சிறிசேன எதற்குத் துணிந்து நிற்கிறார்?

இலங்கையில் அரங்கேறியிருக்கும் அரசியல் நாடகம் நிச்சயமற்றநிலையைத் தோற்றுவித்திருக்கிறது. அதன் தாக்கங்கள் கடல்கடந்தும் உணரப்படும். தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் இருந்து தனது கட்சியை வாபஸ்பெற்றுக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததன் மூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு நெருக்கடியைத் தோற்றுவித்திmahinda-maithri-ranil2ருக்கிறார். பதவிநீக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறியிருக்கிறார். இலங்கையின் அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதியல்ல, பாராளுமன்றமே பிரதமரைப் பதவியிலிருந்து அகற்றமுடியும். அதனால் விக்கிரமசிங்கவை சிறிசேன பதவிநீக்கியது சட்டவிரோதமானது.106 ஆசனங்களுடன் விக்கிரமசிங்க தலைமையலான ஐக்கிய தேசிய முன்னணியே பாராளுமன்றத்தில் கூடுதலான ஆசனங்களைக் கொண்ட கட்சியாக விளங்குகிறது. சிறிசேனவுக்கும் ராஜபக்சவுக்கும் 95 எம்.பி.க்களின் ஆதரவே இருக்கிறது.

விக்கிரமசிங்கவைப் பதவிநீக்கியதற்கு அடுத்தநாள் சிறிசேன பாராளுமன்றத்தை நவம்பர் 16 வரை இடைநிறுத்தும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.சாதாரண பெரும்பான்மை ஆதரவுடன் அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான எம்.பி.க்களின் எண்ணிக்கை இல்லாதநிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றுக்கு முகங்கொடுப்பதை முன்கூட்டியே தவிர்ப்பதற்கும் விக்கிரமசிங்கவின் பக்கத்தில் நிற்கும் எம்.பி.க்களை ராஜபக்ச தனது பக்கத்துக்கு இழுப்பதற்கு காலஅவகாசத்தைக் கொடுப்பதற்காகவுமே ஜனாதிபதி பாராளுமன்றத்தை இடைநிறுத்தினார். இலங்கைத்தீவில் விவகாரங்கள் ஒரு முழுவட்டத்தைச் சுற்றிவந்து நிற்கின்றன.2014 டிசம்பர் வரை நண்பர்களாக இருந்த சிறிசேனவும் ராஜபக்சவும் 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் எதிரிகளாக மாறினார்கள். ராஜபக்சவை எதிர்த்து அந்த தேர்தலில் சிறிசேன போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இப்போது அவர்கள் இருவரும் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து அகற்றுவதற்கு திரும்பவும் நண்பர்களாகியிருக்கியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

      

ராஜபக்ச அதிகாரத்துக்கு மீண்டும் வந்திருக்கின்றமை இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தக்கூடியதாகும்.அவரது ஆட்சிக்காலத்தின்போதுதான் இலங்கையில் சீனா அதன் செல்வாக்கை வலுவாகக் கட்டியெழுப்ப அனுமதிக்கப்பட்டது; இலங்கை சீனாவின் கேந்திரமுக்கியத்துவ சொத்தாகியது.ராஜபக்ச அண்மைய மாதங்களில் இந்தியாவுக்கு எதிரான பேச்சுக்களைக் குறைத்துக்கொண்டாலும் கூட டில்லி எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியமாகும்.ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வந்திருப்பதை ஆதரித்து சீனா அவரை ஏற்கெனவே வாழ்த்தியிருக்கிறது.சிறிசேனவும் ராஜபக்சவும் கூட்டாக ஆட்சியதிகாரத்தில் இருக்கும் நிலையில் இலங்கையில் தனது முதலீடுகளினதும் நலன்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் என்று சீனா உணருகிறது.

இந்தியா மிகவும் ஜாக்கிரதையுடனேயே நடந்துகொள்ளவேண்டும். இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளைக் கிளறிவிடக்கூடிய நடவடிக்கைகளில் சிறிசேனவும் ராஜபக்சவும் தீவிரமாக இறங்கக்கூடிய சாத்தியப்பாட்டை நிராகரிக்கமுடியாது.இந்தியாவின் புலனாய்வு நிறுவனமான ' றோ ' தன்னைக் கொலைசெய்வதற்கு சதிசெய்வதாக கடந்தவாரம் சிறிசேன அமைச்சரவைக்கூட்டத்தில் வைத்து கூற்றஞ்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.அவ்வாறான குற்றச்சாட்டை அவர் முன்வைத்தது ராஜபக்ச ஆட்சியதிகாரத்துக்கு வருவதற்கேதுவாக களநிலைவரங்களை தயார்செய்வதற்காகவா?

சிறிசேனவும் ராஜபக்சவும் அண்மைய நிகழ்வுப்போக்குகளை நியாயப்படுத்துவதற்காக சிங்கள தேசியவாத சக்திகளை அணிதிரட்டுவதில் மும்முரமாக இறங்குவர் என்று எதிர்பார்கலாம்.எதிர்வரும் நாட்களில் இந்தியாவைக் குற்றஞ்சாட்டுவது சிங்கள அரசியல்வாதிகளுக்கு வசதியான கருவியாக மாறலாம்.இலங்கையில் ஒரு கட்சியை அல்லது ஒரு அரசியல்வாதியை இந்தியா ஆதரிக்குமேயானால், உள்நாட்டு விவகாரங்களில் அது தலையீடு செய்கின்றது என்று இலங்கையர்கள் குற்றஞ்சாட்டுவதற்கு இடம் கொடுப்பதாகிவிடும்.


எனவே இலங்கையில் தற்போதைய குழப்பநிலை தணியும்வரை இந்தியா அந்நாட்டு விவகாரங்களில்  முனைப்புக்காட்டுவதைத் தவிர்க்கவேண்டும். தற்போதைய நெருக்கடியைத் தீர்த்துக்கொள்வது இலங்கையின் வேலை.அந்த தீவு கேந்திரமுக்கியத்துவமுடைய ஒரு அயல்நாடாகும். இந்தியா ஏற்கெனவே அங்கு அதன் செல்வாக்கை இழந்துவிட்டது. எந்த கட்சி அரசாங்கத்தை அமைக்கிறதோ, எவர் பிரதமர் பதவியில் அமருகிறாரோ அவர்களுடன் காரியமாற்றுவதற்கு இந்தியா தன்னைத் தயார்ப்படுத்தவேண்டும்.

( டெக்கான்ஹெரால்ட் ஆசிரிய தலையங்கம் 29 அக்டோபர் 2018 )  தமிழில்  வீரகேசரி
 

Theneehead-1

   Vol:17                                                                                                                               31.10.2018