பொறியும் அரச கட்டமைப்பு மாற்றம் கோரும் வரலாறு!

சிறிதரன் (சுகு)

(1)

இலங்கையின் ஆளும் தரப்புக்கள் வழமையான முறையில்    ஆட்sri-2சி செய்வதற்கான அமைதிப்படுத்தல் நிகழவேண்டும் என்பதுபோல் பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது.  நாட்டை சூறையாடுவதற்கும் அதிகாரப்பகிர்வு என்று சொல்லி இலங்கையின் அனைத்து  சமூகங்களையும் ஏமாற்றுவதற்கும், வேலை கல்வி, சமூக பொருளாதார பாதுகாப்பு ,அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் அலட்சியம் காட்டிக் கொண்டு தமது ஆளும் வர்க்க உறவுகளுடன் சுமுகமாக இயங்குவதற்கும்  என  இலங்கையின் அரசியல் நெருக்கடி தீரவேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. வாராது வந்துற்ற இந்த நெருக்கடிக்கூடாக இலங்கையின் ஆளும்  தரப்புக்கள் அம்பலப்படுத்தப்படாவிட்டால்  மக்கள் சடங்காக வழமைபோல் வாக்களித்து விட்டு அலட்சியமாக இருந்து விடுவார்கள்.இந்த ஆளும் வர்க்கங்களும் வழமை போல் ஏமாற்றி தமது நலன்களை பாதுகாத்துக் கொள்வார்கள். நவ தாராளவாத உலகில் இந்த ஆளும்வர்க்க நலன்கள் பணப்பட்டுவாடா என்பதெல்லாம் கடந்த காலம் போல் சாதாரண விடயங்கள் அல்ல. இந்த நாட்டு மக்கள் கற்பனை பண்ணிப்பார்க்க முடியாத பல மில்லியன்கள் மோசடியான பணப்பரிமாற்றங்களுடன் தொடர்புடையது.   (மேலும்)   02.12.2018

._______________________________________________________________________

இரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா?

மு.தமிழ்ச்செல்வன்

இரண்டு வருடங்களின் பின் இரணைமடு முழுமையாக நிரம்பியிருக்கும் காட்சியினை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார் கிளிநொச்சியின் மூத்த விவசanamadu1ாயி ஒருவர். அவர் மட்டுமல்ல விவசாயத்துறைக்கு வெளியால் உள்ள பலரும்  இரணைமடுவை பார்த்து பூரிப்படைகின்றனர். இரணைமடுவின் கீழ் நேரடியாக பயன்பெறுகின்றவர்கள் முதல் எந்தப் பயனையும் பெறாதவர்கள் என கிளிநொச்சியில் அனைவரும் இரணைமடுவை தங்களின் ஒரு பொக்கிசமாக நோக்குகின்றனர்.  முல்லைத்தீவு மாவட்;டத்திற்குள் அமைந்துள்ள இரணைமடுகுளத்திற்கு வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து பிரதானமாக கனகராயன் ஆற்றின் ஊடாக நீர் வருகிறது. ஆனால் இரணைமடுகுளத்தின் நீர்;பாசனத்திணைக்கள நிர்வாகம் மற்றும் அதன் பாசன பயன்பாடு என்பது முற்றமுழுதாக கிளிநொச்சி மாவட்டத்திற்குரியதாக காணப்படுகிறது.  வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய குளமாகவும் இலங்கைத்தீவில் ஏழாவது குளமாகவும் காணப்படுகின்ற இரணைமடு குளத்தின் வரலாறு 1885 இல் ஆரம்பிக்கிறது.     (மேலும்)   02.12.2018

._______________________________________________________________________

அமரர் எஸ்.பொ. - அங்கம் 05

இலக்கியச்  செல்நெறியில் எஸ்.பொ. வின் வகிபாகம் குறித்த விரிவுரைகளை நடத்தவேண்டும்

                                                                              -  முருகபூபதி

எஸ்.பொ.வின் மகன் மருத்துவர் அநுர,   சென்னையில்  மித்ர  பதிப்பகத்தின் சார்பில்  முழுநாள்  இலக்கிய விழாவை   வெகு  சிறப்பாக  நடத்தி  முடித்த  பின்னர்  சிட்னியிலும் ஒரு    espo9பெரு விழாவை   28-08-2004   ஆம்   திகதி  சிட்னி   ஹோம்புஷ் ஆண்கள்    உயர்நிலைக்கல்லூரியில்  நடத்தினார்.  இவ்விழாவில்   மூத்த  கவிஞர்  அம்பியின்  பவள  விழா நிகழ்ச்சிகளும்   இடம்பெற்றன.  அன்றைய  விழாவில்  மித்ர வெளியீடுகளான    ஆசி. கந்தராஜாவின்   உயரப்பறக்கும்   காகங்கள்,  தமிழச்சி   சுமதி  தங்கபாண்டியனின்  எஞ்சோட்டுப்பெண்,   நடேசனின் வண்ணாத்திக்குளம்,   கவிஞர்  அம்பியின்  அந்தச்சிரிப்பு,  எஸ்.பொ.வின்     சுயசரிதை    வரலாற்றில்    வாழ்தல்  - இரண்டு பாகங்கள்,     எஸ்.பொ.    ஒரு  பன்முகப்பார்வை,  மற்றும்  பூ   ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. மண்டபம்   நிறைந்த  இலக்கிய  சுவைஞர்கள் . அனைவருக்கும்  அன்று இராப்போசன   விருந்தும்    வழங்கினார்    அநுர. இந்த   நிகழ்விற்கு  முருகபூபதி  தலைமை   ஏற்க,  ந.கருணகரன்,  பேராசிரியர்  பொன். பூலோக சிங்கம்,   திருநந்த குமார்,   டொக்டர் ஜெயமோகன்,    மா. அருச்சுணமணி,  தனபாலசிங்கம்,  குலம்  சண்முகம் ஆகியோருடன்   இலங்கையிலிருந்து  வருகை  தந்த  ஞானம்  ஆசிரியர்  மருத்துவர்   தி.ஞானசேகரன்  தமிழகத்திலிருந்து  வருகை  தந்த  தமிழச்சி  சுமதி  தங்கபாண்டியன்  ஆகியோரும்  உரையாற்றினர் என்பது    குறிப்பிடத்தகுந்தது,  (மேலும்)   02.12.2018

._______________________________________________________________________

கிளிநொச்சியில் 6018 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர் வலயக் கல்விப் பணிப்பாளர்

 கிளிநொச்சி மாவட்டத்தில் 2018 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 6018 மாணவர்கள் தோற்றுகின்றனர் என கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.  2018 மாணவர்களில் 3842 பேர் பாடசாலை பரீட்சாத்திகள் எனவும் இவர்களில் 2176 மாவர்கள் வெளிவாரியாகவும் தோற்றுகின்றனர்.. 42 பரீட்சை நிலையங்கள், 10 இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவும் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும்  பூர்த்திச் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார் இதேவேளை நாடாளவிய ரீதியில் ஆறு இலட்சத்து 56641 பரீட்சாத்திகள் இதில் பாடசாலை பரீட்சாத்திகள் நான்கு இலட்சத்து 22850  பேர் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இதற்காக 4661 பரீட்சை நிலையங்களும், 541 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. என  இலங்கை பிரதி பரீட்சைகள் ஆணையாளர்  எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

கிளிநொச்சி பொதுச் சந்தைக்குள் சுகாதார சீர்கேடுகள் வர்த்தகர்கள் விசனம்

கிளிநொச்சி பொதுச் சந்தைக்குள் மனிதர்கள் செல்ல முடியாதkilimarketளவுக்கு சில பகுதிகளில் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்படுவதாக சந்தை வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். ஆனால் இன்றைய தினம் அதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.   கிளிநொச்சி சந்தையின் பழக்கடைக் தொகுதிக்கும் மரக்கறிக்கடை தொகுதிக்கும் இடையே உள்ள பகுதி மிகவும் மோசமான சுகாதார சீர்கேடுகள் நிறைந்த பகுதியாக   காணப்படுகிறது. இது குறித்து கரைச்சி பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அவர்கள் அக்கறை செலுத்தவில்லை.  மாதாந்தம் 1240 ரூபா   ஒவ்வொரு வர்த்தகர்களிடமிருந்தும் அறவிடுகின்றனர்.  ஆனால் அதற்குரிய சேவை இடம்பெறுவதில்லை எனத் தெரிவித்த சந்தை வர்த்தகர்கள் கழிவகற்றல் மற்றும் இவ்வாறான சுகாதார சீர்கேடுகள் தொடர்பில் பிரதேச சபையின் கவனத்திற் கொண்டு சென்றால் சில நாட்களுக்கு தொடர்ந்தும் பணிகளை மேற்கொள்கின்றனர். மறுபடியும்  பழைய நிலைக்கு சென்றுவிடுகின்றனர்  நாங்களும் ஒவ்வொரு தடவையும் இவ்வாறு கூறிக்கொண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின்  செயலாளர் கம்சநாதனிடம  வினவிய போது குறித்த விடயம் தொடர்பில் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது   சனிக்கிழமை)  குறித்த பகுதிக்கு கொங்றீட் இட்டு நிரந்தரமாக செப்பணிடவுள்ளதாக தெரிவித்தார்

._______________________________________________________________________

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் ஒரு தொகை மீட்பு

புதுக்குடியிருப்பு, சுதந்திபுரம் பிரதேசத்தில் யுத்த காலத்தில் விடுதலltte waffeைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த யுத்த உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் முல்லைத்தீவு முகாமின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது 2250 டி 56 ரக தோட்டாக்கள், ஆர்.பி.ஜி. தோட்டக்கள் 03, 06 ஆடி செல் உட்பட மேலும் பல அயுதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இவற்றை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் கிளிநொச்சி முகாமில் உள்ள தேடுதல் மற்றும் குண்டு செயலிழப்பு பிரிவினரின் ஒத்துழைப்புடன் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

._______________________________________________________________________

யுத்தத்தில் கண்பார்வை இழந்த முன்னாள் போராளிகள் ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் சந்தித்து  (30.11.2019) கலந்துரையாடியுள்ளனர்.

அரசாங்க வேலைக்கான ஆட்சேர்ப்பின்போது 3சதவீதமானவர்கள் மாற்றுத்திறனாளிகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டிய கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தம்மை2222யும்  அரச வேலைவாய்ப்புக்களில் இணைத்துக்கொள்ளுமாறு ஆளுநரிடம் வேண்டிக்கொண்டனர்.  குறிப்பாக கரைச்சி பிரதேசசபை நூலகம் மற்றும் வவுனியா நகரசபை நூலகங்களில் தம்மை போன்றவர்களுக்கான விசேட பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளபோதும் அது பயன்படுத்தப்படாது மூடி வைக்கப்பட்டிருப்பதாக கூறிய அவர்கள் அதில் தம்மை பணிக்கு அமர்த்துமாறு வேண்டிக்கொண்டனர். அதற்கான பயிற்ச்சிகளை தாம் எடுத்துள்ளதாகவும் அதனை தம்மால் திறம்பட செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டனர். இதுபோன்று யாழ் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பயிச்சி வகுப்புக்கள் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக தாம் அறிவதாகவும் அதில் பயிற்ச்சியாளர்களாக  செயற்படக்கூடிய வகையில் சிறப்பு தன்மைகளை தாம் கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இவர்களின் கோரிக்கையினை செவி மடுத்த ஆளுநர் நிச்சயமாக நீங்கள் குறிப்பிட்ட நிறுவனங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி தகவல்களை திரட்டி வெற்றிடத்திற்கு உங்களை போன்றவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.

._______________________________________________________________________

மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலவரை மேலும் இரண்டரை மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி இந்த இந்த கால நீடிப்பை வழங்கியுள்ளார். ஏற்கனவே 2018 ஜூலை மாதம் 31 ஆம் திகதி நிறைவடையவிருந்த காலம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அந்தக் காலம் பெப்ரவரி 15ம் திகதிவரை மீண்டும் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.இந்த ஜனாதிபதி ஆணைக்குழு 2018 ஜனவரி மாதம் 31 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தது.2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியில் இருந்து இவ்வருடம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், குறித்த நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்காகவே இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

ஆதி மனிதர்கள் இலங்கையுடன் தொடர்பு

16 லட்சம் வருடங்களுக்கு முன்பே ஆதி மனிதர்கள் இலங்கையுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற புராதன வரலாற்று ஆய்வுகள் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. யுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாணம் கடலை அண்டிய பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந்த ஆய்வுகளின்போது, குகையொன்றினுள் இருந்து விசேடமான பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக களணி பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்பட்ட குறித்த வரலாற்றுத் தடயங்கள், ஆப்பிரிக்காவில் ஆராய்சியாளர்கள் முன்னெடுத்துவரும் ஆய்வுகளில் கிடைத்துள்ள வரலாற்று தடயங்களுடன் நெருங்கிய தன்மைகளை கொண்டுள்ள நிலையில், ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஆதி மனிதர்கள் இலங்கைக்கு வருகைத்தந்திருக்கக் கூடும் என ஊகிக்கப்படுகின்றது.

._______________________________________________________________________

நவதாராண்மைவாத உலகமயமாக்கல்  எதிர்  ஒரு இறையாண்மையுள்ள திட்டம்.

 

                                                    தயான் ஜயதிலக

பொருளாதாரத்தைப் போலவே அரசியலிலும் நேர்மாறான மாற்றங்கள் ஏற்படும். ஜூலை 1983ல் ஜனாதிபதி ஜேஆர் ஜெயவாதனா அமெரிக்கத் தூதரக முதற் செயலாளர் கெவின் trade-globalization1ஸ்கொட்டை ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் பிரதிநிதி என்று அறிவித்து 24 மணி நேரத்திற்குள் அவரை விமானம் ஏற்றி அமெரிக்காவுக்கு அனுப்பியதின் பின்னர் ஒரு மதுபான விருந்தில் வைத்து ஒரு விமர்சனக் குறிப்பை வெளியிட்டது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. அதேபோல ஜனாதிபதி ஜெயவர்தனாவும் மற்றும் பிடல் கஸ்ட்ரோவும் நண்பர்களாக இருந்தபோது, இருவரும் ஹவானா வீதிகளில் ஒன்றாக நடந்து சென்றதும் தற்செயல் அல்ல.  ஜேஆர் ஜெயவர்தனா, லங்கா - சோவியத் நட்புறவுச் சங்கத்தின் அங்கத்தவராக இருந்த முதலாவது ஜனாதிபதி மட்டுமல்ல, இலங்கை தேசிய காங்கிரசில் கம்யுனிஸ்ட் கட்சிக்கு அங்கத்துவம் வழங்கவேண்டும் என்கிற பிரேரணையையும் அவர்தான் முன்மொழிந்தார் - இது 1944 -1947ல் நடந்தது.            டிஎஸ். சேனநாயக்கா இலங்கைத் தேசிய காங்கிரசில் இருந்து விலகி ஐதேக வினை ஆரம்பிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். 1977ல் திறந்த பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்த ஜேஆரின் நிதிமந்திரியாகத் தெரிவானவர், முன்னாள் சுதந்திர தீவிரவாதியும், ஒருவேளை 1960களில் கியுபாவில் வைத்து சே குவெராவைச் சந்தித்த ஒரே ஒரு இலங்கையருமான அவர் - ரொணி டீ மெல் ஆவார். அது ரணில் மற்றும் மங்கள நடைமுறைப்படுத்தும் நவதாராண்மைவாத அதிர்ச்சி வைத்தியம் போலில்லாமல் கவனமாகச் சீரமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட திறந்துவைப்பு  ஆகும்.   (மேலும்)   01.12.2018

._______________________________________________________________________

நடிகர் சூர்யாவுக்கு ஒரு கடிதம்:

அன்புத் தம்பி சூர்யாவுக்கு

சமீபத்தில் இந்து தமிழ் நாளிதழில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரையைப் படித்தேன். சினிமா நடிகர்களால் தமிழ்நாட்டில் சுதந்திரமாகவே வாழ முடியவில்லை; விமான நிலைsurya1யத்தில் அற்பசங்கை பண்ணி விட்டு வந்தால் கூட கை குலுக்குகிறார்கள்; செல்ஃபி எடுக்க வேண்டும் என்று டார்ச்சர் பண்ணுகிறார்கள் என்பது உங்கள் புகார். உங்கள் தந்தை சிவகுமார் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் போனைத் தட்டி விட்டது தவறுதான் என்றாலும் ரசிகர்களின் டார்ச்சரும் தாங்க முடியாததாக இருக்கிறது என்பது உங்கள் கட்டுரையின் சாரம். இது பற்றி உடனடியாக உங்களுக்கு ஒரு பதில் எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நேரம் இல்லை. தம்பி சூர்யா, நீங்களும் உங்களைப் போன்ற ஹீரோக்களும் வாங்கும் சம்பளம் 50 கோடி, 60 கோடி ரூபாய். ஆனால் துப்புரவுத் தொழிலாளியின் மாதச் சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? வெறும் 6000 ரூ. அறுபது கோடிக்கும் ஆறாயிரம் ரூபாய்க்கும் எத்தனை வித்தியாசம்?   தமிழ்நாட்டில் சினிமாதான் மதம். நீங்களெல்லாம் கடவுள்கள். எம்ஜியார் ஒரு கடவுள். சிவாஜி ஒரு கடவுள். கமலை மட்டும் ஆண்டவர் என்று சொல்லுவோம்.   (மேலும்)   01.12.2018

._______________________________________________________________________

அமரர் எஸ்.பொ. - அங்கம் - 02

சரித்திரத்தின்  நித்திய  உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின்   சுவாசமே  எழுதுதல்தான்

ஆக்க   இலக்கியத்தில்  பரீட்சார்த்தமான  முயற்சிகளின் மூலவர்

பொன்னுத்துரை  இலங்கையிலிருந்து   நைஜீரியாவுக்கு  தொழிedpo15ல் வாய்ப்பு  பெற்றுச் சென்ற  காலகட்டத்தில்   அங்கு  ஆபிரிக்க இலக்கியங்களை   ஆழ்ந்து   கற்றார்.  பின்னாளில்  பல  ஆபிரிக்க இலக்கியங்களையும்  அதேசமயம்  அரபு  இலக்கியங்களையும் மொழிபெயர்த்து  நூலுருவாக்கினார். ஆபிரிக்காவில்  ஒரு  தவம்  என்ற   விரிவான  கட்டுரையின்  முதல் அத்தியாயத்தை  வீரகேசரி  வாரவெளியீட்டுக்கு  அனுப்பினார்.  இதர அத்தியாயங்களும்   அவரிடமிருந்து  கிடைத்தபின்னர் வெளியிடுவதற்கு   வீரகேசரி  வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர்  பொன். ராஜகோபால்  தீர்மானித்திருந்தார்.  எனினும்   பொன்னுத்துரை   அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தமையினால்  அந்தத் தொடர்  வெளியாவது சாத்தியப்படவில்லை.   முதலாவது  அத்தியாயத்தின்  மூலப்பிரதி  பொன்னுத்துரையிடமும்   இருக்கவில்லை.    வீரகேசரிக்கு   அனுப்பிய பிரதியும்   காணாமல்போனது.  (மேலும்)   01.12.2018

._______________________________________________________________________

வடமாகாணத்தில் அதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களை பாராட்டுவதற்கான விழா  -

வடமாகாணத்தில் அதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களை பாராட்டுவதற்கான விழா எடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வடமாGovernor 011218காண ஆசிரியர்கள் திருமணம் மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்காக மூன்று மாத விடுமுறையினை பெற்றுக்கொள்கின்றார்கள். இதனால் இங்கு மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிப்படைகின்றது. இந்த பாதிப்புக்கு நானும் ஒரு காரணமாகின்றேன். ஏன் எனில் ஆசிரியர்களுக்கு விடுமுறைக்கான அனுமதி வழங்குபவன் நானே. அதிபர்கள், வலய கல்விப்பணிப்பாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் விடுமுறைக்கு அனுமதி அளித்து இறுதியில் என்னிடம் அனுப்புகின்றார்கள். அதில் நான் கையொப்பம் இடுகின்றேன். எவ்வாறு 3 மாத காலத்திற்கு விடுமுறை வழங்குகின்றார்களோ என எனக்கு தெரியாது. இது தொடர்பில் ஆராய்ந்து கொண்டிருக்கின்றேன். நான் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா நடாத்தி அவர்களுக்கு தங்கப் பதங்களை வழங்கியிருந்தேன். சிறந்த சேவை ஆற்றுபவர்களை இது போன்று பாராட்டி ஊக்குவிப்பது எமது கடமை ஆனால் வடமாகாணத்தில் அதிகளவில் விடுமுறை எடுக்காது சேவையாற்றும் ஆசிரியர்களை பாராட்டுவதற்கு திட்டம் ஒன்றினை சரிக்கட்ட வேண்டியுள்ளது என்று தெரிவித்தார். மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் வலிகாமம் வலயகல்வி அலுவலகம் நடாத்திய ஆசிரியர் கௌரவிப்பு விழா (நேற்று 29.11.2018 )நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.  வலிகாமம் வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாகாண கல்வி பணிப்பாளர் உதயகுமார் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

._______________________________________________________________________

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் நிலைப்பாடு இராஜதந்திரமா, அல்லது ஓர் சரணாகதி அரசியலா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் நிலைப்பாடு இராஜதந்திரமா, அல்லது ஓர் சரணாகதி அரசியலா என்ற கேள்வியினை எழுப்பி உள்ளது என வடக்கு மாகாணthavarasa (1) சபையின் முன்னாள்  எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா தெரிவித்துள்ளார்.  சமகால அரசியல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் நலன்களினை முன்னிலைப்படுத்தி தமிழ்தேசியக் கூட்டமைப்பு  செயற்படுவதே இன்றைய காலத்தின் தேவையாக அமைகின்றது. தற்போது இலங்கையின் அரசைத் தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது. 15 பாராளுமன்ற உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டுள்ள தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைத்திருக்கும் இவ் வாய்ப்பானது சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களிற்குக் கிடைத்திருக்கும் ஓர் அரிய சந்தர்ப்பம் ஆகும்.  (மேலும்)   01.12.2018

._______________________________________________________________________

அதிகரிக்கிறது பதற்றம்: ரஷியர்கள் வருகைக்கு உக்ரைன் திடீர் தடை

16 முதல் 60 வயது கொண்ட ரஷிய ஆண்கள் உக்ரைனுக்குள் வருவதற்கு அந்த நாடு வெள்ளிக்கிழமை தடை விதித்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பrussia-ukrainதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.  இதுகுறித்து அந்த நாட்டு எல்லைப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பெட்ரோ சிஹிகால் தொலைக்காட்சியில் கூறுகையில், 16 வயது முதல் 60 வயது வரை கொண்ட ரஷியர்கள் உக்ரைன் வருவதற்கு வெள்ளிக்கிழமை முதல் அனுமதி மறுக்கப்படும் என்று தெரிவித்தார். எனினும், உக்ரைனில் நடைபெறும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக வரும் இந்த வயதுக்குள்பட்டவர்களுக்கு மட்டும், மனிதாபிமான அடிப்படையில் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ தெரிவித்தார். கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைன் உள்நாட்டுப் போர் தொடங்கியபோது, அந்த நாட்டுக்குள் ஊடுருவிய ரஷிய ஆதரவாளர்கள் கிளர்ச்சிப் படைகளை அமைத்ததாகக் கூறப்படுகிறது.   (மேலும்)   01.12.2018

._______________________________________________________________________

இராமேஸ்வரம் - தலைமன்னார் பயணிகள் படகு சேவை குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்தை


தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான பயணிகள் சேவை ஆரம்பிப்பது தொடர்பாக இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடைDouglas Devananthaபெற்று வருவதாக மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்தமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். இதன்போது, இந்த பயணிகள் படகு சேவை தொடர்பில் விரைவான நடவடிக்கைகள் எடுப்பதற்கு என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் நிச்சயம் இந்த சேவை இடம்பெறும் என்றும் அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டார்.   கேரளாவிலுள்ள ஐயப்பன் புனிததலத்தை வழிபடுவதற்காக செல்லும் இலங்கை பக்தர்களின் நலன்கருதி முன்னெடுக்கப்படும் இந்த படகு சேவையானது, இந்த யாத்திரை காலத்திற்கு பின்னர் சுற்றுலாத்துறைக்கு பயன்படும் வகையிலும் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திருப்புவதற்கும் பயன்படும் என்றும் அவர் கூறினார்.   (மேலும்)   01.12.2018

._______________________________________________________________________

G.C.E O/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்...!

எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள, 2018ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு அனுமதிப் பத்திரம் இதுவரை கிடைக்காத பட்சத்தில், அடையாள அட்டை இலக்கத்தை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற உத்தயோகபூர்வ இணையத்தளத்தில் பதிவிட்டு, அனுமதிப் பத்திரத்தைத் தர விறக்கம் செய்துகொள்ள முடியுமென, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் பிரத்தியேக விண்ணப்பதாரிகளுடைய பரீட்சை அனுமதிப் பத்திரங்கள், தற்போது தபால் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

._______________________________________________________________________

மாகாணசபையின் தவறுகளும் ஆளுநரின் தலையீடும்

 -    கருணாகரன்


“மாகாண சபை நிர்வாகத்தில் ஆளுநரின் தலையீடு அதிகரித்துள்ளது” என்ற முனல்கள் கேட்கத் தொடங்கி விட்டது. மாகாண நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீடு ஏற்றreginold-281018ுக் கொள்ளக் கூடியதல்ல என்பது நியாயமே. அதற்காக மாகாண நிர்வாகத்தைச் சீரழியவும் விடமுடியாதே. மாகாண நிர்வாகம் சரியாக இருந்திருக்குமாக இருந்தால் ஆளுநர் தலையீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. தவறுகளாக ஆயிரம் ஓட்டைகளை வைத்துக் கொண்டு யாரையும் குறைசொல்லிப் பயனில்லை. வேண்டுமென்றே ஆளுநர் தலையீடுகளைச் செய்கிறார், பாரபட்சமாக நடக்கிறார், அரசியல் உள்நோக்கத்தோடு செயற்படுகிறார் என்றால் அதை நாம் நிச்சயமாக எதிர்த்தே ஆக வேண்டும். இல்லையெனில் நல்லவற்றுக்காக ஆதரிப்பது தவிர்க்க முடியாதது.   கடந்த வாரம் வடமாகாணக் கல்வித்துறையில் மறைக்கப்பட்டிருந்த சில விடயங்கள் வெளியே தெரியவந்தன. முதலாவது, யாழ்ப்பாண நகரில் உள்ள இரண்டு சிறிய பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை விட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது.  (மேலும்)  30. 11.18

._______________________________________________________________________

அமரர் எஸ்.பொ. அங்கம் -  4

மதிப்பீடுகளுக்கு  நடுவே  உண்மைகளைத் தேடுவோம்.

மதிப்பீடுகள்  கசக்கும் - இனிக்கும் -  துவர்க்கும் -  இதில் உண்மைகள்   சுடுவதும்  மறைபொருள்தான்.

                                    முருகபூபதி

பலவருடங்களின்  பின்னர்   எஸ்.பொ.,   2003   இல்   தமது  வரலாற்றில் வாழ்தல்  நூலை  இரண்டு   பாகங்களாக  1924  பக்கங்களில் வெளியிட்டபொழுது   முன்னர்  பண்டிதs.ponnuduraiர்  வி. சீ . கந்தையாவின் நூலை   ஒரு  தலையணைக்கு  ஒப்பிட்டு  கேலி  செய்தீர்களே.... தற்பொழுது    நீங்கள்  இரண்டு  பாகங்களில்  அவரது  நூலைவிட மும்மடங்கு   பெரிய  நூலை   இரண்டு   பாகங்களில் வெளியிட்டிருக்கிறீர்களே....?  என்று  நேரடியாக   கேட்டபொழுது - "ஆம்.....அதற்கென்ன    பண்டிதர்    தலைக்குமாத்திரம்  வைத்துக்கொள்ள நூல்    தந்தார்.   ஆனால்  - நான்   தலைக்கும்  காலுக்கும் வைத்துக்கொள்ள   இரண்டு  பெரிய  நூல்கள்  தந்துள்ளேன்."  - என்றார்.  எஸ்.பொ.வின்  இதுபோன்ற  கூற்றுக்கள்  சகிக்கமுடியாதவைதான். எனினும்   அவரது  இதுபோன்ற  மேலோட்டமான  கருத்துக்களை அவரது   இயல்பான  நக்கல்  என்று  மாத்திரம்  எடுத்துக்கொண்டு நகரவேண்டியதுதான்.  பண்டிதர் வி.சீ.கந்தையாவின்    மட்டக்களப்பு தமிழகம்  மிகவும்  தரமான    ஆய்வேடு.    அதன்   பெறுமதி  கருதி  அதன்  இரண்டாவது பதிப்பினை   நேர்த்தியாக  அச்சிட்டு  2002   இல்  வெளியிட்டனர் பிரான்ஸ்    எக்ஸில்   அமைப்பினர்.    (மேலும்)  30. 11.18

._______________________________________________________________________

வடமாகாண மகளீர்விவகார அமைச்சினால் முறைகேடான முறையில் செலவழிக்கப்பட்ட ரூபா 320 இலட்சம் பணம்

வடமாகாண மகளீர்விவகார அமைச்சினால் முறைகேடான முறையில் செலவழிக்கப்பட்ட ரூபா 320 இலட்சம் பணம் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்கு மூவர் அடங்கிய விசாரணைக்குழுவினை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அமைத்துள்ளார்.   வடமாகாண அவைத்தலைவர் சிவிகே.சிவஞானம் ஆளுநரிடம் விடுத்த எழுத்துமூலமான குற்றசாட்டு தொடர்பாக இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளன. சுகார அமைச்சின் செயலாளர் திருவாகரன், வடமாகாண கணக்காய்வுத் திணைக்கள் பணிப்பாளர் எஸ்.சுரேந்தினி, மாகாண சுகாதார திணைக்கள கணக்காளர் கஜேந்திரன் ஆகியோர் இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர். எதிர்வரும் இரு வாரங்களுக்குள் விசாரணைகளின் அறிக்கையினை சமர்பிக்குமாறு ஆளுநர் றெஜினோல்ட் குரே விசாரணை அதிகாரிகளை பணித்துள்ளார். (மேலும்)  30. 11.18

._______________________________________________________________________

தமது ஆதரவு யாருக்கு? - ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு அறிவிப்பு

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கு ஆதரவளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 tna_press2-guardianநாடாளுமன்ற உறுப்பினர்களது கையெழுத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இரண்டு சந்தர்ப்பங்களில் அவநம்பிக்கைப் பிரேரணைகள் நாடாளுமன்றில் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன.குரல்கள் மூலமாக இவை நிறைவேற்றப்பட்டுள்ளன.இந்த நிலையில் தற்போது அரசாங்கம் என்ற ஒன்று நாட்டில் இல்லை. எனவே ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள, நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடியவர் என்று ஜனாதிபதி கருதும் ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது கடிதத்தில் கோரியுள்ளது.

._______________________________________________________________________

பிரதமரின் செயலாளரின் நிதி அதிகாரத்தை தடுக்கும் பிரேரணை நிறைவேற்றம்


பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.Karu-Jayasuriya1 குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 123 பேர் வாக்களித்தனர். பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவால் இன்று காலை பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டது.  இன்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய போதே இந்தப் பிரேரணை சமர்பிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தப் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க ஆமோதித்து வழிமொழிந்தார்.  கடந்த 14ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைப்படி அமைச்சரவை கலைக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.    (மேலும்)  30. 11.18

._______________________________________________________________________

கொழும்;புத் தமிழ்ச் சங்கத்தில்  ஆறு நூல்கள் அறிமுக நிகழ்வு..!

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் 9-ம் திகதி (09 - 12 - 2018) ஞாயிறு மாலை 5 மணிக்கு ஆறு நூல்களின் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது. தமிழ்ச் சங்கச் சங்கரப்பிள்ளை மண்டபத்தில், பொதுவுடமைத் தத்துவ ஆசான் தோழர் என். சண்முகதாசன் அரங்கில், மூத்த6books பத்திரிகையாளர்   வீ. தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், மூத்த கலை இலக்கியப் படைப்பாளர் - பத்திரிகையாளர் திருமதி அன்னலட்சுமி இராசதுரை கௌரவிக்கப்படவுள்ளார். இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலை வகிப்பார். 'ஞானம்" சஞ்சிகை ஆசிரியர் தி. ஞானசேகரன், ஓய்வுபெற்ற கல்லூரி அதிபர் மா. கணபதிப்பிள்ளை, கொழும்பு மாநகரசபை உறுப்பினர்     எஸ். பாஸ்கரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கவுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் வதியும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் 'ஈழத்து மண் மறவா மனிதர்கள், என் வழி தனி வழி அல்ல..., ஒளிக்கீற்று" ஆகிய நூல்களும் பத்மா இளங்கோவனின் 'செந்தமிழ் குழந்தைப் பாடல்கள், செந்தமிழ் பாப்பாப் பாடல்கள்" ஆகிய நூல்களும் 'பாரதி நேசன்" வீ. சின்னத்தம்பியின் 'ஈழத்தின் வடபுலத்தில் கம்யூனிஸ இயக்கத்தின் வளர்ச்சியில் தமிழ்ப் பெண்கள்" என்ற நூலும் இந்நிகழ்வில் வெளியிடப்படுகின்றன. பேராசிரியர் சோ. சந்திரசேகரன், கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர்   ஜி. இராஜகுலேந்திரா, 'தாயக ஒலி" சஞ்சிகை ஆசிரியர் தம்பு சிவா, டபிள்யூ. சோமரட்ணா, எம். ஏ. சி. இக்பால், மேமன்கவி, வசந்தி தயாபரன் ஆகியோர் நூல்கள் குறித்துக் கருத்துரை வழங்குவர். வி. ரி. இளங்கோவன் ஏற்புரையாற்றுவார்.  வி. ரி. இளங்கோவனின் நூல்கள் அண்மையில் தமிழகத்தில் வெளியிடப்பட்டுப் பாராட்டுப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.இலங்கை முற்போக்கு மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் கலை இலக்கியப் படைப்பாளிகள் - இலக்கிய இரசிகர்கள் பெருமளவில் கலந்துகொள்வரென எதிர்பார்க்கப்படுகிறது.

- இ. ஓவியா.

._______________________________________________________________________

 பயங்கர பேரூந்து விபத்து..!! யாழ்பாணத்தை சேர்ந்த பெண்கள் பலி!!

நீர்க்கொழும்பு - சிலாபம் வீதியின் வலஹாபிடிய பிரதேசத்தில் அதிசொகுசு பேரூந்தொன்று ஹெமில்டன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்தில் 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேரூந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.காயமடைந்தவர்கள் மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று பிற்பகல் 3.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் , உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் பிரதேசத்தை சேர்ந்த பெண்கள் என தெரிவிக்கப்படுகிறது.விபத்து தொடர்பில் மாரவில காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

._______________________________________________________________________

வசீம் தாஜுதீன் கொலைக் குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவு

வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தக் கூடிய நபர்கள் இருந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் இசுறு நெத்திகுமார உத்தரவிட்டுள்ளார்.   றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (29) விசாரணைக்கு வந்த போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.   முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க, நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா மற்றும் முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகர ஆகியோருக்கு எதிராக படுகொலை சம்பவத்தின் சாட்சிகளை மறைப்பதற்காக போலி ஆவணங்கள் தயாரித்தது சம்பந்தமாக குற்றம்சாட்ட முடியும் என்று இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.     (மேலும்)  30. 11.18

._______________________________________________________________________

ஜனாதிபதி  - சபாநாயகர் இடையிலான கலந்துரையாடல் நிறைவு

எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் நாளை (30) தனித்தனியாக கலந்துரையாடல் மேற்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக இந்த கலந்துரையாடல்கள் நாளை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

._______________________________________________________________________

அடுத்த தேர்தல்.

 பாகம் - 1 )

ஒரு பா.உ. எவ்வாறு ஏகலைவன் ஆகின்றார். ( சுலோகம் - ஆச்சரியம் )

                                                                                                                   ( சஹாப்தீன் நானா )

நமது சிறிலங்காவில் யாருக்குமே, சாதாரண பொதுமக்கள் யாருக்குமே எதுவுமே புரியல. புரிந்தாலும், அதை விரிவாக புரிஞ்சிக்க முடியல.votefraud  அரசியலும், அரசியல் வாதிகளும் என்ற வர்ணப்படம் இன்று சிறிலங்காவையும் தாண்டி  உலகம் முழுக்க ஓடிக்கொண்டிருக்கின்றது. யார் நல்லவர் என்பதுதான் இந்தப்படத்தின் பெயர்.  நமது நாட்டில் எல்லா அரசியல்வாதிகளும் மிக மிக நல்லவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கே  இடமில்லை.இவர்கள் பிறக்கும்போது, தாய்  தந்தையர்களால் வளர்க்கப்படும்போது, அரசியலில்  கால் வைக்கும்போது அனைவரும் மிக நல்லவர்களே. அன்புடையீர் நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள்; மேல்படி தேர்தல் தொகுதியில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றீர்கள் என்று, பாராளுமன்றத்தில் இருந்து அரச இலட்சினை தாங்கிய ஒரு கடிதம் வரும், வந்ததும். நம்மாளுக்கு முதல் கிளு கிளுப்பு   வரும்.அப்புறம், பாராளுமன்ற கட்டிடத்திற்கு நேர் பின்னே "மாதிவெல" இல் அமைந்துள்ள கட்டிடத்தில் உங்களுக்கு ஒரு வீட்டு தொகுதி சகல செளபாக்கியங்களுடனும், அத்துடன் ஒரு சமையல் ஆள்,ஒரு உதவியாள் , இரண்டு அரச பாது காப்பு உத்தியோகத்தர்கள்  என இன்னொரு மடலும்  அல்லது அவசர ஈமெயிலும்  வரும்.  (மேலும்)  29. 11.18

._______________________________________________________________________

அமரர் எஸ்.பொ. அங்கம் -  4

மதிப்பீடுகளுக்கு  நடுவே  உண்மைகளைத் தேடுவோம்.

மதிப்பீடுகள்  கசக்கும் - இனிக்கும் -  துவர்க்கும் -  இதில் உண்மைகள்   சுடுவதும்  மறைபொருள்தான்.

                                    முருகபூபதி


அவுஸ்திரேலியாவில்  பல  தமிழ்  அமைப்புகள்  1983  இற்குப்பின்னர் இயespo10ங்கியபோதிலும்  1988   இற்குப்பின்னரே   கலை - இலக்கியம்  சார்ந்த சிந்தனைகள்   உதயமாகின.  1986 - 1987  காலப்பகுதியில்  இங்கு குடியேறிய  ஈழத்தமிழர்கள்  மத்தியில்  நடன -  இசை  ஆசிரியர்கள் கலைஞர்கள்   - எழுத்தாளர்கள்  தத்தமது துறைகளில்  தம்மை வளர்த்துக்கொள்ள   அக்கறைகொண்டனர். தமது  அவுஸ்திரேலிய  வாழ்வில்  பொன்னுத்துரையினால் கடுமையாக   விமர்சிக்கப்பட்ட  கலாநிதி ஆ. கந்தையா  எழுதியிருக்கும்   சில  நூல்களில்  அவுஸ்திரேலியாவில்  புகலிடம் பெற்ற  ஈழத்தமிழர்களின்  கலை,  இலக்கியம்,  கல்வி, ஆன்மீகம்,  சமூகம்  சார்ந்த  குறிப்புகள்  அடங்கிய  ஆவண  நூல்களில்  பல செய்திகளை  காணலாம்.  மெல்பனிலும்  சிட்னியிலும்  பல  இதழ்கள்  வெளியாகின.  சில காலப்போக்கில்   நின்றுவிட்டன.  கணினியின்  தீவிரமான  பாய்ச்சல் இணைய   இதழ்களுக்கும்  இங்கு  வழிகோலியதனால்  பல  அச்சு ஊடகங்கள்  நின்று  விட்டன.   (மேலும்)  29. 11.18

._______________________________________________________________________

“இலங்கையின் இன்றைய அரசியல் நெருக்கடியும் அதன் பின்புலமும்

இலங்கையின் ஆட்சி முறையே செயலிழந்து விட்டது. எனவே புதியதொரு ஆட்சி முறையையே நாடு எதிர்பார்க்கிறது. அந்த ஆட்சியானது மக்களுக்கானதாக  இருக்க வேkokuvil2ண்டும். மக்கள் உரிமையும் அதிகாரமும் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் அரசியல் சீர்குலைவு என்பது ஆளும் வர்க்கத்தின் அதிகாரப் போட்டியின் விளைவேயாகும். இரண்டு அதிகாரத் தரப்புகள் தங்களுக்கிடையில மோதிக்கொள்கின்றன. இதில் மக்களுடைய நலன்களே பாதிக்கப்படுகிறது. சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையின் அரசியல் வரலாறு லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பலியெடுத்த கதைகளையே பதிவு செய்து வைத்திருக்கிறது. இரத்தம் சிந்தாத தசாப்தங்களே குறைவு. வன்முறையும் ஆயுதப்போராட்டங்களும் ஒடுக்குமுறையும் என்ற கழிந்ததே கடந்த எழுபது ஆண்டுகாலச் சரித்திரம். சரித்திரம் ஒரு போதும் தரித்திரமாக இருக்கக் கூடாது. அது சிறப்புற இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் எழுத்தாளர் கருணாகரன்.  புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனினிஸக் கட்சியின் ஏற்பாட்டில்  “இலங்கையின் இன்றைய அரசியல் நெருக்கடியும் அதன் பின்புலமும்”  என்ற பொருளில் யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் முருகையன் அரங்கில்  நடை பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் அரசியல் பொருளாதார ஆய்வுத்துறை அறிஞர் அகிலன் கதிர்காமர், புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனினிஸக் கட்சியின் செயலாளர் சி.கா. செந்தில்வேல், சட்டத்தரணி சோ. தேவராஜா ஆகியோர் உரையாற்றினர்.  (புகைப்படங்கள்)

._______________________________________________________________________

இலங்கை தொடர்பில் பாரிய தவறிழைத்து விட்டதாக ஒப்புக் கொண்ட   முகப்புத்தக நிறுவனம


இலங்கை தொடர்பில் தாங்கள் தவறிழைத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகப்புத்தக நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.Richard alan   லண்டனில் நடைபெற்ற போலிச் செய்திகள் தொடர்பிலான சர்வதேச விசாரணை ஒன்றின் போது, முகப்புத்தக நிறுவனத்தின் கொள்கை தீர்வு விவகாரங்களுக்குப் பொறுப்பான துணைத் தலைவர் ரிச்சர்ட் அலன் இந்த தவறினை ஒப்புக் கொண்டுள்ளார்.   இலங்கையில் இனவாதத்தை தூண்டும் விதமான முகப்புத்தக பதிவுகளை நீக்காதது தங்களது நிறுவன நியதிகளுக்கு முரணான ஒரு பாரதூரமான தவறாகும் என அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இலங்கையில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சிங்கப்பூரின் பாராளுமன்ற உறுப்பினர் எட்வின் தொங் கேள்வி எழுப்பியிருந்தார்.   சிங்களத்தில் பரவிய இனவாதத்தை தூண்டும் முகப்புத்தக பதிவுகளின் அடிப்படையிலேயே முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். (மேலும்)  29. 11.18

._______________________________________________________________________

கரைச்சி பிரதேச சபை அமர்வில் பொலீஸார்

கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வில் பொலீஸார் வரவழைக்கப்பட்டு வந்த வேகத்தில் திருப்பி  அனுப்பபட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.Karaichi -police     இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்று(28) கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வு இடம்பெற்றது. இதன் போது ஆதனவரி பற்றி உரையாடிய போது எதிர்தரப்பு உறுப்பினர் ஒருவர்  பசுமை பூங்காவில் பிரதேச சபைக்கு சொந்மான பசுமைபூங்கா பிரதேசத்தில் கேள்வி கோரல் எதுவுமின்றி தனிநபர் ஒருவருக்கு  வியாபார நிலையம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.  சட்ட நடைமுறைகள் எதுவும் பின்பற்றாது இவ்வாறு வியாபார நிலையங்கள் வழங்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். இதன் போது குறுக்கிட்ட தவிசாளர் விசேட அமர்வில் இது  பற்றி பேச முடியாது என்றார். ஆனால் மறுப்புத் தெரிவித்த எதிர்தரப்பு உறுப்பினர் தனக்கு இந்த விடயம் தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என்றார்.   (மேலும்)  29. 11.18

._______________________________________________________________________

மீனவர்களின் வருமானத்தை வரியிலிருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை

மீன்பிடித் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தMahinda rajaுரித தீர்வை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.    பிரதமருக்கும், மீனவ சங்கத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (27) மாலை பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்து மீன்பிடிச் சங்கங்களின் பிரதிநிதிகளும் துறைசார் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா, அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.  உற்பத்திச் செலவினம் அதிகரித்துள்ளமை, உற்பத்திக்கான விலையைப் பெற்றுக்கொள்ளுதல், மீன்பிடி உபகரணங்கள், பைபர் கிளாஸ் படகு, என்பவற்றின் விலை துறைமுகங்கள் மற்றும் களப்புக்களை அபிவிருத்தி செய்தல் போன்ற பல விடயங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.      (மேலும்)  29. 11.18

._______________________________________________________________________

 15 சதவீத பாடசாலைகளில்  டெங்கு நோய் பரவுவதற்கான சூழ்நிலை

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் 15 சதவீதமானவற்றில் டெங்கு நோய் பரவுவதற்கான சூழ்நிலை இருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் மாதத்தில் சாதாரணதர பரீட்சைகள் இடம்பெறவுள்ள நிலையில், டெங்கு நுளம்புகள் உருவாகும் சாத்தியம் உள்ள பாடசாலைகளின் சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய பாடசாலை பிரதானிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு விசேட சுற்றுநிரூபம் ஒன்றின் மூலம் மாகாண,மாவட்ட மற்றும் பிரதேச சுகாதார அதிகாரிகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 42ஆயிரத்து 663 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 70 சதவீத வீழ்ச்சியென தெரிவிக்க்பட்டுள்ளது.இதேவேளை, திருகோணமலையில் இந்த வருடத்தில் இது வரையான காலப்பகுதியில் 950 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த மாதத்தில் மாத்திரம் 25 டெங்கு நோயாளர்கள் திருகோணமலை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட 950 பேரில் ஒருவர் மாத்திரமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன விளக்கமறியலில்

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை எதிர்வரும் டிசம்பர் 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார். 2008, 2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்து நீமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இரண்டு தடவைகள் உத்தரவிட்டிருந்தன. இதனையடுத்து இன்று காலை நீதிமன்றில் ஆஜரான அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

._______________________________________________________________________

மகிந்த: முன்யோசனையற்ற சட்டவிரோத நடவடிக்கை

                                         எஸ்.ஐ. கீதபொன்கலன்

2014ல் உருவான தேர்தல் வரைபடம் ராஜபக்ஸவும் அவரது கட்சியும் ஸ்ரீலங்கா வாக்காளர்களிடையே குறிப்பாக சிறுபான்மைக் குழுக்களிடையே புகழை இழந்து வருவதாக அடையMaithree-Mahindaாளம் காட்டியது. 2014ல் நடைபெற்ற மாகாணசபை தேர்தல்கள் - உதாரணமாக தெற்கு, மேற்கு மற்றும் ஊவா மாகாண சபை தேர்தல்கள் - பொதுசன ஐக்கிய முன்னணியின் (யுபிஎப்ஏ) வாக்கு வங்கியில் சீரான தேய்வு ஏற்பட்டிருப்பதை எடுத்துக் காட்டியது. எடுத்துக்காட்டாக ஊவா மாகாணசபை தேர்தல்களைத் தொடர்ந்து ‘ஊவா மாகாணசபை தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் போட்டிக்கான அதன் தாக்கங்கள்’ என்கிற கட்டுரை மூலம் நான் சுட்டிக்காட்டியிருந்தது “தற்போது பதவியில் உள்ள ஜனாதிபதி மூன்றாவது முறையும் வெற்றி பெறும் வாய்ப்பு ஆரம்பத்தில் போட்டியிட்டதைப் போல இலகுவாக இருக்காது என்பதை ஊவா உறுதிப்படுத்தியுள்ளது” என்று. அரசாங்கத்தின் அனைத்து வளங்களைப் பயன்படுத்தியும் ராஜபக்ஸவும் மற்றும் அவரது ஆட்களும் அதைப்பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். எச்சரிக்கை அறிக்கைகள் முறையாகப் புரிந்துகொள்ளப்பட்டு மற்றும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தால்;, ராஜபக்ஸ அவரது இரண்டாவது பதவிக்காலத்தில் எஞ்சியிருந்த இரண்டு வருடங்களையும் பயன்படுத்தி அவரது புகழை மங்கச் செய்திருந்த அந்தப் பிரச்சினைகளை தீர்த்துவிட்டு பின்னர் தேர்தலை நடத்தியிருக்கலாம்   (மேலும்)  28. 11.18

._______________________________________________________________________

அமரர் எஸ்.பொ. அங்கம் - 03

புலம்பெயர்ந்து  வாழ்ந்தாலும்  வேர்  அங்கும்  வாழ்வு இங்குமாக  இலக்கியத்தாகம்  தணிக்க  முயன்றவர்

    முருகபூபதி


பொன்னுத்துரை  நைஜீரியாவிலிருந்து  இலங்கை   திரும்பியதும் அடுத்து   என்ன  செய்வது...?  என  யோசித்தவாறு  தமிழ்நாட்டுக்கும் சென்று  திரும்பினார்.  கொழும்பிலிருந்தespo6ு  மீண்டும்  தமது  இலக்கிய தாகம்  தணிக்க  நண்பர்களைத்தேடினார்.   அவரது  நீண்ட  கால  நண்பர்  வீரகேசரி வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான   ஆசிரியர்  பொன். ராஜகோபாலிடம் சென்று   முருகபூபதியைப்பற்றி  விசாரித்திருக்கிறார்.   ஏற்கனவே 1985 இல்   அவர்  வந்தபொழுது  எடுத்த  ஒளிப்படத்தின் பிரதியைக்கொடுப்பதற்காகவும்   மீண்டும்  கொழும்பில் இலக்கியவாதிகளை  சந்திப்பதற்கான  தொடர்பாடலை   உருவாக்கவும் அங்கு    சென்றவருக்கு    முருகபூபதி   கிடைக்கவில்லை. அவுஸ்திரேலியா    முகவரிதான்    கிடைத்தது. எஸ்.பொ.வின்    மூத்த  புதல்வன்  மருத்துவ  கலாநிதி  அநுர.  அவர் முன்னாள்   உதவி  அரசாங்க  அதிபர்  மோனகுருசாமியின்  புதல்வியை   மணம்  முடித்து  சிட்னியில்  குடியேறியிருந்தார். அவரிடம்  புறப்பட்டு  வந்த  எஸ்.பொ.  1989  ஜனவரி  மாதம் 19 ஆம் திகதி   மெல்பனிலிருக்கும்  முருகபூபதிக்கு  கடிதம்   எழுதுகிறார்.       (மேலும்)  28. 11.18

._______________________________________________________________________

கடமைகளை பொறுப்பேற்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை

ஆளுநர் றெஜினோல்ட் குரே

கஸ்டப்பட்ட பிரதேசங்களுக்கு மாற்றம் வழங்கப்பட்டு இதுவரை கடமைகreginold-281018ளை பொறுப்பேற்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரே உத்தரவிட்டுள்ளார்.  துணுக்காய் மற்றும் கல்வி வலயத்திற்பட்ட அதிபர்களுடனான இன்றய (02.11.2018) சந்திப்பின்போது அதிபர்களினால் ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இந்த உத்தரவினை அதிபர்கள் மத்தியிலேயே ஆளுநர் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார்  ஆகியோருக்கு விடுத்தார். துணுக்காய் கல்வி வலயத்திற்கு 270 ஆசிரியர்கள் தேவையாக இருக்கின்றது. 31 நிரந்தர அதிபர்கள் இல்லாத பாடசாலைகள் இயங்குகின்றன. இங்கு 8202 மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என வலயக்கல்விப் பணிப்பாளர் பி.ரவிச்சந்திரன் ஆளுநரிடம் தெரிவித்தார். இந்த நிலையில் கல்வி அமைச்சினால் கடந்த ஆண்டு 36 ஆசிரியர்களுக்கு துணுக்காய் கல்வி வலயத்திற்கு மாற்றம் வழங்கப்பட்ட போதும் 6 பேர் மட்டுமே கடமைகளை பொறுப்பேற்று இருந்தனர். எஞ்சியவர்கள் கடமைகளை பொறுப்பேற்காது இருகின்றனர். (மேலும்)  28. 11.18

._______________________________________________________________________

ரணிலையும் மகிந்தவையும் நாங்கள் நம்பவில்லை -  தர்மலிங்கம் சித்தார்த்தன்,

ந.லெப்ரின்ராஜ் 

ஜனநாயக ரீதியாக இருந்த அரசாங்கத்தை பலாத்காரமாக நீக்கிவிட்டு புதியதொரு அரசாங்கம் பலாத்காரமாக உருவாக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனநாயகம் மீறsithartharப்படுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரணில் விக்கிரமசிங்கவையோ மகிந்த ராஜபக்சவையோ நாங்கள் நம்பவில்லை. இவ்விருவரும் தமிழ் மக்களுக்கு நல்லதை செய்வார்கள் என்று நாங்கள் நம்பவில்லை அத்துடன் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நாசகார செயலை எதிர்க்காமல் பார்த்துக் கொண்டிருப்போமேயானால் சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய ஆபத்தான சூழலை உருவாக்கிவிடும் என்றும் தெரிவித்தார்.
 நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை நாட்டுக்கு மிகப் பெரிய பின்னடைவை உருவாக்கியிருப்பதுடன், ஜனநாயகத்துக்கு ஏற்பட்டிருக்கின்ற மிகப்பெரிய சவாலாகும். பலாத்காரமாக ஒரு அரசாங்கத்தை தூக்கி எறிந்தது போன்றதொரு நிலைப்பாடுதான் தென்படுகின்றது. யார் ஆழப்போகிறார்? யார் பிரதமராகப் போகிறார் என்பதை விட யாராக இருந்தாலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இந்த அசாதாரண நிலைக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகின்றோம். ஆனால் அது நடக்குமா? என்ற நிலைமை தொடர்ந்தும் கேள்வியாகவே இருந்துவருவது கவலைக்குரிய விடயமாகும்.  (மேலும்)  28. 11.18

._______________________________________________________________________

வவுனியாநகரசபையின் குழுக்களிலிருந்து கூட்டமைப்பு இராஜினாமா செய்ய முடிவு   


வவுனியா நகரசபையின் உப குழுக்களிலிருந்து  தமிழ் தேசியக் கூட்டமைப்பு  இராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக நகரசபை உறுப்பினர் லக்சனா நாகராஜன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது,  வவுனியா நகரசபையினால் மக்களுக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் முனைப்பு காட்டாத நிலையில் தொடர்ந்தும் மக்கள் ஆதரவை அதிகமாக பெற்ற உறுப்பினர்களை கொண்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கி வரமுடியாது. உள்ளுராட்சி மன்ற விதிகளுக்கு அமைய உப குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நகர அபிவிருத்தி மற்றும் மக்களின் வேலைத்திட்டங்களுக்கு இடையூறாக இருக்க கூடாது என்ற காரணத்தின் அடிப்படையில் மக்கள் வாக்குகளை பெற்று வெற்றி பெறாத தலைமைக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்திருந்தோம்.   மக்கள் செல்வாக்கினை இழந்து கூட்டாட்சியின் மூலம் ஆட்சியை பிடித்தவர்கள் தமது கருத்துக்களையும் தமது கட்சி சார்ந்தவர்களின் கருத்துக்களையுமே முன்னிலைப்படுத்தி வரும் நிலையில் பெயரளவிலேயே குறித்த குழுவில் நாம் பங்கேற்று வர வேண்டிய நிலை காணப்படுகின்றது.

._______________________________________________________________________

சுங்கப்பகுதிக்கு அழுத்தம் கொடுத்ததான செய்தியை நிதி அமைச்சு நிராகரிப்பு

சட்டவிரோதமாக டொலர்களை நாட்டிலிருந்து வெளிநாட்டுக்குக் கொண்டு செல்வதற்கு முயற்சித்த நபரை விடுவிப்பதற்கு நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் மஹிந்த ராஜபக்srilanka customsஷவினால், இலங்கை சுங்கத்திற்கு அழுத்தம் என்ற ரீதியில் இணையத்தளத்திலும் ஊடகங்களிலும் வெளியான செய்தி தொடர்பில் நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.   இதுதொடர்பாக நிதி மற்றும் பொருளாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையிலிருந்து வெளிநாடு சென்ற வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து 53,455 அமெரிக்க டொலரகள், இலங்கை சுங்க அதிகாரிகளால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் கைப்பற்றப்பட்டது. ஈரானிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் செயற்படுத்தப்படும் உமா ஓயா அபிவிருத்தித் திட்டத்தில் சேவையாற்றும் ஈரானைச் சேர்ந்த ஒருவர் தனது மாதாந்த சம்பளத்தை இவ்வாறு கொண்டுசெல்ல முயற்சித்த வேளையிலேயே கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப்பிரிவினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.   (மேலும்)  28. 11.18

._______________________________________________________________________

கொழும்பில் கொலை செய்யப்பட்ட மலையக இளைஞன்

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த பத்தனை, திம்புள்ள கீழ்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த குமார் டிக்ஷன் என்ற 21 வயதுடைய இளைஞனின் சடலம் இன்று (27) அதிகாலை 4 மணியளவில் திம்புள்ள தோட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது.  கொழும்பில் பழக்கடை ஒன்றில் தொழில் புரிந்து வந்த நிலையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பில் மாறியதையடுத்து, இவர் கூரிய ஆயுதங்களால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் தொழில் புரியும் மலையக இளைஞர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் எனவும், இவ்வாறானதொரு சம்பவம் இனிமேல் மலையக இளைஞர்களுக்கு ஏற்படக்கூடாது என திம்புள்ள கீழ்பிரிவு தோட்ட மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.  உயிரிழந்த குறித்த இளைஞன் தனது வீட்டின் மூன்றாவது பிள்ளை எனவும், இவரின் தந்தை சமீபத்தில் காலமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  இவ்வாறு உயிரிழந்த இளைஞனின் இறுதி கிரியைகள் நாளை (28) மதியம் திம்புள்ள கீழ்பிரிவு தோட்டத்தில் இடம்பெறவுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்னர்.

._______________________________________________________________________

பாராளுமன்றம் மீண்டும் 29 ஆம் திகதி கூடும்

பாராளுமன்றம் மீண்டும் நவம்பர் 29 ஆம் திகதி காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (27) பிற்பகல் 1 மணி அளவில் கூடியது.  பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. பாராளுமன்றத்திற்கு வருகை தரும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலயே பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.  இதேவேளை, ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்து பாராளுமன்ற அமர்வினை பகிஷ்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைக்க முடியாத நிலை

பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் கையொப்பமிட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பsl parlimentட்டுள்ள மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று குறித்து கருத்து வெளியிட முடியாதென சட்டத்தரணி பிரதீபா மகாநாம தெரிவித்துள்ளார்.  குறித்த மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர் அர்ஜூன ஒபேசேகர தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  இதன்போது குறித்த மனுவை எதிர்வரும் 30 ஆம் திகதியும், டிசம்பர் 3 ஆம் திகதியும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், அவரது நியமனத்தை வலுவற்றதாக மாற்றும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.  இவ்வாறான வழக்கொன்று நீதிமன்றதில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்ற போது, அது குறித்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டுவர முடியாதென சட்டத்தரணி பிரதீபா மஹநாம குறிப்பிட்டுள்ளார்.

._______________________________________________________________________

அதிகாரப்போட்டிகள்: நாடு எங்கே போகிறது?

 -     கருணாகரன்

பாராளுமன்றம் கலைக்கப்படுமா இல்லை தொடருமா?    srisena cartoon
ஒழுங்கற்ற நிலையில் இழுபட்டுக் கொண்டிருக்கும் பாராளுமன்ற நடவடிக்கைகளைத் தொடர்வது பற்றிச் சபாநாயகர் என்ன முடிவை எடுக்கப்போகிறார்? ஜனாதிபதியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி அமையப்போகிறது?   தற்போதிருப்பதைப்போன்ற சூழல் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்? அப்படி நீடித்தால் நாட்டின் எதிர்காலம் எப்படி அமையும்?   (இப்போது இந்த உறுதியற்ற ஆட்சிச் சூழலைப் பயன்படுத்தி மது விற்பனை நிலையங்களுக்கான அனுமதி, மணல், கல், கிறவல் அகழ்வுக்கான அனுமதிகள், பெறுமதிமிக்க அரச காணிகளுக்கான அனுமதி, வேலை ஒப்பந்தங்களுக்கான அனுமதி போன்றவற்றைச் செல்வாக்குள்ள வட்டாரங்கள் கையகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. சட்டத்துக்குப் புறம்பான காரியங்களை சட்டபூர்வமாக – விதிமுறையின்படி – செய்கின்றன. இது நாட்டைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கும்)     (மேலும்)  27. 11.18

._______________________________________________________________________

இன்று நவம்பர் 26 ஆம் திகதி "எஸ்.பொ." நினவுதினம்:

சரித்திரத்தின்  நித்திய  உபாசகன்  எஸ்.பொன்னுத்துரையின்  சுவாசமே எழுதுதல்தான்!

ஆறுதசாப்த  காலத்தையும்  கடந்து  எழுத்தூழியத்தில்  தவமிருந்த  எஸ்.பொ.

அங்கம் -02

                                                                                                      முருகபூபதி

பொதுவாக    எழுத்தாளர்களின்  மனைவிமார்  தமது   கணவரின் கலை  - இலக்கிய   பொதுவாழ்வில்   அந்நியப்பட்டிருப்பவர்கள்.  ஆனால், பொன்னுத்துரையின்  மனைவி  -  மகாகவி   பாரதியின்  கூற்றுப்போன்று  - காதலொருவனைக்   கைப்பிடித்தே   அவன்  காரியம்   யாவிலும்   கைகொடுத்து   வாழ்ந்தவர்.  அவரது  பக்கபலம்  பொன்னுத்துரையின்  படைப்பு  இலக்கிய முயற்சியில்   எதுவித  அயற்சிக்கும்  இடம்கொடுக்கவில்லை. அதனால்தான்    பொன்னுத்துரை   சிறுகதை,    நாவல்,    நாடகம், கட்டுரை,    வாழ்க்கை   வரலாறு,   விமர்சனம்,   ஆய்வு,   மொழிபெயர்ப்பு, சுயசரிதை  முதலான  பல்துறைகளில்   தடம்   பதித்து  பல   நூல்களை  படைக்க முடிந்திருக்கிறது   என்றும்  கருத  இடமுண்டு.  அத்துடன்  சில நூல்களின்   தொகுப்பாசிரியராகவும்   தமது   பணி  தொடர்ந்திருப்பவர்.   பொன்னுத்துரை கிறிஸ்தவ கல்லூரியில் கற்றதனாலும் கிறிஸ்தவ பாடசாலையில் தொடக்கத்தில் பணியாற்றியதனாலும்தானோ  என்னவோ கிறிஸ்தவர்கள் தமது மதரீதியான சிந்தனையில் அடிக்கடி பயன்படுத்தும் ஊழியக்காரர் என்ற சொற்பதத்தை தமது வாழ்வில் அடிக்கடி பயன்படுத்திவந்திருக்கிறார்.
ஆனால்,  இவர் மதம் சார்ந்து அல்ல,  இலக்கியம் சார்ந்து தன்னை இலக்கிய  எழுத்தூழியக்காரன்  என்றே   குறிப்பிட்டு வந்தவர். 
  (மேலும்)  27. 11.18

._______________________________________________________________________


யாழ் வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கற்பித்தலுக்கு மேலதிகமாக  46 ஆசிரியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

 

யாழ் வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கற்பித்தலுக்கு மேலதிகமாக உள்ள ஆசிரியர்களுக்கு உடனடி மாற்றங்களை வழங்குமாறு ஆளுநர் பணித்திருந்தார். மேலதிகமாக கreginold 1ாணப்படும் ஆசிரியர்களை ஆசிரியர் பற்றாக்குறையாக காணப்படும் பாடசாலைகளுக்கு உடன் அமுலுக்குவரும் வகையில் மாற்றம் செய்யுமாறு ஆளுநர் விடுத்த உத்தரவிற்கு அமைய முதற்கட்டமாக 46 ஆசிரியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த வாரம் கல்வி அமைச்சுக்கு விஜயம் செய்த ஆளுநர் றெஜினோல்ட் குரே யாழ் வலய பாடசாலை அதிபர்களை அழைத்து கலந்துரையாடினார். இதன்போது அதிகளவான பாடசாலைகளில் தேவைக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து கஸ்டப் பிரதேச பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் குறைபாட்டை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் கல்வி அமைச்சின் செயலர் எஸ்.சத்தியசீலனுக்கு பணித்திருந்தார். அதற்கு அமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது.

._______________________________________________________________________

‘உண்டியல்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா

தர்காநகரைச் சேர்ந்த சுலைமா சமி இக்பால் எழுதிய ‘உண்டியல்’ சிறுகதundialை நூல் வெளியீட்டு விழா நேற்று (25) மாவனல்லை வீனஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.   இதன்போது விழிப்புலனற்றவர்களுக்கு ‘உண்டியல்’ சிறுகதைத் தொகுதியின் ஒளிப்பதிவு செய்யப்பட்ட இருவட்டுக்களும் வழங்கப்பட்டன.எங்கள் தேசம் மற்றும் ப்ரபோதய சஞ்சிகை ஆசிரியர் எம்.எச்.எம். ஹஸன் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில், பேராதனை பல்கலைக்கழக தமிழ்துறை  பேராசிரியர் துரை மனோகரன், ஊடகவியளாலர்களான ராமன், அமீர் ஹுஸைன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

._______________________________________________________________________

புலிகளின் சின்னங்கள்.கொடிகள் மற்றும் பாடல்களுக்கு தடை

மட்டக்களப்பில் மாவீரர் தின நினைவேந்தலில் விடுதலைப் புலிகளின் சltte ban in euின்னங்கள். கொடிகள் மற்றும் பாடல்கள் என்பன பாவிப்பதற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம்  தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.   மாவீரர் நினைவு தின அனுஷ்டிப்பின் போது விடுதலைப் புலிகளின் சின்னங்கள். கொடிகள் மற்றும் பாடல்கள் என்பன பாவிப்பதற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (26)  மாலை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர் கொக்கட்டிச் சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிமுன்மாரி, மாவீரர் துயிலும் இல்லத்தில்  நினைவு தினம் அனுஷ்டிக்க ஏற்பாடு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த மாவீரர் துயிலுமில்லம்  அரச காணியில் அமைந்திருப்பதாகவும்  அங்கு நினைவு கல் நாட்டுவதாகவும் விடுதலைப்  புலிகளின் கொடிகள், பாடல்கள்  பாவிக்க முனைந்துவருவதாகக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இந்த மாவீரர் அனுஷ;டிப்பை தடைசெய்யுமாறு கோரி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்; இன்று திங்கட்கிழமை பிற்பகல் பொலிஸார் வழக்க தாக்குதல் செய்தனர்.     (மேலும்)  27. 11.18

._______________________________________________________________________

NSB வங்கியின் முன்னாள் தலைவருக்கு சிறைத்தண்டனை

NSB வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு 5 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. த பினேன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே அவருக்கு இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மூன்று இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அபராதப் பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 2 வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.முன்னாள் பிரதம நீதியரசரான ஶ்ரீயானி பண்டார நாயக்கவின் கணவர் பிரதீப் காரியவசம் என்பது குறிப்பிடத்தக்கது

._______________________________________________________________________

மாவீரர் நாளுக்கு கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் தயாராகிறது

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் 2018 மாவீரர் நாளுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. நடந்துமுடிந்த போராட்டத்தில்  வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகmaveerar illamளின்  உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வருடந்தோறும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2009 யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 2016 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் அனுஸ்டிக்கப்பட்டது.  அதன் தொடர்ச்சியாக 2018 மாவீரர் நாள் ஏற்பாடுகள் ஒவ்வொரு துயிலுமில்லங்களிலும்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அவ்வாறே கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில்  அரசியல் கட்சி வேறுபாடுகளை கடந்த அனைத்து தரப்பினர்களும் இணைந்து மாவீரர் நாளுக்குரிய பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்தோடு எவ்வித தடைகளும்  நெருக்கடிகளும் இன்றி மாவீரர் நாள் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும்  அனைத்து தமிழ் மக்களையும் உணர்வுபபூர்வமாக இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் மாவீரர் பணிக்குழு செயலாளர் குமாரசிங்கம் அறிவித்துள்ளார்.

._______________________________________________________________________

ஏற்றுமதி வருமானம் 14 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

நடப்பாண்டின் முதல் பத்து மாத காலப்பகுதியில் ஏற்றுமதி வருமானமாக 14 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த வருட முடிவில் ஏற்றுமதி வருமானம் 17 தசம் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என்று தேசிய வர்த்தக ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் ரமால் ஜெயசிங்க தெரிவித்துள்ளார். இதே நிலைமை தொடருமேயானால், 2020 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி மூலமான வருமானம் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என திரு. ரமால் ஜெயசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

._______________________________________________________________________

நோய்க்கிருமிகளால் தாக்கப்பட்ட எறும்புகள் மற்ற எறும்புகளை விட்டு விலகி இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் பயங்கர நோய்க்கிருமerumpuிகளால் தாக்கப்பட்ட எறும்புகள், பிற எறும்புகளின் நலன் கருதி எறும்புப் புற்றுக்குள் வராமல் வெளியே தங்கி, மற்ற எறும்புகளை விட்டு விலகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு எளிதில் தொற்றக்கூடிய ஜலதோஷம் போன்ற தொற்றுகள் ஏற்பட்டால்கூட, பலர் மற்றவர்களுக்கு தொற்றிவிடும் என்னும் எண்ணம் கொஞ்சமுமின்றி பொது இடங்களில் நடமாடும் நிலையில், அறிவில் குறைந்த எறும்புகள் மனிதர்களைவிட நாகரீகமாக நடந்து கொள்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  அவர்கள் எறும்புகளிடம் கற்றுக் கொள்ளவேண்டும் போலிருக்கிறது. லாசன்னே பல்கலைக்கழகத்தில் நாதலி ஸ்டோய்மிட்  என்பவர் தலைமையில் ஒரு குழு நடத்திய ஆய்வு ஒன்றில், கரும்பு  தோட்ட எறும்புகள், நோய்த்தொற்று ஏற்படும்போது தங்கள் கூட்டத்தை விட்டு விலகியிருக்க வேண்டியது அவசியம் என்பதை புரிந்து கொண்டுள்ளதுபோல் தெரிகிறது.   (மேலும்)  27. 11.18

._______________________________________________________________________

எவன்காட் தொடக்கம் வஸீம் தாஜூதீன் கொலை வரை அனைத்தையும் அம்பலப்படுத்துவோம் - சம்பிக்க

எவன்காட் விவகாரம் தொடக்கம் வஸீம் தாஜூதீன் கொலை, ஊடகவிளலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை மற்றும்  ஊடகவியலாளர் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை போsambikka-ranavakka2ன்ற  சம்பவங்கள் வரையிலான அனைத்து குற்றசெயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை அறிந்துவைத்துள்ளதாகவும் சந்தர்ப்பம் வரும்போது உண்மை தகவல்களை மக்களுக்கு தெளிவுப்படுத்தபோவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அலரிமாளிகையில் இன்ற இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு  உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் ஊழல் மோசடிகளை விசாரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவை நியமிப்பதாக குறிப்பிட்டுள்ள விடயம் வரவேற்கத்தக்கது. ஆகவே இவ் விசாரணைகளுக்கு நாம் எவ்வித தடைகளையும் ஏற்படுத்த மாட்டோம். ஆனால் இந்த விசாரணைகள் அரசியல் பழிவாங்கல்களை அடிப்படையாக கொண்டு அமையக் கூடாது.மேலும் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ச்சியாக பிரதமர் வேடத்தை கலைத்து பெரும்பான்மைக்கு முன்னுரிமை கொடுத்து பிரச்சினைகளில் இருந்து விலகி செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

._______________________________________________________________________

கணவரை கழுத்தறுத்து கொலை செய்த மனைவி!! பதுளையில் பயங்கரம்!

பதுளையில் தனது கணவரை கழுத்துறுத்து கொலை செய்த பெண்ணொருவர் தலை மறைவாகியுள்ளார். 65 வயதுடைய பதுளை கனுவ பிரதேசத்தை ​சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கத்தியொன்றால் கழுத்து அறுக்கப்பட்டு வீட்டினுள் படுகாயத்துடன் இருந்த குறித்த நபர் பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.கொலையினை மேற்கொண்ட குறித்த பெண் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில் , சந்தேகநபரான குறித்த பெண்ணை தேடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

._______________________________________________________________________

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான மனுக்களை ஆராய ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் ஆயம் நியமனம்

நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி பத்திரத்தை சவாலுக்கு உட்படுத்தி முன்வைக்கப்பட்ட மனுக்களை விசாரிக்க 7 பேர் கொண்ட நீதியரசர்கள் ஆயம் நியமிக்கப்பட்டுள்ளது.பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலைமையில் இந்த நீதியரசர்கள் ஆயம் நியமிக்கப்பட்டுள்ளது.புவனெக அலுவிஹார, சிசிர டி ஆப்ரு, பிரியன்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்த்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோர் இந்த ஆயத்தில் உள்ளடங்குகின்றனர்.குறித்த வர்த்தமானி பத்திரத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் மனுக்களை தாக்கல் செய்தன இந்த மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4,5 மற்றும் 6 ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது.

._______________________________________________________________________

மக்கள் நலனுடன் தொடர்பில்லாத அதிகாரப் போராட்டம்

                                       எம்.எஸ்.எம் அயூப்

ராஜபக்ஸ ஆட்சியின் தலைவர்களுக்கு எதிராகச் சாட்டப்பட்ட உயர்மட்ட ஊழல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்கத் Sri-Lanka-Parliamentதயக்கம் காட்டியதன் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மற்றும் பதவி விலக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே தோன்றிய மோதல், ஜனாதிபதி  அதே ராஜபக்ஸக்களுடன் கூட்டுச் சேர்ந்ததுடன் முடிவுக்கு வந்தது பற்றிக் குறிப்பிடுவது சுவராஸ்யமானது.   சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் திருப்பங்கள் மற்றும் புதிய அரசியல் கூட்டணிகள் என்பன, நீங்கள் ராஜபக்ஸக்களுடன் இரகசிய ஒப்பந்தங்களைச் செய்ய முடியுமானால் அதையே என்னால் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என்று ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்குச் சொல்வதைப் போல உள்ளது. நாங்கள் எங்கள் முந்தைய பந்திகளில் விபரித்தபடி, முன்னைய ஆட்சியாளர்களர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பான விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி நடந்து கொண்ட விதம் ஜனாதிபதியை மனவருத்தத்துக்கு ஆளாக்கியதுடன் அவரைத் தற்காப்பான ஒரு முடிவினை எடுக்க நிர்ப்பந்தித்தார்கள் மற்றும் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அவரை அலட்சியப்படுத்தியதன் மூலம் அவரைத் தூண்டிவிட்டார்கள்.  (மேலும்)  26. 11.18

._______________________________________________________________________

சுற்றுச் சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்  காலாவதியான கழிவகற்றல் பொறிமுறை

 -    மு.தமிழ்ச்செல்வன்

கழிவுகளை கொண்டு வந்து திறந்தவெளியில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். அதனை நாய்களும் காகங்களும் கொண்டு வந்து காணிக்குள்ளும், கிணற்றுக்குள்ளும் போடுகின்றIMG_6485ன. இதனால் நாங்கள் நிறைய கஸ்ரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம், நாங்களும் பல தடவைகள் பிரதேச சபையினரிடம்  சொல்லியும் அவர்கள்  கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை என்றார் பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.  ஆனையிறவு உப்பளத்தைச் சேர்ந்த ஒரு உத்தியோகத்தர் சொன்னார் ஆனையிறவு பரந்தன்  பிரதேசங்கள் ஒரு கைத்தொழில் வலயமாக உருவாக்கப்படவுள்ளது ஆனால் உமையாள்புரத்தில் கரைச்சி பிரதேச சபையினரால் கழிவுகள் எந்த வித பொறுப்பும் இன்றி திறந்த வெளியில்  தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் எமது உப்பளத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இச் செயற்பாடு எதிர்காலத்தில் கைத்தொழில் வலயத்திற்கு தடையாகவும் இருக்கலாம் என்றார்  அவர்.     (மேலும்)  26. 11.18

._______________________________________________________________________

இன்று நவம்பர் 26 ஆம் திகதி "எஸ்.பொ." நினவுதினம்:

சரித்திரத்தின்  நித்திய  உபாசகன்  எஸ்.பொன்னுத்துரையின்  சுவாசமே எழுதுதல்தான்!

ஆறுதசாப்த  காலத்தையும்  கடந்து  எழுத்தூழியத்தில்  தவமிருந்த  எஸ்.பொ.

அங்கம் -01

                                                                                                      முருகபூபதி

இலங்கையின்  மூத்த  படைப்பாளி  எஸ்.பொ.  அவுஸ்திரேலியாவில் சிட்னியில்   கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி  மறைந்தார்.  இன்றுடன் அவர் மறைந்து நான்கespoு ஆண்டுகள் நிறைவாகியுள்ளது.  அன்னாரின் நினைவாக 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான் எழுதிய நீண்ட பதிவிலிருந்து சில பகுதிகளை இங்கு மீண்டும் நனவிடை தோய்கின்றேன்.   இந்த நனவிடை தோய்தல் என்ற சொற்பதத்தையும் அவர்தான் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்.   கடந்த  காலங்களில்  எனக்குத்தெரிந்த -  நான்  நட்புறவுடன்  பழகிய பல  படைப்பாளிகள்  சமூகப்பணியாளர்கள்  குறித்து எழுதிவந்திருக்கின்றேன்.  அவர்கள் வாழ்ந்த  காலத்திலும்  அதிலிருந்த   ஆழமான கணங்களிலும்   எனக்கேற்பட்ட அனுபவங்களையே   நினைவுப்பகிர்வாகவே  தொடர்ந்து  எழுதிவருகின்றேன். காலமும்  கணங்களும்  ஒவ்வொருவர்   வாழ்விலும்  தவிர்க்க முடியாதது.  ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. வின் நினைவுதினம் இன்றாகும்.    (மேலும்)  26. 11.18

._______________________________________________________________________

எந்த சூழ்நிலையிலும் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன்


பிரதமரை நியமித்தல், முன்னாள் பிரதமரை பதவியிலிருந்து நீக்கSRISENAியமை, பாராளுமன்றத்தை கலைத்தல் மற்றும் ஒத்திவைத்தல், அமைச்சரவையை கலைத்தமை போன்ற தன்னால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் சட்டபூர்வமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அரசியலமைப்பிற்கு முரணான எந்தவொரு நடவடிக்கையையும் தான் மேற்கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (25) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.2015 ஜனவரி 08 ஆம் திகதி இலங்கை மக்கள் தன்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் தூய்மையான அரச முகாமைத்துவத்திற்காகவேயாகும் என தெரிவித்த ஜனாதிபதி, அதனை கருத்திற்கொண்டு தான் மிகவும் அறவழியில் பயணத்தை மேற்கொண்டுள்ளபோதிலும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமித்து 03 மாதங்களாகும் போதே மத்திய வங்கி நிதி மோசடி இடம்பெற்றதன் காரணமாக அந்தப் பயணம் தோல்வியடைந்தது என்றும் தெரிவித்தார்.   (மேலும்)  26. 11.18

._______________________________________________________________________

மக்களை ஏமாற்றி தியாகி பட்டம் எடுப்பதை விட துரோகி பட்டம் மேலானது

- சதாசிவம் வியாழேந்திரன்

மக்களை ஏமாற்றி, கொலை செய்து தியாகி பட்டம் எடுப்பதை விட மக்களுக்காகப் பணியாற்றி துரோகி பட்டம் சூடிக்கொள்வதை மேலானதாக நினைப்பதாக கிழக்கு மாகாணviyalendran4 அபிவிருத்தி பிரதியமைச்சரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வருடகாலம் எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தனால் தமிழ் மக்களுக்காக எதனையும் பெற்றுக் கொள்ளாது ஏமாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார். மட்டக்களப்பு- இலுப்படிச்சேனை பிரதேசத்தில் புதிதாக விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.  இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திலே புனர்வாழ்வு என்ற அடிப்படையில் 11 ஆயிரத்து 900 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திலே 217 அரசியல் கைதிகளில் நூறு பேர் மாத்திரமே விடுதலை செய்யப்பட்டனர். எஞ்சிய 117 பேரையும் விடுதலை செய்வதற்காக எத்தனை ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் நடாத்தினோம். எதனையும் சாதிக்க முடியவில்லை.    (மேலும்)  26. 11.18

._______________________________________________________________________

படுகொலைகள் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடரும்- சிறிசேன

மகிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் படுகொலைகள் ஆள்கடத்தல்கள் போன்றவை குறித்த விசாரணைகளில் எந்த தலையீடும் இடம்பெறாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். வெளிநாட்டு செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.பொலிஸார் மற்றும் நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் எவரும் தலையிடமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றங்களிதும் பொலிஸாரினதும் சுதந்திரமான செயற்பாடு உறுதிசெய்யப்படும்  என அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான அரசியல் மாற்றங்கள் காரணமாக பல்வேறு வகையான கருத்துக்கள் எழக்கூடும் என தெரிவித்துள்ள சிறிசேன அவைமாறக்கூடாது என்பதே எனது கருத்து எனவும் தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் ஒப்புதல்


பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தனர். பெல்ஜியம் தலைநகர் பிரெஸ்ஸெல்ஸில் பbrexitிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது தொடர்பான சிறப்பு உச்சி மாநாடு  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க்,  ஐரோப்பிய ஆணைய தலைவர் ஜீன்-கிலாட் ஜங்கர் மற்றும் ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள 27 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் இறுதியில்,  பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்து அளித்த பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்துக்கு அனுமதி அளிப்பதென முடிவெடுக்கப்பட்டது. சிறப்பு மாநாட்டு கூட்டத்தில் பங்கேற்றதற்குப் பிறகு ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் வெளியிட்ட சுட்டுரைச் செய்தியில் தெரிவித்ததாவது:ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் பிரிட்டனின் வரைவு ஒப்பந்த உடன்படிக்கைக்கு 27 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மேலும் ஐரோப்பிய யூனியன்-பிரிட்டன் எதிர்கால உறவுக்கான அரசியல் பிரகடனத்துக்கும்  அவர்கள் தங்களது ஒப்புதலை அளித்துள்ளனர் என்று டொனால்ட் டஸ்க் அந்த சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.   (மேலும்)  26. 11.18

._______________________________________________________________________

வடிவேல் சுரேஷ் காவற்துறையில் முறைப்பாடு

தம் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பதுளை காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பசறை பிரதேச சபை கேட்போர்கூடத்தில் இன்று ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இடம்பெறவிருந்த நிலையில், சில தரப்புக்களால் தங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார். தாக்குதலை மேற்கொள்ள அவர்கள் ஆயுதங்கள் சகிதம் பிரதேச சபை கேட்போர் கூடத்தின் வளாகத்தில் தரித்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.இதனையடுத்து, செயற்குழு கூட்டத்தில் பங்குகொள்ளாமல் தாம் அங்கிருந்து வெளியேறியதாக அவர் தெரிவித்தார்.

._______________________________________________________________________

 ‘மைத்திரி- மஹிந்த பயணத்துக்கு எதிரான செய்திகளையே பத்திரிகைகள் வெளியிடுகின்றன’

இலங்கையில் வெளிவரும் நாளாந்த மற்றும் வாராந்த பத்திரிகைகள் மைத்திரி- மஹிந்த அரசாங்க பயணத்துக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதாக ஜனநாயக இடதுசாரி vasuமுன்னணி கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்  தலைமையகத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த பத்திரிகைகளின் தலையங்கங்கள் புதிய அரசாங்கத்துக்கு எதிரான வாதங்களைக் கொண்டிருப்பதாகவும் எனவே மைத்திரி- மஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக எழுத வேண்டாமென சகல ஊடகங்களிடமும் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.எனவே பத்திரிகைகள் எமக்குச் சார்பாக எழுத வேண்டாம். எமக்கு எதிர்ப்பு இல்லாத வகையில் எழுதுங்கள் என்றார்.

._______________________________________________________________________

பிரான்ஸ்: பெட்ரோல் விலையேற்றம்: தீவிரமானது போராட்டம்

பிரான்ஸில் வாகன எரிபொருள்களுக்கு அந்த நாட்டு அரசு வரிகளை உயர்த்தியுள்ளதற்கு  எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் "மஞ்சள் அங்கி' போராட்டம், சனிக்கிழமை தீவிரமடைந்தது. மஞ்சள் நிற மேலங்கி அணிந்து ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, தலைநகர் பாரீஸில் 3,000 போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.எனினும், தடையை மீறி முன்னேற போராட்டக்காரர்கள் முயன்றதையடுத்து இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. அதையடுத்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், நீரைப் பாய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை போலீஸார் அப்புறப்படுத்தியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

._______________________________________________________________________

சம்மந்தனின் தவறுகள்

- கருணாகரன்

(நேற்றைய தொடர்ச்சி)

(தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சம்மந்தனின் தவறுகள்)

 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அல்லது அனுசரணை மகிந்sampanthan photoதவுக்கும் தேவைப்படுகிறது. ரணிலுக்கும் தேவைப்படுகிறது. இதற்காக அவர்கள் எப்படியும் கூட்டமைப்பைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால், இரண்டு தரப்புகளும் கடந்த காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி நம்பிக்கையளிக்கக் கூடிய வகையிலும் மதிக்கத்தக்கதாகவும் நடந்ததில்லை. இந்த நெருக்கடிச் சூழலில் கூட தமது நலனைத் தவிர்த்து, (தங்களின் பதவிப் போட்டியைத் தவிர்த்து) நாட்டின் பிரச்சினைகள் குறித்தோ, தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் குறித்தோ சிந்திக்கவேயில்லை.  இந்த நிலையில் தமிழ்மக்களின் நிலைநின்று எந்த நிபந்தனையையும் (பேரத்தையும்) முன்வைக்காமல் சம்மந்தன் வாழாதிருக்கிறார். அதாவது அவை தமது நலனில் குறியாக உள்ளன. சம்மந்தனோ தன் மக்களின் நலனைக் குறித்து அந்தளவுக்கு அக்கறையோடிருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் அதையே முதன்மைப்படுத்திச் செயற்படுவார். 2.   கூட்டமைப்பு இதுவரையான வரலாற்றில் வடக்குக் கிழக்கு அரசியலையே மையப்படுத்தியது. இப்பொழுதும் அதையே செய்கிறது.     (மேலும்)  25. 11.18

._______________________________________________________________________

m

._______________________________________________________________________

கிளிநொச்சியில் சமகால அரசியல் கருத்தரங்கு

கிளிநொச்சி ஆய்வு, அறிவியல் கழகத்தின் ஏற்பாட்டில்  சமகால அரசியல் நெருக்கடிகள் பற்றிய கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி கூட்டுறவாளர் மணIMG_6569்டபத்தில் இன்று 24-11-2018 காலை பத்து மணிக்கு  ஊடகவியலாளர் கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற  இந்த நிகழ்வில்   தெற்கின் அதிகார மோதலும் தமிழர் தரப்பின் அணுகுமுறைகளும் எனும் தலைமையில் ஆய்வாளர், ஊடகவியலாளருமான யதீந்திராவும், நாடு எங்கே போகிறது? அரசியல் குழுப்பமும் அவிழ்க்கப்பட வேண்டிய முடிச்சுகளும் எனும் தலைப்பில்  முன்னாள் விரிவுரையாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான சிராஜ் மஸ்ஹூரும்  உரையாற்றினார்கள்.தொடர்ந்து  கலந்துரையாடல்களும் கலந்துகொண்டவர்களிள் கேள்விகளுக்கு பதில்களும் அளிக்கப்பட்டது.   (படங்கள் ) 25.11.18

._______________________________________________________________________

ரணிலுடன் வெற்றியளிக்காத அரசியல் பயணம்


ரணிலுடன் வெற்றியளிக்காத அரசியல் பயணம் எனும் நூலை எதிர்வரும் ஜனவரி மாதம் வௌியிடவுள்ளேன் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.slprasident   நேற்று (23) நடைபெற்ற தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபையின் வெள்ளி விழாக்காணும் ஜனாதிபதி விருது விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் இல்லாத என்னை அவர்களின் உரைகளின் ஊடாக விளையாட்டுப் பொருளாக்கியுள்ளதாகவும், எனது மகள் எழுதிய ‘ஜனாதிபதி தாத்தா’ எனும் நூல் பாராளுமன்றத்தில் பேசு பொருளாகியுள்ளது என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.ரணிலுடன் வெற்றியளிக்காத அரசியல் பயணம் எனும் நூலை வௌியிட உள்ளதாகவும், ஜனவரி மாதம் அதனை வாசிக்குமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.   (மேலும்)  25. 11.18

._______________________________________________________________________

மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை

மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக அரசாங்க தகவல் திணைக்களம் ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, மாவீரர் நினைவு தின கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என உணரும் வகையில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை என்பதையும் அரசு வலியுறுத்துகின்றது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

._______________________________________________________________________

 ரணில் விக்ரமசிங்க ஜனநாயகத்தின் போலி காவலாளி: அனுரகுமார திசாநாயக்க

நாட்டின் ஜனநாயகத்தை ஒட்டுமொத்தமாக அழித்த தலைவர் ரணில் விக்ரமசிங்க என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.AnuraKumara   சிங்கப்பூர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போதும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்கும் போதும் ரணில் விக்ரமசிங்க ஏன் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவில்லை எனவும் அனுரகுமார திசாநாயக்க கேள்வி எழுப்பினார்.  ரணில் விக்ரமசிங்க ஜனநாயகத்தின் போலி காவலாளி என தெரிவித்த அனுரகுமார, மூன்றரை வருட மோசமான வரலாற்றை மூடி மறைக்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டதாகவும் சுட்டிக்காட்டினார். இதேவேளை, ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் காணப்படும் வழக்கு தொடர்பிலும் அனுரகுமார திசாநாயக்க கருத்து தெரிவித்தார்.      இந்த மாத நடுப்பகுதியில் இருந்து பெப்ரவரி வரையிலான 3 மாத காலப்பகுதிக்குள் அதிகளவிலான வழக்குகள் வரவுள்ளன. பசிலுக்கு எதிராக இரண்டு வழக்குகள் வரவுள்ளன.      (மேலும்)  25. 11.18

._______________________________________________________________________

பன்னூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் ''விடியல்'' நூல் அறிமுக விழா

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய 'விடியல்' நூல் அறிமுக விழா 2018 டிசம்பர் 02 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மணRimza Book 13்டபத்தில் நடைபெறவுள்ளது. பூங்காவனம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் முன்னிலையில் பேராசிரியர் சபா. ஜெயராசா அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அமைச்சர் அல்ஹாஜ் ரிசாட் பதியுத்தீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார். அத்துடன் விசேட அதிதியாக முன்னாள் கடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அலுவல்கள் துறை பிரதி அமைச்சர் அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார். தொழிலதிபர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். அரூஸ் நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்.(மேலும்)  25. 11.18

._______________________________________________________________________

போலி நாணயத்தாள்களை பயன்படுத்திய இரு இளைஞர்கள் கைது

போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி பொருட்க் கொள்வனவு செய்து வந்த இரண்டு இளைஞர்கள் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.5000   மந்துவில் கிழக்கு கொடிகாமத்தை சேர்நத 19 வயது மற்றும் 21 வயதுடைய இருவரையே கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 1ம் திகதி சந்தை வீதி கொடிகாமத்தில் உள்ள சிறு வர்த்தக நிலையத்தில் 5000 ரூபாய் போலி நாணயத்தாளை கொடுத்து 500 ரூபாய்க்கு சிகரட் மற்றும் மீள்நிரப்பு அட்டை என்பவற்றை பெற்றுக் கொண்டு 4500 ரூபாய் மிகுதிப் பணத்தின் பெற்றுக் கொண்டு சென்றுள்ளனர். இதே 5000 ரூபாய்ப் பணத்தினை வர்த்தக நிலைய உரிமையாளர், மொத்த பொருட்க் கொள்வனவு நிலையமொன்றில் வழங்கிய போது அது போலி நாணயத்தாள் என்று தெரியவந்துள்ளது.   இது தொட‌ர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை இது போன்ற சம்பவம் ஒன்று 19ம் திகதி அன்று கொடிகாமம் எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.    ்.(மேலும்)  25. 11.18

._______________________________________________________________________

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ள ரவீந்திர விஜேகுணவர்தன

பாதுகாப்புச் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.raveendra.2  11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் சந்தேகத்துக்குரியவரான முன்னாள் லெப்டினன் கொமாண்டர் பிரசாத ஹெட்டியாராச்சி மறைந்திருப்பதற்கு ஆதரவளித்தமை குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொள்ளும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, எதிர்வரும் செவ்வாக்கிழமை முற்பகல் 10 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்கத்தின் கூட்டு கொள்ளை விசாரணை பிரிவில் முன்னலையாகுமாறு அவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி, பாதுகாப்பு படைகளின்  பிரதானி, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தபோதும், உத்தியோகபூர்வ பணியின் காணரமாக மெக்ஸிகோவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தமையிலான குறித்த தினத்தில் அவர் பிரசன்னமாகியிருக்கவில்லை.   (மேலும்)  25. 11.18

._______________________________________________________________________

gowsy

(விபரங்கட்கு)   25.11.18

._______________________________________________________________________

தாஜூதீன் படுகொலை விவகாரத்தின் பின்னணியில் இருப்பவர் யார்?

ராஜித  சேனாரத்ன

“அன்று ஸ்ரீ விக்ரமவை எஹலிய பொல வெள்ளையர்களுக்கு பாரம் கrajitha-senarathnaொடுத்ததைப் போன்று தான் ஜனாதிபதி என்னையையும் மஹிந்தவிற்கு பாரம் கொடுக்க நினைத்தார்” என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.   ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கான மக்களின் நீதிக் குரல் என்ற போராட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இன்று கண்டி நகரில் நடைபெற்றது.   இதில் கலந்து கொண்டே  பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.     இங்கு தொடர்ந்து உரையாற்றிய ராஜித சேனாரத்ன,“ரணிலுடனான அசாத்தியமான  அரசியலில்  பயணம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய புத்தகமொன்றை எழுதப் போவதாக தெரிவித்துள்ளார். நாங்களும் ஒரு புத்தகமொன்றை எழுதப் போகிறோம் 1815 காட்டிக் கொடுப்பை அடுத்து மிகப் பெரிய காட்டி கொடுப்பை பற்றி,     (மேலும்)  25. 11.18

._______________________________________________________________________

சம்மந்தனின் தவறுகள்

-    கருணாகரன்

இலங்கையில் ஆளும் தரப்புகளான ஐ.தே.கவுக்கும் சு.கவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் அதிகாரப் போட்டியானது முழு இலங்கையையும் நெருக்கடிச் சூழலுக்குள்sam-ranil-mahinda தள்ளியிருக்கிறது. உறுதிப்பாடுடைய அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாத நிலை அபாயகரமான சூழலாக நீடிக்கிறது. இது தானாகத் தணியக் கூடிய நிலைமைகள் இதுவரையிலும் காணப்படவில்லை. இதைத் தணிவிக்கும் பொதுத்தரப்பினரின் முயற்சிகள் எதுவும் தென்படவுமில்லை. யாரும் தெளிவான பதிலையோ பாதையையோ முன்வைத்ததாகவும் இல்லை. பதிலாக நாடு பெரும் குழப்பத்தில் விவாதக்களமாகியிருக்கிறது. நடந்து கொண்டிருக்கும் நெருக்கடி நிலையைக் குறித்து அவரவர் தத்தமது நிலைப்பாடு, மனப்போக்கு, நலன், விருப்பு வெறுப்புகளுக்கமைய வர்ணங்கள் பூசிய கருத்துகளை முன்னிறுத்துகின்றனர். நல்லனவற்றுக்கான நம்பிக்கைப் புள்ளிகளைக் காணவேயில்லை. இந்த நிலையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் திரு. சம்மந்தன் “எதிர்க்கட்சித்தலைவர்” என்ற பொறுப்பு மிக்க பாத்திரத்தைச் சரியாக வகித்திருக்க வேண்டும். அதைச் செய்திருக்கிறாரா? தன்னுடைய  பொறுப்பை நிறைவேற்றியிருக்கிறாரா? உரிய கடமைகளை இந்தச் சந்தர்ப்பத்தில் செய்துள்ளாரா? என்பதைப் பேச வேண்டியுள்ளது. (மேலும்)  24. 11.18

._______________________________________________________________________

சிறிலங்காவின் வரலாற்றில் பிராமண அடிச்சுவடு

பி.கே. பாலச்சந்திரன்

இன்று இலங்கைத் தீவில் அசல்  "சிறிலங்கன்" பிராமணர் இல்லை எனப் பொதுவாகப்  பேசப்படுகிறது. இந்துக் கோயில்களில் பூசகர்களாக  பணியாற்றுபவர்கள் இந்தியாவbrahminsில், குறிப்பாக தமிழ்நாட்டோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள்.கலாநிதி ஞானத் ஒபயசோரா,  பிரின்ஸ்ரன்  பல்கலைக் கழகத்தில்  (Princeton University )  ஒரு சமூக மானிடவியலாளராகப் பணிபுரிபவர்.  அவர் 2015 ஆம் ஆண்டு " பிராமணர்களின் குடிவருகையும் சிறிலங்காவில  இந்திய உயர்த்தட்டினர் எப்படி விதிவசத்தால் சூத்திரர்கள் ஆக்கப்பட்டார்கள்"  என்ற கட்டுரையை எழுதியிருந்தார். சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் தென்னிலங்கையில் 19 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பிராமணர்கள் இருந்ததற்கான  எந்தப் பதிவும் இல்லை.“ஆனால் பிராமண புரோகிதர்கள் எல்லாச் சிங்கள பவுத்த இராச்சியங்களில் இல்லாவிட்டாலும் பெரும்பாலான  இராச்சியங்களில் இருந்தார்கள் என்பதற்கு வலுவான  வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. பதினாறாம் நூற்றாண்டில் இருந்து ஊர் அறிவாளிகளால் எழுதப்பட்டு  கடந்த 10 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் தென்னிந்தியாவில் இருந்து பெருமளவிலான புலப்பெயர்ச்சி பற்றி மட்டுமல்ல பிராமணர்களது வருகை அவர்கள் குடியேறிய ஊர்கள் பற்றியும் குறிப்பிடுகின்றன.   (மேலும்)  24. 11.18

._______________________________________________________________________

தமிழ் கலை இலக்கிய அறிவுச்சூழலின் நிகழ்வுகளை பதிவுசெய்துவரும் அரங்கச்செயற்பாட்டாளர்  தமிழச்சி தங்கபாண்டியன்

மெல்பனில் எதிர்வரும் 25 ஆம் திகதி உரையாற்றுகிறார்.

                                                                                        முருகபூபதி

சுமதி என்னும் இயற்பெயரைக்கொண்டிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர். விருதுநகரிலpechcharavam் ஆரம்பக்கல்வியையும் மதுரையில் கல்லூரிப்படிப்பையும் நிறைவுசெய்துகொண்ட சுமதி,  இளம் வயதிலிருந்தே கலை , இலக்கிய ஆர்வலராகவும் சமூகச்செயற்பாட்டாளராகவும்  வளர்ந்தவர்.  கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாடகம், நடனம், ஆய்வு முதலான துறைகளில் ஈடுபாடுகொண்டிருந்தவர். தனக்கு தமிழச்சி என்ற புனைபெயரையும் சூட்டிக்கொண்டவர். சிறுகதைகளும் எழுதத் தொடங்கியிருக்கும் இவரது பாடல்கள்  திரைப்படங்களிலும் ஒலிக்கின்றன. சுமதி,  தமிழச்சி என்ற பெயருடன் எழுதத் தொடங்கியதும் இந்தப்பெயரையே  ஊடகங்களும்  அடையாளப்படுத்துகின்றன.  சென்னையில் ராணி மேரி கல்லூரிக்கு ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணி நிமித்தம் இடம்பெயர்ந்தவர்.  தான் பிறந்த  கிராமத்து மண்ணையும் மக்களையும் ஆழமாக  நேசித்துவருபவர்.  கட்டிடக்காட்டுக்குள் வாழத்தலைப்பட்டாலும், தான் வாழ்ந்த  கரிசல் காட்டின் மணத்தை தனது கவிதைகளில் தொடர்ந்து பரப்பிவருபவர். தமிழக இலக்கிய உலகில் நிரம்பவும் பேசப்படும் தமிழச்சி,  ஈழத்தமிழ் மக்கள் குறித்தும் கரிசனை கொண்டிருப்பவர். இவரது சில படைப்புகளில் ஈழத்தின் மீதான நேசமும் பதிவாகியிருக்கும்.    ,  (மேலும்)  24. 11.18

._______________________________________________________________________

கறுத்தக் கொழும்பான் சுவை!

ஜெ.சாந்தமூர்த்தி

ஒரு எழுத்து எழுதப்பட்டதன்றி பிறிதொருகாலத்தில், இடத்தில், ஒரு புதிய வாசகனுக்கு தரமான மகிழ்வூட்டி, வாழ்க்கை பற்றிய ஒரு புதிய புரிதலை ஏற்படுத்துமெனில் அது இலக்கshanthamoorthy1ியம் என்பது ஒரு எளியவிளக்கம்.இந்த வகையில், ஆசி.கந்தராஜாவின் "கறுத்தக் கொழும்பான்"என்ற புனைவுக் கட்டுரைத் தொகுப்பு எளிதாக தன்னை இலக்கியமாக நிறுவிக் கொள்கிறது. கறுத்தக் கொழும்பான் எல்லா வகையிலும் ஆசி.கந்தராஜா எழுதிய முட்டிக் கத்தரிக்காய்க்கு மூத்தது. உயிருள்ள எதுவும் உண்ணத் தகுந்ததே.எனினும் மனிதனின் மகத்துவம் ஆயிரமாயிரம் ருசிகளை, நாவின் சுவைகளை தினம் சலிப்பின்றி கண்டு பிடித்துக் கொண்டே இருத்தல். ஆனால்  சுவைகளின் பன்மைத்துவத்துக்கும், KFC போன்று உலகம் முழுக்க ஒரே சுவை என்ற நவீனஅத்வைதத்துக்கும் நடக்கும் போரில், பல பாரம்பரியசுவைகள் கரைந்து கொண்டிருக்கின்றன. ஒரு சுவை என்பது சிறிய கால அளவில்உருவாகி விடுவதல்ல. நீண்ட காலமாய் பழகிப் பழகி மீண்டும் மீண்டும் மெருகேற்றப் பட்டு மாறுதல்களை அடைந்து தெளிந்து மெல்ல வேர் பிடிப்பது.அழிவதும் அவ்வாறே.நாவின் சுவையாகத் தொடங்கினாலும், ஆசிரியர் சுவையின் பல்வேறு பரிமாணங்களை தொட்டு விரித்துக் கொண்டே செல்கிறார்.  ,  (மேலும்)  24. 11.18

._______________________________________________________________________

 புலிகளின் கொடி, சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த தடை

யாழ்ப்பாணம், கோப்பாயில் 512 ஆவது படைத் தலைமையகம் உள்ள காணltte ban in euிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் தடை விதித்ததுள்ளது.  எதிர்வரும் 27 ஆம் திகதி கோப்பாயில் நடைபெறவிருந்ந மாவீரர் நிகழ்வில் தடை செய்யப்பட் பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள், இலச்சினைகள் என்பவையும் பயன்படுத்த தடை உத்தரவை நீதிமன்று வழங்க வேண்டும் என கோப்பாய் பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றல் நேற்றுமுன்தினம் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.  அந்த மனு மீதான தீர்ப்பை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் இன்று (23) மாலை வழங்கினார்.

._______________________________________________________________________

நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த ஆளும் கட்சி

சபாநாயகருக்கும், நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் அவரால் boycottநியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள்.   எவ்வாறிருப்பினும், அவர்களின் பங்கேற்பு இன்றி, நாடாளுமன்ற தெரிவுக் குழு தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.   இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னர், கட்சி தலைவர்கள் கூடி நாடாளுமன்ற தெரிவு குழு தொடர்பில், இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.   இதற்கு அமைய இன்று கட்சித்தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு இடம்பெற்ற போதிலும், நாடாளுமன்றத் தெரிவுக் குழு விடயத்தில் கட்சித் தலைவர்கள் மத்தியில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.   இதனையடுத்து தாம் மேற்கொண்ட தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் வைத்து அறிவிப்பதாக சபநாயாகர் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார்.     (மேலும்)  24. 11.18

._______________________________________________________________________

பாராளுமன்றம் எதிர்வரும் 27 ஆம் திகதி பிற்பகல் 1 மணி மீண்டும் கூடும்


பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ் கூடியது.பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.  பாராளுமன்றத்திற்கு வருகை தரும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலயே பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். பாராளுமன்ற அமர்வு ஆரம்பமான போது, இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்க தனிக் கட்சி உறுப்பினர் என்ற வகையில் தனக்கு வாய்ப்பு ஒன்றை வழங்குமாறு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றில் சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.அதன் பின்பு, ஐக்கிய தேசிய முன்னணியில் 5 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 5 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தலா 1 உறுப்பினருமாக தெரிவிக் குழுவில் இடம்பெறுவர் என சபாநாயகர் பாராளுமன்றில் அறிவித்தார்.   (மேலும்)  24. 11.18

._______________________________________________________________________

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கொன்று வாபஸ் பெறப்பட்டது

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையgnaseraீட்டு வழக்கு ஒன்று இன்று சட்ட மா அதிபரால் மீளப்பெறப்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு மாலபே பிரதேசத்தில் உள்ள கல்வாரி கிறிஸ்துவ ஆலயமொன்றில் பலவந்தமாக நுழைந்து, சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியமைக்காக கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட்ட 13 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சந்தேகநபர்களை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்து விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபரால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், குறித்த வழக்கை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதில்லை என்றும், வழக்கை வாபஸ் பெறுவதாகவும் சட்டமா அதிபர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி சட்டமா அதிபரின் கோரிக்கையை ஏற்ற மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதிப்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

._______________________________________________________________________

இந்தியாவில் 98 ஆயிரத்து 408 இலங்கை அகதிகள்

இந்தியாவில் தற்போது 98 ஆயிரத்து 408 இலங்கை அகதிகள் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்களில் 62 ஆயிரம் பேர் தமிழ் நாட்டின் பல்வேறு முகாம்களில் வசித்து வருகின்றனர். அதேநேரம், 29 ஆயிரத்து 500 பேர் மலையகத்தில் இருந்து இந்தியாவிற்கு சென்று தமிழகத்தில் வசிக்கின்றவர்களாவர். அவர்களை ஈழ அகதிகள்  என்ற வகைப்படுத்தலுக்குள் கலக்க முடியாது என்றும் இந்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இந்தியாவில் வசிக்கின்ற அகதிகள் தொடர்பாக, 2017-2018ம் ஆண்டுகளுக்கான அறிக்கையை இந்திய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.

._______________________________________________________________________

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய நிகழ்வு - சன நெரிசலில் சிக்குண்டு 14 பேர் காயம்


வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றுவந்த நிகழ்வில் சன நெரிசலில் சிக்குண்டு 14 பேர் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்று வந்த ஏகாதச ருத்ர வேள்வியின் இறுதி நாள் நிகழ்வில் இலட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். உலக நன்மைக்காகவும் நாட்டில் நீடித்த அமைதியும் சமாதானம் நிலவவும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை ஏகாதச ருத்ர வேள்வி ஆரம்பமாகி நடைபெற்று வந்தது.  இன்றைய தினம் இறுதி தினம் என்ற காரணத்தினால் நாட்டின் பல பாகங்களிலும இருந்து இலட்சக்கணக்கான அடியார்கள் பங்குகொண்டிருந்தனர்.   ,  (மேலும்)  23. 11.18

._______________________________________________________________________

ல்.ரி.ரி.ஈ நினைவு தினங்களை இடைநிறுத்துமாறு கோரிக்கை

எல்.ரி.ரி.ஈ அமைப்பை விளம்பரப்படுத்தும் விதமான நினைவு தினங்களை இடைநிறுத்த உத்தரவு பிறப்பிக்குமாறு கோப்பாய் பொலிஸார், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.யாழ். பல்கலைகழக மாணவர்கள் மாவீரர் நினைவு தினம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து கோப்பாய் பொலிஸார் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.நேற்று (21) குறித்த கோரிக்கை சமர்பிக்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் உயரதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.குறித்த கோரிக்கை தொடர்பான தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

ஜேஆர் - எம்ஆர் - விளைவு

                                        கலாநிதி.அமீர் அலி

கடந்த சில வாரங்களாக ஸ்ரீலங்கா ஒரு இரட்டை நெருக்கடியை அனுபவித்து வருகிறது. ஒன்று அதன் அரசியலமைப்பினால் தூண்டிவிடப்பட்ட அதன் அரசியல் நெருக்கடMR1ி மற்றது அதன் அரசியல் காரணமாக தோற்றுவிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி. எவ்வாறாயினும் இந்த நெருக்கடிகள் முந்தைய இரண்டு ஜனாதிபதிகளான ஜேஆர் ஜெயவர்தனா (1978 - 89) மற்றும் மகிந்த ராஜபக்ஸ (2005 - 15) ஆகியோரினால் ஏற்படுத்தப்பட்ட கூட்டு விளைவு ஆகும். நான் அதனை ஜேஆர் - எம்ஆர் - விளைவு என அழைக்க விரும்புகிறேன். இந்த விளைவு தீவின் பெருமைமிக்க ஜனநாயக பாரம்பரியத்தை அழிப்பதோடு மற்றும் அதன் போராட்டம் நிறைந்த பொருளாதாரத்தையும் மற்றும் மக்களின் நலனையும் பலவீனப்படுத்துகிறது.  1977ல் நவ தாராளவாதத்தின் சிறப்பம்சமாக குறிப்பிடப்படும் ஜெயவர்தனாவும் (ஜேஆர்) மற்றும் அவரது ஜக்கிய தேசியக்கட்சியும் (ஐதேக), பிரதம மந்திரியாக ஜேஆர் வரும்வகையில் ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்கத் தக்கதான பூரண பெரும்பான்மையுடன் தேர்தல்களில் வெற்றிவாகை சூடிக்கொண்டன. 50.92 விகித மொத்த வாக்குகளுடன் பாராளுமன்றில் உள்ள 168 ஆசனங்களில் ஐதேக 140 ஆசனங்களை வெற்றி கொண்டது. உண்மையில் அது ஒரு தெளிவான ஆணை. எனினும் இந்த முடிவு ஜேஆருக்குத் திருப்தியளிக்கவில்லை,  (மேலும்)  22. 11.18

._______________________________________________________________________

கொலை செய்யப்பட்ட ‘சன்டே லீடர்’ ஆசிரியரின் மகள் ஜனாதிபதிக்குக் காட்டமான பகிரங்க கடிதம்

மொழி ஆக்கம் : வி. சிவலிங்கம்

சில தினங்களுக்கு முன்னர் குற்றவியல் உளவுத் திணைக்களப் பிரிவின் பlasanthaொலீஸ் அதிபர் நிஸான்த சில்வா அவர்கள் திடீரென நீர்கொழும்பு பொலீஸ் பிரிவிற்கு ஜனாதிபதியால் இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் இவ்வாறு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதற்கான காரணங்கள் பல வெளிவந்துள்ளன. பொலீஸ் அதிகாரி நிஸான்த சில்வா பல முக்கியமான குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார். உதாரணமாக ‘சன்டே லீடர்’ எனப்படும் ஆங்கில வார இதழின் ஆசிரியரான விக்ரமதுங்க அவர்களின் மரணம்,‘நேஷன்’ எனப்படும் இன்னொரு ஆங்கிலப் பத்திரிகையின் உதவி ஆசிரியர் ஹீத் நொயர் என்பவரைக் கடத்திக் கொலை செய்ய முயற்சித்தமை, உபாலி தென்னக்கோன், நமல் பெரேரா போன்ற முக்கியஸ்தர்கள் மீதான தாக்குதல்கள், கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் வாழ்ந்த 11 இளைஞர்கள் வெள்ளை வான்களில் பணத்திற்காகக் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை போன்ற பல முக்கிய குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளை சில்வா மேற்கொண்டு வந்தார். இப்பின்னணியில் அவரது இடமாற்றம் ஜனாதிபதி மைத்திரியின் உள் நோக்கங்கள் குறித்த பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இவை பத்திரிகையாளர் லஸந்த விக்ரமதுங்க அவர்களின் மகளின் பகிரங்க கடிதத்தில் விரிவாக தரப்பட்டுள்ளது. (மேலும்)  22. 11.18

._______________________________________________________________________

முல்லைத்தீவில் படையினரிடம் இருந்து ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்ப்பட்ட மூன்று முறிப்பு பகுதியில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் உபயோகிகப்பட்டு வந்த மக்களின் 59.8 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.20 ஆவது சிங்க படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் இந்திக்க விக்கிரமசிங்க, இந்த காணிகளுக்கான பத்திரங்களை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரனிடம் கையளித்துள்ளார்.இந்த காணி ஆவணங்களை மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்து அவர்கள் ஊடாக உரிய முறையில் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

அஞ்சலிக்குறிப்பு:

 கலைக்குடும்பத்தில்  பிறந்த ஆசிரியை நித்தியகலா கிருஷ்ணராம் (1963 - 2018)

                                                                                             முருகபூபதி

இலங்கையில் வடமேல் மாகாணத்தில் நீர்கொழும்பூர்,   மூவின மக்களும் செறிந்து வாழும் பிரதேசமாகும்.  அங்கு தமிழ்க்கத்தோலிக்க மக்கள் மத்தியில்  இந்து தமிழ் மகnithiyakala-1்களும் நீண்ட நெடுங்காலமாக வாழ்கின்றமையால் அவர்களுக்கென அங்கு ஆலயங்களும் சமூக அமைப்புகளும் ஒரு இந்துக் கல்லூரியும் இயங்குகின்றன.  நீர்கொழும்பூரின் பெயரையே இணைத்துக்கொண்டு கலை, இலக்கிய வாதியாகத்திகழ்ந்தவர் நீர்கொழும்பூர் முத்துலிங்கம். இவரது மருமகளும்  நீர் - விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் ஆசிரியையுமான சகோதரி திருமதி நித்தியகலா கிருஷ்ணராம் திடீரென மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். 1963 ஆம் ஆண்டில் எங்கள் ஊரில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் பயின்று, அங்கேயே ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கும் வேளையில் மறைந்திருக்கிறார். இவரை குழந்தைப்பராயத்திலிருந்து தெரிந்துவைத்திருந்தமையால் எனக்கு உடன்பிறவாத சகோதரியாகத் திகழ்ந்தவர். எப்பொழுதும் என்னை அண்ணா, அண்ணா என பாசம் பொங்க அழைக்கும் நித்தியகலாவின்  திடீர் மறைவு தந்திருக்கும் துயரத்தை கடந்துசெல்வதற்கு காலம் செல்லும்.  (மேலும்)  22. 11.18

._______________________________________________________________________

அரசியலமைப்பு திருத்தத்தின் பின்னணியில் கொலை திட்டம்

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் ஏற்படுத்தப்பட்ட தினத்தில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியினர் ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த தெரிவித்துள்ளார் 
பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்னதாக ஜனாதிபதி மரணித்தால், பிரதமர் ஜனாதிபதியாக பொறுப்பேற்று, 3 மாத காலத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  19 ஆவது திருத்தச் சட்டத்தின் குறித்த அமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடையும் வரை பிரதமர் ஜனாதிபதியாக பதவிவகிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஒன்றின் மூலம் ஜனாதிபதியாக முடியாத ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்கும் நோக்கிலேயே இந்த விடயம் உள்ளடக்கப்பட்டதாக சனத் நிஷாந்த குற்றம் சுமத்தியுள்ளார்.  இதேநேரம், 19 ஆவது திருத்தம் ஒரு போலி ஆவணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

._______________________________________________________________________

 ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சொல்ஹெய்ம் இராஜினாமா

ஐக்கிய நாடுகள் சபையின் நெறிமுறைகளுக்கு மாறாக பயணத் திட்டங்களeric solheimுக்கு அதிகசெலவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) இராஜினாமா செய்துள்ளார். இந்த அமைப்பின் தலைவராக பதவிவகித்து வந்த எரிக் சொல்ஹெய்ம் தனது அதிகாரபூர்வ பயணங்களுக்காக கிட்டத்தட்ட 5 இலட்சம் அமெரிக்க டொலர்கள் செலவிட்டமை கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம், தனது மேற்பார்வையில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கான பணத்தைத் தான் செலுத்தியுள்ளதாக எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எரிக் சொல்ஹெய்மின் இராஜினாமாவை ஐ.நா. பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டதாக ஐ.நா. பேச்சாளர் ஸ்டெப்னி டஜாரிக் (Stephane Dujarric) தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி கொலை சதிதிட்டம் - கைதான இலங்கையர் விடுதலை

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனை கொலை செய்வதற்கான சூழ்ச்சி தொடர்பில் மூன்று ஆண்டுகளுக்கும் அதிக காலம் சிறைத்தண்டனை அனுபவித்த இலங்கையரான லஹிரு மதுசங்க அந்நாட்டு நீதிமன்றத்தினால் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி கைது செய்யப்பட்ட மாலபே – வெவ வீதி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய குறித்த இலங்கையர், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வழக்கு விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது, குற்றச்சாட்டுக்கள் இல்லாத காரணத்தினால் அவர் மாலைத்தீவு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார்

._______________________________________________________________________

என்னை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு பாராளுமன்ற பெரும்பான்மையை நிரூபியுங்கள் - சபாநாயகர்.

பாராளுமன்றத்தில் தங்கள் பெரும்பான்மையை உரிய முறையில் நிருபிக்க முடியாத அரசியல் கட்சிகள் செய்தியாளர் மாநாடுகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும்  சபாநாயகரிற்கு எதிராக Karu-Jayasuriya1ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை அவதானி;க்க முடிகின்றது என சபாநாயகர் கருஜெயசூரியவின் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் நான்கு கட்சிகளை சேர்ந்த 122 உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு எழுத்தின் மூலம் சவால்விடுத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள  என தெரிவித்துள்ள சபாநாயகரின் ஊடக பிரிவு  பாராளுமன்ற பாரம்பரியத்திற்கு ஏற்ப பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தினை செவிமடுப்பது சபாநாயகரி;ன் தவிர்க்க முடியாத கடமை எனவும் குறிப்பிட்டுள்ளது.இதன் காரணமாக சபாநாயகரின்  நிலைப்பாட்டை பக்கச்சார்பானது என சித்தரித்து பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை எனவும் சபாநாயகரின் ஊடக பிரிவு  தெரிவித்துள்ளது.ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதை விட தற்போதைய அரசாங்கத்திற்கு பாராளுமன்றில்  பெரும்பான்மையுள்ளது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிப்பது விவேகமுள்ள செயலாக அமையும் எனவும் சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

._______________________________________________________________________

பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு 7 பேரை பெயரிட்டுள்ளதாக தினேஸ் குணவர்தன சபாநாயகருக்கு அறிவிப்பு

 பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்திய பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்காக தாம் 7 உறுப்பினர்களைப் பெயரிட்டுள்ளதாக சபை முதல்வர் தினேஸ் குணவர்தன, சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.   தினேஸ் குணவர்தன, எஸ்.பி. திசாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, விமல் வீரவன்ச, திலங்க சுமதிபால, உதய கம்மன்பில ஆகியோரது பெயர்களே தெரிவுக்குழுவிற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை அடுத்தும் 2015 ஜனாதிபதித் தேர்தலை அடுத்தும் சிறுபான்மை அரசாங்கங்கள் காணப்பட்டபோது தெரிவுக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இருந்து நியமிக்கப்பட்டதாக தினேஸ் குணவர்தன சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆளும் கட்சி என்ற வகையில், தாம் பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெயரிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஐ விட அதிகரிக்க வேண்டும் என தீர்மானிக்கப்படும் பட்சத்தில், அதனை அறிவிக்குமாறும் அவ்வாறு அறிவிக்கப்பட்டால் மேலதிக உறுப்பினர்களைப் பெயரிட முடியும் எனவும் தினேஸ் குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

._______________________________________________________________________

 தமிழ்த்தேசியத் தலைமைக்கு

- நடேசன்

ரோம இராச்சியம் ஒரு நாளில் கட்டப்படவில்லை என்பார்கள். TAMIL SINHAL POLITICSஅதேபோல் ஜனநாயக அரசியலில் சிறிய விடயங்களும் பல காலம் விவாதிக்கப்படும். சில செய்து முடிக்கப்படும். பல செய்வதற்கு மேலும் காலமெடுக்கும். இது ஜனநாயகத்தின் முக்கிய பலம். அதே நேரத்தில் பலவீனமும் கூட . இதை நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது.  சர்வாதிகாரிகளால் மட்டுமே நினைத்த காரியத்தை விரைவாக முடிக்க முடியும்.அவர்களிடமிருந்து விலகிவிடவே நாம் விரும்புகிறோம். இலங்கையில் எந்தச் சிங்கள அரசியல்வாதிகள் பதவிக்கு வந்தாலும் தமிழர் விடயத்தில் சாதகமாக நடக்கமுடியாது. அந்த நிலையில் ரனில் விக்கிரசிங்க, மகிந்த இராஜபக்ச போன்ற அரசியல்வாதிகளால் இந்தியா மற்றும் வெளிநாட்டு அழுத்தத்திற்கு இசைந்து தமிழர்களுக்கு சாதகமாக வாக்குறுதி அளித்தாலும் எதுவும் பெரிதாக செய்ய முடியாது. இது அவர்கள் குற்றமல்ல. அடுத்த தேர்தலில் அவர்களுக்கு எதிராக மற்றவர்கள் பிரசாரம் செய்யக் காத்திருப்பார்கள். பண்டா – செல்வா ஒப்பந்தத்தை ஜே ஆர் ஜெயவர்த்தனா எதிர்த்ததும், சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் தீர்வுப்பொதியை ரனில் விக்கிரமசிங்கா எதிர்த்ததும் மறக்க முடியுமா?     (மேலும்)  21. 11.18

._______________________________________________________________________

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் முறைப்பாடு

பாராளுமன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பsl lawyers protestில் வழக்கறிஞர்கள் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக வழக்கறிஞர் சுனில் வடகல தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கான வழக்கறிஞர்கள் என்ற பெயரில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த தினங்களில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பில் இதுவரையில் யாரும் முறைப்பாடு செய்யவில்லை எனவும் அவ்வாறு முறைபாடு ஒன்று செய்யப்படுமா என வழக்கறிஞர்கள் என்ற ரீதியில் எதிர்ப்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வி நிலமைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பும் ஒருவர் தொடர்பில் நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் சபாநாயகரின் கதிரைக்கு நீர் ஊற்றியமை தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

 ஆட்ட விதிகள் ' உறுதியாகப் பின்பற்றப்படாவிட்டால், மீறல்கள் மிக மோசமானவையாக இருக்கும்.

- கலாநிதி ஜெகான் பெரேரா

எவரும் எதிர்பார்க்காத முறையில் அக்டோபர் 26 மூண்ட அரசியல் நெருக்கடி இன்னமும் தொடருகிறது. இப்போது அது நான்காவது வாரத்திற்குள் பிரவேசிக்கின்றது. parlimet fight    பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கிவிட்டு அவரின் இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த எதிர்பாராத தீர்மானம் சந்தேகப்படாதிருந்த ஒரு நாட்டின் மீது பிரச்சினையைக் கட்டவிழ்த்துவிட்டது. ராஜபக்ச பிரதமர் என்ற வகையில் தனது புதிய பதவியை சட்டபூர்வமாகப் பொறுப்பேற்பதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபிக்க இயலாதவராக இருப்பதே இன்றுள்ள பிரச்சினையாகும். கடந்த இரு வாரங்களில் இரு சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் 122 பேர் புதிதாக நியயமிக்கப்பட்ட பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதுடன் அது தொடர்பான ஆவணங்களிலும் கைச்சாத்திட்டிருக்கிறார்கள். இரு சந்தர்ப்பங்களிலுமே ஜனாதிபதி சிறிசேன பிரேரணை தொடர்பில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் தவறானவை என்று காரணம் கூறி வாக்கெடுப்பின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க மறுத்திருக்கிறார்.      (மேலும்)  21. 11.18

._______________________________________________________________________

இளஞ்செழியன் மெய்ப்பாதுகாவலர் கொலை ; பிணையில் சென்றோருக்கு எதிராக ஆட்சேபனை மனு

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரா சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபilanjeliyanர் மூவரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் நேற்றுப் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், மன்றின் கட்டளையை மறு ஆய்வு செய்யவேண்டும் என அரச சட்டவாதி ஊடாக யாழ்ப்பாணம் பொலிஸார் ஆட்சேபனை விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவுள்ளனர்  “மேல் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் அவரது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக் கொல்லப்பட்டார். எனவே மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா? என்று விசாரணைகளை முன்னெடுக்கின்றோம். எனவே சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டால் விசாரணைகள் பாதிக்கப்படும்.   அத்துடன், பொலிஸ் உத்தியோகத்தர் கொலை தொடர்பான இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை” என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தமது ஆட்சேபனையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.  (மேலும்)  21. 11.18

._______________________________________________________________________

 வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்த த.தே.கூட்டமைப்பினர்...!

இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துள்ளனர். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், மற்றும் கொரியா உள்ளிட்ட 14 நாடுகளின் இராஜதந்திரிகளுடன், ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரேப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் இராஜதந்திரிகளும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர். சுமார் ஒரு மணித்தியாலம் அளவில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தற்போதைய அரசியல் முக்கியத்துவமிக்க பல விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பு குறித்து விளக்கமளிக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது ஊடக சந்திப்பொன்றை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

சி.வியின் கோரிக்கை நிராகரிப்பு

யாழ்ப்பாணக் குடாநாட்டில், கனேடியத் துணை உயர்ஸ்தானிகராலயம் ஒனcanada்றை ஆரம்பிக்குமாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நீண்டகாலமாக விடுத்துவந்த கோரிக்கையை, கனேடிய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது.   வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 3 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், கனடாவில் வசித்து வருகின்றனர். அவர்களது நன்மை கருதியும் வடக்கு மாகாணத்தில் வாழும் அவர்களது உறவுகளின் நன்மை கருதியும், யாழ்ப்பாணத்தில் கனேடியத் துணை உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை அமைக்க வேண்டுமென, முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நீண்டகாலமாக எழுத்துமூலம் கோரிக்கை விடுத்து வந்தார். இதையடுத்து, இந்த விடயம் தொடர்பில் கனேடிய  உயர்ஸ்தானிகராலயத்தால் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்நிலையில், இது தொடர்பில் அறிந்த சிலர், கனேடிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு தவறான புள்ளிவிவரத்தை வழங்கியுள்ளதாகவும் அதாவது, வடக்கு மாகாண மக்களில் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே, கனடாவில் வாழ்வதாக, அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.     (மேலும்)  21. 11.18

._______________________________________________________________________

ஐ.தே.க ஆர்ப்பாட்டங்களுக்கு தயாராகின்றது

தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக, ஐக்கிய ​தேசியக் கட்சி பல போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதற்கமைய கண்டி, களுத்துறை, கிரிபத்கொட ஆகிய பிரதேசங்களிலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.எதிர்வரும் சனிக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் 27, டிசம்பர் மாதம், 4 ஆம் திகதிகளிலும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தற்போதைய அரசியல் நிலமைத் தொடர்பில் மக்களைத் தெளிவுப்படுத்துவதே இதன் நோக்கமென்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

._______________________________________________________________________

கஷோகி படுகொலை விவகாரம்: 18 சவூதி அதிகாரிகளுக்கு ஜெர்மனி தடை

செய்தியாளர் கஷோகி படுகொலை விவகாரம் தொடர்பாக, சவூதி அரேபியாவைச் சேர்ந்த 18 அதிகாரிகளுக்குத் தடை விதிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது.இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீக்கோ மாஸ், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்வ்ஸல்ஸில் திங்கள்கிழமை கூறியதாவது:துருக்கியிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில், செய்தியாளர் கஷோகி படுகொலை செய்யப்பட்டதில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 18 பேருக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் உண்மைகளை வெளிக் கொண்டு வருவதற்கு, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

._______________________________________________________________________

வாழ்வை எழுதுதல் அங்கம் 07

எங்களுக்கு மதிய உணவளித்த பணிஸ் மாமாவின் கதை!

இன்று அலரிமாளிகைக்காக அடிபடும் சிங்களத் தலைவர்களுக்கும் இந்தக்கதை சமர்ப்பணம்!!

                                                                                                  . முருகபூபதி

இவரைத் தெரியுமா?

இலங்கையின் அரசியல் வரலாற்றைத் தெரிந்து வைத்திருக்கும் மூத்ததலைமுறையினருக்கு இவரை நன்கு தெரியும். சமகாலத்தின் இளம் தலைமுறையினர் இவரை அறிந்திருகtgaganayake்கமாட்டார்கள். இவரது இயற் பெயர் டொன் விஜயாணந்த தகநாயக்கா. அக்கால பள்ளி மாணவர்கள் இவரை பணிஸ் மாமா எனவும் அழைத்தனர். நானும் மாணவப்பராயத்தில் இவரை அவ்வாறுதான் அழைத்தேன். எங்கள் ஊரில் நான் ஆரம்ப வகுப்பு படித்த பாடசாலையில் மதியவேளையில் ஒரு பேக்கரியிலிருந்து ஒருவர் சைக்கிளின் கரியரில் பெரிய பெட்டியை இணைத்து அதில் எடுத்துவரும் சீனிப்பாணி தடவிய பணிஸ் மிகவும் சுவையானது. இடைவேளையில் எமக்கு உண்பதற்கு கிடைக்கும். அத்துடன் அவுஸ்திரேலியா - நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவு பெக்கட்டுகள் தலைமை ஆசிரியரின் அறையில்  அடுக்கப்பட்டிருக்கும். மதியவேளையில் எங்கள் பெரியம்மா உறவுமுறையுள்ளவர் அங்கு வந்து விறகடுப்புமூட்டி பால் காய்ச்சித்தருவார்கள். பெரியம்மாவுக்கு மாதம் முடியும்போது பால் காய்ச்சிய கூலியை பாடசாலை நிருவாகம் வழங்கும்.   மாணவர்களுக்காக இந்த உபயத்தை செய்பவர் கல்வி மந்திரியான தகநாயக்கா அவர்கள்தான்  என்று  ஒருநாள் பெரியம்மாதான் எனக்கும் எனது மாணவப்பராயத்து நண்பர்களுக்கும் சொன்னார்கள். அன்றிலிருந்துதான் அமைச்சர் தகநாயக்காவை பணிஸ் மாமா என அழைக்கத்தொடங்கினோம்.    (மேலும்)  20. 11.18

._______________________________________________________________________

மாற்றங்களை நோக்கிய சிந்தனை


-          கருணாகரன்

யுத்த நெருக்கடியிலிருந்து மீண்டு விட்டதாக மகிழ்ந்த இலங்கையர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் கவலைகளை அளிக்கின்றன. யுத்த நெருக்கடியுthoughtம் அரசியல் நெருக்கடியும் தவறான அரசியல் கொள்கைகள், அரசியல் நடவடிக்கைகளின் விளைவுகளேயாகும். இதற்கு ஆட்சிப் பொறுப்பிலிருந்தவர்களின் தவறுகளே காரணம். சுதந்திர இலங்கையின் ஆட்சிப் பொறுப்பானது பிரதானமாக ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றிற்குரியது. இந்த இரண்டு கட்சிகளும் நீண்ட அரசியல் வரலாற்றுக்குரியவை என்பது எல்லோரும் அறிந்தது.  இவை ஆட்சி அமைத்தபோது சில சந்தர்ப்பங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் இலங்கைத் தமிழ்க்காங்கிரசும் ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆதரவை வழங்கின. சுதந்திரக் கட்சிக்கான ஆதரவை லங்கா சமசமாஜக்கட்சியும் கம்யூனிஸ்ற் கட்சியும் வழங்கின.துரதிருஷ்டவசமாக இந்த அரசியல் வரலாற்றுக் காலகட்டத்தில்தான் அரசியல் நெருக்கடியை உருவாக்கியிருக்கும் அல்லது அரசியல் நெருக்கடியில் பிரதான பாத்திரத்தை வகிக்கும் அரசியலமைப்புத் திருத்தங்களும் உருவாக்கப்பட்டன. இந்த அரசியலமைப்பை வரலாற்றில் வெவ்வேறு சந்தர்ப்பங்களிலும் ஒவ்வொரு தரப்பினரும் எதிர்த்திருக்கின்றனர்.     (மேலும்)  20. 11.18

._______________________________________________________________________

குண்டு துளைக்காத வாகனங்களை பிரதமர் கொள்வனவு செய்யவில்லை

பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குண்டு துளைக்காத வாகனங்கள் இரண்டை கொள்வனவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வௌியிடப்பட்டுள்ளன.  குறித்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளதன் மூலம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.  அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்காக இதுவரை எந்த புது வாகனங்களும் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

._______________________________________________________________________


மீண்டும் ஓர் நம்பிக்கை வாக்கெடுப்பு: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  ஜனாதிபதிசிறீசேனா வேண்டுகோள்

கொழும்பு: மீண்டும் ஓர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு,  ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனா வேண்டுகோள் Mrsவிடுத்துள்ளார்.  இலங்கை நாடாளுமன்றத்தில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத அளவுக்கு அரங்கேறிவரும் களேபரங்களால் நாட்டின் ஜனநாயக சூழல் கவலைக்கிடமானது. பிரதமர் பதவியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக முன்னாள ஜனாதிபதி ராஜபட்சவை அப்பதவியில் சிறீசேனா நியமித்ததன் விளைவாகவே இத்தகைய நிகழ்வுகள் அங்கு நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும், நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதிஉத்தரவிட்டதும் புதிய பிரச்னைகளுக்கு வழிவகுத்தது. இதனிடையே, நாடாளுமன்ற கலைப்புக்கு  உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததால், ராஜபட்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கடும் அமளிக்கு நடுவே அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இலங்கையில் பிரதமர் பதவியில் எவரும் இல்லை என்று நாடாளுமன்றத் தலைவர் கரு. ஜெயசூர்யா கடந்த வாரம் அறிவித்தார்.      (மேலும்)  20. 11.18

._______________________________________________________________________

இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கொலை ; மூவருக்கும் பிணை


மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரா சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேக நபரJaffna-Shooting-News-1st்கள் மூவரும் யாழ்ப்பாணம் மேல் நீதி மன்றத்தால் கடும் நிபந்தனைகளுடன்  பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகரின் வாகனத்துக்குப் பாதுகாப்பு வழங்கிச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் மோட்டார் சைக்கிளை இடைமறித்த ஒருவர், அவருடைய கைத்துப்பாக்கியைப் பறித்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். சம்பவத்தில் படுகாயமடைந்த சார்ஜன்ட் ஹேமாவகே சரத் ஹேமச்சந்திர யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு உப பொலிஸ் பரிசோதகராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அத்துடன், மேல் நீதிமன்ற நீதிபதியின் காரில் பயணித்த மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது அதில் . அவர் படுகாயமடைந்தார்.    (மேலும்)  20. 11.18

._______________________________________________________________________

தம்புள்ளையில் காவற்துறை அதிகாரிகள் மீது மிளகாய் தூள் தாக்குதல்

தம்புள்ளை - இனாமலுவ பிரதேசத்தின் விற்பனை நிலையமொன்றில் நடாத்திச்செல்லப்பட்ட பாரிய போதைப்பொருள் வர்த்தகமொன்றை  சுற்றிவளைத்த காவற்துறை அதிகாரிகள் மீது இன்று மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தம்புள்ளை மாவட்ட சுற்றிவளைப்பு பிரிவின் 5 அதிகாரிகள் மீது இவ்வாறு மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. குறித்த விற்பனை நிலையத்தை நடாத்தி சென்ற வர்த்தகர் மிளகாய் தூள் தாக்குதலை மேற்கொண்டு காவற்துறை அதிகாரிகளை தாக்கி மகிழூர்தியில் தப்பிச் சென்றுள்ளார்.மிளகாய் தூள் தாக்குதலுக்கு உள்ளான குறித்த 5 அதிகாரிகளும் தற்போதைய நிலையில் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

._______________________________________________________________________

நாடாளுமன்றத்தை நடத்த சிறப்புக் குழு: அரசியல் கட்சிகள் முடிவு


இலங்கையில் அரசியல் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தை வழிநடத்துவதற்கு சிறப்புக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு இSri-Lanka-Parliament  conflictலங்கை அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒப்புதல் அளித்துள்ளன.அதன்படி விரைவில் அக்குழு அமைக்கப்படலாம் என்றும், அதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜபட்ச பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் கீழ் இரு முறை குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.ஆனால், அந்த முடிவை ஏற்க ஜனாதிபதி  சிறீசேனோவும், ராஜபட்சவும் மறுத்துவிட்டனர். மாறாக, வாக்குச் சீட்டு முறையிலோ அல்லது மின்னணு வாக்கு முறையிலோ வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.    (மேலும்)  20. 11.18

._______________________________________________________________________

தேரர்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை

பொதுபல சேன அமைப்பினர் இன்று (19) மகஜர் ஒன்றை வழங்குவதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொண்ட விடயம் தொடர்பில் ஜனாதிபதி தனது கவலையை வெளியிட்டுள்ளார். அறிக்கை ஒன்றின் ஊடாகவே ஜனாதிபதி தனது கவலையை தெரிவித்துள்ளார்.  அத்துடன் தேரர்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொள்ள உத்தரவிட்டவர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.  ஞானசார தேரரின் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தேரர்களினால் வழங்கப்பட்ட மகஜரை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி அவ்விடயம் குறித்து தேரர்களுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

Statement Adopted at the Public Meeting Held on 18 November 2018
at Ashwood Hall, 21a Electra Avenue, Ashwood, Victoria

We, the undersigned participants at the above public meeting, unequivocally condemn the unconstitutional and undemocratic actions by the President of Sri Lanka in the past few weeks.18 Nov 18 - 1 MP Jude Perera    We view the conduct of President Sirisena as extreme and authoritarian which undermines the will and sovereignty of the people of Sri Lanka.Briefly, there are three major contentious issues:

  • Arbitrarily removing a duly elected Prime Minister and replacing him with a Member of Parliament from the ‘Joint Opposition’, with no prior notice whatsoever to the sitting Prime Minister or the Speaker, speaks volumes of the executive president’s total disregard for the established parliamentary norms and practices;
  • By proroguing Parliament the next day for three weeks, the President avoided debate of his actions by the people’s representatives; and
  • When it was clear that the replaced Prime Minister couldn’t muster the required majority support on the floor of the House, the President resorted to dissolving the Parliament to force a general election 21 months earlier, with the intention to influence its outcome by unethical means.  (Read) 20.11.18

._______________________________________________________________________

இலங்கையில் தொடரும் அரசியல் குழப்பம்: இணக்கமின்றி முடிந்த அனைத்து கட்சி கூட்டம்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அனைத்து கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது.ranil-maithiri-mahinda   நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமாகியது. சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளதாக ஆளும் தரப்பினர் தெரிவித்திருந்தனர். இன்றைய சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். எனினும், சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதனை சபாநாயகர் கரு ஜயசூரிய நிராகரித்திருந்தார்.   (மேலும்)  19. 11.18

._______________________________________________________________________

அபத்தங்கள்: வேட்டியை உருவித் தலைப்பாகை கட்டிய கதை

மொஹமட் பாதுஷா

சில மாதங்களுக்கு முன்னர், காட்டமான உரையொன்றை நிகழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது வாளை வெளியில் எடுத்து, வீசத் தொடங்கியிருப்பதாகவுpolitic violenceம் இதில் யார் பாதிக்கப்படப் போகின்றார்கள் என்று தனக்குத் தெரியாது என்ற தொனியிலும் ஆக்ரோஷமான கருத்தொன்றை முன்வைத்திருந்தார்.   அந்தவகையில், பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை, அப்பதவியில் இருந்து நீக்கி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவைப் புதிய பிரதமராக நியமிக்கும் அதிரடி நடவடிக்கையின் மூலம், மைத்திரி அவ்வாளை வீசத் தொடங்கினார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.   ஆனால், அடுத்தடுத்ததாக நடக்கின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது, மைத்திரியின் வாள், அதனது குறி, குறித்துப் பல கேள்விகள் எழுவதைத் தடுக்க முடியாதுள்ளது.   மைத்திரி பொருத்தமில்லாத ஒரு சந்தர்ப்பத்தில் வாளை உபயோகித்திருக்கின்றாரா? அவரது வாள் கூர் மழுங்கியதா? இலக்குத் தவறி வேறு யாரையும் பதம் பார்த்து விடுமா, சுழற்றத் தெரியாமல் சுழற்றுவதால், அவருக்கே ஆபத்தாக வந்து விடுமோ? என்றெல்லாம் எண்ணத் தோன்றுகின்றது.     (மேலும்)  19. 11.18

._______________________________________________________________________

மன்னார் மற்றும் உயிலங்குளம் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த  13 பொலிஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்


மன்னார் மற்றும் உயிலங்குளம் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 13 பொலிஸாருக்கு நேற்று (17) திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.Mannar police  உரிய முறையில் கடமையை செய்ய வில்லை என்ற காரணத்தினாலேயே அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.  மன்னார் முருங்கன் பிரதான வீதி அடைக்கல மோட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள புலவுக்காணியில் அனுமதி இன்றி சட்ட விரோதமான முறையில் ஒருவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் கடந்த 2 ஆம் திகதி கட்டுக்கரை குள முகாமைத்துவக்குழு உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.இந்த நிலையில் கட்டுக்கரை குள முகாமைத்துவக் குழுவின் கோரிக்கைக்கு அமைவாக உடனடியாக அடைக்கல மோட்டை வாய்க்காலுக்கு பொறுப்பான பொறியியல் உதவியாளர் ஒருவரும் விவசாய அமைப்பின் தலைவரும் நிலமையை நேரில் பார்வையிடுவதற்காக அப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.   (மேலும்)  19. 11.18

._______________________________________________________________________

ஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற சர்வகட்சி சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி  மைத்தரிபால சிறிசேன  மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து மகிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

 ‘இலங்கையின் சுற்றுலா வர்த்தகம் பாதிப்படையும்’

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக் காரணமாக, சுற்றுலாத் துறை வீழ்ச்சியடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர சுற்றுலா தொழில்sl tourism முயற்சி சங்கத்தின் தலைவர் ரொஹான் அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.  இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.ஜனவரி, பெப்ரவரி மாதங்கள் இலங்கையின் சுற்றுலாத்துறை வர்த்தகம் அதிகரிக்கும் நிலையில், இலங்கையின்  தற்போதைய அரசியல் சூழ்நிலை சுற்றுலா வர்த்தகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்தால், இலங்கையில் அமைதியான சூழல் ஒன்றை ஏற்படுத்துமாறும் சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அவ்வாறு இல்லையெனில் கடந்த 5 வருடங்களாக மிகவும் சிரமத்தின் மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட சுற்றுலா வர்த்தகம் சிதைவடையும் என்றும், இதனை ஏனைய நாடுகள் பிரயோசனப்படுத்திக்கொள்ளும் என்றும் எனவே நாட்டில் நிலையான அரசியல் நிலையொன்று ஏற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

என்னை பதவியிலிருந்து நீக்குவதால் பிரெக்ஸிட் எளிமையாகிவிடாது - பிரிட்டன்  பிரதமர் தெரசா


தம்மை பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றுவதால் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் (பிரெக்ஸிட்) நடைமுறை எளிமையாகிவிடாது என்று அந்த நாட்டுப் பிரthressa1தமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து தொலைக்காட்சியொன்றுக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: அரசியல் என்பது மிகவும் கடினமான பணியாகும். அந்தப் பணியை நான் நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறேன். பிரெக்ஸிட் விவகாரத்தில் என் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, என்னை பதவியிலிருந்து நீக்கினால் மட்டும், ஐரோப்பிய யூனியனிலிருந்து  பிரிட்டன் மிக எளிமையாக வெளியேறிவிட முடியாது என்றார் அவர்.ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற பிரிட்டன் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.    (மேலும்)  19. 11.18

._______________________________________________________________________

கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தின் வடபகுதியில் பட்டி கவுண்டி பகுதியில் உள்ள பாரடைஸ் நகரம். இந்தப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில்தான் காட்டுத் தீ கடந்த 8-ம் தேதி ஏற்பட்டது.காட்டுப் பகுதியில் சிலர் தற்காலிக குடில் அமைத்து தங்கி இருந்தபோது, சமையல் செய்வதற்காக மூட்டப்பட்ட நெருப்பு காட்டுப் பகுதியில் உள்ள காய்ந்த மரங்கள் மீது பட்டு பரவிய தீ இன்னும் அணைக்க முடியாமல் தொடர்ந்து பற்றி எரிந்தது. பாரடைஸ் நகரில் ஏறக்குறைய 26 ஆயிரம் பேர் வசித்து வந்தனர்.பாரடைஸ் பகுதியில் உள்ள 1,35 லட்சம் ஏக்கர் பரப்பளவில் காட்டுப் பகுதி உள்ளது. இதில்தான் தற்போது காட்டுத் தீ பரவி அணைக்க முடியாத அளவில் பற்றி எரிந்தது.. இந்த காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1,011 உயர்ந்துள்ளது.மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களின் எரிந்து நாசமான வீடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கலிபோர்னியாவில் சேதங்களைப் பார்வையிட அமெரிக்க அதிபர் டிரம்ப் சென்றுள்ளார்.அங்கு தீ விபத்து ஏற்பட்ட பகுதிகள், இடம்பெயர்ந்தவர்கள் என அனைவரையும் சந்தித்து பேசுகிறார்.  தீயணைப்பு பணியில் முழு மூச்சுடன் போராடிய வீரர்களுக்கு ஜனாதிபதி டிரம்ப் பாராட்டு தெரிவித்தார்.அமெரிக்க காட்டுத்தீ வரலாற்றில் மிக மோசமான காட்டுத்தீ இதுதான் என்றும் கூறப்படுகிறது.

._______________________________________________________________________

லசந்த - தாஜூடீன் கொலைகள் குறித்து விசாரணை செய்த சிஐடி அதிகாரி இடமாற்றம்

மகிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து தீவிரவிசாரணைகளை மேற்கொண்டிருந்த இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டமை,லசந்த விக்கிரமதுங்க வாசிம் தாஜூடீன் படுகொலை, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் குறித்து  விசாரணைகளை மேற்கொண்டு மிகத்திறமையாக செயற்பட்டுக்கொண்டிருந்த நிசாந்த சில்வா கடந்த மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளார். புங்குடுதீவில் மாணவி படுகொலை தொடர்பில் நிசாந்த சில்வா  முக்கிய ஆதாரங்களை சேகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. முப்படைகளின் பிரதானி ரவீந்திர குணவர்த்தன மற்றும் நேவி சம்பத்திற்கு எதிரான முக்கிய ஆதாரங்களை திரட்டுவதிலும் நிசாந்த சில்வா முக்கிய பங்களிப்பு செய்திருந்தார்

._______________________________________________________________________

17 விபச்சார விடுதிகளில் 59 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் உரிய பதிவுகளின்றி ஆயுர்வேத சிகிச்சை நிலையம் மற்றும் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த 17 விபச்சார விடுதிகள், நேற்று நண்பகல் 12 மணிமுதல் இரவு 8 மணி வரையான எட்டு மணிநேர காலப்பகுதியில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.மேல்மாகாண வடக்குக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் விசேட உத்தரவுக்கமைய எட்டு மணி நேர காலப்பகுதியில் கிரிபத்கெட, நிட்டம்புவ, ஜாஎல, மாபாகே, வெயங்கொட,பியகம, சீதுவ, நீர்கொழும்பு, வத்தளை, களணி, கொச்சிகடை, கம்பஹா மற்றும் யக்கல பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த புலனாய்வு பிரிவு மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாராலேயே குறித்த 59 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 19 தொடக்கம் 45 வயதுக்குட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களின் குறித்த நிலையங்களின் முகாமையாளர்களாக செயற்பட்ட 8 பேரும், விபச்சாரத்துக்கு தயாராகவிருந்த 42 பெண்களும் 9 ஆண்களுமென 59 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். துசெய்யப்பட்டவர்களை கம்பஹா, மஹர, அத்தனகொல்ல, நீர்கொழும்பு மற்றும் வத்தளை நீதிவான் நீதிமன்ற நீதிபதிகளின் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன் இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

._______________________________________________________________________

இலங்கையில் நெருக்கடி

 

இந்தியாவில் இருக்கின்ற பிரதான ஊடகங்கள், இலங்கைப் பிரச்சனைpd editorial log0யானது, சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான போட்டியின் வெளிப்பாடு என்று கூறுகின்றன. ராஜபக்சே, ஒரு சீன ஆதரவாளராக சித்தரிக்கப்படுகிறார். விக்ரமசிங்கே மேற்கத்திய ஆதரவு மற்றும் இந்திய ஆதரவாளராக பார்க்கப்படுகிறார். எனினும், தற்போதைய நெருக்கடிக்கு, பிரதானமாக அந்நிய நாடுகளின் தலையீடு காரணம் என்று கூறிட முடியாது. இதற்குப் பிரதான காரணம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி 2015இல் கூறியபடி ஜனநாயக நிலைமாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் தோல்விகண்டதும், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து அதனை மீட்டெடுக்கக்கூடிய விதத்தில் மாற்றுக் கொள்கைகளை உருவாக்குவதில் தோல்வியடைந்ததுமே இதற்குப் பிரதான காரணமாகும். கடந்த பல ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த நவீன தாராளமயக் கொள்கைகள்தான் பொருளாதார நெருக்கடி விளைந்ததற்கே காரணமாகும். விக்ரமசிங்கே அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியின் சுதந்திர சந்தைக் கொள்கைகளே நெருக்கடியை உக்கிரப்படுத்தின. 2017ஆம் ஆண்டில் வளர்ச்சி 4 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. மலைபோல் உயர்ந்துள்ள கடன் மற்றும் ஏற்றுமதி – இறக்குமதி சமநிலை நெருக்கடி (balance of payment crisis) ஆகியவை அரசாங்கத்தை சர்வதேச நிதியத்திடம் ஒரு மூன்றாண்டு காலத்திற்கு 1.5 பில்லியன் டாலர்கள் பிணை எடுப்பு தொகுப்பு (bailout package) பெற நிர்ப்பந்தித்தது. இதற்க சர்வ தேச நிதியம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.    (மேலும்)  18. 11.18

._______________________________________________________________________

அரசியல் சீரழிவுகள்

-          கருணாகரன்

ஒரு காலம் இலங்கையின் நவம்பர் மாதத்தில் விடுதலைப்புலிகளின் செய்திகள் மேலோங்கியிருக்கும். நவம்பரில் புலிகளின் பெரிய தாக்குதல்கள் இருக்கும். அதோடு பிரபாகரSri-Lanka-Parliament  conflictனின் மாவீரர்நாள் உரையும் மாவீரர் நினைவு கூரலும் நடக்கும். நவம்பரில் நாடு முழுவதும் ஏறக்குறைய ஒரு விதமான பதட்டத்திலும் கூர்மையான அவதானத்திலும் இருக்கும்.  புலிகளின் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுறுத்தப்பட்ட பிறகு, இலங்கை அரசியல் சூழல் திசைமாற்றத்துக்குள்ளாகி, இப்பொழுது பாராளுமன்றத்திற்குள்ளேயே மோதல்கள் நடக்கும் அளவுக்கு வந்திருக்கிறது. அதுவும் நீண்ட காலமாக ஆட்சி நடத்திய பாரம்பரியத்தைக் கொண்ட ஐ.தே.க – சு.க ஆகிய சிங்களப் பெருங்கட்சிகளே பாராளுமன்றத்துக்குள் அடிபட்டுக்கொள்ளும் அளவுக்கு அதிகாரப் போட்டி தலைதூக்கியுள்ளது. இதையிட்டு யாரும் வெட்கப்படவோ கவலைப்படவோ இல்லை. யாரும் நாட்டு மக்களிடம் வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. சம்மந்தன் கூட எதிர்க்கட்சித் தலைவர் என்ற பாத்திரத்துக்குரிய முக்கியத்துவத்தின் அடிப்படையில் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. இதுவரையில் அவர்  சொன்ன கருத்துகளும் செயற்பட்ட விதமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில்தான். அதுவும் ஐ.தே.கவுக்குக் கீழ்ப்படிந்த நிலையில்.    (மேலும்)  18. 11.18

._______________________________________________________________________

ஜனநாயகம் என்பது மக்கள் ஆணையைப் பெறுவது மட்டுமல்ல. பெற்ற ஆணையை நடைமுறைப்படுத்துவதும் ஜனநாயகம் தான்.

 பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பொதுத்தேர்தல் நடத்தப்படுவது சட்டவிரோதமாக இருந்தாலும் கட்டளை இடப்படும் போது ஜனவரி 5ஆம் திகhoole-2தி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டதால் தான் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஹிட்லரின் உத்தரவில் யூதர்கள் கொலை செய்யப்பட்டார்கள். பின்னர் அதுதொடர்பான வழக்கு விசாரணை வந்தபோது மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததால் தான் அவ்வாறு செய்தோம் என அதிகாரிகள் கூறியபோது அக்காரணம் நிராகரிக்கப்பட்டது. அதனடிப்படையில் சட்டவிரோதமான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கட்டளைகள் வருகின்றபோது அவற்றை முன்னெடுப்பது தவறானதாகும் என்பதே உலகரீதியான நிலைப்பாடாகும்.அதேநேரம் கட்டளையின் பிரகாரம் தேர்தலை நடத்த வேண்டியிருந்தாலும் மனச்சாட்சியின் பிரகாரம் அவ்வாறு செயற்பட முடியாது என்பதால் தான் இராஜினாமாச் செய்யப்போவதாக சக உறுப்பினரான நளின் அபயசேகர குறிப்பிட்டார். எனினும் அவரை இராஜினாமா செய்வதை தவிசாளர் தடுத்திருந்தார். இவ்வாறிருக்கையில்> என்னைத் தவிர ஏனைய இரண்டு உறுப்பினர்களும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திற்கு பொதுத்தேர்தலுக்கான முற்பணிகளை முன்னெடுப்பதற்கு அனுமதி அளித்திருந்தனர்.   (மேலும்)  18. 11.18

._______________________________________________________________________

பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு

கிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்கு குழி உடைக்கும் பணி இன்று இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.14 SLNG படைபிரிவின் கட்டுப் பாட்டில் இருந்த பதுங்குகுழியே இன்று உடைக்கப்படுகிறது. தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வருகின்ற சுற்றுலாப் பயணிகள் இப் பதுங்குகுழியை கடந்த வருடம் வரை பார்வையிட்டு வந்தனர். அது இவ் வருடம் முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன் போது ஊடகவியலாளர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி கோரிய போதும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் பகுதி இராணுவத்தினரின் வசமுள்ள நிலையில் பதுங்கு குழி அகற்றப்படுகின்றமையால் குறித்த காணி விடுவிப்பதற்கான சந்தர்ப்பம் இருப்பதாகவும் அறியமுடிகிறது.

._______________________________________________________________________

சபாநாயகர் போலியான ஆவனங்களை தயாரித்து ஜனாதிபதியை தவறாக வழிநடத்த முயற்சித்துள்ளதாக குற்றபுலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

சபாநாயகர் போலியான ஆவனங்களை தயாரித்து ஜனாதிபதியை தவKaru-Jayasuriya1றாக வழிநடத்த முயற்சித்துள்ளதாக சில சிவில் அமைப்பு பிரதிநிதிகள் இன்று குற்றபுலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.  இந்த குற்றத்தின் அடிப்படையில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 14ஆம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றியதாக ஜனாதிபதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடனான ஆவனத்துடன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்திருந்தார்.இதில் பழைய தினம் ஒன்றை அழித்து, அதன்மீது புதிய தினம் ஒன்று எழுதப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாக ஜனாதிபதி பதில் அனுப்பியிருந்தார்.  (மேலும்)  18. 11.18

._______________________________________________________________________

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்து மீண்டும் வாக்குக் கேட்க விருப்பம் இல்லை.

சதாசிவம் வியாழேந்திரன்

சம்பந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. மக்களாலே தான் நான் பாராளுமன்ற உறுப்பினராvijalendranகத் தெரிவு செய்யப்பட்டேன் மக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே  பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டேன் என பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதியமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் இணைய முற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது என்ன செய்தேன் என்பது எனக்கு வாக்களித்த என் உறவுகளுக்கு நன்றாகத் தெரியும். அந்த மக்களின் தேவை என்ன என்பதையும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் நான் நன்கு அறிந்து தான் செய்கின்றேன். வெறும் வெத்துப் பேச்சுகளையும், பின்கதவு முயற்சிகளையும் விட்டு எம் மக்களுக்கு எம்மால் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அதன் படியே நான் சிந்தித்துச் செயற்பட்டேன். தொடர்ந்தும் செயற்படவுள்ளேன்.   (மேலும்)  18. 11.18

._______________________________________________________________________

தொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில் விக்ரமசிங்க

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் தேர்தல்களிலranilும் ரணில் விக்ரமசிங்க கட்சியை தலைமை தாங்குவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதை அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வருவதனால் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ கட்சியின் தலைமை பதவியை ஏற்றுள்ளதாக சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். எவ்வாறாயினும் கட்சியின் தலைமையை சஜித் பிரேமதாஸவிற்கு வழங்குமாறு கோரி கட்சியில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் தொடர்ந்தும் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவே இருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

._______________________________________________________________________

கஷோகி படுகொலை சவூதி இளவரசர் மீது சிஐஏ குற்றச்சாட்டு?


செய்தியாளர் கஷோகி படுகொலையில் சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்புள்ளது என, அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சிஐஏ-வின் விசாரணை முடிவுகjamal1ள் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து, சிஐஏ வட்டாரங்களை மேற்கொள் காட்டி, அமெரிக்காவிலிருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:துருக்கியிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில், செய்தியாளர் கஷோகி கொல்லப்பட்டது தொடர்பாக சிஐஏ நடத்திய விசாரணையில், அந்தச் சம்பவத்துடன் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை புலனாய்வு அதிகாரிகள் தொடர்புபடுத்தியுள்ளனர்.சவூதி அரசின் 15 அதிகாரிகள், அரசுக்குச் சொந்தமான விமானங்களைப் பயன்படுத்தி துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குச் சென்றதாகவும், பிறகு துணைத் தூதரகத்துக்கு வந்திருந்த கஷோகியை அவர்கள் படுகொலை செய்ததாகவும் சிஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, அந்தப் படுகொலை சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள் முடிவுக்கு வந்துள்ளனர் என்று அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.   (மேலும்)  18. 11.18

._______________________________________________________________________

ஸ்ரீலங்காவின் தேசிய நெருக்கடி என்னவென்பதைப் பார்ப்போம்

                                          அகிலன் கதிர்காமர்

சிறிசேன - ராஜபக்ஸ கூட்டணி ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் பன்மைத் தன்மைக்காக சவால் செய்யப்பட வேண்டும்

கடந்த இரண்டு வார காலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசrajapaksha- maithiriேன மற்றும் பாராளுமன்றம் இடையே தோன்றியுள்ள ஒரு சுமுகமற்ற நிலை காரணமாக அதிகரித்து வரும் அரசியல் நெருக்கடிக்கு ஸ்ரீலங்கா சாட்சியாகியுள்ளது. அதிர்ச்சியூட்டும் மற்றும் ஜனநாயகமற்ற ஒரு நியமனமாக மகிந்த ராஜபக்ஸவைப் பிரதமராக நியமித்த பிறகு, பாராளுமன்றத்தை இடைநிறுத்தி பின்னர் அதைக் கலைப்பதாக நவம்பர் 9ந்திகதி அறிவித்து உடனடியாக பொதுத் தேர்தல் நடத்துவதாக திரு. சிறிசேன அறிவித்தார்.குறிப்பிடத்தக்க வகையில், உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கலைக்கப்படுவதை  வரும் டிசம்பர் 7ந்திகதி வரை இடைநிறுத்தியுள்ளது. அதேவேளை அதிகாரப் போராட்டம் தொடருகிறது, 2015 ஜனவரியில் இடம்பெற்ற ஜனநாயக ஆட்சி மாற்றத்தின்; பயனாக, திரு. சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்காவின் அரசாங்க நிறுவனங்கள், நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த சர்வாதிகார அதிகார சக்தியை வன்மையாக எதிர்த்தன.   (மேலும்)  17. 11.18

._______________________________________________________________________

மாலேயில் செய்ததை புதுடில்லி கொழும்பில் செய்யமுடியாது

-  கொன்ஸரான்ரினோ சேவியர்

இலங்கையின் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துகொண்டிருக்கும் நிலையில், உலகின் கண்கள் கொழும்பை மாத்திரமல்ல, புதுடில்லியையும் உற்றுநோக்கிக்கொண்டிருக்கின்றன. rajapaksha  அயல்நாடுகளுடனான உறவுகளுக்கு முதன்மை கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது மாலைதீவில் எதேச்சாதிகாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு தலையீடு செய்து வெற்றிகண்டதைப் போன்று கொழும்பிலும் இந்தியா செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஜனநாயக மீட்சியை நோக்கி நெருக்குதலைப் பிரயோகிக்க இந்தியாவினால் இயலுமாக இருந்தது என்று மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கையூம் கடந்த வாரம் கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.   ஆனால், இலங்கை மாலைதீவு அல்ல. கடந்த இரு வாரங்களாக இலங்கையின் அரசியல் நெருக்கடி தொடர்பில் புதுடில்லியின் அணுகுமுறை ஜனநாயக செயன்முறைகள் தொடரவேண்டும் என்ற ஒழுக்க நியதியின்படி 'பொறுத்திருந்து பார்க்கும்' கொள்கையாகவே இருந்துவருகிறது.  (மேலும்)  17. 11.18

._______________________________________________________________________

இலங்கையர் அனைவருக்கும் ஒரு குறுக்கு வெட்டுமுகக் கோரிக்கை

- பஸீர் சேகு தாவூத்

மக்கள் பிரதிநிதிகள் எனப்படுவோரே! நீங்கள் உங்கள் சபைகளுக்குள் அது நாடாளுமன்றமோ, மாகாணசபை மண்டபங்களோ அல்லது உள்ளாட்சி மன்ற சபாமண்டபங்களோ Sri-Lanka-Parliamentஎதுவாக இருந்தாலும் உங்களது கத்துதல், கத்தி மற்றும் மிளகாய்த்தூள் சண்டைகளை உங்களது மன்றத்துக்குள்ளும், மண்டைகளுக்குள்ளும், மண்டபங்களுக்குள்ளும் மாத்திரம் வைத்துக்கொள்ளுங்கள். நாட்டுக்குள் கடத்திவிடாதீர்கள். நாடு என்பது இனங்களாகவும், மதங்களாகவும், கட்சிகளாகவும் பிரிந்து கிடக்கிறது.  உங்களது சபைச் சண்டைகள் நாட்டுக்குள் பரவினால் அது இனங்களுக்கு இடையிலானதாக, மதங்களுக்கு இடையிலானதாக,கட்சிகளுக்கு இடையிலானதாக நிகழும்.இதன் விளைவாகப் பின்னர் வெளி நாட்டுப் படைகள் நமது நாட்டை சமாதானத்தின் பேரால் ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும். 1987 இல் இரு இனங்களுக்கிடையிலான போரை நிறுத்துவதற்காக எனக் கூறி ஒரு நாட்டின் படை மட்டும் அதாவது இந்தியப்படை உள் நுழைந்தது.   (மேலும்)  17. 11.18

._______________________________________________________________________

பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது

பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக இன்று பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் பிரகாரம் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஆவணமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

._______________________________________________________________________

கஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு

கஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் 1000 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவற்றிgajaற்கான புள்ளவிபரங்கள் சரியான முறையில் திரட்டப்படவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.   யாழ்.மாவட்டத்தில் நிலை கொண்டிருந்த கஜா புயல் நேற்று மாலை 6.10 மணிமுதல் இன்று அதிகாலை வரை கடுமையாக வீசியதில் யாழ்.மாவட்டத்தில் ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆத்துடன் 52 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 500 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. சிறுதொழில் முயற்சியாளர்களின் கடைகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் 20 சேதமடைந்துள்ளன. நேற்று மாலை 6 மணிமுதல் இன்று காலை 10 மணியளவில் வரை புயலின் தாக்கம் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் காற்றின் வேகம் குறைவடைந்து சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.   (மேலும்)  17. 11.18

._______________________________________________________________________


பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தம் செயலுக்கு வரும்: தெரசா மே திட்டவட்டம்

ஐரோப்பிய யூனியனிடமிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான (பிரெக்ஸிட்) வரைவு ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் என அந்த நாட்டுப் பிரதமர் தெரசா மே திட்டவTHRESSAட்டமாகத் தெரிவித்துள்ளார்.அந்த வரைவு ஒப்பந்தத்துக்கு அவரது கட்சியிலிருந்தே பலத்த எதிர்ப்பு எழுந்து, பல அமைச்சர்கள் ராஜிநாமா செய்துள்ள நிலையில் அவர் இவ்வாறு உறுதியுடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து லண்டனின் எல்பிசி வானொலியில் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பிரெக்ஸிட்டை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றுவதுதான் எனது பணியாகும். அந்தப் பணியைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன்.ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான வரைவு ஒப்பந்தத்தில் பிரிட்டனுக்கு அதிகபட்ச நலன்கள் கிடைப்பதற்கான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை உறுதியாக நம்புகிறேன்.சில எம்.பி.க்கள் பிரெக்ஸிட்டால் தங்களது தொகுதிகளில் ஏற்படக்கூடிய தாக்கத்தை மனதில் கொண்டு, அவர்களது கடமையைச் செய்கிறார்கள்.    (மேலும்)  17. 11.18

._______________________________________________________________________

மிக முக்கிய தீர்மானம் எடுக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது

அன்புடன் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கட்கு!

- வீ.ஆனந்தசங்கரி,

மிக்க அக்கறையுடன் பரிசீலித்து நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எsangaryன்பதற்காக சில ஆலோசனைகளை தர வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளமையால் இப்பகிரங்க கடிதத்தை எழுதுகின்றேன். சட்டக்கல்லூரி காலம் தொட்டு ஏறக்குறைய 58 ஆண்டுகள் நாம் ஒருவரை ஒருவர் நன்கறிந்திருந்தோம். ஒரேயொரு தடவை, அன்றைய தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர் ஒருவரின் நடவடிக்கைகள் பற்றிய விடயம் தவிர வேறு எப்பொழுதும் நாம் அரசியல் சம்பந்தமாக பேசியதில்லை. அந்த நபரின் அடையாளத்தை நீங்கள் அறிவீர்கள் என நான் திடமாக நம்புகின்றேன. மாகாண சபை கலைக்கப்படும்வரை நீங்கள் மிக தீவிரமாக அரசியலில் ஈடுபட்டிருந்தும், அச்சம்பவத்தை தவிர வேறு எவரைப்பற்றியும் பேசியதில்லை. நான் குறிப்பிடும் சம்பவம் பல வருடங்களிற்கு முன்பு நீங்கள் நீதிபதியாக இருந்த காலத்தில் நடைபெற்றதாகும். நானே முதல் தலைமை தாங்கிய ரி.என்.ஏ என்ற தமிழ் தேசிய கூட்டமைபை உருவாக்கிய 6 தமிழ் பிரமுகர்களில் ஒருவராகிய திரு நிர்மலன் கார்த்திகேசன் அச்சந்தர்ப்பத்தில் சமூகமாக இருந்தார் என எனக்கு ஞாபகம். அந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை தப்பாக வழipநடத்த தற்போது தாராளமாக பாவிக்கப்படுகின்றது.   (மேலும்)  17. 11.18

._______________________________________________________________________

ஈழத் தமிழர்கள் யாரையும் நாடுகடத்த வேண்டாம்

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழர்கள் யாரையும் நாடுகடத்த வேண்டாம்  என்று அந்த நாட்டின் அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பிரித்தானிய தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று, பிரித்தானிய ராஜாங்க செயலாளர் சஜிட் ஜாவிட்டுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. நாட்டில் தற்போது நிலவுகின்ற அரசியல் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு, அவர்களை நாடுகடத்துவதை நிறுத்துமாறு அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.   ஜோன் ரியான், சியோபாயின் மெக்டோனா, வெஸ் ஸ்டீரிங், ஸ்டெஃபன் திம்ஸ், மைக் கேப்ஸ், விரேந்திர ஷர்மா மற்றும் கரேத் தோமஸ் ஆகிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த கடிததத்தை அனுப்பியுள்ளனர்.

._______________________________________________________________________

வலி கிழக்கு பிரதேசசபை அனர்த்தத்த  அசௌகரியங்களை    நிவர்த்திப்பதில் விரைந்து செயற்பட்டது.


கஜா புயலினால் மக்களுக்கு ஏற்பட்ட அளெகரியங்களை நீக்குவதில் மக்களின் பங்கேற்புடன் அதிகாலையில் இருந்து விரைந்து செயற்பட்டு பிரதேச சபை, மக்கள் எதிர்கொண்ட அசௌvaliகரியங்களை நிவர்த்தித்துள்ளதாக தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.   இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், வீசிய கஜா புயலின் நிமிர்த்தமாக சேதங்கள,; இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. புயல் வீசிக்கொண்டிருக்கும் போதே மக்கள் தம் வட்டார உறுப்பினர்கள் ஊடாகவும் நேரடியாகவும் தமது பகுதிகளின் நிலைமை தொடர்பாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் கவனத்தி ற்குக் கொண்டு வந்தார்கள்.  பெரியளவில் அச்சுவேலி பத்தைமேனி காளிகோவில் பகுதியில் பாரிய வேப்பம் மரம் ஒன்று அடியோடு முறிந்ததனால் அப்பகுதியில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வீடுகளின் மதில்கள் இடிந்துள்ளன. அதுபோன்று மின் விநியோக துண்கள், வயர் இணைப்புக்கள் சேதமடைந்துள்ளன. அதேவேளை, வீதிகளினூடான போக்கவரத்தும் தடைப்பட்டது.   (மேலும்)  17. 11.18

._______________________________________________________________________

 அரசியலமைப்புக் கருவாடு

சேகு தவூத் பஸீர்

ஜே.ஆர் ஜயவர்த்தன நாடாளுமன்றில் பெற்றிருந்த ஆறில் ஐந்து பெரும்பானமையைக் கொண்டு தனக்கும், மேற்குலகுக்கும் வசதியாக 1978 ஆம் ஆண்டு அரசமைப்பை புதிதாகpolitical law இயற்றினார். மேற்குலகு ஏனைய நாடுகளைச் சுரண்டுவதற்காக அறிமுகப்படுத்திய திறந்த பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாக வழங்கிய Draft தான் புதிய அரசமைப்பானது.   அன்றைய காலத்தில் இரண்டு பெரிய கட்சிகளும் ஐவைந்து ஆண்டுகளில் அல்லது இதைவிடவும் குறைந்த ஆண்டுகளில் மாறி மாறி ஆட்சிக்கு வந்துகொண்டிருந்தன.   மேற்கு, திறந்த பொருளாதாரக் கொள்கையை ஆசியப் பிராந்தியத்தில் அறிமுகப்படுத்துவதற்கு வசதியாக இலங்கையில் பிரித்தானியாவின் முதலாளிய முகவர்கள் நிறைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியைத் தனது முகவராகத் தெரிவு செய்திருந்தது.   இதற்கேற்ப, ஆகக் குறைந்தது 10 வருடங்களாவது தொடர்ந்தேர்ச்சியாக நாட்டை ஆள்வதற்கு நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட தனி அதிபரையும், நாடாளுமன்றில் மிகப் பெரும்பான்மையை ஐ.தே. கட்சி வைத்திருப்பதற்கும் வசதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.    (மேலும்)  16. 11.18

._______________________________________________________________________

பாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெற்றுக்காட்டுங்கள்: ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் சவால்

ஜனாதிபதிக்கு துணிச்சல் இருந்தால், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடாத்தி, அதில் போட்டியிட்டு வெற்றிபெற்றுக் காட்டுங்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லRauff Hakeem1611ிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சவால் விடுத்தார்.   இன்று (15) வியாழக்கிழமை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியில் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.   அங்கு தொடர்ந்து உரையாற்றி ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது; ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னர், உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றிருக்கலாம். ஆனால், சட்டத்துறையில் போதிய தெளிவில்லாத பாமர சட்டத்தரணிகளின் பேச்சைக் கேட்டு பாராளுமன்றத்தை அவரசரப்பட்டு கலைத்துவிட்டார். அவர் இப்போது பின்நோக்கிச் செல்லமுடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்.     (மேலும்)  16. 11.18

._______________________________________________________________________

ஐ.தே. முன்னணி மற்றும் த.தே.கூட்டமைப்பிடம் ஜனாதிபதி முன்வைத்துள்ள கோரிக்கை

நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்ட பிரேரணையின் முதலMS-TNAாவது பிரிவை நீக்கிவிட்டு, நாளை மீண்டும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சி தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். சபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் குறிப்பிட்டு பிரேரணையின் மீதான வாக்கெடுப்பை நடத்தமாறும் ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளார். இதன்படி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டுமாறு தெரிவித்துள்ள ஜனாதிபதி, அது தொடர்பில் அரசியலமைப்புக்கு அமைய செயற்படுமாறும் கோரியுள்ளார்.சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

._______________________________________________________________________

ஹெரோயின் வைத்திருந்த மாணவனுக்கு ஒரு மாத சிறை

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன் தீர்ப்பளித்தார்.ஒரு மாத கால சிறைத் தண்டனையை அனுபவிக்க மாணவனை சான்று பெற்ற சீர்திருத்தப் பாடசாலையில் சேர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் கட்டளை வழங்கியது.ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாண நகர் பகுதியில் 18 வயதுடைய மாணவன் ஒருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 10 மில்லிக்கிராம் உயிர்க்கொல்லி ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, நீதிமன்றில் மாணவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதனால் அவருக்கு ஒரு மாதகால சிறைத் தண்டனையை விதித்த நீதிபதி, மாணவனை அச்சுவேலி சீர்த்திருத்தப் பாடசாலையில் இணைக்குமாறு சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு உத்தரவிட்டார்.

._______________________________________________________________________

பசில் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒbasil Rajapakshaத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க முன்னிலையில் இன்று (15) விசாரணைக்கு எடுக்கப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடு வழங்குவதற்காக 2992 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதன் மூலம் அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அந்த அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க, அந்த திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

._______________________________________________________________________

 ஹிட்லரின் புகைப்படம் ரூ.8 லட்சத்துக்கு ஏலம்

யூத இனத்தைச் சேர்ந்த பெண்ணின் பேத்தியை, ஜெர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லர் அரவணைக்கும் புகைப்படம், அமெரிக்காவில் 11,520 டாலருக்கு Hitler.jude(சுமார் ரூ.8 லட்சம்) ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. ஹிட்லரை அன்பு மிகுந்தவராக உலக நாடுகளுக்குக் காட்டுவதற்காக, பெர்னைல் நியெனா என்ற அந்தத சிறுமியை அவர் அரவணைக்கும் புகைப்படம் கடந்த 1933-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்தப் புகைப்படம் எதிர்பார்ப்புகளையெல்லாம் மீறி அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக ஏல ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

._______________________________________________________________________

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் கத்தியைக் காட்டி மிரட்டியதாக முறைபாடு

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவே  நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வருகைத் தந்தாரென, சபாநாயகரிடம் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோவே ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக சபாநாயகரிடம் முறைபாடு செய்துள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அருந்திக,நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழப்ப நிலையின் போது, சபாநாயகருக்கு இடது புறமாக நின்றுக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க, பாலித தெவரப் பெரும ஆகி​யோர் கத்தியைக் காட்டி சபாநாயகரிடம் வந்தால் கொல்வதாக மிரட்டினர். சபாநாயகருக்கு இது தொடர்பில் முறையிட்ட போது,  அவர் பொலிஸாருக்கு அறிவிப்பதாக தெரிவித்ததுடன், தானும் நாடாளுமன்றத்தில் உள்ள பொலிஸ் உதவி அத்தியட்சகர் ஒருவரிடம் இது தொடர்பில் தெரிவித்ததாகவும் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

._______________________________________________________________________

கஷோகி படுகொலை வழக்கு: 11 பேர் மீது குற்றச்சாட்டு நிரூபணம் 5 பேருக்கு மரண தண்டனை?

செய்தியாளர் கஷோகி படுகொலை தொடர்பாக சவூதி அரேபியாவில் நடைபெற்று வந்த வழக்கில், அந்த நாட்டின் 11 அதிகாரிகள் குற்றவாளிகளாக வியாழக்கிழமை அறிவிகjamal6்கப்பட்டனர்.அவர்களில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, அரசுத் தரப்பு வழக்குரைஞர் அலுவலக செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை கூறியதாவது:துருக்கியிலுள்ள சவூதி துணைத் தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், 11 அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.தூதரகத்துக்கு வந்த கஷோகிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதற்குப் பிறகு அவர் கொல்லப்பட்டார். பிறகு அவரது உடல் பாகங்கள் வெட்டப்பட்டன. அந்த உடல், துருக்கியைச் சேர்ந்த ஒருவர் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இந்தப் படுகொலையில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவது தவறாகும். கஷோகியைக் கொல்ல, சவூதி புலனாய்வு அமைப்பின் துணைத் தலைவர் அகமது அல்-அஸிரியும், கஷோகியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விமானம் மூலம் துருக்கி சென்ற குழுவின் தலைவரும்தான் உத்தரவிட்டனர் என்றார் அவர்.   (மேலும்)  16. 11.18

.*

Theneehead-1

   Vol:17                                                                                                                               02.12.2018