வரைவு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு மேலும் திருத்தங்கள் தேவை

                                        - லக்சிறி பெர்ணாண்டோ

தற்போதுள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டத்துடன்(பி.ரி.ஏ) ஒப்பிடுகைterror actயில் வரைவு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில்(சி.ரி.ஏ) வெளிப்படையாக முன்னேற்றங்கள் தென்படுகின்றன.எனினும் அவற்றில் கால்துறையினரின் அல்லது பாதுகாப்பு படைகள் பக்கத்தில் இருந்து மெற்கொள்ளப்படும் அதிகார துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கும் மற்றும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படும் வரை அல்லது அதன்பிறகு சந்தேக நபர்களுக்குத் தேவையான உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

காவல்துறை அல்லது பாதுகாப்பு படைகள் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படும் சாத்தியமான அதிகார துஷ்பிரயோகத்தை தடுப்பது குறிப்பாக ஸ்ரீலங்கா போன்ற ஒரு நாட்டில், வெறுமே சட்டத்தின் நயங்களில் மட்டும் தங்கியிருக்கவில்லை. காவல்துறை சீர்திருத்தங்கள், மிகவும் கண்டிப்பான ஆட்சேர்ப்பு நடைமுறைகள்,மனித உரிமைகள் கல்வி, கடுமையான மேற்பார்வை (நீதித்துறையும் மற்றவைகளும்) மற்றும் எதிர் சமநிலைப்படுத்தும் அமைப்புகள் போன்றவைகளுக்கு காவல்துறை சேவையை இன்னும் அதிக மனிதாபிமானம் மற்றும் பொறுப்புணர்வு உள்ளதாக மாற்றவேண்டிய தேவை உள்ளது.

இத்தகைய நிலமைகள், தெற்கில் கிளர்ச்சிகள் அல்லது பயங்கரவாதம் 1971லும் பின்னர் திரும்பவும் 1987 - 1989 காலப்பகுதியிலும் அல்லது வடக்கில் குறிப்பாக எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதம் 1981 மற்றும் 1983 காலப்பகுதியிலம் வெடிப்பதற்கு முன்னர் ஏற்பட்டிருந்தால் உள்நாட்டு யுத்தத்தின் வடிவத்தில் எழுந்த பிரதான பேரழிவுகளை தவிர்த்திருக்கலாம் அல்லது குறைத்திருக்கலாம்.

காவல்துறையினரின் செயல்பாடுகள் பயங்கரவாதத்தை இன்னும் அதிகரிக்கக்கூடும் கருத்தியல்ரீதியான, அமைப்புரீதியான மற்றும் அகநிலைக் காரணிகள் கிளர்ச்சி, ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாத இயக்கங்கள் என்பனவற்றின் பின்னால் உள்ளன. இருப்பினும் சந்தேகத்துக்குரியவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கையில் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படைகள், தன்னிச்சையாக, அளவக்குமீறி, மனிதாபிமானமற்ற முறையில் செயற்பட்டால் இந்தக் காரணிகள் அதிகரிக்கலாம் அல்லது அவற்றுக்கு அரசியல் சட்டபூர்வத்தன்மைகூட வழங்கப்படலாம். இது வெறுமே ஒரு கொள்கையல்ல ஆனால்  1971க்கு முன்னும் மற்றும் அதன் பின்னரும் திரும்பத் திரும்ப அவதானிக்கப்பட்டு வரும் ஒரு பொதுவான அவதானிப்பு.

நான் முதன்முதலில் கல்வி போதித்த வித்தியோதயா பல்கலைக்கழகம் 1960ன் பிற்பகுதியிலும் மற்றும் 1970ன் முற்பகுதியிலும் கிளர்ச்சி வெடிப்பதற்கு முன்பு ஜேவிபி செயற்பாடுகளுக்கு ஒரு பிரதான மையமாக இருந்தது. அதன் பிரதான வாயிலுக்கு முன்பாக ஒரு புதிய  காவல்துறை மையம் இருந்தது, மற்றும் பல சந்தர்ப்பங்களில் ஜேவிபி மானவர்களும் மற்றும் பிறரும் கைதுசெய்யப்பட்டு குறைந்தபட்சமாக சொல்வதானால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டார்கள். அந்த மாணவர்களும் போட்டி மாணவர் குழுக்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்டார்கள். இருந்தபோதிலும் ஏப்ரல் மாதத்தில் திடீரென ஒழுங்கமைக்கப்பட்ட கிளர்ச்சியின்போது சுமார் 100 காவல் நிலையங்களை ஜேவிபி இலக்கு வைத்து தாக்குவதற்கு பிரதான காரணம் நாடுமுழுவதிலும் மேற்கொள்ளப்பட்டிருந்த காவல்துறையினரின் அடக்குமுறைதான் பிரதான காரணம் எனக் கருத முடியும். ஆய்வுகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டது.


1970 களின் பிற்பகுதியிலும் மற்றும் 1980 களின் ஆரம்பத்திலும் யாழ்ப்பாணத்திலும் மற்றும் வடக்கிலும் இதே நிலமைதான் தோன்றியிருந்தது. நான் மார்ச் 1981ல் இனங்களுக்கு இடையேயான நீதி மற்றும் சமத்துவத்துக்கான அமைப்பின் (எம்ஐஆர்ஜேஈ) தூதுக்குழுவின் ஒரு அங்கத்தவனாக நிலமையை விசாரிக்க அங்கு சென்றிருந்தேன். அந்த நேரத்தில் போராளி இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர்களுக்கு எதிராக காவல்துறையின் மிருகத்தனமான அட்டூழியங்கள் இடம்பெற்றதுக்கான நம்பிக்கையான சாட்சியங்கள் இருந்தன. அந்த இயக்கங்கங்கள் ஒருவேளை தங்கள் சித்தாந்தங்களை உறுதிப்படுத்தும் நோக்கில் விரைவிலேயே பயங்கரவாதத்துக்குத் திரும்பின.

ஆரம்பத்தில் காவல்துறையினரின் அடக்குமுறைகளுக்கு வெளிப்படையான இனத்துவ கோணம் இருக்காத போதிலும் விரைவிலேயே அது மாற்றம் பெற்றது. எங்கள் ஆய்வின்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக ஒரு காவல்துறை உத்தியோகத்தரின் பெயர் காணப்பட்டது, பின்னர் அவர் ஓய்வு பெற்றதின் பின்னர் ஒரு தீவிர சிங்களத் தேசியவாத அரசியற்கட்சியில் சேர்ந்து கொண்டார்.

வடக்கிலோ அல்லது தெற்கிலோ திரும்பவும் பயங்கரவாதம் உயிர்த்தெழக்கூடிய சாத்தியத்தை எவராலும் ஒதுக்கிவிட முடியாது. தெற்கில் அது இரண்டுமுறை தோன்றியது. ஆகவே சில விசேட சட்டங்கள் அல்லது விதிகள் அவசியம் என்பதை மறுக்க முடியாது. பயங்கரவாதம் ஒரு சர்வதேச நிகழ்வு. எனினும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படைகளின்  அட்டூழியங்கள் இடம்பெறுவதை அனுமதிக்கலாகாது, அது பயங்கரவாதத்தை இன்னும் அதிகரிக்கவே செய்யும். இல்லாவிட்டால் கூட, குற்றவாளிகள் என நிரூபணமானால் அந்தக் குற்றங்களுக்காக அவர்களைத் தண்டிப்பதைத் தவிர, சந்தேக நபர்களின் உயிர்,கண்ணியம் மற்றும் உரிமைகள் என்பனவற்றுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.


சிறப்புச் சட்டத்திற்கான நியாயம்?


ஸ்ரீலங்காவின் கடந்தகால நிகழ்வுகள் மற்றும் சர்வதேச நிலைமைகள் என்பனவற்றின் காரணமாக பயங்கரவாதக் குற்றங்களுக்கு விசேட சட்டங்கள் அல்லது விதிகள் தterror act1ேவை என்பதனை நியாயப்படுத்த முடியும், எனினும் அதில் எதைச் சேர்க்கவேண்டும் மற்றும் எதை நீக்க வேண்டும் என்பதை அந்தச் சட்டங்களில் தெளிவுபடுத்த வேண்டும். இது தற்போது முன்மொழிந்;துள்ள வரைவு பகுதி 1ல் வெகு தெளிவாகத் தெரியப்படுத்தப்படவில்லை.

குறிப்பாக “அத்தியாவசிய சேவைகள் அல்லது விநியோகங்களுக்கு தீவிரமான தடங்கல் அல்லது சேதம் உண்டாக்குதல் அல்லது எந்தவொரு  அத்தியாவசிய சேவை அல்லது விநியோகத்துடன் தொடர்புடைய எந்தவொரு முக்கியமான உட்டகட்மைப்பு அல்லது தளவாட வசதிகளில் குறுக்கீடு செய்யும்போது, இலங்கை அரசாங்கத்தை தவறாகவும் மற்றும் சட்ட விரோதமாகவும் செயல்படுத்துவதன் மூலம் அவ்வாறு செய்வது அல்லது செய்வதைத் தவிர்ப்பது” என்று குறிப்பிட்டுள்ளது ஏற்கத்தக்க வரையறை அல்ல.


இத்தகைய வரையறையின் கீழ் தொழிற்சங்கம் அல்லது மாணவர்களின் ஆர்ப்பாட்டம் மற்றும் செயல்பாட்டை பயங்கரவாதம் என வரையறுக்க முடியும், அரசியல் எதிர்ப்பு மற்றும் செயற்பாடுகளுக்கு கூடுதலாக. தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கூட அத்தகைய விரிவான ஒரு வரையறை இல்லை என வாதிடப்படுகிறது (நிர்மலா சந்திரஹாசன், த ஐலன்ட், 22 ஒக்ரோபர்). அதனைத் தொடர்ந்து வரைவில் “எந்தவொரு நபராலும் நல்ல நம்பிக்கையின் ஒரு அடிப்படை உரிமையின் சட்டபூர்வ நடைமுறையில் நடத்தப்படும் செயல்கள் பயங்கரவாதத்தின் கீழ் ஒரு குற்றம் ஆகாது” என்று சொல்லப்பட்டுள்ள போதிலும் அதை ஒரு சரியான விலக்கு எனக் கருத முடியாது. அடிப்படை உரிமைகள் பற்றிக் குறிப்பிட்டிருப்பது, பயங்கரவாதம் தொடர்பான சாக்குப்போக்கு அல்லது சமாதானம் தொடர்பாக யார் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படலாம் என்பதுக்கு மிகக் குறைவான பாதுகாப்பையே வழங்குகிறது.


குற்றவியல் விதிகள் சட்டம் (1995) கீழ் பயங்கரவாதம் தொடர்பாக தெளிவான(ஓரளவு) வரையறையைக் கொண்டுள்ள ஒரு நாடு அவுஸ்திரேலியா ஆகும் அதில் சொல்லப்பட்டிருப்பது பின்வருமாறு:  “ஒரு பயங்கரவாத செயல் என்பது அரசியல்,மத அல்லது கருத்தியல் காரணத்தை முன்னெடுக்கும் நோக்குடன் பொதுமக்களையோ அல்லது எந்த ஒரு அரசாங்கத்தையோ அச்சுறுத்தல் மூலம் கட்டாயப்படுத்த அல்லது பாதிப்பை ஏற்படுத்த விரும்பும் ஒரு செயலாகும், அந்தச் செயல் விளைவிப்பது (1) ஒரு நபருக்கு மரணம்,தீவிர தீங்கு அல்லது ஆபத்தை உண்டாக்குதல் (2) உடமைகளுக்கு பாரிய சேதத்தை உண்டாக்குதல் (3) பொதுமக்களின் ஆரோக்கியம் அல்லது பாதுகாப்புக்கு தீவிரமான ஆபத்தை ஏற்படுத்துதல் (4)  தொலைத்தொடர்பு அல்லது மின்சார வலையமைப்பு போன்ற முக்கியமான உட்கட்டமைப்புளுக்கு பாதிப்பு அல்லது அழிவை ஏற்படுத்தும் விதத்தில் தலையீடு செய்வது” (அவஸ்திரேலிய பயங்கரவாத சட்டங்கள். சட்டமா அதிபர் திணைக்களம்)

மரணம், உடமைகளுக்குச் சேதம், பொதுமக்கள் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றுக்கான ஆபத்து மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு இடையூறு அல்லது சேதம் விளைவித்தல் போன்ற தீமையான பயங்கரவாதச் செயல்களின் நிகழ்வுகள் அல்லது நோக்கங்கள் பற்றி வலியுறுத்தும் வரையறை அல்லது விளக்கங்கள் தெளிவாக உள்ளன. இந்த வரையறை பினவருவனவற்றையும் தெளிவாக விளக்குகின்றது: “ஒரு பயங்கரவாதச் செயல், பின்வருவனவற்றுடன் தொடர்பு இல்லையெனில்  வாதிடுவது, எதிர்ப்பது, அதிருப்தி தெரிவிப்பது அல்லது தொழில்துறை நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடும்போது அந்த நபருக்கு கட்டாயம் அல்லது வன்முறை அல்லது மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கம் இல்லையெனில் அது  குற்றத்திலிருந்து தவிர்க்கப்படுகிறது”.

ஆகவே பலவந்தம்,வன்முறை பயன்படுத்துதல் அல்லது மற்றவர்களுக்கு தீங்கிழைக்கும் எண்ணம் அல்லது நாட்டின் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு தீங்கு ஏற்படுத்துதல் போன்ற நோக்கம் இல்லையெனில் அது பயங்கரவாதச் செயல் அல்ல. அத்தகைய தெளிவு குறைந்தபட்சம் இந்தக் கட்டத்திலாவது, முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் வெளிப்படையாகவே இல்லை.

குற்றம் சாட்டப்பட்டவருக்குள்ள உரிமை


குற்றவியல் கோவைச் சட்டத்தின் கீழ், குற்றவாளி அல்லது சந்தேக நபருக்கு தனது வாழ்க்கை, கண்ணியம் மற்றும் நேர்மை என்பனவற்றைப் பாதுகாப்பதற்கு அவருக்குச் சில உரிமைகள் உள்ளன. இதே விடயம் பயங்கரவாத சந்தேக நபர்களிடம் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படும் வரையிலும் மற்றும் அதன்பின்னரும் கூட பின்பற்றப்பட வேண்டும். எனது அனுபவத்தின்படி பயங்கரவாதிகளும்கூட சாதாரண மனிதர்கள்தான் அவர்களது சித்தாந்தம் மற்றும் செயற்பாடுகளைத் தவிர. ஒரு நபர் பயங்கரவாதியென குற்றஞ்சாட்டப்படும்போது அல்லது சந்தேகிக்கப்படும்போது அவர்மீது வலுவான ஒரு தப்பெண்ணம் அல்லது களங்கம் உருவாகிறது.


ஸ்ரீலங்காவின் கடந்தகால மற்றும் தற்போதைய சர்வதேச சூழ்நிலைகள் மற்றும் நாட்டினுள் நிகழும் பதட்டமான அரசியல் சூழ்நிலைகள் என்பனவற்றினால் சிறுபான்மை இterroract2ன அல்லது மத சமூகத்தைச் சேர்ந்த தீவிரவாத இளைஞர்கள் மற்றும் அங்கத்தவர்கள் குறிப்பாக தவறான அல்லது பிழையான குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படுகிறார்கள். மறுபுறத்தில் வன்மையான அரசியல் போக்குகள் எங்கள் சமூகத்தில் தோன்றியுள்ள ஒரு நோயாக பல பகுதிகளிலும்  வெளிப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட சட்டத்தின் கீழ் எந்தவொரு காவல்துறை அதிகாரி, ஆயுதப்படையின் ஒரு அங்கத்தவர் அல்லது ஒரு கடலோர காவற்படையினைச் சேர்ந்தவர், பயங்கரவாதச் சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை  பிடியாணை எதுவுமின்றி கைது செய்ய முடியும். பயங்கரவாத சந்தேக நபர்களைக் கைது செய்யும் விஷயத்தில் ஆயுதப்படையின் அங்கத்தவர்கள் மற்றும் கடலோரக் காவற்படையினர் அதற்கு அவசியமான சட்ட அமலாக்கத் திறன்களைக் கொண்டிருப்பார்களா என்பது மிகவும் கேள்விக்கிடமான ஒரு விஷயம்.

அதில் மேலும் தெளிவில்லாமல் இருப்பது, அந்த சந்தேக நபர் அதே அதிகாரியின் காவலின் கீழ் வைக்கப்பட்டிருப்பாரா அல்லது அந்தப் பகுதி காவல்துறை பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்படுவாரா என்பது. இதில் வெளிப்படையாக முரண்பாடான விதிகள் உள்ளன. இது ஒரு காலவரையறைக்குள் தெளிவு படுத்தப்பட வேண்டும். தற்பொழுது நிலவும் விதிகளின்படி அத்தகைய சந்தேக நபர் 48 மணித்தியாலங்களுக்குள் நீதிபதி;யின் முன் நிறுத்தப்பட வேண்டும், ஆனால் துரதிருஷ்ட வசமாக அந்த நீதிபதி அல்ல தடுப்புக்காவல் உத்தரவை வழங்குவது ஆனால் ஒரு டிஐஜிதான் அதை வழங்குவார். ஆரம்ப தடுப்புக்காவல் உத்தரவு இரண்டு வாரங்களாக உள்ள அதேவேளை இது நீதிபதிக்கு அறிவித்த பின்னர் எட்டு வாரங்கள் வரை நீட்டிக்கப்படலாம் ஆனால் இது அந்த நீதிபதியின் தெளிவான ஒப்புதல் இல்லாமலே மேற்கொள்ளப் படலாம்.

விமர்சகர்கள் பெரிதும் வாதிடும் விஷயம் என்னவென்றால்,விசாரணைக் காலத்தின்போது, சந்தேகநபர் நீதிபதி முன் முன்னிலைப் படுத்தப் பட்டிருந்தாலும் கூட, அந்த நீதித்துறை அலுவலருக்கு வெறும் பெயரளவில் மேற்பார்வையிடும் அதிகாரம் மட்டுமே இருக்கும் மற்றும் மொத்த கவனிப்பும் சம்பந்தப்பட்ட டிஐஜியினுடையதாகவே இருக்கும், அநேகமாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான டிஐஜிக்கே இந்தப் பொறுப்பு வழங்கப்படும். இன்றைய நாட்களில் அந்தப் பதவிகளுக்குப் பொறுப்பாக எந்த மாதிரியான ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டு வருகிறோம்.
தற்;போது பெரிதும் விமர்சிக்கப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு (பி.ரி.ஏ) பதிலாக புதிய பயங்கரவாத  எதிர்ப்புச் சட்டத்தை (சி.ரி.ஏ) ஆரம்பித்து வைக்கும் தற்போதைய நடவடிக்கைகளில் பெரிதும் பற்றாக்குறையாக இருப்பது என்னவென்றால், முறையான ஒரு பொது விவாதம் ஆகும். முன்பு இந்த முன்மொழியப்பட்ட சி.ரிஏ இங்கு கிடைத்தது. இப்பொழுது நான் ஆரம்பித்துள்ள கலந்துரையாடலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அது கிடைப்பதில்லை.

ஒரு இருப்பு நிலைக் குறிப்பு

மனித உரிமைக் கண்காணிப்பகம்  புதிய வரைவுச் சட்டத்திற்கு தகுதி வாய்ந்த சமிக்ஞையை வழங்கியுள்ளது, “2018ம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு, ,பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (பி.ரி.ஏ) மாற்றுவதற்கான முந்தைய முன்மொழிவுகளில் கணிசமான முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது, என்றாலும்கூட பிரச்சினையான பல விதிகள் இன்னமும் இருக்கின்றன”என்று அது தெரிவித்துள்ளது.  ஆபத்து பகுதிகளில் முன்னேற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனினும் மீந்திருக்கம் கேள்வி என்னவென்றால் அது விவாதத்துக்கும் மற்றும் குழு நிலைக்கும் வரும்போது, பாராளுமன்ற அங்கத்தவர்கள் மனித உரிமைப் பாதுகாப்பை முன்னேற்றுவார்களா அல்லது அதை இன்னமும் மோசமாக்குவார்களா என்பதுதான். அரசாங்கத்துக்கு உள்ள சிறந்த தெரிவு மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட விமர்சகர்கள் முன்மொழிந்துள்ள பரிந்துரைகள் மற்றும் முன்னேற்றங்களை கணக்கில் எடுத்து மிகவும் திருத்தமான ஒரு பதிப்பை விரைவாக முன்மொழிவதுதான்.

தமிழ் சமூகத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகள் (நிர்மலா சந்திரஹாசன், ராஜன்ஹ_ல் போன்றவர்கள்) மற்றும் பிறர் (றுக்கி பெர்ணாண்டோ போன்றவர்கள்) தங்கள் கவலைகளை தெளிவாகக் குறிப்பிட்டுள்ள அதேவேளை சிறுபான்மை சமூகத்தவர்கள் (இனம் மற்றும் மதம் ஆகிய இரண்டையும் சேர்ந்த) இன்னமும் பதிய அல்லது மேம்பட்ட சட்டங்களில் கூட பெரிய பங்குகளை அல்லது ஆபத்துகளை கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றே, எனவே பரிந்துரைகள் அளவுக்கு அதிகம் கனகச்சிதமாகவோ அல்லது நடைமுறைக்கு ஒவ்வாததாகவோ இருக்கக் கூடாது.

விசாரணைகள் இன்றி தடுப்புக்காவலில் இருப்பவர்கள் மற்றும் ஏனைய கருத்துருவாக்கங்கள் பற்றிய ஸ்ரீலங்காவின் படுபயங்கரமான பதிவுகளை தேடி அறிந்துகொண்டபின் ராஜன் ஹ_ல் அவர்கள் மதிப்பான ஒரு கேள்வியைக் கேட்டார்,”எங்கள் சட்டப்புத்தகத்தில் உள்ள குற்றவியல் விதிகளைத் தவிர அதிகமாக வேறு ஏதாவது தேவைப்படுமா என்று சிந்திப்பதற்கு இது எங்களை தாமதம் செய்யக்கூடாது?” ஒரு வழியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை, பயங்கரவாதம் பற்றிய இன்னும் அதிகமான துல்லிய வரையறைகளுடன் அவுஸ்திரேலியாவில் உள்ளதைப்போல எதை உள்ளடக்கவேண்டும் மற்றும் எதை தவிர்க்கவேண்டும்  என்பதைக் குறிப்பிடும் வகையில் நாட்டின் சாதாரண குற்றவியல்ஃகுற்றவியல் கோவை யின் ஒரு பகுதியாக ஆக்கவேண்டும்.

அப்போதுதான் கைது, தடுப்புக்காவல்,விசாரணை, பாதுகாப்பு, சட்ட உதவி மற்றும் வழக்கு விசாரணை என்பனவற்றை உள்ளடக்கிய சட்ட அமலாக்கல் நடவடிக்கைகள் மூலம் நாட்டின் குற்றவியல் கோவையில் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தவோ அல்லது அதற்கு நெருக்கமாகவோ வர முடியும். அதைவிடுத்து காவல்துறை அதிகாரிகள் ஆயுதப்படையினர் அல்லது கடலோரப் பாதுகாப்பு படையினருக்கு தன்னிச்சையான அல்லது அளவுக்குமீறிய அதிகாரத்தை வழங்கக்கூடாது. இந்த முகவுரையின் கீழ் எமது தற்போதைய குற்றவியல் தண்டனைக் கோவை ஒழுக்கமான, ஜனநாயகமான மற்றும் நாகரீகமானதாக அமைந்துள்;ளது.

எனது தற்போதைய சமாப்பிப்புகள் மேலோட்டமானதும் ஆரம்பநிலையிலும் உள்ள அதேவேளை, வேறு இரண்டு முன்மொழிவுகளையும் முன்வைக்கிறேன்: (1) பயங்கரவாத சந்தேக நபரை கைது செய்த முதலாம் நாளே (இதன் கருத்து 24 மணித்தியாலங்களுக்குள்) நீதிபதியின் முன்னிறுத்தி  அவரது கண்காணிப்பை வலுப்படுத்துதல் மற்றும் (2) சந்தேக நபர்கள் மற்றும் தடுப்புக்காவலில் உள்ளவர்களினது அடிப்படை உரிமைகள் வெளிப்படையாக மீறப்பட்டால், உயர்நீதிமன்றங்களுக்கு போவது உள்ளடங்கிய ஒட்டுமொத்த மேற்பார்வைக்கும் தலையீடு செய்யும் வகையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பங்கினை வலுப்படுத்தல் என்பனவே அவை.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Theneehead-1

   Vol:17                                                                                                                               31.10.2018