a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           02.03.2010

மீள முடியுமா?

americaலகப் பொருளாதாரத்துக்குத் தலைமை தாங்குகிறதோ இல்லையோ,​​ அதை வழிநடத்துவது என்னவோ அமெரிக்காதான்.​ சர்வதேச வர்த்தகமும்,​​ பங்குச் சந்தைகளும் அமெரிக்க டாலரின் மதிப்புக்கேற்ப அவ்வப்போது மாறுவதுதான் அதற்குக் காரணம்.​ அப்படியிருக்க பொருளாதார மந்தநிலை காரணமாக தேக்க நிலையில் இருந்த அமெரிக்கத் தொழில்துறைக்குப் புத்துயிர் ஊட்டவும்,​​ பொருளாதார நடவடிக்கைகளுக்குப் புதிய திசைவேகம் அளிக்கவும் அந்த நாட்டு பட்ஜெட்டை ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார் அதிபர் ஒபாமா.

வேலை வாய்ப்புகளைப் பெருக்குவது,​​ அமெரிக்கத் தொழில்,​​ வர்த்தகத் துறைகளுக்கு முன்னுரிமை அளிப்பது,​​ ஏழை,​​ நடுத்தர மக்களின் துயரங்களைக் குறைக்கும் விதமாக,​​ ​ வரிச்சலுகைகள் உள்ளிட்ட சலுகைகளை அளிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு புதிய பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார்.

1930-களில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவுக்குப் பிறகு இதுவரை இருந்திராத அளவுக்குப் பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.​ பற்றாக்குறை அளவு 1.56 டிரில்லியன் டாலர்களாகும்.​ மொத்த பட்ஜெட் மதிப்பு 3.83 டிரில்லியன் டாலர்களாகும்.​ ​(ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி.​ ஒரு டாலருக்கு இப்போதைய சராசரி மதிப்பு சுமார் 46 ரூபாய்.)

மொத்த பட்ஜெட் மதிப்பில் கிட்டத்தட்ட சரிபாதி பற்றாக்குறையாக இருக்கும் அளவுக்குப் பட்ஜெட் போடப்பட்டிருக்கிறது.​ லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும்,​​ அமெரிக்கப் பொருளாதாரத்துக்குத் தேவைப்படும் அடித்தள கட்டமைப்பு வசதிகளைச் செய்து தரவும்,​​ மின்சாரம் உள்ளிட்ட ஆற்றல்களைப் பெருக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி சோதனை நடத்தும் "நாசா'வின் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.​ இதற்குத் தேவைப்படும் கோடிக்கணக்கான டாலர்களை வேறு செலவுகளுக்குப் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.​ அதேசமயம்,​​ இனி விண்வெளி ஆய்வுகளுக்காக நாசா நேரடியாகச் செலவழிப்பதற்குப் பதில் விண்வெளி வாகனங்கள்,​​ ஆய்வுக்கருவிகள் ஆகியவற்றை அமெரிக்காவின் தனியார் நிறுவனங்கள் மூலமே தயாரித்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

ராணுவத்துக்கான செலவுகளைக் குறைக்கவோ,​​ மாற்றவோ முடிவு செய்யப்படவில்லை.​ அமெரிக்காவின் பெரிய தொழில் நிறுவனங்கள் ராணுவத் தளவாட உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.​ அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையே இந்த நிறுவனங்களின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டுதான் வகுக்கப்படுகிறது என்றுகூட அரசியல் விமர்சகர்கள் கூறுவதுண்டு.​ எனவே அந்த நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடிய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.​ ​ ​ ​ ​

அரசுக்கு வேண்டிய வருவாயைப் பெருக்க,​​ பெரிய தொழில்துறைகளின் வருவாய் மீதும்,​​ ஆண்டுக்கு 2.5 லட்சம் டாலர்களுக்கு மேல் ஈட்டும் தனிநபர்கள் மீதும் கூடுதலாக வரி விதிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.​ ​

முதலாளித்துவப் பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டுள்ள அமெரிக்க அரசால்,​​ அந்த முறையைக் கைவிடவே முடியாது.​ உலகின் தலைமைப் பதவியை வகிக்க வேண்டும் என்ற எண்ணம் காரணமாக சர்வதேச அரங்கில்,​​ தான் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப கூடுதல் செலவுகளையும் தவிர்க்க முடியாது.​ இவ்விரு நிரந்தர அம்சங்கள் தொடரும்போது இப்படிப்பட்ட பட்ஜெட்தான் சாத்தியம்.​ ​

அதேவேளையில் வங்கித்துறையில் ஏற்பட்ட சரிவு,​​ நிதி நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி போன்றவற்றால் எதிர்காலத்தில் இந்த நிறுவனங்கள் திவாலாகாமல் காப்பது எப்படி என்ற வழிமுறைகளில் இனி அதிக கவனம் செலுத்தப்படக்கூடும்.

வெளிப்பணி ஒப்படைப்பு செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்குச் சலுகைகள் குறைப்பு,​​ வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு என்ற அறிவிப்பும் ஏற்கெனவே வெளியாகியிருக்கிறது.​ அரசின் செலவுகளில் அதிகம் பலன் தராதவை என்று அனுபவப்பூர்வமாக உணரப்பட்டவற்றைக் குறைக்கவும்,​​ வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடியவற்றை அதிகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நடவடிக்கைகளால் பலன் ஏற்படாது என்பவர்களும் இவை போதாது என்பவர்களும் உண்டு.​ ஆனால் இப்போதைக்கு முடிந்தது இவைதான் என்று அமெரிக்க அரசின் பொருளாதார ஆலோசகர்கள் தீர்மானித்திருப்பதையே பட்ஜெட் எதிரொலிக்கிறது.

பராக் ஒபாமா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அமெரிக்காவில் மட்டும் அல்ல,​​ உலக அளவிலும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.​ அமெரிக்கர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவார்,​​ ஆப்பிரிக்க,​​ ஆசியக் கண்டங்களில் உள்ள வறிய நாடுகளுக்கு உதவுவார் என்றெல்லாம் பேசப்பட்டது.​ இராக்,​​ ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்க ராணுவம் தலையிட்டதால் ஏற்பட்ட நெருக்கடிகளைக் குறைப்பார் என்றும் கூறப்பட்டது.​ இவை எதுவுமே நடைபெறவில்லை.

அவர் பதவிக்கு வந்து ஓராண்டு முடிவடைந்ததை ஒட்டி மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் அவருடைய செல்வாக்கு வெகுவாகச் சரிந்திருப்பது தெரியவந்தது.​ இந்த பட்ஜெட் தாற்காலிகமாக அதிபர் ஒபாமாவின் செல்வாக்குச் சரிவைச் சற்றுத் தடுத்து நிறுத்துமே தவிர,​​ நிரந்தரத் தீர்வாக இருக்குமா என்பது கேள்விக்குறி.

அமெரிக்காவின் மிகப்பெரிய பலவீனம் சந்தைப் பொருளாதாரத்தைத் தாரக மந்திரமாகக் கொண்டிருப்பதுதான்.​ மக்களின் ஆடம்பர மோகத்தையும் திட்டமே இல்லாமல் செலவழிக்கும் மனோபாவத்தையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் ​ கொள்ளை லாபம் ஈட்டும் வர்த்தக நிறுவனங்கள்தான் அமெரிக்க அரசின் நிதிக் கொள்கையைத் தீர்மானிக்கின்றன.​ குடியரசுத் தலைவரும் ஆட்சியும் மாறினாலும்,​​ தனியார் முதலாளிகளுக்குச் சாதகமான பொருளாதாரக் கொள்கையை அமெரிக்காவில் மாற்றிவிட முடியாது என்பதுதான் யதார்த்த நிலை.​ ​

சேமிப்பது என்கிற எண்ணமே இல்லாமல் மக்களைச் செலவழிக்கத் தூண்டும் நுகர்வுக் கலாசாரம் தொடரும்வரை அமெரிக்கா தனது நிதி நெருக்கடியிலிருந்து முற்றிலுமாக மீள முடியுமா என்பது சந்தேகம்தான்
.

- -தினமணி தலையங்கம்

Home /Page -1 /Page-2 / Page -3 / Page-4 / Page-5 / Page-6 /Page-7 /

wanni

ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கும், 1970 பொதுத் தேர்தல் முடிவுக்கும் உள்ள ஒத்த தன்மைகள்!

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தெரிவித்திருக்கு ம் செய்திதான் என்ன?