a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி             உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்      எங்கள்தேசம்         சலசலப்பு         நோயல்நடேசன்     விடிவெள்ளி         எங்கள்பூமி              ரீவடை இணையம்        பார்வை             தமிழ்யுகே                     புயல்                 புளொட்யுகே      யாழ்முஸ்லீம்      புண்ணியாமீன் 
யவ்னா ருடே                 எஸ்.ஆர்.லெம்பட்

Asientribune
Lines-Magahzine
The lka academic
Tamil Week            sldf
Uthr                
        

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.10                                                         31.03.2011

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்: கடும் பாதுகாப்பு

சூதாட்டக்காரர்களை மடக்கிப்பிடிக்க கொழும்பில் இன்டர்போல் அதிகாரிகள்

உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இலங்கை நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. கொழும்பு கெத்தாராம ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய கூறினார். இலங்கையில் நடைபெறும் போட்டித் தொடரில் எதுவித அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை. ஆனாலும் உச்சப்பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் மா அதிபர் கூறினார். இன்று நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. இலங்கை கிரிக்கெட் சபை உலகக் கிண்ணச் சுற்றுப்போட்டிப் பணிப் பாளர் சுராஜ் தந்தெனியவும் இதில் கலந்து கொண்டார். பொலிஸ்மா அதிபர் மேலும் கூறியதாவது அரையிறுதிப் போட்டிக்கான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள் ளன. விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மைதானத்திற்கு வருவதற்கான விசேட ஒழுங்குகள் என்பனவும் மேற்கொள்ளப் பட்டுள்ளன. மதுபானம் பட்டாசு தடிகள் என்பன எடுத்து வருவது தடை செய்யப் பட்டுள்ளது. (மேலும்) 29.03.11

_____________________________________________________________________________________________________________

நிபந்தனையற்ற அடிப்படை சம்பளம் ரூ 500, ஊக்குவிப்பு கொடுப்பனவு ரூ 250, மொத்த நாட்சம்பளம் ரூ 750

- ஏன் தரமுடியாது என முதலாளிமார் விளக்கவேண்டும் என்கிறார் மனோ கணேசன்

நிபந்தனையற்ற அடிப்படை சம்பளமாக ரூபா ஐநூறுடன், மேலதிக ஊக்குவிப்பு கொடுப்பனவாக ரூபா இருநூற்றம்பதையும் சேர்த்து மொத்த நாட்சம்பளமாக              ரூபா 750ஃ- தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க, தோட்ட முதலாளிமார் சம்மேளனம்  உடன்படவேண்டும். பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முன்னரே தேசிய ஊடகங்களில் நஷ்ட கணக்கு காட்ட தொடங்கியிருக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், மலையக தமிழ் கூட்டமைப்பின் இணைத்தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவிருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பிலே இன்னுமொரு கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகப்போகின்றது. தோட்ட முதலாளிமார் சம்மேளனமும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ_ம், ஐக்கிய தேசிய கட்சியின் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், தொழிற்சங்க கூட்டு கமிட்டியும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன. கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது எவர் என்பது தொடர்பில் எங்களுக்கு அக்கறை கிடையாது. (மேலும்) 29.03.11

_____________________________________________________________________________________________________________

எந்தவொரு அப்பாவிப் பிரஜையும் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது

- வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் ஜனாதிபதி

நான் மக்களின் உரிமைகளை எப்போதும் நேசிக்கின்றேன். ஆனால் எந்தவொரு அப்பாவி பிரஜையுமே பாதிக்கப்படக் கூடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார். வெளிநாட்டு ஊடகங்களின் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அலரிமாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது கூட்டுப் படைகள் லிபியா மீது மேற்கொள்ளும் தாக்குதல் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு கூறினார். இச்சமயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேலும் கூறுகையில் எந்தவொரு நாட்டிலும் எவராலும் சிவிலியன்கள் கொல்லப்படுவதையும் இறைமை மீறப்படுவதையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். இச்சமயம் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கருத்துத் தெரிவிக்கையில் கூட்டுப்படையினரின் சில செயற்பாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 1973ம் ஆண்டு தீர்மானத்தை மீறும் வகையில் அமைந்துள்ளன என்றார். இவ்வேளையில் மற்றொரு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக ஐ. நா. பிரதிநிதிகள் உட்பட எவரும் தோன்றி சாட்சியமளிக்க முடியும் என்றும் கூறினார். அதேநேரம் ஐரோப்பிய யூனியன் ஜி. எஸ். பி. பிளஸ் நிவாரணத்தை நீக்கியதால் இலங்கைக்கு பொருளாதார ரீதியாக எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. மாறாக எமது ஆடை உற்பத்திகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.

_____________________________________________________________________________________________________________

'நல்லிணக்க ஆணைக்குழு முன் ரவூப் ஹக்கீம் சாட்சியமளிக்கமாட்டார்'

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சாட்சியமளிக்கமாட்டார் என அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாட்சியங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் சமர்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சாட்சியமளிப்பார் என அக்கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சாட்சியங்கள் பதிவு நடவடிக்கை முடிவுசெய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஊடக பேச்சாளர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்தார். கடந்த ஒரு வருட கால பகுதியில் நல்லிணக்க ஆணைக்குழு கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, திருகோணமலை, காலி, மாத்தறை, புத்தளம், கண்டி மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் பூஸா தடுப்பு முகாமிற்கும் நேரடியாக சென்று பொதுமக்கள் மற்றும் அரசியல் கைதிகளின் சாட்சியங்களை பதிவுசெய்திருந்தது. எதிர்வரும் மே 15ஆம் திகதிக்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

_____________________________________________________________________________________________________________

புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் தொடர்பை ஏற்படுத்த மற்றுமொரு தரப்பு வேண்டாம்: சம்பிக்க

 இலங்கை அரசாங்கத்துக்கும் வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழ் மக்களுக்கும் இடையில் சிறந்த தொடர்புகளும் உறவுகளும் பேணப்பட்டுவருகின்றன. அதற்கு இடையில் மற்றுமொரு தரப்பு தொடர்புகளை ஏற்படுத்த ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்ற அவசியமில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிநிதியும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நோர்வேயின் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இந்த விடயத்தில் ஏற்பாடுகள் செய்வதைவிடுத்து நோர்வேயில் செயற்படுகின்ற புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகளை முறியடிக்க முன்வரவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கத்துக்கும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தும் பொருட்டு அனுசரணை வழங்க தயார் என்று நோர்வேயின் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளமை குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்த விடயங்களை கூறினார். அமைச்சர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது இலங்கை அரசாங்கத்துக்கும் வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழ் மக்களுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்த மற்றுமொரு தரப்பு முன்வரவேண்டிய அவசியம் இல்லை. (மேலும்) 28.03.11

_____________________________________________________________________________________________________________

 அழைப்புக்கு நியூஸிலாந்து பிரதமர் மறுப்பு

இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியை பார்வையிட வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ மறுத்துள்ளார்.  கடந்த வெள்ளிக்கிழமை தென்னாபிரிக்காவை 49 ஓட்டங்களால் தோற்கடித்த நியூஸிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில், கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டி நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.  ஜனாதிபதியின் அழைப்பை நியூஸிலாந்துப் பிரதமர் மறுத்துள்ளதாக அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த மறுப்பிற்கான காரணம் எதனையும் அவர் வெளியிடவில்லை. இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியை பார்வையிட வருமாறு நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீக்கு ஜனாதிபதி நேற்று அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

_____________________________________________________________________________________________________________

ஸ்ரீலங்காவில் இன்னமும் ஒரு குழுவினருக்கு உத்தரவாதம் செய்து பராமரிக்கப் போதுமானளவு பணிகள் உள்ளதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம்:- சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐசிஆர்சி)

- சர்வதேச செஞ்சிலுவை சங்க (ஐசிஆர்சி)வளங்கள் நிலையம்

Redcross-3நிச்சயமாக ஸ்ரீலங்காவில் மனிதாபிமானத் தேவைகள் உள்ளன. இந்த வருட ஆரம்பத்தில் எழுந்த வெள்ள அனர்த்தங்களைப் போன்று திடீரென எழும் சில உடனடித் தேவைகளுக்கு விரைவான அவசரப் பரிகாரம் தேவைப் படுகிறது. மற்றவைகளுக்கு நீண்டகால அடிப்படையில் தொடர்ச்சியான தீர்வுகள் தேவைப்படுகின்றன. ஐசிஆர்சி ஆயுத மோதல்களின் விளைவாக ஏற்பட்ட மனிதாபிமானத் தேவைகளை தொடர்ந்தும் பரிகரித்து வருகிறது. சாதாரணமாக தீவிரமான பகைமை நிலை முடிவுற்ற மற்ற நாடுகளில் நாங்கள் செய்து வருவது போல. அவயங்களை இழந்த மக்களுக்கு நிச்சயமாக அவர்களது மீதியான வாழ்நாட்களைக் கொண்டு செல்ல செயற்கை அவயங்கள் தேவைப் படுகின்றன. 2014ம் ஆண்டு வரை மாற்றுத் திறனாளிகள் மற்றும் மறுவாழ்வு பெறுவோருக்கான யாழ்ப்பாண ஜெய்ப்பூர் நிலையத்துக்கு ஐசிஆர்சி தொடர்ந்தும் உதவியளித்து வரும். இந்த நிறுவனம் பிரதானமாக யாழ் குடாநாட்டிலுள்ள சுமார் 2000 வரையான மக்களைப் பராமரித்து வருகிறது. பல குடியிருப்பாளர்களின் நிலை மிகவும் ஊறு படத்தக்கதாக உள்ளது.ஏனெனில் சிலவற்றில் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய பிரதான குடும்பத்தலைவர் இறந்தோ, காணாமற்போயோ, அல்லது சிறையிலோ உள்ளார்கள். மற்றும் சிலவற்றில் குடும்பத்தை ஆதரிக்க வேண்டிய உறவினர் கண்ணிவெடியில் சிக்கி அங்கவீனராக்கப் பட்டுள்ளார். (மேலும்) 28.03.11

_____________________________________________________________________________________________________________

1934 வீட்டுரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

320 பாடசாலை அதிபர்களையும் நீதிமன்றில் நிறுத்த சுகாதார அமைச்சு முடிவு

நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் மிகமோசமான வீட்டுத் சூழலைக் கொண்டிருந்த 1934 வீட்டு உரிமை யாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தின் நிமித்தம் நேற்று முன்தினம் நாடெங்கிலும் 2 இலட்சத்து 7 ஆயிரத்து 824 வீடுகள் சோதிக்கப்பட்டன. இவற்றில் 35 ஆயிரத்து 638 வீடுகளில் நுளம்பு பெருகக் கூடிய இடங்கள் காணப் பட்டதுடன், 3001 வீடுகளில் நுளம்புகளின் குடம்பிகளும் கண்டறியப்பட்டதாகவும் சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று கூறினார். இதேவேளை, அதிக நுளம்பு பெருக்கத் துடனான சூழலைக் கொண்டிருந்த 320 பாடசாலை அதிபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். (மேலும்) 28.03.11

_____________________________________________________________________________________________________________

எங்கே போகிறது தமிழகம்?

- க. ரகுநாதன்

tamilnadu electionஇலவச அரிசியை வாங்கி, இலவச வெட்கிரைண்டரில் அரைத்து, இலவச காஸ் அடுப்பில் இட்லியாக்கி, இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து, இலவச கான்கிரீட் வீட்டில் உட்கார்ந்து, இலவச மின் விசிறியை சுழலவிட்டபடி சாப்பிட்டு, இலவச டி.வி.யில் படம் பார்த்து மகிழ்ந்தால் வாழ்வு சுகமாகத்தானே இருக்கும். அப்படி உட்கார்ந்து சாப்பிட்டால் வரும் பல்வேறு இலவச நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இருக்கவே இருக்கிறது இலவச காப்பீட்டுத் திட்டம். வயதாகி ஓய்ந்துபோனால் ஊர் சென்றுவர இலவச பஸ் வசதியும், மாதாமாதம் இலவசமாகப் பணமும் தருவார்கள். மக்களைப் பெறப்போகும் கர்ப்பிணிகளுக்கு அரசாங்கமே ஆயிரக்கணக்கான ரூபாய்களை அள்ளித் தரப்போகிறது. அதுவும் பெண் குழந்தையாயின் அவள் வளர்ந்த பின் திருமணம் செய்யத் தங்கத் தாலியும் பணமும் கிடைக்கப்போகிறது. நல்ல வேளை மாப்பிள்ளையும் தேடிக் கொடுக்கப்படும் என்று கூறவில்லை!  எனவே குடும்பத்துக்காகவோ, எதிர்காலத்துக்காகவோ, நாட்டுக்காகவோ எதற்காக உழைக்க வேண்டும்? அதனால் இந்த நாடும் மக்களும் எப்படிப் போனால் என்ன? என்ற நிலைமைக்கு மக்கள் வந்து விட்டார்கள் போலிருக்கிறது; அல்லது அந்த நிலையை இருபெரும் கட்சிகளும் உருவாக்கிவிட்டன என்றுதான் கூற வேண்டும்.  தமிழனுக்குத் தன்மானம் முக்கியம். சுயமரியாதையோடு இருக்க வேண்டும் என்ற முழக்கமெல்லாம் இன்று எங்கே போனதெனத் தெரியவில்லை. ஒட்டுமொத்த தமிழர்களின் சுயமரியாதைக்கும் விடப்பட்ட சவாலாக இருக்கின்றன இந்தத் தேர்தல் அறிக்கைகள்.  (மேலும்) 28.03.11

_____________________________________________________________________________________________________________

நடிகர் வடிவேலு மீது வழக்கு

vadiveluதிருவாரூர்,  மார்ச்  27: தேமுதிக தலைவர் விஜயகாந்தை தரக்குறைவாகப் பேசியதாக, நடிகர் வடிவேலு மீது திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.   திமுக கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் பிரசாரத் தொடக்க பொதுக் கூட்டம் திருவாரூரில் மார்ச் 23-ம் தேதி இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு. கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.   இந்தக் கூட்டத்தில் நடிகர் வடிவேலு பேசியபோது, தேமுதிக தலைவர் விஜயகாந்தை விமர்சித்து, தரக்குறைவாகவும், கீழ்த்தரமாகவும் பேசினாராம். இது தொடர்பாக தேமுதிகவின் உயர்நிலைக் குழு உறுப்பினர் திலீப்குமார் சென்னையில் உள்ள தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்தார்.   இந்தப் புகாரை மாவட்டத் தேர்தல் அலுவலரும், திருவாரூர் மாவட்ட ஆட்சியருமான கா. பாஸ்கரனுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அந்தப் புகாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆட்சியர் பரிந்துரை செய்தார்.   இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. மூர்த்தி உத்தரவின் பேரில், நடிகர் வடிவேலு மீது தனிநபரை தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசுதல், தேர்தல் விதிமுறைகளை மீறி தனி நபரை விமர்சித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்டம் 153 (ஏ), 171, 505 2 ஆகிய பிரிவுகளின் கீழ் நகரக் காவல் நிலைய ஆய்வாளர் செல்வம் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

_____________________________________________________________________________________________________________

முனைப்பினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்.

munaippu-27முனைப்பு நிறுவனத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2011ம் ஆண்டுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளதாக முனைப்பு நிறுவனத்தினர் தெரிவித்தனர். மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் தெரிவு செய்யப்பட்ட மிகவும் வறுமைக்கோட்டின்  கீழ் வாழும் 23 மாணவர்களுக்கு சனிக்கிழமை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் வைத்து முனைப்பின் தலைவர் கு.அருணாசலம் தலைமையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்டுள்ள இம்மாணவர்கள் தங்கள் பல்கழைக்கழக படிப்பை முடிக்கும் வரையில்  மாதாந்தம் புலமைப்ப்பரிசிலை பெறமுடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வருடத்துக்கான இத்திட்டத்தில் திருமலை, மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் ,முஸ்லிம் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் நாளடைவில் ஏனைய மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது. முனைப்பு நிறுவனம் கடந்த ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு ஏற்கனவே புலமைப்பரிசில்களை வழங்கிவருகின்றது. இலங்கையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் சிந்தனையில் இயங்கிவரும் முனைப்பு நிறுவனம் கிழக்கில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித்தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில்  ஏற்கனவே உணவுப்பொருட்கள், பால்மா, மருந்துப்பொருட்கள் உட்பட பல்வேறு அத்தியாவசியப்பொருட்களை வழங்கி வைத்ததுடன், மாணவர்வளமேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் ரூபா செலவில் தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்  வழங்கிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

_____________________________________________________________________________________________________________

மேலும் பல முன்னாள் போராளிகள் மாத இறுதியில் விடுதலையாவர்

புனர்வாழ்வளிக்கப்பட்ட ஒரு தொகுதி முன்னாள் போராளிகள் இம்மாத இறுதியில் விடுவிக்கப்படவுள்ளதாக என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சுதந்த ரணசிங்க தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். எனினும் சமூகத்தோடு விடுவிக்கப்படவுள்ளவர்களின் எண்ணிக்கை இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார். தற்போது சுமார் 4,000 வரையான முன்னாள் போராளிகளே புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளனர். இவர்களுக்கு மேசன் மற்றும் தச்சு தொழில் போன்ற வாழ்க்கைத் திறன் பயிற்சிகள் வழங்ப்படுகின்றன. முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான 24 புனர்வாழ்வு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தற்போது 9 புனர்வாழ்வு நிலையங்களே உள்ளமை குறிப்பிடத்தக்கது

_____________________________________________________________________________________________________________

நல்லிணக்க ஆணைக்குழு அம்பாறையில்

இலங்கையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள படிப்பினைகள் மற்றும் நல்லிலிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான அமர்வு ஞாயிறன்று கல்முனையில் நடைபெற்றது. ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்தும் பெண்கள் உட்பட 300 இற்கும் மேற்பட்டோர் அங்கு வந்திருந்த போதிலும் சுமார் 25 பேரிடம் மட்டுமே வாய் மூல சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.ஏனையோரது சாட்சியங்கள் எழுத்து மூலம் அதற்கான படிவமொன்றில் பெறப்பட்டது அநேகமானோர் காணாமல் போயுள்ள தமது உறவுகளை கண்டு பிடித்து தருமாறு ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்தனர். சிவலிங்கம் கலாமாலினி என்பவர், காணாமல் போயுள்ள தனது மகனை, கருணா அணியினரின் கூட்டமொன்று தொடர்பாக தொலைக் காட்சியொன்றில் ஒளிபரப்பான செய்தியில் கண்டதாக குறிப்பிட்டு குறித்த செய்தி அடங்கிய இறுவட்டு பிரதியொன்றையும் சமர்ப்பித்தார் யுத்த காலத்தில் காணாமல் போயுள்ள மற்றும் கொல்லப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க ஆணைக்குழு முன் வர வேண்டும் என கோரிக்கையொன்றை முன் வைத்த சட்டத்தரணி அன்சாருல் மௌலானா, அவசரகால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்டப்டுள்ள தமிழ் இளைஞர்களின் விடுதலை குறிதும் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும் என்றார். விடுதலைப் புலிகளுக்கு மட்டும் தற்போது புனர்வாழ்வு அளித்தால் போதாது புளொட்,ஈ.பி.டி.பி. உட்பட சகல தமிழ் அமைப்புகளையும் சேர்ந்தவர்களுக்கும் புனர் வாழ்வு அளிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆணைக்குழுவிடம் முன் வைத்தார் நடராசா கிருபைராசா. கொழும்பிற்கு வெளியேயான ஆணைக்குழுவின் அமர்வுகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. - B.B.C News

_____________________________________________________________________________________________________________

இலங்கை தமிழர்களுக்காக யார் பேசுகிறார்கள் என மேற்குலகம் தீர்மானிக்க வேண்டும்: இலங்கை

இலங்கைத் தமிழர்களுக்காக யார் பேசுகிறார்கள் என்பதை மேற்குலக நாடுகளின் அரசாங்கங்கள் தீர்மானிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.சுதந்திர தமிழீழத்தை நாடும் புலம்பெயர்ந்தவர்களா, அல்லது இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள சமாதானத்தை விரும்பும், இலங்கையிலுள்ள ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையை ஏற்படுத்தத் தயாராகவுள்ள தமிழ் மக்களா இலங்கை தமிழர்களுக்காக பேசுகிறார்கள் என்பது தொடர்பாக மேற்குலக அரசாங்கங்களும் விரைவில் தீர்மானிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியம், லக்ஸம்பர்க் ஆகியவற்றுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க கூறியுள்ளார். பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸில், ஐரோப்பாவில் எல்.ரி.ரி.யின் திட்டங்கைள தோற்கடித்தல் எனும் தலைப்பல் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நீதித்துறை, பொலிஸ், புலனாய்வுத்துறை, இராணுவம் முதலான துறைகளைச் சார்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். 2009 ஆம் ஆண்டு இலங்கையில் எல்.ரி.ரி.ஈ. தோற்கடிக்கப்பட்ட பின்னர் எல்.ரி.ரி.ஈ.யின் சொத்துக்கள், ஆளணி மற்றும் செயற்பாடுகளுக்கு பிரத்தியேக உரிமையுள்ள இடமாக ஐரோப்பா மாறியுள்ளது எனவும் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க கூறினார். கடந்த 15 மாதங்களில் ஜேர்மனி, நெதர்லாந்து, நோர்வே, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் ; 32 எல்.ரி.ரி.ஈ. அங்கத்தவர்களும், பிரான்ஸில் 21 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.தமிழீழ விடுதலைப்புலிகளின் சொத்துக்கள் மற்றும் முகவர் அமைப்புகளின் வலையமைப்புக்கு பொறுப்பான நெடியவன், புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உயிர்தப்பியுள்ள தலைவரான விநாயகம், பிரச்சார பொறுப்பாளர் ஜெயச்சந்திரன், உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட்சகோதர் இமானுவல் ஆகியோர் ஐரோப்பாவில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

_____________________________________________________________________________________________________________

பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாடல் 

எஸ்.எம்.எம்.பஷீர்

" ராஜீவ் காந்தி இரண்டு அங்குல வித்தியாசத்தில் உயிர் தப்பினர். நான் இரண்டு நிமிட வித்தியாசத்தில் உயிர் தப்பினேன். அதனால் இன்று உங்கள் முன்னிலையில் நாம் இருவரும் காட்சி தருகிறோம்"

  (காட்மண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் ஜே ஆர் ஜெயவர்த்தனா ராஜீவை  இலங்கையில் விஜித ரோகன துப்பாகியால் அணிவகுப்பின் பொது அடித்து கொல்ல முற்பட்டதையும் , அதன் பின்னர் தனக்கும் நாடாளுமன்றத்தில் குண்டு எரிந்து கொல்ல முற்பட்டதையும் பற்றி குறிப்பீடு கூறியது.  தகவல்: அநாமிகன் ) இந்திய அதிகாரத்துடன் வல்லாதிக்க மனோபாவத்துடன் செய்விக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பத்தத்தின் அடிப்படையில் உருவான  பதின்மூன்றாவது அரசியல் அமைப்பு திருத்தச்சட்டம் பற்றி திரும்பிப் பார்க்கும் போது இந்திய  இதிகாசமான மகாபாரதத்தில் பதின்மூன்று வருடமும் பதிமூன்றாவது நாள் பாரதப் போரும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதும் எனது ஞாபகத்துக்கு வருகின்றதையும் மீட்டிக்கொண்டு இக்கட்டுரை தொடரை நகர்த்த விரும்புகிறேன். மகாபாரதத்தில் தருமன் கவ்ரவருடன் சூதாடி தோற்றவுடன் பாண்டவர்களுக்கு விதித்த நிபந்தனையின்படி , பாண்டவர்கள்   பன்னிரு ஆண்டுகள் வனவாசமும், ஒரு வருடம் அஞ்ஞாதவாசமும் செய்ய வேண்டும். அந்த ஒரு வருடத்தில் அவர்கள் வெளிப்பட்டால் மறுபடியும் வனவாசம் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. (மேலும்) 27.03.11

_____________________________________________________________________________________________________________

அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சு வார்த்தை சாதகமாக முன்னோக்கி நகர்கிறது

(பகுதி 2)

டி.பி.எஸ்.ஜெயராஜ்

Tna-mahindaஇதே வேளை வெளிநாட்டிலுள்ள புலிகள் சார்பான ஊடக ஊதுகுழல்கள், ரி.என்.ஏ அரசாங்கத்துடன் கூட்டுச்சேர்ந்து,யுத்தக் குற்றச்சாட்டு விடயங்களை விற்று விட்டதாக பயங்கரமான பிரச்சாரத்தை ஆரம்பித்தன,ஸ்ரீலங்காவிலுள்ள ஒரு பகுதித் தமிழ் ஊடகங்களும், ரி.என்.ஏ அரசாங்கத்தால் ஆட்டுவிக்கப் படுவதாக குற்றம் சுமத்தின.வருந்தத் தக்க விதத்தில் பேச்சுவார்த்தைகளைப் பற்றிய அநேக ஊடகச் செய்திகள் முற்றிலும் சரியானவையல்ல, ஆனால் இந்த ஊடகச் செய்திகளின் அடிப்படையில் ரி.என்.ஏ பலமான கண்டனங்களுக்கு இலக்காகியது. உதாரணத்துக்கு ஒன்றை நோக்கினால்,ஒரு தமிழ் வார இதழின் ஆசிரியர் ஒருவர்  தன்னுடைய பெயரின் கீழ் ஒரு புதுக் கதையை எழுதினார்,ரி.என்.ஏ உள்ளுராட்சி சபைகளையே அதிகாரப் பகிர்வின் அலகாக ஏற்றுக் கொண்டது என்றும் ரி.என்.ஏ யை ஜூலியஸ் சீசர் கடைசி நிமிடத்தில் புரூட்டஸை அழைத்தது போல “ நீ கூடவா புரூட்டஸ்” என கையொப்ப மிட்ட கட்டுரையொன்றில் அழைத்திருந்தார்.இந்தச் செய்தி தவறானது மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இம்மாதிரியான நிலையில் ரி.என்.ஏ யும் கடும் வார்த்தைகளில் மேற்கொள்ளப் படும் ஊடக விமர்சனங்களை எதிர்த்து தாக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானது.கட்சியின் அதிகாரம் பெற்ற உத்தியோகபூர்வ பேச்சாளர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற முன்னிரையினர், அரசாங்கத்துடனான நம்பிக்கையற்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தி பேச்சுவார்த்தைகளைப் பற்றி ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்கத் தொடங்கினார்கள்.அவர் இந்தப் பேச்சுவார்த்தைகள் போலித்தனமானவை என விபரித்தார். (மேலும்) 27.03.11

_____________________________________________________________________________________________________________

சல்மா ஹம்ஸா: ஒரு தொடக்கப் புள்ளி!

salmaகிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக முஸ்லிம் பெண்ணொருவர் உள்ளூராட்சி மன்றமொன்றின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் - திருமதி சல்மா அமீர் ஹம்ஸா! இவருக்கு முன்னர் கிழக்கிலிருந்து முஸ்லிம் பெண் எவரும் அரசியல் சபையொன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டதில்லை. திருமதி சல்மா ஓர் ஆசிரியை. இயல்பான பெண். பட்டப்படிப்பு, பட்டப் பின்படிப்புகளைப் பூர்த்தி செய்துள்ள இவர் - தற்போது கலாநிதிப் பட்டத்துக்கான படிப்பினை மேற்கொண்டு வருகின்றார். நடைபெற்று முடிந்த தேர்தலில் - காத்தான்குடி நகரசபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு உறுப்பினர் திருமதி சல்மாதான்! இவருக்கு அரசியல் புதிதில்லை. இவர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் தங்கை. சல்மாவின் மாமனார் (கணவரின் தந்தை) காத்தான்குடியின் தவிசாளராகப் பதவி வகித்தவர். சேர்மன் இப்றாகிம் எனும் பெயரால் பிரபல்யமானவர். இதேவேளை, காத்தான்குடியைத் தளமாகக் கொண்டியங்கும் 'பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின்' பணிப்பாளராகவும் இவர் கடமையாற்றி வருகின்றார்.சல்மாவின் கணவர் அமீர் ஹம்ஸா. இனிய மனிதர். வெகு இயல்பாகப் பேசுகின்றார். ஹம்ஸாவின் சகோதரியொருவரைத்தான் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலான திருமணம் செய்துள்ளார். (மேலும்) 27.03.11

_____________________________________________________________________________________________________________

யாழ். மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த அரசியல்வாதிகள் முயற்சி: ஹத்துருசிங்க

யாழ்ப்பாணத்திலுள்ள மக்களிடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சிகளில் சில அரசியல்வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.யாழில் தொடரும் இராணுவ பாதுகாப்பு மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் தொடர்ந்தும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை மேற்படி அரசியல்வாதிகள் முன்வைத்து வருவதால் மக்கிளிடையே மாத்திரமன்றி சர்வதேச ரீதியில் பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

_____________________________________________________________________________________________________________

ஹபரணையில் புலிகள் தாக்குதலா? மறுக்கிறது இராணுவம்

 ஹபரணை காட்டுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த 24ம் திகதி இரவு தாக்குதல் நடத்தியதாக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்தியை இலங்கை இராணுவம் முற்றாக மறுத்துள்ளது. அமைதியான நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் சில இணையத்தளங்கள் இவ்வாறான செய்துயை வெளியிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 24ம் திகதி இரவு 10:22 மணியளவில் ஹபரணைக் காட்டுப்பகுதியில் இலங்கை படைகளின் தொடரணி மீது நடாத்தப்பட்ட கெரில்லா தாக்குதலில் ஐந்து இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இணையத்தளங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின. 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலின் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடி ஏந்திவந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், கட்டளைத் தளபதி கேணல் ரமேஸ் ஆகியவர்கள் மீதான படுகொலை தாக்குதலுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளே ஹபரணை தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த தகவல் விடுதலைப் புலிகளின் புதுவகையான பிரச்சாரம் என இலங்கை இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

_____________________________________________________________________________________________________________

900 அகதிகள் தொடர்ந்தும் அவுஸ்திரேலிய முகாமில்

 இலங்கையிலிருந்து தப்பிச் சென்று அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரிய 1,500 அகதிகளில் 900 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. அந்தத் தகவல்படி குறித்த 900 அகதிகளில் 481 அகதிகள் அல்லது அதில் அரைபகுதியானோர் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பர்மாவின் நான்கு அகதிகள் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மனஅழுத்தம் காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகின.

_____________________________________________________________________________________________________________

ஓ பக்கங்கள்

பிரம்மாண்டமான இலவசம் வருகிறது உஷார்!

- ஞாநி

கல்பாக்கத்தில் விபத்து ஏற்பட்டால் அருகே உள்ள பகுதி மக்களைப் பாதுகாப்பாக வேறு இடத்துக்கு அழைத்துச் செல்வது பற்றிய ஒத்திகை சில வருடங்கள் முன்பு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடத்தப் பட்டது. எந்த லட்சணத்தில் தெரியுமா? அழைத்துச் செல்ல வேண்டிய பஸ்கள் பிரேக் டவுன் ஆகிவிட்டன! காவல் அதிகாரிகளின் வயர்லெஸ் கருவிகள் வேலை செய்யவில்லை!

kalpakkamநில நடுக்கம், சுனாமி போன்றவற்றி லிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உலகிலேயே மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துவைத்திருக்கும் நாடு ஜப்பான். அங்கே நேர்மையும் ஒழுக்கமும் நம்மை விடப் பல மடங்கு அதிகம். அதனால் தான் நம் சுனாமி யைப் போல பல மடங்கு பெரிய அழிவு அங்கே ஏற்பட்டும்கூட ஒப்பீட் டளவில் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் நமது விகிதங்களில் அங்கே இல்லை. அழிவு ஏற்பட்ட எந்த ஊரிலும் ஒரு சிறு கடை கூட சூறையாடப்படவில்லை. கடும் பஞ்சத்துக்கு நடுவிலும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒழுங்காக கியூவில் நின்று கிடைத்ததை வாங்கிக் கொள்கிறார்கள். பள்ளிக்கூடத்திலேயே நில நடுக்கத் தற்காப்பு பயிற்சிகள், ஒத்திகைகள் மாதந்தோறும் குழந்தைகளுக்குத் தரப்படுகின்றன. அணு உலை விபத்து ஏற்பட்டதும் அருகி லிருக்கும் லட்சக்கணக்கானவர்களை இன் னொரு பகுதிக்கு ஒரே நாளில் குடி பெயரச் செய்யும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது. அதுவே போதாது என்று அங்கே விமர்சிக்கப்படுகிறது. நம்மால் கூவம் கரை குடி சைவாசிகளுக்கு மாற்று இடம் தருவதைக் கூட ஒழுங்காகச் செய்ய முடிவதில்லை. இலவச வேட்டி சேலை கொடுக்கும் இடத்தில் நெரிசல் தள்ளுமுள்ளுவில் சாகத் தயாராக இருக்கும் சமூகம் நம்முடையது. தலைவர் செத்தால், கடைகளைச் சூறையாடுவது நம் மரபு. தீர்வுள்ள சாயப்பட்டறைக் கழிவையே தீர்க்காமல் ஊரையும் ஆற்றையும் விவசாயத்தையும் நாசமாக்கி ிருக்கிறோம். (மேலும்) 26.03.11

_____________________________________________________________________________________________________________

சோல்கெய்ம் இலங்கையில் மீண்டும் மூக்கு நுழைப்பதை அனுமதிக்கவே கூடாது!

வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)

ericமார்ச் 18ம் திகதி புலம்பெயர் இலங்கைத் தமிழர் குழுக்களை (புலிக் குழுக்கள்) சந்தித்த நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான அனுசரணையாளர் எரிக் சோல்கெய்ம், இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும், அபிவிருத்தியை ஏற்படுத்தவும் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதே புலம்பெயர் தமிழர்களுக்கு உள்ள ஒரே வழி எனக் கூறியுள்ளார். அவரது கூற்றின் அடிப்படையான அர்த்தத்தை ஆழமாக ஆராயாமல் நுனிப்புல்லை மட்டும் மேய்பவர்களுக்கு, அவர் ஏதோ இலங்கையினதும் தமிழர்களதும் நலனில் உள்ள அக்கறை காரணமாகவே அவ்வாறு கூறியிருப்பதாக எண்ணத் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல என்பதை அவரது கடந்தகால நடவடிக்கைகளையும், ஏகாதிபத்திய சக்திகளின் தற்போதைய நிகழ்ச்சி நிரலையும் அவதானித்து வருபவர்களுக்கு நன்கு விளங்கிக் கொள்ள முடியும். முதலாவது விடயம், எரிக் சோல்கெய்ம் பேச்சுவார்த்தை நடாத்திய புலித் தமிழ் குழுக்களுக்கு, இலங்கை இனப்பிரச்சினையை ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்ப்பதிலோ மற்றும் இலங்கையின் அபிவிருத்தியிலோ துளியும் அக்கறை கிடையாது என்பது பலரும் அறிந்த விடயமாகும். அது சோல்கெய்முக்கும் நன்றாகத் தெரியும். புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரையில், அவர்களில் ஒரு வீதத்தினர் கூட இலங்கையில் அவர்கள் கோரும் ‘தமிழீழம்’ அமைந்தாலும் கூட, அங்கு சென்று வாழப்போவதில்லை என்பதும் எல்லோருக்கும்; புரிந்த விடயமாகும். அப்படியிருக்க இந்த சோல்கெய்ம் என்பவர், விடாப்பிடியாக இலங்கைப் பிரச்சினைக்குள் தனது மூக்கை மீண்டும் நுழைப்பதற்கு ஏன் படாதபாடு படுகின்றார் என்பதே சிந்தனைக்குரிய விடயமாகும். (மேலும்) 26.03.11

_____________________________________________________________________________________________________________

60 ஆண்டு கால இனப்பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வு அவசியம் என்கிறார் ஜனாதிபதி

mahindaஇனப்பிரச்சினைக்கான தீர்வை நாட்டிலுள்ள சகல தரப்பினரின் உடன்பாட்டுடன் ஏற்படுத்தினால் தான் அது நிரந்தரத் தீர்வாக அமைய முடியும். எனவே, எல்லோருடைய கருத்துக்கள், அபிப்பிராயங் களை கேட்டறியும் செயற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறினார். இதனைச் செய்வதற்காக நான் சகல பிரிவினரையும் தனித்தனியாக அழைத்து அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறேன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தூதுக் குழுவினரை நான் விரைவில் சந்திக்கவிருக்கிறேன். அவர்கள் தீர்விற்கான தங்கள் யோசனைகளை இதுவரையில் முன் வைக்கவில்லை. பின்னர் அதனடிப்படையில் நாம் சுமுகமான பேச்சுவார்த்தைகளை நடத்து வோம் என்றும் ஜனாதிபதி கூறினார். யுத்த காலத்தின் போது காணாமல் போனவர்களின் விபரங்களை அரசாங்கம் இதுவரை முழுமையாக வெளியிட வில்லையென்று ஒரு பத்திரிகையாளர் ஜனாதிபதியிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, அத்தகவல்களை அரசாங்கம் இப்போது திரட்டிக் கொண்டி ருக்கிறதென்றும், எல்.ரி.ரி.ஈ. அக்கிரமங் களினால் உயிர்துறந்த அல்லது காணாமல் போனவர்களைப் பற்றி ஏன் எவரும் கேள்வி கேட்க தயங்குகிறார்கள் என்றும் சிரித்துக் கொண்டே பதிலளித்தார். இனப்பிரச்சினை தொடர்பான சமரச பேச்சுவார்த்தைகள் பற்றி இன்னுமொரு கேள்வி எழுப்பப்பட்டபோது பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எல்.ரி.ரி.ஈக்கு ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ பெருமளவு உதவிகளையும், பென்ஸ் கார் போன்ற வசதிகளையும் பெற்றுக் கொடுத்தார். (மேலும்) 26.03.11

_____________________________________________________________________________________________________________

ஐ.சி.ஆர்.சி வெளியேறுகிறது'

- பி.பி.சி

Red crossலங்கையின் வடக்கே வவுனியாவில் செயற்பட்டு வந்த சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் அலுவலகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் வடபகுதியில் இருந்து இந்தக் குழு முழுமையாக வெளியேறிச் செல்கின்றது. எனினும் அந்தக் குழு கொழும்பில் இருந்து தொடர்ந்து தனது மனிதாபிமான பணிகளை முன்னெடுக்கும் என்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் பேச்சாளராகிய சரசி விஜேரத்ன தெரிவித்திருக்கின்றார். ''கொழும்பில் இருந்து செயற்படுமாறு இலங்கை அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவை கேட்டுக்கொண்டதற்கு அமைவாக வவுனியா அலுவலகம் மூடப்படுகின்றது. எனினும் அதன் மனிதாபிமான பணிகள் தடைப்பட மாட்டாது'' என்று சரசி விஜேரத்ன தெரிவித்தார். வடக்கில் உள்ள அலுவலகங்களை மூடிவிட்டு கொழும்பில் இருந்து செயற்படுமாறு இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவைக் கேட்டிருந்தது. எனவே, களத்தில் அதிகாரிகள் இல்லாமல் தொடர்ந்து தங்களுடைய பணிகளை மேற்கொள்வதற்கான நடைமுறைகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடன் அது மேற்கொண்டிருக்கின்றது. (மேலும்) 26.03.11

_____________________________________________________________________________________________________________

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு சுனாமி நிவாரணம் அனுப்புவது குறித்த இந்திய, அமெரிக்க நிலைப்பாடுகள்

இந்தியாவின் உதவிகள் தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு சென்றடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமெனக் கூறுவது தமிழீழத்தை அங்கீகரிப்பதாக அமையுமென்பதால், இந்திய உதவி இலங்கை அரசாங்கத்தின் மூலம் எல்.ரி.ரி.ஈ.யின் பகுதிகளுக்கு செல்வதையிட்டு தனக்கு 'ஆட்சேபம் இல்லை' என 2004ஆம் ஆண்டு சுனாமியின் பின்னர் இந்தியா கூறியதென விக்கிலீக்ஸ் வெளியிட்ட, அமெரிக்க தூதரகத்தின் கேபிள் குறிப்பொன்றில் தெரிவித்துள்ளது. உதவிகள், நேரடியாக தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் மூலம் வழங்கப்பட வேண்டுமென எல்.ரி.ஈ.ஈ. கூறியதை ஏற்கமுடியாதென இந்திய வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் தறன்ஜித்சிங் சந்து கூறினார். இந்தியாவின் நிலைப்பாட்டையே அமெரிக்க அரசாங்கமும் கொண்டிருப்பதாக இந்தியாவிலிருந்த அமெரிக்க தூதுவர் டேவிட் மல்பீல்ட் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவின் அண்மையிலுள்ள இலங்கை, அமெரிக்கத் துருப்புக்களின் வருகையை கட்டுப்படுத்த வேண்டுமென கருதப்பட்;ட நிலையில், இலங்கையில் 1,500 அமெரிக்க துருப்புக்கள் உள்ளன என்ற செய்தி தவறானதென அறிய வந்தபோது தறன்ஜித்சிங் சந்து ஆச்சரியமடைந்தாரென கேபிள் வெளியிட்ட செய்தி மூலம் தெரியவந்துள்ளது. சுனாமி நிவாரணம் பற்றிய கருத்துக்கள் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தப் பயன்படுமென எல்.ரி.ரி.ஈ. கருதுவது நப்பாசையாகுமென தறன்ஜித்சிங் சந்து தெரிவித்தார். சுனாமியின் பின் உண்டான பிரச்சினைகளால், இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சண்டையிடும் வலுவை இழந்;த நிலையில் ஏதோவொரு வகையில் ஒற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டென தறன்ஜித்சிங் சந்து கருதியதாக கேபிள் செய்தி வெளியிட்டது.

_____________________________________________________________________________________________________________

மகா கொழும்பு கட்டமைப்பு மாற்றங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படவேண்டும்

- அரசாங்கத்தின் அறிவிப்பு தொடர்பில் மனோ கணேசன்

கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கொழும்பு மாநகரபை, தெஹிவளை-கல்கிஸ்சை மாநகரசபை, ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டே மாநகரசபை, கொலொன்னாவை நகரசபை, கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளுராட்சி சபைகள் ஒரே கட்டமைப்பில் கொண்டுவரப்பட்டு கொழும்பு பெருநகர கூட்டுத்தாபனமாக மாற்றப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முயற்சிகளுக்கு பின்னால் கொழும்பு, தெஹிவளை-கல்கிஸ்சை,  மாநகரசபைகள், கொலொன்னாவை நகரசபை, கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை பகுதிகளிலே வாழ்ந்துகொண்டிருக்கக்கூடிய தமிழ், முஸ்லிம் மக்களை குறிவைத்து பாதிக்கும் இரகசிய நோக்கங்கள் இருக்கின்றனவா என்பது தொடர்பில் அரசாங்கம் பதில் அளிக்கவேண்டும். கொழும்பு மாவட்டத்திலே வாழும் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மிக அதிகமான பிரதிநிதிகளை கொண்டுள்ள கட்சியான, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் என்ற முறையில் இதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன். தமிழ் ஊடகங்களும் இது தொடர்பில் அரசாங்கத்தின் தெளிவுப்படுத்தளை பெற்று தமிழ் மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். (மேலும்) 26.03.11

_____________________________________________________________________________________________________________

'பேச்சுவார்த்தைப் பங்காளராக' செயற்படுவதற்கு தயார் : சொல்ஹெய்ம்

erikஇலங்கையில் அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கும் அரசியல் தீர்வை காண்பதற்குமான ஒரே வழி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதே என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் விசேட சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கும் புலம்பெயர்ந்த சமூகங்களுக்கும் இடையில், பேச்சுவார்த்தைப் பங்காளராக செயற்படுவதற்கு தான் தயார் எனவும் அவர் கூறியுள்ளார். புலம்பெயர்ந்த தமிழ் மக்களை கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சந்தித்து பேசியபோது எரிக் சொல்ஹெய்ம் இவ்வாறு கூறியுள்ளதாக நோர்வே நியூஸ் தெரிவித்துள்ளது. பல அமைப்புகள் இச்சந்திப்பில் பங்குபற்றியதாகவும் நோர்வே நியூஸ் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை தொடர்பான நோர்வேயின் கொள்கை குறித்து அறிவதற்காகவும் தற்போதைய நிலைமை குறித்த தமது அவதானிப்புகளை வெளிப்படுத்தவும் இச்சந்திப்பை மேற்படி தமிழ் அமைப்புகள் கோரியிருந்தன.தமிழ் குழுக்கள் கூறுவதை செவிமடுப்பது சொல்ஹெய்ம் பிரதான கவனம் செலுத்திய விடயமாக இருந்தது. இலங்கையில் அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கும் அரசியல் தீர்வை காண்பதற்குமான ஒரே வழி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதே என் சொல்ஹெய்ம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இலங்கை அரசாங்கத்திற்கும் புலம்பெயர்ந்த சமூகங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில், பேச்சுவார்த்தைப் பங்காளராக செயற்படுவதற்கு தான் தயார் எனவும் அவர் கூறினார். எனினும் நெடியவன் குழுவினர் இந்த யோசனையை நிராகரித்தனர்.

_____________________________________________________________________________________________________________

5 விமான நிலையங்களை தரமுயர்த்த வர்த்தகர்களின் ஒத்துழைப்பு

புதிதாக ஐந்து வர்த்தக விமான நிலையங்களை அமைக்கும் விமான சேவை வேலைத்திட்டத்திற்கு, இலங்கை வர்த்தகர்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ள உள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்தன தெரிவித்தார். பலாலி, இரத்மலானை, திருகோண மலை, கொக்கலை மற்றும் ஹிங்குரக் கொடை ஆகிய இடங்களில் புதிதாக வர்த்தக விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், அவற்றிற் கிடையே உள்ளூர் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்காக விமானங்களை வழங்குவதற்கு இலங்கை வர்த்தகர்களுக்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும், அமைச்சர் மேலும் கூறினார். தற்போது பாவனையிலுள்ள சீ பிளேனுக்கு மேலதிகமாக மேலும் ஒன்றினை இந்த ஆண்டினுள் கொள் வனவு செய்யவுள்ளதாகவும். அவற்றுடன் இலங்கை விமானப்படையின் விமானங் களையும் ஈடுபடுத்தி உள்ளக விமான சேவை பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். 2012 ஆம் ஆண்டிலே இலங்கைக்கு பல மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவழைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதன் ஒரு முயற்சியாகவே உள்ளூர் விமான சேவை நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகவும் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன சுட்டிக்காட்டினார். இரத்மலானை மற்றும் பலாலி ஆகிய விமான நிலையங்களை வர்த்தக விமான நிலையங்களாக பயன்படுத்த பாதுகாப்பு செயலாளர் அனுமதி வழங்கியுள்ளதாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பிரகாரம் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

_____________________________________________________________________________________________________________

அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சு வார்த்தை சாதகமாக முன்னோக்கி நகர்கிறது

(பகுதி 1)


-  ஆக்கம்: டி.பி.எஸ்.ஜெயராஜ்

TNA Meetingஸ்ரீலங்காஅரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும்(ரி.என்.ஏ) இடையே தற்பொழுது நடைபெற்று வரும் பேச்சு வார்த்தைகளில், மார்ச் 18, வெள்ளிக்கிழமை நடந்த அதன் மூன்றாவது கட்டப் பேச்சுக்கள் சில சாதகமான முன்நகர்வுகளைப் பதிவு செய்திருக்கின்றன. பேச்சுக்களின் பின்னர் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இருந்து எடுத்தாளப்பட்ட கீழ்கண்ட குறிப்பு பேச்சு வார்த்தைகளின் சாரத்தை வெற்றிகரமாக வெளிப்படுத்தியிருக்கிறது. “ஸ்ரீலங்காவில் வாழும் சகல மக்களினதும் அபிலாசைகளும் சந்திப்பதற்குப் பொருத்தமான அரசியலமைப்பு ஒழுங்குகளைப் பற்றிக் கலந்துரையாடல்களை இருதரப்பும் தொடர்ந்து மேற்கொள்ளும். இந்த அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு கட்டமைப்புக்கு வருவதற்கான கண்ணோட்டத்தில் தங்கள் பேச்சுவார்த்தைகளைத் தொடர அவர்கள் சம்மதித்துள்ளார்கள்.” மூன்றாம் கட்ட அரசாங்க – ரி.என்.ஏ தரப்பு பேச்சு வார்த்தைகள், சாதகமான ஒரு முடிவைத் தெரிவிக்கிறது என்பதை அறியும்போது உண்மையில் ஒரு உள்ளத்துணிவு பிறக்கிறது. முந்தைய இரணடு சுற்று பேச்சுக்களுக்கு அப்பாலும் கடந்த சில வாரங்களாக இந்தப் பேச்சு வார்த்தைகளுக்கு இடையூறு ஏற்படத்தக்கதான அச்சுறுத்தும் அரசியல் முறுகல் நிலை பரவியிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. (மேலும்) 25.03.11

_____________________________________________________________________________________________________________

பொது மக்களை பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு ஆயிரக்கணக்கானோரை கொல்வது காட்டுமிராண்டித்தனம் ஹக்கீம் விசனம்

.பா.கிருபாகரன் : பொதுமக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு ஆயிரக்கணக்கான மக்களை மேற்குலக நாடுகள் கொன்று குவித்துள்ளமை காட்டுமிராண்டித்தனமான செயல் எனத் தெரிவித்த நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் லிபியா மீதான தாக்குதல் முழு உலகத்தையும் பாதிக்கும் எனவும் கூறினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற லிபிய நெருக்கடித் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; லிபியாவில் ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது. ஆசிய நாடுகளின் அபிவிருத்தி வளர்ச்சிகளைத் தடுக்கும் நடவடிக்கையாகவே இது உள்ளது. எகிப்தில் புரட்சி நடந்து தலைமை மாறியதாகக் கூறினாலும் அங்கு ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் சென்ற போது அவர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மக்களின் உண்மையான மனநிலையை அறிந்துகொள்ள முடியும். பொதுமக்களைப் பாதுகாக்கவெனக் கூறிக்கொண்டே லிபியா மீது மேற்குலக நாடுகள் தாக்குதல்களை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துள்ளன. இது ஒரு காட்டு மிராண்டித்தனமான செயல். மேற்குலக நாடுகளால் ஒருபோதும் தமது இலக்கை அடையமுடியாது. லிபியா மீதான தாக்குதல் முழு உலகத்தையும் அவற்றின் பொருளாதாரத்தையும் பாதிக்கும். லிபியா மீதான தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். (மேலும்) 25.03.11

_____________________________________________________________________________________________________________

'போராளிகள் சமூகத்தால் புறக்கணிப்பு'

- பி.பி.சி

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்களாகியிருக்கின்ற நிலையில் வடபகுதியில் இருக்கும் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்கள் பலர் தாம் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதாக கூறியிருக்கிறார்கள். தேசிய மட்டத்திலான நல்லிணக்க நடவடிக்கைகளில் அவர்களை உட்படுத்த வேண்டிய அவசியம் குறித்து பலரும் பேசிவருகின்ற சூழ்நிலையில், தொழில், பாதுகாப்பு, திருமணம், வீட்டு வசதி போன்ற பல வகைகளிலும் தாம் புறக்கணிக்கப்படுவதாக உணர்வதாக அவர்களில் பலர் கூறியுள்ளனர். பல முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்ய தமது குழந்தைகளை அனுமதிக்க பல பெற்றோர் தயக்கம் காட்டுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.  அதேபோன்று தமது சொந்த ஊரிலேயே தமக்கு இருக்க வாடகைக்குக் கூட இடம் தர மறுக்கப்படுவதாக ஒரு முன்னாள் பெண் போராளி கூறுகிறார். இவ்வாறு பல வகைகளிலும் புறக்கணிக்கப்படும் முன்னாள் போராளிகள் ஒரு உத்தரிப்பு நிலையில் இருப்பதாக செய்தியாளர் கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் கூறுகிறார்.  விடுதலைப்புலிகளின் ஆட்சியின் போது கலப்புத்திருமணம் செய்த போராளி தம்பதிகளில், ஆண் காணாமல் போன நிலையில் அவரது குடும்பத்தால் சாதியை காரணம் காட்டி அவரது மனைவி புறக்கணிக்கப்படுவதான நிலைமையும் யாழ்ப்பாணத்தில் காணப்படுவதாக யாழ் அரச சார்பற்ற ஒன்றியங்களின் தலைவரான கேசவன் தெரிவித்துள்ளார்.  தாம் புறக்கணிக்கப்படும் நிலைமை காரணமாக பல முன்னாள் போராளிகள், விடுதலைப்புலிகளால் முன்பு எதிரிகளாக கணிக்கப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குமரன் பத்மநாதன் ஆகியோரின் உதவியை நாடி செல்லும் நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அரவிந்தன் கூறுகிறார். தம்மிடம் வரும் முன்னாள் போராளிகளுக்கு தாம் உதவுவதாகக் கூறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆயினும் அவர்களது பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்க பல காலம் பிடிக்கும் என்றும் கூறுகிறார்.

_____________________________________________________________________________________________________________

பால், குடிநீரில் கதிர்வீச்சு பாதிப்பு: நிபுணர்கள் எச்சரிக்கை

நசாகா, மார்ச் 21 (டிஎன்எஸ்) ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றால் ஏற்பட்ட அணு உலை வெடிப்பு காரணமாக பால் மற்றும் குடிநீரில் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  டோ க்கியோ நகரில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களிலும் அணு கதிர் வீச்சின் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் கதிர்வீச்சு தாக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. ஜப்பானில் கடந்த வாரம் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து சுனாமி பேரலைகள் உருவாகி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இந்த இயற்கை பேரழிவுகளில் சிக்கி இதுவரை 18,600 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 7320 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 11 ஆயிரத்து 330 பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி தாக்கியத்தில் டோ க்கியோவுக்கு வடகிழக்கில் உள்ள புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் உள்ள 4 அணு உலைகள் வெடித்தன. எனவே, அவற்றை குளிர்விக்கும் பணி நடந்து வருகிறது. இருந்தும் அதில் இருந்து அணு கதிர்வீச்சு வெளியேறி அப்பகுதியில் பரவி வருகிறது. புகுஷிமா அணு உலைப்பகுதியில் 30 கி.மீ. பரப்பள வில் வசிக்கும் பொது மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். (மேலும்) 25.03.11

_____________________________________________________________________________________________________________

கருணாநிதி ரூ.50 கோடி - ஜெயலலிதா ரூ.51 கோடி: 5 ஆண்டுகளில் சொத்து 3 மடங்காக உயர்வு

சென்னை: முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கலின் போது, தங்கள் சொத்து மதிப்பையும் தாக்கல் செய்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்ததை விட, இப்போது இருவருக்கும் மூன்று மடங்கு அளவுக்கு சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. கருணாநிதி: முதல்வர் கருணாநிதி தனது சொத்து விவரங்களில் தன் பெயரில் உள்ள பணம் கையிருப்பு அசையும், அசையா சொத்துக்கள், தன் மனைவியர் தயாளு, ராஜாத்தி ஆகியோரின் பெயரில் உள்ள சொத்துக்கள் ஆகியவற்றை காட்டியுள்ளார். ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு கடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த கடனை ராஜாத்தி மற்றும் கனிமொழியிடம் இருந்து வாங்கியுள்ளார். கடந்தாண்டு வருமான வரித்துறைக்கு வழங்கிய கணக்கின்படி, கருணாநிதிக்கு 37 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்துள்ளது. தயாளுக்கு 64 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயும், ராஜாத்திக்கு ஒரு கோடியே 67 லட்சத்து 94 ஆயிரம் ரூபாயும் வருமானம் கிடைத்துள்ளது. மற்ற அசையும், அசையா சொத்துக்களையும் சேர்த்து 50 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதா: அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு, 51 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 979 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நகைகளையும் தனது சொத்தாக குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா. ஆனால், அவற்றின் மதிப்பை குறிப்பிடவில்லை. போயஸ் தோட்ட இல்லம், ஐதராபாத், கோட நாடு சொத்துக்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

_____________________________________________________________________________________________________________

இலங்கைக்கான 30 மில்லியன் டொலர் கடனை உலக வங்கி ரத்துச் செய்தது

மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளில் 7ஆவது இலக்கான 'நிலைத்திருக்கும் சுற்றுச் சூழல்' என்பது பிரச்சினையை சந்தித்துள்ளது. அரசாங்கம் அபிவிருத்தி முன்னுரிமைகளை சரியாக ஏற்படுத்தத் தவறியதனால் இந்த திட்டத்துக்கு உலக வங்கி வழங்கவிருந்த 30 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் அரசாங்கத்துக்கு கிடைக்காமல் போயுள்ளது. இலங்கை உயிர் பல்லினத்தன்மையில் உயர் வளம் கொண்டிருந்தாலும், சுற்றுச் சூழல் தொகுதி மற்றும் உயிர் பல்லினத்தன்மை ஆகியவை மோசமாக பாதிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது. இலங்கை சில விடயங்களில் அதன் போக்கை மாற்றியமைத்துக் கொண்டால் நிறுத்தப்பட்ட கடன் திரும்பக் கிடைக்கக் கூடுமென ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பகம் கூறியுள்ளது. வனவிலங்கு திணைக்களம் உலக வங்கியுடன் இணைந்து மிலேனிய அபிவிருத்தி இலக்கு 7ஐ தீர்மானித்தது. இதனை அமுல்படுத்துவதற்கான சகல ஆயத்தங்களும் முடிவடையும் நலையில் அரசாங்கம் திட்ட வரைவில் மாற்றங்களை கோரியதுடன், புதுவிடயங்களை சேர்க்க வேண்டுமெனவும் கோரியது. அரசாங்கத்தின் கோரிக்கை இந்த திட்டத்தினூடாக உட்கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்வதாக இருந்தமையால் அரசாங்கத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த திட்டத்தை கைவிடுவதே மிகச் சிறந்த தீர்வென உலக வங்கி கருதுகின்றது.

_____________________________________________________________________________________________________________

புலிகளின் மகளிர் அணி தலைவி தமிழினிக்கு விளக்கமறியல் நீடிப்பு

 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அணித் தலைவி என இனங்காணப்பட்டுள்ள தமிழினியை எதிர்வரும் மே 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  தமிழினி எனப்படும் சுப்பிரமணியம் சிவகாமியை நேற்று முன்தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய இரகசியப் பொலிஸார் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்தனர். குறித்த அறிக்கையை பரிசீலித்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்டமா அதிபர் வழங்கும் ஆலோசனைக்கு அமைய தமிழினி குறித்து எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர். வன்னி இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரச படைகளிடம் சரணடைந்த தமிழினியை இரகசியப் பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். 

_____________________________________________________________________________________________________________

உயிர் தியாகம் செய்தாலும் செய்வேனே தவிர மேற்கத்திய படைகளிடம் சரண் அடைய மாட்டேன்

லிபியா அதிபர் கடாபி அறிவிப்பு

லிபியா அதிபர் கடாபி மக்கள் முன் தோன்றி பேசினார். அப்போது உயிர் தியாகம் செய்தாலும் செய்வேனே தவிர, மேற்கத்திய படைகளிடம் சரண் அடைய மாட்டேன் என்று அறிவித்தார். வட ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில் 41 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் கடாபியை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இப்படி போராட்டம் நடத்தும் மக்கள் மீது லிபிய ராணுவம் குண்டுகளை வீசி தாக்கி வருகிறது. மக்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ராணுவம் லிபியா நாட்டில் திரிபோலி நகரில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று 4-வது நாளாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முதன் முறையாக கடாபி மக்கள் முன்தோன்றி பேசினார். திரிபோலியில் உள்ள பாப் அல் அஜிஜியா வீட்டில் உள்ள 3 மாடி கட்டிடத்தில் இருந்து தான் அவரது அரசாங்கம் செயல்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்க ஏவுகணை தாக்கியதில் அந்த கட்டிடம் தரைமட்டமானது. அதே வளாகத்தில் உள்ள இன்னொரு கட்டிடத்தில் பால்கனியில் நின்றபடி ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசினார். இதை லிபியா டி.வி. நேரடியாக ஒளிபரப்பியது. (மேலும்) 24.03.11

_____________________________________________________________________________________________________________

பத்தும் பலதும்

வித்தியாதரனின் வித்தகம் : ‘ விநாச காலே விபரீத புத்தி ! ’

- பரணீதரன்

viththi_douglasவரவிருக்கும் வடமாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தம்மை முன்னிறுத்த முயன்று வருபவர்களுள் கொழும்பைத் தளமாகக் கொண்டுள்ள கோடீஸ்வர ஊடகவியலாளர் உதயன் வித்தியாதரனும் ஒருவர். பத்திரிகை நடாத்திப் ‘புதையல்’ எடுக்கும் வித்தையைத் தெரிந்த காரணத்தால், புகழ்பெற்ற ஊடகவியலாளரெனப் ‘பெயர்’ பெற்று ஒரு பிரமுகராக வலம் வந்து கொண்டிருப்பவர் இவர். ‘பிழைப்பை’யே கொள்கையாக வைத்துப் பத்திரிகை நடாத்திவிட்டு, ‘புலிகள்’ அழிந்தது உறுதியான பின்னர், முழுநேர அரசியலில் நுழைந்து ஆதாயம் தேடும் அங்கலாய்ப்பில் ‘கொள்கை’க்காக உதயன் தொழிலை உதறித் தள்ளியதாக ஊர் உலகம் பூராகச் சொல்லித் திரிந்தவர். சப்றா நிதி நிறுவனம் மூலம் ஏமாற்றிப் பெற்ற ஆயிரக் கணக்கான அப்பாவி ஏழை மக்களின் - பெரும்பாலும் ஓய்வூதியர்களின் - ஆயட்கால சேமிப்பை உரமாக்கி வளர்ந்த உதயன் பத்திரிகைப் பணத்தில் ஊதியம் பெற்று பலகாலம் பணியாற்றியபோது, ‘இந்தப் பாவப் பணத்தில் நானோ எனது மனைவி பிள்ளைகளோ ஒரு குவளை தேநீர் கூட குடிக்கமாட்டோம்’ எனக் கொள்கைப் பிரகடனம் செய்து தனது பதவியைத் தூக்கி எறிய முனைந்திராத ஒரு கொள்கைக் குன்று இவர்.  (மேலும்) 24.03.11

முன்னைய பதிவுகள்

தேனீ இணையம்

10வது வருடம்


22.02 2002- 22.02.2011

 

DAN Magazing New

டன் தொலைக்காட்சி
தொடர்புகட்கு

காக்கும் ஷேக்கும் (KAK AND SHEIKH )

புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரே ஸ்ரீலங்கா அரசு வகுத்திருக்கும் சாம, தான, பேத, தண்ட வியூகம்

தமிழ் மக்களுக்குப் பாரிய இன்னல்கள் ஏற்பட்டதற்கு வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி நிறைவேற்றிய தனிநாட்டுத் தீர்மானமே அடிப்படைக் காரணம்.

இலங்கை புலனாய்வுத்துறை எமது மக்களில் சிலர் எண்ணுவதைப்போல் முட்டாள்தனமானது அல்ல. குமரன் பத்மநாதன்

பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்