|
எகிப்தின் நிலை இலங்கையிலும் உருவாகாது என்பதற்கு உத்தரவாதமில்லை: கருஜயசூரிய
இந்நாட்டில் அண்மை காலமாக கொலை செய்யப்பட்ட அல்லது தாக்கப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பாக இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எகிப்தின் நிலை இலங்கையிலும் உருவாகாது என்பதற்கு எதுவித உத்தரவாதமில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்தார். கண்டி ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரவித்த அவர், இந் நாட்டில் அண்மை காலமாக 12 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டும் 31 ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் உள்ளனர். இவை எதற்கும் இதுவரை சரியான விசாரணை நடத்தவில்லை. இந்த சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளிகளை கண்டு பிடிக்கப்படவில்லை. எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெரும்;. அனைத்து சபைகளிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் கிராம அரசு ஒன்று உருவாக்கப்படும். ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக நாட்டின் அனைத்து பகுதிகளுக்குமாக 5100 வேட்பாளர்;களை இம் முறை நிறுத்திவுள்ளோம். (மேலும்) 13.02.11
_____________________________________________________________________________________________________________
பேநசீர் கொலை வழக்கில் முஷாரப்புக்கு பிடிவாரண்ட்
இ ஸ்லாமாபாத், பிப்.12: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொலை வழக்கில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு எதிராக ஜாமீன் பெற முடியாத பிடி வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தற்கொலைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த மத்தியப் புலனாய்வுத் துறை, குற்றப்பத்திரிகையை ராவல்பிண்டியில் உள்ள நீதிமன்றத்தில் சனிக்கிழமை சமர்ப்பித்தது. இதில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கிலிருந்து தப்பி ஓடியவர் என மத்திய புலனாய்வுத் துறை சென்ற வாரம் முஷாரபைக் குறிப்பிட்டிருந்தது. சனிக்கிழமை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அவர் பெயரை உள்படுத்தியுள்ளது. இதையடுத்து, அவரை விசாரிப்பதற்காக ஜாமீனில் வெளியே வர இயலாத பிடி வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் படுகொலைக்குப் பின்னால் பெரிய சதி நடந்துள்ளதாக குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது. இது பற்றிய விசாரணையின்போது முஷாரப் ஒத்துழைப்பு தரவில்லை என அது குறிப்பிடுகிறது. (மேலும்) 13.02.11
_____________________________________________________________________________________________________________
யாழில் பொது மக்களின் விபரங்களை திரட்ட இராணுவத்தினர் படிவங்கள் விநியோகம்
யாழ். மாவட்டத்திலுள்ள நல்லூர், கோப்பாய் மற்றும் மானிப்பாய் பிரதேசங்களில் பொது மக்களின் விபரங்களை திரட்டுவதற்காக இராணுவத்தினர் படிவங்களை விநியோகித்து உள்ளதாகவும் யாழ் அரசாங்க அதிபரின் அனுமதியின்றி இந்த நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டு வருவதாகவும் யாழ் அரச அதிபர் பணிமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையாக இது இருக்கலாம் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். எனினும் படையினரின் இந்த நடவடிக்கை குறித்து பிரதேச செயலாளர்களுக்கு தெளிவுப்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொள்ளை, கொலைகள் போன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதை தடுக்கவும் அதில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணும் நோக்கிலும் இராணுவத்தினர் நபர்களின் தகவல்களை திரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்
_____________________________________________________________________________________________________________
இலங்கை முஸ்லிம் அரசியல் பற்றிய கதையாடல்.
அஹமட் ஷா
இலங்கையின் மூன்றாவது இனமாக (அதுவும் மொழியின்றி மத அடிப்படையில்) இருப்பது முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவே இருந்தால்: அது அப்படியொன்றும் அஞ்சத்தக்கதல்ல. இஸ்லாமிய அரசியலை விட்டு விட்டுப் பாதி ஜனனாயகமும் அடுத்தபாதி சோசலிஸமுமாய்ப் பேசுகிற உலக அரசியலில்; முதலாவது பெரும்பான்மை இனத்தின் செல்லப் பிள்ளை மூன்றாவது இனமென்றே சொல்லப்பட்டு வந்தது. ஆனால் நிலச் சுவாந்திரரான விவசாயக் கல்லுhரியில் பட்டம் பெற்ற டி. எஸ். சேனநாயக்காவிவின் தலைமையிலான சிங்கள காணி உரிமையாளர் சங்க முன்னேற்பாட்டில் முதன் முதலில் இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராகவே இனக்கலவரம் நகர்ப்புறத்தில் எழுந்தது. இதன் பின்னர் சிறிமாவோவின் ஆட்சிக் காலத்தில் புத்தளம் பள்ளிவாயிலில் எட்டுபேரைக்கொன்று அவர் பங்குக்கு பாகம் பிரித்தார். அதாவது நீங்கள் தமிழரல்ல முஸ்லிம்கள் என ஆட்சியாளர்கள் இரத்தத்தால் எழுதிச்சொன்னார்கள். மேலும் அவ்வப்போது இருநபர் பிரச்சினை சிங்கள- முஸ்லிம்பேதம் பூசப்பட்டதாக புகைந்து ஒரு கிழமைக்குள் அரசியல்வாதி அரச ஆயுதப்படை எல்லாமாகச் சேர்ந்து நிலமை சுமூகமாகிவிடும் .முஸ்லிம்களின் வியாபாரத்தின் மீதான நாட்டமும் புத்தளம் படுகொலையும் முஸ்லிம்களின் பெருமளவு வாக்கு வங்கியை யு. என். பிக்குச் சார்பாகவே வைத்திருந்தது. எஸ். எல். பி.இல் இருந்த முஸ்லிம் எம்பிக்களையும் யு. என். பி இலிருந்த முஸ்லிம் எம்பிக்களையும் எண்ணிக்கை ரீதியில் ஒப்பிடும்போது இதைக் கண்டுகொள்ள முடியும். (மேலும்) 13.02.11
_____________________________________________________________________________________________________________
அக்கரைப்பற்றில் தேர்தல் சட்டம் மிதிக்கப்படுகிறது - கபே தே.ஆ கடிதம்
அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெறும், தேர்தல் சட்டவிதிகளை மீறும் செயல்கள் குறித்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்(கபே) தேர்தல் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு:- அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்தில் மக்கள் காங்கிரஸ் பாரிய தேர்தல் பேரணிகளை நடத்தி வருகின்றது. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் 9 பேர் பேரணியாக முஸ்லிம் பள்ளிவாசலுக்கு செல்கின்றனர். அதன்மூலம் தேர்தல் சட்ட விதிகள் மீறப்படுகின்றன. அக்கறைப்பற்று முஸ்லிம் பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டுள்ள ஒலிபெருக்கியையும் வேட்பாளர்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். அதிதிகள் பாதுகாப்பு சேவைக்கென பயன்படுத்தப்படும் இரு வாகனங்கள், டபல் கெப் வாகனம் நான்கு, 10 மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் ஆகியோருடன் ஆரம்பிக்கப்பட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு, தற்போது 10 முச்சக்கர வண்டிகளுக்கு மேற்பட்டவையும் இணைந்துள்ளன. ். (மேலும்) 13.02.11
_____________________________________________________________________________________________________________
ஐநாசபையில் உரையை மாற்றிப்படித்தார் எஸ்எம் கிருஷ்ணா
நியூயார்க்: ஐநா சபையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தன்னுடைய உரையை வாசிக்காமல் மற்றவர்களுடைய உரையை வாசித்ததால் குழப்ப நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் உள்ள ஐ.நா சபையில் ஜி4 என்றழைக்கப்படும் நாடுகளான இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு ஐநாசபையில் பேசத்துவங்கிய எஸ்எம் கிருஷ்ணாவின் பேச்சை கவனித்த மற்ற நாட்டின் தலைவர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். காரணம் தன்னுல்டைய பேச்சிற்கு பதிலாக அருகே அமர்ந்திருந்த போர்சுகல் நாட்டு அமைச்சரின் உரையை மீண்டும் படிக்க துவங்கினார்.இதனால் மற்ற நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். இதனையடுத்து ஐ.நாவுக்கான இந்திய தூதர் ஹர்தீப்சிங் பூரி தவறை கண்டுபிடத்து கிருஷ்ணாவிடம் கூறினார். அதன்பின்னர் தனக்கான உரையை படிக்க துவங்கினார். இந்த இடைப்பட்ட மூன்று நிமிடங்களுக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
_____________________________________________________________________________________________________________
வடகிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இருக்கும் ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறார்களிடம் போஷாக்கின்மை
இலங்கையின் வடகிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இருக்கும் ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறார்களிடம் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக யுனிசெஃப், உலக உணவுத் திட்டம் மற்றும், அந்நாட்டின் சுகாதார சேவைகள் அமைச்சகம் ஆகியவை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தத் தகவல்களை இலங்கை அரச ஊடகம் பிரசுரித்துள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 53 சதவீதமான சிறார்களும், திருகோணமலையில் 45 சதவீதமும், அம்பாறையில் 44 சதவீதமான சிறார்களும் ஊட்டச்சத்து குறைபாடுடன் காணப்படுகிறார்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது. குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே இடம் பெறுவதாகவும் அந்த அய்வு கூறுகிறது. இது தொடர்பாக இலங்கை அரசின் மகளிர் மற்றும் சிறார்கள் நல அமைச்சகத்தின் துணை அமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா தமிழோசையிடம் கூறும் போது, யுத்தத்தினால் தான் இவ்வாறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக இவ்வருடத்தில் இருந்து வடகிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஐந்து வயதுக்கு குறைவாக உள்ள சிறார்களுக்கு பாலர் பள்ளியில் வாரத்திற்கு மூன்று முறை பால் கொடுக்கவுள்ளதாக கூறினார். மேலும் இது ஒரு தேசிய பிரச்சனை என்றும், பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் பயிற்சிகளையும் திட்டங்களையும் ஏற்படுத்தி கொடுக்க தாங்கள் திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறினார். - B.B.C News
_____________________________________________________________________________________________________________
வாசிக்க
_____________________________________________________________________________________________________________
எகிப்து: மக்கள் வரலாறு படைக்கிறார்கள்
-பிரகாஷ் காரத்
எகிப்து மக்களின் பேரெழுச்சியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் மிகவும் ஆவலுடன் கவனித்துக்கொண்டு வருகிறார்கள். ஜனவரி 25இலிருந்து பிப்ரவரி 9ஆம் தேதி வரையிலான பதினைந்து நாட்களில் இப் பேரெழுச்சியில் லட்சக்கணக்கான எகிப்தியர்கள் பங்கேற்றுள்ளார்கள். அனைத்துப் பிரிவு மக்களும், குறிப்பாக இளைஞர்கள், தொழிலாளர்கள், மத்தியதர வர்க்கத்தினர், சாமானிய ஆண்கள் - பெண்கள் என அனைத்துப் பிரிவினரும், ஹோஸ்னி முபாரக் கின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக அணி திரண்டு வருகிறார்கள். முபாரக் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதிலும், புதிய ஜனநாயக அமைப்பை உருவாக்குவதிலும் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறார்கள். கெய்ரோவில் உள்ள சுதந்திரச் சதுக்கத்தில் குழுமிய மக்கள் காட்டிய வீராவேசம் மற்றும் உள்ள உறுதி அவர்கள் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. இப் போராட்டத்தில் இதுவரை சுமார் முன்னூறு பேர் தங்கள் இன்னுயிரைப் பலிகொடுத்திருக்கிறார்கள். எகிப்து, எட்டு கோடியே 82 லட்சம் மக்கள் கொண்ட மாபெரும் அரபு நாடாகும். வரலாற்று ரீதியாக, இது அரபு நாடுகளின் அரசியல் மற்றும் கலாச்சார மையமாகும். எகிப்தில் நடைபெறும் நிகழ்ச்சிப் போக்குகள் இப்பிராந்தியத்திலேயே முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும். (மேலும்) 13.02.11
_____________________________________________________________________________________________________________
'அதிகார பரவலாக்கத்தின்போது கீழ் மட்டத்திலுள்ளவர்களின் கருத்துக்களும் பெறப்பட வேண்டும்'
அதிகார பரவலாக்கத்தின் போது அடிமட்டத்திலுள்ளவர்களின் கருத்துக்களும் பெற வேண்டும் என இந்திய பொது நிர்வாக நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ராகேஷ் ஹுஜா தெரிவித்தார். அரசியலமைப்பு கற்கை நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதிகார பரவலாக்கம் தொடர்பிலான தேசிய மன்றம் தம்புள்ள, கன்டலம அமாயா லேக் ஹோட்டேலில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான முதல் நாள் அமர்வில் சிறப்புரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்திய நிர்வாக துறையில் 36 வருடங்கள் கடமையாற்றிய அனுபவமிக்கவரான கலாநிதி ஹுஜா அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 'அதிகார பரவலாக்கம் அவசியம் என்பதற்காக மேற்கொள்ளக் கூடாது. நோக்கங்களை அறிந்தே அதிகார பரவலாக்கம் மேற்கொள்ளகொள்ளப்படும். இன்றைய காலகட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் சிறப்புரிமைகளையும் சலுகைளையுமே எதிர்பார்க்கின்றார்கள். அவர்கள் மீதுள்ள பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள ஒரு போதும் தயாரில்லை. அபிவிருத்தி தொடர்பான தீர்மானங்கள் அடிமட்டத்திலிருந்தே எடுக்க வேண்டும். ஆனால் இன்று அவ்வாறு நடப்பதில்லை. தீர்மானங்கள் மத்திய அரசினால் தலைநகரிலிருந்து எடுக்கப்படுகின்றன. இத்தீர்மானங்களை அடிமட்டத்திலுள்ள மக்கள் மத்தியில் அமுல்படுத்த தயாராகும் போது பல சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன. மத்திய அரசு, மாகாண அரசு மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என்பனவற்றுக்கிடையில் நெருங்கிய உறவு பேணப்பட வேண்டும். இதனூடாக மக்களுக்கு நிறைய அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும். மத்திய அரசுகள் எப்போதும் தனக்கு கீழுள்ள அரசுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன என' அவர் தெரிவித்தார். தொடர்ந்து நாளை சனிக்கிழமை வரை நடைபெறவுள்ள இத்தேசிய மன்றம், அரசியலமைப்பு கற்கை நிறுவனத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி ஜயம்பதி விக்ரமதுங்க தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இத்தேசிய மன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
_____________________________________________________________________________________________________________
இந்திய - இலங்கை மீனவர்களின் மோதல் தொடர்பில் யாழ். இந்திய துணைத் தூதுவர் நடவடிக்கை
யாழ்ப்பாண மீனவர்களின் பிரதிநிதிகளை இந்தியத் துணைத் தூதுவர் இ.மகாலிங்கம் நேற்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் சி.தவரட்ணம், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் அ.ஸ்ரனிஸ்லஸ் ஆகியோரை யாழ். பலாலி வீதியில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்கு இரு நாட்டு மீனவர்களும் தமக்கிடையில் உறவைப் பேண வேண்டும் என்றும் அவர் கூறினார். இரு நாட்டு மீனவர்களும் தமக்கிடையே புரிந்துணர்வுகளை வளர்ப்பதன் மூலமும் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலமும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்றும் இந்தியத் துணைத் தூதுவர் இ.மகாலிங்கம் தெரிவித்தார். இதேவேளை, யாழ்ப்பாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக யாழ். கடற்றொழிலாளர் சங்க சமாசத் தலைவர்கள் கூட்டாக இணைந்து, கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஆர்.ரவீந்திரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அடிக்கடி குடாநாட்டுப் பரப்புக்குள் பிரவேசிக்கின்ற இந்திய றோலர்களாலும், குடாநாட்டில் குருநகர் உள்ளிட்ட சிறு பிரதேச கடற்றொழிலாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற றோலர் தொழிலாலும், குடாநாட்டுக் கடல்வளம் அழிவதோடு தொழிலாளர்களின் வலைகளும் நாசமாக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இலங்கையில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலை தொடர்ந்தும் குடாநாட்டின் சில பிரதேசங்களில் பாவிக்கப்படுவதாகவும், இதனால் கடல்வளம் அழிந்து செல்வதாகவும், யாழ் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
_____________________________________________________________________________________________________________
ஸ்ரீலங்கா ஒரு கண்ணோட்டம் - ஜனவரி 2011
ஆக்கம்: கேணல்.ஆர்.ஹரிஹரன்
ராஜபக்ஸ இந்த உள்ளுராட்சித் தேர்தல்கள் மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினது பாதச் சுவடுகளை வடபகுதியில் ஆழப் பதித்து எல்லா இனத்தவர்களினதும் தலைவர் தான்தான் எனக் கூறிவருவதை சட்டபூர்வமாகக் காண்பிக்க விரும்புகிறார். உள்ளக இடம் பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு மற்றும் உட்கட்டமைப்பு வேலைகள் யுத்தத்தால் சீரழிந்து போயுள்ள வட பகுதியில் மிகவும் மந்த கதியில் நடைபெறுவதால் வடபகுதித் தமிழர்களின் மன உறுதி மிகவும் குறைந்து போயுள்ளது.தமிழர்களுக்கு எரிச்சல் தரும் மற்றொரு விடயம் எங்கும் பரந்து விரிந்து காட்சியளிக்கும் இராணுவத்தினரது பிரசன்னம். இராணுவம் குடியுரிமை நிர்வாகத்தில் உயர் பிரபுக்களைப் போல அதிகாரம் செலுத்துகிறது. இவை அனைத்துக்கும் மேலாக யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வரும் கொலைகள் மற்றும் இதர குற்றச் சம்பவங்கள் மிக மோசமாக அதிகரித்து வருவதால் சட்டம் ஒழுங்கு நிலமைகள் அதி வேகத்தில் பலவீனமடைந்து வருகின்றன. எனவே இப்போதுள்ள நிலமையில் யு.பி.எப்.ஏ மற்றும் ஈ.பி.டி.பி அகியவவை தங்கள் நிலையை வடக்கில் உறுதிப் படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகவே காணப்படுகிறது. (மேலும்) 12.02.11
_____________________________________________________________________________________________________________
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை! - கலைஞர் டி.வி. விளக்கம்
சென்னை: "2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை'' என்று கலைஞர் டி.வி.நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கை: 2007-08-ம் ஆண்டில் மத்திய தொலைத்தொடர்பு துறையால் ஒதுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) விவகாரத்திற்கும் 2009-ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினிஞ்க் நிறுவனம் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 2009-ம் ஆண்டு சினியுக் என்ற நிறுவனம் பங்குகள் பரிவர்த்தனைக்காக முன்பணம் கொடுத்திருந்தது. ஆனால் 2 நிறுவனங்களுக்கும் பங்குகள் மதிப்பீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2009-ம் ஆகஸ்டு வரை பெறப்பட்ட ரூ.200 கோடியை கடனாக பாவித்து மொத்த பணமும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தினால் திருப்பி தரப்பட்டது. அந்த தொகைக்கான வட்டியாக ரூ.31 கோடி கொடுக்கப்பட்டது. இந்த பரிவர்த்தனை முழுவதும் வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த மொத்த பரிவர்த்தனையும் சட்டத்திற்கு உட்பட்டு உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நிகழ்வு ஒரு திறந்த புத்தகமே ஆகும். -இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
_____________________________________________________________________________________________________________
வயோதிபரின் கண்களைக் கட்டி விட்டு 170 ரூபாவை எடுத்த திருடர்கள்
கிளிநொச்சியில் இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபரை இடைமறித்த வழிப்பறிக் கொள்ளையர்கள் அவரது கண்களைத் துணியால் கட்டியதுடன் அவரிடம் இருந்த பணத்தைப் பறிப்பதற்காக உடற்சோதனைக்கும் உட்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. உதயநகர் கிழக்கு, அம்மன் கோயில் வீதிக்கருகாமையிலேயே இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு முதியவரைச் சோதனை செய்த போதிலும் அவரிடம் 170 ரூபாவே இருந்ததாகவும் அதனை எடுத்த கொள்ளையர்கள் முதியவரைத் தகாதவார்த்தைகளால் திட்டி விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட முதியவர் இராணுவத்தினரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து அங்கு தற்போது காவலரண் அமைக்கப்பட்டு இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
_____________________________________________________________________________________________________________
"த கார்டியனு'க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக விக்கிலீக்ஸ் அச்சுறுத்தல்
லண்டன்: பிரிட்டனின் முன்னணிப் பத்திரிகைகளான "த கார்டியன்', "லண்டன் டெய்லி' என்பனவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் அச்சுறுத்தல் விடுத்துள்ளது. பிரிட்டனின் முக்கிய பத்திரிகைகளான "த கார்டியன்', "லண்டன் டெய்லி' என்பவற்றின் சிரேஷ்ட செய்தியாளர்களினால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட நூலில் விக்கிலீக்ஸ் இணையத்தள ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ் மற்றும் அவரது முன்னாள் சகாக்களுக்கிடையில் சர்ச்சைகள் நிலவுவதாகக் குறிப்பிடப்பட்டமையானது தம்மை அவமதிப்பதாக உள்ளதாகக் கருதியே குறித்த பத்திரிகைகள் மீது விக்கிலீக்ஸ் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளது. இரகசியத் தகவல்களைத் திரட்டித் தந்த முன்னாள் படைவீரர் கொல்லப்படலாம்' என ஜூலியன் அசாஞ் கருதியதாக "த கார்டியனால்' வெளியிடப்பட்டுள்ள நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அசாஞ் கோபம் மிக்கவர் எனவும் சபலபுத்தியுடையவர் எனவும் அந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதேவேளை, "த கார்டியனின் நூலில் அவதூறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விக்கிலீக்ஸ் டுவிட்டரில் அனுப்பப்பட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மேலும்) 12.02.11
_____________________________________________________________________________________________________________
புறக்கோட்டையில் பதுக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் கிலோ அரிசி கண்டுபிடிப்பு
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நேற்று புறக்கோட்டை 4ஆம் குறுக்குத் தெருவில் செய்த சோதனை நடவடிக்கையின் போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12,000 கிலோ அரிசி கைப்பற்றப்பட்டது. பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசியை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை ஈடுபட்டுள்ளது. நேற்று முன்தினம் இவ்வாறு நடத்தப்பட்ட தேடுதலின்போது 250 கிலோ அரிசி புறக்கோட்டை பழைய சோனகத்தெருவில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 9 ஆம் திகதியும் அரிசியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த 100 வர்த்தக நிலையங்களையும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை சுற்றிவளைத்தது. நேற்று முன்தினம் இவ்வாறு 110 வர்த்தக நிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்டதாக வும் கூட்டுறவு அமைச்சு தெரிவிக்கிறது. மொனராகலை, மாத்தளை, பொலன்னறுவை, கண்டி, கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் இவ்வாறு அதிகளவு சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
_____________________________________________________________________________________________________________
சந்தையைத் திறந்துவிடாத இந்தியா மீது அமெரிக்க அதிபர் ஒபாமா அதிருப்தி
வாஷிங்டன், பிப்.11: இந்தியாவுக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட உயர் தலைவர்களுடன் தான் பேசிய பிறகும் இந்திய சந்தையை அமெரிக்கத் தொழில் அதிபர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் திறந்துவிடாமல் இருக்கும் போக்கு குறித்து அதிபர் ஒபாமா மிகவும் அதிருப்தி அடைந்திருக்கிறார். இதை அவர் அமெரிக்காவில் வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். அதிபரின் இதே கருத்தை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட தனிக் கூட்டத்தில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ரான் கிர்க், இந்திய விவகாரங்களுக்கான குழுவின் தலைவர் ஜோசப் கிரெற்லியிடம் வாஷிங்டனில் தெரிவித்தார். இன்சூரன்ஸ் துறையில்: இந்திய இன்சூரன்ஸ் துறையில் முதலீடு செய்ய அமெரிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் வெளிநாட்டவர் நேரடி முதலீடுக்கான அதிகபட்ச வரம்பு இதுவரை 26% ஆகவே இருக்கிறது. இதை உடனடியாக 49% வரையாவது உயர்த்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது. (மேலும்) 12.02.11
_____________________________________________________________________________________________________________
லங்கா ஈ நியூஸ்’ மீது தாக்குதல்: சந்தேக நபர் கைது
‘லங்கா ஈ நீயூஸ்’ இணையத்தள அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான ‘பூதயா’ (பூதம்) தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று கடுவல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜயகொடி கூறினார். மாலம்பேயிலுள்ள லங்கா ஈ நியூஸ் அலுவலகம் கடந்த மாதம் 31 ஆம் திகதி இனந்தெரியாத கும்பலால் தாக்கி சேதமாக்கப்பட்டது. கைதானார். ‘பூதயா’ எனும் புனைப்பெயர் கொண்டு அழைக்கப்பட்ட ஜயலத் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தார். இவர் பாதாள உலகத்துடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
_____________________________________________________________________________________________________________
பதவி விலகினார் முபாரக் : மக்கள் போராட்டத்திற்கு வெற்றி
கெய்ரோ : எகிப்து அரசியலில், நேற்று யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சம்பவங்கள் மளமளவென நடந்து முடிந்தன. "பதவி விலக முடியாது' என்ற அதிபர் முபாரக்கின் உரையால் கொந்தளித்த மக்கள், அதிபர் மாளிகை, அரசு "டிவி' போன்ற இடங்களை முற்றுகையிட்டனர். தாரிர் சதுக்கத்தில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பீதியடைந்த அதிபர் முபாரக், தலைநகர் கெய்ரோவை விட்டு தப்பி ஓடியதாக நேற்று மாலை தெரிவிக்கப்பட்டது. ஆனால், இரவில் அவர் பதவி விலகினார். எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்(82) பதவி விலகக் கோரி, கடந்த 17 நாட்களாக லட்கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராடினர். நேற்று 10 லட்சம் பேர் கொண்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் தாரிர் சதுக்கத்தில் நடக்கும் என, ஆர்ப்பாட்டக் குழுக்கள் அறிவித்தன. அதில், பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து, சாரி சாரியாக மக்கள் சதுக்கத்தை நோக்கி வரத் துவங்கினர். இதனால், நேற்று முன்தினமே சதுக்கம் நிரம்பி வழிந்தது. ராணுவம் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தது. நிலைமை மோசமாவதை உணர்ந்த ராணுவம், அரசு "டிவி'யில் அதிபர் முபாரக் தோன்றி, தனது முடிவை அறிவிப்பார்' என்று தெரிவித்தது. (மேலும்) 12.02.11
_____________________________________________________________________________________________________________
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் டான் ரிவி (Dan Tv)
யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் டான் யாழ்.ஒளி இப்போது மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் யூரோபேர்ட் சட்டலைற் ஊடாக ஒளிபரப்பைத் தொடங்கியிருக்கின்றது. முன்னர் டான் தமிழ்ஒளி என்ற பெயரில் ஒளிபரப்பாகியபோது தெளிவில்லாமல் ஒளிபரப்பாகிவந்தபோதும் ஐரோப்பிய தமிழர்கள் அதனை பார்த்துவந்தனர். இலங்கையில் நடைபெறும் செய்திகளை குறிப்பாக யாழ்ப்பாணச் செய்திகளை விரும்பிப் பார்த்துவந்தனர். இப்போது டான் ரிவி மிகத் தெளிவான ஒளிபரப்பாக டான் யாழ். ஓளி என்றபெயரில் தனது சேவையைத் தொடங்கியிருக்கின்றது. யூரோபேர்ட் 9 சட்டலைற்றில் 11938 அலைவரிசையில் டான் யாழ்.ஒளி ஒளிபரப்பாகின்றது.
_____________________________________________________________________________________________________________
ஒன்றிணைக்கும் சமஷ்டி என்றால் என்ன என்பதை சோமவன்ச விளக்கவேண்டும்
ஜேவிபி தலைவரின் கருத்து தொடர்பில் - மனோ கணேசன
பிரிந்து செல்லும் சம்ஷ்;டியை எதிர்ப்பதாகவும், நாட்டை ஒன்றிணைக்கும் சம~;டியை தமது கட்சியை ஆதரித்து ஏற்றுக்கொள்வதாகவும் ஜேவிபியின் தலைவர் சோமவன்ச அக்கட்சியின் மாநாட்டின் போது தெரிவித்துள்ளார். இது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியாகும். ஆனால் இந்த மகிழ்ச்சி நீடித்து நிலைக்க வேண்டுமென்றால், தான் குறிப்பிடும் நாட்டை ஒன்றிணைக்கும் சமஷ்டி என்றால் என்ன என்பதை தமிழ் மக்களுக்கு சோமவன்ச அமரசிங்க விளக்கி கூறவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜேவிபி தலைவரின் கருத்து தொடர்பிலே கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது, கடந்த 30 வருட யுத்தம் தமிழீழ விடுதலைபுலிகளுக்கு எதிராக நடத்தப்பட்டது என காலத்திற்கு காலம் சொல்லப்பட்டாலும், அது தமிழர்களுக்கு எதிரான யுத்தமாகவே நடைமுறையில் நடைபெற்றது. இந்த யுத்தத்திற்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளித்த கட்சி; ஜேவிபியாகும். ஆனால் இதுதொடர்பில் ஜேவிபியை மாத்திரம் குறிப்பிட்டுகூற முடியாது. (மேலும்) 12.02.11
_____________________________________________________________________________________________________________
அமைச்சர் டக்ளஸின் முன்பிணை மனு விசாரணை ஒத்திவைப்பு
இலங்கையின் பாரம்பரிய சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்துள்ள முன் பிணை மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. 1986 ஆம் ஆண்டு சூளைமேட்டில் நடந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி என்று 1994ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேடப்படும் தன்னை குற்றவாளி பட்டியலில் இருந்து நீக்கக் கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்ததால், அவர் தனது சட்டத்தரணி ஊடாக முன் பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில்அளிக்க மத்திய அரசு அவகாசம் கேட்டதால் விசாரணையை வரும் 14ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
_____________________________________________________________________________________________________________
எதிரணியின் எகிப்தியக் கனவு
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைச் சிறையிலிருந்து விடுதலை செய்யக்கோரி இலங்கையின் சுதந்திரதினமான கடந்த வெள்ளிக்கிழமை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பொரளையில் தீப்பந்த ஊர்வலத்தையும் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் அனுசரணையுடனான ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கம் நேற்று முன்தினம் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் நடத்தியிருந்தன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை எதிரணியின் பொது வேட்பாளராக நிறுத்துவதில் இணங்கிச் செயற்படக் கூடியதாக இருந்த எதிரணிக் கட்சிகளினால் அவரின் விடுதலைக்காக ஒரு வருடத்துக்குப் பின்னர் ஒருங்கிணைந்து போராட்டங்களை முன்னெடுக்க முடியாமல் இருக்கிறது. அரசாங்கத்துக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் தங்களினால் பயன்படுத்தப்பட்டிருக்காவிட்டால் முன்னாள் இராணுவத் தளபதிக்கு இன்றைய நிலை ஏற்பட்டிருக்காது என்பதை உணர்ந்ததினாற்போலும் எதிரணிக் கட்சிகள் ஒருவித குற்ற உணர்வுடன் அவரின் விடுதலைக்கான போராட்டங்களைப் பிரிந்து நின்றென்றாலும் தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கின்றன. (மேலும்) 11.02.11
_____________________________________________________________________________________________________________
ஆட்சி பீடத்திலிருந்து இறங்க போவதில்லை என முபாரக் மீண்டும் அறிவிப்பு
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில், மில்லியன் கணக்கான மக்கள் நேரடியாக முபாரக்கின் உரையை எதிர்பார்த்திருந்த போது, வியாழக்கிழமை நள்ளிரவு தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய முபாரக், தனது உரையை நிகழ்த்தினார். அவர் பதவி விலகுவது தொடர்பில் அறிவிப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த போது, ஆர்ப்பாட்டக்காரர்களின் கோபத்தை அதிகப்படுத்தும் வகையில், இது தான் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. எகிப்தின் கௌரவ பிரச்சினை. இந்நாட்டை கட்டியெழுப்ப மிகுந்த பாடுபட்டுள்ளேன். நான் இருந்தாலும், இறந்தாலும் இந்நாட்டில் தான். எனது அதிகாரங்களில் சிலவற்றை துணைஅதிபர் சுலைமானுக்கு கொடுக்கிறேன், எனினும் செப்டெம்பர் வரை எனது ஆட்சி பீடத்தில் நான் தொடர்ந்து இருப்பேன். என அறிவித்தார். இவ் அறிவிப்பால் மிகுந்த கோபமடைந்த ஆர்ப்பாட்ட காரர்கள், அவர் உரையாற்றி முடிக்கும் முன்னரே, அவருக்கு எதிராக கோஷமெழுப்ப தொடங்கினர். (மேலும்) 11.02.11
_____________________________________________________________________________________________________________
ஒழுங்கமைப்பைச் சுற்றிலும் ஊழலுக்கான குறுக்கு வழிகள்:
யுத்தம் முடிவடைந்ததிலிருந்து ஸ்ரீலங்கா முன்னேற்றமடைந்திருப்பது 0.1 விகிதம் மட்டுமே
ஆக்கம்: றைசா விக்ரமதுங்க
சந்தியில் கடமையிலிருக்கும் காவல்துறை உத்தியோகத்தரின் கையில் ஒரு 500ரூபாய் நோட்டை நழுவ விடுவதிலிருந்தோ அல்லது ஒரு தொழிலதிபர் தனது கேள்விப் பத்திரம் அங்கீகரிக்கப் படுவதற்காக சிறியதொரு ஊக்கத்தொகையை வழங்குவதிலிருந்தோ அது ஆரம்பமாகிறது. ஸ்ரீலங்காவில் ஒழுங்கமைப்புகளைச் சுற்றியுள்ள ஊழலுக்கான குறுக்கு வழிகள் அதேபோல் மற்றைய அபிவிருத்தி அடைந்துவரும் பொருளாதாரங்களிலும் நிறைந்து வழிகின்றன. தசாப்தங்களாக நீண்டிருந்த யுத்தம் முடிவடைந்து விட்டதால் இப்போது அநேகரின் வாழ்க்கை முன்னேற்றமடைந்து வருகிறது. மக்கள் வீதிகளில் இப்போது அச்சமின்றி நடமாட முடிகிறது. கடந்த வெள்ளிக்கிழமைதான் ஸ்ரீலங்கர் சுதந்திரம் பெற்றதின் அடையாளமான நாளாகும். ஒரு நாள் கோலாகலமான கொண்டாட்டங்கள். ஆனால் ஒவ்வொரு ஸ்ரீலங்கா வாசியினதும் கடவுச் சீட்டிலும், சோசலிச ஜனநாயகக் குடியரசு என்கிற வார்த்தைகள் மங்கிய தங்க நிறத்தில் பிரகாசித்த போதும், உண்மைகளை மழுங்கடிக்க முடியாது. ஊழல் என்கிற சொல், லத்தீன் மொழியினைப் பிறப்பிடமாகக் கொண்டது. அதை ஒரு பெயரடையாகப் பயன்படுத்தும் போது அதன் கருத்து ‘முற்றாக உடைந்த’ என்றாகிறது.அதிகாரத்திலிருக்கும் நபர்; அவர் ஒரு காவல்துறை ஊழியரோ, ஒரு அரசியல்வாதியோ அல்லது ஒரு தொழிலதிபரோ யாராக இருப்பினும் அதனை துஷ்பிரயோகம் செய்யும்போது ஊழல் உருவாகிறது. (மேலும்) 11.02.11
_____________________________________________________________________________________________________________
மன்னார் மக்களுக்கு கச்சான் கடலையை உண்ணும் பரிதாப நிலை
வெள்ளத்தால் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட கட்டையடம்பன் கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்ட போதும் எந்த அதிகாரிகளும் உதவவில்லை என்றும் கச்சான் கடலையை மூன்று நேர உணவாக உண்பதாகவும் அக்கிராம மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் புகார் தெரிவித்துள்ளனர். இக் கிராமதிற்குச் சென்ற பாராளுமன்ற உருப்பினர் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து உரையாடியுள்ளார். 83 குடும்பங்களில் 15 குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதோடு செட்டியர் மகன் கட்டையடம்பன் பாடசாலையில் தங்கியுள்ளனர். ஆனால் எங்கள் கிராமத்திற்கு பொறுப்பாகவுள்ள கிராம அலுவலகர் எங்கள் பகுதிக்கு வந்து 5 நாட்களைக் கடந்துவிட்டது என கிராம மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர். நாங்கள் மூன்று நேர உணவாக நாளாந்தம் கச்சான் கடலை உண்டு தேநீர் அருந்தி உயிர் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அம்மக்கள் கவலை தெரிவித்தனர்
_____________________________________________________________________________________________________________
பிரிட்டனுக்கான பதில் உயர்ஸ்தானிகராக அம்ஸா
பிரிட்டனுக்கான பதில் இலங்கை உயர்ஸ்தானிகராக பீ. எம். அம்ஸா நியமிக்கப்பட்டுள் ளார். உயர்ஸ்தானி கராகக் கடமையாற்றிய கலாநிதி நிஹால் ஜயசிங்க ஓய்வு பெற்றதையடுத்து பிரதி உயர் ஸ்தானிகரான அம்ஸா, பதில் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தினகரனுக்குத் தெரிவித்தார். இதேவேளை, சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் கொன்சியுலராகக் கடமையாற்றிய கே. பத்மநாதன் பிரித்தானிய இலங்கை உயர்ஸ்தானி கராலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பத்மநாதனை பிரித்தானியாவிற்கான உயர் ஸ்தானிகராக அரசாங்கம் நியமித்துள்ளதென்று நேற்று (10) சில ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது என்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி தெரிவித்தார்.
_____________________________________________________________________________________________________________
ருமேனியர்கள் சொல்கிறார்கள் கம்யூனிசமே மேம்பட்டது!
ருமேனியாவில் தற்போதுள்ள முதலாளித்துவ ஆட்சியைக் காட்டிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியிலிருந்தபோது வாழ்க்கைத்தரம் சிறப்பாக இருந்ததாக சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பில் பெரும்பான்மையானவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் பங்கெடுத்தவர்களில் பெரும்பான்மையோர் கம்யூனிச சிந்தனையை ஆமோதிக்கின்றனர், 60 சதவிகிதம் பேர் கம்யூனிசம் நல்ல சிந்தனை என்று தெரிவித்துள்ளனர். 4 வருடங்களுக்கு முன்பாக இதே போல கருத்து வாக்கெடுப்பு நடத்தியபோது இருந்ததைக் காட்டிலும் தற்போது கம்யூனிசம் மீதான ஈடுபாடு அதிகரித்துள்ளதாக வாக்கெடுப்பை நடத்தியவர்கள் தெரிவித்தனர். ருமேனிய கருத்து வாக்கெடுப்பு நிறுவனமான சிஎஸ்ஓபி, தனது கருத்துக்கேட்பில் 49 சதமானவர்கள், மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் நிக்கோலஸ் சேசெஸ்கு ஆட்சிக்காலத்தில் வாழ்க்கை இன்னும் மேம்பட்டதாக இருந்ததாகக் கூறியுள்ளனர். அதே நேரம், வெறும் 23 சதமானவர்கள் மட்டுமே இப்போது நல்ல வாழ்நிலை கொண்டிருப்பதாகச் சொல்லியுள்ளனர். மற்றவர்கள் நடுநிலை அல்லது “தெரியவில்லை” என்று பதில் கூறியுள்ளனர். இதில் பங்கேற்றவர்கள், தங்கள் நேர்மறையான மதிப்பீட்டிற்கு தெரிவித்துள்ள காரணங்களைப் பார்த்தபோது, 62 சதமானவர்கள் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு என்றும், 26 சதமானவர்கள் நல்ல வாழ்க்கைத்தரம் என்றும், 19 சதமானவர்கள் அனைவருக்கும் வீட்டுவசதி என்றும் தெரிவித்துள்ளனர். (மேலும்) 11.02.11
_____________________________________________________________________________________________________________
அப்போது தமிழ் தேசிய இராணுவம். இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு.
1 977 இல் தமிழ்ஈழம் பெற்றுத்தருவோம் ஆணை தாருங்கள் என்று ஏமாற்றித்தான் 18 ஆசனங்களைப் பெற்றார்கள்……… ஆனாலும் என்ன நடந்தது? 2004 இல் எமக்கு ஏகப்பிரதிநிதித்துவத்தைத் தாருங்கள் என்று புலிகளின் ஏற்பாட்டில் தங்களுக்குத் தாங்களே வாக்களித்து 22 ஆசனங்களைப் பெற்றார்கள்……… அதற்கு என்ன நடந்தது? 2009 இல் சர்வதேசத்திற்கு முன்பாக ஐக்கியத்தை காட்டுவோம் எனக் கூறி 14 ஆசனங்களைப் பெற்றார்கள்……… அதற்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது? தற்போது வரவிருக்கின்ற உள்ளூராட்சித் தேர்தலில் …… வலுவான போட்டியில்லையென்ற கோசத்தை வைப்பார்கள்போல் தெரிகின்றது ……?,ஆனால் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. அடுத்த தேர்தலில் 14 ஆசனங்கள் வெறும் நான்காக மட்டும் மாறிவிடும். பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது. மகேஸ்வரி நிதியம் யாழில் இயங்கிய “சப்ரா யுனிக்கோ பினான்ஸ்” நிறுவனத்தைப்போல, கொள்ளையர் கூட்டத்தின் கூடாரமும் அல்ல. இதை நடத்திக்கொண்டிருப்பவர்கள் கொள்ளையர் கூட்டமும் அல்ல. நுஹேகொடையில் இயங்கிய சக்வித்தி ரணசிங்க அவர்கள் உங்கள் வழியிலேயே அவரும் செல்ல முற்பட்டது இந்த நாடறியும். அதிஸ்ட இலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் வந்துள்ள இரு தமிழ் தேசிய கூட்டடைமப்பு உறுப்பினர்களில் ஒருவர் ஊழல் செய்த “சப்ரா யுனிக்கோ பினான்ஸ்” நிறுவனத்தின் பங்காளர். அடுத்தவர் உடுவில் பெண்கள் பாடசாலையை தங்களது சுயலாபத்திற்கு பயன்படுத்துவதற்காக சீரழிவுச்சட்ட ஆலோசனை வழங்கிய சட்டவாதி. (மேலும்) 11.02.11
_____________________________________________________________________________________________________________
அரசுக்கும், புலம்பெயர் தமிழருக்கும் இடையில் பேச்சுக்களுக்கு சொல்ஹெய்ம் தேவையில்லை - பிரதமர்
புலம்பெயர் தமிழர்களுக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு எரிக் சொல்ஹெய்ம் தேவையில்லை என சிறிலங்காப் பிரதமர் தெரிவித்துள்ளார். நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் விஷேட தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும், சிறிலங்கா அரசுக்கும் இடையில் சுமுகமான பேச்சுக்களை நடத்துவதற்கு அனுசரணையாக அழைத்தால் வருவேன் என இணையத்தளம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். இது தொடர்பில் சிறிலங்கா பிரதமர் ஜயரட்ண கருத்துத் தெரிவிக்கையில், 'விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுக்களுக்கான அணைசரணையாளராகப் பணியாற்றிய சொல்ஹெய்ம், அப் பேச்சுவார்த்தைகளின் போது, அந்தப் பணியை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தவறிவிட்டவர். அவர் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றுவார் என்ற எதிர்பார்ப்புபோ அன்றித் தேவையோ இருப்பதாக நாம் கருதவில்லை' எனத் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது. எரிக் சொல்ஹெய்ம் முன்பு நடைபெற்ற பேச்சுக்களின் போது அனுசரணையாளராகச் செயற்பட்ட போது, அவர் விடுதலைப் புலிகளுக்குச் சார்பாகச் செயற்படுகின்றார் எனவும், அவர் ஒரு 'வெள்ளைப்புலி' எனவும் சிங்களக் கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை எரிக்சொல்ஹெய்ம் பேச்சுவார்த்தை அனுசரணையாளராகச் செயற்படுவது குறித்த புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்புக்கள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
_____________________________________________________________________________________________________________
காவலில் புலிகள்: உச்சநீதிமன்றம் உத்தரவு
- பி.பி.சி
இலங்கையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி சந்தேக நபர்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு முதல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை வியாழனன்று நடைபெற்றது. அப்போது பிரதம நீதியரசர் அசோக டிசில்வா அவர்கள், தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி சந்தேக நபர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை சட்டமா அதிபரிடம் தாம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார். அந்தப்பட்டியலை கவனத்துக்கு எடுத்துக்கொண்டு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அரச சட்டவாதிக்கு நீதிபதி உத்தரவிட்டார். விடுதலைப்புலி சந்தேக நபர்களை காலவரையறையின்றி தடுப்புக்காவலில் வைத்திருப்பது ஒரு சட்டவிரோதமான செயல் என்று தெரிவித்த பிரதம நீதியரசர், அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதா அல்லது விடுதலை செய்வதா என்பது தொடர்பாக துரித தீர்மானங்களை எடுக்குமாறும் அரச சட்டவாதிக்கு உத்தரவிட்டார். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் தற்போது பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் இவர்களில் பெரும்பாலானவர்கள், 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டவர்கள் என்றும் சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
_____________________________________________________________________________________________________________
எழுக எழுக பிரமிடுகளின் தேசமே!
மரண பயத்தில் அலறுகின்றது சாத்தான்
பென்டகனால் ஆசீர்வதித்துத் தரப்பட்ட அப்பத்தையும் திராட்சை ரசத்தையும்
பருகிய சாத்தான் மட்டுமல்ல முடிவு இத்தனை விரைவாய் வருமென்று
கடவுளர்களும் அறிந்திருக்கவில்லை!
ஊரெங்கும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதாய்
அலறுகின்றன வானொலி தொலைக்காட்சிகள்
மேகத்தின் இளநீலப் பரப்பை அடர்கருப்பாய் மாற்றி உறுமிய
டாங்கிகள் அமைதி காக்கின்றன!
(மேலும்) 11.02.11
_____________________________________________________________________________________________________________
மன்னாரில் அரச வங்கி ஊழியர்கள் ஆர்பாட்டம்
மன்னாரில் இயங்கி வரும் அரச வங்கிகள் ஒன்றிணைந்து தமக்கான ஓயவூதியத்திட்டத்தை அங்கீகரிக்குமாறு கோரி பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருக்கின்றனர். இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் மன்னாரில் இயங்கி வரும் அரச வங்கிகளின் பணியார்கள் பங்கு பற்றியிருக்கின்றன. 1996ம் ஆண்டும் அதற்குப் பின்னரான காலப்பகுதிகளில் வங்கிச்சேவையில் உள்வாங்கப்பட்டவர்களுக்கான ஒய்வூதியத்திட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேகாலப்பகுதியில் அரச சேவையில் உள்வாங்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களின் ஊழியர்களுக்குமான ஓய்வூதியத்திட்டமும் பறிக்கப்பட்டிருந்தது. ஆயினும் பின் அவர்களுக்கு அத்திட்டம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அரச வங்கிகளில் உள்வாங்கப்பட்டிருக்கும் ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திட்டம் மழுங்கடிக்கப்படாமல் வழங்கப்படவேண்டும் என பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். (மேலும்) 11.02.11
_____________________________________________________________________________________________________________
முக நூலின் (Facebook) இன்னொரு முகம்!
- பூலியன்
பேஸ்புக் தெரியுமா உங்களுக்கு? தெரியாவிட்டால் இந்த நூற்றாண்டில் வாழத் தகுதியற்றவர் என்கிறது நவீனகால இளைஞர் கூட்டம். ட்விட்டர் பரிச்சயம் இல்லை என்றால் நீங்கள் இந்தக் காலத்துக்கு ஒத்து வராத ஆள் என்கிறார்கள். இந்த சமூக வலைத்தளங்கள்தான் இன்றைய தகவல் பரிமாற்றத்தின் முதுகெலும்பு. சுஷ்மா ஸ்வராஜ் போன்ற பரபரப்பாக இயங்கும் அரசியல் தலைவர்கள்கூட சூடான செய்திகளை ட்விட்டரில்தான் தருகிறார்கள். அவர்களைப் பின்தொடராமல் விட்டால், ஆறிப்போன தகவல்கள்தான் நமக்குக் கிடைக்கும். சினிமா நட்சத்திரங்களின் ட்விட்டர் செய்திகளைக் கவனித்தால் நிறைய கிசுகிசுக்கள் கிடைக்கும். இன்னும் சில காலத்தில் நம்மூர் குப்புசாமியும் மாரிச்சாமியும்கூட ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கணக்கு வைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு இந்த வலைத் தளங்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. பேஸ்புக்கின் பெயரைத்தான் முகநூல் என்று மொழியாக்கம் செய்திருக்கிறது தமிழ்கூறும் நல்லுலகம். காலையில் பல் துலக்கிவிட்டேன் என்பது முதல் ஒபாமா வீட்டு நாய்க்குட்டிக்குக் காய்ச்சல் என்பது வரை உலகின் எல்லா நிகழ்வுகளையும் அறிவிப்பதற்கு இந்த இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. (மேலும்) 10.02.11
_____________________________________________________________________________________________________________
வெள்ள அகதிகளுக்கு உதவுவதில் சர்வதேசத்தின் கரிசனை போதாது
ஐ.நா. 51 மில்லியன் டொலரைக் கோரிய போதும் இதுவரை கிடைத்தது 8.4 மி. டொலர்
இ லங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் உடனடித் தேவைகளை நிறைவேற்ற மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு ஐ.நா. சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்ற போதிலும் அவற்றை வழங்குவதில் உலக நாடுகள் அவசரம் காட்டாத தன்மை காணப்படுகிறது. கிழக்கு, மத்தி, வடக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோரின் உடனடி மனிதாபிமான தேவைகளை நிறைவேற்ற 51 மில்லியன் டொலர் நிதியை வழங்குமாறு ஐ.நா. கோரிக்கை விடுத்திருந்தது. ஆயினும், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வரை 8.4 மில்லியன் டொலர்களையே பெற்றிருப்பதாக ஐ.நா. அறிவித்துள்ளது. ஐ.நா.வின் இந்த புள்ளிவிபரங்கள் சர்வதேச சமூகம் உதவி வழங்குவதில் வேகம் காட்டாத தன்மையைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே 12 இலட்சம் மக்கள் மழை, வெள்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்டு பின்னர் தமது வாழ்க்கையைக் கட்டியெழுப்ப முயற்சித்துக்கொண்டிருந்த நிலையில் மீண்டும் மோசமான வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்திலும் 11 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்) 10.02.11
_____________________________________________________________________________________________________________
கறுப்பு பணத்தைக் கொண்டு வர அடுத்தடுத்து முயற்சி: அரசு தகவல்
புதுடில்லி : "அன்னிய நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் டிபாசிட் செய்துள்ள கறுப்புப் பணம், வரி விதிக்கத்தக்க வருமானமே. அந்த கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன' என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அன்னிய நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் ஏராளமான அளவில் டிபாசிட் செய்துள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விசாரணை ஏற்கனவே பல முறை நடந்துள்ளது. இந்நிலையில், இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய நிதி அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அன்னிய நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் டிபாசிட் செய்துள்ள கறுப்புப் பணம், நேரடி வரிகள் சட்டத்தின்படி, வரி விதிக்கத்தக்க வருமானமே. இந்தியர்கள் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ளதாக நம்பப்படும் நாடுகளான பஹாமா, பெர்முடா, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவு, ஐல் ஆப் மான், கேமன் தீவு, பிரிட்டிஷ் ஜெர்சி தீவு, மொனாக்கோ, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், அர்ஜென்டினா, மார்ஷல் தீவு போன்றவற்றுடன் வரித் தகவல் பற்றிய பரிமாற்ற ஒப்பந்தங்களை, இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. இவற்றில் எட்டு நாடுகள் உடனான ஒப்பந்தங்களுக்கு, மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. (மேலும்) 10.02.11
_____________________________________________________________________________________________________________
தென்பகுதி வியாபாரிகளால் ஏமாற்றப்படும் யாழ்.மக்கள்
ய ாழ்நகர் நிருபர் : தென்னிலங்கையிலிருந்து யாழ்.குடாநாட்டிற்கு வரும் சில வியாபாரிகள் இங்கு மோசடி வர்த்தகத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால் தாங்கள் பெருந்தொகைப் பணத்தை இழந்துள்ளதாகவும் தினமும் பெருந்தொகைப் பணத்தை இழந்து கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர். மின்சாதனப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுகின்ற மேற்படி வியாபாரிகள் இப்பொருட்கள் சர்வதேசத் தரம் வாய்ந்தவை என்று கூறி இரட்டிப்பு விலையில் விற்பனை செய்வதாக பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர். சில பொருட்கள் அவற்றின் பெறுமதியை விட மூன்று மடங்கு விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், மேற்படி வியாபாரிகளால் விற்பனை செய்யப்படுகின்ற அதே தரத்தையுடைய மின்சாதனப் பொருட்கள் குடாநாட்டிலுள்ள விற்பனை நிலையங்களில் மிகவும் குறைந்த விலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தில் வியாபாரம் செய்பவர்களிடம் 12,700 ரூபாவுக்கு வாங்கிய அவண் மற்றும் 7,850 ரூபாவுக்கு வாங்கிய காஸ் குக்கர் என்பன மானிப்பாயில் முறையே 5,900 ரூபாவுக்கும் 2,500 ரூபாவுக்கும் விற்பனையாவது தெரியவந்துள்ளது. (மேலும்) 10.02.11
_____________________________________________________________________________________________________________
தமிழ் பேசும் பொலிஸார் 2500 பேர் விரைவில் நியமனம்
மும்மொழி பயன்பாடு; கனடாவிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்: வாசுதேவ
பொலிஸ் சேவையில் மேலும் 2500 தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரிய தெரிவித்தார். ஏற்கனவே கொன்ஸ்டபிள் தரத்தில் 500 பேரை இணைத்துக் கொண்டுள்ளதுடன், புதிதாக உப பரிசோதகர்கள், பெண் பொலிஸ் பரிசோதகர்கள், பெண் கொன்ஸ்டபிள்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், தற்போது அதற்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும், பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். அரச கரும மொழிகள் ஆணைக்குழுவால் மும்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள பொலிஸாருக் கான உரையாடல்கள் அடங் கிய கைநூலை பொலிஸ் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார். தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் தலைமையில் கொழும்பு தொழில்வாண்மை யாளர்களின் அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சின் செயலாளர் திருமதி மல்காந்தி விக்கிரமசிங்க, அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் என். செல்வகுமாரன், முன்னாள் தலைவர் ராஜா கொல்லுரே, கனேடிய உயர் ஸ்தானிகர் புறூஸ் லெவி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண ஆகியோரும் கலந்து கொண்டனர். (மேலும்) 10.02.11
_____________________________________________________________________________________________________________
புலிகள் இயக்கத்தை மீள இயக்குவதற்கு கப்பம் கேட்டவர்கள் தடுப்பு காவலில்
கதிரேசன் வீதியை சேர்ந்த பீடி இலை இறக்குமதி செய்யும் ஆறுமுகம் மாணிக்கம் சுப்பிரமணியம் எனும் வர்த்தகரிடம் ஏழு மில்லியன் கப்பம் கோரிய இருவர் கொழும்பு பிரதான நீதவானின் அறிவுறுத்தலின் பேரில் கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸாரால் இன்று புதன்கிழமை தொடக்கம் தடுத்துவைக்கப்;பட்டுள்ளனர்.பம்பலப்பிட்டியில் வசிக்கும் இந்த வர்த்தகரிடம் புலி இயக்கத்தை மீளவும் இயக்குவதற்குக ஏழு மில்லியன் வழங்க வேண்டும் என இவர்கள் தொலைபேசி மூலம் மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு செய்யவிடின் அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் கெடுதி விளைவிக்கப்படும் என இந்த அனாமதேய தொலைபேசி அழைப்பாளர்கள் மிரட்டினர். வர்த்தகரான மாணிக்கம் சுப்பிரமணியம் இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்தார். பணம் கொடுக்கும்போது கப்பம் கோருபவர்களை கையும் மெய்யுமாக பிடிக்க பம்பலப்பிட்டி பொலிஸார் ஒழுங்கு செய்தனர். செட்டித்தெருவிலுள்ள ஒரு நகை கடைக்கு அண்மையில் வைத்து பணத்தை முறைப்பாட்டாளர், மிரட்டல்காரர்களிடம் கையளித்தபோது இருவரும் கைது செய்யப்பட்டனர். மொஹம்மட் சலாகுதீன் மொஹம்மட் அஸ்லம் மற்றும் இந்திய பிரஜையான நூர் அமித் முகம்மட் அஷ்ரப் ஆகிய இருவருமே கைது செய்யபப்ட்டவர்களாவர். இவர்களுக்கு புலி இயக்கத்துடன் தொடர்பு உண்டா என விசாரணை செய்வதற்காக இவர்களை தடுத்து வைத்து விசாரரிக்க அனுமதிக்கும்படி குற்ற புலனாய்வு பிரிவு பொலிஸார் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டனர். இதற்கான அனுமதியை வழங்கிய பிரதான நீதிபதி விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டார்.
_____________________________________________________________________________________________________________
சுதந்திரம் என்றான பின்!
எஸ்.எம்.எம்.பஷீர்
ஐ ம்பதாம் ஆண்டு சுதந்திர தினத்தை இலங்கை அரசு மாசி மாதம் 4ஆம் திகதி 1998 ஆம் ஆண்டு கொண்டாடியபோது நிலவிய இலங்கையின் அரசியல் யுத்தகள நிலவரங்களை பின்னோக்கி பார்ப்பதன் ஊடாக கடந்த ஒரு தசாப்ப கால யுத்த அரசியல் மாற்றங்கள் எல்லாவற்றையும் விட புலிப் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டபின்னர் இலங்கையில் இப்போது கொண்டாடப்பட்ட அறுபத்தி மூன்றாவது சுதந்திர தினத்தின் வேறுபாட்டினை உணர்ந்து கொள்ளமுடியும். ஐம்பதாவது ஸ்ரீ லங்காவின் சுதந்திரதினத்துக் கெதிரான எதிர்ப்பு போராட்டங்களை ஆர்ப்பாட்ட பேரணிகளை புலிகள் புலம் பெயர் நாடுகளில் தமது நாட்டினை (தமிழ் ஈழத்தினை) அந்நிய சக்தியான ஸ்ரீ லங்கா ஆக்கிரமித்துள்ளது என்ற அடிப்படையில் புலம் பெயர் தமிழர்களில் பெரும்பான்மையோரையும் தமிழ் தீவிர தேசியவாதிகளையும் இணைத்து நடத்தினர். அதிலும் குறிப்பாக கனடாவிலும் பிரித்தானியாவிலும் (01 /02/1998) அன்று நடந்த அவ்வாறான எதிரணி பேரணிகள் அன்று புலிகளால் பெரிய வெற்றிகளாக சித்தரிக்கப்பட்டன. அதற்கான முக்கிய காரணம் என்னவெனில் அப்போது புலிகள் பயங்கரவாதிகளாக பிரித்தானியாவில் பிரகடனப்படுத்தப் பட்டிருக்கவில்லை. (மேலும்) 10.02.11
_____________________________________________________________________________________________________________
வவுனியாவில் அரிசிக்கு தட்டுப்பாடு
- பி.பி.சி
இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரணமாக உணவுப் பொருட்களை வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இங்கு அரிசி, கோதுமை மாவு போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுவதே இதற்கான காரணம் என கூறப்படுகின்றது. தொடர்ச்சியான மழையின் காரணமாக அரிசி ஆலைகள் நெல்லை அவித்து காயவிடுவதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியிருப்பதும், தற்போது ஆலைகளில் போதிய நெல் கையிருப்பில் இல்லாமல் இருப்பதும் அரிசி தட்டுப்பாட்டிற்கான முக்கிய காரணம் என அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றார்கள். இந்தத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தான் அவசர கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார். (மேலும்) 10.02.11
_____________________________________________________________________________________________________________
சூடுபிடிக்கிறது யாழ் உள்ஊராட்சி தேர்தல் களம் ! சந்திக்கு வருகிறது சப்றா சரவணபவான் குழுமம் !
- நமது யாழ் நகர் நிருபர்
இதுவரையில் சரியாக எண்ணிக்கை தெரியவராத பலநூறு ஏழை மக்களின் சேமிப்பை ஏமாற்றிப் பெற்று ஈவிரக்கமின்றி ஏப்பம் விட்ட சப்றா நிதி நிறுவன தலைவரும், யாழ் ‘உதயன்’ பத்திரிகை உரிமையாளரும், தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு சப்றா சரவணபவன் பற்றி இலங்கை பாராளுமன்றத்தில் பிரஸ்தாபித்து யாழ் உள்ஊராட்சி தேர்தல் பிரச்சாரத்தை தொடக்கி வைத்துள்ளார் இலங்கை அரசின் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா. 1993 ம் ஆண்டு மூடப்பட்ட திரு சப்றா சரவணபவானின் சப்றா யுனிகோ நிதி நிறுவனம் திரு சப்றா சரவணபவான் குடும்பத்தினராலேயே நிர்வகிக்கப்பட்டு வந்திருந்தது பரகசியமானது. சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் அறிக்கைகளில் இந்நிறுவனத்தில் ஓய்வூதியர்கள் வைப்பிலிட்டிருந்த ஏறத்தாழ 60 மில்லியன் ரூபாய்கள் திரு சப்றா சரவணபவான் குடும்பத்தினரால் சூறையாடப்பட்டதாகவும், இதைவிட திருமணமாகாத தமது பெண் பிள்ளைகள் பெயரிலும், குழந்தைகள் பெயரிலும் பல ஏழைப் பெற்றோர்கள் வைப்பிலிட்டிருந்த ஏறத்தாழ 46 மில்லியன் ரூபாவுடன் திரு சப்றா சரவணபவான் குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவர் தலைமறைவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் திரு சப்றா சரவணபவான் நெருக்கத்தில் இருந்த காரணத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் திரு சப்றா சரவணபவனை சட்டத்தின் முன் நிறுத்தியிருக்க முடியவில்லை. இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட பலர் தற்கொலை செய்து கொண்டிருந்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன. (மேலும்) 10.02.11
_____________________________________________________________________________________________________________
யாழ். நகரப் பாடசாலைகள் சிலவற்றின் முன்பாக போக்குவரத்துக்களை கட்டுப்படுத்திட வேண்டும்
பெற்றோர்கள் வேண்டுகோள் : யாழ். நகரப் பாடசாலைகள் தினமும் விடுகின்ற நேரத்தில் அப்பாடசாலைகளுக்கு முன்பாக உள்ள வீதிகளில் பாடசாலைச் சேவையில் ஈடுபடுகின்ற வாகனங்களைத் தவிர ஏனைய வாகனங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனப் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலை யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை, யாழ். இந்து மகளிர் கல்லூரி , யாழ். இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை ஆகியவற்றின் முன்பாக உள்ள வீதிகளில் பாடசாலை விடும் நேரத்தில் மாணவர்கள் பயணம் செய்வதற்கும் பாடசாலைகளை விட்டு வெளியேறுவதற்கும் பெரும் வாகன நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். பாடசாலைகள் விடும் நேரமான பிற்பகல் 2மணியிலிருந்து 2.30 மணி வரையான அரைமணி நேரம் குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு முன்பாக உள்ள வீதிகளில் வாகனங்களின் நெரிசல் அதிகரித்துக் காணப்படுகிறது. பாடசாலைச் சேவையில் ஈடுபடுகின்ற பேருந்துகள் மற்றும் தனியார் பஸ்கள், ஓட்டோக்கள் என்பனவும் தமது பிள்ளைகளை அழைத்துச் செல்ல வருகின்ற பெற்றோரின் மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் போன்றனவுமே நெரிசலை ஏற்படுத்துகின்ற நிலையில் ஏனைய வாக னங்களும் அதேநேரம் அந்த வீதிகளால் பயணிப்பதால் மாணவர்களும் ஆசிரியர்களும், பெற்றோரும் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. சிறியரக வாகனங்களைத் தவிர கனரக வாகனங்கள், லொறிகள் என்பனவும் அந்த வீதிகளால் பயணிப்பதால் மாணவர்கள் விபத்துக்களைச் சந்திக்கவும் நேரிடுகிறது. எனவே குறிப்பிட்ட அரைமணி நேரத்திற்காவது இவ்வாறான வாகனங்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி மாணவர்களின் இலகுவான போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்க உரிய தரப்பினர் முன்வரவேண்டுமெனப் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்
_____________________________________________________________________________________________________________
அசாஞ்ச் கைது முயற்சி அமெரிக்கா தோல்வி
நியூயார்க்:"விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை எவ்விதத்திலாவது கைது செய்துவிட வேண்டும் என, அமெரிக்காவின் முயற்சி தோல்வியடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்தாண்டு, அசாஞ்ச் தனது "விக்கிலீக்ஸ்' இணையதளத்தில், அமெரிக்க வெளியுறவுத் துறை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்கள் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டார். இந்த ஆவணங்களை அமெரிக்க அரசிடம் திருடி அசாஞ்சிடம் கொடுத்ததாக அமெரிக்க ராணுவ வீரர், ப்ரேட்லி மேனிங் (22) என்பவர் கைது செய்யப்பட்டார்.விசாரணையில், அவருக்கும், அசாஞ்சுக்கும் தொடர்பு இருப்பதற்கான எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. அசாஞச் சொல்லி தான் மேனிங், ஆவணங்களை திருடியதாக இவ்வழக்கை அமெரிக்க தரப்பு ஜோடிக்க முயல்கிறது.அதன் மூலம் தான் சட்டரீதியாக, விசாரணை என்ற பெயரில், அசாஞ்சை கைது செய்து, அமெரிக்கா கொண்டு வர முடியும். ஆனால், இருவருக்கிடையிலான தொடர்பு பற்றிய ஆதாரங்கள் கிடைக்காததால் அமெரிக்காவின் முயற்சி தோல்வியடைந்து வருகிறது.
_____________________________________________________________________________________________________________
இலங்கையில் கொலை செய்துவிட்டு கள்ளத்தோணியில் ராமேசுவரம் தப்பி வந்த சிங்கள வாலிபர் கைது
இலங்கையில் கொலை செய்துவிட்டு கள்ளத்தோணியில் ராமேசுவரம் தப்பி வந்த சிங்கள வாலிபர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.ராமேசுவரம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கியூ பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு கோபால் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பரக்கத்துல்லா, சண்முகவேல், போலீசார் செய்யது சுல்தான், பெரியசாமி, நாராயணன், பாலு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அவருக்கு சிங்களமொழி மட்டுமே தெரிந்திருந்ததால், விசாரணை நடத்த முடியவில்லை. அவரிடம் இலங்கை பணம் இருந்தது. பின்னர் சிங்கள மொழி தெரிந்தவரை வரவழைத்து அவர் மூலம் வாலிபரிடம் போலீசார் விசாரணை செய்தனர். இதில் அந்த நபர், இலங்கை காளே மாவட்டம் ஊரகவத்தையை சேர்ந்த கமலசஞ்சீவ சொய்சா (வயது 25) என்பது தெரியவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கை ஊரகவத்தையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவரை கொலைசெய்து விட்டு கள்ளத்தோணியில் ரூ.1 லட்சம் கொடுத்து ராமேசுவரம் தப்பி வந்ததாகவும், இலங்கையில் போலீசார் தன்னை தேடிவருவதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கிï பிரிவு போலீசார் ராமேசுவரம் நகர் போலீஸ் நிலையத்தில் இலங்கை வாலிபரை ஒப்படைத்தனர். அவர் மீது பாஸ்போர்ட் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். பின்பு ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
_____________________________________________________________________________________________________________
வளங்களின் வரையறை, வகைப்பாடு மற்றும் அபிவிருத்தி என்பதன் பொருள்.
- பேராசிரியர் இரா.சிவசந்திரன்
சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் “யாழ்ப்பாண மாவட்ட வளங்கள், பயன்பாடு, அபிவிருத்தி வழிமுறைகள்” எனும் தலைப்பில் நடத்திய இருநாள் செயலமர்வில் 05.02.2011 அன்று காலை இடம்பெற்ற முதலாவது அமர்வில் பேராசிரியர். இரா சிவசந்திரன் அவர்களால் வழங்கப்பட்ட ஆய்வுரை. (மேலும்) 10.02.11
_____________________________________________________________________________________________________________
அலிக்கம்பை வனக்குறவர்: கவனிக்கப்படாத சமூகம்!
-மப்றூக்
ஆரம்ப காலத்தில் மாந்தை, மன்னார், புத்தளம் போன்ற பகுதிகளில் இவர்கள் கூட்டங் கூட்டமாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் அநுராதபுரம், பொலநறுவை போன்ற பிரதேசங்களிலும் இவர்கள் வசித்துள்ளார்கள். இன்றும் - அநுராதபுரம், தம்புத்தேகம, குடாகம, கலேவெல, பொலநறுவை போன்ற பகுதிகளில் அளிக்கம்பை வனக் குறவர்களின் உறவினர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். கிழக்கு மாகாணத்திலுள்ள காட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த வனக் குறவர்கள், சேனநாயக்க சமுத்திரத் திட்டம் உருவாக்கப்பட்டபோது இடம்பெயரத் தொடங்கினார்கள். ஏனெனில் இத்திட்டத்தி;ன் காரணமாக காடுகள் அழிக்கப்பட்டு வயல் நிலங்கள் உருவாக்கப்பட்டன. எனவே, மீண்டும் காடுகளை நோக்கி இவர்கள் இடம்பெயரத் தொடங்கினார்கள். அவ்வாறு இடம்பெயர்ந்து வந்தவர்களே இந்த - அலிக்கம்பை வனக் குறவர்கள்! 1942ஆம் ஆண்டு முதல் இவர்கள் அலிக்கம்பைப் பகுதியில் வாழ்ந்து வருகின்றார்கள். அலிக்கம்பையிலுள்ள குறவர்களின் தாய்மொழி - தெலுங்கு அல்லது தெலுங்கு போன்றதொரு மொழியாக இருக்கிறது. ஆனால், தமிழையும் இவர்கள் மிக நன்றாகப் பேசுகின்றனர். இருந்தபோதும், இவர்கள் தமக்கிடையில் அவர்களுடைய தாய் மொழியிலேயே உரையாடிக் கொள்கின்றார்கள். இதில் கவனிக்கத்தக்க ஒரு விடயம் என்னவென்றால், இவர்கள் பேசும் மொழிக்கு எழுத்து வடிவமில்லை! (மேலும்) 10.02.11
_____________________________________________________________________________________________________________
“வார உரைகள்” சஞ்சிகையின் ஆசிரியர் மீது தாக்குதல்
மட்டக்களப்பு காத்தான்குடி “வார உரைகள்” சஞ்சிகையின் ஆசிரியர் புவிரமதுல்லா நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளார். இவர் மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் தீவிர சத்திர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அரச நிறுவனங்களின் ஊழல்கள் மற்றும் மறைமுகமான செயற்பாடுகள் தொடர்பாக இவர் கடந்த சில மாதங்களாக கட்டுரைகள் எழுதி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
_____________________________________________________________________________________________________________
முப்பது வருடங்களின் பின்னர் விமானப்படை தொண்டர் பயிற்சிக்கு யாழ் மாணவர்கள்
முப்பது வருடங்களின் பின்னர் முதல் தடவையாக இலங்கை விமானப்படைத் தொண்டர் பயிற்சிக்கு யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்தப் பயிற்சிக்காக கல்லூரியின் உயர்தர மாணவர்கள் திங்கட்கிழமை (7.2.2011) தியாத்தலாவை முகாமுக்கு பயணத்தை மேற்கொண்டனர். இலங்கை விமானப்படை தொண்டர் பயிற்சிக்கு வடமாகாணத்தில் இருந்து கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் தெரிவு செய்யப்பட்னர். பாடசாலை மாணவர்களை இராணுவத் தொண்டர் படையணியில் சேர்த்துக்கொள்வதற்கான பயிற்சிகள் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் முப்பது வருடகாலமாக தொடர்ந்த யுத்தம் காரணமாக வடக்குகிழக்கில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
_____________________________________________________________________________________________________________
கே.பி.பியின் அரசியல் பிரவேசம்
-கே.சஞ்சயன்
கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் அரசியலுக்கு வரப்போகிறாரா?, புதிய கட்சி ஒன்றைத் தொடங்கப் போகிறாரா என்ற கேள்வி கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 28ஆம் திகதி தொடக்கம் அவர் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு ஒரு தொகுதி புலம்பெயர் ஆதரவாளர்களுடன் சென்று திரும்பியதும்- அங்கு நடத்தப்பட்ட கலந்துரையாடல்களும் தான் இந்தச் சந்தேகங்களுக்குக் காரணம். யாழ்ப்பாணத்தில் அவர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அடுத்து யாழ்.பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற- போரில் பாதிக்கப்பட்டோருக்கான உதவி வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். இந்தக் கலந்துரையாடலில் உரையாற்றிய போது கே.பி கண் கலங்கியதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிகழ்வுகளில் பங்கேற்க ஊடகவியலாளர்களுக்கு படையினர் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் எப்படியோ நுழைந்து விட்ட செய்தியாளர்களால் தான் அங்கு பேசப்பட்ட சில விடயங்கள் வெளியே கசிந்தன. (மேலும்) 09.02.11
_____________________________________________________________________________________________________________
பொன்சேகா விடுதலை கோரி ஆர்ப்பாட்டம்
இலங்கை இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா அடைத்துவைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் வெளியே ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆர்வலர்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். சிறைக்கு வெளியே கூடி நின்று ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் பொன்சேகா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர். ஊழல் குற்றம் உறுதிசெய்யப்பட்டு இரண்டரை வருட கால சிறைத் தண்டனையை சரத் பொன்சேகா அனுபவித்து வருகிறார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்டதற்காகப் பழிவாங்குவதற்காகத்தான் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறையில் அடைத்துள்ளார் என பொன்சேகாவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஒரு வருடத்துக்கு முன்பு பொன்சேகா கைது செய்யப்பட்டிருந்தார். B.B.C.News
_____________________________________________________________________________________________________________
பாதுகாப்பினை கருத்திற்கொண்டே யாழில் பதிவு நடவடிக்கை: யாழ். அரச அதிபர்
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகின்ற பதிவு நடவடிக்கைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்திற்கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன என்று யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், தமிழ்மிரருக்கு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் குடியிருப்பாளர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் புகைப்படங்கள் எடுக்கப்படுவதாகவும் வெளிவந்த செய்திகள் தொடர்பாக யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்: 'யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றபோது அரச அதிபர் என்றரீதியில் என்னிடம் கேட்கவேண்டிய அவசியம் படையினருக்கு கிடையாது. அது பாதுகாப்பு அமைச்சினூடாகவே மேற்கொள்ளப்படுகின்ற விடயம். அந்தவகையில்தான் யாழ்ப்பாணத்தில் பதிவுகள் மேற்கொள்வது தொடர்பாகவும் எனக்கு உத்தியோகபூர்வமான அறிவித்தல் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்ற குற்றச்செயல்களை தடுப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதைமட்டும் என்னால் உறுதிப்பட கூறமுடியும். இந்நடவடிக்கையையிட்டு பொதுமக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை' என்று குறிப்பிட்டார்.
_____________________________________________________________________________________________________________
ஜேர்மனியில் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு
ஜேர்மனியிலுள்ள விடுதலைப் புலிகளின் பேச்சாளர் மீது பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டாரென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக நீதித்துறை அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தனர். ஜேர்மன் பிரஜாவுரிமையுள்ள அகிலன் கடந்த நவம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டார். இவர் 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜேர்மனியில் விடுதலைப் புலிகளுக்காக தீவிரமாக இயங்கியதாக வழக்குத் தொடுநர்கள் தெரிவித்துள்ளனர். இவர் வெளிநாட்டு பயங்கரவாத இயக்கத்தில் அங்கத்தவராக இருந்தாரெனவும் ஜேர்மனியின் ஏற்றுமதி சட்டத்தை மீறினாரெனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவர் 370,000 யூரோ பெறுமதியான பொருட்களை விடுதலைப் புலிகள் நிதியிலிருந்து வாங்கி இலங்கை புலிகளுக்கு அனுப்பினாரெனக் கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2007ஆம் ஆண்டு ஜுன் மாதம் விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்தது. ஜேர்மனி விஜிகனேந்திரா, சதாசிவம், சசிதரன் ஆகியோர் மீதும் விடுதலைப் புலியுடன் தொடர்புடையவர்களென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
_____________________________________________________________________________________________________________
தனித் தமிழீழத்திற்கு அமெரிக்கா ஒருபோதும் ஆதரவளிக்காது
தமிழீழம் என்றொரு தனிநாடு அமைய அமெரிக்கா ஒருபோதும் ஆதரவளிக்காது என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் தெரசிடா ஷாபர் தெரிவித்துள்ளார். இலங்கை, நேபாளம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் தொடர்பில் அமெரிக்காவின் பார்வை குறித்து சர்வதேச செய்திச் சேவை ஒன்றின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் பதிலளிக்கும் போது:- இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரால் இழைக்கப்பட்டதாக கூறப்படும் யுத்த குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவினால் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அலட்சியம் செய்ய முடியாது. ஏனெனில் அவ்வாறான குற்றச்சாட்டுக்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. தேசிய நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தலைமையிலான அரசாங்கத்தின் நோ்மை குறித்து பாராட்டும் அதேவேளை, அது தொடர்பிலான முன்னேற்றம் குறித்து அதிருப்தியாகவுள்ளது. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில் அரசாங்கம் வெற்றி காணத் தவறும் பட்சத்தில் மீண்டும் உள்வாரியான பிரச்சினைகள் ஏற்படலாம். என்று அவர் தெரிவித்துள்ளார்
_____________________________________________________________________________________________________________
யாழ் மாவட்டத்தில் போரின் பின்னரான பெண்களின் பொருளாதார சமூக மீளுருவாக்கப் பயணம்.
- திருமதி.சரோஜா சிவசந்திரன்
சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் “யாழ்ப்பாண மாவட்ட வளங்கள், பயன்பாடு, அபிவிருத்தி வழிமுறைகள்” எனும் தலைப்பில் நடத்திய இருநாள் செயலமர்வில் 05.02.2011 அன்று மாலை இடம்பெற்ற இரண்டாவது அமர்வில் திருமதி சரோஜா சிவசந்திரன் அவர்களால் வழங்கப்பட்ட ஆய்வுரை.
இன்று எமது நாடு வரலாற்றிலேயே மிக இக்கட்டான நிலையிலே உள்ளது. வன்முறை மோதலிலிருந்து விடுபட்ட போதிலும் வன்முறை கலாசாரத்தை முற்றாக அழிக்க முடியாத நிலை, உருவாக்கப்படும் திட்டங்கள் வறுமையை ஒழிப்பதற்கான திட்டங்களாக அமையவில்லை. பொருளியலாளர் அமத்தியா சென் அவர்களது கருத்துப்படி “அபிவிருத்திப் பணிகளில் சனநாயக விழுமியங்கள் இணைக்கப்டும் போது அவை மேலும் செழுமை பெற்று சமூகத்தின் அடிப்படைக் கலாசாரமாக மாற்றம் பெறுகின்றன” என்று கூறினார். வளங்களின் அதி உச்ச பயன்பாடு அபிவிருத்தியின் அடிப்படை தேவையாகும். ஆனால் நாட்டின் முழுமையான வளங்களையும் அரசு தன் பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவரும் போக்கே இன்று காணப்படுகின்றது. அரசசார்பற்ற நிறுவனங்கள் கூட அரசின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டிய நிலை உள்ளது., போரின் வெற்றி தேர்தல் வெற்றிக்கு காரணமாக அமைந்ததா? அல்லது நாட்டை உலுக்கும் பொருளாதார பிரச்சினைகட்கு தீர்வு கண்டுள்ளதா? என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. (மேலும்) 08.02.11
_____________________________________________________________________________________________________________
மாவை எம்.பியின் குற்றச்சாட்டுகளை இராணுவம் நிராகரிப்பு
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பொதுமக்களிடம் பணம் வசூலித்து, குடும்பப் புகைப்படங்களைப் பிடிப்பதற்கு கட்டாயப்படுத்துவதாகவும் சிங்களத்தில் உள்ள பல படிவங்களில் கையெழுத்திடுமாறு நிர்ப்பந்திப்பதாகவும் த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை இராணுவம் நிராகரித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா எழுதிய கடிதத்தில் மேற்படி குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். இக்குற்றசாட்டுகளை அடிப்படையற்றவை என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல இன்று செய்வாய்க்கிழமை கூறியுள்ளார். 'பொலிஸ் கட்டளைச் சட்டத்தின்படி ஒவ்வொரு பிரஜையும் பதிவுசெய்து கொள்வது அவசியமாகும். யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல, கம்பஹா போன்ற இடங்களிலும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விரைவில் இலத்திரனியல் முறையிலான அடையாளங்காணல் திட்டங்கள் அமல்படுத்தப்படவுள்ளன. இராணுவம் எதற்காக யாழ். நகரில் பொது இடங்களில் குடும்பப் புகைப்படங்களைப் பிடிப்பதற்கு பணம் வசூலிக்க வேண்டும்? இத்தகைய குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. நாம் இவற்றை முற்றாக நிராகரிக்கிறோம்' என மேஜர் ஜெனரல் உபய மெதவல கூறினார். 'யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்களை பேணும் நடவடிக்கைகளை இராணுவத்தின் உதவியுடன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். எனினும் இராணுவம் வீதி அபிவிருத்தி போன்ற அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது' என அவர் தெரிவித்தார்.
_____________________________________________________________________________________________________________
யாழ்.குடாநாட்டின் பல்வேறு இடங்களிலும் படையினர் திடீர் வீதிச் சோதனை
யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த திங்கட்கிழமை படையினரின் சோதனை நடவடிக்கைகள் அதிகரித்திருந்தன. இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களிலுமிருந்தும் பயணிகள் இறக்கப்பட்டு சோதனைகளுக்குட்படுத்தப்பட்டனர். இதன் போது பயணிகளின் அடையாள அட்டைகளும் கைப்பைகள் அவர்கள் கொண்டு சென்ற பொதிகள் போன்றனவும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. வாகனங்களிலும் சோதனைகள் இடம்பெற்றன. இதேவேளை, மோட்டார் சைக்கிள்களில் பயணம் மேற்கொண்டவர்களும் இடைமறிக்கப்பட்டு அவர்களின் ஆவணங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. படையினரின் இந்தச் சோதனை நடவடிக்கைகள் காரணமாக வீதிகளால் பயணித்த பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, யாழ்.குடாநாட்டில் உள்ள மக்கள் மீண்டும் குடும்பப் புகைப்படங்கள் எடுக்குமாறு படையினரால் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள நிலையில் வீதிச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்களிடையே அச்ச உணர்வைத் தோற்றுவித்துள்ளது
_____________________________________________________________________________________________________________
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் இந்திய கிராமவாசிகள்: டைம்ஸ் பத்திரிகை
பாஸ்டன்,பிப்.6: மெக்ஸிகோ எல்லைவழியாக அமெரிக்காவுக்குள் ஏராளமான இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைவதாக லாஸ்ஏஞ்சலீஸ் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிக்கும் இந்தியர்களில் பெரும்பாலோர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள். அதிலும் பஞ்சாப், குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்றும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. மெக்ஸிகோ எல்லைவழியாக இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைவது கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை 1,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2010-ல் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் மட்டும் 650 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் பத்திரிகை கூறியுள்ளது. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய விரும்பும் இந்தியர்கள் பெரும்பாலும் மும்பையில் இருந்து விமானம் மூலம் துபை செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து வெனிசுலா, குவாதமாலா, ஈகுவடார் ஆகிய நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டுக்குச் செல்கின்றனர். அங்கிருந்து மெக்ஸிகோவுக்கு வந்து, எல்லைப் பகுதி வழியாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்துக்குள் நுழைந்துவிடுகின்றனர். இப்பாதை வழியாக அதிகமாக லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்தான் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். இதற்கு அடுத்தபடியாக இந்தியர்கள் புகுகின்றனர். இப்பாதை வழியாக சட்டவிரோதமாக நுழையும் செயல் நடைபெறுகிறது என்பதை அறிந்ததுமே அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இயன்றவரை சட்டவிரோத நுழைவைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமெரிக்க எல்லையோர பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததாகவும் லாஸ்ஏஞ்சலீஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
_____________________________________________________________________________________________________________
புலிகள் குறித்து தகவல் மறைத்த முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு குற்றப்பத்திரிகை
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து தகவல் அறிந்து கொண்டு அதனை பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்காமல் மறைத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கம்பஹா மாவட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி லக்ஷ்மன் குரேவிற்கு எதிராக பாரிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபரினால் நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர் வழக்கு விசாரணையை எதிர்வரும் மார்ச் 15ம் திகதி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களான ரமேஸ் மற்றும் அஸ்தார் ஆகியோர் குறித்து தகவல் தெரிந்து கொண்டு அதனை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் மறைத்ததாக சட்டமா அதிபரினால் லக்ஷ்மன் குரே மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
_____________________________________________________________________________________________________________
“பாரிஸிலுள்ள தமிழர்களின் குட்டி யாழ்ப்பாணம் அநேகமாக குட்டி பம்பாய் எனத் தவறாக அழைக்கப் படுகிறது”
ஆக்கம்: அமென்டா மொரோ
அ து அநேகமாக குட்டி பம்பாய் எனத் தவறாக அழைக்கப் பட்டாலும் சென்ட் டானிஸின் போபோக் வீதியிலிருந்து லா சப்பலின் வடக்கு வரை நீண்டிருக்கும் பகுதியின் கலகலப்பான உயிரோட்டமுள்ள சுற்றுப்புறம் உண்மையில் பரிஸில் வாழும் தமிழ் சமூகத்தினரது இருப்பிடமாகும். அந்தப் பகுதியிலிருந்து தவழ்ந்து வரும் காற்றின் நறுமணத்தில் கலந்திருப்பது பலதரப்பட்ட வண்ணமயமான கடைகளில் விற்பனையாகும் பட்டுத் துணியிலிருந்து கமகமக்கும் வாசனைத் திரவியங்கள் வரையானவற்றின் சுகந்தமே. இதன் முகப்புத் தோற்றம் எப்படியாயினும் இந்தப் பகுதியின் பிறப்பிடத்துக்கான துயரம் தோய்ந்த யதார்த்தத்தின் முகமூடியையே அணிந்திருக்கிறது. அது ஆரம்பமாகியது 1983 ல் பரிஸ் முதன்முதலாக அதன் தமிழ் கடையொன்றை திறந்து வைத்தது. அதைத் திறந்தவர் ஸ்ரீலங்காவின் வன்முறை நிறைந்த உள்நாட்டு யுத்தம் காரணமாக அங்கிருந்து வெளியேறிய அகதி ஒருவர்.அதே வருடம் எல்.ரீ.ரீ.ஈ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற அமைப்பால் தொடரப்பட்ட சுதந்திரப் போராட்டம் கடந்த மூன்று தசாப்தங்களாக நீண்டு 80,000 வரையான உயிர்களைப் பலி வாங்கியது. எனவே அவர்களால் பரிஸில் கால் பதிக்க முடிந்தது. பிரான்ஸ் அதிகாரிகளால் அகதிகளைப் பாதுகாப்பதற்காக முறையான தஞ்சக் காலகட்டத்தை வழங்கி உதவியதற்காக அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகட்டும். குட்டி யாழ்ப்பாணம் நகரின் வடபுற வாழ்வுக்கு வசந்தம் பாலிக்கிறது. (மேலும்) 08.02.11
_
|