a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி             உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்      எங்கள்தேசம்         சலசலப்பு         நோயல்நடேசன்     விடிவெள்ளி         எங்கள்பூமி              ரீவடை இணையம்        பார்வை             தமிழ்யுகே                     புயல்                 புளொட்யுகே      யாழ்முஸ்லீம்      புண்ணியாமீன்
 

Asientribune
Lines-Magahzine
The lka academic
Tamil Week            sldf
Uthr                
        

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                         05.02.2011

ஸ்பெக்ட்ரம் ஊழல்: ஆ. ராசா கைது

rasaுதுதில்லி,பிப்.2: 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாகத் தொடுக்கப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா (47) சி.பி.ஐ. போலீஸாரால் தில்லியில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.  இந்த விவகாரத்தில் அவருடன் பணியாற்றிய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெஹுரா, ராசாவின் தனிச் செயலர் ஆர்.கே. சண்டோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெஹுரா ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, சண்டோலியா ஐ.ஈ.எஸ். அதிகாரி இன்னமும் பணியில் இருக்கிறார்.  அப்ரூவர் தந்த தகவலின் பேரில்: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது அமைச்சருக்கு நெருங்கிய வட்டாரங்கள் அடைந்த பணப் பயன்கள் குறித்த தகவலை ஒருவர் தெரிவித்தார். அவரை இந்த வழக்கில் அப்ரூவராகக் கூட சேர்ப்பது குறித்து சி.பி.ஐ. உயர் அதிகாரிகள் சிந்தித்து வருகின்றனர். அவர் தந்த தகவல்கள் மற்றும் திடீர் சோதனைகளில் கிடைத்த ஆதாரங்கள், நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் சுட்டிக்காட்டிய சில தடயங்கள் அடிப்படையில் ஆ. ராசாவும் 2 உயர் அதிகாரிகளும் இப்போதைக்குக் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலர் கைது செய்யப்படுவார்களா என்று தெரியவில்லை. (மேலும்) 03.02.11

_____________________________________________________________________________________________________________

பிறப்பு, இறப்பு, திருமணப்பத்திரங்களில் “சாகியம்” எனும் இடத்தில் வழங்கப்படும் சொற்கள் நீக்கப்பட்டு அனைவரும் இலங்கையர் என்று எழுதப்படல் வேண்டும்.

cader1985ல் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் அதிகரித்து ஏனைய தமிழ் இயக்கங்கள் ஈவிரக்கம் இன்றி அழிக்கப்பட்டன அக்காலங்களில் வடகிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவுகளில் பாரிய விரிசல்கள் ஏற்பட்டது. வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு தமிழ் இயக்கங்களால் முஸ்லிம்கள் தாக்கப்படுதல் கடத்தப்படுதல் கொல்லப்படுதல் என பயங்கர அச்ச நிலை தோன்றியது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் பட்டியலில் முஸ்லிம் தனவந்தர்கள,; கல்விமான்கள், புத்திஜீவிகள், அரச உயரதிகாரிகள், மதத்தலைவர்கள,; இளைஞர்கள் என பலரும் அடங்கினர் அக்காலங்களில் விடுதலைப்புலிகளுடனான பேச்சு வார்த்தைகளில் முன்னாள் ஜனாதிபதிகள் ஜே.ஆர், பிரேமதாஸ, சந்திரிக்கா பண்டாரநாயக்க, இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, முன்னாள் பிரதமரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்கிரம சிங்க ஆகியோரினால் நடாத்தப்பட்ட பல்தரப்பட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. 1990ஆம் ஆண்டு ஐப்பசித்திங்கள் 25ஆம் திகதி வடபுல முஸ்லீம்களுக்கு ஒரு கரி நாள் ஆகும். வடக்கிலும், கிழக்கிலும் தற்காலிக அரசொன்றை அமைத்திருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் வடபுல முஸ்லீம்கள் சுமார் 90ஆயிரம் பேரை வடபுலத்தில் இருந்து வெளியேற்றிய நாள் ஆகும். கிழக்கு மாகாணத்தில் இருந்து ஆயுதங்களுடன் இங்கு வந்த விடுதலைப்புலிகளின் குழு ஒன்று “24 மணிநேரத்தில் அனைத்து முஸ்லீம்களையும் உடுத்திய உடையுடன்” வெளியேறச் சொன்னது. பின்னர் இரண்டு நாட்கள் முதல் ஐந்து நாட்கள் வரை காலக்கெடுவையும் வழங்கியது. (மேலும்) 03.02.11

_____________________________________________________________________________________________________________

மீண்டும் தொழிற்பட ஆரம்பிக்கும் ஆனையிறவு உப்பளம்

பிறந்துள்ள இப் புதிய ஆண்டில் நாட்டின் அபிவிருத்தியில் பாரிய அளவு முன்னேற்றம் அடைய அரசாங்கம் பல திட்டங்களை வகுத்துள்ளது. கடந்த ஆண்டு பொருளாதாரத்தில் 8% வீத வளர்ச்சியை கண்ட இலங்கை இம் மட்டத்தை சில வருடங்களுக்கு பேண நடவடிக்கை மேற்கொண்டுள்ளதோடு, 2013 இல் 9.5% வீத பொருளாதார வளர்ச்சியையும் அடைய எத்தணித்துள்ளது. நீண்ட காலமாக நம் நாட்டில் நிலவியிருந்த பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் காரணமாக சகல துறைகளும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தமை யாவரும் அறிந்ததே! உலக நாடு அனைத்தும் அதிசயக்கும் வகையில் மிக குறுகிய காலத்தில், சிறந்த தலைமைதுவத்துடன், மனிதாபிமான நடவடிக்கை மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நிம்மதியையும், சந்தோசத்தையும் பெற்றுக்கொண்டனர். யுத்த முடிவைத் தொடர்ந்து அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியாக மனிதாபிமான நடவடிக்கைகள் மூலம், கூடியளவு பயனடைவது வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களே! பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் காரணமாக மிகவும் பாதிப்புக்குள்ளான இம் மக்களின் வாழ்க்கைத் தரம் படிப்படியாக உயர்தப்படுகின்றது. (மேலும்) 03.02.11

_____________________________________________________________________________________________________________

பிரிட்டனில் தங்குவதற்கு மோசடி திருமணம்

லண்டன்:பிரிட்டனில் தங்குவதற்காக, அந்நாட்டு பெண்ணை போலியாக திருமணம் செய்ய முயன்ற இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரிட்டனில் தங்கி வேலை பார்ப்பதற்காக, அந்நாட்டு குடியுரிமை பெறுவதற்காக, அங்குள்ள பெண்களை போலியாக திருமணம் செய்யும் வழக்கம், மறைமுகமாக நடந்து வருகிறது. இது போன்ற திருமணங்களை தடுப்பதற்காக, அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சகம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதற்காக, சர்ச் மற்றும் திருமண பதிவு அலுவலகங்களை தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியர் ஒருவர், அந்நாட்டு பெண்ணை போலியாக திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார். அந்த நபரை கைது செய்து, போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.பிரிட்டன் குடியுரிமை சட்டத்தை மீறிய இந்தியருக்கு, 16 மாத சிறை தண்டனையும், இந்தியரை போலியாக திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்ட லண்டனைச் சேர்ந்த பெண்ணுக்கு, 14 மாத சிறை தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.

_____________________________________________________________________________________________________________

ஈரானிடமிருந்து ஆயுதம் வாங்குவது சட்டவிரோதம்; இலங்கையை எச்சரித்த அமெரிக்கா

ஈரானுடனான இலங்கையின் மிக நெருங்கிய உறவு குறித்து இலங்கையை அமெரிக்கா எச்சரித்திருந்ததை விக்கிலீக்ஸ் இணையத்தளம் அம்பலப்படுத்தியுள்ளது. அமெரிக்கத் தூதுவரும் பிரதித் தூதுவரும் அப்போதைய வெளிவிவகார செயலாளர் கலாநிதி பாலித கொஹென்ன, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கும்  இடையிலான கலந்துரையாடலின்போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அமெரிக்கத் தூதரக தகவல் பரிமாற்றக் குறிப்புகள் (கேபிள்) விக்கிலீக்ஸ் இணையத்தளத்தினால் பிரிட்டனின் டெலிகிராவ் பத்திரிகைக்கு வழங்கப்பட்டுள்ளன. ஐ.நா.பாதுகாப்புச் சபையின் 1747 ஆவது தீர்மானத்தின்கீழ் ஈரானிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது சட்டவிரோதமானது எனவும் அதன்மூலம்  அமெரிக்க- இலங்கை உறவில் எதிர்மறையான பின்விளைவுகள்  ஏற்படும் என அமெரிக்கத் தூதுவரும்  பிரதித் தூதுவரும் தெரிவித்ததாக 2007 நவம்பர் 2 ஆம் திகதியிடப்பட்ட மேற்படி கேபிள் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த மத்திய வங்கி ஆளுநர் கப்ராலும், வெளிவிவகாரச் செயலாளர் பாலித கொஹென்னவும் ஈரானிடமிருந்து இலங்கை ஆயுதங்களை வாங்க முற்படவில்லை எனவும் அவ்வருட நவம்பர் இறுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரானுக்கு மேற்கொள்ளும் விஜயம் வர்த்தக முதலீட்டில் கவனம் செலுத்துவதாக இருக்கும் எனவும் தெரிவித்தனர். எனினும், ஈரானிலிருந்து சந்தை விலையைவிட குறைந்த விலைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எண்ணெய்யை இறக்குமதி  செய்வதற்கான ஒப்பந்தம் குறித்து இலங்கை பேச்சுவார்த்தை நடத்தும் எனவும்  அதற்கு பதிலாக இலங்கை குறிப்பிடத்தக்களவு ஆயுதங்களை  கொள்வனவு செய்வதற்கு கட்டளை கொடுக்கும் எனவும் அமைச்சர் ஒருவர் கூறியதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

_____________________________________________________________________________________________________________

வெளிநாட்டு நன்கொடையாளர்களின் நிதிக்கு என்ன நடந்தது? ஜே.வி.பி கேள்வி

வெள்ள அனர்த்தத்திற்கு நிவாரணமாக வழங்கும் பொருட்டு பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்கள் வழங்கிய பெருமளவிலான உதவிக்கு என்ன நடந்தது என மக்கள் விடுதலை முன்னணி இன்று புதன்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது. ஊடகவியலாளர் மாநாடொன்றில் ஜே.வி.பியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா பின்வரும் விடயங்களை குறிப்பிட்டார். உலக உணவு திட்டம் 29 லொறி நிவாரண பொருட்களை வழங்கியது. சீனா 30 மில்லியன் ரூபா வழங்கியது. ஜப்பான் 27 மில்லியன் ரூபா வழங்கியது. அமெரிக்கா 300,000 டொலர் வழங்கியது. இதை விட ஒவ்வொரு அரச ஊழியரும் ஒரு நாள் சம்பளத்தை வழங்கினர். விமான நிலைய அதிகார சபை ஊழியர்கள் ஒரு மில்லியன் ரூபா நன்கொடை வழங்கினர். இந்தியா 25 தொன் நிவாரண பொருட்களை அனுப்பியது. இதைவிட ஐக்கிய நாடுகள் சபை 51 மில்லியன் அமெரிக்க டொலர் தரவள்ளது. பாகிஸ்தான் 100,000 அமெரிக்க டொலர் வழங்கியது. இத்தாலி 27 மில்லியன் யூரோ வழங்கியது. சீனா 165 மில்லியன் இன்னும் தரவுள்ளது. இவ்வளவு பணமும், நிவாரண பொருட்களும் எங்கே போனது என அரசாங்கம் விளக்க வேண்டும் என ரில்வின் சில்வா கூறினார். முல்லைதீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய சென்ற ஜே.வி.யினர் அரச அதரவு சக்திகளால் துன்புறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்தியாராச்சி மீதான கொலை குற்றச்சாட்டை அரசாங்கம் வாபஸ் பெற்றுள்ளது. எல்.ரி.ரி.ஈயின் முக்கிய தலைவரான குமரன் பத்மநாதன் அரச பாதுகாப்புடன் பயணம் செய்கிறார் எனவும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.  

_____________________________________________________________________________________________________________

சகோதரரை பார்க்கவே அமெரிக்கா சென்றேன் ஜனாதிபதி ராஜபக்ஷ கூறுகிறார்

"Rajapaksha -hinduஎனக்கு முன்னர் பதவியிலிருந்த ஜனாதிபதிகள் தனிப்பட்ட விஜயங்கள் பலவற்றை மேற்கொண்டிருந்த போது, எவரும் எதனையும் கூறியிருக்கவில்லை. எனது விஜயங்கள் பற்றி நான் அறிவித்தால் எதிர்ப்புகள் காணப்படுகின்றன. லண்டனில் என்ன நடந்தது. இவை யாவும் (அவர் ஆரோக்கியமாக இல்லை என்ற செய்திகள்) விடுதலைப் புலிகளின் பிரசாரம் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற உரையாடல் குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் எங்களில் சிலருக்கு திங்கள் மாலை உரையாடும் வாய்ப்புக் கிடைத்திருந்தது. 2018 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை ஜனாதிபதியின் அபிமானம் மிக்க நகரமான அம்பாந்தோட்டையில் நடத்துவதற்கான முயற்சியாக விளையாட்டுச் சின்னம் அலரிமாளிகையில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அந்நிகழ்வில் ஜனாதிபதியைச் சூழ அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள், குடும்பத்தினர்கள் காணப்பட்டனர். அன்றைய தினம் காலை மற்றொரு ஊடக அலுவலகம் எரிக்கப்பட்டிருந்தது. ஆதலால் ஜனவரி மாதமானது இலங்கையில் சுதந்திரமான பேச்சுக்கு கொடூரமான மாதமாகக் காணப்பட்டது. (மேலும்) 02.02.11

_____________________________________________________________________________________________________________

தமிழகத்தைப் பகைத்தால் எமக்கு ஆபத்து

83 யூலைக் கலவரத்திற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் - ஆணைக்குழு முன் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா

1980களில் யாழ்ப்பாணத்தில் விவசாய உற்பத்தி அதிகளவில் காணப்பட்டது. ஆனால் தற்போது மிகவும் குறைந்து விட்டது. அங்கு விவசாய உற்பத்தி அதிகரிக் கப்பட வேண்டும் அந்தமக்களின் உற்பத்திகளை நாம் விலைக்கு வாங்க வேண்டும். 1983ஆம் ஆண்டு நாம் பாரிய தவறு ஒன்றைச் செய்தோம். அந்த ஆண்டின் கறுப்பு ஜூலைச் சம்பவ மே புலிகள் பாரிய அளவில் பலம் அடைவதற்கான முக்கிய காரணம் ஆகும். யாழ்ப்பாணத்தில் அன்று 13 படைவீரர்கள் உயிரிழந்ததும் அவர்களின் சொந்த இடங்களில் நல்லடக்கம்செய்திருக்கலாம். ஆனால் இறந்தவர்களின் உடல்களை கொழும் புக்குக் கொண்டுவந்து அன்று வன்முறை இடம்பெறுவதற்கு சிலர் வழி வகுத்தனர். சர்வதேச மட்டத்தில் எமக்கு பாரிய அபகீர்த்தி ஏற்பட்டது. புலிகளும் பலம்அடைந்தனர். பலர் நாட்டை விட்டு வெளியேறினர். நான் எனது பகுதியில் தமிழ் மக்களை பாது காத்தேன் என்பதனை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும். இதேவேளை இந்தியாவை நாம் சகோதரனாகவும் தமிழகத்தை உற வினராகவும் பார்க்கவேண்டும். இந்தி யாவை எமது பாதுகாவலனாக வைத் துக் கொள்வதுடன் அந்த நாட்டை மீறி எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. எமது வெளிவிவகாரக் கொள் கையை உருவாக்கும் போதும் இந்தியா குறித்து அதிகளவில் சிந்திக்க வேண்டியது அவசியமாகும். (மேலும்) 02.02.11

_____________________________________________________________________________________________________________

சுவிட்ஸ்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் துளிர் விடுவது ஒடுக்கப்படுகிறது

(பகுதி 2)

-  டீ.பி.எஸ்.ஜெயராஜ

swissMuraliகிட்டுவினால் அடித்தளமிடப்பட்டு கட்டப்பட்டதை புது மெருகிட்டு எல்.ரீ.ரீ.ஈயினை சுவிட்ஸலாந்தில் விருத்தியாக்க முரளியினால் இயலுமாகவிருந்தது. 1991 முதல் 1997 வரையான முரளியின் பதவிக் காலத்தில் சுவிட்ஸலாந்தில் எல்.ரீ.ரீ.ஈ பலமாக வளர்ச்சி பெற்றது. முரளி சுவிட்ஸலாந்தில் தமிழ் பாடசாலைகளின் ஒரு வலையமைப்பையே உருவாக்கினார்.அதேபோல மக்கள் கடைகள் எனப்படும் ஒரு மளிகைக்கடை சங்கிலியையும் அமைத்தார். மாறுபட்ட தோற்றப்பாடுடைய முரளியின் சுவிஸ் தலைமை வன்முறை எதிர்ப்புகளை அடக்கிவைத்து மாறுபட்ட கருத்துள்ளவர்களை அடக்கி அல்லது வற்புறுத்தி தன்பக்கமிழுக்க உதவியாக இருந்தது. முரளி அல்லது சுவிஸ் முரளியினால் பயன்படுத்தப்பட்ட வழிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றதினால் சுவிட்ஸலாந்தில் எல்.ரீ.ரீ.ஈயினர் தங்களை நன்கு நிலை நிறுத்திக் கொண்டனர். சூரிச், பேர்ண், மற்றும் ஜெனிவா போன்ற இடங்களில் நடைபெற்ற எல்.ரீ.ரீ.ஈ ஊhவலங்களுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் அலைமோதினர். மற்றைய ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற ஒன்றுகூடல்களுக்கு வரும் கூட்டத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க சுவிட்ஸலாந்து தமிழர்கள் பெரிதும் உதவியாயிருந்தனர். சுவிட்ஸலாந்து தமிழர்கள் தலைக்கு இவ்வளவு என்கிற விகிதத்தில் பெருந்தொகையினை எல்.ரீ.ரீ.ஈக்கு பங்களிப்புச் செய்தார்கள். (மேலும்) 01.02.11

_____________________________________________________________________________________________________________

கிப்து அதிபர் முபாரக் பதவி தப்புமா? கைவிட்டது ராணுவம்: மக்கள் கிளர்ச்சிக்கு வலுக்கிறது ஆதரவு

:egypt-riots-2011எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக, இதுவரை எகிப்து கண்டிராத அளவில், தலைநகர் கெய்ரோவில் உள்ள தாரிர் சதுக்கத்திலும், அலக்சாண்டிரியா நகரிலும் நேற்று லட்சக்கணக்கான மக்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், மக்கள் மீது எவ்வித தாக்குதலும் நடத்த முடியாது என, எகிப்து ராணுவம் திட்டவட்டமாக கூறிவிட்டது."சுமுகமான அதிகார மாற்றம் நடக்க வேண்டும்' என, அமெரிக்க வலியுறுத்தியதால் நேற்று அதிபர் முபாரக், எதிர்க்கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். எகிப்தில் அதிபர் முபாரக்கிற்கு எதிராக, இளைஞர்கள் தலைமையிலான "ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம்' நேற்று, தாரிர் சதுக்கத்தில் இருந்து துவங்கும் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்தன. ஏற்கனவே, கடந்த ஏழு நாட்களாக தாரிர் சதுக்கத்தில் தான் பெருந்திரளான மக்கள் தங்கியிருந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை முதலே, சாரை சாரையாக மக்கள் தாரிர் சதுக்கத்தை நோக்கி வர ஆரம்பித்திருந்தனர். தாரிர் சதுக்கத்திலும், கெய்ரோவிலும் நேற்று ராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. உள்ளூர் நேரப்படி நேற்று நண்பகலில் மட்டுமே ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அங்கு கூடியிருந்தனர். இதுபோக, கடற்கரை நகரமான அலக்சாண்டிரியாவிலும் லட்சக்கணக்கான மக்கள் திரள ஆரம்பித்தனர். (மேலும்) 01.02.11

_____________________________________________________________________________________________________________

வட பகுதி தமிழ் மக்களின் வாழ்வை சீர்குலைக்கும்: ஆயுததாரிகளை முழுமையாக ஒழித்து கட்டுவது அவசியம்

வடக்கில் வாழும் தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடும் ஆயுததாரிகளை முழுமையாக ஒழித்துக் கட்டுவது மிகவும் அவசியம் என்று இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவரும், அம்பாந் தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித் துள்ளார். யாழ். குடாநாட்டின் தற் போதைய நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிலவிய பயங்கரவாத யுத்தத்தின் கசப்பானதும், கொடியதுமான விளைவுகள் குறித்து இலங்கை வாழ் மக்கள் அனைவரும் உணர்ந்துள்ளனர் என்றாலும் அது குறித்து நேரடியானதும், ஆழமானதுமான அனுபவங்களை வடக்கு, கிழக்கு மக்களே நன்றாக அறிந்திருக்கின்றனர். ஆயுதங்கள் மீதும், பலாத்காரம் மீதும் நம்பிக்கை வைத்த செயற்பாட்டாளர்களின் மடமையையும், அனர்த்தத்தையும் அம்மக் கள் நன்கு உணர்ந்துள்ளனர். அவர்கள் அவ்வாறான செயற்பாடுகளை மிகவும் வெட்கத்துடனும், வெறுப்புடனும் நிராகரிப்பது திண்ணம். (மேலும்) 01.02.11

_____________________________________________________________________________________________________________

உலகெங்கும் அமெரிக்கர்களுக்கு ஆபத்து

வாஷிங்டன், பிப். 1:   பயங்கரவாதிகளினால் உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.    அல்-காய்தாவும் அதற்குத் துணைபுரியும் பயங்கரவாதக் குழுக்களும் அமெரிக்காவிற்கு எதிராக இயங்கி வருகின்றன. இதை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு சுற்றுலா அல்லது வேலை நிமித்தம் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு கருதி அமெரிக்க அரசு அவ்வப்போது பயண எச்சரிக்கை வெளியிடுவதுண்டு. கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இது போன்ற எச்சரிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 24-ம் தேதியன்று நடந்த மாஸ்கோ விமானதள தாக்குதலுக்குப் பிறகு, புதிய தகவல்களின் அடிப்படையில் மீண்டும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் ஆகிய பகுதிகளில் உள்ள அமெரிக்க கேந்திரங்களைக் குறி வைத்து தாக்குதல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. அமெரிக்கர்கள் அதிக அளவில் கூடும் விளையாட்டுப் போட்டிகள், வழிபாட்டுத் தலங்கள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல், ஆள்கடத்தல், குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பிரிட்டனில் வாழும் அமெரிக்கர்களுக்காக தனியே பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டது

_____________________________________________________________________________________________________________

இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் அனுமதி பெற்று விலக வாய்ப்பு

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் பெப்ரவரி 4 முதல் 12 ஆம் திகதி வரை அனுமதி பெற்று இராணுவத்திலிருந்து விலகுவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. 'இராணுவ சேவையிலிருக்கும்போது விடுமுறை பெறாமல் கடமைக்கு சமுகமளிக்கத் தவறிய அதிகாரிகளும் சிப்பாய்களும் உத்தியோகபூர்வமாக .அனுமதி பெற்று விலகுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள என சுதந்திரத் தினத்தையொட்டி இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன ' இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார். கடமைக்கு சமுகமளிக்கத் தவறியவர்கள் மேற்படி காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட படைப்பிரிவுத் தலைமையகங்களுக்குச் சென்று, அங்கு அமைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ கருமபீடத்தில் இராணுவத்திலிருந்து விலகுவதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறினார். இதை பொதுமன்னிப்பாக கருத முடியாது எனவும் ஆனால் விசேட சலுகையொன்றாகும் எனவும் அவர் கூறினார். கடமைக்குச் சமுகமளிக்காமல் தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

_____________________________________________________________________________________________________________

லங்கா ஈ நியூஸ் தாக்குதல் தொடர்பில் கவனயீர்ப்பு போராட்டம்

லங்கா ஈ நியூஸ் தாக்குதல் தொடர்பில் அரசினை உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் கோரி ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக உரிமைகள் அமைப்பினர் ஒன்றிணைந்து இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியினதும், ஜனநாயக தேசிய கூட்டமைப்பினதும் மற்றும் மக்கள் விடுதலைக் முன்னணியினதும் உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டுள்ளனர். இப் போராட்டத்தின் போது பொலிஸார் எங்கே?, ஊடகவியலாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரணைகள் எங்கே? என கோஷம் எழுபப்பட்டுள்ளது.

_____________________________________________________________________________________________________________

புலி சந்தேக நபர்கள் குறித்த நடவடிக்கை துரிதம்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய புலிகள் இயக்க சந்தேக நபர்கள் தொடர்பான நடவடிக்கை துரிதப்படுத்தப் பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க ‘தினகரனு’க்குத் தெரிவித்தார் பூஸா, ஓமந்தை உள்ளிட்ட முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க சந்தேக நபர்களை நேரில் சந்தித்து அவர்களை விடுதலை செய்வதா அல்லது வழக்குத் தாக்கல் செய்வதா என்பதை அறிந்து நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது ஆணைக்குழுவினால் ஏற்பட்ட திருப்பமாகுமென்றும் விக்கிரமசிங்க தெரிவித்தார். கடந்த 2010 செப்ரம்பர் மாதம் ஆணைக்குழு ஜனாதி பதிக்கு சமர்ப்பித்த இடைக்கால அறிக் கையில் குறிப்பிடப்பட்டிருந்தமைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி குழுவொன்றை நியமித்தார். அதேபோன்று புலிகள் இயக்க சந்தேக நபர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவென சட்ட மா அதிபர் குழுவொன்றை நியமித்தார். பிரதி சொலிசிற்றர் ஜெனரல் சவேந்திர பெர்னாண்டோ தலைமையிலான நால்வர் கொண்ட இந்தக் குழு பூஸா, ஓமந்தை போன்ற முகாம்களுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி விடுதலை செய்யக்கூடியவர்கள் விடுவிக்கப்படுவார்கள். வழக்குத் தாக்கல் செய்ய வேண்டியிருப்பின் அதற்கான நடவடிக்கைகளையும் மேற் கொள்வார்கள் என்று விக்கிரமசிங்க தெரிவித்தார். புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர் கள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு அவர்களின் உறவினர்கள் ஆணைக்குழுவுக்கு விடுத்த வேண்டுகோளின் பேரில், ஆணைக்குழு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார்

_____________________________________________________________________________________________________________

தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் வேட்பாளர்களை சந்தித்து கலந்துரையாடல்.

-  (மன்னார் நிருபர் லெம்பேட்)

எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத்தேர்தலின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக மன்னார்    நானாட்டான் பிரதேசச்சபை தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று(01-02-11) மாலை 5 மணியாளவில் நேரில் சென்று சந்தித்துள்ளார்கள். குறித்த சந்திப்பின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அ.செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், எஸ் வினோ நோகராதலிங்கம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

_____________________________________________________________________________________________________________

சுவிட்ஸ்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் துளிர் விடுவது ஒடுக்கப்படுகிறது

(பகுதி 1)

-  டீ.பி.எஸ்.ஜெயராஜ்

tamiltiger in swissசுவிஸ் தமிழர்கள் சமீப காலங்களில் புலிகளின் செயற்பாடுகளுக்கு அதிக அளவிலான பணபலம் மனிதவளம் மற்றும் உடல் வலிமை என்பனவற்றை வழங்கியுள்ளார்கள். அந்தப் பங்களிப்பு சுவிஸ்ட்லாந்தினை ஐரோப்பாவில் புலிகளின் கோட்டையாக மாற்றியமைத்தது. சமீபத்தைய சுவிஸ் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை பற்றிய பின்னணியை அவதானிக்கும் போது சுவிஸ்ட்லாந்தில் புலிகளின் எதிhகாலமானது முரண் அலைகளின் முன்னெச்சரிக்கையாகவே தோன்றுகிறது. ஏராளமான தமிழர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சாட்சியமளிக்க முன்வந்திருப்பது சுவிஸ்ட்லாந்தில் இந்தப் புலிப் பப்படம் நொறுங்கிப் போகப்போவதாகத் தோன்றுகிறது. கைது செய்யப் பட்டிருப்பவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ்ட்லாந்துத் தலைவர், விஜயரட்னம் சிவனேசன் அல்லது ரகு என்றழைக்கப்படும் ரகுபதி, அவருக்கு முன்பு பதவி வகித்த செல்லையா குலராஜசேகரம் அல்லது குலம் மற்றும் சுவிஸில் செல்வாக்கு மிக்க புலிகளின் நிதித்துறைத் தலைவர் செல்லையா ஜெயபாலன் அல்லது அப்துல்லா என்பவர்களும் அடங்குவர். சுவிஸ் அதிகாரிகள் புலிகளின் முன்னணிச் செயற்பாட்டாளர்களைக் குற்றவாளியாக்கும் தங்கள் முயற்சியில் வெற்றி பெறுவார்களாயின் அதன் முக்கியமான விளைவு சுவிஸ்ட்லாந்தில் புலிகளின் கட்டமைப்பைப் பலவீனப் படுத்துவதாகவும், அங்குள்ள தமிழர்களிடத்திலுள்ள புலிகளின் பிடியைத் தளர்த்துவதாகவும் இருக்கும். (மேலும்) 01.02.11

_____________________________________________________________________________________________________________

கட்டாயமாக காணிகளில் குடியேறுவோம் - மயிலிட்டித்துறை மக்கள் மனு

எங்களது செந்தக் கிராமத்தில் எங்களை நிம்மதியாக வாழவிடு இல்லாவிட்டால் வலுக்கட்டாயமாக எமது காணிகளில் நாம் குடியேறுவோம் என மயிலிட்டித்துறை மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு மனுவொன்றினை அனுப்பி வைத்துள்ளனர் என அததெரண மாவட்ட செய்தி நிரூபர் தெரிவித்துள்ளார். உயர் பாதுகாப்பு வலய வலி.வடக்கு மயிலிட்டித்துறை மக்கள் தங்களை மீளக்குடியேற்றுமாறு கோரி சுமார் 2500 மேற்பட்ட குடும்பங்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு மனு ஒன்றை இன்று செவ்வாய்கிழமை பதிவுத் தபாலில் அனுப்பிவைத்துள்ளனர். மக்கள் அனுப்பி வைத்த மனுவிலே, எங்களது செந்தக் கிராமத்தில் எங்களை நிம்மதியாக வாழவிடுமாறும் இல்லாவிட்டால் வலுக்கட்டாயமாக எமது காணிகளில் நாம் குடியேறுவதை யாரலும் தடுக்க முடியாது. எமது மென்போக்கு நடவடிக்கையை புரிந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். அத்தோடு கடந்த 1990ஆம் ஆண்டு ஜீன் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து இன்றுவரை மீளக்குடியேற முடியாத பரிதாபத்திற்குரிய மக்களாக நாங்கள் காணப்படுகின்றோம். எமது செந்தங்களை இழந்து வாழ்விடத்தை விட்டு உயிர் பொருள் உடமைகள் அனைத்தையும் இழந்து ஏதுமற்ற ஏதிலிகளாக வெறுங்கையுடனே வெளியேறினோம். 21 வருடங்களாக செந்த மண் காணாத எங்கள் விழிகளில் எல்லாம் இருண்டு கிடக்கிறது. எங்களது வேண்டுகோள்களை தயவுகூர்ந்து மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

_____________________________________________________________________________________________________________

கே.பி தலைமையில் யாழில் புதிய தமிழ் அரசியல் கட்சி?

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளராக செயற்பட்ட கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் யாழ்ப்பாணத்தில் புதிய தழிழ் அரசியல் கட்சியோன்றை அமைப்பது தெடர்பாக இரகசியமான முறையில் பேச்சுவார்தை ஒன்றை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பலத்தப் பாதுகாப்புடன் யாழ்.நகருக்குச் சென்ற கே.பி முக்கிய சமூகப் பிரதிநிதிகளையும், யாழ்.பல்கலைக்கழகப் பேராசிரியர்களையும் சந்தித்து கட்சி அமைப்பது தெடர்பாகஆராந்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் காலத்தில் வட மாகாணத் தேர்தலில் வட மாகாணசபைக்குப் போட்டியிடுவதற்காக புதிய தழிழ் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கே.பியை யாழில் சந்தித்து பேசிய பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

_____________________________________________________________________________________________________________

யாழில் மாலை 6 மணிக்குப் பின் வீதிகளில் கூடும் இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாலை 6 மணிக்குப் பின்னர் வீதிகளில் கூடும் இளைஞர்கள் கைது செய்யப்படுவர் என, சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக பண்டார ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். சந்திகள், வீதிகள் மற்றும் பொது இடங்களில் மாலை 6 மணிக்குப் பின்னர் தேவையற்ற விதத்தில் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், ஆட்டோ தரிப்பு நிலையங்களில் சாரதிகளைத் தவிர வேறு எவரும் நிற்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார். சுன்னாகம் பகுதியில் அதிகளவான திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதாக முறையிடப்பட்டுள்ளதாகவும், இவற்றைத் தடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 24 மணித்தியாலமும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்திகாரி சிந்திக பண்டார அறிவித்துள்ளார்.

_____________________________________________________________________________________________________________

தமிழக மீனவர் மீதான தாக்குதல் பின்னணியை இலங்கை ஆராயும்

நிருபமாராவுக்கு அதிகாரிகள் விளக்கம்

nirubaலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட நிருபமாராவ் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் சி. ஆர். ஜெயசிங்கவையும் சந்தித்திருந்தார். இச்சந்திப்பின் போதே இந்திய மீனவர்களின் படுகொலை குறித்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற வேண்டு கோளை அவர் முன்வைத்திருந்தார். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். திசைமாறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்கள் உட்பட அனைத்து மீனவர்களையும் மனிதாபிமானத்துடன் நடத்தும் கொள்கையையே இலங்கை கொண்டிருப்பதாக நிருபமாராவுக்கு விளக்கமளித்த இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர். (மேலும்) 01.02.11

_____________________________________________________________________________________________________________

2006 ஆகஸ்ட் தொடக்கம் 2009 மே வரையில் யுத்த செலவினம் 550கோடி டொலர்

01_srilanka_l2006 முதல் யுத்தம் முடிவடைந்த வரை போருக்காக 550 கோடி டொலரை (5.5 பில்லியன் டொலர்) அரசாங்கம் செலவிட்டிருக்கிறது. 2006 ஆகஸ்டில் நடுப்பகுதியில் நான்காவது ஈழப்போர் ஆரம்பமானது. 2009 மே இல் அது முடிவுக்கு வந்தது. 2006 இல் 100 கோடி டொலராக இருந்த பாதுகாப்புச் செலவினம் 2009 இல் 170 கோடி டொலராக அதிகரித்திருந்தது. இந்தத் தொகையானது நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4% ஆகும். போரின் இறுதியாண்டுகள் தொடர்பாக விசாரணை செய்யும் அரசாங்கத்தின் குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இதனை வெளிப்படுத்தியிருக்கிறார். 550 கோடி டொலர்கள் நான்கு வருடங்களுக்குச் செலவிடப்பட்டுள்ளன. விமானங்கள், கப்பல்கள், தாங்கிகள், ஆயுதங்கள், பயிற்சி,படையினருக்கான உணவுகள், சீருடைகள் என்பன இச்செலவினத்தில் அடங்கும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவிடமே கப்ரால் இதனைத் தெரிவித்திருப்பதாக இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்றுத் தெரிவித்திருக்கிறது. (நாட்டின் பாதுகாப்புச் செலவினம் யுத்தம் முடிவடைந்த பின்னரும் குறைக்கப்படவில்லை.தற்போது வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு 1.9 பில்லியன் டொலராகும்.) (மேலும்) 01.02.11

_____________________________________________________________________________________________________________

30 வருடமாக ஓடித்திரிந்ததன் முடிவில் இன்று அமைதியான வாழ்க்கை கிடைத்துள்ளது யாழ்நகரில் குமரன் பத்மநாதன்

kp-7ாழ்நகர் நிருபர் : கடந்த 30 வருடங்களாக எமது மக்கள் உலகம் முழுவதும் அநாதைகளாக ஓடித்திரிந்தனர். முடிவில் எமக்கிருந்த அமைதியான வாழ்க்கை கிடைத்திருக்கின்றது. யுத்தம் எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்ந்திருக்கிறோம். எமது மக்கள் அனுபவித்த துயரங்கள் சோகங்கள் சொல்ல முடியாதவை என விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தரான குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். நெர்ட்டோ அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.ப.நோ.கூ. சங்க மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; வளமாக வாழ்ந்த எமது இனம் இன்று எல்லாவற்றையும் இழந்து அநாதைகளாக வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்தவுடன் எனது நண்பர்களுடன் நான் பேசினேன். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களை வாழ வைக்க வேண்டும் என்று அந்தக் கடமையை நான் ஆரம்பித்து விட்டேன். (மேலும்) 01.02.11

_____________________________________________________________________________________________________________

லங்கா ஈ நியூஸ் மீதான தாக்குதல்: சுயாதீன விசாரணைக்கு ஐதேக வலியுறுத்து

சுதந்திரமாகத் தகவல்களை அறிந்துகொள்ள வழிசெய்யும் ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இதனை வலியுறுத்தினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது, நேற்று அதிகாலை 1.30 அளிவில் இனந்தெரியாத ஆயுதக் குழுவினர் வந்து லங்கா ஈ நியூஸ் என்று சொல்லப்படும் செய்தி இணையத்தளத்தின் பிரதான அலுவலகத்திற்கு தாக்குதல் நடத்தி தீ வைத்துள்ளனர். லங்கா ஈ நியூஸ் என்பது இலங்கையில் நடத்திச் செல்லப்பட்டு வரும் மிகவும் சுயாதீனமான செய்தி இணையத்தளம் என்பது எம் எல்லோருக்கும் தெரியும். லங்கா ஈ நியூஸ் என்பது உள்நாட்டவர்கள் மாத்திரமல்ல வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் அனேகர் பார்வையிடும் செய்தி இணையத்தளமாகும். ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என்வற்றை விமர்சித்தது மட்டுமல்ல ஏனைய ஊடகங்கள் வெளியிட அச்சம் கொள்ளும் செய்திகளை லங்கா ஈ நியூஸ் வெளியிட்டது. ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் தொடர்பில் அண்மையில் இதில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆரச தரப்பில் காணப்படும் முறுகல் நிலைமைகள் குறித்து நேற்று முன்தினம் தகவல் வெளியிட்டிருந்தது. கடந்த காலங்களில் சுயாதீன ஊடகவியலாளர்களுக்கு நடந்தது இன்று லங்கா ஈ நியூசிற்கு நடந்துள்ளது. இது தொடர்பிலும் இதற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு ஐக்கிய தேசிய கட்சியான நாங்கள் வலியுறுத்துகின்றோம். என்றார் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர.

_____________________________________________________________________________________________________________

லங்கா  ஈ நியூஸ் தீ மூட்டப்பட்டது ஊடக அடக்குமுறை

லங்கா ஈநீயுஸுக்கு தீ வைக்கப்பட்டமைக்கு கபே அமைப்பும் மற்றும் மனித உரிமைகள் அமைப்பும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், அவ்வறிக்கையிலே காலியில் இலக்கிய விழா நிறைவு நடைபெற்று முடிவடைந்து இருக்கும் தருணத்தில் இவ்வாறு இடம்பெற்றிருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது. லங்கா ஈநியூஸ் பின்வாங்காமல் சரியான தகவல்களை வழங்கியமையே இத்தீமூட்டலுக்கு காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் அம் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளது. பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தும் நோக்குடனேயே இவ்வாறு தீமூட்டப்பட்டதாகவும், இது தொடர்பில் சரியான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவ் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.

_____________________________________________________________________________________________________________

வடமாகாண கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்திய வெளியுறவுச் செயலாளருக்கு எடுத்துரைப்பு!

douglas.6இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் திருமதி நிருபமராவ் தலைமையிலான உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர் இன்றைய தினம் (31) இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து கொண்டார். மேற்படி கலந்துரையாடலின் போது இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துரைத்தார். இதன் பிரகாரம் எமது மீனவர்கள் அதிலும் குறிப்பாக வட மாகாண மீனவர்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய அமைச்சர் அவர்கள் கடந்த சுமார் 30 வருட கால யுத்த அனர்த்தத்திற்குப் பின்னர் இம்மீனவர்கள் சுதந்திரமாக தொழிலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய மீனவர்களது டோலர் படகுகளினால் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர். (மேலும்) 31.01.11

_____________________________________________________________________________________________________________

இதொகாவின் வேட்பு மனு நுவரெலியாவில் நிராகரிக்கப்பட்டது கவலைக்குரியது

- மனோ கணேசன்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள கூட்டு ஒப்பந்தம், தேங்காய், மாவு, அரிசி ஆகிய அத்தியாவசிய பண்டங்களின் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் இதொகாவுடன் எங்களுக்கு பாரிய அரசியல் தொழிற்சங்க முரண்பாடுகள் இருக்கின்றன. இத்தகைய முரண்பாடுகளின் அடிப்படையிலேயே குறிப்பாக, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மோசடியான சம்பளத்தை உறுதிப்படுத்தியுள்ள கூட்டு ஒப்பந்தத்தை கையெழுத்திட்ட இதொகாவையும், யுஎன்பி தொழிற்சங்கத்தையும் எதிர்த்தே நாம் களமிறங்கியுள்ளோம். ஆனால் ஆளும் தரப்பினராலோ அல்லது எதிரணியினராலோ இதொகாவிற்கு எதிராக சதி முயற்சிகள் செய்யப்படுமானால் அவற்றை நாம் ஆதரிக்க முடியாது. நடைபெறவுள்ள தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல்களின்போது இதொகாவின் மனுக்கள் நுவரெலியாவில் நிராகரிக்கப்பட்டது தொடர்பில் நாங்கள் உண்மையிலேயே கவலையடைகின்றோம் என ஜனநாயக மக்கள் முன்னணி - ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் அமைப்புகளின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். (மேலும்) 31.01.11

_____________________________________________________________________________________________________________

பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை: கேள்விக் குறியாகிறதா இந்திய நீதித்துறை...?

- நந்தன்

binayak-senஆளும் அதிகாரவர்க்கத்தின் ஆடுகளமாகி விட்டதா....? அல்லது நடுநிலை பார்வைக் கோளாறில் பரிதவிக்கிறதா...? இந்திய நீதித்துறை என எண்ண வைத்துள்ளது பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடத்தும் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் நீதிமன்றம் ஒரு மனித நேய மருத்துவருக்கு ஆயுள்தண்டனை அளித்து வழங்கிய தீர்ப்பு. பினாயக் சென் என்ற அந்த குழந்த்தைகள் நல மருத்த்துவர் செய்த ஒரே காரியம் அபலைகளுக்கு ஆதரவுக் குரல் கொடுத்ததுதுதான். இன்னமும் அப்பாவிகளாகவே வாழும் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநில பழங்குடி மக்களின் நலனுக்காக மருத்துவர் பினாயக் சென் மனித உரிமைப் போராளியாக மாறியதுதான் அவரைத் தீவிரவாதி என்று முத்திரை குத்தி ஆயுள்தண்டனைக் கைதியாக்கி இருக்கிறது. தமிழ்நாட்டின் வேலூர் கிறீஸ்தவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்ற டாக்டர் பினாய்க் சென் வறுமையில், ஏழ்மையில் வாடி வதங்கி மருத்துவ வசதி பெறமுடியாமல் தவித்த பாமர மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்து வந்ததும் இந்த சேவைக்காக எண்ணற்ற விருதுகள் பெற்றதும் அவரது சிறப்புக்கள். உலகளாவிய சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஜொனாதன்மன் விருது பெற்ற முதல் இந்தியர் என்பதைவிட, தெற்காசியாவிலேயே இந்த விருதை வென்ற முதல் வெற்றியாளர் என்பது பினாயக் சென்னின் கூடுதல் சிறப்பு. (மேலும்) 31.01.11

_____________________________________________________________________________________________________________

தமிழ்க் கட்சிகளுடனான கூட்டு, இறுதி இலக்கிற்காக அமைக்கப்படும் தளம்

- சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழரசுக் கட்சியின் பொருளாளருக்கும், சிவாஜிலிங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் அவர் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாக அறிகின்றோம்.

sivagilingam3Suresh-Premachandran-2உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம் வட, கிழக்கில் தமிழ்க் கிராமங்களை இணைத்து ஒரு கட்டமைப்பை உருவாக்க முடியும். அது ஜனநாயகரீதியிலான தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு உந்து சக்தியாக அமையும் என்று யாழ்.மாவட்ட எம்.பி.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.நான்கு கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் புளொட், தமிழர் விடுதலைக்கூட்டணி போன்ற தமிழ்க் கட்சிகள் உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிடுகின்றமை, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் சிவாஜிலிங்கத்துடன் ஏற்பட்டிருக்கும் புரிந்துணர்வு உட்பட தற்போதைய நிலைவரங்கள் பற்றி யாழ்.தினக்குரலுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அளித்துள்ள பேட்டியில் சுரேஷ்பிரேமச் சந்திரன் கூறியதாவது.; தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் தமிழ்த் தலைவர்கள் ஒன்றிணைந்து ஒருமித்த குரலில் பேச வேண்டும் என்பதன் அடிப்படையில் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடன் நாம் பேசிக்கொண்டிருந்தோம். அந்த நிலையில் தான் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டது. (மேலும்) 31.01.11

_____________________________________________________________________________________________________________

எகிப்தில் கலவரம்:102 பேர் பலி

egyptகெய்ரோ, ஜன.30 (டிஎன்எஸ்) எகிப்தில் அதிபர் முபாரக் அமைச்சரவையை கலைத்தப் பிறகும் கலவரம் ஓயவில்லை. தலைநகர் கெய்ரோவில் ஷாப்பிங் மால்கள், விடுதிகள் சூறையாடப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. போலீஸ் நிலையங்கள், அரசு அலுவலகங்களுக்கு  தீ வைக்கப்படுகிறது. கெய்ரோ, அலெக்சாண்டிரியா, சூயஸ் நகரங்களில் இன்று அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. கலவரம் நீடிப்பதால் எகிப்துக்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. எகிப்தில் கடந்த 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் அதிபர் ஹோஸ்னி முபாபாரக்கை எதிர்த்து கடந்த ஒரு வாரமாக வன்முறை போராட்டம் நடந்து வருகிறது. முபாரக் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து  விலைவாசி உயர்ந்து விட்டதால் மக்கள் கொதிப்படைந்து உள்ளனர். தலைநகர் கெய்ரோ மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கலவரத்தை அடக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. எனினும் கலவரத்தை அடக்க முடியவில்லை. ராணுவத்தினர் கூட பல  இடங்களில் சீருடைகளை களைந்து விட்டு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சேர்ந்து கொண்டனர். தீ வைப்பு, துப்பாக்கிச்சூடு போன்ற வன்முறைகளுக்கு இதுவரை 102 பேர் பலியாகி விட்டனர். (மேலும்) 31.01.11

_____________________________________________________________________________________________________________

இந்திய மாணவர்கள் காலில் கண்காணிப்பு கருவி: அமெரிக்காவுக்கு எஸ் எம் கிருஷ்ணா கண்டனம்

பெங்களூர், ஜன.31 (டிஎன்எஸ்) அமெரிக்க போலீசார், கலிபோர்னியாவில் உள்ள டிரை- வேலி பல்கலைக்கழகத்தில் சோதனை நடத்தியபோது, அங்குள்ள மாணவர்களுக்கு போலி விசா அளிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பல்கலைக்கழகம் மூடப்பட்டது. இதனால் அங்கு படித்து வரும் 1,555 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது. இவர்களில் 90 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள் ஆவர். இந்தநிலையில் அங்கு படித்த மாணவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க அவர்களின் கணுக்காலில் `ரேடியோ காலர் டேக்' என்ற கண்காணிப்பு கருவியை அமெரிக்க அதிகாரிகள் வலுக்கட்டாயமாக பொருத்தி உள்ளனர். இதற்கு மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய மாணவர்கள், கிரிமினல்கள் அல்ல. எனவே, கண்காணிப்பு கருவியை உடனே அகற்றுமாறு அவர் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்காவில் மூடப்பட்ட ட்ரை-வேலி பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவுவதற்காக வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் தனி மின்னஞ்சல் ஒன்றைத் தொடங்கியுள்ளது. இந்திய தூதரகத்தின் ஆலோசனை மற்றும் உதவிகளை பெற minca@indiagov.org அல்லது edu@indiacgny.org என்ற மின்னஞ்சல் முகவரிகளில் மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)

_____________________________________________________________________________________________________________

ஐ.நா. சபையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை எழுப்புவோம் - பாஜக தலைவர் கத்காரி உறுதி

gadkari ஐ.நா. சபையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை கொண்டு செல்வோம் என்று பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தாமரை யாத்திரையை நடத்தினார். இதன் நிறைவு விழா நேற்று சென்னை மீனம்பாக்கம் அருகே ராணுவ மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பாஜகவினர் கலந்து கொண்டனர். பாஜக தலைவர் நிதின் கத்காரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இலங்கையில் உள்ள தமிழர்கள் தாக்கப்பட்டதற்காக தமிழகம் மட்டும் வருந்தவில்லை. இதை தமிழகம் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக பார்க்கக் கூடாது. இந்தியாவின் தேசிய பிரச்சினையாக இதைப் பார்க்க வேண்டும். இலங்கை தமிழர்களின் வாழ்வுக்காக பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்றத்தில் குரல் எழுப்பும். அங்குள்ள தமிழர்களுக்காக ஐ.நா. அவையில் புகார் செய்யப்படும். இலங்கை தமிழர்கள் நலனுக்காக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மருத்துவம் உள்பட அடிப்படை வசதிக்காக ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். தமிழர்கள் முழு உரிமைகளோடு இலங்கையில் வாழ்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்கள் மரியாதையோடும், உரிமைகளோடும், கெளரவத்தோடும் வாழ்வதற்குரிய நடவடிக்கைளை செய்ய வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு உள்ளது. (மேலும்) 31.01.11

_____________________________________________________________________________________________________________

இனி ஒருவரையும் சாகவிட மாட்டோம்: மீனவர்கள் கொலையை தடுக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்

- கொழும்பு செல்லும் வழியில் நிருபமா ராவ் தகவல்

Nirupama Raoதமிழக மீனவர்கள் கொலையை தடுக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று கொழும்பு செல்லும் வழியில் சென்னையில் நிருபமா ராவ் கூறினார். இலங்கை கடற்படையின் தாக்குதலால் சமீபத்தில் 2 தமிழக மீனவர்கள் பலியானார்கள். இது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை காக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முதல்-அமைச்சர் கருணாநிதி பிரதமருக்கு வலியுறுத்தினார். இதையடுத்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வெளியுறவு துறை செயலாளர் நிருபமா ராவை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பெங்களூரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் நேற்று மாலை நிருபமா ராவ் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் நிருபமா ராவ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சமீபகாலமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. தற்போது 2 பேரை பலி தந்து உள்ளோம். இனிமேல் ஒரு உயிரையும் இழக்கவிட மாட்டோம். மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர தீர்வு காணவும், இந்த தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மத்திய அரசு என்னை செல்ல உத்தரவிட்டது. இதையடுத்து நான் இலங்கை செல்கிறேன். (மேலும்) 31.01.11

_____________________________________________________________________________________________________________

சுதந்திர தினத்தன்று ஒரு தொகுதி முன்னாள் போராளிகள் விடுதலை

புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முன்னாள் போராளிகளினால் ஆக்கப்பட்ட கைவினை பொருட்கள் புத்தளவில் நடைபெறவுள்ள தயட கிருள கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேரிடியர் எஸ்.ரணசிங்க தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் கீழுள்ள பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் புனர்வாழ்வு நிலையங்களில் 4,500 முன்னாள் போராளிகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவர்களுக்கு மேசன் தொழில், தச்சு தொழில், வாழ்க்கை திறன் போன்ற பல பயிற்சிகள் வழங்கப்படுவதாக பிரிகேரிடியர் ரணசிங்க கூறினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட ஒரு தொகுதி முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் மேசன் தொழில் டிப்ளோமா பயிற்சியை நிறைவு செய்த முன்னாள் போரளிகள் 500 பேருக்கு நாளை திங்கட்கிழமை சான்றிதழ் வழங்கவுள்ளதாக பிரிகேரிடியர் ரணசிங்க மேலும் தெரிவித்தார்.புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் கீழுள்ள  பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் புனர்வாழ்வு நிலையம் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் முன்னாள்; போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

_____________________________________________________________________________________________________________

மு. கா. இன்று வழக்கு தாக்கல்

உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பு மனுக்கள் நிராகரிக் கப்பட்ட மைக்கு எதிராக இன்று திங்கட்கிழமை உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கடந்த 27ம் திகதி வேட்பு மனுக்கள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் தாக்கல் செய்யப்பட்ட போது ஸ்ரீல மு. காங்கிரஸினால் தாக்கல் செய்யப்பட்ட சில வேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன. மாத்தளை மாவட்டத்தில் தனித்து போட்டியிடவென உக்குவளை பிரதேச சபைக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு மாத்தளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. உக்குவளை பிரதேச சபைக்கு ஸ்ரீல. மு. காவில் போட்டியிடும் வேட்பாளர் எம். எப். எம். ஷாஜஹானின் வறக்கா முறை இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு (29ம் திகதி) 9.30 மணியளவில் இடம்பெற்ற விசேட ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவிக்கையிலேயே கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

_____________________________________________________________________________________________________________

புலம்பெயர்ந்தோர் நாடு திரும்பி அபி. உதவ முன்வர வேண்டும்

வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் முதலீடு செய்து பசுமைப் புரட்சியை ஏற்படுத்தினால் நாடு பிரகாசிக்கும்

- வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமால் பெரேரா

Neomal30 ஆண்டு கால பயங்கரவாத அச்சுறுத்தல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும் நிலையில் புலம்பெயர்ந்தோர் நாடு திரும்பி நாட்டைப் பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்வதற்கு உதவ முன்வர வேண்டும் எனப் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்திருக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் நாடு திரும்பி தமது நாட்டின் எந்தப் பகுதியிலும் குறிப்பாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் முதலீடு செய்து கைத்தொழில் மற்றும் பசுமைப்புரட்சி ஒன்றை ஏற்படுத்த முன்வர வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கும் பிரதி அமைச்சர், இதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைக்குக் கட்டியெழுப்ப முடியும் என்றும் தெரிவித்தார். மக்கள் எதிர்நோக்கியிருந்த 30 ஆண்டு கால பயங்கரவாத அச்சுறுத்தலை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது நேர்மையான, பாரபட்சமற்ற ஆளுமையின் மூலம் நீக்கி, இன்று நாட்டில் பூரண சமாதானத்தையும் அமைதியையும் மக்களிடையே ஐக்கியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார். (மேலும்) 31.01.11

_____________________________________________________________________________________________________________

தூனீசியா - புரட்சியின் கருவறையான ஒரு பட்டதாரியின் கல்லறை!

mohamad-1இருபத்தேழு வயது முஹம்மத் போஅஸீஸி ஒரு பட்டதாரி இளைஞன்.  வேலையில்லா பிரச்சினைக்கு ஈடுகொடுக்க அவன் பாதைக்கு இறங்கினான். போராடுவதற்கு அல்ல  பழத்தை மரக்கறியை விற்று தனது பசியை போக்கிக் கொள்வதற்கு. அந்த நடைபாதை வியாபார விவகாரம் உலக ஊடகங்களில் இப்படி இடம்பிடிக்கும் என்று இந்த பட்டதாரி இளைஞன் எண்ணியிருக்கவே மாட்டான். தூனிசியா என்ற தனது நாட்டை ஆண்ட ஊழல், மோசடி மிகுந்த அதிகார வர்க்கம் இந்தப் பிரச்சினையால் அதிர்ந்து உடைந்து விழும் என்று உணர்ந்திருக்கவும் மாட்டான். அந்த பட்டதாரி இளைஞனுக்கு நடைபாதை வியாபாரத்தை  தொடர்ந்து செய்வதற்கு தூனிசிய அதிகார வர்க்கம் இடம்கொடுக்கவில்லை. பொலீஸ் அவனை வியாபார அனுமதிப் பத்திரம் கேட்டு மிரட்டியது, விரட்டியது. தீராத பிரச்சினைகளுக்குள் அவனைப் போட்டு புரட்டியது . முஹம்மத் போஅஸீஸி ஒரு முடிவு எடுத்தான். திட்டம் வகுத்தான். அது மக்களை கசக்கி பிழியும் ஆளும் வர்க்கத்தை அடித்து உதைத்து விரட்டி விட வேண்டும், ஆட்சியைப் புரட்டி தூனிசியாவிற்கு புரட்சியை கொண்டு வரவேண்டும், புதுயுகம் படைக்க வேண்டும் என்பதல்ல. (மேலும்) 31.01.11

_____________________________________________________________________________________________________________

எமக்கான தனித்துவம் தேடும் காலம் உருவாகவேண்டும்

-  நடேசன் - அவுஸ்திரேலியா.

nadesanஎம்மிலும் பார்க்க பலசாலியால் நாம் பாதிக்கப்பட்டாலோ அல்லது, அடிவாங்கினாலோ எமது கோபத்தை  அருகில் உள்ளவர்கள் மீது காட்டுவது பாமரத்தனமானது.  இதனை ஆங்கிலத்தில் misdirected anger என்பார்கள். இப்படியான பாமரத்தன்மை சமூகமட்டத்தில் பரவிவிடுகிறபோது அந்தத் தன்மைக்கு எதிராக அறிவாளிகள் போரிடவேண்டும். அந்தப்போராட்டம் ஊடகங்களால் சமூகத்தின் மூலை முடுக்கெங்கும் எடுத்துச் செல்லப்படவேண்டும்.  இப்படி இல்லாத பட்சத்தில் மட்டரகமான அரசியல்வாதிகள் இந்த பாமரத்தன்மையை பயன்படுத்துவார்கள். இது சமூகத்திற்கு பாரிய அழிவை ஏற்படுத்தும்.  ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தின் விளைவாக ஏற்பட்ட பாமரத்தன்மையை அறிவுஜீவிகள் புறக்கணித்தாலும், அதன்பின்பு மட்டரக அரசியல்வாதிகள் சாமானிய மக்களின் மனதில் அதை நஞ்சாக மாற்றியதால் அந்த நஞ்சு  ஒரு சமூகத்தையே அழித்துவிடுவதை நாம் இன்னமும் அறிந்து கொள்ளதவறிவிடுகிறோம். ற்கை அனர்த்தங்கள் வர்க்கவேறுபாடு பார்பதில்லை. எனினும் பாதிப்பு அடிமட்ட மக்களையே அதிகம் பாதிக்கிறது.; சுனாமியில் அதிகம் அழிந்தவர்கள்  அன்றாடக்காச்சிகளான  மீனவர்களே. மழை வெள்ளத்தில மிதந்து போவது குப்பத்து குடிசைகளே. இதேபோல் போர் அனர்த்தத்தில் இலங்கையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சாமானிய தமிழர்கள் மட்டுமல்ல சாமானிய சிங்கள வர்கத்தினரும்தான். இவர்களில் இருந்துதான் இறந்த முடமான இராணுவத்தினர் வந்தார்கள். (மேலும்) 30.01.11

_____________________________________________________________________________________________________________

சிங்களத் தீவுக்கு  பாரதி கட்டிய பாலமும் வ. உ. சிதம்பரம் அனுப்பிய கப்பலும் !

எஸ்.எம்.எம்.பஷீர்

எனது பல்கலைக்கழக காலத்தில் ஒரு தடவை பேராதனை பொறியியல் பீட மண்டபத்தில் நடைபெற்ற ஒரு கலை விழாவில் “சிந்து நதியின்மிசை”  என்ற பாரதியின் கைகொடுத்த தெய்வம் படப் பாடலை ஒரு பொறியியல் துறை மாணவர் அந்நிகழ்வில்  பாடினார். அவர் அப்பாடலை பாடியபோது “சிந்து நதியின்மிசை  நிலவினிலே” என்ற வரிகள் வரும் இடத்தில் “தமிழீழத்திற்கோர் பாலம் அமைப்போம்” என்று பாடி தமிழ் மாணவர்களின் பலத்த கரகோசத்தை பெற்றார். அதுவே சிங்களதீவின் மீதான எதிர்பினை கோடிட்டு காட்டியதுடன் அங்கு அக் காலகட்டத்தில்  பல்கலைக் கழக சூழலில் நிலவிய தமிழ் இளைஞர்களின் தமிழர் விடுதலை கூட்டணி ஊட்டி வளர்த்த  பிரிவினைவாதமும் ஜே வீ பியின் -ரோகன விஜேவீரவின்- தீவிரவாதமும் சமகாலத்தில் தளம் கொண்ட ஒரு காலகட்டத்தில் தான் அது நடந்தது. என்னவானாலும் பாரதி மீது தமிழ் தேசிய வாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும்  சிங்கள தீவு  என்று கூறியதில் சொல்லொணா ஆத்திரமுண்டு . ஆனால் என்ன செய்வது பாரதியை , அதுவும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் கவிஞனாக புகழப்படும் மகாகவி பாரதியை எப்படி விமர்சிப்பது, ஆகவே சிங்களதீவு என்று பாரதி குறிப்பிட்டதை ஒருபுறம் கண்டும் காணாமல் விட்டுவிட்டனர்.  ஆனாலும் ஒரு புலி ஊடகவியலாளர் சில வருடங்களுக்கு முன்பு இலண்டனில் உள்ள சன் ரைஸ் வானொலியில் பாரதி குறிப்பிட்ட சிங்களத்தீவு யாழ்ப்பாணத்தை -அதாவது குடாநாட்டை- குறிப்பிடவில்லை ஏனெனில் பாரதிக்கு குடாநாடு தமிழ் தேசம் என்று தெரிந்திருந்தது என்று குறிப்பிட்டதுடன் ( கிழக்கையும் மலையக மக்கள் , மேலும் சேது சமுத்திரம் தலை மன்னாரைதான் இணைக்கிறது என்பதயும் சவுகரியமாக மறந்து ) ஒரு புதிய விளக்கம் சொல்ல முற்பட்ட பேதமையை கேட்டேன் . (மேலும்) 30.01.11 

முன்னைய பதிவுகள்

wanni

காக்கும் ஷேக்கும் (KAK AND SHEIKH )

புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரே ஸ்ரீலங்கா அரசு வகுத்திருக்கும் சாம, தான, பேத, தண்ட வியூகம்

தமிழ் மக்களுக்குப் பாரிய இன்னல்கள் ஏற்பட்டதற்கு வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி நிறைவேற்றிய தனிநாட்டுத் தீர்மானமே அடிப்படைக் காரணம்.

இலங்கை புலனாய்வுத்துறை எமது மக்களில் சிலர் எண்ணுவதைப்போல் முட்டாள்தனமானது அல்ல. குமரன் பத்மநாதன்

பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்