Theneehead-1

                            Vol:17                                                                                                  26.06.2018

 பட்டதாரிகள் -

அரசுக்கும் வெட்கமில்லை, பட்டதாரிகளுக்கும் வெட்கமில்லை

-          கருணாகரன்

வேலை கோரும் போராட்டங்களை பட்டதாரிகள் மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள். மறுபடியும் மாவட்டச் செயலகங்களைப் பட்டதாரிகள் முற்றுகையிடத் தொடங்கியுள்ளனர். gradute protest srilankaஇனி மாகாணசபை, முதலமைச்சர் அலுவலகம், ஆளுநர் மாளிகை, அரச தலைவர்களின் வருகையின் போதான முற்றுகை, போராட்டங்கள், மனுக்கையளிப்பு என்று நிகழ்ச்சிகள் தொடரும்.   பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இந்த நேர்முகத்தேர்வின் நடைமுறையில் பல “பொருந்தா விதி”முறைகள் உட்புகுத்தப்பட்டதாக பட்டதாரிகள் விசனம் கொண்டிருந்தனர். இதற்கான பின்னணி குறித்து அப்பொழுதே பட்டதாரிகளிடம் சந்தேகங்கள் ஏற்பட்டிருந்தது. “பட்டதாரிகளில் ஒரு தொகுதியினருக்கு மட்டுமே வேலை வாய்ப்பை வழங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்திருப்பதால்தான் இந்தப் பொருந்தா விதிகள். இதன்மூலம் ஏனையோருக்கு இன்னொரு தவணையில் “பார்த்துக் கொள்ளலாம்” என்பதே அரசின் எண்ணம். அதாவது ஏனையவர்களுக்கான நியமனத்தைப் பிறகு வழங்கலாம். அதற்கு இந்தப் “பொருந்தா விதி”யைப் பயன்படுத்தி இடைத்தாமதத்தை உண்டாக்கலாம் என்பது அரசின் தந்திரோபாயம்.      (மேலும்)  26.06.2018

_______________________________________________________________________

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள் -- (03)

பத்திரிகை உலகிலிருந்து அரசியலுக்கு வந்து ஆன்மீகவாதியான மட்டுநகர் மைந்தன்

                                                                 முருகபூபதி

"அத்திக்காய், காய் காய்,  ஆலங்காய் வெண்ணிலவே,
இத்திக்காய் காயாதே, என்னைப்போல் பெண்ணல்லவோ,
நீ என்னைப்போல் பெண்ணல்லவோ" என்ற பாடலை எமது மூத்த தலைமுறையினர் மறந்திருக்கமாட்டார்கள்.

1962 ஆம் ஆண்டில் பி.ஆர். பந்துலு இயக்கிய பலே பாண்டியா படத்திற்காகRajathurai கவியரசு கண்ணதாசன் இயற்றி,  மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்த  பாடல். "இந்தப்பாடலில் நிறைய காய்கள் வருவதனால், சென்னை கொத்தவால் சாவடியிலிருக்கும் மரக்கறி சந்தையையே கவியரசர் கொண்டுவந்துவிட்டார். இந்தப்பாடல் மக்கள் மத்தியில் எடுபடாது" என்றார் விஸ்வநாதன்.எனினும் அந்தப்பாடலைத்தான் அந்தப்படத்திற்குத்தருவேன் என்று விடாப்பிடியாக நின்றவர் கண்ணதாசன்.  பாடலும் சிறப்பாக அமைந்தது. இதில் சிவாஜிக்கு மூன்று வேடங்கள். நடிகவேள் எம். ஆர். ராதாவுக்கு இரட்டை வேடங்கள். படமும் வசூலில் வெற்றிபெற்றது. தத்துவப்பாடல்களும் இயற்றியிருக்கும் கண்ணதாசன், பட்டினத்தார், காளமேகப்புலவர், பாரதியார் மற்றும் சித்தர்களின்  பாடல்களையும் தனது திரைப்படப் பாடல்களில் பயன்படுத்தியிருப்பவர். மேற்குறித்த பாடலில் வரும் காய்களில் ஒரு சிலவற்றை  குறிப்பிட்டு முன்னரே கவிதை எழுதியவர்தான் காளமேகப்புலவர்.        (மேலும்)  26.06.2018

_______________________________________________________________________

கார்த்திகேயன்'- எனது கதாநாயன்.   ( 25.6.1919-10.9.1977),

(எனது எழுத்துக்களை மக்களின் நலத்திற்காக அர்ப்பணிக்கச் செய்த திரு.மு.கார்த்திகேசன் 'மாஸ்டர்' நினைவாக)

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-25.6.18

(1)

மேற்குலகில் எழுதப்பட்டுப்,பிரசுரிக்கப்பட்ட முதலாவது தமிழ் நாவல் 'உலகமெல்லாம் வியாபாரிகள்' என்ற எனது முதலாவது நாவல்,1978ம் ஆண்டு 'லண்டன் முரசு' பத்திரிகையில் வநkarthigeyan_M்தது. 1991ம் ஆண்டு புத்தக வடிவில் தமிழ் இலக்கியத்தின் ஆளுமைகளுள் ஒருத்தரான டாக்டர் சிவசேகரம் அவர்கள் முன் வெளியீடு செய்யப்பட்டது.  இந்த நாவல்,பொது மக்களை மேம்படுத்தவேண்டிய மகத்தான அரசியற் பணியை, அரசியல்வாதிகள் என்னவென்று தங்கள் சுயலாபத்திற்கான 'வியாபாரமாக்கி' விட்டார்கள் என்பதைச் சொல்லும் நாவல்.அந்தக் கதையின் கதாநாயகன்,'கார்த்திகேயன்'. ஏன் நான் 'கார்த்திகேயன்' என்ற பெயரைத் தோர்ந்தெடுத்தேன் என்பது பெரிய கதை. அதன் காரணம்,'கார்த்திகேயன்' என்ற பெயர் 'தமிழ்க்கடவுள்'முருகளின் பெயர் என்பதல்ல. கார்த்திகேயன் கடவுள் தனது, 'ஆறுமுகங்களுடன்' அசுரர்களை அழித்துத் தேவர்களைக் காப்பாற்றினான் என்ற நம்பிக்கையுமல்ல.  மனித நேயத்தை முன்னெடுத்த ஒரு கம்யுனிஸ்ட மாஸ்டர்:;: கார்த்திகேசன் மாஸ்டர்( 25.6.19-10.9.1977),நான் முன் பின் பார்த்திராத ஒரு சமூகநலவாதி. 'கார்த்திகேசன் மாஸ்டர்'என்ற அந்த மாபெரும் மனிதரின் மனித மேம்;பாட்டுக்காகச் செய்த பணிகளை,திரு பாலசுப்பிரமணியம் மூலம்,1970ம் ஆண்டுகளிற் தெரிந்து கொண்டேன்.         (மேலும்)  26.06.2018

_______________________________________________________________________

இலங்கை தமிழ்மொழி அமுலாக்கல் அமைச்சின் கவனத்திற்கு

இலங்கை சாரணர் சங்கத்தின் விளம்பரத்தில் தமிழுக்கு நேர்ந்துள்ள கதி!tamilboard2

tamil board

_______________________________________________________________________

பச்சிலைப்பள்ளி விசேட சபை அமர்வில் எதிர்தரப்பு தரப்பு உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் விசேட சபை அமர்வpachchilaipalliை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் கூட்டிய போதும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளாமையினால்  பெரும்பான்மையின்றி சபையின்  கூட்டத்தை நடத்த முடியாது 11 மணிக்கு அமர்வு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது  சில விசேட காரணங்களுக்காக பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் விசேட அமர்வினை தவிசாளர்   சுப்பிரமணியம் சுரேன் கூட்டுவதற்கு தீர்மானித்து அதற்கான அழைப்பினை சபையின் நிர்வாக ஒழுங்கு நடவடிக்கைக்கு புறம்பாக தொலைபேசி அழைப்பின் மூலம் சபை உறுப்பினர்களுக்கு விடுந்திருந்தார். எழுத்து மூலமான அழைப்பு வழங்கப்படவில்லை என்பதோடு, என்ன காரணத்திற்காக விசேட சபை அமர்வு கூட்டப்பட்டது, நிகழ்ச்சி நிரல் என எதுவும் இன்றி விசேட அமர்வுக்கு வருமாறு தொலைபேசி மூலம் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.       (மேலும்)  26.06.2018

_______________________________________________________________________

 சிறுத்தையை கொலை செய்த நால்வருக்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்

கிளிநொச்சியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஜூன் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றை கடந்த 21 ஆம் திகதி அடித்து கொலை செய்த இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரும் உதயநகர் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவார்கள்.இந்நிலையில் குறிப்பிட்ட இருவரை தவிர மேலும் நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

தம்பாளை அல்-ஹிலால் கல்லூரியின் பௌதீக வளப் பற்றாக்குறைகளை நிவர்த்திப்பேன்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

தம்பாளை அல்ஹிலால் மத்திய கல்லூரியின் பௌதீக வளப் பற்றாக்குறைகளை அடையாளப்படுத்தி, நகர திட்டமிடல் அமைச்சின் ஊடாக திட்ட வரைபை தயாரித்து, தேவையான நhakkeem10ிதியுதவிகளைப் பெற்று அவற்றை விரைவாக செய்துமுடிப்பதற்கு தன்னாலான முழு முயற்சிகளை மேற்கொள்வேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.பொலன்னறுவை, தம்பாளை அல்ஹிலால் மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நேற்று சனிக்கிழமை (23) திறந்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது, எனது தந்தை இந்தக் கல்லூரியில் அதிபராக பணியாற்றியிருக்கிறார். இதன்போது, அதிபர் விடுதியில் எனது தாயாருடன் வசித்த நாட்கள் மிகவும் என்றும் பசுமையானவை. நானும் எனது சகோதரர்களும் இந்தக் கல்லூரியில்தான் கல்வி கற்றோம். அப்படியானதொரு பாடசாலையின் தேவைகளை பூர்த்திசெய்யவேண்டிய கடமைப்பாடு எனக்கு இருக்கிறது.      (மேலும்)  26.06.2018

_______________________________________________________________________

பாடசாலை மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

பாடசாலை சீருடையுடன் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.vk1jpg   யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் இன்று (25) மாலை குறித்த சிறுமியின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுழிபுரம் பகுதியை சேர்ந்த சிவநேஸ்வரன் றெஜினா எனும் 6 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  தரம் ஒன்றில் கல்வி பயிலும் இந்த மாணவி இன்று பாடசாலைக்குச் சென்று மதியம் வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் தாயார் சமூர்த்தி வங்கிக்குச் சென்றுள்ளதுடன், தகப்பானார் கூலி வேலைக்குச் சென்றுள்ளார். மதியம் 3.00 மணியளவில் வீட்டிற்கு வந்த தாயார் மகளைக் காணவில்லை என தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று தேடிய போது அங்கு வரவில்லை என சிறுமியின் பெரிய தாயார் தெரிவித்துள்ளார். சிறுமி எங்கு சென்றிருப்பாளோ தெரியவில்லை என தாயார் உறவினர்கள் மற்றும் அயலவர் வீடுகளில் தேடிய போது இந்த விடயத்தினை அறிந்த அயல் இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து கிராமம் பூராகவும் தேடியுள்ளனர்.       (மேலும்)  26.06.2018

_______________________________________________________________________

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சொன்னால் - அமெரிக்க குடியுரிமையை துறப்பேன்


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் என்னை போட்டியிடுமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதுவரை தனக்கு அறிவிக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயgotaலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று (25) காலை வாக்குமூலம் ஒன்றை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றால், இரண்டு மாதங்களுக்குள் தனது அமெரிக்க குடியுரிமையை திரும்ப வழங்க தாயாராக இருப்பதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.மேலும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், வணக்கத்துக்குரிய வென்டருவே உபாலி தேரரின் தலைமையில் தனது பிறந்த நாளுக்கு இடம்பெற்ற சமய நிகழ்வு, ஒரு தனிப்பட்ட விஷயம், இதை ஏன் இவ்வளவு பெரிதுபடுத்துகிறார்கள் என தெரியவில்லை எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

_______________________________________________________________________

முஸ்லிம் விரோத வெறுப்பு: தமிழ் ஊடகங்களும் அதில் இணைந்துள்ளன! ஊடக நெறிமுறை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது!

                                             முகமட் ஹ}ரீஸ்

பிரதான நீரோட்டத்தில் உள்ள தமிழ் ஊடகங்களும் கூட தாமதமின்றி முஸ்லிம் விரோத வெறுப்பு பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. ஜூன் 16ல் பிரபல தமிழ் செய்திப்Anti-Muslim-Hate-Tamil-Media-Joins-In-Virakesari பத்திரிகையான வீரகேசரி பரபரப்பான ஒரு செய்தியாக அதன் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தி ஒன்றைப் பிரசுரித்திருந்தது, அது பின்வருமாறு இருந்தது: ‘ஞ}னசார தேரோவின் கைது - றமழான் பண்டிகைப் பரிசு’ (முஸ்லிம்களுக்கு) என்று அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை மறைமுகமாக முரட்டுத் தேரரின் முஸ்லிம் விரோத வெறுப்புப் பிரச்சாரத்துடன் இணைத்திருந்தது. உண்மையில் இந்த தலைப்புச் செய்தி சத்தியத்துக்கு அப்பாற்பட்டதாகவும் மற்றும் இந்த சுட்டிக்காட்டல் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் புற்றுநோய்போன்ற ஒன்றினால் முற்றுகை இடப்பட்டுள்ள முஸ்லிம்களின் உணர்வுகளையும் மனவெழுச்சிகளையும் தடாலடியாக புதுப்பிப்பதையும் ஊக்குவிக்கின்றது. ஏப்ரல் 2018ல் இதேபோல முரண்பாடாக மற்றொரு தமிழ் செய்திப்பத்திரிகையான தினக்குரல் அதன் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்தியாக “கிழக்குத் தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம் இனவாதம் எழுச்சி பெறுகிறது’ என்று பிரசுரித்திருந்தது,       (மேலும்)  25.06.2018

_______________________________________________________________________

இராணுவ அதிகாரியிடமிருந்து   தமிழ்த் தலைமைகள் கற்றுக்கொள்ள வேண்டும்

இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தின்  முன்னாள் முதல்வர் வரதராஜப்பெருமாள்

வாசுகி சிவகுமார்

முதலமைச்சரின் கீழ் அவரே தெரிவு செய்த நான்கு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பின்னர் அவர்கள் ஊழல் செய்ததாக முதலமைச்சரே ஒப்புக்கொள்கின்றார். ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் பதவி நீக்கிய ஒருவரையே தனது வலது கையாக முதலமைச்சர் அழைத்துச் செல்கின்றார். அவ்வாறானால் இங்கு சமூக அக்கறை எங்கே இருக்கின்றது. அவ்வாறானவர்களைத் தானே தமிழ் மக்களும் தெரிவு செய்கின்றார்கள்? தமிழர்கள் தங்கள் தலைகளில் தாங்களே மண் அள்ளிப் போட்டால் என்னசெய்வது?


தன்னைப் போன்றவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் எனக் perumal10கூறும் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள், அதனை அறிந்துகொண்டே தேர்தல் சகதிக்குள் குதிக்கும் எண்ணம் தமக்கில்லை என்கின்றார். வட மாகாண சபையின் வினைத்திறமின்மை பற்றியும், சமகால அரசியல் நிலவரம் பற்றியும் அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு மனந் திறக்கின்றார்......விசுவமடுவில் இராணுவ அதிகாரியொருவர் அண்மையில் இடமாற்றம் பெற்றுச் சென்றபோது அவரை கண்ணீர் மல்க அப்பகுதி மக்கள் வழியனுப்பி வைத்தனர். கேர்ணல் ரட்ணப்பிரிய அப்பகுதி மக்களுக்கு அளப்பரிய சேவை ஆற்றயிருக்கின்றார். இது எதனைக் காட்டுகின்றது? தமிழ் அரசியல்வாதிகளின் வங்குரோத்து நிலையால் தமிழர்கள் இராணுவத்தின் உதவியை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்பதையா?        (மேலும்)  25.06.201

_______________________________________________________________________

சிறுத்தையை கொலை செய்த இருவர் கைது

கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். நேற்று (23) இரவு அம்பாள்குளம் பகுதியில் வைத்து ஒருவரை கைது செய்துள்ளதுடன் இன்று (24) காலை மற்றுமொருவர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரும் உதயநகர் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

_______________________________________________________________________

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே கத்தி குத்து தாக்குதல்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே கத்தி குத்து தாக்குதல்யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி வருட சிங்கள மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் கத்திக் குத்துக்கு இலக்காகி இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் இன்று (24) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தில் 26 வயதுடைய ஜயசூர்ய மற்றும் 26 வயதுடைய சந்தருவான் ஆகிய இருவரே இவ்வாறு கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி வருட சிங்கள மாணவர்கள் இரண்டு தரப்புகளாக நீண்ட நாள்களாக செயற்படுகின்றனர்.ஒரு தரப்பினர் இன்று விளையாடிக் கொண்டிருந்த போது அந்த இடத்துக்கு வந்த மற்றய தரப்பினர் பகிடிவதை தொடர்பில் பேச்சுக்களை ஆரம்பிக்க இரண்டு தரப்புகளுக்கு இடையேயும் கைகலப்பு ஏற்பட்டது.இதன்போது மாணவர் ஒருவர் கத்தியால் இருவரைக் குத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கைகலப்பில் மேலும் சில மாணவர்கள் காயமடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

_______________________________________________________________________

நள்ளிரவில் சுதந்திரம்! சவூதியில் முடிவுக்கு வந்தது பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை

சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு நீண்டகாலம் நடைமுறையில் இருந்த தடை, சனிக்கிழமை நள்ளிரவுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது.  அதையடுத்து, தலைநகர் ரியாwomendriveத் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் முதல் முறையாக கார்களை உற்சாகத்துடன் ஓட்டிச் சென்றனர். முஸ்லிம் நாடான சவூதி அரேபியாவில், பெண்கள் கார் ஓட்டுவதற்கு நேரடியாக தடை விதிக்கப்படாவிட்டாலும், அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் மறுக்கப்பட்டு வந்தது.இதன் மூலம், அவர்கள் சட்டப்பூர்வமாக கார்களை இயக்குவது மறைமுகமாக தடை செய்யப்பட்டு வந்தது. உலகின் வேறெங்கிலும் இல்லாமல், சவூதி அரேபியாவில் மட்டும் விதிக்கப்பட்டிருந்த இந்தத் தடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. பெண்கள் கார் ஓட்டினால் அவர்கள் முகத் திரையை நீக்க வேண்டியிருக்கும்; அவர்கள் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்வார்கள்; விபத்து போன்ற தருணங்களால் வெளி ஆண்களுடன் அடிக்கடி பேச வேண்டியிருக்கும்; ஆண்-பெண் நெருக்கம் ஏற்பட்டு சவூதி பண்பாட்டுக்கு களங்கம் ஏற்படும் என பல்வேறு காரணங்களைக் காட்டி, சவூதியில் பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கான உரிமை மறுக்கப்பட்டு வந்தது.எனினும், இந்தத் தடைக்கு எதிராக பெண் உரிமைகள் அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்து வந்தனர்.     (மேலும்)  25.06.201

_______________________________________________________________________

14வது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்

தபால்  தொழிற்சங்கத்தின் போராட்டம் இன்று (24) 14வது நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுவதுடன், தற்போது அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.முன்னர் இருந்தது போன்று பதவி உயர்வு மற்றும் பதவி நிரந்தரமாக்கல் ஆகியவற்றை தொடர்ந்து அமுல்படுத்த வலியுறுத்தி கடந்த 11ம் திகதி அவர்கள் தமது போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக கொழும்பில் உள்ள தபால் தலைமையகத்திற்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.இன்று குறித்த போராட்டம் 14 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகிறது.

_______________________________________________________________________


பிரெக்ஸிட்: மறுவாக்கெடுப்புக்கு கோரிக்கை

ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து பிரிட்டன் பிரிவதற்கு (பிரெக்ஸிBREXIT5ட்) பொதுவாக்கெடுப்பில் மக்கள் அனுமதி வழங்கியதன் இரண்டாவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, அந்த நாட்டில் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சனிக்கிழமை எதிரெதிர் ஊர்வலங்கள் நடைபெற்றன. இந்த விவகாரம் குறித்து மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஆயிரக்கணக்கான பிரெக்ஸிட் எதிர்ப்பாளர்கள் நாடாளுமன்றத்தின் முன் கூடி கோரிக்கை விடுத்தனர். எனினும், "ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் முழுமையாக வெளியேற வேண்டும்' என்று பிரதமர் தெரசா மேயிடம் பிரெக்ஸிட் ஆதரவு வெளியுறவுத் துறை அமைச்சர் போரிஸ் ஜான்ஸன் வலியுறுத்தினார்.

_______________________________________________________________________

நுண்நிதிக்கடன் நிதி நிறுவனங்களின் செயற்பாடு காரணமாக வடக்கு கிழக்கிலே நடைபெறும் அதிகரித்த தற்கொலைகள் தொடர்வதற்கு இனியும் அனுமதிக்க முடியாது

கிளிநொச்சி மாவட்டத்தில் 14 பெண்களும் ஆண்களும் யாழ்ப்பாணத்தில் 19 பெண்களும் ஆண்களும் கிழ க்கு மாகாணத்தில் 19 பெண்களும் ஆண்களும் மன்னார் வவுனியா போன்ற மாவட்டங்களில் 10 பெண்களும் ஆண்களுமாக மொத்தம் 62 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
 


நுண்நிதிக்கடன் நிதி நிறுவனங்களின் செயற்பாடு காரணமாக வடக்கு கிழக்கkugavarathanிலே நடைபெறும் அதிகரித்த தற்கொலைகள் தொடர்வதற்கு இனியும் அனுமதிக்க முடியாது என மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன் வலியுறுத்தியுள்ளார். வடக்குஇ கிழக்கில் நுண்நிதிக் கடன் நிறுவனங்களின் செயற்பாட்டினால் தற்கொலைகள் அதிகரித்து வருவது தொடர்பிலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கும் வகையிலான செய்தியாளர் மாநாடு நேற்று வெள்ளவத்தை சண்முகாஸ் விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியாத வகையில் பெருங்கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.     (மேலும்)  23.06.2018

_______________________________________________________________________

நடந்தாய் வாழி களனி கங்கை ...... அங்கம் 06

முகத்துவாரத்தில் குடியிருக்கும் ஆனைக்குட்டி சாமியார்

பிரார்த்தனைக்கும் - சாபமிடுவதற்கும் கோயில்களா...?

                                                                                ரஸஞானி

உலகம் தோன்றியது முதல் சாமியார்களும் தோன்றிவிட்டனர். இவர்கள்தான் சமயங்களையும் தோற்றுவித்தவர்கள்.  முற்றும் துறந்த துறவிகளையே சாமியார்கள் என mugathuvaramஅழைக்கின்றோம். யேசுவும் புத்தரும் அவர்களின் பின்னர் தோன்றிய அவர்களின் மார்க்கத்தை பரப்பியவர்களும் சாமியார்களானார்கள். புத்தசமயத்தில் அவர்களை பிக்குகள் எனவும், கத்தோலிக்க சமயத்தில் சாமியார்,  அருட் தந்தை, அருட் சகோதரர் எனவும் அழைக்கிறார்கள்.   இந்துசமயத்தில் தோன்றிய பல சாமியார்களும் முற்றும் துறந்த முனிவர்கள் போன்று ஆசா - பாசங்களை புறம்ஒதுக்கிவிட்டு, சித்தம்போக்கு சிவன் போக்கு என வாழ்ந்து முத்தியடைந்துள்ளனர்.இக்காலத்தில் காவியுடுத்த பல போலிச்சாமியார்களும் மக்கள் மத்தியில் வலம் வருகின்றனர். இவர்களின் லீலைகள் ஊடகங்களில் செய்தியாகவும் காணொளிகளாகியுமிருக்கின்றன.களனி கங்கை இலங்கைத்தலைநகரில் கடலுடன் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் அமைந்துள்ள ஶ்ரீவெங்கடேஸ்வரா மஹா விஷ்ணு தேவஸ்தானம், சிவாலயமான அருணாசலேஸ்வரர் ஆலயம், காளி அம்மன் ஆலயம் என்பனவற்றின் வரலாற்றின் பின்னணியில் ஐதீகக்கதைகள் பலவுள்ளன        (மேலும்)  23.06.2018

_______________________________________________________________________

விடுதலைப் புலிகளின் கொடி, சீருடை மற்றும் வெடிபொருட்களுடன் இருவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் விடுதலைப்புலிகளின் கொடி, சீருடை மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்ltte-uniform (1)றுடன் முச்சக்கர வண்டி சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (22) காலை 6 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்றை சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்த போதே இவர்கள் குறித்த வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இவர்களிடம் இருந்து 20 கிலோ கிளைமோர் 1, கைக்குண்டு 1, றிமோட் கொன்ரோல் 4, T56 ரவுன்ஸ் 98, விடுதலைப் புலிகளின் சீருடை 2, விடுதலைப் புலிகளின் கொடி 40 - 45 என்வவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஒட்டுச்சுட்டான் பொலிஸார் இவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இராணுவ புலனாய்வாளர்கள் என பலர் பொலிஸ் நிலையத்தில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தப்பியோடிய நபரை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து காட்டில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

_______________________________________________________________________

 பாசம் வென்றது, பணியிட மாற்றம் நின்றது: ‘சாட்டை சமுத்திரக்கனி’ ஆசிரியருக்கு குவியும் பாராட்டு


ஆசிரியர் பகவானை பள்ளியைவிட்டு செல்லக்கூடாது என்று கதறி அழும் மாணவர்கள்
pagavan
ஆசிரியர் பணிக்கு இலக்கணமாக மாணவர்களின் உள்ளம் கவர்ந்தவராக தனது பணியைச் செய்த திருவள்ளூர் ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றத்தை மாணவர்களின் நெகிழ்ச்சியான எதிர்ப்பின் காரணமாக நிறுத்தி வைத்துள்ளது மாவட்ட கல்வித்துறை.   திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், வெளியகரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் செயல்படும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் குறைப்பு முடிவை மாவட்ட கல்வி நிர்வாகம் எடுத்ததால் பணியில் இளையவராக இருந்த ஆசிரியர் பகவான், சுகுணா என்ற இரண்டு பேரை இடமாற்றம் செய்தது மாவட்ட கல்வித்துறை. இருவரையும் 35 கி.மீ. தூரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்தது. சாதாரணமாக நடக்கும் இடமாற்றம் தான். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் கலந்தாய்வு மூலம் இடமாற்றம் நடந்துகொண்டுத்தான் இருக்கிறது. ஆனால் ஆசிரியர் பகவானின் இடமாற்றம் மாணவர்களின் அன்பினால் இன்று தமிழகம் தாண்டியும் பிரபல செய்தியாக வலம்வரத் தொடங்கியுள்ளது.       (மேலும்)  23.06.2018

_______________________________________________________________________

மாத்தறை நகரில்  பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு

மாத்தறை நகரத்தில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 03 பொலிஸார் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளmataraர் தெரிவிக்கின்றார்.அத்துடன் பொலிஸார் தவிர மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதுடன், அதில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இன்று காலை கொள்ளச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதனையடுத்து சம்பவம் தொடர்பில் அங்கிருந்த ஒருவரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு வந்த பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. 06 பேர் அடங்கிய கொள்ளைக் கும்பல் ஒன்றே கொள்ளையிட வந்துள்ளதாகவும், கொள்ளையிட வந்த சிலர் தப்பிச் சென்றுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். காயமடைந்தவர்களில் பொதுமகன் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள பொலிஸார், கொள்ளையிட வந்த ஏனையவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

_______________________________________________________________________

சிறுத்தையை கொலை செய்தவர்களை கைது உத்தரவு

சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு​டையவர்களை கைது செleopardய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.குறித்த உத்தரவினை இன்று (21) பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்று அம்பாள்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களிற்குள் நுழைந்த சிறுத்தை, பிரதேசவாசிகளை தாக்க முற்பட்ட போது அங்கிருந்த இளைஞர்களால் தற்காப்புக்காக குறித்த சிறுத்தையை அடித்து கொலை செய்த சம்பவம் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.இதேவேளை குறித்த சிறுத்தையின் மரணத்தின் பின்னர் சிறுத்தையை கொலை செய்வதுபோல் சமூக வலைத்தளங்கள் மூலம் புகைப்படங்கள் வைரலாக பரவியது.இந்நிலையில் குறித்த புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு நேற்று நீதிமன்றில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது இறுவெட்டு (சிடி) மூலம் சாட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாகக்கொண்டு அனைவரையும் கைது செய்யுமாறும் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது

_______________________________________________________________________

‘அமெரிக்காவுக்கு வரவேற்கிறோம்’ டொனால்டு ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்த டைம்ஸ் இதழ்

‘அமெரிக்காவுக்கு வரவேற்கிறோம்’ என்ற அட்டைப்பட காட்சியுடன் டொனால்டு டிரம்ப்பை டைம்ஸ் இதழ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. #time

அமெரிக்காவில் குடியேறுபவர்கள் மற்றும் அகதிகள் விவகாரத்தில் டொனால்டு டிரம்ப் எந்தஒரு கனிவும் கிடையாது என்ற நிலையில் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கொண்டுவரும் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றமும் எதிர்க்கிறது. ஆனால் தன்னுடைய நிலைப்பாட்டில் எந்தஒரு மாற்றமும் கிடையாது என டிரம்ப் நகர்ந்து வருகிறார். இந்நிலையில் மற்றொரு சர்ச்சைக்குரிய திட்டம் ஒன்றை டொனால்டு டிரம்ப் அரசு முன்னெடுத்தது. அதாவது சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் குடும்பமாக நுழைபவர்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டார்கள். குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டார்கள்.  திட்டம் தொடங்கிய 6 வார காலங்களில் மட்டும் 2 ஆயிரம் குடும்பங்கள் பிரிக்கப்பட்டது. அடைக்கலம் கோரி அமெரிக்காவிற்குள் நுழைபவர்கள் பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்கள். கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. குடும்பங்கள் பிரிக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான சிறார்களும் தடுப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். இது எதிர்பார்க்காத ஒரு கொள்கை முடிவு என சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் குழுக்கள் விமர்சனம் செய்தன.       (மேலும்)  23.06.2018

_______________________________________________________________________

மன்னாரில் மேலுமொரு எலும்புக்கூடு மீட்பு

மன்னாரில் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித எச்சங்கள் தொடர்பான அகழ்வுப் பணிகளில் இன்றைய தினமும் மனித எலும்புக் கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து, அங்கு மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகள் இன்று 19 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.குறித்த அகழ்வுப் பணிகள் மன்னார் நீதவான் ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் இடம்பெறுகின்றது.அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், இன்றும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில், குறித்த பகுதியில் மனித எலும்பு கூடு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.குறித்த எலும்புக்கூடு சிறிய அளவான தோற்றத்தை உடைய மனித எச்சமாக காணப்படுகின்றதாக அங்குள்ள செய்தித் தொடர்பாளர் லெம்பர்ட் தெரிவித்தார்.

_______________________________________________________________________

போரால் பிரிந்த குடும்பங்கள் சந்திக்க ஏற்பாடு: வட - தென் கொரியா ஒப்புதல்


கொரியப் போரினால் பிரிந்து போன குடும்ப உறுப்பினர்களை சந்திக்கச் செய்யும் நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்க வட கொரியாவும், தென் கொரியாவும் ஒப்புக் கொண்டnord southன.இதையடுத்து, கடந்த 2015-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட அந்த மனித நேய நிகழ்ச்சிகள், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 1950 முதல் 1953-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற கொரியப் போரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே பிரிக்கப்பட்டனர்.எல்லையின் இருபுறங்களிலும் உள்ள உறவினர்களிடையே தொடர்புகள் முழுமையாக தடுக்கப்பட்டதால் தங்களது குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க முடியாமல் அவர்கள் தவித்து வந்தனர்.அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் அன்புக்குரியவர்களை கடைசி வரை சந்திக்க முடியாமலே மறைந்தனர். எனினும், அவ்வப்போது இரு கொரிய நாடுகளும் நடத்திய சந்திப்பு நிகழ்ச்சிகளின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலர் மட்டும் தங்களது குடும்பத்தினரை சந்தித்து வந்தனர்.        (மேலும்)  23.06.2018

_______________________________________________________________________

ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டார்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்ய ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அத்துடன் அவர் வௌிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்ட நீதிமன்றம் இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளை தௌிவுபடுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.அவருக்கு பிணை வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவரை 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்ய நீதவான் சுதேஷ் ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.

_______________________________________________________________________

  தமிழரசுக் கட்சிக்கு வந்த சோதனை -

தடுமாறும் பங்காளிகளும் தீர்மானம் எடுக்க வேண்டிய மக்களும்

-    கருணாகரன்

தேர்தல் ஆணைக்குழு மாகாணசபைத் தேர்தலுக்கான ஆயத்தங்களைச் செய்கிறதோ இல்லையோ “இலங்கைத் தமிழரசுக் கட்சி” தேர்தலுக்குத் தயாராகி விட்டது.tna-220618   இதற்கான பூர்வாங்க வேலைகளில் அது மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.உறுப்பினர்களை மீளாய்வு செய்வது, கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் ஏற்பட்ட  சரிவுக்கான காரணங்களைக் கண்டறிவது, புதிய ஆதரவாளர்களைச் சேர்த்துக் கொள்வது, வடக்கிலும் கிழக்கிலும் முதலமைச்சர் வேட்பாளர்களாக யாரை நிறுத்தலாம் என்று நாடி பிடித்துப் பார்ப்பது, தேர்தலுக்கான வேலைகளைச் செய்யும் வலுவுள்ள இளைஞர் அணியைக் கட்டுவது என்று அடுத்த தேர்தலுக்கு ஏற்றவாறு கட்சியின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.பெரும்பாலும் வெளிக்கள வேலைகளில் ஈடுபடாத சம்மந்தன், கட்சிப் பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணத்துக்குத் திட்டமிட்டுள்ளார். இதற்கான முதற்கட்டப் பயணமாக முல்லைத்தீவுக்குச் சென்று திரும்பியிருக்கிறார்.        (மேலும்)  22.06.2018

_______________________________________________________________________

UNHCR இல் இருந்து அமெரிக்கா வெளியேற்றம் - இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தம் குறையும்

ராஜித சேனாரத்ன

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து அமெரிக்கா வெளியேறியமையால் இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தம் குறையும் என சுகrasjitha senaratnaாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.   அமெரிக்கா வெளியேறினாலும், நாம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்கவோ விலகியோ செயற்படப்போவதில்லை என்பதையும் நாம் உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறோம் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு தள்ள திட்டமிட்ட சதி முயற்சிகளை ஆரம்பித்துள்ளது. இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகிறது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (20) அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.         (மேலும்)  22.06.2018

_______________________________________________________________________

‘கிழக்குத் தமிழர்ஒன்றியம்’- இதுவரை

1.1987 இந்திய - இலங்கைசமாதான ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாகவேனும் இணைக்கப் பெற்றிருந்த வடக்குகிழக்குமாகாணங்கள் 2007ம் ஆண்டு தனித்தனிமாகாணங்களாகப் பிரிக்கப் பெற்றபின்னர் கிழக்குமாகாணத் தமிழர்களின் சமூக பொருளாதாரஅரசியல் விடயங்களில் பலமறைத் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 2012 ஆம் ஆண்டின் மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர் கிழக்குமாகாணத் தமிழர்களின் சமூகபொருளாதார அரசியல் இருப்பு நாளாந்தம் கேள்விக்குள்ளாகி வருகின்றது. மட்டுமல்லாமல் கிழக்குமாகாணத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் மேம்பாட்டிற்குப் பாடுபடக் கூடியதாகக் கட்சி அரசியலுக்கு அப்பால் மக்கள் மயப்படுத்தப் பெற்றதும் வினைத்திறன் மிக்கதுமான பொதுவான பலமானமக்கள் அமைப்பொன்று முழுக் கிழக்குமாகாணமும் தழுவியதாக இல்லை. இந்தப் பின்னணியில் கிழக்குமாகாணத் தமிழர்கள் தங்களைத் தற்காத்துத் தங்கள் எதிர்கால இருப்பைப் பாதுகாத்துப் பேணி வளர்த்தெடுப்பதற்குரிய “பொறிமுறை”யொன்றினை உருவாக்குமுகமாக த.சிவநாதன், (சிரேஸ்ட சட்டத்தரணி) மற்றும் செங்கதிரோன். த.கோபாலகிருஸ்ணன் ஆகியோரின் அழைப்பின் பேரில் ஏற்பாடு செய்யப்பெற்ற மட்டக்களப்பு மாவட்டமட்டக் கலந்துரையாடல் கூட்டம் 06.01.2018 அன்றுமட்டக்களப்பு, கல்லடிஉப்போடை துளசிமண்டபத்தில் நடைபெற்றது.        (மேலும்)  22.06.2018

_______________________________________________________________________

திருட்டு விசா தயாரிக்கும் நிலையம் சுற்றிவளைப்பு

போலி விசா உள்ளிட்ட ஆவணங்களை தயாரிக்கும் நிலையமொன்றுarrest visafrud நீர்கொழும்பு பொலிஸ் விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.ஐரோப்பா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கான போலி விசா இந்த நிலையத்தில் தயாரிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.நீர்கொழும்பு, வெல்லவீதிய, கீர்த்திசிங்க பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த போலி நிலையம் இயங்கியுள்ளது.நீர்கொழும்பு பொலிஸ் விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளதுடன், இத்தாலி, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்புவதற்காக போலியாக தயாரிக்கப்பட்ட விசா உள்ளிட்ட ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.சுற்றிவளைப்பின் போது வீட்டில் இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துடன், நீர்கொழும்பு முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அனுப்புவதற்கு வைத்திருந்த சில கடிதங்களும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

_______________________________________________________________________

பணிக்கு திரும்பாத தபால் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை

இன்னும் பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் உடனடியாக மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தபால் மா அதிபர் டீ.எல்.பீ ரோஹண அபேரத்ன கூறியுள்ளார்.சேவைக்கு சமூகமளிக்கும் பணியாளர்களுக்கு மாத்திரமே ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என்றும், பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஜூன் மாதம் 01ம் திகதி முதல் 11ம் திகதி வரையான நாட்களுக்கு மாத்திரமே சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.அரச தகவல் திணைக்களம் இது தொடர்பான ஊடக அறிக்கையை வௌியிட்டுள்ளது.

_______________________________________________________________________

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்

மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் இன்று (21) காலை 11 மணி முதல் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒனarbeitlos்றை மேற்கொண்டு வருகின்றனர்.மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடிய வேலையற்ற பட்டதாரிகள், மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரங்களை அமைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த மாதங்களில் இடம்பெற்ற வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு சென்ற பட்டதாரிகளுக்கு இதுவரை உரிய நியமனங்கள் வழங்கப்படாத நிலையில், அரசாங்கம் தொடர்ச்சியாக ஏமாற்றி வருவதாகவும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்இந்நிலையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான அடுத்த கட்ட நேர்முக தேர்வுக்கான வர்த்தமானி அறிவிப்பு எதற்காக எனவும் பட்டதாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.தொடர்ச்சியாக தாங்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்ற போதும் தங்களை அரசாங்கம் கண்டு கொள்வதில்லை எனவும், இச் செயற்பாடானது பட்டதாரிகளாகிய தங்கள் மத்தியில் பாரிய மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த போராட்டமானது இன்றுடன் நிறைவடையாது என்றும் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறும் என்றும், அது நிறுத்தப்படுவது அரசாங்கத்தின் கைகளில் தான் உள்ளது என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

_______________________________________________________________________

நாடுகடத்தப்படவுள்ள இலங்கை குடும்பம் தொடர்பில் தலையிடுமாறு வலியுறுத்தல்

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்றின் விடயத்தில் உடனடியாக தலையிடுமாறு, அவுஸ்திரேலியாவின் உள்நாட்டு அமைச்சர் பீற்றர் டட்டனிடம், அந்த நாட்டின் அகதிகள் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகிய பெற்றோரும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு பெண் குழந்தைகளும் அங்கிருந்து நாடுகடத்தப்படவுள்ளனர். அவர்களது வீசா காலம் நிறைவடைந்த நிலையில், ஏற்கனவே அவர்கள் நாடுகடத்தப்பட விருந்தனர்.எனினும் இதற்கு எதிராக அவர்கள் அவுஸ்திரேலிய பிராந்திய நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அவர்கள் வசித்து வந்த குயின்ஸ்லாந்தின் - பிலோயிலா பகுதி மக்கள் அவர்களுக்கு ஆதரவாக போராட்டங்களையும் நடத்தி இருந்தனர்.எனினும் அந்த மனுவை இன்று நீதிமன்றம் நிராகரித்துள்ளது.இந்தநிலையில் கடந்த 108 தினங்களுக்கு மேலாக தடுப்பில் வைக்கப்பட்டுள்ள அவர்களை உடனடியாக விடுவிக்கவும், நாடுகடத்தலில் இருந்து பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு, ஏதிலி செயற்பாட்டாளர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

_______________________________________________________________________

மலைப்பாம்புக்குள் இளம்பெண்ணின் உடல்! மனிதரை எப்படி விழுங்குகிறது

ஒரு மனிதரை முழுமையாக மலைப்பாம்பு எப்படி விழுங்கும் என்பது குறித்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.malai   இந்தோனேசியா நாட்டில் வா திபா (54) எனும் பெண்ணொருவர் தனது தோட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பவில்லை என அவரது உறவினர்களுக்கு தெரிய வந்தது.அதன் பின்னர், சுமார் 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஒரே இடத்தில் நகர முடியாமல் இருந்துள்ளது. அதனைப் பார்த்து சந்தேகமடைந்த கிராம மக்கள், அதனை அடித்து கொன்றுவிட்டு அதன் உடலை அறுத்துள்ளனர். அப்போது காணாமல் போன வா திபாவின் உடல் அதில் இருந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு மனிதரை முழுவதுமாக மலைப்பாம்பு எப்படி விழுங்க முடியும் என்பது குறித்த சந்தேகம் பலருக்கு நிலவுகிறது.இந்நிலையில், இதற்கு ஆய்வாளர்களை விடையளித்துள்ளனர். மலைப்பாம்பிற்கு பெரிய இரைகளை முழுவதுமாக விழுங்கும் அளவுக்கு நெகிழ்வான தாடை உள்ளது. மனிதர்களின் தோல்பட்டை எளிதில் உடையாது என்பதால், தோல்பட்டைக்கு மேல் மனிதர்களின் உடல் மலைப்பாம்பின் வாய்க்கு உள்ளே செல்வது கடினம்.       (மேலும்)  22.06.2018

_______________________________________________________________________

ல்லாகத்தில் இரு குழுக்களிடையே மோதல்: எண்மர் கைது

யாழ்ப்பாணம் – மல்லாகம் சந்தியில் இரு குழுக்களிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் இதுவரை 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் நேற்றிரவு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக யாழ். பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார். இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைதான இரண்டு சந்தேகநபர்கள் நேற்று மாலை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.மோதல் நடைபெற்ற தினத்தன்று ஏற்கனவே 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மல்லாகம் சந்தியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் மேலும் 10 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் யாழ். பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கூறினார். மோதல் இடம்பெற்ற பகுதியிலுள்ள CCTV காணொளிகள் பெறப்பட்டு சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

_______________________________________________________________________

அகதி சிறுவர்களை பெற்றோர்களிடமிருந்து பிரிக்கும் நடைமுறை ரத்து: கடும் சர்ச்சைக்குப் பிறகு டிரம்ப் உத்தரவு


அரசாணையில் கையெழுத்திடும் டிரம்ப். உடன் (இடது) உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கிறிஸ்ட்ஜென் நீல்ஸன் மற்றும் துணை அதிபர் மைக்கேல் பென்ஸ்.trumps

அடைக்கலம் தேடி அமெரிக்காவுக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்களிடமிருந்து சிறுவர்கள் தனியாக பிரிக்கப்படும் சர்ச்சைக்குரிய நடைமுறைக்கு முடிவு கட்டும் அரசாணையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்ட சிறுவர்கள் கம்பிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் படங்களும், குழந்தை பெற்றோருக்காக ஏங்கி அழும் ஒலிப்பதிவும் வெளியாகி உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து டிரம்ப் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.இதன் மூலம், சட்ட விரோதக் குடியேற்றங்களுக்கு எதிராக அவர் அண்மையில் அறிவித்திருந்த இரும்புக் கொள்கையில் மாற்றம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.       (மேலும்)  22.06.2018

_______________________________________________________________________

 யாழ். வடமராட்சியில் சட்டவிரோதமாகக் கடலட்டை பிடித்த வௌிமாவட்ட மீனவர்கள் எண்மர் கைது

யாழ். வடமராட்சி, கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் சட்டவிரோதமாகக் கடலட்டை பிடித்த வௌிமாவட்ட மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வௌிமாவட்ட மீனவர்கள், இன்று அதிகாலை 2 மணியளவில் உள்ளூர் மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.வௌிமாவட்ட மீனவர்களின் மூன்று படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.வடமராட்சி கிழக்குக் கடற்பரப்பில் அண்மைக்காலமாக வௌிமாவட்ட மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், கடந்த வாரம் பாரியளவில் ஆர்ப்பாட்டங்களும் முற்றுகைப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.எனினும், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடாமையால், உள்ளூர் மீனவர்கள் சுற்றிவளைப்பில் ஈடுபட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார். அதற்கமைய, கடலட்டை பிடித்த வௌிமாவட்ட மீனவர்கள் இன்று அதிகாலை மடக்கிப்பிடிக்கப்பட்டதாக கட்டைக்காடு பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

_______________________________________________________________________

கிழக்கிலங்கை   எழுத்தூழியக்காரர்கள்: (02)

அயர்ச்சியின்றி இயங்கும் இலக்கியப் பேராசிரியர் செல்லையா யோகராசா

கல்வியும் இலக்கியமும் அவரது கண்கள்

                                                                 முருகபூபதி

வாகனவிபத்தொன்றில் அவரது அன்புத்துணைவியும் அருமைக்குழந்தையும் காயமடைகின்றனர். துணைவி கொழும்பு பெரியாஸ்பத்திரியிலும் குழந்தை மட்டக்களப்பு ஆஸ்பத்திரியிலkarunaiyogamும் அனுமதிக்கப்படுகின்றனர்.  இருவரும் தெய்வாதீனமாக உயிர்தப்புகின்றனர். எனினும் மேலதிக சிகிச்சைகளுக்காக மேற்கிலும் கிழக்கிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.குடும்பத்தலைவனோ, ஊண் உறக்கமின்றி பஸ்ஸிலும் ரயிலிலும் பயணித்து இருவரையும் பராமரிக்கிறார். தனது பல்கலைக்கழக விரிவுரைப்பணிகளையும் கவனிக்கிறார். எழுதுகிறார். வாசிக்கிறார். விரிவுரைக்குத்தேவையான குறிப்புகளை பதிவுசெய்கிறார்.அவருக்கு அவரது குடும்பம் மாத்திரமல்ல, அவரது மாணவர்களும் முக்கியமானவர்கள். இத்தகைய நெருக்கடிக்கு மத்தியில் நிதானமாகப்பேசுகிறார். பதட்டமின்றி இயங்குகிறார். அந்த நிதானம் இயல்பிலேயே அவருக்குரிய குணாம்சம்! அதிர்ந்து பேசத்தெரியாத பண்புகளே அவரது பலம். எளிமையாக பழகும் நெகிழ்ச்சியே அவரது வலிமை! அவர்தான் பேராசிரியர் செ. யோகராசா.      (மேலும்)  21.06.2018

_______________________________________________________________________

 கிளிநொச்சியில் நவீன ஸ்கேனர் மூலம் விடுதலைப் புலிகளின் புதையல் தேடிய ஒருவர் கைது

Colombo (News 1st) கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நவீன ஸ்கேனர் மூலம் விடுதலைப் புலிகளின் புதையலைத் தேடியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இltte gold searchரவு இருவர், நவீன ஸ்கேனர் மூலம் தேடுதல் மேற்கொள்வது தொடர்பில் தகவலறிந்த விசேட அதிரடிப் படையினர் குறித்த பகுதியை சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது, தேடுதலில் ஈடுபட்ட ஒருவர் தப்பியோடியுள்ள நிலையில், மற்றையவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு, தேடுதலுக்குப் பயன்படுத்திய 58 இலட்சம் பெறுமதியான ஸ்கேனரும் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரும் ஸ்கேனரும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சி பூநகரியின் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட கொள்கலன் தொடர்பில் பொலிஸாரால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

tharmakumar speech

_______________________________________________________________________

காணாமல் போனோர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை

சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலுக்கு அமைய, 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கை ஆயுதப் படையினரின் காவலில் இருந்த போsrilanaka-missingpersons (1)து காணாமலாக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள், அவற்றை தந்துதவுமாறு காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள குறித்த அலுவலகம், சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தினால் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்த பெயர்களடங்கிய பட்டியல் ஒன்று தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.   அந்த ஊடக அறிக்கையில் "காணாமல் போனோருக்கான அலுவலகமானது காணாமல் போன நபர்களை தேடுதல் மற்றும் கண்டறிதல் மற்றும் குறித்த நபர்கள் எந்த சந்தர்ப்பத்தில் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதனை தெளிவுபடுத்துதல் மற்றும் அவர்களது தலைவிதி, காணாமல் போன நபர்களின் சம்பவங்களை குறைப்பதன் ஊடாக சம்பந்தப்பட்ட அதிகார சபைகளுக்கு பரிந்துரைகளை மேற்கொள்ளும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.       (மேலும்)  21.06.2018

_______________________________________________________________________

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு?


சிறைத் தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது சம்பந்தமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துரையாடிக் கொண்டிருப்பதாக அமைச்சர் ரgnaseraாஜித சேனாரத்ன கூறியுள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்ற போதே அமைச்சர் இந்தக் கருத்தை கூறினார்.எனினும் இதற்கு முன்னரும் பௌத்த தேரர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக கூறிய அமைச்சர், சட்டத்தின் ஊடாக வழங்கப்படுகின்ற தீர்ப்பு குறித்து எதுவும் கூற முடியாது என்றும் கூறினார்.தற்போது கூட சிறைத் தண்டனை பெற்றுள்ள 15 பௌத்த தேரர்கள் மற்றும் 03 இந்து மத தலைவர்கள் இருப்பதாகவும் கூறிய அமைச்சர், மிகவும் பாரிய குற்றங்கள் இழைத்து தண்டனை பெற்றுள்ள பௌத்த தேரர்களும் அதில் உள்ளடங்குவதாக கூறியுள்ளார்.எவ்வாறாயினும் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையை சிலர் அரசியலாக்க முயற்சிப்பதாகவும், நாளை ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கினால் ஏனைய பௌத்த தேரர்களும் அவ்வாறு கோரிக்கை விடுக்கும் நிலமை ஏற்படும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

_______________________________________________________________________

அடிப்படை வசதிகளற்ற பாடசாலை; இதன் குறையை தீர்ப்பது யார்?


நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயம் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாது காணப்படுவதாக பாடசாலையின் அnu.schoolதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து பாடசாலையின் அதிபர் தெரிவிக்கையில்,இப் படாசாலையில் தரம் 1 தொடக்கம் 12 வரையான வகுப்புக்களில் சுமார் 550 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலையில் இட வசதிகளின்றி கல்வி கற்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இப் படாசாலையின் கட்டடங்கள் கட்டப்பட்ட காலத்திலிருந்து எவ்வித அபிவிருத்திகளும் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக தரம் 6 தொடக்கம் 8 வரையான வகுப்புக்களை கொண்ட கட்டடங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.        (மேலும்)  21.06.2018

_______________________________________________________________________

வவுனியாவில் விஷம் அருந்திய தாயும், மூன்று பிள்ளைகளும்..

வவுனியா – செட்டிக்குளம் - மெனிக்பாம் பிரதேசத்தில் தாய் மற்றும் அவரது 3 பிள்ளைகளும் விஷம் அருந்திய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த பெண்ணின் கணவன் வேலைக்கு சென்றிருந்த நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயின் வயது 33 எனவும், பிள்ளைகளின் வயது 12, 5 மற்றும் 2 எனவும் காவற்துறையினர் குறிப்பிட்டனர்.மருத்துவமனையில் அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவர்கள் விஷம் அருந்தியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என காவற்துறையினர் தெரிவித்தனர்.

_______________________________________________________________________

கனடாவில் சட்டப்பூர்வமானது கஞ்சா பயன்பாடு

கஞ்சா பயன்பாட்டுக்கு கனடாவில் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பkancha1ட்டுள்ளது.

இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் போதைப்பொருள்களில் ஒன்றான கஞ்சா பயன்பாட்டுக்கு தடை உள்ளது. கஞ்சா செடிகளை பயிரிடுவது மற்றும் அதனை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். அந்த வகையில் கனடாவில் கஞ்சா வைத்திருப்பது மற்றும் பயன்படுத்துவது குற்றச்செயல் என கடந்த 1923–ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2001–ம் ஆண்டு மருத்துவ காரணங்களுக்காக கஞ்சாவை பயன்படுத்த அரசு அனுமதி வழங்கியது.  அதே சமயம் அதனை போதைப்பொருளாக பயன்படுத்துவதற்கு தடை நீடித்தது. ஆனாலும் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தது. எனவே அங்கு கஞ்சா பயன்பாட்டுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரி கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து முறையான அனுமதியுடன் கஞ்சா செடிகளை வளர்க்கவும் கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்தவும் சட்டம் இயற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.         (மேலும்)  21.06.2018

_______________________________________________________________________

ஆனந்த சுதாகரனுக்கு நடந்த சித்திரவதைகளை கண்ணீர் மல்க விபரிக்கும் அவரின் தாய்!!

தனது மகனை எப்படியாவது விடுவித்து தருமாறு ஆயுள் தண்டனைanandasutha கைதி சுதாகரனின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.கொழும்பில் நவோதயா மக்கள் முன்னணியால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார். கடந்த 2008ம் ஆண்டு தனது மகன் கைது செய்யப்பட்டு சுமார் 10 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இவரின் மனைவி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்த நிலையில் , தனது மகனின் பிள்ளைகள் தற்போது தாயும் , தந்தையும் இன்றி உள்ளனர். அவர்களுக்கு தற்போது ஒரு பாதுகாப்பு தேவை , அது அவரின் தந்தையால் மட்டுமே வழங்க முடியும்.  பிள்ளைகள் இருவரும் தற்போது அவரின் அம்மம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றனர்.எனினும் , அவர்களின் செயற்பாட்டில் தற்போது மாற்றத்தை காணக்கூடியதாய் உள்ளது. அம்மம்மாவிற்கு தற்போது 68 வயது என்பதால் அவரால் குழந்தைகளை சரிவர கவனித்துக்கொள்ள முடியாது.         (மேலும்)  21.06.2018

_______________________________________________________________________

அமெரிக்காவில் அடைக்கலம் கோரும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு, இந்தியாவைச் சோ்ந்த சுமார் 7,000 போ் விண்ணப்பித்துள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு உள்நாட்டுப் போர், வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்களது சொந்த நாடுகளை விட்டு இடம்பெயா்ந்து, பிற நாடுகளில் அடைக்கலம் கோரியவா்களின் எண்ணிக்கை தொடா்பான அறிக்கையை, ஐ.நா. அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:உலகம் முழுவதும் கடந்த ஆண்டு 6.85 கோடி போ் தங்களது சொந்த நாடுகளை விட்டு அகதிகளாக இடம்பெயா்ந்துள்ளனா். காங்கோ, தெற்கு சூடான், மியான்மா் ஆகிய நாடுகளில் இருந்து அதிகம் போ் இடம்பெயா்ந்துள்ளனா்.இதுபோன்று பல்வேறு நாடுகளில் இருந்து இடம்பெயரும் மக்கள், அமெரிக்காவில் அடைக்கலம் கோருவது முந்தைய ஆண்டுகளைப் போல கடந்த ஆண்டும் அதிகரித்துள்ளது. எல் சால்வடார் நாட்டைச் சோ்ந்த 49,500 போ் அமெரிக்காவில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளனா். இதேபோல், வெனிசூலா (29,900), மெக்ஸிகோ (26,100), சீனா (17,400), ஹைதி (8,600), இந்தியா (7,400) ஆகிய நாடுகளைச் சோ்ந்தவா்களும் அமெரிக்காவில் அடைக்கலம் கோரியுள்ளனா்.       (மேலும்)  21.06.2018

_______________________________________________________________________

இராணுவ ஆட்சியையேனும் ஏற்படுத்தி நாட்டை கட்டியெழுப்பவும் - கோட்டபாயவிடம் கோரிக்கை

இராணுவ ஆட்சியையேனும் ஏற்படுத்தி நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிடம், மகாசங்கத்தினர் இன்று இந்த கோரிக்கையை விடுத்தனர்.பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவின் ஜனன தினத்தை முன்னிட்டு இன்று இடம்பெற்ற தானம் அளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அஸ்கிரிய பிரிவின் அனுநாயக்கர் வேடருவே ஸ்ரீ உபாலி தேரர் இதனை தெரிவித்துள்ளார்."நீங்கள் ஹிட்லருக்கு ஒப்பானவர்.நீங்கள் ஹிட்லராக மாறியேனும் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே மகாசங்கத்தினரின் இறுதியான ஞாபகமூட்டலாக இருக்கிறது.
நீங்கள் இராணுவ ஆட்சியை முன்னெடுத்து இந்த நாட்டை வளர்ச்சி பாதையில் இட்டு செல்ல வேண்டும்" என குறிப்பிட்டார்.

_______________________________________________________________________

பூநகரி ஜெயபுரம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஜெயபுரம் கிராம மக்கள் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.இந்த ஆர்ப்பாட்டம் பூநகரி பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றது.தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கமைய வயல் காணிகளை வழங்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஆர்ப்பாட்டக்கார்கள் - பூநகரி பிரதேச செயலகத்திடம் கையளித்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

_______________________________________________________________________

விஸ்வமடுவில் இடம்பெற்ற பற்றுமிகுந்த பிரியாவிடைக்குப் பின்னால்

                                      மனெக்ஷ} போர்ஹ}ம்

சமீபத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விஸ்வமடுவில் சேவையாற்றிய இராணுவ அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்ட பிரியாவிடை நிகழ்வில் இடம்பெற்ற கண்ணீர் நிறைந்த கvisvamadu7ாட்சிகள், இந்தப் பிராந்தியத்தில் வாழும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏழ்மையான மக்களின் உடனடித் தேவைகளை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ போராளிகளின் நற்பெயருக்கு தொடாச்சியாக விளைவிக்கப்படும் களங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மனிதநேயம் மற்றும் மரியாதை என்பனவற்றின்மீதான மீதான அவநம்பிக்கை என்பனவற்றையும் இது வெளிக்காட்டியுள்ளது.போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் குடிமக்களின் கட்டமைப்பில் உள்ள இராணுவமயமாக்கலின் சோர்வு காரணமாக ஆயுதப் படைகளை அங்கிருந்து வெளியேற்றும்படி தொடர்ச்சியாக அழைப்புகள் விடுக்கப்பட்டுவரும் பின்னணியில், கடந்தவாரம் முல்லைத்தீவு, விஸ்வமடுவில் உள்ள தமிழ் பொதுமக்கள் மற்றும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ போராளிகள் ஒன்றுகூடி, அங்கு சேவையாற்றிய ஒரு மூத்த இராணுவ அதிகாரி அங்கிருந்து அம்பேபுசவுக்கு மாற்றலாகிச் செல்வதையிட்டு கண்ணீர் மல்க அவருக்கு பிரியாவிடை அளித்த காட்சிகள் நாடு முழவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது.       (மேலும்)  20.06.2018

_______________________________________________________________________

மல்லாகம் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் / காவல்துறை அதிகாரியிடமிருந்து விளக்க அறிக்கை கோரப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் - மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரியிடமிருந்து சம்பவம் தொடர்பில் விளக்க அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட பணிப்பாளர் கனகராஜ் தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சூரியனின் செய்திப் பிரிவு வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இதற்கமைய, விசாரணைக்கு பொறுப்பான அதிகாரியான காங்கேசன்துறை காவல்துறை பிரிவுக்கு பொறுப்பான காவல்துறை உதவி கண்காணிப்பாளரிடம் குறித்த விளக்க அறிக்கை கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, குறித்து சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று சந்தேகத்துக்குரியவர்களிடம் சிங்கள மொழியில் பெறப்பட்ட வாக்குமூலத்தில் முரண்பாட்டு நிலைமை உள்ளதாக காவல்நிலைய பொறுப்பதிகாரியிடம் நேற்று தாம் சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்தார்.இதையடுத்து, தமிழ் மொழியில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தமக்கு அறிவிக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட பணிப்பாளர் கனகராஜ் தெரிவித்தார்.

_______________________________________________________________________

பிரித்தானிய உயரஸ்தானிகருக்கும் முன்னாள் எம்பி சந்திரகுமாருக்கிடையில் சந்திப்பு

இலங்கைக்கான பிரித்தானிய உயரஸ்தானிகர் ஜேம்ஸ் கௌரிchandrakumar uk emஸிக்குமு் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினனர்  சந்திரகுமாருக்குமிடையே  சந்திப்பொன்று இன்று(19) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.  கிளிநொச்சியில் உள்ள விருந்தினர் விடுத்தி ஒன்றில் பகல் பதினொரு மணி முதல் ஒரு மணி வரை இடம்பெற்ற இச் சந்திப்பில் கிளிநொச்சி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து இரு தரப்பினர்களும்  கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். குறிப்பாக வேலைவாய்ப்பின்மை, வறுமை, அபிவிருத்தி அவசியம், மக்களின் நாளாந்த வாழ்க்கை நெருக்கடிகள் என்பன குறித்து பேசப்பட்டதோடு, கண்ணி வெடி அகற்றும் செயற்பாடுகளுக்கு பிரித்தானிய அரசு வழங்கி வரும் ஒத்துழைப்புக்கும்  சந்திரகுமாரினால் நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, முழுமையாக கண்ணிவெடி அகற்றும் வரைக்கும் பிரித்தானியாவின் பங்களிப்பு அவசியம் என்பதனையும் அவர் வலியுறுத்தினார்.மேலும் சமகால அரசியல் விடயங்கள் குறித்து  கலந்துரையாடப்பட்டது.

_______________________________________________________________________

தமிழர் ஜனத்தொகைக்கேற்ப இந்நாட்டில் தமிழ் அமைச்சர்களும், நிறைவேற்று அதிகாரமும் இல்லை

- அமைச்சர்  மனோ கணேசன்

இன்று இந்நாட்டில் 5 அமைச்சரவை, 2 ராஜாங்க, சுமார் 5 பிரதி அமைச்சர்கள்களாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள். சுமார் 70 அரச நிறுவனங்கள் ஒட்டுமொத்த முஸ்லmanoganesan1ிம் அமைச்சர்கள் வசம் உள்ளன. அவை மூலம் கிடைக்கும் அந்த சேவைகளும் போதாது, என்று முஸ்லிம்கள் தமது அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்தாலும் கூட, இதுதான் உண்மை. உண்மையில் நான் முஸ்லிம் மக்களை பாராட்ட விரும்புகிறேன். முஸ்லிம் மக்களை பார்த்து தமிழர்கள் பாடம் படிக்க வேண்டும்.   இந்நாட்டின், மொத்த சுமார் 200 இலட்சம் ஜனத்தொகையில், சுமார் 150 இலட்சம் சிங்களவர்கள், சுமார் 30 இலட்சம் தமிழர்கள், சுமார் 20 இலட்சம் முஸ்லிம்கள். இந்த அரசாங்கத்தை உருவாக்க வழங்கப்பட்ட சிறுபான்மை இன வாக்குகளில் தமிழர் வாக்குகளே பெரும்பான்மை வாக்குகள். ஆனால், தமிழர்களை பொறுத்தவரையில், 3 அமைச்சரவை, 1 ராஜாங்க, 3 பிரதி அமைச்சர்கள் தான் இருக்கிறோம்.தமிழர்களின் வாக்குகளை பயன்படுத்திகொள்ளும் அரசாங்கங்கள், தமிழர்களுக்கு உரிய அந்தஸ்த்தை தருவதில்லை. இதற்கு முன் இருந்த அரசாங்கங்களும் தரவில்லை.       (மேலும்)  20.06.2018

_______________________________________________________________________

மெல்பனில் நடந்த "தங்கத்தாரகை" நூல்  வெளியீட்டு விழா

இரண்டு  நூற்றாண்டுகளையும் கடந்து இலங்கை தெல்லிப்பழையில் இயங்கிவரும் யூனியன் கல்லூரியின் தோற்றத்தையும் வளர்ச்சியையும், தமிழ் சமூகத்தில்  இக்கல்லூரிtt ஏற்படுத்திய மறுமலர்ச்சியையும் ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தியிருக்கும் தங்கத்தாரகை நூல் வெளியீட்டு அரங்கு அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் இயங்கும் யூனியன் கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், மெல்பனில் அண்மையில் நடைபெற்றது.மெல்பன் தெற்கு சமூக நிலைய மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு. இராஜரட்ணம் சிவநாதன், திருமதிகள் நளாயினி தேவி பத்மநாதன், சிராணி சிவகுமார், திரு. நரேந்திரன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவை தொடக்கிவைத்தனர். கல்லூரியின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி மறைந்த அதிபர்கள், ஆசிரியர்கள், கல்லூரி நலன் விரும்பிகள் மற்றும் போர்க்காலத்தில் உயிர் நீத்த மக்களையும் நினைவுகூர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் எழுத்தாளருமான கவிஞர் அம்பிகைபாகர் இயற்றிய கல்லூரிக்கீதத்தை முன்னாள் மாணவர்கள் பாடினர்.       (மேலும்)  20.06.2018

_______________________________________________________________________

மேலும் ரூ.13.64 லட்சம் கோடி பொருள்கள் மீது கூடுதல் வரி: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை: அதிகரிக்கிறது வர்த்தகப் போர் பதற்றம்


சீனாவின் முறையற்ற' வர்த்தகக் கொள்கைகள் தொடர்ந்தால், அந்தusa china நாட்டிலிருந்து இறக்குமதியாகும் 20,000 கோடி டாலர் (சுமார் ரூ.13.64 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சீனப் பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி விதிப்புகளுக்குப் பதிலடியாக அந்த நாடும் அமெரிக்கப் பொருள் மீது வரிப்பதாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பை சீனா செயல்படுத்தினால், அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் 20,000 கோடி டாலர் மதிப்பிலான பொருள்கள் மீது கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.மேலும், இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா தனது முறையற்ற வர்த்தகக் கொள்கைகளைக் கைவிடச் செய்வதற்கான அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்' என்றார்.        (மேலும்)  20.06.2018

_______________________________________________________________________

இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த கோயில் விடுவிப்பு

வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் இன்று (19) விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இவ்வாvalikamam kovilலயத்தில் வைரவர் மடை, விசாகப் பொங்கல் இடம்பெறும் போது அன்றைய தினம் மட்டும் மக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதித்திருந்தனர். இந்நிலையில் ஆலயக்குருக்கள், ஆலய நிர்வாகத்தினர் ஆகியோர் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியிடம் இக்கோயிலினை விடுவித்து தருமாறு கோரியிருந்தார். இதன்படி இக்கோயில் இன்று (19) விடுவிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை நேற்று (18) (ஜே / 254) பலாலி வடக்கில் 17 ஏக்கரும், (ஜே. 245) வசாவிளான் மேற்குப் பகுதியில் 12 ஏக்கரும், (ஜே/ 249) தையிட்டி வடக்கு பகுதியில் 9 ஏக்கரும், (ஜே/ 244) வசாவிளான் கிழக்குப் பிரதேசத்தில் 10 ஏக்கரும், (ஜே/ 252) பலாலி தெற்கு கிராம சேவகர் பிரிவில் 13.5 ஏக்கரும் மற்றும் (ஜே/ 250) கிராம சேவகர் தையிட்டியில் 8.5 ஏக்கர் உள்ளடங்களாக சுமார் 60 ஏக்கர் மக்களின் காணிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டன. இப்பகுதியில் இராணுவத்தினர் முகாம்களையும், முட்கம்பி வேலிகளையும் அகற்றி வருவதால் நாளை அல்லது நாளை மறுதினம் மக்கள் காணிகளுக்குள் செல்ல முடியும் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.  மேலும் ஆதிமயிலிட்டி பூதவராயர் கோயில் பாதையையும் நேற்று முன்தினம் படையினர் விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபா வரையில் அதிகரிக்கலாம்

அரசாங்கத்தினால் சிங்கப்பூர் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபா வரையில் அதிகரிக்கலாம் என பாராளுமன்sl rupeeற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (19) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் ஆட்சியமைக்கும் போது டொலரின் பெறுமதி 105 ரூபாவாக இருந்ததாகவும், 2014 ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் ஆட்சியமைக்கும் போது டொலரின் பெறுமதி 131 ரூபாவாக இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாடு பல்வேறு சிக்கலுக்கு மத்தியிலும் ரூபாயின் குறைந்த பட்ச பெறுமதி நூற்றுக்கு 1.98 என்ற பெறுமதியில் இருந்ததுடன் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 வருட காலப்பகுதிக்குள் ரூபாயின் குறைந்த பட்ச பெறுமதி நூற்றுக்கு 6.5 ஆக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தற்போது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இன்று காலை வர்த்தக வங்கிகளில் டொலருக்கான பெறுமதி 162.30 ஆக காட்டியுள்ளதாகவும், அது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்றதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

_______________________________________________________________________

கொக்கட்டிச்சோலையில் மனைவியை வெட்டிக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பகுதியில் தனது மனைவியை வெட்டிக்கொலை செய்த ஒருவருக்கு இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.கடந்த 2009 ஆம் ஆண்டில் கொக்கட்டிச்சோலை பகுதியில் 8 மாத கர்ப்பிணியான தனது மனைவியை கொலை செய்த குறித்த நபர் கொலையை மறைப்பதற்காக கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த நபரே குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டது.கடந்த 2013 ஆம் ஆண்டில் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது.இதன்போது அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதால், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம். இஸர்டீன் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

_______________________________________________________________________

நூல் நயப்புரை:

முருகபூபதியின் சொல்ல மறந்த கதைகள்

வாழ்வின் அபூர்வமான தருணங்களையும் கவனத்திற்குள்ளான மனிதர்களையும் சித்திரிக்கும் புனைவுசாராத இலக்கியம்

                                 நவஜோதி ஜோகரட்னம் - லண்டன்.

லெ. முருகபூபதி சிறுகதைக்காகவும், நாவலுக்காகவும், பயSollamaranthakathaikalண இலக்கியத்திற்காகவும், பத்தி எழுத்துக்களுக்காகவும் நன்கு அறியப்பட்டவர் ஆவார். நீர்கொழும்பைச் சேர்ந்த இந்த எழுத்தாளர் இரண்டு முறை தேசிய சாகித்திய விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர். அவரது  புனைவு சாராத பத்தி எழுத்துக்களின் தொகுப்பு அண்மையில் படிக்கக் கிடைத்தது.    ‘சொல்ல மறந்த கதைகள்’ என்ற தலைப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியாகியிருக்கும்  இந்த நூல் முருகபூபதியின் மனதிற்குள் கொட்டிக் குவிந்திருக்கும் மகத்தான அனுபவங்களைப் பேசுகிறது. ஒவ்வொருவர் வாழ்விலும் ஏராளமான சொல்ல மறந்த கதைகள், சொல்லப் பயந்த கதைகள், சொல்ல மறுத்த கதைகள், சொல்ல வேண்டிய கதைகள் நெருடிக்கொண்டுதான் இருக்குமென்று கூறுகிறார் முருகபூபதி.தமிழ் நாட்டில் யுகமாயினி இதழிலும், அவுஸ்திரேலியாவில் உதயம் இதழிலும், தேனீ இணையத்தளத்திலும், அவுஸ்திரேலியாவில் தமிழ்முரசு இணையத்தளத்திலும், கனடா பதிவுகள் இணையத்தளத்திலும், நடேசனின் வலைப்பதிவிலும் பதிவேற்றிய தன் எழுத்துக்களை முருகபூபதி இந்த நூலிலே தொகுத்துத் தருகிறார்.        (மேலும்)  19.06.2018

_______________________________________________________________________

சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டத்தின் பிரதான பொறுப்பு என்னிடமே வழங்கப்பட்டுள்ளது.

- ஜனாதிபதி

சமூகத்தில் பரவியுள்ள சகலவிதமான சீரழிவுகளிலிருந்தும் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் என்ற வகையில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு srisena-kilinochchiவருவதுடன் அதற்காக சகல தரப்பினரும் நிபந்தனையற்ற பங்களிப்பினை வழங்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்."சிறுவர்களை பாதுகாப்போம்" தேசிய செயற்றிட்டம் இன்று கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,“சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்வதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அநேகமான நிகழ்வுகளில் ஜனாதிபதியின் உரை இறுதியாகவே அமையும். ஆயினும் இன்று நான் முதலாவதாக உரையாற்றப் போகின்றேன். ஏனெனில் “சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டத்தின் பிரதான பொறுப்பு என்னிடமே வழங்கப்பட்டுள்ளது.     (மேலும்)  19.06.2018

_______________________________________________________________________

கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் மீது தாக்குதல்; சந்தேகநபர்களின் மறியல் நீடிப்பு


கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும், எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. கொக்குவில் இந்துக் கல்லூரின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு பொறுப்பாசிரியரும் உயர்தர கணித பாட ஆசிரியருமான நாடராஜா பிரதீபன் (வயது -41), கடந்த 6ஆம் திகதி பாடசாலைக்கு அண்மையில் வைத்து தாக்கப்பட்டார்.  இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்றே, அவர் மீது தாக்குதலை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் வழங்கிய தகவலின் அடிப்படையில், இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் பின்னர், அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரும் 18ஆம் திகதி (இன்று) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இதையடுத்து, சந்தேகநபர்கள் இன்று (18) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தாக்குதலுக்குள்ளான ஆசிரியரைமன்றில் முன்னிலையாகுமாறு கட்டளையிட்ட நீதிவான் சி.சதீஸ்தரன், வழக்கை பிற்பகல் வரை ஒத்திவைத்தார்.       (மேலும்)  19.06.2018

_______________________________________________________________________

பாசமிகு தலைவன் நேசமிகு ஆசான்

1990ஜுன் 19ம் நாள் எப்போதும் எமது நினைவுகளில் நிலைத்திருக்கnabaும். எமது மக்களுக்கும் கட்சிக்கும் ஏற்பட்ட பேரிழப்பினைக் குறிக்கும் நாள் அந்நாள். 1990 ஜுன் 19 தோழர் பத்பநாபா அவர்கள்  புலிகளால் படுகொலை செய்யப்பட்ட நாள்.தோழர் பத்மநாபா சிறந்த மனிதர், ஆளுமை மிக்க தலைவர், அன்பு நிறை தோழர். வரலாற்றின் ஏடுகள் கறை படுத்தப்பட்ட அந்த கருப்பு நாளில் எமது இதயங்களை சோகத்தால் நிறைத்த அந்தக் கோரச் சம்பவம் நிகழ்ந்த அந்த நிமிடங்களில், தன்னோடு இருந்த சக தோழர்களின் முன்னணியில் காப்பரணாக நின்று பாசிசப்புலிகளின் முதற் குண்டுமாரியைத் தன்நெஞ்சிலே ஏற்று, சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டு, அவர் மரணித்த பொழுது அந்த மரணத்திலும் அவரது ஆளுமையே வெளிப்பட்டது. ஆம்... தோழர் நாபா அவர்களின் ஆளுமை, சகலரையும் கவர்ந்திழுக்கும் சிறப்பியல்புகள் மற்றும் தலைமைத்துவத் தனிப்பெரும் பண்புகளை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் மற்றும் ஈழத்தமிழர் சமூகக் கட்டமைப்புக்குள்ளேயே சுரண்டலுக்கெதிராகவும், சாதீய ஒடுக்கு முறைகளுக்கெதிராகவும் நடைபெற்றுவரும் வர்க்கப் பேராட்டம்,        (மேலும்)  19.06.2018

_______________________________________________________________________

தெல்லிப்பளை மோதல் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

தெல்லிப்பளை, மல்லாகம் சந்தியில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை அடுத்து, பொலிஸார் நேற்று (17) நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 33 வயதுடைய பாக்கியராஜthellipalai kovil1ா சுதர்சன் என்பவர் உயிரிழந்தார்.  இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் நிலமையை கட்டுப்படுத்த, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் போடப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றனர்.சகாய மாதா ஆலயத்தின் பெருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஆலயத்தின் முன்பாக நேற்று (17) மாலை வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.      (மேலும்)  19.06.2018

_______________________________________________________________________

ஹட்டன் பகுதியில் அரச பேருந்துகள் சிறுபான்மை மாணவர்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை பேருந்து பருவச்சீட்டை கொண்டுச் சென்றctbbus மாணவர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டமை தொடர்பில், அம்பேகமுவ பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.  அம்பேகமுவ பிரதேச ஒரங்கிணைப்பு குழு கூட்டம் இன்று அம்பேகமுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் இணைத்தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ், கே.கே.பியதாச மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.   இதன்போது, பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் மூலமாக வழங்கப்படுகின்ற மாதாந்த அனுமதி பத்திரத்தை ஞாயிற்றுகிழமைகளில் பயன்படுத்தியமைக்காக பாடசாலை மாணவர் ஒருவருக்கு 490 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளமை பிழையான ஒரு செயற்பாடாகும் ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.        (மேலும்)  19.06.2018

_______________________________________________________________________

தேரர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இருவருக்கும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியல்

வணக்கத்துக்குரிய கோபாவக தம்மிந்த தேரர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட இருவர் ​நேற்று (17) கதிர்காமம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர்.குறித்த இருவரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதேவேளை, கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அசோல சம்பத் மற்றும் ஏனைய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த 60 ஏக்கர் காணி விடுவிப்பு

 25 வருடங்களுக்கும் மேலாக சொந்த மண்ணில் கால் தடம் பதிக்க முடியாமல் ஏங்கிய வலிகாமம் வடக்கின் பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இன்று தமது காணிகளுக்குள் பிரvalikamam mlவேசித்தனர்.இந்த மக்களுக்கு சொந்தமான சுமார் 60 ஏக்கர் காணிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேறியதை அடுத்து அவர்களுக்கு இந்த வாய்ப்புக் கிட்டியது.வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்வாங்கப்பட்டிருந்த மக்களின் காணிகளே இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள பலாலி வடக்கு , வசாவிளான் தெற்கு , வசாவிளான், ஒட்டகப்புலவு மற்றும் மயிலிட்டிதுறை ஆகிய கிராமங்கள் இன்று விடுவிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார்இந்த கிராமங்களில் பாதுகாப்பு படையினரால் அமைக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிகளும் இன்று முற்பகல் அகற்றப்பட்டுள்ளன.இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ சோதனைச் சாவடிகள் மற்றும் காவலரண்கள் என்பனவும் இன்று முற்பகல் அகற்றப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.1990 ஆம் ஆண்டு சொந்த இடங்களிலிருந்து வெளியேறிய இந்த மக்கள் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வசித்து வந்தனர்.

_______________________________________________________________________

ரஷியா மீதான பொருளாதார தடைகள் நீட்டிப்பு

உக்ரைனின் அங்கமாக இருந்த கிரைமியா பகுதியை ரஷியா இணைத்துக் கொண்டதற்காக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய யூனியன் மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற அந்த நாட்டு அரசுக்கும், ரஷிய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2014-ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போர் வெடித்தது. அப்போது, ரஷிய மொழி பேசுவோர் பெரும்பான்மையாக வசிக்கும் கிரைமியா பகுதிக்கு படைகளை அனுப்பிய ரஷியா, பொதுவாக்கெடுப்புக்குப் பிறகு அந்தப் பகுதியை தன்னுடன் இணைத்துக் கொண்டது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஐரோப்பிய யூனியன், சுற்றுலா, முதலீடு போன்ற பல்வேறு துறைகளில் ரஷியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விதித்தது.

 

கிழக்கிலங்கை   எழுத்தூழியக்காரர்கள்: (01)

ரயில் பயணங்களில் படைப்பு இலக்கியம் எழுதிய"அமிர்தகழியான்" செ. குணரத்தினம்

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை இயற்றியவர்

                                        முருகபூபதி

எழுத்தாளர்கள் எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் நேரம் தேடுபவர்கள். விமானம், s.kunaratnamரயில், பஸ் பயணங்களில் வாசிக்க முடியும். எழுதவும் முடியுமா? தற்காலத்தில் கணினி யுகத்தில் பயணித்துக்கொண்டே தம்வசமிருக்கும் மடிக்கணினியில் அல்லது ஸ்மார்ட் போனில் எழுதமுடியும்.இத்தகைய வசதிகள் இல்லாத அக்காலத்தில் நம்மத்தியில் ஒரு எழுத்தாளர் மட்டக்களப்பு - கொழும்பு இரயில் மார்க்கத்தில் பயணிக்கும் வேளைகளிலும் ரயிலிலிருந்தவாறே படைப்பிலக்கியம் படைத்திருக்கிறார் எனச்சொன்னால் நீங்கள் நம்பத்தான் வேண்டும்.அவர்தான் அமிர்தகழியான் என்ற புனைபெயருடன் வாழும் மட்டக்களப்பு எழுத்தாளர் செ. குணரத்தினம். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்காக கிழக்கிலங்கையிலிருந்து செழுமை சேர்த்தவர்தான் இந்த அமிர்தகழியான்.       (மேலும்)  18.06.2018

_______________________________________________________________________

ஃபேஸ்புக்கின் எதிர்காலம் என்ன ஆகும்?

- பி.பி.சி


இண்டியானா பல்கலைக்கழகத்தில் 2004ல் இளம் மாணவனாக படித்துக்கொண்டிருந்த போதுதான் என் வயதை ஒத்தவர்களுக்கு என ஒரு வலைத்தளம் வந்துள்ள தகவலை முதன்முதfc1லாக அறிந்தேன். அப்போதெல்லாம் ஏஓஎல் இன்ஸ்டன்ட் மெசஞ்சரில் நண்பர்களுடன் பேசுவதுதான் என் பொழுதுபோக்கு.ஃபேஸ்புக் பற்றி தெரியுமா...அதில் இணைந்திருக்கிறாயா....அது கல்லூரி இளைஞர்களுக்கான புதிய தளம் என நண்பர்கள் கூறினர்.இந்நிலையில் கால இயந்திரத்தை சற்றே முன் நோக்கி ஏப்ரல் 2018க்கு ஓட்டி வந்து பார்க்கிறேன். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தனது ஃபேஸ்புக் தளம் குறித்து பதில் அளித்து திருப்தி ஏற்படுத்த முயன்றார் அந்நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க். மாணவர்கள் தொடர்பு கொள்ள என ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம்தற்போது மேற்கத்திய ஜனநாயக நாட்டு அரசுகளின் நிலைத்தன்மைக்கு ஒரு சவாலாக மாறிவிட்டது என்ற அச்ச உணர்வை போக்க அவர் போராடினார்.       (மேலும்)  18.06.2018

_______________________________________________________________________

ஜெர்மனி அதிர்ச்சித் தோல்வி


கோலை தடுக்கும் முயற்சியில் தோல்வியடைந்த ஜெர்மனி கோல் கீப்பர்.

நடப்புச் சாம்பியன் ஜெர்மனி 0-1 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவிworldcupடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
குரூப் எஃப் பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்புச் சாம்பியன் ஜெர்மனிக்கும், அனுபவம் வாய்ந்த மெக்ஸிகோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மாஸ்கோ லுஷ்னிக் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.4 முறை சாம்பியனான ஜெர்மனி தற்போது 5-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் பல்வேறு நட்சத்திர வீரர்களைக் கொண்ட வலுவான அணியை களமிறக்கி உள்ளது. அதே நேரத்தில் மெக்ஸிகோ அணி ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்டதாக விளங்குகிறது. உலகக் கோப்பையில் மூன்று முறை ஜெர்மனியுடன் மோதியுளள மெக்ஸிகோ அனைத்திலும் தோல்வியே அடைந்தது.துவக்கம் முதலே இரு அணி வீரர்களும் ஆட்டத்தை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு செல்ல தீவிரமாக முயற்சித்தனர். இரு தரப்பினரும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டபோதும் கோலடிக்க முடியவில்லை.     (மேலும்)  18.06.2018

_______________________________________________________________________

சாதாரண தரம் 6 பாடங்களாக குறைக்கப்படும் - அனைவருக்கும் உயர்தரம் கற்கும் வாய்ப்பு

தேசிய கல்வி நிறுவனத்தின் ஊடாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் உள்ள 9 பாடங்களை 6 பாடங்களாக குறைக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.மொனராகல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அடுத்த வருடம் முதல் சாதாரண தர பரீட்சையில் மாணவர்கள் 9 பாடங்களிலும் நூன சித்தி பெற மாட்டார்கள் என்றும் அதனால் உயர்தர கல்வியை தொடர அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும், எதிர்காலத்தில் தொழில் ரீதியான கற்கை நெறிகளுக்காக 26 பாடங்கள் பாட திட்டங்களில் உள்வாங்கப்பட உள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

_______________________________________________________________________

சே குவேராவின் 90வது பிறந்த தினம்    (14.06.1928)

(3)

அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலாகப் பேட்டி

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதி யாக, ஒற்றை மனிதனாகத் தன்னால் வேரறுக்க முடியும் என ‘சே’ திடமாக நம்பினார்.. கியூபாவுக்கு ஏவுகணைche12கள் இறக்குமதி செய்ய ரஷ்யா வாக்குறுதி தந்தபோது, ‘‘ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும்’’ எனத் தைரியமாகக் குரல் கொடுத்தார். அமெரிக்கா, கியூபாவின் மீது விதித்த பொருளாதாரத் தடைதான் அவரது இந்தக் கட்டற்ற கோபத்துக்குக் காரணம். அமெரிக்காவின் சி.பி.என். தொலைக்காட்சி, ஒரு நேர்காணலுக்காக சேகுவேராவை நியூயார்க்குக்கு அழைத் தது. ‘‘அமெரிக்கா ஒரு கழுதைப் புலி. அதன் ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப் பேன்’’ என அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலாகப் பேட்டி தந்தார் ‘சே’. சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.இந்நிலையில் காங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. மூன்று மாத  கியூபா அரசால் அங்கீகரிக்கப்படாத பயணத்துக்குப் பிறகு, ‘சே’ 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார்       (மேலும்)  18.06.2018

_______________________________________________________________________

சிறுவர்களைப் பாதுகாப்போம்' தேசிய செயற்திட்டம் நாளை கிளிநொச்சியில்...

'சிறுவர்களைப் பாதுகாப்போம்' தேசிய செயற்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட மாநாடு நாளை ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்maitjiripala Sதில் நடைப்பெறவுள்ளது.தேசத்தின் உயிர்நாடிகளான சிறுவர்களைப் பாதுகாத்து, அவர்களது உள, உடல் விருத்திக்கு சிறந்த சூழலைக் கட்டியெழுப்பும் நோக்குடன் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.சிறுவர் சமுதாயத்திற்கு பாதுகாப்பு வழங்கி, சமூகத்தில் அவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறந்த சூழலை உருவாக்குவதே அதன் நோக்கமாகவுள்ளது.துஷ்பிரயோகங்களைத் தடுத்தல், பாதுகாப்பை உறுதி செய்தல், சுகாதார போசணை, ஆளுமை விருத்தி, கல்வி மற்றும் வாழ்க்கைத் திறனை மேம்படுத்தல் ஆகிய துறைகளினூடாக நாடளாவிய ரீதியில் இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகின்றது.இதேவேளை, 'பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்' எனும் தேசிய நிகழ்வு இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய நாட்டில் நிலவும் வறட்சி மற்றும் நீர் முகாமைத்துவத்தினை பாதுகாக்கும் நோக்குடன், சுற்று சூழல் பாதுகாப்பு விசேட வேலைத்திட்டமாக குறித்த தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

_______________________________________________________________________

பெயர் சர்ச்சைக்கு முடிவு: மேசிடோனியா, கிரீஸ் வரலாற்று ஒப்பந்தம்

ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் மேசிடோனியா பிரதமர் ழ்ஸாரான் ஸயேவ் (இடது) மற்றும் கிரீஸ் பிரதமர் அலெக்ஸிஸ் சைப்ரஸ்.mazadonia

மேசிடோனியா நாட்டின் பெயரில் மாற்றத்தை ஏற்படுத்தும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம், அந்த நாட்டுக்கும், அண்டை நாடான கிரீஸன்க்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தானது.யூகோஸ்லாவியாவின் அங்கமாக இருந்து வந்த மேசிடோனியோ குடியரசு, கடந்த 1991-ஆம் ஆண்டில் அந்த நாட்டிடமிருந்து அமைதியான முறையில் பிரிந்து தனி நாடாக அறிவித்துக் கொண்டது.  எனினும், மேசிடோனியா என்ற பெயருக்கு சொந்தம் கொண்டாடி வரும் அண்டை நாடான கிரீஸ், அந்தப் பெயரைப் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தது.இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே 27 ஆண்டுகளாகசச்சரவு நீடித்து வந்தது.இந்த நிலையில், இந்த பெயர் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், கிரீஸ் பிரதமர் அலெக்ஸிஸ் சைப்ரஸன்க்கும், மேசிடோனியா பிரதமர் ழ்ஸாரான் ஸயேவுக்கும் இடையே கிரீஸிலுள்ள எல்லை கிராமமான சாரடெஸில் ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இதுவரை "மேசிடோனியா குடியரசு' என்றழைக்கப்பட்டு வந்த அந்த நாடு, "வடக்கு மேசிடோனியா' என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.      (மேலும்)  18.06.2018

_______________________________________________________________________

பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி

தெல்லிப்பளை, மல்லாகம் சந்தியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 33 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தினால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.பொது மக்கள் வீதிகளை மறித்து போராட்டம் மேற்கொள்வதனால் அந்தப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  யாழ். மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜா சுதர்சன் என்ற 33 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சகாய மாதா ஆலயத்தின் பெருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஆலயத்தின் முன்பாக இன்று (17) மாலை சுமார் 6.30 மணியளவில் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றதுள்ளது.அந்த சம்பவத்தினைக் கட்டுப்படுத்த முற்பட்ட போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு நபர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

_______________________________________________________________________

தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் நிறைவு

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் முன்னெடுத்த போராட்டம் முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரன் வழங்கிய உறுதி மொழியை அடுத்து சற்று முன்னர் நிறைவுக்கு வந்ததுள்ளது.மாலை 4 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன் போராட்டம் நடத்திய பேருந்து உரிமையாளர்கள் சாரதிகள், நடத்துனர்களை சந்தித்த முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரன், "உங்களது பிரச்சினைகளை விளங்கி கொண்டுள்ளோம், எமக்கு உடனடியாக தீர்வு தர முடியாது. எனவே எமக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கி பொது மக்களின் நலன் கருதி சேவைகளை முன்னெடுக்குமாறும் இரண்டு வாரத்துக்குள் உங்களது பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும்" என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் இன்று (17) கைவிடப்பட்டது.இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த, முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர், குறித்த உறுதி மொழிக்கு அமைய போராட்டம் நிறுத்தப்பட்டதாகவும் தமது சேவைகள் நாளை முதல் வழமை போன்று இடம்பெறும் என்றும் தமது போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.தொடர்ந்து இரண்டு வாரங்களுள் தீர்வு இல்லையேல் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெடி கொளுத்தி ஆரவாரத்தில் ஈடுபட்டதோடு போராட்டத்தை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

பிரமுகர் அரசியல்: அரசியல் வறட்சி

      கருணாகரன்

இது படைத்துறை அதிகாரிகள் கோலோச்சுகிற காலம் போலிருக்கு. கடந்த வாரம், சிவில் பாதுகாப்புத் திணைக்கள (Civil security departmen) அதிகாரி கேர்ணல் ரட்ணப்பிரிய பண்டு (Colonel Rathnapriya Bhandu) வுக்கு கிளிநொச்சியில், சிவில் பாRatnapiriyaதுகாப்புத் திணைக்களத்தில் பணியாற்றியோர் திரண்டு, உருக்கமான முறையில்  பிரியாவிடை செய்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி எல்லாத் திசைகளையும் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.போர் நடைபெற்ற பிரதேசமொன்றில் – குறிப்பாகப் புலிகளின் நிர்வாக மைய நகரமான கிளிநொச்சியில், போரினால் பாதிக்கப்பட்டோரிடத்திலிருந்து படை அதிகாரி ஒருவருக்கு இப்படியொரு உருக்கமான பிரிவுபசாரமா? என்ற கேள்வி எல்லாத் தரப்புகளிடத்திலும் எழுந்திருக்கிறது. உள் நாட்டில் மட்டுமல்ல, தமிழ்த் தரப்பு, சர்வதேச சமூகம், மனித உரிமை அமைப்புகள் எனப் பல இடங்களிலும்தான். அரசாங்கத்துக்கே இது ஆச்சரியமானதொரு நிகழ்வு.       (மேலும்)  17.06..2018

_______________________________________________________________________

நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 06

பிரேமதாஸாவுக்கு  மகாத்மா காந்தியின் கொழும்பு சொற்பொழிவைத்   தேடித்தந்த  நவசோதி!

                                                                  ரஸஞானி

முகத்தில் துவாரம் வந்தால் அவலட்சணமாயிருக்கும்! ஓடும் கங்கையில்  துவாரம் வந்தால் எழிலாயிருக்கும். அந்த இயற்கை எழிலைத்தான் இலங்கையில் கொழும்பு முகத்துவாரத்திலும் மட்டக்களப்பு முகத்துவாரத்திலும் நாம்  காண்கின்றோம்.kelani      நதி எங்கே போகிறது? கடலைத் தேடி ! நாளெங்கே போகிறது?  இரவைத் தேடி! நிலவெங்கே போகிறது? மலரைத் தேடி! நினைவெங்கே போகிறது?  உறவைத் தேடி!  என்று கவியரசர் இயற்றினார்.  காதலி கேள்வி கேட்க, காதலன் பதில் சொல்லும் பாடல். இதில் நதியா, கடலா? காதலன்! அல்லது கடலா நதியா? காதலி! திரைப்படத்தில் பெண்தான் முதலில் நதி எங்கே போகிறது? எனக்கேட்பாள்! அப்படியாயின் அவள்தான் நதியா? அல்லது காதலன் யாரைத்தேடிப்போகிறான் என்பதை அறிவதற்கு அவனைத்தான்  நதி என்று அவள் உவமிக்கிறாளா?வாசகர்களே என்ன தலைசுற்றுகிறதா? விளக்கம் கேட்பதற்கும் கவியரசர் இல்லை.       (மேலும்)  17.06..2018

_______________________________________________________________________

இலங்கை தமிழரசுக் கட்சியை புனரமைக்க நடவடிக்கை!

இலங்கை தமிழரசுக் கட்சியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.நடந்து முடிந்த உsamள்ளூராட்சி சபை தேர்தலின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியில் சரிவு நிலை ஏற்பட்டிருந்தது.இது தொடர்பாக அந்த கட்சியினால் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் கட்சியை புனரமைப்பு செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (16) நடைபெற்றது.இந்த கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கட்சிக் கிளைகள் அமைக்கப்பட்டு இலங்கை தமிழரசுக் கட்சியை பலப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

_______________________________________________________________________

ரூ.3.4 லட்சம் கோடி அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி: டிரம்ப்பின் அதிரடிக்கு சீனா பதிலடி

5,000 கோடி டாலர் மதிப்பிலான சீனப் பொருள்களுக்கு 25 சதவீதம் கtaxூடுதல் வரி விதிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அறிவிப்புக்கு பதிலடியாக, அதே மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிப் பொருள்களுக்கு சீனாவும் கூடுதல் வரி விதித்துள்ளது. இதுகுறித்து சீன அரசுச் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்ததாவது:அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 5,000 டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.3.4 லட்சம் கோடி) 659 பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.கூடுதல் வரி விதிக்கப்படும் பொருள்களின் பட்டியலையும் அரசு வெளியிட்டுள்ளது.3,400 டாலர் மதிப்பிலான விவசாயப் பொருள்கள், வாகனங்கள் உள்ளிட்ட 545 பொருள்கள் மீதான கூடுதல் வரி விதிப்பு வரும் ஜூலை மாதம் 6-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.ரசாயனப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற 114 பொருள்கள் மீதான வரி விதிப்பு அமலுக்கு வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.சீனா மற்றும் சர்வதேச வர்த்தக விதிமுறைகளுக்கு உள்பட்டே இந்த கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது       (மேலும்)  17.06..2018.

_______________________________________________________________________

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

இன நல்லிணக்கம் தொடர்பான இலக்கிய கருத்தாடல்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில், எதிர்வATLAS Logo02ரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி ( 08-07-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரையில் மெல்பனில் வேர்மண் தெற்கு சமூகமண்டபத்தில் ( Karobran Drive, Vermont South, Victoria 3133)  இன நல்லிணக்கம் தொடர்பான இலக்கிய கருத்தாடல் நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், மேற்கு அவுஸ்திரேலியா மேடொக் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை விரிவுரையாளரும் எழுத்தாளரும் ஆய்வாளருமான கலாநிதி அமீர் அலி அவர்கள் " தமிழ் - முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம் - எழுத்தாளர்களின் பங்களிப்பும் பணிகளும்" என்னும் தொனிப்பொருளில் உரையாற்றுவார்.இந்நிகழ்வில் கலந்துகொண்டு சமூகங்களிடையில்  ஏற்படுத்தப்படவேண்டிய நல்லிணக்கம் தொடர்பான  கருத்துக்களை தெரிவிக்குமாறு  அன்பர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

அன்புடன்

செயற்குழுவினர் - அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம். atlas25012016@gmail.com

_______________________________________________________________________

 

தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்த இளைஞனுக்கு 30 இலட்சம் ரூபா நஷ்டஈடு


கடந்த 8 ஆம் திகதி தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த கிளிநொச்சி இளைஞனுக்கு 30 இலட்சம் ரூபாவினை ஒப்பந்த நிறுவனங்கள் நஷ்ட ஈடாக வழங்கியுள்ளtamaraiன.தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுப்பட்டிருந்து கிளிநொச்சி, அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் நிதர்சன் எனும் மாணவன் கடந்த 8 ஆம் திகதி தாமரை கோபுரத்தின் 16 வது மாடியில் மின் தூக்கி பொருத்துவதற்காக விடப்பட்டிருந்து பகுதிக்குள் சென்று கீழே வீழ்ந்ததில் உயிரிழந்தார்.சீனா மற்றும் இலங்கையை சேர்ந்த இரண்டு ஒப்பதந்த நிறுவனங்கள் தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றன.எனவே, உயிரிழந்த இளைஞனுக்கு குறித்த நிறுவனங்கள் இணைந்து காப்புறுதி பணம் மற்றும் நிறுவன பங்களிப்பு பணம் என 30 இலட்சம் ரூபாவினை வழங்கியுள்ளனா்.குறித்த பணத்தை உயிரிழந்த நிதர்சனின் இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரன் ஆகியோரின் பெயரில் நிலையான வைப்பில், வங்கியில் வைப்புச் செய்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.நிதர்சனின் குடும்பத்தினர் யுத்தத்தின் பின்னர் மீண்டும் கிளிநொச்சியில் மீள்குடியேறிய நிலையில் இதுவரை காலமும் அரசின் நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

விசா விதிகள் தொடர்பாக புதிய முடிவு: பிரிட்டனுக்கு கல்வி கற்கச் செல்லும் இந்திய மாணவர்களுக்கு சிக்கல்


வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா அளிக்க கடைப்பிடிக்கப்படும் விதிகள் குறித்து பிரிட்டன் எடுத்துள்ள புதிய முடிவால், அந்நாட்டுக்கு கல்வி கற்கச் செல்லும் இந்திய மாணvisaவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.பிரிட்டனில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அந்நாட்டில் அதிக எண்ணிக்கையில் கல்வி பயிலும் மாணவர்களில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது.இந்நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சில திருத்தங்களுடன் கூடிய குடியேற்ற கொள்கையை அந்நாட்டு அரசு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளது. அதில் பிரிட்டன் உள்துறை தெரிவித்திருப்பதாவது:வெளிநாட்டு மாணவர்களுக்கான "டையர் 4' விசாவுக்கு குறைந்த எண்ணிக்கையில் ஆவணங்கள் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும் நாடுகள் பட்டியலில், சீனா உள்ளிட்ட 11 நாடுகள் சேர்க்கப்படுகின்றன. இந்த முடிவு வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பிரிட்டனுக்கு வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்க எளிதில் வர வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் பிரிட்டன் உள்துறை குறிப்பிட்டுள்ளது.        (மேலும்)  17.06..2018

_______________________________________________________________________

பேரறிவாளனை கருணைக் கொலை செய்யுமாறு தாயார் கோரிக்கை

சிறைத் தண்டனை அனுபவித்துவரும் தமது மகனுக்கு விடுதலை இல்லையெனில், தன்னையும், தமது மகனையும் கருணைக் கொலை செய்யுமாறு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யுமாறு கோரிய மனுவை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று நிராகரித்தார்.ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வருந்தத்தக்கது என பேரறிவாளனின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், பேரறிவாளனின் விடுதலையை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு தாம் மனு சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

_______________________________________________________________________

2020 பற்றிய சில எண்ணங்கள்

                                            எஸ்.ஐ. கீதபொன்கலன்

கடந்த வாரம் காலஞ்சென்ற மாதுலுவவே சோபித தேரரரின் 76வது பிறந்த நாளை நினைவுகூரும் விதமாக ஸ்ரீலங்கா பவுண்டேசன் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வில2020் கலந்துகொண்ட ஜனாதிபதி சிறிசேன, 2020ல் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாடு அதிகம் சிந்திக்கக்கூடாது என்று எச்சரிக்கை செய்தார். சண்டே ரைம்ஸ் (ஜூன் 03, 2018) பத்திரிகை தெரிவிப்பதின்படி, “ஜனாதிபதி வேட்பாளர்களைப்பற்றி அதிகம் பேச்சுக்கள் உள்ளன. தேர்தல்கள் அடுத்த வருட இறுதியில் நடைபெற இருக்கும்போது அதைப்பற்றி பேசுவது ஒரு குற்றமாகும். எற்கனவே ஜனாதிபதி பேட்பாளார்கள் பெயரிடப்பட்டுள்ளார்கள். இது நாட்டை உறுதியற்ற தன்மைக்கு இட்டுச்செல்லும். தேர்தலுக்கு ஒன்றரை வருடங்கள் முன்பாக தேர்தல் ஆர்வத்தை உருவாக்குவதன் மூலம் அரச அதிகாரிகள் தங்கள் வேலைகளை நிறுத்தி விடுவார்கள்” என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஒரு பெரிய தேர்தலின்பின்னர் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படும்போது அரசத்துறை ஊழியர்களின் மனப்போக்கு மாறிக்கொண்டே போகிறது என்பது உண்மைதான். இது ஸ்ரீலங்காவின் தேசிய தேர்தல்களின்போது ஏற்படும் ஒரு தவிர்க்க முடியாத பக்கவிளைவு ஆகும்.       (மேலும்)  16.06..2018

_______________________________________________________________________

சே குவேராவின் 90வது பிறந்த தினம்    (14.06.1928)

(2)

சமவுடமையின் இலச்சினை

 இலகுவாக சொல்வது என்றால் சமவுடமை (Socialism:சோசலிசம்) பொருளாதார நிர்வாகத்தில் கூடிய அரச பங்களிப்பை வலியுறுத்துகின்றது. முக்கிய துறைகள் அரசுடமையாche1க இருப்பதையும், சமத்துவத்துவை அல்லது சம வாய்ப்புக்களை நிலை நிறுத்தும் கொள்கைகளையும், பொது பொருளாதார நீரோட்டத்தின் விளிம்பில் வாழும் மக்களின் வாழ்க்கை தர உயர்வுக்கு உதவும் வழிமுறைகளையும் வலியுறுத்துகின்றது. மேலும், சோசலிச சிந்தனைகள் பொது நலம், கூட்டு செயற்பாடு ஆகிவற்றை முன்நிறுத்தி அமைகின்றன. பொதுவுடமை அல்லது கம்யூனிசம் (Communism) வர்க்கமற்ற (classless, பாகுபாடற்ற) சமுதாயத்தை அமைப்பதற்கு தேவையான கோட்பாடுகள் கொண்ட தத்துவம் ஆகும். ஏகாதிபத்திய, முதலாளித்துவ தத்துவங்களின் குறைபாடுகளுக்கான ஒரு தீர்வாகும்.    பொதுவுடமை சமூகத்தில்,உற்பத்தி மார்க்கம், உடமைகள் என்பவற்றை அரசு மக்களின் சார்பில் பொது உடமையாக வைத்திருக்கும். எதை, எப்படி உற்பத்தி செய்வது என்பதை அரசின் வல்லுனர் குழு ஒருமையப்படுத்தப்பட்ட முறையில் தீர்மானிக்கும். மக்கள் உழைத்து தமக்குரிய பொருளாதார பங்கை பெறுவர். பொதுவுடமைப் பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால், சமூகத்தின் வளங்களும், செல்வங்களும் தனிமனித முதலாளிகளிடம் முடக்கப்படுவது அறவே தவிர்க்கப்படுகிறது.        (மேலும்)  16.06..2018

_______________________________________________________________________

சீனப் பொருள்கள் மீது 25 சதவீத வரி விதித்தது அமெரிக்கா

சுமார் 5 ஆயிரம் கோடி மதிப்புள்ள சீனப் பொருள்கள் மீது அமெரிக்காவில் 25 சதவீதம் வரி விதிக்க உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.china tay    சீனா அறிவுச் சொத்துரிமை திருட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியே இந்த வரிவிதிப்புக்கு உத்தரவிட்டுள்ளது அமெரிக்கா. 800 வகையான பொருள்களை குறிவைத்து செய்யப்பட்டுள்ள இந்த வரிவிதிப்பு ஜூலை 6 முதல் செயல்பாட்டுக்கு வரும். சீனா இந்த நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கை எடுத்தால், மேலும் அதிக வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் மாளிகையில் இருந்து வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   ஆனால், இதற்குப் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா கூறிவிட்டது. இதனால், உலகின் இரண்டு பெரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகள் இடையே வணிகப் போர் மூளுமோ என்று பலரும் அஞ்சுகின்றனர்.       (மேலும்)  16.06..2018

_______________________________________________________________________

ஞானசார தேரர் தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை கருத்து..

பொதுபல சேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை, இலங்கையின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு கிடைத்த வெற்றி என்று, சர்வதேச மன்னிப்பு சபைத் தெரிவித்துள்ளது.ஊடகவியலாளர் பிரகதீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியமைக்காக, ஞானசார தேரருக்கு ஆறு மாதங்களில் கழிக்கும் வகையில் ஓராண்டு கால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இந்த தண்டனையை நேற்று அறிவித்தது.இந்த தீர்ப்பானது இலங்கையில் மனித உரிமைகள் போராட்டத்துக்காக போராடும் அனைத்து மக்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று மன்னிப்பு சபையின் தெற்காசிய பிராந்திய பிரதி பணிப்பாளர் ஓமர் வராச் தெரிவித்துள்ளார்.மேலும் நீதிக்காக போராடுகின்ற மக்களை அடக்குவதற்கு முயற்சிக்கின்றவர்களுக்கு இந்த தீர்ப்பு கடுமையான செய்தியை அனுப்பியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

_______________________________________________________________________

விடுதலைப் புலிகளின் தங்கம் தேடச் சென்றவர்கள் ஸ்கேனர் இயந்திரத்துடன் கைது

இறுதி யுத்த காலத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள தங்கத்தை தேடி எடுப்பதற்காக, ltte goldசென்ற நான்கு பேர் ஸ்கேனர் இயந்திரத்துடன், கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா, நொச்சிமோட்டைப் பிரதேசத்தில் வைத்து,  (15) காலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இவர்களை கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல் ஒன்றின் படி மேற்கொண்ட திடீர் வீதித் தடை சோதனையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த ஸ்கேனர் இயந்திரம் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியானது என்று பொலிஸார் தெரிவித்தனர்.கம்பஹா மற்றும் எம்பிலிபிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் இயந்திரமும் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன், வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

_______________________________________________________________________

நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்களை காப்பாற்றிய கடற்படை

பருத்தித்துறை கடல் பிரதேசத்தில் வழிதவறி தவித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது.மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்கு சென்ற மீனவர்களின் படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர்கள் நடுக்கடலில் தவித்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பாக கடற்படை தலைமையகத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 26 கடல் மைல் தொலைவில் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றின் மூலம் அவர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வந்ததாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.

_______________________________________________________________________

ராஜிவ் கொலை: சிறைத்தண்டனை அனுபவித்து வரும் எழுவரின் விடுதலையை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்

B  இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை Rajiv-Murder-Case-வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.இந்நிலையில், கருணை அடிப்படையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்திய உள்துறை அமைச்சின் கோரிக்கையின் பேரிலேயே குடியரசுத் தலைவர் மனுவை நிராகரித்துள்ளார்.மனிதாபிமான அடிப்படையில் குறித்த 7 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு கடந்த 4 மாதங்களில் இரண்டு தடவைகள் மத்திய உள்துறை அமைச்சிற்கு கடிதம் எழுதியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

_______________________________________________________________________

ஞானசார தேரர் மேன்முறையீடு

தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை நீக்கி, தம்மை குற்றமற்றவராக்கி விடுதலை செய்யுமாறுகோரி பொதுபலசேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேன்முறையீடு செய்துள்ளார். இதற்கான கோரிக்கை மனு, ஹோமகம மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக ஹோமகம நீதவானிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.ஞானசார தேரருக்கு 6 மாத காலத்தில் நிறைவடைகின்ற ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியமை தொடர்பில், தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்ட போது, ஞானாசரா தேரருக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.இதையடுத்து, அவர் வெலிக்கடை சிறைச்சாலையில், சிறைவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

Nithi PP

_______________________________________________________________________

200 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று பேர் கைது

வெலிசர பிரதேசத்தில் சுமார் 200 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.கைது செய்யப்பட்டவர்களில் இந்திய பிரஜை ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட 200 கிலோ கிராம் கேரளா கஞ்சாவின் பெறுமதி சுமார் 24 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

_______________________________________________________________________

என்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள்

 வடமராட்சி  வராத்துப்பளையிலிருந்து கனடா டொரன்டோ வரையில் வியாபித்து நின்ற ஈழத்தின்  மூத்த படைப்பாளி

நிலவிலிருந்து  பேசியவர்களை பனஞ்சோலைக்கிராமத்தில்  சித்திரித்த எழுத்துப்போராளி                               

-    முருகபூபதி

யாழ்ப்பாணம் அரியாலையில் செம்மணி வீதியில் சில மாதங்கள் ஒரு N.K.Ragunathanவாடகைவீட்டில் வசிக்க நேர்ந்தது. 1983 தென்னிலங்கை வன்செயல்களினால் இடம்பெயர்ந்திருந்தோம்.  இலக்கிய நண்பர்கள் மல்லிகை ஜீவா சைக்கிளிலும் கே. டானியல் தனது மோட்டார் சைக்கிளிலும் வந்து பார்த்துவிட்டுச்செல்வார்கள்.  தென்னிலங்கையில் நிலைமை படிப்படியாக சீரடைந்ததும் அரியாலையைவிட்டு புறப்படத்தயாரானோம். ஊரிலிருந்து எடுத்துவந்த பெருந்தொகையான புத்தகங்களையும் சில கதிரைகள் மேசையையும்  அயலில் ஒரு வீட்டில் ஒப்படைத்தோம். 1984 ஆம் ஆண்டு தொடக்கத்தில்  அரியாலைக்கு விடைகொடுத்துவிட்டு,  ஒருநாள் காலை புறப்படுவதற்கு தயாராகியிருந்த வேளையில்,  அதற்கு  முதல் நாள்  இரவு ஏழுமணியளவில் அவர் என்னைத்தேடி தனது சைக்கிளில் வந்தார். வந்தவரை அமரச்சொல்வதற்கும் அந்த வீட்டில் கதிரைகள் இல்லை. தரையில் ஒரு பாயைவிரித்து, " தரையிலிருந்து பேசுவோம்" என்றேன்.         (மேலும்)  15.06..2018

_______________________________________________________________________

சே குவேராவின் 90வது பிறந்த தினம்    (14.06.1928)

(1)

“சே” என்னும் புரட்சித் தீ பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்தியது இணையம் தான் பல சமயங்கள் நான் சேவின் புகைப்படத்தை இணche brandையத்தில் பார்த்திருக்கின்றேன் அது மட்டும் அல்லாமல் ஆடைகளில் மற்றும் பல பொருட்களில் அவரின் புகைப்படம்  யார் இவர் ?.   சே என்னும் புரட்சிக்காரனையும் ஒரு பிராண்ட் ஆக்கிவிட்டார்கள்!   இந்த வரலாற்று நாயகனை, வாழ்வை, அவரது போராட்ட வரலாற்றை, அவரது தாக்கத்தை தேட ஆரம்பித்தேன். அவரைப் பற்றிய புத்தகங்கள், மற்றும் ஒளிப்பதிவுகள் என தொடர்ந்த தேடலின் விளைவு இன்று “சே”வை நேசிக்கும் பல்லாயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன்.     பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான மனிதன்.சே தொடர்பான “சே வாழ்வும் புரட்சியும்” என்ற ஆவணப்படம் ஒன்றை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. “சேகுவேரா வாழ்வும் மரணமும்” என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது..வெறும் புகைப்படங்களில் மட்டுமே கண்ட சே குவேராவினை ஒளிப்பேழையில் பார்த்தேன். அனைவரையும் கவர்ந்திழுக்கும் வசீகரமான சிரிப்பு மிடுக்கான தோற்றம் இவை “சே”வின் அடையாளங்கள். உலகெங்கும் உள்ள விசிறிகள் அவரை உயர்ந்த இடத்தில் வைத்து கொண்டாடி வருகின்றார்கள       (மேலும்)  15.06..2018

_______________________________________________________________________

சர்ச்சைக்குரிய  கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு,  சிறை தண்டனை

இலங்கையின் பொதுபல சேனா என்ற அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, ஆறு மாத கால கடூழிய சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதgnaseraிமன்றம் இன்று, வியாழக்கிழமை, தீர்ப்பளித்தது.   இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு தலா ஆறு மாதம் வீதம் ஒரே நேரத்தில், இந்தத் தண்டனையை கழிக்க வேண்டும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார். காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலியகொடவின் மனைவி சந்தியா எக்நெலியகொடவிற்கு அவதூறாக பேசி, அச்சுறுத்தல் விடுத்ததாக இந்த பௌத்த பிக்கு மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. 2016ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி, ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் வைத்தே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தேரருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதவான், வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்தார்.       (மேலும்)  15.06..2018

_______________________________________________________________________

நுண் கடன் திட்டத்திற்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

நுண் கடன் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புக்களையும், குறிப்பாக பெண்கள் நுண் கடன் பொறிக்குள் சிக்கி தவிக்கும் நிலையினை தவிர்க்கும் வகையிலும் கிளி நொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.   இன்று(14) காலை 10.30 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமாகி, கிளிநொச்சி - கரடிபோக்கு சந்தியிலிருந்து பேரணியாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாற்று திட்டங்களை வங்கிகள் ஊடாக மக்களிற்கு வழங்க கோரியும் மக்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது மாவட்ட செயலகம் ஊடாக மத்திய வங்கி மற்றும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு மகஜரும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

தமிழர்களும் முஸ்லிம்களும் அரசியல் தீர்வை நோக்கி ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டும்:

நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

தமிழ் மக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்வதன்மூலமே, பெரும்பhakkeem1ான்மை சமூகத்துடன் நல்லுறவைப் பேணிவரும் அதேவேளை தமிழ்பேசும் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் தங்களது அரசியல் அபிலாஷைகளை வெற்றிகொள்ள முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.   ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,   தமிழ் மொழி பேசுபவர்கள் என்ற அடிப்படையில், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்வதன் மூலமே ஆரோக்கியமானதொரு அரசியல் நகர்வை முன்கொண்டுசெல்ல முடியும். அண்மைக்காலமாக இரு சிறுபான்மை சமூகங்களுக்கும் இடையில் சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.       (மேலும்)  15.06..2018

_______________________________________________________________________

மன்னாரில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் இடை நிறுத்தம்

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் இன்று 14 ஆவது நாளாகவும் மன்னார் நீதவான் mannar2ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம்பெற்றது. இன்று (14) காலை 7.30 மணியளவில் ஆரம்பமான அகழ்வு பணிகள், மதியம் 12 மணி வரை இடம்பெற்ற நிலையில் குறித்த அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். அகழ்வு பணிகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யு.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ச, இன்று மதியம் 12 மணியுடன் இடை நிறுத்தப்பட்ட அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி ஆரம்பமாகும் என குறிப்பிட்டார்.  மேலும், மன்னார் நீதவான் முன்னிலையில், எனது தலைமையில் இடம்பெற்ற அகழ்வு பணிகளில், களனி பல்கலைக்கழக ஒதொல்பொருள்ஒ அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும், பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகளும், பல் நிபுணத்துவ வைத்திய அதிகாரி ஒருவரும், களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா குழுவினரும் இணைந்து செயற்பட்டதாக விசேட சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.        (மேலும்)  15.06..2018

_______________________________________________________________________

கிழக்கு பல்கலைக்கழக மாணவி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் பீட மாணவியொருவர் தூக்கிட்ட நிலையில் நேற்று இரவு மீட்கப்பட்டதாக காத்தான்குடி காவற்துறையினர் தெரிவித்தனர்.கல்லடி பல்கலைக்கழகத்தின் பின்னால் அவர் தங்கியிருந்த வீட்டினுள் அவரின் சடலம் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   வெல்லாவெளி காக்காச்சி வெட்டைக் கிராமத்தை சேர்ந்த எஸ். பானுஜா என்ற 22 வயதுடைய ஊடக பிரிவில் கல்வி கற்று வந்த மாணவியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மாணவியின் சடலம் காத்தான்குடி போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.மாணவியின் மரணத்திற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில் , காத்தான்குடி காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

_______________________________________________________________________

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று நாட்டிற்கு திருப்பியனுப்பப்பட்ட 29 பேர் விளக்கமறியலில்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற குற்றச்சாட்டில் மீண்டும் நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை பிரஜைகள் 29 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களை இன்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்று அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட 29 இலங்கையர்களுடன் விசேட விமானமொன்று நேற்று (14) நாட்டை வந்தடைந்தது. இவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குகின்றனர். நாடு கடத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

_______________________________________________________________________

போருக்குப் பிந்தைய ஸ்ரீலங்கா மற்றும் ஆயுத வர்த்தக ஒப்பந்தம்

                                    வித்யா அபேகுணவர்தன

எந்தவொரு சட்டபூர்வ அரசாங்கத்தினதும் அதி முக்கிய பொறுப்பு, அதன் சொweaponsந்த மக்களை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது, அதன் பிராந்திய நிலத்தைப் பாதுகாப்பது,சட்டம் ஒழுங்கைப் பேணுவது, அதன் சமூக பொருளாதார அந்தஸ்தை முன்னேற்றுவது, அதன் இயற்கைச் சூழல் மற்றும் வரலாற்று மற்றும் வேறு தேசிய மதிப்புவாய்ந்த நலன்களை பாதுகாப்பதும் மற்றும் உலக சமாதானத்துக்கு தனது ஆதரவினை வழங்குதும் ஆகும். இவை அனைத்தையும் கொண்டிருப்பதற்கு அந்த அரசாங்கங்கள் சில குறிப்பிட்ட ஆயுதங்களுடன் கூடிய இராணுவம் மற்றும் காவல்துறையை வைத்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய ஆயுதங்கள் வெளிப்படையானதும் மற்றும் பொறுப்பானதுமான முறையில் உற்பத்தி செய்யவேண்டும் அல்லது மற்றைய நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். வெளிப்படையானதும் மற்றும் பொறுப்பானதுமான ஆயுத வர்த்தகம் தேசத்தின் பல காயங்களைக் குணப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.  ஆனால் எத்தனை அரசாங்கங்கள் வெளிப்படையானதும் மற்றும் பொறுப்பானதுமான ஆயுத வர்த்தகத்தில் சட்டபூர்வமாக ஈடுபட்டுள்ளன என்பதுதான் கேள்வி?     (மேலும்)  14.06..2018

_______________________________________________________________________

யாழில் 25 மாணவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்த பாடசாலை அதிபர்


யாழ். கொக்குவில் இந்து கல்லூரி மாணவர்கள் 25 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலை அதிபர் ஞானசம்பந்தர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவkhcு செய்துள்ளார்.யாழ். பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவில் இன்று 13ம் திகதி இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.கடந்த வாரம் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதாக கூறி மாணவர்கள் போராட்டம் நடாத்தினார்கள். அந்த போராட்டத்தின் பின்னர் மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.மாணவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து மீண்டும் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்த 25 மாணவர்கள் மீதே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த முறைப்பாட்டில், பாடசாலையின் ஒழுக்க நெறிகளை மீறி மாணவர்கள் செயற்படுவதாகவும், அவ்வாறு செயற்படும் அந்த 25 மாணவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அதிபர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.அந்த முறைப்பாட்டின் பிரகாரம், 25 மாணவர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

_______________________________________________________________________

ஜம்பது வீத  மாணியத்தில் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களை பறிமுதல் செய்ய கமநலசேவைகள் ஆணையாளர்  தீர்மானம்

மீள்குடியேற்ற காலப்பதியான 2010 மற்றும் 2012 காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 50 வீத மாணியத்தி்ல் வழங்கப்பட்டtractor இரு சக்கர உழவு இயந்திரங்களுக்கான மிகுதி  பணம் செலுத்தி முடிக்கப்படாத அனைத்து உழவு இயந்திரங்களை பறிமுதல் செய்ய கமநல ஆணையாளர்  மாவட்டங்களுக்கு பணித்துள்ளதாக மாவட்ட கமநல சேவைகள் நிலைய ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த  வகையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் 2010 மற்றும் 2012 ஆகிய காலப்பகுதியில் கடந்த அரசின் பொருளாதார அமைச்சும் யப்பான் நிறுவன் ஒன்றும் இணைந்து கிளிநொச்சியில் உள்ள எட்டு கமநல வேசவைகள் நிலையத்தால் 127 விவசாயிகளுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.ஜந்து இலட்சத்து 25 ரூபா பெறுமதியான  இரு சக்கர உழவு இயந்திரத்தை பெற்றுக்கொண்ட விவசாயி ஒருவர்  இரண்டு இலட்சத்து 50 ரூபாவினை   தவணை அடிப்படையில் செலுத்த வேண்டும்.       (மேலும்)  14.06..2018

_______________________________________________________________________

விஸ்வமடு மக்களுக்காக விமல், ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம்


தேசிய ஒற்றுமைக்கு புதிய அணுகுமுறையொன்றை பெற்று கொள்ள விஸ்வமடு மக்களின் கோரிக்கைக்கு அமைய லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்துவிற்கு மீண்டும் அதே பொறுப்பை வழங்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.விமல் வீரவங்ச, ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.இதற்கு தடையேற்படுத்தும் தனிப்பட்ட காரணங்கள் காணப்பட்டால் அது தொடர்பில் ஆராய்ந்து தீர்வை வழங்குமாறு அந்த கடிதம் ஊடாக மேலும் கோரப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு - விஸ்வமடு சிவில் பாதுகாப்பு படைப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்து, அண்மையில் அம்பேபுஸ்ஸ – சிங்க படைப்பிரிவிற்கு இடமாற்றப்பட்டார்.இந்நிலையில் அவர், விஸ்வமடு பகுதியில் இருந்து வெளியேறும் போது, மக்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

67 வருடங்களாக அறையொன்றில் வாழ்க்கையை தொலைத்த சோக சம்பவம் - மனிதாபிமானமற்ற குடும்பம்

7 வயதிலிருந்து 6 தசாப்தங்களாக பாழடைந்த அறை ஒன்றிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரை காவல் துறையினர் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் மாவவெல்ல, மொல்லிகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டிற்குள் அமைக்கப்பட்டுள்ள கூடாரம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணையே காவல் துறையினர் மீட்டுள்ளனர். உணவு, நீர் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் தொடர்பில் நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமையவே அவர் மீட்கப்பட்டுள்ளார்.   குறித்த பெண்ணை மீட்க காவல்துறையினர் சென்ற போது, அவர் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இவ்வாறு அடைக்கப்பட்ட பெண் திருமணமாகாத 74 வயதான முத்துமெனிக்கே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.        (மேலும்)  14.06..2018

_______________________________________________________________________

விகாராதிபதி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது

திர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரர் உட்பட இரண்டு தேரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.UP - CAG-8531 என்ற இலக்கமுடைய ஹொண்டா வெஸல் வகையைச் சேர்ந்த ஜீப் வண்டி ஒன்றே துப்பாக்கிச் சூட்டின் போது பயன்படுத்தப்பட்ட வாகனம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றர்.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரரும் மற்றைய தேரரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று (12) இரவு 11 மணியளவில் குறித்த வாகனத்தில் வந்த இனந் தெரியாத மூன்று நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.விகாராதிபதியின் அடிவயிற்றுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அவரின் நிலை தற்போது மோசமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், தங்காளை வலயத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

_______________________________________________________________________

 Memories Of Late K.G Amaradasa – An Ardent Tamil Literary Lover & Advocate For National Unity

By L. Murugapoopathy –

“Some might say that if a Sinhala man marries a Tamil woman or a Tamil man marries a Sinhala woman, then national unity will be born. I don’t think so. If people of different ethnic origin get marriedK.G-Amaradasa, only the children would be born as a natural consequence” quipped Ven. M Ratnavansa Thero – a Buddhist monk much loved and respected by Tamil writers and community members alike. Late K.G. Amaradasa is someone of similar calibre who also held the strong belief that national unity is not a one-way street. He is a remarkable man who learned and excelled in the Tamil literature and who pioneered the way in introducing the great Tamil national poet Mahakavi Barathiyar to the Sinhala people.Due to the introduction of the controversial Sinhala Only legislation in 1950s and the promotion of Sinhala as a compulsory subject in the curriculum, a large number of Tamils who held government positions learned Sinhala and mastered that language.  (Read)  14.06..2018

_______________________________________________________________________

இஸ்லாமியரை இந்து சமய பிரதி அமைச்சராக நியமித்தமை மோதல்களை உருவாக்கும்

இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக இஸ்லாமியர் ஒருவரை நியமித்ததால், அது தேவையற்ற மோதல்களை மட்டுமே உருவாக்கும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.மேலும், நேற்று (12) ஐந்து பிரதி அமைச்சர்களும் இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இதற்கு இந்த மத அமைப்புக்கள் உட்பட இந்து மதத்தைச் சேர்ந்த பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

மாயமான மீனவர்கள் சடலங்களாக மீட்பு

மன்னாரில் அண்மையில் காணாமல் போன மீனவர்கள் இருவரின் சடலங்கள் புங்குடுதீவு கடற்கரையில் வைத்து இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளன.ஊர்காவற்துறை காவற்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 8 ஆம் திகதி தலைமன்னார் பகுதியில் வைத்து, கடற்றொழிலுக்காக சென்ற இரு சகோதரர்கள் காணாமல் போயிருந்தனர்.32 மற்றும் 39 வயதுடைய சகோதரர்களே இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.அவர்களை தேடும்பணி தொடர்ந்து வந்தவேளையே அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

_______________________________________________________________________

வடக்கு - கிழக்கு தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி சமூகஅரசியற்தலைவர்கள் அக்கறைசெலுத்தவேண்டும்

அ .வரதராஜபெருமாள்

தமிழ் இளைஞர்கள் போதைப் பொருட்களைப் பாவிக்கிறார்கள்perumal3 - வாள்வெட்டுகுழுக்களாக செயற்படுகிறார்கள் - அவர்கள் உடலுழைப்புக்குத் தயாராக இல்லை என பலவாறாக தமிழர் சமூகஅரசியற் தலைவர்களும் தமிழ் ஊடகங்களும் அடிக்கடி குற்றம் சாட்டுவதைக் காண்கிறோம். மேலும் தமிழ் பட்டதாரி இளைஞர்கள் அரசாங்க உத்தியோகங்களைத் தவிரவேறெதற்கும் தயாராக இல்லை - இங்கு தனியார் துறைகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள் இருந்தும் தமிழர்கள் ஒழுங்காகவும் ஈடுபாட்டுடனும் வேலைசெய்வதற்கு மிகக் குறைவானவர்களே தயாராக உள்ளனர்: கட்டிடத் தொழில், மரவேலைகள், மின்சார இணைப்புவேலைகள், உலோகவேலைகள், போன்றவற்றில் திறன் வாய்ந்த உழைப்பாளர்களை தமிழர்கள் மத்தியிலிருந்து பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது என அபிப்பிராயங்கள்; இங்கு  பரவலாக உள்ளன. விவசாயக் கூலி அதிகமாக உள்ள அதேவேளை விவசாய வேலைகளுக்கான கூலித் தொழிலாளர்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது, அப்படித்தான் கிடைத்தாலும் அவர்களை முழு நேரமும் கவனிக்காவிட்டால் அவர்களிடமிருந்து உரியஅளவு வேலைகளைப் பெறமுடியாதுள்ளது என விவசாயத் துறையில் உள்ளவர்கள் குறைப்பட்டுக் கொள்வதையும், உணவுக் கடைகள், பலசரக்குக் கடைகள், புடவைக் கடைகள் என பல்வேறு வர்த்தக நிலையங்களிலும் வேலைசெய்வதற்கு ஊழியர்கள் கிடைப்பது சிரமமாக உள்ளதாகவும் அப்படிக் கிடைத்தாலும் அவர்கள் சில நாட்களுக்குள்ளேயே வேலையை விட்டு ஓடிவிடுகிறரகள் என வெவ்வேறு வர்த்தகர்கள் குறை சொல்வதையும் தமிழர் சமூகத்தில் அடிக்கடி கேட்கக் கூடியதாக உள்ளது.     (மேலும்)  12.06.2018

_______________________________________________________________________

சிங்கப்பூருடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் 64 வகையான குப்பைகளை இலங்கைக்கு கொண்டுவர வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

சிங்கப்பூருடன் இலங்கை ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதால், இலங்கையை காதால் இழுத்து சென்று எட்கா ஒப்பந்தத்தில் கையொப்பமிட வைக்க இந்தியாவுக்கு முடியுமெsamarasingheன மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.   கட்சி தலைமையகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,இலங்கை சிங்கப்பூருடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் மிகவும் விசித்திரமாக உள்ளது. இலங்கையின் பொருளாதாரம் இப்போது சிங்கப்பூரிடம் சிக்கிக்கொண்டுள்ளது.   மேலும் சிங்கப்பூருடனான ஒப்பந்தத்தினால் இலங்கை பொருளாதாரத்தின் அனைத்து வாசல்களும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வேண்டிய ஒரு நாட்டிற்கு இலங்கையின் பொருளாதாரத்திற்குள் நுழைய முடியும்.        (மேலும்)  12.06.2018

_______________________________________________________________________

டிரம்ப் - கிம் சந்திப்பு: தொடக்கம் முதல் முடிவு வரை நடந்தது என்ன?


சிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே செவ்வாய்க்கிழமை நடந்த வரலாற்று சிறப்புமிக்kim trumphக உச்சிமாநாட்டின் இறுதியில், இரு தலைவர்களும் முக்கிய உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளனர். இது உலக அளவில் மிக முக்கிய அமைதி நடவடிக்கையாக வர்ணிக்கப்படுகிறது.  டிரம்ப் - கிம் சந்திப்பு, சிங்கப்பூர் உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நடந்தது. கடந்த 18 மாதங்களாக அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஆகியோர் இடையே அசாதாரண உறவு நிலவியது. சர்வதேச நாடுகள் எச்சரிக்கை விடுத்து எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பல பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தியது. இதனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற ஒரு வருடத்திற்குள், டிரம்பிற்கும், கிம்மிற்கும் இடையே பல கசப்பான பரிமாற்றங்கள் நடைபெற்றன.       (மேலும்)  12.06.2018

_______________________________________________________________________

சபையில் தவிசாளரின் செயற்பாட்டை விமர்சித்த உறுப்பினரை வெளியேற்றிய தவிசாளர்

கரைச்சி பிரதேச சபையின் நான்காவது அமர்வு இன்று(12) தவிசாளர் அ. வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது.k1   காலை ஒன்பது முப்பது மணிக்கு ஆரம்பமான சபை அமர்வின் போது தவிசாளரின் தலைமையுரையினை தொடர்ந்து கடந்த அமர்வின் அறிக்கை தொடர்பில்  ஆராயப்பட்டது. இதன் போது எழுந்த சர்ச்சையினை தொடர்ந்து எதிர் தரப்பு உறுப்பினர் ஒருவரை  சபையிலிருந்து ஒரு மணித்தியாலயத்திற்கு வெளியேற்றி சபை மண்டபத்தின் கதவினை மூடிவிட்டார் தவிசாளர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுஅறிக்கை தொடர்பில் எதிர் தரப்பு உறுப்பினர்கள் தங்களின் கடுமையான ஆட்சேபனையை தெரிவித்தனர். கடந்த  கூட்டத்தில் தாங்கள் பேசிய  முக்கிய விடயங்கள்  பல அறிக்கையில் இடம்பெறவில்லை என்றும் , குற்றம் சாட்டிய எதிர்தரப்பு உறுப்பினர்கள் கரைச்சி பிரதேச சபையில் தவிசாளர் தொடர்ச்சியாக  சபை  செயற்பாடுகளை கட்சி சார்ந்து கொண்டு செல்கின்றார்,      (மேலும்)  12.06.2018

_______________________________________________________________________


பிரெக்ஸிட்' மசோதா வாக்கெடுப்பில் பிரிட்டன் அரசு வெற்றி

பிரெக்ஸிட்' மசோதா தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரஸா மே தலைமையிலான அரசு வெற்றி பbrexitெற்றுள்ளது.முன்னதாக, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை (பிரெக்ஸிட்), பொது வாக்கெடுப்பின் மூலம் பிரிட்டன் கடந்த 2016-இல் மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் பதவி விலகினார். பின்னர், புதிய பிரதமராக தெரஸா மே பதவியேற்றார்.இந்நிலையில், பிரெக்ஸிட்' தொடர்பான மசோதாவில், அந்நாட்டின் நாடாளுமன்ற மேலவை ஓர் திருத்தத்தை கொண்டு வந்தது. அதன் மூலம், பிரெக்ஸிட் தொடர்பான பல்வேறு முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கும் அதிகாரம், பிரதமர் தெரஸா மேவிடம் இருந்து நீக்கப்பட்டது.இந்நிலையில், இந்த திருத்தப்பட்ட மசோதா மீது கீழவையில் செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், திருத்தப்பட்ட மசோதாவுக்கு எதிராக 324 வாக்குகள் கிடைத்தன. ஆனால், மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளே கிடைத்தன. இதன் மூலம் தெரஸா மே அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து, மசோதா மீண்டும் மேலவைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

_______________________________________________________________________

1.7 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் நபர் ஒருவர் கைது

1.7 மில்லியன் ரூபா பெறுமதியான 5 தங்க பிஸ்கட்டுக்களை இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.கல்முனையை சேர்ந்த 39 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (12) அதிகாலை 2.45 மணியளவில் கட்டாரில் இருந்து இலங்கைக்கு வந்த QR 668 என்ற விமானத்திலேயே குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.சுமார் 1,749,300 ரூபாய் பெறுமதியுடைய 291.55 கிராம் எடையுள்ள தங்க பிஸ்கட்டுக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின், கைது செய்யப்பட்ட நபருக்கு 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

______________________________________________________________________

பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி கைது

பெங்களூரு: கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான பரசுராம் பெங்களூருவில் செவ்வாயன்று கைது செய்யlankeshப்பட்டார். கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், ஹிந்துத்துவா கொள்கை எதிர்ப்பாளருமான கெளரி லங்கேஷ் (55), பெங்களூரில் உள்ள அவரது வீட்டின் முன் 2017, செப்.5-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச் சம்பவம் தொடர்பான விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுப்படை அமைக்கப்பட்டது.  இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவராக ஹிந்துத்துவா செயல்பாட்டாளரும், சட்ட விரோதமாக துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டவருமான டி.நவீன்குமாரின் பெயர் குறிப்பிடப்பட்டது.  மண்டியா மாவட்டத்தின் மத்தூர் நகரைச் சேர்ந்த நவீன்குமார், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பெங்களூரில் உள்ள கெம்பே கெளடா பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது கடந்த பிப்ரவரி18-ஆம் தேதி சிறப்பு புலனாய்வுப் படையினரால் கைது செய்யப்பட்டார்.        (மேலும்)  12.06.2018

_______________________________________________________________________

காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட பிரதி அமைச்சு பொறுப்பு குறித்து சுவாமிநாதனின் கோரிக்கை

இன்று பிரதி அமைச்சராக பதவியேற்ற காதர் மஸ்தானின் அமைச்சு விடயதானங்களிலிருந்து இந்து விவகார பிரிவை நீக்குமாறு தாம் அமைச்சரவையை கோரவிருப்பதாக இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இரண்டு ராஜாங்க அமைச்சர்களும், 5 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இதன்படி, அமைச்சர் டி.எம். சுவாமிநாதனின் மீள்குடியேற்றத்துறை, புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி ஆகிய விடயதானங்களுடன் இந்துமத விவகார விடயதானத்துக்கான பிரதி அமைச்சராகவும் காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டார்.இந்து விவகார பிரதி அமைச்சராக இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் வட மாகாண சபையில் இன்றைய தினம் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.       (மேலும்)  12.06.2018

_______________________________________________________________________

வடக்கு மீனவர்களின் ஆர்ப்பாட்டம், வடக்கு - தெற்கு மோதலாக மாறலாம்

அமைச்சர் மனோ கணேசன்


வடக்கின் கடல் வளத்தை சட்ட விரோத மீன்பிடி உபகரணங்களை manoகொண்டு பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்புடன் தென்னிலங்கை மீனவர் பெருந்தொகையில் வந்து அபகரிப்பதாக கூறி வடக்கில் மீனவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்கள்.  இது உடனடியாக கவனத்தில் எடுக்கப்பட்டு தீர்வு காணப்படாவிட்டால் இந்த சிக்கல் வடக்கு - தெற்கு மோதலாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது. இதனாலேயே இதில் நான் தலையிடுகிறேன் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இன்று அமைச்சரவையில் எடுத்து கூறினார்.இதையடுத்து ஜனாதிபதி, இது தொடர்பில் மீன்பிடி துறை அமைச்சர் விஜிதமுனி சொய்சாவை, உடனடியாக சம்பந்தப்பட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் உட்பட அனைத்து தரப்புகளையும் கூட்டி கலந்துரையாடுமாறு பணித்தார்.       (மேலும்)  12.06.2018

_______________________________________________________________________

விமல் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக சீர்த்திருத்த மனு...

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சீர்த்திருத்த மனுவொன்றை தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க இன்று கருவாத்தோட்டம் காவற்துறைக்கு உத்தரவிட்டார்.ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பு பௌத்தாலோக மாவத்தையை மறித்து எதிர்ப்பில் ஈட்ட சம்பவத்துடன் தொடர்பிடைய வழங்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.குறித்த வழக்கின் ஏழாவது சந்தேகநபர் வழக்கு ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் இதுவரை நீதிமன்றில் முன்னிலையாகாததால் , அவர் இல்லாமல் வழக்கினை நடத்திச்செல்வதற்காக இவ்வாறு சீர்த்திருத்த மனுவொன்றை தாக்கல் செய்யுமாறு காவற்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

_______________________________________________________________________

கவனிக்கப்படவேண்டிய மூன்று சம்பவங்கள்

-          கருணாகரன்

வடக்கில் கடந்த இரண்டு (10.06.2018, 11.06.2018) நாட்களில் மூன்று சம்பவங்கள். மூன்றும் அரசியல் ஆச்சரியம் தரும் வகையில் முக்கியத்துவமுடையவை.err

ஒன்று, கொழும்பில் தாமரைக்கோபுரத்தின் நிர்மாணப் பணியின் போது வீழ்ந்து மரணமடைந்த கோணேஸ்வரன் நிதர்சன் என்ற மாணவரின் உடலை இறந்தவரின் வீட்டுக்கு எடுத்து வருவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நடந்து கொண்ட முறைமை தொடர்பானது.இரண்டாவது, சிவில் பாதுகாப்புப் படை அதிகாரியான கேர்ணல் W.W.ரட்ண பிரிய பண்டுவின் பிரிவுபசார நிகழ்வில் பெருந்திரளானோர் (தமிழர்கள்) கண்ணீர் மல்க விடை கொடுத்த நிகழ்ச்சி.மூன்றாவது, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தில் மக்களால் பகிரங்கமாக விரட்டப்பட்ட சம்பவம்.மூன்றும் தமிழ் அரசியல் தரப்பினரும் மக்களும் படிப்பினைகளாகக் கொள்ள வேண்டியவை.       (மேலும்)  12.06.2018

_______________________________________________________________________

சாதி ஒடுக்குமுறையும் பெக்கோ தேரிழுப்பும்

எஸ். கனகரத்தினம்

சாதி ஒடுக்குமுறையை நவீன வடிவத்தில் முன்னெடுத்துச் செல்வதில் தென்மராட்சி வாழ் சாதிமான்களும், அவர்களை மறைமுகமாக வழிநடாத்திச் செல்லும் அரசியல் வாதிகvaraniளும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளனர். அண்மையில் வரணி கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்தின் போது ஒடுக்கப்பட்ட மக்களும் வடம் பிடித்து தேரை இளுக்க முஸ்தீபு மேற்கொண்டு வருவதாக அறிந்த ஆலய நிர்வாகிகளும், சாதிமான்களும் இணைந்து இத்தகைய நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு பெக்கோ (ஜேசிபி) இயந்திரத்தின் மூலம் தேரை இளுத்துச் சென்ற செய்தி பத்திரிகைகள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளிவந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளுக்காக ஓங்கிக் குரல் கொடுக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம், சாதி வெறியர்கள் ஒருங்கிணைந்து அத்தகைய போராட்டங்களை நசுக்க முற்பட்ட வரலாறும், அதன் பின்னணியில் தமிழர் மத்தியில் ஆளுமை செலுத்தி வந்த அரசியல் சக்திகளும் தம்மை அவ்வப்போது இனங்காட்டி வந்துள்ளனர்.       (மேலும்)  12.06.2018

_______________________________________________________________________

படித்தோம் சொல்கின்றோம்:

"தங்கத்தாரகை" - தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின்  200 ஆண்டு கால வரலாறு!

வடக்கின் கல்விப்பாரம்பரியத்தை ஆவணப்படுத்தியிருக்கும் முன்னாள் அதிபர் கதிர். பாலசுந்தரம் படைப்பிலக்கியவாதியுமாவார்!

                                                                                                      முருகபூபதி

கல்லிலிருந்து கணினி வரைக்கும் பாய்ந்திருக்கும் மொழிகளில் தமிழ் தொன்மையானது. இந்தத்தொன்மையிலிருந்து உருவான பழந்தமிழ் இலக்கியம், நவீன தமிழ் kadhir Balasuntharamஇலக்கியம், என்பவற்றின் ஊடாக தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சியில்  தமிழர்களின் வேட்கையையும் புரிந்துகொள்ள முடிகிறது.ஆசியாக்கண்டத்திலேயே முதல் முதலில்  தோன்றிய இருபாலாரும் கல்வி என்னும் செல்வத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் தமிழ் சமுதாயம் அறிவார்ந்த தளத்தில் நடப்பதற்கு வெளிச்சம் வழங்கிய கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்த இலங்கையின் வடபுலத்தின் தெல்லிப்பழையில் தோன்றிய யூனியன் கல்லூரியின் வரலாற்று ஆவணம் தங்கத்தாரகை எம்மவரின் வாழ்க்கைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகவே அமைந்துள்ளது.மைல் கல் எனக்குறிப்பிடுவதற்கும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. இதனையும் நாம் கடந்துசெல்லவேண்டும். மற்றும் சில மைல்கற்களை கடக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. "எல்லாம் கடந்துபோகும்" என்பது வாழ்வின் தத்துவம்.       (மேலும்)  12.06.2018

_______________________________________________________________________

 கேள்வி கேட்ட ட்ரூடோ; கடுப்பான ட்ரம்ப்: ஜி7 நாடுகள் கூட்டமும் அமெரிக்காவின் அடாவடியும்


ஜி7 மாநாட்டில் ஏஞ்சலா மெர்க்கல், ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்கள்   -  படம்: ஏஎப்பி

ஜி7 நாட்டில் இருந்து வெளியேறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கனடாg7 பிரதமரை கடுமையாக விமர்சித்த விவகாரம் அந்த அமைப்பின் மற்ற நாடுகளிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பொறுமை இல்லாத ட்ரம்ப், ட்விட் மூலம் உறவை கெடுத்துக் கொண்டார் என ஜி7 நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் உள்ளடக்கிய ஜி 7 உச்சி மாநாடு கனடாவின் கியூபெக்கில் லமாவ்பே நகரில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தொடக்கம் முதலே அமெரிக்காவுக்கும், மற்ற நாடுகளுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது.ரஷ்யாவை மீண்டும் ஜி7 நாடுகள் அமைப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி பேசினார். ஆனால் இறத்கு மற்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ‘     (மேலும்)  12.06.2018

_______________________________________________________________________

தேர்தல் நடைபெறாவிட்டால் அது ஜனநாயகத்தின் இறுதிப் பயணமாக அமையும்

அரசாங்கம் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படவில்லை என்றால், அது ஜனநாயகத்தின் இறுதிப் பயணமாக அமையும் எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்து ஒரு கூட்டணியை ஏற்படுத்தி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த உள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.நாடு தற்போது சிக்கல் நிறைந்ததாக மாறியுள்ளதாகவும் இந்நிலை தொடர்ந்தால் மக்கள் மேலும் துன்பத்தை அனுபவிக்க வேண்டிய நிலை வரும் என்பதால், இந்நிலையை தொடர இடமளிக்க முடியாது எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

_______________________________________________________________________

அரசியல் பிரச்சினைகளால் 2 இலட்சம் பேருக்கு சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படவில்லை

அரசியலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் கடந்த காலத்தில் 2 இலட்சம் பேருக்கு சமுர்த்தி நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.எனவே, குறித்த சமுர்த்தி பெறுநர்களுக்கு அவற்றை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.குருணாகல, ஹிரியால பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.கட்சி எதிர்நோக்கும் நெருக்கடி, பிரச்சினைகள் மற்றும் பிளவுகளை முற்றாக இல்லது செய்து, 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

8