Theneehead-1

   Vol:17                                                                                                                                10.07.2018

வாக்களிப்பு ஒரு உரிமை மற்றும் ஒரு பொறுப்பு

உலகளாவிய வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாடுகளில் ஸ்ரீலங்காவும் ஒன்றாகும். ஆகவே அரசியல் செயல்பாட்டின் முழுமையான புரிந்துணர்வோடு voting4அதை முன்னேற்றுவது மிகவும் முக்கியமானதாகும். செயல்முறையை வெறுமனே நிராகரிப்பது அதை மாற்றுவதற்கு உதவாது. முதலாவதும் மிகவும் முக்கியமானதும் ஒருவர் வாக்களிக்க வேண்டும் என்பதாகும், மற்றது சில புரிந்துணர்வுகளோடு வாக்களிக்க வேண்டும் என்பதாகும்.   2017 செப்ரெம்பர் ஜேர்மனியின் பொதுத் தேர்தல்களுக்கு முன்னர் ஜனாதிபதி பிராங் வோல்ட்டர் ஸ்ரெயின்மியர் வாக்களிப்பின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினார்.“வாக்களிப்பது ஒரு குடியியல் கடமை. போ போய் வாக்களி” என்று முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர், ‘பில்டாம் சொண்ட்டாக்’ செய்திப்பத்திரிகையில் எழுதிய கருத்துக் கட்டுரையில் தெரிவித்திருந்தார்.“ஒவ்வொரு வாக்கும் எண்ணப்படும் - உங்கள் வாக்கும் எண்ணப்படும்”, என்று ஸ்ரெயின்மியர் சொன்னார். “ வாக்களிக்காத மக்கள் எங்கள் நாட்டின் எதிர்காலத்தை மற்றவர்கள் முடிவு செய்வதற்கு அனுமதிக்கிறார்கள்”.  (மேலும்) 10.07.18

_______________________________________________________________________

பேருந்து ஓட்டுனர்கள் விளையாட்டுத்தனத்தால் ஏற்பட்ட விபத்து - 60 பேர் காயம் - 20 பேரின் நிலை கவலைக்கிடம்

குருணாகல் - தம்புள்ளை பிரதான வீதியின் மெல்சிறிபுர, பன்லியந்bus accidentத பகுதியில் இன்று (09) பிற்பகல் தனியார் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 60 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   மெல்சிறிபுர மற்றும் கலேவல பகுதிகளுக்கு இடையில் உள்ள பன்லியந்த பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கலேவல, குருணாகல், கொகரெல்ல மற்றும் தம்புள்ளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த இரு பேருந்துகளினதும் ஓட்டுனர்கள் உட்பட 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  குறித்த இரு பேருந்துகளும் ஒரே உரிமையாளருடையவை என தெரிவிக்கப்படுகின்றது. எம்பிலிபிட்டியவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தும் வவுனியாவில் இருந்து எம்பிலிபிட்டிய நோக்கி பயணித்த பேருந்துமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   (மேலும்) 10.07.18

_______________________________________________________________________

"தமிழ் - முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது"

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் கருத்தாடல் களத்தில் கலாநிதி அமீர் அலி உரை.

தமிழ்ப் பேசும் மக்கள் என்ற போர்வைக்குள் முஸ்லிம்களை உள்ளடக்கியமை ஓர் அரசியல் உபாயமேயன்றி அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு வழியலATLASMEETINGjpg்ல. நல்லிணக்கம் தமிழுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலா? தமிழரென்ற இனத்துக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலா? என்பதை ஆராயின், தமிழுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் நல்லிணக்கம் அன்றுமிருந்தது, இன்றுமிருக்கிறது, இன்னுமிருக்கும்.  ஆனால், இந்த நல்லிணக்கம் எந்த அளவுக்கு ஆழமானது என்பதிலும் ஒரு தெளிவில்லாமல் இருக்கிறது. இன்று இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமின்றி சிங்களப் பகுதிகளுக்குள் வாழும் முஸ்லிம்களும் தமிழையே தாய்மொழியாகக் கொண்டுள்ளமையையும், அம்முஸ்லிம்களின் மத்தியிலிருந்து அற்புதமான பல தமிழிலக்கியப் படைப்புகள் ஆண்டுதோறும் வெளிவந்து கொண்டிருப்பதையும், மேலும் அவர்களின் மார்க்கச் சொற்பொழிவுகளெல்லாம் தமிழ் மொழியிலேயே பள்ளிவாசல்களில் நடைபெறுகின்றன என்பதையும் நோக்குகையில் தமிழுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயுள்ள நல்லிணக்கம் காலத்தையும் வென்றதொன்று என்பதை மறுக்க முடியாது.     (மேலும்) 10.07.18

_______________________________________________________________________

 துள்ளும் மீன்களை விட்டுவிட்டு நெத்தலி போன்றவற்றிற்கு தண்டனை வழங்குவது பொருத்தமல்ல.

வீ.ஆனந்தசங்கரி

விஜயகலாவிற்கு இராஜாங்க அமைச்சர் பதவிக்கு பதிலாக அமைச்சு பதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க தான் சிபாரிசு செய்வதாக ஆனந்தசங்கரி இன்று (09) காலை 11sangary மணியளவில் கிளிநொச்சியில் உள்ள த.வி கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவர், விஜயகலா ஒருதாய். குறித்த காலப்பகுதியில் சிறுமியின் கொலை சம்பவம் அதிகம் பேசப்பட்டு வந்தது. இந்த சூழலில் அமைச்சர்கள் பலர் அங்கு சென்று வந்தனர். இந்த நிலையில் தன்னை அடக்கிகொள்ள முடியாத நிலையில் விஜயகலா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.இது ஓர் தவறு கிடையாது. விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் குற்ற செயல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. குற்றம் செய்வோர் அச்சத்துடன் இருந்தார். அதனால் குற்றம் இடம்பெறவில்லை. இந்த நிலையில் விஜயகலா உணர்ச்சிவசப்பட்டு, தான் வகிக்கும் இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து எதையும் செய்ய முடியவில்லையே என எண்ணி கூறிய ஆதங்க கருத்தினை வைத்து, தமது அரசியலிற்காக இவ்வாறு செயற்படுவது பொருத்தமல்ல. துள்ளும் மீன்களை விட்டுவிட்டு நெத்தலி போன்றவற்றிற்கு தண்டனை வழங்குவது பொருத்தமல்ல.     (மேலும்) 10.07.18

_______________________________________________________________________

சாதாரண மக்களின் விடிவுக்காக பேனா பிடித்த படைப்பாளி நாவேந்தன்..!

இ. ஓவியா

்    கவிஞர், ஆசிரியமணி சி. நாகலிங்கம் அவர்களால் இவ்வாறு புகழ்ந்துரNaventhanைக்கப்பட்ட முதுபெரும் எழுத்தாளர் - பேச்சாளர் நாவேந்தனின் பதினெட்டாவது  நினைவு    தினம் 10 - 07 - 2018 அன்று ஆகும்..!   யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தாபகராகவும் அதன் முதற் செயலாளராகவும் இலங்கை இலக்கிய இரசிகர் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்ட நாவேந்தன் யாழ். மாநகரசபையின் பிரதிமேயராகவும் திகழ்ந்துள்ளார்..!  சாதாரண மக்களின் விடிவுக்காகப் பேனாபிடித்த படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர் நாவேந்தன். அவர் சாதாரண மக்களின் பிரச்சினைகளை - அவர்களது ஆசாபாசங்களை வாழ்வியல் முரண்பாடுகளைத் தமது சிறுகதைகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர். அவரது சிறுகதைகள் வெறும் கற்பனைகளல்ல. அவை யதார்த்த பூர்வ மானவை.சமூகத்தினரிடையே புரையோடிப் போயிருக்கும் அழுக்குகளை அப்புறப்படுத்தவும் சமூக அவலங்களையும் அறியாமைகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டி சமூக மாற்றத்தின் தேவைகளை உணர்த்தவும் அவரது எழுத்துக்கள் பெரிதும் உதவின.    (மேலும்) 10.07.18

_______________________________________________________________________

நாட்டில் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரிப்புக்கு காரணம் அரசாங்கமே - மகிந்த குற்றச்சாட்டு

ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகிய விஜயகலா மஹேஸ்வரனின் கூற்று, அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்பதையே எடுத்துக் காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.முத்தியங்கன ரஜமஹா விகாரைக்கு சென்ற அவர் அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்தபோது இதனைக் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளை மீள உருவாக்குவதாக விஜயகலா மகேஸ்வரன் கூறி இருக்கின்ற விடயம் பிழையானது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.ஆனால் அந்த கூற்றின் பின்னணியில் சொல்லப்படாதவிடயம், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய போலி உறுதிமொழிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்பதாகும்.அரசாங்கம் முழு மக்களையும் ஏமாற்றியுள்ளது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது என்று மகிந்தராஜபக்ஷ கூறியுள்ளார்.அதேநேரம் அரசாங்கத்தின் இயலாமையாலேயே நாட்டில் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

_______________________________________________________________________

பிரிட்டன்: பிரெக்ஸிட் அமைச்சர் திடீர் ராஜிநாமா

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் (பிரெக்ஸிட்) விவDavid_Davisகாரத்தில், பிரதமர் தெரசா மேவின் கொள்கை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரெக்ஸிட் விவகாரத் துறை அமைச்சர் டேவிட் டேவிஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதுகுறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் நடவடிக்கையை, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி மிகவும் பலவீனமான முறையில் கையாள்கிறது.  பிரெக்ஸிட் நடவடிக்கையின்போது பிரிட்டனின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பேரங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே, எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் டேவிட் டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.ஐரோப்பிய யூனியலிருந்து பிரிந்தாலும், அதன் உறுப்பு நாடுகளுடன் தளர்வான ஏற்றுமதி - இறக்குமதி கொள்கை, பொது வர்த்தகச் சந்தை ஆகியவற்றைப் பின்பற்றுவதற்கு தெரசா மே தலைமையிலான அரசு பரிசீலித்து வருகிறது.    (மேலும்) 10.07.18

_______________________________________________________________________

இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா? நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்.

சி. தவராசா, எதிர்கட்சித் தலைவர், வட மாகாண சபை

வட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினைத் தொடர்ந்து மேன்முறையீட்டthavarasa (1)ு நீதிமன்றத்தினால் அண்மையில் வழங்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவானது சர்ச்சைகளை உருவாக்கியிருக்கும் அதே வேளையில் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றது. ஊடகங்கள், இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இவ் வழக்குத் தொடர்பாகவும் இடைக்காலத்தடை உத்தரவு தொடர்பாகவும் வெளியாகிய கருத்துக்களை வைத்துப் பார்க்கும் போது இவ் விமர்சனங்களை எழுதிய  பலரிற்கு இவ்வழக்கு எந்த அடிப்படையில் தொடரப்பட்டது, எக் காரணிகளின் அடிப்படையில் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இடைக்காலத் தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் யாவை மற்றும் அரசியல் யாப்பில், குறிப்பாக பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தில், இவ்விடயங்கள் தொடர்பான ஏற்பாடுகள் போன்ற விடயங்களில் சரியான தெளிவில்லாமல் இருப்பதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. விமர்சனங்கள் யாவும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டுள்ளதே தவிர சட்ட ரீதியான அணுகுமுறையாகத் தெரியவில்லை.      (மேலும்) 08.07.18

_______________________________________________________________________

சொல்லத்தவறிய கதைகள்  - அங்கம் 19

"யூ.என்.பி. வந்தாலும் ஶ்ரீலங்கா வந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே!!!"

தொகுதி அடிப்படையிலான தேர்தலும் விகிதாசார தேர்தலும்

திசைமாறிய ஒரு  பறவையின் வாக்குமூலம்

                                     முருகபூபதி

எனக்கு  1965 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த பொதுத்தேர்தல் நீண்டகாலமாக  நினைவிலிருக்கிறது. எனக்கு அப்பொழுது 14 வயது! தொகுதிவாரியாக தேர்தல்கள் old radioநடந்த காலம். எங்கள் ஊரில் நடந்த பிரசாரக்கூட்டங்களை வேடிக்கை பார்க்கச்செல்வேன். அங்கு தமிழிலும் சிங்களத்திலும் பேசுவார்கள்.   மூவினத்தவரும் வாழ்ந்த பிரதேசமாகையால் இடத்துக்குத் தக்கவிதமாகவும் பேசுவார்கள். தமிழ்ப்பேசும் கத்தோலிக்கர்கள்தான் பெரும்பான்மையாக வாழ்ந்தார்கள். அதனால் அங்கு அடுத்தடுத்து அந்தச் சமூகத்தைச்சேர்ந்தவர்கள்தான் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்கள்.கொழும்பு மத்தி மற்றும்  கொழும்பு  வடக்கிலிருந்து, வத்தளை, ஜா- எலை, நீர்கொழும்பு, வென்னப்புவ, சிலாபம், புத்தளம் முதலான கரையோரப் பிரதேசங்களின் தொகுதிகள் யாவும்  ஐக்கிய தேசியக்கட்சியின் கோட்டைகளாகவே விளங்கின.   (மேலும்) 09.07.18

_______________________________________________________________________

 70 களில் அரச அடக்குமுறையின் வடிவம் – லயனல் போபகே

பகுதி 1

    தோழர் லயனல் போபகேஇப்போது 74 வயதைக் கிட்டுகிறார். 70களில் அவர் ஒரு முக்கிய போராளி. ஜே.வி.பியின் பொதுச் செயலாளராக இருந்தவர். 71 கிளர்ச்சியின் போ70-jvp-bopageது கைது செய்யப்பட்டு அவ்வழக்கின் இரண்டாவது குற்றநபர். வருடக்கணக்கில் சிறையில் இருந்து மீண்டவர். ஜே.வி.பியில் இருக்கும் போதே தமிழ் மக்களில் சுய நிர்ணய உரிமைக்காக உட்கட்சிப் போராட்டத்தை முன்னெடுத்தவர். அது பற்றி தனியான நூலையும் அக்காலத்தில் எழுதியவர். அது சாத்தியமாகாத நிலையில் அவர் அக்கட்சியில் இருந்து வெளியேறியவர். அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து அங்கு இப்போது பொறியியலாளராக பணியாற்றிவந்த போதும் இலங்கை அரசியலில் தொடர் அவதானிப்பையும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருபவர். அன்றைய அரச பயங்கரவாதத்தின் வடிவத்தைப் பற்றிப் பேசும் இந்த முக்கிய கட்டுரையை “நமது மலையகம்” வாசகர்களுக்காக வழங்குகிறோம்.ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க ஏகாதிபத்திய ஆட்சி மற்றும் இராணுவ அடக்கு முறை ஆட்சியே நடைபெற்றது. அல்லது ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வந்தன.  (மேலும்) 09.07.18

_______________________________________________________________________

பாடகி பிரியானி ஜயசிங்க கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

பாடகி பிரியானி ஜயசிங்க அவருடைய பாணந்துறையில் உள்ள வீட்டில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.அவரை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு ஜோடி கத்தரிக்கோலும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பிரியானி ஜயசிங்கவின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

_______________________________________________________________________

குகையில் சிக்கிய ஆறு சிறுவர்கள் மீட்பு
 

தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் குகைக்குள் சிக்கிக்கொணthailand k்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. குகைக்குள் உள்ள சிறுவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை மீட்பதற்கு கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒக்ஸிஜன் பற்றாக்குறையால் மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார்.   (மேலும்) 09.07.18

_______________________________________________________________________

1248 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதை பொருள் மீட்பு..

காவற்துறை போதை பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 103 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த போதை பொருளின் பெறுமதி 1248 மில்லியன் ரூபாய் என காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.களுபோவில மற்றும் சுபுதிபுர பிரதேசங்களில் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

_______________________________________________________________________

வடக்கின் நிலைமையை சிந்திக்க வேண்டும் - சரத் அமுனுகம

விஜயகலா மகேஸ்வரன் எம்.பி.யின் கருத்து தவறானதென்பது எமக்கும் தெரியும், ஆனால் அவரது கருத்தை வைத்துகொண்டு அரசியல் செய்யாது வடக்கின் இன்றைய நிலைமையையும் அனைவரும் சிந்துக்க வேண்டும் என அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கூறிய காரணிகள் விடுதலைப் புலிகளை ஆதரித்து அவர் பேசிய விடயங்கள் தவறானது. ஆனால் இன்று வடக்கின் நிலைமை பற்றி எவரும் வாய் திறக்காது உள்ளது ஏன்? இன்று வடக்கில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகள், போதைப்பொருள் பாவனை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்கள் என்பன அங்கு மக்களின் அன்றாட வாழ்கையை பெரிதும் பாதித்துள்ளது.இது குறித்து அரசாங்கமாக நாம் அக்கறை செலுத்த தவறி வருகின்றோம். மக்களின் நிலைமைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கான சுதந்திரத்தையும் அமைதியான சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.

_______________________________________________________________________

ஜப்பானில் வரலாறு காணாத கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி 76 பேர் பலி

மருத்துவமனையை வெள்ளம் சூழ்ந்ததால் நோயாளிகளை  படகுகள் மூலம் மீட்டுச் செல்லும் மீட்புப் படையினர்.

ஜப்பானில் தொடர்ந்து மூன்று நாள்களாக பெய்து வரும் கனமழைக்கு raining japan76 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுகுறித்து ஜப்பான் அரசின் செய்தித் தொடர்பாளர் யோஷிடே சுஹா கூறியதாவது:ஜப்பான் தெற்குப் பகுதியில் உள்ள ஹிரோஷிமா மாகணத்தில் கடந்த மூன்று நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மாகாணத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரையில் 76 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில், 48 பேரின் இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 100-க்கும் அதிகமாக உள்ளது.ஹிரோஷிமா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அங்கு கடுமையான பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது முற்றிலும் முடங்கிப்போயுள்ளது.   (மேலும்) 09.07.18

_______________________________________________________________________

 AFTER 2009 அல்லது “புதிய போராளிகள்”

-          கருணாகரன்

2009 க்குப் பிறகு உருவாகிய தமிழ் அரசியலில் “முன்னாள் பrehabilitated-ltte-cadresோராளிகள்” என்றொரு புதிய சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2009 வரையும் களத்தில் நின்று போராடிய விடுதலைப்புலிகளே இந்தச் சொல்லின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டனர். (1980 களில் ஈழப்போராட்டத்தில் ஈடுபட்ட அத்தனைபேரும் போராளிகளாகவே கருதப்பட்டனர்).   போரினால் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த போராளிகள், இந்தச் சொல்லின் மூலம் ஓய்வு நிலைக்குத் தள்ளப்பட்டதாக உணர்த்தப்பட்டது. அதாவது களத்திலிருந்து அகற்றப்பட்டதாக.  இதற்குப் பிறகு போராட்ட (கால) அரசியற் களத்தில் முதல் நிலையில் இருந்த விடுதலைப்புலிப் போராளிகள், இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் நிலையினர் என்றாக்கப்பட்டனர். அவர்கள் அரசியல் ரீதியாக எதையும் தீர்மானிக்க முடியாது, சமூகத்தில் எத்தகைய செல்வாக்கையும் செலுத்த முடியாது என்றாக்கப்பட்டது.   அப்படிச் செயற்பட முனைவோர் அரச சார்பானவர்களாகவும் வெளிச்சக்திகளால் கையாளப்படுவோராகவும் சித்தரிக்கப்பட்டனர். அதற்குரிய முறையில் திட்டமிட்டுச் சந்தேகங்களும் உருவாக்கப்பட்டன.   (மேலும்) 08.07.18

_______________________________________________________________________

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்.... (05)

"மட்டக்களப்புத்தமிழகம்"தந்த பண்டிதர் வி.சீ. கந்தையா

                                                    முருகபூபதி

ஒவ்வொரு ஊருக்கும் வீதிக்கும் காரணப்பெயர் இருக்கின்றது. இலங்கையில் கிழக்குமாகாணத்தில் மீன்பாடும் தேன்னாடு என வர்ணிக்கப்படும் மட்டக்களப்புக்கும் இனpadumeenிமையான தேனுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  "மட்டு" என்ற சொல்லுக்கு " தேன்" என்றும் அர்த்தம் இருக்கிறதாம்! மட்டக்களப்பை தழுவிச்செல்லும் இந்து சமுத்திரத்தாயிடத்தில் தாழமுக்கம் அடிக்கடி  தோன்றி, பேரலைகள் எழுச்சிபெறுவதுண்டு. சமுத்திரத்தாயின் நிலமட்டத்தில் அதிர்வுகள் வரும்போது, அங்கிருந்து சீறிப்பாயும்  கடல் நீர் கரைக்கு வெளியே சமதரைகளை வந்தடைந்து தங்கிவிடுகிறது. அவ்வாறு தோன்றும்  நீர்நிலைகள், களப்புகளாகிவிடுகின்றன. இந்த நீர்மட்டம் வங்கக்கடலின் நீர்மட்டத்திற்கு சமமாகவே இருப்பதனால், "மட்டம் களப்பு " என காரணப்பெயராகி, காலப்போக்கில் மட்டக்களப்பு என மருவிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.  சிங்கள மக்கள்  " மடக்களப்புவ" என அழைக்கின்றனர். "மட " என்றால் சதுப்பு என அர்த்தப்படுகிறது. இந்தப்பிரதேசம் நீர் வளம் நில வளம் நிரம்பிய விவசாய பூமி.   அதனால்  இந்த சதுப்பு நிலப்பிரதேசத்திற்கு அவர்கள் வைத்தபெயர்  " மடக்களப்புவ".    (மேலும்) 08.07.18

_______________________________________________________________________

புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ

கொழும்பு, புறக்கோட்டை பிரதான வீதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இன்று (07) காலை 10.15 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரு கடையில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த மேலும் சில கடைகளுக்கு பரவியுள்ளது. அதன் பின்னர் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர், கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.  எவ்வாறாயினும் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும், தீயினால் உயிராபத்துக்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

_______________________________________________________________________

னடாவில் இரண்டு இலங்கை தமிழர்கள் உட்பட்ட பலரை கொலை செய்தவருக்கு சொந்தமான காணியில் இருந்து பல மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

கனடாவில் இரண்டு இலங்கை தமிழர்கள் உட்பட்ட பலரை கொலை செய்தவருக்கு சொந்தமான காணியில் இருந்து மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.bruce-mcarthur    பல தொடர் கொலைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 58 வயதான மெக்ஆத்தர் கைது செய்யப்பட்டு  தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.  அவர் மீது தற்போதுவரை 8 கொலைக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான காணிப்பகுதிகளில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன   இதன்போதே மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன  நேற்று முன்தினம் அந்தப் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன   இதனையடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது மேலும் பல மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.    (மேலும்) 08.07.18

_______________________________________________________________________

காணாமற் போனோரின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

காணாமற் போனோரின் உறவினர்கள் நல்லூர்க் கந்தன் ஆலயம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டமொன்றை இன்று காலை ஆரம்பித்துள்ளனர்.காணாமற் போனோரின் உறவினர்களின் வவுனியா மாவட்டச் சங்கத்தால் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் போராட்டம் மாலை நான்கு மணிவரை இடம்பெறவுள்ளது.வவுனியாவில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போராட்டம் நாளை ஞாயிற்றுக் கிழமையுடன் ஐநூறாவது நாளை எட்டவுள்ளதை முன்னிட்டே இன்று யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இப் போராட்டத்தின் போது நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளுடன் 108 தேங்காய்கள் உடைக்கப்படவுள்ளதுடன் தீச்சட்டிகளும் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

_______________________________________________________________________

2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்துவதை இடதுசாரிக் கட்சி என்ற வகையில் ஏற்க மாட்டோம்

2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்துவதை இடதுசாரிக் கட்சி  என்ற வகையில் நாம் ஏற்றுக் கொளளப் போவதில்லை என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாண தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,2020 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்துவதற்கு இடசாரி கட்சி என்ற வகையில் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின்  கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் இவ்விடயம் குறித்து கூட்டு எதிரணியிலுள்ள கட்சிகளுக்குள் முரண்பட்ட கருத்துக்கள் காணப்படுக்கின்றன.  பஷில் ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்தும்படி சிலர் பரிந்துரைத்துள்ளனர். இன்னும் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை நிறுத்துமாறும் கூறுகின்றனர். எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலுக்கு சுமார் ஒன்றரை வருடங்கள் காணப்படுகின்றன. எனவே இது குறித்து அடுத்த கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

_______________________________________________________________________

ஸ்ரீலங்கா எங்கே போகிறது?

                                            காமினி துலாவே

பன்முக கலாச்சாரம் மற்றும் பன்முக மதம் உள்ள சமூகத்தில் வெவ்வேறு மதங்கள் மற்றும் வெவ்வேறு இனங்கள் உடன் ஒத்துழைக்க இயலாததின் காரணமாக இந்த நாsl citizenட்டில் அதிகளவு எண்ணிக்கையிலான பிரச்சினைகள் உருவாகின்றன, இதற்கு பிரதானமாக சிங்களவர்கள் அதேபோல தமிழர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே தங்களின் தோற்றத்தின் வரலாறு பற்றிய அறிவு குறைவாக இருப்பதே காரணமாகும். சிங்களவர்கள் நம்புவது, சிங்களவர் அல்லாத குருவான மகிந்த என்பவரால் எழுதப்பட்ட மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைப்போல சிங்களவர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிப்புச் செய்ய ஆரம்பித்தது இளவரசர் விஜயாவும் மற்றும் அவரது பரிவாரங்களான 700 வீரர்களின் வருகையின்போது என்று. இருப்பினும் இளவரசர் விஜயா ஒரு சிங்களவரல்ல. அப்படியானால் அவர்களின் சந்ததிதான் சிங்களவர்கள் என்கிற ஒரு முடிவுக்கு ஒருவர் வருவது சிந்தனைக்குரிய ஒரு விஷயம். தவிரவும் இன்றைய சிங்களவர்கள் ஒரு தூய இனம் அல்ல,  ஆனால் ஒரு குறிப்பிட்ட காலமாக நாட்டின் சனத்தொகையுடன் இணைந்துள்ள பல்வேறு தேசிய இனங்களின் கலவையினாலானவர்கள்தான் தம்மைச் சிங்களவர்கள் என அழைத்துக் கொள்கிறார்கள். அரைவாசிக்கும் அதிகமானவர்கள் போர்த்துக்கேயப் பெயர்களைக் கொண்டுள்ளார்கள  (மேலும்) 07.07.18

_______________________________________________________________________

நடந்தாய் வாழி களனி கங்கை ..அங்கம் 08

களனி பாலத்திற்கும் ஆமர்வீதிக்கும் நடுவே தோன்றிய பெரிய நிறுவனங்களின் சுவடுகள்

                                                                     ரஸஞானி

இந்தியாவில் பெரும்பாலான நதிகளுக்கு பெண்களின் பெயர்தான் சூட்டப்பட்டுள்ளன. அங்கு மத்திய - மாநில அரசுகளிடம் நதிநீர் இணைப்புத்திட்டங்களும் உருவாகி, விவாதsri-lanka-hikkaduwa-rubberங்களும் போராட்டங்களும் தொடருகின்றன.பெண்களின் பெயர்களை நதிகளுக்கு சூட்டினால் எப்படித்தான்  " இணைப்பு" வரும்...? என்று அண்மையில் ஒரு முகநூல் குறிப்பு வேடிக்கையாக சொல்லியிருந்தது.  இலங்கை, இந்தியாவை விட பலமடங்கு சிறிய நாடு. இன்னும்  சொல்லப்போனால், சிறிய தீவு. இந்தத்தீவுக்குள் பல நதிகள் இருந்தபோதிலும் அவை வற்றாத ஜீவநதிகளாக விளங்கியமையால், நதி நீர் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை.மகாவலி கங்கையை வடக்கே திருப்பும் திட்டம் இலங்கை அரசியலில் ஒரு தனிக்கதை. இது இவ்விதமிருக்க, களனி கங்கை தீரத்தில் தோன்றிய தொழிற்சாலைகள் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை  வாய்ப்பு வழங்கியிருக்கின்றன. வெளிநாட்டு ஏற்றுமதி வர்த்தகத்திற்கும் இலங்கை பொருளாதாரத்திற்கும் வளம் சேர்த்துள்ளன.    (மேலும்) 07.07.18

_______________________________________________________________________

விஜயகலா மகேஸ்வரனின் கூற்று தண்டனைக்குரிய குற்றம்: நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு


சட்டக்கோவையின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்பது தெரியvijaya unpவருவதாக, திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் பிரிவு கொழும்பு பிரதம நீதவான் ரங்க திசாநாயக்கவிடம் இன்று அறிக்கை சமர்ப்பித்தது.   அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள செயற்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை தண்டனை சட்டக்கோவையின் 115 மற்றும் 120 ஆகிய சரத்துக்களின் கீழ், விஜயகலா மகேஸ்வரனின் கூற்று பயங்கரவாத தடை திருத்தச்சட்டத்தின் கீழ் வருவதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்தக் கூற்றை யாழ். நீதிமன்ற அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் தெரிவித்துள்ளதால், இது தொடர்பாக விசாரணை நடத்தி, குறித்த பகுதியிலுள்ள உரிய நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாகவும் திட்டமிட்ட வகையில் இடம்பெறும் குற்றங்களை தடுக்கும் பிரிவு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் () 07.07.18

_______________________________________________________________________

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம்

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த அறிவித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. இப் பரீட்சைகள் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளன. இந்தப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.  இந்த வருடம் மூன்று இலட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

அம்பாந்தோட்டை விமான நிலைய மேம்பாடு: இலங்கையுடன் இணைந்து மேற்கொள்ள இந்தியா சம்மதம்


இலங்கையின் அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மட்டாலா ராஜபட்ச சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகளை அந்நாட்டுடன் இணைந்து மேற்கொள்ள இmatala airportந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.இந்தத் தகவலை இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிர்மல் சிறீபால டி சில்வா தெரிவித்தார். அதன்படி, நஷ்டத்தில் இயங்கி வரும் அந்த விமான நிலையத்தின் செயல்பாடுகளை வரும் காலத்தில் இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ள உள்ளன. இந்த கூட்டு முயற்சியின் பயனாக அந்த விமான நிலையத்தின் கட்டுப்பாடுகளில் பாதி இந்தியா வசம் இருக்கும் எனத் தெரிகிறது. அம்பாந்தோட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நிலையில், தற்போது இந்தியா எடுத்திருக்கும் இந்த முடிவு அதற்கு பதிலடியாக இருக்கும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.இலங்கை அதிபராக ராஜபட்ச இருந்தபோது ஏறத்தாழ 21 கோடி டாலர்கள் (சுமார் ரூ.1,300 கோடி) செலவில் அம்பாந்தோட்டை விமான நிலையம் கட்டமைக்கப்பட்டது. சர்வதேச விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் விமான நிலையமாக அது அடையாளப்படுத்தப்பட்டது.   (மேலும்) 07.07.18

_______________________________________________________________________

விஜயகலாவின் உரை அடங்கிய காணொளியை வழங்க 05 ஊடகங்களுக்கு உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த ​சர்ச்சைக்குறிய கருத்துக்கள் அடங்கிய காணொளியை, குற்றப்பலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்குமாறு, vijayakala mகொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க 5 இலத்திரனியல் ஊடகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச் செயல் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின்படி விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.  சிகள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் மாகல் கந்தே சுதந்த தேரர், இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த ​சர்ச்சைக்குறிய கருத்து இலங்கையின் அரசியலமைப்பை மீறி இருப்பதால் அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

_______________________________________________________________________

3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள் தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிப்பு

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தமிழ் நாட்டில் தங்கியுள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள்் தாயகம் திரும்பியுள்ளதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டிலேயே அதிகபடியாக ஆயிரத்து 520 ஏதிலிகள் தாயகம் திரும்பியுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டசபையில் தெரிவித்துள்ளார்.அவர்கள் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியதாக 'பிரஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியா' குறிப்பிட்டுள்ளது.இதற்கமைய, இந்த வருடம் மே மாதம் வரையிலான காலப்பகுதியினில் 557 பேர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இலங்கையில் ஏற்பட்ட வன்செயலை அடுத்து கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் இந்தியாவிற்கு சென்றிருந்தனர்.இந்த நிலையில், தற்போது, இந்தியாவின் 24 மாவட்டங்களில், 107 அகதிகள் முகாம்களில் 61 ஆயிரத்து 422 பேர் தங்கியுள்ளனர்.   இது தவிர, முகாமிற்கு வெளியே கடந்த ஏப்ரல் மாதம் வரை 35 ஆயிரத்து 316 பேர் வசித்து வருவதாகவும் தமிழக முதலமைச்சரின் புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

_______________________________________________________________________

பஸ் உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்ற முகாமையாளருக்கு 40 ஆண்டு சிறை

வீதிப் போக்குவரத்து உரிமம் வழங்குவதற்காக தனியார் பஸ் உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட 08 குற்றங்களில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட மேல் மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் முகாமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த தண்டனை 05 ஆண்டுகளில் முடிவுறும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று உத்தரவிட்டதாக அத தெண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.  இதுதவிர பிரதிவாதிக்கு 40,000 ரூபா அபராதம் மற்றும் அவர் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட 10,000 ரூபா தண்டனையாகவும் பெற்றுக் கொள்ள நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அத்துடன் பஸ் உரிமையாளருக்கு 05 இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.2015ம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

_______________________________________________________________________

விஜயகலா ​மீதான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவிப்பு

ராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து விலகிய விஜயகலா மஹேஸ்வரன் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய சட்டநடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபர் ஆராய்ந்து வருவதாக இன்று நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவிக்கப்பட்டது.சபாநாயகர் கருஜெயசூரிய இதனைத் தெரிவித்தார்.விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக விஜயகலா மகேஸ்வரன் கருத்து வெளியிட்டமை மற்றும் யாழ்ப்பாணத்தில் நேற்று கறும்புலிகள் நாள் அனுஷ்டிக்கப்பட்டமை ஆகிய விடயங்கள் குறித்து, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் வழங்கிய சபாநாயகர், வடக்கின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து தமக்கு பதில் வழங்க முடியாது என்றும், ஆனால் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் தம்மால் எடுக்கப்படக்கூடிய உயர்மட்ட நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.தற்போது சட்ட மா அதிபர் இதுகுறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவரது அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் விஜயகலா குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் கூறியுள்ளார்.

_______________________________________________________________________

குற்றச்செயல்களின் புகலிடமா யாழ்ப்பாணம் ?

      கருணாகரன்

இன்னும் ஒரு பாடசாலைச் சிறுமி, “ஈழத் தமிழர்களுடைய கலாச்சாரத் தலைப்பட்டினம்” என்று புகழப்படும் வரலாற்றுச் சிறப்புடைய பிரதேசத்தில் கடந்தவாரம் பலியvazhpanamிடப்பட்டிக்கிறார். பலியிடப்பட்டவர் காட்டுப்புலம் அ.த.க. பாடசாலையில் முதலாவது ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும் ஆறு வயதுடைய றெஜினா என்ற சிறுமி. யாழ்ப்பாணத்திலுள்ள (சுழிபுரம்) காட்டுப்புலம் என்ற கிராமத்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் வழியில் இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.பிள்ளையைக் காணவில்லை என்று தேடிய அயலவர்கள், சடலத்தையே  கிணறு ஒன்றில் இருந்து மீட்டுள்ளனர். கொலையாளிகள் என்ற சந்தேகத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வழக்கு விசாரணைகள் நடக்கின்றன. இந்தக் கொலை அல்லது றெஜினாவின் கதை இரண்டு மூன்று நாள் ஊடகச் செய்திகளோடு கரைந்துபோய் விட்டது. இனி அவ்வப்போது நடக்கும் வழக்கு விசாரணைகளில் மெல்லியதாக எழுந்தடங்கும். ஏற்கனவே நடந்த இதைப்போன்ற பல கொடுஞ்செய்திகளை எல்லோரும் மறந்து விட்டனர். ஒவ்வொருவருக்கும்தான் எவ்வளவு பிரச்சினைகள்? அதற்குள் இதையெல்லாம் நினைவில் வைத்திருக்க முடியுமா என்ன? இதற்கிடையில் இன்னொரு செய்தி வந்து புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கதையைப்போல இதை மறைத்து விடும்.       ( மேலும்) 06.07.2018

_______________________________________________________________________

வட மாகாண சபையின் ஐந்து அமைச்சர்கள் யாவர் என்பதை தமக்கு அறிவிக்குமாறு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அறிவுறுத்தல்

வட மாகாண சபையின் ஐந்து அமைச்சர்கள் யாவர் என்பதை தமக்கு அறிவிக்குமாறு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அறிreginold 1வுறுத்தல் விடுத்துள்ளார்.   வட மாகாண ஆளுநரினால், இது குறித்த உத்தியோகபூர்வ அறிவுறுத்தல் இன்று முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலக அதிகாரி ஒருவர் சூரியனின் செய்திப் பிரிவிடம் தெரிவித்தார். இதற்கமைய, வட மாகாண அமைச்சர்கள் தொடர்பான விபரம், முதலமைச்சரினால் ஆளுநருக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் மீதான ஊழல் குற்ற விசாரணை அடிப்படையில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த பா.டெனீஸ்வரனுக்கு மீண்டும் அந்த அமைச்சுப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 29ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.  இந்த உத்தரவின் அடிப்படையில் தற்போது வட மாகாண சபையின் அமைச்சராக பா.டெனீஸ்வரன் செயற்படுகிறார்.        ( மேலும்) 06.07.2018

_______________________________________________________________________

 தென்பகுதியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதனால் எனது அமைச்சுப் பதவியினை மக்களுக்காக மகிழ்ச்சியுடன் இராஜினாமாச் செய்துள்ளேன்.


வடக்கில் மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் வெளிக்கொண்டுவரும் வகையிலேயே நான் கருத்துத் தெரிவித்திருந்தேன். அத்தகைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமைvijayakal10யால் கட்சியின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியும், மக்களுக்காகவும் எனது அமைச்சுப் பதவிலியிருந்து இராஜினாமா செய்துள்ளேன் என முன்னாள் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கில் குறிப்பாக யாழ்.குடாநாட்டில் வன்முறைகளும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன. ஆறு வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 59 வயதான வயோதிபப் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் வீட்டில் கொள்ளையும் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. போதைவஸ்து பாவனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் மக்களின் துன்பங்களைத் தாங்கமுடியாது புலிகளின் காலத்தை நினைவூட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.      ( மேலும்)  06.07.2018

_______________________________________________________________________

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ஒக்டைன் 92 வகை பெற்றோல் ஒரு லீட்டர் 8 ரூபாவினாலும், 95 ஒக்டைன் வகை பெற்றோல் 8 ரூபாவினாலும், அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  அதனடிப்படையில் ஒக்டைன் 92 வகை பெற்றோலின் புதிய விலை 145 ரூபாவாகவும், 95 ஒக்டைன் வகை பெற்றோலின் புதிய விலை 155 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது. இதேவேளை டீசலின் விலை 9 ரூபாவினாலும், சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  எனவே, டீசலின் புதிய விலை 118 ரூபாவாகவும், சூப்பர் டீசலின் புதிய விலை 129 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், ஐஓசி நிறுவனத்தினால் விலை அதிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

யாழ்ப்பாணத்தில் நிலவும் வன்முறைக் கலாசாரத்தை இரண்டு வாரத்திற்குள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம் என வடமாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்னாண்டோ POLICEதெரிவித்துள்ளார்.   இது தொடர்பில் இவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்துள்ளன. குறித்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்கும், வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் யாழ்ப்பாணப் பொலிஸாரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மேலதிகமாக 100 பொலிஸாரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்துள்ளோம்.   இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு எனது தலைமையின் கீழ் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளேன். விசேட வேலைத்திட்டத்திற்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 100 பொலிஸாரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்துள்ளதுடன், அவர்களுக்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான வாகனங்களும் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.      (மேலும்)  06.07.2018

_______________________________________________________________________

சிறுத்தை கொலை விவகாரம்; சந்தேகநபர்களுக்கு பிணை

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் பத்து பேரையும் பிணையில் விடுதலை செய்ய இன்று (05) நீதிமன்றம் உத்தரவிட்டது.சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (5) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேகநபர்கள் 10 பேரையும் தலா ஐந்தாயிரம் ரூபா ரொக்க பிணையிலும், இரண்டு இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

_______________________________________________________________________

 யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் மீட்கப்பட்ட 220 கிலோ தங்கம் குறித்து சந்தேகம் நிலவுவதாக பொன்சேகா தெரிவிப்பு

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் மீட்கப்பட்ட தங்கத்திற்கு என்ன நsarath.fடந்தது என்பது தொடர்பில் தனக்கு சந்தேகம் நிலவுவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.அவ்வேளையில் இராணுவத் தளபதியாக இருந்த நீங்கள் யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்தீர்கள். யுத்தம் முடிந்ததன் பின்னர், அலரி மாளிகைக்கு கொள்கலனில் கொண்டுவந்ததாகக் கூறப்படும் தங்கம் மற்றும் பணத்திற்கு என்ன நடந்ததது? எனக் கேட்டமைக்கு,    இராணுவத் தளபதிப் பதவியிலிருந்து தான் ஓய்வு பெற்றதன் பின்னர் அது அலரிமாளிகைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த அவர், தான் இருக்கும்போது சுமார் 220 கிலோ தங்கத்தை மீட்டதாகவும் அவற்றை தாம் சட்டவிதிமுறைகளுக்கு ஏற்ப எழுத்துமூல ஆவணங்களுடன் வவுனியா பொலிஸாரிடம் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.    அதன் பின்னராக செயற்பாடுகளைப் பாதுகாப்பு அமைச்சே மேற்கொண்டிருக்க வேண்டும். அதற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் கூற முடியாமல் தற்போது ஊமை போன்றிருப்பதாகவும் அது குறித்து தனக்கும் தற்போது சந்தேகமாகவே இருப்பதாகவும் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.220 கிலோகிராம் தங்கம் என்பது 27,500 பவுன் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

முதியோர் இல்லத்தில் சேர்க்க முயன்ற மகனை சுட்டுத்தள்ளிய தாய்!


முதியோர் இல்லத்தில் சேர்க்க முயன்றதற்காக தனது 72 வயது மகனை 92 வயதுடைய தாய் சுட்டுத்தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Anna_Mae_Blessing   அமெரிக்காவின் அரிசோனா மாகாாணத்தில் உள்ள ஃபௌன்டைன் ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள மரிகோபா கௌன்டி என்ற இடத்தில் இருக்கும் வீட்டில் ஜூலை 2-ஆம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் 72 வயதுடையவரின் உடல் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக அவரின் 92 வயது தாய் கைது செய்யப்பட்டார். போலீஸார் அவரை கைது செய்து அழைத்துச் சென்ற போது, 'நீ என் வாழ்க்கையை பறித்தாய், அதனால் நான் உன் வாழ்க்கையை பறித்துவிட்டேன்' என்று கூறியவாறு இருந்தார். பின்னர் நீதிமன்றத்தில் தனது மகனை கொலை செய்தததை ஒப்புக்கொண்ட அந்த முதியவர், அதற்கான காரணத்தை கூறியது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.அன்னா மே பிளெஸ்ஸிங் (வயது 92), ஆகிய என்னை சரியாக கவனித்துக்கொள்ள முடியாத காரணத்தால், என்னுடைய 72 வயதுடைய மகன், அருகிலிருக்கும் முதியோர் இல்லத்தில் சேர்க்க முயன்றார். இதுதொடர்பாக இவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பெரிதானது. அப்போது என்னிடம் வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு எனது மகனை சுட்டேன்.       (மேலும்)  06.07.2018

_______________________________________________________________________

விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை: சபாநாயகர் அறிவிப்பு

பி.பி.சி

 
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், விடுதலை புலிகளுக்கு ஆதரவாக தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து குறித்து கட்சித் தலைமைக்கு அறிவித்து, சட்டமா அதிபரின் ஆலvijayakala ranilோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடந்து வருவதாக சபாநாயகர் கருஜயசூரிய இன்று (புதன்கிழமை) இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.   இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கூச்சல், குழப்பம் தொடர்பில், சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தார். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடந்த திங்களன்று (ஜூலை 02) யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வொன்றில் தெரிவித்த கருத்து குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் சபாநாயகர் விவரித்தார்.    ''இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம்'' என இராஜாங்க அமைச்சர் சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார்.       (மேலும்)  05.07.2018

_______________________________________________________________________

லா பாஸ் கடிகாரம்

நடேசன்


பொலிவியாவின் தலைநகரானன லா பாஸ் நகர அரச கட்டிடத்தில் உள்ள கla passடிகாரத்தை பார்த்தபடியே நின்ற எம்மைப் பார்த்து ‘இந்தக் கடிகாரத்தில் ஏதாவது விசேடமாகத் தெரிகிறதா? என எமது வழிகாட்டியாக வந்த பெண் கேட்டபோது   ‘நேரம் பிழையாக இருக்கிறது’ என்றேன். இதுவரை எமக்கு வழிகாட்டியாக வந்தவர்கள் ஸ்பானிய வம்சாவளியினர் ஆனால் பொலிவியாவில் எமது வழிகாட்டி சுதேச அய்மாறா இனப்பெண் உயரம் குறைந்து குண்டானவர். 35 வயதிருக்கும் நகைச்சுவையான பெண்மணி. அவரது நடையும் பார்ப்பதற்கு உருட்டிவிட்ட உருளைக்கிழங்கு போல் இருப்பதால் தமிழில் அவரை உருளைக்கிழங்கு என எங்களுக்குள் கூறிக்கொண்டோம். வட்டமான தக்காளி போன்ற முகத்தை இரண்டு பக்கமும் ஆட்டியபடி     ‘இல்லை ஆனால் இடதுபுறமாக ஓடுகிறது.’   ‘அது ஏன்?’ ‘எங்கள் அரச அதிபர் இடதுசாரி என்பதால்.’   ‘சீனா, வியட்னாம், கியூபா எனப் பல நாடுகளுக்குச் சென்றேன் அங்கெல்லாம் கடிகாரம் வலது புறமாக ஓடுகிறதே?         (மேலும்)  05.07.2018

_______________________________________________________________________

படுகொலை வரலாற்றை மறைக்க எடுத்த முயற்சிகள் தோல்வி! ‘குருக்கள் மடத்துப் பையன்’ லண்டனில் வெளியிடப்படுகிறது!

தோண்டப்படாத குழிகளுக்குள் தொலைக்கப்பட்ட குருக்கள் மடத்துப் படுகொலையை வெளிக்கொணரும் ‘குருக்கள் மடத்துப் பையன்’ நூல் வெளியீடு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியsmsbazeerில் யூலை 14 அன்று லண்டன் ஈஸ்ற்ஹாமில் வெளியிடப்படுகின்றது. எஸ் எம் எம் பஷீர் அவர்களின் இந்நூல் 1990 யூலை 12 அன்று குருக்கள் மடத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட 69 பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் படுகொலைகளை ஆவணப்படுத்தி உள்ளது. இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளில் குருக்கள் மடத்துப் படுகொலைச் சம்பவத்தில் மட்டுமே படுகொலை செய்யப்பட்டவர்களை மட்டுமல்ல குறிப்பிட்ட இயக்கத்தின் கொலையாளிகள் யார் என்பதையும் இந்நூலாசிரியர் தன்னுடைய புலனாய்வின் மூலம் வெளிக்கொணர்ந்து உள்ளார். இந்நூலை கருவிலேயே சிதைக்கின்ற வகையில் இந்நூலை பதிப்பிப்பதற்கே பதிப்பகங்கள் தயக்கம் காட்டின. தாங்கள் பதிப்பிப்பதாகக் பதிப்பு வேலைகளை கிடப்பில் போட்டன. பல்வேறு கரங்களுக்கு மாறி இறுதியில் நிச்சாமாம் வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.       (மேலும்)  05.07.2018

_______________________________________________________________________

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் பாதிக்கும் வகையில் செயற்படுவதில்லை


கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகimmigrationள் வருகை தரும் பகுதியில் குடிவரவு, குடியகல்வு கருமபீடத்தில் அதிகாரிகள் இருப்பதில்லை என்று சமூக ஊடகங்களில் வௌியாகியுள்ள செய்தியை மறுப்பதாகவும், ஒருபோதும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தமது அதிகாரிகள் செயற்படுவதில்லை என்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் சமிந்த ஹெட்டியாரச்சி கூறினார்.   பயணிகள் வருகை தரும் கருமபீடத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் இருப்பதில்லை என்று சமூக ஊடகங்களில் வௌியாகிய செய்திக்கு விளக்கமளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஒருசில விமானங்கள் ஒரே நேரத்தில் வரும் போது சற்று நெரிசல் நிலை ஏற்படுவதாகவும், எனினும் நிலமையை கையாள்வதற்கு தேவையான அதிகாரிகள் இணைக்கப்படுவதாகவும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் சமிந்த ஹெட்டியாரச்சி கூறினார்.

_______________________________________________________________________

வர்த்தகப் போர்:அமெரிக்காவுக்கு ஏஞ்சலா மெர்கல் எச்சரிக்கை 

அமெரிக்க அதிபர் மிகவும் பழைமையான முறையில் வர்த்தக விஷயத்தை அணுகுகிறார்

ஐரோப்பிய யூனியனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு கூangela merkel Trumphடுதல் வரி விதிக்கப்படும் என்று மிரட்டுவது வர்த்தகப் போர் பிரச்னையை மேலும் அதிகரிக்குமே தவிர குறைக்காது என்று அமெரிக்காவுக்கு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   அமெரிக்க வர்த்தக நலன்களை பாதுகாப்பதாகக் கூறி, பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான வரியை அதிபர் டிரம்ப் உயர்த்தி வருகிறார். முக்கியமாக, இந்த விவகாரத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவும் இடையே நேரடியான வர்த்தகப் போர் ஏற்பட்டது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அதன் முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளான ஐரோப்பிய யூனியன், தென் கொரியாவுக்கும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் பெரும் பொருளாதாரப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க வர்த்தக நலன்களுக்கு சீனா எந்த அளவுக்கு பாதகமாக இருந்ததோ, அதே அளவுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளும் பாதகமாக உள்ளன;       (மேலும்)  05.07.2018

_______________________________________________________________________

புலிகளிளை மீண்டும் உருவாகித்தான் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது ஒரு முட்டாள்தனமான கருத்தாகும்.


கடந்த முப்பது வருட கால யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்சி பெற்ற எமது நாட்டை, மீண்டும் யுத்த சூழல் ஒன்றுக்குள் தள்ளிவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே அமைச்சரm.rahman் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து அம்பலப்படுத்துகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்.   அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சையைக்குரிய பேச்சு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   மேலும் அவர் தனது அறிக்கையில், சிறுவர்களும், பெண்களும் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் வடக்கிலே விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என்று சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் விஜயகலா கூறியிருக்கும் கருத்து தெற்கிலே பாரிய கருத்து மோதல்களையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.       (மேலும்)  05.07.2018

_______________________________________________________________________

48 இலட்சம் பெறுமதியான மாணிக்க கற்களுடன் சீன நாட்டு பெண் கைது


சட்டவிரோதமான முறையில் மாணிக்க கற்களை எடுத்து வந்த சீன நாட்டு பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த 35 வயதுடைய சீனப்பெண் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்து 12 வருடமாக நீர்கொழும்பு பகுதியில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.   குறித்த பெண் நேற்று (03) இரவு 11.30 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 407 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.    இந்நிலையில் பயணிகள் வருகை தரும் ஒழுங்கின் ஊடாக குறித்த நபர் வருகை தரும்போதே அவருடைய பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த மாணிக்க கற்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த நபரிடம் இருந்து பெரிய மாணிக்க கற்கள் 18 உம் சிறிய மாணிக்க கற்கள் பலவும் 13 பொதிகளில் இருந்த நிலையில் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.       (மேலும்)  05.07.2018

_______________________________________________________________________

 பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டிய கடனில் 5 மில்லியன் டொலரை செலுத்த ஶ்ரீலங்கன் விமான சேவை இணக்கம்

விமான எரிபொருளுக்காக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டிய கடன் தொகையில் 5 மில்லியன் டொலரை அடுத்த வாரம் செலுத்துவதற்கு ஶ்ரீலங்கன் srilankan airlineவிமான சேவை இணக்கம் தெரிவித்துள்ளது.  பேச்சுவார்த்தையின் பின்னர் எரிபொருளுக்காக வழங்க வேண்டிய பணத்தை கட்டம் கட்டமாக வழங்குவதற்கு ஶ்ரீலங்கன் விமான சேவை இணங்கியதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ஜயசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் கொள்வனவிற்காக ஶ்ரீலங்கன் விமான சேவை 87.5 மில்லியன் அமெரிக்க டொலரை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது.இலங்கை நாணய பெறுமதியில் இது 13.45 பில்லியன் ரூபாவாகும்.கடன் தொகையில் 5 மில்லியன் டொலரை அடுத்த வாரம் செலுத்துவதற்கு ஶ்ரீலங்கன் விமான சேவை இணங்கியுள்ளதாக பெட்ரொலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது. எஞ்சிய தொகையை செலுத்துவதற்காக தனியார் வங்கியொன்றில் கடனைப் பெற அமைச்சரவையின் அனுமதியைக் கோரவும் ஶ்ரீலங்கன் விமான சேவை இணக்கம் தெரிவித்துள்ளது.இரு தரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

_______________________________________________________________________

விஜயகலாவின் கருத்தால் அரச பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

யாழ்ப்பாணத்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் அரச உத்தியோகஸ்த்தர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், அது தொடர்பாக விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரினால் சகல பிரதேச செயலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் ஒன்றிலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஐனாதிபதியின் தேசிய நிகழ்ச்சி திட்டம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்தநிகழ்வில் பெருமளவான அரச பணியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.இதன்போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் உரையாற்றும்போதும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தமிழீழ விடுதலை புலிகள் குறித்தும் உரையாற்றும்போது அரச ஊழியர்கள் பெரும் கூச்சலிட்டு ஆரவாரித்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பிலேயே குறித்த அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன.

_______________________________________________________________________

விஜயகலா: வில்லங்கமான பேச்சு

 -          கருணாகரன்

“இன்றைய நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகளை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமாகும். நாங்கள் உயிரோட வாழ வேண்டுமானால், நாங்கள் நிம்மதியாக வீதியvijayakalaில் நடமாட வேண்டுமாக இருந்தால், எங்களுடைய பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்று (பாதுகாப்பாக) வீடு திரும்ப வேண்டுமாக இருந்தால், வடக்குக் கிழக்கிலே தமிழீழ விடுதலைப் புலிகளின் கை ஓங்க வேண்டும். அதற்கு அப்பால் எதையுமே இந்த அரசாங்கம் செய்யவில்லை” என்று பெரியதொரு “குண்டை” எறிந்திருக்கிறார் விஜயகலா மகேஸ்வரன்.இந்தக் “குண்டு” மறுநாள் (03.07.2018) பாராளுமன்றத்தில் பெரிதாக வெடித்திருக்கிறது. சபையைத் தொடர்ந்து நடத்த முடியாத அளவுக்குப் பாராளுமன்றத்தில் கடுமையான விவாதங்களும் எதிர்ப்புக் கூச்சல்களும் இடம்பெற்றுள்ளன.“அரசாங்கத்தரப்பிலுள்ள அமைச்சர் ஒருவர் எவ்வாறு புலிகள் மீளுருவாக்கம் பெற வேண்டும் எனக் கூற முடியும்?” என்ற கேள்வியைப் பலரும் எழுப்பியிருக்கிறார்கள். “உடனடியாகவே இது பற்றி விசாரணைகள் நடத்தப்பட வேணும்” என்று பெரும்பாலான கட்சிகள் தெரிவித்திருக்கின்றன. “அமைச்சுப் பதவியிலிருந்து விஜயகலா விலக்கப்பட வேணும். அவர் கைது செய்யப்பட வேணும்” என்ற கூட்டுக் கோரிக்கையை சிங்களக் கட்சிகள் முன்வைத்திருக்கின்றன. இது தொடர்பாக எழுந்த குழப்பங்களை அடுத்துப்  பாராளுமன்ற அமர்வுகள் மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.       (மேலும்)  04.07.2018

_______________________________________________________________________

ஒரு பாராளுமன்றப் பிரதிநிதியின் கடமைகள்'


இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,-2.7.18

அண்மையில் தமிழ்ப் பகுதிகளிலுருந்து வந்து கொண்டிருக்கும் மிகவும் அவலமான செய்திகள் நெஞ்சை வெடிக்கப் பண்ணுகிறது. ஓரு நாடு எப்படியிருக்கிறது என்பது அvijayakala speechந்நாட்டில் பெண்கள் எப்படி நடத்தப் படுகிறார்கள் என்பதிலிருந்து கண்டு கொள்ளலாம்.இன்று பாடசாலை செல்லும் இளம் குழந்தைகள்,பல்கலைக்கழகம்செல்லும் இளம் பெண்கள், வேலைசெய்யுமிடங்களில் பல பெண்கள் என்று பலர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். வேலிகளே பயிர்களை மேய்கின்றன.தட்டிக் கேட்க ஆளில்லாத சமுதாயமாகத் தமிழ்ச்சமுதாயம் தடுமாறித் தவிக்கிறது.தலைவர்களோ படாடோபமான பாதுகாப்புடன் செல்வம் கொழிக்க வலம் வருகிறார்கள். மக்களுக்கும் அவர்களுக்கும் ஆக்க பூர்வமான எந்தத் தொடர்பும் இருக்கிறதா என்று தெரியவில்லை. கண்ணிருந்தும் குருடர்களாக,காதிருந்தும் செவிடர்களாக, அறிவிருந்தும் மூடர்களாக வலம் வரும் இந்த அரசியல்வாதிகளுக்கு. அண்மையில் சுழிபுரத்தில் நடந்த ஆறுவயதுக்குழந்தை றெஜினாவின் கொடிய கொலை மனத்தை உருக்காவிட்டால்,பொது மக்களின் பாதுகாப்பு, போன்ற அத்தியாவசிய விடயங்களை முன்னெடுத்து அவர்களைத் தெரிவு செய்த மக்களின் வாழ்வுக்கு நன்மை செய்யாவிட்டால்,இவர்கள் மனிதர்கள் என்ற பெயரில் வாழும் ஈனப் பிறவிகளாகும். இதை எழுதிக்கொண்டிருக்கும்போது இலங்கை அரசாங்க அமைச்சர் விஜயகலா,தனது பேச்சில் புலிகள் மீண்டும் வரவேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார் என்ற செய்தி வந்திருந்தது. அதைத் தொடர்ந்து,அவர் அந்தப் பேச்சின் விளைவால் பதவியிழந்திருக்கிறார் என்ற செய்தியும் வந்தது..       (மேலும்)  04.07.2018

_______________________________________________________________________

தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் தன்னைத் தானே துப்பாக்கிnazeer1யால் சுட்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இன்று (03) மதியம் 2.30 மணியளவில் மல்லாகம் பகுதியில் உள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த நசீர் எனும் 25 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.   காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த சில தினங்களாக வீட்டுக்காரர்களுடன் ஏதோ பிரச்சினைகளுடன் இருந்து வந்ததுடன், வீட்டுக்காரர்களுடன் தொலைபேசியில் கடுமையாக கதைத்ததாகவும் சக பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.        (மேலும்)  04.07.2018

_______________________________________________________________________

சிறுத்தை விவகாரம்; சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியல்

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றின்மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் பத்து பேரையும் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று நீதிமன்றம் உத்தரவிட்டது. கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தை வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கி காயப்படுத்தியிருந்தது.  இந்த நிலையில் குறித்த சிறுத்தை கிராம மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தது.   இதனை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.   அந்த வகையில் கடந்த 24 ஆம் திகதியும் 25 ஆம் திகதியும் சந்தேகநபர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட, நான்கு பேர் சரணடைந்திருந்தனர். அவர்களை இன்றையதினம் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  அதன்படி கடந்த 3 ஆம் வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேலும் நான்கு பேர் சரணடைந்திருந்தனர். அதன்படி பத்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் மயில்வாகனம் கிரேசியன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

_______________________________________________________________________

மகிந்தவுக்கு நியுயோர்க் டைம்ஸ் நாளிதழ் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

தம்மால் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏதேனும் சிக்கல் இருப்பின் தமது நாளிதழின் சிரேஷ்ட ஆசிரியர்களை தொடர்புகொள்ளுமாறு நியுயோர்க் டைம்ஸ் நாளிதழ் அறிவித்துள்ளது.  அந்த ஊடக நிறுவனத்தனால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.தமது நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் இலங்கையில் இருக்கும் தமது செய்தியாளர்களை அச்சுறுத்த வேண்டாம் என நியுயோர்க் டைம்ஸ் நாளிதழ் கோரியுள்ளது.   மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்றினால் ஊடக சந்திப்பொன்றில் தமது ஊடகவியலாளர்கள் வெளிப்படையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

_______________________________________________________________________

சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட இளைஞன் கைது

புதுக்குடியிருப்பு 2 ஆம் வட்டாரம் கோம்பாவில் பகுதியில் வசித்துவரும் பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உற்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் அதviolenceே இடத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   கடந்த 01 ஆம் திகதி கோம்பாவில் பகுதியில் வசித்துவரும் 16 வயது நிரம்பாத சிறுமி ஒருவரை அவருடைய வீட்டிற்கு அருகில் உள்ள மற்றுமொரு வீட்டிற்கு அழைத்து சென்று குறித்த சிறுமியை 24 வயதுடைய இளைஞன் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உற்படுத்த முயற்சித்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னர் குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த நபரை நேற்று (02) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.       (மேலும்)  04.07.2018

_______________________________________________________________________

கடித இலக்கியம்:

வடமராட்சி  " ஒப்பரேஷன் லிபரேஷன் "

பேரழிவுக்காக 1987 இல் நடந்த ஒத்திகை

 ராஜஶ்ரீகாந்தன் (1948 - 2004)  எழுதிய  ஈழப்போர்க்கால கடிதம்

                                                                              முருகபூபதி

     ஈழத்து தமிழ் இலக்கியம் மற்றும் ஊடகத்துறைகளின் வளர்சrajasrikanthan1்சியில் காத்திரமான பங்களிப்புகளை வழங்கியவர்களின் வரிசையில் ராஜஶ்ரீகாந்தன் அவர்களும் குறிப்பிடத்தகுந்தவர். வடமராட்சியில் வதிரி என்னும் கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு பிறந்து தனது 56 ஆவது வயதில் கொழும்பில் மறைந்தார்.  ிறுகதை, கட்டுரை, விமர்சனம், திறனாய்வு, இதழியல், மொழிபெயர்ப்பு முதலான துறைகளில் ஈடுபட்டவர்.  வடமராட்சியில் அடிநிலை மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் மறுமலர்ச்சிக்காகவும்  கடுமையாக உழைத்த பெரியார் சூரன் அவர்களினால் எழுதப்பட்ட சுயசரிதையை கையெழுத்துப்பிரதியிலிருந்து அச்சுப்பிரதியாக பதிப்பித்து வெளியிட்டவரும் ராஜஶ்ரீகாந்தன்தான்!அழகு சுப்பிரமணியத்தினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட  சிறுகதைகள் ( நீதிபதியின் மகன்), நாவல் (மிஸ்டர் மூன்)  ஆகியனவற்றை தமிழில் மொழிபெயர்த்தார். இவரது காலச்சாளரம்  சிறுகதைத்தொகுதிக்கும் நீதிபதியின் மகன் மொழிபெயர்ப்பு நூலுக்கும் தேசிய சாகித்திய விருதுகள்  கிடைத்துள்ளன.      (மேலும்)  03.07.2018

_______________________________________________________________________

 பனிவிழும் தேசத்தில் எரிமலையின் சீற்றம்.

நடேசன்

அடக்கு முறையான அரசாங்கத்தை எதிர்க்கும்போது மொத்த சமூகமும் எதிர்ப்பது இலகுவானது. அப்படி கிளம்பியவர்களை அதேகூட்டத்தில் சகோதரக் கொலை செய்வதுeelam struggleம், அதனால் பயந்து நாட்டைவிட்டு வெளியேறுவதும் வித்தியாசமானது. முன்பு அடக்குமுறையை பாவித்த எதிரியை விட்டுவிட்டு அல்லது அந்த எதிரியிடம் உயிர் பாதுகாப்பு பெற்றுக்கொண்டு எமது சமூகத்தில் உள்ளவர்களை எதிர்ப்பது என்பது எவ்வளவு கடினமானது என்பதை அந்த நிலைக்கு தள்ளப்பட்டவர்களால் புரிந்து கொள்ளமுடியும். இப்படியான துர்ப்பாக்கியம் ஈழத்தில் நடந்தது.   இலங்கை இராணுவத்தை எதிர்த்தவர்கள் இறுதியில் விடுதலைப்புலிகளால் வேட்டையாடும்போது ஓரளவு வசதியானவர்கள் தப்பியோடினார்கள். வறுமையான குடும்பத்தில் வந்தவர்கள் இலங்கை இரணுவத்திடம் புகலிடம் பெற்றனர். அல்லது விடுதலைப்புலிகளின் கைகளில் மரணமடைந்தார்கள்.வெளிநாட்டுக்குத் தப்பியோடிய மற்றைய இயக்கத்தவரை கடந்த 30 வருடங்களாக பார்த்து, பேசி நண்பர்களாக பழகி இருக்கிறேன். ஓர் இருவரைத் தவிர மற்றவர்கள் எதையோ தொலைத்தவர்களாக வாழ்க்கையில் தாமரை இலைத்தண்ணீராக மிதந்தபடியேதான் எல்லா நாடுகளிலும் வாழ்கிறார்கள்.இவர்களில் ஒரு பகுதியினர் தமிழ்நாட்டு முகாம்களில் வாழ்பவர்கள். அவர்களே இறந்தவர்களை அதிர்ஸ்டசாலி என நினைக்கவைப்பவர்கள். விடுதலைப்புலிகள் தற்போது இல்லாதபோதும் கால் நூற்றாண்டு வாழ்க்கையை தமிழ்நாட்டுமுகாம்களிலும் தொலைத்தபின் இவர்களால் மீண்டும் இலங்கை வாழ்க்கையோடு ஒட்டுவதோ புதிதாக சொந்தங்களைஉருவாக்குவதோ இலகுவானதல்ல.      (மேலும்)  03.07.2018

_______________________________________________________________________

கிளிநொச்சியில் அதிநவீன ஸ்கேனருடன் நால்வர் கைது

 கிளிநொச்சி பகுதியில் நிலத்திற்கடியிலுள்ள பொருட்களைக் கண்டறியும் ஸ்கேனரை வைத்திருந்த சந்கேநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கிளிநொச்சி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய நேற்று மாலை கிளிநொச்சி – சிவபுரம் பரந்தன் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, அதிநவீன ஸ்கேனருடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அச்சுவேலி, பளை, மற்றும் கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்கேநபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி – அறிவியல் நகர் பகுதியில் நிலத்திற்கடியில் உள்ள பொருட்களைக் கண்டறியும் வசதியுடைய ஸ்கேனருடன் சந்தேகநபர்கள் இருவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது       (மேலும்)  03.07.2018

_______________________________________________________________________

ZUGமாநகர தேர்தல் 2018

ZUG மாநகர சபை சோசலிச ஜனநாயக கட்சியினால் (SP) தேர்வு செய்யப்பட்ட மாநகர சபை வேட்பாளர். ரூபன் சிவகணேசன்

ZUG மாநகர சபை உறுப்பினர்களிற்கான தேர்தலில் முதல் முதலாக ஓர் தமிழ் இளைஞர் சோசலிச ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவரது தெரிவrubanு ZUGநகரத்திற்கான ஓர் பல்லின மக்களின் பிரதிநிதத்துவத்தினை உறுதி செய்கின்றது.இச் செய்தி இலங்கையில் பேரினவாதத்தினால் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு சுவிற்சர்லாந்தில் தஞ்சம் அடைந்து 36 வருடங்களாக வாழ்ந்து வரும் தமிழர்களிற்கு ஓர் மாபெரும் அங்கீகாரமாகும்.  ரூபன் சிவகணேசன்  2006 ம் ஆண்டு  கன்ரோன் ZUG இற்கான மாநில அரச உறுப்பினராக மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வலதுசாரிகளை பெரும்பாண்மையாக கொண்ட ஓர் மாநிலத்தில் முதலாம் தலைமுறையினரை சார்ந்த ஓர் இளைஞன் முதல் முறையாக 2006 இல் மாநில உறுப்பினர்களிற்கான தேர்தலில் வெற்றி பெற்றது ஓர் பெரிய சாதனை ஆகும்.ZUG மாநகர சபையில் அண்ணளவாக 30000 மக்கள் வாழ்ந்துவருகின்றனர். 120க்கு மேற்பட்ட தேசிய இனங்கள் ஓரங்கிணைந்து வாழும் ஓர் நகரம். இந் நகரம் சுவிற்சர்லாந்தில் மத்தியில் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாது ணுரப நகரத்தில் வாழும் 40 விகிதமான மக்கள் வெளிநாட்டவர்கள் ஓவ்வொரு 3வது நபர்களின் அடிப்படை பிறப்பிடம் வெளிநாடுகளாகவே இருக்கின்றது.        (மேலும்)  03.07.2018

_______________________________________________________________________

வடக்கில் பெருமளவான மருந்தகங்கள் அனுமதி பத்திரம் இன்றி இயங்குகின்றன

வடக்கு மாகாணத்தில் பெருமளவான மருந்தகங்கள் அனுமதி பத்திரம் இன்றி இயங்குவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞானசீலம் குணசீலன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் மருதகங்கள் மூடப்பட்டமை தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த காலங்களில் அனுமதி பத்திரம் இல்லாத மருதகங்களில், மருத்தவர்களின் சீட்டுகள் இன்றியும் மருத்துவ ஆலோசனைகள் இன்றியும் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.

_______________________________________________________________________

ரூ. 20 லட்சம் கோடி பொருள்கள் மீது கூடுதல் வரி: அமெரிக்காவுக்கு ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் வாகனங்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்தால், அதற்குப் பதிலடியாக அமெரிக்கப் பொருள்கள் மீது 29,400 கோcarடி டாலர் (சுமார் ரூ.20.21 லட்சம் கோடி) இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது. சீனாவைப் போலவே ஐரோப்பிய நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதியாலும் அமெரிக்க நலன்கள் பாதிக்கப்படுவதாக அண்மையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் வாகனங்கள் மீது 20 சதவீதம் கூடுதல் இறக்குமதி விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு ஐரோப்பிய யூனியனின் வர்த்தக விவகாரங்களை கவனித்து வரும் ஐரோப்பிய ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ஐரோப்பிய நாடுகளின் வாகனங்கள் மீது 20 சதவீத கூடுதல் வரி விதிக்கும் யோசனைக்கு அதிபர் டிரம்ப் செயல்வடிவம் கொடுத்தால், அதற்கு ஐரோப்பிய யூனியன் தக்க பதிலடி கொடுக்கும். அதற்காக, 29,400 கோடி மதிப்பிலான அமெரிக்கப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கு தயாராக உள்ளோம். ஐரோப்பிய வாகனங்கள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படுவது, அமெரிக்கப் பொருளாதாரத்தைதான் முதன்மையாக பாதிக்கும் என்று ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியில் ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தியாகும் கார்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

_______________________________________________________________________

அரச வங்கி ஒன்றில் 95 மில்லியன் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம் கொள்ளை

அநுராதபுரம், தலாவ நகரில் உள்ள அரச வங்கியொன்றிற்குள் நுழைந்த குழுவினர் அங்கிருந்த பணம் நகை ஆகியவற்றை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 78 மில்லியன் பெறுமதியான நகைகள் மற்றும் 17 மில்லியன் ரூபா பணம் கொள்ளை இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  கடந்த வார இறுதி நாட்களில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த வங்கியில் உள்ள பாதுகாப்பு பெட்டகங்கள் நான்கில் மூன்று திருடர்களால் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் மற்றும் நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.எவ்வாறாயினும் இதுவரையில் சந்தேக நபர்களை தேடி விஷேட பொலிஸ் குழுக்கள் 8 நியமிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

_______________________________________________________________________


இந்திய உணவகத்தில் நிறவெறிக் கருத்து: பிரிட்டன் பெண் காவலர் பதவி நீக்கம் 

இந்திய உணவக ஊழியருக்கு எதிராக நிறவெறிக் கருத்துகளைக் கூறிய பிரிட்டன் பெண் காவலர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: பிரிட்டனின் நியூகேஸ்டில் நகரில் அமைந்துள்ள "ஸ்பைஸ் ஆஃப் பஞ்சாப்' உணவகம், இந்திய உணவு வகைகளை வழங்கி வருகிறது. அந்த உணவகத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி வந்த கேட்டி பாரட் (22) என்ற காவல்துறை பெண் அதிகாரி, உணவகத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரைப் பற்றி தனது நண்பரிடம் நிறவெறிக் கருத்துகளைக் கூறியதாக குற்றம் சாட்டப்படுகிறது. மதுபோதையில் அவர் கூறிய கருத்துகள் குறித்து உயரதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுகுறித்து துறை ரீதியிலான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், கேட்டி பாரட் இந்திய உணவகத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக முடிவு செய்த ஒழுங்காற்று ஆணையம், அவரை பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டது.

_______________________________________________________________________

 நேற்று – இன்று  - நாளை

-          கருணாகரன்

மழை தூறிக் கொண்டிருந்தது. கோடை மழை எதிர்பார்க்காமல் வந்ததால், அதலே நனைந்து விடக் கூடாது என்று கடை ஒன்றின் முன்னே ஒதுங்கி நின்றேன்.  லேசான மழtamilmagazineைத்தூறலில் நனைந்து கொண்டு சைக்கிளில் வந்தாள் ஒரு பிள்ளை. வயது பத்தோ பன்னிரண்டோவாக இருக்கலாம். சைக்கிளைக் கடைச் சுவரோடு சாய்த்து விட்டுப் படியேறி உள்ளே வந்தாள். ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. தலையில் ஒரு மழைத் தொப்பியைக் கூடப் போடவில்லை.   “வாணி ஸ்ரீ இருக்கா?” என்று அந்த ஈரத்தோடு கடைக்காரரிடம் கேட்டாள்.    “எத்தனையாவது பாகம்?” என்று கேட்டார் கடைக்காரர்.    “49 ஆவது”          “அந்த Episode இன்னும் வரேல்ல. நாளைக்கு வந்து பாருங்கோ”  என்றார் அவர்.  ‘நாளைக்கு கண்டிப்பா வருமா?” என்று கேட்டாள். அந்தக் கேள்வியில் சந்தேகமும் ஆவலும் கலந்திருந்தன.“வந்திடும். வந்ததும் அத்தைக்குப் போன் பண்ணுகிறேன்” என்றார் கடைக்காரர்.        (மேலும்)  02.07.2018

_______________________________________________________________________

“நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஒரு அரசியல் சூழ்ச்சி, எல்லா குற்றச்சாட்டுகளையும் நான் நிராகரிக்கிறேன்

நியூயோர்க் டைம்ஸ் அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் கருத்து


சீனாவினால் இலங்கைக்கு துறைமுகம் பெற்றுக்கொண்ட விதம் என்ற தலைப்பில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்த கருத்தை முன்னாள் ஜனாதிபதி மMahinda rajaஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தலுக்காக 7.6 மில்லியன் டொலர் நிதியை சைனா ஹாபர் நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் வங்கி கணக்கில் இருந்து பணம் பெற்றதாக கடந்த 26 ஆம் திகதி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.   இந்த விடயம் தொடர்பில் இன்று (01) அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி, தான் சைனா ஹாபர் நிறுவனத்திடம் இருந்து 2015 ஆம் தேர்தலுக்கு பணம் பெறவில்லை என தெரிவித்துள்ளார். “நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஒரு அரசியல் சூழ்ச்சி, எல்லா குற்றச்சாட்டுகளையும் நான் நிராகரிக்கிறேன்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.        (மேலும்)  02.07.2018

_______________________________________________________________________

மெஸ்ஸி, ரொனால்டோ அணிகள் வெளியேற்றம்: முடிந்ததா ஜாம்பவான்கள் சகாப்தம்?


1970ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து இதுவரை நாக்அவுட் சுற்றில் அதிக அளவிலான கோல்கள் அடிக்கப்பட்ட நாளான நேற்று, இந்த உலகக்கோபmessi்பையின் கதாநாயகர்களாக கருதப்பட்ட லயோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரின் அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளன.   சரியான நேரத்தில் குறிப்பிடத்தக்க முடிவுகளை எடுத்து போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தாத மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணியும், ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியும் உலகக்கோப்பை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. நேற்று, பிரான்ஸுடன் நடந்த போட்டியில் அர்ஜெண்டினாவும், உருகுவே அணியுடன் நடந்த போட்டியில் போர்ச்சுகல்லும் தோல்வியைத் தழுவின. இதனால், 31 வயதான மெஸ்ஸியும், 33 வயதான ரொனால்டோவும் தங்களை உலகக்கோப்பையை வென்ற அணியில் பங்கேற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் வாய்ப்பை முற்றிலுமாக இழந்துள்ளனர்.        (மேலும்)  02.07.2018

_______________________________________________________________________

புகையிரதங்களில் பிச்சை எடுப்பதற்கு  இன்று முதல் தடை

புகையிரதங்களில் பிச்சை எடுப்பதற்கு  அநாவசியமாக நடமாடுவது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புகையிரத பயணிகள் எதிர்நோக்கும் பல்வேறு இம்சைகள் மற்றும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.இந்த தீர்மானத்திற்கு அமைய அடுத்த வரும் ஒரு வார காலத்திற்குள் புகையிரதங்களில் இருந்து பிச்சைக்காரர்களும ் பிச்சை எகேட்போரும் அகற்றப்படுவர்.இவர்கள் தொடர்ந்தும் புகையிரதங்களில் பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரு.அபேவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.

_______________________________________________________________________

bazeer nool

_______________________________________________________________________

வடமாகாணத்தில் இடம்பெறும் வன்முறையையும் போதைப் பொருள் பாவனையையும் நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஜனாதிபதியிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை

வடமாகாணத்தில் இடம்பெறும் வன்முறையையும் போதைப் பொருள் பாவc.vனையையும் நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.   வடக்கு மாகாண முதலமைச்சரினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடித்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.வடக்கில் தற்போது குற்றவியல் நடவடிக்கைகள் திடீரென அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடமையில் இருக்கும் சிரேஷ்ட உப காவற்துறை அதிபர் ஒருவரினது அல்லது இளைப்பாறிய சிரேஷ்ட உப காவற்துறை அதிபர் ஒருவரினது தலைமையில் வடமாகாணசபை அலுவலர்களையும் உள்ளடக்கி, குறித்த வன்முறை, போதைப் பொருள் விநியோகம், ஆகிய குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து அவற்றைக் கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து உடனடி அறிக்கை ஒன்றைப் பெறுமாறும் சீவி விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.      (மேலும்)  02.07.2018

_______________________________________________________________________

நீர் கொழும்பில்  பேஸ்புக் காதலினால் வந்த விபரீதம்...!!

வர்த்தகர் ஒருவரின் மகளை முகப்புத்தகம் வாயிலாக நட்பு கொண்டு காதலிப்பதாக தெரிவித்து ஏமாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.facebook fraud   குறித்த சம்பவம் நீர் கொழும்பில் பதிவாகியுள்ளது.    இந்த சம்பவம் தொடர்பில் காவற்துறைக்கு நேற்றைய தினம் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய நபர் ஒருவரே, கோடீஸ்வர வர்த்தகரின் மகளை காதலிப்பதாக கடத்திச் சென்றுள்ளார்.   குறித்த யுவதியை பார்க்கவேண்டும் என அழைத்து, அவரை ஒரு அறையில் அடைத்து விட்டு தந்தைக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி பணம் கோரியுள்ளார். இதனையடுத்து தந்தை காவற்துறை  நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் தந்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.நேற்றைய தினம் வழமைக்கு மாறாக மகள் மேலதிக வகுப்பிற்கு செல்வதாக சென்றார். ஆனால் மாலையாகியும் அவர் வீடு திரும்பவில்லை. நாங்கள் உறவினர்கள் அயலவர்கள் என அனைவரிடத்திலும் கேட்டு விசாரித்தோம்.         (மேலும்)  02.07.2018

_______________________________________________________________________

1 கோடிக்கும் அதிகமான கொக்கைனுடன் மற்றுமொரு பிரேசில் நாட்டவர் கைது

ஒரு தொகை கொக்கைன் வில்லைகளை விழுங்கிய நிலையில் வந்த மற்றுமொரு பிரேசில் நாட்டவரை இன்று (01) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.24 வயதுடைய பிரேசில் நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த நபர் பிரேசிலில் இருந்து டோஹாவிற்கு வந்து, அங்கிருந்து இன்று காலை 10.30 மணியளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமானே QR 664 என்ற விமானத்தில் சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.குறித்த நபர் ஒரு கோடியே 50 இலட்சம் பெறுமதியான 100 கொக்கைன் வில்லைகளை விழுங்கியுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.குறித்த சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பிரிவினரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

_______________________________________________________________________

விக்னேஸ்வரன்: சோதனை மேல் சோதனை

 -          கருணாகரன்

வடமாகாணசபையில் மீண்டும் இன்னொரு சூடான விவகாரdenis-wiknesvaranம் உருவாகியுள்ளது. அல்லது பழைய விவகாரம் புதிதாக முளைத்திருக்கிறது.    முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு மறுபடியும் புதியதொரு நெருக்கடி உருவாகியுள்ளது. அல்லது பழைய நெருக்கடி புதிய வடிவத்தில் வந்திருக்கிறது. விக்கினேஸ்வரனின் ஆதரவாளர்களுக்கு மீண்டும் இன்னொரு எரிச்சலூட்டும் பிரச்சினை காலைச் சுற்றும் பாம்பாகியுள்ளது. (கடந்த வாரம் விக்கினேஸ்வரனின் புத்தக வெளியீட்டுக்கு சம்மந்தன், சுமந்திரன் அழைக்கப்பட்டிருந்ததை விக்கினேஸ்வரனின் ஆதரவாளர்கள் பெரிதாக விரும்பியிருக்கவில்லை. அதனால் பெருமளவான ஆதரவாளர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை)    மறுவளமாக விக்கினேஸ்வரனுடைய எதிர்த்தரப்பினருக்குப் பெருங்  கொண்டாட்டம். “முதலமைச்சர் தனது பதவியிலிருந்து தார்மீக அடிப்படையில் விலக வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராஜா வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.மறுபக்கத்தில் ரெலோவுக்கு என்ன செய்வது என்று தெரியாத திண்டாட்டம். ஏற்கனவே பதவி இழந்த அமைச்சர்கள் மறுபடியும் உஷாராகியிருக்கிறார்கள்.      (மேலும்)  01.07.2018

_______________________________________________________________________

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள் -- (04)

ஆரையூர் கண்ணகை வரலாறும் வழிபாடும்: தேடலில் இறங்கியிருக்கும் பிரசாத் சொக்கலிங்கம்

                                                                  முருகபூபதி

மகாபாரதம், இராமாயணம், சிலப்பதிகாரம் என்பன ஐதீகங்களாக போற்றப்பட்டாலும், இவற்றில் வரும் பெண்பாத்திரங்களுக்கு கோயில்கள் அமைத்து வழிபடும் மரபுPrasathம் தொன்றுதொட்டு நீடிக்கிறது. இந்தக்காவியங்களில் வரும் ஆண் பாத்திரங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான். மகாபாரதத்தில் குந்தி முதல் பாஞ்சாலி வரையிலும், இராமாயணத்தில் சீதையும், சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள்தான். குந்தியைத்தவிர ஏனைய மூவரும் வழிபாட்டுக்குரியவர்களாகிவிட்டனர். இலங்கையில் திரெளபதை அம்மன், கண்ணகி அம்மன், சீதை அம்மன் கோயில்கள் அமைத்து சைவத்தமிழர்களும் பௌத்த சிங்களவர்களும் வழிபடும் மரபும் தொடர்ந்து பண்பாட்டுக்கோலமாகவே மாறிவிட்டது சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள் மணிமேகலையும் மக்களிடத்தில் காவியமாகியிருக்கிறாள். மணிமேகலை தமிழ்க்காப்பியம் மட்டுமல்ல, அது பவுத்த காப்பியமும்தான் என்று நிறுவுகிறார் தமிழக எழுத்தாளர் பேராசிரியர் அ. மார்க்ஸ். ( ஆதாரம்: தீராநதி 2017 ஜூன்)        (மேலும்)  01.07.2018

_______________________________________________________________________

25,000 ரூபா அபராதம் குறித்த பேச்சுவார்த்தை

போக்குவரத்து விதி மீறல்கள் சிலவற்றுக்கு 25,000 ரூபா அபராதம் விதிப்பது சம்பந்தமாக சட்ட வரைவு திணைக்களத்திற்கும் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளது  எதிர்வரும் திங்கட்கிழமை இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.25,000 ரூபா அபராதம் விதிப்பது சம்பந்தமாக, சட்ட வரைவு திணைக்களத்தால் திருத்தங்கள் செய்யப்பட்டு போக்குவரத்து அமைச்சுக்கு சமர்பிக்கப்படும் அறிக்கையில் போக்குவரத்து அமைச்சர் கையொப்பமிட்ட பின்னர் வர்த்தமானியில் வௌியிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது. 07 வகையான போக்குவரத்து விதி மீறல் குற்றங்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட உள்ளதுடன், அதற்காக மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை கூறத்தக்கது.

_______________________________________________________________________

தேவையில்லாத பனிப்போர்!

உலக நாடுகளுக்கிடையே மிகப்பெரிய வர்த்தகப் போர் ஒன்று வcomwar1ெடித்திருக்கிறது. அமெரிக்காவால் தொடங்கப்பட்ட இந்த வர்த்தக யுத்தத்தின் இலக்கு சீனாவாக இருந்தாலும்கூட, அது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இலக்கில்லாமல் சிறுபிள்ளைத் தனமாக நடத்தப்படும் இறக்குமதி வரிவிதிப்பு யுத்தத்தின் விளைவு யாருக்கும் சாதகமாகவோ, நன்மை தருவதாகவோ இருக்கப் போவதில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை அகற்றுவதாக அதிபர் டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களைவிட, சீனாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்களின் மதிப்பு 37,500 கோடி டாலர் (சுமார் ரூ.25.5 லட்சம் கோடி) அதிகமாக இருந்தது. அந்த வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுகட்ட, தான் ஆட்சிக்கு வந்தால் சீனப் பொருள்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்போவதாக அப்போதே அறிவித்திருந்தார். தேர்தலில் வாக்குறுதி அளிப்பது என்பது வேறு, பதவிக்கு வந்த பிறகு நடைமுறை சாத்தியம் என்பது வேறு. இதை அதிபர் டொனால்ட் டிரம்ப் உணராததன் விளைவுதான், இப்போது சர்வதேச வர்த்தகம் நிலை தடுமாறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.       (மேலும்)  01.07.2018

_______________________________________________________________________

யாழில் வீடொன்றினுள் நுழைந்து அட்டகாசம் செய்த கும்பல்

யாழ்ப்பாணம் நகரிலுள்ள வீடொன்றினுள் வாள்களுடன் நுழைந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் - இராமநாதன் வீதியிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகத்தை துணிகளால் கட்டியபடி மூன்று உந்துருளிகளில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த ஆறு பேரே வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.இதனையடுத்து, அவர்கள் வீட்டு கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளதுடன், கணனி மற்றும் கதிரைகளையும் சேதப்படுத்தியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது    இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

_______________________________________________________________________

இரண்டும் ஒன்று'' கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

''இரண்டும் ஒன்று'' என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா ஆவார். இவரது முதல் தொகுதியான இந்த நூல் சிறியதும் பெரியதுமான 84 கவிதைகளை உளIsmath Fathima 02்ளடக்கியதாக 113 பக்கங்களில் வெளிவந்துள்ளது. குருணாகலை மாவட்டத்தின் பானகமுவவைச் சேர்ந்த அல்ஹாஜ் ஏ.சீ. செய்யது அஹமது (முன்னாள் அதிபர்) - மர்ஹுமா கே.ரீ. ரஹ்மா உம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியான எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா தற்போது பஸ்யால, எல்லலமுள்ள ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் பிரதி அதிபராகக் கடமையாற்றுகின்றார். இலக்கிய ஆர்வம்மிக்க இவர் அண்மைக் காலமாக தேசிய பத்திரிகைகளில் தனது கவிதைகளை அதிகளவில் களப்படுத்தி வருகின்றார். கவிதா உலகிற்கு அண்மையில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் இவர். ''இரண்டும் ஒன்று'' என்ற இந்தக் கவிதைத் தொகுதியில் எளிமையான மொழி நடையோடு, சமூக அக்கரை கொண்டு எழுதப்பட்ட பல கவிதைகளைக் காணலாம். கடுமையான சொற்களைப் பயன்படுத்தி வாசகர்களை மிரட்டாமல் எல்லோரும் வாசித்து இரசிக்கும் வகையில் இவரது கவிதை நூல் ராஜ நடைபோடுகிறது. நூலாசிரியர் பற்றிய அறிமுகத்தை பின்னட்டைக் குறிப்பில் கலாபூஷணம், கவிஞர், இலக்கிய வித்தகர் பி.ரீ. அஸீஸ் அவர்கள் அழகிய மொழி நடையில் தந்துள்ளார்.      (மேலும்)  01.07.2018

_______________________________________________________________________

றெஜினாவின் கொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பாடசாலை மாணவி றெஜினா படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், கொலையாளிகளுக்கு தண்டனை வழங்குமாறு வலியுறுத்தியும் இன்று சprotest for reginaனிக்கிழமை (30) செங்கலடி நகரில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.முற்போக்கு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் செங்கலடி எல்லை வீதியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பாடசாலை மாணவர்கள் என சிலர் கலந்து கொண்டனர்.கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் காவல்துறையினரே கடமையில் ஈடுபடுங்கள், வேண்டும் வேண்டும் றெஜினாவுக்கு நீதி வேண்டும், அன்று வித்தியா, சேயா இன்று றெஜினா நாளை?, நல்லாட்சி அரசே றெஜினாவின் படுகொலைக்கு நீதி வழங்கு, போன்ற வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பினர்.

_______________________________________________________________________

சுழிபுரம் சிறுமி கொலைச் சம்பவத்தில் மேலும் இருவர் கைது

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, சுழிபுரம் பிரதேசத்தில் 06 வயது சிறுமியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வட்டுக்ேகாட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. காட்டுப்புளம், சுழிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் இன்றைய தினம் வட்டுக்கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 22 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

டிரம்ப்புக்கு பதிலடி: ரூ.86,000 கோடி அமெரிக்க பொருள்களுக்கு கனடா கூடுதல் வரி


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இறக்குமதி வரி விதிப்புக் கொள்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் உலோகம் மற்றும் உtrumph caணவுப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது. இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 1,660 கோடி கனடா டாலர் (சுமார் ரூ.86,000 கோடி) மதிப்பிலான இரும்பு, அலுமினியம் மற்றும் நுகர்வோர் பொருள்கள் மீது கூடுதல் இறக்குமதி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 1) முதல் இந்த கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் தொலைபேசியில் வெள்ளிக்கிழமை உரையாடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்கப் பொருள்கள் மீதான இந்த கூடுதல் வரி விதிப்பு தவிர்க்க முடியாது என்பதை அவரிடம் எடுத்துரைத்தார்.  அதனைத் தொடர்ந்து, இருதரப்பு வர்த்தகம் குறித்து தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசுவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.      (மேலும்)  01.07.2018

_______________________________________________________________________

ஸ்ரீலங்கா: வேறெந்த நாட்டைக் காட்டிலும் வெட்கக்கேடான ஒரு நாடு?

                                   லசந்த பெத்தியாகொட

முதலில் ஒரு கேள்வி: தரப்பட்ட ஒரு சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மற்ற எல்லோரையும் ஏமாற்றுபவர்களாக இருந்தால்,Lasantha-Pethiyagoda அங்கு வெற்றியாளர்கள் என்று யாராவது இருப்பார்களா? பெரிய முதலாளித்துவ மதிப்பை நடைமுறைப்படுத்தும் ஒரு வறிய நாட்டில் இரண்டு குழுக்களான மக்கள் இருப்பார்கள். தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் வர்க்கத்தினர்கள் ஒருபுறமும் மற்றும் சாதாரண குடிமக்கள் மறுபுறத்திலும் இருப்பார்கள். முதலாவது வகையினர் சுரண்டுபவர்கள் மற்றும் பின்னையவர்கள் சுரண்டப்படுபவர்கள். சுரண்டுபவர்கள் எந்தப் பிரச்சினையையும் ஏற்பதற்குத்தக்கபடி அமைக்கப்பட்டவர்கள், எந்தவித பேராபத்திலும் இருந்து தப்பித்துக் கொள்ளவும் மற்றும் தப்பியோடவும் இவர்களால் முடியும். சுரண்டப்படுவர்கள்  நாடு முகம் கொடுக்கும் எந்தவிதமான ஆபத்துகள் மற்றும் திடீர் பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டு திண்டாடுபவர்களாக உள்ளார்கள்.   சுற்றுலாத்துறை சம்பந்தமான இதழ்கள் ஸ்ரீலங்காவை கடல்சார்ந்த தீவு, இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கின்றன. முரண்பாடாக “இதுபோன்ற நிலம் வேறு எங்கும் இல்லை” அல்லது அபத்தமான முறையில் “ஆசியாவின் அதிசயம்” என்றெல்லாம் அதற்கு முத்திரையிடப்பட்டுள்ளது. ஆனால் சுரண்டப்பட்ட மக்கள் அதை வேறுவிதமான நாடாகப் பார்க்கிறார்கள்.       (மேலும்)  30.06.2018

_______________________________________________________________________

புங்குடுதீவில் வித்தியா சுழிபுரத்தில் றெஜினா போன்ற பெண் குழந்தைகளின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் இனியும் நடைபெறாது தடுப்பதற்கு  அனைவரும் முன்வரவேண்டும்.

புங்குடுதீவில் வித்தியா சுழிபுரத்தில் றெஜினா போன்ற பெண் குழந்தைகளின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் இனியும் நடைபெறாது தடுப்பதற்கு அரசியல் தலைமைreginold5கள், பொது அமைப்புகள், மதத் தலைவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என சமூக அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுப்பதாக ஆளுநர் றெஜினோல்குரே தெரிவித்தார்.   யாழ் வேம்படி மகளீர் கல்லூரியின் 180 ஆண்டு நிறைவுவிழாவும் பரிசளிப்பு விழா நிகழ்வும் இன்று (29) காலை நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார். வீண் உணர்ச்சி பேச்சுக்கள், கிளர்ச்சிகளினால் இவ்வாறான செயல்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது. இவை ஏன் நடைபெறுகின்றன என்பதன் பின்னணிகளை நன்கு விசாரித்து அறிந்து கொள்வது அவசியமானது. இந்த நிகழ்வில் நான் கலந்து கொண்டிருக்கின்றபோதும் முழு நாட்டினையும் சோகத்தில் ஆற்றிய சம்பவம் றெஜினாவின் படுகொலை என நான் நினைக்கின்றேன     (மேலும்)  30.06.2018

_______________________________________________________________________

வட மாகாண முதலமைச்சர் பதவி விலக வேண்டும்

வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா

வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டொனிஸ்வரனை பதவி நீக்கம்cm vigneswaran செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை தார்மீகமாக ஏற்றுக்கொண்டு வடமாகாண முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பா. டெனீஸ்வரனுக்கு அவர் வகித்த அமைச்சுப் பதவிகளை உடனடியாக மீள வழங்குமாறு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.வடமாகாண அமைச்சர்கள் மீதான ஊழல்குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்திய குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு, பா.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து சீ.வி.விக்னேஸ்வரன் விலக்கி இருந்தார்.இதற்கு எதிராக பா.டெனீஸ்வரன் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இதன்போது அவர் வகித்த அமைச்சுப் பதவிகளை மீள அவரிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

_______________________________________________________________________

சிறுத்தை கொலை - கைதான 10 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

கிளிநொச்சி - அம்பாள்குளம் கிராமத்தில் கடந்த 21ஆம் திகதி சிறுத்தையொன்று அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான 10 பேரும் அடுத்த மாதம் 3 ஆம் திகதிவரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஏற்கனவே 7 பேர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் மேலும் மூவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். இன்றைய நீதிமன்ற விசாரணைகளின் போது, பிரதிவாதிகளை விடுவிக்குமாறு அவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இதன்போது, வழக்கு தொடுநர் தரப்பில் விளக்கமளித்த கிளிநொச்சி காவல்துறையினர், குறித்த சிறுத்தை பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறுகளையும் ஏற்படுத்தவில்லை என்றும், இந்த சிறுத்தை கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நாடாளுமனறத்திலும் விவாதிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.      (மேலும்)  30.06.2018

_______________________________________________________________________

டெனிஸ்வரனை பதவி நீக்கம் செய்த விக்னேஸ்வரனின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் தடை

வடக்கு மாகாண மீன் பிடித்துறை முன்னாள் அமைச்சர் பி.​டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.   குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜகத் டி சில்வா உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.​டெனிஸ்வரன் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.    இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பி.​ டெனிஸ்வரனை மேன்முறையீடு செய்திருந்தார்.       (மேலும்)  30.06.2018

_______________________________________________________________________

12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு சிறுவர்கள் கைது

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி பாம் கொலனி பிsexual violence2ரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 14 மற்றும் 15 வயது சிறுவர்கள் இருவரை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பிரதேசத்தில் கடந்த 12 ம் திகதி ஆடுகளை மேய்கச் சென்ற 12 வயது சிறுமியை பின் தொடர்ந்து சென்ற அதே பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிறுவர்கள் சன நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பயம் காரணமாக தனக்கு ஏற்பட்ட விபரீத நிலை தொடர்பாக வெளியில் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ள நிலையில் நேற்று வியாழக்கிழமை (28) தெரிவித்ததையடுத்து உறவினர்கள் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.இதனையடுத்து பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 14 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்களை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சிறுவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

_______________________________________________________________________

 ரோகண விஜயவீரவை தேடி தருமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு

காணாமற்போன மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோகண விஜயவீரவை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவருடைwijayaveera wifeய மனைவி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ரோகண விஜயவீரவின் மனைவி ஶ்ரீமதி சித்ராங்கனி விஜேவீர தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் சட்ட மா அதிபர் உள்ளிட்ட 11 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் திகதி உலபனே பிரதேசத்தில் வைத்து பாதுகாப்பு தரப்பினரால் ரோகண விஜயவீர கைது செய்யப்பட்டார்.அவர் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இதுவரை அவர் எந்தவொரு நீதிமன்றத்திலும் ஆஜர் செய்யப்படவில்லை என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.தனது கணவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தொடர்பில் சட்டரீதியான முறையில் இதுவரை அறிவிக்கவில்லை என்றும், இதன்காரணமாக அவருக்கு நேர்ந்தது என்னவென்று தெரியாதிருப்பதாகவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

_______________________________________________________________________


இந்தியா்களுக்கான காலவரையற்ற குடியுரிமை மறுப்பு: பிரிட்டன்

லண்டன்: பிரிட்டனில் உள்ள இந்திய மருத்துவா்கள், பொறியாளா்கள் சிலருக்கு காலவரையற்ற குடியுரிமை வழங்க அனுமதி மறுக்கப்பட்டது தொடா்பாக அந்நாடு விளக்கமளித்துள்ளது. சம்பந்தப்பட்ட நபா்கள், தங்களது வருமான விவரங்களில் பொய்யான தகவல்களைத் தெரிவித்ததன் காரணமாகவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இருந்தபோதிலும் அவா்களது விண்ணப்பங்களை மீண்டும் ஆய்வுக்குட்படுத்தி வருவதாகவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.சுய வருமானம் தொடா்பாக தெரிவிக்கப்பட்ட சில தகவல்கள் தவறாக இருந்தாலும், அவை சாதாரண மனிதப் பிழையே தவிர பெரும் குற்றறம் அல்ல என்பது அவா்களது வாதம். இந்த போராட்டத்தின் தொடா்ச்சியாக, அவா்களது விண்ணப்பங்களை பிரிட்டன் அரசு ஆய்வுக்குட்படுத்தி வருகிறது.

_______________________________________________________________________

அகதிகளை ஏற்கும் பிரச்னை: ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே ஒப்பந்தம்


அகதிகளை ஏற்றுக் கொள்ளும் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் இடையே நீண்ட விவாதத்துக்குப் பிறகு வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.refugees    போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.அதிலும் கடந்த 2015-ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளுக்கு வந்த அகதிகளின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டது. அதையடுத்து, அகதிகளை ஏற்றுக் கொள்வது, தங்களது நாடுகளிடையே அவர்களைப் பகிர்ந்து கொள்வது போன்ற பல்வேறு விவகாரங்களில் ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஐரோப்பாவின் எல்லையில் அமைந்துள்ள நாடுகளான கிரீஸ், இத்தாலி போன்ற நாடுகளுக்கே அதிக அளவு அகதிகள் வந்து குவிந்ததால், ஐரோப்பிய யூனியனின் மற்ற உறுப்பு நாடுகளும் அந்தச் சுமையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அந்த நாடுகள் வலியுறுத்தி வந்தன.      (மேலும்)  30.06.2018

_______________________________________________________________________

ராமேஸ்வரத்தில் மீட்கப்பட்ட வெடிபொருட்களை உடனடியாக அழிக்க வேண்டும்.

ராமேஸ்வரத்தில் மீட்கப்பட்ட வெடிபொருட்களை உடனடியாக அழிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராமேஸ்வரம் - தங்கச்சிமடத்தில் உள்ள வீட்டுத் தrameswaram waeopenோட்டம் ஒன்றில் இருந்து பாரிய அளவிலான வெடிபொருட்கள் அண்மையில் மீட்கப்பட்டிருந்தன.இலங்கையில் இயங்கி வந்த ஆயுதக்குழுக்களினால் குறித்த வெடிப்பொருட்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன.இதனையடுத்து குறித்த வெடிப்பொருட்கள் இந்திய மத்திய வெடி பொருட்கள் தடுப்பு பிரிவினரால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.இதன்போது குறித்த வெடிப்பொருட்கள் பாலங்களை தகர்க்கும் வல்லமை கொண்டவை என ஆய்வுகளின் மூலம் தெரியவந்தது.இதனையடுத்து மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் என்பன ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்ட போது அதனை பாதுகாப்பாக வைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.இந்தநிலையில் குறித்த வெடிப்பொருட்களை அப்புறப்படுத்தாமல் தங்கச்சிமடம் குடியிருப்பு பகுதியிலேயே வைக்கப்பட்டுள்ளமை பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே அதனை உடனடியாக செயலிழக்கவோ அல்லது அழிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

_______________________________________________________________________

பழங்களைப் பழுக்க வைக்க 'கல்சியம் கார்பைடு' கற்கள்..!

ஆசி கந்தராஜா

வேகமான வாழ்க்கை முறையால், தற்போது பழங்களைப் பழுக்க வைmangoesக்க வியாபாரிகள் இரசாயன முறையைக் கையாளுகின்றார்கள். இப்பழங்களை உண்பதால் வாயில் புண், வயிற்றுப் போக்கு, ஒவ்வாமை போன்ற வியாதிகள் ஏற்பட்டு நாளடைவில் குடல் புற்று நோய் வர வாய்ப்புண்டு. இதற்குக் காரணம் காய்களைப் பழுக்க வைக்க வணிகர்களால் பயன் படுத்தப்படும் 'கல்சியம் கார்பைடு' என்னும் இரசாயனம்தான்என கண்டறியப்பட்டுள்ளது.அது புற்றுநோயை உண்டாக்கக்கூடியது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.  இயற்கையில் காய் பிஞ்சுகளைமுற்றச் செய்வதும் பழுக்கச் செய்வதும் எதிலீன்என்னும் வாயு நிலை ஹோர்மோனே. இது எல்லாக் காய்களிலிருந்தும் இயற்கையாக வெளியேறும். இருந்தாலும் இது அப்பிள், எலுமிச்சை மற்றும் தோடங்காய்களிலிருந்து பெருமளவில் வெளியேறுவது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.   இதை நமது அன்றாட நடைமுறை வாழ்க்கையுடன் இணைத்துப் பார்த்து விளங்கிக் கொள்ளலாம். பெட்டிக்குள் வைக்கோல் போட்டு அடைத்து வைத்த மாங்காய்களும், நிலத்தில் தாட்டுப் புகையடித்த வாழைக் குலைகளும் விரைவில் பழுப்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.       (மேலும்)  29.06.2018

_______________________________________________________________________

பாதாள உலக குழுவினரின் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம்

குழந்தை பிறந்ததும் வந்துவிடுவேன் எனக் கூறிக்கொண்டு அவசரமாக வைத்தியசாலையிலிருந்து சென்றார்.iththik  ஆனால் அவர் வழங்கிய வாங்குறுதியை நிறைவேற்றவில்லை. பிரசவம் முடிந்த பின்னரும் அவர் என்னை வந்து பார்க்கவில்லை. தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை கணவர் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி அளவற்றது அதற்காகவே காத்திருந்தேன்.மாத்தறை கொள்ளைச்சம்பவத்தில் துப்பாக்கி பிரயோகத்தில் சிக்கிய நபரின் மனைவி வைத்தியசாலையில் பிரசவ அறையிலிருந்து கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்ட விடயங்கள் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.மாத்தறை போகஹகட்டுஹேன பகுதியில் இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தவர் இந்திக்க லசந்த. இவர் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராக பணிபுரிந்து வருபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.       (மேலும்)  29.06.2018

_______________________________________________________________________

நடந்தாய் வாழி களனி கங்கை ...... அங்கம் 07

தலைநகரில் தோன்றிய விஹாரைகளின் பின்னணியில் மறைந்திருக்கும் அரசியல்

  கங்காரமையாக மாறிய முனுசாமி தோட்டம்

                                                                         ரஸஞானி

இலங்கை பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு Pointe-de-Galle-sud-de-Ceylan-1754முன்னர், கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய இராச்சியங்களுடன் மேலும் சில சிறிய இராச்சியங்களையும் கொண்டிருந்தது. கோட்டை இராச்சியம் அமைந்திருந்த பிரதேசம்தான் இலங்கையின் தலைநகரமாக விளங்கும் கொழும்பு. களனி கங்கையை ஒரு புறத்தில் எல்லையாகவும், இந்துமகா சமுத்திரத்தின் காலிமுகத்தை (Gall Face) மறு எல்லையாகவும் கொண்டிருக்கும் கொழும்பின் பெயர் வந்த கதைகளும் பலவுண்டு.இலங்கைக்கு வெளியிலிருந்து முதலில் கடல்மார்க்கமாக படையெடுத்துவந்த போர்த்துக்கேயரால் 1505 இல் கொழும்பு எனப்பெயர் சூட்டப்பட்டதாகவும், முன்னர் இருந்த கொலன்தொட்ட என்ற பெயரிலிருந்து இந்தப்பெயர் எடுக்கப்பட்டதாகவும், பழைய சிங்கள இலக்கண நூலான சிடசங்கரவ கொழம்ப என்பதற்கு, துறைமுகம், அல்லது கோட்டை என்று பொருள் சொல்லியிருப்பதனால், அதிலிருந்து மருவி, கொழும்பு எனப்பெயர் வந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.        (மேலும்)  29.06.2018

_______________________________________________________________________

றெஜினா கொலையை கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

பாடசாலை மாணவி றெஜினா கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் நீதி கிடைக்க வேண்டுமெனக் கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் கவregina5னயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.   பல்கலைக்கத்தின் முன்னால் இன்று (28) காலை ஒன்று கூடிய மாணவர்கள் பல்கலைக்கழகம் முன்பாக பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழத்தில் இருந்து பேரணியாக பரமேஸ்வராச் சந்தியைச் சென்றடைந்தனர். அங்கு வீதியின் இருமருங்கிலும் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதேவேளை, இந்த போராட்டத்தின் போது, இலஞ்சம் வாங்குவதில் உள்ள ஆர்வம் குற்றங்களைத் தடுப்பதில் இல்லை. காவல்துறையா? கஞ்சா துறையா?, வளரும் பயிரை முளையிலே கிள்ளாதே, காவல்துறையே நித்திரையா? போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக பதாதைகளை கைகளில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தார்கள்.       (மேலும்)  29.06.2018

_______________________________________________________________________

ஜெர்மனி வெளியேற்றம் ஏன்?: ஐந்து முக்கியக் காரணங்களும் விளைவுகளும்!

germany_team_2018

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எதிர்பாராத நிகழ்வாக நடப்புச் சாம்பியனான ஜெர்மனி நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறாமல் போட்டியிலிருந்து வெளியேறியது. ஜெர்மனி, உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் சுற்றோடு வெளியேறுவது கடந்த 80 ஆண்டுகளில் இது முதல் முறையாகும்.  நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்ய தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் வித்தியாசத்தில் வென்றிருக்க வேண்டிய ஜெர்மனி, மாறாக அந்த அணியிடம் 2 கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அத்துடன், எஃப்' பிரிவில் 3 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்தது.       (மேலும்)  29.06.2018

_______________________________________________________________________

 நௌஸாத்தின் கொல்வதெழுதல் 90

நடேசன்

கொல்வதெழுதல் 90, ஆங்கிலத்தில் பைனரி(Binary) எனப்படுவது வகையை nowsathசேர்ந்தது. எளிமையான புளட்(simple Plot). நாவல் முத்துமுகம்மது என்ற இளைஞனது பாத்திரத்தை சுற்றியே கதை செல்கிறது. அதிகம் கல்வியோ, வசதியோ அற்று ஊரில் மற்றவர்களால் ஏளனப்படுத்தப்படும் சாதாரணமான கிழக்கு மாகாணத்தில் உள்ள பள்ளிமுனைவாசி, அரசியலில் ஈடுபட்டு பாராளாமன்ற அங்கத்தவராகுவது கதையின் சுருக்கம்.   முத்துமுகம்மது என்ற கதாநாயகனுக்கு மிகவும் சவாலான, கொடுமையான, வில்லானாகச் சப்புச்சுல்தான். மாமி மகள், மைமுனா முத்துமுகமதின் காதலி. இந்த மூவரையும் பிரதானமான பாத்திரங்களாக கதை பின்னப்படுகிறது. ஒருவிதத்தில் சினிமாக்கதை போன்று முடிகிறது. இப்படியான ஒரு எளிமையான கதை நல்ல நாவலாகியதற்கான காரணமென்ன?   கொல்வதெழுதல் 90 பெயருக்கு ஏற்ற மாதிரியே கிழக்கு மாகாணம் கொலைக்களமாக இருந்த காலத்தில் நடந்த கதை. இங்கு அரசியல் அல்லது வரலாற்றின் ஒரு துளி நாவலாக்கப்படுகிறது.       (மேலும்)  29.06.2018

_______________________________________________________________________

மீண்டும் மஹாகவியின் புதியதொரு வீடு

பேராசிரியர் சி.மெளனகுருவின் நெறிப்படுத்தலில் உருவான மஹாகவியின் புதியதொரு வீடு  நாடக அளிக்கையினை, அடிப்படையாக கொண்ட திறனாய்வு.

                    பாக்கியராஜா மோகனதாஸ்(துறைநீலாவணை)

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த து.உருத்திரமூர்த்தியின் கவிதை, பேச்சோசைப்பாங்கிலமைந்த புதியதொரு வீடு நாடக எழுத்துருப் பாத்திரங்களை, உயிர்த்துடிப்புடன் உலவ விட்ட சிறப்பு mounaguruநெறியாளரைச் சாரும். மஹாகவியின் சிந்தனையில் 1940 ஆம் ஆண்டு உருவான கதைக் களத்துக்கு அரங்கக்கலை , கலைஞர்கள் மற்றும் அரங்க கைவினையாளர்களைக் கொண்டு மிக காத்திரமான கனதியான நெறிப்படுத்தல் மூலம் நாடக நெறியாளர், பார்ப்போரை நாடக அளிக்கைக்குள் ஈர்க்க வைத்துள்ளார்.மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடமும் எங்கள் ஆசான் கலைக்கூடமும் இணைந்தளித்த மஹாகவியின் புதியதொரு வீடு நாடக மேடையேற்றத்தினை, மட்டு தேவநாயகம் மண்டபத்தில் அண்மையில் பார்க்கக்  கிடைத்தது.  நான்கு தடவைகள் மேடையேற்றவே என தயாரிக்கப்பட்ட நாடகம் பார்ப்போரின் தேவையுணர்ந்து ஐந்தாவது தடவையும் மேடையேறியது. ஐந்து அளிக்கைகளிலும் ரசிகர்களினால் மண்டபம் நிரம்பி வழிந்தது. தரமற்ற எழுத்துருக்களையே காத்திரமாக தயாரிக்கும் நெறியாளர்கள், மிக காத்திரமான நாடகப் பனுவலை காத்திரமாக தயாரிப்பர். கலைஞர்களினதும் மக்கள் சமூகத்தின் பிரதிநிதிகளான கோரசினதும் துணைக்கலைகளினதும் பங்களிப்பு நாடக கனதிக்கு பக்கபலமாக பின்னணியாக இருந்துள்ளது.        (மேலும்)  29.06.2018

_______________________________________________________________________

athilaxmy

_______________________________________________________________________

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தலையீடு

ண்மையில் ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளிsarathன் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தலையீடு இருந்ததால் ஒரு பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருப்பதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார்.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானின் டொசி உளவு பிரிவில் பணியாற்றியவர் ஒருவர் என்று அவர் கூறியுள்ளார்.இராணுவத்தின் ஊடாக சம்பளம் வழங்கப்பட்டு விடுதலைப் புலிகளின் திட்டங்களை அறிந்து கொள்வதற்கான உளவாளிகள் அந்த இயக்கத்திற்கு உள்ளே இன்னும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.இந்த நடவடிக்கையால் அதுபோன்ற ஒரு உளவாளிக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும், அவர் விளக்கமறியலில் இருந்து வௌியே வந்ததும் கொலை செய்யப்படலாம் என்றும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

_______________________________________________________________________

“21ஆம் நூற்றாண்டின் மார்க்சியம் மற்றும் உலக சோசலிசத்திற்கான எதிர்காலம்”-

.சீத்தாராம் யெச்சூரி

அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே,

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மிகவும் முக்கியமான மாநாட்டின் இறுதி அமர்விற்குள் நாம் நுழைந்திருக்கிறோம். இன்றையதினம் சர்வதேச அsy-22-1-18ளவில் நிலவும் முக்கியமான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இந்நிகழ்விற்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடு இடுவதுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருமைப்பாட்டையும் இதர சகோதரக் கட்சிகளுடன் இணைந்து தெரிவித்துக் கொள்கிறேன்.   நேர நெருக்கடி காரணமாக, எழுதிய உரையிலிருந்து படிப்பதற்கு முன்வராமல், முக்கியமான சிந்தனைக் கரு ஒன்றையும் அதனுடன் இணைந்த ஐந்து முக்கிய அம்சங்களையும் மட்டும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.முக்கியமான சிந்தனைக் கரு என்பது 21ஆம் நூற்றாண்டில் மனிதகுல நாகரிகம் முன்னேறுவதற்குத் தேவையான மேலீடான பண்புகளை மார்க்சியம் வடிவமைத்திடும் என்பதாகும்.  இவ்வாறு நான் ஏன் வலியுறுத்துகிறேன்? உலக அளவில் மூலதனம் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இன்றைய நிலையில், மார்க்சியத்தின் ஏற்புடைமை மீண்டும் ஒருமுறை மிகவும் சரியென மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.       (மேலும்)  29.06.2018

_______________________________________________________________________

புற்று நோய் செல்களை அழிக்க தேயிலை சாறு உதவும்' - ஆராய்ச்சி முடிவுகள்


தேயிலை இலை சாற்றின் துணையுடன் பெறப்பட்ட மிகச்சிறிய நாtea leavesனோ அளவிலான "குவாண்டம் துகள்கள்" (Quantum Dots) நுரையீரல் புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் உடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.   பிரித்தானியாவின் சுவான்சி பல்கலைக் கழகமும் (Swansea University), இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் இணைந்து "குவாண்டம் துகள்"களைக் கொண்டு புற்று நோய் செல்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்று மேற்கொண்ட ஆய்வில், குவாண்டம் துகள்கள் புற்று நோய் செல்களை அழிக்கும் திறனையும் கூடுதலாகக் கொண்டிருக்கிறது என்று தற்செயலாக கண்டறிந்துள்ளனர்.குறிப்பாக, தேயிலை சாற்றினை பரப்பு மாற்றியாக (surfactant) பயன்படுத்தி பெறப்பட்ட காட்மியம் சல்பைடு குவாண்டம் துகள்கள் புற்று நோய் கிருமிகளை 80 சதவிகிதம் அழிக்கவல்லது என்ற ஆச்சரியமூட்டும் முடிவுகளை ஆய்வக அளவில் கண்டுபிடித்துள்ளனர்.       (மேலும்)  29.06.2018

_______________________________________________________________________

புத்தர் கூறிய போதனை மூலம் நாட்டை ஐக்கியமாக்க முடியும் என்று வடக்கு ஆளுநர் முல்லைத்தீவில் கூறினார்.

இராணுவ தளபதியின் ஆலோசனைக்கிணங்க முல்லைத்தீவு பாதreginold1ுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.டபிள்யு. டபிள்யு.ஏ டபிள்யு.இராஜகுரு அவர்களின் கண்காணிப்பின் கீழ் 59, 64 மற்றும் 68ம் படைத் தலைமையகத்தின் இராணுவ தளபதிகளின் ஈடுபாட்டுடன் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ றெஜிநோல்ட் குரே அவர்களின் தலைமையில் அம்பிலிப்பிட்டிய ஸ்ரீபோதிராஜ பிரிவின் பங்களிப்புடன் முல்லைத்தீவு பிரதேசத்தின் கஸ்டபட்ட மக்களுக்கு உபகரணம் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வொன்று பொசன் போயா தினம் முல்லைத்தீவு பொது மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை இராமான்ய ஸஸஸஸஸஸஸஸ. அவர்களது நிதிப்பங்களிப்பில் இவ்வுபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடாத்தப்பட்டதோடு கஸ்டப்பட்ட மக்களுக்காக 100 பசுக்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்காக 50 சக்கரநாற்காலிகளும் பாடசாலை மாணவர்களின் கல்வி மட்டத்தை முன்னேற்றுவதற்காக பாடசாலை உபகரணங்கள் மற்றும் கொப்பி, பென்சில்கள் உள்ளிட்ட 150பொதிகள், விவசாயத்திற்கு வளமாக 150 விவசாய உபகரணங்கள் வழங்கியதோடு இதன் மொத்த மதிப்பு அண்ணளவாக ரூபா.50 இலட்சம்.  இவ் அன்பளிப்புகளை பெற்றுக் கொடுக்கும் போது பிக்குமார்கள், மதகுருமார்கள், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நன்கொடையாளர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், வலயக்கல்விப் பணிப்பாளர், விவசாயப் பணிப்பாளர், சுகாதார வைத்தியர்கள் மற்றும் இராணுவ சிரேஸ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் தங்களது பங்களிப்பை வழங்கினர்.  இந்நிகழ்விற்கு இராணுவம் மற்றும் அரச பிரிவுகளின் அதிகாரிகள் மற்றும் பிரதேச வாசிகள் கலந்து கொண்டனர்.

 _______________________________________________________________________

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி உண்மைக்கு புறம்பானவை

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சம்பந்தமாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வௌியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில் உள்ள விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை என்று முன்னாள் மத்திய வங்கியிள் ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால் தெரிவித்துள்ளார். பாரிய கடன் சுமையை நாட்டின் மீது சுமத்தி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு பெற்றுக் கொண்டதாகவும், இதற்கு முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ள அந்த செய்தியில் உண்மையில்லை என்று அஜித் நிவாட் காப்ரால் தெரிவித்துள்ளார்.  அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள அவர் இதனைக் கூறியுள்ளார். அந்தக் கட்டுரையில் கடந்த அரசாங்கத்துக்கும் முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தான் நிராகரிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை முன்னதாக கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அஜித் நிவாட் காப்ரால், அரசாங்கத்தை ஒப்படைக்கும் போதிருந்த 07 ட்ரில்லியன் ரூபா கடன் தற்போது 11.05 ட்ரில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது என்று கூறினார்.அரசாங்கத்தை பொறுப்பெடுத்தால் அதற்குறிய பொறுப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் ஏற்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் மத்திய வங்கியிள் ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால் தெரிவித்துள்ளார்.

_______________________________________________________________________

 காட்டுப்புலக் கொலை

ெஜினா -  ஐம்பது வருட கால அரசநிர்வாக உடைசலின் பேறான கூட்டுப்படுகொலைக்காளானாள்.

- ஆதவன் ஞானா (Athavan Gnana)

காட்டுப்புலம் - சுழிபுரத்தின் எல்லைக்கிராமம். சுழிபுரத்தின் நன்கறியப்பட்ட கிராமமான பறாளையிலிருந்து உsuzipuram1ள்நோக்கி மேலும் ஆறு கி.மீ.களாவது காட்டுப்புலத்துக்கு செல்லவேண்டும்.   காட்டுப்புலம் அ.த.க பாடசாலையின் தரம் ஒன்றின் முதன்மை மாணவி ரெஜினாவும் குடும்பத்தினரும் இங்கே தான் வசிக்கின்றார்கள். ரெஜினாவுக்கு ஒரு அக்கா இருக்கிறா. அப்பா, மேசன் தொழிலாளி. வாரத்தின் பெரும்பான்மையான நாட்கள், தூரவிடங்களுக்கு தங்குவேலைக்கு செல்பவர். வீட்டுக்கு வருவதே அரிது. தாய் - விவசாய கூலித்தொழிலாளி. காட்டுப்புலம் - இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்பு தோல்தொற்றுநோய் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டு தடைசெய்யப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சிகிச்சையளிக்கப்பட்டு மீட்கப்பட்ட கிராமம். ஒரு காலத்தில் அரச துறையினர் கூட இந்த கிராமத்துக்குள் பொதுப்பணிகளுக்காக நுழைய அஞ்சியிருந்தனராம். இப்போது நோய் தொற்றுநிலையிலிருந்து முழுமையாக மீண்ட பிறகும், காட்டுப்புலத்தின் மீதான ‘தீட்டுப்பார்வை’ திருந்தியிருக்கவில்லை.       (மேலும்)  28.06.2018

_______________________________________________________________________

ஜெர்மனி வரலாற்றுத் தோல்வி: லீக் சுற்றோடு வெளியேறியது


உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எதிர்பாராத நிகழ்வாக நடபgerman்புச் சாம்பியனான ஜெர்மனி நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறாமல் போட்டியிலிருந்து வெளியேறியது. ஜெர்மனி, உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் சுற்றோடு வெளியேறுவது கடந்த 80 ஆண்டுகளில் இது முதல் முறையாகும்.நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்ய தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் வித்தியாசத்தில் வென்றிருக்க வேண்டிய ஜெர்மனி, மாறாக அந்த அணியிடம் 2 கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அத்துடன், எஃப்' பிரிவில் 3 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்தது.கஸான் அரினா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முழு நேரம் வரையில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் தென் கொரியா 2 கோல்கள் அடித்து வரலாற்று வெற்றி கண்டது.      (மேலும்)  28.06.2018

_______________________________________________________________________

கார்த்திகேயன்'- எனது கதாநாயன்.  ( 25.6.1919-10.9.1977),

(எனது எழுத்துக்களை மக்களின் நலத்திற்காக அர்ப்பணிக்கச் செய்த திரு.மு.கார்த்திகேசன் 'மாஸ்டர்' நினைவாக)

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-25.6.18

(3)

1960ம் ஆண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணம் சென்ற எனக்கு அங்கிருந்த சாதிக் கொடுமை மிக மிக அதிர்ச்சியைத் தந்தது. முற்போக்கு எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், முக்கியமாக மாணவர்களrajeswary280618ால் மிகவும் மதிக்கப் பட்ட 'மு. கார்த்திகேசு' என்ற ஆளுமை பற்றி அப்போது எனக்கு எதுவும்; ரியாது.யாழ்ப்பாணத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அடக்குமுறைகளை எதிர்த்துப் பல குரல்கள் முற்போக்குவாதிகளால் எழுப்பப் பட்டகாலத்தில் அந்தக் குரல்களின் அடிநாதமாகவிருந்தவர்களில் கார்த்திகேசு மாஸ்டரும் ஒருத்தர் என்று அந்த விடயங்கள் நடந்து சில வருடங்களின் பின்தான் தெரிந்து கொண்டேன். யாழ்ப்பாணத்தில்,மாணவியாக இருந்தபோது,'மல்லிகையில்' நான் இரு சிறு கதைகளை('எழில் நந்தி' என்ற புனைபெயரில் எழுதினேன);.அவை சாதியை அடிப்படையாகக் கொண்டது. அதில் ஒரு கதை,வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்திருந்த ஒரு சாதி வெறி பிடித்தவர், அவர் உயிருக்குப் போராடியபோது,மலம் அள்ளும் ஒரு தொழிலாளியின் குருதி (அக்கால கட்டத்தில் பணத்திற்காக ஏழைத் தொழிலாளர்கள் 'இரத்த 'தானம்'(?) செய்வார்கள்) கொடுத்து,சாதித் திமிர் பிடித்தவர் உயிர் பிழைத்ததைப் பற்றி எழுதினேன்.       (மேலும்)  28.06.2018

_______________________________________________________________________

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 2322 பேர் கைது

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 2322 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5254 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

_______________________________________________________________________

உலகின் மிக அதிக எரிச்சலூட்டக்கூடிய சத்தம் எது? இதோ அறிவியல் பூர்வமான விளக்கம்!

நன்றாக யோசித்துப் பாருங்கள்... வாழ்க்கையில் உங்களை மிக அதிக அளவில் எரிச்சலூட்டிய சத்தம் எதுவாக இருந்திருக்கக் கூடும்? இந்தக் கேள்விக்கான பதில் பலருக்கும் பலவிதwater-leakமானதாக இருக்கலாம். சிலருக்கு தூக்கத்திலிருந்து திடீரென விழிப்புத் தட்டியபின் கடிகார நொடி முட்களின் டிக் டிக் டிக் சத்தம் மீண்டும் தூக்கத்தில் ஆழ முடியாத அளவுக்கு எரிச்சலை உண்டாக்கியிருக்கலாம். சிலருக்கு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கையில் அதைக் கெடுப்பதே போல அருகில் ஒலிக்கக் கூடிய குறட்டைச் சத்தத்தைக் கேட்ட மாத்திரத்தில் கொலை வெறி ஏற்படலாம். இன்னும் சிலருக்கு இரவெல்லாம் 10 நிமிடங்களுக்கொருமுறை விழித்துக் கொண்டு கரையும் பிறந்த குழந்தையின் அழுகுரல் கூட சிடுசிடுப்பைத் தரலாம். சிலருக்கு ஃபேன் சத்தம் கூட எரிச்சலுண்டாக்கும். சிலருக்கு டி.வி சேனல்களின் லோகோ, தீம் மியூசிக்கைக் கேட்டால் கூட ஆத்திரம், ஆத்திரமாக வரும். சிலருக்கு யாராவது கூரான நகங்களை சீட்டித் துணியில் தேய்த்தால் வருமே ஒரு கரகர சவுண்டு அதைக் கேட்டாலும் கூட உடலெல்லாம் கூசி சட்டெனக் கோபம் வரும். இப்படி மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஓசை அல்லது சத்தமும் உச்சபட்ச ஆத்திரத்தையோ அல்லது கோபத்தையோ தூண்டக்கூடும்.       (மேலும்)  28.06.2018

_______________________________________________________________________

 இராமேஸ்வரத்தில்கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் சக்தி வாய்ந்தவை

இராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் பாலங்களை தகர்க்கும் அளவிற்கு சக்தி வாய்ந்தவை என்று விசாரணை நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.rameswaram    குறித்த வெடிபொருட்களை மதுரை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு பரிசோதகர் குணசேகரன் தலைமையிலான நிபுணர்கள் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வெடிகுண்டு தடுப்புப் பிரிவு பரிசோதகர் குணசேகரன்,  குறித்த வெடிபொருட்கள் அனைத்தும் 1970-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டவை எனவும், 10 இற்கும் மேற்பட்ட வாகனங்களை ஒரே நேரத்தில் சேதப்படுத்தும் தன்மை கொண்டவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள டில்லி மற்றும் சென்னையைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் இராமேஸ்வரத்துக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.       (மேலும்)  28.06.2018

_______________________________________________________________________

12 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான வல்லபட்டைகள் பறிமுதல்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வௌிநாட்டிற்கு கொண்டு செல்லபடவிருந்த 18.5 கிலோ கிராம் வல்லபட்டைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.33 வயதான இலங்கையர் ஒருவர் நேற்று (26) காலை 8.10 மணியளவில் டுபாய்க்கு கொண்டு செல்வதற்காக இவற்றை எடுத்துச் சென்ற வேளையே சுங்க அதிகாரிகளால் இவ் வல்லபட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வல்லபட்டைகள் சுமார் 12 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

_______________________________________________________________________

பாதாள உலக குழுவினரை கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட சோதனை நடவடிக்கைகள்

தென்மாகாணம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியாக பல பகுதிகளில் செயற்படும் பாதாள உலக குழுவினரை கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறையின் விசேட படைப்பிரிவினரால் விpolice checkசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி காலி, மாத்தறை, எல்பிட்டிய மற்றும் தங்காலை ஆகிய காவல்துறை பிரிவுகளில் இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட படையணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கடந்த சில தினங்களில் பாதாள உலக குழுவினர் காவல்துறையினருடன் மோதிக்கொண்ட பல சம்பவங்கள் பதிவாகியிருந்தன.அதனை கருத்தில் கொண்டே இந்த விசேட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, நாடுமுழுவதும் உள்ள அனைத்து காவல்துறை பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது 2322 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.       (மேலும்)  28.06.2018

_______________________________________________________________________

முல்லைத்தீவு நகரில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைகளுடன் தொடர்புடைய  ஏழு பேர் கைது

முல்லைத்தீவு நகரில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைகளுடன் தொடர்புடைய ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடம் இருந்து பெறுமதியான பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு நகர்பகுதியில் கடந்த சில காலங்களாக இடம்பெற்று வந்த கொள்ளை மற்றும் வாகனங்கள் உடைத்து கொள்ளையிடல் சம்பவங்கள் தொடர்பில் முல்லைத்தீவு காவல்நிலையத்தில்  முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதன்படி, மேற்கொள்ளப்பட்ட தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணை நடவடிக்கையின் போது 7 பேர் கொண்ட கொள்ளைக்குழு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

_______________________________________________________________________

இனப் படுகொலை தொடர்பான சர்ச்சைக்குரிய சட்டம்: போலந்து அரசு திருத்தம்


ஹிட்லர் தலைமையிலான ஜெர்மனி அரசு யூதர்களை இனப்படுகொலை செய்ததில் போலந்துக்கும் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டுபவர்களுக்கு தண்டனை விதிக்கும் சட்டத்தில் போலந்து அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.முன்னதாக, தவறான குற்றச்சாட்டுகளிலிருந்து போலந்து அரசை பாதுகாக்கும் நோக்கில் அந்தச் சட்டத்தை போலந்து அரசு கொண்டுவந்ததாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அந்தச் சட்டத்துக்கு சர்வதேச நாடுகளிடம் இருந்து கடுமையான விமர்சனங்கள் வந்தன.இந்த சூழலில் அந்தச் சட்டத்தில் சில திருத்தங்களை போலந்து அரசு செய்துள்ளது. அதன்படி, யூத இனப் படுகொலையில் போலந்து அரசை குற்றம்சாட்டுபவர்களுக்கு அபராதமும், மூன்று ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படாது.இந்தச் சட்டத் திருத்தத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள ஆளும் வலதுசாரி உறுப்பினர்கள் 388 பேரும், 25 பேர் எதிராகவும் வாக்குகளை பதிவு செய்தனர். 5 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.முன்னதாக, சட்டத் திருத்தத்தை போலந்து பிரதமர் மதேயூஸ் மோராவிக்கி கொண்டுவந்தார்.இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோது ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் போலந்து இருந்தது. அப்போது, அந்நாட்டில் இருந்த 30 லட்சம் யூதர்களை ஜெர்மனி படைகள் படுகொலை செய்தன. இதுதவிர, போலந்து நாட்டவர்களில் 60 லட்சம் பேரும் கொல்லப்பட்டனர்.

_______________________________________________________________________

 சென்னையில் மூன்று இலங்கையர்களின் சடலங்கள் மீட்பு

 தமிழகத்தின் சென்னை – மதுரவாயல் பகுதியில் மூன்று இலங்கையர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.38 வயதான ஆண் ஒருவரதும் அவரின் 6 மற்றும் 4 வயதான இரண்டு மகன்களினதும் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.ஹபீப் ரஹ்மான் என்ற 38 வயதான குறித்த நபர் தனது மகன்களுக்கு கட்டாயப்படுத்தி விசம் அருந்தக் கொடுத்திருக்கக்கூடும் என சென்னை பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.எனினும், தற்கொலை செய்துகொண்டமைக்கான எவ்வித சான்றுகளும் ஹபீப் ரஹ்மான் தங்கியிருந்த அறையிலிருந்து கிடைக்கவில்லை என ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.ஹபீப் ரஹ்மானின் மனைவி குடும்பத்திலிருந்து பிரிந்து இலங்கையில் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.8