Theneehead-1

   Vol:17                                                                                                                               03.09.2018

மகாவலி விவகாரம் என்பது இனப்பிரச்சினையின் இன்னொரு வடிவம்

 -    கருணாகரன்

உலகமே நீருக்காக அலைபாய்ந்து கொண்டிருக்கும்போது ஒரு நதியின் வருகையைக் கண்டு, ஒரு மக்கள் கூட்டம் அச்சப்படுவது இலங்கையில்தானாக இருக்க வேண்டும். இந்த அmahaveli protestச்சம் நாற்பது ஆண்டுகளாக  நீடிக்கிறது. இது மேலும் நீடிக்கலாம். “மகாவலிகங்கை வடக்கு நோக்கிச் செல்கிறது” என்று அரசாங்கம் அறிவிக்கும்போதெல்லாம் பெரும்பாலான தமிழர்கள் பதைப்போடு தங்களுடைய நெஞ்சைப் பொத்திக் கொள்கிறார்கள். அப்படித்தான் கடந்த 28.08.2018 இலும் முல்லைத்தீவில் நாலாயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஒன்று கூடி வடக்குக்கான மகாவலித்திட்டத்தை மறுதலித்துக் குரலெழுப்பியிருக்கிறார்கள். யுத்தத்திற்குப் பிறகு முல்லைத்தீவில் போராட்டமொன்றுக்காகக் கூடிய மிகப் பெரிய மக்கள் திரள் இது.  எப்படி இந்தளவு மக்கள் ஒன்று கூடினார்கள் என்பது பலருக்கும்  ஆச்சரியம். அந்தளவுக்கு இந்தப் போராட்டம் – இந்த மகாவலி விவகாரம் - பெரியதா என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.    (மேலும்) 02 09.18

._______________________________________________________________________

கிளிநொச்சியில் கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சியில் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைதான கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கிஸ்னகீதன் என்பவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.யாழ் சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்த பின்னர் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஜெசிந்தன் சந்தேகநபரை இன்று பிற்பகல் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினார்.இதன்போது பொலிசாரினால் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை உண்மை என சந்தேகநபர் மன்றில் ஏற்றுக் கொண்டார்.இதன் பின்னர் சந்தேகநபரை எதிர்வரும் 14 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது.

._______________________________________________________________________

முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றம் அமைக்கும் அவசியம் இல்லை

குற்றச்சாட்டுகளை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும்

முல்லைத்தீவில் அரசாங்கம் எந்த சிங்கள குடியேற்றத்தையும் உருவாக்காது. அவ்வாறான எந்தத் தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாதென இணை அமைச்சரவை பேச்சாளர் அRajitha senaratna1மைச்சர் ராஜித சேனாரத்ன நேற்றுத் தெரிவித்தார்.  சிங்களக் குடியேற்றம் தொடர்பில் சாட்சி இருப்பதாக கூறும் வட மாகாண முதலமைச்சர், இந்த விடயம் தொடர்பில் முதலில் மத்திய அரசாங்கத்துடன் பேசியிருக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்படுவதாக மக்கள் நேற்று முன்தினம் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  அமைச்சர் இது தொடர்பாக மேலும் கூறுகையில்,இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஆராய வேண்டும். சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்றார்.   (மேலும்) 02 09.18

._______________________________________________________________________

கிளிநொச்சியில் பாடசாலை மாணவி தற்கொலை

கிளிநொச்சி திருமுருகண்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 09ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.14 வயதுடைய முருகேசு அபிசாலினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை என்பதுடன், மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

._______________________________________________________________________

கண்காணிக்கப்படுகிறோம்!

செல்லிடப்பேசியிலும் அறிதிறன்பேசியிலும் தங்களுக்குத் தேவையான நபர்களின் எண்களை, பயன்படுத்துபவர்கள் சேமித்து வைப்பது வழக்கம். வெளியே இருநgoogle watch்து எந்த ஒரு எண்ணையும் முன் அனுமதியில்லாமல் இணைத்துவிட முடியாது. இந்தியாவிலுள்ள அறிதிறன்பேசி (ஸ்மார்ட்போன்') பயனாளிகளுக்கு திடீர் அதிர்ச்சி. அவர்களுடைய அறிதிறன்பேசியில் சேமித்துள்ள எண்களில் ஆதார் சேவையை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் உதவி எண் அவர்கள் கேட்காமலேயே இடம்பெற்றிருந்தது. பிரச்னை விவாதப் பொருளானவுடன் மத்திய சட்டம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். அறிதிறன்பேசியை உருவாக்கிய கூகுள் நிறுவனம் தாங்கள்தான் அதற்குக் காரணம் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது. கூகுள் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தன்மறைப்புநிலையை (பிரைவஸி') மீறி அவர்களது அறிதிறன்பேசிகளில் நுழைந்ததற்கு மன்னிப்பு கேட்டது. 2014-இல் சில முக்கியமான அவசர சேவைக்கான எண்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு எல்லா அறிதிறன்பேசிகளிலும் ஒரு புதிய முறையை இணைத்ததாகவும் தவறுதலாக இந்த எண்ணும் இணைக்கப்பட்டதாகவும் தெரிவித்தது. இது குறித்து தாங்களே விசாரணை நடத்தப்போவதாகவும் தெரிவித்தது.     (மேலும்) 02 09.18

._______________________________________________________________________

யாழ்ப்பாணம் – அச்சுவேலி விடுவிக்கப்பட்டுள்ள காணி

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது 6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டு வலிகாமம் பகுதியில் இருந்து குறித்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதனையடுத்து, குறித்த காணியில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர்.இந்த நிலையில், தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள், அச்சுவேலி இராணுவ முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. பிரிவுக்கு உதவிகள் நிறுத்தம்: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன்: பாலஸ்தீன அகதிகளுக்கு நிவாரண உதவிகளைச் செய்து வரும் ஐ.நா. பிரிவுக்கு அளிக்கப்பட்டு வந்த அனைத்து உதவிகளையும் நிறுத்துவதாக டிரம்usa unoப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.  இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹெதர் நாவெர்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. பிரிவு (யுஎன்ஆர்டபிள்யூஏ) அமைப்பிடமிருந்து உதவி பெறுவோர் வரைமுறையோ, முடிவோ இல்லாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த அமைப்பு செயல்படும் விதமோ, அது நிதியைக் கையாளும் விதமோ சரி செய்ய முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பேரிடர் காலங்களில் செயல்படுவதைப் போலவே அந்த அமைப்பு எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. யுன்ஆர்டபிள்யூஏ-வின் செயல்பாடுகளை நன்கு ஆய்வு செய்த அமெரிக்க அரசு, அந்த அமைப்புக்கு இனியும் உதவிகள் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது.   (மேலும்) 02 09.18

._______________________________________________________________________

 முப்படையிலிருந்து சட்டவிரோதமாக தப்பிச்சென்ற 10,626 பேர் கடந்த 10 மாதங்களில் கைது

முப்படையிலிருந்து சட்டவிரோதமாக தப்பிச்சென்ற 10,626 பேர் கடந்த 10 மாதங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.முப்படைகளின் அதிகாரிகளாகப் பணியாற்றிய 28 பேர் கைது செய்யப்பட்டவர்களுள் அடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார்.இவர்களில் 8805 இராணுவத்தினரும் அடங்குகின்றனர்.கைது செய்யப்பட்ட படையினர் சட்டரீதியாக பணி விலகல் ஆவணங்களை சமர்ப்பித்ததன் பின்னர் விடுவிக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

._______________________________________________________________________

யாழ்ப்பாணத்தில் ஆவா குழு ஒரு சமூக நிகழ்வு

                                      கெலும் பண்டார

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான் பேராசிரியர் பி. பாலசுந்தரம்பிள்ளை, வடக்கில் தனது வடபகுதி கல்வி வாழ்க்கையின் மூலம் முன்னோடியாகத் திaavagroup3கழ்பவர் தெரிவிப்பது, மக்கள் யுத்தத்துக்கு பின்னான சூழலை பொருட்களிலும், சேவைகளிலும் மற்றும் பயணங்களிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அனுபவித்து மகிழ்ந்தாலும் வேலையில்லாப் பிரச்சினை மிகவும் தீவிரமான ஒரு பிரச்சினையாக உள்ளது, அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும்.“யாழ்ப்பாணத்தில் மட்டும் 12,000 பட்டதாரிகள் வேலையற்று இருக்கிறார்கள். இது ஒரு பிரதான பிரச்சினை. மற்றையது சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள். இங்கு குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அவை சிறிய அல்லது அற்ப குற்றங்கள். அரசாங்கம் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்த வேண்டும். இது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் சமமான கருத்து” என்று அவர் தெரிவித்தார்.ஆவா குழுவினரால் உருவாக்கப்படும் குற்றங்கள் எவ்வளவு தீவிரமானவை என்று கேட்டதுக்கு அவர் சொன்னது, “ அதைப்பற்றி எனக்குத் தெரியாது. இருந்தும் பத்திரிகைகளில் இங்கும் அங்குமாக நான் குற்றங்களைப் பற்றி வாசித்துள்ளேன். குற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. அதனால்தான் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சிலதைச் சொல்லி பிரச்சினையை வரவழைத்துக் கொண்டார்” என்று.குற்ற அலைகளுக்கான காரணங்கள் பற்றிய அவரது சமூகவியல் ஆய்வில் அவர் கண்டது, வேலையில்லாப் பிரச்சினையெ பிரதான காரணம் என்று.   (மேலும்) 01 09.18

._______________________________________________________________________

கிளிநொச்சியில் பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

பொலீஸ் மா அதிபருக்கான  மகஜரும் கையளிக்கப்பட்டது

வடக்கில் அண்மைக் காலமாக் பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற வன்முறைகளுக்கு எதிராகவும்இ பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் கொலைசெய்யப்பட்ட மIMG_3880ுறிகண்டியைச் சேர்ந்த கர்ப்பிணியான கறுப்பையா நித்தியகலா விடயத்தில் விரைவாக  குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டியும்  இன்றைய தினம்(31-08-2018); ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.   கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசே ! பெண்களின் பாதுகாப்பினை உறுதி   செய் இஅரசே!   பெண்களின் பாதுகாப்பிற்கான சட்டத்தை வலுவாக்கு! நித்தியகலா கொலையாளிகளை விரைந்து கைது செய் தாமதியாது  நீதி வழங்கு  நாட்டில் கேள்விக்குள்ளாகிறது   சிறுமிகள்  பெண்களின் பாதுகாப்பு. சட்டவிரோத போதை பொருள் பாவனையாளர்கள் மீதும்  கடும் சட்ட நடவடிக்கை வேண்டும்  வழங்கும்  தண்டனைகள் வருங்காலத்தில் குற்றங்களை தடுக்க வழி செய்ய வேண்டும்.   (மேலும்) 01 09.18

._______________________________________________________________________

படித்தோம் சொல்கின்றோம்:

நீடித்த போரின் வலி சுமந்த மக்களின் கதைகளைப்பேசும் "வன்னியாச்சி"

வன்னிபெருநிலப்பரப்பின் ஓலங்களை படைப்பிலக்கியத்தில் ஒலிக்கச்செய்த தாமரைச்செல்வி

                                                                                   முருகபூபதி

நீடித்த போரினால் வலிசுமந்த மக்களின் கதைகளைச்சொல்லும் தாமvanniayarachiரைச்செல்வியின் " வன்னியாச்சி" பெரும் கதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 37 கதைகளையும், ஜீவநதியில் இம்மாதம் வெளியான அவனும் அவளும் என்ற சிறுகதையையும் சேர்த்து மொத்தம் 38 கதைகளையும் படித்து முடித்த தருணத்தில், தமிழ் ஊடகங்களில்                  " அரசின் மகா வலி - தமிழருக்கு மன வலி " என்ற தலைப்பிலும் தொனியிலும்  செய்திகள்  வெளிவந்துகொண்டிருக்கின்றன.மக்கள் வலிசுமந்த மேனியராகவே கடந்த மூன்றரை தசாப்த காலமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை, தனது கதைகளின் ஊடாக பதிவுசெய்துவருபவர் தாமரைச்செல்வி. இவரது எழுத்துக்களை இலங்கையில் நான் இருந்த காலப்பகுதியில் படித்திருந்தாலும்,  நேரில் சந்தித்துப்பேசியது வெளிநாடான தற்போது நான் வாழும் அவுஸ்திரேலியாவில்தான்.சில வருடங்களுக்கு முன்னர் எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழாவில் அவரது சமுகம் இன்றியே அவரது பச்சை வயல் கனவு என்ற நாவலை அறிமுகப்படுத்தியிருந்தோம்.   (மேலும்) 01 09.18

._______________________________________________________________________

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர் தொடர்பில் மேலும் பல  தகவல்கள்


ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவித்தnizaு சிட்னியில் கைதான இலங்கையர், அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மெல்கம் டர்ன்புல் மற்றும் முன்னாள் வெளிவிவார அமைச்சர் ஜூலி பிசப் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   அவுஸ்திரேலிய காவல்துறை தகவல்களை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. மாணவர் வீசாவில் அவுஸ்திரேலியா சென்று சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் 25 வயதான மொஹமட் நிசாம்தீன் என்ற இலங்கையரே நேற்றைய தினம் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார்.  அவுஸ்திரேலியா கென்சிங்டனில் உள்ள நியூ சௌத் வேள்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவுஸ்திரேலிய பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டார். பல்கலைக்கழக ஊழியர் ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து அவரின் இருப்பிடம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.    (மேலும்) 01 09.18

._______________________________________________________________________

ஆப்பிரிக்கா: 5 லட்சம் குழந்தைகள் பலி?


பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டை காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் 5 லட்சம் குழந்தைகள் பலியாகியிருக்கலாம் என்று இதுகுறித்து ஆய்வு செய்து வரும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.இதுகுறித்து பிரான்ஸில் வெளியாகும் தி லான்செட்' என்ற மருத்துவ அறிவியல் இதழில் வெளியிட்டப்பட்டுள்ள அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 1995 முதல் 2015-ஆம் ஆண்டு வரையில் ஆப்பிரிக்க நாடுகளில் குழுக்களிடையே நடந்த 15இ441 மோதல்களில் சுமார் 10 லட்சம் பேர் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு இறப்புகளையும் வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுமார் 5 லட்சம் குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. காயம் மற்றும் பட்டினி காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

கிளிநொச்சி கொலை தொடர்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சந்தேக நபர்

கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட நித்தியகலாவினைக் கொலnkalamurderை செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்னகீதன் என்பரே குறித்த பெண்ணை கழுத்து நெரித்தே கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்   குறித்த அவரது ஒப்புதல் வாக்கு மூலத்தில் குறித்த பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருந்தது, அவரது வயிற்றில் வளந்த குழந்தை என்னுடையது தான் அதனால் அவள் தன்னை கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தினாள்.பின்னர் நாம் இருவரும் நஞ்சு குடித்து இறந்துவிடுவோம் என்று முடிவெடுத்து 28 ஆம் திகதி அவள் கடமை முடிந்து தொழிற்சாலையை விட்டு வெளியில் வந்ததும் நான் எனது வீட்டில் இருந்து நடந்து வந்து அவளது மோட்டார் சைக்கிலில் ஏறிக் கொண்டேன். பின்னர் அம்பாள் குள வீதியூடாக கிளிநொச்சி வந்து உள் பாதைகளால் கரடிப்போக்கு வந்து பின்னர் மீண்டும் உள் பாதைகளால் சம்பவ இடத்திற்கு சென்றோம்.    (மேலும்) 01 09.18

._______________________________________________________________________

பதுளை தமிழ் அதிபரின் அடிப்படை உரிமை ஒக்டோபர் 11ம் திகதி

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை ஒக்டோபர் மாதம் 11ம் திகதி விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து தன்னை திட்டியதுடன் அச்சுறுத்தியதாகவும் குற்றம் சுமத்தி பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் ஆர். பவானி தாக்கல் செய்த மனு இன்று அழைக்கப்பட்டிருந்தது.நீதிபதிகளான புவனேக அலுவிகார மற்றும் எல்.டீ.பீ. தெகிதெனிய ஆகியோர் முன்னிலையில் மனு அழைக்கப்பட்ட போது பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.பாடசாலையில் அனுமதிப்பதற்காக, முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவிடம் இருந்து எடுத்துக் கொண்டு வந்த கடிதத்தை நிராகரித்ததால், முதலமைச்சர் தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து தன்னை திட்டி, அச்சுறுத்தியதாக அதிபர் தனது மனுவில் கூறியுள்ளார்.இதன் காரணமாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அதிபர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

._______________________________________________________________________

எதிர்காலத்தில் சமஷ்டி முறைமைக்கு வாய்ப்புண்டா?

- சேகுதாவூத் பஸீ்ர்

இலங்கையின் வடபுலத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான இராஜதந்திரப் போர் மையங்கொள்ளத் தொடங்கியிருப்பதை அனைவரும் அறிவோம்.china india   வடக்கில் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நிவாரண வீடமைப்பைக் கையாள்வது சீனாவா இந்தியாவா என்பதில் இழுபறி நிலை காணப்படுகிறது. இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தம்பக்கம் இழுப்பதில் சீனா முந்திக் கொண்டது.   ஆயினும், பின்னர் கூட்டமைப்பு இந்தியாவின் பக்கம் தள்ளாடியவாறு சாய்ந்துவிட்டதைச் செய்திகள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக சீனா ஒரு வகைச் சீற்றத்தோடு,வடக்கின் வீடமைப்புத் திட்டத்தில் இந்தியாவின் தலையீடு உள்ளதா என்று இலங்கை அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.அதே நேரம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் முன்னிலையில் - இந்தியாவுக்கும் பலாலிக்குமிடையில் இந்தியத் தனியார் விமானப் போக்குவரத்தை உடனடியாக ஆரம்பிப்பது என்ற முடிவை இந்தியாவும் இலங்கையும் எடுத்துள்ளன.      (மேலும்) 31 08.18

._______________________________________________________________________

கிளிநொச்சியில் பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் நேற்றைய தினம் கொலைசெய்யபட்ட யுவதிக்கு நீதி  கோரியும் நாளை(31-08-2018) கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் ஏற்பாட்டில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் அவ்வமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் அண்மைக் காலமாக எமது பிரதேசங்களில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற வன்முறைகளுக்கு எதிராகவும், பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும், நேற்றைய தினம் கொலைசெய்யப்பட்ட முறிகண்டியைச் சேர்ந்த கறுப்பையா நித்தியகலா விடயத்தில் விரைவாக  குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டியும்  நாளைய தினம் வெள்ளிக்கிழமை (31-08-2018) அன்று கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் காலை பத்து மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. எனவே இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

._______________________________________________________________________

 கிளிநொச்சியில் கொலையுண்ட யுவதி - கர்ப்பிணி

 கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்nithiyakalaளது.  கொலையுண்ட யுவதி ஐந்து மாத கர்ப்பிணி என கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். சட்ட வைத்திய அதிகாரி உ. மயூரதன் குறிப்பிட்டார். கர்ப்பம் தரித்தமையால் இந்த கொலை இடம்பெற்றிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  யுவதியின் கொலை தொடர்பான விசாரணைக்கு இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.   யுவதி பயன்படுத்தியதாகக் கூறப்படும் கையடக்கத்தொலைபேசி மலையாளபுரம் பகுதியிலிருந்து நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொலைச்சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொலைபேசியை பகுப்பாய்விற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.    (மேலும்) 31 08.18

._______________________________________________________________________

ஆயுத குற்றச்சாட்டின் பின்னணியில் இனவாத சக்திகள் செயற்படுகின்றது


விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களை கொள்வனவு செய்து முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்கியதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்த நெடுஞ்சhisbullah 1ாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இந்த விடயம் தொடர்பில் முறையான தீவிர விசாரணையொன்று மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, இக்குற்றச்சாட்டின் பின்னணியில் தேச விரோத, இனவாத சக்திகள் செயற்படுவதாகவும் இதனால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று (30) அனுப்பி வைத்த விசேட கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.   (மேலும்) 31 08.18

._______________________________________________________________________

கம்பளை உடபலாத்த அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

கம்பளை உடபலாத்த பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான ஒருங்கkampazhaiிணைப்புக்குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை (30) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் உடபலாத்த பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான கம்பளை நகரசபை தலைவர் சமந்த அனுரகுமார, கம்பளை பிரதேச சபையின் உப தலைவர் அசல அமரசேன, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் பணிப்பாளரும் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமுமான ஜயதிலக ஹேரத், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.நயீமுல்லா, உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    (மேலும்) 31 08.18

._______________________________________________________________________

திருமலையில் திறந்துவைக்கப்பட்ட ஏற்றம் அறக்கட்டளையின் கைத்தொழில் நிலையம் !

 திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட சந்தatamோசபுரம் கிராமத்தில் ஏற்றம் நிறுவனத்தினரால் கைத்தொழில் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  ஏற்றம் அவுஸ்திரேலியாவின் நிதிப் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக் கைத்தொழில் நிலையத்தில் தற்போது ஊதுபத்திகள் தயாரிக்கப்படுகின்றன.   ஏற்றம் நிறுவனப் பணிப்பாளர் இராசரத்தினம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஒழுங்கமைப்பை ஏற்றம் அறக்கட்டளையின் திருகோணைமலை மாவட்ட இணைப்பாளர்  டிசான் அவர்கள் செய்திருந்தார். ஏற்றம் அறக்கட்டளையின் கிளிநொச்சி இணைப்பாளர் மதிவாணன் அவர்களும் இந்திகழ்வில் கலந்துகொண்டார்.   இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலர் அவர்கள் ஏற்றம் நிறுவனத்தின் இம்முயற்சியைப் பாராட்டியதோடு  ஊதுபத்தியுடன் ஏற்கனவே கலந்தாலோசிக்கப்பட்ட செருப்பு மற்றும் மெழுகுவர்த்தி தயாரிப்பையும் ஆரம்பிக்கவேண்டும் என்று ஏற்றம் நிறுவனத்தினரைக் கேட்டுக்கொண்டார்.    (மேலும்) 31 08.18

._______________________________________________________________________

ஞானசார தேரருக்கு ஏற்பட்ட  நிலைமை..

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இன்று சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.  எனினும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ம் திகதி மீண்டும் அவர் சிறி ஜெயவர்தனபுர வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையை அடுத்து, உடல்நிலை குறித்த ஆய்வுக்காக அவர் மீண்டும் அங்கு அழைத்துச் செல்லப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடந்த தினம் அவருக்கு 6 ஆண்டுகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை அறிவிக்கப்படும் போது, சிறுநீரக தொகுதி கோளாறு காரணமாக அவர் சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

._______________________________________________________________________

 மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம்

கொழும்பு மாளிகாவத்தையில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.கொழும்பு, மாளிகாவத்தை ஜும்ஆப் பள்ளி சந்தியில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.சந்தேகநபர்களை கைது செய்வதற்காக மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

._______________________________________________________________________

வடக்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

வடக்கு மாகாண பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளை தடுத்த நிறுத்த கோரி இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த ஆர்ப்பாட்ட பேரணியை வவுனியா மாவட்ட பெண்கள் அமைப்பு முன்னெடுத்துள்ளது. பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும் அதனை தடுக்க உரிய சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதவிர, வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் வர்த்தகத்தை தடுப்பதன் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க முடியும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்னி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி காவற்துறைமா அதிபர் அனுர அபேவிக்ரமவிடம் கையளித்துள்ளனர்.

._______________________________________________________________________

 பொருளாதார நெருக்கடியில் சிக்கவுள்ள நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்

 Moody எனப்படும் சர்வதேச நிதி தர நிர்ணய நிறுவனம் அண்மையில் தமது புதிய தரப்படுத்தலை வௌியிட்டது.உலகில் பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மற்றும் அபாய நிலையிலுள்ள நாடுகள் தொடர்பில் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த அறிக்கைக்கு அமைய, கடந்த காலப்பகுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பு அதிகரித்துள்ளது.எனினும், முறையான நீண்ட கால அந்நிய செலாவணி விநியோகமின்மையால், 2019 – 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மீள செலுத்தப்படவேண்டிய சர்வதேசக் கடன் அதிகரித்துள்ளது.இதனால் இலங்கை மீதான சுமை அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.சர்வதேசக் கடன் உள்ளிட்ட மேலும் சில விடயங்கள் காரணமாக, சர்வதேச நிதி நிலைமைக்குள் இலகுவில் அகப்படக்கூடிய நாடு என இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

மாவலி:   வேண்டுமா வேண்டாமா?

-         கருணாகரன்

அப்பொழுது எனக்குப் பத்து வயது என நினைக்கிறேன். அது 1970 கள். “வடக்கே வருகிறது மாவலி” என்று ஊரில் கதைத்தார்கள். “மாவலி வந்தால்  நல்லா வெள்ளாமை செய்யலாmahavaliம்” என்று சொன்னார் சின்னமாமா.  “நீ வெள்ளாமை செய்யிறதைப் பற்றிக் கதைக்கிறாய். ஆனா, நீ நினைக்கிற மாதிரி மாவலித்  தண்ணியெல்லாம் உனக்குக் கிடைக்காது. மாவலியோட சேர்ந்து அந்தத் தண்ணியை எடுக்கிற ஆட்களும் (சிங்களவர்கள்)  வந்திடுவாங்கள். அவங்களுக்குத்தான் தண்ணி கிடைக்கும். தண்ணியோட சேர்த்துக் காணியும் கிடைக்கும். கடைசீல எங்களுக்குக் காணியும் இல்லை. தண்ணியும் இல்லை எண்ட நிலைதான் வரும்” என்றார் பெரிய மாமா. இதை சின்னமாமா ஏற்றுக் கொள்ளவே இல்லை.   “எடுத்ததுக்கெல்லாம் உங்களுக்கு ஒரு நொட்டை. ஒரு வியாக்கியானம். ஒரு சந்தேகம். தண்ணியில்லாமல் வடக்கு வாடிக் கொண்டிருக்கு. வன்னிக் குளங்கள் கனகாலத்துக்குத் தாக்குப் பிடிக்காது. வன்னிக் காட்டை வெட்டி வெட்டி யாழ்ப்பாணத்துக்கு விறகாகவும் மரமாகவும் கொண்டு போனால் காடு, மிஞ்சுமா? காடழிஞ்ச பிறகு மழை எப்பிடி வரும்.    (மேலும்) 30 08.18

._______________________________________________________________________

 பொதுச்சின்னத்தின் கீழ் தமிழ்த் தேசியக்கூட்டமைப்ப கொள்ள வேண்டும்

 கிழக்குத் தமிழர் ஒன்றியம்


கடந்த 22.08.2018 அன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி இராசமாணிக்etoகம் மண்டபத்தில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரிடத்தில் சந்தித்து கலந்துரையாடிய நிகழ்வு கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான த.கோபாலகிருஸ்ணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. அது சம்பந்தமாக அவருடன் நேர்காணல். : எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பொதுச்சின்னத்தின் கீழ் ஒரே அணியாக போட்டியிடுவது சம்பந்தமாக ஏற்கனவே அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் தனித்தனியே சந்தித்துப் பேசி அவர்களின் நிலைப்பாடுகளை அறிந்தோம். எனினும் கிழக்குத் தமிழர் ஒன்றியம் இது சம்பந்தமாக ஒரு முடிவுக்கு வரும் முன்னர் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரிடத்தில் சந்திக்க வைத்து திறந்த கலந்துரையாடலை மேற்கொண்டு மக்களுக்கு உகந்ததான ஒருமித்த முடிவொன்றை எடுப்பதற்கான அதாவது முரண்பாடுகளுக்குள்ளும் ஓர் உடன்பாட்டைக் காணுவதற்கான முன் முயற்சியே இது.   (மேலும்) 30 08.18

._______________________________________________________________________

இரண்டு மாத காலத்தில் அறிக்கை கிடைத்தால் தேர்தல்

எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐந்து பேர் அடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட பின்னர் விரைவாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறியுள்ளது.இன்று (29) காலை அந்தக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு கூறினார்.
எல்லை நிர்ணய அறிக்கை சம்பந்தமாக நியமிக்கப்பட்ட குழுவினால் இந்தப் பிரச்சினை சம்பந்தமாக சரியான அறிக்கை ஒன்றை இரண்டு மாத காலத்தில் வழங்க முடிந்தால், அது சம்பந்தமாக ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை வௌியிட்டதுடன் மூன்று மாத காலப்பகுதியில் தேர்தலை நடத்த முடியும் என்று அமைச்சர் கூறினார்.

._______________________________________________________________________

மகிழ்ச்சியான கணங்கள்

கார்த்திக் ஜீவானந்தம்

kalasuvadu

22.07.18 அன்று கோவை ஆர்த்ரா அரங்கில் குழுமியிருந்த எழுத்தாளர்களுக்கு நடுவில் வயது பத்தொன்பதா, இருபதா என்ற ஐயத்திற்குத் தள்ளிவிடும் இளம் கருந்தலைகள் ஆங்காங்கே கணிசமாகத் தென்பட்டது ஆச்சர்யம். அது காலச்சுவடு பதிப்பகத்தின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா.   (மேலும்) 30 08.18

._______________________________________________________________________

கிளிநொச்சியை உலுக்கியுள்ள கொலை

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டி பகுதியை சேர்ந்த 32 வயதான கறுப்பையா நித்தியகலா என என அடையாளம் காணப்பட்டுள்ளதாklinochchi murderக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் இடுப்புப் பட்டி மற்றும் இரண்டு நீல மற்றும் சிவப்பு பேனாக்கள் இருந்ததால் இவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என சந்தேகம் கொண்டுள்ளனர் பின்னார் கிளிநொச்சியில் உள்ள அனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மேற்பார்வை செய்யும் நிறுவனங்களுக்கு சென்று பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் யாரும் இன்று வருகை தரவில்லையா என வினவியுள்ளனர்.  இதன்போது அறிவியல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு உத்தியோகத்தர் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடைத் தொழிற்சாலை உத்தியோகத்தர்களுடன் அவரது வீட்டுக்கு சென்று விசாரித்ததன் பின்னர் குடும்பத்தாரை வைத்திய சாலைக்கு அழைத்து சென்று சடலம் அவர் தான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பில் குறித்த ஊடகவியலாளரினால் கிளிநொச்சி பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

தமிழகத்தின் மிகப்பெரிய புத்தகத்திருவிழாவில் ஈழத்து எழுத்தாளர் இளங்கோவனுக்கு அளிக்கப்பட்ட கௌரவம்..!

"பல்துறை ஆற்றலாளரான வி.ரி.இளங்கோவன் அவர்களது கவிதைத் தொகுதியினை ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் உலகத் தமிழர் படைப்elamgoபரங்கில் வெளியீடு செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். கலை - இலக்கியவாதியாகவும், முற்போக்குச் சிந்தனையாளராகவும் விளங்கும் இளங்கோவன் புலம்பெயர்ந்து வாழும் பிரான்ஸ் நாட்டிற்கும் எமக்குமிடையே தமிழ் இலக்கியப் பாலமாக - தொடர்பாளராக விளங்குகிறார். பல நூல்களை வெளியிட்டுள்ள குறிப்பிடத்தக்க சிறந்த படைப்பாளியான அவரது கவிதைத் தொகுதியை உலகத்த தமிழர் படைப்பரங்கில் வெளியிட முன்வந்தமைக்காக அவருக்கு மக்கள் சிந்தனைப் பேரவை மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது."  இவ்வாறு ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவரும் எழுத்தாளருமான ஸ்டாலின் குணசேகரன் கடந்த 12-ம் திகதி பகல் (12-08-2018) ஈரோடு புத்தகத் திருவிழா உலகத் தமிழர் படைப்பரங்கில் இடம்பெற்ற கலாபூஷணம், இலக்கியவித்தகர் வி. ரி. இளங்கோவனது "ஒளிக்கீற்று" கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வுக்கு தலைமை வகித்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.   (மேலும்) 30 08.18

._______________________________________________________________________

28 இலட்சம் பெறுமதியான தங்க நகையுடன் ஒருவர் கைது

28 இலட்சம் பெறுமதியான தங்க நகை ஒன்றை சட்ட விரோதமான முறையில் எடுத்து வந்த இலங்கையர் ஒருவரை இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.கம்பஹா, அகரவிட பகுதியை சேர்ந்த 51 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று அதிகாலை 1.45 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 349 என்ற விமான நிலையத்திலேயே குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.400 கிராம் எடை கொண்ட தங்க நகை ஒன்றை மறைத்து வைத்து எடுத்து வரும் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபரை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சுங்கப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

._______________________________________________________________________

நேவி சம்பத் மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் லெப்டினென் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, எதிர்வரும் செப்டம்பர் 12ம் திகதி வரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் nevi sampathவைக்கப்பட்டுள்ளார்.2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த அவர் கொழும்பு லோட்டஸ் வீதி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் நிதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.இஎதன்போது, சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருப்பதற்கு முன்னாள் கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உதவி புரிந்துள்ளமை தெரிய வந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.விடயங்களை கருத்திற் கொண்ட நீதிபதி லங்கா ஜயரத்ன, முன்னாள் கடற்படைத் தளபதி எந்த விதத்திலாவது சந்தேகநபருக்கு உதவி ஒத்தாசை புரிந்திருந்தால் அவரையும் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

._______________________________________________________________________

நியமனங்களை பெற்று வேலைக்கு சமூகமளிக்காத நபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புதிய நியமனங்களை பெற்ற பட்டதாரிகள் எதிர்வரும் இரு தினங்களில் சேவைக்கு சமூகமளிக்காவிடின் அவர்களின் நியமனம் ரத்துச் செய்யப்படும் என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த தினத்தில் அரச சேவைக்கு நியமனம் பெற்ற 4100 பேரில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதுவரை சேவைக்கு சமூகமளிக்கவில்லை என அதன் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன எனது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.எவ்வாறாயினும் , கடந்த தினங்களில் தமக்கான நியமனங்களை உடனடியாக வழங்குமாறு கோரி பட்டதாரிகள் சங்கங்கள் பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

மாணிக்கற்கள் ஒரு தொகையுடன் சீன நாட்டவர்கள் மூவர் கைது

சீனாவில் இருந்து ஒரு தொகை மாணிக்கற்களை சட்ட விரோதமான முறையில் இலங்கைக்கு எடுத்து வந்த சீன நாட்டவர்கள் மூவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.39 மற்றும் 27 வயதுடைய பெண் இருவரும் 37 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று (28) மாலை சீனாவின் குங்மிங் நகரில் இருந்து சைனா ஈஸ்டன் விமான சேவைக்கு சொந்தமான MU 713 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சந்தேக நபர்களிடம் இருந்து 4,681,445 ரூபா பெறுமதியான 6 கிலோ 448 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 4 கிலோ 600 கிராம் சிவப்பு மாணிக்கங்கள் இருந்தமை விஷேடமான விடயம் என சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இது தவிர அவற்றுள் ரூபி, நீல மாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு விதமான மாணிக்கற்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

._______________________________________________________________________

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ். அகஸ்தியர்  ( 1926 - 1995)  பிறந்த தினம் இன்று

எழுத்திலும் பேச்சிலும் தர்மாவேசம் !  இயல்பில் குழந்தை உள்ளம் !
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அகஸ்தியர் எழுதிய கடிதங்கள்

                                                                     முருகபூபதி

இலங்கையின் மூத்த எழுத்தாளர் எஸ். அகஸ்தியர், வடபுலத்தில் ஆனைக்கோட்டையில்  சவரிமுத்து - அன்னம்மாள் தம்பதியருக்கு 1926 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகakastiar11தி பிறந்தவர். தனது இளம் பராயத்திலேயே இலக்கிய உலகில் பிரவேசித்து, இலங்கையில் வெளியான பல பத்திரிகைகள், இதழ்களில்  கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், கட்டுரை, உணர்வூற்று உருவகம், நாடகம், இலக்கிய வரலாறு   முதலான சகல கலை, இலக்கியத்துறைகளிலும் தொடர்ச்சியாக அயர்ச்சியின்றி எழுதியவர். தமிழக இலக்கிய இதழ்களிலும் அவரது பல படைப்புகள் வெளியாகின. இலங்கை மல்லிகை, தமிழ்நாடு தாமரை ஆகிய இதழ்கள் முகப்பில் அகஸ்தியரின் படத்துடன்  சிறப்பிதழ் வெளியிட்டுள்ளன. அவரது நூல்கள், இலங்கையிலும் தமிழ்நாட்டிலும், பிரான்ஸிலும் வெளியாகியுள்ளன.    இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைக்குழுவில்  இணைந்திருந்தவர். தனது படைப்புகளை வெளியிடத் தயங்கிய பத்திரிகை, இதழ்களின் ஆசிரியர்களுடனும் எந்தத் தயக்கமும் இன்றி  நேரடியாக கருத்துமோதல்களில் ஈடுபடும் இயல்பும் கொண்டிருந்தவர். தர்மாவேச பண்புகள் அவரிடமிருந்தபோதிலும் குழந்தைகளுக்குரிய மென்மையான இயல்புகளினாலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி  அனைவரையும் அன்போடு அணைத்தவர்.     (மேலும்) 29 08.18

._______________________________________________________________________

 நாட்டில் நல்லிணக்கமும் தேசிய ஒருமைப்பாடும் ஏற்படவேண்டுமேயானால் இராணுவத்தின் வசமுள்ள அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும்

- இரா. சம்பந்தன்

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.sampanthan2   இக்கூட்டத்தில் அமைச்சர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனின் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளடங்கலான அனைத்து மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.   யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளமையினால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை என்பதோடு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பினை இக்கூட்டத்திற்கு அழைத்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த இரா சம்பந்தன், சில அடிப்படையான விடயங்கள் தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவிக்க விரும்புவதாகவும் கூறினார்.     (மேலும்) 29 08.18

._______________________________________________________________________

எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர்: ( 29.08.1926  )

சமத்துவத்தின் வலிமையைத் தனது படைப்பக்களில் உணர்த்தியவர்-

- ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்


இலக்கியம் என்பது ஒரு எழுத்தாளன் வாழும் காலகட்டத்தில் அவன் கண்ட சமுதாயத்தின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு சரித்திர ஆவணம் என்பakastiarது எனது கருத்து. தான்வாழும் சமுதாயத்தில் சாதி மத இன,நிற வர்க்க பேதங்களால் மக்களுக்கு நடக்கும் கொடுமைகயைக் கவனிக்காமல் அல்லது தெரிந்தும் தெரியாத நடித்துக்கொண்டு ஒரு எழுத்தான் தனது இலக்கியப் படைப்புக்களைச் செய்தால் அவை சமூகம் சாராத-தன்னை அந்தச் சமுகத்துடன் இணைத்துப் பாராத ஒரு படைப்பாளியின் உயிரற்ற வெற்றுப் படைப்பாகத்தானிருக்கும்.    இலக்கியங்கள் ஏதோ ஒரு வகையில் படைப்பாளியின் அடையாளத்தை அவர் யார் என்று படம் பிடித்துக் காட்டுகிறது. அரசியல் சாராத, ஒரு தனி மனிதனின் உள்ளுணர்வுகளின் பிரபலிப்பான படைப்பாக ஒரு இலக்கியம் கணிக்கப் பட்டாலும் அவனின் வரிகளில் ஒன்றிரண்டு அந்த இலக்கியததைப் படைத்தவனின் சமூகக் கண்ணோட்டதை;தைக் காட்டிக் கொடுத்து விடும்.இலங்கை எழுத்தாளர்கள் பலர் 40-60ம் ஆண்டுகளில் சமுகத்தின் வேறுபாடுகளால் அடக்கப் பட்டு ஒடுக்கப் பட்ட மக்களைப் பற்றி எழுதினார்கள்.  (மேலும்) 29 08.18

._______________________________________________________________________

கடலில் மிதக்கும் பிளாஸ்டிக்

இரா. மகாதேவன்


மனிதனின் வெற்றிகரமான கண்டுபிடிப்புகளில் ஒன்று நெகிழி எனப்பplastic11டும் பிளாஸ்டிக். குறைந்த விலை, பயன்படுத்துவது எளிது, பன்முகப் பயன்பாடு என்பதால், இன்று உலகம் முழுக்க நீக்கமற நிறைந்துள்ளது பிளாஸ்டிக். கடந்த 1950 முதல் 2015 வரை உலகம் முழுக்க உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் 830 கோடி மெட்ரிக் டன்னாகும். இவை அனைத்துமே மக்காத தன்மை கொண்டவை என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் செய்தி. இவை சுற்றுச்சூழலை பேரழிவுக்குக் கொண்டு செல்லக்கூடியவை.இவற்றில் ஒன்பது சதவீத பிளாஸ்டிக் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது. 12 சதவீத பிளாஸ்டிக் எரிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 80 சதவீதம், அதாவது 630 கோடி மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பயனற்ற கழிவாக மாறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை முடிவற்ற காலம் கொண்டவையாக நிலத்தையும், கடலையும் ஆக்கிரமித்துள்ளன.கடலில் சேரும் பிளாஸ்டிக்கால், ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் கடல் பறவைகள், ஒரு லட்சம் கடல் வாழ் பாலூட்டிகள், ஏராளமான விலைமதிக்க முடியாத மீன்கள் ஆகியவை உயிரிழக்கின்றன. தற்போதைய நிலையில், உலகம் முழுவதும் கடலில் மிதக்கும் பிளாஸ்டிக்கின் அளவு 15 கோடி மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. (மேலும்) 29 08.18

._______________________________________________________________________

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தம்

ஆட்களைப்பதிவு செய்து அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அறவிடபslic்படும் கட்டணங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் தெரிவித்துள்ளது.   புதிய திருத்தத்திற்கு அமைவாக, 15 வயது பூர்த்தியடைந்து முதற்தடவையாக பதிவுசெய்து தேசிய அடையாள அட்டையினை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்திற்கு ரூபா 100, தேசிய அடையாள அட்டையொன்றின் திருத்திய இணைப்பிரதியொன்றிற்கு ரூபா 250 மற்றும் காணாமல் போன தேசிய அடையாள அட்டையொன்றின் இணைப்பிரதியொன்றிற்காக ரூபா 500 ஆக கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. பிரதேச செயலகத்தினூடாக அல்லது கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திலோ கட்டணங்களை செலுத்தி பெறப்பட்ட பற்றுச்சீட்டினை விண்ணப்பத்தின் உரிய பகுதியில் இணைத்து ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.     (மேலும்) 29 08.18

._______________________________________________________________________

மகாவலியை எதிர்த்திடு! முல்லையில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு போராட்டம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற மகாவmahavali protestலி திட்டச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும், வடக்கின் ஏனைய பகுதிகளில் விஸ்தரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவுகளை கைவிடுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரப்பட்டுள்ளது.   மகாவலி அபிவிருத்தி திட்ட செயற்பாடுகள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை என்ற அமைப்பினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. 'தமிழனே விழித்திடு மகாவலியை எதிர்த்திடு!' என்ற தொனிப்பொருளில் முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.  மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை ஏற்பாட்டில் முல்லைத்தீவு PWD சந்தியில் பேரணியாக ஆரம்பித்து, மதகுருமார்கள் பொதுமக்கள் சிவில் சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களின் பங்குபற்றுதல்களுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.       (மேலும்) 29 08.18

._______________________________________________________________________

ஐரோப்பிய நாடுகளுக்கு சவால்? பிரம்மாண்ட போர் ஒத்திகை: ரஷியா முடிவு


பனிப் போர் காலத்துக்குப் பிறகு, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான போர் ஒத்திகையை ரஷியா நடத்தவிருக்கிறது. சீனா மற்றும் மங்கோலியாவுடன் இrand cணைந்து நடத்தப்படும் இந்தப் போர் ஒத்திகையில், 1,000-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், 3 லட்சம் வீரர்கள், 36,000 ராணுவ தளவாடங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   தங்களது எல்லை அருகே நேட்டோ மூலம் ஐரோப்பிய நாடுகள் அளவுக்கதிகமாக படை பலத்தைப் பெருக்கி வருவதாக ரஷியா குற்றம் சாட்டி வரும் நிலையில், அந்த நாடுகளின் ஆதிக்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் இந்தப் போர் ஒத்திகை நடத்தப்படுவதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கெய் ஷோய்கு செவ்வாய்க்கிழமை கூறியதாவது:  விஸ்டோக்-2018' என்ற எங்களது இந்த ஆண்டுக்கான போர் ஒத்திகை, அடுத்த மாதம் 11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.கிழக்கு எல்லைப் பகுதியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் இந்தப் போர் ஒத்திகையில், ரஷியாவுடன் இணைந்து சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன       (மேலும்) 29 08.18

._______________________________________________________________________

வாஜ்பாய் மரணம் அடைந்தது எப்போது? புதிய சர்ச்சையைக் கிளப்பும் சிவ சேனா

பாஜகவின் கூட்டணியில் இடம்பிடித்து தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கும் சிவ சேனா, வாஜ்பாயியின் மரணம் தாமதமாக அறிவிக்கப்பட்டதாக பகீர் குற்றச்சாட்vajpayee3டை முன் வைத்துள்ளது.   சிவ சேனாவின் மூத்தத் தலைவர் சஞ்சய் ரௌத், சிவ சேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் எழுதியிருக்கும் தலையங்கத்தில் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அதாவது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகஸ்ட் 16ம் தேதிதான் இறந்தாரா என்பதில் சந்தேகம் எழுகிறது. ஒரு வேளை, இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் கொடியேற்றி, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் நிகழ்ச்சி தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக, வாஜ்பாயியின் மரணம் தாமதமாக அறிவிக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஜனநாயகம் என்றால் என்ன என்பதை முதலில் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.       (மேலும்) 29 08.18

._______________________________________________________________________

மீண்டும் மூடப்பட்டது பல்கலைக்கழகம்

ரஜரட்ட பல்கலைக்கழகம் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது.நீர் பற்றாக்குறை காரணமாகவே பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பல்கலை மாணவர்களிடையே நோய் ஒன்று பரவியதன் காரணமாக கடந்த 10 ஆம் திகதி மூடப்பட்ட பல்கலைக்கழகம் கடந்த 27 ஆம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், அநுராதபுரம் மாவட்டத்தில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக பல்கலை மாணவர்களுக்கு நீர் வழங்க முடியாதுள்ளதாக பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

._______________________________________________________________________

1000 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்: மதகுருக்கள் மீது நடவடிக்கை அயர்லாந்து பிரதமர் வேண்டுகோள்

குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய மதகுருக்கள் மீது நpopeடவடிக்கை எடுக்க அயர்லாந்து பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கிறிஸ்தவ மதகுருக்களால் நிகழ்த்தப்பட்ட வெறுக்கத்தக்க குற்றங்கள் குறித்து, கத்தோலிக்க திருச்சபைகள் போதுமான அளவு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது குறித்து வெட்கப்படுவதாக போப் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.   அயர்லாந்துக்கு 39 ஆண்டுகளில் முதல் முறையாக சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ள போப் பிரான்ஸிஸ் இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய மதகுருக்கள் மீதும் அதனை மறைத்தவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அயர்லாந்து பிரதமர், போப்பிற்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களையும் போப் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் உலக கத்தோலிக்கர்களின் சந்திப்பு நிகழும் தருணத்தில் அவரின் வருகையும் அமைந்துள்ளது.  இதற்கு முன் அவர் 1.2பில்லியன் கத்தோலிக்கர்களுக்கு எழுதிய கடிதம் குறித்து பேசிய அவர், ’குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி குறித்து கவனத்தில் கொள்ள வேண்டிய கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்கள், அவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய கொடூரமான நிகழ்வு குறித்து நான் பேசாமல் இருக்க போவதில்லை’ என்று தெரிவித்தார்.   (மேலும்) 28 08.18

._______________________________________________________________________

தங்கோ நடனம்

. நடேசன்

புவனஸ் அயர்ஸ் நகரத்தின் மத்தியில் உள்ள மெற்றப்போலிட்டன் தேவாலயத்திலிந்து வீதியைக் கடந்து சென்றபோது, எதிரில் உள்ளது மே சதுக்கம் ( Plaza de Mayo) இதை அன்னைthangoயர்களின் சதுக்கம் என்பார்கள். ஆர்ஜன்ரீனா மே மாதத்தில் ஸ்பானியர்களிடம் இருந்து சுதந்திரமடைந்ததை நினைவுகொள்ளும் பொருட்டு அரசகாரியாலயங்கள் முன்பாக இந்தச் சதுக்கம் அமைக்கப்பட்டது.   பிற்காலத்தில் முக்கியமாக இராணுவ ஆட்சிக்காலத்தில் ஆட்சிக்கு எதிரானவர்களாக கருதியவர்களைக் கடத்தி கொலை செய்யப்பட்டவர்களின் தாய்மார் கூடி ஆர்ப்பாட்டம் செய்யும் போராட்டமையமாக மாறியது. தாய்மார்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியதால் அடையாளப் போராட்டத்தில் இருந்து அரசியல் இயக்கமாக வளர்ந்தது. ஆர்ஜின்ரீனாவிற்கு மட்டுமான போராட்டமாக இல்லாமல் தென் அமரிக்காவிற்கும் முன்னுதாரணமாக இருந்தது. அக்காலத்தில் தென்னமரிக்காவின் பல நாடுகள் இராணுவ ஆட்சியின் கீழ் இருந்ததால் ஆட்சியாளர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தார்கள். உதாரணத்திற்கு சிலி நாட்டின் இராணுவ அதிருப்தியாளர்கள் தப்பிவந்தபோது ஆர்ஜன்ரீனாவில் உளவுப் படையினரால் கொலை செய்யப்பட்டார்கள்.   . (மேலும்) 28 08.18

._______________________________________________________________________


மறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து!

எஸ்.எம்.எம்.பஷீர்

"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதொன் றில்." திருக்குறள்
 

25/08/2018 அன்று காலை   7.10  அளவில் , இலங்கையிலிருந்து எமDR. Hisbullahது குடும்பத்தினர் ஒருவர் , எம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ் மரணித்துவிட்டார் என்ற செய்தியை  சொன்னார். காலையில் கேட்ட முதல் செய்தி , காதுகளில் ஊடாக எனது இதயத்தை துளைத்தது , அந்த செய்தி பொய்யாக  இருக்கக் கூடாதா என்ற கையறு நிலையில், மனசு சங்கடப்பட்டது. சற்று நேரத்தில் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினரும்,  பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள்   சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் நேற்று   ( 25/08/2018 )    யாழ் பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில்  திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே  உயிரிழந்துள்ளார்.  அவரின் உடல் அவரின் பிறந்த இடமான எருக்கலப்பிட்டியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது என்ற செய்தி பரவியது. அனுதாபத் செய்திகள் வரத் தொடங்கின, அவருக்கும் எனக்குமிடையிலான தொடர்புகள் மிக நீண்டவை ். (மேலும்) 28 08.18

._______________________________________________________________________

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருவேறு உயிரினங்கள் உடலுறவு கொண்டதற்கான ஆதாரம்

ஹெலன் பிரிக்ஸ்

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருவேறு உயிரினங்கள் உடலுறவு கொண்டதற்கான ஆதாரம் ரஷ்யாவின் குகையில் இருந்து கிடைத்துள்ளது.30000    நீண்ட காலத்திற்கு முன்னர், ரஷ்யாவின் குகை ஒன்றில் இருவேறு இனங்கள் ஜோடி சேர்ந்து வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்திருக்கின்றன. தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த ஆதாரங்களில் இருந்து அந்த ஜோடிக்கு ஒரு மகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.   குகையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்பு துண்டுகளின் மரபணுக்களில் இருந்து அந்த பெண் குழந்தையின் தாய் நியாண்டெர்தல் (Neanderthal) என்றும், தந்தை டெனிசோவன் (Denisovan) இனத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. நியாண்டெர்தல் (Neanderthal) மற்றும் டெனிசோவன் (Denisovan) என்ற இனங்கள், மனித இனம் என்றாலும் வேறு உயிரின வகையை சேர்ந்தது. இந்த இனங்கள் தற்போது அழிந்துவிட்டன.      (மேலும்) 28 08.18

._______________________________________________________________________

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் யாழில் கையளிப்பு

யாழ்ப்பாணம், பருத்தித்துறை - கரம்பன் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் இரண்டு குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.ஒதஹம் பஹனஒ அமைப்பின் தலைவர் சகோதரர் சார்ள்ஸ் தோமஸ் அனுசரணையில் இந்த வீடுகள் அண்மையில் யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியினால் மதகுருமாரின் ஆசீர்வாதத்துடன் வீட்டு உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டன.இந்த நிகழ்வில் ஒதஹம் பஹனஒ அமைப்பின் தலைவர் சகோதரர் சார்ள்ஸ் தோமஸ், மதகுருமார்கள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.

._______________________________________________________________________

எமது நிலங்களை, எமது வாழ்வாதாரங்களை, எமது களப்புகளையும், ஏரிகளையும், கரையோரங்களையும் நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டியுள்ளது.


சிங்கள மக்களை குடியேற்றுவதற்கு சாத்தியமில்லாத பிரதேசங்களில்,  தமிழ் பேசும் காணி உரிமையாளர்களிடம், அவர்களின் சொந்த நிலங்களை, இராணுவத்தsivanesan1ிடமிருந்து பெற்று கையளிப்பதாக பரப்புரை செய்கின்ற நல்லாட்சி(?) அரசாங்கம், ஏனைய பிரதேசங்களில் மகாவலி அபிவிருத்தி, வனவளங்களின் பாதுகாப்பு, பறவைகள் சரணாலயம் என்கின்ற செயற்திட்டங்களின் பேரால் அங்கு வாழ்ந்த, வாழுகின்ற தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்களையும், விவசாய நிலங்களையும், வாழ்வாதாரத்துக்கான ஆதாரங்களாக உள்ள அடர்த்தியற்ற காட்டுப் பகுதிகளையும், களப்பு பிரதேசங்களையும், கடல் ஏரிகளையும், கரையோரங்களையும் சிங்கள மக்களின்  குடியேற்றப் பிரதேசங்களாக திட்டமிட்டு உருவாக்கி வருகிறது.  முல்லைத்தீவின் தெற்கு வலயத்தில் எட்டுச் சிங்கள குடும்பங்களுக்கு, அரசாங்கத்தின் சட்டங்களை எல்லாம் மீறி காணி வழங்கிய விடயம் தனக்கு தெரியாது என்றும் அதைத் தடுத்து நிறுத்துவேன் என்றும் ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறிய பின்பும், தனது காணி வழங்கல் நடவடிக்கையினை நியாயப்படுத்தி வருகின்றது ஜனாதிபதியின் பொறுப்பில் உள்ள மகாவலி அதிகாரசபை.    (மேலும்) 28 08.18

._______________________________________________________________________

வன்னியில் இல்லாதுபோன பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க மக்கள் தயாராகிவிட்டனர

: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வன்னியில் இல்லாதுபோன பாராளுrauff hakkeem mannarமன்ற பிரதிநிதித்துவத்தை அடுத்த தேர்தலில் வென்றெடுக்கும் நோக்கில், எங்களது கரங்களை பலப்படுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு ஒன்றுதிரண்டிருக்கின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.     மர்ஹூம் நூர்தீன் மசூரின் 8ஆவது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு நேற்றிரவு (26) மன்னார், எருக்கலம்பிட்டியில் நடைபெற்ற ஹஜ் விழாவின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது;முதல்நாள் எருக்கலம்பிட்டியில் நடைபெற்ற பேராசிரியர் ஹஸ்புல்லாவின் ஜனாஸா நிகழ்வில் (இறுதிச் சடங்களில்) கலந்துகொள்வதற்காக நாடளாவிய ரீதியிலிருந்து பலர் இங்கு வருகைதந்திருந்தனர். சமூகத்துக்காக பாரிய பங்களிப்புச் செய்த கல்விமான் என்றவகையிலேயே அவர்கள் இங்கு திரண்டுவந்தனர்.   ். (மேலும்) 28 08.1

._______________________________________________________________________

தேர்தல் முறைமையில் காணப்பட்ட ஊழலுக்கு முடிவு கட்டிய அரசாங்கம்


2015 ஜனவரி 08 ஆம் திகதிக்கு முன்னர் இந்நாட்டில் இருந்து வந்த தேர்தல் முறைமையில் காணப்பட்ட ஊழல் நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசியல் அமைப்பின் 19 ஆsrisena-2வது திருத்தத்தின் ஊடாக நாட்டில் சுதந்திரமும் நீதியானதுமான தேர்தலுக்கு பலமானதொரு அடித்தளத்தை இடுவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.கொழும்பு கலதாரி ஹோட்டலில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற ஆசிய தேர்தல் பங்குதாரர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாட்டில் அனைத்து தேர்தல்களையும் ஊழலை நீக்கி அமைதி மற்றும் சுயாதீனமான தேர்தலாக நடத்தி நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.   2015 ஜனவரி 08 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டின் தேர்தல் முறைமையில் காணப்பட்ட ஊழல் நிறைந்த நிலைமைகளை நினைவுபடுத்திய ஜனாதிபதி, 2015 ஜனாதிபதி தேர்தலின்போது அரச ஊடகங்கள் தேர்தல் சட்டங்களை மீறி மிகவும் பண்பாடற்ற முறையில் நடந்துகொண்டதைப் பற்றியும் அரசாங்க திறைசேரியை தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்தி பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டமை பற்றியும் குறிப்பிட்டார்.   (மேலும்) 28 08.1

._______________________________________________________________________

இராணுவ சின்னங்களை எந்த சந்தர்ப்பத்திலும் அகற்றப்போவதில்லை

வடக்கில் இராணுவ சின்னங்களை எந்த சந்தர்ப்பத்திலும் அகற்றுவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.நேற்று (26) கம்பஹா பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.வடக்கில் உள்ள சில கடும் போக்குவாதிகளின் செயற்பாடுகளே இது எனவும் இவ்வாறான கடும் போக்குடைய செயற்பாடுகளால் மக்களிக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்க முற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நீதி வழங்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் தாமதம்

இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நீதி வழங்கும் செயற்பாடுகள் இன்னும் தாமதித்தே வருவதாக, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.அதன் ஆசிய பிராந்திய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் 65 ஆயிரம் பேர் வரையில் காணாமல் போய் இருக்கலாம் என்று பல்வேறு அமைப்புகளால் கணிப்பிடப்பட்டுள்ளன.தற்போது காணாமல் போனோர் விடயத்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் இயங்கி வருகிறது. என்றாலும் தங்களது உறவினர்களுக்கு என்ன ஆனது என்பதை அறிந்துக் கொள்வதற்காகவும், அவர்களுக்கு நீதி வழங்கப்படுவதற்காகவும் மக்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இந்த விடயத்தில் பொறுப்புக்கூறுதல் செயற்பாடு சவால் மிக்கதாகவே தொடர்ந்தும் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

._______________________________________________________________________

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர் வரிசை

"நகைச்சுவை நாயகம்"  பாக்கியநாயகம்  (1931-1994)  நினைவுகள்

ஆசனங்களை சூடாக்கும் பதவியை வகிக்காமல் சமூகத்தின் பயன்பாட்டுக்காக  பதவியிலிருந்த எழுத்தாளர்

                                                          முருகபூபதி

கிழக்கிலங்கையை 1978 இல் சூறாவளி தாக்கிய சமயத்தில் எனது உறவினர்கள் சிலர் அங்கு பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். கொழும்பு - மட்டக்களப்பு மார்க்கPackiyanathanத்தில் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது. ஒருநாள் வீரகேசரியில் மாலை வேலை முடிந்து எனது ஊருக்குச்செல்வதற்காக புறக்கோட்டை பஸ் நிலையம் வந்து, மட்டக்களப்பிற்கு பஸ் செல்லுமா? என விசாரித்தேன். அன்று நள்ளிரவு ஒரு பஸ் பதுளை மார்க்கமாக அம்பாறை சென்று, அங்கிருந்து மட்டக்களப்பு பாதை சீராக இருந்தால் செல்லும் என்றார்கள். தாமதிக்கமால் ஊர் திரும்பி அவசர அவசரமாக சில உலர் உணவுப்பொருட்களும் அரிசி, சீனி, மாவு, தேயிலை, கோப்பி ஆகியனவற்றையும் வாங்கிச்சேகரித்து  எனது தம்பியையும் அழைத்துக்கொண்டு அன்றிரவே பதுளை மார்க்கமாக மட்டக்களப்பு பயணமானேன்.  மட்டக்களப்பில் ரயில் நிலையத்திற்கு சமீபமாக அமைந்த வீடமைப்புத்திட்டத்தில் வசித்த கலை, இலக்கியவாதி  எதிர்மன்ன சிங்கம் அவர்களின் மனைவியின் தங்கையை எனது சித்தப்பா முறையான ராஜா என்பவர் திருமணம் செய்திருந்தார். (மேலும்) 27 08.18

._______________________________________________________________________

வட பகுதி ஆக்கிரமிப்புக்கள்:  உலகிற்கு உரைக்கப்படும் பொய்கள்

                                  எஸ்.ரட்னஜீவன் எச். ஹ_ல்

வடக்கிலுள்ள நாங்கள் துருப்புகளுக்குப் பயப்படுகிறோம். அது வெறுமே தratnajeevanமிழர்கள் என்பதினால் அல்ல. காவல்துறை கண்காணிப்பாளர் நாயகம் (ஐஜிபி) தனது அலுவலக ஊழியர் ஒருவரைத் தாக்கும் காணொளியையும் மற்றம் கடற்படைத் தளபதி ஒரு ஊடகவியலாளரைத் தாக்கும் வைரலான காணொளியையும் நாங்கள் கண்டுள்ளோம். ஜனநாயத்தை பொறுத்தவரை துருப்புக்கள் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும். எனினும் எங்களது ஜனநாயகத்தில் அப்படியில்லை. 1970ல் எந்தவித காரணமுமின்றி ஒரு காவல்துறை காவலர் குழுவினரால் நான் தாக்கப்பட்டேன். 1980 களின் ஆரம்பத்தில் மூன்று ட்ரக் வண்டிகளில் துருப்புக்கள் சிகரட் வாங்கச் செல்லும் வழியில் என்மீதும் மற்றைய வழிப்போக்கர்களின்மீதும் மிதிவண்டிச் சங்கிலியால் சுழற்றி அடித்தார்கள். விரைவிலேயே எங்கள் பாதுகாவலரான துருப்புக்கள் எங்களைக் கொன்றார்கள்.  கடந்த சனிக்கிழமை, நான் எனது விருப்பத்துக்குரிய காரைநகர் கசுவாரினா கடற்கரைக்குச் சென்றேன். விடுமுறை காலங்களில் நகரில் இருந்து 13 மைல் தூரத்திலுள்ள அந்த இடத்துக்கு வழக்கமாக நாங்கள் மிதிவண்டியில் செல்வதுண்டு. அந்த கடற்கரை எங்களுக்காகத்தான் இருந்தது.    (மேலும்) 27 08.18

._______________________________________________________________________

கடந்த 24 மணித்தியாலங்களில் 12 பேர் பலி

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.accident srilanka   இந்த விபத்துக்களில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 20 பேர் ஆகும். போலியகொட – வனவாசல தொடரூந்து நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை முச்சக்கரவண்டியொன்று தொடரூந்தில் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.  இதேவேளை மின்னெரிய - ஹபரணை பிரதான வீதியில் 49 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற வேன் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். இரத்தினபுரி – எம்பிலிபிட்டிய வீதியில் கொஸ்வெட்டி விகாரைக்கு அருகில் தனியார் பேருந்தும் உந்துருளியும் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகினர்.
  இதனுடன் மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் கின்னியா – தோனா பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.      (மேலும்) 27 08.18

._______________________________________________________________________

மகாவலிக்கு எதிரான அறவழிப் போராட்டத்திற்கு பூரண ஆதரவு


தமிழர் தாயகத்தை துண்டாடவும் இனப் பரம்பலை மாற்றியமைத்து, தமிழர்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தவும் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை வன்மையாக கண்டிப்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.இவ்விடையம் தொடர்பாக அவர்ு (26) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மகாவலி வலயத்தினுள் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் ஊடாக 6 ஆயிரத்திற்கும் அதிகமான சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டு தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு 9 சிங்கள கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட வெலி ஓயா (மணலாறு) பிரதேசசெயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. மகாவலி இது வரை காலமும் தனது செயற்பாடுகளை வெலி ஓயா பிரதேச செயலாளர் பிரிவுடன் மட்டுப்படுத்தியிருந்த மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அண்மையில் கருநாட்டுக்கேணி கடற்கரையில் எட்டு சிங்கள மீனவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கியதனூடாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவினுள் தனது காணி அதிகாரத்தினை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது.      (மேலும்) 27 08.18

._______________________________________________________________________

கிளிநொச்சி இளைஞர்களுக்கு ஒரு கோடி வழங்கும் அமைச்சர் மனோ கணேசன்

கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளின் மேம்பாடு கருதி அவர்களிManoganesan1619ன் தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாவினை வழங்குவதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்து்ளளார்.கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளை சந்திந்த போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.தனது அமைச்சின் நிதி ஒதுக்கீடு மூலம் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளின் மேம்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாவினை ஒதுக்கீடு செய்வதாகவும், இதற்கான திட்டமிடல்கள் மற்றும் முன்மொழிவுகளை அதிகாரிகள் ஊடாக அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

._______________________________________________________________________

ஜனாதிபதி செயலணி கூட்டத்தை மீண்டும் நிராகரித்த வடக்கு முதல்வர்

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளவுள்ள நிலையில் கூட்டத்தில் பங்கேற்பதை வடமாகாண முதலமைச்சர் நிராகரித்துள்ளார்.வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது கூட்டம் நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளது.ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் எமது செய்தி சேவை வினவியது.அதற்கு பதில் வழங்கிய அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்பதை மீண்டும் உறுதிப்பட தெரிவித்தார்.அத்துடன் இரா.சம்பந்தனுக்கும் தனக்கும் இடையிலான சந்திப்பு அடுத்த மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

._______________________________________________________________________

சவாரி மாட்டினை இறைச்சிக்காக வெட்டிய ஒருவர் கைது - ஒருவர் தப்பி ஓட்டம்


வண்டில் சவாரி மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொருவர் தப்பி சென்றுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.savary   வட மாகாணத்தில் மாட்டு வண்டி சவாரி பாரம்பரிய விளையாட்டாக பேணப்பட்டு வரும் நிலையில் இவ்வாறான செயற்பாடு மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளது.   வண்டில் சவாரிக்கு பயன்படுத்தப்பட்ட மாடு ஒன்றினை திருட்டுத்தனமாக வீடொன்றில் வைத்து இறைச்சியாக்கியமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் தேடுதல் மேற்கொண்டனர்.இதன்போது குறித்த மாட்டிலிருந்து பெறப்பட்ட இறைச்சியும், எச்சங்களும் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரிவித்து ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், மற்றுமொருவர் தப்பி சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.    (மேலும்) 27 08.18

._______________________________________________________________________

இன்று வாட்சப்பிலும் பேஸ்புக்லயும் அதிகமாக சுத்திட்டிருக்கிற செய்தி இது தான்

இது தான் வாழ்க்கை...keralafloods11

கேரளா உணர்த்தும் பாடம்.....

“இந்தப் பகுதி இன்னும் அரைமணி நேரத்தில் மூழ்கிவிடும் முக்கியமானதை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேறுங்கள்” இதைக் கேட்டபோது அவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டிருந்தார்கள் இப்போது அவர்கள் பிரச்சினை எதையெல்லாம் எடுத்துக்கொள்து என்பதல்ல எதையெல்லாம் கைவிடுவது என்பதுதான் முதலில் கைககளில் எதையெல்லாம் தூக்கிக்கொள்ள முடியாதோ அதையெல்லாம் கைவிட்டார்கள் பிறகும் கைவிடுவதற்கு ஏராளமாக இருந்தன பரிசுப்பொருள்கள் தெய்வப்படங்கள் புகைப்பட ஆல்பங்கள், ஆடைகள் உள்ளாடைகள், புத்தகங்கள் இசைக்கருவிகள், இசைப்பேழைகள் ஸ்பூன்கள், கண்ணாடிக் கோப்பைகள், பொம்மைகள் கண்ணீரின் உப்புப் படிந்த தலையணைகள் உடல் வாசனையுள்ள போர்வைகள் அழகு சாதனப்பொருள்கள்    (மேலும்) 26 08.18

._______________________________________________________________________

உள்பெட்டிக் கேள்விகள், ஆலோசனைகளும் பகிரங்கப் பதிலும்.

-    கருணாகரன்

 “எதற்காக விக்கினேஸ்வரனின் மீது இவ்வளவு கோபம் உங்களுக்கு?” என்று முகப்புத்தக உள்பெட்டியில் கேட்டிருக்கிறார் நண்பர் ஒருவர்.np chief minister    இன்னொரு நண்பர் கேட்கிறார், “விக்கினேஸ்வரனை நீங்கள் எப்படி மறுத்தால் என்ன, விமர்சித்தால் என்ன அவரைச் சனங்கள் ஆதரிப்பார்கள். சனங்களின் மத்தியில் அவருக்கு நல்ல மதிப்பும் அபிமானமும் உண்டு. அப்படியிருக்கையில் உங்களுடைய தனிப்பட்ட அபிப்பிராயம் என்பது செல்லுபடியாகாத புலம்பலாகவே இருக்கும்” என. இதே பொருள்பட இன்னொரு நண்பர் மின்னஞ்சலில் தெரிவித்திருக்கிறார், “விக்கினேஸ்வரனைப் பற்றி தொடர்ச்சியாகவே நீங்கள் (கருணாகரன்) கடுமையாகத் தாக்கி வருகிறீர்கள். இது அவரை ஆதரிக்கிற ஏராளமானவர்களின் பகையைச் சம்பாதிப்பதாக அமையும்” என்று. இது நண்பருடைய அறிவுரையா அல்லது எச்சரிக்கையா? எப்படி எடுத்துக் கொள்வதென்று தெரியவில்லை. வேறு சில அருமையான நண்பர்கள் வந்து பெருமையாகச் சொல்கிறார்கள், ”முட்டாளே, அவரைப் பற்றி எழுதவும் விமர்சிக்கவும் உனக்கு (கருணாகரனுக்கு) என்ன தகுதி இருக்கு? என்ன யோக்கியம் உண்டு?” என. இதற்கப்பால் தமிழ்ச் செம்மொழியின் பண்பான சொற்களால் தாராளமாக அபிஷேகம். (மேலும்) 26 08.18

._______________________________________________________________________

 பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினம் வியாழக்கிழமை  அனுஷ்டிக்கப்பட உள்ளது.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினம் எதிர்வரும் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு இந்தத் தினத்தை அனுஷ்டிப்பதற்காக விசேட வேலைத் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. காணாமல் ஆக்கப்படுவதற்கு இடமளியோம் என்பது இம்முறை தொனிப்பொருளாகும். பலவந்தமாக ஆட்கள் கடத்தப்படுவதில் இருந்து பாதுகாப்பதற்காக சர்வதேச இணக்கப்பாட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தீர்வைக் கண்டறிவதற்கான போராட்டத்தின் வெற்றியாக இது கருதப்படுகிறது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி கலாநிதி திருமதி தீபிகா உடுகம இந்த நிகழ்வுகளி;ல் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் செயற்பாட்டாளர்கள் பலர் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

._______________________________________________________________________

மனிதப்புதைகுழி விவகாரம் மூலம் காணாமல்போனோர் விடயத்தில் விடைகாண முடியும்”

காணாமல்போனோர் விவகாரம் தொடர்பான தகவல்கள் மன்னார் மனிதப்புதைகுழிகள் மூலம் வெளிவரும் சாத்தியப்பாடுகள் உள்ளன. mannar borne   ஆகையினால் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கை மற்றும் நவீன பரிசோதனை முறைகள் என்பவற்றுக்கான நிதியினை காணாமல்போனோர் அலுவலகம் வழங்கத் தீர்மானித்துள்ளது.  மனிதப்புதைகுழிகளின் உண்மைநிலை கண்டறியப்பட்டு, அங்கு புதைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.  மன்னார் மனிதப்புதைக்குழி விவகாரம் தொடர்பில் காணாமல்போனோர் அலுவலகத்தின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப்புதைகுழிகளின் உண்மைநிலையைக் கண்டறிவதற்காக அங்கு அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.   (மேலும்) 26 08.18

._______________________________________________________________________

முதலைகளின் தாக்கங்கள் தொடர்பில் அவதானம்..

கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் உள்ள தாழ்நிலப்பகுதிகளில் வாழும் முதலைகளினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுவது அவசியம் crocodileஎன வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன் பணிப்பாளர் டினால் சமரசிங்க எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும்போது இந்த விடயத்தை குறிப்பிட்டார்.பெல்லன்வில – வேருஸ் கங்கை, அத்திடிய தாழ்நிலப்பகுதி மற்றும் தியவன்னா ஆற்றை அண்டிய பகுதிகளில் முதலைகளின் நடமாட்டத்தை அவதானிக்க முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு சன நெரிசலான பகுதியாக இருப்பினும், நீர்வளம் நிறைந்த தாழ்நிலப்பகுதிகளில் முதலைகள் வாழ்வதற்கான சூழ்நிலை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில், முதலைத் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்வதற்காக வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றபோதும், அவ்வாறு அமைக்கப்படுகின்ற வேலிகளின் மூலம் போதுமான பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளதாக டினால் சமரசிங்ககே குறிப்பிட்டுள்ளார்.

._______________________________________________________________________

விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது - இலங்கை ஆசிரிய சேவை சங்கம்

பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபர் ஆர். பவானியை முழங்காலில் இடப்பட்டமை தொடர்பில், ஊவா மாகாண ஆளுனரின் பணிப்புரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என, இலங்கை ஆசிரிய சேவை சங்கம் தெரிவித்துள்ளது.குறித்த விசாரணை அறிக்கையில் அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆசிரிய சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபருக்கு நிகழ்ந்த அநீதி தொடர்பில் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த அறிக்கை வௌியிடப்பட்ட பின்னர் முறையான விசாரணை ஒன்று இடம்பெறும் எனவும் ஆசிரிய சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளா

._______________________________________________________________________

265 பேர் பலி; 8 லட்சம் பேர் இன்னமும் நிவாரண முகாம்களில்

திருவனந்தபுரம் : வெண்பட்டு நிறத்திலான ஆடைகள் அணிந்து அத்தப்பூக் கோலங்களுடன் வழக்கமான உற்சாகக் கொண்டாட்டத்துடன் கலைகட்டும் ஓணம் பண்டிகை இந்தonam முறை அவ்வளவு மகிழ்ச்சியை அளிக்கவில்லை.   கேரள மாநிலத்தில் ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளத்தால் 265 பேர் பலியாகினர். சுமார் 8 லட்சம் பேர் இன்னமும் நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனர். வீடிழந்து, உறவுகளை இழந்து கண்ணீர் கடலில் தத்தளிக்கும் அவர்களால் ஓணம் பண்டிகையை எப்படிக் கொண்டாட முடியும்? ஆலப்புழா மாவட்டத்தின் நீதிமன்ற வராண்டாவில் இருக்கும் தரைவிரிப்பை இரண்டு பேராகச் சேர்ந்து தூக்கி சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.  82 வயதாகும் குமாரி கூறுகையில், இந்த ஓணம் பண்டிகையை கொண்டாட முடியாமல் போகும் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இன்று திரு வோணம். ஆனால் நாங்களோ நிவாரண முகாம்களில் இருக்கிறோம். எதிர்பாராத மழையும் வெள்ளமும் எங்களது வீடுகளை அடித்துச் சென்றுவிட்டது என்கிறார்.   (மேலும்) 26 08.18

._______________________________________________________________________

 அதிவேக வீதியில் 3 ஆயிரத்து 82 கோடி ரூபா வருமானம்

அதிவேக வீதியில் கடந்த ஜூலை மாதம் வரை 3 ஆயிரத்து 82 கோடி ரூபா வரை வருமானம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிவேக வீதியின் செயல்பாட்டு பிரிவு அதிகாரி எம் ஒபநாயக இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாடசாலை விடுமுறை காலப்பகுதியில் ஒரு லடசம் வரையிலான வாகனங்கள் அதிவேக வீதியினை பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இதேவேளை , தற்போது கடவத்தை, பின்னதுவ, கொடகம ஆகிய அதிவேக வீதியில் நுழைவாயில் மற்றும் வெளியேறும் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ர்.

._______________________________________________________________________

பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் காலமானார்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள்   சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் (வயது-64), இன்று (25) காலை   யாழ்ப்பாணத்தில் காலமானார்.இன்றைய தினம் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.இவரது ஜனாசா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

 வவுனியாவில் பஸ் சாரதியைத் தாக்கிய மூவர் கைது

வவுனியா பஸ் நிலையத்தில் சாரதியொருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றின் சாரதி மீதே, வவுனியா புதிய பஸ் நிலையத்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதிகளவு கட்டணம் அறவிடப்பட்டதாக பஸ் சாரதிக்கும் கைது செய்யப்பட்ட குறித்த மூன்று பயணிகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதையடுத்து, பயணிகள் மூவரும் சாரதியை தாக்கியுள்ளனர்.சம்பவத்தில் காயமடைந்த பஸ் சாரதி, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பயணிகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

._______________________________________________________________________

நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம்15
மக்கள் திலகத்தின் இலங்கைப்பயணம்
எம்.ஜீ. ஆரின் "எங்கவீட்டுப்பிள்ளை" ஒளிப்படக்கலைஞர் ராஜப்பன்!

                                                                                ரஸஞானி

"ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்" என்று எமது முன்னோர்கள் ஒரு முதுமொழி சொல்வார்கள். அவ்வாறு ஒரேசமயத்தில் தனக்கும் வருமானம் தேடிக்கொண்டு அதன்மூலம் engaveettupillaoமற்றும் ஒருவரின் புகழை மேலும் மேன்மைப்படுத்திய ஒருவர் பற்றிய கதையை இங்கு சொல்லவிரும்புகின்றேன்.  ஆனால், அவரது ஒளிப்படம்தான் எனக்கு கிடைக்கவில்லை! இத்தனைக்கும் அவர் கொழும்பில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற சிறந்த ஒளிப்படக்கலைஞர். சொந்தமாக ஒரு ஸ்ரூடியோவும் நடத்தியவர்.   கேரளாவிலிருந்து இளம் வயதிலேயே இலங்கைத் தலைநகரம் வந்து, ஒளிப்படக்கலைஞராக வளர்ந்து, பின்னாளில் சொந்தமாகவே ராஜா ஸ்ரூடியோ என்ற நிறுவனத்தையும் தொடங்கியவர். முன்னாள் இலங்கை அதிபர் மறைந்த ரணசிங்க பிரேமதாசவின் நம்பிக்கைக்குரியவராகவும் திகழ்ந்து, அவர் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த வேளையில் கட்டிடப்பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் சபையிலும் அங்கம் வகித்தவர்.மத்திய கொழும்பில் புதுச்செட்டித்தெருவில் ராஜா ஸ்ரூடியோவையும் பின்னாளில் அதன் அருகாமையில் ஒரு அச்சகத்தையும் நிறுவியவர். இவரது மனைவி  கௌரீஸ்வரி அக்கால கட்டத்தில் இலங்கையில் புகழ்பெற்ற கர்னாடக இசைப்பாடகியாவார்.    (மேலும்) 25 08.18

._______________________________________________________________________

மட்டக்களப்பில் மறுகாவின் ஏற்பாட்டில் இரண்டு நாள் இலக்கியக் கூடல் -  பேசிப் பறைதல்

மட்டக்களப்பு ஆரையம்பதி - தேசிய கல்விக் கல்லூரியில் மறுகா இலக்கிய அமைப்பின் ஏற்பாட்டில் 25 சனிக்கிழமை,  26 ஞாயிற்றுக்கிழமை ஆகிய   இரண்டு நாள்களுbatt.lit1ம் இலக்கியக் கூடல் நிகழ்வு நடைபெறவுள்ளது.  இருபொழுதில் கூடல் - பேசிப் பறைதல் என்ற  இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக கொழும்பு, யாழ்ப்பாணம், மலையகம். திருகோணமலை, வன்னி, அக்கரைப்பற்று, கல்முனை மற்றும்  உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் படைப்பாளிகளும் வாசகர்களும் விமர்சகர்களும் செயற்பாட்டியக்கங்களைச் சேர்ந்தோரும் ஒன்று கூடவுள்ளனர். இதில் சிறுகதை, கவிதை, நாவல் மற்றும ்கூத்துக் கலை பற்றி விரிவான முன்வைப்புகளும் உரையாடல்களும் இடம்பெறவுள்ளன. முதலாம் நாள் மறுகா சஞ்சிகையின் ஆசிரியர் த. மலர்ச்செல்வன் நிகழ்வைத் தொடக்கவுரை நிகழ்த்தி ஆரம்பித்து வைக்கிறார். தெடார்ந்து, எழுத்தாளர் சாந்தனின் தலைமையில் சிறுகதை அமர்வு நடைபெறவுள்ளது. இதில் யதார்த்தன், அம்ரிதா ஏயெம், அப்துல் ரசாக் ஆகியோர் உரைகளை முன்வைக்கவுள்ளனர்.     (மேலும்) 25 08.18

._______________________________________________________________________

முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி செயலணியில் கலந்து கொள்ள வேண்டாம் என வடமாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பcm vigneswaranுக்கு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.   வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி அடுத்த வாரம் கூடவுள்ளது. இந்நிலையில் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் வரை அபிவிருத்தி செயலணியில் தாம் கலத்து கொள்ளப் போவதில்லை எனவும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டாம் எனக்கோரி முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்மந்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  இந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று (24) கூடி ஆராய்ந்துள்ளது. இதன்போது வடகிழக்கு மாகாணங்களில் மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தி சார் பிரச்சினைகள் உள்ளது. இதற்கும் மேல் நில ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.       (மேலும்) 25 08.18

._______________________________________________________________________

லிபரல் கட்சி அதிகாரப் போட்டியில் திருப்பம்: ஆஸ்திரேய பிரதமரானார் ஸ்காட் மாரீசன்


ஆஸ்திரேலியாவின் ஆளும் லிபரல் கட்சியில் பல நாள்களாக நீடித்து வந்த அதிகாரப் போட்டியில் ஒரு திருப்பமாக, அந்த நாட்டின் நிதியமைச்சராக இருந்த ஸ்காட் மாரீசன் புதியmorrison பிரதமராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.   இதுவரை பிரதமராக இருந்த மால்கம் டர்ன்புல்லுக்கு எதிராக உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் போர்க் கொடி தூக்கிய நிலையில், டட்டனைத் தோற்கடித்து டர்ன்புல் ஆதரவாளர் மாரீசன் பிரதமராகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியப் பிரதமராக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்த மால்கம் டர்ன்புல், மின் கட்டணங்களைக் குறைப்பது உள்ளிட்ட தனது எரிசக்திக் கொள்கையை கடந்த வாரம் வெளியிட்டார்.   அதற்கு, கட்சியின் முக்கிய தலைவரும், உள்துறை அமைச்சருமான பீட்டர் டட்டன் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக லிபரல் கட்சி எம்.பி.க்களைத் திரட்டி டர்ன்புல்லை கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.  அதையடுத்து, டர்ன்புல் மற்றும் டட்டனுக்கு இடையே தலைமைப் பதவிக்கான போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.        (மேலும்) 25 08.18

._______________________________________________________________________

புகையிரத ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில்

எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.சம்பள பிரச்சினைக்கு சரியான தீர்வு கிடைக்கப் பெறாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புகையிரத ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் நேற்று (23) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.இந்த கலந்துரையாடலில் சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வு ஒன்றும் எட்டப்படவில்லை என புகையிரத தொழிற்சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

._______________________________________________________________________

“ காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே  களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி  வைக்கிறார்கள்”

எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் வெளியிட்டுள்ள  அறிக்கையில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவிப்பு!

“ மாகாண சபை தேர்தல் முறையினை  மாற்றுவதற்கு வாக்களித்தவர்களabdul rahmanே அநியாயம்  நடந்து விட்டதாக  இப்போது  ஒப்பாரி வைக்கிறார்கள். காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு ‘திருட்டுப் போய்விட்டது’ என அலறுவது போல் இருக்கிறது இது. இனிவரும் காலங்களிலாவது இவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும. இவர்களைப் போன்றவர்கள் தொடர்பில் சமூகமும் முன்னெச்சரிக்கையாகவும் பொறுப்புடனும் தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டும்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் பிரதித் தவிசாளர் பொறியியளாலர் அப்துர்ரஹ்மான் தெரிவித்துள்ளார்.    மாகாண சபைத்தேர்தலுக்கான புதிய தேர்தல் முறைதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார். பொறியியளாலர் அப்துர்ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“ புதிய முறைமையில் மாகாண சபைத்தேர்தலை நடாத்துவதற்கான சட்டம் கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அமைவாக நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழு தனது அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.     (மேலும்) 2508.18

._______________________________________________________________________

கோட்டாபய உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக விசேட மேல்நீதிமன்றில் வழக்கு தாக்கல்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக நிதி மோசடி தொடர்பான விசேட மேல் நீதிமன்றில், சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.டீ.ஏ. ராஜபக்ஷ நூதனசாலை நிர்மாணப் பணிகளின்போது, அரச நிதியை மோசடி செய்தமை தொடர்பில் இந்த வழக்கு, தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவித்தலை ரத்துச் செய்து, அதனை மீளப் பெறுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க நேற்றைய தினம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________


தென் கொரிய முன்னாள் அதிபருக்கு 25 ஆண்டு சிறைsouthkorea former pm

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூ-ஹைக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மேலும் ஓராண்டுக்கு சிறைத் தண்டனையை நீடித்தது. அதையடுத்து, தனது பதவிக் காலத்தின்போது ஊழலில் ஈடுபட்டது, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத் தண்டனை, 24-லிருந்து 25 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறி வரும் பார்க் கியூ-ஹை, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவில்லை.

._______________________________________________________________________

 ரஜனியின் ஆன்மீகமும் விக்கினேஸ்வரனின் அரசியலும்

-          கருணாகரன்

 அடுத்த மாகாணசபைத் தேர்தலுக்கு எப்படியாவது வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக விக்கினேஸ்வரனை நிறுத்தியே தீர வேணும் என்று சிலர் பாடாய்ப்படுகிறார்கள்.cmrajani     ஏன் வேறு பொருத்தமான ஆட்கள் தமிழ்ச்சமூகத்தில் கிடையாதா என்று நீங்கள் கேட்கலாம். தன்னம்பிக்கை குறைந்த சமூகமாக தமிழர்கள் மாறிவிட்ட பிறகு புதியவைகளை எப்படித் துணிச்சலாகத் தேடமுடியும்? இதனால் தங்களுக்கு முன்னே உள்ள பிம்பங்களே அவர்களுக்கு அவதாரங்களாக, தெய்வங்களாகத் தெரிகின்றன.  தெய்வ நிலையில் ஒருவரை பார்க்கத்தொடங்கி விட்டால், அவரைப் பற்றிய மதிப்பீடுகளுக்கோ விமர்சனங்களுக்கோ இடமிருக்காது. வழிபாட்டு மனநிலையே இருக்கும். இதனால்தான் பிம்ப வழிபாட்டில் தமிழ்ச்சமூகம் வீழ்ந்து கிடக்கிறது. இவ்வாறானவர்களே விக்கினேஸ்வரன்தான் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேணும் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.    இவர்கள் பல தரப்பினர். ஒரு தரப்பினர் விக்கினேஸ்வரன் தனியாக ஒரு கூட்டை உருவாக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இன்னொரு தரப்பினர் (தமிழரசுக் கட்சியைத் தவிர) கூட்டமைப்பின் வேட்பாளராக விக்கினேஸ்வரனே நிறுத்தப்பட வேண்டும் என்கின்றனர்.     (மேலும்) 2408.18

._______________________________________________________________________

உயர்தர பரீட்சை எழுதும் மாணவியை துஷ்பிரயோகம்  கிளிநொச்சி இளைஞருக்கு விளக்கமறியல்


உடையார் கட்டில் பாடசாலை மாணவியை கடத்தி சென்று விருப்பத்mullaitivu courtதிற்கு மாறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிளிநொச்சி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு உடையார் கட்டு மகா வித்தியாலத்தில் உயர்தர பரீட்சை எழுதி வரும் லூத்மாத கோவில் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மாணவியையே இவ்வாறு பளையினை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.   கடந்த 20 ஆம் திகதி பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு ஊர்தி ஒன்றில் கடத்தி சென்று பளைப்பகுதியில் தென்னந்தோட்டம் ஒன்றில் வைத்து விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு 21 ஆம் திகதி உடையார் கட்டுப் பகுதியில் கொண்டுவந்து இறக்கிவிட்டுள்ளார்கள்.     (மேலும்) 2408.18

._______________________________________________________________________

யுத்தகாலத்தில் அழிவடைந்த காங்கேசன்துறை தயிலிட்டி திஸ்ஸவிகாரையை மீள்புனர்நிர்மாணம் செய்வதற்கான நிகழ்வு

யுத்தகாலத்தில் அழிவடைந்த காங்கேசன்துறை தயிலிட்டி திஸ்ஸவkks myliddyிகாரையை மீள்புனர்நிர்மாணம் செய்வதற்கான நிகழ்வு பாதகட விமலஞான தேரர் தலைமையில் நேற்று (22) பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கலந்து கொண்டு விகாரை அமைவதற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார். 1946ம் ஆண்டு எழுதப்பட்ட உறுதி அடிப்படையில் பாதகட விமலஞான தேரர் குறித்த விகாரைக்குரிய காணியினை இனங்கண்டு அதனை மீள நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளார். குறித்த விகாரை பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் இருந்துவந்துள்ளது. 1954.05.17 ம் திகதி இறுதியாக வெசாக் பண்டிகை கொண்டாப்பட்டுள்ளது. இதன் பின்னர் நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் குறித்த விகாரை முற்றாக அழிவடைந்திருந்தது. அதனை மீள் நிர்மாணம் செய்யும் பணிக்கான ஆரம்ப வேலை நேற்றயதினம் சுப நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.   இந்நிகழ்லில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், பிரதியேக செயலர் ஜே.எம்.சோமசிறி, கிராமசேவையாளர், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

._______________________________________________________________________

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.   டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களின் 90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

முதலமைச்சர் விக்கி வெளியேறி விட்டார் ; கூட்டமைப்பு சபையில் பதவியிலிருப்பதற்கு  தகுதியற்றவர்

- ப.சத்தியலிங்கம்

கூட்டமைப்பில் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்னேரே முதலமைச்சர் வெளியேறிவிட்டார் அவர் கூட்டமைப்பு சபை பதவியில் இருப்பதற்கு  தகுதியற்றவர் என ப.சத்தியலிங்sathiyalingamகம் தெரிவித்துள்ளார்.    கூட்டமைப்பில் இருந்து கொண்டே கூட்டமைப்புக்கு எதிராகவும் அல்லது கூட்டமைப்புடன் ஒத்து இயங்குகின்ற தன்மையிலிருந்து கடந்த மூன்று வருடங்களுக்கு முதலே முதலமைச்சர் வெளியேறிவிட்டார். கூட்டமைப்பினுடைய மாகாண சபை  அறுதிப்பெரும்பான்மையுடன் செயற்படுகின்ற இந்த சபையிலே தாங்கள் கூட்டமைப்பு இல்லை என்று சொல்லிக் கொண்டு அல்லது தாங்கள் கூட்டமைப்புக்கு வெளியே இருந்து செயற்படுவதாக சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அந்த பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள். அவர்கள் கூட்டமைப்பு இல்லை என்று சொன்னால் அவர்கள் கூட்டமைப்பினுடைய சபையிலே இருப்பது என்பதும், பதவி வகிப்பது என்பதும் அநாகரிகமானது என முன்னாள் சுகாதார அமைச்சரும், வடமாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.        (மேலும்) 2408.18

._______________________________________________________________________

 பிரபாகரனின் மரணம் தொடர்பில் மகிழ்ச்சியடையவில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின்  Ragul Handhiமரணம் தொடர்பில், தானோ, அல்லது தனது சகோதரியான பிரியங்கா காந்தியோ மகிழ்ச்சியடையவில்லை என்று இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் நேற்று முன்தினம், இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.   வன்முறைகளால் தனது பாட்டி இந்திரா காந்தியும், தனது தந்தை ராஜிவ் காந்தியும் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள ராகுல் காந்தி, வன்முறைகளால் தாம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். வன்முறைக்குப் பின்னர் முன்னேறுவதற்கு உள்ள ஒரே வழி மன்னிப்பாகும். எனவே மன்னிப்பை வழங்குவதற்காக, சரியாக என்ன நடந்தது ? ஏன் நடந்தது ? என்று புரிந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.   (மேலும்) 2408.18

._______________________________________________________________________

 மன்னார் மனித எச்சங்கள் தொடர்பிலான விசாரணைக்கு ஒத்துழைப்பு

மன்னார் கட்டடப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று காணாமல் போனோர் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி சாளிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மனித எச்சங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உதவுவதற்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.தற்பொழுது இடம்பெற்று வரும் மனித எச்சங்கள் தொடர்பான அகழ்விற்கு தமது ஆணைக்குழு நேரடியான பங்களிப்பினை வழங்குவதுடன் அது தொடர்பான பணி விடயங்களையும் மதிப்பீடு செய்யது வருகின்றது என்றும அவர் மேலும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஜெயதீபா புண்ணியமூர்த்தி, ஓய்வு பெற்ற மேஜர் ஜனரல் மொகந்தி அந்தோனி பீறிஸ், சோமசிறி லியனகே, மற்றும் கணபதிப்பிள்ளை வேந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

._______________________________________________________________________

விபத்துக்குள்ளான 6 இந்திய மீனவர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படையினர்

வடக்கு கடற் பகுதியில் விபத்துக்குள்ளாகி இருந்த இந்திய மீனவர்கள் 6 பேரினை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படை குழு ஒன்றே இவ்வாறு நீரில் மூழ்கி கொண்டிருந்தவர்களை காப்பாற்றியுள்ளனர்.குறித்த மீனவர்கள் தங்களது படகு விபத்துக்குள்ளானதை அடுத்து நீரில் தத்தளித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு காப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

._______________________________________________________________________

கொக்குவில் வன்முறை ; ஒருவர் கைது

கொக்குவில் பகுதியில் நேற்று மாலை வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுப்பட்டார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.கொக்குவில் முதலி கோவிலடியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணைகள் இடம்பெறுகின்றன.கொக்குவில், தாவடி மற்றும் இணுவில்  என அடுத்தடுத்து 5 இடங்களில் வன்முறை இடம்பெற்றது. எனினும் கொக்குவில் பிரம்படி லேனில் வீடு ஒன்றுக்குள் புகுந்த சம்பவம் தொடர்பிலேயே யாழ்ப்பாணம் பொலிஸாரால் விசாரணை நடத்தப்படுகிறது.அதனால் அந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைகளின் பின்னர் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்” என்று யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

தப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது

                                              அனுராங்கி சிங்

2008 - 2009 ஆண்டுகளில் வசதியான தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களையும் மற்றும் இளைஞர்களையும்  கடத்தி கப்பம் கோருவதை இலக்காகக் கொண்டிருந்த அச்சமூட்டும் கடற்படை கடத்தல் குழுவின் தலைவனை, குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர்(சி.ஐ.டி) ஒரு வருட காலமாக நடத்தி வந்த தேடுதல் வேட்டையின் பின்னர் கொழும்பில் வைத்து கைது செய்தனர்.    --செய்தி -

நேவி சம்பத்தை தேடும் குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரின் தேடுதnevi sampathல் வேட்டை, ஓரளவு யதேச்சையாக நடைபெற்ற சம்பவத்தின் மூலம் முடிவுக்கு வந்தது. கொள்ளைக் கும்பல் குற்றவியல் பிரிவிற்கு பொறுப்பான அதிகாரியாக கடமையாற்றும் சி.ஐ.டி நிஷாந்த சில்வா, முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஸவிடம், ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட இரவு நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக வெள்ளிக்கிழமை (17.08.2018) சி.ஐ.டி அதிகாரிகள் அவரது வீட்டுக்கு வரவுள்ளார்கள் என்பது பற்றிய விபரங்கள் அடங்கிய ஒரு கடிதத்தை அவரிடம் கொடுப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார். பொறுப்பதிகாரி சில்வா ஒரு ஜீப்பில் கொழும்புக் கோட்டையில் உள்ள லோட்டஸ் வீதியால் பயணித்துக் கொண்டிருந்தார், அப்போது வீதியால் நடந்து கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டதும் அவன் தனக்கு நன்கு பரிச்சயமானவனாக இருப்பதாக அவர் நினைத்தார். அந்த மனிதன் தாடி வைத்திருந்தான், றபர் செருப்புக்களை அணிந்து சாதாரண ஒரு தொழிலாளியைப் போலத் தோற்றமளித்தான்,    (மேலும்) 23.08.18

._______________________________________________________________________

''வரும்காலங்களில் கேரளா தொடர்ந்து பேரழிவுகளை சந்திக்கும்'' சுற்றுச்சூழல்வாதி சுகதாகுமாரி

கேரளாவில் உள்ள ஒவ்வொரு ஆறும், மலையும் நாசமாகிவிட்டபின் இந்த நாடு எப்படி கடவுளின் சொந்த நாடாக இருக்கும் என்று கேள்விஎழுப்புகிறார் அவர். இடுக்கி மலையில் பாருங்keralaflood6கள். மலைகள் மீது பெரிய வீடுகள், கேளிக்கை விடுதிகள் கட்டப்பட்டது. தற்போது மலையின் ஒரு பகுதியே நிலச்சரிவில் அழிந்துவிட்டது. இதை எப்படி சரி செய்வீர்கள்? இந்த சிறிய மாநிலத்தில் எத்தனை இயற்கை வளம் நசிந்துபோனது? 44 நதிகள் இங்குள்ளன. பல நதிகள் ஆலைக்கழிவு, வீட்டுக்கழிவுகளை சுமந்து, நோய்வாய்ப்பட்டுப்போனது. முடிந்தமட்டும் மணலை தோண்டி நதிகளின் ரத்தநாளங்களை துண்டித்தாகிவிட்டது. இதை சரிசெய்ய முடியுமா?,'' என்று அடுக்கடுக்காக கேள்விகளை வைக்கிறார். ''பல ஆண்டுகளாக நாம் மிகவும் கொடுத்துவைத்தவர்களாக இருந்தோம். இதுவரை இதுபோல வெள்ளம், நிலநடுக்கம், மதச்சண்டைகள், போர் என எதுவுமற்ற அமைதியான மாநிலமாக கேராளா இருந்து வந்தது. அதனால்தான் அது கடவுளின் சொந்த தேசமாக இருந்தது. தற்போது எல்லாமே மாறிவருகிறது. இயற்கையின் சமநிலையை நாம் குலைத்துவிட்டதால் நாம் நிலைகுலைந்து நிற்கிறோம்,'' என்றார்.வடநாட்டில் ஏற்பட்டது போல பட்டினிச்சாவுகள் கேரளாவில் நடக்கவில்லை. வறட்சி ஏற்படவில்லை. ஆனால் ஆடம்பரமாக வாழவிரும்புகிற காரணத்தால் கேரளா மக்கள் தங்களுக்கான சவக்குழிகளை அவர்களே வெட்டிக்கொள்கிறார்கள் என்கிறார் சுகதாகுமாரி.       (மேலும்) 23.08.18

._______________________________________________________________________

குயீன்ஸ்லாந்து தமிழ் மன்றம், ஆஸ்திரேலியா

முத்தமிழ்விழா

செப்டெம்பர் 2 ஆம் திகதி, குயீன்ஸ்லாந்து கோல்ட் கோஸ்ட் நகரின், ஹெலன்ஸ்வேல் நூலக அரங்கில், ஞாயிறு மாலை 4 முதல் 7 மணிவரை முத்தமிழ் விழா நடைபெறும். இசை, பாடqueenslandல், நடனம், பறையிசை, கவிதை, குறுங்கதை, சிறுவர் அரங்கம் ஆகிய நிகழ்வுகளுடன், நம் செயற்குழு உறுப்பினர் கவிஞர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் "விதைகள்" எனும் மரபுக்கவிதைத் தொகுதியும், சிட்னி வாழ் தமிழரான, பேராசிரியர் ஆசி கந்தராஜா அவர்களின் "கள்ளக் கணக்கு", மற்றும் "செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக்கத்திரிக்காய்" எனும் இரண்டு நூல்களும் வெளியிடப்படும். விதைகள், கள்ளக்கணக்கு ஆகிய இரு நூல்களும், அண்மையில் தமிழகத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டன என்பதைப் பெருமையுடன் அறியத் தருகின்றோம்.   இவை தவிர, நீயா நானா நிகழ்ச்சி பாணியிலான, முக நூல் அவசியமே இல்லை அனாவசியமே என்ற தலைப்பிலான கருத்துக்களமும் இடம் பெறும். கருத்துக் களத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் தயை செய்து மன்ற உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். விழாவிற்கு அனுமதி இலவசம். நியாய விலையில் இரவு உணவைப் பெற்றுக் கொள்ளலாம்.   உங்கள் வருகை எங்களுக்கும், நம் தமிழுக்கும் பெரும் பலம் தரும். விழாவிற்கு வந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வரவேற்கிறோம்.

தமிழன்புடன்,
செயற்குழு,
குயீன்ஸ்லாந்து தமிழ் மன்றம்.

._______________________________________________________________________

புகையிரதத்துடன் மோட்டர் சைக்கிள் மோதி இரு இளைஞர்கள் பலி

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோட்டர் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.   ஒரு இmattu railளைஞனின் உடல் இரு துண்டுகளாக மீட்கப்பட்ட சம்பவம் சாவகச்சேரி, சங்கத்தானை புகையிரத கடவையில் இடம்பெற்றுள்ளது. இன்று இரவு 7 மணி அளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மட்டுவிலைச் சேர்ந்த மார்க்கண்டு சுலக்சன் (வயது22) மகாதேவா சுஜீவன் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.இன்று இரவு 7 மணி அளவில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் சங்கத்தானைப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. புகையிரத கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிஞ்ஞை விளக்கு எரிந்து கொண்டிருந்த போதும், புகையிரதம் அண்மித்த தூரத்தில் வரும் போது, அதிவேகமாக புகையிரத கடவையினை கடக்க முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.      (மேலும்) 23.08.18

._______________________________________________________________________

மாணவியை பாலியல் வன்புணர்வு செய்தவர்களில் முதலாவது சந்தேக நபர் கைது

முல்லைத்தீவில் உயர்தர பரீட்சையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய மாணவினை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படும் இளைஞர்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 19 ஆம் திகதி கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை நிறைவு பெற்றதன் பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவி ஒருவரை வாயை துணியால் அடைத்து முச்சக்கர வண்டியொன்றில் இனம்தெரியாத நபர்கள் கடத்தினர்.இந்நிலையில் கடத்தப்பட்ட குறித்த மாணவியை பழை பகுதியிலுள்ள வனப்பகுதியில் வைத்து ஒரு இரவு முழுவதும் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதன் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் குறித்த மாணவி வீடு திரும்பிய பின்னர் உறவினர்களுடன் சென்று காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டினை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் இன்றைய தினம் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளார்.  பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

88% காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன - 12% காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்

- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன


2009 ஆண்டில் இருந்து இன்று வரையான காலப் பகுதியில் 88 வீதமான msகாணிகள் மக்களுடைய பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 12 வீதமான காணிகள் விடுவிக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ். மயிலிட்டி இறங்குதுறை அபிவிருத்தி செய்யும் நோக்கிலான வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.   அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, கடந்த 3 வருடங்களாக இந்த நாட்டிலே தமிழ் மக்களின் பல பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளோம். அது போன்று மேலதிக செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றோம். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இருந்து பல குற்றச்சாட்டுக்களில் நாங்கள் அரசாங்கம் என்ற வகையில் வெளியேறியிக்கின்றோம். இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திக்காக நாங்கள் பெரும் தொகையான பணத்தினை ஒதுக்கியுளோம்.     (மேலும்) 23.08.18

._______________________________________________________________________

யோசுவாவின் புதிய 10 கட்டளைகள்

-  கருணாகரன்

“நாங்கள் எரிந்து கொண்டிருக்கிறோம் அல்லது எரியூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களை எரியும் நெருப்பிலிருந்து காப்பாற்றுவதற்காக என்று தீயணைக்கும் படை samyஇருக்கிறது. அவர்கள் தீயை அணைக்கிறோம் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். இப்படி எழுபது ஆண்டுகளாகத் தீயை அணைப்பதாகச் சொல்லிச் சொல்லியே காலத்தைக் கழித்துக் கொண்டிக்கிறார்கள். ஆனால் எரியும் தீ அணைக்கப்படவில்லை. சரியாகச் சொன்னால், தீயை அணைப்பதாகச் சொல்லிக் கொண்டே மறுவளமாக தீயை வளர்க்கிறார்கள். இந்தத் தீயை அவர்களால் அணைக்க முடியாது. ஏனென்றால் அதிலேதான் அவர்கள் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் மக்களாகிய நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதையே நான் மக்கள் என்ற தலைப்பில் எழுதிய கதையில் குறிப்பிட்டிருக்கிறேன். மக்களாகிய நாங்கள் விழிப்படைந்து, சிந்திக்கத் தொடங்கி விட்டால் எங்களை இந்த எரியும் நெருப்பிலிருந்து நாங்களே காப்பாற்றிக் கொள்ள முடியும். இந்தத் தீயை அணைக்காத தீயணைப்பு வீரர்களை நாங்கள் விரட்டியடித்து விடலாம்...” என்று பேசினார் வண பிதா யோசுவா அவர்கள்.     (மேலும்) 22.08.18

._______________________________________________________________________

 புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 30 பேருக்கு பட்டதாரி நியமனம்

 புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போreginold 1ராளிகள் 30 பேருக்கு பட்டதாரி நியமனம் வழங்கப்பட்டமை மிகுந்த மகிழ்சி அளிப்பதாக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.   புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கான அரச நியமனங்கள் அலரிமாளிகையில் நேற்று (20) கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் தனது மகிழ்சியை தெரிவித்து அவர் அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   புலிகள் அமைப்பிலிருந்து இறுதி யுத்தத்தில் சரணடைந்த போராளிகள் புனர்வாழ்வின் பின்னர் தமது உறவினர்களுடன் இணைந்து கொண்டனர். அவர்களில் பட்டதாரிகளாக காணப்பட்ட பலர் கடந்த 2017 ஆரம்பத்தில் சுண்டுக்குளியில் அமைந்துள்ள எனது அலுவலகத்தில் என்னை சந்தித்து ஒரு கோரிக்கையினை முன்வைத்திருந்தனர். அதாவது பட்டதாரிகளுக்கான அரச பணி நியமனங்களில் தமது பெயர்களும் உள்வாங்கப்படவேண்டும் என்பதாகும்.    (மேலும்) 22.08.18

._______________________________________________________________________

முற்றம் கூட்டி வதிவிடத்தை உறுதிப்படுத்திய பெண் பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு

அலுவலக முற்றம் கூட்டடினால் மாத்திரமே வதிவிடத்தை உறுதிப்படுத்த முடியும் என கிராம அலுவலர் அறிவித்தலுக்கு அமைய  குழந்தையுடன் சென்ற பெண் முற்றத்தை கூட்டிய பின் தனது வதிவிடத்தை உறுதிப்படுத்திச் சென்றுள்ளார்.   குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுகிளிநொச்சி திருநகர்  தெற்கு கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்காக கிராம அலுவலரிடம் முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு பிடித்துக்கொணடு குழந்தையுடன் சென்றுள்ளார். கடமையில் இருந்த கிராம அலுவலா் குறித்த பெண்னிடம் தனது அலுவலக முற்றத்தை கூட்டுமாறும் அதன் பின்னரை வதிவிடத்தை உறுதிப்படுத்தி ஒப்பம் இடுவேன் என அதிகாரத்துடன் தெரிவித்துள்ளார்.இதன் போது குறித்த பெண் தனக்கு வீசிங் நோய் இருக்கிறது என பதிலளித்துள்ளார் அப்போது முற்றம் கூட்டினாள்தான் உறுதிப்படுத்துவேன் என கிராம அலுவலர் கண்டிப்பாக தெரிவிக்க வேறு வழியின்றி குழந்தையையும், வாடகைக்கு பிடித்துச்சென்ற முச்சக்கர வண்டியையும் காத்திருக்க வைத்து விட்டு முற்றத்தை கூட்டிய பின்னர்   கிராம அலுவலரிடம்  கூட்டிவிட்டதாக தெரிவித்து தனது வதிவிடத்தை உறுதிப்படுத்தி சென்றுள்ளார்    (மேலும்) 22.08.18

._______________________________________________________________________

அமரர் கி. லக்‌ஷ்மணன் நூற்றாண்டு வெளியீடு:

தமிழ், கல்வி, இலங்கை வாசனை, சமயம், தத்துவம் முதலான தலைப்புகளில் 73 கட்டுரைகளின் தொகுப்பு
laxman
சிப்பிக்குள் முத்து

இலங்கையின் மூத்த தமிழ் அறிஞரும் கல்வி அமைச்சின் முன்னாள் வித்தியாதிபதியுமான அமரர் கி. லக்‌ஷ்மணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு "சிப்பிக்குள் முத்து" தமிழகத்தில் வெளியாகியுள்ளது.    கட்டுரைகளுக்குப் பொருத்தமான  ஓவியங்களை பிரபல ஓவியர் பத்மவாசன் வரைந்துள்ளார். கி.லக்‌ஷ்மணன் அவர்கள் இலங்கை - தமிழக  தமிழ், ஆங்கில இதழ்களிலும் சிறப்பு மலர்களிலும் முன்னர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பு: சிப்பிக்குள் முத்து.  இலங்கை தேசிய சுவடிகள் திணைக்களம் மற்றும்  பொது நூலகங்களிலிருந்து தேடி எடுத்த கட்டுரைகளின்  தொகுப்பான இந்த அரிய நூலில் தமிழ், கல்வி, இலங்கை வாசனை, சமயம், தத்துவம் ஆகிய தலைப்புகளில் 64 கட்டுரைகளும் ஆங்கிலத்தில் 9 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.    (மேலும்) 22.08.18

._______________________________________________________________________

யாழ். பொதுசன நூலக வாசகர் வட்டத்தின்
மாதாந்த  உரைநிகழ்வு!

பேராசிரியர் செ. கிருஷ்ணராசா, 
ஈழமும் சோழரும்
என்னும் தலைப்பில் உரையாற்றுவார்.

26. 08. 2018 ஞாயிற்றுக்கிழமை, 
பி. ப.   4. 00 மணி,
நூலக குவிமாடக் கேட்போர்கூடம்.
அனுமதி இலவசம்!
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

வாசகர் வட்டம்

._______________________________________________________________________

உயர்தர மாணவி விருப்பத்திற்கு மாறாக கடத்தப்பட்டு பாலியல் துஸ்பிரயோகம் - முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு உடையார் கட்டு மகாவித்தியாலத்தில் உயர்தர பரீட்சை எழுதிவரும் லூத்மாத கோவில் பகுதியில் வசித்துவரும் 19 அகவை மாணவியை பளையினை சேர்ந்த 22 அகவையுடைய இளைஞன் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை ஊர்தி ஒன்றில் கடத்தி சென்று பளைப்பகுதியில் வைத்து விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு இன்றைய தினம் உடையார் கட்டுப்பகுதியில் கொண்டுவந்து சந்தேகநபர்கள் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். உடையார் கட்டு மகாவித்தியாலயத்தில் கலைப்பிரிவில் உயர்தர பரீட்சை எழுதிக்கொண்டிருந்த 19 அகவையுடைய மாணவி கடந்த  20ம் திகதியன்று பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை இளைஞர்கள் சிலர் சேர்ந்து வாகனம் ஒன்றில் குறித்த யுவதியை கடத்தி பளைப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார்கள். அங்கு குறித்த யுவதியினை விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.  மாணவி வீடு திரும்பாத நிலையில் நேற்று மாணவியின் தாயார் புதுக்குடியிருப்பு காவல்நிலையத்தில மாணவியை காணவில்லை என்று முறைப்பாடு செ​ய்துள்ளனர்.    (மேலும்) 22.08.18

._______________________________________________________________________

யாழில் சிங்கள மொழியை கற்பதற்கு நடவடிக்கை

53 வருடங்களுக்கு முன்னர் பல இன மக்களின் மாணவர்கள் கல்வி கற்ற யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலத்தில் மீண்டும் அனைத்து இன மாணவர்களுக்கும் சிங்கள மொழியை கற்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.1985 ஆம் ஆண்டு யுத்த காலப் பகுதியில் இடம்பெற்ற மோதலினால் மூடப்பட்ட இந்த வித்தியாலயத்தின் இவாறான கல்வி நடவடிக்கையின் ஊடாக உண்மையான நல்லிணக்கத்தை துரிதமாக முன்னெடுப்பதறடகாக இமைக்கப்பட்டுள்ள பழைய மாணவர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக் கூட்டம் இம் மாதம் 26 ஆம் திகதி காலை 8.30 க்கு யாழ்ப்பாணம் பழைய பூங்கா பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

._______________________________________________________________________

கேரளத்திற்கு -

ஊழியின் தினங்கள்

மனுஷ்ய புத்திரன்

...........................
“இந்தப் பகுதிkerala flood2
இன்னும் அரைமணி நேரத்தில் மூழ்கிவிடும்
முக்கியமானதை மட்டும்
எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள்”
இதைக் கேட்டபோது
அவர்கள் முழங்கால் அளவு
தண்ணீரில் நின்றுகொண்டிருந்தார்கள்
இப்போது அவர்கள் பிரச்சினை
எதையெல்லாம் எடுத்துக்கொள்து என்பதல்ல
எதையெல்லாம் கைவிடுவது என்பதுதான்
முதலில் கைககளில்
எதையெல்லாம் தூக்கிக்கொள்ள முடியாதோ
அதையெல்லாம் கைவிட்டார்கள்
பிறகும் கைவிடுவதற்கு
ஏராளமாக இருந்தன 

 (மேலும்) 22.08.18

._______________________________________________________________________

காங்கேசன்துறையில் 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மீண்டும் மக்களிடம் கையளிப்புkks land

யாழ். காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசமிருந்த மேலும் ஒரு தொகுதி காணிகள் பொதுமக்கள் பாவனைக்கு இன்று (21) கையளிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மத்தி ஜே 234 கிரம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியே இவ்வாறு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்ககைக்கு அமைவாக அப்பகுதியில் இருந்து வந்த இராணுவ முகாம் முற்றாக அகற்றப்பட்ட 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிக்கப்பட்டது.இன்று பிற்பகல் காங்கேசன்துறை மத்தியில் இடம்பெற்ற நிகழ்வில் காணிகளுக்கான சான்றிழ், யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராச்சியினால் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகத்திடம் கையளிக்கப்பட்டது.தேல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

._______________________________________________________________________

barathivizha

._______________________________________________________________________

தமிழர் திருமண சம்பிரதாயங்கள்  மாறி வருகின்றனவா?
தமிழர் திருமணம்  அன்றும் - இன்றும்

பேராசிரியர் சி. மௌனகுரு


அண்மையில் ஈழத்தின் முக்கிய கவிஞர் மஹாகவி  ருத்ரமூர்த்தியின் பேர்த்தி அரசி வீட்டு திருமண விழா  கொழும்பில்  பேராசிரியர் எம் ஏ.நுஹ்மான் தலைமையில் நடைபெற்mounaguru1றது,வழமையான தமிழர் திருமண முறைக்கு மாறான திருமணம் அது;அக்கினி இல்லை.ஹோமம் இல்லை ஐயர் இல்லை சமஸ்கிருத கோசங்கள் இல்லை.மூத்தோர் வாழ்த்தினர்.உறவினர் ஆசி கூறினர் ,வாழ்த்த என்னையும் பேராசிரியர் தில்லை நாதனையும் பேராசிரியர் சிவசேகரத்தையும் அழைத்திருந்தனர். நாம் அவர்களின் உறவினர் கூட இல்லை அவ்விரு குடும்பங்களுடனும் நீண்டகாலம் நட்புக் கொண்டிருந்த  அவர்களை  நன்கறிந்த  நண்பர்கள். மணமகளின் தாய் மாமன் சேரன் நன்றி கூறினார். அந்த விழா தந்த தாக்கத்தால் எழுதிய  குறிப்புகள் இவை   தமிழரின் பண்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் நாம் வரலாற்று ஓட்டத்தினூடாகத்தான் விளங்கிக் கொள்ள முடியும்  தமிழ் மக்கள் பண்டு குறிஞ்சி,முல்லை  மருதம் நெய்தல் ஆகிய நான்கு நிலங்களில்  வாழ்ந்துள்ளனர்   பாலைக்கு நிலமில்லை.கால வேறுபாட்டால் முல்லையும் குறிஞ்சியும் பாலையாக மாறும்.   இந்த நான்கு நிலங்களுக்கும் வித்தியாசம் வித்தியாசமான  பண்பாடுகள் பழக்க வழக்கங்கள் இருந்துள்ளன கி, பி 2 ஆம்  நூற்றாண்டு சிலப்பதிகார காலம்  ஆகும். இந்தக் குறு நில அரசுகள் தகர்ந்து சேர  சோழ பாண்டிய மன்னர்கள் உருவான காலம்,இது      (மேலும்) 21.08.18

._______________________________________________________________________

சட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி!

மு.தமிழ்ச்செல்வன்

இயற்கையிலிருந்து மனித குலம் விலகி செல்லச் செல்ல மனிதகுலத்திற்கு எதிரான  சூழல் உருவாகி கொண்டே செல்கிறது. உலகில் வாழ்கின்ற உயிரிணங்களில் மனிதகுலklisandம் மாத்திரமே தனக்கு எதிரான நடவடிக்கைகளை தானே செய்கின்ற இனமாக காணப்படுகிறது. பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்  என்றும் தெரிந்தும் குறுகிய சுயலாப தேவைகளுக்காக மனிதர்கள் இயற்கை அழித்து வருகின்றார்கள் அல்லது இயற்கை பயன்படுத்துகின்றார்கள்.   உலகில் காணப்படுகின்ற கடல்வாழ் உயிரிணங்கள் என்றாலும் சரி நிலத்தில் வாழ்கின்ற உயிரிணங்கள் என்றாலும் சரி தான் வாழ்கின்ற சூழலை தனக்கேற்ற முறையில் தனக்கு பாதுகாப்பாக  இருக்கிறதா என அறிந்தே வாழ்ந்து வருகிறது. தனது வாழும் சூழல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் அவை அக்கறையாக  உள்ளன.  தனது வாழும் சூழலில் பாதிப்பு ஏற்படுகிறது என்று கருதும் ஒர் உயிரிணம் அந்த சூழலிருந்து இடம்பெயர்ந்து   சென்று விடுகிறது. ஆனால் உயிரிணங்களில் எல்லாவற்றிலும் மேலான மனிதன் இதற்கு புறநடையாக இருக்கிறான்.    (மேலும்) 21.08.18

._______________________________________________________________________

சங்கிலியன் தரை -நாவல்

- நடேசன்

ஆங்கில நாவல் வரலாற்றில் போர் நாவலாகச் சொல்லப்படுவது த ரெட் பாட்ஜ் ஒஃப் கரேஜ் (The Red Badge of Courage is a war novel by American author Stephen Crane ). இதை எழுதியவர்sangilian tharai அமரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்து ஆறு வருடத்திற்கு பின்னர் பிறந்தவர். இது மிகவும் சிறிய நாவல். உள்நாட்டுப் போரில் பங்கு பற்றிய ஒரு சாதாரண வீரனின் கதையைச் சொல்கிறது. ஆரம்பத்தில் போர்முனையில் பயந்தவன் பின்பு எப்படி வீரனாகிறான் என்பதே கதையாகும்.   இரண்டு வருடத்தின் முன்பாக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எனக்குத் தந்த சில புத்தகங்களில் ஒன்று மு.பொன்னம்பலம் எழுதிய சங்கிலியன் தரை. அவரைக் கவிஞராக அறிந்திருந்தமையால் அந்த நூல் ஏதோ ஒரு கவிதைப்புத்தகம் என நினைத்து, எனது புத்தக அலுமாரியில் வைத்துவிட்டேன். சில நாட்களுக்கு முன்பாக அதை எடுத்துப் பார்த்தபோது 205 பக்கங்கள் கொண்ட நாவல்தான் அந்த நூல் எனக் காலம் தாழ்த்தி புரிந்து கொண்டேன்.   2015இல் குமரன் பதிப்பகத்தால் வெளிவந்த பிரபலமான மூத்த எழுத்தாளரது நாவலை இருட்டடிப்பு செய்வதில் இலங்கை தமிழ் ஊடகங்களும் சஞ்சிகையாளர்களும் வெற்றி கொண்டுவிட்டார்கள் என நினைத்துக்கொண்டேன். கூகிளில் நாவலின்பெயரைப் போட்டுப் பார்த்தபோது எவரும் நாவலைப் பற்றி எழுதியதாகத் தெரியவில்லை.     (மேலும்) 21.08.18

._______________________________________________________________________

யாதும் ஊரே, யாவரும் கேளிர்

தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜூன் 25 அன்று சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்:

பெருமதிப்பிற்குரிய கல்விமான்களே, என் அருமை நண்பர்களே,உலகச் செம்மொழித் தமிழ் மாநாட்டில் பங்கேற்க classical conferenceஎன்னை அழைத்தமைக்காக, மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியறிதலை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.இதற்கு முன் எட்டு மாநாடுகள் நடைபெற்றிருந்தபோதிலும், இந்த ஒன்பதாவது மாநாடுதான் வரலாற்றில் நிலைத்து நிற்கும். ஏனெனில், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டபின் நடைபெறும் முதல் மாநாடு இதுதான். அதுமட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் சில கட்சிகளுடன் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவில் ஐமுகூ-1 அரசாங்கம் ஆட்சி செய்த காலத்தில்தான் இவ்வாறு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டது என்கிறபோது நாங்கள் கூடுதலாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். இங்கே உங்கள் முன் நிற்கையில் தனிப்பட்ட முறையிலும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு தெலுங்கு குடும்பத்தில் நான் பிறந்திருந்தாலும், தமிழ்நாட்டிலும் ஒரு பங்கினை நான் கோருவதற்கு எனக்கு உரிமை உண்டு.   (மேலும்) 21.08.18

._______________________________________________________________________

வெலிக்கடை சிறையில் பதற்றம் - பலருக்கு காயம்

வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதிகள் சிலர் இன்று (20) மீண்டும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.ஆர்ப்பாட்டகாரர்கள் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையால் சிறைச்சாலை அதிகாரிகள் 8பேர் மற்றும் 3சிறைக்கைதிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் 52சிறைக்கைதிகள் வெலிகடை சிறைச்சாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.குறித்த 52 சிறைக்கைதிகளும் குருவிட்ட, காலி, போகம்பற மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

._______________________________________________________________________

வடக்கு மாகாண சபையினால் உள்ள வெற்றிடயங்களை நிரப்புவதற்கு அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை

வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா

வடக்கு மாகாண சபையினால் உள்ள வெற்றிடயங்களை நிரப்பthavarasa (1)ுவதற்கு அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம் சுமத்தியுள்ளார்.   ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.   இந்த விடயம் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதன் மூலம் நிரூபனமாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.    உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில், பாடசாலைகள் தவிர்ந்த வடக்கு மாகாண சபையின் அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் மொத்தமாக 7 ஆயிரத்து 510 வெற்றிடங்கள் உள்ளன.    சிரேஸ்ட நிலையில் 590 வெற்றிடங்களும், மூன்றாம் நிலையில் 123, இரண்டாம் நிலையில் 4ஆயிரத்து 672 வெற்றிடங்களும், ஆரம்ப நிலையில் 2 ஆயிரத்து 63 வெற்றிடங்களும், சேவை நிலை குறிப்பிடப்படாத 62 வெற்றிடங்களும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.      (மேலும்) 21.08.18

._______________________________________________________________________

கேரள மழை வெள்ளம் அதிதீவிர பேரிடர் : மத்திய அரசு அறிவிப்பு


புது தில்லி: கேரள மழை வெள்ள பாதிப்புகளை அதிதீவிர பேரிடர் என்று மத்திய உள்துறை அறிவித்துள்ளது.kerala_floods   "கடவுளின் தேசம்"  என்று அழைக்கப்பட்ட கேரள மாநிலம், தற்போது வரலாறு காணாத மழை வெள்ளத்தால் அவதிப்பட்டு  வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் பெய்யாத மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதன் காரணமாக ஏறக்குறைய ரூ. 20 ஆயிரம் கோடியளவுக்கு இழப்பீடுகள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார்  10 லட்சம் பேர் அரசு சார்பிலான நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி இறந்தவர்களின் எண்ணிக்கை 247 ஆகும். அதே போல சுமார் 17, 343 பேர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். தற்பொழுது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.   இந்நிலையில் கேரள மழை வெள்ள பாதிப்புகளை அதிதீவிர பேரிடர் என்று மத்திய உள்துறை அறிவித்துள்ளது.     (மேலும்) 21.08.18

._______________________________________________________________________

வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்

புடவைக்கட்டு மீனவர்களால் மீன்கள் டைனமைட் பாவித்து பிடிக்கப்பட்டது என விசேட அதிரடிப்படையினரால் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் மீன்கpudavaikadduளுடன் லொரியும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், தமது மீன்கள் அவ்வாறு பிடிக்கப்படவில்லை எனவும் வேண்டும் என்றே இது திட்டமிடப்பட்ட சதி எனவும் கூறி இன்று (20) காலை திருகோணமலை புல்மோட்டை வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பிரச்சினை அறிந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், அப்பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், குச்சவெளி பிரதேசத்திற்கான பொலிஸ் அத்தியட்சகர், குச்சவெளி பொலிஸ் தலைமை அதிகாரி, திருகோணமலை மாவட்ட மீன்பிடி உதவி பணிப்பாளர் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். இதன் அடிப்படையில் எதிர்வரும் வாரம் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீன்பிடி திணைக்கள பணிப்பாளர், அரசியல் பிரமுகர்கள், புல்மோட்டை, குச்சவெளி, புடவைக்கட்டு, சலப்பையாறு, இரக்கண்டி, நிலாவெளி மீன்பிடி சங்கங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளும் கூட்டம் இடம்பெற உள்ளது.  அதன் போது வதந்திகளை பரப்பி மீன்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை குறித்து எதிர்வரும் வாரம் வரை பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்றும் புடவைக்கட்டு பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

முரண்பாடுகளுக்குள்ளும் உடன்பாடு

தமிழ் அரசியல் கட்சிகளுடானசந்திப்புகுறித்துகிழக்குத்தமிழர் ஒன்றியம் கருத்து

இன்று 22.08.2018 புதன்கிழமை கிழக்குத்தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் மு.ப 10.00 மணிக்கு நடைபெறுகின்ற அனைத்து அரசியல் கட்சிகளுடனும்; ஒரே இடத்தில் ஒன்றாக அமர்ந்துபேசும் உத்தேச சந்தி;;ப்பு குறித்து ஊடகங்ளுக்குக் கருத்து கூறுகையில் “இச்சந்திப்பு முரண்பாடுகளுக்குள்ளும் உடன்பாடுகாணும் முயற்சியாகும்” எனக் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் குறிப்பிட்டார். “கொள்கைகள் - கோட்பாடுகள் - சித்தாந்தங்கள் -கருத்தியல்கள் -கட்சிகள் - சின்னங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான் என்பதை மனம் கொண்டால் முரண்பாடுகளுக்குள்ளும் உடன்பாடு காணமுடியும். கட்சித்தலைவர்களுக்கு அத்தகைய மனப்பக்குவம் ஏற்படவேண்டும்.   கிழக்குமாகாணத்தில் இன்றுநிலவும் களநிலையில் கிழக்குத் தமிழர்கள் தங்கள் அடையாளத்தையும் இருப்பையும் தக்கவைத்துப் பேணிப்பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டுமாயின் தனிநபர் முரண்பாடுகளுக்கு அப்பால் கருத்தியல் முரண்பாடுகளுக்கு அப்பால் அரசியல் ரீதியாக ஒரே குடையின் கீழ் ஒரேஅணியாகத் திரளவேண்டிய தேவைப்பாடு உள்ளது.     (மேலும்) 21.08.18

._______________________________________________________________________

4,100 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு - 6,500 பேருக்கு காணி உறுதிகள்

அரச சேவைக்கு 4,100 பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளவதற்கான நியgraduate 18மனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (20) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது.  தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு 3 வருடங்கள் பூர்த்தி அடைவதை முன்னிட்டு இந்நாட்களில் பல அபிவிருத்திச் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  ஒமூச்செடுத்த மூன்று வருடங்கள்ஒ என்பது 3 வது நிறைவு ஆண்டின் தொனிப்பொருளாகும். 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி சமூக பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் பல வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.  தற்போது அதன் பயன்களை மக்கள் பெற்று வருகின்றனர். பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதும் இந்த வேலைத் திட்டத்தின் ஒரு நடவடிக்கையாகும்.இந்நிலையில் 6,500 பேருக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு காலி பத்தேகம பொது விளையாட்டு மைதானத்தில் பிரதமர் தலைமையில் நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

அருட்தந்தை  யோசுவாவின் சாமி சிறுகதை தொகுதி நூல் வெளியீடு

காவேரி கலா மன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி ரி. யோசுவா  அjesuvaவர்களின் சாமி சிறுகதை நூல் வெளியீடு இன்று(20-08-2018) கிளிநொச்சியில் இடம்பெற்றது.  கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் குமரிவேந்தன் தலைமையில்  பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் ஆசியுரையை வணபிதா டாணியலும், வாழ்த்துரைகளை கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தனும், கவிஞர் சி. கருணாகரனும்,  ஆய்வுரையினை சாந்தபுரம் பாடசாலை அதிபர் பெ. கணேசனும், வெளியீட்டுரையை வணபிதா றொகானும்  ஆற்றியிருந்தனர். நூலின் முதற்பிரதியை இயற்கையான முறையில் விவசாயத்தில் ஈடுப்படுகின்ற விவசாயி ஒருவர்  வெளியிட்டு வைக்க அவ்வாறே விவசாய நடவடிக்கையில் ஈடுப்படும் பெண் ஒருவர் பெற்றுக்கொண்டார்.நிகழ்வின் இறுதியில் இயற்கை முறையில் விவசாய நடவடிக்கையில் ஈடுப்படு்கின்ற பலர் கௌரவிக்கப்பட்டனர்.

._______________________________________________________________________

உண்மைகளை மறுக்கும் குருட்டு தமிழ் பற்றிரியோட்டிசம்(Patriotism)

- கணபதிப்பிள்ளை சுதாகரன்

புலத்தில் வாழுத் தமிழர்கள் பலர் இந்த நோய்க்கு உள்ளாகியுள்ளதனைmalcomx அண்மைக்கால பல சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றது. முதலில் இந்த பற்றிரியோட்டிசத்திற்கு தமிழில் தேசியவாதம் என மொழிபெயர்ப்பது பிழையானது. இது அதற்கும் மேலாக தனது இனம் மொழி மதம் சாதி பற்றி ஓர் அதிதீவிர வெறித்தனமான மிகைமதிப்பீடு. இவ்வகை போக்கினை இலங்கைத்தமிழர்களிடம் விதைத்தவர்களில் முதல் இடத்தினை தமிழர்விடுதலை கூட்டணியும் இரணடாம் இடத்தில் தமிழ் ஈழ விிடுதலையை கோரிக்கையை முன்வைத்த விடுதலை இயக்கங்களையே சாரும். அடுத்த கட்டத்தில் புலம்பெயர் தமிழர்களிடையே இவ்வெறித்தனம் வளர்வதற்கு புலத்தில் வேலைசெய்த விடுதலைப்புலிகளின் தலைமைகளே காரணமாகின்றனர். புலத்தில் உணர்ச்சிகளை ஊட்டி பணம் பறிப்பதற்கு இது ஓர் நல்ல யுத்தியாக உறுதுணையாக இருந்துள்ளது. புலத்தில் மேலோங்கி இருந்த இனவாதப்போக்கும் தன் சொந்த இனம் சம்பந்தமான மிகையான பெருமிதத்திற்கு அழைத்து சென்றுள்ளது. இங்கு இன்னுமொரு விடயத்தினையும் அவதானிக்க கூடியாதாக இருந்தது. புலத்தில் தாம் வாழும் நாட்டின் மக்களுடன் கூடுதல் இணைவாக்கம் அடைந்தவர்களிடம் தம் இனம் சம்பந்தமான வெறித்தனம் குறைவாக காணப்பட்டது.   (மேலும்) 20.08.18

._______________________________________________________________________

 எங்களிடையேயான உறவு விசேஷமான ஒன்று: சீத்தாராம் யெச்சூரி

“சீத்தாராம், இந்த கலாட்டாவிற்கெல்லாம் நீங்கதான் காரணம் என்று நிkalaignar and sitaramனைக்கிறேன், என்னிடம் பேசும்போது தமிழில் பேசுறீங்க, சந்திரபாபு நாயுடுவிடம் பேசும்போது தெலுங்கில் பேசுறீங்க, ஜோதிபாசுவிடம் பேசும்போது வங்கமொழியில் பேசுறீங்க, முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ்வுடன் பேசும்போது இந்தியில் பேசுறீங்க. ஒருத்தரிடம் நீங்க என்ன பேசுகிறீர்கள் என்பதை மற்றவர்களால் புரிந்துகொள்ளமுடியாது. இவ்வாறு ஒவ்வொருவரிடமும் அவரவர் மொழியில் பேசுவதுதான் இங்கே குழப்பத்திற்கே காரணம். இதை நீங்கதான் தீர்த்து வைக்கணும்,” என்று கலைஞர் கூறுவார்.   கடந்த பல ஆண்டு காலத்தில் நான் பலமுறை கலைஞர் கருணாநிதியுடன் பல விஷயங்களைப் பேசி இருக்கிறேன். எங்களுக்கிடையிலான கருத்துப் பரிமாற்றம் என்பது உடன்பிறந்த சகோதரர்களுக்கிடையில் இருப்பதுபோல பாசத்துடனும் நேசத்துடனும் நகைச்சுவையுணர்வுடனும் அமைந்திருக்கும். 1997 ஏப்ரலில் ஒருநாள். அப்போது மத்தியில் ஐமுகூ அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. ஐ.கே. குஜ்ரால் பிரதமராக இருந்தபின்னர், எச்.டி. தேவகவுடாவை உடனடியாகப்  பிரதமராகத் தேர்வு செய்த சமயம். பிரதமரைத் தேர்வு செய்துவிட்டோம். ஆனாலும், கேபினட் அமைச்சர்களை இறுதிப்படுத்துவதில் கருத்துவேறுபாடுகள் இருந்தன.    (மேலும்) 20.08.18

._______________________________________________________________________

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள்:

புறக்கணிப்புகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து எழுதிவந்திருக்கும்  மண்டூர் அசோக்கா

                                                                   முருகபூபதி

மண்டு மரங்கள் பார்த்திருக்கிறீர்களா? அத்தகைய மரங்கள் செழித்த பிரதேசத்திற்கு காலப்போக்கில் மண்டூர் என்ற காரணப்பெயர் தோன்றியிருப்பதாக கிழக்கிலங்கை mandoor ashokaமுன்னோர்கள் சொல்கிறார்கள்.கிழக்கிலங்கையில் மட்டுநகரிலிருந்து தென்திசையில் சுமார் ஐம்பது கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் இந்தக்கிராமத்தின் பெயரையும் இணைத்துக்கொண்டு ஈழத்து இலக்கிய உலகில் பிரபல்யம் பெற்றிருப்பவர்தான் அசோகாம்பிகை. நால்வகைத்திணைகளையும் கொண்ட இந்த அழகிய கிராமத்தில் இளையதம்பி - கனகம்மா தம்பதியரின் புதல்வியாகப்பிறந்திருக்கும் அசோகாம்பிகை தனது ஆரம்பக்கல்வியை மண்டூர் அரசினர் தமிழ்ப் பெண்கள் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை பட்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் தொடர்ந்து,  அதன்பின்னர்  மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலிருந்து பயிற்றப்பட்ட ஆசிரியையாக  கிழக்கிலங்கையில் பல பாடசாலைகளில் பணியாற்றினார். இறுதியாக சுவாமி விபுலானந்தர் தோற்றுவித்த கல்லடி சிவானந்தா கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.இவரும் ஈழத்தில் பல எழுத்தாளர்கள் இலக்கியப்பிரவேசம் செய்த 1970 காலப்பகுதியிலேயே இலக்கியப்பிரதிகளை எழுதத்தொடங்கினார்.   (மேலும்) 20.08.18

._______________________________________________________________________

கருணாகரனின் மூன்று கவிதைகள்

எரிநட்சத்திரம்

எதிர்பாராத விதமாக பாவற்கொடிக்கருகில் அம்மாவின் கனவுகளைக் கண்டெடுத்தேன்
இன்று மதியம்.
நம் வயிற்றில் வேரோடிப் பரந்த தீராப் பசியின் நிறத்தில்
நெருப்பாக இனித்தன
23 ஆண்டுகளுக்கு முன்னொரு
வெள்ளாப்பில்
54 வயதில்
அடுப்படிக்கு முன்னே
தரையில் வீழ்ந்து சிதறியதந்தத்
தாய் நட்சத்திரம்
அன்று உலகின் மலைகள் எல்லாம் உக்கின

 (மேலும்) 20.08.18

._______________________________________________________________________

இரு தரப்புக்கிடையில்  மோதலை தடுக்க சென்றவர் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலை தடுக்க சென்ற 54 வயதான நடராஜா தேவராஜா என்ற வயோதிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதஞ.நேற்று இரவு வாகனத்தின் மின் விளக்குகளை அணைக்காமல் சென்றதனால் இரு தரப்புக்கிடையில் முறுகல் இடம்பெற்றுள்ளது.இதனையடுத்து முறுகல் நிலை மோதலாகியுள்ளது. இந்த மோதலை அவதானித்துக் கொண்டிருந்த 54 வயதான நா.தேவராஜா என்பவர் மோதலை தடுக்க சென்றுள்ளார். இதன்போது கடுமையாக தாக்கப்பட்ட குறித்த வயோதிபர் மயக்கமடைந்துள்ளார்.இதனையடுத்து அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதேவேளை மோதலில் ஈடுபட்டவர்களில் இருவர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

._______________________________________________________________________

தென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக  வடக்கிலேயே தங்கிவிட கூடாது: தேசிய ஒத்துழைப்பு இயக்கம்

தென்னிலங்கை மீனவர்கள் வடக்கிற்கு பருவகால தொழிலுக்காக வரலாம். ஆனால் அவர்கள் வடமாகாணத்திலேயே நிரந்தரமாக தங்கியிருக்க முயற்சிப்பதை south fisherdநாம் கண்டிக்கிறோம் என, தேசிய ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் அ.ஜேசுதாஸ் கூறியுள்ளார்.   வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நேற்று   யாழ்.ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அ.ஜேசுதாஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், “தென்னிலங்கை மீனவர்கள் வடமாகாணத்தில் தங்கியிருக்கும் இடங்களில் நடைபெறும் சம்பவங்கள் நல்லிணக்கத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைகின்றது.  தென்னிலங்கை மீனவர்கள் பருவகால மீன்பிடி தொழிலுக்காக வடமாகாணத்திற்கு வருவதில் பிழையில்லை. ஆனால் தொழிலுக்காக வரும் மீனவர்கள் அங்கேயே தங்குவது கண்டிக்கதக்க விடயமாகும். மேலும் நிரந்தரமாக தங்கும் மீனவர்களுக்கு கடற்படையினரும், பொலிஸாரும் பூரணமான ஒத்துழைப்பை வழங்குகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் சட்டத்திற்கு மாறான தொழில்களை தடுத்து நிறுத்த இயலாத நிலைமை காணப்படுகின்றது.    (மேலும்) 20.08.18

._______________________________________________________________________

மன்னாரில் இந்திய கழிவுகள்

மன்னார் , பூனரின் , தலைமன்னார் போன்ற கடற்கரைகளில் இந்திய நிறுவனங்களின் முகவரி குறிப்பிட்ட லேபல்கள் மற்றும் கழிவு தொகை கரையொதுங்கியுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.குறித்த கழிவுத் தொகையை சிறப்பு குழுவொன்றை பயன்படுத்த நாளைய தினம் அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் பொது மேலாளர் தெரிவித்தார்.இதற்கு முன்னர் புத்தளம் அண்டிய கடற்கரைகளில் இவ்வாறு இரசாயன கழிவுகள் கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார்- ரணில்

முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயை இலங்கையின் உண்மையான நண்பன் என வர்ணித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளிற்கvajpayee3ு எதிரான யுத்தத்தின்போது இலங்கைக்கு வாஜ்பாய் உதவிபுரிந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இன்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்று வாஜ்பாய்க்கான  அனுதாப குறிப்பேட்டில் பதிவு செய்த பின்னர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.  வாஜ்பாய் மிகச்சிறந்த பிரதமர்களில் ஒருவர் அவர் இலங்கையின் உண்மையான நண்பன், இலங்கைக்காக எப்போதும் துணைநின்றவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையின் பிரதமராக நான் முன்னர் பதவி வகித்தவேளை இந்திய பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்தார். அவ்வேளை எங்கள் பொருளாதாரம் மிகவும் பலவீனமாநிலையிலிருந்தது,வாஜ்பாய் எங்கள் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வற்கு உதவினார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.வாஜ்பாய் அரசாங்கத்தின் காலத்தில் எங்கள் படையினரிற்கு வழங்கப்பட்ட பயிற்சி காரணமாகவே எங்களால் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளை தோற்கடிக்க முடிந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.வாஜ்பாயை 1975 இல் முதன் முதலில் சந்தித்தேன் 77 இல் அவர் வெளிவிவகார அமைச்சரான வேளை நான் பிரதிவெளிவிவகார அமைச்சராகயிருந்ததால் எங்கள் மத்தியில் நட்புறவு காணப்பட்டது அவர் பிரதமரானதும் தனது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை எனக்கு வழங்கினார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

கிணற்றில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் கிணற்றில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.78 வயதுடைய பெண் ஒருவருடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பெண் கடந்த 8 ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக பெண்ணின் மகன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கிணற்றில் நீர் எடுப்பதற்காக சென்ற ஒருவர் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொலிஸாரிடம் அறிவித்ததை அடுத்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

._