சுரேஸ்  பிரேமச்சந்திரன் : தவறிப்போன வாய்ப்புகள்

 -    கருணாகரன்

“மாற்று அரசியல் தலைமையைப் பற்றி உங்கட தீர்மானம் என்ன?” என்று ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் கேட்டிருக்கிறார் புலம்பெயர்ந்த நாடொன்றில் இsuresh premachandranருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த அவருடைய நீண்டநாள் ஆதரவாளர்.   “நாங்கள் விக்கினேஸ்வரனையே நம்பியிருக்கிறம். அவரைத் தவிர்த்து வேறு யாரையும் இப்போதைக்கு யோசிக்க முடியாது” என்று சட்டெனப் பதில் சொல்லியிருக்கிறார் சுரேஸ். கேட்டவருக்கு அதிர்ச்சி. ஒன்று, கொஞ்சமும் யோசிக்காமல் சுரேஸ் சட்டென்று பதில் சொன்ன விதம். அல்லது இதற்கு மேல் அவரால் தற்போது யோசிக்க முடியாமலிருக்கலாம் என்பது. இரண்டாவது, சுரேஸின் பதில். அதாவது விக்கினேஸ்வரனைத் தவிர்த்து வேறு தெரிவுகள் இல்லை என்றும் தாங்கள் விக்கினேஸ்வரனையே நம்பியிருக்கிறோம் என்பதும்.   நீண்டகாலமாகச் சுரேஸோடும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடனும்  பழகியிருந்தாலும் ஆதரவை வழங்கியிருந்தாலும் நேரிலே சந்தித்து உரையாடும்போது இப்படியான ஒரு பதிலோடு – நம்பிக்கையோடு(?) - சுரேஸ் காத்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்தப் புலம்பெயர் நண்பருக்கு.    (மேலும்) 26.07.18

._______________________________________________________________________

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கும் மத்தள விமான நிலையம் இந்தியாவிற்கும் வழங்குவது அரசியல் பிரச்சினைகள் ஏற்படாமல் சமநிலை படுத்துவதற்காகவே

எந்த தடை ஏற்பட்டாலும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக இணைப் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளாrajitha-senarathnaர்.   இன்று (25) இடம்பெற்ற அமைச்சரை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   மரண தண்டனையை அமுல்படுத்தினால் GSP வரிச்சலுகை இல்லாமல் போகுமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எந்த சலுகை இல்லாமல் போனலும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.போதைப்பொருள் வியாபாரத்திற்கு துணையாக இருக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.     (மேலும்) 26.07.18

._______________________________________________________________________

வெளிநாடுகளில் பணியில் ஈடுபடும் இலங்கையர்களில் வருடமொன்றுக்கு 600 பேர் அளவில் மரணிக்கிறார்கள்

வெளிநாடுகளில் பணியில் ஈடுபடும் இலங்கையர்களில் வருடமொன்றுக்கு 600 பேர் அளவில் மரணிப்பதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிforiegnworkersவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்வோரினால் தான் இலங்கைக்கு அதிகளவான அந்நிய செலாவணி கிடைக்கின்றது. ஏழ்மையான மக்கள் வெளிநாடுகளுக்ககு சென்று ஈட்டும் வருமானத்தில் தான் நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் பயணிக்கிறது.  இந்த நிலையில், வெளிநாடு சென்றுள்ள தமது உறவினருக்கு ஏதாவது நடைபெற்றால், அது குறித்து எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்வது என்றுகூட நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது.இந்த நிலையில், அமைச்சின் ஊடாக நடமாடும் சேவையை நடத்த தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.      (மேலும்) 26.07.18

._______________________________________________________________________

நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண புதிய அரசியல் யாப்பு அவசியம்

நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண அரசியல் அமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியல் யாப்பு அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.சிறுபான்மையினருக்கும், ஏனைய இனத்தவர்களுக்கும், சகல மதங்களுக்கும் உரிய உரிமைகளை உறுதிப்படுத்துவது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  ஒரு இனத்தை மற்றுமொரு இனம் கடந்து சென்று தமது அடையாளங்களை உறுதிப்படுத்த முயற்சிப்பதன் காரணமாகவே உலகில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.முரண்பாடுகளைத் தீர்க்க வேண்டுமானால் நாட்டில் வாழும் அனைவருடைய பன்மைத்துவ அம்சங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார்.

._______________________________________________________________________

படையினர் வசமுள்ள 349 ஏக்கர் 3 ரூட் காணியை, சிவில் விமான சேவை திணைக்களம் கையகப்படுத்த வேண்டும்

 பலாலி விமானத்தள காணி தொடர்பில் விமான சேவை திணைக்கள பணிப்பாளருக்கு சி.வி.விக்னேஷ்வரன் கடிதம்

 பலாலி விமானத்தள காணி கையேற்பு தொடர்பில் சிவில் விமான சேவைc.v திணைக்களத்தின் பணிப்பாளருக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். பிரதமர் கடந்த முறை யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த போது, இதற்கான காணி கையகப்படுத்தல் தொடர்பில் உரிய நிறுவனத்துடன் பேசித் தீர்க்குமாறு கூறியதன் காரணத்தினாலேயே முதலமைச்சரினால் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  பலாலி விமான நிலையத்திற்காக 1950 ஆம் ஆண்டு சிவில் விமான சேவை திணைக்களத்தினால் 141.61 ஹெக்டெயர் காணி முதலில் கையேற்கப்பட்டதாக வட மாகாண முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.அதன் பின்னர் 1986 ஆம் ஆண்டு அவசரகால சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சு மேலதிகமாக காணியை கையேற்பதாக அறிவித்ததாகவும், அதன்போது 426 ஏக்கர் காணி கையேற்கப்பட்டதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.    (மேலும்) 26.07.18

._______________________________________________________________________

30 மில்லியன் தங்கத்துடன் சிக்கிய பெண்

சுமார் 30 மில்லியனுக்கும் அதிக பெறுமதி கொண்ட தங்க பாளங்கள் மற்றும் ஆபரணங்களுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குவைட் நாட்டில் இருந்த வந்த அவர் இந்த தங்கத்தை தனது உடலில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ள நிலையில், அவற்றின் நிறை 5 கிலோ கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதான குறித்த பெண் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

._______________________________________________________________________

குற்றமற்றவர்களை தூக்கிலிட்ட வழக்குகள்

                              கே.கே.எஸ்.பெரேரா

•அப்பாவிகளை தூக்கிலிடும் அபாயத்துக்குரிய காரணங்கள் அதிகப்படியாக மதிப்பிடப்படுவதாக  உள்ளன
•தூக்குத் தண்டனை நிறைவேற்றுபவனது சுருக்கு கயிறு எங்கள் தலைக்கdeath penalty1ுமேல் தூங்கும்போது கண்ணுக்குப் பதில் கண் ஒரு தீர்வாக அமைய முடியாது

“…எந்த ஒரு மனிதனது மரணமும் என்னுள் குறைவை ஏற்படுத்துகிறது ஏனென்றால் நான் மனித இனத்தில் தொடர்பு கொண்டுள்ளேன், அதனால் யாருக்கு மணி அடிக்கப்படுகிறது என்பதை எனக்கு அனுப்பவேண்டாம்,  அது உனக்காக எண்ணப்படுகிறது”- ஜோண் டொண், தியானம்: 17.

மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையிலுள்ள குற்றவாளிகள் உட்பட தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்காக 18 கைதிகளின் பட்டியல் ஜனாதிபதிக்குச் சமாப்பிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்தபடியே தொடர்ந்து வியாபாரம் நடத்துவதாகக் குற்றம் சாட்டப்படும் வெலே சுதா மற்றும் சுசி ஆகியோரின் பெயர்களும் கூட அதில் உட்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கம் அவர்களைத் தூக்கிலிடுவார்களா அல்லது அதற்கு மாறாக நவீன அறிவியல் அணுகுமுறையின் உதவியுடன் எங்கள் நீதித்துறை மற்றும் சட்ட அமலாக்கல் பொறிமுறைகளுக்கு புத்துயிர் அளிக்க வேலை செய்வார்களா?     (மேலும்) 25.07.18

._______________________________________________________________________

நடந்தாய் வாழி களனி கங்கை  -- அங்கம் 10

      பழையன கழிதலும் புதியன புகுதலும்                                                                      

                                                                           ரஸஞானி

                    தமிழ்மொழி தொன்மையானது. அதற்கு இலக்கிய இலக்கliverbrothersண பாரம்பரியமும் இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் நன்னூலில் ஒரு வசனம் வருகிறது. " பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்ற அந்த வரிகள் தமிழ்மொழியின் பரிணாம வளர்ச்சியை இனம் காண்பிக்கின்றது. தொல்காப்பியர்  காலம், சங்க காலம், சங்கமருவிய காலம், நவீன இலக்கிய காலம்  என்று காலகட்டங்ளை பிரதிபலித்தவாறு தமிழ்மொழி வளர்ந்து இன்று புதியவடிவம் பெற்றுள்ளது. இந்த " பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" வசனம்,  மொழிக்கு மாத்திரம் பொருத்தமானது அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் களனி கங்கை தீரத்தில் பல மாற்றங்கள், குறிப்பாக அந்தப்பிரதேச மக்களின் அரசியல் சமூக, பொருளாதாரத்திலும் உற்பத்தி, ஏற்றுமதி,  இறக்குமதி வர்த்தகத்திலும் நேர்ந்து வருகின்றன. இதுபற்றி இந்த அங்கத்தில் பார்ப்போம்.    (மேலும்) 25.07.18

._______________________________________________________________________

அகதிகள்  படகை திருப்பியனுப்பிய அவுஸ்திரேலிய அரசாங்கம்

இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அடங்கிய படகு ஒaustralia boadன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் இன்று அதிகாலை திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீற்றர் டட்டடனை மேற்கோள்காட்டி அந்த நாட்டின் ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டிருக்கின்றன.இந்த படகில் மொத்தமாக 33 அகதிகள் பயணித்துள்ளனர்.அவர்களில் பெரும்பாலானார்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.இதுதொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், அகதிிகளின் பிரவேசத்தைக் கட்டுப்படுத்தவும், ஆட்கடத்தற்காரர்களை கைது செய்யவும், இலங்கை பாரிய ஒத்துழைப்பை வழங்கி இருப்பதாக குறிப்பிட்டார்.இதற்காக இலங்கையுடன் மலேசியா, மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கும் அவுஸ்திரேலிய நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.இதேவேளை அகதிகள் விடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இறுக்கமான சட்டத்திட்டங்களை அமுலாக்கியதுடன், ஆறு நாடுகளுடன் மேற்கொண்ட ஒத்துழைப்பு உடன்பாட்டின் அடிப்படையில் இதுவரையில் 600க்கும் மேற்பட்ட ஆட்கடத்தற்காரர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

12 ஆயிரம் விடுதலைப் புலிகளுக்கு மறுவாழ்வு: இலங்கை அரசு தகவல் 


விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த 12,186 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அவர்களில் 594 பேர் சிறார்கள் என்றும் கூறியுள்ளformer ltteது. தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட சில விவரங்களுக்கு பதிலளிக்கும்போது இத்தகவலை அந்நாடு அளித்துள்ளது. இலங்கையில் தகவல் உரிமை சட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதன் கீழ் பல்வேறு விவரங்களை சமூக ஆர்வலர்கள் கேட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த போர் குறித்தும், போராளிகளுக்கு அளிக்கப்பட்ட மறுவாழ்வு தொடர்பான விவரங்கள் குறித்தும் இன்றளவும் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. போர் விதிமுறைகளை இலங்கை மீறியதாகவும், இனப் படுகொலையில் ஈடுபட்டதாகவும் சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.    (மேலும்) 25.07.18

._______________________________________________________________________

பிணை கோரிக்கை நிராகரிப்பு; இருவரும் மீண்டும் விளக்கமறியலில்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோர் தாக்கல் செய்திருந்த பிணை கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது.  அவர்கள் இருவரும் இணைந்து தாக்கல் செய்திருந்த பிணை கோரிக்கை மனு கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று விசாரிக்கப்பட்ட போதே பிணை வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி அவர்கள் இருவரையும் எதிர்வரும் 07ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

._______________________________________________________________________

ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரும் அம்ருதாவின் ஆவணங்கள் போலியானவை: தமிழக அரசு வாதம்

ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரும் அம்ருதாவின் ஆவணங்கள் போலியானவை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.jeya.daughter   முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று அறிவிக்கக் கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.   அப்போது, 1980ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம்  தேதி அம்ருதா பிறந்ததாக ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால், அதற்கு முந்தைய மாதமான ஜூலையில் ஜெயலலிதா பங்கேற்ற நிகழ்ச்சியின் விடியோ உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் வாதத்தை முன் வைத்ததோடு, அதற்கான விடியோவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.  (மேலும்) 25.07.18

._______________________________________________________________________

12 மாவட்ட பெண்களது ஒரு லட்சம் ரூபாவுக்கும் குறைவான நுண்கடன்கள் ரத்து

வரட்சியால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களின் பெண்கள் பெற்றுக்கொண்ட நுண்கடன்களில் ஒரு லட்சம் ரூபாவுக்கும் குறைவான கடன்களை ரத்துச் செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், குருநாகலை, புத்தளம், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெற்றுக்கொண்ட கடன்களே இவ்வாறு தீர்க்கப்படுகின்றன.இந்த பகுதிகளில் உள்ள பெண்கள் ஒரு லட்சம் அல்லது அதற்கு குறைவான நுண்கடன்களைப் பெற்றுக்கொண்ட பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தீர்க்கப்படும் கடனின் மூலத் தொகையை அரசாங்கத்தின் திறைச்சேரி செலுத்துவதுடன் அதன் வட்டத்தொகையை நுண்கடன் நிதி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.இதற்கான அமைச்சரவை யோசனையை நிதியமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்திருந்தார்.

._______________________________________________________________________

வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள்

கல்விச் சேவையில் அரசியல் பழிவாங்கும் போர்வையில் நியமனம் வழprotest educationங்குவதை எதிர்த்து நாடளாவிய ரீதியில் நாளை மறுதினம் (26) முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டுமென கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.   இதற்கமைய இந்தப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவை வழங்கி நாளை மறுதினம் சுகயீன விடுமுறையை அனைவரும் எடுத்துக் கொள்வதுடன் கொழும்பில் நடைபெறும் கவனயீர்ப்பு போராட்டத்திலும் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்வேறு ஆசிரிய மற்றும் அதிபர் சங்கங்கள் இணைந்து யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.     (மேலும்) 25.07.18

._______________________________________________________________________

விஜயகலாவிடம் சுமார் மூன்றரை மணி நேரம் வாக்குமூலம் பதிவு

முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம், திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தவிர்க்கும் காவல்துறையினர் வாக்கு மூலம் பதிவு செய்துக்கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இவ்வாறு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் போது அவரிடம் சுமார் மூன்றரை மணி நேரம் வாக்கு மூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்குவதே தமது இலக்கு என்ற அடிப்படையில், அண்மையில் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் இந்த வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

மூன்று ஈரான் நாட்டு பிரஜைகள் கட்டுநாயக்கவில் கைது

போலியான வௌிநாட்டு கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி இங்கிலாந்து நோக்கி செல்ல முற்பட்ட ஈரான் நாட்டு பிரஜைகள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் , தந்தை மற்றும் 2 வயது குழந்தை ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.குறித்த ஈரான் பிரஜைகள் சைப்ரஸ் கடவுச்சீட்டை போலியாக தயாரித்து இவ்வாறு இங்கிலாந்து நோக்கி செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

._______________________________________________________________________

 வல்வை அனந்தராஜ்ஜின் நாடகம்

-          தங்கவேல் மரகதமுத்து

“பட்டாலும் கெட்டாலும் புத்தி வராது சிலருக்கு” என்பார்கள். அதில் ஒருவராகியிருக்கிறாரா வல்வை அனந்தராஜ்?valavai a   ஏனிப்பிடிக் கேட்கிறேன் என்றால், இருந்தாற்போல ‘சாதி வேறுபாடு’ பாக்கிறதைப்போல இயக்க வேறுபாட்டைப் பார்த்துப் புதிய புரளியைக் கிளப்பத் தொடங்கியிருக்கிறார் அனந்தராஜ்.   இயக்க வேறுபாட்டைப் பாக்கிறது ஒன்றும் புதிய விசயமில்லை. அது காலாதி காலமாக சிலரிட்ட இருந்து வாற ஒரு வியாதிதான். ஆனால், யுத்தம் முடிந்து, புலிகள் களத்தில் இல்லாமல் போய் ஒன்பது வருசம் கழிந்த பிறகும் இப்பிடி இயக்க விரோதம் பாராட்டிறதென்றால்... இது ஒரு “வெங்காய வேலை” இல்லாமல் வேற என்ன?  தமிழற்றை அரசியலின் அடுத்த கட்டம் என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிற இந்தச் சந்தர்ப்பத்திலபோய், “இயக்க வேறுபாடு” என்று பிரிவுக் கோட்டைக் கீறித் தமிழ் அரசியலில் சாபக் கேட்டை மீண்டும் உருவாக்க முயற்சிக்கிறார் வல்வை அனந்தராஜ்.  (மேலும்) 24.07.18

._______________________________________________________________________

யாழ்.கோட்டையில் எவ்வித இராணுவமும் தங்குவதை நாம் அனுமதிக்க முடியாது

யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கூடாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.jaffna port   அத்துடன் தற்போது கோட்டையில் தங்கியுள்ள இராணுவம் முற்றாக வெளியேறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று இணைத் தலைவரான வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா,விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது இதன்போது இடம்பெற்ற தொல்லியல் விடயம் மீதான விவாதத்தின் போது யாழ். ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவத்தினருக்கு இடம் வழங்கும் விடயம் தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் உரிய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.   .  (மேலும்) 24.07.18

._______________________________________________________________________

தவணை பரீட்சை பெறுபேறுகளை விடுமுறைக்கு முன்னர் வழங்க வலியுறுத்தல்

தவணை பரீட்சைகள் நடத்தப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் தவணை விடுமுறைக்கு முன்னர் அதன் பெறுபேறுகளை மாணவர்களுக்கு வழங்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் எட்டியாராச்சி அனைத்து அதிபர்களுக்கும் மாகாண கல்வி செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.பாடசாலை தவணை பரீட்சை முடிவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட பெறுபேறுகளை பாடசாலை விடுமுறைக்கு பின்னர் வழங்குதல், தாமதம் ஏற்படுவதினால் மாணவர்களின் கல்வியாற்றலையும் முன்னேற்றத்தையும் மதிப்பீடு செய்வதற்கு பெற்றோர்களால் முடியாதுள்ளது.மாணவர்களும் தமது தரத்தை புரிந்துகொள்ள முடியாமையிற்கு இது காரணமாக அமைந்துள்ளது.இது தொடர்பாக சில பாடசாலை பெற்றோர் உள்ளிட்டோரின் முறைப்பாடுகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.மாணவர்களின் முன்னேற்ற அறிக்கை போன்று மாணவர்களின் ஆற்றல் தொடர்பான அறிக்கை முதலானவை அனைத்து பாடசாலைகளிலும் பாடசாலை தவணை முடிவடையும் தினத்தில் இருந்து ஒரு மாத காலத்திற்கு முன்னதாக கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

._______________________________________________________________________

பலாலி விமானநிலையத்தைப் பிராந்திய விமான நிலையமாக விஸ்தரிப்பதற்கு, இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தின் பிரதான விமான நிலையமான பலாலி விமானநிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக விஸ்தரிப்பதற்கு, இலங்கை - இந்திய பிரதானிகளிடைPalalyயே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (22) இடம்பெற்ற இருநாட்டு உயர்மட்டச் சந்திப்புத் தொடர்பில், தமிழ்மிரருக்குக் கூறுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் முப்படையைச் சேர்ந்தோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்றே, நேற்று இடம்பெற்றிருந்தது.  இச்சந்திப்புத் தொடர்பில் தொடர்ந்து கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பலாலி விமானநிலையத்தைப் பிராந்திய விமான நிலையமாக விஸ்தரிப்பதற்கு, இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அதற்கிணங்க, இந்தியாவினுடைய நிபுணர் குழுவொன்று, உடனடியாக பலாலி விமானநிலையம் தொடர்பில் ஆராய்வதற்கு வரவுள்ளதென்றும் கூறியதோடு, அந்த நிபுணர்குழுவுடன் இலங்கைச் சிவில் விமானசேவை தொழில்நுட்பவியலாளர்களும் இணைந்து பணியாற்றுவரென்று கூறினார்.   (மேலும்) 24.07.18

 

மூன்று இலங்கையர்களுக்கு சிறைத்தண்டனை விதித்தது சிங்கப்பூர்

தமது கடவுச் சீட்டில் போலியான மலேஷிய நுழைவு அனுமதியினை பதிவு செய்த மூன்று இலங்கையர்களுக்கு தலா 8 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இந்த தண்டனை கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிவரவுத்துறை இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.இவர்கள் சிங்கப்பூரில் இருந்து மலேஷியாவில் தொழில் பெறும் நோக்கில் முகவர் ஒருவரின் ஊடாக போலியான நுழைவு அனுமதியுடன் செல்ல முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.சிங்கப்பூர் சட்டத்திற்கு அமைய தெரிந்து போலியான பயண ஆவணத்தை வைத்திருப்பவர்களுக்கு 10 ஆயிரம் டொலர் அபராதம் அல்லது 10 வருடத்திற்கு மேற்படாத சிறை தண்டனை வழங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

 அனந்தியின் கோரிக்கையை நிராகரித்தார் அவைத்தலைவர்

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனின் பிரேரணையைananthisasitharan, சபையில் எடுக்க அனுமதிக்க மாட்டேனென, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.வடமாகாண சபை உறுப்பினரான அயூப் அஸ்மீன், தன்னிடம் கைத்துப்பாக்கி உள்ளதெனச் சபையில் தெரிவித்தமையானது, தனது சிறப்புரிமையை மீறும் செயலெனவும் இது தொடர்பான பிரேரணையை, அடுத்த அமர்வில் முன்மொழியவுள்ளதாகவும், அதனை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டுமெனவும் தெரிவித்து, அவைத்தலைவருக்கு, அனந்தி சசிதரனால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, குறித்த விடயத்தைத் தீர்மானமாக நிறைவேற்ற, சபையில் அனுமதிக்க மாட்டேனென, அனந்திக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவைத் தலைவர், இருப்பினும், குறித்த விடயம் தொடர்பில் சபையில் தன்னிலை விளக்கமளிக்கச் சந்தர்ப்பம் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

._______________________________________________________________________

போதைப்பொருள் கடத்தல் மையமாக மாறியுள்ளது இலங்கை – ரஞ்சித்மத்தும பண்டார

போதைப்பொருள் கடத்தலிற்கான மையமாக இலங்கை மாறியுள்ளது என சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.அவர் மேலும் குறிப்பிட்டுள்drugs.smuggளதாவதுஇலங்கை போதைப்பொருள் கடத்தலின் மையமாக மாறியுள்ளது இது குறித்து எங்களிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.சில வகையான போதைப்பொருட்களை உள்நாட்டில் விற்பதற்காக கடத்திவருகின்றனர். கடந்த வருடம் நாங்கள் 1500 கிலோ கொக்கெய்னை கைப்பற்றினோம் இது பெருமதியான போதைப்பொருள் ஆனால் இலங்கையில் இது பயன்படுத்தப்படுவதில்லை இதன் மூலம் போதைப்பொருள் கடத்தலிற்கான தளமாக இலங்கை மாறியுள்ளது என்ற முடிவிற்கு நாங்கள் வரலாம்.இதனை முறியடிப்பதற்கு நாங்கள் சர்வதேச சமூகத்தின் உதவியை பெற தீர்மானித்துள்ளோம், நாங்கள் இந்த அடிப்படையில் செயற்படுகின்றோம்.இந்த விடயத்தில் நான் எந்த அரசியல் தலையீட்டையும் எதிர்கொள்ளவில்லை, எந்த அமைச்சரும் இது குறித்து என்னுடன் பேசவில்லை, இந்த நிலைமையை கையாள்வதற்காக விசேட பிரிவுகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம், நாங்கள் பலரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம்,வெளிநாடுகளில் வாழ்பவர்களே இதனை தூண்டுவது எங்களிற்கு தெரியவந்துள்ளது,சிலர் தங்கள் சிறைகளில் இருந்தவாறே இவற்றை செய்கின்றனர், இது பாரிய பிரச்சினையாக உள்ளது.ஆகக்குறைந்தது நான்கு பாதாள உலக குழுத்தலைவர்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்

._______________________________________________________________________

கனடாவின் டொராண்டோ நகரில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: சிறுமி உட்பட ஒன்பது பேர் காயம் 

டொராண்டோ: கனடாவின் டொராண்டோ நகரில் உணவகம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  சிறுமி உட்பட ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.கனடாவின் டொராண்டோ நகருக்கு அருகில் அமைந்துள்ள பகுதி கிரீக்டவுன். இங்குள்ள டான்போர்த் அவன்யூ  என்ற இடத்தில் புகழ்பெற்ற உணவகம் ஒன்று உள்ளது. இந்த உணவகத்தில் ஞாயிறு இரவு 10 மணி அளவில் கருப்பு உடை அணிந்த மர்ம நபர் ஒருவன் உள்ளே புகுந்தான். அவன் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் 15 ரவுண்டுகள் வரை கண்மூடித்தனமாக சுட்டான். இதில் அங்கே இருந்தவர்களில் சிறுமி உட்பட 9 பேர் காயமடைந்தனர்.தகவல் கேட்டு விரைந்து வந்த போலீசார் மர்ம நபரை சுட்டு வீழ்த்தினர். அத்துடன் இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அனைவரும் அருகில் இருந்த மருத்துவமனைகளில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

._______________________________________________________________________

 இந்தியாவை, இந்துத்துவா கொள்கையை நிறுவியவரும் புரிந்துகொள்ளவில்லை, அதனைப்பின்பற்றுபவர்களும் புரிந்துகொள்ளவில்லை.

-சந்தன் கர்மே

நாசிசம், 1930களின் முற்பகுதிகளில் ஆர்யர்கள்தான் ”உயர்ந்த இனம்’ என்கிற சிந்தனையை உயர்த்திப்பிடித்து உலக அளவில் பிரகடனம் செய்தது. நாசிசம்.V.D.Savarkar ஐரோப்பியாவில் ஆட்சி செய்த பாசிஸ்ட்டுகள் இதனை ’சமூக டார்வினிசம்’, போன்ற போலி அறிவியல் வார்த்தைகளைப் பயன்படுத்தி, உபயோகப்படுத்தினார்கள். ஆரியர்கள், உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்களாகத் தங்களைப் பாவித்துக்கொண்டு, மற்ற இனத்தவர்களின் உழைப்பின் மூலம் அனைத்து அம்சங்களிலும் முன்னுரிமை  அளிக்கப்பட்ட அதேசமயத்தில் மற்ற இனத்தினர் எல்லாருமே வெறும் ஒட்டுண்ணி பூச்சிகளாகத்தான் கருதப்பட்டார்கள். நாம் புரிந்தகொண்டவரையில், இந்துத்துவா கொள்கையைத் தோற்றுவித்தவர். வீ.டி. சாவர்க்கர், ஆவார்.   1939இல் அவர் சாவித்திரி தேவி என்பவரால் எழுதப்பட்ட ஒரு புத்தகத்திற்கு ஒரு முன்னுரை எழுதினார். 1905இல் பிறந்த மேக்சிமைன் போர்டாஸ்  (Maximine Portaz—1905-1982) என்கிற பிரெஞ்சு நாட்டைச்சேர்ந்தவர்,. தன் பிரெஞ்சுப் பெயரை, சாவித்திரி தேவி என மாற்றிக்கொண்டார்.   இவர், அடால்ப் ஹிட்லரால் கலியுகத்தில் மனிதகுலத்திற்கு ஏற்பட்டுள்ள துன்பங்களைக் களைவதற்காக கடவுளின் விருப்பத்திற்கிணங்க பூலோகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவர் என்று நம்பப்பட்டவர். நாசிசத்தின் பிரச்சாரகரான சாவித்திரி தேவி, மகா விஷ்ணுதான் அடால்ப் ஹிட்லர் என்கிற மனித உருவத்தில் இருக்கிறார் என்று நம்பினார்.   (மேலும்) 23.07.18

._______________________________________________________________________

தூக்கு மரத்திலிருந்தா போதைப் பொருள் வருகிறது?

ஜனாதிபதி பூமியிலிருந்து தோன்றினாலும், பிரதமர் பராக்கிரம யுகத்திலிருந்து வந்தாலும் நாட்டில் போதைப் பொருள் (குடு) தோன்றுவது சிறைச்சாலை பூமியிலிருந்து அலdeath penalty்ல. நீதிமன்றினால் சட்டரீதியாக தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு பூமியிலிருந்து மொபைல் போன்கள் கிடைக்கவில்லை. 2 கிராம் போதைப் பொருள் வைத்திருந்தவருக்கு மரண தண்டனை வழங்கப்படுகின்ற போதிலும் அந்தப் போதைப் பொருள் பூமியிலிருந்து கிடைத்துவிடவில்லை. போதைப் பொருள் கன்ரேனர்கள் தோன்றியதும், தோன்றுவதும் பூமியிலிருந்தல்ல.   போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் நாட்டுக்குள் வருவது துறைமுகத்தினூடாக. அல்லது விமான நிலையம் ஊடாக அல்லது கடல்மார்க்கமாக.அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு துறைமுக பொலிஸ், விமான நிலைய பொலிஸ், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, பொலிஸ், முப்படைகள் இருக்கின்றன. நவீன தொழில்நுட்பக் கருவிகளும் இருக்கின்றன. நாட்டிற்குள் போதைப் பொருட்கள் கொண்டுவருவதை மற்றும் சிறைச்சாலையினுள் மொபைல் போன்கள் எடுத்துச் செல்வதை தடுத்துநிறுத்தாமல் – அரச பயங்கரவாதத்தை, அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்தாமல் – சட்டத்தின் ஆட்சியை, சிவில் பாதுகாப்பை அமுல்படுத்தாமல் மரணதண்டனை நிறைவேற்ற தீர்மானம் எடுத்திருப்பது மூல பிரச்சினைக்கு தீர்வுகாணாமல் விளைவுகளுக்கு தீர்வு காண்பது போலாகும்.   (மேலும்) 23.07.18

._______________________________________________________________________

கடனை செலுத்த முடியாதவர்களின் கடனை அரசாங்கம் செலுத்தும்

வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் ஒரு இலட்சம் ரூபா வரையில் கடனைப் பெற்று திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் கடன் மற்றும் வட்டியை அரசாங்கம் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அதிகாரிகளுடன் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று (22) பேச்சுவார்த்தை நடத்தினார்.இதன் போது தற்போது கடனை வழங்கும் நுண் நிதி நிறுவனத்திற்கு புதிய சட்ட விதிகளை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போதுள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென்றும் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

._______________________________________________________________________

மனித எலும்புக் கூடுகள் மற்றும் உடல் பாகங்கள் மீட்பு

மன்னார் – பழைய சதொச கட்டடத்தொகுதி இருந்த இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித புதை குழியில் இருந்து, இதுவரையில் 44 மனித எலும்புக் கூடுகள் மற்றும் அmannar3வற்றின் உடல் பாகங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.  குறித்த இடத்தில் இருந்த கட்டடம் உடைக்கப்பட்டு அங்கிருந்த மண், மன்னார் எமில் நகர் பிரதேசத்திற்கு கொண்டுச் சென்று கொட்டப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி மனித எலும்பு துண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து, அது தொடர்பில் மன்னார் காவல்துறையினர், மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்ததன் பின்னர், அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி, கடந்த 37 நாட்களாக அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.  அதன்போது 44 முழுமையான மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் குறித்த பகுதியில் 45 சதவீத அகழ்வு பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக, அந்த அகழ்வு பணியில் ஈடுபட்டுள்ள களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டுள்ளார். (மேலும்) 23.07.18

._______________________________________________________________________

cuba5

._______________________________________________________________________

வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றும் உத்தேசம் இல்லை- பிரதமர்


வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றும் உத்தேசம் இல்லை என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.ranil   யாழப்ப்hணம் இந்து கல்லூரியில் இன்று இடம்பெற்ற ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் வைத்து பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கில் இருந்து இராணுவம் அகற்றப்படுவதாக பத்திரிகைகளில் தகவல் வெளியாகியிருந்தன.  இவ்வாறு ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றனவா என இராணுவத் தளபதியிடமும் வடக்குக்கு பொறுப்பான கட்டளைத் தளபதியிடமும் வடக்கு மாகாண முதலமைச்சரிடமும் வினவப்பட்டது. அவ்வாறான எந்த நடவடிக்கையும் இல்லை என அனைத்துத் தரப்பினராலும் தெரிவிக்கப்பட்டது.  வடக்கில் இராணுவத் படையணிகளின் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் இராணுவ கட்டமைப்புக்குள் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.   (மேலும்) 23.07.18

._______________________________________________________________________

நோய் தடுப்பு மருந்துகளின் எதிர்விளைவால் ஆண்டுக்கு 57,000 குழந்தைகள் உயிரிழப்பு

இந்தியாவில், மருத்துவரின் பரிந்துரைகள் இல்லாமல், நோய் எதிர்ப்பு மkinderருந்துகளை மிக அதிகமாக பயன்படுத்துவதால், செப்சிஸ் என்று சொல்லக் கூடிய நோய்த் தொற்று உருவாகி, அதன் மூலம் ஆண்டுக்கு 57,000 குழந்தைகள் உயிரிழப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் தொடர்பான அறிக்கை, பிரிட்டனில் இருந்து வெளியாகும் "தி ஜெர்னல் ஆஃப் இன்பெக்ஷன்' என்ற மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.   பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில்தான் நோய் தடுப்பு மருந்துகள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.  சர்வதேச அளவில் கடந்த 2000-இல் இருந்து 2010-க்கு இடைப்பட்ட காலத்தில் நோய்த் தடுப்பு மருந்துகளின் பயன்பாடு என்பது 5,000 கோடி யூனிட் என்ற அளவில் இருந்து 7,000 கோடி யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.    (மேலும்) 23.07.18

._______________________________________________________________________

வடக்கு , கிழக்கு மற்றும் மலையக பாடசாலைகளில் நடக்கும் அநீதி!!

வடக்கு, கிழக்கிலும் மலையகத்திலும் பாடசாலைகளில் அநீதியான முறையில் பெற்றோர்களிடம் இருந்து பணம் அறவிடப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே, இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.  இதேவேளை, அபிவிருத்தி திட்டங்களுக்கு என அறவீடுகள் செய்யப்படுகின்ற போது அதனை பெற்றோர் எதிர்க்க வேண்டும் என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் தவணைப்பரீட்டையை பிற்போடுமாறு மாகாண பணிப்பாளர்களிடம் கோரியுள்ளதாக கல்வித்துறையை பாதுகாக்கும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் கோரியுள்ளது. கல்வி சேவையில் அரசியல் பலிவாங்கல் குழுக்களின் பரிந்துரைகளுக்கு அமைய முறையற்றவகையில் நியமனம் வழங்கப்படுகின்றமைக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருக்கின்ற பணிப்புறக்கணிப்பு காரணமாக குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

சீனாவிடம் நிதி பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டிற்கு மஹிந்த ராஜபக்ஷ  பதிலளிக்காவிட்டால் நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும்

பிரேரணையை எதிர்கொள்ள தயார் - வாசுதேவ நாணயக்கார


சீனாவிடம் நிதி பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டிற்கு மஹிந்த ராஜபக்ஷ பதிலளிக்கத் தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்Mahinda Rடு வரவும் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த விடயங்களை வலியுறுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைளை தேசிய அரசாங்கம் அனுமதிக்காது. எனவே தனக்கெதிரான குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பாராளுமன்றத்தில் விரைவில் விளக்கமளிக்க  வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கும்இ பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்கி சட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவும் ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை விஷேட சந்திப்பினை மேற்கொண்ட போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. (மேலும்) 22.07.18

._______________________________________________________________________

குரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

கலர்கலராய் காகிதங்கள் கப்பலாகி, கடல் நடுவே காத்துக்கிடப்பது போல, உண்மைகள் மறைக்கப்பட்டு, ஊடக ஒளியில் புதிய சித்திரம் எமக்காய் தீட்டப்படுகிறது. crotia   உணர்வுப் பிழம்புகளாய் அதை ஏற்றுக்கொண்டாடி, நாம்  மகிழ்ந்திருக்கிறோம்; திருவிழா முடிந்தது. ஈழத்தமிழரும் குரோஷியர்களிடம் கற்க, நிறைய உண்டென,வெற்றியில் மகிழ்ந்திருப்போம். உண்மைகளைக் கொஞ்சமும் தேடி அறிய,ஆவலாய் இல்லாத சமூகம், தனக்கான புதைகுழியைத் தானே தோண்டுகிறது. கால்பந்தாட்ட உலகக்கிண்ணம் முடிந்துவிட்டது. பேச்செல்லாம் குரோஷிய அணி பற்றியும் அனைவரையும் கட்டியணைத்த குரோஷிய ஜனாதிபதி பற்றியுமாய் இருக்கிறது.   விளையாட்டில் வெற்றிகள் கொண்டாடப்பட வேண்டியவை. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இன்று வெற்றிகள், தோல்விகள் கொண்டாடப்படுவதன் அடிப்படைகள், விளையாட்டின் தரம், திறமை என்பது பற்றியதல்ல. அதனாலேயே இக்கட்டுரையை எழுத நேர்ந்தது.    (மேலும்) 22.07.18

._______________________________________________________________________

எந்த தடை வந்தாலும் மரண தண்ட​னை அமுல்படுத்தப்படும்

சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துக் கொண்டே SRISENAபோதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்குமரண தண்டனையை நிறைவேற்றுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.எந்த தடை வந்தாலும் அவர்களுக்கு எதிராக மரண தண்ட​னையை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை கூட்டமொன்று இடம்பெற உள்ளதாகவும், சட்டம், நீதித்துறை, சிறைச்சாலை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து துறையினரையும் உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு எவ்வித ஒத்துழைப்புக்களையும் வழங்குவதில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்

._______________________________________________________________________

நாட்டின் ஏனைய இடங்களை விட வடக்கில் அபிவிருத்திகள் மிகவும் குறைவு.

நாட்டின் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் வடக்கில் அபிவிருத்ranil.vதிகள் மிகவும் குறைவு என பிரதமர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார்.  நிதி அமைச்சின் 185 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கிளிநொச்சி தானியக் களஞ்சியசாலை ​நேற்று (21) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் நாம் இன்று ஒரு சிறந்த ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருகின்றோம். வடக்கு யுத்தத்தால் அழிவடைந்து விட்டன. மக்கள் மரணித்தார்கள், குடும்பங்கள் சீர்குலைந்தன, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தன. இப்போது யுத்தம் நிறைவு பெற்றிருக்கிறது, சமாதானம் இருக்கிறது. அப்படி இருந்தாலும் இங்கே இன்னும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. இதில் ஒன்றுதான் பொருளாதாரம், சமாதானம் ஏற்பட்டிருந்தாலும் அபிவிருத்தி குறைவாகவே உள்ளன.  (மேலும்) 22.07.18

._______________________________________________________________________

அனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்

வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனின் முறைப்பாடு குறித்து விசாரிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் , நாடாளுமsumanthiran2ன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி வைத்துள்ளார் என மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மீன் கடந்த மாகாண சபை அமர்வில் தெரிவித்திருந்தார். மாகாண சபை உறுப்பினர் அஸ்மீனின் கருத்தால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படலாம் என சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் அமைச்சர் அனந்தி சசிதரன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்கள் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபையில் பேச்சு சுதந்திரம் உள்ளமை சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள விடயம் அங்கு பேசப்படும் விடயங்கள் தொடர்பாக விமர்சிப்பதற்கோ,  அதை குறித்து விசாரிப்பதற்கோ எவருக்கும் அதிகாரம் கிடையாது. என தெரிவித்தார்.

._______________________________________________________________________

இனவாதம் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் இனவாதம் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முறையற்ற விதத்தில் தோட்டத்தொழிலாளர்களை வேலை நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தோட்டத்தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.தோட்டத்தில் உள்ள தொழிற்சாலைக்கு முன்பாக இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.175க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிப்புரியும் குறித்த தோட்டத்தில், தோட்ட முகாமையாளர் தொழிலாளர்களை சிங்கள மொழியில் பேசுமாறு வற்புறுத்துவதாகவும்,கொழுந்து இல்லாத தேயிலை மலைகளில் 18 கிலோகிராம் தேயிலை அவரால் கோரப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்அதற்கு மறுப்பு தெரிவிக்கும் தோட்ட தொழிலாளர்கள் அச்சுறுத்தலுக்கு உட்படுவதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

._______________________________________________________________________

வவுனியாவில்  பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது


வவுனியாவில் உள்ள அரச வங்கியொன்றின் தன்னியக்க இயந்திரத்தில் பிறிதொருவருடைய ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் ஒருvavuniyaatmவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச் சம்பவமானது நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பகுதியிலுள்ள இராணுவ முகாமொன்றில் கடமையாற்றும் 41 என்ற இராணுவ வீரரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,குறித்த இராணுவ வீரர் வவுனியா நகரிலுள்ள பழைய பேருந்து தரப்பிடத்தில் நின்று அங்கு வந்த பெண்ணொருவிடம் ஏ.டி.எம். அட்டையை கொடுத்து பணம் பெற்றுத் தருமாறு கோரியுள்ளார். இதற்கிணங்க அப் பெண் ஏ.டி.எம். அட்டையை வங்கியொன்றில் செலுத்தி இரண்டு கட்டமாக பயணம் எடுத்துள்ளார்.  (மேலும்) 22.07.18

._______________________________________________________________________

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 19 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்கள்

சுமார் 19 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை தங்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குப்பை வாளியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.விமான நிலையத்தில் சுங்க தீர்வையற்ற வர்த்தக நிலையத் தொகுதியை சுத்தம் செய்யும் ஊழியர் ஒருவரால் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று இருப்பதாக தகவல் வழங்கப்பட்டதையடுத்து இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.116 கிராம் நிறையுடைய 28 தங்க பிஸ்கட்கள் இதன்போது மீட்கப்பட்டதாக சுங்கப் பிரிவினர் கூறியுள்ளனர்.அவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடியே 95 இலட்சம் ரூபாவாக இருக்கலாம் என்று விமான நிலைய சுங்கப் பிரிவினர் கூறியுள்ளனர்.சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்கப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.    

._______________________________________________________________________

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி


மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜinனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் மக்களவையில் வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம், காரசரமான விவாதத்துக்குப் பிறகு தோல்வி அடைந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 126 வாக்குகளும், எதிராக 325 வாக்குகளும் பதிவாகின.ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக, தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் காலை 11 மணிக்கு விவாதம் தொடங்கியது.ஏறத்தாழ 12 மணி நேரம் நடைபெற்ற விவாதத்தில், பிரதமர் மோடியையும், மத்திய அரசின் திட்டங்களையும் கடுமையாக விமர்சித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். ஆளும் கட்சி தரப்பில் இருந்து உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டது. இதனால், அவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடித்த பிறகு இரவு 9 மணிக்கு பிரதமர் மோடி பேசத் தொடங்கினார். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக அவர் பேசினார்.   (மேலும்) 21.07.18

._______________________________________________________________________

 விடுதலை நெடுந்தூரம்

-       கருணாகரன்

கடந்த புதன்கிழமை (18.07.2018) யாழ்ப்பாணப் பல்கலைக்கழhytக கலைப்பீட வளாகத்தில் சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட மூன்று நூல்களின் வெளியீடும் அறிமுகப்படுத்தலும் நடந்தது. இது ஒரு சாதாரண நிகழ்வல்ல. ஏதோ புத்தக வெளியீட்டு நிகழ்வுதானே என்று ஒதுக்கி விடக்கூடியதும் அல்ல. இந்த நாட்டின் எதிர்காலத்துடன் சம்மந்தப்பட்ட நிகழ்வு இது. பரஸ்பர நல்லெண்ணங்களே இலங்கையின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்குமான அடிப்படையாகும். அதை இந்த நிகழ்வு தன்னிடத்தில் கொண்டிருந்தது. பலமான தரப்புகளால், மிக நேர்த்தியாக கூர் திட்டப்பட்டுக் கொண்டேயிருக்கும் பகை முரணைக் கடந்து, பரஸ்பரப் புரிந்துணர்வுக்கு அடித்தளமிடும் முயற்சியில் எப்போதும் நன்முயற்சியாளர்கள் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இப்பொழுதும் அப்படியானவர்கள் தங்களை அர்ப்பணித்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் வசதிகளோ வளங்களோ உள்ளவர்கள் அல்ல. இதயத்தில் நிறைந்திருக்கும் நல்லெண்ணங்களே இவர்களின் பலமும் வளமும். அதுவே நட்சத்திரங்கள். அத்தகையவர்களின் கூட்டுமுயற்சியே இந்தப் புத்தகங்களின் மொழிபெயர்ப்பும் வெளியீடுமாகும். வெளியிடப்பட்ட மூன்று புத்தகங்களில் ஒன்று “மரக தோரணம்”. கலாநிதி பிரபாத் ஜயசிங்ஹவின் சிறுகதைகள். இரண்டாவது நூல், “இவ்விரகசிய சாளரத்தால் உற்று நோக்கின்”. இது கௌஷல்ய குமாரசிங்ஹவுடைய நாவல். இந்த இரண்டு புத்தகங்களையும் மொழிபெயர்த்தது விமல் சாமிநாதன்.     (மேலும்) 21.07.18

._______________________________________________________________________

வாழ்வை எழுதுதல் - அங்கம் 01

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி, கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தான்டி"
  அலிபாபாவும் நாற்பது திருடர்களும்

                                                                             முருகபூபதி

பிரதமராக இருந்த டீ.எஸ். சேனாநாயக்கா, 1952 ஆம் ஆண்டு காலிமுகத்திடலில் குதிரைச்சவாரி செய்தபோது தவறி விழுந்து இறந்துபோனார்.  அவரது மகன் டட்லியா , சேர். ஜோன் கsolutionொத்தலாவலயா என்ற உட்கட்சி போராட்டத்தில் டட்லி  வென்றார்.  அவர் வெளிநாடு சென்றபோது தன்னை பதில் பிரதமராக்கவில்லை என்ற கோபத்தில் பண்டாரநாயக்கா தனிக்கட்சி தொடங்கினார். அதன் பெயர் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.தந்தைக்குப்பிறகு தனையன் டட்லி இடைக்காலப் பிரதமராகி,  பங்கீட்டரிசி விலையுயர்வினால் இடதுசாரிகள் ஆரம்பித்த ஹர்த்தால்  போராட்டத்தினால் பதவியை துறக்க நேர்ந்தது.  அதன்  பிறகு சேர். ஜோன். கொத்தலாவல பிரதமரானார். அவருக்கு யாழ்ப்பாணத்தில் மாலை மரியாதையுடன் தடல்புடலாக வரவேற்பை தமிழ் மக்கள் வழங்கியமையால், தான் கொழும்பு திரும்பியதும், தமிழ் - சிங்கள மொழிகளுக்கு சம அந்தஸ்து கொடுப்பேன் என்றார்.அவரது பேச்சைக்கேட்ட தென்னிலங்கை கடும்போக்காளர் மேத்தானந்தா என்பவர், " சரிதான் இனிமேல் சிங்களவரும் தமிழ் படிக்கவேண்டித்தான் வரும்" என்று பிரசாரம் செய்தார்.  இதனைப்பார்த்த சேர். ஜோன். கொத்தலாவல, தனது சிங்கள வாக்கு வங்கி சரியப்போகிறது எனப்பயந்து, 1956 இல் களனியில் நடந்த தனது யூ.என்.பி. கட்சியின் மாநாட்டில் " தனிச்சிங்களமே ஆட்சி மொழி" எனச்சொல்லி அந்தர் பல்டி அடித்தார்.   (மேலும்) 21.07.18

._______________________________________________________________________

குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் மனித எச்சங்கள்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு - நாயன்மார் கட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளனmannar akzhvu2.   யுத்த காலத்தில் முன்னரங்கு காவலரன் அமைத்து இராணுவம் நிலை கொண்டிருந்த குறித்த இடத்தில் இருந்தே நேற்று மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன.   இருப்பினும் இனங்காணப்பட்ட மனித எச்சங்களை பொருட்படுத்திக் கொள்ளாமல் அங்கு மேற்கொள்ளப்படும் நீர்விநியோகத்தின் நிலக்கீழ் தாங்கி அமைக்கும் நடவடிக்கைகள் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கல்வியங்காடு – நாயன்மார் கட்டுப் பகுதியில் கிளிநொச்சி இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகத்தினை மேற்கொள்வதற்கான நிலக்கீழ் நீர் தாங்கி நிர்மானிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகள் இந்திய நிறுவனத்தின் ஒப்பந்தகாரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.    (மேலும்) 21.07.18

._______________________________________________________________________

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களின் 90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து அனைத்து அறிக்கைகளும் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இன்றைய விசாரணையின் போது பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்தது.அதன்படி அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பதற்காக பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளவர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடுமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.அதன்படி நீதிமன்றத்தால் இன்று (20) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

._______________________________________________________________________

 முகநூல் பதிவுக்கு எதிராக  தவிசாளர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு


கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் முகநூல் பதிவு ஒன்றுக்கு எதிராக கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில்  முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இன்று(20) கிளிநொச்சி பfa.klொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கிளிநொச்சி பொதுச் சந்தையின் நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல்லை  பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்கள்   நாளை(21) திகதி  நாட்டுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை கரைச்சி பிரதேச சபையினரால்  புதிய கட்டத்திற்கு  வியாபாரிகளை கொண்டு அடிக் கல் நாட்டப்பட்டது என வியாபாரிகள்  தெரிவித்திருந்தனர். இதனை  கிளிநொச்சி இளைஞன் ஒருவன் தனது முகநூலில் பிரதமர் அடிக்கல்  நாட்டவுள்ள திட்டத்திற்கு பிரதேச சபை தவிசாளர் அடிக்கல் நாட்டிவைத்து நாட்டின் பிரதமரை  இழிவுப்படுத்தியுள்ளார் என பதிவு ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இது தன்னை அவதூறு செய்த பதிவு என தெரிவித்தே கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் முறைப்பாடு செய்திருந்தார். இதனை தொடர்ந்து விசாரணையை மேற்கொண்ட பொலீஸ் இந்த முறைப்பாட்டு வழக்கினை நீதி மன்ற விசாரணைக்கு அனுப்பியுள்ளனா்.இது தொடர்பில்  பொலீஸ் நிலையத்தில் வைத்து  தவிசாளர் அ.வேழலமாலிகிதனிடம்  கருத்து கேட்ட போது அவர் கருத்து  கூற  மறுத்துவிட்டார்.

._______________________________________________________________________

தமிழகத்தில் இலங்கை தம்பதியினர் கைது!! இவர்கள் செய்த வேலை...

தமிழகம், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இடம்பெற்ற சிறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.திருச்சியின் ஊடாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயற்சித்த போதே துவாக்குடி காவல்துறையினரால் அவர்கள் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.நாமக்கல் மாவட்ட ஏதிலிகள் முகாம் ஒன்றில் தங்கியிருந்த 33 வயதுடைய ஆணும், அவரது 22 வயது மனைவியுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, குறித்த இலங்கை தம்பதியினர் சென்னையிலுள்ள புழல்சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

._______________________________________________________________________

விஜயகலா விவகாரம் / அமைச்சர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட சர்vijayakalaச்சைக்குரிய கருத்து தொடர்பில் குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர்களிடம் வாக்குமூலம் பதிவுசெய்ய சபாநாயகரின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படும் குற்றங்கள் தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்குவதே தமது இலக்கு என விஜயகலா மகேஸ்வரன் கருத்து வெளியிட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அரச அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் உட்பட 40 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.இதேநேரம், குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்து தருமாறு அரசகரும மொழிகள் திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ள நிலையில், அந்த மொழிபெயர்ப்பு இன்றைய தினத்திற்குள் தமக்கு கிடைக்கும் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.இந்த நிலையில், வழக்கு விசாரணைகளை அடுத்த மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், விசாரணைகளின் முன்னேற்றத்தை அன்றைய தினம் அறிக்கையிடுமாறும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

._______________________________________________________________________

 கூகுள் நிறுவனத்திற்கு 4.3 பில்லியன் யூரோ அபராதம்

கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் 4.3 பில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்ட் கைபேசி இயங்குதளத்திற்குள்ளgoogle செல்வாக்கை கைபேசி சந்தையில் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.பெல்ஜியம் தலைநகர் பிரெஸல்ஸில் செய்தியாளர்களை நேற்று (18) சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகப் போட்டிகளுக்கான ஆணையர் மார்கரித் வெஸ்டேஜர் இதனை தெரிவித்தார்.முன்னதாக, கூகுள் நிறுவனம் தனது இணையத்தள சேவையில் தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பது, பிற நிறுவனங்களை மறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதான குற்றச்சாட்டில் கடந்த 2017-இல் ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இப்போது, அது தொடர்பாக மீண்டும் தீவிரமாக விசாரணை நடத்தி கூடுதல் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து கூகுள் மேன்முறையீடு செய்யும் என தெரிகிறது.இணையத்தளத்தில் பொருட்களை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் கூகுள் மூலம் தேடும்போது, தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்பதே பிரதான குற்றச்சாட்டாகும்.

._______________________________________________________________________

 கிளிநொச்சி நகரில் மர்ம மையம்?

-       கருணாகரன்


கிளிநொச்சி நகரில் ஒரு முக்கியமான மையம். இதற்கு முன்பாக பொலிஸ்  நிலையம் உள்ளது. ஆனால், இந்த மையத்திற்குள் என்ன நடக்கிறது என்று பொலிசுக்குத் தெரியாது.kl.ground அருகிலே, இந்த மையத்தின் ஒரே வேலியோடு அக்கம் பக்கமாக இருக்கிறது இராணுவ முகாம். அவர்களுக்கும் இதற்குள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாது. இந்த மையத்திலிருந்து சரியாக முன்னூறு மீற்றர் தொலைவில் உள்ளது மாவட்டச் செயலகம் (அரசாங்க அதிபர் பணிமனை). அவர்களுக்கும் இதற்குள் என்ன நடக்கிறது என்று தெரியாது. இப்படியே கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர், மாகாணசபையினர், பிரதேச சபை உறுப்பினர்கள், உள்ளுர் மட்டப்பிரமுகர்கள், மதத்தலைவர்கள், சனங்கள், பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என எவருக்குமே தெரியாது இந்த மையத்தில் என்ன நடக்கிறது என்று. ஏன் இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், முப்படைகளின் தளபதிகள் யாருக்குமே தெரியாது இதைப்பற்றி. எந்தச் சோதிடரிடமாவது கேட்டுப்பாருங்கள். அவர்களுக்காவது ஏதாவது தெரியுமா என்று.      (மேலும்) 20.07.18

._______________________________________________________________________

22 வருடங்களாக கடற்படையின் ஆதிக்கத்தில் இருந்த பகுதி விடுவிப்பு

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு சமீபமாக, ஆலponnalaiய அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினர் இன்று (19) மாலை 6.30 மணியளவில் அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.   22 வருடங்களாக அன்னதான மடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த கடற்படையினர், அன்னதான மடத்திற்கு சொந்தமானவர்கள் தொடர்ந்து விடுத்து வந்த வேண்டுகோளினைத் தொடர்ந்தே இன்று வெளியேறியுள்ளனர்.  தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கடந்த 1996 ஆம் ஆண்டு அரச படைகள் யாழ்.குடாநாட்டைக் கைப்பற்றியபோது, பொன்னாலையும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.ஒரு சில மாதங்களின் பின்னர் பொன்னாலை முற்று முழுதாக கடற்படையினரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.  (மேலும்) 20.07.18

._______________________________________________________________________

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயார்

: சிறுபான்மை மக்கள் ராஜபக் ஷமாரைப்  பார்த்து பயப்படவேண்டாம்.  எம்மைப்பற்றி  பொய்யான  பிரசாரம் செய்யப்படுகின்றது


(நேற்றைய தொடர்ச்சி)


கேள்வி : உங்கள் ஆட்சிக்காலப்பகுதியில் காணாமல்போனோர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திருப்தி தருகின்றனவா?

பதில் : யுத்தம் முடிந்ததும்  நாங்கள் ஒரு புள்ளிவிபரக்கணக்கெடுப்பை  சgota-10ெய்தோம். அந்தக் கணக்கெடுப்பை புள்ளிவிபரத்திணைக்களமே செய்தது.அந்தக் கணக்கெடுப்பில் சர்வதேச சமூகமோ, புலம்பெயர் மக்களோ  மகிழ்ச்சி  அடைய முடியாத  பெறுபேறே வந்தது.அந்த அறிக்கையின்படி   இக்காலப்பகுதியில்    புலிகள் உறுப்பினர்கள் உட்பட   7ஆயிரம் பேரளவிலேயே காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது.  அதேபோன்று  யுனேஸ்கோ அமைப்பு எமது அரசாங்கத்திற்கு தெரியாமல் வடமாகாணத்துடன் இணைந்து  ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.   அதில்  மூவாயிரம் பேரளவிலேயே எண்ணிக்கை காணப்பட்டது.  இராணுவம்   பலரை  முகாம்களில்  மறைத்து வைத்திருப்பதாக சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.  அது முழுமையான  பொய்யான தகவலாகும்.      (மேலும்) 20.07.18

._______________________________________________________________________

வட மாகாணத்தை தெற்கிலிருந்து எதிர்ப்பதும் சிங்கள மக்கள் முஸ்லிம்களை எதிர்ப்பதும் தேசப்பற்றாக அமையாது

 அனுரகுமார திசாநாயக்க

வட மாகாணத்தை தெற்கிலிருந்து எதிர்ப்பதும் சிங்கள மக்கள் முஸ்லிம்களை எதிர்ப்பதும் தேசப்பற்றாக அமையாது என ஜே.வீ.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தanura dissanayakeுள்ளார்.    நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகையில், சீன துறைமுக பொறியிலாளர் நிறுவனத்தினால் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு 7.6 மில்லியன் டொலர்கள் நிதி வழங்கப்பட்டதாக வெளியான செய்திகுறித்த விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய அனுரகுமார திசாநாயக்க, தேசப்பற்று என்ற விடயத்தை வலியுறுத்தி கோஷம் எழுப்புகின்றவர்கள் நாட்டின் இறைமையை கேள்விக்குறியாக்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சீனாவின் அதீத கடன்களின் மூலம் இலங்கையின் இறைமையை பாதித்துள்ளது.  ஆனால் விஜயகலா மகேஸ்வரனின் விடயத்தை முன்னிறுத்தி போராட்டம் நடத்தியும், முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டி விட்டும், வடக்கிற்கு எதிராக தெற்கிலிருந்து குரல் எழுப்பியும் தேசப்பற்றை வெளிப்படுத்த சிலர் முயற்சிக்கின்றார்கள்.   (மேலும்) 20.07.18

._______________________________________________________________________

கிளிநொச்சியில் டெங்கு கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் தாமதம் - பொது மக்கள் தெரிவிப்பு

கிளிநொச்சியில் டெங்கு கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் தாமதம் - பொது மக்கள் தெரிவிப்பு  அவ்வாறில்லை என்கிறார் பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர்*denque kilinochchi     கிளிநொச்சி மாவட்டத்தில்  டெங்கு   காச்சல் பரவாமல்   மேற்கொள்ளப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தாதம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது  டெங்கு நோய் பராவது தடுப்பதில் புகையூட்டல் மற்றும் சுற்றுச்சூழலை நுளம்புகள் வளரும் பொருட்கள் இல்லாது சுத்தமாகப் பேணுதல் ஆகிய இரண்டும் பெரும்பங்கு வகிக்கின்றன.ஒருவர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருக்கிறார் எனச் சந்தேகம் எழுந்ததும் அதுகுறித்துச் சிகிச்சை வழங்கும் வைத்தியரால் நோயாளியின் வசிப்பிடம் அமைந்துள்ள பகுதிக்குரிய சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவித்தல் வழங்கப்படும்.    (மேலும்) 20.07.18

._______________________________________________________________________

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிப்பு

முஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாக, விவாகரத்து சரத்தில் திருதslmc10்தம் கொண்டுவருவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப், தனது அறிக்கை குறித்து இன்று (19) முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்.  பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர் றிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பிரதியமைச்சர்களான அலிசாஹிர் மௌலானா, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.எம். இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டனர்.     (மேலும்) 20.07.18

._______________________________________________________________________

பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள விஷேட அறிக்கை

இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில் நடைபெற உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார். இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றுகின்றனர். இதில் இரண்டு இலட்சத்து நான்காயிரத்து 446 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர். தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலமாக அனுபப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்கவில்லை என்றால் விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை பயன்படுத்தி www.doenets.lk என்ற இணையதளத்தில் News headline என்ற தலைப்பின் கீழ் அனுமதிப்பத்திரத்தை தரவிறக்கம் செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.அவ்வாறு இல்லாவிடின் 0112 784 208, 0112 784 537, 0113 188 350, 0113 140 314 மற்றும் 0718 323 658 ஆகிய இலக்கங்களுக்கு ​தொடர்பு கொண்டு தொலைநகல் மூலம் பரீட்சை அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

._______________________________________________________________________

அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளுடனும் கிழக்குத் தமிழர் ஒன்றியம் பேச்சுவார்த்தை

“எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சார்பில் அதிஉச்சபட்ச ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து ஒரே அணியில் போட்டியிட வேண்டும்” என்ற கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைச் சாத்தியமாக்கும் செயற்பாடுகளின் ஒரங்கமாக அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடாத்தப் பெற உள்ளன. அதற்கிணங்க எதிர்வரும் 20ஆம் திகதி மட்டக்களப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடனும், 21ஆம் திகதி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனும் (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்), 22ஆம் திகதி வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடனும் (ரெலோ) மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடனும் (ஈ.பி.ஆர்.எல்.எப்)கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் சந்திப்புகள் நடைபெறவுள்ளதாகக் கிழக்குத் தமிழ் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயற்குழுச் செயலாளர் பொறியியலாளர் வ.பரமகுருநாதன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஏனைய கட்சிகளுடனும் சந்திப்புகள் நடைபெற்று இம்மாத முடிவுக்குள் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற உத்தேசிக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

._______________________________________________________________________

எல்.ரீ.ரீ.ஈ சார்பான மனநிலையை களையச்செய்வதற்கு ரத்னபிரியா பந்துவிடம் இருந்து ஒரு முன்னுதாரணத்தை எடுத்துக் கொள்க

                               எம்.எஸ்.எம் அயூப்

pujith

சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, அவரது பிரதி அமைச்சர் நளின் பண்டார ஜயமகா மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் நாயகம் பூஜித் ஜயசுந்தர ஆகியோரின் வடக்குக்கான விஜயம், அந்தப் பிரதேசத்தில் நிலவும் எல்.ரீ.ரீ.ஈ சார்பான மனநிலையை களைவதற்கான ஒன்று என்று புதன்கிழமை டெய்லி மிரர் பத்திரிகையில் வெளியான செய்தி; அத்தகைய ஒரு மனோநிலையை மீண்டும் எழுவதை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. உண்மையில் ஒரு தசாப்தத்துக்கு முன்பு இந்தப் பிராந்தியத்தில் ஓங்கியிருந்து ஆட்சி நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (எல்.ரீ.ரீ.ஈ)  சாதகமான சில சம்பவங்கள் மூலம் தமிழ் சமூகத்திடையே ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது.இந்த நிலமையின் விளைவை வடக்கிலுள்ள தமிழ் மக்கள் (கிழக்கிலும் கூட ஓரளவிற்கு) அவர்கள் முன்பு ஒருபோதும் உணர்ந்திராத சில உண்மைகளை இப்போது உணரத் தொடங்கியிருப்பதாகக் கருத முடியாது.      (மேலும்) 19.07.18

._______________________________________________________________________

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயார்

  யுத்தம் முடிந்த பின்னர் கடந்து சென்ற ஐந்து வருடங்கள் தொடர்பில் விஜயகலா பேசவில்லை. அவர் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியை பேசுகின்றார். 

யாழ்.குடாநாட்டை 1998 ஆம் ஆண்டு அரசாங்கம் மீட்டது.எனினும் அந்தப் பிரதேசம் ஒரு பங்கர் போன்றே காணப்பட்டது.  யுத்தத்தின் பின்னர்  அனைத்து இடங்களில் இருக்கினGota1்ற இராணுவத்தினரை  முக்கியமான இடங்களைத் தவிர்த்து  குறைப்பதற்கு   தீர்மானம் எடுத்தோம்.இன்று விடுவிக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் இந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு  உட்பட்டவையல்ல.எமது அரசாங்கம்   அன்று எடுத்த முடிவு.  தெல்லிப்பழை கீரிமலை காங்கேசன்துறை உள்ளிட்ட  இடங்களை நாங்கள் விடுவித்தோம்.பலாலிப் பகுதியை மட்டுமே எம்மால் விடுவிக்க முடியாமல் இருந்தது.  அது  தொடர்பிலும்  ஒரு  திட்டம் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.கொழும்பிலிருந்த பல்வேறு மக்களின் வீடுகள் யாழ்ப்பாணத்தில் அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன. அர்ஜுன மகேந்திரனின் தந்தையும் தனது யாழ்ப்பாணத்திலிருந்த வீட்டை  என்னிடம் வந்து கேட்டு விடுவித்துக்கொண்டார்.கொழும்பு முன்னாள் மேயர் கணேசலிங்கத்தின் பாரியாரும்   யாழில் உள்ள அவரது இல்லத்தைப் பெற்றுக்கொண்டார்.இப்படித்தான் நாம் சேவையாற்றினோம். 2015ஆம் ஆண்டு எமக்கு அதிகாரம் கிடைத்திருந்தால் நாம் அடுத்த பிரச்சினைகளையும் தீர்த்திருப்போம்.    (மேலும்) 19.07.18

._______________________________________________________________________

யாழ். பொதுசன நூலக வாசகர் வட்டத்தின்
மாதாந்த உரை நிகழ்ச்சி!


உலகக் கிண்ணக் காற்பந்தாட்டம் – 2018 :
உரைகளும் கலந்துரையாடலும்!

உரையாற்றுவோர் :
1.ப. தர்மகுமாரன்
2.சி. விமலன்
22. ௦7. 2018  ஞாயிற்றுக்கிழமை,
பி. ப. 4. 00 மணி,
நூலக குவிமாடக் கேட்போர்கூடம்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!
வாசகர் வட்டம்

._______________________________________________________________________

யார் 2020 ஜனாதிபதி வேட்பாளர்? - போலி ஆவணத்தால் சர்ச்சை


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட ஊடக அறிக்கை போல், போலியான ஆவணம் ஒன்றை தயாரித்து சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதாக, முன்னாGotabhaya_Rajapakse_AFP (1)ள் ஜனாதிபதியின் ஊடக செயலாளர் ரொஹன் வெலிவிட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இனந்தெரியாத சிலர் சமூக வலைத்தளங்களில் நேற்று (17) வௌியிட்டிருந்த போலியான அறிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.   இதேவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் அறிவிக்கவில்லை என இன்று வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூர் செல்லும் வரை காத்திருந்து, சிலர் இந்த போலி ஆவணத்தை வெளியிட்டுள்ளதாகவும் ரொஹன் வெலிவிட்ட தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.    (மேலும்) 19.07.18

._______________________________________________________________________

இலங்கை தமிழர்  ஆசிரியர் சங்கம்  செயற்பாடற்ற சங்கம்- தொழிற்சங்க  ஆணையாளர் மனோஜ் பிரியந்த


 இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்  செயற்பாடற்ற சங்கம் எனவும் கடந்த 2006,2007 க்கு பின்னர் அதென் செயற்பாடுகள் தொடர்பில் எவ்வித ஆவணங்களும் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை எனவும்  இலங்கை  தொழிற்சங்க ஆணையாளர் கோ.பி.மனோஜ் பிரியந்த   தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தின் கோரப்பட்ட தகவலுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு அறிவித்துள்ளார். குறித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மேற்படி சங்கமானது  இறுதியாக வருடாந்த அறிக்கை கடந்த 2006 மற்றும் 2007 காலப்பகுதிக்கானதே சமர்பிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து சங்கத்திற்கு அறிவித்த போதும்  அதற்கு பின்னர் எவ்வித ஆவணங்களும் சமர்பிக்கப்படவில்லை எனவே சங்கமானது செயற்பாடற்ற சங்கமாகவே கருதப்படுகிறது.எனவே  இது தொடர்பில் 25-06-2018   சங்கத்தின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவும் அப்பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது      (மேலும்) 19.07.18

._______________________________________________________________________

மன்னார் நகர நுழைவாயிற் பகுதியில்  40க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு

மன்னார் நகர நுழைவாயிற் பகுதியில் உள்ள வர்த்தக காணிப்பரப்பmannar akzhvuில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வு பணிகளில் இதுவரை, 40க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவற்றுள் 27 எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் வெளியில் தோண்டி எடுக்கப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் பெண்கள் கைக்கு அணியக்கூடிய காப்பு என சந்தேகிக்கப்படுகின்ற தடயப் பொருள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் அணைத்தவாறு அருகருகே இரு மனித எச்சங்கள் ஒன்றாக காணப்பட்டமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று அகழ்வு பணிகள் இடம்பெற்ற புதிய இடத்திலும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.     (மேலும்) 19.07.18

._______________________________________________________________________

இலங்கை அரசாங்கத்திடம் நிதி பெற்ற வட அயர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்

இலங்கை அரசாங்கத்திடம் இருந்து நிதிப்பெற்ற குற்றத்துக்காக, வட அயர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பெய்ஸ்லி ஜுனியர், 10 நாட்களுக்கு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த நாட்டின் பொதுசபையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு இலங்கைக்கு தனிப்பட்ட சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட அவர், அந்த காலத்தில் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து 10 லட்சம் ஸ்ரேலிங் பவுண்டுகளை பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.இதனை அவர் மறுத்து வந்தார்.எனினும் அந்த நாட்டின் நாடாளுமன்றக் குழு மேற்கொண்ட விசாரணையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவரை 10 தினங்களுக்கு நாடாளுமன்ற பதவியில் இருந்து ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

துப்பாக்கி விவகாரம்

வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன் - அனந்தி சசிதரன்


வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கூறியுள்ளார்.ananthisasitharan   வடமாகாண சபையில் உள்ள பெண் அமைச்சர் ஒருவர் அரசையும், இராணுவத்தையும் விமர்சித்துக் கொண்டு, அவர்களிடமே கைத்துப்பாக்கி ஒன்றை பெற்றுள்ளார் என மாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் கடந்த மாகாணசபை அமர்வில் கூறியிருந்தார். இது தொடர்பாக இன்று அனந்தி சசிதரன் நடத்தியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,வடக்கு மாகாணத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாக உள்ளது. வடக்கில் உள்ள ஒவ்வொரு பெண்களும் தமது பாதுகாப்பிற்காக துப்பாக்கியை வழங்குமாறும், அதனை பயன்படுத்துவதற்கு அனுமதியை தருமாறும் கோரும் அளவிற்குத்தான் பெண்களின் பாதுகாப்பு நிலை உள்ளது.    (மேலும்) 19.07.18

._______________________________________________________________________

 விக்கினேஸ்வரன்: தமிழ் அரசியலின் பலவீனமும் கீழ்மையும்


-          கருணாகரன்

எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ள வட denis-wiknesvaranமாகாணசபையின் இறுதி நாட்கள் கூட பயனுள்ளதாக அமையும் என்று  நம்புவதற்கில்லை. இன்னும் இரண்டரை மாதத்துடன் ஆயுளை முடித்துக்  கொள்ளவுள்ள விக்கினேஸ்வரன் தலைமையிலான இந்தச் சபையில் இப்பொழுது முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரனின் பிரச்சினை விவகாரமாகியுள்ளது. இந்தப் பிரச்சினைக்குரிய பதிலைச் சொல்ல முடியாத நெருக்கடிக்குள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தள்ளப்பட்டுள்ளார்.    இதனால் 16.07.2018 அன்று சபை அமர்வில் டெனிஸ்வரனின் விவகாரம் விவாதத்திற்கு எடுக்கப்பட்டபோது அங்கே விக்கினேஸ்வரன் இருக்கவில்லை. அன்றைய சபை அமர்வில் கலந்து கொள்ள இயலாது என்று முதல் நாள் இரவு ஒரு மின்னஞ்சலில் தகவலை சபை முதல்வர் சி.வி.கே.சிவஞானத்திற்கு அறிவித்து விட்டுத் “தலைமறைவாகி” விட்டார் விக்கினேஸ்வரன். கூடவே ஏனைய அமைச்சர்களும் சபைக்கு வராமல் மறைந்து விட்டனர். இதனால் சபை அர்த்தபூர்வமாக இயங்க முடியாத நிலைக்குள்ளானது. அதாவது முதலமைச்சரும் அமைச்சரவை உறுப்பினர்களும் இல்லாத நிலையில் சபை தனது பொறுப்பு நிலையை இழந்திருந்தது. ்.    (மேலும்) 18.07.18

._______________________________________________________________________

சொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 20

நடுவழியில் இன்ப அதிர்ச்சி!!!

இரண்டு மொழிகளும் தெரியாத ஆயுதம் ஏந்திய தலைவர்களும்

இரண்டு மொழிகளும் பேசும் ஜனநாயகத் தலைவர்களும்

                                                                                       முருகபூபதி

1983 ஆம் ஆண்டு  இலங்கைத்தமிழர்களுக்கு வேதனையும் சோதனRohana_Wijeweeraையும் இழப்பும் விரக்தியும் நிரம்பிய காலம். இன்றும் அந்த ஆண்டின் அமளியும் அவலமும் நினைவுகூரப்படுகிறது.  ஆண்டுதோறும் வெலிக்கடை  சிறையில் நடந்த படுகொலைகளும் தேசத்தை ஆட்டிப்படைத்த வன்செயல்களும் தமிழ் ஊடகங்களில் படங்களுடன் ஜூலை மாதங்களில் பேசுபொருளாகிவிடும்.   அக்காலப்பகுதியில் பதவியிலிருந்த ஜே.ஆர்.ஜெயவர்தனா தலைமையிலிருந்த யூ.என்.பி. அரசின் ஆசீர்வாதத்துடன் அனைத்து பேரவலங்களும்  அரங்கேறியபோதிலும், நாட்டு மக்கள் அனைவரதும் சர்வதேச சமூகத்தினதும் கவனத்தை திசைதிருப்புவதற்காக குறிப்பிட்ட இனக்கலவரத்தை தூண்டியவர்கள் இடதுசாரிகளேஸ!!!என்று அபாண்டமாக பச்சைப்பொய் பேசியவர்தான் அந்த தார்மீகத்(?)தலைவர். இந்திராகாந்தியினால் " நரி " என்று வர்ணிக்கப்பட்ட  அந்த மனிதர்.    (மேலும்) 18.07.18

._______________________________________________________________________

மதுரை,திருச்சி விமான நிலையங்களில் இருந்து 17.7.18 அன்று 27 இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்பினர்.

                                                      அருளம்பலம்.விஜயன்

தமிழகத்தில் உள்;ள இலங்கை அகதிகள் தாயகம் திரும்புதல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இப்படி தாயகம் திருப்புகிறவர்கள் அகதிகள் முகாம்களில் இருந்ததும்,முகாமிற்கு வெளியில் இருந்தும்  திரும்புகிறார்கள்.இவர்கள் சொந்தச் செலவிலும்,ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகத்தின் அனுசரனையுடனும் செல்கிறார்கள்.ஐக்கிய நாடுகள் அகதிகள் அனுசரனையுடன் தாயகம் திரும்ப நினைப்பவர்களே அதிகமாக உள்ளனர். இவ்வழி முறையின் மூலம் தாயகம் திரும்புகிறவர்கள்.பலவகை உதவிகள் தங்களுக்குக் கிடைக்கும் என நினைக்கிறார்கள்.அதனால் இவ்வழியினை தேர்வு செய்கிறார்கள்.இவ் வழி முறையே சிறந்;ததாகவும்,தாயகம் திரும்புகிறவர்கள் மீது கரிசனைப்பார்வையும் பல தரப்பாலும் ஏற்பட்டு, அவர்களது இழந்த வாழ்;க்கையை கட்டியெழுப்ப அது அடித்தளமாகவும் அமைகிறது. தமிழகத்தில் கடல்வழியே வந்தவர்கள்,விமானத்தில் வந்தவர்கள் என  அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.இவர்களில் முகாமில் இருப்பவர்கள் முகாமில் பதிவு பெற்று இருக்க வேண்டும், வெளியில் இருப்பவர்கள் பொலிசில் பதிவு பெற்றிருக்க வேண்டும்.   (மேலும்) 18.07.18

._______________________________________________________________________

விஜயகலா மகேஸ்வரனின் வெளியிட்ட கருத்து தொடர்பில்  விசாரணைகள் ஆரம்பம்

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விடுதலைபvijayakala speech்புலிகள் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வெளியிட்ட கருத்து தொடர்பில் இன்று காலை முதல் யாழில் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.    திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவினாரால் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். கடந்த 02 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பணி நிகழ்வில் கலந்துகொண்ட விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களின் பின்னர், விடுதலைப் புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டுமென உரையாற்றியிருந்தார். உரையின் பின்னர் ஏற்பட்ட குழப்பங்களின் காரணமாக, அந்நிகழ்வில் கலந்துகொண்ட வட மாகாண முதலமைச்சர் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.,சரவணபவன் உட்பட யாழ்ப்பாணம் பொலிஸ் உத்தியோகத்தர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.    (மேலும்) 18.07.18

._______________________________________________________________________

29வது வருட நினைவு அஞ்சலி

கொழும்பில் 1989 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைக்கென வந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டணித் தலைவர்கள் அமரர்கள் அ.அமிர்தலிங்கம் மற்றும் வெ. யோகேஸ்வரன் ஆகியோரின் 29வது வருட நினைவு அஞ்சலி தமிழர் விடுதலைக்கூட்டணியின் யாழ்ப்பாண தலைமையகத்தில் கடந்த 13.07.2018 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றபோது எடுக்கப்பட்ட படங்கள்.

amir-mamiry

._______________________________________________________________________

சுமார் 3 கோடி அமெரிக்க டொலருடன் நான்கு வௌிநாட்டவர்கள் கைது

2 கோடியே 75 இலட்சத்து 24 ஆயிரம் அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் வௌிநாட்டவர்கள் நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று அதிகாலை இந்தியாவின் மும்பாய் நோக்கி பயணிப்பதற்காக விமான நிலையம் வந்த சீன மற்றும் நேபாள நாட்டவர்கள் நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் இந்நாட்டில் கெசினோ சூதாட்டத்தின் மூலம் குறித்த பணத்தொகையை வென்றுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

._______________________________________________________________________

குழந்தைக்கு மதுபானம் வழங்கிய தந்தை உட்பட மூவர் கைது

சமூக வலைத்தளங்களில் வெளியான குழந்தைக்கு மதுபானம் கொடுக்கும் விதமான காணொளி தொடர்பில் குறித்த குழந்தையின் தந்தை உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்த காணொளி தொடர்பில் உடனடியாக செயற்பட்ட மீகலாவ பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.மீகலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணன்கமுவ பகுதியில் உள்ள வீட்டிலேயே குறித்த சம்பவம் கடந்த 14 திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த காணொளியில் 1 வருடமும் 1 மாதமுமான வயதுடைய குழந்தைக்கே மதுபானம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (16) குழந்தையை அநுராதபுரம் நீதிமன்ற வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குழந்தையை கொடுமை படுத்திய குற்றம் தொடர்பில் குழந்தையின் தந்தை உட்பட மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களை நாளை (18) கல்கமுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் மீகலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

._______________________________________________________________________

பகிடிவதை செய்த மாணவர்கள் 17 பேருக்கு வகுப்புத் தடை - 4 பேர் இடைநீக்கம்

முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலரை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில்  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்தின் 17 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் , 4 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.அதேபோல் , தண்டனை விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் , நேற்று பிற்பகல் 6 மணிக்கு முன்னர் மாணவர் விடுதிகளில் இருந்து வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதும் மாணவர்கள் வௌியேறாத காரணத்தால் அக்கரைப்பற்று காவற்துறையில் பல்கலைக்கழக நிர்வாகம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.எவ்வாறாயினும் , நேற்று மதியம் பொல்லுகளுடன் விடுதியில் நுழைந்த பல்கலைக்கழக பாதுகாவலர்கள் குழுவொன்று குறித்த மாணவர்களை தேடும் சிசிடிவி காணொளி சமூக வலைத்தளங்களில் வௌியாகியிருந்தது.எவ்வாறாயினும் , வகுப்பத்தடை மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் குறித்த சந்தர்ப்பத்தில் விடுதியினுள் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

._______________________________________________________________________

காலச்சுவடுவெளியீட்டில் ஆசி கந்தராஜாவின் ‘கள்ளக் கணக்கு’ சிறுகதைத் தொகுப்பு புதுமையானது, இரட்டிப்பு மகிழ்ச்சி தருவது.

அ.முத்துலிங்கம்

என்னை நேர்காணல் செய்தபோது பத்திரிகையாளர் ஒரு கேள்வி கேட்டார். 'உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?' நான் ஒரு நிமிடம்கூட யோசிக்காமல் 'கார்ல் இயக்னெம்மா' என்று muthulingamபதில் கூறினேன். கேட்டவருக்கு ஒன்றும் புரியவில்லை. அப்படி ஓர் எழுத்தாளரை அவர் கேள்விப்பட்டதே கிடையாது. இவர் ஓர் அமெரிக்க விஞ்ஞானி, இயந்திரவியல் பேராசிரியர். இயந்திரவியல் ஆராய்ச்சிகளில் மும்முரமாக ஈடுபடும் அதே நேரம் சிறுகதைகளும் எழுதுவார். அவருடைய சிறுகதைகள் உயரிய விருதுகள் பெற்றுள்ளன. அவர் என்னை ஈர்த்ததற்கு காரணம் அவருடைய கதைகளில் விஞ்ஞானமும், கணிதமும், இயற்பியலும் ஏதோவிதத்தில்  பாத்திரமாக கலந்திருக்கும். சாதாரண வாசகருக்கு புரியும்படி விஞ்ஞான தத்துவங்கள்  கிடைக்கும். கதையை படித்த சிலநாட்களில் மறந்து போனால்கூட அதிலிருந்து கிடைத்த விஞ்ஞான அறிவு என்னுடனேயே தங்கிவிடும். பல ஆயிரம் மைல்கள் பிரயாணம் செய்து இவரை நான்  சந்தித்திருக்கிறேன்.  தீவிரமான ஆரய்ச்சிகளுக்கு நடுவே இரண்டு பாதி சிறுகதைகளும் அவர் மேசைமேல் கிடந்தன. ஆராய்ச்சிகளுக்கு இடையில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிறுகதைகளை எழுதுகிறார்.     (மேலும்) 17.07.18

._______________________________________________________________________

 பொலிவியாவில் சேகுவாரா

நடேசன்gustavo-right-stands-over-ches-corpse

தென்னமரிக்காவில் விடுவிக்க முடியாத விடுகதையாக இரண்டு விடயங்கள் உண்டு.1000 இலாமாக்களில் ஏற்றப்பட்ட தங்கம் கப்பமாக ஸ்பானியரிடம் கொடுக்கப்படவிருந்தது. அக்காலத்தில் வார்த்தையை மீறி இன்கா அரசரைக் கொலை செய்ததால் அந்தத் தங்கம் காட்டுக்குள் மறைக்கபட்டுளளது. அந்த தங்கத்தையே பலர் தென்னமரிக்கா முழுவதும் தேடினார்கள். அதுபோல் பொலிவியாவில் கொலைசெய்யப்பட்ட சேகுவராசின் உடல் புதைக்கப்பட்டிருந்தது என்பது 30 வருடங்களாகவும் புதிராக இருந்தது. அந்த இடத்தைப் பார்க்க விரும்பினாலும் நேரமும் காலமும் இல்லாததால் உலகத்தின் முதலாவது சரித்திர ஆசிரியரான ஹெரிடிற்றசைப்( Herodotus) ) பின்பற்றிய மற்றவர்களிடம் துருவி விடயத்தைப் பெறுவது எனமுடிவு செய்தேன். ‘ஏற்கனவே வாக்களித்தபடி எனக்கு இப்பொழுது சேகுவாரவின் விடயத்தைத் சொல்லிவிட முடியுமா?’ என ஆய்மாரா பெண் வழிகாட்டியிடம் காலையில் லா பஸ் விமான நிலயத்திற்கு போகும்போது கேட்டேன்.‘1997ல் வலாகிராண்டே(VALLEGRANDE) விமான நிலய ஓடுபாதையின் அருகே கண்டுபிடித்த பெரிய புதைகுழியில் ஏழு பிரேதங்களில் ஒன்று கைகள் இல்லாமல் இருந்தது. அது எமது மக்களை இராணுவ ஆட்சியில் இருந்து மீட்க வந்த சே என்று சொல்லி விட்டு கண்ணீரைத் துடைத்தாள்.   (மேலும்) 17.07.18

._______________________________________________________________________

கேரள கஞ்சாவுடன் இந்திய மீனவர்கள் கைது 

நெடுந்தீவு கடற்பரப்பு ஊடாக இலங்கைக்கு, கேரள கஞ்சாவைக் கடத்த முயன்ற இந்திய மீனவர்கள் நால்வரை, காரைநகர் கடற்படையினர் இன்று (16) கைது செய்துள்ளனர்.ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், சந்தேகத்துக்கிடமான முறையில் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய முற்பட்ட படகை மறித்து சோதனை மேற்கொண்டனர்.இதன் போது படகில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 37கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் கைபெற்றப்பட்டன.கைதான மீனவர்கள் நால்வரும் தமிழக மாநிலத்தினை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.கைதுசெய்யப்பட்ட மீனவர்களை, பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

இலங்கையில் மரண தண்டனை - ஜனாதிபதிக்கு அறிக்கை

கொழும்பில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதரகங்களினSRISENA் தலைமை அதிகாரிகள், கனடா உயர்ஸ்தானிகர் மற்றும் நோர்வே வதிவிட தூதுவர் ஆகியோரின் உடன்பாட்டுக்கு இணங்க பின்வரும் அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.    சுமார் 40 வருட காலமாக இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ள மரண தண்டனையை மீள நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெளிவுபடுத்தல் ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் நோர்வே ஆகியவறின் உயர்ஸ்தானிகராலயங்கள் எழுத்து மூலம் கோரியுள்ளன. இந்த கடிதத்தில் தாம் சகல விதமான குற்றங்களுக்கும், எவ்வேளையிலும் மரண தண்டனை வழங்கப்படுவதை கடுமையாக எதிர்ப்பை கொண்டுள்ளதாக இந்த உயர்ஸ்தானிகராலயங்கள் தெரிவித்துள்ளன.   மனித கௌரவத்துக்கு பொருத்தமற்றதாக மரண தண்டனை அமைந்துள்ளது.   (மேலும்) 17.07.18

._______________________________________________________________________

3 இலங்கையர்களில் ஒருவர் தொடர்பில் தெரியவந்துள்ள தகவல்

தமிழகத்தில் கடந்த தினம் கைது செய்யப்பட்ட 3 இலங்கையர்களில் ஒருவர், தொடர் வழிபறிகளில் ஈடுபட்டவர் என்று தெரியவந்துள்ளது.டைம்ஸ் ஒப் இந்தியா இதனைத் தெரிவித்துள்ளது.ராமநாதபுரம், மண்டபம் பகுதியில் வைத்து படகொன்றின் மூலம் இலங்கைக்கு வர முயற்சித்த வேளையில் 3 இலங்கையர்கள் கடந்த சனிக்கிழமை கைதாகினர்.  அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கைதானவர்களில் ஒருவர் 35 வழக்குகள் நிமித்தம் தேடப்பட்டு வந்தவர் என்று தெரியவந்துள்ளது.குறித்த 3 பேரும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஏதிலிகள் முகாமில் வசித்து வந்தவர்களாவர்.கைதான மற்றைய இருவரும் கணவன் மனைவி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

மாநிலங்களைவைத் தலைவர் என்பவர் ஒரு நடுவர்தான். அவர் ஏதேனும் ஒரு பக்கத்தில் சேர்ந்துகொண்டு விளையாடுபவர் அல்ல.

 குடியரசு முன்னாள் துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி பேட்டி

நாம் நம்மைச்சுற்றியும் உள்ள நாடுகளுடன் எப்படி நடந்துகொள்கிறோம் என்று பாருங்கள். பிரதமரின் விஜயத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற இரண்டு அமைச்சர்களினhamid ansari் விஜயத்தை அமெரிக்கர்கள் எப்படி நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். டோக்லாம் சமயத்தில் சீனர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்று பாருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மைச் சுற்றியுள்ள நம் அண்டை நாட்டவர்களுடன் நம் உறவு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். அண்டை நாட்டவர்களுடன் நம் உறவு அவ்வளவு நன்றாக இல்லை. ஆம், ஒவ்வொரு நாடும், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் ஓர் உறுப்பினர்தான். ஆனால் மாலத்தீவுகள்? செசிலிஸ்? இலங்கை கூட  என்ன நிலை? நேபாளம் ஸ அது அனைத்து வகைகளிலும் நம்முடன் மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டிய ஒன்று. பாகிஸ்தானுடன் முழுமையாக முட்டுக்கட்டை. நீங்கள் என்ன செய்ய முடியும்? பாகிஸ்தான் என்று ஒரு நாடு நம்  அண்டை நாடாக இருக்கிறது. அதனைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.   நீங்கள் அதனுடன் சண்டைக்குச் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால், அது வேறு விஷயம். ஆனால், அவ்வாறில்லாத சமயத்தில், பிரச்சனைதரும்  அண்டைநாட்டுக்காரருடன் நீங்கள் என்ன செய்ய முடியும்? இவ்வாறு ஒருவர் அண்டை நாடுகளுடன் அல்லது பிற நாடுகளுடன் வெளிப்படையாக எப்படி இருக்க வேண்டும் அல்லது இருக்கக்கூடாது என்று இருக்கிறது.     (மேலும்) 17.07.18

._______________________________________________________________________

’மரண தண்டனையை இலவசமாக நிறைவேற்றத் தயார்’

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் பட்சத்தில், மரண தண்டனையைள நிறைவேற்றும் "அலுகோசு" பணியை இலவசமாக செய்வதற்கு தான் தயார் என வயோதிப பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.சிலாபம், ஆரச்சிகட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 71வயது எல்.பி.கருணாவதி என்ற பெண்ணே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.போதைப்பொருள் கடத்தல் காரர்கள், பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பேதைப்பொருளை கொண்டுவந்து இளம் சந்ததியினரின் எதிர்காலத்தை இல்லாது செய்வதாகவும், அவர்கள் தண்டிக்கப்படவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும், சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

______________________________________________________________________

மக்கள் ஏன் ஒரு குற்றத்தைச் செய்வதில்லை?

                                        மாஸ் எல். யூசுப்

2017ம் ஆண்டில் 8,900 வீடு உடைப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தமாக 2,900 வழக்குகள்; மட்டுமே பதியப்பட்டுள்ளன. மொத்தமாக 3,350 கொள்ளைகள் நடந்துள்ளன crimesஆனால் பதியப்பட்ட வழக்குகள் 1,297 மட்டுமே.  2017ம் ஆண்டில் பதிவான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் 1700 ஆனால் வழக்கு தொடரப்பட்டவை 199 மட்டுமே. நீதியை நடைமுறைப் படுத்துவது தாமதமடைவதுக்கு காரணம் வழக்குகள் பல்வேறு மட்டங்களில் நிலுவையில் நிற்பதுதான், உதாரணமாக பூரணமாகாத காவல்துறை விசாரணைகள் அல்லது சட்டமா அதிபர் அலவலகம் அல்லது நீதிமன்றங்கள் போன்றவற்றால் இந்த தாமதம் ஏற்படுகிறது.குடும்ப அலகில் ஏற்படும் இந்த மெதுவான முறிவுக்கான குற்றவாளிகளான, பெற்றோர்கள், மதத் தலைவர்கள், மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் மக்கள் நண்பனான சமூகத்துக்கு ஏற்ற அங்கத்தவர்களை உருவாக்குவதில் தாங்கள் எங்கே குறைவிட்டுள்ளோம் என்பதைக் கவனிக்க வேண்டும். மதம் மற்றும் குற்றவியல் நடத்தை என்பனவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு நிறுவப்பட்ட ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக உள்ளது. மதம் சார்ந்த அர்ப்பணிப்புகள் இளைஞர்களை அவர்களின் சமூக பொருளாதார நிலைகளைக் கருதாது, அவர்களை தவறான நடத்தை மற்றும் மாறுபட்ட செயற்பாடுகளில் இருந்து பாதுகாக்க உதவும், இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. மதத்துடன் இணைந்த இந்த விரிவாக்கம் கூட சமூகத்தில் சாதகமான நடத்தைகளை வளர்க்கும். இளங் குற்றவாளிகளின் வாழ்க்கைமுறை திருத்தப்படாதுவிட்டால் பிற்காலத்தில் எந்தவித தடையும் இல்லாமல் குற்றங்களைச் செய்வதில் அவர்கள் நிபுணத்துவம் பெற்றுவிடுவார்கள்.  (மேலும்) 16.07.18

._______________________________________________________________________

மக்களின் குரல் ஜனநாயகத்தின் பிரதிபலிப்பு:(அமெரிக்க ஜனாதிபதியின் பிரித்தானிய விடயம்)

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-15.7.18

வெள்ளிக்கிழமை (13.7.18) லண்டன் மாநகர் பல மணி நேரங்கள் சாதாரண நிலையை மறந்து ஸ்தம்பித்து நின்றது. லண்டன் மத்தியில் எந்த விதமான போக்குவரத்துக்களுமிருprotest londonக்கவில்லை. 100.000-250.000 என்று கணிக்கப் பட்ட மக்கள் வெள்ளம் லண்டனின் தெருக்களில் அலைமோதியது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வருகைக்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்ட கொடிகள் தூக்கினார்கள். மத்தளங்கள் கொட்டினார்கள். பல்லாயிரக்கணக்கான அரசாங்க பாதுகாவலர்கள் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வரிசையாக நின்றார்கள்.ரசித்தார்கள். யாரும் எங்களைக் குறிவைத்துச் சுடவில்லை.சமூகத்துரோகிகள் என்று முத்திரை குத்தவில்லை. இதுதான் ஜனநாயத்தின் பிரதிபலிப்பு. ஜனநாயக அமைப்பின் அடிப்படை என்பது மக்களுக்கான சுதந்திரமான பேச்சுரிமை,சுதந்திரமான எழுத்துரிமை, சுதந்திரமான கலைப்படைப்புக்கள் என்று பல வகையானவை.   (மேலும்) 16.07.18

_______________________________________________________________________

வலி கிழக்கில் போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்களை பிரதேச சபை ஆரம்பித்தது

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் போதை பாவனைக்கு எதிரான விழprotest against heroinிப்புணர்வு செயற்றிடங்கள்; பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று காலை ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலியில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. கடந்த பிரதேச சபைக் கூட்டத்தில் எமது மண்ணில் இருந்து போதையை ஒழிப்பதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி பிரஸ்தபிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், முதலில் வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றான அச்சுவேலியை மையப்படுத்தியும் அதனைத் தொடர்ந்து காலப்போக்கில் ஏனைய கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவும் தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அச்சுவேலி பேருந்து நிலையத்திற்கு முன்பாக போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்கள் ஆரம்பமாகின.    (மேலும்) 16.07.18

_______________________________________________________________________

இந்தியாவில் போலி கடவுச்சீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் கைது

தமிழ்நாட்டில் போலி விமான கடவுச்சீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த fake passportஇரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.   இலங்கையர்கள் இந்தியர்களாக வெளிநாடுகளுக்கு செல்லும் வகையில் குறித்த கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளதுடன், இது தொடர்பில் 11 சந்தேகநபர்கள் ஏற்கனவே இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 10 இலட்சம் ரூபாய் செலவில் குறித்த கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்படுவதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரு இலங்கையர்களும் சுற்றுலா வீசா மூலம் தமிழ் நாட்டுக்கு வருகைத் தந்து, ​வெளிநாடு செல்வதற்காக போலி கடவுச்சீட்டுகள் கிடைக்கும் வரை வீடொன்றில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.   (மேலும்) 16.07.18

_______________________________________________________________________

வடக்கில் இராணுவ முகாம் அகற்றுவது தொடர்பான இராணுவ அறிக்கை

வடக்கில் இராணுவ முகாம் அகற்றுவதாக தொடர்பான அறிக்கை ஒன்று இராணுவத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு,   இலங்கை இராணுவம் அனைத்து நேரங்களிலும் நாட்டில் இடம்slarmy11பெறும் பாதுகாப்பு தேவைகளுக்கு தயாராகவுள்ளது. யுத்த காலத்தினுள் நாட்டிற்காக சிறந்த சேவையாற்றி யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவம் தற்பொழுது அரசினால் ஆரம்பித்திருக்கும் இனத்தை கட்டியெழுப்பும் திட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ளுகின்றன. இருந்த போதிலும் இராணுவத்தினால் நாட்டின் எதிர்காலத்தின் நிமித்தம் மேற்கொள்ளும் பணிகளுக்கு அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களில் தவறான முறைகளில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. அகையால் இந்நாட்டு மக்களின் மனத்தினுள் இராணுவம் தொடர்பான தவரான அபிப்ராயம் ஏற்படுகின்றன. மேலாண்மை சீர்திருத்தங்கள் தொடர்பாக இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் பணிகள் யுத்த காலப் பகுதியிலும் அதன் பின்பும் அதற்கு முன்பும் ஆற்றப்பட்டுள்ளன.  (மேலும்) 16.07.18

_______________________________________________________________________

மரண தண்டனையை வழங்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர் பட்டியல் நீதி அமைச்சிடம் ஒப்படைப்பு


போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனையை வழங்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர்ப் பட்டியலை நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 18 கைதிகளுக்கு போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை அலுகோசு (கைதிகளைத் தூக்கில் இடுபவர்) பதவிகளுக்காக விண்ணப்பங்களை கோருவதற்கு அடுத்த வாரம் முதல் நடவடிக்கை ஆரம்பிப்தாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

_______________________________________________________________________

வட மாகாண சபை உறுப்பினர் எஸ் சுகிர்தனின் தாயாரின் வீட்டில் நேற்றிரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணை


வடமராச்சி நெல்லியடி பகுதியில் உள்ள வட மாகாண சபை உறுப்பினர் எஸ் சுகிர்தனின் தாயாரின் வீட்டில் நேற்றிரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.வடமராச்சி நெல்லியடி பகுதியில் உள்ள வட மாகாண சபை உறுப்பினர் எஸ். சுகிர்தனின் தாயாரின் வீட்டில் நேற்றிரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகம்களை மூடி கையில் கத்தி மற்றும் தடிகளுடன் வந்த சிலர் தம்மை அச்சுறுத்தி நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றதாக வீட்டில் இருந்தவர்கள் குறிப்பிட்டனர். இதன் போது வீட்டில் மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தனின் தயாரும், தந்தையும், அம்மம்மாவும் இருந்துள்ளனர்.     (மேலும்) 16.07.18

_______________________________________________________________________

 இலங்கை அகதிகள்  3 பேர் கைது

சட்டவிரோதமாக இலங்கைக்கு படகு மூலம் தப்பிவர முயற்சித்த 3 இலங்கை அகதிகள்் தமிழகம் - ராமேஸ்வரம் பகுதியில் வைத்து கைதாகியுள்ளனர்.இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.ராமேஸ்வரத்தை அண்மித்த பகுதியில் உள்ள முகாம் ஒன்றைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தப்பிவர முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அகதிகள்் குறித்து விபரங்கள் எவையும் இன்னும் வெளியாக்கப்படவில்லை.   தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கை ஏதிலிகள் வசிக்கின்றனர். அவர்களை சுயவிருப்பத்துடன் இலங்கைக்கு திரும்ப தற்போது ஊக்கமளிக்கப்படுகிறது. இது வரையில் 3ஆயிரம் பேர் வரையில் இவ்வாறு நாடு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  எனினும் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இலங்கைவர முயற்சிக்கின்றவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 _______________________________________________________________________

போதைப் பொருள் தடை -

போலித்தேசியவாதிகளும் மரணதண்டனையும்

-          கருணாகரன்

சில நாட்களுக்கு முன்பு வடக்கில் உள்ள ஒரு நீதி மன்றம் ஒன்றில் “போdrugsதைப்பொருளுடன் தொடர்புள்ளவர்” என்ற குற்றச்சாட்டில் படைத்துறையைச்சேர்ந்த ஒருவர் மீதான வழக்கு விசாரணை நடந்தது. பொலிஸ் தரப்பே வழக்கைத் தாக்கல் செய்திருந்தது. என்றபடியால், குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றங்கள் தொடர்பாக பொலிஸ் ஆதாரங்களை முன்வைத்தது. ஆனால் வேடிக்கை என்னவென்றால், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் சார்பாக ஆஜராகியது, ஒரு காலத்தில் விடுதலை இயக்கமொன்றாக இருந்து பின்னாளில் அரசியற் கட்சியாக மாறிய அமைப்பின் பிரமுகரான சட்டத்தரணியாகும் நான் வழக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றுவதற்காக இந்தச் சட்டத்தரணி பாடாய்ப்பட்டுக் கொண்டிருந்தார். பொலிஸ் தரப்பு ஆதாரங்களை முன்வைக்கும்போதேல்லாம், இவர் அவற்றை எதிர்த்து, உடைப்பதற்கு முயன்று கொண்டிருந்தார்.      (மேலும்) 15.07.18

_______________________________________________________________________

நடந்தாய் வாழி களனி கங்கை  -- அங்கம் 09

எங்கள் தேசத்தின் தார்மீகத்தலைவர்(?) பிறந்த இல்லத்தில் ஒரு நாளிதழின் நெடும்பயணம்!

                                                                             ரஸஞானி

களனி கங்கை தீரத்தில், இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முvirakesari officeன்னர் 1943 ஆம் ஆண்டு  நடந்த சட்ட சபைத்தேர்தலில் ஒருவர் வெற்றிபெற்றார். குறிப்பிட்ட களனி பிரதேசத்திலிருந்து முதல் முதலாக அவர் தெரிவாகும்போது அவரது வயது 37. இலங்கையில் நீதித்துறை சார்ந்த ஒரு பெரியவருக்கும் செல்வந்த குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண்மணிக்கும் முதலாவது ஆண்குழந்தையாக பிறந்தவர்தான் அந்த களனி தொகுதியை பின்னாளில் பிரதிநிதித்துவப்படுத்தியவர்.அவர் பிறந்த இல்லம் எது...?  என்பதைச் சொன்னால் எவருக்கும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை! அந்த இல்லம் கொழும்பு வடக்கில், களனி கங்கைக்கும் ஆமர் வீதிக்கும் நடுவில் வரும் கிராண்ட்பாஸ் வீதியில் 185 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ளது.இன்றும் நீங்கள் அந்த இல்லத்தின் முகப்பினை பார்க்கலாம். அந்த இல்லத்தில், நீதிக்கும் செல்வச்செழிப்பிற்கும் பெயர் பெற்ற அந்தக்குடும்பம் வாழ்ந்த காலத்தில்  1906 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி பிறந்த குழந்தையின் பெயர் ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்தனா.    (மேலும்) 15.07.18

_______________________________________________________________________

இலங்கை ராணுவத்தினர் வசமுள்ள நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி கேப்பாப்புலவில் 500-வது நாளாக தொடர் போராட்டம்


கேப்பாப்புலவில் ராணுவ முகாமிற்கு எதிரில் 500-வது நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

kep
இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் ராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி கேப்பாப்புலவில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் சனிக்கிழமை 500-வது நாளை எட்டியது.இலங்கையின் வட மாகணாத்தில் உள்ள மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்நாட்டுப் போரின் போது அந்நாட்டு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரால் பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி பொதுமக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. இறுதி யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு பகுதி மக்கள் புலம் பெயர்ந்ததைத் தொடர்ந்து இந்தப் பகுதியை ராணுவத்தினர் ஆக்கிரமித்துக் கொண்டனர்.     (மேலும்) 15.07.18

_______________________________________________________________________

காணாமற் போனோர் அலுவலகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

காணாமற் போனோர் அலுவலைத்தை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்தும், அந்த அலுவலகத்தினால் நடைபெறும் அமர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணாமற் போனோரின் உறவினர்கள் யாழில் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். அரசினால் நியமிக்கப்பட்டிருக்கும் காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகம் மாவட்ட ரீதியாக காணாமற் போனோரின் உறவினர்களைச் சந்தித்து வருகின்றது. இதற்கமைய இன்றைய தினம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் காணாமற் போனோரின் உறுவினர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் காணாமற் போனோரின் உறவினர்கள் வீரசிங்கம் மண்டபம் முன்னாள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எத்தனையோ குழுக்கள் அமர்வுகளை நடத்தியும் இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இந்த அலுவலகத்திலும் எமக்கு நம்பிக்கை இல்லை. அத்தோடு எம்மை ஏமாற்றுவதற்காக இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தெரிவத்து கதறியழுது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

_______________________________________________________________________

ஒற்றுமையாக செயற்பட்டால் நுவரெலியாவில் ஒரு ஆசனத்தைப் பெறலாம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

நுவரெலியா மாவட்டத்தில் சிறு தொகையான வாக்குகளை வைத்துக்கொண்டு பல கட்சிகளாக பிரிகின்றபோது மாகாணசபையில் ஒரு உறுப்பினரை பெறுவதெNuwara-Eliya RH (1)ன்பது இயலாத காரியம். ஆனால், ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டு முயற்சியாக செயற்பட்டால் அதனை சாத்தியமாக்க முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.   ஹபுகஸ்தலாவ குளத்தின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி பணிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெள்ளிக்கிழமை (13) ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது;நுவரெலியா மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்ற ஹபுகஸ்தலாவ பிரதேசத்திலிருந்து பிரதேச சபைக்கான உறுப்பினரை தெரிவு செய்வதற்கு அப்பால், எதையும் சாதித்துக்கொள்வதில் பாரிய சிக்கல்கள் இருந்தாலும் நாங்கள் கடந்த காலங்களில் மத்திய மாகாண சபைக்கு இந்த ஊரைச் சேர்ந்த சகோதரர் நயீமுல்லாவை ஒரு உறுப்பினராக தெரிவு செய்வதற்கான வாய்ப்பு, கண்டி மாவட்டத்திலிருந்து கிடைத்தபோது அதனூடாக ஒரு அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இருந்தது. (மேலும்) 15.07.18

 

_______________________________________________________________________

போலி நாணயத்தாள்களுடன் கடற்படை சிப்பாய் கைது

மதவாச்சி, பூனாவ பிரதேசத்தில் போலி நாணயத்தாள்கள் மூன்றுடன் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் பிரதேசத்தில் உள்ள மின் உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் ஒரு 5000 ரூபா மற்றும் இரண்டு 1000 ரூபா போலி நாணயத்தாள்களை வழங்கி பொருட்களை கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளார்.  இதன்போது கடை உரிமையாரால் அந்த நாணயத்தாள்கள் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டு அது சம்பந்தமாக மதவாச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதுடைய ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் அநுராதபும் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

_______________________________________________________________________

சூழல் பாதுகாப்பு இராணுவம்

சூழலை மாசுபடுத்தும் செயற்பாடுகளை தடுத்தல் மற்றும் சூழலை மாசுபடுத்துகின்றவர்களை கைது செய்வதற்கென சூழல் பாதுகாப்பு இராணுவம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.ஐயாயிரம் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை உள்ளடக்கியதாக இந்த சூழல் பாதுகாப்பு இராணுவம் உருவாக்கப்படவுள்ளதாக சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.இதன் முதற் கட்டமாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் 200 பேரை சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பிரதேச அலுவலகங்களுக்கு இணைக்கப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் அதிகாரசபையின் தலைவர் சந்திரரத்ன பல்லேகல குறிப்பிட்டுள்ளார்.  

_______________________________________________________________________


இத்தாலி - மால்டா மோதல்: 450 அகதிகள் நடுக்கடலில் தத்தளிப்பு

இரு அகதிகள் படகுகளை ஏற்பதில் இத்தாலிக்கும், மால்டாவுக்கும் இடையே மோதல் நீடித்து வருவதால், சுமார் 450 அகதிகள் நடுக்கடலில் தத்தளித்து வருகின்றனர்.போர் மmaltaற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் அடைக்கலம் தேடி லிபியா மார்க்கமாக வந்த அந்த படகுகள் தற்போது இத்தாலிய கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. எனினும், அந்தப் படகுகள் மால்டா எல்லைக்குள்பட்ட கடல் பகுதியைக் கடந்து வந்ததால் அந்த நாடுதான் அவர்களை ஏற்க வேண்டும் என்று இத்தாலி கூறி வருவது குறிப்பிடத்தக்கது.  இத்தாலியில், தீவிர தேசியவாதக் கொள்கையையுடைய பிரதமர் ஜிவ்ஸப்பே கான்டேவின் தலைமையிலான ஆட்சி அண்மையில் அமைந்தது. அதிலிருந்து, அகதிகளை ஏற்பதில் அந்த நாடு மிகக் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே, 239 ஆப்பிரிக்க அகதிகளுடன் "லைஃப்லைன்' என்ற மீட்புக் கப்பலுக்கு இத்தாலி கடந்த மாதம் அனுமதி மறுத்ததையடுத்து, கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்ட அகதிகள் அந்தக் கப்பலிலேயே தவித்து வந்தது நினைவுகூரத்தக்கது.

_______________________________________________________________________

 தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்: எழுத்தாளர்களின் பங்களிப்பும் பணிகளும்

                                    கலாநிதி அமீர் அலி

( பொருளியல்துறை - மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா)

(அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் மெல்பனில் நடைபெற்ற நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்ட உரை)

(3)

தமிழ்த் தேசியவாதம் என்ற போர்வையின்கீழ் இந்துத்துவ வாதமும் முஸ்லிம்களின் உரிமைகள் என்ற போர்வையின்கீழ் அடிப்படைவாத இஸ்லாமியமும் இவ்விருDr.Ameer Ali சமூகங்களையும் இன்று பிரித்தாளப்பார்க்கின்றன. இப்பிரிவினைக்குத் தூபம்போடுவதுபோல் தமிழ் - முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர். ஒரு பக்கம் போலி மதவாதிகளின் முகமூடியைக் கிழித்தெறிந்து மறு பக்கம் இன வெறிபிடித்த அரசியல்வாதிகளையும் இனங்கண்டு உண்மையின் யதார்த்தத்தைப் பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது எழுத்தாளர்களின் இன்றையப் பணி. இன்றைய சூழலில் இந்த ஒன்றைச் செய்தாலே நல்லிணக்கம் வளர எழுத்தாளர் ஆற்றும் வகிபாகம் பூரணமாகிவிட்டதென்று கருத இடமுண்டு. மட்டுநகருக்குத் தெற்கே சுமார் பதினைந்து கிலோமீற்றர் தூரத்திலுள்ளது குருக்கள்மடம் என்னும் தமிழ்க் கிராமம். சுமார் நான்கு வருடங்களுக்குமுன் அங்கே அமைந்துள்ள கோயிலுக்கு நான் சென்றபோது அக்கோயிலின் நடுவே தலையில் தொப்பியுடன் செதுக்கப்பட்ட ஒரு கற்சிலையைக் கண்டு வியந்து அச்சிலையைப்பற்றிய தகவல்களை அறிய முயன்றேன். அது பட்டாணியர் சிலையென்றும் வருடாவருடம் பட்டாணியர் பூசை அந்தச் சிலைக்காக நிகழ்வது வழக்கமென்றும் அவ்வூர் மக்கள் கூறினர். யார் அந்தப் பட்டாணியர் என்று ஆராய்ந்தபோது அவர்கள் முஸ்லிம்களென்றும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் திமிலர்களுக்கும் முக்குவர்களுக்குமிடையே அங்கு நடந்த ஒரு போரில் முக்குவர்களுடன் பட்டாணியர் சேர்ந்து போரிட்டு வென்றதால் அந்த முஸ்லிம் போராளிகளுக்கு நன்றி செலுத்தும் முகமாகவே அந்தச் சிலையென்றும் வருடந்தோறும் அதற்கொரு பூசை நடைபெறுவதென்றும் அறிந்தேன். ஓர் இந்துக் கோயிலில் முஸ்லிம்களுக்காக ஒரு பூசையா என்று ஆச்சரியப்பட்டுச் சந்தோஷப்பட்டேன்.   (மேலும்) 14.07.18

_______________________________________________________________________

ஜூலை 13 வெள்ளிக்கிழமை:நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்!

அருமைத்தம்பிமாரும் "My Boys" களும் செலுத்திய நன்றிக்கடன்!?

தமிழர்களின் எதிரிகள் யார்....? உறைபொருளும் மறைபொருளும்!

                                                                      முருகபூபதி

(2)
ஜே.ஆர். - வில்சன் எண்ணத்தில் உருவான மாவட்ட அபிவிருத்திச்சபைத்தேamirர்தலின் போது யாழ்ப்பாணத்தில் தோன்றிய அசாதாரண சூழ்நிலைகளையடுத்து,  அந்தப்பிரசேத்தை அடக்கி ஆள்வதற்காக, தனது மருமகனான பிரகேடியர் திஸ்ஸ வீரதுங்காவை சர்வ அதிகாரமும் கொண்ட தளபதியாக நியமித்து  யாழ்ப்பாணத்திற்கு அனுப்பினார் ஜே.ஆர். ஒருபுறம் நிறைவேற்று  அதிகாரம் கொண்ட ஜனாதிபதி - மறுபுறம் யாழ்ப்பாணத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு  எதனையும் செய்யத் தயாராகியிருக்கும் அவருடை மருமகன். இவற்றுக்கிடையே ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள்.  அடிக்கடி கொழும்பிலிருந்து ஏளனம் செய்யும் தமிழ் ஊடகங்கள் ( தினபதி - சிந்தாமணி)   இவ்வாறு பல முனையிலிருந்தும்  அவரைநோக்கி அம்புகள் பாய்ந்தன.  இதுஇவ்விதமிருக்க, 1981 ஜூலை மாதம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கடும்போக்காளர்கள் சிலர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.    (மேலும்) 14.07.18

_______________________________________________________________________

 கல்விச் சிற்பி காமராஜர்


காமராஜர், பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோதே அவரது தந்தை குமாரசாமி காலமானார். குடும்பம் வறுமைக்கு ஆளாகியது. ஆறாவது வகுப்பு படிக்குkamarajarம்போதே பள்ளிக்கூடம் போவதை நிறுத்திக்கொண்டார். உறவினர்களின் கடைகளில் உதவியாளாக வேலைசெய்தார். அந்தக் கடைகளுக்கு வருபவர்கள் விவாதித்துக்கொள்ளும் அரசியல் விவகாரங்களின் மீது அவருக்கு ஆர்வம் பிறந்தது. அந்த விவாதங்களைக் கூர்ந்து கவனித்தார். செய்தித்தாள்களைப் படித்து அன்றாடம் அரசியல் நிலவரத்தை உடனுக்குடன் தெரிந்துகொண்டார். அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார். தான் அறிந்த அரசியல் கருத்துகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள அவர் தவறியதில்லை. இப்படித்தான் பள்ளிக்கூடங்களுக்கு வெளியே ஒரு தலைவர் உருவெடுத்தார்  காமராஜர் ஆட்சிக்கு வந்ததும் விவசாய வளர்ச்சிக்கும் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுத்தார்.    (மேலும்) 14.07.18

_______________________________________________________________________

9,818 ஏக்கர் தனியார் காணிகள் இராணுவத்திடம் இருந்து விடுவிப்பு

யாழ். மாவட்டத்தில் இதுவரை 2014 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையான காலப்பகுதியில் 9,818 ஏக்கர் தனியார் காணிகள் இராணுவத்திடம் இருந்து பொதுமக்களுக்குland கையளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.   இதில் 2014 ஆம் ஆண்டு வரை 5,980 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 3,838 காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் 4,000 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றது என்றும் அதற்காக ஐனாதிபதி மற்றும் பிரதமர், மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோர்களிடம் கடிதம் மூலமான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.  யாழ். மாவட்டத்தில் இதுவரையும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுடைய தனியார்கள் காணிகளின் அறிக்கை வெளியிடும் ஊடகவியாளர்கள் சந்திப்பு இன்று (13) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையில் அரசாங்க அதிபர் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.    (மேலும்) 14.07.18

_______________________________________________________________________

பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய வர்த்தக உறவு: டிரம்ப் - தெரசா மே தீவிர ஆலோசனை

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட்' நடவடிக்கைக்குப் பிறகு, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது கukusaுறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பிரிட்டனில் வெள்ளிக்கிழமை சந்தித்து தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை முதல் பிரிட்டனில் 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதிபராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு டிரம்ப் பிரிட்டன் வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிவதற்கான பிரெக்ஸிட் நடவடிக்கைகளில் பிரிட்டன் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்க அதிபரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில், பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய வர்த்தக உறவுகள் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், பிரிட்டன் பிரதமர் தெரசா மே-யும், எல்லிஸ்பரோ கிராமத்திலுள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இரண்டாவது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.   (மேலும்) 14.07.18

_______________________________________________________________________

 பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் நெருங்கிய தொடர்புள்ளது

வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் கடத்தல், பெண்கள் மீதான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என சட்டம் மற்றுc.vம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைத்தார். பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் இடையே நெருங்கிய தொடர்புள்ளது என தன்னால் தெரிவிக்கப்பட்டதாகவும், அதனை பொலிஸ் மா அதிபர் ஏற்றுக்கொண்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு 2 நாள் பயணமாக வருகை தந்த சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் நளின் பண்டார மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து பேச்சு நடத்தினர். இந்தச் சந்திப்பு கைதடியிலுள்ள வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. சந்திப்பின் நிறைவில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் கருத்துத் தெரிவித்தார். குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்த பொலிஸ் ஆளணிப் பற்றாக்குறை உள்ளது. தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவேண்டும்.பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பற்றாக்குறை உள்ளது என்று பொலிஸ் மா அதிபரிடம் எடுத்துக் கூறியதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

_______________________________________________________________________

 உடனடியாக தனது அமைச்சிற்கான ஆவணங்களை கையளிக்கும்படி வேண்டியுள்ள டெனீஸ்வரன்

தமது அமைச்சுப் பொறுப்புக்கள் மீள தம்மிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்புக்கு அமைய உரிய நடவடிக்கைகள் மேற்Deniswaran86கொள்ளப்படவில்லையென வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன், ஆளுநர் ரெஜினோல்ட் குரே, அமைச்சர்களான அனந்தி சசிதரன், கே.சிவனேசன் ஆகியோருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில், தாம் தொடர்ந்தும் வட மாகாணத்திற்கான கடற்தொழில், போக்குவரத்து, வர்த்தகம், கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சிற்கு பொறுப்பான அமைச்சராக தொடர்வதாக தெரிவித்துள்ளார்.எப்படியிருப்பினும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைய குறிப்பிட்ட அமைச்சிற்கான ஆவணங்கள் தம்மிடம் கையளிக்கப்படவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், உடனடியாக அமைச்சிற்கான குறித்த ஆவணங்களை கையளிக்கும்படி வேண்டியுள்ளார்.இந்த செயல் மேன்முறையீட்டு நீதிமன்றை அவமதிக்கும் செயல் என தாம் கருதுவதாகவும் அந்த கடிதத்தில் பா.டெனீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

_______________________________________________________________________

விஜயகலா மகேஷ்வரன் உரையை எழுத்து மூலம் வழங்க உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் ஆற்றிய உரையின் ஒலி மற்றும் ஔி வடிவத்தில் உள்ளடங்கிய விடயங்களை எழுத்து மூலம் குறிப்பிட்டு பொலிஸ் திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவின் பணிப்பாளருக்கு வழங்குமாறு அரச மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அந்தக் குறிப்புகளை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பெற்றுக் கொடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.விடுதலைப் புலிகள் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் ஆற்றிய உரைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொலிஸ் திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவினால் தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கு அமைவாக நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.சிகள ராவய அமைப்பினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அந்த வழக்கை மீண்டும் எதிர்வரும் 20ம் திகதி விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

_______________________________________________________________________

ஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்!

அருமைத்தம்பிமாரும் "My Boys" களும் செலுத்திய நன்றிக்கடன்!?
தமிழர்களின் எதிரிகள் யார்....? உறைபொருளும் மறைபொருளும்!

                                                                      முருகபூபதி

(பகுதி 1)

யேசுநாதர் ஒரு வெள்ளிக்கிழமையன்று 12  பேருடன் (அவருடன் Appapillai_Amirthalingamசேர்த்து மொத்தம் 13 பேர்)  விருந்துக்குச்சென்றபோதுதான் யூதாஸ் என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டதனால் கிறீஸ்தவர்களில் பலர் 13 ஆம் திகதி வரும் வெள்ளிக்கிழமை தினத்தை கவலையோடுதான் எதிர்நோக்குவார்கள்.   ஐரோப்பிய நாடுகளில் 13 ஆம் திகதி வெள்ளியன்று வந்தால் வேலைக்குச்செல்வதற்கும் சற்று தயங்குவார்களாம்! அவ்வாறு ஒரு 13 ஆம் திகதியன்று  இலங்கையில் அவலச்சம்பவம் ஒன்று நடந்தது. ஆனால், அது ஒரு வியாழக்கிழமை வந்தது. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் வரும்போது, எனக்கு   மனதில் இனம்புரியாத கலக்கம் வரும். இம்மாதத்தை தமிழில்  ஆடி மாதம் என அழைப்பர். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் வாழ்வு ஆடி, அடங்கியதும் இம்மாதம் இன்றைய திகதியில்தான். அவருடன் இருந்த பாவத்திற்காக வெற்றிவேல் யோகேஸ்வரன் அவர்களும்  அன்று (1989 ஜூலை 13 ஆம் திகதி) உயிரிழந்தார்.மு. சிவசிதம்பரம் சூட்டுக்காயத்துடன் உயிர்தப்பினார்!  (மேலும்) 13.07.18

_______________________________________________________________________

தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்: எழுத்தாளர்களின் பங்களிப்பும் பணிகளும்

                                    கலாநிதி அமீர் அலி

( பொருளியல்துறை - மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா)

(அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் மெல்பனில் நடைபெற்ற நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்ட உரை)

(2)

இன நல்லிணக்கத்திற்கு நேர்ந்த பின்னடைவு

அது ஒரு புறமிருக்க, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காற்பகுதிவரை இலங்கை முஸ்லிம்களிடம் தமது இனம்பற்றிய வாதப்பிரதிவாதங்கள் எழவே இல்லை. அவரslm்கள் யாரென்பதுபற்றி அவர்களுக்கே தெளிவான ஒரு விளக்கமிருக்கவுமில்லை. இந்தச் சூழலிலேதான் பிரித்தாளும் பிரித்தானியரின் குடியேற்ற ஆட்சி அப்போதிருந்த  இலங்கைச் சட்டசபையிலே இனவாரியாகப் பிரதிநிதிகளை  நியமிக்கலாயிற்று. தமிழரின் பிரதிநிதியாக சேர் பொன்னம்பலம் இராமநாதன் அப்போது நியமனம் பெற்றிருந்தார். ஆனால்,  1880 களில் முஸ்லிம்களுக்கும் ஒரு பிரதிநிதி அச்சட்டசபையிலே நியமனமாகக்கூடிய ஒரு சந்தர்ப்பம் எழுந்தது. இதை உணர்ந்த இராமநாதன்,  " முஸ்லிம்களும் தமிழர்களே, ஆனால் அவர்கள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுகிறார்கள் எனவும் அவர்கள் பேசுவது தமிழ், அவர்களின் சமூக சம்பிரதாயங்கள் எத்தனையோ தமிழரின் சம்பிரதாயங்களே"  எனவும் வாதிட்டு அவரது வாதத்தின் அந்தரங்க நோக்கமாக முஸ்லிம்களுக்கெனத் தனிப்பட்ட பிரநிதித்துவம் தேவையில்லையென்ற கருத்துப் பொதிந்திருந்ததை முஸ்லிம்கள் உணர்ந்தனர்.    (மேலும்) 13.07.18

_______________________________________________________________________

15 - 19 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகளின் கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

15 வயதிற்கும், 19 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரித்துள்ளது என்று காசல் வீதி, மகளீர் மருத்துவமனையின் விசேட நிபுணர் சனத் லெனரkindோல் தெரிவித்துள்ளார்.  நேற்று அனுஷ்டிக்கப்பட்ட உலக சனத்தொகை தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் டொக்டர் லெனரோல் கருக்கலைப்புக்கள் புள்ளி விபரங்களை வெளியிட்டார்.இலங்கையில் நாளொன்றின் சராசரியாக ஆயிரம் கருக்கலைப்புக்கள் நிகழ்வதாகவும் அவர் கூறினார்.கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களை ஆராய்ந்தால், 15 வயதிற்கும், 19 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரித்துள்ளது. பெண்கள் இளவயதில் கர்ப்பம் தரிப்பதும், பிள்ளை பெறுவதும் பிரச்சினைக்குரிய விடயமாகும். இதற்காக அரசாங்கம் கூடுதலான தொகையை செலவழிக்க நேர்ந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.  குடும்ப சுகாதாரப் பணியகத்தின் சிறப்பு நிபுணர் டொக்டர் சஞ்சீவ கொடகந்த கருத்து வெளியிடுகையில், குடும்பத்திட்டமிடல் மூலம் அநாவசிய கர்ப்பங்களை தவிர்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார். இலங்கையின் சனத்தொகையும் சடுதியாக அதிகரிப்பதால் குடும்பக் கட்டுப்பாடு குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக குடும்பத் திட்டமிடல் பணியகத்தின் பணிப்பாளர் சிறப்பு நிபுணர் கீதாஞ்சலி மாபிற்றிகம குறிப்பிட்டார்.

_______________________________________________________________________

 அமெரிக்காவில் சமத்துவமின்மையும் வறுமையும்

-விஜய் பிரசாத

ஐ.நா. 2017இல் ஐ.நா. அமெரிக்காவில் அதிகரித்து வரும் வறுமை குறித்து கவனத்தைத் திருப்பியது. அமெரிக்காவின் கிராமப்புற அலபாமாவில் “மிக மோசமான முறையில் Philip Alstonசுகாதாரமின்மை நிலவுவதையும் அதனால் ஏற்படும் தொத்துநோய்கள்களும்”  என்ற பெயரில் ஓர் ஆவணம் வெளியிடப்பட்ட சமயத்தில், ஐ.நா. மன்றத்தின் அறிக்கை வெளிவந்தது. முன்னதாக, இந்த ஆவணமானது, அலபாமாவில் வசிப்பவர்களுக்குப் போதுமான அளவிற்கு சுகாதார வசதிகள் இல்லை என்றும், குடியிருப்புகளுக்கு அருகிலேயே திறந்தவெளி சாக்கடைகள் இருப்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தது. இவற்றின் காரணமாக, இந்தப் பகுதியில் கொக்கிப்புழு தொத்துநோய் பரவிக்கொண்டிருப்பதாக  ஆய்வுசெய்து கண்டறிந்தது. மேலும் இந்தப் பகுதிகளில் மிக அதீதமான அளவில் மக்கள் வறுமையில் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதும் தெரியவந்தது. இவை அனைத்தும் ஐ.நா. மற்றும் ஆல்ஸ்டன் கவனத்தை ஈர்ப்பதற்கு இட்டுச்சென்றன. ‘ ஒரு மாதத்திற்குப்பின்னர், ஆல்ஸ்டனும் அவரது குழுவினரும் இரண்டு வாரங்கள் அலபாமாவில் கழித்தனர். அங்கிருந்த மக்கள் சிறந்ததோர் வாழ்க்கைக்கான வழிமுறைகளை அவர்களிடம் கோரியிருக்கிறார்கள். அங்கிருந்த நிலைமைகள் ஆல்ஸ்டன் குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. வீடுகளிலிருந்து கழிவுநீர் எவ்வித ஒழுங்குமின்றி வெளியேறி வந்திருக்கிறது.    (மேலும்) 13.07.18

 

Theneehead-1

   Vol:17                                                                                                                                26.07.20184