவந்துள்ளது.பிரேத பரிசோதனையானது யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. குறித்த பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்பதுடன், குறித்த பெண் இரண்டு அல்லது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த்தாகவும் நீரில் மூழ்கியமையால் இடம்பெற்ற மூச்சுதிணறனாலேயே இம் மரணம் சம்பவித்தமை என்பது தெரியவந்துள்ளது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் நேற்று திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார். வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

._______________________________________________________________________

வாஷிங்டன் அருங்காட்சியகத்தில் சோழப்பேரரசி செம்பியன் மாதேவி சிலை:

40 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டது

நாகப்பட்டினம் அருகே உள்ள கோணேரிராசபுரத்தில் 40 ஆண்டுகளுmadeviக்கு முன் திருடி, கடத்தப்பட்ட சோழர்களின் பேரரசி செம்பியன் மாதேவி சிலை வாஷிங்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கண்டறிந்தனர்.  திருவையாறு அருகே உள்ள செம்பியன்குடி குறுநில மன்னர் மழவராயன் மகள் செம்பியன் மாதேவி. சிவன் மீது பக்தி கொண்ட செம்பியன் மாதேவி அங்குள்ள சிவாலயத்துக்குச் செல்லும்போது, தஞ்சை மன்னர் ஸ்ரீ கந்தராதித்யதேவர் பார்த்து, திருமணம் செய்துள்ளார். செம்பியன் மாதேவிக்கு 13 வயதில் திருமணம் நடைபெற்று, 14 வயதில் மதுராந்தகத்தேவர் என்ற மகன் பிறந்துள்ளான்.  கணவரை இளம்வயதிலேயே இழந்த செம்பியன் மாதேவி, தனது கணவரின் தம்பி அருஞ்சியதேவரை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்துள்ளார். அதன் பின்னர் அவரது மகன் சுந்தர சோழத்தேவரையும், பின்னர் தனது மகன் மதுராந்தகத்தேவர் என்ற உத்தம சோழத்தேவரையும் ஆட்சி செய்ய வைத்துள்ளார். மேலும் தனது பேரன் ஸ்ரீ ராஜராஜதேவர் ஆட்சிக்காலம் வரை உயிருடன் இருந்துள்ளார்.    (மேலும்) 23. 09.18

._______________________________________________________________________

ரூபாவின் மதிப்பிறக்கத்தை கட்டுப்படுத்த  முடியாவிட்டால் அரசாங்கத்தை ஒப்படையுங்கள்

ரூபாவின் மதிப்பிறக்கத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால் அரசாங்கம் உடனடியாக பதவிவிலக வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நாட்டின் தற்பMahinda rajaோதைய பொருளாதார நிலமை தொடர்பில் தௌிவுபடுத்தும் நோக்கில் (22) காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டில் சரியான தலைமைத்துவம் இன்மையே இந்த பொருளாதார சிக்கலுக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.  தான் அரசாங்கத்தை ஒப்படைக்கும் ​போது அமெரிக்க டொலர் ஒன்று 131.40 ரூபாவாக இருந்ததாகவும் தற்போது அது 170 ரூபாவையும் தாண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  ரூபாவின் மதிப்பிறக்கத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால் அரசாங்கத்தை மீண்டும் ஒப்படைக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.  இந்த ஊடக சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநரும் உடனிருந்தனர்.

._______________________________________________________________________

விக்னேஸ்வரன் அரசியலுக்கு பொருத்தமானவரல்ல...

தமிழ்த் தலைவர்களின் பொறுப்பற்ற கருத்துக்களின் காணரமாகவே, சிங்கள மக்கள் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் தீர்வை எதிர்ப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தsangaryலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்தியாவின் கட்டமைப்பின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். இந்த முறைமையிலான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கும் தரப்பினருக்கு தாம் ஆதரவளிப்பதாக ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், விக்னேஸ்வரன் அரசியலுக்கு பொருத்தமானவரல்ல என்று கூறியுள்ளார்.எனவே, அவர் அரசியலிருந்து விடைபெற்று வேறு எதனையாவது செய்ய வேண்டும் என்றும் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

சீனப் பொருள்கள் மீதான கூடுதல் வரியால் அமெரிக்க நிறுவனங்கள் மூடப்படும் நிலை

சீனப் பொருள்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்து வரும் கூடுதல் வரிகளால், அமெரிக்க பாலிசிலிக்கான் துறை நலிவடைந்து, அந்தத் துறை நிறுவனங்களை மsolarூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.    இதுகுறித்து வாஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்த ஐந்து எம்.பி.க்கள் அடங்கிய குழு, அதிபர் டிரம்ப்புக்கு சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீனாவிலிருந்து இறக்குமதியாகும் சூரிய மின்தகடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கும் அதிபரின் முடிவால், இறக்குமதி மின்தகடுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பாலி சிலிக்கான் துறைகள் நலிவடைந்து வருகின்றன.   சீனத் தகடுகளைப் பயன்படுத்தி சூரிய மின் உற்பத்தி சாதனங்களை நிறுவி வரும் நிறுவனங்களும், சாதாரண மாற்று மின்சார சேவை நிறுவனங்களிலிருந்து மிகப் பெரிய சூரிய மின்சக்தி நிறுவனங்கள் வரையிலும் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளன.    இதன் காரணமாக வாஷிங்டன் மாகாணத்திலுள்ள பாலிசிலிக்கான் நிறுவனத்தை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.    (மேலும்) 23. 09.18

._______________________________________________________________________

முன்னால் நீதியரசர்:அடி சறுக்கிய யானை


-          கருணாகரன்

“ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஒரு நாள் ஓdenis-wiknesvaranடத்தில் ஏறும்” என்று சொல்வார்கள். நீதிமன்றங்களில் விசாரணைக்காக எத்தனையோ பேர் எழுந்து நின்றதைப் பார்த்த நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு, தானே நீதிமன்றத்தில் எழுந்து நின்று விசாரணைக்கு முகம் கொடுக்கும் நிலை வந்திருக்கிறது. இதை விக்கினேஸ்வரன் ஒரு போதும் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்.  விக்கினேஸ்வரனுக்கு இந்த நிலை வந்திருப்பது, அவர் எப்போதும் தன்னை ஒரு நீதியரசராகவே கருதிக் கொள்ளும் நீதித்துறையினால் அல்ல. அவர் பின்னாளில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் அரசியலினாலேயே. அதுவும் அவருடைய தரப்பினரால். அதுவும் அவருடைய ஜூனியர்களினால். குறிப்பாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனால். (இன்னொரு ஜூனியரான சுமந்திரன் தொடக்கம் ஆனோல்ட், சயந்தன் வரையில் இன்னொரு வகையில் விக்கினேஸ்வரனைச் சுற்றி முடக்கும் வியூகத்தை அமைத்திருக்கிறார்கள்).      (மேலும்) 22. 09.18

._______________________________________________________________________

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர் வரிசை

உள்மனயாத்திரையில் இலக்கியம் படைக்கும் உமா வரதராஜன்

                                                                                                  முருகபூபதி

பெயர்களுக்கு முதல் எழுத்து அவசியப்படுகிறது.  அவுஸ்திரேலியாவில் எனது மகன், தான் வளர்க்கும் செல்லப்பிராணியான நாய்க்குப்பெயர் வைத்து,  அதன் முதல் பெயராக எனதumavaratharajanு பெயரைச்சூட்டி என்னை பெருமைப்படுத்தியிருக்கிறான்! யாருக்கு கிடைக்கும் இந்தப்பாக்கியம்!  நாய் மனிதர்களை விட நன்றியுள்ளது என்பதனால் எனக்கும் பெருமைதான்!ஆறறிவு படைத்த மனிதர்கள் தந்தையின் பெயரில் வரும்  முதல் எழுத்தையும்  பயன்படுத்துவோம். பெண்கள் திருமணமானதும்  கணவரின் பெயரையும் இணைத்துக்கொள்வார்கள். எங்கள் ஈழத்து இலக்கிய உலகில் ஒருவர் தனது தாத்தாவினதும் தந்தையினதும் முதல் எழுத்துக்களை இணைத்துக்கொண்டு வலம்வருகிறார். முன்பின் தெரியாத வாசகர்கள் அந்தப்பெயருக்குரியவர் பெண் என்றுதான் நினைப்பார்கள். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியையும்  பல வாசகர்கள்  முன்னர் அப்படித்தான் நினைத்தனர்!      (மேலும்) 22. 09.18

._______________________________________________________________________

அமெரிக்கா : ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை!

ரஷியாவிடமிருந்து அதிநவீன போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்china-russiaதுள்ளது. ஏற்கெனவே, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்து வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் ஏற்படும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், அமெரிக்காவின் தற்போதைய அறிவிப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விமானம் தாங்கிக் கப்பல்கள், பீரங்கி வாகனங்கள், புதிய தலைமுறை போர் விமானங்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட அதிநவீன ராணுவ தளவாடங்களின் உற்பத்தியில் சீனா தன்னிறைவு அடைந்து வருகிறது. எனினும், தனது ராணுவ கூட்டாளியான ரஷியாவிடமிருந்து, உயர் தொழில்நுட்பத் தளவாடங்களை கொள்முதல் செய்வதிலும் சீனா ஆர்வம் காட்டி வருகிறது.     (மேலும்) 22. 09.18

._______________________________________________________________________

ராஜிவ் கொலைக் கைதி சாந்தன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம்

 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டshanthanனை அனுபவித்து வரும் சாந்தன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.  சாந்தன் என அழைக்கப்படும் சுசேந்திரராஜா தம்மை விடுவிக்கக் கோரி 4 பக்கங்கள் அடங்கிய கடிதத்தை சட்டத்தரணியூடாக அனுப்பியுள்ளார்.  ராஜிவ் காந்தி கொலை சதித்திட்டத்தோடு இந்தியாவிற்குள் நுழையவில்லை எனவும், அவுஸ்திரேலியாவிற்கு செல்வதே தமது நோக்கமெனவும் அவர் அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.  இலங்கையில் தம்மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை எனவும் சாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.  அத்துடன், சர்வதேச அளவில் பிரபலமான ஒரு தலைவரை கொலை செய்வதற்கு திட்டமிடும் எவரும், தம்மை பற்றிய உண்மையான தகவல்கள் அடங்கிய கடவுச்சீட்டை கொண்டு வருவார்களா எனவும் சாந்தன் தனது கடிதத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.     (மேலும்) 22. 09.18

._______________________________________________________________________

டிசெம்பர் மாதத்தில் சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகள் நடத்துவதற்கு கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளை டிசெம்பர் மாதத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.gceal   இதனால் மாணவர்கள் கால தாமதம் இன்றி உயர்தரக் கல்வியை தொடர முடியும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.  கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பின்னர் உயர் கல்வியை தொடர்வதற்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. உயர் தரப் பரீட்சையின் பின்னர் பல்கலைக்கழத்தில் அனுமதி பெறுவதற்கு அதிக காலம் காத்திருக்க வேண்டியுள்ளது.  இதனால், மாணவர்களின் காலம் வீண் விரயமாவதாக அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் தெரிவித்தார்.   (மேலும்) 22. 09.18

._______________________________________________________________________

tw2018

._______________________________________________________________________

புரிந்துணர்வுஒப்பந்தத்தின் நகல் வடிவம் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் கிழக்குமாகாணசபைத் தேர்தலில் கிழக்குத்தமிழர்கள் சார்பில் அதிஉச்;சபட்ச ஆசனங்களைப்; பெற்றுக் கொள்ளும் வகையில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒருபொதுச்சின்னத்தின் கீழ் போட்டியிடவைக்கும் செயற்பாட்டின் முதற்கட்டமாககிழக்குத்தமிழர் ஒன்றியம் அனைத்துதமிழ் அரசியல் கட்சிகளையும் தனித் தனியேசந்தித்துப் பேசியது. அடுத்தகட்டமாககடந்த 22.08.2018 அன்று அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் ஒரிடத்தில் சந்திக்கச்செய்து கலந்துரையாடினோம். இக்கலந்துரையாடல் சந்திப்பின் தீர்மானத்திற்கமைய கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினால் தயாரிக்கப்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நகல் வடிவம் அனைத்துத்தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் சென்றவாரம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கட்சிகளின் பின்னூட்டல்களையும் இறுதி நிலைப்பாடுகளையும் அறியத்தருமாறு கேட்டிருக்கின்றோம். அவற்றிற்கு அமையபொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணையச் சம்மதிக்கும் கட்சிகளை ஒருஅரசியல் கூட்டுஅமைப்பாக் (யுடடயைnஉந)ஒன்றிணைத்துபஇ; புரிந்துணர்வுஒப்பந்தம் சம்மந்தப்பட்ட கட்சிகளினால் கைசாத்திடப் பெற்றபின்னர்; அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காகத் தேர்தல் ஆணைக்குழுவிடம் செல்லவிருக்கின்றோம். கிழக்குத்தமிழர் ஒன்றியத்தின் தற்போதைய நிலைமை என்னவென்று வினவியபோது கிழக்குத்தமிழர் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்டசெயற்குழுத் தலைவர் பேராசிரியர் மா.செல்வராசா அவர்கள் இவ்வாறுதெரிவித்தார்.

._______________________________________________________________________

லண்டன் பிரஜைகள் எனக்கூறி இலங்கை வந்த தாயும், மகளும்..நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

போலி கடவுச்சீட்டுக்களை சமர்ப்பித்து லண்டன் நோக்கி பயணிப்பதற்கு imiமுயற்சித்த ஈரான் நாட்டை சேர்ந்த தாயும், மகளும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இன்று காலை 4.15 மணியளவில் கல்ப் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர்கள் வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளன்.  அவர்கள் விமான நிலையத்திற்கு வந்துள்ள நிலையில், தாம் பிரித்தானிய பிரஜைகள் என குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.  எனினும் அவர்களது கடவுச்சீட்டுக்களை பரிசோதனை செய்த போது அவை போலியானவை என தெரியவந்துள்ளது.  பின்னர் 65 வயதான தாயிடமும் 37 வயதான மகளிடமும் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் ஈரான் பிரஜைகள் என தெரியவந்துள்ளது.  பின்னர் அவர்களை அபுதாபி நோக்கி நாடு கடத்த குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

._______________________________________________________________________

கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது . நேற்று மதியம் கடமைகளை முடித்து விட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு சென்ற அவர் பிற்பகல் 2.30 மணியளவில் இருந்து காணாமல் போயுள்ளார்.  இந்நிலையில் இன்று காலை அவரது பாதணிகள் திருகோணமலை கடற்கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், இன்று பகல் சடலம் கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  குறித்த பெண் விரிவுரையாளரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எவ்வாறாயினும் நேற்று மதியம் தனது கணவனுக்கு தொலைபேசி மூலம் அழைத்து திருகோணமலைக்கு வருமாறு உயிரிழந்த பெண் கூறியுள்ளதாக கணவன் தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் விவகாரம் - கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரி விளக்கமறியலில்


 கைது செய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு பிரின் அதிகாரி லெப்டினன் கேர்னல் எரந்த பீரிஸ் இந்த மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.  ஊடகவிலாளர் பிரகீத் எக்னெலிகொட 2009 ஆம் ஆண்டு கடத்தப்பட்டமை மற்றும் 2012 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணால் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கடத்தல் விவகாரம் குறித்து நேற்றைய தினம் வாக்குமூலம் பெற்றுகொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

._______________________________________________________________________

silappathikara vila

._______________________________________________________________________

“கிழக்கு தமிழர்களின் இருப்புக்கு ஆபத்து”

கிழக்கு மாகாண தமிழ் மக்களின் இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அரசியல் தீர்வினை மட்டும் முன்னிலைப்படுத்திச் செல்கின்றபோது அத்தீர்வு கிடைக்கின்ற போது அதனை அனுபவிப்பதற்கு பாக்கியமற்ற துரதிர்ஷ்ட நிலைமையே அம்மாகாண தமிழர்களுக்கு இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் வழங்கிய செவ்வியின் போது அதிரடியாக தெரிவித்தார்.     viyalendran  கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கின்ற தமிழ் மக்கள் ஒருகாலத்தில் பெரும்பான்மையாக இருந்தார்கள். ஆனால் திருகோணமலை, மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் நடவடிக்கைகளால் அந்த நிலைமைகள் அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளன என்பதை அனைவரும் அறிவார்கள்.   இவற்றுக்கு அடுத்து நான் பிரதிநிதித்துவப்படுத்தும் 2640 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பினைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. இங்கு தற்போதைய நிலையில் 75 சதவீதமான தமிழ் மக்களும் 24 சதவீதமான சகோதர முஸ்லிம் மக்களும் வாழ்கின்றார்கள்.   2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மட்டு மாவட்டத்தில் தமிழர்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கி அதனையும் கையகப்படுத்துகின்ற செயற்பாடுகள் மிகமிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   (மேலும்) 21. 09.18

._______________________________________________________________________

சமந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன் - ஆனந்தசங்கரி


தமிழத்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா. சம்மந்தன் தனது எதிர்க் கட்சி தலைவர் பதவியை ஒரு நாள்  எனக்கு தந்தால் அதன்  அப்பதவியின் பெறுமதியை உணர்த்துவேasangaryன்.அப்பதவி மூலம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதனை காட்வேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.   இன்று 20-09-2018 கிளிநொச்சியில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்  சம்பந்தன் பதவியை துறந்து ஒருநாள் பதவியை தந்து பார்க்கட்டும் அவரது பதவியிலிருந்து எவ்வாறானவற்றை சாதிக்கலாம் என காட்டுகிறேன்.  அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,  தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் தான் 2004ம் ஆண்டு முதல் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையிலேயே வலியுறுத்தி வந்துகொண்டிருக்கின்றேன். ஆனால் இன்று அரசாங்கத்திற்கு ஆதரவளித்துக்கொண்டுள்ள சம்பந்தன் தலைமையிலானவர்கள் இவர்கள் விடயத்தில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.     (மேலும்) 21. 09.18

._______________________________________________________________________

நானும் எனது கதைகளும்...!

ஆசி கந்தராஜா,

ஆஸ்திரேலிய புலம்பெயர்வுக்குப் பின்னர், கடந்த முப்பது ஆண்டுகளாக, நான் எழுதிய கதைகளில், ‘காலச்சுவடு’தெரிவு செய்தசிறுகதைகள் 'கள்ளக்கணக்கு' சிறுகதைத்தackொகுப்பில் இடம்பெறுகின்றன. பல்கலைக்கழக பணி நிமிர்த்தம், பயணித்த நாடுகளில் நான் கண்ட வாழ்வின் தரிசனங்களே இச்சிறுகதைகள். கதைகளின் கருக்கள் எல்லாமே உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. அதனால்தான் யதார்த்தமெது, கற்பனையெது என்று பிரித்தறிய முடியாத சேர்மானமாக இவை இருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் நான் கல்விகற்ற பதின்பருவ காலத்தில், சில கதைகள் எழுதியுள்ளேன். அவை உள்ளூர்ப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. பின்னர், பல்வேறு நிர்ப்பந்த காரணிகளால் இருபத்தைந்து வருடங்கள் தமிழில் நான் எதுவும் எழுதவில்லை. ஆனால் தமிழ், ஆங்கிலம், ஜேர்மன் என பல மொழிகளில் நிறைய வாசித்தேன். ஜேர்மன் மொழியிலும் ஆங்கிலத்திலும் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினேன். ஜேர்மன் மொழியில் உயர் கல்வி கற்றதால்அந்த மொழி, தமிழ் மொழிபோல என்னுள் வசப்பட்டது. ஒரு விஷயம் எப்படி சொல்லப்பட வேண்டும்,  (மேலும்) 21. 09.18

._______________________________________________________________________

iranfilm23

._______________________________________________________________________

பணியில் ஏற்பட்ட விரக்தி அக்கராய்ன் மருத்துவமனையின் பெண் பணியாளர் தற்கொலை முயற்சி

கிளிநொச்சி அக்காரான் பிரதேச வைத்தியசாலையின் பெண் பணியாளர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டு காப்பாற்ப்பட்டு்ள்ளார்.சம்பவம்  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது  நேsuicide tabletற்றைய தினம்(19-09-2018) வைத்தியசாலையில் கடமை நேரத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன் போது உடனடியாக செயற்பட்ட ஏனைய பணியாளர்கள் அவரை காப்பாற்றி அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி மாட்ட வைத்தியசாலைக்கு  அனுப்பபட்டு சிகிசை பெற்று வருகின்றார்.பணியின் நிமிர்த்தம்  ஏற்பட்ட விரக்தியின் காரணமாக கடந்த சில நாட்களாக மனச் சோரவுக்குட்பட்டிருந்த நிலையில்  தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக சக பணியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறே ஒரு மாத்திற்கு முன்னர் கிளிநொச்சி  மாவட்ட வைத்தியசாலையிலும் ஒரு பணியாளர் தற்கொலைக்கு  முயற்சி செய்து காப்பாற்றப்பட்டுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

ஆரையம்பதியில் ஆலய விக்கிரகங்கள் உடைத்து சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் விக்கிரகங்கள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுaraiyampathyள்ளது.   ஆரையம்பதி இரண்டாம் வட்டாரத்தின் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள நரசிங்கர் ஆலயத்தில் உள்ள விக்கிரகங்களே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன.  நேற்று நள்ளிரவு இந்த விக்கிரகங்கள் உடைக்கப்பட்டிருக்கலாம் எனவும் இன்று அதிகாலை ஆலயத்திற்கு வழிபாடுகளுக்கு சென்றவர்களே இதனைக்கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.  இதன்போது ஆலயத்திற்கு முன்பாகவிருந்த விக்கிரகங்கள், திரௌபதையம்மன், ஆஞ்சநேயர் ஆலய விக்கிரகங்களும் பரிபாலன தெய்வ சூழங்களும் உடைக்கப்பட்டுள்ளதுடன் மட அறையும் உடைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலய மூலஸ்தான கதவுகளும் உடைக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.   (மேலும்) 21. 09.18

._______________________________________________________________________

கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் நாளைய(21-09-2018) விசேட அமர்வுக்கு  ஊடகவியலாளர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.   நாளை 21-09-2018  அன்று பிற்பகல் இரண்டு மணி முதல்  ஜந்து மணி வரை  கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வு இடம்பெறவுள்ளது.   கிளிநொச்சி சேவைச் சந்தையின் புதிய கட்டடம் தொடர்பாகவும், கரைச்சி பிரதேச சபையின்  2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில்  உறுப்பினர்களுக்கான ஓதுக்கீடு பற்றியும் அராய்வதற்காக கரைச்சி பிரதேச சபையின் 13 உறுப்பினர்களின் ஒப்பம் இட்டு விசேட அமர்வை கூட்டுமாறு கோரியிருந்தமைக்கு அமைவாக நாளைய விசேட அமர்வு இடம்பெறுகிறது.  இந்த விசேட அமர்வில் கலந்துகொள்வதற்கே ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனத்தவிசாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இனி வரும் காலங்களில் சபையின் மாதாந்த கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ள ஊடகவியலாளர்கள் தங்களது ஊடக அடையாள அட்டையின் நிழல் பிரதியொன்றை  முன் கூட்டியே வழங்கி அனுமதிபெறப்பட வேண்டும் என்றும்  தவிசாளர் அ.வேழமாலிகிதனால்  அறிவிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

சர்வதேச பிரசித்தி வாய்ந்த பாலித்தீவுக்கு விசேட விமான  சேவை தொடங்க தமிழ் தொழிலதிபர் பூர்வாங்க நடவடிக்கை


உலக பிரசித்தி வாய்ந்த சுற்றுலா தலமான பாலித்தீவுக்கும் இலங்கைக்கும் இடையில் கோடீஸ்வர தொழிலதிபரான தமிழர் ஒருவர் விசேட விமான சேவை ஒன்றை ஆரம்பpaliிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.  இதனோடு சேர்ந்ததாக தேசிய நல்லிணக்கத்துக்கான ஊடக மையத்தின் ஏற்பாட்டில் ஈழ தமிழர்களும், துறை சார்ந்த விசேட நிபுணர்களுமான கொழும்பு ரோயல் கல்லூரியின் புகழ் பூத்த பழைய மாணவர்கள் 20 பேரை கடந்த வாரம் பாலித்தீவுக்கு அழைத்து சென்றார். இவ்விதம் அழைத்து செல்லப்பட்ட பேராளர்களில் நாசா விஞ்ஞானிகள், வைத்திய கலாநிதிகள், பொறியியலாளர்கள், அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள் ஆகியோரும் அடங்குகின்றனர். இவர்கள் ஒரு வார காலம் தங்கி இருந்து பாலித்தீவை சுற்றி பார்த்தார்கள். இவர்கள் பஸாக்கி கோவில், உளுவாது கோவில், கோ கஜா என்று சொல்லப்படுகின்ற யானை குகை, தனா லொட் கோவில், தாமன் அயூன், குணங்காவி கோவில்,உலுன் தனு பிரதான் கோவில், லுஹார் லெம்புயங் கோவில், திர்தா எம்புல் கோவில், சரஸ்வதி கோவில் ஆகியவற்றை பார்வையிட்டு தரிசனம் மேற்கொண்டனர்.  (மேலும்) 21. 09.18

._______________________________________________________________________

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் தாக்கப்பட்டமை வன்மையாக கண்டிக்கிறேன்-அமைச்சர் க.சிவநேசன்-

sivanesan
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் தாக்கப்பட்டமைக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  கருத்துக்களை கருத்துக்களால் மோதவேண்டுமே தவிர தாக்குதல் நடத்தியமை மிகவும் தவறானதாகும். தங்கள் கருத்துக்களையும், கட்சிரீதியான செயற்பாட்டுகளையும் முன்னெடுக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும், தமிழ் மகனுக்கும் உண்டு.  கருத்துக்களை கருத்துக்களால்தான்  எதிர்கொள்ள வேண்டும். அதனை விடுத்து கட்சி அலுவலகங்கள் மீதும் ஆதரவாளர்கள் மீதும் வன்முறையினை பிரயோகிப்பது கட்சிகளிடையே தேவையற்ற பகைமை முரண்பாட்டை உருவாக்கும்.  இத்தகைய செயல்கள் அநாகரிகமானதும் மிகவும் கண்டிக்கத்தக்கதுமாகும்.

க.சிவநேசன்,
அமைச்சர் - வட மாகாணசபை,
பொருளாளர் - ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)
20.09.2018.

._______________________________________________________________________

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு இருப்பின் விசாரிக்க வேண்டும்

பொலிஸ் மா அதிபரை அந்தப் பதவியில் இருந்து விலக்க வேண்டுமாயின் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வேண்டும் என்று பிரதேச அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.  கிரிபத்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.  பொலிஸ் மா அதிபர் விஷேடமான நபர் என்றும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு இருப்பின் அது தொடர்பில் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.  ஒருபோதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவுடன் ஒருவரை பதவியில் இருந்து நீக்க முடியாது என்றும் அவர் கூறினார்.  சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு மாத்திரம் போதுமானதல்ல என்றும் அது நிரூபிக்கப்பட​ வேண்டும் என்றும் அமைச்சர் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.

._______________________________________________________________________

பரீட்சையில் அதிகளவான தமிழர்கள் சித்தியடைந்தமையால் பரீட்சை” இரத்து

அரச நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்திபெற்றவர்களில் அதிகளவானவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தினால் குறித்த பரீட்சையை இரத்துச் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பிமல் ரத்நாயக்க எம்.பியும்  சுமந்திரன் எம்.பியும்  பாரளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு ஒரு வருடங்களின் பின்னர் பரீட்சை  மோசடி நடைபெற்றதாகக் கூறி பரீட்சையை இரத்துச் செய்வது நியாயமற்றது என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல ஏற்றுக்கொண்டதுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  பாராளுமன்றத்தில் இன்று  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில்  ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க  இந்த விடயத்தை சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். 

._______________________________________________________________________

இலங்கைக்குள் இந்துத்துவா இறக்குமதி செய்யப்படுகிறது

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந்தியாவில் வெளிவரும் ‘தி ஹிந்து’ குழுமத்தின் ’காமதேrauff interviwனு’ வார இதழுக்கு வழங்கிய நேர்காணல்

இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதற்கு இலங்கையுடனான உறவு, பெரிய மாற்றங்களுக்கு உள்ளாவதில்லை. இலங்கையுடனான உறவை நல்ல முறையில் பேண வேண்டும் என்ற ஆர்வம் தொடர்கிறது. குறிப்பாக, இனப் பிரச்சினையில் சகல சமூகங்களையும் திருப்திபடுத்துவதற்கு இந்திய அரசு நாட்டம் கொண்டிருக்கிறது. வட, கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் சுமுகமாக தீர்க்கப்பட வேண்டும் என தமிழ்நாட்டுக்கும் ஆர்வம் இருக்கிறது. இந்த விடயங்களில், இலங்கையில் ஆட்சிக்கு வரும் கட்சிகளுக்கு ஏற்றவாறு செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுகிறது. இந்தியாவுடன் 1987இல் இடப்பட்ட ஒப்பந்தத்தை மீற மடியாத சூழல் இலங்கை அரசுக்கு இருந்துவருகிறது. இந்த ஒப்பந்தத்தில் வட, கிழக்கு பகுதியில் வாழும் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டும் என்பதும் ஒன்று. இதை இலங்கையில் ஆட்சிக்கு வந்த சில கட்சிகள் போதுமான அளவுக்கு செய்யாதபோதெல்லாம், இந்திய அரசு இராஜதந்திர ரீதியில் ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச சபைகளில் வலியுறுத்தி வருகிறது.    (மேலும்) 19. 09.18

._______________________________________________________________________

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கவும்’

பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க 5 யோசனைகளை முன்வைத்தார் சம்பிக்க

தமிழ் அரசியல் கைதிகள், பாதுகாப்புப் படையினருக்கு பொது மன்னsambikaிப்பளித்து, இந்த நாடு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைத்து, எதிர்காலத்தைச் சுபீட்சமாக்குவதற்கான ஐந்து யோசனைகளை, ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் மாநக​ர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க முன்வைத்துள்ளார்.   ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் அலுவலகத்தில், நேற்று (17) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, ஐந்து யோசனைகளையும் முன்வைத்து உரையாற்றிய அமைச்சர், யுத்தத்துக்குள் மறைந்துகொண்டு, தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காகப் பல்வேறு குற்றங்களை இழைத்தவர்களுக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் சமாதானத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்கான ஒரே வழி, மன்னிப்பளிப்பதாகும் என்று கூறினார்.   (மேலும்) 19. 09.18

._______________________________________________________________________

கிளிநொச்சியில் உடைக்கப்பட்ட செங்கல் சுவர்களை ஆய்வு செய்தது தொல்லியல் குழு 

கிளிநொச்சி டிப்போச் சந்தியில்  2009 க்கு பின்னர் அமைக்கப்பட்ட புதிய செchengalங்கல் சுவர்கள் கடந்த 16 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்னிலையில் கரைச்சி பிரதேச சபையினரால் அகற்றப்பட்டது.  குறித்த சம்பவம்   தென்னிலங்கையில்  தொல்லியல் சின்னங்கள் உடைக்கப்பட்டதாக  செய்திகள் பரவியதனை  தொடர்ந்து நேற்று(18-09-2018) வவுனியாவிலிருந்து வருகை தந்த விசேட தொல்லியல் குழு ஒன்று ஆய்வில் ஈடுப்பட்டது. வவுனியா தொல்பியல் திணைக்கள உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குறிதத் பகுதியில் ஆய்வு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்  ஏற்கனவே  நகர திட்டமிடல் அதிகார சபையினால் பசுமை  பூங்கா அமைப்பதற்காக அந்தப் பகுதியில் காணப்பட்ட செங்கல் சுவரும், மற்றய பகுதியில் கிளிநாச்சி பொது சந்தை அமைக்கும் போது அங்கிருந்த செங்கல் சுவரும் சில வருடங்களுக்கு முன் அகற்றபபட்டிருந்த நிலையில், கடந்த 16ம் திகதி மற்றய பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுவந்த பிரதேசத்தில்  வடிகால் ஒன்றை அமைப்பதற்காக அகற்றப்பட்டது.   (மேலும்) 19. 09.18

._______________________________________________________________________

பஸ் கட்டணம் நான்கு வீதத்தால் அதிகரிப்பு

பஸ் கட்டணத்தை நூற்றுக்கு நான்கு வீதத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.  எனினும் ஆரம்ப கட்டணத்தில் மாற்றம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.  நாளை நள்ளிரவு 12.00 மணி முதல் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளது.  அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு பஸ் சங்கங்கள் கோரிக்கை முன்வைத்திருந்தன.  அதன்படி இன்று காலை போக்குவரத்து அமைச்சில் பஸ் சங்கங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.  எவ்வாறாயினும் பஸ் கட்டண அதிகரிப்பானது சொகுசு பஸ் சேவை மற்றும் அதிவேக வீதி பஸ் சேவைகளுக்கு செல்லுபடியாகாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூறியுள்ளது.

._______________________________________________________________________

பூநகரி பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


ஜனநாயக மரபை மீறி, மக்கள் பிரதிநிதியை சபையில் அவமதித்து மக்களுக்கு எதிராகச் செயற்பட்டிருக்கிறார் பூநகரிப் பிரதேச சபையின் தவிசாளர்  அருணpoonagary demoாசலம் ஐயம்பிள்ளை  எனத்  தெரிவித்து இன்று 19-09-2018 பூநகரியில்  ஆர்ப்பாட்டம்  ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 14-09-2018 ஆம் திகதி பூநகரி பிரதேச சபையில் இடம்பெற்ற மாதாந்தக் கூட்டத்தின் போது கௌரவ உறுப்பினர்  யோன்பின்ரன் மேரிடென்சியா நிதிக்குழு அறிக்கை மீது கருத்து கூறும் போது சபையில் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் கடும் இடையூறு  செய்தனர். இதனால்  யோன்பின்ரன் மேரிடென்சியா தொடர்ந்து கருத்துக் கூற முடியாத நிலை ஏற்பட்டது.  இந்த நிலையில்  சபைக்குத் தலைமை தாங்கிய தவிசாளர்  ஐயம்பிள்ளை நேரகாலம் குறிப்பிடாமல் சபையினை ஒத்திவைப்பதாக அறிவித்து சபையிலிருந்து வெளியேறிச் சென்றார்   (மேலும்) 19. 09.18

._______________________________________________________________________

அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப் போர்

அமெரிக்கா மற்றும் சீனா இடையே 20 வருடங்களுக்கு வர்த்தகப் போர் தொடரும் என இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனர் ஜேக் மா தெரிவித்தார்.alibaba   பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் முதலீட்டாளர்கள் தின கருத்தரங்கம் சீனாவின் ஹாங்சௌ நகரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அலிபாபா நிறுவனர் ஜேக் மா (54) பேசுகையில்,  இன்னும் சில காலத்தில் சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகம் முற்றிலும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படவுள்ளது. இந்த பாதிப்பு வெகு காலத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். இது ஒரு மிகப்பெரிய வர்த்தக குழப்பமாகும்.   இந்த வர்த்தகப் போரானாது 20 நாட்களிலோ, 20 மாதங்களிலோ முடிந்துவிடாது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு கூட தொடர வாய்ப்புள்ளது. சீனாவின் பொருளாதாரக் கொள்கைகளை அச்சுறுத்தும் விதமாக இந்த வர்த்தகப் போர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சீனா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு முறைகள் காரணமாக அதிபர் டிரம்பால் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் குறித்தும் சீனத் தலைவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்.     (மேலும்) 19. 09.18

._______________________________________________________________________

பூநகரி பிரதேச  செயலகத்தில் வறட்சி தகவல்களை பெற முடியவில்லை

தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவdryzoneட்டத்தில் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள பிரதேசமாக பூநகரி காணப்படுகிறது. எனவே இது தொடர்பான  புள்ளிவிபரத்  தகவல்களை பெறுவதற்காக  பூநகரி பிரதேச செயலகத்திற்குச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு இன்று(19-08-2018) தகவல்களை வழங்க முடியாது என பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார் 
சம்பவம்  தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுபூநகரி பிரதேச செயலக பிரிவில் எத்தனை கிராமங்களில் எவ்வளவு மக்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் மாத்திரமே கோருவதற்கு  சென்ற ஊடகவியலாளர்களுக்கு இன்று பொது மக்கள் தினம் என்பதனால் தகவல்கள் வழங்க முடியாது என்று தனது அலுவலக உதவியலாளர் மூலம் தெரிவித்துள்ளார் பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரன்.    (மேலும்) 19. 09.18

._______________________________________________________________________

சுகயீனத்துக்கு சிகிச்சை செய்ய சென்ற சிறுமி தாயானார்

சுகயீனம் காரணமாக சிகிச்சை பெறுவதற்கு பதுளை வைத்திசாலைக்கு சென்ற 15 வயதுடைய சிறுமி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  பதுளை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவியே சுகயீனம் காரணமாக தனது தாயுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ள பதுளை பொது வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.  இதன் போது குறித்த மாணவி பரிசோதனை செய்த வைத்தியர்கள் சிறுமி கர்ப்பமுற்றுள்ளார் என்று கூறி மாணவியை மகப்பேற்று பிரிவில் அனுமதித்துள்ளனர்.  மகப்பேற்று பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவி குழந்தையை பிரசவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான 21 வயது திருமணமான இளைஞரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

._______________________________________________________________________

அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.  அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 167.41 ரூபாவாக பதிவாகியுள்ளது.  அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய நாட்களில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.   எவ்வாறாயினும் இந்த இது இலங்கை ரூபாவின் வீழ்ச்சியல்ல என்றும், சர்வதேச அளவில் அமெரிக்க டொலரின் பெறுமதி ஏற்றமே என்றும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன கூறினார்.

._______________________________________________________________________

ஆயிரம் நினைவுகள் உள்ள வீடு என்னோடு பேசுகிறது,…… எப்போதோ கடந்துவிட்ட தொடர்பில்லாத  எனது பால்ய நினைவுகளைப் பற்றி

                                        சுனில் தந்திரிகே

ஸ்ரீலங்காவுக்கான எனது குறுகிய பயணத்தை முடித்துக்கொண்டு நான் மீண்டும் ரொரான்ரோவுக்குத் திரும்பிவிட்டேன், ஒவ்வொரு வருடமும் நான் எனது பழைveeduய நாட்டுக்கு விஜயம் செய்வது  நோய்வாய்ப்பட்டுள்ள எனது தயாரைச் சந்திக்கவே, ஆனால் இந்த முறை எனது பயணம் வித்தியாசமானது. அதைப்பற்றி விபரிக்கிறேன்.   நான் வளர்ந்தது கல்கிஸ்ஸையில் உள்ள ஓரளவு சாதாரண நடுத்தர வர்க்கச் சூழலில். அங்கு வாழ்ந்த மக்களில் பெரும்பாலானவர்கள் 1960 மற்றும் 70களில் அரசாங்கத்தில் பணியாற்றும் தொழில் நிபுணர்களாக இருந்தார்கள். அவர்கள் சிவில் சேவை அதிகாரிகள், கல்வியாளர்கள், தபாற் சேவை அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் போன்ற பல தரப்பினர்களாக இருந்தார்கள். அது ஒரு பல மத, பல இன அயலவர்களைக் கொண்ட சுற்றுப்புறமாக இருந்தது, சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர்களின் அடுத்தடுத்த வீடுகளில் வசித்தார்கள். பௌத்தர்கள் அந்தப் பிரதேசத்தை கிறீஸ்தவர்கள், இந்துக்கள், மற்றும் இஸ்லாமிய மத நம்பிக்கை கொண்டவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.  (மேலும்) 18. 09.18

._______________________________________________________________________

மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கு பொருத்தமான வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமானது.

- வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே

வட மாகாண ஆளுநர் றெஜினோல் குரே. யாழ் நூலக கேட்போர் கூடத்தில்  (17) நடைபெற்ற நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் தெரிவித்துள்ளார்.அரசாங்க சேவையில் இணைந்து கொள்ளும் அனைவரும் நாட்டின் அபிவிருத்திக்காக மக்களின் அபிவிருத்திக்காக நேர்மையான உண்மையான சேவையினை பாகுபாடு இன்றி செய்ய வேண்டும் என நான் உங்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் வடமnorth G meetingாகாண இளைஞர் யுவதிகளுக்கு பொருத்தமான வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமானது. வடமாகாணத்தில் அரசாங்க வேலைகளில் அமர்த்துவதற்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்வது மிகவும் கடினமானது. அதற்கு காரணம் யுத்தம் நடைபெற்ற காலத்தில் படித்த பல இளைஞர் யுவதிகள் அரசாங்க வேலைகளில் உள்வாங்கப்படும்போது தமது சான்றிதமிழ்களை தகுதிகளை உறுதிப்படுத்துவதில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். யுத்தம் காரணமாக அவர்களின் கல்வி நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.யுத்த காலத்திலே பாடசாலைகளிலும் வைத்தியசாலைகளிலும் பலர் ஊதியம் இல்லாது தொண்டர்களாக கடமை செய்திருக்கின்றார்கள். அவர்களுக்கு கட்டாயம் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு சேவை செய்தவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்து இரண்டு முறை நியமனங்களை வழங்கியது.    (மேலும்) 18. 09.18

._______________________________________________________________________

கிளிநொச்சியின் புதிய சந்தைக் கட்டடத்திற்கு எந்த இடத்திலும் நாம் தடையாக இருக்கவில்லை  - சந்திரகுமார்

கிளிநொச்சியில் அமையுவுள்ள புதிய சந்தைக் கட்டடத் தொகுதி தொடர்chandrakumar0518பில் நானோ எனது அமைப்பான சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்போ எந்த இடத்திலும் தலையீடுகளை மேற்கொள்ளவோ, எதிர்க்கவோ இல்லை. என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். புதிய சந்தை கட்டடம் அமைப்பதற்கு தாங்கள் தடையாக இருப்பதாக  வெளிவந்துள்ள  செய்திகள்   பற்றி அவரை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடலுக்கு அமைவாக 767 மில்லின் மதிப்பீடு்டில் மூன்று மாடிக்களை கொண்ட  கிளிநொச்சிக்கான புதிய சந்தைக் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்டச் செயலகமும், நகர அபிவிருத்தி அதிகார சபையினரும் எனக்கும் தெரியப்படுத்தியிருந்தனர்.   (மேலும்) 18. 09.18

._______________________________________________________________________

பெண் ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தலுக்கு யாழ். ஊடக அமையம் கண்டனம்

வலம்புரி நாளிதழின் செய்தியாளரிற்கு வடமாகாணசபை உறுப்பினர் ஒருவரது உதவியாளரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் யாழ்.ஊடக அமையம் தனது வன்மையான JPCகண்டனத்தை தெரிவித்துள்ளது.   யாழ்.ஊடக அமையம் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகங்களுக்கு  அனுப்பி வைத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  அதிலும் குறிப்பாக பெண்கள் தமிழ் ஊடகத்துறையில் காலடியெடுத்து வைக்க அச்சப்பட்டு பின்னடிக்கின்ற சூழலில் இத்தகைய போக்கு ஆரோக்கியமானதாக அமையப்போவதில்லையென்பதையும் சுட்டிக்காட்ட ஊடக அமையம் விரும்புகின்றது. ஏற்கனவே சிறுகும்பல் ஒன்றினால் அண்மையில் வலம்புரி நாளிதழின் பிரதி எரிக்கப்பட்டமை தொடர்பில் இனங்களிடையே தேவையற்ற மோதல்களை ஏற்படுத்தும் சூழல் பற்றி யாழ்.ஊடக அமையம் எச்சரிந்திருந்ததை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.     (மேலும்) 18. 09.18

._______________________________________________________________________

ரூ.1375 கோடிக்கு கைமாறிய பிரபல அமெரிக்க 'டைம்' வார இதழ்

நியூயார்க்: உலகப் பிரசித்தி பெற்ற அமெரிக்காவின் 'டைம்' வார இதழ் ரூ.137timeq5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.   அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்துவெளியாகும் 'டைம்' உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற வார இதழாகும். மெர்டித் கார்ப்பரேசன் நிறுவனத்தால் இந்த இதழ் தொடங்கப்பட்டு 95 ஆண்டுகளை எட்டியுள்ளது. இந்நிலையில் டைம் வார இதழை பிரபல 'சேல்ஸ் போர்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மார்க் பேனியாபும் அவரது மனைவியும் இணைந்து190 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ.1375 கோடி) மெர்டித் கார்ப்பரேசன் நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளனர்.ஆனால் இது சேல்ஸ்போர் நிறுவனத்தின் நேரசடியாக பரிவர்தனையல்ல என்றும் பேனியாபும் அவரது மனைவியும் தனிநபர்கள் என்ற முறையிலேயே டைம் இதழை வாங்கியுள்ளனர் என்றும் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.டைம் பத்திரிகையை வாங்கினாலும், அதன்  அன்றாட நடவடிக்கைகளிலோ இதழியல் சார்ந்த முடிவுகளிலோ பேனியாப் தலையிட மாட்டார் என்றும், அதை தற்போதுள்ள நிர்வாகத் தலைமைக் குழுவே தொடர்ந்து கவனித்துக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

 ஶ்ரீலங்கனின் நட்டத்தினால் புதிய முதலீட்டாளர்கள் தொடர்பில் அரசு கவனம்

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் மீள்சுழற்சி வேலைத்திட்டத்தின் கீழ் விமான நிறுவனத்தின் சகல கடன்களையும் திறைசேரி மயப்படுத்தி புதிய முதலீட்டாளருடன்slairlines loss செயற்பட அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் மீள்சுழற்சி வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த சில வருடங்களாகவே புதிய முதலீட்டாளரை கண்டுபிடிக்க அரசாங்கம் முயற்சித்தாலும் அந்த சகல சந்தர்ப்பங்களிலும் நிறுவனத்துக்கு இருந்த கடன் காரணமாக அது தோல்வியில் முடிந்தது.ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் 732 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்பட்டுள்ளது.அதில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பெறப்பட்டுள்ளதோடு பெரும் தொகை கடன் இந்த நாட்டு அரச வங்கியிலுள்ளது. நிறுவனத்தின் நட்டம் 180 பில்லியன்களாக உள்ளது.இந்நிலையில்,ஸ்ரீலங்கன் விமானசேவை மக்கள் வங்கியூடாக மேற்கொண்ட முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீலங்கன் நிறுவனங்களின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்துள்ளது.

._______________________________________________________________________

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் விசேட மகப்பேற்றியல் நிபுணர் வைத்தியர்    கடமைகளை பொறுப்பேற்றார்

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் விசேட மகப்பேற்றியல் நிபுணர் வைத்தியர் டி.எல்.டபிள்யூ குணவர்த்தன தமது கடமைகளை இன்று (17.09.2018) உத்தியோகபூர்வkilinch hpமாகப் பொறுப்பேற்றுள்ளார்.  கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவல்களின் பிரகாரம் கடந்த மாதம் 30.08.2018 அன்று மத்திய சுகாதார அமைச்சில் அறிக்கையிட்ட மகப்பேற்று வைத்தியநிபுணர் உடன் அமுலுக்கு வரும்வகையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ விடுமுறையான (settlement leave) 14 கடமை நாட்கள் விடுமுறையின் பின்னர் அவர் இன்று தமது கடமைகளை கிளிநொச்சி  வைத்தியசாலையில்  பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் எனத் தெரியவருகிறது.     (மேலும்) 18. 09.18

._______________________________________________________________________


மோசமான நிலையில் பொருளாதாரம்: தென் கொரிய அதிபர் மீது பொதுமக்கள் அதிருப்தி

தென் கொரியாவின் பொருளாதாரம் மோசமாக உள்ள சூழலில் அந்நாட்டின் அதிபர் மூன் ஜே-இன் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.இதுகுறித்து அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தென் கொரிய மக்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பாதிக்கும் மேற்பட்டோர் வட கொரியாவுடன் அடுத்த வாரம் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பிராந்திய அணு ஆயுத விவகாரத்தில் எந்த திருப்புமுனையும் ஏற்படப் போவதில்லை என்றே தெரிவித்துள்ளனர்.   மேலும், தென் கொரியாவின் உள்நாட்டு பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளதை சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் மட்டும் பொதுமக்களின் ஆதரவை அதிபர் தக்க வைத்துக் கொள்ள முடியாது. எனவே அந்த விவகாரத்தை விட்டுவிட்டு சொந்த நாட்டு பிரச்னைகளில் மூன்-ஜே-இன் கவனத்தை திருப்ப வேண்டும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

தம்புள்ளையில் இந்திய நிதியுதவியின் கீழ் பாரிய களஞ்சியசாலை

தம்புள்ளையில் 5 ஆயிரம் மெற்றிக்தொன் கொள்ளளவு கொண்ட பாரிய களஞ்சியசாலை ஒன்றை நிர்மாணிக்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. குறித்த பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசாங்கம், இந்தத் திட்டத்தை முன்னெடுக்கின்றதாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் களஞ்சியசாலையில் வெப்ப ஏற்ற இறக்கத்தை சமநிலையில் வைப்பதற்கான வசதிவாய்ப்புக்கள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக இந்தியா, 30 கோடி ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த நிதி உதவி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்துவுக்கும், தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கும் இடையில் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது இலங்கை மற்றும் இந்திய சிரேஷ்ட அதிகாரிகளும் பிரசன்னமாகி இருந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படாது – தெரேசா மே

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்ஸிட் (Brexit) ஒப்பந்தத்தில் எவ்விதமான திருத்தங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என பிரித்தானிய பிரதமர் தெரெசா brexit-euமே தெரிவித்துள்ளார்.அத்துடன், தமது கட்சியிலுள்ள எதிர்ப்பாளர்களையும் அவர் சாடியுள்ளார்.அடுத்த ஆண்டு மாரச் மாதம் 29 ஆம் திகதியுடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகவுள்ளது.இருப்பினும், அது முழுமையான விலகலாக இருக்காது எனவும் சில விடயங்களில் தொடர்ந்தும், அவ்வமைப்புடன் இணைந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, பிரதமரின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த சிலர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகக்கூடாது எனவும் பிரெக்ஸிட் திட்டம் தொடர்பில் மீண்டும் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.இந்த நிலையிலேயே தெரேசா மேயினால் குறித்த இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வௌியேறினாலும், வடக்கு அயர்லாந்து மற்றும் ஐரிஷ் குடியரசு ஆகியன தொடர்ந்தும் அதில் அங்கம் வகிப்பதற்கு எவ்வித எல்லைகளும் நிர்ணயிக்கப்படமாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழர்களின் கோரிக்கைளை வலியுறுத்தி நினைவு தூபி திறப்பு

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் எனப் பிரகடனப்படுத்தி நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டthoobiுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட பொங்கு தமிழ் பிரகடனத் தூபியைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் இன்று திங்கள் கிழமை திரைநீக்கம் செய்து வைத்தார்.  கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் எனப் பிரகடனப்படுத்தி சர்வதேச சமூகத்தின் கவனத்தை தமிழர் தேசத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வின் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை அமைக்கப்பட்டிருந்தது. அந்த பிரகடனத்தை தூபியாகப் புனரமைக்கும் பணியை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டிருந்தது.அவ்வாறு மாணவர் ஒன்றியத்தினால் புனரமைக்கப்பட்ட தூபியே இன்று திங்கட்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மங்கள விளக்கேற்றி தூபியைத் திறந்து வைத்தார். நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் எழுச்சி பாடல்களான ''நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா '' மற்றும் ''ஒருதலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் எங்கள் தலைவன் பிறந்தான்'' பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டிருந்தன

._______________________________________________________________________

3 ஆண்டுகளாக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை ..

- மஹிந்த ராஜபக்ஷ

தற்போதைய அரசாங்கம் கடந்த 3 ஆண்டுகளாக வடக்கில் எவ்வித அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கூMahinda Rறியுள்ளார்.  அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், புதுடில்லியில் வைத்து தமிழக தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் இலங்கைத் தமிழர் விடயத்தில் உங்கள் நடவடிக்கை எவ்வாறானதாக இருக்கும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், யுத்தத்தின் பின்னர், வடக்கும், கிழக்கும் அபிவிருத்தி செய்யப்பட்டது.  குறிப்பாக வடக்கிற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டு, வீடமைப்பு, மின்சாரம், வீதி, மருத்துவமனைகள், பாடசாலைகள் என அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், தற்போதைய அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை. அதனை மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள் என மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.   (மேலும்) 17. 09.18

._______________________________________________________________________

வாழ்வை எழுதுதல் - அங்கம் 03

மருந்துள்ள வாழ்வே குறைவற்ற செல்வம்!
ஊடகங்கள் உருவாக்கும்  மருத்துவ நிபுணர்கள் !!

                                                                        முருகபூபதி

எனது முதல் சிறுகதை கனவுகள் ஆயிரம் (1972 ஜூலை)  மல்லிகையில் வெளியானதும்  அதனைப்படித்த சுலோ அய்யர் என்பவர், எனது பிரதேச மொழிவழக்கினையும் கதையிratnasabapathyன் போக்கினையும் பற்றி  தனது நயப்புரையை அடுத்த மாதம் மல்லிகை ஆண்டுமலரில் எழுதியிருந்தார்.  அவர் யார்? என்பதை பின்னர்தான் அறியமுடிந்தது. அவர் தபால் திணைக்களத்தில் பணியாற்றிய ரத்னசபாபதி அய்யர் எனவும் மல்லிகை ஜீவாவின் நண்பர் எனவும் அவரது மனைவி சுலோசனா என்றும் அறிந்துகொண்டேன். அதன்பிறகு அவரும் எனது இலக்கிய நண்பர்கள் வட்டத்தில் இணைந்துவிட்டார். அந்த 1972 ஆம் ஆண்டு சிலமாதங்களேயான குழந்தையாக இருந்த அவரது மகள் பானுவுக்கும் மணமாகி அவரும் தற்பொழுது இரண்டு பெரிய ஆண்மகன்களுக்கு தாயாகிவிட்டார். எனக்கு பானுவும் (இன்றும்) ஒரு குழந்தைதான். மெல்பனில் பானுவின் கணவர் கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர் டீக்கின் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர். மெல்பனில் எனது இலக்கிய நண்பர்கள் வட்டத்தில் அவரும்  இணைந்துவிட்டார்.    (மேலும்) 17. 09.18

._______________________________________________________________________

மன்னார் மனித புதைக்குழி தடயப்பொருட்களை உடனடியாக நீதிமன்றில்  சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள்


மன்னார் மனித புதைக்குழியில் இருந்து பெறப்படும் தடயப்பொருட்களை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.maana2   மன்னார் மனித புதைக்குழி தோண்டுதல் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அந்த தோண்டுதல் பணிகளை மன்னார் நீதவான் நீதிமன்றம் மேற்பார்வை செய்து வருகின்றது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் புதிய நீதவானாக டி.சரவணராஜா பொறுப்பேற்றுள்ளார்.இந்தநிலையில், நீதவானுக்கும், களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் சோமதேவ, சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ, காணாமல் போனார் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டதரணி சாலிய பீரிஸ் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களுக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.   (மேலும்) 17. 09.18

._______________________________________________________________________

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் முரண்பாடு

தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தினthileepan் முதல் நாள் நிகழ்வு, இன்று (15) ஆம்பிக்கப்பட்ட நிலையில் நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. பருத்தித்துறை வீதி - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபன் நினைவுத் தூபியில், மேற்படி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதில், யாழ். மாநகர சபை பிரதி மேஜர் ஈசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் எஸ். கஜேந்திரன், ஜனநாயகப் போரளிகள் கட்சிப் பிரதிநிதிகள், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.  இதன்போது, திலீபனின் உருவப்படத்துக்கு மலர்மலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க முற்பட்டவேளையில், நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல் ஒலிக்கவிடப்பட்டது.   (மேலும்) 17. 09.18

._______________________________________________________________________

ஊடகச் செய்தியினால் பெரிய குளம் சிறிய குளம் ஆகியவற்றை துப்பரவு செய்வதற்கான நடவடிக்கை துரிதம்

பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணம் மாநகர சபை பிரிவிற்குட்பட்ட குளத்தடி பள்ளிவாசல் அருகே காணப்படும் பெரிய குளம் சிறிய குளம் ஆகியவற்றை துப்பரவு செய்வதற்கான நடவடிக்கை தற்பPullukulam1ோது மேற்கொள்ளப்படவுள்ளது.   குறித்த இவ்விரு குளங்களும்  தூர்வையற்று காணப்படுவதாக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பில் ஆராயும் முகமாக இன்று(16) மாலை அப்பகுதிக்கு சென்ற யாழ் மாநகர சபையின் பதில் முதல்வர் துரைராசா ஈசன்  மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாமுடன் இணைந்து பார்வையிட்டுள்ளார். அத்துடன் பதில் முதல்வர் இவ்விரு குளங்களையும் துப்பரவு செய்து மக்கள் பாவனைக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதுதவிர மாநகர சபை எல்லைக்குட்பட்ட 30க்கும் அதிகமான கால்வாய்கள் துப்பரவு செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பாக நீரேந்து பகுதிகளை கவனிக்க விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.    (மேலும்) 17. 09.18

._______________________________________________________________________

கோர விபத்து - நால்வர் பலி - இருவர் படுகாயம்

வவுனியா, ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிய பயணித்த கடுகதி புகையிரதத்தில் கார் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களும் மற்றும் காயமடைந்தவர்களையும் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இன்று காலை 10.30 மணியளவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஒன்றில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றார். சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

._______________________________________________________________________

இந்தியா செல்ல சிவாஜிலிங்கத்துக்கு வீசா மறுப்பு

இந்தியாவில் நடைபெறவுள்ள பயிற்சி நெறிக்குச் செல்லும் குழுவில் உள்sivagilingamளடக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு வீசா வழங்க இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயம் மறுப்பு தெரிவித்துள்ளது.தமிழ் மாகாண சபை உறுப்பினர்களுக்கான பயிற்சி நெறி ஒன்றை இந்தியாவின் மும்பையில் ஏற்பாடு செய்துள்ளதுடன் அதற்காக இலங்கையில் இருந்து 18 மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.அதனடிப்படையில் குறித்த குழுவினர் இந்தியா நோக்கி பயணித்துள்ளதுடன் தனக்கு வீசா மறுக்கப்பட்டதன் காரணமாக அந்த சந்தர்ப்பத்தை இழந்ததாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் பல்வேறு ஆர்ப்பாட்ட பேரணிகளில் கலந்து கொண்டதன் காரணமாக தனது பெயர் தடுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதால் இவ்வாறு வீசா மறுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்


தற்போது காணப்படும் வானிலையில், நாட்டின் தென்மேற்கு பகுதியில் செப்டம்பர் 17 ஆம் திகதிக்குப் பின்னர் சிறிதளவு மாற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றதுslweather   செப்டம்பர் 17 ஆம் திகதியிலிருந்து நாடு முழுவதும் காற்றுடன் கூடிய நிலை சற்று அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.     (மேலும்) 17. 09.18

._______________________________________________________________________

 மூன்று வருடங்களுக்குள் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5,000 க்கும் அதிக முறைப்பாடுகள்

கடந்த 3 வருடங்களுக்குள் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5,000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில், 90 வீதமான முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வு எட்டப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜீ. எச். மனதுங்க கூறியுள்ளார். அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

._______________________________________________________________________

சுழலில் சிக்குண்ட விஜயகலா:சட்டநடவடிக்கைகள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள்                                          -

                                      சமிந்திரா வீரவர்தன

(பகுதி 2)

கொழும்பு இப்போது தீருமதி மகேஸ்வரனுடன் தற்போது என்ன செய்து வருகிறது, 1950களின் பிற்பகுதியில் இருந்து அதே விதமான தவறு தொடர்ந்து இழைக்கப்பட்டு வருகிறது - அரசிvija-cartoonயல் நோக்கம் கொண்ட தொடை நடுங்கி செயற்பாடுகள் இனச் சிறுபான்மையினர் தொடர்பான விடயங்களில் அவற்றின் குறுகியகால, இடைக்கால மற்றும் நீண்டகால விளைவுகளின் ஆழத்தைப்பற்றி மதிப்பீடு செய்யாமல், அவற்றின் விளைவுகள் மற்றும் தாக்கங்களைப்பற்றி சிந்திக்காமல் இழைக்கப்பட்டு வருகின்றது. மேலும் அது ஒரு வெட்கக்கேடான நடவடிக்கை, அது வெளிப்படுத்துவது, கொத்துக் கொத்தாக இனப் பெரும்பான்மையான ஆண்கள் அதிகாரத்தை கையாளும் பதவிகளிலுள்ள ஒரு உயர்ந்த பாலின அரசாங்கம் அதிகாரத்தில் இருந்துகொண்டு ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பெண்மணி முன்னாள் போர் வலயத்தில் உள்ள சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பெண்களையும் மற்றும் சிறுமிகளையும் பாதிக்கும் பிரச்சினைகள் பற்றி குரல் கொடுத்ததுக்காக அவர்மீது நடவடிக்கை மேற்கொள்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் கொழும்பின் பிரதிபலிப்பு ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு ஒரு மோசமான விளம்பரம்,  பாலின நீதி கொள்கை, இனத் தேசிய அரசியல் மற்றும் ஸ்ரீலங்காவின் சர்வதேச நிலைப்பாடு என்பனவற்றைப் பொறுத்தவரையில் மூலோபாய ரீதியில் அது தன்னைத்தானே குத்திக் கொலை செய்யும் “ஹாரா - கிரி” செயலாக உள்ளது. அது திருமதி மகேஸ்வரனுக்கும் அதேபோல கடும்போக்கு தமிழ்தேசியவாதிகளுக்கும் நல்ல விளம்பரத்தை தேடித்தரப் போகிறது. மிகவும் உயர்வான அறிவுறுத்தல் கொள்கைக்காக ஒரு யு (U) வளைவை  எடுப்பதற்கு இன்னும் தாமதமாகிவிடவில்லை.   (மேலும்) 16. 09.18

._______________________________________________________________________

ஆட்சித் திறன் -  - அரசியல் மாண்பு
கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

-    கருணாகரன்

கிளிநொச்சி ஊடகவியலாளர்கள் தொடர்பாக அவர்கள் பணியாற்றுகின்ற ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதப் போவதாக கரைச்சி பிரதேச சபvelamalikithanையின் தவிசாளர் அ. வேழமாலிகிதன் தெரிவித்திருக்கிறார். சபையைப் பற்றி சில ஊடகவியலாளர்கள் கடுமையாக விமர்சிப்பதால் சபையைத் திறம்பட இயக்குவதற்குச் சிரமமாக உள்ளது எனவும் இதனைத் தாம் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவர். கடந்த 10.-8.2018 திங்கட்கிழமை கரைச்சிப்பிரதேச சபையின் ஏழாவது அமர்வின்போது தவிசாளர் விடுத்த அறிவிப்பு இது.  சபை நடவடிக்கைகள் பாதிக்கப்படுமளவுக்கு “ஊடகவியலாளர்கள்” யாரேனும் தவறான செய்திகளையும் கட்டுரைகளையும் அறிக்கையிட்டிருந்தால், அல்லது ஏதாவது உள்நோக்கத்துடன் அவர்கள் செயற்பட்டிருந்தால் அவற்றைத் தகுந்த ஆதாரங்களோடு மறுத்துரைக்க வேண்டும். அல்லது அப்படி நடந்திருந்தால் அவற்றைக் குறித்து ஊடகங்களின் தலைப்பீடங்களுக்கு ஆதரங்களோடு தெரியப்படுத்தலாம். அல்லது சட்ட நடவடிக்கை கூட எடுக்கலாம். அது நியாயமானது. அதுவே பொருத்தமான நடவடிக்கையாகும் (மேலும்) 16. 09.18

._______________________________________________________________________

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர் வரிசை:

பிரதேச இலக்கியப்படைப்புலகில்  மக்களையும் இயற்கையையும் ஆழ்ந்து நேசிக்கும்  எஸ்.எல்.எம் ஹனீபா

                                          முருகபூபதி

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டினை 2011 ஜனவரி மாதம் கொழும்பில் நடத்துவதற்கு முன்பதாக 2010 டிசம்பரில் கிழக்கிலங்கையில் மாநாடு தொடர்பாக தகவல் அமர்வு நடத்துவS.L.M.Hanifaதற்காக எமது குழுவிலிருந்த இலக்கிய நண்பர்கள் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங் மற்றும் அஷ்ரப் சிகாப்தீன் ஆகியோருடன் மட்டக்களப்பிற்கு சென்றிருந்தேன்.ஓட்டமாவடியில் அஷ்ரப் சிகாப்தீனின் சகோதரி வீட்டில் தங்கியிருந்தோம். அந்தக்குடும்பத்தின் தலைவர் பாடசாலை அதிபர். அத்துடன் கலை, இலக்கிய ஆர்வலர். அவரும் அவரது குடும்பத்தினரும் எம்மை நன்கு உபசரித்தனர். நாம் வந்திருக்கும் செய்தியறிந்த ஒருவர் திடீரென்று வந்தார். அவரை நான் அதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. அவரே அருகில் வந்து தன்னை " எஸ்.எல்.எம். ஹனீபா" என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். " யார்... மக்கத்துச்சால்வை ஹனீபாவா...?" எனக்கேட்டேன். " ஓம்" எனச்சொல்லி என்னை அணைத்துக்கொண்டார்.    1946 ஆம் ஆண்டு மீராவோடையில் கடலை நம்பிய தந்தைக்கும் மண்ணை நம்பிய தாயாருக்கும் பிறந்திருக்கும் ஹனீபாவின் எழுத்துக்களும் அவரது நேரடி உரையாடல் போன்று சுவாரஸ்யமானது. (மேலும்) 16. 09.18

._______________________________________________________________________

2020 இல் பொதுஜன பெரமுன வெற்றி பெறும்; சர்வதேச கருத்துக் கணிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் என்று இகொனமிஸ்ட் இன்டர்லிஜன்ட்ஸ் யுனிட் நிறுவனம் (Economist Intelligence Unit (EIU)) sppவெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாட்டின் அரசியலில் ஓரளவு செல்வாக்கு இருந்த போதிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிளவு காரணமாக அந்த செல்வாக்கு படிப்படியாக குறைந்து கொண்டிருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிளவு காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான சக்தியை உருவாக்குவதற்கு அவர்கள் முயற்சிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  இலங்கையின் தற்போதைய அரசாங்கம் 2020ம் ஆண்டு வரை ஆட்சியில் இருக்கும்.     (மேலும்) 16. 09.18

._______________________________________________________________________

melbouren vizha

._______________________________________________________________________

ஹிந்து தேசியவாதத்தால் மதச்சார்பின்மைக்கு பாதிப்பு: அமெரிக்க நாடாளுமன்றம் அறிக்கை


இந்தியாவில் அதிகரித்து வரும் ஹிந்து தேசியவாதம், அந்நாட்டின் மதச் சார்பின்மைக்கு ஊறு விளைவித்து வருகிறது' என்று அமெரிக்க ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்தவர்கள், இந்தியா: மதச் சுதந்திர விவகாரங்கள்'' என்ற பெயரில் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளனர். கடந்த 30-ஆம் தேதியிட்ட அந்த அறிக்கையின் நகல், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கடந்த வியாழக்கிழமை கிடைத்தது. அதில், கூறப்பட்டிருப்பதாவது:இந்தியாவில் மத ரீதியிலான வன்முறைகள், மாநில அளவிலான மத மாற்றத் தடைச் சட்டங்கள், பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதல்கள், கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள், தன்னார்வ அமைப்புகளை செயல்பட விடாமல் தடுப்பது போன்ற சம்பவங்கள், நாட்டின் மதச் சார்பின்மை பாரம்பரியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்திலேயே மதச் சுந்திரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பகுதியினர் ஹிந்துக்கள் ஆவர்.    (மேலும்) 16. 09.18

._______________________________________________________________________

தொலைபேசி அழைப்பை ஏற்காத இலங்கை தூதர் திரும்ப அழைப்பு!

தொலைபேசி அழைப்பை ஏற்கத் தவறிய ஆஸ்திரியாவுக்கான இலங்கைத் தூதரை, அதிபர் மைத்ரிபால சிறீசேனா திரும்ப அழைத்துள்ளார். பிரியா விஜசேகர என்ற அந்த பaustri srilankaெண் தூதரையும், மற்ற 5 தூதரக அதிகாரிகளையும் அதிபர் சிறீசேனா கடந்த வாரம் பல முறை தொலைபேசியில் அழைத்தும் அவர்கள் பதிலளிக்கவில்லை. எனவே, தூதரையும், 5 அதிகாரிகளையும் உடனடியாக நாடு திரும்புமாறு அதிபர் சிறீசேனா உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அவர் என்ன காரணத்துக்காக தூதரைத் தொடர்பு கொள்ள முயன்றார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. தூதர் திரும்ப அழைக்கப்பட்டதை வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தினாலும், அதற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.

._______________________________________________________________________

திருகோணமலையில  நிலநடுக்கம்

amதிருகோணமலை பிரதேசத்தில் இன்று காலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.5 இற்கும் 3.8 இற்கும் இடைப்பட்டதாக பதிவாகியுள்ளது என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் சந்திரவிமல் சிறிவர்தன கூறினார்.இன்று சனிக்கிழமை (15) அதிகாலை 12.35 இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும் , இந்த நில நடுக்கத்தால் பொதுமக்களுக்கோ, சொத்துக்களுக்கோ எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என சந்திரவிமல் சிறிவர்தன கூறினார்.

._______________________________________________________________________

குவைட் நாட்டு தம்பதியினருக்கு வழங்கப்பட்ட தண்டனை..

சுங்க திணைக்கள அதிகாரிகள் 5 பேரை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து தாக்கிய குவைட் நாட்டு தம்பதியினர் இருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 மாதகால சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு தலா 9 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து நீர்க்கொழும்பு நீதவான் உத்தரவிட்டார்.பணிக்கு இடையூறு விளைவித்தமை, அதிகாரிகளை மதிக்காமை மற்றும் அவர்களை தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் அவர்களுக்கு இதற்கு முன்னர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி அவர்கள் சுங்த திணைக்கள அதிகாரிகளை தாக்கியமையை அடுத்து, கைது செய்யப்பட்ட நிலையல் பிணையில் விடுதலையாகியிருந்தனர்

.*

Theneehead-1

   Vol:17                                                                                                                               29.09.2018