a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி             உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்      எங்கள்தேசம்         சலசலப்பு         நோயல்நடேசன்     விடிவெள்ளி         எங்கள்பூமி              ரீவடை இணையம்        பார்வை             தமிழ்யுகே                     புயல்                 புளொட்யுகே      யாழ்முஸ்லீம்      புண்ணியாமீன் 
யவ்னா ருடே                 எஸ்.ஆர்.லெம்பட்

Asientribune
Lines-Magahzine
The lka academic
Tamil Week            sldf
Uthr                
        

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.10                                                         27.03.2011

தலையங்கம்: "ஆமாம் சாமி' சபையா?

இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு மீண்டும் உலக நாடுகளுக்கு இடையே யுத்தம் எதுவும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கவும், நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டதுதான் ஐக்கிய நாடுகள் சபை. இந்த அமைப்பின் அடிப்படை நோக்கம் உள்நாட்டுப் பிரச்னைகளில் தலையிடுவது அல்ல. உலக நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளைச் சமரசமாகத் தீர்த்துவைத்து அதன் மூலம் போர் மூளாமல் தடுப்பதும் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் காப்பதும்தான்.  கடந்த இருபது ஆண்டுகளாக, ஐ.நா. சபையின் பல முடிவுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளின் ஆக்கிரமிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குபவையாக இருந்து வருகிறதே தவிர, அப்பாவி மக்களைப் பாதுகாப்பதாகவோ, சின்னஞ்சிறு நாடுகளின் இறையாண்மைக்கு உத்தரவாதம் அளிப்பதாகவோ இல்லை. வல்லரசு நாடுகள் சிறிய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதைத் தலையாட்டி அங்கீகரிப்பதற்காகக் கூட்டப்பட்ட உலக நாடுகளின் அமைப்பாகத் தன்னை ஐ.நா. சபை மாற்றிக் கொண்டிருப்பதன் சமீபத்திய எடுத்துக்காட்டுத்தான் லிபியா மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல். லிபியா அத்துமீறி தனது அயல்நாட்டின் மீது படையெடுத்திருந்தால் அதைத் தடுக்க வேண்டிய கடமை நிச்சயமாக ஐ.நா. சபைக்கு உண்டு. ஆனால், லிபிய அரசு உள்நாட்டுக் கலவரத்தை அடக்க முயற்சிப்பது தவறு என்று கூறி, புரட்சியாளர்கள் சார்பில் லிபியாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் படைகள் தொடுத்திருக்கும் விமானத் தாக்குதலுக்கு ஐ.நா.சபை அங்கீகாரம் வழங்க முற்பட்டிருப்பதுதான் வியப்பாக இருக்கிறது. (மேலும்) 24.03.11

_____________________________________________________________________________________________________________

தமிழ் சிங்கள புத்தாண்டு விழா 2011

வருடா வருடம் கனடிய ஜனநாயக தமிழ் கலாச்சார மன்றத்தினால் நடாத்தப்படும் தமிழ்-சிங்கள புத்தாண்டு விழா இவ்வருடமும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில்,பரத நாட்டியம் - கண்டிய நடனம் - சீன சிங்க நடனம் - ஆபிரிக்க மேள வாத்தியம் - தமிழ்-சிங்கள இசை நிகழ்ச்சி என்பன நடைபெறவுள்ளன.

காலம் : ஏப்ரல் 23 2011 சனிக்கிழமை மாலை 5:30

இடம் : Agincourt Collegiate Auditorium

2621 Midland Aveneu [Midland & Sheppard]

Scarbrough

மேலதிக விபரங்களுக்கும் நுழைவுச்சீட்டு பெறவும்
416 588 3230 - 416 264 2115 - 416 276 8287

_____________________________________________________________________________________________________________

லிபியாவை பாதுகாக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கை ஆதரவு

  • லிபியா மீதான தாக்குதல்களை ஏற்க முடியாது
    - ஜீ. .எல்.பீரிஸ்
  • மேற்குலக தலையீடு அரபு, முஸ்லிம் உலகுக்கு அச்சுறுத்தல்
    - ஏ.எச்.எம்.அஸ்வர்

லிபியாவின் இறைமை, சுதந்திரம், ஜனநாயக உரிமைகள், மக்களின் அபிலாஷைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கை அரசு பூரண ஆதரவை வழங்குமென அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். லிபியா மீது நடத்தப்படும் வான் தாக்குதல்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வான் தாக்குதல்கள் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. இராஜதந்திர ரீதியில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதையே இலங்கை அரசு விரும்புகிறது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். லிபியா மீது மேற்குலக நாடுகள் நடத்தும் தாக்குதல்களை கண்டித்து நேற்று பாராளுமன்றத்தில் ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணையொன்றை சமர்ப்பித்துப் பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். (மேலும்) 24.03.11

_____________________________________________________________________________________________________________

அரசியல் தீர்வுத்திட்ட யோசனை அரசிடம் விரைவில் கையளிப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் தடவையாக அடுத்த மாதம் அதிகாரப் பகிர்வு உள்ளடங்கிய தீர்வுத் திட்டம் ஒன்றை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கிறது. அடுத்த மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசு - கூட்டமைப்பு சந்திப்பின் போது இந்தத் திட்டத்தை தமிழ்க் கூட்டமைப்பு சமர்ப்பிக்கவுள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார். அரசுக்கும் கூட்டமைப்புக்குமிடையில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டமாக தமிழ் மக்களின் சில அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளன. ஏப்ரல் 7ஆம் திகதியும் ஏப்ரல் 27 ஆம் திகதியும் பேச்சுவார்த்தைகளுக்கு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருப்பதாக உறுதிபடத் தெரிவித்தார்.புனர்வாழ்வு முகாமில் இருக்கும் சுமார் 11 ஆயிரம் இளைஞர்களை விடு விப்பது தொடர்பாகவும் புலிச் சந்தேக நபர்கள் என்ற போர்வையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்வது தொடர்பாகவும் நாம் அரசுடன் நடாத்திய பேச்சுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மீண்டும் அரசை வலியுறுத்தவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். (மேலும்) 24.03.11

_____________________________________________________________________________________________________________

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா - மலேசியா

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 03

அறிமுகம்

மலேசிய இலக்கிய விழா குறித்த எனது இரண்டாவது கட்டுரைக்குப் பின்னர் ஓரளவு வரவேற்கத்தக்க மாற்றங்கள் இலங்கை சார்பில் நடந்திருப்பதை அறிய வந்தேன். அந்த விபரங்களைப் பதிந்து விடவேண்டும் என்பதும் இன்னும் மீளாய்வுகளும் திருத்தங்களும் தேவை என்பதைத் தெரிவிப்பதுமே நெடுங்கட்டுரையின் மூன்றாவது அங்கத்தின் நோக்கம். இதுவரை அச்சில் வெளிவந்து பலர் கவனத்துக்குக் கட்டுரைகள் செல்லாத போதும் அடைய வேண்டிய தளங்களைச் சர்வதேசிய ரீதியில் இணையம் மூலமாகவே எட்டியிருப்பது என்னையே ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அது தவிர இந்த விழா சம்பந்தப்பட்ட அனைவருமே கட்டுரைகளைப் படிக்கிறார்கள் என்பதும் வரவேற்கத் தகக்து. இத்தொடரை 5 கட்டுரைகளுடன் நிறைவு செய்யலாம் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் இன்னும் சற்று நீண்டு ஒரு நூறு அல்லது நூற்றறைம்பது பக்க நூலாகி விடும் போல் தெரிகிறது. கூடியவரை சுருக்கிக் கொள்வது நல்லது என்றே நினைக்கிறேன். இலக்கிய ஆர்வலர்கள் ‘சர்வதேச இஸ்லாமிய இலக்கிய மாநாடு’ என்றோ ‘மலேசிய இஸ்லாமிய இலக்கிய விழா’ என்றோ அல்லது இந்த வார்த்தைகளில் இருக்கும் ஏதாவது ஒரு சொல்லை வைத்து இணையங்களில் சொடுக்கித் தேடினாலும் காலாகாலமாக எல்லாக் கட்டுரைகளையும் படிக்கும் வாய்ப்பு இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும (மேலும்) 24.03.11

_____________________________________________________________________________________________________________

அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட இலங்கையர் இருவருக்கு விஸா

அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னர் , கிறிஸ்மஸ் தீவிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்புக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டவர்களில் இலங்கையர்கள் இருவர் உட்பட பலருக்கு அவுஸ்திரேலிய விஸா வழங்கப்பட்டுள்ளது. 89 பேர் கொண்ட இக்குழுவினரை தாயகத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ருட் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால், இலங்கைக்கு திரும்பினால் அவர்கள் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என மீளாய்வாளர்கள் கண்டறிந்ததையடுத்து அவர்களுக்கு விஸா வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்புக்கும் கிறிஸ்மஸ் தீவுக்கும் அவுஸ்திரேலிய சட்டங்கள் செல்லுபடியாகும் என்பதால் தஞ்சம் கோருவோரின் படகுகள் கிறிஸ்மஸ் தீவுக்கா, பிரதான நிலப்பரப்புக்கா கொண்டுவரப்பட்டன என்பது முக்கியமல்ல என சட்டத்தரணி டேவிட் மான்னே கூறியுள்ளார்.

_____________________________________________________________________________________________________________

இரகசிய தகவல் மூலம் ஒரே நாளில் 40 லட்சம் டொலர் சம்பாதித்த ராஜரட்ணம்

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க கோடீஸ்வர வர்த்தகரான ராஜ் ராஜரட்ணம், ஹில்டன் ஹோட்டல் தொடர்பாக கிடைத்த இரகசிய தகவல் மூலம் பங்குச் சந்தையில் ஒரே நாளில் 40 லட்சம் டொலர் லாபமீட்டியதாக அமெரிக்க நீதிமன்றமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த ஹோட்டலை பிளக்ஸ்டோன் குழும நிறுவனம் வாங்கியபோது இது நடந்ததாகவும் அமெரிக்க இந்தியர்கள் இருவர் இதில் சம்பந்தப்பட்டதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. உள்வீட்டு இரகசிய தகவல்களை பெற்று பங்குச்சந்தையில் முறையற்ற விதமாக லாபமீட்டினார் என ராஜ் ராஜரட்ணம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உரையாடல்கள் அடங்கிய ஒலிநாடாக்களும் நீதிமன்றில் செவிமடுக்கப்பட்டன. இதன் மூலம், இன்டெல் நிறுவன மன்னாள் தலைவர் ராஜீவ் கோயல் எவ்வாறு இரகசிய தவல்களை ராஜ் ராஜரட்ணத்திற்கு வழங்கினார் என்பதை வழக்குத் தொடுநர்கள் வெளிப்படுத்தினர். இவ்வழக்கில் தான் குற்றவாளி என ராஜீவ் கோயல் ஏற்கெனவே ஒப்புககொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

_____________________________________________________________________________________________________________

தமிழ் மொழி அமுலாக்கம் இனி கட்டாயப்படுத்தப்படும்

தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

 vasudeva_nanayakkaraஅமைச்சுகள் மற்றும் அரச திணைக்களங்களில் தமிழ்மொழி அமுலாக்கலை கட்டாயப்படுத்தும் அமைச்சரவைப் பத்திரமொன்று விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு: தேசிய மொழிகள் முறையாக அமுல்படுத்தப்படாவிட்டால் அதை எதிர்த்து வழக்குத் தொடரலாம். ஆனால், அரசுக்கு எதிராக அரசே எவ்வாறு வழக்குத் தொடர்வது? அதனால்தான் தேசிய மொழிகளில் ஒன்றான தமிழ்மொழியை முறையாக அமுல்படுத்துவதை கட்டாயமாக்கும் அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளேன்.அரச சேவையில் 9 சதவீத தமிழ்ப் பேசும் ஊழியர்கள் இருக்கின்றனர். இது நிச்சயமாக அதிகரிக்கப்படவேண்டும். சமீபத்தில் பொலிஸ் சேவைக்கு 350 தமிழ்ப்பேசும் இளைஞர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இந்தத் தொகை மேலும் அதிகரிக்கப்படவேண்டும்.2007ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரச சேவையில் இணைந்துகொண்டவர்கள் ஐந்து வருடங்களுக்குள் தமிழர் சிங்களத்திலும், சிங்களவர் தமிழிலும் சித்தியெய்த வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள அதிகரிப்பும் வழங்கப்படமாட்டாது. அமைச்சுகள், அரச திணைக்களங்களுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படின் எமது அமைச்சுடன் தொடர்புகொள்ளலாம். எம்மிடம் பயிற்றுவிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கின்றனர்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

_____________________________________________________________________________________________________________

யாருக்கும் வெற்றியைத் தராத தேர்தல்

-கே.சஞ்சயன்

srilanka election-1டந்தவாரம் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலின் முடிவுகள் பெரும்பாலான கட்சிகளுக்கு அதிர்ச்சியான செய்தியையே சொல்லியுள்ளன.இந்தத் தேர்தலில் தாமே வெற்றி பெற்றதாக பெரும்பாலான கட்சிகள் சொல்லிக் கொள்கின்றன. ஏதாவது ஒரு வசதியான புள்ளிவிபரத்தையும் அவை பயன்படுத்திக் கொள்கின்றன. இந்தத் தேர்தலில் அதிகளவு வாக்குகள் பதிவாக வாய்ப்பில்லை என்றே முன்னர் கணிக்கப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட 66.82 வீதமான வாக்காளர்கள் வாக்களித்திருப்பது முதலாவது அதிர்ச்சி.இம்முறை 50 வீதம் வரையான வாக்குப்பதிவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதை மீறி பெருமளவானோர் வாக்களித்துள்ளனர். பிற்பகல் 2 மணி வரை 30 வீதமே பதிவான வாக்குகள், அடுத்த 2 மணி நேரத்தில் எப்படி 65 வீதத்தை எட்டியது என்று ஐ.தே.க சந்தேகம் கிளப்பியுள்ளது. தமிழ்ப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் சுறுசுறுப்பாகவே வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. வடக்கிலும். கிழக்கிலும் தமிழ்ப் பகுதிகளில் தான் வாக்களிப்பு மந்தநிலையில் இருந்துள்ளது. இதிலிருந்து அங்குள்ள மக்கள் வாக்களிப்பின் மீது ஆர்வம் கொள்ளும் நிலை இன்னமும் ஏற்படவில்லை என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த மந்தநிலை கடந்த பல தேர்தல்களிலும் காணப்பட்டது தான். அதேவேளை, சிங்கள, முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் வாக்களிப்பு எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாகவே இருந்துள்ளது. இது முக்கியமானதொரு மாற்றமாக இருந்த போதும் - அதையிட்டு எந்தவொரு கட்சியும் நிம்மதி கொள்ள முடியாத நிலையே உள்ளது. (மேலும்) 23.03.11

_____________________________________________________________________________________________________________

சிங்களவர்களின் கருத்தொருமிப்பு இன்றி இந்தியா சமாதான நடவடிக்கைகளில் சம்பந்தப்பட விரும்பவில்லை.

 - ஆக்கம்: கே.வெங்கடரமணன்

manmohansingh-1லதரப்பு அழுத்தங்களையும் எதிர்த்து நின்றதன் பின் பல ஆட்டக்காரர்களும் ஸ்ரீலங்காவின் சமாதான நடவடிக்கைகளில் இரண்டு வருடங்களுக்கு மேலாக சம்பந்தப் பட்டிருந்தனர். இந்தியா அதன் தயக்க வரம்பைக் கடப்பது பற்றி 2005ல் சந்திரிகா குமாரதுங்கவின் ஜனாதிபதிக் காலத்தின் கடைசி நாட்களில் தீவிரமான அக்கறை மேற்கொண்டிருந்தது. ஆனால் நவம்பரில் மகிந்த ராஜபக்ஸ அதிகாரத்துக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அது சடுதியான பின்னகர்வு அடியை வாங்கவேண்டியிருந்ததென அமெரிக்க இராஜாங்கத் தந்திச் செய்திகள் வெளிப்படுத்தின என விக்கிலிக்ஸ தகவலை மையப்படுத்தி த இந்து பத்திரிகை தெரிவித்தது. புதுதில்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு ஊடாக 14 ஒக்டோபர் 2005ல் (42686 : இரகசியமானது) அனுப்பப்பட்ட தந்தியின்படி இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பிரதிச் செயலர் அனுபம் றே, புதுதில்லியில் உள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளுக்குத் பின்வருமாறு தெரிவித்தார். ”சமாதான நடவடிக்கைகள் சீர்குலைந்து போயுள்ளன. எல்.ரீ.ரீ.ஈயின் தலைவர் பிரபாகரன் முன்னெப்பொழுதையும் விட முன்னறிந்து கூறமுடியாத ஒரு நிலையிலுள்ளார். நோர்வே தனது பயன்பாடுகளைச் செயலற்றதாக்கியுள்ளது,”  ஆகவே இந்தியா மீண்டும் ஈடுபடுவதற்கான நேரம் வந்து விட்டது என திரு.றே சொன்னதாக தூதுவர் றொபேட் பிளேக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்தியா அங்கு “தீர்வுக்கான சிங்களவர்களின் கருத்தொருமித்ததான திட்டவரை” ஒன்று வெளிப்படும்வரை காத்திருக்க விரும்புகிறது. ஆனால் இந்திய அரசாங்கம் எப்பொழுதும் காத்துக் கொண்டிருக்க முடியாது. (மேலும்) 23.03.11

_____________________________________________________________________________________________________________

புலிகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டு மேன்முறையீட்டை கனடிய நீதிமன்றம் நிராகரிப்பு

வன்கூவர்: பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில் கனடாவில் முதற்தடவையாக வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டை பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நிராகரித்துள்ளது. தமிழ்ப்புலிகளுக்காக நிதி சேகரித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பிரபாகரன் தம்பித்துரை (46 வயது) என்பவர் கடந்த மே மாதம் கனடாவினால் குற்றவாளியென அடையாளம் காணப்பட்டிருந்தார். அவருக்கு பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்ற நீதிபதி ரொபேர்ட் பவர்ஸ் ஆறு மாத சிறைத்தண்டனையை விதித்திருந்தார். இத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த வேண்டுகோளை பிரிட்டிஷ் கொலம்பிய மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதற்கான காரணம் உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை. ரொறன்ரோவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், 2008 மார்ச் இல் வன்கூவருக்குப் பயணம் மேற்கொண்டதாகவும் கனடிய பொலிஸாரின் கண்காணிப்புக்குள் அவர் உட்படுத்தப்பட்டிருந்ததாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. பல வீடுகளுக்குச் சென்ற அவர் 600 டொலரை தமிழ்ப்புலிகளுக்காகச் சேகரித்ததைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டிருந்தார். (மேலும்) 23.03.11

_____________________________________________________________________________________________________________

இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் மூவர் சிறைபிடிப்பு

யாழ் வடமராட்சி மீனவர்கள் மூவரை இந்தியக் மீனவர்கள் சிறைப்பிடித்துள்ளதாக வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி கடல்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை மீன்பிடிப்பதற்காகச் சென்ற வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கடல்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த  நடராஜ சுந்தரம் செந்தூரன் (வயது 24),  பரமராஜ சுந்தரன்  கேசவ ரூபன் (வயது 21),  பத்மநாதன் பத்ம ராஜ் (வயது 22) ஆகியோரே இவ்வாறு இந்திய மீனவர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாலை 5 மணிக்கு மீன்பிடிக்க சென்ற இவர்கள் மாலை வரை வீடு திரும்பாமையால் இவர்கள் குறித்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர்,  இந்தியாவிலிருந்து இந்திய மீனவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாம் அவர்களை சிறைப்பிடித்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன், சிறைப் பிடிக்கப்பட்ட ஒருவரை உறவினர்களுடன் பேச வைத்துள்ளனர்.

_____________________________________________________________________________________________________________

அஸ்தமனமாகுமா ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு?

- கிழக்கான் ஆதம்

vettilaiகாத்துக் கொண்டிருக்காதே நீ ஒரு போதும் செயற்படமாட்டாய்”  என்பது பொய்யா மொழி திறமைகள் அவை பரீட்ச்சிக்கப்படும்போதே அடையாளம் காணப்படுகின்றன. சந்தர்ப்பம் கிடைக்கப்பெறதா அல்லது பரீட்ச்சிக்கப்படாத திறமையானது பூச்சியமாகும். செல்வாக்கும் அவ்வாறானதே! தற்போது இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் கனத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் நடந்து முடிந்துள்ளன. இதில் பல உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பல பழம்பெரும் அரசியல் வாதிகள் மக்களால் தூக்கியெறியப்பட்டு அல்லது பின்தள்ளப்பட்டு புதியவர்கள் தங்கள் அரசியல் பயணத்தினை ஆரம்பித்துள்ளனர். இந்த உள்ளூராட்சிசபைத் தேர்தலில் இலங்கை முழுவதிலும் எதிர் கட்சிக்காரர்களால் இயற்கை அழிவுகளும் விலையுயர்வும் துரும்புச் சீட்டாகப் பயன்படுத்தப்பட்டன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போ அபிவிருத்தி என்ற தொனிப்பொருளில் தேர்தல் நடத்தப்பட்ட பிரதேசங்களில் பெரும்பாலானவற்றைக் கைப்பற்றியுள்ளது. ஆளும் தரப்புக்கு இந்த வெற்றி அளித்த சந்தோசத்தைவிட அது அளித்த சங்கடமே இன்றைய நிலையில் பாரிய பிரச்சினையாக உள்ளது.  அது என்னவெனில் ஆளுங்கட்சியில் போட்டியிட்ட பழம்பெரும் அரசியல் வாதிகளும், அதிகாரக்காரர்களும் தேர்தலில் அந்தந்தப்பகுதி மக்களால் பின்தள்ளப்பட்டு விருப்புவாக்குகளின் அடிப்படையில் முதலிடத்தில் புதியவர்கள் மக்களால் தெரிவுசெய்யப் பட்டதாகும். (மேலும்) 23.03.11

_____________________________________________________________________________________________________________

மளிகைக் கடைக்காரரின் மனிதாபிமானம்! நெகிழவைக்கும் ஜப்பானியர்கள்

கேசுன்னிமா, மார்ச் 22: நிலநடுக்கம், ஆழிப்பேரலை, அணுமின்சார நிலையங்களில் அணு உலைகள் வெடிப்பு என்று அடுக்கடுக்காக சோதனைகள் வந்த நிலையிலும், உழைப்புக்கும், நேர்மைக்கும் ஜப்பானியர்கள் தரும் முக்கியத்துவம் நெகிழவைக்கிறது. நாட்டுப்பற்றும் நாணயமும் வியக்கவைக்கின்றன.  ஜப்பானிய அரசு தன்னாலியன்ற முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையிலும் வட கிழக்கு கடலோரப் பகுதியில் இன்னமும் வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்பவில்லை. சாலைகள் சீரமைக்கப்படாததால் தரைவழி போக்குவரத்தும், கடலில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களால் கடல் வழிப் போக்குவரத்தும், அணுக்கதிர் வீச்சால் வான் வழிப் போக்குவரத்தும் மேற்கொள்ள முடியாமல் கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இப்பகுதி இருக்கிறது.  இதனால் மக்களுக்கு உணவு, எரிபொருள், மருந்து - மாத்திரைகள் கிடைக்கவில்லை. மின்சார சப்ளையும் முழு அளவில் தொடங்கப்படவில்லை. அத்துடன் எதையாவது யாரிடமாவது வாங்கலாம் என்றால் கையில் பணமும் இல்லை. கைமாற்றாக எதையும் வாங்கிப் பழக்கம் இராத ஜப்பானியர்கள் பட்டினி கிடைப்பதை பெரிய பிரச்னையாகக் கருதுவதில்லை.  இந்த நிலையில் கடலோரத்தில் மளிகைக் கடை வைத்து நடத்திய சயூரி மியாகாவா துணிச்சலாகச் செயலில் இறங்கிவிட்டார். (மேலும்) 23.03.11

_____________________________________________________________________________________________________________

படகுகளை திருடிய குற்றச்சாட்டில் யாழ். இளைஞர் தமிழகத்தில் கைது

தனுஷ்கோடி கரையோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களுடைய இரு படகுகளை திருடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தமிழ்நாடு 'கியூ பிரிவு' பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேற்படி சந்தேக நபரான ரவிநாத் என்பவர் அகதி அந்தஸ்து கோரி பதிவு எதனையும் மேற்கொள்ளவில்லையெனவும் எப்போது இவர் இந்தியாவுக்கு வந்தார் என்பது தொடர்பிலும் தெரியவில்லையெனவும் பொலிஸார் கூறினர். உடைவடைந்த நிலையில் ஒரு படகு மண்டபத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மற்றைய படகு மண்டபம் கரையோரப் பகுதியின் நடுக்கடலில் நங்கூரமிடப்பட்ட நிலையிலுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். மண்டபத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதையடுத்து பொலிஸாரால் ரவிநாத் கைதுசெய்யப்பட்டார். சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது, ஏனைய சிலரின் உதவியுடன் மேற்படி படகுகளை அவர் திருடியதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில், ரவிநாத் என்பவர் ஏன் அகதி அந்தஸ்து கோரி பதிவு எதனையும் மேற்கொள்ளவில்லையென்பது தொடர்பிலும் இவர் என்ன காரணத்திற்காக மேற்படி படகுகளை திருடினார் என்பது தொடர்பிலும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

_____________________________________________________________________________________________________________

என் முதுகில் குத்தினாலும் வாக்களித்த தமிழ் மக்களின் முதுகில் குத்திவிடாதீர்கள்

- வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு மனோ கணேசன் அறிவுரை

manoganesan-5எனது முதுகிலே குத்தினாலும் பரவாயில்லை. ஆனால் வாக்களித்த தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்து, தமிழ் அன்னையின் முதுகில் குத்திவிடாதீர்கள் என கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களிடம் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அவிசாவளை நகரசபையில் வெற்றி பெற்ற பாலச்சந்திரன் அப்பாதுரை, குருநாதர் மோசஸ் மற்றும் வத்தளை பிரதேச சபையில் வெற்றி பெற்ற கே.தர்மரட்ணம் ஆகிய தமிழ் பிரதிநிதிகள், ஜமமு தலைவர் மனோ கணேசனை சந்தித்து நன்றி தெரிவித்து ஆசிபெற்றப்போது மேற்கண்ட அறிவுரையை வழங்கிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, ஜனநாயக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் என்ற முறையில் இன்று வரையில் எமது கட்சிக்காகவும், எனது கொள்கைக்காகவும் நான் கொடுத்த விலைகள் கணக்கில் அடங்காததாகும். பெரும் சவால்களுக்கு மத்தியில் எமது கட்சியை நாங்கள் வளர்த்து எடுத்துள்ளோம். மேல்மாகாணத்திலே இன்னுமொரு அரசியல் கட்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காக நமது கட்சி ஸ்தாபிக்கபடவில்லை. கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் எமது கட்சி உதயமாவதற்கு முன்னாலேயே தமிழ் மக்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளாக பெரும்பான்மை கட்சிகளின் வாக்குவங்கிகளாக பயன்படுத்தப்பட்டு வந்தார்கள். பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு தமிழ் மக்களின் வாக்குகள் மீது இருக்கின்ற அக்கறை தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளிலும், பாதுகாப்பிலும் கிடையாது. (மேலும்) 23.03.11

_____________________________________________________________________________________________________________

கிழக்கில் பாடசாலைக்கு செல்லாத 3,215 பிள்ளைகள்

கிழக்கு மாகாணத்தில் பாடசாலை செல்லும் வயதிலுள்ள 3,215 பிள்ளைகள் பாடசாலைக்கு போவதில்லையென கிழக்கு மாகாண கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிலிருந்து தெரியவந்துள்ளது. யுத்தம் நடைபெற்ற காலத்தில் மூடப்பட்ட 37 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இன்னும் 29 பாடசாலைகள் திறக்கப்பட வேண்டியுள்ளன. யுத்தம் காரணமாக பாடசாலைக்கு போவதை நிறுத்தியிருந்த 20,996 பிள்ளைகளில் 17,751 பேர் மீண்டும் பாடசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பலகாலமாக பாடசாலையிலிருந்து விலகியிருந்த பிள்ளைகள் பெற்றோரினால் பாடசாலைக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். இது பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கும் நிகழ்ச்சித் திட்டமொன்றை தான் நடைமுறைப்படுத்துவதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமல்வீர திஸாநாயக்க கூறினார்

_____________________________________________________________________________________________________________

ஜப்பான் உணர்த்தும் பாடம்!

japan-erdbebenசரித்திரம் இதுவரை சந்திக்காத சோதனை ஜப்பானில் நிகழ்ந்திருக்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக இயற்கையின் சீற்றமும் அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் அணு உலைகளின் வெடிப்பும், மனித இனத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. கடலுக்கடியில் ஏற்பட்ட பூகம்பத்தின் அதிர்ச்சியை எதிர்கொள்ளத் தயாராவதற்குள், உயர்ந்தெழுந்த ஆழிப்பேரலை ஜப்பானின் வட கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கோர தாண்டவம் ஆடி அந்த தேசத்தையே நிலைகுலைய வைத்து விட்டிருக்கிறது. இத்தோடு விட்டேனா பார் என்று பூகம்பமும், ஆழிப்பேரலையும் அடங்குவதற்குள் கடற்கரை ஓரமாக அமைந்த அணு மின் நிலையங்களில் ஒன்றன் பின் ஒன்றாக அணு மின் உலைகள் வெடித்துச் சிதறத் தொடங்கின. அதன் தொடர் விளைவாக, ஜப்பானை மட்டுமல்ல, அந்த நாட்டைச் சுற்றியுள்ள கடல்கடந்த தேசங்களைக் கூட அந்த அணு மின் உலைகளிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு பாதிக்கக்கூடும் என்கிற செய்தி உலகையே பயத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அணு ஆயுதப் போரின் கோர விளைவுகளைச் சந்தித்த ஒரே நாடான ஜப்பான் இப்போது அணுசக்தியின் இன்னொரு கோர முகத்தையும் எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கியம். அணுமின் சக்தியை மின் தேவைகளுக்கு ஜப்பான் மிக அதிகமாக நம்பவேண்டிய நிலையில், பல அணு மின் நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால் ஜப்பான் மின்சாரம் இல்லாமல் தவிப்பது ஒருபுறம். (மேலும்) 23.03.11

_____________________________________________________________________________________________________________

AYELASAH  is an evening of music,

lease join us for a night of performances by artists in solidarity with the peoples of Batticaloa and the East and Northern-Central areas of Sri Lanka who were recently affected by severe floods that destroyed livelihoods and homes and displaced hundreds of thousands. AYELASAH is an evening of music, Spoken word Dance as well as a display  Auction of artwork, sculpture  Photography to raise funds for and celebrate the resiliency of the people of Batticaloa. The evening also includes an excerpt from Batticaloa’s renowned Dr. Mounaguru’s Ravenesan koothu as interpreted through modern and traditional dance. It is the project of a new generation of cultural workers looking to create a space for challenging and contemporary works by Sri Lankan and South Asian artists.
When: Sunday, April 3 · 6:00 pm - 10:30 pm    Where: Bathurst Centre for Culture, Media, Arts & Education, 918 Bathurst Street, Toronto, ON

Proceeds from ticket, art, food, and beverage sales will go to relief and reconstruction efforts led by the people of Batticaloa. And many more!

$10 - $25  sliding scale
(No one turned away for lack of funds)  Food and beverages will be sold.

Kids welcome.
To buy tickets in advance or to get more information about the event email   iddiappam@gmail.com
or call  647-296-4117.
* * * "Ayelasah" is a rhythmic element in the rowing chants of South Asian fishing peoples; part of a choral movement prefaced by the sounds 'eh-leh-loh,' ayelasah sets the pace for work whose communal nature necessitates cooperation and harmony of movement.

_____________________________________________________________________________________________________________

யாழில் சட்டவிரோத மாட்டிறைச்சியுடன் இருவர் கைது

யாழ்.நகரப்பகுதியில் 150 கிலோகிராம் மாட்டிறைச்சினை சட்டவிரோதமாகவும் அனுமதிப்பத்திரம் இன்றி தன்னகத்தே வைத்திருந்த இருவர் இன்று காலை யாழ். போக்குவரத்து பொலிஸாரிடம் வசமாக மாட்டிக்கொண்டனர். இவர்கள் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரும் மாட்டிறைச்சியுடன் கையும் களவுமாக பிடிபட்டதை ஒப்புக் கொண்டதை அடுத்து இவர்கள் இருவருக்கும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவ்விதமாக அனுமதி இன்றி மாடுகளை வெட்டுவதையே அல்லது இறைச்சி விற்பனை செய்தையோ அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் இருவரையும் நீதவான் எச்சரித்துள்ளார்.

_____________________________________________________________________________________________________________

பிள்ளைகள் வெளிநாட்டில்: தாய் தூக்கில்: நவாலியில் சம்பவம்

யாழ். நவாலி கிழக்கு பகுதியில் உள்ள பாழடைந்து வீட்டில் தூக்கில் தெங்கிய நிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் ஒன்றை மானிப்பாய் பொலிஸார் இன்று காலை 6 மணியளவில் மீட்டுள்ளனர். நவாலி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய மாரிமுத்து கணபதியம்மா என்பவருடைய பிள்ளைகள் வெளிநாடுகளில் இருப்பதாகவும் இவர் தனிமையில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாழடைந்த வீட்டில் இருந்து தூர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர்கள் கொடுத்த தவகலின் அடிப்படையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சடலத்தை யாழ். போதன வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இவரது மரணம் குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

_____________________________________________________________________________________________________________

லிபியா மீது மேற்கு நாடுகள் தொடர்ந்தும் மிலேச்சத்தனம்:  தாக்குதல்களை கண்டித்து இலங்கையில் போராட்டங்கள்

-  கொழும்பில் தொழிற்சங்கங்கள் தீர்மானம்

அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் ஒன்றிணைந்து லிபியா மீது மேற்கொள்ளும் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக அனைத்து மக்களும் குரல் எழுப்ப வேண்டுமென தொழிற்சங்கத் தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர். லிபியா மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டுமெனத் தெரிவித்த தொழிற் சங்க தலைவர்கள் ஏகாதிபத்தியவாதிகளுக்கெதிராகத் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர். லிபியா மீது அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகள் கூட்டாகத் தாக்குதல் நடத்துவதைக் கண்டிக்கும் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடொன்று நேற்றுக் கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள மேல் மாகாண ஆளுநரின் பணிமனையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவரும் மேல் மாகாண ஆளுநருமான அலவி மெளலானா, பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ஏ. எச். எம். அஸ்வர் உட்பட தொழிற்சங்கப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். (மேலும்) 22.03.11

_____________________________________________________________________________________________________________

ஏறாவூரில் திடிரென நிலத்தில் இருந்துவந்த தண்ணீர்

eravoorமட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் உள்ள புகையிரத நிலையத்துக்கு அருகில் நீர்க்குமிழிகள் தோன்றுவது தொடர்பில் யாரும் அச்சம்கொள்ள தேவையில்லையென மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நேற்று முதல் ஏறாவூர் புகையிரத நிலையம் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள நிலங்களில் நீர் வெளியேறிவருவது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரி ஏ.எம்.எம்.ஹசீரை தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சந்திரன் பூமியை நெருங்கிவந்தபோது வாயு மண்டலத்தில் ஏற்பட்ட அமுக்க நிலைமை காரணமாக நிலத்தின் கீழ் உள்ள நீர் மட்டத்தில் ஏற்பட்ட உயர்வு காரணமாகவே இந்த நிலையேற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஏறாவூர் புகையிரத நிலையம் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள நிலங்களில் நீர் வெளியேறிவருவதுடன் அப்பகுதியில் உள்ள கிணறுகளின் நீர் மட்டமும் உயர்ந்துவருகின்றது. எனினும் இந்த நிலைமை காரணமாக எதுவித இயற்கை அனர்த்தங்களும் ஏற்படாதெனவும் இது தொடர்பில் கொழும்பு நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஹசீர் தெரிவித்தார்.

_____________________________________________________________________________________________________________

தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி

vaiko23டந்த, 2006 சட்டசபை தேர்தல் முதல், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., தற்போது அதிலிருந்து விலகியுள்ளது. இரண்டு மாதத்துக்கு அரசியல் துறவறம் மேற்கொள்ளப்போவதாக வைகோ அறிவித்துள்ளார். 2001 சட்டசபை தேர்தலில் ஒரு சீட்டுக்காக உணர்ச்சிவசப்படாமல் இருந்திருந்தால், 15 முதல் 20 எம்.எல்.ஏ.,க்களை அப்போதே ம.தி.மு.க., பெற்றிருக்கும். கூட்டணியில் வெளியேறி, தனித்துப் போட்டியிட்டு, அதையும் இழந்தார் வைகோ. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தி.மு.க., மீது சீறிப் பாய்ந்த அவர், 2004 லோக்சபா தேர்தலில் அவர்களோடு இணைந்து, "அண்ணன் கலைஞர், தம்பி வைகோ' என, மாறி மாறி கண்ணீர் உகுத்ததை, அடிமட்டத் தொண்டர்கள் விரும்பவில்லை.அதேபோல, 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும், மூன்று சீட்களுக்காக தி.மு.க.,வை முறைத்துக்கொண்டு, அ.தி.மு.க., அணியில் ஐக்கியமானார். "பொடா' சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட வடுக்கள் மறைந்திராத நேரமது. முதல் நாள், "பாசிச ஜெயலலிதா' என முழங்கியதும், மறுநாள், "அன்புச் சகோதரி' என முழங்கியதும், தர்மசங்கடத்தை ஏற்படுத்தின.அதன் பிறகு, அம்மையாருக்கு முழு விசுவாசமாகத் தான் இருந்தார் வைகோ. அந்த விசுவாசம், எல்லை கடந்து சென்றது தான் அவருக்கே வினையாக அமைந்தது. 2006 தேர்தலில், ஆறு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதிலும், ஒரு எம்.எல்.ஏ., இறந்துவிட்டார். அதற்காக நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில், தொகுதியை அ.தி.மு.க., வுக்கு தாரை வார்த்துவிட்டார். அப்போதே கட்சிக்குள் முணுமுணுப்புகள் எழுந்தன.  (மேலும்) 22.03.11

_____________________________________________________________________________________________________________

லிபியா அதிபர் கடாஃபியின் மகன் மரணம்?

திரிபோலி, மார்ச் 21- லிபியா அதிபர் கடாஃபியின் மகன் காமிஸ் கடாஃபி மரணமடைந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. திரிபோலியில் உள்ள பாப் அல்-அஸிஸியா கட்டடத்தில், கடாஃபியின் மகனும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சில உறவினர்களும் தங்கியிருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், லிபியா விமானப்படை பைலட் ஒருவர் ஜெட் விமானம் ஒன்றை அந்த கட்டடத்தின் மீது திட்டமிட்டு மோதச் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், காமிஸ் கடாஃபி படுகாயமடைந்த நிலையில் திரிபோலியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அரபு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. கடாஃபி ஆதரவு படையினர் மீது அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்திவரும் நிலையில், லிபியா விமானப்படை பைலட் நடத்திய தாக்குதல் காரணமாக கடாஃபி மகன் உயிரிழந்திருப்பது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

_____________________________________________________________________________________________________________

முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் சாட்சியமளிக்க ஆர்வம் காட்டவில்லை: நல்லிணக்க ஆணைக்குழு

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சில முக்கிய அரசியல் பிரமுகர்கள் சாட்சியளிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை என ஆணைக்குவின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் சாட்சியங்களை பதிவுசெய்ய  நல்லிணக்க ஆணைக்குழு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். எனினும் இவர்கள் எவரும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளிப்பதற்காக உரிய பதில்களை இன்னும் வழங்கவில்லை என அவர் கூறினார். இவர்கள் சாட்சியமளிக்க தயார் என்றால், அவர்களுக்காக ஆணைக்குழு நேரம் ஒதுக்கும் என அவர் தெரிவித்தார். இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழு உறுப்பினர்கள் இறுதி அறிக்கை தயாரிப்பதற்காக, பொதுமக்களால் அளிக்கப்பட்ட சாட்சியங்களை மீளாய்வு செய்துகொண்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

_____________________________________________________________________________________________________________

புனர்வாழ்வு நிலையத்தில் இளைஞர் தற்கொலை

வவுனியா, நெளுக்குளம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கியிருந்த தங்கியிருந்த பல்லவராயன்கட்டையை சேர்ந்த ஆசீர்வாதம் நியூட்டன் எனும் இளைஞர், 38 அடி ஆழமான கிணற்றினுள் குதித்து தற்கொலை செய்துள்ளார். யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து வந்து ஒமந்தை நிலையத்தில் சரணடைந்த இவர் இதுவரை காலமும் புனர்வாழ்வு நிலையத்தில்; தங்கியிருந்தார். இன்று திங்கட்கிழமை அதிகாலை கிணற்றில் குதித்தினை இவரது சகாக்கள் அவதானித்திருந்தமை விசாரணையின் போது  தெரியவந்தது. இளைஞனின் மரணம் தொடர்பான விசாரணை இன்று மாலை திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் முன்னிலையில் நடைபெற்று சடலத்தை கிளிநொச்சியிலிருந்து வந்த தாயிடம் ஒப்படைக்குமாறு மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டார். மரண விசாரணை நடத்திய வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஐ.எம்.டபிள்யூ.ஆராய்ச்சி மார்பு எலும்புகள் உடைந்துள்ளது மூளை சேதமடைந்துள்ளது நீரில் மூழ்கியதினால் ஏற்பட்ட இறப்பு என அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இறந்தவரின் தாய் ஆசீர்வாதம் மரிய மாக்கிரெட் மற்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் சிலரும் விசாரணையின் போது சாட்சியமளித்துள்ளனர். கிணற்றில் வீழ்ந்ததினால் நீரில் மூழ்கி ஏற்பட்ட மரணம் என தீர்ப்பு வழங்கி சடலம் தாயாரிடம் ஒப்படைக்குமாறு திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் உத்தரவிட்டார்.

_____________________________________________________________________________________________________________

புலி உறுப்பினருக்கு போலிக் கடவுச் சீட்டு பெற்றுக் கொடுத்த இருவர் கைது

பெரம்பலூர்: விடுதலைப் புலிக்கு கடவுச்சீட்டு எடுத்துக் கொடுத்ததாக, இருவரை பொலிஸார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்ட பொலிஸ் அலுவலகத்துக்கு, இரண்டு நாட்களுக்கு முன் மும்பை பொலிஸார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மும்பையில் போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற பெரம்பலூர், அழகிரிபாளையத்தை சேர்ந்த, தங்கவேல் மகன் செல்வமணி என்பவரை கைது செய்துள்ளதாக தெரிவித்து, அவரது முகவரி மற்றும் பெயர் ஆகியவற்றை விசாரணை செய்யுமாறு தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை செய்யுமாறு குன்னம் பொலிஸாருக்கு பெரம்பலூர் பொலிஸ் அதிகாரி ரூபேஷ் குமார் மீனா உத்தரவிட்டார். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அழகிரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் செல்வமணி என்ற நபரே இல்லை என்று தெரியவந்தது. மேலும், இலங்கையை சேர்ந்த குலசிங்கம் என்பவர், பெரம்பலூர், வேப்பூர் கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகன் ராஜேந்திரன் (47வயது) என்பவரிடம் தனக்கு கடவுச்சீட்டு எடுத்துத் தருமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜேந்திரன், அழகிரிபாளையத்தை சேர்ந்த தங்கவேல் மகன் செல்வமணி என்ற பெயரில் போலியான ஆவணங்கள் தயாரித்து, திருச்சி கடவுச்சீட்டு அலுவலக தரகர் ராஜ் என்கிற தன்ராஜ் தன்ராஜ் என்பவர் மூலம் குலசிங்கத்துக்கு கடவுச்சீட்டு வாங்கி கொடுத்துள்ளார். (மேலும்) 22.03.11

_____________________________________________________________________________________________________________

எலிகளும் வல்லரசுகளும்

எம். மணிகண்டன்

மேற்காசியாவும் ஆப்பிக்காவின் மூலையிலுள்ள எகிப்தும் சேர்ந்ததுதான் மத்திய கிழக்கு. அதனுடன் வடக்கு சஹாரா, மெரிடானியா வரை வடக்கு ஆப்பிரிக்க நாடுகளையும், கிழக்கு ஆப்பிரிக்காவில் சோமாலியாவையும் சேர்த்து அகண்ட மத்திய கிழக்கு என்று சில அமைப்புகள் குறிப்பிடத் தொடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது.  ஜி-8 நாடுகளின் வரையறைப்படி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகியவைகூட மத்திய கிழக்குக் கணக்கில்தான் வருகின்றன. இது மேலும் குழப்பம். இன்னும் சிலர் மத்திய கிழக்குடன் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளை இணைத்து மேனா (மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா) என்று பெயரிடுகிறார்கள். மற்றவற்றை ஒப்பிடுகையில் மேனா என்பது கொஞ்சம் தெளிவு.  இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில்தான் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி நடந்து வருகிறது. பெரும்பாலானவை மக்களாட்சி கோரும் போராட்டங்கள்தான். நீண்டகால ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் என்பதைத் தவிர ஒவ்வொரு நாட்டின் போராட்டத்திலும் ஒரு தனித்துவம் இருக்கிறது. (மேலும்) 22.03.11

_____________________________________________________________________________________________________________

சோனியாகாந்தி அம்மையாருக்கு எதிராக லண்டனில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம்.‏

- தமிழீழ மக்கள் விடுதலை கழகம்

பொதுநலவாய நாடுகளின் 14வது கூட்ட தொடரில் பேரூரை நிகழ்த்துவதற்காக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான மான்புமிகு சோனியா காந்தி அம்மையார் அவர்கள் பிரித்தானிய தேசத்தின் தலைநகரமான லண்டன் நகரிற்கு வந்திருந்தார். ஈழத் தமிழினத்தின் விரோதமான சக்திகளின் தூண்டுதலில் மார்ச் மாதம் 17ம் திகதி சில விஷமிகள் சோனியா காந்தி அம்மையாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தியிருந்தனர். இதனை தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சர்வதேச செயலகம் வன்மையாக கண்டிக்கிறது. பல சகாப்தங்களாக அரசியல் அங்கீகாரம் கோரி போரடிவரும் ஈழத் தமிழர்களுக்கு ஒரே ஒரு தடவை மாத்திரமே சட்ட திருத்தத்தின் மூலம் ஒரு தீர்வு பொதி கைச்சாத்திடப்பட்டு இருந்தது. அந்த 13வது சட்ட திருத்தத்தினை ஏற்படுத்தியவர் சோனியா காந்தி அம்மையார் அவர்களின் கணவரான அமரர் ராஜீவ் காந்தி அவர்களே என்பதினை ஈழத் தமிழர்களும் தமிழீழ மக்கள் விடுதலை கழகமும் மறக்கவில்லை. ஈழத் தமிழினம் சோனியா காந்தி அம்மையார் அவர்களின் குடும்பத்திற்கு விசுவாசமாகவே உள்ளது. அத்துடன் காங்கிரஸ் கட்சியே தம்மை காப்பற்றக்கூடிய வல்லமை உடைய கட்சி என்பதினையும் அவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். (மேலும்) 22.03.11

_____________________________________________________________________________________________________________

லிபியா விடயத்தில் மேற்குலக நாடுகள் இரட்டை வேடம்: ஜேவிபி கண்டிப்பு

லிபியா விடயத்தில் மேற்குலக நாடுகள் கடைபிடிக்கும் இரட்டை வேடத்தை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக கண்டித்துள்ளது. ஜனநாயகம் பற்றிக் கதைக்கும் மேற்குலக நாடுகள் லிபியாவிற்கு எதிராக தாக்குதல் மேற்கொள்கின்றமை ஏற்க முடியாத விடயமென மக்கள் விடுதலை முன்னணி அறிக்கை ஒன்றை வெளியிட்டு கூறியுள்ளது. இதேவேளை, லிபியா - திரிபோலி நகரத்தில் நடத்தப்பட்ட எரிகணைத் தாக்குதல் ஒன்றில் அந்நாட்டுத் தலைவர் கேர்ணல் கடாபியின் கட்டடம் இடிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்தக் கட்டடத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. லிபிய தலைவர் கடாபியின் படைகளுக்கு எதிராக அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் மேற்கொண்டு வருவதுடன் அரபு நாடான கட்டாரும் லிபியாவிற்கு எதிரான தாக்குதலில் பங்குகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

_____________________________________________________________________________________________________________

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் இந்திய - இலங்கை பக்தர்கள் பிரார்த்தனை

kachchadeevuராமேஸ்வரம் : கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய விழா, இந்திய - இலங்கை பக்தர்களின் கூட்டு பிரார்த்தனையுடன் சிறப்பாக முடிந்தது. தமிழகத்திலிருந்து சென்றவர்கள் அனைவரும் நேற்று மாலை, ராமேஸ்வரம் திரும்பினர். இலங்கை கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவை, கடந்த 16ம் தேதி நெடுந்தீவு பாதிரியார் அமல்ராஜ் கொடியேற்றி, துவக்கி வைத்தார். இதில், பங்கேற்க, தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள், ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் படகில் சென்றனர். நடுக்கடலில் இந்திய - இலங்கை கடற்படை அதிகாரிகளின் சோதனைக்குப்பின், கச்சத்தீவில் அனுமதிக்கப்பட்டனர். இலங்கையிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். தீவின் அடர்ந்த காடு, கடற்கரையில் கூடாரம் அமைத்தும், வெட்டவெளியில் தங்கியும் பக்தர்கள், நேற்று காலை ஆறு மணிக்கு நடந்த சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டனர். அப்போது, இந்திய - இலங்கை ஒற்றுமை, உலக அமைதி, சுனாமியில் பாதித்த ஜப்பான் நாட்டிற்காக மெழுகுவத்தி ஏற்றி, கூட்டு பிரார்த்தனை செய்தனர். ஒன்பது மணிக்கு நடந்த அந்தோணியார் தேர்பவனியை தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்ட பக்தர்கள், மாலையில் ராமேஸ்வரம் வந்தனர். (மேலும்) 21.03.11

_____________________________________________________________________________________________________________

லிபியா மீதான மேற்குலக படையெடுப்புக்கு சீனா, ரஷ்யா கவலை

சனிக்கிழமை தொடக்கம் லிபியா மீது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் விமானங்கள் நடத்தி வரும் தாக்குதலுக்கு சீனா தனது கவலையை வெளியிட்டுள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம் இன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் லிபியாவில் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களை தொடர்ந்து அவதானித்துவருகிறோம். அந்நாட்டு சுதந்திரம், மற்றும் இறையாண்மையை நாங்கள் மதிக்கிறோம். அந்நாட்டின் மீது அமெரிக்க, பிரான்ஸ் விமானங்கள் தாக்குதல் நடத்தியது எமக்கு பெரும் வருத்தமளிப்பதாக உள்ளது என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடையே ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் லிபியா மீதான தாக்குதலை, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதேவேளை அமெரிக்க - பிரான்ஸ் கூட்டுப்படை தற்போது கடாபியின் தரைப்படை மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெங்காஷி மற்றும் அஜ்டபியா நகரங்களில் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில்,கடாபி இராணுவத்தினர் 14 பேர் பலியாகியிருப்பதாகவும் பல ஆயுத வாகனங்கள் வெடித்து சிதறியுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன  (மேலும்) 21.03.11

_____________________________________________________________________________________________________________

ஏன் சர்வதேச மன்னிப்புச் சபை ஸ்ரீலங்கா மீது விசாரணை செய்ய ஐக்கிய நாடுகள் சபையின் குழுவை அமைப்பதற்கு ஆதரவளிக்கிறது.

 ஆக்கம்: யோலன்டா பொஸரர் – சர்வதேச மன்னிப்புச் சபை

yolandaவைத்திய கலாநிதி.மனோகரனைப் போல் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நீதி கிடைப்பதற்காக ஸ்ரீலங்காவில் நீண்டநாட்களாகக் காத்திருக்க வேண்டியுள்ளது. பொய்யான வாக்குறுதிகளைத் தரும் ஆணைக்குழுக்களை இனிமேலும் நம்ப அவர்கள் தயாராக இல்லை. ஸ்ரீலங்காவுக்குள் பொறுப்புக் கூறவைக்கும் நீதியான நடைமுறைகளுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபை சில பொறுப்புகளை எடுக்கும் என அவாகள் எதிர்பார்க்கிறார்கள். உள்நாட்டு மற்றும் சர்வதேச விசாரணைகள் பற்றிய விவாதங்களில் நடந்து கொண்டிருக்கும் ஒழுங்கீனங்களைப் பார்த்து நாம் கண்களை மூடிக்கொள்ளக் கூடாது. புதிய அறிக்கைகளின்படி ஸ்ரீலங்காவின் வடபகுதியில் நிகழும் கடத்தல்கள், பலவந்தமாகக் காணாமற் போக்கடித்தல், மற்றும் கொலைகள் என்பன அந்தப் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பில் பலமான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மக்களின் ஆற்றல்கள் குணப்படுத்தப்பட்டு புனரமைக்கப் படவேண்டும். குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப் படுபவர்களை காவல் துறையினர் கொலை செய்வதும் மற்றப் பகுதிகளில் அதிகரித்துக் கொண்டே போகிறது. யுத்தத்தின் கடைசி மாதங்களில் நடைபெற்றவைகளுக்கு மட்டுமாக மட்டுப் படுத்தப்படாமல் சகலதுக்கும் நீதியான பொறுப்புக் கூறவைக்கும் ஒரு நடைமுறையை மன்னிப்புச் சபை கோருகிறது. நாங்கள் நம்புவது ஸ்ரீலங்கா மக்கள் அவர்களது சொந்த குற்றவியல் நீதிமுறை வருடக்கணக்காக மிகவும் தரம்தாழ்ந்து நிறைவேற்றுத் தலையீடுகளால் குற்றம் செய்தவருக்கு ஒரு கவசமாக பயன்பட்டு வரும் இந்தக் கட்டத்தில் அருகதைப்படுவது, மனித உரிமை முறைகேடுகளை கையாளக்கூடிய சரியான ஒரு பொறிமுறையை என்று. (மேலும்) 21.03.11

_____________________________________________________________________________________________________________

கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!

– துர்வாசர்

கக்கனையும், பக்தவத்சலத்தையும் மாதிரி அரசியல்வாதிகளைக் கொண்டு வா என்றால் எங்கே போவது? இருக்கிற அரசியல்வாதிகள் இந்த தேர்வடச் செயின், தோசைக் கல் மோதிர அரசியல்வாதிகள்தான். அவர்களை மாதிரி இவர்களும் ஜெயிலுக்கெல்லாம் போனவர்கள்தான். இவர்களைத் தேர்ந்தெடுத்து சட்ட சபைக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதானே? இருக்கிறதைக் கொண்டுதானே முழம் போட முடியும்? இல்லாத தகுதிகளுக்கு எங்கே போவது? ஒரு வேட்பாளர் இரண்டே இரண்டு கொலைகளைத்தான் செய்திருக்கிறார். இன்னொருவர் ஆள் கடத்தலில் பழம் தின்று கொட்டை போட்டவர், வேறொருத்தர் பணம் பறிப்பதிலும், கட்டப் பஞ்சாயத்திலும் பேர் வாங்கியவர். இந்தத் தகுதிகள் எல்லாம் போதாதா சட்டசபைக்குப் போக? இதை விட வேறென்ன தகுதிகள் வேண்டிக் கிடக்கிறதாம்? புனிதமானவன்தான் உள்ளே நுழையலாம் என்பதற்கு சட்டசபை என்ன கோவிலா? கோவில் கர்ப்பக் கிரஹமா? இந்தக் காலத்தில் கோவில் கர்ப்ப கிரஹத்திலேயே சகல லீலைகளும், ஆபாசங்களும் நடக்கின்றன. காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் கர்ப்பகிரஹத்தையே தனது காம சேஷ்டைகளை அரங்கேற்றும் இடமாக்கிக் கொள்ளவில்லையா? காலம் கிடக்கிற கிடப்பில் மகாத்மா காந்தியா தேர்தலில் வந்து போட்டியிடுவார்? அலைகிறான்கள் அசட்டு அம்மாஞ்சிகள். (மேலும்) 21.03.11

_____________________________________________________________________________________________________________

தேர்தலில் போட்டியிடவில்லை: மதிமுக அறிவிப்பு

vaiko29ென்னை, மார்ச்.20: தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றுவதால் 2011 தமிழகம், புதுவை சட்டப் பேரவை பொதுத் தேர்ததில் போட்டியிடுவதில்லை என மதிமுக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. 2006 ஆம் ஆண்டு முதல், அதிமுக கூட்டணியில்  தொடர்ந்து அங்கம் வகித்து வந்த மதிமுக, தற்போது நடைபெற இருக்கின்ற தமிழகம், புதுவை சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில், தொகுதிப் பங்கீட்டில் எழுந்து உள்ள நிலைமை குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய நிலைமை உருவாகி இருக்கின்றது. 2006 ஆம் ஆண்டு, சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, அ.தி.மு.க. அவைத்தலைவர் கா.காளிமுத்து பொதுக்கூட்டத்தின் வாயிலாகவே, அ. தி.மு.க.  கூட்டணியில் வந்து சேருமாறு, ம.தி.மு.க.வுக்குப்  பகிரங்க அழைப்பு விடுத்தார். அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் பேசும்போது,  ‘கூட்டணியில் நீங்கள் எதிர்பார்க்கின்ற ஒரு கட்சி இடம் பெறும்’ என்று, அதன் பொதுச் செயலாளர் அறிவிக்கவும் செய்தார். (மேலும்) 21.03.11

_____________________________________________________________________________________________________________

அபிவிருத்தியின் பக்கமே தமிழ் மக்கள் திசை திரும்பியுள்ளமை தேர்தலில் தெளிவு

பியசேன எம்.பி

நூறுவீதம் தமிழ் மக்களை கொண்ட ஆலையடி வேம்பு பிரதேச சபையில் தமிழர் கட்சி தோல்வியடைந்துள்ளது என்றே நான் கூறவேண்டும். இம்முறை 50% மக்களை அவர்கள் இழந்துள்ளனர்.

இதுவரை காலமும் வெறும் வீரப் பேச்சுக்களுள் முடங்கி ஏமாற்றப்பட்டு வந்த தமிழினம் இன்று அபிவிருத்தியின்பால் திசைதிரும்பத் தொடங்கியுள்ளதை இன்றைய தேர்தல் முடிவு எடுத்துக்காட்டியுள்ளது. இது மக்களின் நியாயமான மாற்றமாகும். இவ்வாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன உள்ளூராட்சித்தேர்தல் முடிவுகள் குறித்துக் கூறுகையில் தெரிவித்தார். அவர் ஆதரவளிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினருக்கு தமது ஆலையடி வேம்புப் பிரதேசத்தில் முதற்தடவையாக இரு ஆசனங்களும், நாவிதன் வெளிப் பிரதேசத்தில் ஒரு ஆசனமும் கிடைக்கப்பெற்றுள்ளமை குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், நூறுவீதம் தமிழ் மக்களை கொண்ட ஆலையடி வேம்பு பிரதேச சபையில் தமிழர் கட்சி தோல்வியடைந்துள்ளது என்றே நான் கூறவேண்டும். இம்முறை 50% மக்களை அவர்கள் இழந்துள்ளனர். (மேலும்) 21.03.11

_____________________________________________________________________________________________________________

50 வருடங்களின் பின் முஸ்லிம் பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரானார்

இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில், 50 வருடங்களுக்கு பின்னர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம் பெண்மனி ஒருவர் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி நகர சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட சல்மா ஹம்ஸாவே இந்த பெருமையை பெற்றுள்ளார். இவர் காத்தான்குடி நகர சபை தேர்தலில் 1,235 வாக்குகளை பெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் முதலிடத்தை பெற்றுக்கொண்டார். சுசில் பிரேமஜயந்த கல்வி அமைச்சராக செயற்பட்ட காலத்தில் கல்வியமைச்சின் கிழக்கு மாகாண இணைப்பாளராக செயற்பட்ட இவர், பெண்களின் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமாவார். இவர் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன், 1950ஆம் கொழும்பு மாநகர சபைக்கு ஆயிஷா ரவூப் உறுப்பினராகவும் பிரதி மேயராகவும் தெரிவுசெய்யப்பட்டார். (Tm)

_____________________________________________________________________________________________________________

எல்.ரீ.ரீ.ஈ உடனான யுத்தத்தை நிறுத்தி பேச்சுக்களைத் தொடரும்படி சர்வதேசம் கொடுத்த அழுத்தத்திலிருந்து ஸ்ரீலங்காவை இந்தியா பாதுகாத்தது.

ஆக்கம்: நிருபமா சுப்ரமணியன்

01_srilanka_lராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி எல்.ரீ.ரீ.ஈ உடன் பேச்சுக்களை நடத்தும்படி, 2009ல் நடந்த யுத்ததத்தின் கடைசி வாரங்களிலும் நாட்களிலும், ஸ்ரீலங்காமீது பிரயோகிக்கப்பட்ட சர்வதேச அழுத்தங்களிலிருந்து அதனைப் பாதுகாப்பதில் இந்தியா முக்கியமான பாத்திரமொன்றை வகித்ததாக, விக்கிலிக்ஸ் வழியாக ‘த ஹிந்து’ வுக்கு கிடைத்துள்ள அமெரிக்கத் தூதுரகத்தின் இரகசியமான தந்திச்செய்திகள் தெரிவிக்கின்றன. தந்திச்செய்திகள் வெளிப்படுத்துவது  என்னவெனில் யுத்த முனைகளில் சேதப் படக்கூடிய நிலையில் அகப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்களின் நிலையைப்பற்றி  தனது கவலையை இந்தியா பலமுறை ஸ்ரீலங்காவுக்கு அறிவித்ததே தவிர, எல்.ரீ.ரீ.ஈ க்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை எதிர்க்கவில்லை. அவை மேலும் தெரிவிப்புது, போர் முடிவடைந்ததும் ஸ்ரீலங்காத் தமிழர்களுக்கு சகலதையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வொன்றை வழங்கும்படி ஸ்ரீலங்கா ஜனாதிபதியைச் சம்மதிக்க வைக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என இந்தியா நம்பிக்கை வைத்திருந்த போதிலும் ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் மோதலின் பின்னான நோக்கங்களையிட்டு இந்தியா கவலை கொண்டிருந்தது. (மேலும்) 20.03.11

_____________________________________________________________________________________________________________

வல்லூறுகளிற்கு இரைபோடும் வக்கற்ற அரபுத் தலைமைகள்

எஸ்.எம்.எம்.பஷீர் 

“ மூலோபாயத்தின் மையத்திட்டம் இஸ்ரேல பிராந்திய மேலாதிக்க சக்தியாக நிலைபெற மத்திய கிழக்கின் வரைபடத்தினை மீள் வரைவதும் அராபிய தேசங்களை உடைவுறச் செய்வதுமாகும் “ ( உலக சியோனிஸ அமைப்பின் வெளியீடான கேவிநிம் (Kivunim ) எனும் இதழில் 1982 ல் ஓடேட்  யிநோன் (Oded Yinon) எனும் யூதரால் சியோனிஷ்டுகளின் மத்திய கிழக்குக்கான திட்டம்  என்ற தலைப்பில் விவரிக்கப்பட்ட கொள்கை திட்டத்திலிருந்து ).பான் ஆம் (Pan –Am Flight 103) விமானம் ஸ்காட்லாந்தின் லோச்கேர்பீ மீது குண்டு வெடிப்பில் வீழ்ந்தாலும் (21/12/1988) லிபியாமீது புலனாய்வு தகவல்கள் குற்றம் சாட்டிய போது  கடாபி அதனை மறுத்ததுடன் அதில் சந்தக நபர்கள் இருவரையும் விசாரணைக்காக கையளிக்கவும் மறுத்தார். எனினும். அமெரிக்க ஏகாதிபத்தியம்  அதன் ஐரோப்பிய கூட்டு நாடுகளுடன் பல்வேறு பொருளாதார அழுத்தங்களை லிபியா மீது பிரயோகித்தும் கடாபி நீண்ட காலம் தனது மறுப்பிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் உறுதியாகவிருந்தார். ஆனால் உலக வரலாற்றின் அரசியல் ஆதிக்க போக்கினை ஆயுத போராட்டங்களை மனித உரிமைகள் பற்றிய பரிமாணங்கள் என்று பல்வேறு சர்வதேச அரசியல் தளங்களிலும் செப்டம்பர்  2001 அமெரிக்கா மீதான தாக்குதல்கள் பின்னர் ஐரோப்பாவில் தொடர்ந்த  அடுத்தடுத்த தாக்குதல்கள் ஏற்படுத்தின. லிபியா அமெரிக்காவும் அதன் நேச அணிகளும் சதாமிற்க் கெதிரான இராக்கின் மீது படையெடுத்து சதாமை பழி தீர்க்க முனைந்ததை  கண்டு  கடாபி கலக்கமடைந்தார். (மேலும்) 20.03.11

_____________________________________________________________________________________________________________

பிரபாகரனை பாதுகாக்க மேற்கத்தேய நாடுகள் முயன்றன?! : விக்கிலீக்ஸ் தகவல்

வி.புலிகளின் தலைவர் பிரபாகரன் மறைந்திருந்த இடத்தை பாதுகாக்கவும், இலங்கை இராணுவம் சுற்றி வளைக்காமல் தடுப்பதற்காகவும் மேற்கத்தேய நாடுகள் முயன்றதாக, விக்கிலீக்ஸ் தகவல் நேற்று வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரபாகரன் மறைந்திருந்த பகுதி நோக்கி கடும் ஷெல் வீச்சுனை மேற்கொண்டு, அவரை உயிருடன் கைது செய்ய இலங்கை இராணுவம் முயன்ற போது, இரு தரப்புக்களுக்கும் இடையில் பகைமை தவிர்ப்பு முயற்சி ஒன்றை சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியினர் முன்னெடுத்திருந்ததாக அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பதிகாரி பீட்டர் பார்லனின் விடுத்திருந்த தகவல் குறிப்பின் மூலம் தெரியவருவதாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. எனினும் சீனா வி.புலிகள் அமைப்பு பாதுகாக்கப்படுவதை விரும்பியிருக்கவில்லை என்பதால் இது சாத்தியமல்லாமல் போனது. என கூறியுள்ள விக்கிலீஸ் இதற்கிடையில், தான் நினைத்ததை விட சிங்கள இராணுவத்தினர் வெறித்தனமாக தாக்குதல் நடத்துவதாக, இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் கொழும்பிலிருந்த அமெரிக்க அதிகாரிகளிடன் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

_____________________________________________________________________________________________________________

மன்னிப்புச் சபையால் இலங்கைக்கு பலவீனம்

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் சர்வதேச மன்னிப்புச் சபையின் குற்றச்சாட்டுகளால் பலவீனப்படுத்தப்பட்டுவிடும் என அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். இவ்வாறு இலங்கை மீது குற்றச்சாட்டுகளை முன் வைப்பதை தவிர்த்து, இலங்கை விடய்ஙகள் குறித்து கலந்துரையாடுமாறு சர்வதேச மன்னிப்புச் சபையிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை பிரதிநிதி ஊடாக அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் போதுமான முன்வந்துள்ளது. அதற்கான சர்வதேச ஆதரவை மக்கள் எதிர்பார்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

_____________________________________________________________________________________________________________

3 பிரதிநிதித்துவம் கிடைத்தமை அமோக வெற்றி

pillaiyan201010நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 3 பிரதிநிதித்துங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச சபையில் ஒரு பிரதிநிதியும் அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி மற்றும் ஆலயடிவேம்பு பிரதேச சபைகளுக்கு தலா ஒருவருமாக மொத்தமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போட்டியிட்ட அனைத்துச் சபைகளிலும் ஒவ்வொரு பிரதிநிகளைப் பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி பிரதேச சபை) க்கான தேர்தலிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பை விட அதிகப் படியான வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் த.ம.வி.புலிகள் கட்சி வெற்றி பெற்று விட்டது என்றே கூறவேண்டும்.  அம்பாரை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேச சபைகள் முற்றுமுழுதான தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோட்டைகள்.அவ்வாறான கோட்டைகளுக்குள் நுழைந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 3 பிரதிநிதிகளைப் பெற்றது எங்களது வெற்றியின் படிக்கல்லாகும். தமிழ் மக்கள் மத்தியில் மூன்று வருடங்களாக அக் கட்சி சேவையாற்றியபோதும் தமிழ் தேசியக்கூட்டைப்பின் கோட்டை எனக் கூறப்படுகின்ற பிரதேசங்களிலே தனது உறுப்பினர்களைப் பெற்றிருப்பது மக்கள் த.ம.வி.புலிகள் கட்சிக்கு கொடுத்துவருகின்ற ஆதரவின் ஆரம்பமாகும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

_____________________________________________________________________________________________________________

அரசியல் கைதிகளின் விபரங்களை வெளியிடுமாறு த.தே.கூ. மீண்டும் வலியுறுத்தல்

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை வெளியிடுமாறு அரசாங்கத்திடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இக்கோரிக்கை மீண்டும் விடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மாவை சேனாதிராஜா தலைமையில் சுரேஷ் பிரேமசந்திரன், எம்.ஏ.சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி கனக ஈஸ்வரன், ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இப்பேச்சுவார்த்தையில் பங்குபற்றினர். அரசாங்கத் தரப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நீர்ப்பாசண அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சஜின் வாஸ் குணவர்தன எம்.பி ஆகியோர் கலந்துகொண்டனர். சுமார் 850 தமிழ் அரசியல் கைதிகள் பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ளனர் என சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். அத்துடன் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் பெயர்களை அரசாங்கம் வெளியிடத் தவறியமை குறித்து தமது கட்சி கவலை தெரிவித்ததாகவும் அவர் கூறினார். 'இக்கைதிகளின் பெயர்களை வெளியிடுவதாக கடந்த தடவை நாம் சந்தித்தபோது அரசாங்கம் உறுதியளித்திருந்தது. ஆனால் அது நடைபெறவில்லை. அவ்விவகாரத்தை நாம் மீண்டும் கிளப்பினோம். இதற்கான பதிலை விரைவில் சமர்ப்பிப்பதாக அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது' என அவர் கூறினார். உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்கி பொதுமக்களை அவர்களின் சொந்தக் காணிகளில் குடியேற அனுமதிக்குமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. இரு தரப்பினரும் எதிர்வரும் ஏப்ரல் 7 ஆம் திகதி தமிழ் மக்களின் உடனடி பிரச்சினைகள் குறித்து மீண்டும் பேச்சு நடத்தவுள்ளனர். அதேவேளை அரசியல் தீர்வு குறித்து ஏப்ரல் 23 ஆம் திகதி பேசுவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

_____________________________________________________________________________________________________________

இராணுவ வாகனம் மீது பிரெஞ்சு விமானம் தாக்குதல்

லிபிய வான்பரப்பில் பறந்து இராணுவ வாகனமொன்றின்மீது பிரெஞ்சு போர் விமானமொன்று இன்று சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதாக பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தியரி புர்கார்ட் தெரிவித்தார்.ஜி.எம்.ரி.நேரப்படி 16.45 மணிக்கு (இலங்கை நேரப்படி இரவு 10.15 மணி) இத்தாக்குதல் இடம்பெற்றதாக அவர்கூறினார். லிபியாவில் ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானத்திற்கிணங்க விமானப் பறப்பு தடை வலயத்தை அமுல்படுத்தும் சர்வதேச நாடுகளின் நடவடிக்கையில் முதலாவதாக இடம்பெற்ற தாக்குதல் இதுவாகும். இராணுவ வாகனமொன்றே இலக்கு வைக்கப்பட்டதாக புர்கார்ட் கூறினார். எனினும் எந்த வகையான வாகனம் என அவர் கூறவில்லை. விமானப் பறப்பு தடை வலயத்தை அமுல்படுத்துவதில் லிபிய வான் பரப்பில் சுமார் 20 யுத்த விமானங்கள் பறந்துவருவதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது. லிபியாவின் வான் பறப்பில் பிரான்ஸ் நாட்டின் விமானப்படை ஜெட் விமானங்கள் பறந்து வருகின்றன. லிபியாவில் ஐநா. பாதுகாப்புச்சபை தீர்மானத்திற்கிணங்க விமானப் பறப்புத் தடை வலயம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் அதை பிரெஞ்சு விமானங்கள் கண்காணித்து வருவதாக பிரெஞ்சு ஜனாதிபதி நிகலஸ் சார்கோஸி தெரிவித்துள்ளார். (மேலும்) 20.03.11

_____________________________________________________________________________________________________________

தமிழ் அகதியை விடுவிக்கக் கோரி சைப்பிரஸில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்

சைப்பிரஸ் நாட்டில் 15 மாத காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் ஒருவரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சுமார் 40 இலங்கையர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சண்முகன் உதஜேந்திரன் எனும் இந்பரை உடனடியாக விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், அவர்  சுமார் 15 மாதகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். சண்முகனின் குடும்பத்தினர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர் அவரை விடுதலை செய்யுமாறு கடந்த ஜனவரி 18 ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் நாட்டின் அதி உயர் நீதிமன்றின் உத்தரவை அதிகாரிகள் நியாயப்படுத்த முடியாத வகையில் மீறியுள்ளதாக சட்டத்தரணி மிசாலிஸ் பராஸ்கேவாஸ் கூறியுள்ளார்.

_____________________________________________________________________________________________________________

ஸ்ரீலங்கா நிழலுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில் நிலைமாறிக் கொண்டிருக்கிறது  – தயான் ஜயதிலகா

ஆக்கம்: றோஸ்லின் கைம்ஸ்

dayanஸ்ரீலங்காவில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தின் பின்னான மீள் கட்டமைப்புப் பணிகள் எதிர்பார்த்ததை விடத் தாமதமாகவே நடைபெறுகின்றன, என்று  பிரான்சுக்கான ஸ்ரீலங்காவின் புதிய தூதுவர் தயான் ஜயதிலகா பிரான்ஸ் சர்வதேச வானொலியிடம் தெரிவித்தார். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளை (எல்.ரீ.ரீ.ஈ)த் தோற்கடித்ததிலிருந்து  நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக தயான் ஜயதிலகா வலியுறுத்தினார். “30 வருடங்களாக நடைபெற்று வந்த ஒரு யுத்தம், பொருளாதார வழிகளில்,மனோதத்துவ வழிகளில் மற்றும் சமூக ரீதியில் பயங்கர நாசத்தை உண்டாக்கியிருக்கிறது. மிக மிக அதிகமான அளவில் அதைக் குணமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் படவேண்டியுள்ளன.” மேலும்”குணமாக்கும் முயற்சிகளில்” உள்ள பிரதான பிரச்சனைகள் ஏற்படுத்தியுள்ள விளைவுகள் தரமற்று ஒட்டுப் போட்டவைகளைப் போலவே உள்ளன என்றார் அவர். “மக்கள் மீள்குடியேற்றத்துக்காகச் செல்லவேண்டிய பகுதிகள் கூட ஒழுங்கான மீள்கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார முன்னேற்ற முயற்சிகள் அற்றவையாகவே காணப்படுகின்றன.” அத்தோடு அவர் வலியுறுத்தியது நிகழ்வுகள் முன்னேற்றமடைந்து வருவதாக ”அது பாதிப்படைந்த நிலையிலோ அல்லது முற்றாகக் கைவிடப்பட்ட சூழ்நிலையிலோ இல்லை. அது எதிர்பார்த்ததை விடத் தாமதமாகவே நடைபெறுகின்றது ஆனால் சமூக மற்றும் பொருளாதார  முயற்சிகளைப் பொறுத்த மட்டில் எல்லா விதத்திலும் பிரகாசமான அறிகுறிகள் தென்படுகின்றன” என அவர் தெரிவித்தார். (மேலும்) 19.03.11

_____________________________________________________________________________________________________________

லிபியாவில் கடாஃபி போர் நிறுத்தம்

நியூயார்க், மார்ச் 18: லிபிய வான்வெளியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கும் தீர்மானம் வெள்ளிக்கிழமையன்று ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களில் லிபியா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தி வந்த அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக அறிவித்தது.  லிபிய மக்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ஐநா தீர்மானம் அதிகாரம் அளித்தது.  இத்தீர்மானம் உடனடியாக அமலாக்கப்படலாம் என இது குறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சார்கோசி கூறினார்.  இதைத் தொடர்ந்து லிபிய வெளியுறவுத் துறை அமைச்சர் மூசா கூசா போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார். நாட்டை அமைதி வழிக்கு இது எடுத்துச் செல்லும் என அவர் தெரிவித்தார்.  லிபிய வான்வெளியில் விமானங்கள் பறக்கத் தடை செய்து ஐநா தீர்மானம்: முன்னதாக, லிபிய வான்வெளியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கும் தீர்மானம் வெள்ளிக்கிழமையன்று ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. ஐநாவின் பாதுகாப்புக் குழு இந்த தீர்மானத்தை அங்கீகரித்தது. ஆனால் 15 பேர் கொண்ட இந்தக் குழுவில் 10 நாடுகள் மட்டுமே இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, ரஷியா உள்பட ஐந்து நாடுகள் இந்தத் தீர்மானத்தின்போது வாக்களிக்கவில்லை. சீனா, ஜெர்மனி, பிரேசில் ஆகியவை தீர்மானத்தை ஆதரிக்காத மற்ற நாடுகள். இதில் ரஷியாவும், சீனாவும் ஐநா பாதுகாப்புக் குழுவில் முடிவுகளை நிராகரிக்கும் சர்வ அதிகாரம் (வீட்டோ பவர்) உள்ள நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. (மேலும்) 19.03.11

_____________________________________________________________________________________________________________

234 சபைகளில் 205 அரசு வசம்

  • தமிழரசுக்கட்சி 12 சபைகளை கைப்பற்றியது
  • 4 சபைகளை மு.கா. பெற்றது
  • கோட்டைகளை இழந்து ஐ.தே.க. படுதோல்வி - 9 சபைகளில் தப்பிப் பிழைப்பு
  • அனைத்தையும் இழந்து மண்கெளவியது ஜே.வி.பி: அரசியல் எதிர்காலம் சூனியம்?

234 உள்ளூராட்சி சபைகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 205 சபைகளை கைப்பற்றி ஐ.ம.சு.முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது. ஐ.தே.க. தனது பல கோட்டைகளை இழந்து படுதோல்வியடைந்ததோடு, அதனால் 9 சபைகளை மட்டுமே வெல்ல முடிந்தது. ஜே.வி.பி. தனக்கிருந்த ஒரேயொரு உள்ளூராட்சி சபையையும் இழந்து அரசியலிலிருந்தே தூக்கிவீசப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நேற்று முன்தினம் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் அமைதியாக நடைபெற்றது. நேற்றுக்காலை 10 மணியாகும்போது சகல தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்டன. இத்தேர்தலில் ஐ.தே.க. தனது கட்டுப்பாட்டிலிருந்த 18 உள்ளூராட்சி சபைகளையும் கோட்டைவிட நேரிட்டதோடு, முஸ்லிம் காங்கிரசும் ஓரளவு பின்னடைவையே எதிர்கொண்டது. வடக்கு, கிழக்கு தமிழ் பிரதேசங்களை மையமாகவைத்து தேர்தலில் குதித்த தமிழரசுக் கட்சி 12 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி தேசிய அரசியலில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. (மேலும்) 19.03.11

_____________________________________________________________________________________________________________

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை மீது தமிழ் மக்கள் அதீத நம்பிக்கை: தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளன

-  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

tnaமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைமீதும், அது அரசாங்கத்துடன் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகள் மீதும் தமிழ் மக்கள் அதீத நம்பிக்கை வைத்திருப்பது நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் மூலம் வெளிக்காட்டப்பட்டிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத் திருந்த தமிழ் மக்கள், தமிழரசுக் கட்சியின் மீது நம்பிக்கைவைத்து வாக்களித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, கட்சிக்கு வாக்களிக்காதவர்களையும் சந்தித்து எதிர்காலத்தில் அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் தினகரனுக்குக் கூறினார். இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், உயர்பாதுகாப்பு வலய நீக்கம், இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டு அரசாங்கத்துடன் நடத்திவரும் பேச்சுவார்த்தைகளைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு உரிய ஆணையை வழங்கியுள்ளனர். மக்களின் ஆணையை ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு மாத்திரமன்றி அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். (மேலும்) 19.03.11

_____________________________________________________________________________________________________________

உலக மானிடத்தின் கடமை

-சுகு-

japan-helferஇன்று யப்பானில் ஏற்பட்ட  நிலைமை நாளை யாருக்கும் நேரலாம் . ஏன்  இலங்கையர்கள் நாம் அனுபவிக்கவில்லையா . 2004 டிசம் சி சுனாமி அணுகதிர் வீச்சு என அத்தனை துன்பங்களையும் அனுபவிக்கிறார்கள்.  ஆனால் நாடுகள் தங்கள் தங்கள் நாட்டு பிரசைகளை அழைத்துக் கொள்வதில்  கடுமையான சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள் அது தவறென்றில்லை. ஆனால் நரகத்தை விட்டு சக மனிதர்கள் வெளியேறுகிறார்கள் என்ற எண்ணம் யப்பானிய மக்களுக்கு வரக் கூடாது. இந்த இந்த இடத்தில்  தேச எல்லைகள் கடந்து சிந்திக்கவேண்டும் . இந்த அனர்த்தத்தை எமக்கு நேர்ந்ததாக எடுத்துக் கொண்டு முழு உலகழும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும் . ஒன்றாக துரித கதியில் செயற்படவேண்டும்.  உலகம் ஒன்று சேர்ந்து துரித கதியல் செயற்பட்டால் இந்த அணு கதிர் வீசிசை நிறுத்துவதென்பது முடியாத காரியமல்ல.  அவர்கள் அணு உலையை குளிர்விக்க ஹெலிகப்டர்களில் இருந்து தண்ணீர் ஊற்றுகிறார்கள் தற்போது யப்பானிய தொழில் நுட்பவியலாளர்கள் குளிரூட்டும் பம்பியின் வயரைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். (மேலும்) 19.03.11

_____________________________________________________________________________________________________________

சாதிக் பாட்ஷா மர்மச்சாவு - சி.பி.ஐ. விசாரணை கோரும் மனு ஏற்பு

புதுடெல்லி,மார்ச்.18 - ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவின் கூட்டாளி சாதிக் பாட்ஷாவின் மர்மச்சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரும் மனுவை சுப்ரீம்கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது.ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் பினாமியாக இருந்தவர் சாதிக் பாட்ஷா. இவர் ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார். வெறும் ரூ.ஒரு லட்சம் முதலீட்டுடன் தொடங்கப்பட்ட இந்த ரியல் எஸ்டேட் தற்போது ரூ.100 கோடி முதலீட்டுடன் செயல்பட்டு வருகிறது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஆ.ராசா லஞ்சமாக பெற்றதாக கூறப்படும் ஆயிரக்கமக்காண கோடி ரூபாயில் ஒரு பகுதி இந்த ரியல் எஸ்டேட்டிற்கு திருப்பிவிடப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சி.பி.ஐ. விசாரித்து வந்தது. மேலும் அப்ரூவராக சாதிக் பாட்ஷா மாறலாம் என்று கூறப்பட்டது. இந்தநிலையில் சாதிக்பாட்ஷா நேற்றுமுன்தினம் தூக்கில் தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சாதிக்பாட்ஷாவின் சாவில் மர்மம் உள்ளது. அதனால் அவரது மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம்கோர்ட்டில் பொதுநலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சார்பாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடுகையில் சாதிக் பாட்ஷாவின் மர்மச்சாவு ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் தொடர்புடையதாக இருக்கிறது. அதனால் அவரது மர்மச்சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார். அவருடைய வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர்.

_____________________________________________________________________________________________________________

கிலியா??புலியா?

seeman-prabaவிடுதலைப் புலிகள் தமிழகத்தில் மூன்று முகாம்கள் அமைத்திருப்பதாகவும், பிரதமர், ப. சிதம்பரம், மற்றும் முதல்வரைக் கொல்ல பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பதாகவும், இலங்கைப் பாராளுமன்றத்தில் அந்த நாட்டு பிரதமர் ஜெயரத்னே சொல்லியிருப்பது இந்திய, தமிழக உளவுப் பிரிவினரை மட்டுமல்ல; தமிழக மக்களைக் கூட பரபரப்புடன் கவனிக்க வைத்திருக்கிறது. அதுவும் சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில், இப்படிப்பட்ட செய்திக்கு அரசியல் பின்னணி உண்டா என்றும் அலசப்படுகிறது. 2009 மே மாதம் புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டதாக இலங்கை அரசு சொன்னாலும், தப்பித்துப் பல நாடுகளில் செட்டிலான புலிகள் மீண்டும் தங்களுக்குள் ஒருங்கிணைப்புப் பணியைத் தொடங்கி விட்டார்களோ என்ற சந்தேகத்தையும் இலங்கை பிரதமரின் பேச்சு கிளப்பியிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் ருத்ரகுமாரன், நார்வேயில் இருக்கும் நெடியவான், இந்தியா வில் தலைமறைவாக இருக்கும் விநாயகம் ஆகியோர்தான் இந்த முகாம்களை அமைத்திருக்கிறார்கள் என்பது இலங்கையின் கருத்து. அதுவும் தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள முல்லை பெரியார் அணைக்கட்டுள்ள கேரளத்தைச் சேர்ந்த பச்சை மலை என்ற வனப்பகுதியில் ஒரு முகாம் இருப்பதாகச் சொன்னதை அடுத்து கேரள காவல் துறையும், மத்திய உளவுத்துறையும் தங்களுடைய புலனாய்வை தீவிரப்படுத்தி உள்ளன. (மேலும்) 19.03.11

_____________________________________________________________________________________________________________

தமிழக கடல் எல்லைக்குள், வெடிபொருளுடன் வந்த  3 விடுதலைப்புலிகளுக்கு 10 ஆண்டு ஜெயில்

- பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக கடல் எல்லைக்குள் வெடி பொருட்களுடன் வந்த 3 விடுதலைப்புலிகள் உள்பட 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2007-ம் ஆண்டு தமிழக கடல் எல்லைப்பகுதியில் கடற்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது எல்லையோரமாக படகு ஒன்று நின்று கொண்டு இருந்தது. அதை சோதனை செய்தபோது அதில் 2 ஏ.கே.56 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் இருந்தன. இதையொட்டி, படகில் இருந்த இலங்கையை சேர்ந்த சகாயம் (45), சிவபத்மநாபன் (35), ஆறுமுகம் (35), புருஷோத்தமன் (34) இவர்களுக்கு ஆதரவாக இருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ராமர் (45) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். இவர்கள் மீதான வழக்கு பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு 2008-ம் ஆண்டு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதில் சகாயம், ராமர் ஆகியோர் கடந்த வருடம் ஜாமீனில் வந்தனர். புருஷோத்தமன், சிவபத்மநாபன் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். கடந்த வருடம் உடல் நிலை சரி இல்லாததால் ஆறுமுகம் இறந்து போனார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தமிழக எல்லைக்குள் அத்துமீறி வெடி பொருட்களுடன் வந்த குற்றத்திற்காக விடுதலைப் புலிகள் சகாயம், சிவபத்மநாபன், புருஷோத்தமன் மற்றும் ராமர் ஆகிய 4 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி வணங்காமுடி தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் வக்கீல் குணசேகரன் ஆஜராகி வாதாடினார்.

_____________________________________________________________________________________________________________

யாழ் நகரில் எந்த உயர்பாதுகாப்பு வலயமும் கிடையாது

jaffna-newyear1995ம் ஆண்டு முதல் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்துவந்த விக்டோறியா வீதி பொதுமக்கள் பாவனைக்குத் திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து, யாழ் நகரில் இனி எந்த உயர் பாதுகாப்பு வலயமும் கிடையாது என்று யாழ் இராணுவக் கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. விக்டோறியா வீதி மீண்டும் மக்கள் பாவனைக்குத் திறக்கப்பட்டமையானது யாழ் நகரில் அனைத்து உயர் பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்பட்டுவிட்டமைக்கான ஒரு அடையாளமாகும் என்று யாழ் இராணுவக் கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அராலி, குருநகர், கொழும்புத்துறை, தனங்கிளப்பு மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேசங்களில் தம்வசமிருந்த அனைத்து இடங்களையும் இராணுவத்தினர் மீண்டும் கையளித்து, அவற்றின் உரிமையாளர்கள் அங்கு குடியேறிவிட்டனர் என்றும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், தெல்லிப்பழை உதவி அரசாங்க பிரிவின் கீழுள்ள குரும்பசிட்டி, வசாவிளான் தெற்கு, வலிகாமம் வடக்கு உதவி அரசாங்க பிரிவைச் சேர்ந்த இளவாலை வடக்கு, இளவாலை மேற்கு, வித்தகபுரம், வடமராட்சி வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த, குடத்தனை, குடத்தனை கரையூர், மணல்காடு, குடத்தனை கரையூர், பொற்பதி, அம்பன், செம்பியன்பற்று வடக்கு, தெற்கு, மருதங்கேணி, வதிராயன், உடுத்துரை, ஆழியவளை ஆகிய இடங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் அங்கு மீள்குடியேற்றப்பட்டிருப்பதாகவும் யாழ் கட்டளைத் தலைமையச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பளை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் தற்போது கண்ணிவெடிகள் வேகமாக அகற்றப்பட்டு வருவதாகவும், இந்தப் பகுதிகளிலும் மக்கள் விரைவாக மீளக் குடியேற்றப்படுவார்கள் என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னைய பதிவுகள்

தேனீ இணையம்

10வது வருடம்


22.02 2002- 22.02.2011

 

DAN Magazing New

Kuha NAATHAN SS 10/1 First Lane 51 Rue de la Parabole
Chairman, CEO Rathmalana 95800 Cergy
Mobile:+94774734023 SriLanka

France
Mobile:+33628738676         +33628738676 

காக்கும் ஷேக்கும் (KAK AND SHEIKH )

புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரே ஸ்ரீலங்கா அரசு வகுத்திருக்கும் சாம, தான, பேத, தண்ட வியூகம்

தமிழ் மக்களுக்குப் பாரிய இன்னல்கள் ஏற்பட்டதற்கு வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி நிறைவேற்றிய தனிநாட்டுத் தீர்மானமே அடிப்படைக் காரணம்.

இலங்கை புலனாய்வுத்துறை எமது மக்களில் சிலர் எண்ணுவதைப்போல் முட்டாள்தனமானது அல்ல. குமரன் பத்மநாதன்

பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்