கருணாநிதி- 95

திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி கடந்த ஜூன் மாதம் தனது 95 வயது பிறந்தநாளை கொண்டாடினார். mk  . நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924-ஆம் ஜூன் 3 -ஆம் தேதி முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார்.  முத்துவேலருக்கும் அஞ்சுகம் தம்பதியினருக்கு கருணாநிதி மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் பிள்ளைகள்தான் முரசொலி மாறன், முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம்.. கிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிறு வயதில் அவருக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது ஹாக்கி. போர்ட் ஸ்கூல் ஹாக்கிக்காக விளையாடி இருக்கிறார்.. கருணாநிதியின்  எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில், 'நட்பு' என்ற தலைப்பில் தனது முதல் மேடைப் பேச்சை பேசினார்.    (மேலும்) 07.08.18

._______________________________________________________________________

கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் தர முடியாதா? போராட்டத்தில் திமுகவினர்


சென்னை: முன்னாள் முதல்வரும், திமுக தலைவர் கருணாநிதியின் உடannaலை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி தர மறுத்ததை எதிர்த்து திமுக  தொண்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவி உள்ளது. காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கருணாநிதியின் உடல் இன்று இரவில் சிஐடி காலனியில் உள்ள இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ராஜாஜி மண்டபத்துக்கு நள்ளிரவில் கொண்டு செல்லப்படுகிறது. நாளை முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலிக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.        (மேலும்) 08.08.18

._______________________________________________________________________

கருணாநிதி அடக்கத்துக்காகக் கோரப்பட்ட இடம் கூவம் நதிக்கரைதான்; கடலோர மண்டலப் பகுதி அல்ல: வழக்கறிஞர் துரைசாமி பேட்டி


மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடலை மெரினா கடறkarutamilsaijpgjpg்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அனுமதி கோரி திமுக சார்பில் செய்யப்பட்ட மனு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது.   இந்நிலையில் தன்னுடைய மனுக்கள் தவறாக காரணம் காட்டப்படுவதாக மெரினா வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் துரைசாமி கூறியதோடு தான் வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.காமராஜர் சாலையிலுள்ள மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்டச் சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும், அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை.   (மேலும்) 08.08.18

._______________________________________________________________________

ஆசிரியை ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக இருவருக்கு மரண தண்டனை

திருகோணமலை சம்பூர் பகுதியில் ஆசிரியை ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக இருவருக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.   இந்த வழக்கு விசாரணை இன்று (07) திருகோணமலை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களில் முதலாவது மற்றும் இரண்டாவது சந்தேக நபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஆசிரியையை படுகொலை செய்தனர் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 38 வயதுடைய பாலசிங்கம் நகுலேஸ்வரன் மற்றும் 27 வயதுடைய விஜயகுலசிங்கம் சந்திரபாலன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   (மேலும்) 08.08.18

._______________________________________________________________________

சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்டவர்கள் விளக்கமறியலில்

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பிரான்ஸ் நோக்கி பயணித்த நிலையில், கைது செய்யப்பட்ட 21 பேரும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட வேளையே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேற்று முன்தினம், பிரான்ஸ் நோக்கி பயணிக்க முற்பட்ட வேளை, கொழும்பில் இருந்து 117 கடல்மைல் தூரத்தில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த அவர்களுள் இரண்டு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

ரெஜினா கொலை: பள்ளித் தோழியும் அயல்வீட்டுப் பெண்மணியும் மன்றில் சாட்சியம்

 யாழ்ப்பாணம் – சுழிபுரத்தைச் சேர்ந்த சிறுமி ரெஜினாவின் கொலை தொடregina1ர்பான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.   பாதிக்கப்பட்ட சிறுமி ரெஜினாவின் குடும்பத்தார் சார்பாக சட்டத்தரணி கே.சுகாஷ் மன்றில் ஆஜராகியிருந்தார். இன்று மன்றில் ரெஜினாவின் பள்ளித்தோழியும், ரெஜினாவின் வீட்டிற்கு அருகில் உள்ள பெண்மணி ஒருவரும் சாட்சியமளித்தனர். சிறுமி ரெஜினாவின் தோழி, அவர் இறப்பதற்கு முன்னர் தனது வீடு வரை வந்து தன்னை வீட்டில் விட்டுவிட்டே சென்றதாக மன்றில் சாட்சியமளித்துள்ளார். அத்துடன், இன்று மன்றில் சாட்சியமளித்த ரெஜினாவின் வீட்டிற்கு அருகில் உள்ள பெண்மணி, சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவர் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.      (மேலும்) 08.08.18

._______________________________________________________________________

திமுக தலைவர் கலைஞர் உடலை அடக்கம் செய்ய சென்னை மெரினாவில் இடம் ஒதுக்கிடுக: சிபிஎம் வலியுறுத்தல்

   திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலை அடக்க செய்ய சென்னை மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தினுடைய மூத்த தலைவராகவும், ஐந்து முறை முதலமைச்சராகவும், எதிர்கட்சி தலைவராகவும், தமிழக அரசியலில் முத்திரைப்பதித்த டாக்டர் கலைஞர் அவர்களது உடல் அடக்கம் செய்திட, சென்னை மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கித் தருவதே பொருத்தமானதாகும். இத்தனை சிறப்புகள் படைத்த ஒரு மூத்த அரசியல் தலைவருக்கு, மெரினா கடற்கரையில் இடம் தர தமிழக அரசு மறுத்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகும். இப்பிரச்சனையில் அரசியல் விருப்பு, வெறுப்பின்றி தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும். திமுக தலைவர் கலைஞர் உடல் மெரினாவில் அடக்கம் செய்திட இடம் ஒதுக்கி தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை அழுத்தமாக வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

சிறுமிகள் மீதான பாலியல் தொல்லை வழக்கு; சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு பிணை வழங்குவதாjudgment இல்லையா? என்ற கட்டளை வழங்குவதை மல்லாகம் நீதிவான் நீதிமன்று ஒத்திவைத்தது.   அதனால் ஆசிரியரின் விளக்கமறியல் வரும் 14 ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்ட மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, அன்று பிணை விண்ணப்பம் மீதான கட்டளை வழங்கப்படும் என்று இன்று அறிவித்தார். வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் சிலரை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்படுகின்றார் என சங்கானை பிரதேச சிறுவர்  பாதுகாப்பு அலுவலகருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டன.  அவர் தனக்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய மாணவிகளின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதனால் சிறுவர் அலுவலகருடன் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசாரணையில் மாணவிகள் மூவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.     (மேலும்) 08.08.18

._______________________________________________________________________

கிளிநொச்சி பொதுச் சந்தை தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு புதிதாக அமைக்கப்படவுள்ள மூன்று மkili-leafletாடிக்களை கொண்ட புதிய சந்தைக் கட்டடம்  தொடர்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுக்கு தெளிப்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பட்டுள்ளன.இன்று (07) காலை கிளிநொச்சி பொதுச் சந்தையின் வர்த்தகர்கள் மாவடட்த்தில் உள்ள மாவட்டச் செயலகம் பிரதேச செயலகம் உள்ளிட்ட திணைக்களங்களுக்கு முன்னால் நின்ற வர்த்தகர்கள் அலுவலகத்திற்கு  வருமை் உத்தியோகத்தர்களிடம் தங்களின் நிலைமைகளை எடுத்துக் கூறும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.குறித்த துண்டுப் பிரசுரத்தை விநியோகித்த வர்த்தகர்கள் கருத்து தெரிவித்த போது பல்வேறு சந்தர்ப்பங்களில் பல காரணங்களால் மிகவும் பாதிப்புக்குள்ளான வர்ததகர்களாகிய எங்களின்  வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக தோல்வியடைந்து திட்டத்தை  எங்கள் மீது திணிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றும் நாட்டின் பல மாவட்டங்களில் சந்தை மாடிக் கட்டடங்கள் தோல்வி அடைந்த நிலையில்  கிளிநொச்சியில் எங்கள் மீது அந்த திட்டத்தை திணிக்கின்றார்கள்  என்றும் எனுவே  வர்த்தகர்களின் நலனுக்கு புறம்பான இச் செயற்பாடுகளை தெளிவுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதாக குறிப்பிட்டனர்

._______________________________________________________________________

புதிய பிரபாகரன்

 கருணாகரன்

முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் விட பெரீய அவலமெல்லாம் அதற்குப் பிறகுதான் நடக்கின்றனவா? என்று சிலவேளை எண்ணத் தோன்றுது. ஏனென்றால், “பிரபாகரனுக்கseeman . bharathirajahு நிகராக இதோ இன்னொரு பிரபாகரன், எங்கள் பிரபாகரன்” என்று சீமானைப் பற்றிப் பகிரங்கமாகப் பாராட்டிப் பேசியிருக்கிறார் பாரதிராஜா. சீமானோ தானே புலிகளின் வாரிசு. தமிழர்களின் திசைகாட்டி. புதிய வரலாற்றுப் படைப்பாளி என்றெல்லாம் சொல்கிறார். இதையெல்லாம் எப்படிச் சகித்துக் கொள்வது என்று தெரியவில்லை. இவ்வளவுக்கும் இவர்கள் இருவரும் ஒரேயொரு தடவைதான் பிரபாகரனை நேரில் பார்த்திருக்கிறார்கள். அதுவும் அரசியல் ரீதியான சந்திப்பாகவோ ஆயுதப்போராட்டத்தை முன்னெடுப்பதற்கான சந்திப்பாகவோ இருக்கவில்லை. பிரபாகரன் அப்படியொரு சந்திப்பை பொதுவாக வெளியே யாரோடும் செய்வதில்லை. அவர் தன்னுடைய தீர்மானத்தின்படியே போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். தன்னுடைய அரசியலிலும் போராட்ட வழிமுறைகளிலும் யாரையும் அவர் கலக்க விடுவதில்லை.     (மேலும்) 07.08.18

._______________________________________________________________________

24 மணி நேரத்திற்குப் பிறகுதான் கருணாநிதி உடல்நிலை குறித்து கணிக்க முடியும்:  புதிய மருத்துவ அறிக்கை வெளியீடு   

சென்னை: 24 மணி நேரத்திற்குப் பிறகுதான் கணிக்க முடியும் என்பதாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து புதிய மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுkarunanithi.திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து புதிய மருத்துவ அறிக்கை ஒன்று காவேரி மருத்துவனை தரப்பில் இருந்து தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  அவரது வயது மூப்பு தொடர்புடைய பிரச்னைகளின் காரணமாக அவரது முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை இயல்பாக வைத்திருப்பது சவாலாக உள்ளது.அவர் தொடர் கண்காணிப்பு மற்றும் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்.  அடுத்த 24 மணிநேரத்தில் அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கு அவர் எதிர்வினையாற்றுவதைப் பொறுத்தே எதையும் முன் கணிக்க முடியும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

இரு புகையிரதங்கள் விபத்துக்குள்ளானதில் 32 பேர் வைத்தியசாலையில்

கொழும்பு - கண்டி பிரதான புகையிரத பாதையில் பொல்கஹவெல புகையிரத நிலையம் அருகே இரண்டு புகையிரதங்கள் மோதிக்கொண்டதில், புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த புகையிரத விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தில் காயமடைந்தவர்கள் பொல்கஹவெல, குருணாகல், ரம்புக்கனை மற்றும் கோகலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பிற்பகல் 4.30 மணியளவில் கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் இயந்திர கோளாறு காரணமாக பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.இதன்போது பின்னால் வந்த மற்றுமொரு புகையிரதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

._______________________________________________________________________

பலாலியில் இருந்து திருப்பதிக்கான விமான சேவை இந்த ஆண்டுக்குள் ஆரம்பிக்கப்படும்

யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் திருப்பதிக்கான விமான சேவை இந்த ஆண்டுக்குள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.அரசாங்Palalyகத்தின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.குறித்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன.இதற்காக முதற்கட்டமாக இந்திய அரசாங்கத்தினால் 100 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கி வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் இந்தவிடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், விரைவில் இந்திய விமான சேவைகள் குழு ஒன்று பலாலிக்கு சென்று ஆய்வுகளை நடத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடியாக இந்தியாவிற்கான விமான சேவை நடத்தப்படுமாக இருந்தால், வடக்கில் இருந்து இந்தியா செல்வோரின் செலவுகள் குறைவடைவதுடன், வடமாகாணத்துக்கான வருவாயும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதேநேரம், பலாலியில் இருந்து மலேசியாவிற்கான விமான சேவையும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

._______________________________________________________________________

அரசாங்க அச்சக பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில்

அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டதாகவும், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புதிய நியமனங்கள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, வேலை நிறுத்தம் ஒன்றை அரசாங்க அச்சக பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.அரசாங்க அச்சக பணியாளர்கள் இன்றும் (06) நாளையும் (07) இந்த வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதாக அறிவித்துள்ளனர்.இந்நிலையில் தமது கோரிக்கைகளுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றால் தமது வேலை நிறுத்தம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

மீனவர்களின் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடிக்கு எதிரான கவனயீர்ப்பு நடவடிக்கை தொடர்ந்தும் இன்று ஐந்தாவது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றmullai fisherman protestது.   மேலும் இரவுபகலாக தொடர்ந்து மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கவனயீர்ப்பு நடவடிக்கையில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது அமைப்புகளை சார்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துவருகின்றனர். அத்துடன் தொடர்ந்தும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடித் தொழில்கள் இடம்பெற்று வருவதாகவும், இன்றைய தினமும் வெளிமாவட்ட மீனவர்கள் சட்டவிரோத வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் கவனயீர்ப்பில் கலந்துகொண்டிருந்த மீனவர்களால் தெரவிக்கப்பட்டது.  இது தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்.தடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்களின் சில படகுகள் இன்றும் கடற்பரப்பில் காணப்பட்டன.    (மேலும்) 07.08.18

._______________________________________________________________________

தடையை மீறி இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு  வடகொரியா ஆடை ஏற்றுமதி

ஐக்கிய நாடுகளின் தடையையும் மீறி, வடகொரியாவினால் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி, த ரொயிட்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.இதன்படி 2017ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடக்கம், 2018ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் இலங்கை, தாய்லாந்து, துருக்கி மற்றும் உருகுவே உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரியா 100 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆடைகளை ஏற்றுமதி செய்துள்ளது.வடகொரியா மீதான ஐக்கிய நாடுகளின் தடையை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினது ஆறுமாத கால அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

3 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை


நொச்சியாகம பகுதியில் தனது 3 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தந்தையின் தாய் மற்றும் 3 வயது மகள் ஆகிய மூவருமே வீட்டில் வசித்து வந்துள்ளனர். குறித்த நபரின் மனைவி பிரிதொரு நபரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்  சந்தேக நபரின் சகோதரிகள் இருவர் குழந்தைகள் காப்பகத்தில் வசிக்கின்றனர். சந்தேக நபரின் தாய் குறித்த சகோதரிகளை பார்வையிட குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய போது வீடு உள்ளே தாழிடப்பட்ட நிலையில் குழந்தை அழுகும் சத்தம் கேட்டுள்ளது.  வீட்டின் கதவினை நீண்ட நேரம் தட்டிய பின்னர் வீட்டினை திறக்காமையினால் சந்தேக நபரின் தாயான பாட்டி ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.   (மேலும்) 07.08.18

._______________________________________________________________________

சவுதி அரேபியாவுக்குகான கனடா தூதர் வெளியேற்றம்

சவுதி அரேபியாவில் இருந்து கனடா தூதரை அந்த நாடு வெளியேற்றcanada embassyியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.n சவுதி அரேபியாவுக்கான கனடா தூதர் நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் அளித்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.  சவுதி-அமெரிக்க பெண்கள் உரிமைகள் பிரச்சாரகர் சமர் பேடாவி கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து  கனடாவின் வெளிவிவகார அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சவுதி அரேபிய அரசு காரணமின்றி பொதுமக்களை கைது செய்வதும், பெண்களின் உரிமைக்காக போராடியவர்களை கைது செய்து மிரட்டுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் கனடா அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது எனவும், சவுதி அரேபிய அரசு உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும், இதுபோன்ற மனித உரிமை போராளிகளை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது.    (மேலும்) 07.08.18

._______________________________________________________________________

பல்கலைகழக மாணவர்கள் கொலை- பொலிசாரின் தவறான தகவல்கள்

யாழ் பல்கலைகழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் பொய்யான தகவல்களை வழங்கியதை சிங்கள பத்திரிகையாளர் ஒருவர் தjaffna uni studentsகவல் உரிமை சட்டத்தின் மூலம் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் பொலிஸார் பல்கலைகழக மாணவர்கள் மதுபானம் அருந்தியிருந்தனர் என தெரிவித்தமை பொய் என்பது தெரியவந்துள்ளது. லங்காதீபவின் தரிந்து ஜயவர்த்தன தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பல்கலைகழக மாணவர்களின் பிரதேசபரிசோதனை அறிக்கையை வைத்தியாசாலையிலிருந்து பெற்றுள்ளார்.இந்த அறிக்கை பொலிஸார் தெரிவித்த பல தகவல்களை பொய்யானவை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.யாழ்பல்கலைகழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் முதலில் அது விபத்து என தெரிவித்திருந்த பொலிஸார் பின்னர் அவர்கள் மது அருந்தியிருந்தனர் என ப்பிட்டிருந்தனர்.எனினும் பிரேதபரிசோதனை அறிக்கை மாணவர்களின் உடலில் அவர்கள் மது அருந்தியதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை என தெரிவித்துள்ளது.மேலும் மோட்டார் சைக்கிளை செலுத்திக்கொண்டிருந்த சுலக்சனின் உடலில் துப்பாக்கிசிதறல்கள் காணப்பட்டதாகவும் பிரதேச பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறையினர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

’பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி வழங்க அவசியமில்லை’

கொழும்பிலுள்ள சில பகுதிகளில், பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி வழங்கவேண்டிய அவசியமில்லை என்று, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.கொழும்பு மாநகரில், manoவெள்ளத்தை, கொட்டாஞ்சேனை, பம்பலப்பிட்டி, கடற்கரை பொலிஸ் உட்பட பல பொலிஸ் நிலையங்களின் மூலம்,  குடியிருப்பாளர்களை பதிவு செய்யும் நடைமுறை மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாகவும் இது தொடர்பில் தமது விவரங்களை எழுத்து மூலம், பொலிஸார் தரும் படிவங்களில் எழுதி தருவதிலுள்ள அசெளகரியங்களை பற்றியும், கொழும்பு வாழ் மக்கள், தன்னிடம் முறைப்பாடு மேற்கொண்டுள்ளதாக ​அவர் தெரிவித்தார்.இது தொடர்பில், தான், இன்று (06), பொலிஸ்மா அதிபரிடம் கலந்துரையாடியதாகவும் இந்த நடைமுறையை, உடனடியாக நிறுத்துமாறும் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதை ஏற்றுக்கொண்டு, இந்த நடைமுறையை உடன் நிறுத்ததுவதாக, பொலிஸ்மா அதிபர் தன்னிடம் உறுதியளித்ததாகவும், எனவே இந்தப்  பொலிஸ் பதிவு விபர படிவங்களை நிரப்பி, பொலிஸ் தரப்பினருக்கு வழங்க வேண்டாம் என, கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.

._______________________________________________________________________

இன்று வீரகேசரிக்கு அகவை 89

கலை - இலக்கியத்தில் வீரகேசரியின்  வகிபாகம்

                                                                                முருகபூபதி


இந்தியா - தமிழ்நாட்டில்  தனவணிகர் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் செறிந்து வாழ்ந்த செட்டி நாட்டு மண்ணில் ஆவணிப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்து, வளர்ந்து கொழுமvirakesari1்புக்கு வர்த்தகம் செய்யவந்திருக்கும், பெரி. சுப்பிரமணியம் செட்டியார், 1930 ஆம் ஆண்டு ஓகஸ்ட்  மாதம் 6 ஆம் திகதி வீரகேசரி பத்திரிகையின் முதல் இதழை வெளியிட்டார்.  முதலில் கொழும்பு செட்டியார் தெருவிலிருந்து வெளிவந்த வீரகேசரி, அதன் விரிவாக்கம் கருதி கிராண்ட்பாஸ் வீதியில் 185 ஆம் இலக்க இல்லத்திற்கு இடம்பெயர்ந்தது.   அந்த இல்லமும் வரலாற்று முக்கியத்துவம் மிக்கது என்பதை பலரும் அறியமாட்டார்கள்! அங்குதான் இலங்கையின் முன்னாள் அதிபர் ஜே.ஆர். ஜெயவர்தனா பிறந்திருக்கிறார்.   இத்தகைய அரிய தகவல்களை தன்னகத்தே வைத்துள்ள வீரகேசரியின் தொடக்காலத்தில் வ.ராமசாமி அவர்களும் தமிழகத்திலிருந்து வருகை தந்து ஆசிரியராக பணியாற்றியவர்.   வ.ரா. என சுருக்கமாக அழைக்கப்படும் வ. ராமசாமி அய்யங்கார் மகாகவி பாரதியின் நெருங்கிய நண்பருமாவார். மகாத்மா காந்தி சென்னைக்கு வந்த சமயத்தில் அவர் தங்கியிருந்த இல்லத்தின் வாயில் காப்போனாகவும் பணியாற்றியவர்.   (மேலும்) 06.08.18

._______________________________________________________________________

முஸ்லிம் விவாக, விவாக ரத்து சட்டம் (MMDA) தொடர்பில் இணக்கப்பாடான தீர்மானமே ஆரோக்கியமானது.

- நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG).


(NFGG ஊடகப் பிரிவு)

தற்போது இலங்கையில் நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக, விவாக ரத்து சட்டத்தில் (MMDA) சீர்திருத்தம் அவசியம் என்பதற்கான கால, சூழ்நிலைத் தேவைகள் உள்ளன என்பதில் எnfgg logoவ்வித ஐயமும் இல்லை.   இந்த வகையில் இஸ்லாமிய சட்ட வரன்முறைக்கு அமைய,  பரந்த நோக்கில் இந்த மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்    என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) கருதுகிறது. காதி நீதிமன்ற நடைமுறைகளில் உள்ள இடைவெளிகள், தவறுகள் சீர்செய்யப்பட வேண்டும். இவை மிகவும் கருத்தூன்றிக் கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகும்.  கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட பலர் - குறிப்பாக பெண்கள் - முன்வைத்து வரும் அபிப்பிராயங்களையும் கருத்துகளையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய கடப்பாடும் தார்மீகப் பொறுப்பும் அனைவரின் முன்னேயும் உள்ளது.எனினும், துறை சார்ந்தோரிடம் இது குறித்து அபிப்பிராய பேதங்கள் நிலவி வருவதால், சிக்கலும் இழுபறியும் தோன்றியுள்ளது தெரிந்ததே.    (மேலும்) 06.08.18

._______________________________________________________________________

ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்ட 11 இளைஞர்கள் கைது


ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்ட 11 இளைஞர்களை பொலிஸார் நேற்று (4) கைதுசெய்துள்ளனர். தென்மராட்சி பகுதியில் நேற்று மேற்கொண்ட தேடுதலின் போது, சாவaava groupகச்சேரி, சரசாலை, மறவன்புலோ உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 11 இளைஞர்களையே மானிப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.அண்மைக்காலமாக இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களின் பின்னர், யாழ்ப்பாணம் உட்பட மானிப்பாய், சுன்னாகம், கோப்பாய் பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டு, வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.    (மேலும்) 06.08.18

._______________________________________________________________________

சம்பந்தன் அவர்களின் செயற்பாட்டுடன் ஒப்பிடுகையில் விஜயகலா பெரும் குற்றவாளியல்ல

வீ. ஆனந்தசங்கரி,

கௌரவ விஜயகலா மகேஸ்வரன் ஏதாவது குற்றம் புரிந்திருந்தால் அது கௌரவ இரா. சம்பந்தன் கௌரவ மாவை சேனாதிராசா ஆகியோர் 2004 ம் ஆண்டு நடைபெற்ற பாராளsangaryுமன்ற தேர்தலின் போது புரிந்த குற்றத்திலும் குறைவானதா கடுமையானதா அன்றேல் ஒப்பிடக்கூடியதா?.தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களின் பெரும் தியாகத்தால் பெரும் புகழ் பெற்றிருந்த வடக்கு கிழக்கு ஜனநாயகம், திரும்ப பழைய பெருமையை ஒருபோதும் பெறமுடியாத அளவிற்கு தடம் புரண்டது 2004 ம் ஆண்டு தேர்தலில்தான். பாராளுமன்றத்தின் கால எல்லையை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நீடிக்க அரசு முற்பட்டபோது தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்த 18 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவியை 1983ம் ஆண்டு துறந்து பெரும் தியாகத்தை புரிந்தனர். அந்த 18 பேரில் திரு.சம்பந்தனும் நானுமே தற்போது உயிருடன் இருக்கின்றோம். ஆனால் ஆச்சரியப்படக்கூடிய விதத்தில் திருவாளர்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோரின் திட்டமிட்ட சதியால் பலவீனமடைந்ததுள்ளது. ஆனால் ஆச்சரியப்படக் கூடிய விதத்தில் இருவரும் தொடர்ந்து பாராளுமன்றத்தில் உள்ளனர்.    (மேலும்) 06.08.18

._______________________________________________________________________

அரச பணியாளர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கக் கூடாது

பாராளுமன்ற உறுப்பினர்களுடையது மட்டுமன்றி அரச பணியாளர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படக் கூடாது என்று விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.இந்த சந்தர்ப்பத்தில் தொழிலாளர்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.பொருளாதாரம் பலமடைந்தால் மாத்திரமே நாடு என்ற வகையில் முன்னேற முடியும் என்றும் உற்பத்திகளை அதிகரித்து உற்பத்திக்காக பங்களிப்பு செய்வோருக்கு ஊக்க கொடுப்பனவுகள் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர்களினதும், அரச பணியாளர்களினதும் சம்பளத்தை அதிகரிப்பதால் மாத்திரம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்று விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

._______________________________________________________________________

வவுனியாவில் 2 பாடசாலை சிறுமிகள் கடத்தல் சம்பவம்; ஒருவர் கைது

வவுனியாவில் கடத்தப்பட்ட  இரண்டு பாடசாலை சிறுமிகள் அலரி விதை உட்கொண்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த வியாழக்கிழமை வவுனியா நகரப்பகுதி ஒன்றைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயது மாணவிகள் பூந்தோட்டம் பகுதியில் வைத்து கடத்தப்பட்டிருந்தனர். கடத்தப்பட்ட இருவரையும் சாந்தசோலை வீதியில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் இருவரும் அங்கிருந்து அன்றைய தினம் மாலை தப்பித்ததுடன், அலரி விதை உட்கொண்டிருந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் வவுனியா, சிறிராமபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளனர்.இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

._______________________________________________________________________

வெனிசூலா அதிபரைக் கொல்ல முயற்சி?

வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ பங்கேற்ற ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் குண்டுகள் வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியது.  வெடிபொருள் நிரப்பப்பட்ட ஆளில்லாvenensula சிறிய விமானம் மூலம் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள மடூரோ, இது தன்னைக் கொல்வதற்காக கொலம்பியா மேற்கொண்ட சதிவேலை என்று குற்றம் சாட்டினார்.வெனிசூலாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகம் நிறைந்த நாடாளுமன்ற அவைக்கு மாற்றாக, அதிபர் மடூரோவின் ஆதரவாளர்கள் நிரம்பிய புதிய அரசமைப்பு அவை கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்த அவையின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி, தலைநகர் கராகஸில் ராணுவ அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இதில் மடூரோ கலந்துகொண்டு உரையாற்றினார். அவரது உரை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பட்டது. இந்த நிலையில், மடூரோ உரையாற்றிக் கொண்டிருந்த மேடைக்கு அருகே அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன.அந்த வெடிச் சப்தங்களைக் கேட்டு, மேடையிலிருந்த மடூரோ, அவரது மனைவி மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்டு, வரிசையாக நின்றிருந்த வீரர்கள் பதறியடித்து ஓடினர்.     (மேலும்) 06.08.18

._______________________________________________________________________

 புதிய ஏற்பாடும் பழைய செய்தியும்  பழைய ஏற்பாடும் புதிய செய்தியும்

-          கருணாகரன்

“2020 க்குள் இனப்பிரச்சினைக்கு (தமிழர்களுக்கு) தீர்வு” என்று தெரிவித்திருக்கிறார் “சமாதானத் தேவதை” சந்திரிகா குமாரதுங்க. (தயவு செய்து இதற்காக யாரும் சிரித்து விடchandrika.kாதீர்கள். இப்படியே எத்தனை கால அட்டவணைகளைக் கடந்து வந்திருக்கிறோம். அதில் ஒன்றே இதுவும் என அமைதி கொள்க).   இந்த (நற்)செய்தியைப் படித்த தமிழரான முதியவர் ஒருவர் சொன்னார், “ஆஹா, காதிலே பாலும் தேனும் பாய்ந்தோடுது. மனதிலே சமாதானப் புறா சிறகடித்துப் பறக்குது. ஆனால், நாங்கள்தான் மிஞ்சியிருக்கிற கோவணத்தையும் இழக்கப்போறம்...” என்று. இந்த முதியவரின் வார்த்தைகளுக்குள் உள்ள வேதனை, கோபம், ஆற்றாமை, விமர்சனம், யதார்த்தம், உண்மை, பட்டறிவு, எச்சரிக்கை உணர்வு எல்லாம் சாதாரணமானவை அல்ல. மிகத் துயரமானவை. இந்த நாட்டின் பொறுப்பானவர்களால் – ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களால் விளைந்தவை.சந்திரிகா குமாரதுங்க கூறுவதன்படி (அவருடைய நற்செய்தியின்படி) இந்தத் தீர்வு எப்படி அமையும்? அது எங்கிருந்து வரும்? அதற்கான சாத்தியங்கள், சாதக நிலைகள் என்ன? இதைச் சாத்தியப்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் எங்கே நடக்கின்றன? யாரால் அவை முன்னெடுக்கப்படுகின்றன? இது நடக்கும் என்பதற்கான உத்தரவாதம் என்ன?    (மேலும்) 05.08.18

._______________________________________________________________________

கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட கட்டிட வளாகம் திறப்பு

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மானிக்கப்பட்ட பொறியியல் பீட கட்டிடம், உத்தியோகஸ்தர் விடுதி மற்றும் மாணவர்கள் விடுதி ஆகிய கட்டடத்தொகுதிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக (04) திறந்து வைத்துள்ளார். சுமார் இரண்டாயிரத்து நூறு மில்லியன் ரூபா செலவில் பொறியில் பீடத்திற்காக நிர்மானிக்கப்பட்ட பத்து கட்டடங்களையும், உத்தியோகஸ்தர் விடுதி மற்றும் ஆண் பெண் மாணவர்களுக்கான விடுதித் தொகுதிகள், விரிவுரையாளர்களுக்கான அலுவலகம் என்பன இதில் அடங்குகின்றன.இதில் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன், சித்தார்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக விரைவுரையாளர்கள், விசேட அதிதகள் என பலர் கலந்;து கொண்டனர்.

._______________________________________________________________________

2020ம் ஆண்டு நிச்சயம் ஆட்சி மாற்றம் இடம் பெறும்  அதன் பின்னரே நியாயமான சுதந்திரம் நிலைநாட்டப்படும

நாட்டில் ஜனநாயகத்தை  அழிக்கும் நடவடிக்கைகளையே தேசிய அரசாங்கம் முன்னெடுப்பதாக பேராசிரியர் ஜி. எல். பீரீஸ் அமெரிக்க பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தாglperisர். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனநாயக  தேசிய நிலையத்தின்  பிரதிநிதிகளான  ஐவன் டோஹடி,  டேவிட் மெக்ராட்ஸ் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். பேராசிரியர் ஜி.எல். பீரீஸின் இல்லத்தில் இன்று காலை இடம் பெற்ற இச் சந்திப்பில்  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும்  தாரக பாலசூரிய ஆகியோர் கலந்துக் கொண்டனர். இக்கலந்துரையாடல் தொடர்பில் பேராசிரியர் ஜி. எல் பீரீஸ் குறிப்பிடுகையில், "தேசிய அரசாங்கத்தில் ஜனநாயகம் என்பது வெறுமனமே பேச்சளவில் மாத்திரமே பின்பற்றப்பட்டு வருகின்றது. தேர்தல் காலத்திற்கு காலம் இடம் பெற வேண்டும் ஆனால் தேர்தல்களை நடத்தாமல் காலம் தாழ்த்துவதே தற்போது அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது.  உள்ளூராட்சிமன்றங்களின் பதவி காலம் நிறைவடைந்து 2 வருடத்திற்கு பிறகே  உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம் பெற்றது.     (மேலும்) 05.08.18

._______________________________________________________________________

நிதி வழங்குவதாக காணாமல் போனோர் அலுவலகம் அறிவிப்பு

மன்னார் மனித புதைகுழியின் மீட்பு பணிகளுக்கு காணாமல் போனோmannar human1ர் அலுவலகம் நிதிவழங்குவதாக அறிவித்துள்ளது. அந்த அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டதரணி சாலிய பீரிஸ் இதனை எமது செய்தி சேவைக்கு சந்று முன்னர் தெரிவித்தார்.மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் தொடர்ச்சியாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.இந்த பணிகளுக்கு நீதியமைச்சின் ஊடாக நிதி வழங்கப்படுகின்ற போதிலும் தொடர்ச்சியான மீட்பு பணிகளுக்கு நிதி பற்றாக்குறை நிலவுவதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே இந்த மீட்பு பணிகள் கைவிடப்படாது தொடர்ந்து முன்னெடுப்பதை உறுதி செய்யும் வகையில் காணாமல் போனோர் அலுவலகம் அதற்கான நிதியை மாதாந்தம் வழங்கும் என, அதன் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

 மன்னார், முள்ளிக்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் நேற்றைய தினம் கைது

15 வயது மாணவிக்கு பாலியல் ரீதியான இடையூறுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மன்னார், முள்ளிக்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாடொன்றுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.கடந்த டிசம்பர் மாதம் குறித்த பாடசாலை மாணவி, சுத்தம் செய்யும் பணிக்காக அழைக்கப்பட்டு, அதிபரினால் பாலியல் இடையூறுகள் விளைவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் 3 ஆசிரியர்கள் உட்பட 10 பேரிடம் வாக்கு மூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

 பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையமாக மாற்றவுள்ளோம்: பிரதமர்

)  பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையமாக மாற்றவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கு நிலranil.vம் ஒன்றைக் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் தற்போதுள்ள காணிகளில் பணிகளை முன்னெடுக்க இந்திய அரசாங்கம் இரண்டு கட்டங்களாக உதவி செய்ய முன்வந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். இதேபோன்று, காங்கேசன்துறை அபிவிருத்தி செய்யப்பட்டு துறைமுகமாக விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் காங்கேசன்துறை சீமேந்து ஆலையை அகற்றி, அந்த பகுதியில் சிறு கைத்தொழிலை விஸ்தரித்து, தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். பரந்தனில் ஐஸ் சேமிப்பு நிலையங்களையும் ஐஸ் ஆலையையும் அமைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பொறியியல் பீட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இவ்விடயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

._______________________________________________________________________

05 மாதங்களாக சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அபேபுர பிரதேசத்தில்16 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 16 வயது நிரம்பிய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்ததாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். அதே பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் 27 வயது நிரம்பிய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.தனது ஆடையற்ற புகைப்படத்தை காட்டி இந்த ஆண்டு 03ம் மாதத்தில் இருந்து தன்னை அந்த உத்தியோகத்தர் தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்ததாக அச்சிறுமி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.குற்றம்சாட்டப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரும் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட சிறுமியும் அயல் வீடுகளில் வசிப்பவர்கள் என்பது குறிப்படத்தக்கது.

._______________________________________________________________________

இதய நோயினால் நாளொன்றுக்கு 120 - 150 பேர் வரை உயிரிழப்பு

இலங்கையில் இதய நோய் காரணமாக நாளொன்றுக்கு 120 இற்கும் 150 இற்கும் இடையிலானோர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் இருதய நோய்ப் பிரிவின் பிரதானி விஷேட வைத்திய நிபுணர் நாமல் கமகே கூறினார்.இருதய நோய் சம்பந்தமாக மூன்றாம் நிலை சிகிச்சை செய்யும் போது அதிக செலவு ஏற்படுவதே இவ்வாறான மரணங்கள் ஏற்படுவதற்கு ஒரு காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அனைத்து தரப்பினரும் இணைந்து இதற்காக தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று விஷேட வைத்திய நிபுணர் நாமல் கமகே கூறினார்.

._______________________________________________________________________

கறுப்பு ஜூலையின் நிழல்கள் மற்றும் போருக்குப் பிந்தைய நல்லிணக்கம்

                                        பிரான்சஸ் புலத்சிங்கள

ஜூலை 1983 தமிழர் விரோத கலவரம் இந்த நாட்டின் சமீபத்தைய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது, மற்றும் 35 வருடங்களுக்குப் பின்பு மூன்று தசாப்தங்கள்832 நீண்ட போர் முடிவடைந்து அதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட பின்னரும், நாங்கள் இன்னமும் ஸ்ரீலங்கா எங்கே போகிறது என்றே கேட்டுக்கொண்டிருக்கிறோம்?   ஒரு சாதாரண ஜூலை நாளில் கொழும்பு நகரமெங்கும் தீச் சுவாலைகள் பற்றி எரிந்தபோது இந்த எழுத்தாளருக்கு ஏழு வயதாக இருந்தது. ஒரு சிறுபிள்ளையாக இருந்த எனக்கு அரசாங்கத்தின் இராணுவத்தைச் சேர்ந்த 13 அங்கத்தவர்கள் அப்போது சிறியதாக இருந்த கிளர்ச்சி அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.ரீ.ரீ.ஈ) கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தது தெரியாது. அல்லாமலும் இருபது வருடங்கள் கழித்து ஒரு ஊடகவியலாளராக ஸ்ரீலங்காவின் இன மோதலையும் மற்றும் 2002 சமாதான நடவடிக்கைகளையும் பற்றிய செய்திகளைச் சேகரிப்பேன் என்பதும் எனக்கு அப்போது தெரியாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் நான் ஒரு பாடசாலை வேனில் பயணம் செய்வதும் எங்களுக்கு இடையில் நான்கு தமிழ் ஆசிரியைகள் நெருக்கியடித்து அமர்ந்து இருப்பது மட்டுமே. இந்த ஆசிரியைகள் பயத்தில் நடுங்குவதையும் எளிதில் இனங்காண முடியாதபடி அவர்கள் நெற்றியில் இருந்த பொட்டு அகற்றப்பட்டு பார்ப்பதற்கு கடினமாக இருந்ததுமே எனக்கு நினைவில் உள்ளது.    (மேலும்) 04.08.18

._______________________________________________________________________

நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 12

தலைமுறை தலைமுறையாக இசைவேள்வி நடத்திவரும் கலைக்குடும்பம்

                                                               ரஸஞானி

களனி கங்கை தீரத்தில் கொகிலவத்தை , மட்டக்குளி, கிராண்ட்பாஸ், பிறின்ஸ் ஒஃப் வேல்ஸ் வீதி, ஆமர்வீதி, புளுமெண்டால் வீதி என்பன எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், பாR.Muthusamyடகர்கள், பத்திரிகையாளர்கள், ஓவியர்கள், ஒளிப்படக்கலைஞர்கள்  வாழ்ந்த,  பணியாற்றிய, நடமாடித்திரிந்த பிரதேசங்களாகும். இந்த இடங்களில்தான்  தினக்குரல்,  வீரகேசரி, திவயின, The Island, சித்திர மித்ர, முதலான பத்திரிகைகள் வெளியாகின்றன.  கொகிலவத்தையில் 1983 இற்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் நியமுவா, ரத்து பலய, செஞ்சக்தி,  Red Power  முதலான பத்திரிகைகள் அச்சிடப்பட்டு வெளிவந்தன. வீரகேசரிக்காக ஜா- எல , ஏக்கலையில் பல ஏக்கர் விஸ்தீரணத்தில் நிலம் வாங்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்தும் கிராண்ட்பாஸ் வீதி வீரகேசரியின் பெயரை நிலைத்துவைத்திருக்கிறது. ஆமர்வீதியில் அமைந்திருந்த கே. ஜி. இண்டஸ்றீஸ் ஸ்தாபனத்தின் உரிமையாளர் கே. குணரத்தினம். இங்கு இயங்கிய ஓவியக்கூடத்தில் இலங்கை தியேட்டர்களில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களுக்கான பெரிய பெணர்கள் கட்அவுட்டுகள் வரையப்படும். அதற்கென பயிற்சி பெற்ற ஓவியர்கள் இங்கு பணியாற்றினார்கள். (மேலும்) 04.08.18

._______________________________________________________________________

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்

வௌிநாட்டுப் பிரஜை ஒருவரிடம் 50,000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் காண்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.காலி உதவி பொலிஸ் அத்தியட்சகரால் ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இருவர் இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்றுள்ளதுடன், அதனை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

._______________________________________________________________________

ஆயுத போராட்டம் நிறைவடைந்தாலும் அமைதியும் சமாதானமும் மக்களிடையே இல்லை

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பிsammeetன் பொதுச் செயலாளர் பெட்ரீசியா ஸ்கொட்லண்ட், எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இன்று (03) பாராளுமன்றிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.    இச்சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளருக்கு தெளிவுபடுத்திய எதிர்க்கட்சி தலைவர், ஆயுத போராட்டம் முற்று பெற்றிருந்தாலும் முழுமையான அமைதியும் சமாதானமும் மக்களிடையே இல்லை என்பதனை சுட்டிக்காட்டினார்.  
மேலும் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புக்கள் காணப்பட்டன. அரசாங்கம் சர்வதேச மட்டத்திலும் நாட்டு மக்களிற்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள்,   (மேலும்) 04.08.18

._______________________________________________________________________

வில்பத்து காடழிப்பு விவகாரம்; அமைச்சர் ரிஷாதின் கோரிக்கை நிராகரிப்பு.


பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து கட்டிடங்கள் நிர்மாrishad-bathiudeenணிக்கப்பட்டு முஸ்லிம் மக்களை குடியமர்த்தியுள்ளதாக கூறி தனக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றச்சாட்டுக்களில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கூறி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முன் வைத்த கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.    அமைச்சரால் சத்தியக்கடதாசி மூலம் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிளால் நிராகரிக்கப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார். சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு உள்ளிட்ட இரண்டு பேரால் அமைச்சர் உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.    (மேலும்) 04.08.18

._______________________________________________________________________

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னைய உறுப்பினர் ஒருவர் கைது

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களுடன் தொடர்பு படுத்தப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னைய உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் கைதாகியுள்ளார்.டஸல்ட்ரொஃப் பகுதியில் வைத்து கடந்த புதன்கிழமை அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.2006ம் ஆண்டு முதல் - 2009ம் ஆண்டு வரையில் விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்த அவர், 2008ம் ஆண்டு 16 ஆம் திகதி  இராணுவத்தினரை கட்டி கொலை செய்யும் இடத்துக்கு அழைத்துச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.2009ம் ஆண்டு அவர் நாட்டில் இருந்து தப்பிச் சென்று ஜேர்மனியில் அடைக்கலம் பெற்றுள்ளார்.36 வயதான அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ._______________________________________________________________________

வாகனங்களின் வரி அதிகரிக்கப்பட்டமைக்கான மேலும் ஒரு காரணம்

ஆயிரம் சிசி வலுவை விட குறைந்த வலுவையுடைய வாகனங்களின் விலை அதிகரிப்பிற்கு காரணம் போக்குவரத்து நெரிசல் மாத்திரமல்லவென மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.இறக்குமதி அதிகரிப்பதன் மூலம் வர்த்தக இடைவெளி அதிகரிப்பதும் விலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாகும்.வர்த்தக இடைவெளி அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய கடனின் அளவு அதிகரிக்கின்றது.இதன் காரணமாக ரூபாயின் விலை வீழ்ச்சியடைவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.இதன் நேரடி விளைவாக மக்களின் வாழ்வாதார செலவு அதிகரித்து நெருக்கடி ஏற்படும் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.மூன்று புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுதல் மற்றும் இலகு தொடருந்து கட்டமைப்பு ஊடாக எதிர்காலத்தில் பொதுப் போக்குவரத்து மேலும் இலகுபடுத்தப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார்.

._______________________________________________________________________

அமைச்சர்களின் சம்பள அதிகரிப்பை ஏற்க முடியாது - வாசுதேவ நாணயக்கார

பொது மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்vasudevaற நிலையில் ஆட்சியினை தக்க வைத்துக் கொள்ள அமைச்சர்களுக்கு சலுகைகளை அதிகரிப்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.    அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், நாடு இன்று பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ளது என்று குறிப்பிட்டே தேசிய அரசாங்கம் தேசிய வளங்களை பிற நாட்டு முதலீட்டாளர்களுக்கு தாரைவார்த்து கொடுக்கின்றது. ஆனால் மறுபுறம் அமைச்சர்களுக்கு மாத  கொடுப்பனவுகளை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.  தறபோது அமைச்சு பதவிகளில் இருப்பவர்கள் ஏழ்மையான வாழ்க்கையினை வாழ்பவர்கள் அல்ல அனைவரும் செல்வந்தர்களாகவே காணப்படுகின்றனர். ஆகவே  இவர்களுக்கான வேதன அதிகரிப்பு தேவையற்றதாகும்.    (மேலும்) 04.08.18

._______________________________________________________________________

 அரசியல் புனிதமும் போலிகளும்

-    மகா சகா

“விருது” என்றாலே எப்போதும் சர்ச்சை அல்லது பிரச்சினை என்றொரு அபிawardப்பிராயம் பொதுவாகவே உள்ளது. சில வேளைகளில் அது “நோபல் பரிசு” போன்ற உயர் விருகளையும் விட்டு வைக்கவில்லை. எல்லாவற்றிலும் தெரிந்தும் தெரியாமலும் அரசியல் விளையாட்டுகள் உள்ளன. அதற்கப்பால் பிற செல்வாக்குச் செலுத்திகளும் உண்டு. அரசியலுக்கு அப்பால் சிலர் வேறு வழிகளில் புகுந்து விளையாடி விடுவார்கள். தமிழில் இதைப்பற்றிய கதைகளைச் சொல்லவே  தேவையில்லை. அந்தளவுக்கு ஏராளம் சுழிப்புகள்.   இந்தியாவில் சாகித்திய அகாடமி தொடக்கம் அநேக அரச விருதுகளுக்குப் பின்னும் முன்னும் உள்ளும் புறமும் என ஏராளம் தில்லுமுல்லுகள் நடக்கும் வரலாறே உண்டு. ஆண்டுதோறும் இதனால் ஏற்படும் சர்ச்சைகள் நடந்தாலும் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுவதில்லை. நீங்கள் என்னதான் சொன்னாலும் நாங்கள் இப்படித்தான் செய்வோம் என்ற கணக்கில் அதே தவறுகள். அதே வெட்கமற்ற – கூச்சமற்ற செயல்கள்.   (மேலும்) 03.08.18

._______________________________________________________________________

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையை சேர்ந்த சமூக ஆர்வலர்களில் ஒரு தொகுதியினர் வடமாகாண ஆளுநர் றெயினோல்ட் குரேயுடன் சந்திப்பு

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையை சேர்ந்த சமூக ஆர்வலர்களில் meetஒரு தொகுதியினர் வடமாகாண ஆளுநர் றெயினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பழைய பூங்காவில் அமைந்துள்ள ஆளுநர் பங்களாவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பிரான்ஸ், கனடா, ஜேர்மன், இலண்டன், ஆஸ்ரேலியா நாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு வருகை தந்துள்ள இவர்கள் தாய் நாட்டின் தற்போதய அரசியல், பொருளாதார, சமூக முன்னேற்றங்கள் தொடர்பில் ஆளுநர் றெஜினோல்ட் குரே மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினர். குறிப்பாக வடமாகாணத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் வன்முறைக் கலாச்சாரம் என்பனவற்றினை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.      (மேலும்) 03.08.18

._______________________________________________________________________

தினேஷ் குணவர்தனவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி?

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் விடுத்துள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவின் நிலைப்பாட்டை அறிய தருமாறு கோரி, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (02) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.இந்நிலையில், கூட்டு எதிர்க்கட்சியில் 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதால், பாராளுமன்ற குழு தலைவரான தினேஷ் குணவர்தனவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் எனக் கோரி, 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஜூலை 30 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கடிதம் ஒன்றை கையளித்தனர்.

._______________________________________________________________________

முல்லைத்தீவில் பதற்றம் - கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு

முல்லைத்தீவில் சட்ட விரோத மீன்பிடி தொழிலை உடனடியாக நிறுத்துமாறு கோரி ஆயிர்க்கணக்கான மீனவர்கள், மக்கள் என பலர் திரண்டு இன்று (02) காலைmullai protest1 பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம் முன்பாக ஆரம்பமான பேரணி, முல்லைத்தீவு பொதுச்சந்தை வழியாக நகரை சென்றடைந்து, அங்கிருந்து மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினை சென்றடைந்தது. அங்கே சென்ற மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடியை தடைசெய்யுமாறு கோரி கோஷங்களை எழுப்பியதுடன் நீரியல் வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் தம்மை சந்திக்க வேண்டும் என நீண்ட நேரமாக காத்திருந்தனர்.மிக நீண்ட நேரம் காத்திருந்த மக்களை எவரும் சந்திக்காத நிலையில் ஆத்திரம் அடைந்த மக்கள் பொலிஸாரின் தடையையும் மீறி வேலிகளை உடைத்து திணைக்களத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.     (மேலும்) 03.08.18

._______________________________________________________________________

ஆட்கடத்தலை கட்டுப்படுத்த இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவு

சட்டவிரோத ஆட்கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவதுடன், ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் தயாராக உள்ளதாக அமெரிக்க இராஜதந்திரி தெரிவித்துள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமெரிக்கத் தூதரக விவகாரங்களுக்குப் பொறுப்பான இராஜதந்திரி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில், "ஆட்கடத்தலை ஒழிப்பதற்காக இலங்கை அரசாங்கம், சிவில் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட தயாராக உள்ளோம். ஆட்கடத்தல் விவகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இலங்கைக்கு ஒதுக்கியுள்ளது. ஆட்கடத்தல் விவகாரங்களை விசாரணை செய்வதற்கான சட்ட முறைமைகளை வலுப்படுத்தல், ஆட்கடத்தல் தொடர்பால வினைத்திறனான தகவல் சேகரிப்பு முறையினை விருத்தி செய்தல் மற்றும் ஆட்கடத்தலை தடுப்பதற்கான பாதுகாப்பு முறைமைகளை ஸ்திரமாக்கல் போன் றவற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியின் மூலம் மேற்கொள்ள முடியும்.   (மேலும்) 03.08.18

._______________________________________________________________________

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு: வைகோவுக்கு எதிரான தேசத்துரோக வழக்கு ஒத்திவைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டமைக்காக, மvaikoறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுசெயலாளர் வைகோவுக்கு எதிரான தேசத்துரோக வழக்கில் இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.  இதனையடுத்து அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்தவழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்திய வைகோ, தாமாக முன்வந்து 50 நாட்களுக்கு மேலாக விளக்கமறியலில் இருந்து பின்னர் பிணையில் வெளிவந்தார். இந்நிலையில், தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு எதிராக இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதையடுத்து, வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 18ம் திகதி முதல், வைகோ மீதான குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

யாழ் குழப்பநிலை – 11 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்புத் தேடுதல்களின் போது, இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட 4 உந்துருளிகளும் மீட்கப்பட்டுள்ளன. கைதானவர்கள், யாழ்ப்பாணம், மானிப்பாய், சுண்ணாகம் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து சுற்றிவளைப்புகள் மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளின் ஊடாக வன்முறைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

._______________________________________________________________________

வீட்டிலேயே சுகப் பிரசவ விவகாரம்: ஹீலர் பாஸ்கர் கைது

கோவையில் சர்ச்சைக்குரிய வகையில் தனியார் நிறுவனம் ஒன்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சுகப் பிரசவ முகாம்' திடீர் என்று ரத்து செய்யப்பட்டது.   கோவையில் உள்ள கோவைhealerbaslarப்புதூர் பகுதியில் அனடாமிக் தெரபி என்ற தனியார் அமைப்பின் சார்பாக 'இனிய சுகப் பிரசவம்'  என்னும் பெயரில் ஒரு நாள் மருத்துவ முகாம் ஒன்று வரும் 26-ஆம் தேதி நடத்தப்பட இருப்பதாக அறிவிப்பு புதன்கிழமையன்று  வெளியானது. இதில் மருத்துவரிடமும் செல்லாமல் வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்வதே சுகப் பிரசவம் ஆகும். இதுவே சிறந்த வழிமுறை ஆகும்’என்று குறிப்பிடப்பட்டிருந்தது.மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய இதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என இந்திய மருத்துவக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் வலியிறுதியிருந்தன.இந்நிலையில், வீட்டில் சுகப்பிரசவம் பார்க்க பயிற்சி அளிக்கப்படும் என அறிவித்த ஹீலர் பாஸ்கர் கோவையில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். மோசடி புகாரில் கோவை நிஷ்டை மைய உரிமையாளர் ஹீலர் பாஸ்கரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கூறியதாவது:அறிவியலுக்கு புரம்பாக செயல்படுவது, வதந்தியை பரப்புவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்படும்.  வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம், தடுப்பூசி வேண்டாம் என பொய் பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  எச்சரித்தார்.சமீபத்தில் திருப்பூர் யூ ட்யூப் உதவியுடன் வீட்டிலேயே சுகப்பிரசவத்திற்கு கணவன் முயற்சித்த சம்பவத்தில் அவரது மனைவி கிருத்திகா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கச் செயற்பாட்டில்

அரசாங்கத்தோடு த.தே.கூவும் இணைவு

-     கருணாகரன்

இனி யாருமே கவலைப்பட வேண்டியதில்லை. “தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு” என எல்லாமே வெற்றிகரமாக அமையப்போகிறது. அப்பாடா, kli-meetingஇத்தனை ஆண்டுகால இழுபறிகள், போராட்டங்களுக்கெல்லாம் ஒரு மாதிரி முற்றுப் புள்ளி வைத்தாயிற்று! இனியென்ன இந்த நாட்டுக்கும் தமிழ்ப்பெருங்குடி மக்களுக்கும் பொற்காலம்தான்(?).   வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் பெரும் பணிக்காக கடந்த 30.07.2018 திங்கட்கிழமை கிளிநொச்சியில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் வட மாகாண நிலையம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.இந்தத் திறப்பு விழாவில் “பெருந்தியாகி” மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன் உள்படப் பலர் “ஏகமனதாகப் பங்கேற்றிருக்கின்றனர். கவனித்துக் கொள்ளுங்கள், “பங்கேற்றிருக்கின்றனர்” என்பதை. 

._______________________________________________________________________

வாழ்வை எழுதுதல் - அங்கம் -02

அரசியல் தலைவர்களுக்கும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நடத்துவோம்!

மெல்பன் வாசகர் வட்டத்தின் ஓராண்டு நிறைவில் தோன்றிய சிந்தனை!

                                                                            முருகபூபதி

" நாடாளுமன்ற உறுப்பினர்களும்   மாகாண சபைகளின் உறுப்பினர்களுமbooks், மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் மாதம் ஒரு புத்தகம் படித்து, அது பற்றிய தங்களது வாசிப்பு அனுபவத்தைப்பற்றி பேசவேண்டும், அல்லது எழுதவேண்டும் " இப்படி ஒரு தீர்மானத்தை யாராவது முன்மொழிந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஆவனசெய்யவேண்டும் என்ற யோசனை கடந்த சிலநாட்களாக வந்துகொண்டிருக்கிறது. அவ்வாறு வருவதற்கு சில செய்திகளும்  காரணம்தான்.இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்து, தேசத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் ஆபத்து எதிர்நோக்கப்படுவதனால், தற்போதைய நல்லாட்சி அரசு, போதைவஸ்து கடத்தல் முதலான சட்டவிரோத செயல்களில் கைதுசெய்யப்படுபவர்களுக்கு அதியுயர் தண்டனையாக மரணதண்டனை விதிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பது முதலாவது செய்தி!     (மேலும்) 02.08.18

._______________________________________________________________________

மாகாண சபையை நடத்த வலுவற்ற முதல்வர் வடக்கில் வன்முறையை எப்படி அடக்குவார்?

கேள்வி எழுப்புகிறார் தவராசா

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் பthavarasa (1)ோவேன் என்றானாம்' என்றொரு பழமொழி உண்டு. கடந்த நான்கு வருடங்கள் ஒன்பது மாதங்களாக மாகாண சபையின் நிறைவேற்று செயற்பாடுகளை வினைத்திறனற்றனவாகவும் அதன் உச்சக் கட்டமாக இன்று அதன் அமைச்சரவையின் செயற்பாடுகளைக் கூட நிறுத்தி வைக்கும் அளவிற்கு மிகவும் கெட்டித்தனமாகவும் செயற்பட்ட முதலமைச்சர் நிச்சயமாக வன்முறையை அடக்கும் விடயத்திலும் அவ்வாறுதான் செயற்படுவார்.2016 இறுதிப் பகுதியில் அரச அதிபரினால் முச்சக்கரவண்டிகளிற்கு தூரக்கணிப்பான் பொருத்தப்படல் வேண்டும் என்ற ஒழுங்கு விதி முறையைக் கொண்டு வரவிருந்தவேளையிலே போக்குவரத்து தொடர்பான விடயங்கள் மாகாண சபையின் அதிகாரவரம்பிற்குள் உட்பட்ட விடயமாதலினால் அவ் விடயப்பரப்பு தொடர்பான விடயங்களில் அரச அதிபரைத் தலையிட வேண்டாம் என்று கடிதம் எழுதப்பட்டதன் நிமித்தம் அரச அதிபர் அம் முயற்சியைக் கைவிட்டார். கொழும்பில் ரூ.50.00 இற்குச் செல்ல வேண்டிய தூரத்திற்கு யாழில் முச்சக்கர வண்டியில் செல்வதானால் ரூ.250.00 வரை செலுத்த வேண்டியுள்ளது. ஒரு வர்த்தமானிப் பிரசுரத்தின் மூலம் ஓர் இரவில் செய்யக் கூடிய இவ் வேலையை இரண்டு வருடங்களாகச் செய்யத் தெரியாமலிருக்கும் முதலமைச்சர் இரு மாதங்களில் வன்முறையை அடக்குவார் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும்.   (மேலும்) 02.08.18

._______________________________________________________________________

இயக்கச்சியில் உப பிரதேச செயலக வளாகத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இயக்கச்சியில் ஆயுர்வேத நிலையம், நூலகம், உப பிரதேiyakachchiச சபை ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் சமூக ஆர்வலர் ச.விக்கினேஸ்வரனால் இன்று நாட்டி வைக்கப்பட்டது.   எங்கள் பாட்டனார் சிதம்பரப்பிள்ளை சங்கரப்பிள்ளை அவர்களின் விருப்பத்துக்கிணங்க, இந்த வளாகத்தில் மக்களுக்கான சேவை சிறப்பாக நடைபெற வேண்டும் என எண்பது லட்சம் ரூபாய் பெறுமதியான காணியை பிரதேச சபைக்கு எமது குடும்பத்தினர் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். இயக்கச்சியில் ஏ9 வீதியோரத்தில் இந்தக் காணி அமைந்துள்ளது.  இந்தக் காணியில் முன்பு முள்ளிப்பற்று கிராம சபை (vilage council) இயங்கி வந்தது. அப்பொழுது இன்றைய வடமராட்சி கிழக்குப் பகுதியான செம்பியன்பற்று, மருதங்கேணி, தாளையடி, ஆழியவளை, உடுத்துறை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, கேவில், வண்ணாங்குளம், சுண்டிக்குளம், புல்லாவெளி, முள்ளியான், பெரிய பச்சிலைப்பள்ளி உள்ளிட்ட பிரதேசங்களோடு இயக்கச்சி, முகாவில், சங்கத்தார் வயல், கொற்றாண்டார் குளம், கோயில்வயல் ஆகிய பிரதேசங்களும் இந்தக் கிராமசபையின் நிர்வாகத்தின் கீழ் இருந்தன.    (மேலும்) 02.08.18

._______________________________________________________________________

1000 CC இற்கு குறைவான வாகனங்களுக்கான வரி அதிகரிப்பு

1000 சிசி எஞ்சின் அளவை விட குறைவான வாகனங்களுக்குறிய தயாரிப்பு வரி ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி முதல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி அவ்வகையான வாகனங்களுக்கான தயாரிப்பு வரி 15 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் 1000 சிசி எஞ்சின் அளவை விட குறைவான மின் சக்தியிலும் இயங்கக் கூடிய ஹைப்ரிட் வகை வாகனங்களின் தயாரிப்பு வரி 1,250,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும் 2018 ஆகஸ்ட் மாதம் 01ம் திகதிக்கு முன்னர் கடன் பத்திரம் (LC) ஆரம்பிக்கப்பட்டு 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அனுமதிபெற்ற வாகனங்களுக்கு இந்த வரி ஏற்புடையதாகாது.இந்த காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்படும் வாகனம் முன்பிருந்த எஞ்சின் வலுவின் அடிப்படையிலான தயாரிப்பு வரிக்கு உற்பட்டதாக இருக்கும் .

._______________________________________________________________________

வாழ்வாதாரத்தை அழிக்கும் புதிய  சந்தைக் கட்டடத் தொகுதி வேண்டாம் - சந்தை வர்த்தகர்கள்

 தங்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் புதிய  மூன்று மாடி சந்தைக் கட்டடத் தpublic market 01ொகுதி தேவையில்லை என்றும் மாறாக வர்த்தகர்களுக்கு ஏற்ற வகையில் கனகபுரம் மற்றும் ஏ9 பிரதான வீதியை நோக்கியபடி புதிய கட்டடத்தை அமைத்து தருமாறும் கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று 01-08-2018 கிளிநொச்சி பொதுச் சந்தையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில் நாட்டின் பல இடங்களில் மாடி சந்தைக் கட்டடத் தொகுதிகள்  வெற்றியளிக்கவில்லை முக்கியமாக சனத் தொகை அதிகளவு கொண்ட யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் தென்னிலங்கையில் பல மாவட்டங்களில் மாடி சந்தைக் கட்டடங்கள்   வெற்றியளிக்காத நிலையில் குறைந்தளவு சனத்தொகையை கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் சந்தைக் கட்டடத்தை மூன்று மாடியில் அமைப்பது  வர்த்தகர்களாகிய  எங்களை அழிவுக்கு கொண்டு செல்லும் ஒரு திட்டமே எனவே எமது விருப்பத்திற்கு மாறாக எமக்கான கட்டடத்தை அமைக்க வேண்டாம் என அரசியல் தரப்பினர்கள்,அரச அதிகாரிகள், கரைச்சி பிரதேச சபையினர் ஆகியோரிடம் கேட்டுக்கொள்கின்றோம். எனத் தெரிவித்த  வர்த்தகர்கள்   (மேலும்) 02.08.18

._______________________________________________________________________

போதைப்பொருள் விற்பனை செய்ய சிறைச்சாலை பாதுகாப்பான இடம்

August 1, 2018  06:56 pmபோதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு தங்களது விற்பனையை மேற்கொள்ள சிறைச்சாலை பாதுகாப்பான இடமாக மாறியுள்ளதாக அரச நிருவாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.சில வருடங்களுக்கு முன்னர் போதைப்பொருள் விற்பனையாளர்கள் அரசாங்கத்தில் இருப்பவர்களுடன் தான் தொடர்புகளை வைத்திருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையினை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.கடந்த ஆட்சியின் போது இவ்வாறு கைது செய்யப்படவில்லை எனவும் அவ்வாறு கைது செய்யப்படுபவர்களையும் அரசாங்கத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் காப்பாற்றி விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

மடு தேவாலயம் உள்ளிட்ட பகுதியை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அனுமதி

மடு தேவாலயம் உள்ளிட்ட பகுதியை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.மடுதேவாலயம் கிறிஸ்தவ பக்தர்களின் புனித யாத்திரைக்கும் போன்றே ஏனைய மதத்தவர்களின் கௌரவத்தை பெற்றுள்ள வரலாற்று சிறப்பு மிக்க புனித வழிபாட்டு பூமியாகும்.இந்த மத வழிபாட்டு தளத்தை பாதுகாப்பதற்கும் அங்கு வருகை தரும் மக்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதும் காலத்தின் தேவையாக கருதி மடு தேவாலயம் உள்ளிட்ட பகுதியை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.இந்த பிரதேசத்துக்கு அருகாமையில் போக்குவரத்து மற்றும் வீதி வசதி நீர்ப்பாசன கட்டமைப்பு மற்றும் இயற்கை கழிவறை வசதி ஆகியவற்றை மேற்படுத்துவதற்கும் இந்தப் பிரதேசத்திற்கு வெளியிடங்களிலிருந்து வரும் பொதுமக்களுக்கு தங்குமிடம், ஓய்வு விடுதி வசதிகளை வழங்குவதுடன் மடு தேவாலய பூமி பகுதியில் விசேட அபிவிருத்தி திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

._______________________________________________________________________

தேனுவரவின் பேய்

மூத்த கலைஞரும் மற்றும் போர் விரோத செயற்பாட்டாளருமான சந்திரகுப்த தேனுவரவின் படைப்புகள் கறுப்பு ஜூலை1983 இனால் பெரிதும் செல்வாக்குப் பெற்றிரThenuwaraுந்தன அவரது அடுத்த கண்காட்சியில் நிறைவேற்று ஜனாதிபதி முறையின் தீமைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தவுள்ள அவர், நிழல்களுக்குள் மறைந்திருக்கும் சர்வாதிகாரிகளைப்பற்றி கவலைப்படுகிறார்.  1983 ஜூலைக் கலவரங்கள் போர் விரோதக் கலைஞரான சந்திரகுப்த தேனுவரவின் மனதை உணர்ச்சியற்று கருகிப்போகச் செய்திருந்தன.யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் வைத்து எல்.ரீ.ரீ.ஈ இனால் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு முதல்முறையாக கொழும்புக்கு வந்த 23 வயதான தேனுவர, கும்பல்கள் இனவாத வெறியில் நகரத்தையே சீரழித்திருந்த உண்மையான பயங்கரத்தின் காட்சிகளைச் சந்திக்க நேர்ந்தது. தமிழர்கள் என நம்பப்பட்ட அப்பாவித் தமிழர்களை பேரூந்துகளில் இருந்து வெளியே இழுத்துப்போட்டு கேள்விகள் கேட்டுச் சித்திரவைதை செய்யப்பட்ட அதேவேளை, தமிழர்களின் வியாபார நிலையங்கள் கொள்ளையடிக்கப்படுவதற்கு படைவீரர்கள், காவல்துறை காவலர்கள் ஏன் பௌத்த பிக்குகள் கூட உதவி செய்த காட்சிகள் அவரிடத்தில் ஒரு மாறாத விளைவுகளை விட்டுச் சென்றன. அடிப்படையில் ஸ்ரீலங்காவை மாற்றியமைத்து மூன்று தசாப்தங்கள் காலம் வரை நீடித்த உள்நாட்டு மோதலுக்கு வழிவகுத்து    (மேலும்) 01.08.18

._______________________________________________________________________


ஆர்ஜன்ரீனா ரிகலெக்ரா மயானம்

- நடேசன்

ஆர்ஜனரீனாவில் எனக்குப் பிடித்த இடம் மனிதர்களைப் புதைக்கும் மயானமென்றால் நம்ப முடியுமா?

ரிகலெக்ரா மயானம் -மிகவும் வித்தியாசமானது.

ஆர்ஜனரீனாவின் தலைநகரம். புவனஸ் ஏயர்ஸ் பரண ஆற்றோரத்தில் அமag1ைந்தது. பரண ஆறு அமேசனுக்கு அடுத்த தென்அமரிக்காவின் மிகப்பெரிய ஆறு. அதனது பல கிலோ மீட்டர் அகலமான ஒரு பகுதியில் புவனஸ் ஏயர்ஸ் நகரம் இருக்கிறது. கப்பல்கள் கடலின் வழியே ஆற்றுக்குள் வந்தே புவனஸ் ஏயர்ஸ் துறைமுகத்தை அடையும். இதனால் பிரித்தானியா மற்றும் பிரான்சியக் கடற்படைகள் இந்தப் பகுதியை ஸ்பானியரிடமிருந்து கைப்பற்றப் போர் தொடுத்தன. நாங்கள் பார்த்த மற்றய தென் அமரிக்க நகரங்கள் போலல்லாது புவனஸ் ஏயர்ஸ் ஐரோப்பிய நகரம்போல் இருந்தது. அகலமான வீதிகள் மிகப் பெரிதான அழகான கட்டிடங்கள் எல்லாம் ஸ்பானியத் தலைநகரம் மாட்ரிட்டை நினைவுக்குக்கொண்டு வந்தது. நாங்கள் சென்ற ஹோட்டலும் ஐரோப்பிய ஹோட்டல்கள்போல் அதிக கவனிப்பற்றது. காலை உணவும் உப்புச்சப்பற்ற பேக்கன் சொசேஜ் வகையறாவாக இருந்தது. இதுவரையும் தென்அமரிக்க நாடுகளில் உள்ளதொலைக்காட்சிகளில் குறைந்த பட்சம் ஆங்கிலத்தில் சி என் என் இருந்தபடியால் அமரிக்கத் தேர்தலை பற்றிய விபரங்கள், விவாதங்களை மற்றும் உலக அரசியல் விபரங்களை அறிய முடிந்தது.   (மேலும்) 01.08.18

._______________________________________________________________________

 இலங்கையில் சட்டத்தை துச்சமெனக் கருதி செயற்படுவதும் காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுக்களும்

1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அரசகரும மொழிச் சட்டம் தமிழர்களின் மொழியுரிமையை மீறியதுடன் அவர்களின் ஏனைய உரிமைகளின் மீறல்கள் ஆரம்பமாகின. இதன்பினmissing2018் தொடர் விளைவாக 1958, 1977, 1983 முதலிய ஆண்டுகளில் தமிழருக்கு எதிரான வன்முறைகளும், 2008 – 2009இல் கோர சம்பவங்களும் நடைபெற்றன. இதனோடு தொடர்புபட்ட சட்டத்தை துச்சமாக கருதி செயற்படும் சம்பவங்களும் ஆட்கள் கடத்தப்பட்டு காணாமல் போகும் நிகழ்வுகள் தொடர்பிலான விடயங்களை விளங்கிக்கொள்ள 1971ஆம் ஆண்டு சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியை உற்று நோக்குதல் வேண்டும். அக்கிளர்ச்சியின் போது பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் கிளிர்ச்சியில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த கொடூர முயற்சிகளை எடுத்திருந்தனர். அச்சமயம் சிங்கள இளைஞர்கள் 65,000 பேர் அளவில் மாண்டனர். அந்தக் காலப்பகுதியே இலங்கையின் இராணுவத்தினரும் பொலிஸாரும் நபர்களுக்கெதிராக கொடூரமான செயல்களில் ஈடுபடும் அனுபவத்தை பெற்றுக்கொடுத்தது மாத்திரமன்றி, தமது இனத்தைச் சேர்ந்தவர்களையே வன்முறை மூலம் அடக்கும் அனுபவத்தையும் பெற்றுக்கொடுத்தது.   (மேலும்) 01.08.18

._______________________________________________________________________

பல்கலைக்கழகங்களில் பகிடி வதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 0 வருட கடூழிய சிறைத்தண்டனை...!

பல்கலைக்கழகங்களில் பகிடி வதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாற நாடளாவிய ரீதியில் அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.1998 ஆம் 20 ஆம் இலக்க சட்டத்திற்கு அமைவாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அவ்வாறு பகிடி வதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.பகிடிவதைக்கு எதிரான இந்த சட்டம் இதுவரை முழுமையாக நடைமுறை படுத்தப்படவில்லை என தெரிவித்த அமைச்சர் இம்முறை முழுமையாக நடைமுறை படுத்தப்படும் என தெரிவித்தார்.அத்துடன் அனைத்து பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

._______________________________________________________________________

நியூசிலாந்தில் உயர் கல்வி - போலி ஆவணங்களை சமர்பித்துள்ள இலங்கை மாணவர்கள்


உயர் கல்விக்காக தங்களது நாட்டிற்கு வருகை தருவதற்கு இலங்கை மாணவர்கள் போலி விபரங்கள் உள்ளடங்கிய விண்ணப்பங்களை சமர்பித்துள்ளதாக நியூசிலாந்தினnewzeeland் குடிவரவுத்துறை காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மும்பை நகரில் உள்ள நியூசிலாந்தின் குடிவரவுத்துறை காரியாலயத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இலங்கையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தின் ஊடாக போலியான தகவல்களை வழங்கி நியூசிலாந்தில் உயர் கல்விக்கான வீசாவை விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2018 ஆம் ஜனவரி மாதம் இந்த விடயம் தெரியவந்த சந்தர்ப்பத்தில் இலங்கை மாணவர்களினால் 88 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருந்ததாகவும் அவற்றில் 83 விண்ணப்பங்கள் போலியனவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இவ்வாறு போலியான தகவல்களை வழங்கி சமர்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.     (மேலும்) 01.08.18

._______________________________________________________________________

தென்கொரியாவில்  வேலைவாய்ப்பை வாங்கித்தருவதாக பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்க வேண்டாம்

- வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

கொரிய வேலைவாய்ப்பை காட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்க வேsouthkorea jobsண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.   தென்கொரியாவில் ஆட்களை இணைத்து கொள்ளும் பணியை இலங்கை வெளிநாட்டு பணியகம் மேற்கொண்டு வருகிறது. இதனால் கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து மோசடிகளை மேற்கொள்வோரிடம் பணத்தை வழங்க வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களிடம் கேட்டுள்ளது.  கொரிய தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பத்தை பெற்றுத்தருவதாக தெரிவித்து பணத்தை சேகரிக்கும் மோசடி காரர்கள் தொடர்பில் தொலை தொடர்பு டிஜிட்டல் அடிப்படை வசதிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   (மேலும்) 01.08.18

._______________________________________________________________________

யாழ்ப்பாண மாநாகர சபையில்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வௌிநடப்பு

யாழ்ப்பாண மாநாகர சபையில் இன்று இடம்பெற்ற அமர்வில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சிறிது நேரத்துக்கு வெளிநடப்பு செய்திருந்தது.கைத்துப்பாக்கி விவகாரம் தொடர்பில் வட மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே அமர்வை புறக்கணித்ததாக கட்சியின் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் தெரிவித்துள்ளார்.பெண்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதானது அநாகரிகமான செயற்பாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான செயற்பாடுகள் சபையில் கண்டிக்கப்பட வேண்டும் என மாநகர சபை அமர்வில் கோரிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, சுமார் 30 நிமிடங்கள் அளவில் சபை அமர்விலிருந்து வெளிநடப்பு செய்ததாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.இதேநேரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் வெளிநடப்பு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

._______________________________________________________________________

ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான வௌிநாட்டு பணத்துடன் இருவர் கைது

சட்ட விரோதமான முறையில் வௌிநாட்டு நாணயங்களை கடத்தி செல்ல முற்பட்ட இரண்டு வௌிநாட்டுப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.51 மற்றும் 57 வயதுடைய இரண்டு ஓமான் நாட்டு பிரஜைகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று காலை 09.40 மணியளவில் டப்ளியூ.வை. 0376 என்ற விமானம் மூலம் மஸ்கட் நோக்கி பயணிக்க முற்படும் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து சுமார் 11 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வௌிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

._______________________________________________________________________

நல்லது நடக்கட்டும்

-    தங்கவேல் மரகதமுத்து

ஒரு சின்ன உதாரணம், கிழக்கு மாகாணத்தில பிள்ளையானும் வடக்cm2கில விக்கினேஸ்வரனும் செய்த வேலைகள் என்ன எண்டு பார்த்தால்.... பிள்ளையான் ஆயிரம் வேலைகளைச் செய்த ஆள். விக்கினேஸ்வரனோ ஆயிரத்தொரு பேச்சுப் பேசிய தலை.   ஆரோ ஒருதர் எழுதிக் காட்டினதைப்போல, ஊருக்குள்ள  வெள்ளம் வந்தால் பிள்ளையான் மண்வெட்டியோட போய் நிண்டு வெள்ளத்தை வெட்டி வடியவைப்பாராம். விக்கினேஸ்வரனோ அரசாங்கம் வெள்ளத்தை ஊருக்குள்ள விட்டதும் போதாதெண்டு அதை வெட்டி வடிய விடுகிறதுக்கு எங்களுக்கு அதிகாரத்தையும் தரேல்ல எண்டு சொல்லுவாராம். இதாலதான் கிழக்கு மாகாணத்தில பிள்ளையானுக்கு மதிப்பேறினது.   ஆயிரம் குற்றம் சொன்னாலும் பிள்ளையான் செய்ததில பாதியைக் கூட யாழ்ப்பாண மாகாணசபைக்காரர் செய்யேல்ல எண்டது மறுக்க முடியாத உண்மையே. ஏனெண்டால் பிள்ளையான் ஒரு போராளியாக இருந்தவர். அதனால சனங்களுக்குள்ள இறங்கி வேலை செய்யிறதுக்கு ஒரு நாளும் பின்னுக்கு நிற்கேல்ல. முன்னுக்கே நிண்டார். அப்பிடி நிண்டதாலதான் பிள்ளையானுக்கு அவ்வளவு மதிப்பு.  பிள்ளையானை விடப் படிச்ச பெருமக்களாக இருந்து கொண்டும் ஒரு பனங்கொட்டையையும் முளைக்கப்போடேல்ல யாழ்ப்பாண மாகாணசபைக்காரர்.ஆனால், கைதடி வெளியால போகேலாத அளவுக்கு மாகாணசபையின்ரை அமளி துமளி தெருவெல்லாம் கேட்கும். எத்தனை பிரகடனங்கள், எத்தனை பிரேரணைகள்.. அப்பப்பா...     (மேலும்) 31.07.18

._______________________________________________________________________

படித்தோம் சொல்கின்றோம்:

அந்த்வான் து செந்த் - எக்சுபெரி  எழுதிய 'குட்டி இளவரசன்' கதை

அற்பாயுளில் காணாமல்போன விமானியின் படைப்பூக்கத்தின் வெளிப்பாடு

நாளை நினைவு தினம்!

                                                                             - முருகபூபதி

                       (   மெல்பன் வாசகர் வட்டத்தில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை  சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை )

பேசும் குழந்தைகளிடம் பெரியவர்கள் அலட்சியமாக இருப்பதற்கு என்Antoine de Saint-Exupéry ன காரணம்? அவர்கள் பேச்சை அவதானித்து,  சரியான -தெளிவான பதில் சொல்லவேண்டிவரும் என்பதனாலா? குழந்தைகளிடம் கேள்விகள் இருந்துகொண்டே இருக்கும். அதற்குச்சரியான பதிலை சொல்வதற்கு பெரியவர்களிடம் சாமர்த்தியம் வேண்டும். நான் சந்தித்த குழந்தைகளின் மழலை மொழியில் சொக்கிப்போயிருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் பதில் சொல்ல முடியாமல் திணறியிருக்கின்றேன்.எமது வாழ்வை எழுதுபவர்களும் தீர்மானிப்பவர்களும் குழந்தைகள்தான். அதனால்தான் மேதை லெனின் கூட நல்லவை யாவும் குழந்தைகளுக்கே என்று சொன்னார். நாமும் ஒரு பருவத்தில் குழந்தைகளாக இருந்து வளர்ந்தவர்கள்தான். ஆனால்,  அதனை பலரும் மறந்துவிடுகிறார்கள்! தனிமையிலிருப்பவர்களை சிந்திக்கவைப்பவர்களும் சிரிக்கவைப்பவர்களும் குழந்தைகள்தான் என்பது எனது அவதான அனுமானம். எமக்குள் நாம் கேட்டுக்கொள்ளவேண்டிய பல கேள்விகளை வாழ்நாளில் கேளாமலேயே உலக வாழ்விலிருந்து விடுபட்டுவிடுகிறோம்.         (மேலும்) 31.07.18

._______________________________________________________________________

யாழில் ஆறு வன்முறை சம்பவங்கள்: தாக்குதல் சம்பவம் தொடர்பில் நான்கு பேர்  கைது


யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரையிலான 24 மணி நேரத்துக்குள், ஆறு வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.Jaffna Police    யாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை வட-கிழக்கு கிராம அலுவலர் அடையாளம் தெரியாத குழு ஒன்றினால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  வாள் மற்றும் கம்பிகளுடன் 4 உந்துருளிகளில் அவரது அலுவலகத்துக்குப் பிரவேசித்த எட்டு பேர் கொண்ட குழு ஒன்று அவரை அச்சுறுத்தியதுடன், அவரது முச்சரக்கரவண்டி, மடிகணினி, கைப்பேசி உள்ளிட்ட உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளது.   இன்று நண்பகல் 12.20 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட கிராம அலுவலகரான பி.ஆர்.ஜேசுதாசன் சம்பவம் தொடர்பில் ஊடகங்களிடம் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். இதேவேளை, கொக்குவில் பகுதியிலும், எட்டு பேர் கொண்ட குழு ஒன்று வீடொன்றின் மீது இன்று பிற்பகல் 1 மணி அளவில் தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.     (மேலும்) 31.07.18

._______________________________________________________________________

தேர்தலை நடத்தாது தந்திரமான செயல்களில் அரசு ஈடுபடுவதாக குற்றச்சாட்டு


இன்னும் 2 மாதங்கள் சென்ற பின்னர் 9 மாகாண சபைகளில் 6 சபைகளின் ஆயுட் காலம் நிறைவடைவதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தேர்தல் திணைக்களமும் அதன் பொறுப்புகளை புறக்கணித்து வருவதாகவும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.  கொழும்பில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார். மாகாண சபை தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் வினவிய போது, தன்னால் எதனையும் செய்ய முடியாது எனவும் பாராளுமன்றத்தினால் மட்டுமே இதற்கான தீர்வு ஒன்றை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தேர்தல் திணைக்கள தலைவருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.மேலும் அரசு தேர்தலை நடத்தாது ஒத்தி வைத்து, தந்திரமான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

._______________________________________________________________________

இமெயிலைக்’ கண்டுபிடித்த தமிழர் மீது அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்: உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது

மசாசூட்ஸ் டவுன்ஹால் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சிவா அய்யாதுரை   -  படம் உதவி: ட்விட்டர்
ayyadurai
இமெயிலைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்திய இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிப்பவரும், தமிழருமான சிவா அய்யாதுரை மீது இனிவெறியுடன் அமெரிக்கர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.   அமெரிக்கவாழ் இந்தியரான சிவா அய்யாதுரையின் பூர்வீகம் தமிழகத்தில் சிவகாசியாகும். சிறு வயதில் இருந்த அமெரிக்காவில் அய்யாதுரை வளர்ந்து வருகிறார். அறிவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பு வாய்ந்தவராக அய்யாதுரை விளங்கி வருகிறார்.   நாம் பயன்படுத்தும் இமெயிலை கண்டுபிடித்து, உலகிற்கு அறிமுகம் செய்தவர் அய்யாதுரை என்பது குறிப்பிடத்தக்கது.    (மேலும்) 31.07.18

._______________________________________________________________________

20.28 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த இருவருக்கு மரணத்தண்டனை

20.28 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு குறித்த சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய போது கைது செய்யப்பட்டிருந்தனர்.   இவர்கள் மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.   காவற்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் மீது நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.   அந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க அவர்களுக்கு இன்று மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

._______________________________________________________________________

விபத்தில் மாணவன் ஒருவன் பலி - 11 மாணவர்களின் நிலை கவலைக்கிடம்

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 11 மாணவர்கள் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான யாழ்ப்பாணம் கொழும்பு பேருந்தும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் முச்சக்கர வண்டியினுல், 12 மாணவர்கள் பயணித்ததாகவும், முச்சக்கர வண்டி ஓட்டுனருடன் 13 பேர் இருந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

._______________________________________________________________________

வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது

13 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்களை எடுத்துச் செல்ல முற்பட்ட பெண் ஒருவர் உட்பட மூவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விமான நிலையத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் சேவை செய்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரதி பணிப்பாளர் விபுல மினுவம்பிட்டிய தெரிவித்துள்ளார்.  சந்தேக நபர்களிடம் இருந்து குவைட் தீனார், ஸ்ரோலிங் பவுன், ஜப்பான் யென், யூரோ, கட்டார் ரியால், பஹ்ரேன் தீனார் உட்பட ஒருதொகை வெளிநாட்டு நாணயத் தாள்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் சந்தேக நபர்களிடம் இருந்து முப்பதாயிரம் ரூபாய் பெறுமதியான 30 மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை அரசுடமையாக்கி உள்ளதுடன் சந்தேக நபர்களுக்கு தண்டப் பணமும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

._______________________________________________________________________

வடக்கும் கிழக்கும்   இணைப்பு சாத்தியப்படுமா

 -    கருணாகரன்

வடக்குக் கிழக்கின் பிரச்சினைகள் என்ன? ஈழத்தமிழர்களுடைய பொதுப் பிரச்சினைகள் என்ன? விசேட பிரச்சினைகள் என்ன?northeast   ஏன் இந்தக் கேள்வி என்றால், 1970 கள் வரையில் “தமிழ் பேசும் மக்கள்”  என்ற வகையிலேயே அரசியல் உள்ளிட்ட அனைத்துவிடயங்களும் பேசப்பட்டன. அவ்வாறே நோக்கவும் பட்டது. இதில் முஸ்லிம் மக்களும் ஓரளவுக்கு மலையக மக்களும் உள்ளடங்கியிருந்தனர்.   இலங்கை அரசின் ஒடுக்குமுறையை எதிர்கொள்வதில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுசேர்ந்து நின்றன. சில சந்தர்ப்பங்களில் மலையகத்தமிழர்களும் சேர்ந்து நின்றதுண்டு. 1980 களுக்குப் பிறகு தமிழ்த்தேசியம் தீவிர நிலைப்பட்டதோடு முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உள்ளிட்ட அனைத்துப்பிரச்சினைகளும் தனியாகவும் தமிழர்களுடைய விடயங்கள் தனியாகவும் மாறின.  1990 இல் முற்று முழுதாகவே இரண்டு சமூகத்தின் அரசியல் அடிப்படைகளும் நோக்குகளும் அணுகுமுறைகளும் வேறாகின. மட்டுமல்ல எதிர்நிலையையும் அடைந்திருந்தன. இரண்டு சமூகங்களுக்கும் சமூக நிலைப்பட்ட கட்சிகளும் தலைமைகளும் உருவாகின.      (மேலும்) 30.07.18

._______________________________________________________________________


தற்கொலைகளைத் தடுப்பது தொடர்பாக கலந்துரையாடல்

இலங்கையில் வருடம் ஒன்றுக்கு சுமார் 4,000 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.


தற்கொலைகளைத் தடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, புத்திஜீவிகள் சபையின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.suicide2#   "தற்கொலை தடுப்பு சர்வதேச தினம்", அடுத்த மாதம் 10ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு இந்தக் கலந்துரையாடல், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், எதிர்வரும் புதன்கிழமை (01) நடைபெறவுள்ளது. இலங்கை சுமித்ரயோ நிறுவனம், இதனை ஏற்பாடு செய்துள்ளது. தற்காலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, தமது அமைப்பு, திறந்த சித்திரப் போட்டி ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளதென, அந்த அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.   தற்கொலையைத் தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே, சித்திரப் போட்டியின் தொனிப்பொருளாகும். மன உளைச்சல், மனநோய் ஆகியன, தற்கொலைக்கு முக்கிய காரணமாகும் என அந்த அமைப்புத் தெரிவிக்கின்றது. தற்கொலை முயற்சியைத் தடுப்பது தொடர்பான தகவல்கள் மற்றும் தெளிவை ஏற்படுத்தும் நோக்கில், 2003ஆம் ஆண்டில், தற்கொலையை தடுக்கும் சர்வதேச தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.    (மேலும்) 30.07.18

._______________________________________________________________________

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள் வரிசையில் --

கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்  

புதிய கலை, இலக்கிய, ஊடகத்துறை மாணவர் பரம்பரையை உருவாக்க வேண்டியவர்! 

                                                    முருகபூபதி

பல்கலைக்கழகங்களில் பயின்று பட்டங்கள் பெற்று, பின்னர் பல்கலைக்கழகங்களிலேயே தொழில் வாய்ப்பு பெற்று மாணவர்களுக்கு விரிவுரையாற்றிவரும் எழுத்தாளர்கள் பலரammankiki mை நன்கறிவேன். அவர்களில் பலர் கலை, இலக்கியவாதிகளாகவும் விமர்சகர்களாகவும் திறனாய்வாளர்களாகவும் திகழ்கின்றனர். அவ்வாறு நான் அறிந்த ஒருவர்தான் (கலாநிதி) அம்மன்கிளி  முருகதாஸ். 1983 தொடக்கத்தில் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டு விழாக்களை நாடுதழுவிய ரீதியில் கொண்டாடிய வேளையில் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் எம்மிடம் அம்மன்கிளி பற்றி குறிப்பிட்டார்.   ராஜம் கிருஷ்ணனின் படைப்புகளை ஆய்வு செய்திருக்கும் அம்மன்கிளி முருகதாஸ் அவர்களை முதல் முதலில் 2005 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தில்தான் சந்தித்தேன்.அச்சமயம் அவர் அங்கு தமிழ்த்துறையில் விரிவுரையாளராக பணியிலிருந்தார். யாழ்ப்பாணம்  பல்கலைக்கழகத்தில் தமிழை சிறப்புப்பாடமாகப்பயின்று தனது இளங்கலை, முதுகலை கலாநிதிப்பட்டங்களை பெற்றவர். இவரது பல்கலைக்கழக ஆசான்கள் இவரை இலக்கிய திறனாய்வாளராக்கி பெருமை பெற்றவர்கள்.  (மேலும்) 30.07.18

._______________________________________________________________________

மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி தீர்மானிப்பது பொருத்தமானது என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.வெல்லவாய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் குற்றவாளிகளுக்கு இவ்வாறான தண்டனை வழங்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அரசாங்கம் சரியான முறையில் அணி வகுத்தால், பொதுமக்களும் சரியான வழியில் அண

._______________________________________________________________________

 முல்லைத்தீவில் 600 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு

முல்லைத்தீவு – கல்விலாங்குளத்தில் நீரின்மையால் 600 ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்திவு மாவட்டத்தில் – துணுக்காய் – கல்விலாங்குளம் நீர் வற்றியுள்ளமையால் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.கல்விலாங்குளத்தின் நீர்தேக்கம் குறைவடைந்தமையால் கடந்த இருவருடங்களாக மேற்கொள்ளப்பட்ட சிறுபோக நெற்செய்கை முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.  கல்விலாங்குளத்தில் தற்போது கால்நடைகள் குடிப்பதற்கு மாத்திரம் நீர் காணப்படுகின்றது. கடந்த சில வருடங்காளாக மழை வீழ்ச்சி குறைவடைந்தமையால் குளத்திற்கான நீர் வருகை குறைவடைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.கல்விளாங்குளத்து நீரினை நம்பி சுமார் 600 ஏக்கர் சிறுபோக நெற்செய்கைமூன்று வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.ி வகுப்பார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

 மஹிந்த கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் மரத்திலேறி ஆர்ப்பாட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாக்குறுதியளித்தமைக்கு அமைய, நேற்று  (28) எம்பிலிப்பிட்டிய நாகவிகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  நிகழ்வுக்கு பங்கேற்காமையால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த இருவர் வேப்ப மரமொன்றில் ஏறி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமையால் குறித்த சமய நிகழ்வானது பிற்போடப்பட்டுள்ளது.எனினும் இவர்களின் அழைப்பையேற்று நிகழ்வுக்கு வருகைத் தந்த  முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ மஹிந்தவுக்கு ஏற்பட்டுள்ள முதுகு வலி காரணமாகவே இந்த நிகழ்வுக்கு வருகைத் தரமுடியவில்லை என்று கூறியுள்ளதுடன், நிகழ்வு பிற்போடப்பட்டதால் திரும்பிச் சென்றுள்ளார்.அத்துடன் குறித்த நிகழ்வை மற்றொரு நா​ள் ஏற்பாடு செய்யுமாறு இதனை ஏற்பாடு செய்தவர்களிடம் சப்ரகமுவ மாகாண சபையின் தவிசாளர் கஞ்சன ஆரியதாச மற்றும் எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளர் சுரந்த வீரசிங்க ஆகியோர் தெரிவித்த போது, மீண்டும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ய தம்மிடம் நிதி இல்லையென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தமது சொந்த நிதியில் உற்சவத்தை நடத்தி மஹிந்தவை அதற்கு வரவழைப்பதாக கஞ்சன ஆரியதாச மற்றும் சுரந்த வீரசிங்க வாக்குறுதியளித்துள்ள நிலையில், மரத்தில் ஏறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையை கைவிட்டு கீழே இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

._______________________________________________________________________

நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 11

கிராண்ட்பாஸ்  கலைஞர்களும் மஞ்சள் குங்குமம் திரைப்படமும்

                                                                          ரஸஞானி

களனி கங்கைக்கு சமீபமாக இருக்கும் கிராண்ட்பாஸ் பிரதேசம் மூவின மக்களும் செறிந்துவாழும் இடம் என்று முன்னைய அங்கத்தில் தெரிவித்திருந்தோம்.அயல்நாடான இந்kingsly1தியாவிலிருந்து விஸா கெடுபிடிகள் இன்றி எவரும் வந்துசெல்லக்கூடிய ஒரு பொற்காலம் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர்  இருந்தது.பிரிட்டிஷாரால் இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட தமிழ் மக்கள், மலையகத்தை செப்பனிட்டு தேயிலை, இரப்பர், கொக்கோ பயிரிடுவதற்கு பயன்படுத்தப்பட்டனர். இந்தியாவின் தென்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர், மலையாளிகள் வேலைவாய்ப்புத்தேடி கடல் மார்க்கமாக இலங்கை வந்து தலைமன்னாரிலிருந்து தலைநகரத்தில் வந்து குவிந்தனர். அதேபோன்று வட இந்தியாவிலிருந்து  இஸ்லாமியரும், அவர்களது மதத்தை பின்பற்றும் பாய் சமூகத்தினரும் வரத்தொடங்கினர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு முதலில் புகலிடம் வழங்கிய பிரதேசம் களனி கங்கை தீரம்தான். கிராண்ட்பாஸில் தொடங்கப்பட்ட வீரகேசரி நிறுவனத்தில் பல இந்தியத்  தமிழர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.      (மேலும்) 29.07.18

._______________________________________________________________________

யாழ்ப்பாணத்தில் சுமார் 14,000 இராணுவத்தினரே நிலை கொண்டிருக்கின்றனர்.

 

யாழ்ப்பாணத்தில் சுமார் 14,000 இராணுவத்தினரே நிலைகொண்டிருப்பதாக யாழ். பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளsl jaffnaார்.   யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர் நிலைகொண்டிருப்பதாக அரசியல்வாதிகளால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்ற நிலையில், அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “யாழ். குடாநாட்டில் தற்போது, 51, 52, 55 என மூன்று பிரிவுகள் நிலை கொண்டுள்ளன. மொத்தமாக 14,000 படையினர் தற்போது எனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர். இந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் பாதுகாப்புப் பணிகளையுத் தாண்டி அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றனர்.  "அவர்கள் அவசர தீயணைப்புப் பணிகள், கோயில் உற்சவங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் ஏற்பாடுகளை மேற்கொள்ளல், சிரமதான பணிகளை மேற்கொள்ளுதல், வீடுகளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.    (மேலும்) 29.07.18

._______________________________________________________________________

யாழில் ரயிலுடன் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அதிவேக புகையyarl accidentிரதத்துடன், மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணம் நெளுக்குளம் புகையிரத கடவையில் இன்று (28) நண்பகல் 12.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில், அரியாலை பூம்புகார் மற்றும் மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த மூவரில், கந்தசாமி சந்திரகுமார் (வயது 29) மற்றும் இராஜகோபால் கிரிசாந் (வயது 27) ஆகிய இருவருமே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.  மற்றைய இளைஞர் சீக்கியன் சஞ்சீவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மணியம்தோட்டம் பகுதியில் இருந்து நெளுக்குளம் வீதியை நோக்கி, தலைக்கவசம் அணியாது, ஒரு மோட்டார் சைக்கிளில் மூவரும் பயணித்துள்ளனர்.   (மேலும்) 29.07.18

._______________________________________________________________________

29..07.20018 கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களின் 19ஆவது ஆண்டு நினைவு

கொழும்பில் 1999 ஜுலை 29ஆந்திகதி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட கலாநிதி நீலன். திருச்செலல்வம் அவர்களின் 19ஆவது ஆண்டு நினைவு யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைக் காரியாலயத்தில் மாலை 5.00 மணியளவில் நடைபெறும்.

._______________________________________________________________________

முஸ்லிம் காங்கிரஸ் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுக்கான இருநாள் வதிவிட செயலமர்வு

சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை, சமயம் சார்ந்து பார்க்காமல் அவை நாட்டின் தேசிய நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடு என்பதைSLMC-280718 பெரும்பான்மையின மக்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் எமது அரசியல் செயற்பாடுகள் அமையவேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தெரிவான உறுப்பினர்களுக்கான இருநாள் வதிவிட செயலமர்வு இன்று (28) மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதய பயற்சி நிலையத்தில் நடைபெற்றது. இச்செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.   அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது,   முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை வெறும் முஸ்லிம் பிரச்சினைகளாக மாத்திரம் பார்க்காமல் நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகமான விடயம், தேசிய நலனுக்கு முரணான விடயம் என்பதைக் காட்டுகின்ற அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் செய்யவேண்டும்.   (மேலும்) 29.07.18

._______________________________________________________________________

அரசாங்கம் தேர்தலை நடத்தும் என்பதில் நம்பிக்கையில்லை

தேர்தல் தொடர்பில் அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தும் என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என்று அவர் கூறியுள்ளார்.தேர்தல் என்று கூறிய உடனே இந்த அரசாங்கம் நடுங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதேநேரம் தேர்தல் இடம்பெற்றால் மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

._______________________________________________________________________

 விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் 50 பேரிடம் வாக்குமூலம்

தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் எனvihayakala முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் பெறப்பட்ட வாக்குமூலங்கள் அரசகரும மொழிகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக திட்டமிடப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் 50 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.வாக்குமூலம் பெறப்பட்ட 50 பேரில் 30பேர் தமிழ் மொழியில் வாக்குமூலம் வழங்கியுள்ளமையினால், அவர்களது வாக்குமூலம், மொழிபெயர்ப்பிற்காக அரசகரும மொழிகள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட உள்ளது. இதன்படி, வாக்குமூலங்களின் அனைத்து உள்ளடக்கங்களையும்  எதிர்வரும் 2 வாரங்களுக்குள் சட்டமா அதிபரிடம் கையளிக்க இரண்டு வாரகால அவகாசம் எடுக்கும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். வாக்குமூலம் பெறப்பட்டவர்களில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அமைச்சர் வஜிர அபேவர்தன, நாடாமன்மன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

சிறைச்சாலை புலனாய்வு பிரிவை கலைக்க காரணம்

சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறும் போது அங்கு புலனாய்வு பிரிவொன்றை நடத்திச் செல்வதில் அவசியம் இல்லை என்று நீதியமைச்சர் தலதா அத்துகோரல கூறியுள்ளார்.சிறைச்சாலை புலனாய்வு பிரிவை உடனடியாக கலைக்குமாறு அண்மையில் வௌியிட்ட உத்தரவு சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இது சம்பந்தமாக தனக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்ததாகவும், புலனாய்வு பிரிவுகள் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் கூறினார்.அடுத்தகட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக இதுவரை தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

._______________________________________________________________________

இளம் தம்பதியினர் பிணையில் விடுதலை

சுங்க திணைக்கள அதிகாரிகள் 5 பேரை கட்டுநாயக விமானநிலையத்தில் வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குவைட் நாட்டில் இருந்து வருகைத்தந்த வெளிநாட்டவர்கள் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.நீர்கொழும்பு பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையே அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணையில் செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.நேற்று இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

._______________________________________________________________________

 ’ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கவேண்டும்’

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, ஜனாதிபதி​ மைத்திரிபால சிறிசேனவால் பதவிவிலக்க முடியுமென, அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட அணி தெரிவித்துள்ளது.
சிங்கள மொழியிலுள்ள அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில், பிரதமரைப் பதவி விலக்குவதற்கான அதிகாரம், ஜனாதிபதியிடம் காணப்படுவதாகவும் அந்த அணி சுட்டிக்காட்டியது.அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை பயன்படுத்தி, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கவேண்டுமென, அவ்வணி வலியுறுத்துகின்றது.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர், டிலான் பெரேராவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

ஈ.பி.ஆர். எல். எவ் (சுரேஸ் பிரேமச்சந்திரன்) முன்னுள்ள  வாய்ப்புகளும் சவால்களும்

-          கருணாகரன்

“சுரேஸ் பிரேமச்சந்திரனின் அல்லது ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் எதிர்காலம் என்ன?” என்று கேட்கிறார்கள் சிலர். இதில் ஒரு சாரார் முன்னொரு காலம் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் உறுப்naba eprlfபினர்களாக இருந்தவர்கள். இதிலும் சிலர் தற்போதும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வோடு – சுரேஸ் பிரேமச்சந்திரனோடு தொடர்பில் உள்ளவர்கள். இந்தக் கேள்வி ஒன்றும் புதியதல்ல. இவர்களுக்குள்ளே நீண்ட காலம் கொதித்துக் கொண்டிருந்த கேள்வியே. நேற்று முன்தினம் சுரேஸ் பிரேமச்சந்திரனின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு தொடர்பாக நான் எழுதியிருந்த கட்டுரையைத் தொடர்ந்து நேரடியாகவே மேற்படி கேள்வியைக் கேட்கிறார்கள். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது அல்லது இதற்கு என் தரப்பில் என்ன பதில் என்று அறிவதற்காக இந்தக் கேள்வி.  இந்தக் கேள்விக்கு இரண்டு விதமான பதில்கள் உண்டு. ஒன்று நேரடியானது. இதன்படி தயவு தாட்சண்யமில்லாமல் கட்சி தன்னுடைய சுய சிந்தனைக்கு, சுயத்துக்கு மாற வேண்டும். அதாவது வெளியே இருக்கும் அலைகளில் இழுபடாமல், தனது அலையை உருவாக்கும் விதமாக.    (மேலும்) 28.07.18

._______________________________________________________________________

"வட மாகாண தேர்தலை முதலில் நடத்துவதா? என்பதனை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும்"


ஜயம்பதியும், சுமந்திரனும் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து செல்வது உண்மையாகும். பிரதமரினதும், வழிநடத்தல் குழுவினதும் ஆலோசனைகளின் அடிப்படNPC-1ையிலேயே அவ்விருவரும் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதில் தவறுகள் ஏதும் இல்லை" என பாராளுமன்ற சபை முதல்வரும் அரச தொழில் முயற்சி அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.  புதிய அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயம்பதி விக்ரமரத்ன எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வினவிய போதே அவர் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் குறிப்பிடுகையில், புதிய அரசியலமைப்பினை ஜயம்பதி விக்கிரமரத்ன, எம்.ஏ சுமந்திரன் மாத்திரம் நிறைவேற்ற போவதில்லை. புதிய அரசியலமைப்பொன்று வருமானால் அதனை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். அதன்பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும்.       (மேலும்) 28.07.18

._______________________________________________________________________

பேராதெனிய பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களுக்கும் காலவரையின்றி பூட்டு

பேராதெனிய பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களும் மீள அறிவிக்கும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது. நிர்வாக பிரச்சினைகள் சிலவற்றின் காரணமாகவே இவ்வாறு அனைத்து பீடங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் மாலை 6 மணிக்கு முன்னர் மாணவர்களை பல்கலைகழக வாளகத்தில் இருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

Assi Invitation

._______________________________________________________________________

அம்மம்மாவின் காதல் (சிறுகதை)

                                                  முருகபூபதி

இருபது வயதைக்கடக்கும் வேளையில்தானாக்கும் குழந்தைப்பருவம் நினைவுக்கு வருகிறது. அதற்காக மீண்டும் குழந்தையாக முடியாது. அந்த நினைவுகள் மனதில் சஞ்ammaappaசரிக்கும் தருணங்களில்  லதாவுக்கு சகலதுமாக நிறைந்திருந்தது அம்மம்மாதான். அவளுக்கு அறிவுதெரிந்த நாள் முதல் எதற்கும் அம்மம்மாதான். லதாவுக்கு என்ன பிடிக்கும்? எது பிடிக்காது? எது அலர்ஜி? எதற்குப்பயப்படுவாள்? எந்த உடையை விரும்புவாள்? எந்த  நிறம் விருப்பம்? எங்குசெல்வதற்கு ஆசை? இவ்வாறு சகலதையையும் லதாவுக்கு பார்த்துப்பார்த்துச் செய்ததே அம்மம்மாதான். அப்படியாயின் லதாவுக்கு அம்மா, அப்பா இல்லையா? என்ற கேள்வி வருகிறதா?மலைபோல அருகிலேயே இருக்கிறார்கள். கணவனும் மனைவியுமாகவும் அவுஸ்திரேலியாவுக்கு வந்து லதாவை பெற்றதுமுதல் ஒரே வீட்டில்தான் கூடவே இருக்கிறார்கள்.       (மேலும்) 28.07.18

._______________________________________________________________________

கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை:

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.karunanithi    இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து, கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்துச் செல்கின்றனர். திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக் குறைபாடு என்று ஊடகங்களின் மூலம் தகவல் அறிந்து ஏராளமான திமுக தொண்டர்கள் சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை தர ஆரம்பித்தனர். இதனால், கோபாலபுரம் இல்லம் முன்பு கூட்டம் அதிகமாகி வருகிறது.  கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், கருணாநிதியின் உடல் நலம் அறிய வருகை தரும் அரசியல் கட்சித்  தலைவர்களின் வருகையை முன்னிட்டும் அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.   (மேலும்) 28.07.18

._______________________________________________________________________

 குவைத் நாட்டு தம்பதிகள் தாக்கியதில், - 5 சுங்க அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதி

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளை குவைத் நாட்டு தம்பதிகள் தாக்கியதில், 5 சுங்க அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமது செல்லப் பிராணியான நாய் குட்டி ஒன்றை நாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்த போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து அது இறுதியில் கைகலப்பில் நிறைவடைந்துள்ளது.  மேலும், இன்று (27) காலை இலங்கைக்கு வருகை தந்த குவைத் நாட்டு தம்பதிகள், இலங்கையின் விலங்கு கட்டுப்பாட்டு ஒழுங்கு முறைக்கு இணங்க எதுவித தயார் நிலையில் வருகை தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த பிரதி பணிப்பாளர், பெண் ஊழியர் உள்ளிட்ட 5 சுங்க அதிகாரிகளும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

மத்தளை விமான நிலைய கட்டுப்பாட்டு பங்கினைப் பெறும் யோசனை முன்வைக்கப்படவில்லை - இந்தியா

மத்தளை விமான நிலையத்தின் கட்டுப்பாட்டுப் பங்கினைப் பெற்றுக் கொள்வதற்கான எந்த யோசனையும், இந்திய விமான சேவைகள் அதிகாரிசபையின் அவதானத்துக்கு உட்படmatalaவில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது. இந்திய பாரதிய ஜனதா கட்சியின் லோக்சபா உறுப்பினர் பூனம் மஹஜன் எழுப்பிய கேள்விக்கு எழுத்துமூலம் பதிலளித்துள்ள பொதுவிமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் ஜெயன்ந் சின்ஹா இதனைத் தெரிவித்துள்ளார்.த டைம்ஸ் ஒப் இந்தியாவில் இந்த செய்தி வெளியாக்கப்பட்டுள்ளது.குறித்த விமான நிலையத்தை விமானசேவைகள் பயிற்சிக் கூடமாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கையை இந்தியா மேற்கொள்வதாக வெளியான செய்தியையும் அவர் மறுத்துள்ளார்.இந்திய விமான சேவைகள் அதிகாரசபையிடம் இருந்து மத்தளை விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து இயக்குவதற்கான யோசனையை கோரி இருப்பதாக இலங்கையின் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 3325 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (26) இரவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் குடிப்போதையில் வாகனம் செலுத்திய குற்றம் உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5808 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

ஜப்பான்: உலகின் மிக வயதானவர் மறைவு

உலகின் மிக வயதான நபர் என்ற கின்னஸ் சாதனை படைத்த ஜப்பானின் சியோ மியாகோ, மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.117 வயதாகும் மியாகோ, கடந்த 1901-ஆம் ஆண்டு மே மாதjapan oldம் 2-ஆம் தேதி பிறந்தவர். தெற்கு ஜப்பானைச் சேர்ந்த நபி தஜிமா தனது 117-ஆவது வயதில் கடந்த ஏப்ரல் மாதம் மறைந்ததைத் தொடர்ந்து, உலகின் மிக வயதான நபர் என்ற பட்டம் மியாகோவுக்கு வழங்கப்பட்டது.  இதுகுறித்து கின்னஸ் உலக சாதனைப் புத்தக வெளியீட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:உலகின் மிக வயதான நபர் என்ற சாதனையை படைத்திருந்த சியோ மியாகோ, கடந்த ஞாயிற்றுக்கிழமை மறைந்தார்.உடல் நிலை குன்றியிருந்த நேரத்திலும் அவர் விடாமல் பேசிக் கொண்டிருந்தார் எனவும், கடைசி வரை பிறரிடம் மிக அன்புடன் நடந்து கொண்டதாகவும் தெரிவித்த அவரது குடும்பத்தினர், மியாகோ ஒரு பெண் தெய்வம் என்று போற்றினர்.உலகின் மிக வயதான ஆண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ள ஜப்பானைச் சேர்ந்த மசாழ்ஸா நொனாகா, கடந்த புதன்கிழமை தனது 113-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

‘கறுப்பு ஜூலை’யிலிருந்து பாடம் படிக்காத தமிழர்களும் சிங்களவர்களும்


எம்.எஸ்.எம். ஐயூப்


இலங்கைச் சமூகம் வரலாற்றிலிருந்து பாடம் படிக்காத சமூகம் என்பதற்குblackjuly, இந்நாட்டு இனப் பிரச்சினையே சிறந்த உதாரணமாகும்.   பாடம் படிக்காதவர்கள் என, நாட்டின் குறிப்பிட்டதொரு சமூகத்தைக் குறிப்பிட முடியாது. ஏறத்தாழ, சகல இன மக்களும் இந்த நிலையிலேயே தான் இருக்கிறார்கள்.   நேற்று, (ஜூலை 24) இலங்கை வரலாற்றில் கறைபடிந்த ஒரு சம்பவம் இடம் பெற்று, 35 வருடங்கள் பூர்த்தியாகி விட்டன. அது, ‘கறுப்பு ஜூலை’ எனப் பொதுவாக அழைக்கப்படும், 1983 ஆம் ஆண்டு இனக் கலவரமாகும். சுமார் ஒரு வார காலமாக இடம்பெற்ற வன்செயல்க் கொடுமைகளுக்கு, அதன் சூத்திரதாரிகள் மட்டுமன்றி, முழு நாடும் இன்றுவரை விலை கொடுத்து வருகிறது. இனிமேலும் விலை கொடுக்கக் காத்திருக்கிறது. காரணம் வரலாற்றிலிருந்து பாடம் படிக்காமையே ஆகும்.   அன்று இடம்பெற்ற, அந்தக் கொடுமையின் பயங்கரத்தை, போரின் இறுதிக் கட்டத்தில், முள்ளிவாய்க்காலில் சிக்குண்டவர்கள் தவிர்ந்த, தமிழ்ச் சமூகத்தின் இளம் தலைமுறையினர் அறிந்திருக்கவோ, உணரவோ வாய்ப்பில்லை.     (மேலும்) 27.07.18

._______________________________________________________________________

விஜயகலாவின் எல்.ரீ.ரீ.ஈ ஆசை தொடர்பான செயலின்மை

                                                   ராஜீவ ஜயவீர

முன்னாள் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சரும் மற்றும் ஐதேக பvijayakala10ாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் ஜூலை 03ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‘ஜனாதிபதி நில மெகெவர’ கூட்டத்தில் வைத்து வெளிவிவகார அமைச்சர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோரின் முன்னிலையில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருந்தார்.  ஜூலை 05ல் இந்த எழுத்தாளர் “விஜயகலா மற்றும் எல்.ரீ.ரீ.ஈ: அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன” என்கிற தலைப்பில் எழுதிய ஒரு கருத்துக் கட்டுரையில் தற்போதுள்ள சிறிசேன அரசாங்கம் மற்றும் பிரதமர் விக்கிரமசிங்காவின் ஐக்கிய தேசியக் கட்சி என்பனவற்றுக்கு விஜயகலாவின் வலியுறுத்தல்களுக்கான தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டுமென்றும் மற்றும் அவர் குற்றமுள்ளவராகக் கண்டறிந்தால் அதற்காக பொறுப்புக்கூற வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன். ஒரு மூடிய அறைக்குள் பிரதம மந்திரி விக்கிரமசிங்காவுடன் நடத்திய ஒரு சந்திப்புக்குப் பின் விஜயகலா தனது ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.    (மேலும்) 27.07.18

._______________________________________________________________________

இரணைமடு குளத்தின் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டார் ஆளுநர் குரே

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அபிவிருத்திப் பணிகளை வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று(26) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.governor1   ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2190.39 நிதி ஒதுக்கீட்டின் மூலம் இரணைமடு குளத்தின் பிரதான அபிவிருத்திப் பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குளத்தின் அணைக்கட்டு உயர்த்தல்,  வான் கதவுகள் புதிதாக அமைத்தல் மற்றும் புனரமைத்தல்,  அணைக்கட்டின் உட்பகுதி புனரமைப்பு, புதிய மேம்பாலம் அமைத்தல், நீர் தடுப்பு  அணைக்கட்டு அமைத்தல் உட்பட பல பணிகள் இடம்பெற்று பூர்த்தியாகும் நிலையில் காணப்படுகின்றன.  இந்த அபிவிருத்திப் பணிகளையே ஆளுநர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் ஆளுநருடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், ஆளுநரின்  இணைப்புச் செயலாளர் சுந்தரம் டிவகல்லா  ஆகியோரும் சென்றிருந்தனர்.     (மேலும்) 27.07.18

._______________________________________________________________________

 லண்டன் செல்ல முற்பட்ட தேரர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார்


லண்டன் செல்வதற்காக விமானத்திற்கு ஏறிய சந்தர்ப்பத்தில் வணக்கத்therarதிற்குரிய உடுவே தம்மாலேக தேரர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார்.  வெளிநாடு செல்வதற்கு நீதிமன்ற தீர்ப்பில் வழங்கப்பட்ட திகதி பற்றிய சர்ச்சை காரணமாகவே அவர் இவ்வாறு விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார்.  லண்டனில் இவ்வார இறுதியில் நடைபெற உள்ள சொற்பொழிவு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு செல்வதற்காக தம்மாலேக தேரர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.  இதன்போது வெளிநாடு செல்ல அனுமதி இல்லை என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னர் அவர் விமானத்தில ஏற்றப்பட்டுள்ளார்.     (மேலும்) 27.07.18

._______________________________________________________________________

தமிழ் மக்களுக்கு பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதே, அவர்களுக்கான முதலாவது தீர்வாக அமையும்  கோட்டாபய


தமிழ் மக்களுக்கு பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதே, அவர்களுக்கான முதலாவது தீர்வாக அமையும் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபயGota1 ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களுடன் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அவர் ஜனாதிபதியானால் தமிழ் மக்களுக்கு முன்வைக்கும் தீர்வு எதுவாக இருக்கும் என்று எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது இந்த கருத்தைக் கூறியுள்ளார்.  தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.  வேலை வாய்ப்பு, திறன் அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல தேவைகள் அவர்களிடம் இருக்கின்றன. இவற்றைத் தீர்க்காமல் அவர்களுக்கு எவ்வித தீர்வுகளை முன்வைப்பதிலும் அர்த்தமில்லை.   இதனையே மகிந்த அரசாங்கம் யுத்தம் நிறைவடைந்தப் போது மேற்கொண்டது. ஆனால் இதனை தமிழ் தரப்பில் யாரும் அங்கீகரிக்கவில்லை.      (மேலும்) 27.07.18

._______________________________________________________________________

 குண்டர்கள் கொலை செய்திடும் மத்தியகால காட்டுமிராண்டித்தனத்தை முறியடிப்போம்

-சீத்தாராம் யெச்சூரி

நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி, நம்பிக்கையில்லாத் sitaram yechuryதீர்மானத்திற்குப் பதிலளித்து சுமார் ஒன்றரை மணி நேரம் நீண்ட நெடிய உரை நிகழ்த்திக்கொண்டிருந்த அதே ஜூன் 20 அன்றுதான் ரக்பார் என்கிற அக்பர் கான், ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் பசுக் கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டு, குண்டர்களால் கொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்தார்.  பாஜக அரசாங்கங்களின் ஆட்சியில் புற்றீசல்கள் போல் முளைத்துக்கொண்டிருக்கும் தனியார் ராணுவங்கள் இவ்வாறு கொலைகள் புரிவது தொடர்பாக கவலை தெரிவித்து, பிரதமர், இப்போதுவரை, உதட்டளவில்கூட எதுவும் கூறிடவில்லை. பாஜகவின் கீழ் உள்ள அரசாங்கங்கள் ‘பசுப்பாதுகாப்பு’(‘cow protection’), ‘அறநெறிப் போலீஸ்’(‘moral policing’), ‘புனிதக் காதல்’(‘love jihad’), ‘பிள்ளை பிடிப்பவர்கள்’(‘child lifters’), முதலான பெயர்களில் இயங்கிக் கொண்டிருக்கும் குண்டர் குழுக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துவருவது  தொடர்கின்றன.  2017 ஏப்ரலுக்குப் பின்னர் ஆல்வார் மாவட்டத்தில் குண்டர்கள் கொலை செய்திடும்  கொடூரம் மூன்றாவது முறையாக நடைபெற்றுள்ளது.    (மேலும்) 27.07.18

._______________________________________________________________________

கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம்

கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.குறித்த நியமனத்தினை சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் மேஜர் ஜெனரல் நிர்மல் கொஸ்வத்த வழங்கி வைத்தார்.கிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் 5 வருடங்கள் சேவையாற்றியவர்களில் முதல்கட்டமாக 100 பேருக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்தும் 5 வருடங்களை பூர்த்தி செய்த ஏனையவர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படும் எனவும், இவ்வாறு ஆயிரத்து 507 பேருக்கு கிளிநொச்சியில் நியமனங்கள் வழங்கி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படடுள்ளது.

._______________________________________________________________________

புத்தகங்களை வாசிக்கும்  கைதிகளின் தண்டனைக் காலத்தை குறைக்க நடவடிக்கை

புத்தகங்களை வாசிக்கும் கைதிகளின் தண்டனைக் காலத்தை குறைப்பதற்கு தேவையான வேலைத் திட்டங்களை வகுக்கும் யோசனை ஒன்று ஜனாதிபதியிடம் முன் வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.கொழும்பு, வெலிக்கட சிறைச்சாலையில் இன்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.புத்தகங்களை வாசித்தால் அவர்கள் விமர்சனம் அல்லது சுருக்க ஆய்வு செய்து சமர்பிக்க வேண்டும் என்பதுடன், அது ஒரு மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு தண்டனைக் காலத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க யோசனை முன்வைப்பதாக அமைச்சர் கூறினார்.தற்போதைய சமுதாயத்துடன் மாற்றமடையும் புதிய எண்ணங்கள் ஊடாக தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

._______________________________________________________________________

விஜயகலா விவகாரம் / 50 பேரிடம் வாக்குமூலம் பதிவு

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீள கட்டியெழுப்பப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் 50 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜிர அபேவர்தன, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 50 பேரிடம் இவ்வாறு வாக்கு மூலம் பெற்றுக்கொண்டதாக அந்த பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  யாழ்ப்பாணத்தில் உள்ள விஜயகலா மகேஸ்வரனில் இல்லத்தில் வைத்து சுமார் மூன்றரை மணி நேரம், விஜயகலாவிடம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவு நேற்று முன்தினம் வாக்கு மூலம் பதிவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

சுரேஸ்  பிரேமச்சந்திரன் : தவறிப்போன வாய்ப்புகள்

 -    கருணாகரன்

“மாற்று அரசியல் தலைமையைப் பற்றி உங்கட தீர்மானம் என்ன?” என்று ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் கேட்டிருக்கிறார் புலம்பெயர்ந்த நாடொன்றில் இsuresh premachandranருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த அவருடைய நீண்டநாள் ஆதரவாளர்.   “நாங்கள் விக்கினேஸ்வரனையே நம்பியிருக்கிறம். அவரைத் தவிர்த்து வேறு யாரையும் இப்போதைக்கு யோசிக்க முடியாது” என்று சட்டெனப் பதில் சொல்லியிருக்கிறார் சுரேஸ். கேட்டவருக்கு அதிர்ச்சி. ஒன்று, கொஞ்சமும் யோசிக்காமல் சுரேஸ் சட்டென்று பதில் சொன்ன விதம். அல்லது இதற்கு மேல் அவரால் தற்போது யோசிக்க முடியாமலிருக்கலாம் என்பது. இரண்டாவது, சுரேஸின் பதில். அதாவது விக்கினேஸ்வரனைத் தவிர்த்து வேறு தெரிவுகள் இல்லை என்றும் தாங்கள் விக்கினேஸ்வரனையே நம்பியிருக்கிறோம் என்பதும்.   நீண்டகாலமாகச் சுரேஸோடும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடனும்  பழகியிருந்தாலும் ஆதரவை வழங்கியிருந்தாலும் நேரிலே சந்தித்து உரையாடும்போது இப்படியான ஒரு பதிலோடு – நம்பிக்கையோடு(?) - சுரேஸ் காத்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்தப் புலம்பெயர் நண்பருக்கு.    (மேலும்) 26.07.18

._______________________________________________________________________

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கும் மத்தள விமான நிலையம் இந்தியாவிற்கும் வழங்குவது அரசியல் பிரச்சினைகள் ஏற்படாமல் சமநிலை படுத்துவதற்காகவே

எந்த தடை ஏற்பட்டாலும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக இணைப் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளாrajitha-senarathnaர்.   இன்று (25) இடம்பெற்ற அமைச்சரை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   மரண தண்டனையை அமுல்படுத்தினால் GSP வரிச்சலுகை இல்லாமல் போகுமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எந்த சலுகை இல்லாமல் போனலும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.போதைப்பொருள் வியாபாரத்திற்கு துணையாக இருக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.     (மேலும்) 26.07.18

._______________________________________________________________________

வெளிநாடுகளில் பணியில் ஈடுபடும் இலங்கையர்களில் வருடமொன்றுக்கு 600 பேர் அளவில் மரணிக்கிறார்கள்

வெளிநாடுகளில் பணியில் ஈடுபடும் இலங்கையர்களில் வருடமொன்றுக்கு 600 பேர் அளவில் மரணிப்பதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிforiegnworkersவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்வோரினால் தான் இலங்கைக்கு அதிகளவான அந்நிய செலாவணி கிடைக்கின்றது. ஏழ்மையான மக்கள் வெளிநாடுகளுக்ககு சென்று ஈட்டும் வருமானத்தில் தான் நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் பயணிக்கிறது.  இந்த நிலையில், வெளிநாடு சென்றுள்ள தமது உறவினருக்கு ஏதாவது நடைபெற்றால், அது குறித்து எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்வது என்றுகூட நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது.இந்த நிலையில், அமைச்சின் ஊடாக நடமாடும் சேவையை நடத்த தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.      (மேலும்) 26.07.18

._______________________________________________________________________

நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண புதிய அரசியல் யாப்பு அவசியம்

நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண அரசியல் அமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியல் யாப்பு அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.சிறுபான்மையினருக்கும், ஏனைய இனத்தவர்களுக்கும், சகல மதங்களுக்கும் உரிய உரிமைகளை உறுதிப்படுத்துவது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  ஒரு இனத்தை மற்றுமொரு இனம் கடந்து சென்று தமது அடையாளங்களை உறுதிப்படுத்த முயற்சிப்பதன் காரணமாகவே உலகில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.முரண்பாடுகளைத் தீர்க்க வேண்டுமானால் நாட்டில் வாழும் அனைவருடைய பன்மைத்துவ அம்சங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார்.

._______________________________________________________________________

படையினர் வசமுள்ள 349 ஏக்கர் 3 ரூட் காணியை, சிவில் விமான சேவை திணைக்களம் கையகப்படுத்த வேண்டும்

 பலாலி விமானத்தள காணி தொடர்பில் விமான சேவை திணைக்கள பணிப்பாளருக்கு சி.வி.விக்னேஷ்வரன் கடிதம்

 பலாலி விமானத்தள காணி கையேற்பு தொடர்பில் சிவில் விமான சேவைc.v திணைக்களத்தின் பணிப்பாளருக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். பிரதமர் கடந்த முறை யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த போது, இதற்கான காணி கையகப்படுத்தல் தொடர்பில் உரிய நிறுவனத்துடன் பேசித் தீர்க்குமாறு கூறியதன் காரணத்தினாலேயே முதலமைச்சரினால் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  பலாலி விமான நிலையத்திற்காக 1950 ஆம் ஆண்டு சிவில் விமான சேவை திணைக்களத்தினால் 141.61 ஹெக்டெயர் காணி முதலில் கையேற்கப்பட்டதாக வட மாகாண முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.அதன் பின்னர் 1986 ஆம் ஆண்டு அவசரகால சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சு மேலதிகமாக காணியை கையேற்பதாக அறிவித்ததாகவும், அதன்போது 426 ஏக்கர் காணி கையேற்கப்பட்டதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.    (மேலும்) 26.07.18

._______________________________________________________________________

30 மில்லியன் தங்கத்துடன் சிக்கிய பெண்

சுமார் 30 மில்லியனுக்கும் அதிக பெறுமதி கொண்ட தங்க பாளங்கள் மற்றும் ஆபரணங்களுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குவைட் நாட்டில் இருந்த வந்த அவர் இந்த தங்கத்தை தனது உடலில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ள நிலையில், அவற்றின் நிறை 5 கிலோ கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதான குறித்த பெண் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

._______________________________________________________________________

குற்றமற்றவர்களை தூக்கிலிட்ட வழக்குகள்

                              கே.கே.எஸ்.பெரேரா

•அப்பாவிகளை தூக்கிலிடும் அபாயத்துக்குரிய காரணங்கள் அதிகப்படியாக மதிப்பிடப்படுவதாக  உள்ளன
•தூக்குத் தண்டனை நிறைவேற்றுபவனது சுருக்கு கயிறு எங்கள் தலைக்கdeath penalty1ுமேல் தூங்கும்போது கண்ணுக்குப் பதில் கண் ஒரு தீர்வாக அமைய முடியாது

“…எந்த ஒரு மனிதனது மரணமும் என்னுள் குறைவை ஏற்படுத்துகிறது ஏனென்றால் நான் மனித இனத்தில் தொடர்பு கொண்டுள்ளேன், அதனால் யாருக்கு மணி அடிக்கப்படுகிறது என்பதை எனக்கு அனுப்பவேண்டாம்,  அது உனக்காக எண்ணப்படுகிறது”- ஜோண் டொண், தியானம்: 17.

மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையிலுள்ள குற்றவாளிகள் உட்பட தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்காக 18 கைதிகளின் பட்டியல் ஜனாதிபதிக்குச் சமாப்பிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்தபடியே தொடர்ந்து வியாபாரம் நடத்துவதாகக் குற்றம் சாட்டப்படும் வெலே சுதா மற்றும் சுசி ஆகியோரின் பெயர்களும் கூட அதில் உட்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கம் அவர்களைத் தூக்கிலிடுவார்களா அல்லது அதற்கு மாறாக நவீன அறிவியல் அணுகுமுறையின் உதவியுடன் எங்கள் நீதித்துறை மற்றும் சட்ட அமலாக்கல் பொறிமுறைகளுக்கு புத்துயிர் அளிக்க வேலை செய்வார்களா?     (மேலும்) 25.07.18

._______________________________________________________________________

நடந்தாய் வாழி களனி கங்கை  -- அங்கம் 10

      பழையன கழிதலும் புதியன புகுதலும்                                                                      

                                                                           ரஸஞானி

                    தமிழ்மொழி தொன்மையானது. அதற்கு இலக்கிய இலக்கliverbrothersண பாரம்பரியமும் இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் நன்னூலில் ஒரு வசனம் வருகிறது. " பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்ற அந்த வரிகள் தமிழ்மொழியின் பரிணாம வளர்ச்சியை இனம் காண்பிக்கின்றது. தொல்காப்பியர்  காலம், சங்க காலம், சங்கமருவிய காலம், நவீன இலக்கிய காலம்  என்று காலகட்டங்ளை பிரதிபலித்தவாறு தமிழ்மொழி வளர்ந்து இன்று புதியவடிவம் பெற்றுள்ளது. இந்த " பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" வசனம்,  மொழிக்கு மாத்திரம் பொருத்தமானது அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் களனி கங்கை தீரத்தில் பல மாற்றங்கள், குறிப்பாக அந்தப்பிரதேச மக்களின் அரசியல் சமூக, பொருளாதாரத்திலும் உற்பத்தி, ஏற்றுமதி,  இறக்குமதி வர்த்தகத்திலும் நேர்ந்து வருகின்றன. இதுபற்றி இந்த அங்கத்தில் பார்ப்போம்.    (மேலும்) 25.07.18

._______________________________________________________________________

அகதிகள்  படகை திருப்பியனுப்பிய அவுஸ்திரேலிய அரசாங்கம்

இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அடங்கிய படகு ஒaustralia boadன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் இன்று அதிகாலை திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீற்றர் டட்டடனை மேற்கோள்காட்டி அந்த நாட்டின் ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டிருக்கின்றன.இந்த படகில் மொத்தமாக 33 அகதிகள் பயணித்துள்ளனர்.அவர்களில் பெரும்பாலானார்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.இதுதொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், அகதிிகளின் பிரவேசத்தைக் கட்டுப்படுத்தவும், ஆட்கடத்தற்காரர்களை கைது செய்யவும், இலங்கை பாரிய ஒத்துழைப்பை வழங்கி இருப்பதாக குறிப்பிட்டார்.இதற்காக இலங்கையுடன் மலேசியா, மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கும் அவுஸ்திரேலிய நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.இதேவேளை அகதிகள் விடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இறுக்கமான சட்டத்திட்டங்களை அமுலாக்கியதுடன், ஆறு நாடுகளுடன் மேற்கொண்ட ஒத்துழைப்பு உடன்பாட்டின் அடிப்படையில் இதுவரையில் 600க்கும் மேற்பட்ட ஆட்கடத்தற்காரர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

12 ஆயிரம் விடுதலைப் புலிகளுக்கு மறுவாழ்வு: இலங்கை அரசு தகவல் 


விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த 12,186 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அவர்களில் 594 பேர் சிறார்கள் என்றும் கூறியுள்ளformer ltteது. தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட சில விவரங்களுக்கு பதிலளிக்கும்போது இத்தகவலை அந்நாடு அளித்துள்ளது. இலங்கையில் தகவல் உரிமை சட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதன் கீழ் பல்வேறு விவரங்களை சமூக ஆர்வலர்கள் கேட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த போர் குறித்தும், போராளிகளுக்கு அளிக்கப்பட்ட மறுவாழ்வு தொடர்பான விவரங்கள் குறித்தும் இன்றளவும் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. போர் விதிமுறைகளை இலங்கை மீறியதாகவும், இனப் படுகொலையில் ஈடுபட்டதாகவும் சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.    (மேலும்) 25.07.18

._______________________________________________________________________

பிணை கோரிக்கை நிராகரிப்பு; இருவரும் மீண்டும் விளக்கமறியலில்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோர் தாக்கல் செய்திருந்த பிணை கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது.  அவர்கள் இருவரும் இணைந்து தாக்கல் செய்திருந்த பிணை கோரிக்கை மனு கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று விசாரிக்கப்பட்ட போதே பிணை வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி அவர்கள் இருவரையும் எதிர்வரும் 07ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

._______________________________________________________________________

ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரும் அம்ருதாவின் ஆவணங்கள் போலியானவை: தமிழக அரசு வாதம்

ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரும் அம்ருதாவின் ஆவணங்கள் போலியானவை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.jeya.daughter   முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று அறிவிக்கக் கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.   அப்போது, 1980ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம்  தேதி அம்ருதா பிறந்ததாக ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால், அதற்கு முந்தைய மாதமான ஜூலையில் ஜெயலலிதா பங்கேற்ற நிகழ்ச்சியின் விடியோ உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் வாதத்தை முன் வைத்ததோடு, அதற்கான விடியோவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.  (மேலும்) 25.07.18

._______________________________________________________________________

12 மாவட்ட பெண்களது ஒரு லட்சம் ரூபாவுக்கும் குறைவான நுண்கடன்கள் ரத்து

வரட்சியால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களின் பெண்கள் பெற்றுக்கொண்ட நுண்கடன்களில் ஒரு லட்சம் ரூபாவுக்கும் குறைவான கடன்களை ரத்துச் செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், குருநாகலை, புத்தளம், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெற்றுக்கொண்ட கடன்களே இவ்வாறு தீர்க்கப்படுகின்றன.இந்த பகுதிகளில் உள்ள பெண்கள் ஒரு லட்சம் அல்லது அதற்கு குறைவான நுண்கடன்களைப் பெற்றுக்கொண்ட பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தீர்க்கப்படும் கடனின் மூலத் தொகையை அரசாங்கத்தின் திறைச்சேரி செலுத்துவதுடன் அதன் வட்டத்தொகையை நுண்கடன் நிதி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.இதற்கான அமைச்சரவை யோசனையை நிதியமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்திருந்தார்.

._______________________________________________________________________

வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள்

கல்விச் சேவையில் அரசியல் பழிவாங்கும் போர்வையில் நியமனம் வழprotest educationங்குவதை எதிர்த்து நாடளாவிய ரீதியில் நாளை மறுதினம் (26) முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டுமென கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.   இதற்கமைய இந்தப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவை வழங்கி நாளை மறுதினம் சுகயீன விடுமுறையை அனைவரும் எடுத்துக் கொள்வதுடன் கொழும்பில் நடைபெறும் கவனயீர்ப்பு போராட்டத்திலும் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்வேறு ஆசிரிய மற்றும் அதிபர் சங்கங்கள் இணைந்து யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.     (மேலும்) 25.07.18

._______________________________________________________________________

விஜயகலாவிடம் சுமார் மூன்றரை மணி நேரம் வாக்குமூலம் பதிவு

முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம், திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தவிர்க்கும் காவல்துறையினர் வாக்கு மூலம் பதிவு செய்துக்கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இவ்வாறு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் போது அவரிடம் சுமார் மூன்றரை மணி நேரம் வாக்கு மூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்குவதே தமது இலக்கு என்ற அடிப்படையில், அண்மையில் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் இந்த வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

மூன்று ஈரான் நாட்டு பிரஜைகள் கட்டுநாயக்கவில் கைது

போலியான வௌிநாட்டு கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி இங்கிலாந்து நோக்கி செல்ல முற்பட்ட ஈரான் நாட்டு பிரஜைகள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் , தந்தை மற்றும் 2 வயது குழந்தை ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.குறித்த ஈரான் பிரஜைகள் சைப்ரஸ் கடவுச்சீட்டை போலியாக தயாரித்து இவ்வாறு இங்கிலாந்து நோக்கி செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

Theneehead-1

   Vol:17                                                                                                                                08.08.2018