Theneehead-1

   Vol:17                                                                                                                               12.19.2018

எமிரேட்ஸின் வெற்றியும் ஸ்ரீலங்கனின் தோல்வியும்

                                    -    லத்தீப் பாறுக்

எங்கள் நாட்டைப் பொறுத்தவரை, தீவில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த மற்றும் இப்போதும் ஆட்சி செய்துகொண்டிருக்கிற  அரசாங்கங்களான ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய இரண்டுமே இந்த நிருவாகச் சீர்கேட்டுக்கான முக்கிய பொறுப்பாளிகள்.

 1948ல் ஸ்ரீலங்கா சுதந்திரம் பெற்றபோது அது அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை, உயர்மட்டத்திலான இலவசக்கல்வி, இலவச சுகாதார சேவைகள் மற்றும் Emiratesஇன நல்லிணக்கம் என்பனவற்றைக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு வளர்ச்சியடைந்த மூன்றாம் உலக நாடாகத் திகழ்ந்தது என்பதை நினைவிற்கொள்ளுவது மதிப்பானது. அந்த நேரத்தில் டூபாய் என்கிற தேசத்தைப்பற்றி அறிந்ததோ கேள்விப்பட்டதோ கிடையாது அதன் சனத்தொகை சில ஆயிரங்களாக மட்டுமே இருந்தது. அவர்கள் தீவிர வறுமையும் கல்வியறிவற்றவர்களாகவும் இருந்தார்கள். அங்கு பாடசாலையோ, மருத்துவமனையோ மின்சாரமோ அல்லது குடிதண்ணீரோ இருக்கவில்லை. அவர்கள் உயிர்வாழ்வதற்கான ஒரே மார்க்கமாக இருந்தது சீறும் புயலில் கொந்தளிக்கும் கடலில் மீன்பிடித்து வியாபாரம் செய்வது. எண்ணெய் வளத்தின் எழுச்சியுடன் அபிவிருத்திக்கான வாய்ப்பு அவர்களத் தேடிவந்ததும் ஆட்சியாளர்களும் மற்றும் அதேபோல மக்களும் இருகரம் நீட்டி அதைப் பற்றிப்பிடித்து இந்தப் பாலைவனத்தை அதி நவீன நகரமாக உருவாக்கினார்கள்.எமிரேட்ஸ் உலகெங்கிலும் இருந்து ஆட்களை இன, மத, மொழி, கலாச்சாரம் அல்லது தேசியம் என்கிற பேதமின்றி பணிக்கமர்த்தியுள்ளது. (மேலும்) 12. 09.18

._______________________________________________________________________

ஆயுர்வேத மருத்துவத்தை ஏற்றுக் கொண்ட முதல் மேற்கத்திய நாடு சுவிட்ஸர்லாந்து: மக்களிடையே பலத்த வரவேற்பால் முறைப்படுத்தத் திட்டம்

மேற்கு நாடுகளாக இருந்தாலும் கீழைநாடுகளாக இருந்தாலும் Ayurveda111அலோபதி மருத்துவச் சிகிச்சையின் காலனியாதிக்கம் மக்களைக் கடுமையாக சுரண்டி, அழித்து அதில் கொழுத்து வளரும் கார்ப்பரேட் மருத்துவமனைகள், கார்ப்பரேட் மருந்து உற்பத்தி நிறுவனங்களை அசுர வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும் நிலையில் மேற்கத்திய நாடான சுவிட்ஸர்லாந்து முதன் முதலில் மாற்று மருத்துவ முறையான ஆயுர்வேதத்தை அங்கீகரித்துள்ளது, மக்களிடையே பலத்த வரவேற்பும் கிடைத்துள்ளது. மேலும் மாற்று சிகிச்சை முறைகளை மோசடி என்றும் நம்பத்தக்கதல்ல என்றும் கார்ப்பரேட் மீடியாக்கள் மூலம் உலகம் முழுதும் அலோபதி சார்ந்த நிறுவனங்கள் பொய்ப் பிரச்சாரத்தைப் பரப்ப ஏகப்பட்ட தொகையினையும் செலவிட்டு வருகின்றன. ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையாளர்கள் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் முறையை மேலும் ஒழுங்குபடுத்த சுவிட்ஸர்லாந்து அரசு கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது.  2015-ல் ஆயுர்வேத மருத்துவ முறை மற்றும் மருந்துகளை ஏற்றுக் கொண்ட ஒரே மேற்கத்திய நாடானது சுவிட்ஸர்லாந்து.    (மேலும்) 12. 09.18

._______________________________________________________________________

நாய் கூட உண்ண முடியாது உணவுகள் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில்  தனக்கு வழங்கப்பட்டதாக       ஜனாதிபதிதெரிவிப்பு

கடந்த வாரம் நேபாளில் இருந்து இந்தியா ஊடாக ஶ்ரீ லங்கன் விமான Prasident srisenaசேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் இலங்கை வந்த போது தனக்கு வழங்கப்பட்ட முந்திரி பருப்பை மனிதர்கள் அல்ல நாய்க்கும் உண்ண முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யார் இவற்றை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குகிறார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.நேற்று (10) முற்பகல் ஹம்பாந்தோட்டை மாகம்புர ருகுணு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஹம்பாந்தோட்டை விவசாய சமூகத்துடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான உணவுப் பொருட்களை கொள்ளை இலாபமீட்டுகின்றவர்களுக்கு தேவையான வகையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்தும் முறையான செயற்திட்டமொன்று குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜின் – நில்வளவ கங்கை திட்டங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இத்திட்டத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி முறைகேடுகள் குறித்து தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் ஒரு விசாரணை இடம்பெறும் என்று தெரிவித்துள்ளா

._______________________________________________________________________

இந்துக் கோவில்களில் மிருகபலி செய்வதை தடை செய்ய அமைச்சரவை அனுமதி

இந்துக் கோவில்களில் அல்லது அதன் எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களிband for animal tortல் மேற்கொள்ளப்படும் மிருகபலி மற்றும் பறவைகள் பலியிடுவதை தடைசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா கூறியுள்ளார்.   மிருக பலி சம்பந்தமாக சட்ட ஒழுங்கமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன் முன்வைத்த யோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.  இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன், அது தொடர்பான சட்ட வரைவை இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.     (மேலும்) 12. 09.18

._______________________________________________________________________

வடக்கில் இந்தியக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது.

வட மாகாண சபையின் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் 250 இந்திய குடும்பங்களை அந்த மாகாணத்தின் கிராமம் ஒன்றில் (நெடுங்கேணியில்) குடியமர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு, "வட மாகாண சபையின் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் 250 இந்திய குடும்பங்களை அந்த மாகாணத்தின் கிராமம் ஒன்றில் (நெடுங்கேணியில்) குடியமர்த்தியுள்ளதாக பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான ஊடக அறிக்கைகளுக்கு அரசாங்க தகவல் திணைக்களம் தனது கவனத்தை செலுத்தியுள்ளது.    (மேலும்) 12. 09.18

._______________________________________________________________________

ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை: உலக சுகாதார நிறுவனம்

உலக அளவில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.suicide11   உலக தற்கொலை தடுப்பு தினம் கடந்த திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:வளர்ச்சியடைந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் என்ற வேறுபாடுகள் ஏதுமின்றி, அனைத்து நாடுகளிலும் தற்கொலை நிகழ்வு அரங்கேறி வருகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் தற்கொலை அதிகமாகக் காணப்படுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களில், ஐந்தில் 4 பேர் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.உலகில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.      (மேலும்) 12. 09.18

._______________________________________________________________________

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில்  மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் எதிர்வரும் செப்டெம்பர் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பல தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமாகிய அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக தொழிலாளர் முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, விவசாயத் தோட்ட தொழிலாளர் காங்கிரஸ், அஸீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய அமைப்புக்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த பேச்சுவார்த்தை ஒன்று கொழும்பில் இன்று இடம்பெற்றது.

._______________________________________________________________________

ராஜீவ் வழக்கு: 7 பேரின் விடுதலை ஆவணங்கள் ஆளுநரிடம் ஒப்படைப்பு

ல் தொடர்புடைய 7 பேரின் விடுதலை தொடர்பான ஆவணங்களை ஆRajiv-Murder-Case-1ளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் தமிழக அரசு செவ்வாய்கிழமை வழங்கியது.ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க, ஆளுநரின் ஆலோசனையுடன் தமிழக அரசு உரிய முடிவு எடுத்துக் கொள்ளலாம் என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் இந்த 7 பேரையும் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த 7 பேரையும் விடுவிப்பது தொடர்பான சட்டப்பூர்வ ஆவணங்களை தமிழக அரசு  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் வழங்கியது.

._______________________________________________________________________

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள்   திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த 09 இலங்கையர்கள் அந்த நாட்டில் இருந்து இன்று காலை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.இவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விஷேட விமானம் மூலம் இன்று காலை 08.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.இவர்களுடன் அந்த நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் அந்த விமானத்தில் வந்துள்ளனர். விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அந்த அதிகாரிகள் இவர்களை விமான நிலையக் குற்றப்புனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

._______________________________________________________________________

 நீர்கொழும்பு மேற்கு கடற் பகுதியில் சட்டவிரோத குடியேறிகள் 88 பேர் கைது

நீர்கொழும்பு மேற்கு கடற் பகுதியில் சட்டவிரோத குடியேறிகள் 88 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.கடற்படை பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.இன்று காலை கைது செய்யப்பட்ட குறித்த படகில் இருந்த அனைவரும் இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகிறது.அவர்கள் சட்டவிரோதமாக குடியமரும் நோக்கில் வேறு நாடு ஒன்றுக்கு பயணிக்க முற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இவர்கள் அனைவரையும் கொழும்பு மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

._______________________________________________________________________

வடக்குக் கிழக்கிலே ஒரு புதிய காலடியா?

-    கருணாகரன்

அண்மையில்  மலையக அரசியல் தரப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவருடன் பேசும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் சொன்னார், “வடக்கிலும்  கிழக்கிலும் நாங்க அர58சியல் வேலைகளைச் செய்ய வேண்டிய சூழல் உருவாகியிருக்கு. அங்கே இருக்கிற நம்மட ஆக்கள் இன்னும் ஓரங்கட்டப்பட்டுக்கிட்டுத்தான் இருக்கிறாங்க. இதை அங்க இருக்கிறவங்களே நம்மகிட்ட வந்து சொல்றாங்க. அவங்கள வேறாக்களாகப் பாக்கிறதயோ அங்க நாங்க வந்து இன்னொரு பிரிவா இயங்கிறதயோ நாங்க விரும்பல்ல. அதாலதான் இதுவரையிலயும் அங்க நாங்க யாருமே வந்து அரசியல் பண்ணல்ல. ஆனா இப்ப அப்பிடி ஒதுங்கியிருக்க முடியாதுன்னு தோணுது. இத விட நம்மட நிதி ஒதுக்கீட்டில்தான் அங்கே பல வேலைகள் நடந்துட்டிருக்கு. ஆனா, அங்கே அதெல்லாம் சரியா நடக்குதா எங்கிறதுதான் பிரச்சினை. அந்த வேலைகளைக் கண்காணிக்கிறதுக்கு சரியான ஆள் கிடையாது. TNA எம்பிக்கள்தான் அதை பார்த்துக்கிறாங்க எண்டு பார்த்தா, அதை அவங்க சரியாச் செய்ற மாதிரித் தோணல. அவங்க எங்களுக்கு ஒண்ணைச் சொல்லீட்டு அங்க ஒண்டைச் செய்யிறாங்க. இதால அங்க இருந்து இப்ப கம்ளையின்ற் எல்லாம் வருது. இதுக்கு நாம என்ன பண்றது? பணத்தையும் கொடுத்து கொறையையும் சம்பாதிக்க முடியுமா,     (மேலும்) 11. 09.18

._______________________________________________________________________

அவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன் ஒரு நாள்

- நடேசன்

இமயமலை சிறு குழந்தைபோல் ஒவ்வொரு வருடமும் வளர்ந்து வருகிறது.இமயமலையின் வயது 50 மில்லியன் வருடங்கள்an

அவுஸ்திரேலியாவின் மத்தியில் 348 மீட்டர் உயரமான கல் மலையுள்ளது. அதனது வயது 500 மில்லியன் வருடங்கள்.அது வளரவில்லை.மத்திய அவுஸ்திரேலியாவில் உள்ள இந்த மலை ஐயேர் கல்மலை(Ayers Rock) ஒரு காலத்தில் என்று கூறப்பட்டது. இந்துக்களுக்கு இமயமலை எப்படி புனிதமானதோ,அப்படி அவுஸ்திரேலிய ஆதிவாசிகளுக்கு உலறு கல்மலை புனிதமானது . அனன்கு(Anangu) என்ற அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் இனக்குழுவிற்கு சொந்தமான பிரதேசத்தில் இந்த உலறு கல்மலையும் அதற்கு 25 கிலோமீட்டர் தூரத்தில் பல கல்மலைகளது சேர்க்கையால் உருவாகிய கடா ருயுரா(Kata-Tjuta) என்ற இன்னொன்றும் இருக்கிறது. இவற்றிலிருந்தே உயிர்களது தோற்றம் ஏற்பட்டதென இந்தப்பகுதி ஆதிவாசிகள் நம்புகிறார்கள். அதனால் அனன்கு இனக்குழுவின் புனிதப்பிரதேசமாக நம்பப்படுகிறது.       (மேலும்) 11. 09.18

._______________________________________________________________________

கிளிநொச்சி ஊடகவியலாளர்கள் தொடர்பில் பிரதம ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதப்போவதாக கரைச்சி தவிசாளர் அறிவிப்பு


கிளிநொச்சியில் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பில் அவர்கள் பணிkaraich1யாற்றுகின்ற ஊடக நிறுவனங்களின் பிரதம ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதப் போவதாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.  இன்று(10-09-2018) கரைச்சி பிரதேச  சபையின்  ஏழாவது அமர்வில் தலைமைத்தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்  சபை நடவடிக்கைகளை விமர்சிக்கின்ற மற்றும் சபையினை  சீராக கொண்டு செல்வதிற்கு இடையூறாகவும், சில ஊடகவியலாளர்கள் காணப்படுகின்றனர். மேலும் தவறான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குகின்றனர்,  ஊடகங்களின் பெயர்களில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக செயற்படுகின்றனர்     (மேலும்) 11. 09.18

._______________________________________________________________________

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரிற்கு பிணை: வௌிநாடு செல்வதற்கும் நீதிமன்றத்தால் தடை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட gota.11091807 பேரிற்கு விஷேட மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் தலா 1 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையின் அடிப்படையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் கோட்டாபய உள்ளிட்ட 7 பேருக்கும் வௌிநாடு செல்வதற்கும் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த 7 பேரின் கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களின் 90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக இவர்கள் விஷேட மேல் நீதிமன்றத்தில் இன்று (10) காலை ஆஜராகினர்.முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் வகைகள் தலா 4 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 145 ரூபாவில் இருந்த 149 ரூபாவாகவும், 95 ஒக்டைன் பெற்றோல் 157 ரூபாவில் இருந்து 161 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதேவேளை டீசலின் விலை 5 ரூபாவினாலும், சூப்பர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.எனவே, டீசலின் புதிய விலை 123ரூபாவாகவும், சூப்பர் டீசலின் புதிய விலை 133 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த விலையேற்றம் அமுல்படுத்தப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

._______________________________________________________________________

வருடத்திற்கு 3000 பேர் வரை தற்கொலை

இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 3   ஆயிரத்திற்கும் அதிகமானோரSuicide-graphic் தற்கொலை செய்து கொள்கின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்கொலை செய்து கொள்வதனை தடுப்பது தொடர்பிலான சர்வதேச தினம் இன்றாகும்.  இந்த தினத்தினை முன்னிட்டு சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்நாட்டில்  2586 ஆண்களும் 677 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் திருமண வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் தற்கொலை செய்துகொண்டவர்கள் ஒரு காரணத்திற்காக மாத்திரமின்றி பல காரணங்களாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

._______________________________________________________________________

யாழில் அட்டூழியங்களில் ஈடுபட்ட நால்வர் கைது

யாழ்ப்பாணம், நவாலி அட்டகிரி பகுதியில் நான்கு வீடுகளுக்கு தாக்குதல் மேற்கொண்டும் ஐஸ்கிறீம் விற்பனை செய்யும் வாகனம் ஒன்றை தீக்கிரையாக்கிய சம்பவம் தொடர்பிலும் நால்வர் நேற்று (09) மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நான்கு வீடுகளை தாக்கி வீட்டில் உள்ளவர்களை மிரட்டிய சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மானிப்பாய் பகுதியை சேர்ந்த 18 இற்கும் 19 வயதிற்கும் உட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

._______________________________________________________________________

பிரான்ஸில் கத்திக் குத்து தாக்குதல்: 7 பேர் காயம்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்திக் குத்து தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்தனர். அதில், இருவர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள்.இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:தலைநகர் பாரீஸின் வடகிழக்கு பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் மிகுந்த பேஸின் டிலா விலீட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 11 மணிக்கு இந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடந்தது. சாலையில் சென்றவர்களை குறிவைத்து அந்த மர்மநபர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். இதில், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி இருவர் உள்ளிட்ட ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் நான்கு பேரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.தாக்குதல் நடத்திய நபரை பொதுமக்கள் அருகில் இருந்த இரும்பு குண்டுகளை வீசி பிடிக்க முற்பட்டுள்ளனர். சம்பவம் அறிந்து விரைந்து சென்ற போலீஸார் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.       (மேலும்) 11. 09.18

._______________________________________________________________________

 ரஷ்யாவில் ஓய்வூதியம் பெறும் வயதை அதிகரித்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ரஷ்யாவில் ஓய்வூதியம் பெறும் வயதை அதிகரித்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்putin victoryடம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ரஷ்யாவில் 80 இற்கும் மேற்பட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.அந்தவகையில், ஆண்கள் ஓய்வூதியம் பெறும் வயது 60 இலிருந்து 65 ஆகவும் பெண்கள் ஓய்வூதியம் பெறும் வயது 55 இலிருந்து 60 ஆகவும் உயர்த்தி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்தத் தீர்மானம் அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.அதேநேரம், ரஷ்யாவில் ஆண்களின் ஆயுட்காலம் 66 வருடங்களாகவும் பெண்களின் ஆயுட்காலம் 77 வருடங்கள் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், ஓய்வூதியம் பெறும் வயதெல்லை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடாளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னனெடுக்க ரஷ்ய சிரேஷ்ட அரசியல் தலைவரான நவால்னி தீர்மானித்தார்.இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தை நிறுத்தும் நோக்குடன் அந்நாட்டு நீதிமன்றத்தால் நவால்னிக்கு 30 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.இந்நிலையில், ரஷ்யாவில் இன்று நாடாளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

 புல்லுமழை - நீரரசியல்

சேகுதாவூத் பஸீர்

மட்டக்களப்பில் தண்ணீர் போராட்டம் பிரவகித்திருக்கும் இந்தக் காலத்தில் பலரும் பல விதமாக இது பற்றி எழுதியும், செயல்பட்டும் வருகிற போதினில் இந்த மண்ணில் வாழும் நpullu2ான், கருத்துச் சொல்லாதிருப்பது எனது நெஞ்சாங்கூட்டை வாளால் அறுப்பது போல் உணர்வதால் எழுதுகிறேன்.  உலகின் எல்லாப் பாகங்களிலும் குடிநீர் தட்டுப்படத் தொடங்கிவிட்டது.நீர் சூழ் உலகில் 15% மட்டுமே நன்னீர் என்பதை அறிவோம். நன்னீரைப் புதுப்பிக்கும் ஒரே வழியாக மழை மட்டுமே காணப்படுகிறது.மழை நீர் பூமிக்கடியிலும், நீரேந்து நிலைகளிலும் சேமிக்கப்பட்டு மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பனி மலைகள் உருகுவதாலோ, மலை முகடுகளிலிருந்து ஊற்று வீழ்ச்சியாகவோ மட்டக்களப்பு மக்களுக்கு நீர் கிடைப்பதில்லை. நமது மாவட்டத்தில் மழை வீழ்ச்சி குறைவடையத் தொடங்கி நீண்ட காலமாயிற்று என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். உலகில் தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் பொருளாகி பல்லாண்டுகள் கடந்துவிட்டன     (மேலும்) 10. 09.18

._______________________________________________________________________

நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 17
கப்ரா வண்டும் அஸ்பெஸ்டாஸ் கூரைத்தகடும்

                                                                                 ரஸஞானி

இந்த அங்கத்தை சற்று தயக்கத்துடன்தான் எழுதுகின்றேன். அதற்கு முன்னர் ஒரு குட்டிக்கதையை சொல்கின்றேன். ஒரு நாட்டில்  தேங்காய் எண்ணை உடல் நலத்திற்கு கேடுASBESTOSதரும். அதில் கொழுப்பு அதிகம். கொலஸ்ட்ரோல் நாடிகளில் படிந்து மாரடைப்பு வரும் என்று யாரோ ஒரு அதிபுத்திசாலி ஒரு பத்திரிகையில் எழுதிவிட்டார். அதனைப்படித்த மக்கள் தேங்காய் எண்ணையை தவிர்க்கத்தொடங்கினார்கள். அதனால் தேங்காய் உற்பத்தியாளர்களான தென்னந்தோட்ட உரிமையாளர்களின் வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டது. அவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்திவிட்டு ஒரு முடிவுக்கு வந்தார்கள். சில மருத்துவர்களைக்கொண்டு  , " தேங்காய் எண்ணையால் எதுவித பாதிப்பும் இல்லை. அது மக்களுக்கு உகந்தது. அதில் இன்ன இன்ன உயிர்ச்சத்துக்கள் இருக்கின்றன " என்று ஊடகங்களில் கட்டுரைகளையும் நேர்காணல்களையும் வரச்செய்தார்கள். மக்கள் எப்பொழுதும் ஊடகங்கள் சொல்வதை நம்புபவர்கள்தானே!? மீண்டும் மக்கள் மத்தியில் தேங்காய் எண்ணைக்கு வரவேற்பு வந்தது!      (மேலும்) 10. 09.18

._______________________________________________________________________

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை: தமிழக அமைச்சரவை முடிவு 


சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரRajiv murders1ை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம் முதலவர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஞாயிறு மலை 4 மணி அளவில் கூடியது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற கூட்டமானது மாலை 6 மணி அளவில் நிறைவு பெற்றது.   இந்த கூட்டத்திற்குப் பிறகு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்  குறித்து செய்தியாளர்களிடம் விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது:இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட விஷயங்களாவன:முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ்,  ஜெயக்குமார், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய ஏழு பேரும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்கள்.    (மேலும்) 10. 09.18

._______________________________________________________________________

தற்கால பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் இராணுவத்தினரின் விளக்கம்


30 வருட காலமாக இடம்பெற்ற கொடிய யுத்தத்தை வெற்றியோடு நிறைslarmy100918வுக்கு கொண்டு வந்து இன்றுடன் 09 ஆண்டுகளாகின்ற நிலையில் தற்கால பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக இராணுவத்தினர் விளக்கமளித்துள்ளனர். அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவது, இலங்கை இராணுவமானது 30 வருட காலமாக இடம்பெற்ற கொடிய யுத்தத்தை வெற்றியோடு நிறைவுக்கு கொண்டு வந்து இன்றுடன் 09 ஆண்டுகளாகின்றன. அந்த 09 வருட காலத்திற்குள் அனுபவமிக்க நான்கு இராணுவத் தளபதிகள் இராணுவத்திற்கான கட்டளைகளை வழங்கியதோடு இவர்கள் அனைவரும் இராணுவத்தினுள் இராணுவ நடவடிக்கைகளை உயர் தரத்தில் தக்கவைத்துக் கொள்வதற்காக பல்வேறுபட்ட மட்டங்களிலான பயிற்றுவிப்பு திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டதுடன் அப் பயிற்சித் திட்டங்கள் மற்றும் பயிற்சிகள் இன்றுவரை உயர் தரத்திலேயே இடம் பெற்ற வண்ணம் காணப்படுகின்றன.       (மேலும்) 10. 09.18

._______________________________________________________________________

ஞானசார தேரர் மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.நீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

சுயநலம் கொண்ட சிலரே தமிழ் தேசிய கூட்டமைப்பை வழிநடத்துகின்றனர் - வடக்கு முதல்வர்

மக்களின் தேவைகளையும், அபிலாசைகளையும் புரிந்துக் கொள்ளத்தவறwignes2ிய சுயநலம் கொண்ட சிலரே தமிழ் தேசிய கூட்டமைப்பை வழிநடத்துவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.   ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு குறிப்பிட்ட கொள்கைகளை கொண்ட அமைப்பல்ல என்னும் அது பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியும் அல்லவென்றும், அதில் மக்களின் பங்குபற்றுதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்புக்களிலும், தேவைகளிலும் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விலகியே உள்ளது. தமிழ் மக்களின் உண்மையான அரசியல் நிலைமையை, புரிந்துக் கொள்ளும் நிலையில் இல்லாத, தமிழ் தேசிய கூட்டமைப்பை தொடர்ந்தும் ஆதரித்தால் தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகளில் இருந்தும் சறுக்க நேரிடும் என விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்.   (மேலும்) 10. 09.18

._______________________________________________________________________

அடையாளம் காணப்படாத சுமார் 300 சடலங்கள் ..

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையிலான காலப்பகுதியினில், அடையாளம் காணப்படாத சுமார் 300 சடலங்கள் கொழும்பில் உள்ள மயானங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.   இதேபோல நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பல சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு இதுவரை அடையாளம் தெரியாத 67 சடலங்கள் கொழும்பு சட்ட மருத்துவ சவச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றில் 32 சடலங்களுக்கு உரிமை கோரப்பட்டது. ஏனைய 35 சடலங்கள் கொழும்பு மாநகர சபையினால் தெரிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரரினால் அடக்கம் செய்யப்பட்டன.இதேபோல, கடந்த ஆண்டில் 117 சடலங்கள் கொண்டுவரப்பட்டு அவற்றில் 65 சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் அடக்கம் செய்யப்பட்டன.    (மேலும்) 10. 09.18

._______________________________________________________________________

 தமிழ் அரசியல் - வேடிக்கையும் விளையாட்டும் தற்கொலையும்

-    கருணாகரன்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மக்களுடைய  தேவைகளைப் பற்றிச் சிந்திப்பதில்லை. இது குறித்து அரசாங்கத்துடன் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டு பலமாக முன்வைகtna politics்கப்படுகிறது. கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் அதற்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம். அதற்குப் பிறகு மேலும் மேலும் கூட்டமைப்பின் மதிப்பு கீழிறங்குவதற்கும் அதனுடைய முரணான நிலைப்பாடுகளும் செயற்பாடின்மையுமே காரணமாகும். இதனால் அரசியற் தீர்வும் கிட்டவில்லை. மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளும் தீரவில்லை.   தேர்தல் மேடைகளில் பேசப்பட்ட அரசியல் கைதிகள் விவகாரம், காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினை, சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த விரிவாக்கம், மாகாணசபை, உள்ளுராட்சி சபைகள் போன்றவற்றின் வினைத்திறனின்மை என்று ஏராளம் விடயங்களில் கூட்டமைப்பு ஆக்கபூர்வமாகச் செயற்படவில்லை என்பது பகிரங்கமானது. அப்படிச் செயற்பட்டிருந்தால் இவற்றில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றமாவது எட்டியிருக்கும்.     (மேலும்) 09 09.18

._______________________________________________________________________

உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு் ஒருபோதும் தயாராக இல்லை  - ஜனாதிபதி

இன்று ஜனாதிபதி தேர்தல்பற்றி தேவையற்ற பரபரப்பொன்று நாட்டில் ஏற்பSRISENAடுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மிக விரைவில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை பெற்றுத் தருவதாக சிலர் தெரிவித்து வருகின்றபோதும், உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தான் ஒருபோதும் தயாராக இல்லையென்றும் அவ்வாறு நடத்துவதாயின் அதுபற்றிய தீர்மானமொன்றை தனக்கு மட்டுமே மேற்கொள்ள முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.  இன்று (08) முற்பகல் நிவித்திகல சந்தை வளாகத்தில் இடம்பெற்ற நிவித்திகல ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இங்கு உரையாற்றிய ஜனாதிபதி,பொதுஜன முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் அரசியல் ரீதியாக மிகை மதிப்பீட்டை கொண்டிருந்தால் அது அவர்கள் தவறு விடும் இடமாகுமென்று தெரிவித்தார்.      (மேலும்) 09 09.18

._______________________________________________________________________

நேற்று இரவு நாடு முழுவதும் 3593 பேர் கைது

நேற்று இரவு நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையில் குடிபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் உட்பட 3593 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 6542 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைப் படி நாடு முழுவதும் இந்த விஷேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

._______________________________________________________________________

மக்களை ஏமாற்றியே சிங்கப்பூருடான ஒப்பந்தம மேற்கொள்ளப்பட்டுள்ளது

- ஜே.வி.பி.

சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருடன் மேற்கொள்ளப்பட்டுள்plfள சுதந்தர வர்த்தக ஒப்பந்தம், பாராளுமன்றத்தையும் பொது மக்களையும் ஏமாற்றியே கைச்சாத்திடப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துனெத்தி தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் காரணமாக எமது நாட்டின் தேசிய தொழில், தேசிய வியாபாரம் மற்றும் உள்ளநாட்டு தொழில் வாய்ப்புக்கள் அற்று போகும். உள்நாட்டு உற்பத்திகளுக்கான கேள்வி குறைவடையும் நிலை ஏற்படும்.   இவ் ஒப்பந்தம் ஜனவரி 23 ஆம் திகதி கைசாத்திடப்பட்டு இன்று வரையில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. நாட்டு மக்களுக்கும் இது தொடர்பில் தெரியாது. எனினும் மே முதலாம் திகதி முதல் இவ்வொப்பந்தம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது.

._______________________________________________________________________

போலி தகவல் பரவுவதை முகநூல் தடுக்காதது மிகப்பெரிய தவறுதான்  பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்


இன்று உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் முகநூலும் (பேஸ் புக்) ஒன்று. ஆனால் பலர் முகநூலை தவறாக பயன்படுத்தி போலி தகவல்களை Facebook gründerபரப்பி வருகின்றனர்.  இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் இது பெரும் பிரச்சினையாக உருவெடுக்கிறது. இதுபற்றி அண்மையில் இந்திய அரசு வாட்ஸ் அப், முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தும் இருந்தது. இந்த நிலையில் முகநூல் அதிபர் மார்க் ஜூக்கர்பெர்க் தனது நிறுவனம் போலியான தகவல்கள் பரவுவதை தடுப்பதற்கு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு உள்ளார்.   இதுபற்றி அவர் கூறியதாவது:–போலி தகவல்களும், அவதூறும் பரவுவதை தடுப்பதில் நாங்கள் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது உண்மைதான்.    (மேலும்) 09 09.18

._______________________________________________________________________

குமரகுருபரன் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

 

கடந்த சில நாட்களாக கட்சியின் கட்டுபாட்டை மீறி ஏனைய கட்சிகளின் முக்கிய நபர்களுடன் தொடர்புகளை கொன்டு கட்சியின் தனித்துவத்தை பேணிக்காப்பாற்ற தவறியமை மற்றும் கட்சி வளர்ச்சி பணிகளிள் ஈடுபடாமை காரணமாக இவர் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிபில் இருந்தும் அடிப்படை அங்கத்தவர் நிலையில் இருந்தும் நீக்கப்படுறார் என ஜ.ம.கா தலைவர் மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.    மேலும் சனிக்கிழமை இன்று நடைபெற்றும் கட்சி செயற்குழு கூட்டத்தில் இது சம்பந்தமான விளக்கம் அளிக்கப்படும்.கொழும்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்திற்கமைய கட்சியின் வளர்ச்சி முன்னெடுக்கபடவுள்ளது.இது சம்பந்தமாக மேலதிக விபரங்கள் செயற்குழு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுமென தெரிவித்தார்.

._______________________________________________________________________

அரசாங்கம் இப்போது ஒவ்வொரு கதையை கூற ஆரம்பித்துள்ளது : மஹிந்த
 

கூட்டு எதிரணியின் மக்கள் சக்திக்காக கொழும்பில் ஒன்று திரண்ட பாரிய மக்கள் கூட்டம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் இப்போது ஒவ்வொரு கதையைக் கூற ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கூட்டு எதிரணிக்கு ஆதரவான மக்கள் குழு, நாம் எதிர்பார்த்தது போலவே கொழும்புக்கு வந்தனர். இந்தளவு எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என அரசாங்கம் எதிர்பார்க்க வில்லை. நாம் நினைத்தது போலவே மக்கள் கூட்டத்தைக் கொண்டு வந்து அரசாங்கத்திடம் காட்டினோம்.தற்பொழுது அரசாங்கம் இந்த மக்கள் வெள்ளம் குறித்து ஒவ்வொரு கதையைக் கூறி வருகின்றது. உண்மை என்னவென்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்வார்கள்.

._______________________________________________________________________

02 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

ஒரு தொகை தங்க பிஸ்கட்பளை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்த இலங்கை விமானப் பயணி ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.சுமார் இரண்டு கோடி எட்டு இலட்சம் (2,08,00,000) ரூபா பெறுமதியடைய தங்க பிஸ்கட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. 37 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று காலை 08.30 மணியளவில் இந்தியாவில் இருந்து அவர் வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது.சந்தேகநபர் தனது உள்ளாடை மற்றும் பாதணிகளில் மறைத்து சுமார் 03 கிலோவும் 200 கிராம் நிறையுடைய 31 தங்க பிஸ்கட்களை கடத்திய வந்துள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

._______________________________________________________________________

வீட்டு பொருட்களுக்கு சேதம் - விசாரணைகள் தீவிரம்

யாழ்ப்பாணம் - மானிப்பாய் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட நவாலி -அட்டகிரி பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் புகுந்த அடையாம் தெரியாத சிலர் வீட்டு பொருட்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக மானிப்பாய் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட காவல் நிலையங்களில் கடமையாற்றும் காவற்துறை உத்தியோகத்தர்கள் பலர் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழா காவல் கடமையில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவற்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

._______________________________________________________________________

கொடுப்பனவை நிறுத்துவதற்கு தீர்மானம்

பகுடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மஹபொல புலமைபரிசில் நிதியம் தெரிவித்துள்ளது.நிதியத்தின் பணிப்பாளர் பராக்கிரம பண்டார எமது செய்திச் சேவைக்கு இதனை தெரிவித்தார்.அத்துடன் மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை விரைவாக பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று அடுத்த வருடம் முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, பகுடிவதைக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்டங்கள் அமுல்ப்படுத்தப்படும் என ஹிங்குரக்கொடவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

இறுதிப் போரில் 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இராணுவம் கொன்றது: ஃபொன்சேகா பேட்டி

- பி.பி.சி


இலங்கை இறுதிப் போரின் போது 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை sarath.Fonsekaஇலங்கை இராணுவம் கொன்றதாக அப்போது இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா தெரிவித்தள்ளார்.   மேலும், "இறுதிப் போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் ஆகியோரும் பதுங்கு குழிகளில் இருந்து போரிட்டு மாண்டதாகவே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தது'' என்று தற்போது அமைச்சர் பதவி வகிக்கும் சரத் ஃபொன்சேகா தெரிவித்தார்.   இறுதிப் போரில் 4000 முதல் 5000 வரையிலான பொதுமக்களே கொல்லப்பட்டிருக்கலாம் என தான் கணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.இலங்கை அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா, கொழும்பில் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது இறுதிப் போரின் உயிர்ச் சேதங்கள் குறித்தும் பேசினார்.     (மேலும்) 08 09.18

._______________________________________________________________________

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர் வரிசை:

ஆறு இதழ்களில் ஆசிரியராக பணியாற்றிய பத்திரிகை உலக ஜாம்பவான் அமரர் எஸ். டி. சிவநாயகம்

                                                                                         முருகபூபதி

இலங்கைத்  தமிழ்ப் பத்திரிகை உலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்பட்டவரும், பல புதிய தலைமுறை எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவரும், பல தமிழ் ஊடகவியலாளர்களின் s.d.sivanayagamஞானத்தந்தையாக (God Father)  கருதப்பட்டவருமான (அமரர்) எஸ். டி. சிவநாயகம் 'கல்கி' கிருஷ்ணமூர்த்தியினால் விதந்து  பாராட்டப்பட்டவராவார்.   கிழக்கிலங்கையில் மட்டக்களப்பைச்சேர்ந்த இவரது ஊடகப்பணியும் சமயம் சார்ந்த சமூகப்பணிகளும் தலைநகரில்தான் விரிவடைந்தன. இவரது துணைவியார் கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர். சிவநாயகம் அவர்களை அவரது ஜிந்துப்பிட்டி இல்லத்திலும் தினபதி - சிந்தாமணி பணிமனையிலும் சந்தித்துப் பேசியிருக்கின்றேன். 1948  இல் தினகரன் பத்திரிகையில் பணியாற்றத்தொடங்கிய ஈழத்தின் மூத்த பத்திரிகையாளரான சிவநாயகம்,  கொழும்பில் தந்தை செல்வநாயகம் ஆரம்பித்த சுதந்திரன், மற்றும் தமிழகத்தைச்சேர்ந்த  பெரி. சுப்பிரமணியம் செட்டியார் தொடக்கிய  வீரகேசரி ஆகியவற்றிலும்   ஆசிரியராக பணியாற்றியவர்.   1966 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி முதல் வெளியாகத்தொடங்கிய தினபதி தினசரியிலும் பிரதம ஆசிரியரானார்.   (மேலும்) 08 09.18

._______________________________________________________________________

தீய அரசியல்

                                      சரத் டீ அல்விஸ்

இந்தக் கட்டுரை தற்போதைய அரசியல் சொற்பொழிவுகள் பற்றிய ஒரு ஆய்வு ஆகும், அதில் ஒவ்வொருவரும் செய்வது என்னவென்றால் அவர்கள் நினைப்பதை எல்லாம் எப்படியாPolitical devilவது நியாயப்படுத்துவதே ஆகும். அதில் இப்போது அதிகாரத்தில் உள்ளவர்கள், தாங்கள் இழந்த அதிகாரத்தை திரும்பவும் கைப்பற்ற முடியும் என நம்புபவாகள் மற்றும் தாங்கள் மட்டுமே அதிகாரத்துக்கு உரித்துடையவர்கள் என நம்புவர்கள் ஆகிய அனைவரும் உடபடுகிறார்கள். தீமை என்பது சில விளக்கமான காரணங்களுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு குற்றச்சாட்டுக்குரிய ஒரு பெயரடை ஆகும். பெரும்பாலானவர்கள் செய்யும் விஷயங்கள் எப்படியோ பின்னர் தீமையாக மாறிவிடுகிறது அத்துடன் தீமையாகவும்; நினைவுகூரப்படுகிறது. “லசந்த என்பவர் யார்? என்று கோட்டபாயா ராஜபக்ஸ பி.பி.சி யின் ஸ்ரீபன் சக்குரிடம் கேட்டது பிரபலமான ஒன்று. அது அதிகாரத்தின் அகந்தை அல்ல அது அதிகாரத்தின் தீமை ஆகும். மனித வாழ்க்கையை முக்கியமற்றதாக ஆக்குவது தவறு. கொலையை முக்கியமற்றதாக ஆக்குவது தீமையானது. இது கடந்தவாரம் அரசியல் நினைவு என்கிற தலைப்பில் நான் எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாகும்.     (மேலும்) 08 09.18

._______________________________________________________________________

யாழில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட பிரதான சூத்திரதாரி கைது

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் வீடு உடைத்தல் போன்ற வன்முறைச் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரியான ஆவா குழுவின் எதிரணி இளைஞர் ஒருவரை இன்று (07) குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த கணேஜி என்ற இளைஞரே யாழ்.மாவட்ட புலனாய்வு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஆவா குழுவுடன் செயற்பட்ட இந்த நபர், கடந்த பல காலங்களாக ஆவா குழுவில் இருந்து வெளியேறி தனியாக பல வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.  பல காலமாக பொலிஸாரிடம் இருந்து தலைமறைவாகியிருந்த இந்த இளைஞர் நேற்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வரும் போது, யாழ். நகர் பகுதியில் வைத்து யாழ்.மாவட்ட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை முன்னெடுத்து வருகின்றதாகவும், விசாரணையின் பின்னர் யாழ்.நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

._______________________________________________________________________

முதலமைச்சர் திரு.விக்கினேஸ்வரன் ஒரு இனவாதி அல்ல -  வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே

முதலமைச்சர் திரு.விக்கினேஸ்வரன் ஒரு இனவாதி அல்ல என்று வடமvaduhinduாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வட்டு இந்துக்கல்லூரியில் இன்று (07.09.2018) காலை நடைபெற்ற வருடாந்த பரிசளிப்புவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன் இனவாதி அல்ல அதனால்தான் அவரது புதல்வர்களை கொழும்பு பக்கத்தில் புத்தமதம் சார்ந்த சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார். மகிந்த ராஜபக்ஷவின் தங்கை நிருபம்மா ராஜபக்ஷ நடேசன் எனும் தமிழரை திருமணம் முடித்து வாழ்கின்றார். மறைந்த வெளிவிகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சிங்கள பெண்ணை திருமணம் முடித்து வாழ்ந்திருக்கின்றார். இதேபோன்று மைதிரிபால சேனாநாயக்க எனும் பெருந் தலைவர் ஒருவர் தமிழ் பெண் ஒருவரையே மணம் முடித்து இருக்கின்றார்.    (மேலும்) 08 09.18

._______________________________________________________________________

விஜயகலாவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய பரிந்துரை

விடுதலைப் புலிகள் சம்பந்தமான சர்ச்சைக்குறிய கருத்து வௌியிட்ட விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விடுதலைப்புலிகள் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

._______________________________________________________________________

 அய்யூப் அஸ்மீனின் கொடும்பாவி இரண்டாவது முறையாகவும் எரிப்பு

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் கொடும்பாவி இரண்டாவது முறையாகவும் இன்று முஸ்லிம் மக்களினால் வீதியில் வைத்து எரியூட்டப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முஹீதீன் ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற தொழுகையின் பின்னர் ஒன்று கூடிய முஸ்லிம்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.அஸ்மின் அயூப், அண்மைக்காலமாக யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் தொடர்பாக தெரிவித்துவரும் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக எதிர்ப்பு நடவக்கையில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

._______________________________________________________________________

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம்: உச்ச நீதிமன்றம்


ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Rajiv murders  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் மிகவும் தாமதமாக முடிவெடுத்ததாகக் கூறி, அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. மேலும், இந்த வழக்கில் இந்த மூவருடன் சேர்த்து ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, (முருகனின் மனைவி), ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் ஏற்கெனவே 20 ஆண்டுகள் சிறையில் தண்டனையைக் கழித்துள்ளதால் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.   (மேலும்) 07 09.18

._______________________________________________________________________

ரமணன்: நினைவுக்குறிப்புகள்

-    கருணாகரன்


“ஓ.... மரணித்த வீரனே... உன் சீருடைகளை எனக்குத்தா... உன் ஆயுதங்களை எனக்குத்தா... உன் பாதணிகளை எனக்குத்தா...”ramanan

ஒரு காலம் இந்தப் பாடல் எங்களுக்குள்ளே சூடான ரத்த நதியைப் பாய்ச்சியது. இதைப்போல இன்னொரு பாடல், “தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா...?”. இந்த இரண்டு பாட்டுகளும் ஈழப்போராட்டத்தில் 1980 களில் போராளிகளாக இருந்தவர்களின் மனதிலும் நினைவிலும் உயிர்ப்பூட்டும் ரத்தமாகக் கலந்திருந்தவை. அந்த நாட்களில் இந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டு காடு, மேடு, ஆறு, குளம், களம் என்றெல்லா இடங்களிலும் ஆயுதங்களைத் தாங்கியவாறு அணியாகப் போயிருக்கிறோம். ஒரு புறம் இந்தப் பாடல்கள். இன்னொரு புறத்தில் ரஷ்ய, சீன, வியட்நாமிய, லத்தீன் அமெரிக்க விடுதலைப்போராட்டக்கதைகளும் போராட்ட வரலாற்றுப் பாடங்களும். இரண்டுமே எங்களுக்குப் பக்கத்துணையாக, தூண்டிகளாக, பெருவிசைகளாக இருந்தன. சமர்க்களங்களில் தோழர்கள் வீழ்ந்தபோதெல்லாம் உயிர் உருக, பெருகி வரும் துக்கத்தையும் பாயத்துடிக்கும் கண்ணீரையும் அடக்கிக் கொண்டு இந்தப் பாடல் வரிகளை மனதிலே பாடியிருக்கிறோம்.      (மேலும்) 07 09.18

._______________________________________________________________________

தனக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள மனுவை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரிய விக்னேஸ்வரனின் மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறிதனக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள மனுவை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரியவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வdenis-wiknesvaranரனின் மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.   நேற்று (05) உச்ச நீதிமன்றத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.​டெனிஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க கடந்த ஆண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.  இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பி.​ டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார். அதன்படி பி.​டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை கூறத்தக்கது.     (மேலும்) 07 09.18

._______________________________________________________________________

 அவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் Bryce Hutchesson  இன்று (06.09.2018) ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சந்தித்து  கந்துரையாடல்

 அவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் Bryce Hutchesson  இன்று (06.09.2018) ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.bryce   சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் முற்பகல் 11.30 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெற்றது.     இலங்கையில் யுத்தத்தின் பின்னர் வடமாகாண மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னெற்றங்கள் சம்பந்தமாகவும் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.  வடமாகாணத்தில் மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான பணிகளை செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசு விருப்பம் கொண்டிருக்கின்றது. விசேடமாக தமது நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் நவீன தொழில்நுட்பத்துடனான மழைநீர் மூலமான விவசாய நடவடிக்கையினை வடமாகாணத்தில் ஏற்படுத்துவதற்கு எண்ணியுள்ளது. அதேவேளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகளை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு ஆர்வம் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.    (மேலும்) 07 09.18

._______________________________________________________________________

காணாமல் போனோர் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையில் வலிறுத்தப்பட்டுள்ள விடயங்கள்

காணாமல் ஆக்கப்பட்டடோரின் உரிமைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்போது நீதியை நிலைநாட்டுதல் முக்கிய அரச பொறுப்பாகும் என காணmissing-070918ாமற்போன தொடர்பான அலுவலகம் தெரிவித்துள்ளது. வலிந்து மேற்கொள்ளப்பட்ட காணாமல் ஆக்கப்படுதலுக்கு ஏற்புடைய பொறுப்புக் கூற வேண்டியவர்கள் நீதியின் முன்னால் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும் என்றும் அந்த அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று கையளிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகத்தின் இடைக்கால அறிக்கை இன்று ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டது.  அந்த அறிக்கையிலேயே குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தற்போதைய நடவடிக்கைகள், சவால்கள், நீதியை உறுதிப்படுத்துவதற்கான அரச பொறுப்பு, இழப்பீடுகளை வழங்குவதற்கான அரச பொறுப்பு, அவசரமான பரிந்துரைகள், இடைக்கால நிவாரண முன்மொழிவுகள், நீதிக்கான பரிந்துரைகள் என்பனவற்றை உள்ளடக்கியதாக இந்த அறிக்கை அமைந்துள்ளது.    (மேலும்) 07 09.18

._______________________________________________________________________

மகிந்தவின் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை

தாம் நேற்று நடாத்திய "மக்கள் சக்தி கொழும்பிற்கு" எதிர்ப்பு பேரணியில் சுமார் இரண்டு லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே இதனை குறிப்பிட்டுள்ளார். அடுத்த மக்கள் சக்தி போராட்டம் கண்டியில் இடம்பெறவுள்ளதாக அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.  அரசாங்கம் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் மக்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சுத்தமானவர் என நிரூபித்துள்ளதாக அரசாங்கத்தில் இருந்து விலகிய சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட அணி தெரிவித்துள்ளது.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, பேரணியை முடக்குவதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை தீட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டால் சுதந்திர கட்சியின் உறுப்புரிமை பறிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளதாகவும், முடிந்தால் அதனை பறிக்குமாறும் இதன் போது டிலான் பெரேரா சவால் விடுத்துள்ளார்.

._______________________________________________________________________

"நாளைய அழகான நகரங்கள்" தொனிப்பொருளில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் தெளிவூட்டல் செயலமர்வு

மக்களுக்கு பிரயோசனம் தராத அபிவிருத்திகள் தொடர்பில் பலத்தrauff hakkeem070918 விமர்சனங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.  அரசியல் தலைவர்கள் தொடர்பில் வெவ்வேறு எண்ணங்கள் இருக்கின்றன. அவ்வாறே அபிவிருத்திகள் தொடர்பிலும் வெவ்வேறு எண்ணங்கள் இருக்கின்றன. அபிவிருத்தியை கொண்டு நடத்துகின்ற அதிகாரிகளுக்கும் இதன்  பொறுப்பு இருக்கின்றது. அந்த பொறுப்பினை உணர்ந்து அவர்கள் செயற்பட வேண்டும்.   இப்போது நாங்கள் வித்தியாசமான காலத்தில் வாழ்கின்றோம். எனது நீண்டகால அரசியல் வாழ்க்கையில் பாராளுமன்ற கணக்கறிக்கை செயற்குழுவின் தலைவராக இருந்திருக்கிறேன். இந்த கால எல்லையில் வருடாந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும். இடைநிலை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும். சமர்பிக்கப்படுகின்ற அறிக்கைகளை முன்னிறுத்தி வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்படும். பல்வேறுபட்ட முறைகேடுகள் தொடர்பில் வெளிவருகின்றபோது பாராளுமன்றத்தில் அங்கம் வகின்ற யாருக்கும் இதுதொடர்பில் கேள்வியெழுப்ப முடியும். அவ்வாறே பாராளுமன்றத்தில் ஒரு விவாதத்தை கோரமுடியும். இதுவொரு சாதாரண விடயமல்ல. ஒவ்வொரு அமைச்சராலும் அவரது அமைச்சு தொடர்பிலான அறிக்கைகளை வருட இறுதியில் பாதீட்டு விவாத காலங்களின்போது சமர்ப்பிக்க வேண்டும்.    (மேலும்) 07 09.18

._______________________________________________________________________

சிறைச்சாலை கூரை மீது ஏறி கைதி ஒருவர் ஆர்பாட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலை கட்டிட கூரை மீது ஏறி கைதி ஒருவர் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி இன்று வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திருகோணலையைச் சேர்ந்த 21 வயதுடைய யோகராசா லக்சன் என்ற கைதி வாகரை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பலாத்தகாரம் செய்தமை மற்றும் கொள்ளைச் சம்பவம் சம்பவங்களில் கைது செய்யப்பட்டு அவருக்கு 6 மாதகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இந்த நிலையில் குறித்த கைதி தன்னை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரி சம்பவ தினமான இன்று மாலை 4 மணியளவில் சிறைச்சாலை கூரை மீது ஏறி, தன்னை தானே காயப்படுத்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவரை கூரையில் இருந்து பாதுகாப்பாக இறக்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

._______________________________________________________________________

24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்கள்

மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.   மன்னார் பொது வைத்தியசாலையில் கடந்த 3 ஆம் திகதி பிரmannarGPசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித்தாய் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவித்துள்ளார். குழந்தையின் இதயத்துடிப்பு குறைவடைந்ததை அடுத்து, விசேட மருத்துவப் பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.   இதனைத் தொடர்ந்து உயிரிழந்த குழந்தையின் தந்தை, பிரசவ விடுதியில் கடமையாற்றிய வைத்திய அதிகாரி மற்றும் காவலாளியைத் தாக்கியுள்ளார்.இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு நாளை காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மன்னார் பொது வைத்திய சேவையின் அவசர சிகிச்சைப் பிரிவு தவிர்ந்த ஏனைய சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.  இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டு, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

._______________________________________________________________________

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் பெண்ணொருவர் (60) கைது

வெளிநாட்டு நாணயத்தாள் ஒரு தொகையை சட்ட விரோதமான முறையில் இந்தியவிற்கு எடுத்து செல்ல முற்பட்ட பெண் ஒருவரை இன்று (06) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த பெண் இன்று அதிகாலை 4 மணியளவில் ஜெட் எயார் வேய்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 9W255 என்ற விமானத்தில் இந்திய நோக்கி பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்ணுடைய பயணப்பையில் இருந்து 3,727,344 ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்கள் மற்றும் ஸ்வீஸின் பெரேன்க் நாணயத்தாள்கள் ஒரு தொகை சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

._______________________________________________________________________

பத்திரிகையாளர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விடுதலை செய்ய ஐ.நா.சபை வலியுறுத்தல்

மியான்மர் நாட்டில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு பத்திரிகையாளர்களை விடுதலை செய்யுமாறு, மனித உரிமைகளுக்கான ஐ.நா.சபை மியான்மர் அரசை வmynmarலியுறுத்தியுள்ளது.   மியான்மரின் வடக்கு பகுதியான ராக்கைன் மாநிலத்தில், ரோஹிங்கியா இன முஸ்லீம்கள் மீது கடந்த ஆண்டு ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில், சுமார் 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டின. மேலும், ரோஹிங்கியா இன பெண்களை ராணுவத்தினர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தகவல் வெளியானது. இதனால் சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லீம்கள் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றனர்.இந்நிலையில், ராணுவத்தின் இந்த வன்முறை செயல்களை ராய்ட்டர்ஸ்  பத்திரிக்கை நிறுவனத்தைச் சேர்ந்த யோ லோன் (32), யாவ் சோ ஒ(28) ஆகிய இரண்டு பத்திரிகையாளர்கள் செய்தியாக வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து, நாட்டின் ரகசியத்தை திருடியதாக போலீசார் பத்திரிகையாளர்கள் இருவரையும் கைது செய்தனர்.       (மேலும்) 06 09.18

._______________________________________________________________________

சத்தியக்கிரகம் ; தொடர்கிறது போராட்டம்

மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு, லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் சத்தியக்கிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வmahinda protestருகின்றனர். அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியினர் முன்னெடுத்து வரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கொழும்புக்கு வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பின் பல வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.குறிப்பாக லேக்கவுஸ் சுற்றுவட்டத்தினை முழுமையாக மறித்திருந்த இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியை ஆக்கிரமித்து, அப் பகுதிக்கான போக்குவரத்தை ஸ்தம்பிதமடையச் செய்துள்ளதுடன் அப் பகுதியில் மெழுகு வர்த்திகளை ஏந்திய வண்ணம் சத்தியகிரகப் போராட்டமொன்றை தற்போது முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன் லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

தொல்பொருள் வேறு; சமயம் வேறு; அனுமதியின்றி சிலைகள் வைத்து இனமோதல்களை ஏற்படுத்த வேண்டாம்

-தொல்பொருள் பணிப்பாளர் நாயகம், பிரதி பொலிஸ் மாதிபர், ஒட்டுசுட்டான் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு மனோ கணேசன் அறிவுறுத்தல் 

முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் வலயம், பிரmanoganesan060918தேச செயலக பிரிவு, குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் புத்தர் சிலையை வைத்து விகாரை அமைக்கும் முயற்சியில் வெலிஓய விகாரையை சேர்ந்த கல்கமுவ சத்வ போதி தேரர் தலைமையிலான குழு நேற்று எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக இடம்பெற்ற பதட்ட நிலைமைகள் தொடர்பில், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், அந்த பகுதியை உள்ளடக்கும் பிரதேச சபை தலைவர் ஆகியோரின் எழுத்து மூலமான அனுமதி இன்றி எந்த  ஒரு மத ஸ்தலத்தையும் கட்டுவிக்கவோ அல்லது சிலைகளை ஸ்தாபிக்கவோ கண்டிப்பாக அனுமதிக்க வேண்டாம் என்று முல்லைத்தீவு, கிளிநொச்சி பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் மகிந்த குணரத்னவுக்கும், ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம். ரத்னாயக்கவுக்கும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இன்று காலை பணிப்புரை விடுத்துள்ளார்.   (மேலும்) 06 09.18

._______________________________________________________________________

மெல்பனில் வாசிப்பு அனுபவப்பகிர்வு

 அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சி எதிர்வரும் 09 ஆம் திகதி ( 09-09-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு பின்வரும் முகவரியில் நடைபெறும்.

2/40, ALLISTER  CLOSE. - KNOXFIELD - VIC- 3180

 இதில் கலந்து சிறப்பிக்குமாறும்,  இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்குபற்றுமாறும்  இலக்கிய ஆர்வலர்கள் அழைக்கப்படுகின்றனர்.
தகவல் : முருகபூபதி    (04166 25 766)

._______________________________________________________________________

இன ரீதியான பாடசாலைகளை ஒழித்தால் இன முரண்பாடு ஒழியும் என்று உறுதிப்படுத்த முடியாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

இன ரீதியான பாடசாலைகள் இருக்கவேண்டுமா, இல்லையா என்ற பிரச்சினைகள் இப்போது ஆரம்பித்துள்ளன. ஆனால், ஒரு பாடசாலையில் இன ரீதியான தனித்தrauff hakkeem060918ுவ அடையாளம் இருந்தாலும், அதில் ஏனைய இன மாணவர்களும் கற்கக்கூடிய சூழலை உருவாக்குவதுதான் காலத்தின் தேவையாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.   கொழும்பு பதியுதீன் மஹ்மூத் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முகப்பை இன்று (05) புதன்கிழமை திறந்துவைத்த பின்னர் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.   அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;இன முரண்பாடுகளை இல்லாதொழிக்கும் வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய நாளை வியாழக்கிழமை (05) தெரிவுக்குழு ஒன்றை அமைக்கவுள்ளார். இன ரீதியான பாடசாலைகளை இல்லாதொழித்தால், இன முரண்பாடுகள் குறையும் என்று பேசப்படுகிறது. ஆனால், இதை ஆராய்ந்துதான் செய்யவேண்டும்.   (மேலும்) 06 09.18

._______________________________________________________________________

புவி வெப்பமயமாதலால் சீனாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம்

புவி வெப்பமயமாதல் இதேபோன்று நீடித்தால், சீனாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிchina citiesட்டுள்ளது.உலகில் வெப்பமயமாதல் அதிகரித்து வருவதால், துருவ பகுதிகளில் உள்ள பனிமலைகள் வேகமாக உருகி வருவதாகவும், இதனால் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகவும் ஆய்வுகள் ஏற்கனவே எச்சரித்துள்ளன. இந்நிலையில், அமெரிக்க ஆய்வு நிறுவனமான மத்திய   காலநிலை அமைப்பு  வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சீனாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் பருவநிலை மாறுபாடு காரணமாக புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால், புவியின் வெப்பநிலை மேலும் 4 டிகிரியாக உயர்ந்துவிடும். அந்த வெப்ப நிலையை புவி எட்டும் பட்சத்தில், பல அபாயகரமான விளைவுகள் ஏற்படும். குறிப்பாக சீனாவின் ஹாங்காங், ஷாங்காய், டியான் ஜின் ஆகிய நகரங்கள் கடலில் மூழ்கும். இதனால் அங்கிருந்து 5 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற நேரிடும். அதேபோல் உலக அளவில் 6 கோடி பேர் வசித்து வரும் நிலங்களும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும். வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பருவநிலை மாறுபாடு மாநாட்டில், புவி வெப்பமயமாதலை 2 சதவிதத்துடன் நிறுத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றி, நடவடிக்கைகள் மேற்கொண்டால் இந்த அபாயத்தை தவிர்க்கலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் கைது

ஆறு மாதமாக யாழ் பொலிசாரால் தேடப்பட்டுவந்த சட்டவிரோத வாள்வெட்டு கொள்ளைக்கும்பலான ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் நேற்று மாலை மானிப்பாய் பொலிஸாரால் அதிரaavagroup2டியாக கைது செய்யப்பட்டுள்ளார்.   கொக்குவில் பகுதியை சேர்ந்த குமாரசாமி நிலோஜன் என்னும் 23 வயதுடைய இந்த நபரை, பொலிஸார் கடந்த ஆறு மாதகாலமாக தேடிவந்ததால் இவர் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்துவந்துள்ளார்.இவர் ஆவா குழுவின் தனுரொக் என்பவருடன் நெருங்கி செயற்பட்டதுடன், யாழ் குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு வன்முறை மற்றும் களவுச் சம்பவங்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   (மேலும்) 06 09.18

._______________________________________________________________________

வந்தாறுமூலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 28 ஆவது நினைவேந்தல்

கிழக்குப் பல்.கலையிலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணமால் ஆக்கப்பட்டவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக  வளாக முன்றலில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.காணமால் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மொன இறைவணக்கம், மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினர். 1990 ஆண்டு நடுப்பகுதியில் அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் ஊக்கிரமடைந்த நிலையில் உயிர் அபாயம் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழக முகாமில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். இதன்போது படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

குடிநீரைப் பெற சிரமங்களை எதிர்கொள்ளும் முல்லைத்தீவு மக்கள்


சுத்தமான குடிநீரைப் பெற அல்லலுறும் மக்கள் வாழும் மற்றுமோர் கிரmallikaitivuாமமே மூங்கிலாறு. இங்குள்ள 75 குடும்பங்களில் ஒரு சிலரின் வீட்டிலேயே கிணறுகள் காணப்படுகின்றன.சிலர் அகழப்பட்ட குழிகளிலிருந்து பெறப்படும் நீரை அருந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.   ஏனையோர் பொதுக்கிணறை நாட வேண்டிய நிலையில் உள்ளனர். அங்கு பெறப்படும் நீரும் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. மூங்கிலாறு – மல்லிகைத்தீவு – 9 ஆம் வட்டாரத்தில் 35-க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. சட்டவிரோத மதுபான உற்பத்தியினால் பல்வேறு அசௌரிகரியங்களை எதிர்நோக்குவதாக இங்குள்ள மக்கள் கூறினர்.    200-ஆம் குடியேற்றம் பகுதியிலுள்ள 45-க்கும் அதிகமான குடும்பங்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளன.மிக ஆழமான கிணறொன்றிலிருந்து இவர்கள் பெறும் நீரும் குடிப்பதற்கு ஏதுவாய் இல்லை.     (மேலும்) 06 09.18

._______________________________________________________________________

மிதிவெடி வெடித்து காயமடைந்த மற்றைய நபரும் உயிரிழப்பு

மாங்குளம் பகுதியில் மிதி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது குண்டு வெடித்ததில் படுகாயமடைந்தவரும் இன்று (05) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.கடந்த மூன்றாம் திகதி மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த வவுனியா ஓமந்தையைச் சேர்ந்த இராஜேந்திரன் நிதர்சன் (28) என்வரே உயிரிழந்துள்ளார்.வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று (05) மாலை நான்கு மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதேவேளை நேற்றையதினம் (04) இவரின் கர்ப்பிணியான மனைவி நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்ற போது உறவினர்களால் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்கு பின் வழமைக்கு திரும்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.ஏற்கனவே உயிரிழந்த கிளிநொச்சியை சேர்ந்த பத்மநாதன் திலீபனின் மனைவியும் நிறைமாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

யாழ்ப்பாணம் மாவட்டம் வலிகாமம் வடக்கு மயிலிட்டி கலைமகள் வித்தியாலம், 28 வருடங்களின் பின்னர் இராணுவத்தினரிடம் இருந்து நாளை (06) விடுவிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டம் வலிகாமம் வடக்கு மயிலிட்டி கலைமகள் வித்திய ாலம், 28 வருடங்களின் பின்னர் இராணுவத்தினரிடம் இருந்து நாளை (06) விடுவிக்கப்படவுள்ளது.   கடந்த 1818ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை, 200ஆவது வருடத்தில் காலடி வைக்கின்ற நிலையில், தற்போது இராணுவத்தினரின் பிடியில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.உள்நாட்டு யுத்தத்தம் காரணமாக, வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதி, இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு, உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தது. இந்தப் பகுதி காணிகள், தற்போது பகுதிப் பகுதியாக மீள மக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மயிலிட்டி துறைமுகமானது அண்மையில் விடுவிக்கப்பட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் துறைமுக அபிவிருத்திக்காக அடிக்கால் நாட்டப்பட்டது. இதையடுத்து, நாளை (06) மிகவும் பழமை வாய்ந்த மயிலிட்டி கலை மாகள் வித்தியாலயம் விடுவிக்கப்படவுள்ளது. இதன்போது, இந்தப் பாடசாலையுடன் 3 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளது.

._______________________________________________________________________

சமஷ்டி: சுமந்திரனின் கூற்றும் முரண்பாடுகளும்

-    கருணாகரன்

“சமஷ்டி தேவையில்லை. மாகாணசபை முறையைச் சtamilpoliticiansீராக்கினால் போதும்” என்று காலியில் நடந்த புதிய அரசியலமைப்புப் பற்றிய தெளிவூட்டல் நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தாகச் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சுமந்திரனின் இந்தச் செய்தியை த ரைம்ஸ் ஒவ் இந்தியா உள்ளிட்ட பல வெளி ஊடகங்களும் முக்கியத்துவமளித்து வெளிப்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக இந்தியாவின் ஏற்பாட்டிலான மாகாணசபை முறையை வலுப்படுத்தினால் போதும் என்ற சுமந்திரனின் அறிவிப்பை இந்திய ஊடகங்கள் அழுத்தப்படுத்தியுள்ளன. இந்தச் செய்தி வெளியானதோடு தமிழ் அரசியற் பரப்பு சூடாகியது.  “சுமந்திரனுக்குச் சமஷ்டி தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்குத் தேவை. அவர்கள் தங்களுக்குச் சமஷ்டி தேவையில்லை என்று ஒருபோதுமே சொல்லவில்லை.   (மேலும்) 05 09.18

._______________________________________________________________________

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர் வரிசை:

உலகம் சுற்றிவந்து ஏழையாய் மறைந்த  பித்தன் கே.எம். ஷா

                                                             முருகபூபதி

தமிழகத்தில் புதுமைப்பித்தன் சிறுகதை இலக்கியத்திற்கு பெரும் தொண்டாpiththanற்றியவர். தனது விருத்தாசலம் என்ற இயற்பெயரை புதுமைப்பித்தன் என மாற்றிக்கொண்டு சாகா வரம்பெற்ற பல கதைகளைப் படைத்தவர். அவரது எழுத்துக்கள் ஈழத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது கதைகளைப் படித்த ஈழத்த வ )ாசகர் ஒருவர், புதுமைப்பித்தனின் பாதிப்பில்  தனது இயற்பெயரை இலக்கிய உலகிற்காக பித்தன் என மாற்றிக்கொண்டு எழுத்துலகில் பிரவேசித்தார்.  அவரது இயற்பெயர்: முகம்மது மீரா சாய்பு. இவர்தான் ஈழத்து இலக்கிய உலகம் நன்கறிந்த பித்தன். கே. எம்.ஷா. மீன்பாடும் தேனாட்டின் கோட்டைமுனையில் 1921 ஆம் ஆண்டு பிறந்து 1994 ஆம் ஆண்டு மறைந்தார்.பித்தன் ஷா குறிப்பிடத்தகுந்த பல கதைகளை எழுதியிருந்தாலும் எண்ணிக்கையில் குறைவாக எழுதியவர் என அறிந்திருந்தேன். இவரது மறைவுச்செய்தியை எனக்கு கடிதம் மூலம் தெரிவித்தவர் பேராசிரியர் செ. யோகராசா. அதில் அவர் குறிப்பிட்டிருந்த தகவல் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.   (மேலும்) 05 09.18

._______________________________________________________________________

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் விகாரை அமைக்க வந்தவர்கள் பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு - குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்கும் நோக்கில் வந்த பௌத்த பிக்குகள் உட்பட 12 பேர் பொதுமக்களால் மடக்கி thannimurippuபிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில்,  முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள தண்ணிமுறிப்பு கிராமத்தில் தமிழ் மன்னர்கள் வாழ்ந்த வரலாற்று எச்சங்களுடன் குருந்தூர் மலை காணப்படுகின்றது.  இந்த மலையை ஆக்கிரமிப்பதற்கு பல தடவைகள் முயற்சிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள பழமையான சிவன் ஆலயத்தை மக்கள் பராமரிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் இன்று மாலை 4 வாகனங்களில் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 12 பேர் தங்குமிடம் அமைப்பதற்கான பொருட்கள், விகாரை அமைப்பதற்கான கட்டிட பொருட்கள், புத்தர் சிலை ஆகியவற்றுடன் குருந்தூர் மலைப்பகுதிக்கு வருவதை ஊர் மக்கள் அவதானித்துள்ளனர். இதனையடுத்து ஒன்றுதிரண்ட மக்கள் தண்ணிமுறிப்பு கிராமத்திற்கு சென்று அங்கு தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.      (மேலும்) 05 09.18

._______________________________________________________________________

போதைப் பொருள் வியாபாரிகளுக்கான தண்டணை வழங்குவதற்காக விசேட நீதிமன்றம் ஒன்றினை  அமைக்கவேண்டும்

 போதைப் பொருள் வியாபாரிகளுக்கான தண்டணை வழங்குவதற்காக விசேட நீதிமன்றம் ஒன்றினை அமைப்பதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன் என வnorth.P Governorடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். நிதி மோசடிகளை விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ள நீதிமன்றினை போன்று போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாக தண்டணை வழங்கக் கூடிய வகையிலான விசேட உயர் நீதிமன்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.   வடமாகாணத்தில் வன்முறைகளை கட்டுப்படுத்துதல், மாணவர்கள் மத்தியில் போதைவஸ்து புளங்குவதை தடைசெய்தல் சம்பந்தமாகவும் சட்டவிரோத மணல் வியாபாரம் உள்ளிட்ட சமூக சீரழிவுகளை கட்டுப்படுத்துதல் போன்றவை தொடர்பாகவும் யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (04.09.2018) முற்பகல் 10 மணியளவில் கூட்டம்  நடைபெற்றது.     (மேலும்) 05 09.18

._______________________________________________________________________

விடுதலைப்புலிகளின் தங்கம் தேடி சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது


புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் தங்கம் இருப்பதாக தெரிவித்து அகழ்வில் ஈடுபட்ட 7 பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.ltte gold1  இறுதி யுத்தகாலத்தில் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் உள்ள லோரன்ஸ் ராஜா என்பவரது காணியில் விடுதைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் இருப்பதாக தெரிவித்து வெளி மாவட்டங்களை சேர்ந்த பலர் இணைந்து அகழ்வில் ஈடுபடுவதாக புதுக்குடியிருப்பு காவற்துறையினருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ந்நிலையில் , குறித்த வீட்டின் பின்புறமாக அமைந்துள்ள காட்டில் மறைந்திருந்து இவர்களின் நடவடிக்கைகளை அவதானித்த காவற்துறையினர் இன்றைய தினம் 7 பேரை கைது செய்துள்ளனர். (மேலும்) 05 09.18

._______________________________________________________________________

பாகிஸ்தானியர்களுக்கு செளதி அரேபியாவில் வேலை கிடைப்பதில் சிக்கல் ஏன் ?


லட்சக்கணக்கான பாகிஸ்தானியர்கள் செளதி அரேபியாவில் பணsaudiிபுரிகின்றனர். அங்கிருந்து அவர்கள் அனுப்பும் பணம், பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு வலுவூட்டுகிறது.   கடந்த வெள்ளியன்று ரியாதில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு சென்ற பாகிஸ்தானுக்கான செளதி அரேபிய தூதர் நவாஃப் பின் சயீத் அல்-மலிக், பாகிஸ்தான் தூதர் கான் ஹஷம் பின் சதிக்கை சந்தித்து பேசினார்.   இந்த சந்திப்பின்போது, பாகிஸ்தானிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் விசாக்களுக்கான கட்டணங்களை குறைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை பாகிஸ்தான் தூதர் முன்வைத்தார். இந்த பிரச்சனை தொடர்பாக விரைவில் இறுதி முடிவு எட்டப்படும் என்று இருதரப்பினரும் நம்பிக்கை வெளியிட்டனர். செளதி அரேபியாவில் தெற்காசியாசியர்களே அதிக அளவில் பணிபுரிகின்றனர். அதிலும் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் மற்றும் வங்க தேசத்தினரின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இதைத்தவிர, தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் மக்களும் செளதியில் கணிசமான அளவு பணிபுரிகின்றனர்.    (மேலும்) 05 09.18

._______________________________________________________________________

வடக்கில் சுமார் 30 ஆயிரம் மீட்டர் வரை கண்ணிவெடி அகற்றப்பட வேண்டியுள்ளது

வடக்கில் சுமார் 30 ஆயிரம் மீட்டர் வரை கண்ணிவெடி அகற்றப்பட வேண்டியுள்ளதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்து சமய கலாசார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன், நாடாளுமன்றத்தில் வைத்து இன்று தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய வாய் மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இந்த நிலையில், குறித்த கண்ணிவெடிகள் அனைத்தும் எதிர்வரும் 2020 ஆண்டுக்கு முன்னர் முழுமையாக அகற்றப்படும் எனவும் அதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுத்துச் செல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, வடக்கு வீட்டுத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன் அது பிரதமரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக குறிப்பிட்டார்.

._______________________________________________________________________

தனது மருமகன் ஒரு அப்பாவி; அவர் மீது நம்பிக்கை உள்ளது


பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட mustafaஇலங்கை இளைஞர், மொஹமட் நிசாம்தீன் அவ்வாறான செயலில் ஈடுபட்டிருப்பதாக நம்ப முடியாது என்று அமைச்சர் பைஸர் முஸ்தபா கூறியுள்ளார். வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொஹமட் நிசாம்தீன் விளையாட்டுத்துறை அமைச்சரான பைஸர் முஸ்தபாவின் மருமகன் என தெரிவிக்கப்படுகின்றது.  அவரின் நியாயத்தன்மை சம்பந்தமாக பூரண நம்பிக்கை இருக்கின்ற போதிலும் அவுஸ்திரேலியாவின் சட்டம் செயற்படுகின்ற முறை சம்பந்தமாக தமது குடும்பத்தின் அனைவரும் மதிப்பளிப்பதாக கூறியுள்ளார். தனது மருமகன் மொஹமட் நிசாம்தீன் கைது செய்யப்பட்டதிலிருந்து இதுவரை அவருடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  (மேலும்) 05 09.18

._______________________________________________________________________

எதிர்காலஅச்சுறுத்தல்: நீருக்கான போராட்டம்:

கருணாகரன

இப்பொழுது வன்னி உட்பட நாட்டின் பல இடங்களும் கடுமையான waitforwater3வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் காலநிலைப் பிறழ்வு கடுமையான வரட்சியையும் பெரு வெள்ளத்தையும் உண்டாக்குகின்றன. இரண்டுமே தீங்கானவை. ஒன்று கடுமையான வரட்சிப் பாதிப்புகள். மற்றது பெருவெள்ளப் பாதிப்புகள். இரண்டிற்குமாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு பெருமளவு நிதியைச் செலவளித்து ஏராளமான சிரமங்களை எதிர்கொள்கிறது. இதை விட மக்கள் சந்திக்கின்ற இடர்கள் அதிகம். இந்த நிலை எதனால் ஏற்படுகிறது?  நமது பொறுப்பற்ற செயற்பாடுகளினால்தான். ஆகவே இதற்கு நாமே பொறுப்பாளிகள். 'நாமா?' எனப் பலரும் பதறியடித்து ஆச்சரியப்படலாம். சிலரோ பலரோ இதை மறுதலிக்கவும் கூடும். ஆனால்இ இதில் யாரும் தப்பவே முடியாது. சூழலிற் பாதிப்பை ஏற்படுத்துவோரே இதில் முக்கியமான பாத்திரவாளிகள், சூத்திரதாரிகள் என்றாலும் கூட சூழல் ஏற்படுத்தும் பாதிப்பென்பதும் இயற்கையின் சீற்றமும் எல்லோரையும் பாதிக்கும். அது தன்னைச் சிதைத்தவர்களை மட்டும் தேர்ந்தெடுத்துத் தாக்கத்தையோ பாதிப்பையோ உண்டாக்காது. ஆகவேதான் எல்லோருக்குமே பொறுப்புண்டு என்று சொல்ல வேண்டியுள்ளது. சூழலில் சிதைவுகளை உண்டாக்குவோரை நாம் கண்டு கொண்டே பேசாதிருக்கிறோம் அல்லவா. அதுவே பெரிய தவறு. அதைச் செய்கின்றவர்கள் அதிகார அடுக்குகளில் இருப்போராக இருந்தால் என்ன? பணமுதலைகளாக இருந்தாலென்ன? படித்தவர்களாக இருந்தால் என்ன அவர்கள் அனைவரையும் நாம் எதிர்த்தேயாக வேண்டும். இல்லையென்றால் அழிவுதான்.   (மேலும்) 04 09.18

._______________________________________________________________________

ஏன் கையை ஏந்த வேண்டும்?

ப. இசக்கி

riverநீர்வரத்துக் கால்வாய்கள் மற்றும் குளங்களை மராமத்து செய்யும் பணிகளை அரசுதான் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அதில் தவறு இல்லை. ஆனால், அரசு தனது கடமையில் தவறாது இருக்க வேண்டும் என விரும்பும் விவசாயிகள், தங்களது கடமையில் இருந்து தவறலாமா?முற்காலத்தில், உள்ளூரில் உள்ள நீர்நிலைகளில் அவ்வூர் மக்களும், விவசாயிகளும் சேர்ந்து குடிமராமத்துப் பணிகளை செய்தனர். குறிப்பிட்ட கால இடைவெளியில் நீர்நிலைகளை ஆழப்படுத்துதல், நீர் தேங்கும் பகுதியை சமப்படுத்துதல், வண்டல் மண்ணை அகற்றுதல், கரைகளைப் பலப்படுத்துதல், புல், பூண்டுகளை அகற்றுதல், மடைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை செய்தனர். பாசனக் கால்வாய்களையும் ஆண்டுதோறும் அவர்களே சீரமைத்துக் கொள்வர். இதற்காக, வீட்டுக்கு ஒருவர் வீதம் செல்வர். செல்ல முடியாதவர்கள் தங்களுக்குப் பதிலாக வேறு ஆள்களை அனுப்பி வைப்பர். வேறு சிலர் பணமாகவும் கொடுப்பார்கள்.   (மேலும்) 04 09.18

._______________________________________________________________________

பிரேசிலில் சம்பா நடனம்

நடேசன்

பிரேசிலில் ரியோ டி ஜெனிரோவோடு சென்ற போது ஒலிம்பிக் நடந்து ஒரு மாதமாகியிருந்தது. லத்தீன் அமரிக்காவில் மட்டுமல்ல உலகத்திலே பெரிய நகரங்களில் ஒன்prasil4று ரியோ டி ஜெனிரோ. அதிகமாக உல்லாசப்பிரயாணிகள் செல்லும் இடம். ஆனால் பல மேற்கத்திய ஊடகங்கள் நகரம் பாதுகாப்பற்றதும், வன்முறையும், போதைமருந்துகளும் மலிந்த இடமென்பதால் இவர்கள் எப்படி ஒலிம்பிக்கை நடத்துவார்களென சொல்லிக்கொண்டிருந்தபோதே வெற்றிகரமாக ஒலிம்பிக்கை நடத்தி முடித்தார்கள்.   ஊடகங்களின் வெருட்டலால் நாங்கள் கொப்பகானா என்ற பிரபலமான இடத்தில் தங்கினோம். மேல்தட்டு உல்லாசப் பிரயாணிகள் நிற்பதுடன் பாதுகாப்பானது. அத்துடன் இங்குள்ள கடற்கரை பிரசித்தி பெற்றது. நாங்கள் இரவில் போய் சேர்ந்தபோது எங்கள் ஹோட்டலில் இருந்து எப்பொழுதும் கலகலப்பாக கொப்பகானா கடற்கரை தெரிந்தது. மங்கிய ஒளியில் கருநீலமான அத்திலாந்திக் கடல் திரண்டுவந்து வெண்மணற்பரப்பில் அடித்து விளையாடிக்கொண்டிருந்தது..     (மேலும்) 04 09.18

._______________________________________________________________________

 யாழ் குடாநாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் கலந்துரையாடல்

 யாழ் குடாநாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும் போதைவஸ்து மற்றும் கலாச்சார சீரழிவுகளை எதிர்காலத்தில் அதிகரிக்காது வண்ணம் பாதுகாத்துக் governor.040918கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயும் விசேட கூட்டங்கள்  வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெற்றது.   சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (03.09.2018) காலை முதல் மாலைவரை கூட்டங்கள் நடைபெற்றன. முற்பகல் 10.30 மணியளவில் யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைப்பாறிய யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், மதுவரித்திணைக்கள அதிகாரிகள் சர்வமதத் தலைவர்கள் புத்திஜீவிகள் உள்ளிட்டோரை சந்தித்து குடாநாட்டின் வன்முறைகள் மற்றும் போதைவஸ்துபாவனை அதிகரித்துள்ளமைக்கான காரணங்கள் தொடர்பில் விரிவாக ஆளுநர் கேட்டறிந்து கொண்டார்.    (மேலும்) 04 09.18

._______________________________________________________________________

கிளிநொச்சியில் முதியவர் ஒருவர் மரத்தில் ஏறி போராட்டம்


கிளிநொச்சியில்  இன்று முதியவர் ஒருவர் காவற்துறையினர் இலஞ்சம் பெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதம நீதியரசர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் மரதkilinochi oldman protest்தில் ஏறி போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.   கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் மேடை நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உரையாற்றிக் கொண்டிருந்தார். இதன் போது மேடையில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், நீதிபதிகள் , கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவற்துறை மா அதிபர், ஆகியோர் அமர்ந்திருந்தனர்.      (மேலும்) 04 09.18

._______________________________________________________________________

முல்லைத்தீவு மாங்குளம் மல்லாவி வீதியில்  மிதிவெடி வெடித்ததில் ஒருவர் பலி மேலும் ஒருவர் காயம்

முல்லைத்தீவு மாங்குளம் மல்லாவி வீதியில் மாங்குளம் நகர இறுதியில் உள்ள தேக்கங்காட்டுப் பகுதியில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வெடிபொருள் வெடித்ததில் அதில் பணி செய்து கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.இன்று (03) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றனர். மிதிவெடி அகற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குறித்த பகுதியில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கையில் வழமை போன்று இன்றும் ஈடுபட்டிருந்த போது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட இருவரும் மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கிளிநொச்சி பரவிபாஞ்சானை சேர்ந்த 28 வயதுடைய பத்மநாதன் திலீபன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் ஓமந்தை பகுதியினை சேர்ந்த 25 வயதுடைய நிதர்சன் என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.  குறித்த நபரின் சடலம் மாங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

._______________________________________________________________________

சுமந்திரன் வெளியிட்ட கருத்தானது - தமிழர்களது மென்மைப் போக்கின் வௌிப்படுத்தல்

சமஷ்ட்டி குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமSumanthiran MPந்திரன் வெளியிட்ட கருத்தானது, அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பால், தமிழர்களது மென்மைப் போக்கை வெளிப்படுத்துவதாக த டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.   காலியில் பெரும்பான்மை இன மக்கள் அதிகம் வசிக்கின்ற பிரதேசம் ஒன்றில் கடந்த வாரம் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ் மக்களுக்கு சமஷ்ட்டி என்பது தேவையில்லை என்றும், தற்போது இருக்கின்ற மாகாணசபை முறைமையையே சற்று மாற்றினால் அதனை ஏற்றுக் கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.   இது தொடர்பிலான செய்தியை பதிப்பித்துள்ள த டைம்ஸ் ஒப் இந்தியா, சமஷ்ட்டி அல்லாமல் மாகாண சபை முறைமையை மேலும் விரிவாக்குதன் மூலம் தமிழ் மக்கள் திருப்தி அடையக்கூடும் என்ற கருத்தின் அடிப்படையில் தமது செய்தியை வெளியிட்டிருக்கிறது.     (மேலும்) 04 09.18

._______________________________________________________________________

பிரேசிலில் 200 ஆண்டுகள்  பழமையான அருங்காட்சியகத்தில் தீ விபத்து: அரிய கலைப்பொருட்கள் நாசம்

ரியோ டீ ஜெனிரோ: பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் உள்ள  200 ஆண்டுகள்  பழமையான அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அரிய கலைப்பொருடbrazil_fire்கள் நாசமாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் 200 ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு பல்வேறு கலை பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஞாயிறு இரவு அங்கு   தீப்பிடித்ததில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருட்கள் எரிந்து சாம்பலாகியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.தீ விபத்து குறித்து அருங்காட்சியகத்தின் துணை இயக்குநர் செய்தி நிறுவனங்களிடம் கூறியதாவது:எங்களுக்கு இது ஒரு தாங்க முடியாத பேரிழப்பு. லத்தீன் அமெரிக்காவிலேயே மிகப் பெரிய அருங்காட்சியகம் இதுதான். நாங்கள் மதிப்பிட முடியாத பல்வேறு பொருட்களை இங்கு சேகரித்து வைத்திருத்தோம். அவை அனைத்தும் நூறு வருடங்கள் பழமை வாய்ந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

._______________________________________________________________________

பயங்கரவாத குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் மருமகன்

பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரான பைஸர் முஸ்தபாவின் மருமகன் என தெரிவிக்கப்படுகின்றது. மொஹமட் நிசாம்தீன் எனும் 25 வயதுடைய இளைஞர் ஒருவரே அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கடந்த 30 ஆம் திகதி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய மாணவர் விசா செப்டம்பர் மாதம் காலாவதியாக உள்ளதாகவும், சிட்னியிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றக் கூடியவர் என்றும் அவுஸ்திரேலியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணம் ஒன்று அவரிடம் இருந்துள்ளதாகவும் அந்த இளைஞர் மீது அவுஸ்திரேலிய பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.  கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பிணை வழங்க அந்நாட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

._______________________________________________________________________

போதைப்பொருள் வைத்திருந்தவர் கைது

யாழ் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகலின் அடிப்படையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத போதைப்பொருளான கரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.  மல்லாகம் உடுவில் பகுதியில் கிராம் 9 மில்லிக்கிராம் 639 தனது உடமையில் வைத்திருந்த சந்தேக நபர் நேற்று (02.09.2018) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மேலதிக விசாரணைகளுக்காக விசேட அதிரடிப்படையினரால் சுண்ணாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் விசேட அதிரடிப்படைக்கு பொறுப்பாக இருக்கும் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீப் அவர்களின் ஆலோசனைக்கு அமைய விசேட அதிரப்படையின் வவுனியா பிரதேச பொலிஸ் அதிகாரி உபாலி வழங்கிய குறிப்புக்கு அமைய விசேட அதிரடிப்படையின் யாழ் நிலைய பொறுப்பதிகாரி புஸ்பகுமார தலைமையிலான அணி குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டதனை தொடர்ந்து அங்கு திரண்ட மக்கள் விசேட அதிரடிப்படையினருக்கு தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

._______________________________________________________________________

‘இராணுவத்தினர் வசம் 4,500 ஏக்கர் உள்ளன’

யாழ்.மாவட்டத்தில், பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில், இன்னும் 4,500 ஏக்கர் காணிகள், இராணுவத்தின் பாவனையில் உள்ளனவென, யாழ். மாவட்ட மேலதிக காணி அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் ஆண்டுகளில், இந்த காணிகள் விடுவிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற நிதிக்குழுவின் கூட்டம், யாழ். மாவட்ட செயலகத்தில்,  அக்குழுவின் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில், இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த ​சுப்பிரமணியம் முரளிதரன், மீள்குடியேற்றம், நிதி ஒதுக்கீடு மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்டவை பற்றி எடுத்துரைத்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

._______________________________________________________________________

சுமார் 3 கோடி ரூபாய் வௌிநாட்டு நாணயத்தாள்களுடன் இளைஞரொருவர் கைது

இரண்டு கோடியே 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான வௌிநாட்டு நாணயத்தாள்களுடன் 25 வயதுடைய இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கையில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணிக்க வந்த இவரின் பயணப்பொதியில் இருந்து குறித்த வௌிநாட்டு நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

._______________________________________________________________________


சீனாவில் அலுவலகத்தில் தூங்கலாம்?

சீனாவில், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் காலை 11 மணியிலிருந்து 1 மணிக்குள் எப்போது வேண்டுமானாலும், நிதானமாக சென்று சாப்பிட்டு வரலாம். வந்ததும், ஒரு குட்டித் தூக்கமும் போடலாம். இந்த தூக்கத்தை நிர்வாகம் வரவேற்கிறது. மேனேஜரும், "ஏன் தூங்கினே?' என கேள்வி கேட்க மாட்டர்! பிற்பகல் ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு வேலை செய்வதன் மூலம், உற்பத்தித் திறனை கூட்ட இயலும் என்பது சீனர்களின் நம்பிக்கை. நம்மில், பலர் வேலை பளு காரணமாக, பிற்பகல் உணவையே கைவிடுவதை பார்த்திருப்போம். ஆனால், சீனாவில் பிற்பகல் சாப்பாடு ரொம்ப அவசியம்! எவ்வளவு வேலை இருந்தாலும், சாப்பிட்டுவிட்டுதான், மீதி வேலையை தொடருவர்.

._______________________________________________________________________

இந்தியா மற்றும் ஏனைய அதிகார சக்திகளான அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்றவை சீனாவின் விரிவாக்கத்தாலும் மற்றும் திருகோணமலையின் மூலோபாய முக்கியத்துவத்தினாலும் அச்சமடைந்துள்ளன.

                                               பி.கே.பாலச்சந்திரன்

ஸ்ரீலங்காவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான திருகோணமலை அதன் சிறப்பு மிகு இயற்கை அழகு காரணமாக நஷனல் ஜியோகிரபிக் தொலைக்காட்சியில் சtrincomalee indiaிறப்பம்சமாக இடம்பெறும் அளவுக்கு பிரசித்தி பெற்றது. ஆனால் வரலாற்று ரீதியாக மிகவும் வித்தியாசமான ஒன்றுக்காக குறிப்பிடப்படுகிறது - ஒரு கடற்படைத் தளமாக அமையும் அளவுக்கு அதன் மூலோபாய மதிப்பு உள்ளது.   17ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் காலத்திலிருந்தே திருகோணமலையின் இராணுவ மதிப்பு உலக சக்திகளால் புரிந்துகொள்ளப்பட்டது. டச்சுக்காரர், பிரித்தானியர், பிரெஞ்சுக்காரர், இந்தியர், அமெரிக்கர் மற்றும் ஜப்பானியர்கள் அடுத்தடுத்து அதன்மீது கண் வைக்கலானார்கள் சீனாவின் விரிவாக்கத்தால் ஸ்ரீலங்காவிற்கு ஒரு கடல்வழி பாதுகாப்பு அச்சுறுத்தலின் சாத்தியம்  உள்ளதைக் காரணம்காட்டி, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் என்பன ஸ்ரீலங்காவின் நலன்களுக்காக தங்கள் பிரசன்னத்தை ஏற்றுக்கொள்ளும்படி ஸ்ரீலங்கா அரசாங்கத்தை சம்மதிக்க வைக்க முயற்சிப்பதின் மூலம் திருகோணமலைக்கான ஒரு நேர்வழியினை அமைக்க முயலுகின்றன.   (மேலும்) 03 09.18

._______________________________________________________________________

நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 16

மரஆலையில்  பீனிக்ஸ் பறவையாகத் தோன்றிய மக்கள் விடுதலை முன்னணி

                                                                                  ரஸஞானி

தென்னிலங்கையில் தோன்றிய அரசியல் கட்சிகள் பற்றி புதிதாக எதுவும் சொல்லவேண்டியதில்லை. அவற்றுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது.  இலங்கை சுதந்திரம் jvp0309பெற்றதும் தொடங்கிய ஐக்கிய தேசியக்கட்சியின் நிறம் பச்சை. அதன் தேர்தல் சின்னம் யானை. அதிலிருந்து எஸ்.டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்கா பிரிந்துவந்து தொடக்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறம் நீலம். அதன் தேர்தல் சின்னம் கை.   இவை இரண்டினதும் தலைமைக்காரியாலயங்கள் கொழும்பில் மருதானை டார்லி ரோட்டிலும் (ஶ்ரீல.சு.கட்சி) கொள்ளுப்பிட்டியில் காலி வீதியிலும் (ஐ.தே.க. ஶ்ரீகோத்தா)  அமைந்துள்ளன. லங்கா சமசமாஜக்கட்சியின் காரியாலயம் யூனியன் பிளேஸிலும் இலங்கை கம்யூனிஸ்ட்  கட்சியினது    (மாஸ்கோ சார்பு) பொரளை கொட்டாவீதியிலும் ( இன்று கலாநிதி என். எம். பெரேரா வீதி) அமைந்துள்ளன.இவை இவ்விதமிருக்க, ஶ்ரீல.சு.க.வுடன் பிரிந்து தனது மனைவி சந்திரிக்காவுடன் சேர்ந்து விஜயகுமாரணதுங்காவும் மக்கள் கட்சி என்ற ஒரு அரசியல் இயக்கத்தை தொடக்கி, கொழும்பில் தெமட்டகொடையில் அதன் காரியாலயத்தை அமைத்தார்.  (மேலும்) 03 09.18

._______________________________________________________________________

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து எங்களை விரட்டி விட்டார்கள்

மக்கள் சக்தி ஆர்ப்பாட்ட பேரணி தற்போதைய அரசாங்கத்தை விரட்டுவதற்கான முதல் கட்ட நடவடிக்கை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று (02) நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 67 ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும் எனவும் தான் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வலுவானது எமது ஆட்சிக்காலத்திலேயே எனவும் அவ்வாறு வலுவான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையே தற்போதைய நிர்வாகிகளிடம் ஒப்படைத்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  தங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விரட்டியதாகவும் அதன் பின்னரே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவானதாகவும் முன்னாள் ஜனாதிபதி அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

சுமந்திரனின் கருத்து தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும்


தமிழ் தேசிய கூட்டமைப்பை திசை திருப்பு முயற்சிக்கும் சுமந்திரனின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.sumanthiran2   தமிழ் மக்களுக்கு சமஸ்டி அரசியல் தீர்வு தேவையில்லை என காலியில் வைத்து எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். தற்போதுள்ள ஒற்றையாட்சி முறையில் சில மாற்றங்களை மேற்கொண்டால் அதனை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக, சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், நேற்றைய தினம் கருத்து தெரிவித்திருந்த வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வன் தமிழ் தேசிய கூட்டமைப்பு, சுமந்திரனின் இந்த கருத்து தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து, எமது செய்தி சேவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிகட்சிகளை தொடர்புக்கொண்டு வினவியிருந்தது.    (மேலும்) 03 09.18

._______________________________________________________________________

நாளுக்கு நாள் ஊழல் மோசடிகள் அதிகரிக்கின்றது

நாட்டினுல் நாளுக்கு நாள் ஊழல் மோசடிகள் அதிகரித்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் இவற்றுடன் தொடர்புபட்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.அண்மையில் மேல் மாகாண சபைியலும் கொழும்பு மாநகர சபையிலும் இடம்பெறும் ​மோசடிகள் தொடர்பில் தனது கட்சி தலையிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

காய்ச்சல் பரவல் எதிரொலி!: சீனாவில் 38,000 பன்றிகள் கொன்று குவிப்பு

பெய்ஜிங்: சீனாவில் வேகமாக பரவி வரும் காய்ச்சல் பயம் காரணமாக 38,000-க்கும் மேற்பட்ட பன்றிகள் கொன்று குவிக்கப்பட்டன.இதுகுறித்து சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜின்ஹுவா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளதாவது:சீனாவின் வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பன்றி காய்ச்சல் ஐந்து மாகாணங்களில் வேகமாக பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எனப்படும் இதன் முதல் பாதிப்பு லியோனிங் மாகாணத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டறியப்பட்டது. பின்னர் அது படிப்படியாக தெற்கு பகுதிகளுக்கும் பரவியது. தற்போதைய நிலையில், 1,000 கி.மீ. வரையில் அதன் பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது.நாடு முழுவதும் காய்ச்சல் வேகமாக பரவி வருவதற்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளே முக்கிய காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, காய்ச்சலின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 38,000-க்கும் மேற்பட்ட பன்றிகள் சுகாதாரத் துறையினரால் அழிக்கப்பட்டுள்ளன.பன்றிக் காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இருப்பினும், நிலைமை கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது என வேளாண் அமைச்சக செய்தித் தொடர்பாளரை மேற்கோள்காட்டி ஜின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.உலகளவில் பன்றிகள் வளர்ப்பில் பாதி பங்களிப்பை சீனா மட்டுமே வழங்கி வருகிறது. ஏனெனில் அங்கு தனிநபர் பன்றி இறைச்சி நுகர்வு அதிகம் என ஐ.நா.வின் எஃப்.ஏ.ஓ. அமைப்பு தெரிவித்துள்ளது.

._______________________________________________________________________

போலி ஆவணங்களை தயாரிக்கும் நிலையம் சுற்றிவளைப்பு

நிட்டம்புவ - கலகெடிஹேன பிரதேசத்தில் முன்னெடுத்து செல்லப்பட்ட போலி ஆவணங்களை தயாரிக்கும் நிலையம் ஒன்று காவற்துறையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.குறித்த சுற்றிவளைப்பு நேற்று அரவு மேற்கொள்ளப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய, இவ்வாறு சுற்றிவளைப்பு மேற்கோள்ளப்பட்டுள்ளதுடன், 32 வயதுடைய நபர் ஒருவர் இதன்போது கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.இதன்போது போலி ஆவணங்களை தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்கள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

மகாவலி விவகாரம் என்பது இனப்பிரச்சினையின் இன்னொரு வடிவம்

 -    கருணாகரன்

உலகமே நீருக்காக அலைபாய்ந்து கொண்டிருக்கும்போது ஒரு நதியின் வருகையைக் கண்டு, ஒரு மக்கள் கூட்டம் அச்சப்படுவது இலங்கையில்தானாக இருக்க வேண்டும். இந்த அmahaveli protestச்சம் நாற்பது ஆண்டுகளாக  நீடிக்கிறது. இது மேலும் நீடிக்கலாம். “மகாவலிகங்கை வடக்கு நோக்கிச் செல்கிறது” என்று அரசாங்கம் அறிவிக்கும்போதெல்லாம் பெரும்பாலான தமிழர்கள் பதைப்போடு தங்களுடைய நெஞ்சைப் பொத்திக் கொள்கிறார்கள். அப்படித்தான் கடந்த 28.08.2018 இலும் முல்லைத்தீவில் நாலாயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஒன்று கூடி வடக்குக்கான மகாவலித்திட்டத்தை மறுதலித்துக் குரலெழுப்பியிருக்கிறார்கள். யுத்தத்திற்குப் பிறகு முல்லைத்தீவில் போராட்டமொன்றுக்காகக் கூடிய மிகப் பெரிய மக்கள் திரள் இது.  எப்படி இந்தளவு மக்கள் ஒன்று கூடினார்கள் என்பது பலருக்கும்  ஆச்சரியம். அந்தளவுக்கு இந்தப் போராட்டம் – இந்த மகாவலி விவகாரம் - பெரியதா என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.    (மேலும்) 02 09.18

._______________________________________________________________________

கிளிநொச்சியில் கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சியில் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைதான கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கிஸ்னகீதன் என்பவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.யாழ் சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்த பின்னர் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஜெசிந்தன் சந்தேகநபரை இன்று பிற்பகல் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினார்.இதன்போது பொலிசாரினால் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை உண்மை என சந்தேகநபர் மன்றில் ஏற்றுக் கொண்டார்.இதன் பின்னர் சந்தேகநபரை எதிர்வரும் 14 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது.

._______________________________________________________________________

முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றம் அமைக்கும் அவசியம் இல்லை

குற்றச்சாட்டுகளை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும்

முல்லைத்தீவில் அரசாங்கம் எந்த சிங்கள குடியேற்றத்தையும் உருவாக்காது. அவ்வாறான எந்தத் தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாதென இணை அமைச்சரவை பேச்சாளர் அRajitha senaratna1மைச்சர் ராஜித சேனாரத்ன நேற்றுத் தெரிவித்தார்.  சிங்களக் குடியேற்றம் தொடர்பில் சாட்சி இருப்பதாக கூறும் வட மாகாண முதலமைச்சர், இந்த விடயம் தொடர்பில் முதலில் மத்திய அரசாங்கத்துடன் பேசியிருக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்படுவதாக மக்கள் நேற்று முன்தினம் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  அமைச்சர் இது தொடர்பாக மேலும் கூறுகையில்,இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஆராய வேண்டும். சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்றார்.   (மேலும்) 02 09.18

._______________________________________________________________________

கிளிநொச்சியில் பாடசாலை மாணவி தற்கொலை

கிளிநொச்சி திருமுருகண்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 09ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.14 வயதுடைய முருகேசு அபிசாலினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை என்பதுடன், மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

._______________________________________________________________________

கண்காணிக்கப்படுகிறோம்!

செல்லிடப்பேசியிலும் அறிதிறன்பேசியிலும் தங்களுக்குத் தேவையான நபர்களின் எண்களை, பயன்படுத்துபவர்கள் சேமித்து வைப்பது வழக்கம். வெளியே இருநgoogle watch்து எந்த ஒரு எண்ணையும் முன் அனுமதியில்லாமல் இணைத்துவிட முடியாது. இந்தியாவிலுள்ள அறிதிறன்பேசி (ஸ்மார்ட்போன்') பயனாளிகளுக்கு திடீர் அதிர்ச்சி. அவர்களுடைய அறிதிறன்பேசியில் சேமித்துள்ள எண்களில் ஆதார் சேவையை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் உதவி எண் அவர்கள் கேட்காமலேயே இடம்பெற்றிருந்தது. பிரச்னை விவாதப் பொருளானவுடன் மத்திய சட்டம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். அறிதிறன்பேசியை உருவாக்கிய கூகுள் நிறுவனம் தாங்கள்தான் அதற்குக் காரணம் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது. கூகுள் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தன்மறைப்புநிலையை (பிரைவஸி') மீறி அவர்களது அறிதிறன்பேசிகளில் நுழைந்ததற்கு மன்னிப்பு கேட்டது. 2014-இல் சில முக்கியமான அவசர சேவைக்கான எண்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு எல்லா அறிதிறன்பேசிகளிலும் ஒரு புதிய முறையை இணைத்ததாகவும் தவறுதலாக இந்த எண்ணும் இணைக்கப்பட்டதாகவும் தெரிவித்தது. இது குறித்து தாங்களே விசாரணை நடத்தப்போவதாகவும் தெரிவித்தது.     (மேலும்) 02 09.18

._______________________________________________________________________

யாழ்ப்பாணம் – அச்சுவேலி விடுவிக்கப்பட்டுள்ள காணி

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது 6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டு வலிகாமம் பகுதியில் இருந்து குறித்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதனையடுத்து, குறித்த காணியில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர்.இந்த நிலையில், தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள், அச்சுவேலி இராணுவ முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. பிரிவுக்கு உதவிகள் நிறுத்தம்: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன்: பாலஸ்தீன அகதிகளுக்கு நிவாரண உதவிகளைச் செய்து வரும் ஐ.நா. பிரிவுக்கு அளிக்கப்பட்டு வந்த அனைத்து உதவிகளையும் நிறுத்துவதாக டிரம்usa unoப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.  இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹெதர் நாவெர்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. பிரிவு (யுஎன்ஆர்டபிள்யூஏ) அமைப்பிடமிருந்து உதவி பெறுவோர் வரைமுறையோ, முடிவோ இல்லாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த அமைப்பு செயல்படும் விதமோ, அது நிதியைக் கையாளும் விதமோ சரி செய்ய முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பேரிடர் காலங்களில் செயல்படுவதைப் போலவே அந்த அமைப்பு எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. யுன்ஆர்டபிள்யூஏ-வின் செயல்பாடுகளை நன்கு ஆய்வு செய்த அமெரிக்க அரசு, அந்த அமைப்புக்கு இனியும் உதவிகள் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது.   (மேலும்) 02 09.18

._______________________________________________________________________

 முப்படையிலிருந்து சட்டவிரோதமாக தப்பிச்சென்ற 10,626 பேர் கடந்த 10 மாதங்களில் கைது

முப்படையிலிருந்து சட்டவிரோதமாக தப்பிச்சென்ற 10,626 பேர் கடந்த 10 மாதங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.முப்படைகளின் அதிகாரிகளாகப் பணியாற்றிய 28 பேர் கைது செய்யப்பட்டவர்களுள் அடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார்.இவர்களில் 8805 இராணுவத்தினரும் அடங்குகின்றனர்.கைது செய்யப்பட்ட படையினர் சட்டரீதியாக பணி விலகல் ஆவணங்களை சமர்ப்பித்ததன் பின்னர் விடுவிக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

._______________________________________________________________________

யாழ்ப்பாணத்தில் ஆவா குழு ஒரு சமூக நிகழ்வு

                                      கெலும் பண்டார

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான் பேராசிரியர் பி. பாலசுந்தரம்பிள்ளை, வடக்கில் தனது வடபகுதி கல்வி வாழ்க்கையின் மூலம் முன்னோடியாகத் திaavagroup3கழ்பவர் தெரிவிப்பது, மக்கள் யுத்தத்துக்கு பின்னான சூழலை பொருட்களிலும், சேவைகளிலும் மற்றும் பயணங்களிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அனுபவித்து மகிழ்ந்தாலும் வேலையில்லாப் பிரச்சினை மிகவும் தீவிரமான ஒரு பிரச்சினையாக உள்ளது, அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும்.“யாழ்ப்பாணத்தில் மட்டும் 12,000 பட்டதாரிகள் வேலையற்று இருக்கிறார்கள். இது ஒரு பிரதான பிரச்சினை. மற்றையது சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள். இங்கு குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அவை சிறிய அல்லது அற்ப குற்றங்கள். அரசாங்கம் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்த வேண்டும். இது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் சமமான கருத்து” என்று அவர் தெரிவித்தார்.ஆவா குழுவினரால் உருவாக்கப்படும் குற்றங்கள் எவ்வளவு தீவிரமானவை என்று கேட்டதுக்கு அவர் சொன்னது, “ அதைப்பற்றி எனக்குத் தெரியாது. இருந்தும் பத்திரிகைகளில் இங்கும் அங்குமாக நான் குற்றங்களைப் பற்றி வாசித்துள்ளேன். குற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. அதனால்தான் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சிலதைச் சொல்லி பிரச்சினையை வரவழைத்துக் கொண்டார்” என்று.குற்ற அலைகளுக்கான காரணங்கள் பற்றிய அவரது சமூகவியல் ஆய்வில் அவர் கண்டது, வேலையில்லாப் பிரச்சினையெ பிரதான காரணம் என்று.   (மேலும்) 01 09.18

._______________________________________________________________________

கிளிநொச்சியில் பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

பொலீஸ் மா அதிபருக்கான  மகஜரும் கையளிக்கப்பட்டது

வடக்கில் அண்மைக் காலமாக் பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற வன்முறைகளுக்கு எதிராகவும்இ பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் கொலைசெய்யப்பட்ட மIMG_3880ுறிகண்டியைச் சேர்ந்த கர்ப்பிணியான கறுப்பையா நித்தியகலா விடயத்தில் விரைவாக  குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டியும்  இன்றைய தினம்(31-08-2018); ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.   கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசே ! பெண்களின் பாதுகாப்பினை உறுதி   செய் இஅரசே!   பெண்களின் பாதுகாப்பிற்கான சட்டத்தை வலுவாக்கு! நித்தியகலா கொலையாளிகளை விரைந்து கைது செய் தாமதியாது  நீதி வழங்கு  நாட்டில் கேள்விக்குள்ளாகிறது   சிறுமிகள்  பெண்களின் பாதுகாப்பு. சட்டவிரோத போதை பொருள் பாவனையாளர்கள் மீதும்  கடும் சட்ட நடவடிக்கை வேண்டும்  வழங்கும்  தண்டனைகள் வருங்காலத்தில் குற்றங்களை தடுக்க வழி செய்ய வேண்டும்.   (மேலும்) 01 09.18

._______________________________________________________________________

படித்தோம் சொல்கின்றோம்:

நீடித்த போரின் வலி சுமந்த மக்களின் கதைகளைப்பேசும் "வன்னியாச்சி"

வன்னிபெருநிலப்பரப்பின் ஓலங்களை படைப்பிலக்கியத்தில் ஒலிக்கச்செய்த தாமரைச்செல்வி

                                                                                   முருகபூபதி

நீடித்த போரினால் வலிசுமந்த மக்களின் கதைகளைச்சொல்லும் தாமvanniayarachiரைச்செல்வியின் " வன்னியாச்சி" பெரும் கதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 37 கதைகளையும், ஜீவநதியில் இம்மாதம் வெளியான அவனும் அவளும் என்ற சிறுகதையையும் சேர்த்து மொத்தம் 38 கதைகளையும் படித்து முடித்த தருணத்தில், தமிழ் ஊடகங்களில்                  " அரசின் மகா வலி - தமிழருக்கு மன வலி " என்ற தலைப்பிலும் தொனியிலும்  செய்திகள்  வெளிவந்துகொண்டிருக்கின்றன.மக்கள் வலிசுமந்த மேனியராகவே கடந்த மூன்றரை தசாப்த காலமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை, தனது கதைகளின் ஊடாக பதிவுசெய்துவருபவர் தாமரைச்செல்வி. இவரது எழுத்துக்களை இலங்கையில் நான் இருந்த காலப்பகுதியில் படித்திருந்தாலும்,  நேரில் சந்தித்துப்பேசியது வெளிநாடான தற்போது நான் வாழும் அவுஸ்திரேலியாவில்தான்.சில வருடங்களுக்கு முன்னர் எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழாவில் அவரது சமுகம் இன்றியே அவரது பச்சை வயல் கனவு என்ற நாவலை அறிமுகப்படுத்தியிருந்தோம்.   (மேலும்) 01 09.18

._______________________________________________________________________

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர் தொடர்பில் மேலும் பல  தகவல்கள்


ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவித்தnizaு சிட்னியில் கைதான இலங்கையர், அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மெல்கம் டர்ன்புல் மற்றும் முன்னாள் வெளிவிவார அமைச்சர் ஜூலி பிசப் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   அவுஸ்திரேலிய காவல்துறை தகவல்களை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. மாணவர் வீசாவில் அவுஸ்திரேலியா சென்று சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் 25 வயதான மொஹமட் நிசாம்தீன் என்ற இலங்கையரே நேற்றைய தினம் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார்.  அவுஸ்திரேலியா கென்சிங்டனில் உள்ள நியூ சௌத் வேள்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவுஸ்திரேலிய பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டார். பல்கலைக்கழக ஊழியர் ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து அவரின் இருப்பிடம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.    (மேலும்) 01 09.18

._______________________________________________________________________

ஆப்பிரிக்கா: 5 லட்சம் குழந்தைகள் பலி?


பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டை காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் 5 லட்சம் குழந்தைகள் பலியாகியிருக்கலாம் என்று இதுகுறித்து ஆய்வு செய்து வரும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.இதுகுறித்து பிரான்ஸில் வெளியாகும் தி லான்செட்' என்ற மருத்துவ அறிவியல் இதழில் வெளியிட்டப்பட்டுள்ள அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 1995 முதல் 2015-ஆம் ஆண்டு வரையில் ஆப்பிரிக்க நாடுகளில் குழுக்களிடையே நடந்த 15இ441 மோதல்களில் சுமார் 10 லட்சம் பேர் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு இறப்புகளையும் வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுமார் 5 லட்சம் குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. காயம் மற்றும் பட்டினி காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

கிளிநொச்சி கொலை தொடர்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சந்தேக நபர்

கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட நித்தியகலாவினைக் கொலnkalamurderை செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்னகீதன் என்பரே குறித்த பெண்ணை கழுத்து நெரித்தே கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்   குறித்த அவரது ஒப்புதல் வாக்கு மூலத்தில் குறித்த பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருந்தது, அவரது வயிற்றில் வளந்த குழந்தை என்னுடையது தான் அதனால் அவள் தன்னை கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தினாள்.பின்னர் நாம் இருவரும் நஞ்சு குடித்து இறந்துவிடுவோம் என்று முடிவெடுத்து 28 ஆம் திகதி அவள் கடமை முடிந்து தொழிற்சாலையை விட்டு வெளியில் வந்ததும் நான் எனது வீட்டில் இருந்து நடந்து வந்து அவளது மோட்டார் சைக்கிலில் ஏறிக் கொண்டேன். பின்னர் அம்பாள் குள வீதியூடாக கிளிநொச்சி வந்து உள் பாதைகளால் கரடிப்போக்கு வந்து பின்னர் மீண்டும் உள் பாதைகளால் சம்பவ இடத்திற்கு சென்றோம்.    (மேலும்) 01 09.18

._______________________________________________________________________

பதுளை தமிழ் அதிபரின் அடிப்படை உரிமை ஒக்டோபர் 11ம் திகதி

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை ஒக்டோபர் மாதம் 11ம் திகதி விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து தன்னை திட்டியதுடன் அச்சுறுத்தியதாகவும் குற்றம் சுமத்தி பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் ஆர். பவானி தாக்கல் செய்த மனு இன்று அழைக்கப்பட்டிருந்தது.நீதிபதிகளான புவனேக அலுவிகார மற்றும் எல்.டீ.பீ. தெகிதெனிய ஆகியோர் முன்னிலையில் மனு அழைக்கப்பட்ட போது பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.பாடசாலையில் அனுமதிப்பதற்காக, முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவிடம் இருந்து எடுத்துக் கொண்டு வந்த கடிதத்தை நிராகரித்ததால், முதலமைச்சர் தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து தன்னை திட்டி, அச்சுறுத்தியதாக அதிபர் தனது மனுவில் கூறியுள்ளார்.இதன் காரணமாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அதிபர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

._______________________________________________________________________

எதிர்காலத்தில் சமஷ்டி முறைமைக்கு வாய்ப்புண்டா?

- சேகுதாவூத் பஸீ்ர்

இலங்கையின் வடபுலத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான இராஜதந்திரப் போர் மையங்கொள்ளத் தொடங்கியிருப்பதை அனைவரும் அறிவோம்.china india   வடக்கில் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நிவாரண வீடமைப்பைக் கையாள்வது சீனாவா இந்தியாவா என்பதில் இழுபறி நிலை காணப்படுகிறது. இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தம்பக்கம் இழுப்பதில் சீனா முந்திக் கொண்டது.   ஆயினும், பின்னர் கூட்டமைப்பு இந்தியாவின் பக்கம் தள்ளாடியவாறு சாய்ந்துவிட்டதைச் செய்திகள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக சீனா ஒரு வகைச் சீற்றத்தோடு,வடக்கின் வீடமைப்புத் திட்டத்தில் இந்தியாவின் தலையீடு உள்ளதா என்று இலங்கை அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.அதே நேரம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் முன்னிலையில் - இந்தியாவுக்கும் பலாலிக்குமிடையில் இந்தியத் தனியார் விமானப் போக்குவரத்தை உடனடியாக ஆரம்பிப்பது என்ற முடிவை இந்தியாவும் இலங்கையும் எடுத்துள்ளன.      (மேலும்) 31 08.18

._______________________________________________________________________

கிளிநொச்சியில் பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் நேற்றைய தினம் கொலைசெய்யபட்ட யுவதிக்கு நீதி  கோரியும் நாளை(31-08-2018) கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் ஏற்பாட்டில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் அவ்வமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் அண்மைக் காலமாக எமது பிரதேசங்களில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற வன்முறைகளுக்கு எதிராகவும், பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும், நேற்றைய தினம் கொலைசெய்யப்பட்ட முறிகண்டியைச் சேர்ந்த கறுப்பையா நித்தியகலா விடயத்தில் விரைவாக  குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டியும்  நாளைய தினம் வெள்ளிக்கிழமை (31-08-2018) அன்று கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் காலை பத்து மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. எனவே இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

._______________________________________________________________________

 கிளிநொச்சியில் கொலையுண்ட யுவதி - கர்ப்பிணி

 கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்nithiyakalaளது.  கொலையுண்ட யுவதி ஐந்து மாத கர்ப்பிணி என கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். சட்ட வைத்திய அதிகாரி உ. மயூரதன் குறிப்பிட்டார். கர்ப்பம் தரித்தமையால் இந்த கொலை இடம்பெற்றிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  யுவதியின் கொலை தொடர்பான விசாரணைக்கு இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.   யுவதி பயன்படுத்தியதாகக் கூறப்படும் கையடக்கத்தொலைபேசி மலையாளபுரம் பகுதியிலிருந்து நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொலைச்சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொலைபேசியை பகுப்பாய்விற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.    (மேலும்) 31 08.18

._______________________________________________________________________

ஆயுத குற்றச்சாட்டின் பின்னணியில் இனவாத சக்திகள் செயற்படுகின்றது


விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களை கொள்வனவு செய்து முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்கியதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்த நெடுஞ்சhisbullah 1ாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இந்த விடயம் தொடர்பில் முறையான தீவிர விசாரணையொன்று மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, இக்குற்றச்சாட்டின் பின்னணியில் தேச விரோத, இனவாத சக்திகள் செயற்படுவதாகவும் இதனால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று (30) அனுப்பி வைத்த விசேட கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.   (மேலும்) 31 08.18

._______________________________________________________________________

கம்பளை உடபலாத்த அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

கம்பளை உடபலாத்த பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான ஒருங்கkampazhaiிணைப்புக்குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை (30) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் உடபலாத்த பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான கம்பளை நகரசபை தலைவர் சமந்த அனுரகுமார, கம்பளை பிரதேச சபையின் உப தலைவர் அசல அமரசேன, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் பணிப்பாளரும் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமுமான ஜயதிலக ஹேரத், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.நயீமுல்லா, உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    (மேலும்) 31 08.18

._______________________________________________________________________

திருமலையில் திறந்துவைக்கப்பட்ட ஏற்றம் அறக்கட்டளையின் கைத்தொழில் நிலையம் !

 திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட சந்தatamோசபுரம் கிராமத்தில் ஏற்றம் நிறுவனத்தினரால் கைத்தொழில் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  ஏற்றம் அவுஸ்திரேலியாவின் நிதிப் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக் கைத்தொழில் நிலையத்தில் தற்போது ஊதுபத்திகள் தயாரிக்கப்படுகின்றன.   ஏற்றம் நிறுவனப் பணிப்பாளர் இராசரத்தினம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஒழுங்கமைப்பை ஏற்றம் அறக்கட்டளையின் திருகோணைமலை மாவட்ட இணைப்பாளர்  டிசான் அவர்கள் செய்திருந்தார். ஏற்றம் அறக்கட்டளையின் கிளிநொச்சி இணைப்பாளர் மதிவாணன் அவர்களும் இந்திகழ்வில் கலந்துகொண்டார்.   இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலர் அவர்கள் ஏற்றம் நிறுவனத்தின் இம்முயற்சியைப் பாராட்டியதோடு  ஊதுபத்தியுடன் ஏற்கனவே கலந்தாலோசிக்கப்பட்ட செருப்பு மற்றும் மெழுகுவர்த்தி தயாரிப்பையும் ஆரம்பிக்கவேண்டும் என்று ஏற்றம் நிறுவனத்தினரைக் கேட்டுக்கொண்டார்.    (மேலும்) 31 08.18

._______________________________________________________________________

ஞானசார தேரருக்கு ஏற்பட்ட  நிலைமை..

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இன்று சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.  எனினும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ம் திகதி மீண்டும் அவர் சிறி ஜெயவர்தனபுர வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையை அடுத்து, உடல்நிலை குறித்த ஆய்வுக்காக அவர் மீண்டும் அங்கு அழைத்துச் செல்லப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடந்த தினம் அவருக்கு 6 ஆண்டுகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை அறிவிக்கப்படும் போது, சிறுநீரக தொகுதி கோளாறு காரணமாக அவர் சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

._______________________________________________________________________

 மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம்

கொழும்பு மாளிகாவத்தையில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.கொழும்பு, மாளிகாவத்தை ஜும்ஆப் பள்ளி சந்தியில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.சந்தேகநபர்களை கைது செய்வதற்காக மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

._______________________________________________________________________

வடக்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

வடக்கு மாகாண பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளை தடுத்த நிறுத்த கோரி இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த ஆர்ப்பாட்ட பேரணியை வவுனியா மாவட்ட பெண்கள் அமைப்பு முன்னெடுத்துள்ளது. பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும் அதனை தடுக்க உரிய சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதவிர, வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் வர்த்தகத்தை தடுப்பதன் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க முடியும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்னி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி காவற்துறைமா அதிபர் அனுர அபேவிக்ரமவிடம் கையளித்துள்ளனர்.

._______________________________________________________________________

 பொருளாதார நெருக்கடியில் சிக்கவுள்ள நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்

 Moody எனப்படும் சர்வதேச நிதி தர நிர்ணய நிறுவனம் அண்மையில் தமது புதிய தரப்படுத்தலை வௌியிட்டது.உலகில் பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மற்றும் அபாய நிலையிலுள்ள நாடுகள் தொடர்பில் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த அறிக்கைக்கு அமைய, கடந்த காலப்பகுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பு அதிகரித்துள்ளது.எனினும், முறையான நீண்ட கால அந்நிய செலாவணி விநியோகமின்மையால், 2019 – 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மீள செலுத்தப்படவேண்டிய சர்வதேசக் கடன் அதிகரித்துள்ளது.இதனால் இலங்கை மீதான சுமை அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.சர்வதேசக் கடன் உள்ளிட்ட மேலும் சில விடயங்கள் காரணமாக, சர்வதேச நிதி நிலைமைக்குள் இலகுவில் அகப்படக்கூடிய நாடு என இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

மாவலி:   வேண்டுமா வேண்டாமா?

-         கருணாகரன்

அப்பொழுது எனக்குப் பத்து வயது என நினைக்கிறேன். அது 1970 கள். “வடக்கே வருகிறது மாவலி” என்று ஊரில் கதைத்தார்கள். “மாவலி வந்தால்  நல்லா வெள்ளாமை செய்யலாmahavaliம்” என்று சொன்னார் சின்னமாமா.  “நீ வெள்ளாமை செய்யிறதைப் பற்றிக் கதைக்கிறாய். ஆனா, நீ நினைக்கிற மாதிரி மாவலித்  தண்ணியெல்லாம் உனக்குக் கிடைக்காது. மாவலியோட சேர்ந்து அந்தத் தண்ணியை எடுக்கிற ஆட்களும் (சிங்களவர்கள்)  வந்திடுவாங்கள். அவங்களுக்குத்தான் தண்ணி கிடைக்கும். தண்ணியோட சேர்த்துக் காணியும் கிடைக்கும். கடைசீல எங்களுக்குக் காணியும் இல்லை. தண்ணியும் இல்லை எண்ட நிலைதான் வரும்” என்றார் பெரிய மாமா. இதை சின்னமாமா ஏற்றுக் கொள்ளவே இல்லை.   “எடுத்ததுக்கெல்லாம் உங்களுக்கு ஒரு நொட்டை. ஒரு வியாக்கியானம். ஒரு சந்தேகம். தண்ணியில்லாமல் வடக்கு வாடிக் கொண்டிருக்கு. வன்னிக் குளங்கள் கனகாலத்துக்குத் தாக்குப் பிடிக்காது. வன்னிக் காட்டை வெட்டி வெட்டி யாழ்ப்பாணத்துக்கு விறகாகவும் மரமாகவும் கொண்டு போனால் காடு, மிஞ்சுமா? காடழிஞ்ச பிறகு மழை எப்பிடி வரும்.    (மேலும்) 30 08.18

._______________________________________________________________________

 பொதுச்சின்னத்தின் கீழ் தமிழ்த் தேசியக்கூட்டமைப்ப கொள்ள வேண்டும்

 கிழக்குத் தமிழர் ஒன்றியம்


கடந்த 22.08.2018 அன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி இராசமாணிக்etoகம் மண்டபத்தில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரிடத்தில் சந்தித்து கலந்துரையாடிய நிகழ்வு கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான த.கோபாலகிருஸ்ணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. அது சம்பந்தமாக அவருடன் நேர்காணல். : எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பொதுச்சின்னத்தின் கீழ் ஒரே அணியாக போட்டியிடுவது சம்பந்தமாக ஏற்கனவே அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் தனித்தனியே சந்தித்துப் பேசி அவர்களின் நிலைப்பாடுகளை அறிந்தோம். எனினும் கிழக்குத் தமிழர் ஒன்றியம் இது சம்பந்தமாக ஒரு முடிவுக்கு வரும் முன்னர் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரிடத்தில் சந்திக்க வைத்து திறந்த கலந்துரையாடலை மேற்கொண்டு மக்களுக்கு உகந்ததான ஒருமித்த முடிவொன்றை எடுப்பதற்கான அதாவது முரண்பாடுகளுக்குள்ளும் ஓர் உடன்பாட்டைக் காணுவதற்கான முன் முயற்சியே இது.   (மேலும்) 30 08.18

._______________________________________________________________________

இரண்டு மாத காலத்தில் அறிக்கை கிடைத்தால் தேர்தல்

எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐந்து பேர் அடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட பின்னர் விரைவாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறியுள்ளது.இன்று (29) காலை அந்தக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு கூறினார்.
எல்லை நிர்ணய அறிக்கை சம்பந்தமாக நியமிக்கப்பட்ட குழுவினால் இந்தப் பிரச்சினை சம்பந்தமாக சரியான அறிக்கை ஒன்றை இரண்டு மாத காலத்தில் வழங்க முடிந்தால், அது சம்பந்தமாக ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை வௌியிட்டதுடன் மூன்று மாத காலப்பகுதியில் தேர்தலை நடத்த முடியும் என்று அமைச்சர் கூறினார்.

._______________________________________________________________________

மகிழ்ச்சியான கணங்கள்

கார்த்திக் ஜீவானந்தம்

kalasuvadu

22.07.18 அன்று கோவை ஆர்த்ரா அரங்கில் குழுமியிருந்த எழுத்தாளர்களுக்கு நடுவில் வயது பத்தொன்பதா, இருபதா என்ற ஐயத்திற்குத் தள்ளிவிடும் இளம் கருந்தலைகள் ஆங்காங்கே கணிசமாகத் தென்பட்டது ஆச்சர்யம். அது காலச்சுவடு பதிப்பகத்தின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா.   (மேலும்) 30 08.18

._______________________________________________________________________

கிளிநொச்சியை உலுக்கியுள்ள கொலை

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டி பகுதியை சேர்ந்த 32 வயதான கறுப்பையா நித்தியகலா என என அடையாளம் காணப்பட்டுள்ளதாklinochchi murderக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் இடுப்புப் பட்டி மற்றும் இரண்டு நீல மற்றும் சிவப்பு பேனாக்கள் இருந்ததால் இவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என சந்தேகம் கொண்டுள்ளனர் பின்னார் கிளிநொச்சியில் உள்ள அனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மேற்பார்வை செய்யும் நிறுவனங்களுக்கு சென்று பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் யாரும் இன்று வருகை தரவில்லையா என வினவியுள்ளனர்.  இதன்போது அறிவியல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு உத்தியோகத்தர் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடைத் தொழிற்சாலை உத்தியோகத்தர்களுடன் அவரது வீட்டுக்கு சென்று விசாரித்ததன் பின்னர் குடும்பத்தாரை வைத்திய சாலைக்கு அழைத்து சென்று சடலம் அவர் தான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பில் குறித்த ஊடகவியலாளரினால் கிளிநொச்சி பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

தமிழகத்தின் மிகப்பெரிய புத்தகத்திருவிழாவில் ஈழத்து எழுத்தாளர் இளங்கோவனுக்கு அளிக்கப்பட்ட கௌரவம்..!

"பல்துறை ஆற்றலாளரான வி.ரி.இளங்கோவன் அவர்களது கவிதைத் தொகுதியினை ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் உலகத் தமிழர் படைப்elamgoபரங்கில் வெளியீடு செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். கலை - இலக்கியவாதியாகவும், முற்போக்குச் சிந்தனையாளராகவும் விளங்கும் இளங்கோவன் புலம்பெயர்ந்து வாழும் பிரான்ஸ் நாட்டிற்கும் எமக்குமிடையே தமிழ் இலக்கியப் பாலமாக - தொடர்பாளராக விளங்குகிறார். பல நூல்களை வெளியிட்டுள்ள குறிப்பிடத்தக்க சிறந்த படைப்பாளியான அவரது கவிதைத் தொகுதியை உலகத்த தமிழர் படைப்பரங்கில் வெளியிட முன்வந்தமைக்காக அவருக்கு மக்கள் சிந்தனைப் பேரவை மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது."  இவ்வாறு ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவரும் எழுத்தாளருமான ஸ்டாலின் குணசேகரன் கடந்த 12-ம் திகதி பகல் (12-08-2018) ஈரோடு புத்தகத் திருவிழா உலகத் தமிழர் படைப்பரங்கில் இடம்பெற்ற கலாபூஷணம், இலக்கியவித்தகர் வி. ரி. இளங்கோவனது "ஒளிக்கீற்று" கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வுக்கு தலைமை வகித்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.   (மேலும்) 30 08.18

.__