a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி             உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்      எங்கள்தேசம்         சலசலப்பு         நோயல்நடேசன்     விடிவெள்ளி         எங்கள்பூமி              ரீவடை இணையம்        பார்வை             தமிழ்யுகே                     புயல்                 புளொட்யுகே      யாழ்முஸ்லீம்      புண்ணியாமீன் 
யவ்னா ருடே                 எஸ்.ஆர்.லெம்பட்       பஷீர்

Asientribune
Lines-Magahzine
The lka academic
Tamil Week            sldf
Uthr                
        

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.10                                                          15.04.2011

இலங்கை வெல்ல திருப்பதியில் ராஜபக்சே வழிபாடு-சென்னையில் இறங்கி போகிறார்

சென்னை: மும்பையில் நடக்கும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண வரும் இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கள் நாட்டு அணியின் வெற்றிக்கு பிரார்த்தனை செய்கிறார். இதற்காக சென்னை வந்து அங்கிருந்து கார் மூலம் அவர் திருப்பதி செல்கிறார். ஈழத்தில் நடந்த கொலை வெறியாட்டத்திற்குப் பின்னர் இந்தியாவுக்கு பலமுறை வந்துள்ள ராஜபக்சே இதுவரை சென்னை வந்ததில்லை. இப்போதுதான் முதல் முறையாக தமிழக மண்ணில் அவர் காலடி எடுத்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய, இலங்கை அணிகள் மோதம் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதைக் காண இலங்கை அதிபர் ராஜகபக்சே இந்தியா வருகிறார். போட்டிக்கு முன் திருப்பதி கோயிலுக்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். அவர் இன்று தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். அங்கிருந்து காரில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்கிறார். அங்கு அவர் 1 மணி நேரம் செலவிடுகிறார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார்.

_____________________________________________________________________________________________________________

முருகபூபதியின் மூன்றாவது கரம்

murugaboobathyசரியாக எண்ணிப் பார்க்கவில்லை. பதினொருபேர் என்று நினைக்கிறேன். ஆளுக்கு ஒரு பிளாஸ்டிக் கதிரையை எடுத்துக் கொண்டு அவர்கள் காரியாலயத்துக்குள் அமைதியாக வந்தார்கள். பின்னால் அவர்களது பொறுப்பாசிரியை புன்னகை பூத்த முகத்துடன் வந்தார். அமர்ந்து கொள்ளச் சொன்னதும் அவர்கள் அந்நாள் மாணாக்கரின் பவ்வியத்தோடு அமர்ந்தார்கள். அவர்களில் நால்வர் ஆண்கள். ஏனையோர் பெண்கள். நண்பர் ஒவ்வொருவராகச் சுகநலம் விசாரித்தார். பெயர்களைக் கேட்டறிந்தார். ஏராளமானோருடன் தான் சம்பந்தப்பட்டிருப்பதால் பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை என்று மன்னிப்புக் கோரும் தொனியில் தெரிவித்தார். யார் யார் சாதாரண தரப் பரீட்சை எடுக்கிறீர்கள்? அடுத்த வருடம் தோற்றவுள்ளவர்கள் யார்? ஏனையோர் கற்கும் வகுப்புக்கள் யாவை? நன்றாகப் படிக்கிறீர்களா? உங்களுக்கு வேறு ஏதாவது பிரச்சினைகள் உள்ளனவா? இவை ஒரு தந்தையின் பரிவோடும் ஒரு தாயின் பாசத்தோடும் கலந்து வெளிவந்த வினாக்கள். அவர்கள் மிகவும் மரியாதையுடன் ஒற்றை வார்த்தையில் புன்முறுவல்களினூடே பதிலளித்தார்கள். இருவர் அடுத்த ஆண்டில் க.பொ.த.ப. சாதாரண பரீட்சையும் மற்றுமிருவர் அதற்கடுத்த ஆண்டில் உயர்தரப் பரீட்சையும் எழுதுகிறார்கள். (மேலும்) 02.04.11

_____________________________________________________________________________________________________________

இலங்கைக்கு சர்வதேச கீர்த்தியைப் பெற்றுத் தந்த முரளிதரனை இன்று நாம் தேசிய வீரராக கெளரவிப்போம்.

- ஜனாதிபதி

உலக சாதனை படைத்து சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கீர்த்தியை பெற்றுக்கொடுத்த முத்தையா முரளிதரன் என்ற மாவீரனை இன்று இலங்கை மக்கள் அதி உன்னத நிலையில் வைத்து கெளரவிப்பார்கள். விளையாடும்போது ஏற்பட்ட சிறிய உபாதையையும் பொருட்படுத்தாமல் இந்த சாதனையாளர் முரளிதரன் தாய் நாட்டுக்காக இன்று களமிறங்குவார் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இன்று நாடெங்கிலும் ஒரு கிரிக்கெட் விழாவைக் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. எமது வீரர்கள் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாடெங்கிலும் வாண வேடிக்கைகளும் பட்டாசுகளும் கொளுத்தி மக்கள் ஆனந்தப் பூரிப்படைவார்கள். அது போன்றே எங்கள் வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு பவுண்ரிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் வெடிகள் கொழுத்தப்படுமென்று நாட்டின் பல பகுதியில் ஒழுங்குகள் செய்யப் பட்டிருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் ஊர்ஜிதம் செய்தன. இன்றைய இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றாலும் அல்லது இரண்டாம் இடத்தைப் பெற்றாலும் தங்கு தடையின்றி வெற்றிவிழா இலங்கையில் பல நாட்களுக்கு நடைபெறுமென்றும் அறிவிக்கப்படுகிறது. நாளையதினம் ஞாயிற்றுக்கிழமை மக்கள் வெற்றிப்பூரிப்பில் வீதியிறங்கி இன் சுவைகளைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டு வருகின்றன. இலங்கை அணியினது பதாதைகளும், முத்தையா முரளிதரனின் பதாதைகளும் நாட்டிலுள்ள பிரதான நகரங்களில் வைப்பதற்கான நடவடிக் கைகளும் பூர்த்தியடைந்துள்ளன.

_____________________________________________________________________________________________________________

பொரளையில் சட்டவிரோத குடியிருப்புக்கள் இடிப்பு

பொரளை சத்திசிறிபுர பகுதியில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த குடியிருப்புக்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் இன்று இடித்து அகற்றப்பட்டன. சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள குறித்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு குடியிருப்பாளர்கள் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தனர். எனினும் அவர்கள் அறிவுறுத்தலை பின்பற்றாமையால் வீடுகள் இடித்து உடைக்கப்பட்டதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சத்திசிறிபுர பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கங்களைக் கருத்திற் கொண்டே சட்டவிரோத குடியிருப்புக்கள் அகற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

_____________________________________________________________________________________________________________

இலங்கைஇந்திய இறுதிப்போட்டிக்கு முன்னொருபோதுமில்லாத கடும் பாதுகாப்பு: வான்,கடல் மார்க்கங்களில் கடும் கண்காணிப்பு

mumbaiமும்பை: இலங்கை இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையில் மும்பையில் வான்கடே விளையாட்டரங்கில் நாளை சனிக்கிழமை இடம்பெறும் உலகக் கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டியையிட்டு முன்னொருபோதுமில்லாத வகையில் பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வான் மார்க்கத்திலும் கடல் மார்க்கத்திலும் கடுமையான கண்காணிப்புக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அதேசமயம், போட்டி இடம்பெறும் விளையாட்டரங்கைச் சூழ ஆயிரக்கணக்கான பொலிஸார் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த வருடம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தியாவுக்கு வருகைதந்தபோது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை விட இது அதிகமானதெனக் கூறப்படுகிறது. பார்வையாளர்களாக பயங்கரவாதிகள் சிலர் விளையாட்டரங்கிற்குள் ஊடுருவக்கூடுமென்ற அண்மைய அறிக்கைகளைப் பரிசீலனைக்கு எடுத்து அதற்குச் சந்தர்ப்பம் வழங்காத விதத்தில் கடும் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மும்பை பொலிஸார்,மாநில ரிசேர்வ் பொலிஸ்படை, துரித நடவடிக்கைப் படை, உள்ளூர் ஆயுதப்பிரிவு, கொமாண்டோக்கள், மத்திய கைத்தொழிற்துறை பாதுகாப்புப் படை, துரித நடவடிக்கைக் குழு உள்ளடங்கலாக மும்பையில் பாதுகாப்புத் துறையினர் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். (மேலும்) 01.04.11

_____________________________________________________________________________________________________________

சுவிற்சர்லாந்து அணு உலை அலுவலகத்தில் வெடித்தது பார்செல் வெடிகுண்டு!

சுவிற்சர்லாந்தின், ஓல்ட்டன் நகரில் அமைந்திருக்கும் அணு உலை ஆராய்ச்சி மைய அலுவலகத்தில் திடீரென வெடி குண்டு பொதி ஒன்று வெடித்ததால், இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓல்ட்டன் நகரின் காமர்ஷியல் கட்டிடத்தொகுதி ஒன்றின்  நான்காவது மாடியில் அமைந்துள்ள, குறித்த அணு உலை ஆராய்ச்சி அலுவலகத்தில் இச்சம்பவம் நேற்று பகல் நடந்துள்ளது. இப்பொதியினை திறக்க முற்பட்ட, 'சுவிஸ் நியூக்கிளியர்' ஐ சேர்ந்த ஒரு பெண்மணியும், அருகிலிருந்த மற்றுமொரு ஆடவரும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்தனர். மேலும், அருகிலிருந்த வங்கியும் சேதமடைந்துள்ளது. இதை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில பொலிஸார், வேறு வெடிகுண்டு பொதிகள் உள்ளனவா என தீவிர சோதனை நடத்தினர். நாட்டுக்கு தேவையான ஒரு பகுதி மின்சாரத்தை, தனது அணு உலைகள் மூலமாக தானே உற்பத்தி செய்து வருகிறது சுவிற்சர்லாந்து. இவ் அணு உலைகளை நிர்வகித்து வரும் முக்கிய பொறுப்பு சுவிஸ் நியூக்கிளியரிடம் இருக்கிறது. ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி என்பவற்றால், அங்கிருந்த அணு உலைகள் பாதிக்கப்பட்டு ஆபத்தான கதிர்வீச்சை பரப்பத்தொடங்கியதிலிருந்து, சுவிற்சர்லாந்திலும் அணு உலைகள் இவ்வாறான ஆபத்தை ஏற்படுத்தலாம் என அதற்கெதிரான பிரச்சாரம் வலுவடையத்தொடங்கியது. நேற்றைய வெடிண்டு பொதி தாக்குதலுக்கும் சிலவேளை, அணு உலைகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் குழுவினர் காரணமாக இருக்கலாம் என அவதானிகள் கருதுகின்றனர்.  - தமிழ்மீடியா

_____________________________________________________________________________________________________________

இறுதிப்போட்டியில் முரளி விளையாடுவார்: பயிற்றுநர்

முத்தையா முரளிதரனின் உடல் திடநிலை குறித்து கவலைகள் நிலவிய போதிலும் நாளை நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் அவர் விளையாடுவார் என இலங்கைக் கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் ட்ரவோர் பெய்லீஸ் தெரிவித்துள்ளார். 39 வயதான முத்தையா முரளிதரன் உலகக்கிண்ண சுற்றுப்போட்டியின்போது கணுக்கால், முழங்கால், கவட்டுப் பகுதி என உடலின் பல பகுதிகளில் உபாதைகளுக்குள்ளானார். அரையிறுதிப் போட்டியின் போது முரளிக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும் என்ற ஆலோசனை பலரால் முன்வைக்கப்பட்டது. எனினும் அவர் அப்போட்டியில் சிறப்பாக பந்துவீசி இலங்கை அணியின் வெற்றிக்கு உதவினார். ஆனால் அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வியாழக்கிழமை மும்பை வாங்கெட் அரங்கில் நடைபெற்ற பயிற்சிகளில் கலந்துகொள்ளவில்லை. இலங்கை அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஏஞ்சலோ மத்தியூஸும் காயமடைந்துள்ளார். அதனால் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ், சுழற்பந்துவீச்சாளர் சுராஜ் ரந்தீவ் ஆகியோர் மாற்று வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள இந்திய அணியுடனான உலகக் கிண் இறுதிப்போட்டியில் முரளி விளையாடுவார் என அணியின் பயிற்றுநர் பெய்லீஸ் கூறியுள்ளார். முரளி விளையாடுவதற்கு சிறந்த வாய்ப்பு உள்ளது. அவர் அரையிறுதிப்போட்டியில் 10 ஓவர்கள் பந்துவீசினார். அவர் அப்படியான குணவியல்பு கொண்ட அவர் அசௌகரியமான நிலையிலும் விளையாடுவார்' என அவர் கூறினார். இப்போட்டியுடன் முரளிதரன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

_____________________________________________________________________________________________________________

துஷாரா கண்விழிப்பு : சந்தேக நபரை கண்டுபிடிக்க 50,000 யூரோ: லண்டன் காவற்துறை அறிவிப்பு

thuvarkaலண்டனில், நேற்று இடம்பெற்ற இரு  வன்முறைக்குழுக்களின் துப்பாக்கிச்சூடு தாக்குதலில், அகப்பட்டுக்கொண்ட ஐந்து வயது இலங்கை  தமிழ் சிறுமியான துஷாரா, ஆபத்தான  ஆபத்தான நிலையை தாண்டி, கண் விழித்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு இலண்டணின் Ilford நகரில் வசிக்கும் துஷாரா, தனது மாமாவை சந்தித்து பிறந்த நாள் பரிசு கொடுக்க சென்ற தனது உறவினரொருவருடன் சென்ற போது Stockwell நகரில் வைத்து, இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு இலக்கானார். அவருடைய மார்பு பகுதியில் குண்டு பாய்ந்துள்ளது. அழைத்துச்சென்ற 35 வயதான தமிழரான சீலன் என்பவரும் இதில் படுகாயமடைந்திருந்தார். இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துஷாரா ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டதாகவும், Chemically Induced Coma நிலையில் இருப்பதாகவும், தற்போது அவர் கண் விழித்துவிட்டதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன. 14-17 வயதுக்குட்பட்ட இளைஞர் குழுக்களே இத்துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இத்துப்பாக்கிச்சூட்டினை நடத்தியவரை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ள குற்றப்புலனாய்வு துறையினர், தகவல் கொடுப்பவருக்கு 50,000யூரோ வழங்குவதற்கும் முன்வந்துள்ளனர். (மேலும்) 01.04.11

_____________________________________________________________________________________________________________

பாகிஸ்தான் பத்திரிகைகள் பாராட்டு

Indian Prime Minister Manmohan Singh, second from right, and Pakistan Prime Ministerஸ்லாமாபாத், மார்ச் 31: மொஹாலியில் நடைபெற்ற உலகக் கோப்பை அரை இறுதி கிரிக்கெட் போட்டியைக் காரணமாகக் கொண்டு உறவை சுமுகமாக்கும் முயற்சியில் ஈடுபட்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸப் கிலானியையும் பாகிஸ்தான் பத்திரிகைகள் வெகுவாகப் பாராட்டியுள்ளன. இந்தச் சந்திப்பால் இரு நாடுகளின் உறவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுவிடப் போவதில்லை, பிரச்னைகள் தீரப்போவதில்லை என்றாலும், இரு நாடுகளும் பரஸ்பரம் பேச்சில் ஈடுபடுவதில் இருந்த இறுக்கமும் தயக்கமும் தளர வழி செய்திருப்பதற்காக இந்த விளையாட்டுப் போட்டியை அவை வெகுவாக வரவேற்றுள்ளன. இந்தப் போட்டியின் முடிவு பாகிஸ்தான் ரசிகர்களுக்கு கசப்பானதாக இருந்தாலும் கடைசிவரை இரு அணிகளும் நட்புறவுடன் விளையாடியதும், இரு நாட்டு தலைவர்களும் பாசத்துடன் பழகியதும் பாகிஸ்தான் பத்திரிகைகளால் வெகுவாக வரவேற்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகள் மீது இந்தியாவுக்கு திருப்தி இல்லை என்பதைப் பல முறை எடுத்துக் கூறியிருந்தாலும் மும்பை தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளும் சந்திக்கவே வாய்ப்பு இல்லாமல் இருந்தபோது கிரிக்கெட் போட்டியை அதற்குப் பயன்படுத்திக் கொண்டதை பத்திரிகைகள் பாராட்டின. (மேலும்) 01.04.11

_____________________________________________________________________________________________________________

இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடி: உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதம்

india populationபுதுதில்லி, மார்ச்.31:  கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 18 கோடிக்கும் மேல் அதிகரித்து 121 கோடியாக உயர்ந்துள்ளது. இது உலகின் மக்கள்தொகையில் 17.5 சதவீதமாகும். புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. எனினும் 90 ஆண்டுகளில் முதன்முறையாக வளர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 62.37 கோடி ஆண்களும், 58.65 கோடி பெண்களும் இந்தியாவில் உள்ளனர். 2001-2011 வரையிலான காலகட்டத்தில் 18 கோடிக்கும் அதிகமாக மக்கள்தொகை அதிகரித்துள்ளது.  2011-ல் வளர்ச்சி விகிதம் 17.64 சதவீதம்.  2001-ல் இது 21.15 சதவீதமாக இருந்தது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உத்தரப்பிரதேசம்தான் மிகவும் அதிகமான மக்கள்தொகை கொண்ட மாநிலமாகும். அங்கு 19 கோடியே 90 லட்சம் பேர் உள்ளனர். லட்சத்தீவில் மிகவும் குறைவான மக்கள்தொகை உள்ளது. அங்கு 64,429 பேர்தான் உள்ளனர். உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மக்கள்தொகையைச் சேர்த்தால் அமெரிக்க மக்கள்தொகையைவிட அதிகமாகும். அதிக மக்கள் நெருக்கம் தில்லியின் வடகிழக்கில் உள்ளது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு 37,346 பேர் அங்கு உள்ளனர். குறைவான மக்கள் நெருக்கம் அருணாச்சலப் பிரதேசத்தின் திபங்க் பள்ளத்தாக்கில் உள்ளது. அங்கு ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒருவர் மட்டுமே உள்ளார். (மேலும்) 01.04.11

_____________________________________________________________________________________________________________

உலகக் கோப்பை இறுதி: பிரதிபா பாட்டீல், ராஜபட்ச மும்பை வருகின்றனர்

புதுதில்லி, மார்ச்.31:  இந்தியா-இலங்கை இடையே ஏப்ரல் 2-ம் தேதி மும்பையில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலும், இலங்கை அதிபர் ராஜபட்சவும் மும்பை வர உள்ளனர். மொஹாலியில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் இந்தியா நுழைந்துள்ளது. இந்தப் போட்டியைக் காண பிரதிபா பாட்டீல் மும்பை செல்ல உள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. கொழும்புவில் இருந்து ராஜபட்சவும் இறுதிப் போட்டியைக் காண மும்பை வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உலகக் கோப்பை போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் முத்தையா முரளிதரனுக்கு காணிக்கையாக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என ராஜபட்ச விரும்புவதாக அவரது செய்தித்தொடர்பாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்தார். இலங்கை- நியுஸிலாந்து இடையே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற அரை இறுதிப் போட்டியை இலங்கை அதிபர் ராஜபட்சவும், அவரது 3 மகன்களும் பார்த்தனர். தற்போது இறுதிப் போட்டியையும் ராஜபட்ச நேரில் காண உள்ளார்.

_____________________________________________________________________________________________________________

விமான நிலையத்தில் காணாமல் போன 6 கோடி ரூபா தங்கம் மீட்பு ; 7 பேர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து காணாமல் போன சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான தங்கம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இத்தங்கம் காணாமல் போனமை தொடர்பாக உள்ளூர் விமான சேவை நிறுவனமொன்றின் ஊழியர்கள் 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் நடத்திய முற்றுகையொன்றின்போது, 22 லட்ச ரூபா பணத்தையும் கைப்பற்றியுள்ளனர். தங்க பிஸ்கட்டுகள் சிலவற்றை விற்பனை செய்து பெற்ற பணம் இதுவென பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார். செட்டியார் தெருவிலுள்ள நகையகமொன்றின் உரிமையாளர் இறக்குமதி செய்த 5 கோடி பெறுமதியான தங்கம் உட்பட 6 கோடி பெறுமதியான தங்கம் மார்ச் 21 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான சரக்குப் பிரிவு களஞ்சியசாலையில் வைத்து காணாமல் போனமைகுறிப்பிடத்தக்கது. சுமார்15 கிலோ எடையுடைய 126 தங்க பிஸ்கட்டுகளும் நகைகளும் காணாமல் போயிருந்தன. குற்றப் புலனாய்வுப் பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டனர். அதேவேளை, இது தொடர்பாக விசாரணைகளுக்காக சிரேஷ்ட சுங்க அதிகாரிகள் இருவரை சுங்கப்பணிப்பாளர் நாயகம் சுதர்ம கருணாரட்ன நியமித்திருந்தார்.

_____________________________________________________________________________________________________________

லங்கா ஈ நியூஸ் செய்தி ஆசிரியர் கைது

லங்கா ஈ நியூஸ் இணையத்தள த்தின் செய்தி ஆசிரியர் பென்னட் ரூபசிங்க பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலபேயிலுள்ள லங்கா ஈ நியூஸ் இணையத்தள அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டள்ள சந்தேக நபர் ஒருவரின் சகோதரரை அச்சுறுத்திய குற்றச்சாட்டு குறித்து வாக்குமூலமளிக்க வருமாறு பென்னட் ரூபசிங்கவை வெல்லம்பிட்டிய பொலிஸார் அழைத்திருந்தனர். சற்றுமுன் பென்னட் ரூபசிங்க கைது செய்யப்பட்டதாகவும் அவர் கடுவெல நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் அவரின் சட்டத்தரணி தெரிவித்தார்

_____________________________________________________________________________________________________________

கிரடிட் கார்ட்’ மோசடியை தடுக்க நிபுணர்கள் குழு: விசாரணைகளில் பொலிஸாருக்கு உதவ ஏற்பாடு

கிரடிட் கார்ட் (கடன் அட்டை) மோசடியை தடுப்பதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொடுப்பனவு முறை மோசடி தொடர்பான சட்டத்தின் பிரகாரம் கிரடிட் கார்ட் மோசடி குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதோடு பொலிஸாருக்கு உதவுவதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்; 2006 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க கொடுப்பனவு முறை மோசடி தொடர்பான சட்டத்தின் கீழ் கிரடிட் கார்ட் மோசடி மற்றும் அது தொடர்பான மோசடிகளை விசாரிக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு விசாரணைகளின் போது உதவுவதற்காக பொறியியல் துறை மற்றும் மென்பொருள் பொறியியல் தொடர்பில் தகைமை யுள்ள நபர்களடங்கிய குழுவொ ன்றை நியமிக்க முடிவு செய்யப் பட்டது. அதன் படி விசேட வர்த்தமானி மூலம் நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ள தோடு இதற்கு பாராளு மன்ற அனுமதி பெறுவதற் காக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும். இந்த நிபுணர்கள் குழுவில் ஹேமசிறி கருணாநாயக்க, துவான் இர்சாத் ஹலால்தீன், பிமல் குணபால, நளின் சரத்குமார, கே. ஜி. பி. சிரிகுமார ஆகியோர் அங்கம் வகிக் கின்றனர். இலங்கை கணனி அவசர பொறுப்புணர்வு அமைப்பும் இதில் அங்கம் வகிக்கிறது. கிரடிட் கார்ட் மோசடிகள் நடைபெற்றதோடு இவற்றை தடுக்கும் வகையில் புதிய நிபுணர்கள் குழு செயற்படும்.

_____________________________________________________________________________________________________________

முல்லைத்தீவுக் கடலில் 4 கடற்படை வீரர்கள் படகுடன் மாயம்

சுண்டிக்குளத்திலிருந்து சாலைக்கு டிங்கி படகொன்றில் சென்ற நான்கு கடற்படை வீரர்கள் முல்லைத்தீவுக்கு வடக்காக படகுடன் காணாமல் போயுள்ளார்கள் என்று கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய நேற்று தெரிவித்தார்.  இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சிறிய ரக டிங்கி படகொன்றில் நான்கு கடற்படை வீரர்கள் சுண்டிக் குளத்திலிருந்து சாலைக்கு கடந்த 29 ஆம் திகதி மாலையில் சென்றுள்ளார்கள். இருப்பினும் இவர்கள் நேற்று பிற்பகல் வரையும் சாலையை சென்றடையவில்லை. சுண்டிக்குளத்திலிருந்து சாலைக்கு இரு மணி நேரத்தில் செல்லலாம். இவர்கள் முல்லை வடக்கு கடற் பரப்பில் காணாமல் போயுள்ளனர். கடற்படையினர் இவர்களை தேடும் பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை இவர்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பாக இந்திய கடற்படையினருக்கும் கரையோர காவல் படையினருக்கும் உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடாக அறிவித்து அவர்களின் ஊடாகவும் தேடுதல் இடம்பெறுகின்றது என்றார்.

_____________________________________________________________________________________________________________

206 முன்னாள் போராளிகள் நாளை விடுதலை

புனர்வாழ்வளிக்கப்பட்ட 206 முன்னாள் போராளிகள் நாளை வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க- தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். இவர்களில் 205 ஆண் முன்னாள் போராளிகளும் ஒரு பெண் முன்னாள் போராளியும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார். முன்னாள் போராளிகள் சமூகத்தோடு இணைக்கும் நிகழ்வு வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளதுடன் இந்நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதாக பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். இதேவேளை, இதனை விட அதிகமான இன்னுமொரு தொகுதி புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சிங்கள - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடுவிக்கப்படவுள்ளதாக சுதந்த ரணசிங்க மேலும் குறிப்பிட்டார்.

_____________________________________________________________________________________________________________

அச்சம், அவலமான சீவியம் சொந்தவீட்டில் இருக்க அனுமதியில்லை - யாழ். மக்கள்

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் நிறைவு பெற்றது உண்மையே. ஆனால் யாழ்.குடாநாட்டு மக்கள் சமாதானம் கிடைத்ததாகக் கூறும் மனநிலைக்கு இன்னும் வரவில்லை என சர்வமதத் தலைவர்களிடம் மக்களின் பிரதிநிதிகளாகக் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். தேசிய கிறிஸ்தவ திருச்சபையினரின் ஏற்பாட்டில் சர்வமதத் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று நேற்று யாழ்.வருகைதந்தது. இதன்போது யாழ்ப்பாணம் ரிம்மர் மண்டபத்தில் இன்றுகாலை 8 மணிக்கு கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதிகளால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, யாழ்.குடாநாட்டில் உள்ள மக்கள் சமாதான சூழலில் வாழவில்லை. தினந்தோறும் பயந்த மனநிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். யுத்தத்தால் தாம் இருந்த வீடுகளையெல்லாம் இழந்து நிர்க்கதியாகவுள்ள மக்களிடையில் சமாதானம் எவ்வாறு நிலைகொள்ளும். இதுவரைகாலமும் அகதிகளாக வாழ்ந்த மக்கள் யுத்தம் முடிந்தும் தமது சொந்த இடங்களில் குடியேறமுடியாமல் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். (மேலும்) 31.03.11

_____________________________________________________________________________________________________________

வன்னி திரும்பிய முதியவர்கள் பலர் வறுமை,தனிமையால் பரிதவிப்பு

உதவ நிதி இல்லையெனக் கை விரிக்கும் தொண்டர் அமைப்புக்கள்

Vanni-3மோதலினால் இடம்பெயர்ந்து பின்னர் வட பகுதிக்கு திரும்பிச் சென்றவர்களில் ஆயிரக்கணக்கான முதியவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுபவர்களாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மக்களுக்கு உதவுவதற்கான எந்தவொரு நிகழ்ச்சித்திட்டங்களும் இல்லையென்று கெல்ப் ஏஜ் சிறிலங்காவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சமந்த லியன வதுகே கூறியுள்ளார். வயது முதிர்ந்த இந்த மக்களுக்கு உதவியளிக்கும் சில அமைப்புகளில் ஒன்றாக இந்த கெல் ஏஜ் சிறிலங்கா காணப்படுகிறது. நிராதரவான நிலையிலுள்ள முதியவர்களின் எண்ணிக்கை தொடர்பாக உத்தியோகபூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆயினும் வன்னியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 60 வயதைத் தாண்டியவர்களாக இருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிப்பதாக ஐ.ஆர்.ஐ.என். செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 2009 மே யில் யுத்தம் முடிவடைந்த பின்னர் 3 இலட்சத்து 20 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச் சென்றோ அல்லது உறவினர்களுடனோ தங்கியிருப்பதாக ஐ.நா. அறிக்கைகள் தெரிவிக்கின்றன. (மேலும்) 31.03.11

_____________________________________________________________________________________________________________

ஆஸ்திரேலியாவில் இந்து கோவில் மீது தாக்குதல்: முகமூடி அணிந்த மர்ம மனிதர்கள் பலமுறை துப்பாக்கியால் சுட்டனர்

மெல்போர்ன், மார்ச்.31-

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. முகமூடி அணிந்த 2 மர்ம மனிதர்கள் அந்த கோவில் மீது துப்பாக்கியால் பல முறை சுட்டனர். இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. ஆஸ்திரேலியாவில் உள்ளது நிïசவுத் வேல்ஸ் மாநிலம். இங்கு உள்ள அபுபர்ன் என்ற இடத்தில் ஸ்ரீமந்திர் என்ற பெயரில் ஒரு இந்து கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த 19-ந்தேதி தாக்கப்பட்டது. அன்று இரவு முகமூடி அணிந்த 2 பேர் அந்த கோவில் மீது துப்பாக்கியால் பல முறை சுட்டனர். கோவில் வாசல் அருகே உள்ள சுவர் மீது சில குண்டுகள் தாக்கின. ஒரு குண்டு அவசர வழியாக உள்ள வாசலை தாக்கியது. இன்னொரு குண்டு கோவிலின் கூரையை பொத்துக்கொண்டு கோவிலுக்குள் விழுந்தது. கோவில் சுவற்றில் பதிந்து உள்ள குண்டுகளின் அடையாளங்களை வைத்து பார்க்கும்போது இவை வழக்கமான குண்டுகள் போல இல்லை. வழக்கமான குண்டுகள் அளவில் சிறியதாக இருக்கும். இந்த குண்டுகள் பெரிய அளவு உடையவையாக இருந்தன. (மேலும்) 31.03.11

_____________________________________________________________________________________________________________

கிழக்கு பல்கலை காலவரையின்றி மூடப்பட்டது

கிழக்கு பல்கலைக்கழகம் வந்தாறுமூலை வளாகத்திலுள்ள பொலிஸ் காவல் நிலையத்தை அகற்றுமாறு கோரி மாணவர்கள் புதன்கிழமை மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் (மட்டக்களப்பு நகரிலுள்ளது) தவிர்ந்த அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதோடு உள்வாரி மற்றும் வெளிவாரி விரிவுரைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. காவல் நிலையத்திலிருந்த பொலிசாருக்கும் மாணவர்களுக்குமிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக இந்த நடவடிக்கையை எடு்த்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. பொலிஸ் காவலரணை அகற்றுவது என்பது பாதுகாப்பு அமைச்சுக்குட்பட்ட விடயம் என்பதால், மாணவர்களின் கோரிக்கையை ஏற்கமுடியாதுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதை பீடங்கள் மூடப்பட்டதாக பதில்துணை வேந்தர் கலாநிதி கே.பிரேம்குமார், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றதையடுத்து சிங்கள மாணவர்கள் வெடி கொளுத்தி ஆரவாரங்களில் ஈடுபட்டதாகவும், அதனையடுத்து தங்கள் படிப்புக்கு பாதிப்பு ஏற்படாமல் கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு தமிழ் மாணவர்கள் கேட்டுக்கொண்ட போது முரண்பாடுகளும் கைகலப்புகளும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் பொலிஸார் சில தமிழ் மாணவர்களைத் தாக்கியதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர். பொலிசாரின் காவல் நிலையம் மாணவர்களிடையே இனமுரண்பாடுகளை வளரக் காரணமாவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.  இந்தக் குற்றச்சாட்டை பொலிசார் மறுத்துள்ளனர். -  பி.பி.சி

_____________________________________________________________________________________________________________

ராஜினி வல்லுறவு, கொலை வழக்கில் இராணுவத்தினர் மூவருக்கு மரண தண்டனை

யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு ஆண்டு வேலாயுதன் ராஜினியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கல் குற்றவாளிகளாக காணப்பட்ட இராணுவ வீரர்கள் மூவருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று புதன்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 22 வயதான ராஜினியை 1996 ஆம்ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதியளவில் கோண்டாவில் பகுதியில் வைத்து ராஜனியை கடத்தி கொலை செய்ததாக இராணுவத்தைச் சேர்ந்த காமினி சமன் உயனகே, ஏ.பி.சரத்சந்திர, டி.கமகே கித்சிறி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதில் மேற்படி மூவரும் குற்றவாளிகளாக காணப்பட்டனர். அம்மூவரில் காமினி சமன் உயனகேவும் டி.கமகே கித்சிறியும் ராஜினியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலும் குற்றவாளிகளாக காணப்பட்டனர். இம்மூவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பி.டபிள்யூ.டி.சி. ஜயதிலக்க மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். வழக்குத் தொடுநர்கள் சார்பில் வழக்குரைஞர் லக்மினி கிரிஹகம ஆஜராகியிருந்தார்.

_____________________________________________________________________________________________________________

"புலிகள் ஆதரவு உறுமல் சத்தம் அடங்கிய நிலையில் தமழகத் தேர்தல் களம்'

vaiko31கோயம்புத்தூர்: சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தமிழக மாநிலம் எங்கும் தேர்தல் களங்களில் புலிகள் சார்பு "உறுமல்கள்' எதிரொலித்துக் கொண்டிருந்தன. லோக்சபாத் தேர்தலின்போது இலங்கையின் யுத்தமும் சிறுபான்மைத் தமிழர்களின் துன்பநிலையும் நிகழ்ச்சி நிரலை ஆக்கிரமித்திருந்தன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவரான அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூட தமிழ் அகதிகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் கையாலாகாத தன்மையைக் கொண்டிருப்பதாகச் சாடியதுடன், அந்த விடயத்தில் கவனத்தைச் செலுத்தியிருந்தார். அதன் பின்னர் 18 மாதங்கள் கடந்து விட்டன. தமிழ் நாட்டிலுள்ள புலிகள் சார்பில் உரத்துக் குரலெழுப்பும் வைகோ தேர்தல் களத்திலிருந்து இப்போது அகன்றுவிட்டார். அத்துடன், கடந்த மூன்று தேர்தல்களில் தோல்வி கண்டிருந்த அ.தி.மு.க. தமிழ்நாட்டில் இலங்கை விடயம் தேர்தலில் வெற்றிபெறச் செய்யாது என்பதைப் புரிந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால், புலிகள் சார்பு துப்பாக்கிகள் ஏன் மௌனமாகியுள்ளன? புலிகள் சார்புக் குழுக்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக வேட்பாளர்களைக் களமிறக்கியிருந்தன. (மேலும்) 31.03.11

_____________________________________________________________________________________________________________

பாகிஸ்தானை 29 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கையுடனான இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணி தகுதி

பாகிஸ்தானுடனான அரையிறுதிப் போட்டியில் 29 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இந்திய அணி இலங்கையுடனான இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. இந்திய - இலங்கை அணிகள் மோதும் இறுதிப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை மும்பாய் வெங்கடே மைதானத்தில் இடம்பெறுகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடை யிலான போட்டியில் பாகிஸ்தான் அணி 261 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனப் பதிலெடுத்தாடிய அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக கம்ரான் அக்மல், ஹபீஸ் ஆகியோர் களமிறங்கினர். கம்ரான் 19 ஓட்டங்களையும், ஹபீஸ் 43 ஓட்டங்களையும் அஷாட் சபீக் 30 ஓட்டங்களையும், யுனுஸ்கான் 13 ஓட்டங்களையும், உமர் அக்மல் 29 ஓட்டங்களையும் ரஸ்ஸாக் 3 ஓட்டங்களையும் அணித் தலைவர் அப்ரிடி 19 ஓட்டங்களையும் வஹாப் றியாஸ் 8 ஓட்டங்களையும் பெற்றனர். உமர்குல் 2 ஓட்டங்களையும் இதேவேளை தனியாளாக நின்ற மிஸ்பா உல் ஹக் 76 பந்துகளை எதிர்கொண்டு 5 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்களாக 56 ஓட்டங்களைப் பெற்றார். (மேலும்) 31.03.11

_____________________________________________________________________________________________________________

வேட்பாளரை அடிக்கிறதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை!-சோ

சென்னை: தனது வேட்பாளரை விஜயகாந்த் அடித்ததில் எந்தத் தவறும் இல்லை. மக்களைப் பொறுத்தவரை இது ஒரு மேட்டரே இல்லை, என்று கூறியுள்ளார் அரசியல் விமர்சகரும் பத்திரிகையாளருமான சோ. தர்மபுரி தொகுதி தேமுதிக வேட்பாளர் பாஸ்கரனை, மக்கள் முன்னிலையில் சரமாரியாக விஜயகாந்த் அடித்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக விஜயகாந்துக்கெதிரான கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர் பல கட்சித் தலைவர்களும். ஆனால் விஜயகாந்தோ, என் ஆளைத்தானே அடிச்சேன். உங்களுக்கென்ன வந்தது... என்கிட்ட அடிவாங்கினவன் மகாராஜனாய் வருவான், என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பத்திரிகையாளர் சோவிடம் கருத்து கேட்கப்பட்டது. விஜயகாந்தை போயஸ் தோட்டம் பக்கம் கொண்டு போய் சேர்த்ததில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதால், சோ கருத்தையும் கேட்க ஆவலாக இருந்தனர் பத்திரிகையாளர்கள். இதுகுறித்து அவர் கருத்து கூறுகையில், "எனக்கென்னமோ இது ஒரு பெரிய விஷயமாவே படல. வேட்பாளரை அடிப்பதையெல்லாம் சீரியஸா எடுத்துக்க முடியுமா... அவரு ஏதோ வேகத்துல அடிச்சிருப்பார். அவங்க கட்சி ஆள்தானே... இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. ஜனங்க இதை சீரியஸாகவும் எடுத்துக்க மாட்டாங்க", என்றார்.

_____________________________________________________________________________________________________________

ராணுவ ஆட்சி முடிந்தது: மியான்மரில் புதிய அரசு

யாங்கூன்: மியான்மரில் கடந்த 20 ஆண்டுகளாக நிலவி வந்த ராணுவ ஆட்சி நேற்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து, புதிய அதிபர் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது. மியான்மரில் தான் ஷ்வே தலைமையிலான ராணுவ ஆட்சி கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்தது. கடந்தாண்டு நவம்பரில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், ராணுவத்தின் ஆதரவு பெற்ற ஐக்கிய ஒற்றுமை மேம்பாட்டுக் கட்சி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, நேற்று ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. புதிய அதிபராக தெய்ன் செய்ன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் இரண்டு துணை அதிபர்கள், 58 அமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சரவையும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது. ராணுவ ஆட்சித் தலைவரான தான் ஷ்வே, எதிர்காலத்தில் என்னென்ன பொறுப்புகள் வகிப்பார் அல்லது ஆட்சிக்கு ஆலோசகராக இருப்பாரா எனப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. தற்போது அவர் ராணுவத் தலைவர் பதவியில் இருந்து இறக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்கு ஜெனரல் மின் அவுங் ஹைங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் புதிய அரசு பொறுப்பேற்றதன் மூலம் மியான்மரில் ஜனநாயகம் மலரும் என்று நிபுணர்கள் சிலர் கருதுகின்றனர். ஆனால் அமைச்சர்களில் பலர், ராணுவத்தின் முன்னாள் ஜெனரல்கள் என்பதால், இதுவும் ராணுவ ஆட்சியின் நீட்சியாகவே இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

_____________________________________________________________________________________________________________

யாழ். மண்ணில் பௌத்த வரலாற்று பொக்கிஷம்

மதங்களின் வரலாறுகளைப் பறைசாற்றும் வகையில் பல்வேறு இடங்களிலும் பலவாறான வரலாற்றுப் பொக்கிஷங்கள் காணப்படுகின்றமை சிறப்பானதாகும். இருப்பினும் குறித்தவொரு பிரதேசத்துக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டுள்ள சமய கலாசார சின்னங்களுக்கு மத்தியில் மற்றுமொரு மதத்தை வலியுறுத்தும் அதுவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த பொக்கிஷங்கள் காணப்படுவதென்பது அதிசயிக்கத்தக்க விடயமாகும். அந்தவகையில், தமிழர் தாயகமாம் யாழ். மண்ணில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க புராதன விகாரையொன்று பற்றிய கண்ணோட்டமே இது. யாழ். சுண்ணாகம், கந்தரோடை பிரதேசத்தில் அமைந்துள்ளது இந்த வரலாற்றுப் புகழ்பெற்ற கந்தரோடை புராதன விகாரை. சுமார் 2,500 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த விகாரையில் பல்வேறு அளவுகளில் அமைக்கப்பட்டுள்ள தூபிகளே விசேடமானவை. இலங்கைக்கு வருகை தந்த புத்த பெருமான் யாழ். நாகவிகாரைக்கு செல்வதற்கு முன்னர் இந்த கந்தரோடை விகாரை அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்துக்கு முதன் முதலில் வந்து ஓய்வு பெற்றதாகவும், அங்கிருந்தவாறே பல்வேறு தியானங்களில் ஈடுபட்டதாகவும் கந்தரோடை விகாரையின் வரலாறு கூறும் கண்டி இராசதானிக்கு உரித்தான விகாரைகள் மற்றும் புண்ணிய பூமிகள் தொடர்பான புத்தகமான 'நாமாவலிய'வில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மேலும்) 31.03.11

_____________________________________________________________________________________________________________

ஜப்பான் உணர்த்தும் பாடங்கள்!

ஜெம் ஆர். வீரமணி

ஜப்பான் நாட்டில் வசந்தகாலம் மக்களால் விமரிசையாகக் கொண்டாடப்படும். கல்வி நிலையங்களுக்கு விடுமுறைக்காலம் அது. எங்கு பார்த்தாலும் செர்ரி மலர்கள் பூத்துக்குலுங்கும். அந்த மரத்தின் அடியில் செர்ரிப் பூக்களால் விரிக்கப்பட்டிருக்கும் சிவப்புக் கம்பளத்தில் அமர்ந்து குடும்பம் குடும்பமாகக் குதூகலிக்கும் விழாவைச் செர்ரி மலர்கள் விழாக் கொண்டாட்டம் என்று அழைப்பார்கள். இந்த ஆண்டு, செர்ரி மலர்கள் கருப்பு மலர்களாகக் காட்சியளிக்காத குறை. அந்த விழா துக்க விழாவாக மாறிவிட்டிருக்கிறது. சுனாமி என்கிற வார்த்தையே ஜப்பான் மொழி வார்த்தைதான். அந்த வார்த்தைக்கு ஜப்பான் மொழியில் அழிவு அல்லது பயங்கரமான ஆழிப் பேரலை என்று பொருள். மார்ச் 11-ம் தேதி ஜப்பானிய நேரமான மாலை மூன்று மணியளவில் ஜப்பானின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியை ஒட்டிய கடலுக்குள் பயங்கரமான பூகம்பம். ஹோன்ஸ் மாகாணத்தில் உள்ள சென்டாய் துறைமுக நகரிலிருந்து கடலில் சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏறத்தாழ 9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. பூகம்ப பாதிப்புகளோடு சேர்ந்து சுனாமி பேரலைகளின் அழிவுத் தாக்கத்தால் உண்டான எதிர்பாராத உயிர், பொருள் சேதங்களை இன்னும் கணக்கிட முடியவில்லை என்று ஜப்பான் நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பூகம்பமும். சுனாமியும் ஏற்படுத்திய அழிவின் விளைவுகளில் மிகவும் கொடூரமானது, கடற்கரையையொட்டி அமைந்திருந்த அணுமின் நிலையங்கள் பாதிக்கப்பட்டதுதான். (மேலும்) 31.03.11

_____________________________________________________________________________________________________________

பரந்துபட்ட அதிகாரத்துடன் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவே இலங்கைக்கு தேவை'

- சர்வதேச நெருக்கடிக் குழுவின் இலங்கைத் திட்டப் பணிப்பாளரும் சிரேஷ்ட ஆய்வாளருமான அலன்கீனன்

Alan_Keenanஇலங்கை தோல்வி கண்ட ஆணைக்குழுக்களின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. அத்துடன், சிறப்பு விடுபாட்டுக் கலாசாரம் தொடர்பாகவும் நீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்கிறது. அரசியல் படுகொலைகள்,புலிகளின் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. மாண்புமிக்கோர் குழுவின் மேற்பார்வையுடனான ஆணைக்குழுவின் பணிகளும் இடம்பெற்றிருந்தன. ஆனால், ஆணைக்குழுவின் பணிகள் படிமுறையாக உதாசீனம் செய்யப்பட்டு குறிப்பிட்ட சில வழக்குகளை மட்டுமே விசாரணை செய்வதுடன் அவை முடிவடைந்தன. ஆணைக்குழுவின் அறிக்கை ஒருபோதும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. 1990 களின் நடுப்பகுதிகளில் திருமதி குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் காணாமல் போனோர் தொடர்பாக நான்கு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சுயாதீனமான அர்ப்பணிப்புடைய ஆணையாளர்களால் பெறுமதியான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டும் காணாமல்போனார் ஆணைக்குழுக்களின் பணிகளிலிருந்து வெற்றிகரமான விசாரணைகள் எவையும் இடம்பெறவில்லை. இலங்கையில் நீடித்த சமாதானமும் நீதியும் கிட்ட வேண்டுமென ஆலோசனை கூறுவோர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டிய தேவையுள்ளது. விடுதலைப்புலிகளும் அரச படைகளும் இழைத்த போர்ச் சட்ட மீறல்கள் தொடர்பாக பதிலளிக்கும் கடப்பாட்டைக் கொண்டு வருவது மிக முக்கியமானதாகும். (மேலும்) 30.03.11

_____________________________________________________________________________________________________________

அண்ணே, என் பேரு பாண்டி இல்லை'!..தேமுதிக வேட்பாளரை அடித்து உதைத்த விஜயகாந்த்!!

தர்மபுரி: வழக்கமாகவே நிதானம் இழந்த நிலையிலேயே காணப்படுபவர் தேமுதிக தலைவர் விஜய்காந்த். இதனால் தான் அவரை குடித்துவிட்டு சட்டசபைக்கு வருவதாக அவரது கூட்டணியின் தலைவியான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே குற்றம் சாட்டினார். இந் நிலையில் நேற்று தர்மபுரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது கட்சி வேட்பாளரை ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக அடித்து, அறைந்த விஜய்காந்த், அவரை 'கும் கும்' என்று குத்தினார். தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் பாஸ்கர் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதனையடுத்து அந்த வேட்பாளர், அண்ணே என் பேரு பாண்டியன் இல்லைன்னே.. பாஸ்கர் என்று திருத்தினார். இதை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்கும்படி மைக்கில் சத்தமாகவே பாஸ்கர் சொல்லிவிட, உடனே நிதானம் இழந்தார் விஜய்காந்த். ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், அந்த இடத்திலேயே பாஸ்கரை சரமாரியாக அடித்தார். அவை வேனுக்குள் தள்ளி முகத்திலும் முதுகிலும் குத்து குத்து என்று குத்தியதோடு, சரமாரியாக அறைந்தார். இதையடுத்து அந்த வேட்பாளர் வேனுக்குள்ளேயே பம்மியபடி, கைகளால் விஜய்காந்தின் அடிகளை தடுத்தார். ஆனாலும் விஜய்காந்த் முகத்தைத் தேடித் தேடி அவரைக் குத்திவிட்டு, அந்த இடத்தைக் காலி செய்தார். விஜயகாந்த்தின் இந்த கேவலமான செயல் அப் பகுதியில் நின்றிருந்த மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியது.

_____________________________________________________________________________________________________________

மன்னார் பஸ் நிலையப் பகுதிகளில் அநாகரிகமாக காணப்படும் ஜோடிகள்

கலாசார விழுமியங்களுடன் காணப்பட்ட மன்னார் நகரப் பகுதியில் தற்போது அவை அழிந்துபோகும் நிலைமை ஏற்பட்டு வருவதாக மத,சமூக அமைப்புகளின் தலைவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக மன்னார் பஸ் நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மாலை நேரங்களில் இளைஞர்,யுவதிகள் அநாகரிகமான முறையில் நடந்துகொள்வதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர். தெற்கில் இவ்வாறானவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுத்துவரும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு பொலிஸார் மன்னாரில் இவர்களைக் கண்டும் காணாமலிருப்பது ஏன் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஜோடிகள் பஸ் நிலைய பகுதிகளில் மறைவான இடங்களிலும் மாலையானதும் வெளிச்சமில்லாத இடங்களிலும் பஸ் பயணிகளுக்கு முன்பாகவும் அருவருக்கத்தக்கவாறு நடந்துகொள்கின்றனர். மாலை 6 மணிக்கு பின்னர் சில யுவதிகள் இளைஞர்களுடன் ஆட்டோக்களில் ஏறிச்செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னர் பாதுகாப்பு படையினர் மன்னார் பஸ் நிலையப்பகுதியில் கடமையிலிருந்தபோது இவ்வாறான சம்பவங்கள் எதுவுமே இடம்பெறவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து மன்னார் நகரின் புனிதத்தைப் பேணவேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

_____________________________________________________________________________________________________________

யாழ் மாவட்டம் அதிசயிக்கத்தக்க வகையில் அபிவிருத்தி: நோர்வே தூதுவர்

epdp30 யாழ். மாவட்டம் அதிசயிக்கத்தக்க வகையில் அபிவிருத்தி கண்டு வருகின்றது என இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹில்டே ஹரல்ட்ஸ்ரட் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள அமைச்சரின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற கலை கலாசார விழாவில் தான் கலந்துகொண்டதாகவும் பல நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்ற பல்வேறு கலைநிகழ்வுகளில் யாழ், வன்னி மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுடனான கலைப்படைப்புக்களைத் தாம் மெய்மறந்து ரசித்ததாகவும் குறிப்பிட்ட அவர், யாழ் பொது நூலகம் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் காணப்படுவதாகவும் தெரிவித்தார். அத்துடன் 2007ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளையே காணக்கூடியதாக இருந்ததாகவும் தற்போது சிறந்ததொரு சாதகமான சூழ்நிலையில் அம்மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (மேலும்) 30.03.11

_____________________________________________________________________________________________________________

குவைத்தில் இலங்கைப் பணிப்பெண் கடத்தப்பட்டு வல்லுறவு

குவைத்தில் பணியாற்றும் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக குவைத் சிற்றி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. குவைத் நகரில் அப்பெண் பணியாற்றும் வீட்டிலிருந்து அவர் வெளியே வந்தபோது அங்கு காத்திருந்த இனந்தெரியாத நபர்கள் மூவர் அவரை பின்தொடர்ந்து சென்று, அப்பெண்னை இழுத்து காரொன்றில் ஏற்றிச் சென்றுள்ளனர். 28 வயதான இப்பெண் இது தொடர்பாக பொலிஸில் புகார் செய்துள்ளார். தன்னை எஜமானரின் வீட்டுக்கு அருகிலுள்ள வீடொன்றுக்கு கொண்டு சென்று மேற்படி மூவரும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக தனது முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார். மேற்படி மூவரையும் பொலிஸார் தேடி வருகின்றனர் என் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

_____________________________________________________________________________________________________________

யாழ். பாழடைந்த வீட்டில் ஆணின் சடலம் மீட்பு

யாழ். அரியாலைப் பகுதியிலுள்ள பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து ஆண் ஓருவரின் சடலத்தை யாழ்.பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவரது சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்தப் பொலிஸார், சுமார் 40 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட பருத்த உடலமைப்பைக் கொண்டவர் என தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டு இச்சடலம் பாழடைந்த வீட்டில் போடப்பட்டு இருக்கலாம் என யாழ். பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்களிடம் பொலிஸார் விசாரணைகளை முடுக்கியள்ளனர்

_____________________________________________________________________________________________________________

ஊழல் மலிந்த நாடுகளில் இந்தியாவுக்கு 4-வது இடம்

ஆசியா பசிபிக் பிராந்திய நாடுகளில், ஊழல் மலிந்த 16 நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது. `பெர்க்' என்ற வர்த்தக ஆலோசனை நிறுவனம் மேற்கொண்ட கருத்து கணிப்பில், மிக மோசமான ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில், 10-க்கு 8.7 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த வரிசையில் கம்போடியா (9.27), இந்தோனேஷியா (9.25), பிலிப்பைன்ஸ் (8.9) ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடம் பெற்றுள்ளன. ஊழலற்ற நாடுகளில் சிங்கப்பூர் முதலிடம் (0.37) வகிக்கிறது. ஹாங்காங் (1.10), ஆஸ்திரேலியா (1.39), ஜப்பான் (1.90), அமெரிக்கா (2.39) ஆகிய நாடுகள் அதற்கு அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. இந்தியாவில் தேசிய அளவிலான அரசியல் தலைவர்களை விட பிராந்திய மற்றும் வட்டார தலைவர்கள் அதிக ஊழல்வாதிகளாகவும், அதேபோல், தேசிய அளவை விட நகரங்களில் உள்ள அதிகாரிகள் அதிக ஊழல் மலிந்தவர்களாக இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

_____________________________________________________________________________________________________________

புதிய துணைவேந்தராக வசந்தி நேற்று நியமனம் இந்தப் பதவியை ஏற்கும் முதல் பெண்

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக மருத்துவ பீடபேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நியமிக்கப்பட்டிருக்கிறார். பல்கலைக்கழகத்தில் பதவியேற்கின்ற முதல் பெண் துணைவேந்தர் இவரே. இவரது நியமனத்தின் மூலம் இனிவரும் காலங்களில் யாழ். பல்கலைக்கழகம் கல்வி மற்றும் வளங்களில் முன்னோக்கிச் செயற்பட வேண்டும் என்று குடாநாட்டின் கற்றறிந்தோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கும் கடிதம் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தால் பல்கலைக்கழகப் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.யாழ்.பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற்றது. பேரவை உறுப்பினர்களின் தெரிவுப்படி பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 14 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றிருந்தார். பேராசிரியர் ரட்ணஜீவன் கூல், தற்போதைய பதில் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் ஆகியோர் தலா 9 வாக்குகளைப் பெற்று அடுத்த நிலையில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். நடைமுறையின் பிரகாரம் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களின் பெயர்களை பல்கலைக்கழகப் பேரவை பரிந்துரைத்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிபாரிசுக்காக அனுப்பி வைத்தது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பின்னர் துணைவேந்தர் ஒருவரை ஜனாதிபதியே நியமிப்பார். மாதக்கணக்கில் இந்நியமனம் இடம்பெறாமல் இழுபறிப்பட்டு வந்தது. அதன் பின் கடந்த வருட இறுதியில் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் பதில் துணைவேந்தராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டிருந்தார்.

_____________________________________________________________________________________________________________

உள்ளூராட்சி சபைகளை வலுப்படுத்த சட்டதிருத்தம்:  ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி

    * மக்களின் ஆணையை மதித்து தேவைகளை நிறைவேற்ற வேண்டும்

    * பொய்ப் பிரசாரங்களுக்கு தேர்தல் முடிவு பலத்த அடி

mahinda-20விருப்பு வாக்கு சண்டை சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உள்ளூராட்சி சபைகள் சட்டத்தில் விரைவில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார். எதிரணியினரின் பொய்ப் பிரசாரங்க ளையும், சேறுபூசும் நடவடிக்கைகளையும் நம்பாது நாட்டு மக்கள் தொடராக எமக்கு ஆணை வழங்கி வருகின்றார்கள். மக்களின் ஆணையை மதித்து அதனைத் தொடர்ந்து பேணிப் பாதுகாப்பதுடன் மக்களின் தேவைகளை நிறைவேற்றி வைக்க வேண்டியதும் உங்களது பொறுப்பு என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார். உள்ளூராட்சி சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் வெற்றி பெற்ற உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களும் பிரதித் தலைவர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் நேற்றுக் காலை 10.07 மணிக்கு சுபநேரத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 205 உள்ளூராட்சி சபைகளை ஆளும் ஐ. ம. சு. மு. யும், அதன் கூட்டுக் கட்சிகளான ஸ்ரீல. மு. கா. 4 உள்ளூராட்சி சபைகளையும், தேசிய காங்கிரஸ் 2 சபைகளையும், மலையக மக்கள் முன்னணி ஒரு உள்ளூராட்சி சபையுமாக மொத்தம் 212 உள்ளூராட்சி சபைகளை ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இவற்றின் தலைவர்களும் பிரதித் தலைவர்களும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். (மேலும்) 30.03.11

_____________________________________________________________________________________________________________

சம்பந்தனின் வருகையுடன் தமிழர் தரப்பு அரசியல் சூடு பிடிக்குமா?

-கே.சஞ்சயன்

sambandanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அடுத்த வாரம் நாடு திரும்பவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 4ஆம் திகதி அவர் நாடு திரும்புவார் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா உறுதிப்படுத்தியுள்ளார். இரா. சம்பந்தன் இதய சத்திரசிகிச்சைக்குப் பின்னர் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஓய்வு நிலையில் இருந்து வந்தார். அவர் இங்கு இல்லாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகளுக்கு மாவை.சேனாதிராசாவே தலைமை தாங்கினார். இப்போது மீளவும் நாடு திரும்பும் இரா.சம்பந்தன் தீவிர அரசியலில் ஈடுபடுவாரா என்பது தெரியவில்லை.  இதய சத்திரசிகிச்சை செய்து கொண்டவர்கள் பொதுவாக அதிக அழுத்தங்களுடன் பணியாற்றுவதை மருத்துவர்கள் விரும்புவதில்லை. ஓய்வு நிலையில் இருப்பதே அதிகம் நல்லதென்று அவர்கள் ஆலோசனை கூறுவதுண்டு. இரா.சம்பந்தனின் உடல்நிலை தீவிர அரசியல் நடவடிக்கைகளுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்ற கேள்வி இருந்தாலும், அவரது வருகைக்காக பல முக்கிய பணிகள் காத்துள்ளன என்பது உண்மை. (மேலும்) 30.03.11

_____________________________________________________________________________________________________________

கடாபி எதிர்ப்பாளர் அரசு : பிரிட்டன், பிரான்சு ஏற்பு

லிபிய மக்களை காக்கும் பணியில் நேட்டோ படைகள்: அதிபர் ஒபாமா

வாஷிங்டன், மார்ச் 29: லிபியாவில் அதிபர் கடாஃபிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மக்களை காக்க அங்கு புதன்கிழமை முதல் நேட்டோ படைகள் பணியில் அமர்த்தப்படுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா திங்கள்கிழமை தெரிவித்தார். லிபியா தொடர்பான அமெரிக்க கொள்கை குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் இது குறித்து மேலும் கூறியது: "ராணுவத்தின் விமான தாக்குதலில் இருந்து மக்களை காக்க அமெரிக்காவும் அதன் நேச நாடுகள் சிலவும் தங்களது படைகளை அங்கு அனுப்பியிருந்தன. புதன்கிழமை முதல் நேட்டோ படைகள் அங்கு பணியில் ஈடுபடுத்தப்படும். கடாஃபி ஆதரவு ராணுவத்தை நேட்டோ படைகள் ஒடுக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. (மேலும்) 30.03.11

_____________________________________________________________________________________________________________

யாழ். சென்ற பஸ் பாலத்தில் மோதி விபத்து சாரதி பலி; ஐவர் படுகாயம்

முன் சில்லு கழன்றோடியதில் சிலாபத்தில் பயங்கரம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஸொன்று சிலாபம், லுனுஓயா பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் உதவி சாரதி கொல்லப்பட்டுள்ளதுடன் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். நேற்று அதி காலை 1.00 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிலாபம் பொலி ஸார் தெரிவித்தனர். வவுனியாவைச் சேர்ந்த ரீ. தேவராஜா என்ற சாரதியே மரணமாகியுள்ளார். காயமடை ந்தவர்கள் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிலாபம் லுனுஓயா பாலத்தினூடாக நள்ளிரவு யாழ்ப்பாணம் நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்த மேற்படி பஸ் வண்டியினது முன் சக்கரம் தனியாக கழன்று ஓடியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் வண்டி தறிகெட்டு ஓடி பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது முன் இருக்கையில் அமர்ந்திருந்த உதவிச் சாரதி பஸ் வண்டியின் முன் பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு லுனுஓயா ஆற்றினுள் தூக்கி வீசப்பட்டார். இவரது சடலம் நீண்ட நேர தேடுதலின் பின்னர் மறு நாள் காலை 8 மணியளவில் மீட்கப்பட்டது.  இந்த விபத்துச் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த என்டனி கணேஷ் (19) எஸ். சிவலிங்கம் (50), ராஜகுமார் (21), ராஜட்ணம் சசிகுமார் (24) மற்றும் ஆரச்சிகட்டுவ பகுதியைச் சேர்ந்த நிரோஷா சந்தமாலி (26) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சாரதியின் சடலம் சிலாபம் ஆஸ்பத்திரி சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்தது

_____________________________________________________________________________________________________________

217 ரன்களில் ஆட்டமிழந்தது நியூசிலாந்து

கொழும்பு, மார்ச் 29: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து 48.5 ஓவர்களில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. நிதான தொடக்கம்... தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய கப்டில், பி.மெக்கல்லம் ஆகியோர் நிதானமாகவே ஆட்டத்தைத் தொடங்கினர். 8-வது ஓவரில் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மெக்கல்லம் ஆட்டமிழந்தார். அவர் அதிரடியாக ஆட முற்பட்டு ஹெராத் பந்துவீச்சில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அப்போது அணியின் ஸ்கோர் 32 ஆக இருந்தது. அடுத்து வந்த ரைடர் 19 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து ராஸ் டெய்லர் களம் இறங்கினார். ஸ்கோர் 84 ஆக இருந்தபோது கப்டில் 39 ரன்களில் மலிங்காவின் பந்துவீச்சில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து டெய்லருடன் ஜோடி சேர்ந்த ஸ்டைரிஸ் அணியின் ஸ்கோர் உயர உதவினார். (மேலும்) 29.03.11

_____________________________________________________________________________________________________________

கறுப்புக் கண்ணாடி அணிந்து கண்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

மார்ச் மாத இறுதி முதல் ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களின் போது சூரியன் இலங்கைக்கு நேராக இருப்ப தனால் உஷ்ண நிலை உச்ச கட்டத்தில் இருக்கின்றது. இதனால் வியர் குரு போன்ற சரும நோய்கள் அதிகமாக ஏற்படுவதுடன் மக்களின் கண்பார் வைக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்து கின்றது. கொழும்பு கண் ஆஸ்பத்திரியின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே பகல் பொழுதில் கடும் வெயிலில் வெளியில் செல்ப வர்கள் கறுப்புக் கண்ணாடி அணிவது அவசியமென்று அறிவுறுத்துகிறார். சூரிய கதிர்களில் இருந்து வெளியேறும் அதி சக்தி வாய்ந்த புறஊதாகதிர் கண்விழிகளுக்கு தீங்கிழைக்கும் என்றும் இதனால் பார்வை மங்குதல், கண்களில் பூ விழுதல் போன்ற பலதரப் பட்ட நோய்கள் மக்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்து இருக்கிறதென்று அவர் தெரிவிக்கின்றார். இவ்விதம் தொடர்ந்தும் பல நாட்களுக்கு கடும் வெயிலில் கண்ணாடி இல்லாதவர்கள் கறுப்புக் குடையொன்றை பிடித்துக் கொண்டு செல்வதன் மூலம் கண்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது. கறுப்புக் கண்ணாடி அணிய வேண்டும் என்பதற்காக நடைபாதையில் விற்பனை செய்யப்படும் தரங்குறைந்த பிளாஸ்டிக் கறுப்புக்கண்ணாடிகளை அணிவதனால் கண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுமென்றும் அவர் கூறுகிறார். வைத்தியர்களின் சிபாரிசுக்கமைய தயாரிக்கப்படும் கறுப்புக் கண்ணாடிகள் கடைகளில் சற்றுக் குறைந்த விலைக்கு விற்கப்படுவதனால், பணக்கஷ்டம் உள்ளவர்கள் அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். கறுப்புக் கண்ணாடியை வாங்குவதற்கு சிறிதளவேனும் பணமில்லாதவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் பகல் பொழுதில் தங்கள் வசிப்பிடங்களில் முடங்கிக் கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அந்த வைத்தியர் கூறுகிறார்.

_____________________________________________________________________________________________________________

இந்திய அனுசரணையில் ஆயிரம் வீடுகள் நிர்மாணப் பணி ஜூலையில் ஆரம்பமாகும்

- கிளிநொச்சியில் முதல் தொகுதி; ஜனாதிபதி ராஜபக்ஷ

வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக இந்திய ஆதரவுடன் நிர்மாணிக்கப்படவுள்ள முதற்கட்ட வீடமைப்புப் பணிகள் எதிர்வரும் ஜூலையில் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறார். கொழும்பிலுள்ள வெளிநாட்டு நிருபர்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக ஆயிரம் வீடுகள் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்படும். இதற்கான நிலத்தை நாங்கள் கொடுத்துள்ளோம் என்று தெரிவித்த ஜனாதிபதி, மீதி 49 ஆயிரம் வீடுகள் தொடர்பாக அமைச்சரவையின் அங்கீகாரத்தை இங்கு பெற வேண்டியுள்ளதெனவும் விரைவில் அதனைப் பெற்றுக்கொள்ளவிருப்பதாகவும் சுமார் ஒரு வார காலத்தில் அதனைப் பெற்றுக்கொள்ளவிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருப்பதாக இந்து பத்திரிகை நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது. சம்பூரில் இந்தியாவின் நிலக்கரியை மூலப்பொருளாகக் கொண்ட அனல்மின் உலை அமைப்பதற்கான முன்னேற்றம் குறைவாகவுள்ளது பற்றி கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அரசியல் மட்டத்தில் அந்தத் திட்டத்திற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் இப்போது சகல தொழில்நுட்ப ரீதியான விபரங்கள் தொடர்பான பணிகள் இடம்பெறுவதாகவும் கூறியுள்ளார். (மேலும்) 29.03.11

_____________________________________________________________________________________________________________

போலந்து நாட்டு கார் தொழிற்சாலையை கையகப்படுத்த டாடா முயற்சி?

டெல்லி: போலந்து நாட்டை சேர்ந்த கார் தொழிற்சாலையை கையகப்படுத்தும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. tatafsoஉலக அளவில் கார் சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கவும், வர்த்தகத்தை பரப்பும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது. இதற்கு ஏதுவாக வெளிநாடுகளை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்களை கையகப்படுத்தும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது. சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற பிரிட்டனை சேர்ந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தை டாடா மோட்டார்ஸ் வெற்றிகரமாக கையகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, போலந்து நாட்டை சேர்ந்த பேப்ரிக்கா சமசோடோ ஓசோபவுச் (எப்.எஸ்.ஓ.,) என்ற கார் தொழிற்சாலையை கையகப்படுத்த டாடா மோட்டார்ஸ் முயன்று வருகிறது. எப்.எஸ்.ஓ., நிறுவனம் உக்ரைன் நாட்டை சேர்ந்த உக்ரைன்ஆட்டோ கார் நிறுவனத்தின் தலைமையின் கீழ் இயங்குகிறது. எப்.எஸ்.ஓ., நிறுவனத்தில் உக்ரைன் ஆட்டோவுக்கு 19.9 சதவீத பங்குகளும், போலந்து அரசாங்கத்துக்கு 2.69 சதவீத பங்குகளும் உள்ளன. (மேலும்) 29.03.11

_____________________________________________________________________________________________________________

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் உயிரிழப்பு: சாவகச்சேரியில் சம்பவம்

 யாழ்ப்பாணம், சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் குப்புலான் தெற்கைச் சேர்ந்த சம்பந்தன் சக்திதரன் (வயது28) என்ற ஆசிரியரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார். தாக்குதல் காரணமாக படுகாயமடைந்த இவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பயனளிக்காத நிலையில் இவர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: குறித்த ஆசிரியர் சம்பவ தினம் மாலை 5.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு காங்கேசன்துறை வீதியில் நாச்சிமார் கோவிலுக்கு அருகில் உள்ள மதுபான விற்பனை நிலையத்தில் மது அருந்தியுள்ளார். அந்த மதுமான நிலையத்திற்கு வருமாறு தனது நண்பருக்கும் இவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனை குறித்த நண்பரும் உறுதிப்படுத்தியிருக்கிறார். (மேலும்) 29.03.11

_____________________________________________________________________________________________________________

பான் கீ மூனின் நிபுணர் குழு இலங்கையில் விசாரணை நடத்த முடியாது: ஜனாதிபதி

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த ஆலோசனைக் குழு, இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யமுடியும். எனினும் அவர்கள் இலங்கையல் விசாரணை எதையும் நடத்த முடியாது என ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களை அலரி மாளிகையில் இன்று சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். லிபியா நிலைவரம் குறித்து கருத்து கேட்டபோது. "எவரும் தமது நாட்டின் பிரஜைகளுக்கு தீங்கிழைக்க முடியாது. மக்களை கொல்லும் எவரும் அவர்களுடன் இருப்பவர்கள் அல்லர்"என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். "பொதுமக்களை கொல்பவர்களுடன் நாம் இல்லை. அத்துடன் எந்த நாட்டினதும் இறைமையை மீற முடியாது"என ஜனாதிபதி கூறினார். இதேவேளை, லிபியாவில் கூட்டுப்படைகளின் செயற்பாடுகள், ஐ.நா.வின் 1973 ஆவது தீர்மானத்தினால் வழங்கப்பட்ட ஆணையை மீறிச் செல்வதுபோல் தென்படுவதாக வெகுஜன ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறினார்.

_____________________________________________________________________________________________________________

தடை செய்யப்பட்ட இணையத் தளங்களை சிறுவர்கள் பார்வையிடாதிருக்க நடவடிக்கை

 தடை செய்யப்பட்ட இணையத் தளங்களை சிறுவர்கள் பார்வையிடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இது தொடர்பில் பெற்றோரை அறிவுறுத்துவதற்கும் தீர்மானித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதன்பிரகாரம் தொலைத்தொடர்பு இணையத்தள சேவை வழங்குநர்களினூடாக பெற்றோரை அறிவுறுத்த விருப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஓர் இணையத் தளத்தை சிறார்கள் பார்வையிடுவதை தடுப்பது வினைத்திறனானதாக மாட்டாது.  ஏனெனில், சிறார்கள் தடைசெய்யப்பட்ட அந்த இணையத்தளத்தை பார்வையிடுவதற்கு வேறு வழிகளை கண்டறியக்கூடும். சமூக வலைத்தளங்களை சிறார்கள் பார்வையிடுவதை தடுப்பதில் நாம் செய்யக்கூடிது அதிகமில்லை. எனவே, தமது பிள்ளைகள் விரும்பத்தகாத இணையத்தளங்கள் பார்வையிடுவதை பொருத்தமான கணினி மென்பொருட்களை பயன்படுத்தி கட்டுப்படுத்துமாறு பெற்றோர்களிடம் நாம் இணைய சேவை வழங்குநர்கள் மூலம் கோருகிறோம்.

_____________________________________________________________________________________________________________

தமிழர்களுக்கான அரசியல் தீர்வொன்றை முன்நகர்த்துவதற்கு அமெரிக்கா பிரதான பாத்திரமொன்றை வகிக்க விரும்பியது. ஆனால் இந்தியாவால் அதன் உள்நுளைவு தடுக்கப்பட்டது.

 - நிருபமா சுப்பிரமணியன்

Narayananஸ்ரீலங்கா இந்தியாவிடம் தான் அரசியலமைப்பின் 13வது திருத்தத்துக்குள் தமிழர் பகுதிகளில் ஒரு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை நடைமுறைப் படுத்தப் போவதாகச் சொன்னது. ஆனால் இந்திய அதிகாரிகள் தனிப்பட்ட வகையில் அந்த உறுதிமொழியில் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தார்கள். அமெரிக்க தூதுரகத்தின் பல தந்திகளை விக்கிலிக்ஸ் மூலமாக த ஹிந்துவுக்கு காணக் கிடைத்ததன் பேறாக வெளிப்பட்டது. என்னவெனில் ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ உடனான அதன் இராணுவ நடவடிக்கை ஒரு முடிவிற்கு வருவதற்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே ஒரு அதிகாரப் பகிர்வு திட்டத்தை நடைமுறைப் படுத்தும்படி இந்தியா, ஸ்ரீலங்காவுக்கு அழுத்தம் கொடுத்தது என்கிற விடயமாகும். தமிழர்களுக்கான அரசியல் தீர்வொன்றை முன்நகர்த்துவதற்கு அமெரிக்கா பிரதான பாத்திரமொன்றை வகிக்க விரும்பியது ஆனால் இந்தியா அதன் உள்நுளைவைத் தடுத்துவிட்டது என அந்தத் தந்திகள் மேலும் வெளிப்படுத்தின. இராணுவ நடவடிக்கைகள் முடிவினை நெருங்கிக் கொண்டிருக்கையில், வெளிவிவகாரச் செயலர் சிவசங்கர் மேனன், அமெரிக்க தூதரக விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி பீற்றர் பர்லேயிடம் 15 மே 2009ல்  தெரிவித்தது ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்தியாவுக்கு மீளவும் உறுதியளித்திருப்பது ”13வது திருத்தத்திலும் கூடுதலான அதிகாரப் பரவலாக்கத்தை கூடிய விரைவிலேயே நடைமுறைப் படுத்துவதை அரசாங்கம் முன்னெடுக்க இருப்பதாக” என்று. (மேலும்) 29.03.11

_____________________________________________________________________________________________________________

வட பகுதியின் நிலைமையைப் பார்த்து கவலையடைந்த அயன் போத்தம்

bothamகிரிக்கெட் விளையாட்டில் உலகப் புகழ்பெற்ற இங்கிலாந்தின் சேர் அயன் போத்தம் இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு  அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொண்ட, தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளையும் அழிவுகளையும் இட்டு தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக அவர் விபரித்திருப்பதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது விளையாட்டு கட்டிடத்தொகுதியொன்றை நிர்மாணிக்கும் திட்டங்களை மேற்பார்வை செய்வதற்காக இலங்கையின் முன்னாள் யுத்த வலயத்துக்கு போத்தம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தார். 2009 மே இல் முடிவுக்கு வந்த நீண்ட யுத்தத்தில் இளம் பிள்ளைகள் எவ்வாறு இழுபட்டுச் சென்றனர் என்பது தொடர்பான கதைகளைக் கேட்டுத் தான் திகிலடைந்ததாக போத்தம் கூறியுள்ளார். "நான் கடும் அதிர்ச்சியடைந்துள்ளேன். பார்த்த காட்சிகள் நம்ப முடியாமலிருந்தன. பல மைல்தூரத்துக்கு தரைமட்டமான இடத்தைப் பார்த்தேன். வீடுகள் ஷெல்களால் துளைக்கப்பட்டிருந்தன. மரங்கள் உச்சி முறிந்த நிலையில் எரிந்து காணப்பட்டன' என்று நிருபர்களிடம் அவர் கூறியுள்ளார். மாங்குளத்துக்கு இந்த விளையாட்டுக் கட்டிடத்தொகுதித் திட்டத்தைப் பார்வையிடச் சென்ற பின்னரே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். (மேலும்) 29.03.11

முன்னைய பதிவுகள்

தேனீ இணையம்

10வது வருடம்


22.02 2002- 22.02.2011

 

DAN Magazing New

டன் தொலைக்காட்சி
தொடர்புகட்கு

"புலிகள் ஆதரவு உறுமல் சத்தம் அடங்கிய நிலையில் தமழகத் தேர்தல் களம்'

எங்கே போகிறது தமிழகம்?

அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சு வார்த்தை சாதகமாக முன்னோக்கி நகர்கிறது - (1 )

அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சு வார்த்தை சாதகமாக முன்னோக்கி நகர்கிறது - (2

அறிவுப் பசிக்கு உதவிய ஆர். ஆர். பூபாலசிங்கம்