Theneehead-1

Vol: 14                                                                                                                                                31.12.2016

இலங்கையில் பெயர்களில் உள்ள மதமாற்றங்கள்,முகஸ்துதி மற்றும் வழக்கம்

                                               திஸ்ஸ தேவேந்திரா

நான் ஒரு அறிஞனோ அல்லது ஆய்வாளனோ அல்ல -  எங்கள் வரலாற்றிலும் மற்றும் கலாச்சாரத்திலும் நிரந்தர ஆர்வம் கொண்ட வெறுமே பொதுவான ஒரு வாசகன். இந்தக் கட்டுரை ஒருவேளை தகவலறிந்தவர்களின் விமர்சனத்தை தூண்டக்கூடும், அதையும் நான் வரவேற்கிறேன்.dutch

எங்கள் தாயகத்தில் உள்ள பல்வேறு குடும்ப மற்றும் தனிப்பட்ட பெயர்கள் என்னை எப்போதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளன. பண்டைக்கால சிங்கள அரசர்கள் காமினி,அபயா மற்றும் திஸ்ஸ என எளிய பெயர்களாலும் மற்றும் ஜெத்தா(மூத்த), சத்தா(பக்தியுள்ள). மகா போன்ற அந்தஸ்து மற்றும் பண்புகளைக் குறிச்கும் முற்சேர்க்கைகளாலும் அழைக்கப்பட்டார்கள். பின்னாளில் வந்த அரசர்கள் சிறிய இராச்சியங்கள்மீது குறைந்த சக்தியை பயன்படுத்தி வெற்றிகண்டு தங்களை மிக உயர்வாக ராஜாதி ராஜசிங்க  போன்ற பெயர்களால் அழைத்து ஆறுதல்படுத்திக் கொண்டார்கள்.

சிகிரியா சுவர்களில் உள்ள கிறுக்கல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதின்படி பொதுமக்கள் தங்கள் வசனங்களை எழுதி பியால், புதல், கிற், மிற்றல் போன்ற எளிய பெயர்களால் கையொப்பம் இட்டுள்ளார்கள். நூற்றாண்டுகள் கடந்த பின்னர் சிறந்த ஒலியுள்ள சோமபால, பியசேன, சிறிபால போன்ற தனிப்பட்ட பெயர்கள் உயர் சாதிக்காரர்களால் பின்பற்றப்பட்டன. சுவராஸ்யமான முறையில் சாதி குறைவானவர்கள் அநேகமான பண்டைய பெயர்களையே தக்க வைத்துக் கொண்டார்கள், இதனால் அவை தமது சாதியை இழந்தன. சிறின் - ஆ, பானி -யா, குணய் - ஆ போன்ற பெயர்களில் அடிக்கடி இகழ்ச்சியான முறையில் பிற்சேர்க்கையான யா என்பதை சுமக்க வைக்கப்பட்டது.

போர்த்துக்கேயர்

இலங்கையின் முதல் ஐரோப்பிய ஆக்pரமிப்பாளர்கள் போர்த்துக்கேயர் ஆவர், அவர்கள் வாள் மற்றும் பைபிள் என்பனவற்றின் மூலம் எங்கள் சிங்கள மற்றும் தமிழ் கடலோர மாகாணங்களில் அழிக்கமுடியாத தடங்களை பதித்துச் சென்றார்கள். அவர்களது மிகப் பெரிய தாக்கம் கரையோரப் பகுதிகளில் உள்ள சdutch-1ிங்கள மீனவர் சமூகம் - சாதி மீது ஏற்பட்டதால் கத்தோலிக்க விசுவாசம் மீதான ஆர்வம் அவர்களின் புதிய ஆட்சியாளர்களின் முன்னேற்றம் மற்றும் நம்பிக்கை காரணமாக பரவலாயிற்று. அவர்களின் கத்தோலிக்க குருமார்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் ஆகியோரின் உத்தரவின் பேரில், இந்த மதம் மாறியவர்கள் போர்த்துக்கீசிய (சில முன்னாள் யூத) பெயர்களான பெர்ணாண்டோ, மென்டிஸ், வாஸ், பெரேரா, சில்வா மற்றும் அதேபோன்ற பல பெயர்களைப் பின்பற்றினார்கள். எனினும் சிங்கள சமூகம் ஆணாதிக்கம் மற்றும் குடும்ப பெருமை என்பனவற்றை கவனிப்பதால் அவர்கள் இந்த வெளிநாட்டு குடும்ப பெயர்கள் மற்றும் விவிலிய கிறஸ்தவ பெயர்கள் என்பனவற்றை அவர்களின் அசல் குடும்ப பெயர்களுடன் முன்னுரையாக இட்டுக்கொண்டார்கள். அவற்றில் சில புராதன காலம் முதல் இன்றுவரை வழங்கப்படுகிறது (உதாரணம்: போதியா - பதுகே).

சுவராஸ்யமாக போர்த்துக்கேய - கத்தோலிக்க செல்வாக்கு, மீனவ சமூகம் இல்லாத நாட்டின்; உட்பகுதிக்குள் ஊடுருவவில்லை. இதன்படி விவசாய சமூகம் மற்றும் சாதியை சேர்ந்த அநேகர் போர்த்துக்யே குடும்ப பெயர்களை பின்பற்றவில்லை. எனினும் அவர்கள் பெரேரா மற்றும் சில்வா என்கிற பெயர்களில் அதிக நாட்டம் காட்டினார்கள், இதன்படி சாதியை அடிப்படையாக கொண்ட திருமணங்களில் சாதி அடையாளம் குழப்பகரமானதாக மாறியுள்ளது. பீரிஸ், டயஸ், டி அல்விஸ் போன்ற வேறு சில போர்த்துக்கேய பெயர்கள் கூட வித்தியாசமான முறையில் சில சிங்கள உயர்குடி குடும்பங்கள் மத்தியில் காணப்படுகின்றன. அவர்கள் அடிக்கடி தங்கள் பாரம்பரிய பெயர்களின் இடையே கோடிட்டு அதை செருகிக் கொள்கிறார்கள்.

மதமாற்றம் செய்வதை எதிர்த்த அடங்காத இந்துக்களை மோசமாகக் கொலை செய்ததின் பின்னர் போர்த்துக்கேயர் வடக்கில் தமிழ் மீனவ சமூகம் - சாதியை திரளாக மதம்மாற்றுவதில் வெற்றி கண்டார்கள். முந்தைய போர்த்துக்கேய தமிழ் சமூகம் ஆணாதிக்கம் மிக்கதாக இருக்கவில்லை மற்றும் அதனால் அவர்களிடம் குடும்ப பெயர் இருக்கவில்லை. அவர்கள் தங்கள் சொந்தப் பெயருக்கு முன்னால் தங்களின் தந்தையின் பெயரையே முன்சேர்க்கையாக கொண்டுள்ளார்கள். கத்தோலிக்க குருமார் இவை அனைத்தையும் மாற்றி இந்த மதம் மாறியவர்கள் தங்கள் கத்தேதலிக்க விசுவாசத்தை பறைசாற்றும்படியான  பெயர்களை பின்பற்றுமாறு அவர்களை வற்புறுத்தினார்கள். இந்த மதம்மாறியவர்களின் பெயர்கள் இப்பொழுது ஒரு சுவராஸ்யமான தழுவலை கொண்டுள்ளது. அவர்கள் தங்கள் கத்தோலிக்கத்தை பறைசாற்றியபடி தமிழ் தொழில் விசுவாசத்தையும் தங்கள் கிறீஸ்தவ பெயருடன் குறித்துக் கொண்டார்கள் உதாரணமாக யேசுதாசன், மரியதாசன், அந்தோனி முத்து, சவிரி(சேவியர்)முத்து போன்றவை. இவை அவர்களது குடும்ப பெயர்களாக ஐந்து நூற்றாண்டுகளாக நிலைத்து நிற்கின்றன. அவர்களது சொந்தப் பெயர்களும் கூட பைபிள் மற்றும் புனிதர்களின் வாழ்க்கை என்பனவற்றில் இருந்து பின்பற்றப்பட்டன.

ஒல்லாந்தியர் (டச்சுக்கள்)

ஒல்லாந்தியர் கடுமையான நிறவெறியை பராமரித்தார்கள். நாட்டினரோடுள்ள அவர்களது தனிப்பட்ட இடையீடு குறைவானதாக இருந்தது மற்றும் அவர்கள் ஒருபோதும் தங்களது பெயர்களை அவர்களோடு பகிர்ந்து கொள்ளவில்லை. ஒல்லாந்திய - ஐரோப்பிய பெயர்களைக் கொண்டுள்ள ஒரே சமூகம் பறங்கியர்கள் ஆவர். ஆயினும் இதற்கு பகுதியளவு விதிவிலக்கும் உள்ளது. சீரமைக்கப்பட்ட தேவாலயப் பாடசாலைகளில் பணியாற்றிய சிங்கள ஆசிரியர்கள் தங்கள் குடும்பப் பெயரை பள்ளிய -குரு (தேவாலய ஆசிரியர்) என்று ஏற்பதற்கு உரிமை இருந்தது.

பிரித்தானியர்கள்

பிரித்தானியர்கள் ஆக்கிரமிப்பின் முதல் நூற்றாண்டில் தனிப்பட்ட பெயர்களுடன் முகஸ்துதி பின்பற்றப்படுவது ஒரு அற்புதமான எழுச்சியாக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. கடலோரப் பகுதிகள் மற்றும் சமீபத்தில் அடக்கப்பட்ட கண்டிய மாகாணம் ஆகிய இரண்டையும் சேர்ந்த சிங்கள மக்கள் தங்கள் பழைய குடும்ப பெயரை வைத்துக்கொண்டு அதனுடன் தங்கள் ஆளுனர்களின் சொந்தப் பெயர்களை தத்தெடுத்துச் சேர்ப்பதில் போட்டிபோட்டார்கள். அவற்றில் நன்கு அறியப்பட்வை, வெஸ்ட் றிட்ஜ்வே, பார்ண்ஸ், கிளிபோட், ஸ்ரான்லி, வில்மொட்,british colony றொபேட் போன்றவை. எனினும் ஆணாதிக்கமுள்ள சிங்களவர்கள் பழமையான தங்கள் குடும்ப பெயர்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை, இந்த ஆளுனர்களது (மற்றும் ஏனைய ஆங்கிலேயர்கள்) பெயர்களைப் பொறுத்தமட்டில் அதை அவர்களது தனிப்பட்ட முதல் பெயர்களாக வைத்துக் கொண்டார்கள். எனினும் வியப்புக்குரியபடி பிரித்தானியர்கள் வெகு அரிதாகவே கிறிஸ்தவத்துக்கு மதம்மாற்றுவதற்கு முயற்சித்தார்கள், பௌத்தர்கள் தங்கள் சொந்தப் பெயர்களை எப்போதும் சுதந்திரமாகவே தெரிவு செய்வதற்கு வழி இருந்தது. அப்படி மதம்மாறியவர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காலனித்துவ படிநிலையில் தங்கள் சொந்த முன்னேறத்துக்காக மதம் மாறியவர்கள் ஆவர். எல்லோரும் இல்லாவிட்டாலும் பெரும்பாலான கீழைநாட்டு சிங்கள முதலியார்கள் அப்படி மதம்மாறிய ஆங்கலிக்கன் கிறிஸ்தவர்கள் ஆவர்.

20ம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் அநேக சிங்களவர்கள் அநாகரிக தர்மபாலவின் பௌத்த மறுமலர்ச்சியினால் ஈhக்கப்பட்டார்கள், பிரித்தானியர்களிடம் இருந்து விலகி தங்கள் மகன்களுக்கு மகாவம்ச அரசர்களின் பெயர்களான, காமினி, திஸ்ஸ, சேன, முகலன் போன்ற பல பெயர்களைச் சூட்டினார்கள். வேறு சிலர் 1930 களில் பிரித்தானிய விரோத அனுதாபங்களை வளர்த்ததுடன் ஐரோப்பாவில் உள்ள தீவிரவாத இயக்கங்களான கம்யுனிசம்,; பாசிசம் என்பனவற்றை பாராட்டத் தொடங்கினார்கள். இந்த மறைமுக - தீவிரவாதிகள் தங்கள் மகன்களுக்கு ஹிட்லர், லெனின் மற்றும் பெனிற்றோ எனப் பெயரிட்டனர், இந்த வெளிநாட்டு பெயர் கொண்டவர்களுக்கு, இரண்டாம் உலகப்போரில் அவர்களது பெயர்களைக் கொண்ட தலைவர்கள் தோல்வியடைந்ததின் பின்னர் இந்தப் பெயர்கள் பெரும் சுமைகளாக மாறின.

பாரம்பரியமாக சிங்களப் பெயர்கள் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளன. முதலாவது கிராமத்தின் பெயர். அடுத்தது சாதி அல்லது தொழில். இறுதியாக வருவதுதான் சொந்தப் பெயர். முதலாளித்துவம் செழித்தோங்கியதுடன் குறைந்த சாதியினர் அதிகம் சுபீட்சமடைந்தனர், புதிதாக செல்வந்தர் ஆனவர்கள் தங்கள் கீழான தோற்றத்தை உருமறைப்பு செய்வதற்கு ஒரு இலகுவான வழியை கண்டுபிடித்தார்கள். அவர்கள் வெறுமே தங்கள் பெயரின் இரண்டாவது பகுதியை (சாதியை குறிப்பது) கைவிட்டு கிராமத்தின் பெயரை தங்கள் குடும்ப பெயராக பயன்படுத்த ஆரம்பித்தார்கள் - இந்த வழக்கத்துக்கு தாங்கள் மட்டுமே உரித்துடையவர்கள் என்று கருதிவந்த பழைய உயர்குடியினருக்கு இது பெரும் ஏமாற்றமாக இருந்தது.

இந்த காலகட்டத்தில் வாழ்ந்த முதலாளித்துவ சிங்களப் பெண்கள்கூட சார்லட், எலிசபெத், மார்கரட், எலனோர், அலிஸ், மற்றும் ஜேன் போன்ற ஆங்கில (அல்லது ஆங்கில ஒலி உடைய) பெயர்களை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். கடைசி இரண்டு பெயர்களும் ஆங்கில இளவரசிகளின் பெயர்கள் ஆனால் என்ன காரணத்தினாலோ குறைவான சாதியிலுள்ள பெண்கள் மற்றும் உயர் குடும்பங்களில் வீட்டுப் பணிப்பெண்களாக அமர்த்தப்படுபவாகளுக்கு புதிதாக இடும் பெயர்களாக இந்தப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டன. எளிமையான பெண்கள்கூட தங்கள் சிறப்பை பின்பற்ற முடிவு செய்து ஆங்கிலப் பெயர்களின் உடைந்த பதிப்புகளான மக்லின், அஸ்லின் மற்றும் ரெல்சின் போன்றவற்றை பயன்படுத்தினார்ள் ஒரு சுவராஸ்யமான அடிக்குறிப்பாக குறிப்பிடுவது, குயின் விக்ரோறியாவின் தாக்கத்தில் கண்டிய கிராமப் பெண்களின் பெயர்களில் ‘பிசவா’ என்கிற பெயர் இடம்பெற்றுள்ளது. ஒன்று பிசவ மெனிக்கே. மற்றது குயின் மெனிக்கே.

அமெரிக்க செல்வாக்கு

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாஸ்ப் எனப்படும் வெள்ளை ஆங்கிலோ சக்ஸன் புரொட்டஸ்ரான்ற் மிஷனரிகள் இலங்கையில் சக்திவாய்ந்த மதமாற்றத் திட்டத்தை கொண்டுவர திட்டமிட்டன. ஆனால் காலனித்துவ அதிகாரிகள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளான ஆங்கலிக்கன் குருமார்கள் இந்த வாய்ப்பை சாதகமற்ற ஒன்றாகப் பார்த்து அமெரிக்கர்களுக்கு ஒரு ஆறுதல் பரிசாக அவர்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்த யாழ்ப்பாண மாவட்டத்தை அவர்களுக்கு விட்டுக் கொடுத்தார்கள். செல்வச் செழிப்புள்ள அமெரிக்க மிஷன்கள் தேவாலயங்கள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளை நிறுவுவதில் தங்கள் நேரத்தை செலவிட்டன. போர்த்துக்கேயரைப்போல எளிமையான மீனவர்களை மதம்மாற்றுவதில் கவனம் செலுத்தாமல் அமெரிக்கர்கள் தங்கள் வேலையை உயர்சாதி வெள்ளாளர்களிடத்தில் காட்டத் தொடங்கினார்கள். தென்னிலங்கை சிங்களப் பகுதிகளில் இடம்பெறும் நவீன அபிவிருத்தியில் இருந்து தாங்கள் விடுபட்டுள்ளாத அவர்கள் எண்ணியிருந்தார்கள். அமெரிக்க மிஷன் சிறப்பான வாழ்க்கைக்கு ஏற்ற ஏணியாக ஆங்கில மொழியை அவர்களுக்கு வழங்கியது. இந்து சமயம் இன்னும் போராளியாக மாறவில்லை, அல்லது தமிழ் கலாச்சாரம் ஆணாதிக்க குடும்ப பெயர்களில் சுற்றிச்சுழலவில்லை. இந்த இரண்டு மூலகங்களும் அமெரிக்க மிஷனரிகளுக்கு உயர் வகுப்பு தமிழர்களை மதமாற்றம் செய்வது சூடான கத்தியைக் கொண்டு வெண்ணெய்கட்டியை வெட்டுவதுபோல வெகு சுலபமாக இருந்தது. இந்த வகுப்பினரிடையே குடும்ப பெயர் இல்லாமலிருந்தது அமெரிக்க மிஷனரிகளுக்கு அவர்களிடம் அகப்பட்ட விருப்பமானவர்களுக்கு அவர்களை மதம்மாற்றிய ஞ}னத்தந்தைமாரின் ஆங்கலோ சக்ஸன் பெயர்களைச் சூட்டுவதற்கு இணங்க வைக்கும் முயற்சி இலகுவில் நிறைவேறியது, அத்துடன் வாஸ்ப் குடும்பத்தில் இணைவதற்காக இந்து குடும்ப கட்டமைப்பை கைவிடவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். இப்படித்தான் உயர் அணியை சேர்ந்த கிறீஸ்தவ தமிழ் சமூகத்தில் மேத்தர், ஹிட்சாக், குறசற், வில்சன், அங்ற்றெல், வாட்சன், ஏன் ஷேக்ஸ்பியர் போன்ற இன்னும் பல பெயர்கள் பரவின. கொழும்பில் அநேகமாக பாடசாலைக்கு சென்றுவரும் வசதிவடைத்த இந்துக்களுக்கு, பழையகால நடைமுறையான உங்களை அடையாளம் காண்பதற்கு உங்கள் தந்தையின் பெயரை பயன்படுத்துவதற்குப் பதிலாக அங்கீகரிக்கப்படக்கூடிய ஒரு குடும்ப பெயரைக் கொண்டிருப்பது அனுகூலமான ஒன்று என்கிற உணர்வு உண்டானது. முன்னணி இந்துக்கள் பலரின் பெயர்கள் அவர்களின் மகன்களின் குடும்பப் பெயர்களாக இடம் பெற்று வருவதை இப்பொழுது நாம் காண்கிறோம், மிகவும் மதிப்புக்குரிய அவர்களின் சொந்தப் பெயர்களான இராமநாதன், பொன்னம்பலம், மற்றும் மகாதேவா போன்றவை அவர்களின் பிள்ளைகளின் குடும்ப பெயர்களாக இடம்பெற்று வருகின்றன.

இந்த மிஷனரிகளின் வேலைகளைப் பற்றிய ஒரு வருத்தமான அடிக்குறிப்பாக குறிப்பிட வேண்டியது, சமத்துவமான சந்தர்ப்பங்களை வழங்குவதற்கு அவர்கள் தவறிவிட்டார்கள், வறிய தாழ்ந்த சாதி மக்களை அவாகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விட்டார்கள். அவர்களுடைய கிறீஸ்தவ தொண்டுக்கு மதிப்புள்ள வெள்ளாளர்களை மட்டும் மதம்மாற்றும் பாரபட்சமான செயல் பலியாகிவிட்டது.

சோனகர்(மூர்) மற்றும் மலாயர்கள்

சோனகர் மற்றும் மலாயர்கள், ஆகியோர், இஸ்லாமிய ககோதரத்துவத்தை பங்கிட்டுக் கொண்டாலும் இரண்டு பேரும் வித்தியாசமான இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள். இரண்டு குழுக்களும் இதன்படி முஸ்லிம்கள் ஆனால் இரண்டு வித்தியாசமான மக்கள். சோனகர் தங்கள் பூர்வீகத்தை மேற்காசியாவை சேர்ந்த அராபியர்களிடம் இருந்து தேடியபோதிலும், ஸ்ரீலங்காவின் சிதறிய குடியேற்றப் பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். புராதன சிங்கள இராச்சியங்கள் ஜ}வா மற்றும் மலேயா ஆட்சியாளர்களுடன் தொடர்புகளை வைத்திருந்த போதிலும்;, ஐரோப்பியர்களின் ஆக்கிரமிப்புடன் இந்த தொடர்பு மங்கிப் போனது. சுவராஸ்யமான முறையில் இன்றைய மலாயர்கள் இப்போது இந்தோனசியா எனப்படும் டச்சு கிழக்கு இந்திய தீவுகளில் இருந்து அரசியல் நாடுகடத்தப்பட்டவர்கள் மற்றும் கூலிப்படைகளின் வம்சாவளிகள் ஆவர்.

சோனகர்களின் பெயர்கள் பராம்பரியமாக முஸ்லிம் பெயர்களாகும் - மொகமட், அப்துல், மஜீத், மகரூப் முகேஷ் போன்றவை, ஆனால் பல தலைமுறைகள் கடந்தும் அவர்களுக்கு குடும்ப பெயர் இல்லை. இது அநேகமாக ஒரு அரபு பாரம்பரியம். சுல்பிகார், கடாபி, ஸியா போன்ற உலகப் புகழ்பெற்ற முஸ்லிம் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்தும் ஒரு சமீபத்தைய போக்கு இப்போது தோன்றியுள்ளது, ஆனால் வழக்கமான பெயர்கள் இப்போதும் நிலவி வருகின்றன. எனினும் வர்த்தகம் மற்றும் அரசியல் என்பனவற்றில் வியாபார ஸ்திரத்தன்மை மற்றும் தொடர்ச்சியான அரசியல் வாழ்க்கை என்பனவற்றை நிலைநிறுத்த இலகுவில் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு குடும்ப பெயரை பின்பற்றுவதின் அனுகூலத்தை முன்னணி முஸ்லிம்கள் உணர்ந்துள்ளார்கள். இந்தக் கணக்கில் வாத்தகத்தில் காதர் குடும்பமும், தேசிய அரசியலில் காரியப்பர்கள், பக்கீர் மார்க்கார்கள் மற்றும் (ரவப்) ஹக்கீம்கள் உள்ளனர்.

மலாயர்களின் முன்னோர்கள் 12ம் நூற்றாண்டில் இஸ்லாத்துக்கு மாறினார்கள் அனால் அவர்களது நூற்றாண்டுகள் பழமையான அடிப்படைக் கொள்கையான இந்து மற்றும் பௌத்த பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை அப்படியே பின்பற்றி வந்தார்கள். அவர்கள் தங்கள் வேர்களை சில குறிப்பிட்ட குடும்பங்களில் தேடுகிறார்கள், அவர்களின் பெயர்களை சொந்த முஸ்லிம் பெயர்களாக அவர்கள் பெருமையாக கொண்டு நடக்கிறார்கள். ஸ்ரீலங்காவிலுள்ள மலாய் குடும்பங்களிடையே நிலவி வரும் மலாய் குடும்ப பெயர்கள், ரஹமான், நளவங்ஸ, கட்டிலியான், சல்டீன், மோஹத்தர், சூரஜா, பங்ஸா ஜயா, மிஸ்கின் மற்றும் பல. இந்த குடும்ப பெயர்கள் சமூகத்திலும் மற்றும் அரசியலிலும் உடனடி அங்கீகாரத்துக்கு உத்தரவாதம் வழங்குகின்றன.

மிஷனரிகள், வெற்றியாளர்கள் மற்றும் கூலிப்படையினர்  எத்தனை அற்புதமான பெயர்களின் கலவைகளை நமக்கு தந்துள்ளனர், ஆனால் அவர்கள் எங்கள் சொந்த பேச்சை வளப்படுத்தியுள்ளனரா!
 

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
 

dantv