Theneehead-1

                            Vol: 15                                                                                                                             21.01.2018

தேர்தல் களம் -

உள்ளுராட்சித் தேர்தலும் தமிழ்ப் பெருந்திரள் அரசியலும்

-          கருணாகரன்

பெருவாரியான தமிழ்மக்களின் அரசியலானது மேற்படி “சிரிப்பு (நகைப்பு) – கோபம் – பைத்தியம் அல்லது கொலைவெறி” என்ற வகையிலேயே கட்டமைப்பட்டுள்ளது. எடுத்ததெற்கெல்லlc electionாம் சிங்களத்தரப்பையும் அரசாங்கத்தையும் எதிர்முனையில் நிறுத்தி (எதிரியை – வில்லனை) தாக்குவதே தமிழ் அரசியல் எனச் சுருங்கி விட்டது. இதை இன்னும் செழிப்பாகச் சொன்னால், தமிழ் அரசியல் “சிங்களம் – தமிழ்” என்ற இரு எதிர்முனைகளுக்கிடையில் – இரண்டு எதிர்ப்புள்ளிகளுக்கிடையில் – குறுகி விட்டது. இதற்கப்பாலும் சிந்திக்கவேணும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு பெருவாரியான தமிழர்கள்  தயாரில்லை.   ஆகவே இதில் வெற்றியடைந்திருப்பது, சிங்கள அதிகாரத் தரப்பே. மிக நுட்பமாக இதைச் சிங்கள அதிகாரத் தரப்புக் கையாண்டு வருகிறது. தமிழர்களைத் தொடர்ச்சியாகவே “எதிர்ப்பரசியல்” என்ற புள்ளியில் நிறுத்தி விட்டு, அது வேகமாக முன்னகர்ந்து கொண்டிருக்கிறது.   தமிழர்கள் எதிர்ப்பரசியலைக் கைவிடவும் முடியாமல், அதில் வெற்றியடையவும் முடியாமல் அதே புள்ளியில் சிக்கியிருக்கிறார்கள். இதனால், தமிழ்ச் சமூகம் வரவரப் பின்னடைந்தே செல்கிறது.   இன்னொரு வகையில் சொன்னால், விட்டுக் கொடுப்பற்ற முறையில் அரசியல் அதிகாரத்தைப் பிரயோகிப்பதன் மூலம், தமிழ்த்தரப்பை வேறு திசைகளை நோக்கிச் சிந்திக்க முடியாதளவுக்கு எதிர்ப்பரசியல் என்ற சிலுவையில் சிங்களத்தரப்பு அறைந்திருக்கிறது.      (மேலும்)   21.01.2018

___________________________________________________________________________________

liberary meet

___________________________________________________________________________________

தமிழ் பாடசாலை அதிபரை அச்சுறுத்திய முதலமைச்சருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து அதிபர் ஒருவரை திட்டி, அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உBadulla schoolரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட அதிபரிடம் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.   இதுதொடர்பில் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றை சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தனது மகளை பதுளை மகளிர் தமிழ் பாடசாலையில் அனுமதிப்பதற்காக, இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவிடம் இருந்து கடிதம் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதிபரைப் பார்க்கச் சென்றுள்ளனர்.        (மேலும்)   21.01.2018

___________________________________________________________________________________

பழச்சாறுகளை அருந்துவதால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது: ஆய்வில் தகவல்

பழச்சாறுகளை அருந்துவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கூடாது என்பது சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.juice    இதுகுறித்து "நியூட்ரிஷனல் சயின்ஸ்' என்ற மருத்துவ ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 100 சதவீதம் பழத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சாறுக்கும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து பலரிடம் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 100 சதவீத பழங்களைக் கொண்டு, பழச்சாறுகளை தயாரித்து அவற்றை அருந்தி வருவோருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகாரிக்கவில் என்பது தெரியவந்தது. குறிப்பாக, ஆப்பிள், ஸ்ட்ராபரி, திராட்சை, மாதுளை மற்றும் ஆரஞ்சு பழங்களைக் கொண்டு பழச்சாறு தயாரித்து அருந்தியவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் பிரச்னை ஏற்படவில்லை.         (மேலும்)   21.01.2018

__________________________________________________________________________________

இந்திய மீனவர்கள் அத்துமீறும் செயற்பாடு குறைவு

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் செயற்பாடு நூற்றுக்கு 50% ஆல் குறைவடைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.  கடந்த காலத்தில் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் செயற்பாடு அதிகளவில் காணப்பட்டது.இதுவரையில் இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் விளைவாக இந்திய மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்ட மீனவர்கள் சட்ட ரீதியான செயற்பாடுகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட போதிலும், அவர்களது மீன்பிடி படகுகளை விடுவிக்காத காரணத்தால் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் செயற்பாடு அதிகளவில் குறைவடைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

___________________________________________________________________________________

செனட்டில் பட்ஜெட் தோல்வி: அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்

 அமெரிக்காவில் புதிய வரவு செலவுத் திட்டத்தை செனட் சபை ஏற்றுக்கொள்வது தோல்வியடைந்ததால் அரசு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.trumoh  கடைசி நிமிடம் வரை இருகட்சி கூட்டம் நடந்தபோதிலும், அரசுக்கு பிப்ரவரி 16-ம் தேதி வரை நிதியளிக்கும் இந்த மசோதா, தேவையான 60 ஓட்டுகளைப் பெறவில்லை. குடியரசுக் கட்சியே காங்கிரசில் (நாடாளுமன்றம்) பெரும்பாண்மை வகிக்கும் நிலையில், அதே கட்சியைச் சேர்ந்தவரே அதிபராகவும் உள்ள நிலையில் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. பொறுப்பற்ற கோரிக்கைகளுக்காக ஜனநாயக கட்சியினர் குடிமக்களை பணையக்கைதிகளாக வைத்துள்ளதாக வெள்ளை மாளிகை குற்றஞ்சாட்டியுள்ளது. ''தேசியப் பாதுகாப்பு, ராணுவ குடும்பங்கள், பாதிக்கப்படும் குழந்தைகள், எல்லா அமெரிக்கர்களுக்கும் சேவை செய்வதற்கான நமது நாட்டின் திறன் ஆகியவற்றுக்கும் மேலாக இவர்கள் தங்களது அரசியலை வைத்துள்ளனர்'' என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறியுள்ளார்.       (மேலும்)   21.01.2018

___________________________________________________________________________________

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் கட்சி வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்தின் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அலுவலகத்தின் முன்பக்கமாகவுள்ள பதாகை தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.வீதிகளில் எரிந்துகொண்டிருந்த மின்குமிழ்கள் அணைக்கப்பட்டு தமது அலுவலகத்தில் இருந்த பதாகை மீது தீ வைக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் வேட்பாளர் தெரிவித்துள்ளார்.தனது வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக சம்பந்தப்பட்ட வேட்பாளர் தெரிவித்தார்.

___________________________________________________________________________________

பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் மாறுபட்ட ஐரோப்பிய யூனியனுடன் பிரிட்டன் மீண்டும் இணையலாம்

ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் பிரிந்து சென்றதற்குப் பிறகும் (பிரெக்ஸிட்) அந்தக் கDAVIDூட்டமைப்பில் சில மாறுதல்கள் செய்யப்பட்டால் அதில் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புள்ளதாக பிரிட்டனின் கேபினட் விவகாரத் துறை அமைச்சர் டேவிட் லிடிங்டன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து "டெய்லி டெலகிராஃப்' நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது: பிரெக்ஸிட் முடிவு குறித்து மறுபரிசீலனை செய்யும்படி ஐரோப்பிய யூனியன் கோரினாலும், அந்த முடிவிலிருந்து பின்வாங்குவது குறித்த பேச்சுக்கே இடமில்லை. இதுதொடர்பாக நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் மக்கள் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பிரெக்ஸிட் முடிவை மாற்ற முடியாது. எனினும், எதிர்காலத்தில் ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆனால், ஐரோப்பிய யூனியன் தற்போதுள்ள கட்டமைப்பு தொடர்ந்தால், அந்த அமைப்புடன் பிரிட்டன் இணைய முடியாது.           (மேலும்)   21.01.2018

___________________________________________________________________________________

எம்.எச்.எம். அஷ்ரபின் மரண அறிக்கையைப் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் இழுபறி

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கை தொடasraff5ர்பிலான சர்ச்சை தொடர்கிறது.   தகவல் அறியும் சட்டத்திற்கு ஏற்ப ஆணைக்குழுவின் அறிக்கையைக் கோரியுள்ள போதிலும் அந்த ஆவணம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. மர்ஹூம் அஷ்ரபின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையைக் கோரி தகவல் அறியும் ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது.   இது தொடர்பில் தகவல் அறியும் ஆணைக்குழுவின் மூன்றாவது விசாரணை அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.இதில் ஆஜராகியிருந்த தேசிய சுவடிகள் திணைக்கள பணிப்பாளர் கலாநிதி நதீரா ரூபசிங்கவிடம் ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.         (மேலும்)   21.01.2018

___________________________________________________________________________________

புற்று நோயினால் பாதிக்கப்படுகின்றவர்களின் வீதம் அதிகரிப்பு

இலங்கையில் புற்று நோயினால் பாதிக்கப்படுகின்றவர்களின் வீதம் அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.   மஹாரகம புற்றுநோய் மருத்துவமனையின் சிறுவர் அவசர சிகிச்சை பிரிவின் சிறப்பு நிபுணர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். வருடாந்தம் 500 சிறுவர் புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த புற்றுநோய் அதிகரிப்பு வீதத்தை கட்டுப்படுத்த தவறான உணவு மற்றும் வாழ்க்கைப் பழக்கவழக்கங்களை தடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் காலங்களில் மீண்டும் டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் எச்சரித்துள்ளது. எனவே சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

___________________________________________________________________________________

 பிரிக்கப்பட்ட இறையாண்மையைக் கோரவில்லை: பகிரப்படும் இறையாண்மையையே கோருகிறோம்! ம.ஆ.சுமந்திரன், நா.உ

தமிழ்த் தேசத்தின் இறைமை மீதான கேள்வி நடப்பது என்னவோ உள்ளூராட்சி சபைத் தேர்தல்தான்.
sumanthiran mp
ஆனால், தமிழர் தரப்பில் சர்ச்சைக்குரிய விடயமாகியிருப்பது தேசிய மட்டப் பிரச்சினையான, புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை பற்றிய விவகாரம் என்பதுதான் நிலைமை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை – குறிப்பாக சம் பந்தன், சுமந்திரன் போன்றோர் – இடைக்கால அறிக்கையில் தங்கி, விடயங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது பற்றிப் பேசுகின்றனர். ஆனால், வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரனிலிருந்து, அவரது இணைத் தலைமையின் கீழ் இயங்கும் தமிழ் மக்கள் பேரவை, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சுரேஷ் பிறேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ். போன்ற தரப்புகள் வரை இடைக் கால அறிக்கையை நிராகரித்துக் கருத்து வெளியிட்டு வருகின்றன. ஆக, இந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர் தரப்பில் பிரதான பேசு பொருளாக இடைக்கால அறிக்கையே மாறியிருக்கின்றது.         (மேலும்)   20.01.2018

___________________________________________________________________________________

துரைராஜா ஸ்கந்தகுமார் நினைவுகள்

எமது தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்திற்கும் தார்மீக ஆதரவு வழங்கிய சமூகப்பணியாளர் 

                                                                        முருகபூபதி

ஒவ்வொரு வருடமும் முடிவடையும் டிசம்பர் மாதமும், புதிய வருடம் தொடங்கும் ஜனவரி மாதமும்  எனக்கு  சற்று மனக்கலக்கமாக இருக்கும்.skanthakumar

கடந்த சில வருடங்களாகவே இந்தக்கலக்கம் தொடருவதற்கு காரணம் சிலரது இழப்புகள்!!! அவர்களில் எனக்கு நன்கு தெரிந்தவர்கள், அல்லது நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்கள் இருப்பார்கள்.டந்த 2017 டிசம்பர் மாதத்திலும் புதிய ஆண்டின் (2018)  தொடக்கத்தில் ஜனவரி மாதத்திலும் எதிர்பார்த்தவாறே மனக்கலக்கம் வந்தது. இலங்கையில் தெய்வநாயகம் பிள்ளை ஈஸ்வரனும் சென்னையில்  பரீக்ஷா ஞாநியும் மெல்பனில் துரைராஜா ஸ்கந்தகுமாரும் அடுத்தடுத்து மறைந்துவிட்டார்கள்.  அண்மையில் மெல்பனில் மறைந்த துரைரராஜா ஸ்கந்தகுமார் அவர்களை நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த 1987 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே நன்கறிவேன். சுமார்  முப்பது ஆண்டுகளுக்கும் மேலான  பழக்கம். அவர் 1985 இல் இங்கு வந்திருக்கிறார்.            (மேலும்)   20.01.2018

___________________________________________________________________________________

speech1

கட்டுரையை வாசிக்க

___________________________________________________________________________________

 உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதியரசர்களின் போர்க்குரல்

-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

ஜனவரி 12 அன்று உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நால்வரால் நடத்தப்பட்ட  ஊடகவியலாளர்கள் சந்திப்பு என்பது உண்மையில், இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே pd editorial log0முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகும்.  நீதியரசர்கள் ஜெ. செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.  லோகூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகிய நால்வரும் தலைமை நீதிபதிக்கு அடுத்து உள்ள மிகவும் மூத்த நீதிபதிகளாவார்கள். அத்துடன் ஐந்து உறுப்பினர் லொலீஜியம் (collegium) எனப்படும் மூத்த ஐந்து உறுப்பினர்களில் தலைமை நீதிபதியைத்தவிர ஏனைய நான்கு நீதிபதிகளுமாவார்கள்.  இந்த நான்கு நீதிபதிகளும்தான் இவ்வாறு தலைமை நீதிபதிக்கு எதிராக அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள். தலைமை நீதிபதி வழக்குகளை ஒதுக்கீடு செய்வது சம்பந்தமாகவும், அரசமைப்புச்சட்ட அமர்வாயங்கள் அமைப்பது சம்பந்தமாகவும் உள்ள நிர்வாக விஷயஙகளில் தலைமை நீதிபதி நடந்து கொள்ளும் முறைகள் பற்றி முறையிட்டுள்ளார்கள்.         (மேலும்)   20..01.2018

___________________________________________________________________________________

ஊவா மாகாண முதலமைச்சர் தன்னை முழந்தாளிட செய்தார் - பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர்

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தம்மை முழந்தாளிடவைத்து, மன்னிப்புக்கோர நிர்பந்தித்தார் என பதுளை மாவட்ட மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளாBadulla schoolர்.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில், சம்பந்தப்பட்ட பாடசாலையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தின்போதே குறித்த அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார். இம்முறை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், கடந்த 2 ஆம் திகதி ஊவா மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளரின் கையொப்பம் அடங்கிய கடிதம் ஊடாக பதுளை மாவட்ட மகளிர் தமிழ் பாடசாலையில், மாணவி ஒருவரை உள்வாங்குமாறு கூறியதாக அதிபர் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, ஊவா மாகாண முதலமைச்சரின் செயலாளர், முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு தம்மை செல்லுமாறு கூறியதாகவும், அங்கு முதலமைச்சர் தம்மை தகாத வார்த்தைகளால் நிந்தித்ததாகவும், சம்பந்தப்பட்ட அதிபர் கூறியுள்ளார்.        (மேலும்)   20..01.2018

___________________________________________________________________________________

11 மாணவர்களுக்கு கிளிநொச்சி நீதவான் அறிவுரை

கிளிநொச்சி சாந்திபுரம் பிரதேச பாடசாலை மாணவர்கள் 11 பேர் பாடசாலைக்கு சமூகமளிக்காது மதுபானம் அருந்தி சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தர்பத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் இன்று (19) ஆஜர்படுத்தப்பட்டனர்.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலே அவர்கள் கைது செய்யப்பட்டு மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்பத்தில் குறித்த மாணவர்களின் பெற்றோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பதில் நீதவான் எஸ். சிவபால சுப்ரமணியம் உத்தரவிட்டார். 8 மாணவர்களுடைய பெற்றோர்கள் மாத்திரமே ஆஜரானதையடுத்து மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் கடுமையாக அறிவுரை வழங்கி குறித்த மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பெற்றோர் ஆஜராகாத மாணவர்கள் மூவரையும் அவர்களது பெற்றோர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகும் வரையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் காவலில் வைக்கப்பட வேண்டும் என நீதவான் உத்தரவிட்டார்.

___________________________________________________________________________________

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் 241 முறைப்பாடுகள்; 21 வேட்பாளர்கள் கைது

நடைபெற உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் சம்பந்தமாக இதுவரை 241 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.  168 தேர்தல் முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட மீறல்கள் சம்பந்தமாக 73 முறைப்பாடுகளும் அதில் உள்ளடங்குவதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் பேராதனை, எம்பிலிப்பிட்டிய, நிட்டம்புவ, சேருநுவர, களுத்துறை வடக்கு, மீப்பே மற்றும் பேருவளை ஆகிய பொலிஸ் நிலையங்களில் 07 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதேவேளை கடந்த டிசம்பர் 09ம் திகதி முதல் இன்று வரையான காலத்திற்குள் தேர்தல் முறைப்பாடுகளுக்கு அமைவாக 197 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 21 பேர் இம்முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என்று பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

___________________________________________________________________________________

யாழ் பல்கலைகழக மோதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

யாழ் பல்கலைக்கழத்தில் ஏற்பட்ட மோதல் நிலை தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த மோதல் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் காவற்துறையினர் தெரிவித்தனர்.  யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் இறுதி ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவருக்கு குறித்த பீடத்தின் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களால் நேற்று இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சம்பவத்தில் காயமடைந்துள்ள மாணவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , அவர்களின் நிலை பாரதூரமாக இல்லை என மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

___________________________________________________________________________________

ரணில் சாபம், மகிந்தவின் பயணம் 3,  மற்றும் கோட்டா 2019

                                         தயான் ஜயதிலக

“சொர்க்கத்தின் கீழே பெருங் குழப்பம் உள்ளது. நிலமை சிறப்பாக உள்ளது” - மாவோ சேதுங்

எந்த ஒரு ஸ்ரீலங்காத் தலைவரும் இந்தியா, திருகோணமலை துறைமுகத்தில் கால்பதிப்பதற்கு இடமளிக்க விரும்பமாட்டார். எந்த ஒரு ஸ்ரீலங்காத் தலைவரும் தீவின் தென்பகுதியில் உள்ள றுgotapayaகுணுவில் இந்தியா ஒரு மூலோபாய தளத்தை (இந்த விடயத்தில் இரட்டைப் பயன்களுக்கான ஒரு விமானநிலையம்) அமைப்பதற்கு இடமளிக்க விரும்ப மாட்டார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க இரண்டையும் செய்துள்ளார். இது 2001 டிசம்பரில் ஆழ ஊடுருவித்தாக்கும் அணியினரின் தாக்குதலில் இருந்து பிரபாகரனுக்கு பாதுகாப்புக் கொடுத்தது மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்ட சமயத்தில் பிரிவினைவாத தமிழ் புலிகளுடன் அவர் சமாதானம் செய்து கொண்ட நடவடிக்கைகளுக்கும் மேலானதாக இருந்தது. இதனுடன் மிகப்பெரிய பிணைமுறி மோசடியையும் சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தும் ரணிலை ஒரு மோசமான ஆளாக - மிகவும் மோசமான நேர்மையற்றவராக - மாற்றியுள்ளது, இந்த தீவின் நீண்ட வரலாற்றில் மற்றும் நிச்சயமாக எனது வாழ்நாளில் இத்தகைய மிகவும் மோசமான ஒரு கயமை படைத்தவரை நான் கண்டதில்லை.        (மேலும்)   19.01.2018

___________________________________________________________________________________

தமிழகத்தில் மன அழுத்தங்களுடன் வாழும் இலங்கை அகதிகள்: தற்கொலைகளும் அதிகரிப்பு

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் இந்தியாவில் தஞ்சமடைந்தனர்.slrefufgee      வர்களில், 61,845 பேர் தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களிலுள்ள 107 முகாம்களில் தங்கியுள்ளதாக ஈழ அகதிகள் மறுவாழ்வு மையத்தின் பொருளாளர் எஸ்.சி. சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.    இந்தியாவில் தமிழ்நாட்டில் மாத்திரமே இலங்கை அகதிகளுக்கான முகாம்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகளில் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலும் ஈழ அகதிகள் மறுவாழ்வு மையம் கவனம் செலுத்தியுள்ளது. அகதி முகாம்களில் அதிகளவிலான தற்கொலைகள் இடம்பெறுவதாக ஈழ அகதிகள் மறுவாழ்வு மையத்தின் பிரதான வைத்திய அதிகாரி எஸ்.நடராஜன் தெரிவித்தார்.        (மேலும்)   19.01.2018

___________________________________________________________________________________

எமது வெற்றியை தடுக்கும் வகையில் சின்னத்தை மாற்றி போலி வாக்குச் சீட்டு விநியோகம் -முன்னாள் எம்பி சந்திரகுமார் முறையீடு

கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளிலும் சுயேட்சைக் குழவாக கேடயச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். எங்களது சுயேட்சைக் குழுவின் சின்னம் கேடயம் என்பது மகchandra1118்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் நிலையில்  எமது சின்னத்தை மாற்றி போலி வாக்குச் சீட்டு ஸ்கந்தபுரம் பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளது.  இது தேர்தல்சட்ட விதிமுறை மீறல் இது தொடர்பில் கிளிநொச்சி உதவி தேர்தல் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளோம். ஏன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி அக்கராயன் வட்டாரத்தில்  ஸ்கந்தபுரம் கிராமத்தில்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்கின்ற போது  சட்டத்திற்கு புறம்பாக மாதிரி வாக்கு சீட்டுக்களை மக்களிடம் விநியோகித்துள்ளனர்.        (மேலும்)   19.01.2018

___________________________________________________________________________________

இலச்சினை மனிதர்- ஞாநி

- நடேசன்

நாசரத்தை சேர்ந்த யேசு என்பவர் இறந்ததற்கு ரோம சாம்ராச்சியத்தில் ஒரு பதிவு இருந்தாலும் அவர் சிலுவையில் இறந்ததற்கு எந்தப் பதிவுகளிலும் இல்லை என வரலாற்று ஆசிரியgnaniர்கள் கூறுகிறார்கள். ஆனால் கிஸ்துவ மதத்தை ஸ்தாபித்த புனித போலால் ( St Paul) எங்கு சிலுவையைக் கண்டாலும் நாம் யேசுநாதரை நினைக்கிறோம். அதாவது ஐக்கோன்(Icon) எனப்படும் இலச்சினை. இப்படியான இலச்சினைகளை மதங்கள் மட்டுமல்ல, அரசியல் இயக்கங்களும் உருவாக்கினர்கள். நாம் அரிவாள், சுத்திலைப் பார்த்தால் கம்மியயூனிஸ்ட் இயக்கத்தை நினைப்போம்.    சில கோடுகளால் பாரதியை உருவாக்கி தனது முகப்பு புத்தகத்தில் வைத்திருந்தார். அவரது முகப்புத்தகத்தில் ஒவ்வொரு முறையும் நான் பார்க்கும்போது அது பாரதியை குறிப்பது என்பதற்குப் பதிலாக அது என்னிடத்தில் பாரதியையும் ஞானியையும் சேர்த்து கலவையான உணர்வை உருவாக்கும்.    வருங்காலத்தில் அந்த இலச்சினையை எவரும் திருடாமல் இருக்கவேண்டும்.           (மேலும்)   19.01.2018

___________________________________________________________________________________

ஜனனி என்னும் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, 14 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இணைந்து செய்த உதவி

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு வீடமைத்து வழங்குவதற்கான அடிக்கல் இன்று நட்டி வைக்கpolice1jpgப்பட்டுள்ளது. வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் குற்றத்தடயவியல் பிரிவில் கடமையாற்றும் ஜனனி என்னும் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, வீடு ஒன்றை நிர்மாணித்து வழங்குவதற்கான அடிக்கல் இன்று நட்டி வைக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, யாழ்ப்பாணத்தில் உள்ள 14 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளின் நிதிப்பங்களிப்புடன், ரூபா பத்து இலட்சம் பெறுமதியான வீடு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட உள்ளதாக வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.         (மேலும்)   19.01.2018

___________________________________________________________________________________

முஸ்லிம் காங்கரசுக்கு வழங்குகின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் வடக்கு கிழக்கு இணைப்பை உறுதிசெய்கின்ற வாக்குகளாகவே அமையும்.

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே தெளிவான – போதியளவு விளக்கங்கள் இல்லை. அதனால் கட்சித் தலைவர் ஒன்றையும் உறுப்பினர்கHispullavaள் வேறொன்றையும் கூறித் திரிகிறார்கள் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சாடியுள்ளார்.காத்தான்குடி அன்வர் வட்டாரத்தில் நேற்று இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் இதன்போது மேலும் கூறியதாவது,இனப்பிரச்சினைக்கு தீர்வாக வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தலைமைகள் உறுதியாக இருக்கின்ற நிலையில், முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அது தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டில் இல்லை.         (மேலும்)   19.01.2018

___________________________________________________________________________________

சமூகத்தின் பொறுப்பு

கருணாகரன்

உள்ளுராட்சித் தேர்தல் கள நிலவரம் பற்றி வெவ்வேறான தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன. எந்தத் தரப்புக்கு வெற்றி வாய்ப்புக் கிட்டும் என்பது இன்னும் சரியாகத் தெளிவாகவில்லை. local electionஆனால் நிச்சயமாக எந்தத் தரப்பும் தனிப்பெரும் வெற்றியைப் பெறக்கூடிய சூழல் இல்லை. பல இடங்களில் பிற தரப்புகளுடன் இணைந்தே சபைகளை நடத்தக் கூடிய நிலையே தென்படுகிறது. அல்லது பலமான எதிர்த்தரப்பை எதிர்கொள்ளவேண்டிய நிலை. சில இடங்களில் புதிய கட்சிகள், சிறிய தரப்புகள் கூட வெற்றியடையக் கூடிய சூழல் உண்டு. குறிப்பாக சுயேச்சைக்குழுக்கள் வலுப்பெறத் தொடங்கியுள்ளன. இவ்வாறான நிலைமைக்குச் சில காரணங்கள் உண்டு. ஒன்று, இந்தக் கட்சிகளின் செயற்பாடுகளைப் பற்றிய மக்களுடைய கடந்த கால அனுபவம், இந்த கட்சிகளின் மீதும் அவற்றின் தலைமைகளின் மீதும் நம்பிக்கையீனத்தை உண்டாக்கியிருக்கிறது.  இதனால், அவர்கள் எந்தக் கட்சிக்கும் போராதரவைக் கொடுக்க விரும்பவில்லை. பதிலாக, பலமான எதிரணிகளுக்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என விரும்புகிறார்கள். மாற்று அணிகளுக்கு இடமளிப்பதன் மூலம் ஒரு ஜனநாயகச் சூழலை ஏற்படுத்தலாம்.       (மேலும்)   18.01.2018

___________________________________________________________________________________

குளிர்கால ஒலிம்பிக்: 'ஒரே கொடி' அணிவகுப்பின் கீழ் வட, தென் கொரியா

இரண்டு பகை நாடுகளுக்கு இடையே சமரசம் ஏற்படும் மற்றொரு அறிகுறியாக, அwinterolimpicடுத்த மாதம் தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு வட மற்றும் தென் கொரியாவை சேர்ந்த வீராங்கனைகள் இடம்பெறும் ஒரே பனிச்சறுக்கு ஹாக்கி விளையாட்டு அணியை உருவாக்குவதற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. வடமற்றும் தென் கொரியாவின் ஒன்றுபடுவதற்கு ஆதரவான கொடி படத்தின்    வட மற்றும் தென் கொரிய விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் ஐக்கிய கொரியாவின் ஆதரவு கொடியை ஏந்திக்கொண்டு, ஒன்றாக சேர்ந்து இந்த விளையாட்டில் கலந்துகொள்ளவும் அமைதி கிரமமான பான்முன்ஜாமில் சந்தித்த அதிகாரிகள் இசைந்துள்ளனர்.முன்னதாக. இந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின்போது உற்சாகமூட்டுவதற்காக 230 பேரை அனுப்ப வட கொரியா சம்மதித்துள்ளது. இந்த விளையாட்டின்போது இசைப்பதற்காக 140 இசைக்கலைஞர்கள் அடங்கிய இசைக்குழு ஒன்றை வட கொரியா அனுப்புவதற்கு 2 கொரியாக்களும் ஏற்கெனவே இசைந்துள்ளன.  வட கொரியாவின் அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களும் இதில் கலந்துகொள்வதால், வட கொரிய பிரதிநிதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாகியுள்ளது. இந்த ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றால், வட கொரியாவின் பரிவாரங்களின் எண்ணிக்கை, அந்நாட்டின் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும். போட்டிகளில் குறைவானோரே பங்கேற்பர்.   B.B.C

___________________________________________________________________________________

மறுவாழ்வு பெற்று தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 
முன்னாள் போராளிகளுக்கு நிதி உதவி

மறுவாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளில் தனியார் துறையில் பணியாற்றி வருவோருக்கு 10 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.ex ltte cadres     அதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட புனர்வாழ்வுக் கிளைக்குப் பொறுப்பான அதிகாரி அறிவித்துள்ளார்.
 "மறுவாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 ஆயிரம் ரூபா உதவித்தொகை வழங்க வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. 
 அந்த உதவித் தொகையை யாழ். மாவட்டத்தில் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் முன்னாள் போராளிகள் இந்த உதவித் தொகையைப் பெற முடியும்.        (மேலும்)   18.01.2018

___________________________________________________________________________________

தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய அரசியல் பலம்  தமிழ் மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது – முன்னாள் எம்பி சந்திரகுமார்

தமிழ் மக்கள் தங்களின் அரசியல் அபிலாசைகளுக்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய அரசியல் பலம் இன்று அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது என முchandrakumar180118ன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.   நேற்று(16) கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்    தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகள் நிராகரிக்கப்பட்ட தீர்வை கொண்டுள்ள இடைக்கால அறிக்கையை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டு அதற்கு ஆதரவளித்து  வருகின்றார்கள்.  இது கடந்த காலங்களில் தமிழ் மக்கள் செய்த  தங்களின் உரிமைக்காக  செய்த தியாகங்களை கொச்சைப்படுத்துவதாக  அமைந்துள்ளது. தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளுக்காக ஆயுதப் போராட்டம் மூலம் செய்த தியாகங்களுக்கு உரிய தீர்வு  இடைக்கால அறிக்கையில் இல்லை இதனையே  சிறந்த தீர்வு என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.        (மேலும்)   18.01.2018

___________________________________________________________________________________

தயா மாஸ்டரைத் தாக்கியவர் மன நோயாளி?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்thaya masterடரைத் தாக்கியதாக கூறப்படும் நபரை மனநல மருத்துவரிடம் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.   அண்மையில் தயா மாஸ்டர் பணியாற்றும் தனியார் ஊடகம் ஒன்றுக்குள் நுழைந்த வயோதிபர் அவரை தாக்கியதாக பொலிஸில் முறையிடப்பட்டது. இதற்கமைய, குறித்த வயோதிபர் கைதுசெய்யப்பட்டார். இந்தநிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேளை, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் எனக் குறிப்பிட்டார்.        (மேலும்)   18.01.2018

___________________________________________________________________________________

மின்சார சபை ஊழியர்கள் நாடு பூராகவும் பணி நிறுத்தம்

ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாடுதழுவிய ரீதியில் உடனடி பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று மாலை ஊழியர்கள் சிலர் மின்சார சபையின் தலைவரைத் தடுத்து வைத்து, தலைமையக வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து, பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து மின்சார சபைத் தலைவரை மீட்டுள்ளனர்.எனவே அப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்தநிலையில், தமது ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்பு தரப்பினர் தாக்குதல் மேற்கொண்டமையை கண்டித்து, மின்சார சபை ஊழியர்கள் நாடுதழுவிய ரீதியில் பணி நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

___________________________________________________________________________________

 ‘கிழக்குத் தமிழர்ஒன்றியம்’உதயம்

1987 இந்திய - இலங்கைசமாதான ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாக இணைக்கப் பெற்றிருந்த வடக்குகிழக்கு மாகாணங்கள் 2007ம் ஆண்டுநீதிமன்றத் தீர்ப்பொன்றின் மூலம் தனித்தனிமாகாணங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர் கிழக்குமாகாணத் தமிழர்களின் சமூகபொருளாதார அரசியல் இருப்பு நாளாந்தம் கேள்விக்குள்ளாகி வருகிறது.   இதனை தடுத்து நிறுத்தும் அல்லது மாற்றுவழியைத் தேடும் ஆத்மார்த்தமான அக்கறையோ அல்லது அரசியல் வல்லமையோ தற்போதைய தமிழர்தம் அரசியல் தலைமையிடம் இல்லைஎன்பதைஅண்மைக்காலஅரசியல் நிகழ்வுகள் நிரூபித்துள்ளன. இந்தநிலையில் “அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்” என்பதற்கிணங்க கிழக்குமாகாணத் தமிழர்கள் தங்களைத் தற்காத்துத் தங்கள் எதிர்கால இருப்பைப் பாதுகாத்துப் பேணுவதற்குரிய “அரசியல் பொறிமுறை”க்கான அடித்தளத்தை எதிர்வரும் உள்ளுராட்சிசபைத் தேர்தல் காலத்திலேயே இட வேண்டியதேவைப்பாடு எழுந்துள்ளது. ஏனெனில், உள்ளுராட்சி சபை தேர்தலைத் தொடர்ந்து அடுத்தவருடம் நடுப்பகுதியில் கிழக்குமாகாணசபைத் தேர்தல் தொகுதிகளில் நேரடித்; தெரிவும், மாவட்டமட்டத்திலான விகிதாசாரமும் 50:50 கலந்தகலப்புத் தேர்தல் முறையின் கீழ் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.        (மேலும்)   18.01.2018

___________________________________________________________________________________

வீட்டுக்குள்ளும் அரசாங்கம் ஊழல் செய்யும்

மூன்று வருடங்கள் ஆட்சியில் இருந்த அரசாங்கத்திற்கு, மக்களுக்கான பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாதுள்ளதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் தலைவரும், நாடாanura dissanayakeளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, எம்பிலிப்பிடியவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். பிரதமர் ரணில் விக்கரமசிங்க, உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கமே வெல்லும் என தெரிவித்துவருகிறார்.  அவ்வாறு வெற்றிபெறும் பட்சத்திலேயே, அவர்களுக்கு இடையூறுகள் இன்றி மத்திய வங்கியில் நிகழ்த்திய ஊழல்களை போல் தமது செயற்பாடுகளை கிராம மட்டங்களிலும் முன்னெடுக்க முடியும். நாட்டை சிங்கப்பூர் போன்று வளச்சியடைய செய்வதாக தெரிவித்துக் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பாகங்களையும் வெளிநாடுகளுக்கு தரைவார்த்து கொடுக்கின்றனர். ஆனாலும் மக்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் முடியவில்லை எனவும் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தினார்.

___________________________________________________________________________________

மட்டக்களப்பில் இளைஞர்கள் இருவர் கடத்தல்: இரண்டு வேட்பாளர்கள் உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட வேட்பாளர்கள் உள்ளிட்ட ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களை மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களும் அடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 14 ஆம் திகதி திரையரங்கில் இடம்பெற்ற மோதல் வலுவடைந்தமையால் குறித்த இரண்டு இளைஞர்களும் கடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.       (மேலும்)   18.01.2018

___________________________________________________________________________________

யுத்தத்தை வெறுத்த பையன் : பெரியதொரு தப்பித்தல்

                                           சுலொசனா ராமையா மோகன்

 

இந்தக் கதைக்காக அவரை நாங்கள் தவா என அழைப்போம். அவருக்கு மற்றொரு பெயர் உள்ளது, அத்துடன் ஒருகாலத்தில் அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு அங்கத்தவராக இருநthava்தபோது அவருக்கு ஒரு இயக்கப் பெயரும் இருந்தது. சில வாரங்களுக்கு முன்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாழைச்சேனையில் நாங்கள் அவரைச் சந்தித்தபோது, இப்போது புனர்வாழ்வு பெற்றுத் திரும்பியுள்ள தவா கிருகப்பிரவேச நிகழ்ச்சிக்காக அவரது குடும்ப வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்தார்.மிகவும் சிரத்தை உள்ளவராகத் தோன்றும் 31 வயதான தவா இப்போது திருமணமாகி இரண்டு வயது நிரம்பிய ஒரு மகளுக்குத் தந்தையாகவும் உள்ளார்.அவர் பதினொராம் வகுப்பில் படிக்கும்போது யுத்தம் அவரைத் தேடி வந்தது, வகுப்பிலேயே மிகவும் திறமைசாலியான மாணவராக இருந்த அவர் மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார்.2002ம் ஆண்டு ஒரு பிற்பகல் வேளை அவர் பாடசாலையில் இருந்து வீடு திரும்பியபோது, எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் வீட்டுக்கு வந்து 9ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த அவரது தம்பியை இழுததுச் செல்வதைக் காண நேர்ந்தது.       (மேலும்)   17.01.2018

___________________________________________________________________________________

எழுத்தாளர் மாலனுக்கு

"பாரதிய பாஷா விருது" வழங்கப்படுகிறது

இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்று என மதிக்கப்படும் 'பாரதிய பாஷா விருது' இவ்வாண்டு தமிழ் எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்படுகிறதுmalan     கடந்த ஆண்டுகளில்,  ஜெய்காந்தன், சிவசங்கரி,  ராஜம்கிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி,  அசோகமித்ரன், பிரபஞ்சன், வைரமுத்து ஆகியோருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் மாலன்  இலக்கிய உலகில் பல சிறப்புக்களைப் பெற்றவர். இருபதிற்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். உணர்ச்சிகள், சம்பவங்கள் இவற்றிற்கு பதிலாகப்  புனைவுகளில் சமூக விமர்சனம், தர்க்கம் ஆகியவற்றை முன்னிறுத்தி எழுதுபவர். இலக்கியப் படைப்பாற்றலில் முழுமை கருதி (Wholesomeness in literary creativity)  இந்த விருது அவருக்கு அளிக்கப்பெறுகிறது.இவரது கதைகள் ஆங்கிலம் இந்தி போன்ற இந்திய மொழிகளில் மட்டுமன்றி சீனம், மலாய், பிரெஞ் போன்ற உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.         (மேலும்)   17.01.2018

___________________________________________________________________________________

யாழ். பல்கலை கலைப்பீட விரிவுரைகளை மீள ஆரம்பிக்க முடிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட விரிவுரைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதன்படி, கலைபீட மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைவதற்காக விதிக்கப்பட்ட பொதுவான தடையை உடனடியாக அமுலுக்கும் நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 18.01.2018ம் திகதியிலிருந்து (வியாழக்கிழமை) அனைத்து விரிவுரைகளும் ஆரம்பமாகும் எனவும், யாழ் பல்கலைக்கழக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த கலைப்பீடத்தின் ஏனைய பிரிவுகளின் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கடந்த வாரம் வகுப்புத்தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

___________________________________________________________________________________

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் நிறைவேற்ற முடியாத பணிகள் உள்ளன - ஜே.வி.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வட மாகாணத்தில் செய்ய முடியாத சில விடயஙtna்கள் உள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அதன் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கின் பிரதான அரசியல் கட்சி என்பதில் வாதமில்லை.அதனை ஏற்றுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால், வடக்கில் செய்ய முடியாத சில விடயங்கள் உள்ளன. அதன் உறுப்பினர்கள் செயற்பாட்டு ரீதியிலானவர்கள் அல்ல.   மக்களின் பிரச்சினைகள் குறித்து அவர்களுக்கு அக்கறை இல்லை. சிலர் யாழ்ப்பாணத்தில் இருப்பதைவிட கொழும்பிலேயே அதிகமாக இருப்பதாக பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.        (மேலும்)   17.01.2018

___________________________________________________________________________________

முஸ்லிம் காங்கிரஸ் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மோதல்: வேட்பாளர் உட்பட மூவர் காயம்

வாழைச்சேனை - செம்மண்ணோடை பகுதியில் இன்று இரு கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில், உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் உட்பட மூவர் தாக்கப்பட்ட நிலையில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   அப் பகுதியின் போக்கடி வீதியில், வடிகாண்களை வாழைச்சேனை பிரதேச சபை வாகனத்தை கொண்டு சுத்திகரிப்பு செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்த போது, அந்த இடத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் ஐக்கிய தேசிய முன்ணியில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் செம்மண்ணோடை வட்டார தலைவர் ஆகிய இருவரும் சென்றனர்.இதனையடுத்து, எமது கட்சியின் ஊடாக, பிரதேச சபையில் இருந்து வாகனத்தை கொண்டு வந்து, நாங்கள் சுத்திகரிப்பு வேலை செய்கின்றோம். நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செம்மண்ணோடை வட்டார வேட்பாளரின் ஆதரவாளர்கள் கேட்டதில் இரு தரப்பினருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.        (மேலும்)   17.01.2018

___________________________________________________________________________________

இலக்கிய உலகத்துடன் ஒரு பாலம்!

எஸ்.ராமகிருஷ்ணன்

த்திரிகையாளர், எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், ஆவணப்பட இயக்குநர், பத்திரிகை ஆசிரியர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் ஞாநி. மாணவப் பத்திரிகையாளராக விகடgnaniனில் தேர்வுசெய்யப்பட்ட நாட்களில் முதல் முறையாக ஞாநியைச் சந்தித்தேன். அன்றிலிருந்து நட்பு நீண்டு தொடர்ந்தது. இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் நேசித்தவர் ஞாநி. தன்னுடைய நேசத்தை இதழியலுக்கும் கடத்தியவர்.   தமிழில் வெகுஜனப் பத்திரிகை உலகத்துக்கும் இலக்கிய உலகத்துக்கும் இணக்கம் இல்லாத காலகட்டம் ஒன்றும் இருந்தது. சொல்லப்போனால், தமிழ் வெகுஜன இதழியலின் சிக்குப்பிடித்த சில மதிப்பீடுகளை உடைப்பதில் நவீன இலக்கியம் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. விளைவாக, இருதரப்புகளுக்கு இடையிலும் ஒரு பனிப் போர் நிலவிய காலமும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இலக்கியவாதிகளின் தரப்பு நியாயத்தையும் அவர்கள் முன்வைத்த விமர்சனங்களையும் வெகுஜன இதழியலில் ஆக்கபூர்வமாக அணுகியவர்களில் முக்கியமானவர் ஞாநி.           (மேலும்)   17.01.2018

___________________________________________________________________________________

வெள்ளவத்தையில் 11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயம் - 9 பேருக்கு விளக்கமறியல்

கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் உள்ளதாகவும், அவருக்கு இந்தக் கடத்தலில் நேரடி தொடர்புள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது எனவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளார். இதேவேளை, சந்தேகநபர் அக் காலப் பகுதியில் திருகோணமலை கடற்படை முகாமில் பணியாற்றியதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனையடுத்து, முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கோட்டை - நீதவான் லங்கா ஜெயரத்ன சந்தேகநபர்களை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 8ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

___________________________________________________________________________________

அஞ்சலி

ஞாநி – காலக்குரலும் கலகக் குரலும்

           கருணாகரன்

ஞாநியை இனிச் சந்திக்கவோ பேசவோ விவாதிக்கவோ தோழமை உறவில் நெகிழவோ முடியாது. சென்றுவிட்டார்.  இது நிரந்தரப் பிரிவு.gani   இந்தப் பிரிவு ஏற்படுத்திய இழப்பு  நம்மைச் சூழ்ந்திறுக்குகிறது. நேற்று அதிகாலை 15.01.2018 சென்னை கே.கே.நகரிலுள்ள அவருடைய வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் ஞாநியின் உயிர் பிரிந்துள்ளது. ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தவர் ஞாநி. ஆனாலும் சோர்ந்திருந்ததில்லை. தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதினார். அவருடைய புகழ்பெற்ற தொடர்களில் ஒன்றான “ஓ பக்கங்களை” அவர் மீண்டும் உற்சாகத்தோடு தொடங்கியிருந்தார் என்று நண்பர்கள் சொல்கிறார்கள். கூட்டங்களில் கலந்து கொண்டார். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றார். அரசியல் பேசினார். இடையில் தேர்தலில் கூட போட்டியிட்டார். ஊழலுக்கு எதிரான கோஷத்தோடு 2014 ஆம் ஆண்டு “எளிய மக்கள் கட்சி”யின் சார்பாக ஆலந்தூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். 2014 யூன் 28 அன்று எளிய மக்கள் கட்சியிலிருந்து விலகினார். தொடர்ந்து மனித உரிமை விடயங்களில் ஈடுபட்டார். பயணங்கள் செய்தார். புத்தகங்களை  வெளியிட்டார். மரணிப்பதற்கு முதல்நாள் கூட சென்னையில் நடக்கும் 41 ஆவது புத்தகக் காட்சி அரங்கில் நண்பர்களோடும் வாசகர்களோடும் பேசிக்கொண்டு நின்றார்.       (மேலும்)   16.01.2018

___________________________________________________________________________________

அஞ்சலி குறிப்பு:

 நவீன நாடகத்துறையிலும் இதழியலிலும்  சமூகப்பார்வையை  வேண்டி நின்ற கலைஞன்

"என்னைக்கடனாளியாக்கிவிட்டுச்சென்ற ஞாநி"

             முருகபூபதி

சென்னை கே.கே. நகரில் இலக்கம் 39, அழகிரிசாமி தெருவில் ஒரு வீடு. எப்பொழுதும் கலகலப்பிற்கு குறைவிருக்காது. கலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தgnani2ிரைப்படத்துறையினர், தொலைக்காட்சிகளைச்சேர்ந்தவர்கள், தொழிற்சங்க, அரசியல் செயற்பாட்டாளர்கள்.... இவ்வாறு யாராவது வந்துபோய்க்கொண்டேயிருப்பார்கள்.    அவ்வாறு வந்த போய்க்கொண்டிருந்தவர்களும் இன்னும் பலரும் அதே வீட்டில் யாரை இதுவரைகாலமும் பார்க்க வந்தார்களோ, அவரை வழியனுப்ப வந்திருக்கும்போது நான் அவுஸ்திரேலியாவிலிருந்து இந்த அஞ்சலிக்குறிப்புகளை எழுதுகின்றேன்.   அந்த வீட்டின் பின்புறத்தில் ஒரு சிறிய கிணறு இருக்கிறது. அருகிலே சில மரங்கள், செடிகள். சிறிய முற்றம். அந்த இடத்திற்கு  கேணி என்றும் பெயர். அங்குதான் இங்கு குறிப்பிட்ட துறைகளைச்சேர்ந்தவர்கள் சந்தித்து  உரையாடுவார்கள். எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் உட்பட பலரும் அங்கு வந்து உரையாற்றியிருக்கிறார்கள். ஜெயமோகன் தொலைவிலிருந்து வருவதால் அங்கு தங்கியிருந்தும் சென்றிருக்கிறார்.        (மேலும்)   16.01.2018_