a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்              பூந்தளிர்       கண்ணோட்டம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.9                                                           09.04.2010

டான் தமிழ்ஒளியில் அரசியல் நேரடி நிகழ்ச்சி

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்தடவையாக ஒரு நிகழ்ச்சியில் இரு இடங்களிலிருந்து செயற்கைக்கோள் வழியாக இருவரை இணைத்து டான் தமிழ்ஒளி நிகழ்ச்சி ஒன்றை நடாத்த விருக்கின்றது. கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் டான் தமிழ்ஒளி தற்போது ய+ரோபேர்ட் சட்டலைற்றில் ஐரோப்பிய நாடுகள் எங்கும் ஒளிபரப்பாகிவருகின்றது. ஐரோப்பாவில் சன் ரிவி ஒளிபரப்பாகிவரும் சட்டலைற்றில் ஒளிபரப்பாகிவரும் டான் தமிழ்ஒளியில் சனிக்கிழமை 27ம் திகதி இடம்பெறும் நிகழ்ச்சியில் சிறுபான்மைத் தமிழர் மகா சபையின் பேச்சாளர் தெணியான் கலந்துகொள்ள இருக்கின்றார். டான் தமிழ்ஒளியின் கொழும்பு கலையக இலக்கத்துடன் (00 94 112 62 30 62  )நேயர்கள் தொடர்பு கொண்டு தெணியான் அவர்களிடம் தங்கள் கேள்விகளை நேரடியாக கேட்கலாம்.

_____________________________________________________________________________________________

இலங்கையில் வறுமையால் மகன்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்த பெண்!

கொழும்பு,​​ மார்ச் 26:​ இலங்கையில் தனது குழந்தைகளுக்கு உணவுகூட அளிக்க முடியாத அளவுக்கு வறுமை வாட்டியதால் 4 குழந்தைகளையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார் ஒரு பெண். ​ பெண்ணின் துயரமான வாழ்க்கை நிலைமையையும்,​​ அவரது கோரிக்கையையும் பரிசீலித்த நீதிபதி,​​ 4 குழந்தைகளையும் ஏற்று அரசு குழந்தை காப்பக மையத்திடம் ஒப்படைத்தார். ​ அந்த பெண்ணின் மற்றொரு மகன் சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இறந்தான். ​ வறுமையால் 3-வயதுடைய அந்த சிறுவனை அவரது தாய் தான் ஆற்றில் தூக்கி வீசினார் என்றும்,​​ இதனால் கோமா நிலையை அடைந்து உயிருக்குப் போராடிய சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தான் என்றும் புகார் கூறப்பட்டது. ​ இந்தச் சம்பவம் நடந்த சில தினங்களிலேயே வழக்கறிஞர் ஒருவரின் உதவியுடன் நீதிமன்றத்தை அணுகிய அந்த பெண்,​​ தனது நிலைமையை எடுத்துக்கூறி தனது 4 குழந்தைகளையும் அரசு ஏற்றுக்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.​ இதை பரிசீலித்த நீதிமன்றமும் 4 குழந்தைகளையும் ஏற்றுக்கொள்ளுமாறு அரசு குழந்தை காப்பக மைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.​ இதையடுத்து அந்த 4 குழந்தைகளையும் அரசே ஏற்றுக்கொண்டது.  (மேலும்)  27..03.10  

_____________________________________________________________________________________________

வன்முறையை தூண்டினார் அத்வானி  !பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி பரபரப்பு வாக்குமூலம் !!

கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில், பாஜக மூத்த தலைவர் அத்வானி அயோத்தியில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசினார் என சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரி அஞ்சுகுப்தா வாக்குமூலம் அளித்தார். கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதியன்று அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை கொடிய மதவெறி யுடன் பாஜக-ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இடித்து நொறுக்கினர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ரேபரேலியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன் றத்தில் நடைபெற்று வரு கிறது. மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் அத்வானியின் தனிப்பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவர் அஞ்சு குப்தா . இவர் 1990ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவை சேர்ந்தவர். அவரிடம் வெள்ளிக்கிழமையன்று விசாரணை நடந்தது. அத்வானி மற்றும் பாஜக தலைவர்களும் வினய் கத்யார், உமா பாரதி, சாத்வி ரிதம்பரா ஆகியோரும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினர் என்று விசாரணையின் போது அஞ்சு குப்தா வாக்கு மூலம் அளித்தார். (மேலும்)  27..03.10  

_____________________________________________________________________________________________

திருட்டு விசைப்படகில் இலங்கைக்கு தப்ப முயன்ற 23 அகதிகள் கைது-

srilankaகுமரி மாவட்டத்தில் விசைப்படகை திருடி அதில் இலங்கைக்கு தப்ப முயன்ற 23 தமிழ் அகதி வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விடுதலைப்புலிகளா? என்று தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். குமரி மாவட்டம் மேற்கு கடற்கரை கிராமமான நித்திரவிளையை அடுத்த தூத்தூரை சேர்ந்தவர் சகாயதாஸ். இவர் விசைப்படகில் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு படகில் நேற்று முன்தினம் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் தனியாக நின்று கொண்டிருந்த ஒரு படகில் இருந்து "காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்'' என்று அலறல் சப்தம் கேட்டது. உடனே சகாயதாஸ் அந்த படகின் அருகில் தனது படகை கொண்டு சென்றார். அங்கிருந்தவர்களிடம் எதற்காக காப்பாற்றுங்கள் என்று சப்தம் போட்டீர்கள் என்று கேட்டார். அதற்கு படகில் இருந்தவர்கள் தங்களது படகு என்ஜின் பழுதாகி விட்டது என்றும், அதை சரிசெய்வதற்கு ஆட்களை அழைத்துவருவதாக கூறிவிட்டு 2 பேர் பைபர் படகில் சென்றனர் என்றும், அவர்கள் ஒருநாள் ஆகியும் இதுவரை திரும்பிவரவில்லை என்றும் கூறினர். (மேலும்)  26..03.10  

_____________________________________________________________________________________________

இணக்கப்பாட்டு அணுகுமுறையைத தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டும்

தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரஹாசன்

ஏகப் பிரதிநிதியென்பது ஜனநாயகத்திற்கு ஒவ்வாத சொற்பிரயோகமென்றும், தமிழ் மக்கள் ஒதுங்கியிருக்கும் அணுகுமுறையிலிருந்து மாறி, இணக்கப்பாட்டு அணுகு முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் ‘ஒஃபர்’ தன்னார்வ அமைப்பின் ஸ்தாபகரும், தந்தை செல்வாவின் புதல்வருமான சட்டத்தரணி எஸ்.ஸி.சந்திரஹாசன் தெரிவி த்தார். உண்மையின் யதார்த் தத்தின் அடிப்படையில் செயற்பட்டால் தமிழ் மக்கள் சாதிக்க முடியு மென்றும் சந்திரஹாசன் குறிப்பிட்டார். ‘தமிழ் மக்களின் எதிர்காலமும் காலத்துக்கு ஏற்ற அணுகுமுறையும்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பு ‘ரமடா ஹோட்ட லில்’ நடந்த கலந்துரையாடலில் சந்திரஹாசன் கருத்துரை வழங்கினார். தமிழ் மக்கள் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பான காலம் வந்துள்ளது. அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் நாம் இணக்கப்பாட்டு அணுகுமுறையில் செயற்பட்டதால் பல முக்கிய விடயங்களைச் சாதித்திருக்கிறோம். குறிப்பாக, இந்தியாவில் அகதிகளாக உள்ள சுமார் 29 ஆயிரம் பேருக்கு இலங்கைப் பிரஜாவு ரிமையைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க முடிந்துள்ளது. (மேலும்)  26..03.10  

_____________________________________________________________________________________________

சி.பி.ஐ.யின் தேடப்படுவோர் பட்டியலிலிருந்து பிரபாகரனின் பெயர் நீக்கம்

prabaசென்னை,​​ மார்ச் 24: மத்திய புலனாய்வுப் பிரிவின் ​(சி.பி.ஐ.)​ இணையதளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மானின் பெயர் மட்டும் இணையதளத்தில் நீக்கப்படாமல் உள்ளது. பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை இலங்கை அரசு இந்திய அரசிடம் அண்மையில் அளித்தது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய எதிரியாகக் கருதப்பட்ட பிரபாகரன் மீது இந்தியாவில் வழக்கு உள்ளது.​ இந்த வழக்கு சென்னையிலுள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில்,​​ பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை பெறுவதற்கு இந்திய அதிகாரிகள்,​​ இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு வந்தனர். கடந்த பிப்ரவரி 1}ம் தேதி பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை,​​ இலங்கை அரசிடமிருந்து சி.பி.ஐ.​ பெற்றுக் கொண்டதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.​ அதைத் தொடர்ந்து,​​ தற்போது சிபிஐ}யின் இணையதளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இடம்பெற்றிருந்த பிரபாகரனின் பெயர் மற்றும் படம் ஆகியவை நீக்கப்பட்டுள்ளது. (மேலும்)  26..03.10  

_____________________________________________________________________________________________

பாக்., பயங்கரவாத முகாம்களை அழிக்க அமெரிக்கா, பிரிட்டன் உதவ கோரிக்கை

லண்டன் : 'பயங்கரவாத பயிற்சி முகாம்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும்படி, பாகிஸ்தானின் நட்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்றவை, அந்த நாட்டுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார். மூன்று நாள் அரசு முறைப் பயணமாக பிரிட்டன் வந்துள்ள மத்திய உள் துறை அமைச்சர் சிதம்பரம், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி: பாகிஸ்தான் அரசு, தங்கள் நாட்டில் செயல்படும் லஷ்கர் -இ- தொய்பா, அல்-குவைதா போன்ற பயங்கரவாத அமைப்புகளை கட்டுப் படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல், அந்த நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யை கட்டுப்படுத்தவும் முயற்சி எடுக்கவில்லை. அங்கு செயல்படும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை அடியோடு ஒழிக்க, பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதையும் நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் பாகிஸ்தானின் நட்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்றவை, அந்த நாட்டுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால், இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், அனைத்து நாடுகளுக்கும் ஆபத்து தான். இதை மற்ற நாடுகள் உணர வேண்டும். (மேலும்)  26..03.10  

_____________________________________________________________________________________________

புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் வன்னி அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்) பூம்புகார் பகுதிக்கு விஜயம்-

 plote-voteவன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்) மற்றும் புளொட் முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் நேற்று வவுனியா பூம்புகார் பகுதிக்கு விஜயம்செய்து அப்பகுதி மக்களைச் சந்தித்துள்ளனர். இதன்போது பூம்புகார் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பூசை வழிபாட்டு நிகழ்விலும் புளொட் வேட்பாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள பொதுமண்டபத்தில் விசேட கூட்டமொன்றும் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் புளொட் வன்னி அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்) ஆகியோர், இந்த பூம்புகார் பகுதியைப் பொறுத்தமட்டில் 70களின் இறுதிப்பகுதியில் காந்தீயம் அமைப்பினால் குடியேற்றம் செய்யப்பட்ட பகுதியாகும். இந்நிலையில் இப்பகுதி மக்களாகிய உங்களுக்கும் எங்களுக்குமிடையிலான தொடர்புகள் சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக நீண்டகாலமாக அறுந்திருந்தபோதிலும் இனி நமக்கிடையிலான நல்லுறவைத் தொடர்ந்து பேணவேண்டும். இங்குள்ள மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு அத்தியாவசிய உதவிகள் தேவைப்படுகின்றன. எனவே அதற்குத் தேவையான உதவிகளை வழங்கவும், மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நாம் முன்னெடுத்துவரும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவைப்படுகிறது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களுக்கு நீங்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

_____________________________________________________________________________________________

தமிழர் புனர் வாழ்வு கழக ரெஜியை  இன்டர்போல் தேடுகிறது

தமிழ் ஈழ விடுதலை புலிகளால் ஆரம்பிக்க பட்ட தமிழர் புனர் வாழ்வு கழகத்தின் நிறைவேற்று பணிப்பளாராக இருந்த ரெஜியை தற்போது சர்வேதேச காவல் துறையினர் தேடி வருகின்றனர் .

மேலதிக விபரங்கட்கு    PDF

_____________________________________________________________________________________________

தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் விடயங்கள் தமிழ்க் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் இல்லை

வடக்கு,கிழக்கு மீளிணைப்பு உட்பட பல விடயங்கள் அடங்கியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்கான எந்தவொரு முன்மொழிவுகளும் கிடையாதென ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவிக்கிறது. "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ள விடயங்கள் கவலை தருவதாக அமைந்திருக்கிறது. அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் வடக்கு,கிழக்கு மீளிணைப்பு உட்பட பல விடயங்கள் தேசிய ஒற்றுமையை எந்த விதத்திலும் பலப்படுத்துவதாக இல்லை. இரு மாதங்களுக்கு முன்னதாக "அன்னம்%27 சின்னக் கூட்டணியில் ஐக்கிய தேசியக் கட்சி,ஜே.வி.பி.,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய 3 பிரதான கட்சிகளே இருந்தன. இதற்கமைய இவர்களுக்கிடையே இரகசிய ஒப்பந்தம் இருப்பதாகவும் அதில் வடக்கு,கிழக்கு மீளிணைப்பு உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் நாம் அப்போது குற்றஞ்சாட்டினோம். அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது குற்றச்சாட்டை நிராகரிக்காத அதேநேரம், ஐ.தே.க., ஜே.வி.பி. இரு கட்சிகளும் குற்றச்சாட்டை நிராகரித்திருக்கின்றன. அந்த வகையில் நாம் இரு மாதங்களுக்கு முன்னர் கூறியதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது தனது தேர்தல் விஞ்ஞாபனமாக வெளியிட்டுள்ளது. ஆனால், இன்று ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. இரு கட்சிகளும் இதுபற்றி எதுவும் பேசாது மௌனம் சாதிக்கின்றன. (மேலும்)  26..03.10  

_____________________________________________________________________________________________

டான் தமிழ்ஒளியில் அரசியல் நேரடி நிகழ்ச்சி

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்தடவையாக ஒரு நிகழ்ச்சியில் இரு இடங்களிலிருந்து செயற்கைக்கோள் வழியாக இருவரை இணைத்து டான் தமிழ்ஒளி நிகழ்ச்சி ஒன்றை நடாத்த விருக்கின்றது. கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் டான் தமிழ்ஒளி தற்போது ய+ரோபேர்ட் சட்டலைற்றில் ஐரோப்பிய நாடுகள் எங்கும் ஒளிபரப்பாகிவருகின்றது. ஐரோப்பாவில் சன் ரிவி ஒளிபரப்பாகிவரும் சட்டலைற்றில் ஒளிபரப்பாகிவரும் டான் தமிழ்ஒளியில் நாளை வெள்ளிக்கிழமை முதல் இலங்கை நேரம் இரவு 10 மணிமுதல் (ஐரோப்பிய நேரம் மாலை 5.30 மணி முதல்) பாராளுமன்ற தேர்தலையொட்டிய சிறப்பு அரசியல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கின்றது. யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலரை அவர்கள் தற்போது தங்கியிருந்து பிரச்சாரம் செய்துவரும் அந்தந்த இடங்களில் வைத்தே நேரடியாக வானலைக்கு கொண்டுவரும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. வன்னியில் கடும் யுத்தம் நடைபெற்றபோது மக்களுடன் கடைசிவரையிருந்து பணியாற்றிய டாக்டர் வி. சண்முகராஜா எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஈரோஸ் அமைப்பின் வேட்பாளராக போட்டியிடுகின்றார். வவுனியாவிலிருந்து அவர் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறும் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கின்றார். எதிர்வரும் சனிக்கிழமை 27ம் திகதி இடம்பெறும் நிகழ்ச்சியில் சிறுபான்மைத் தமிழர் மகா சபையின் பேச்சாளர் தெணியான் கலந்துகொள்ள இருக்கின்றார். டான் தமிழ்ஒளியின் கொழும்பு கலையக இலக்கத்துடன் நேயர்கள் தொடர்பு கொண்டு தெணியான் அவர்களிடம் தங்கள் கேள்விகளை நேரடியாக கேட்கலாம்.

_____________________________________________________________________________________________

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை இன்று மீண்டும் திறக்கப்படுகின்றது

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியேற்றம் நடைபெற்று வந்த தைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாஞ் சோலையில் உள்ள அரசினர் மாவட்ட வைத்தியசாலை இன்று வியாழக் கிழமை மீளவும் திறக்கப்படுகின்றது. முல்லைத்தீவு அரச அதிபர் திரு மதி இமல்டா சுகுமார் இத்தகவலைத் தெரிவித்தார். வடக்குமாகாண அளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி இந்த வைத் தியசாலையை மீளவும் திறந்துவைப் பார். இதனைத் தொடர்ந்து இந்த வைத்தியசாலையில் வைத்தியசேவை கள் ஆரம்பமாகி நடைபெறும். முல் லைத்தீவு பட்டினப் பகுதியில் முதன் முதலில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 16பேர் தற்போது மீளக்குடியேறியுள் ளனர். அவர்களைத் தவிர கரைத்துறைப் பற்று பிரதேச செயலர் பிரிவில் முல் லைத்தீவு பட்டணம் தவிர்ந்த ஏனைய இடங்களில் இதுவரை ஆயிரத்து 334 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளன எனவும் அரச அதிபர் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியேறிய  பகுதிகள்  உள்ளடங்கலான பகுதிகளுக்கும் வவு னியாவுக்கும் இ.போ.ச. பஸ் சேவை கள் இடம்பெறுவதுடன் ஆங்காங்கே ஆரம்ப சுகாதார நிலையங்கள் மீளக் குடியேறிய மக்களுக்கு வைத்திய சேவைகளை வழங்கிவருவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமல்டா சுகுமார் மேலும் தெரிவித்தார்.

_____________________________________________________________________________________________

மட்டகளப்பு வவுணதீவு பகுதியில் ஆகாரம் நஞ்சுத் தன்மையால் 112 மாணவர்கள் வைத்தியசாலையில்

மட்டகளப்பு வவுணத்தீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இருட்டுச்சேலை மடு வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 112 மாணவர்கள் அருந்திய ஆகாரத்தில் நஞ்சுத்தன்மை கலக்கப்பட்டதால் அவசர வைத்திய சிகிச்சை பிரிவுக்கு உட்படுத்தப்பட்டனர். இருட்டுச்சேலை மடு விஷ்னு வித்தியாலயத்தை சேர்ந்த இம் மாணவர்கள் பாடசாலையில் வழங்கப்பட்ட சத்துணவினை அருந்திய பின்னர் வயிற்றிழைவு மற்றும் வாந்தி எடுத்து நோய்க்கு உட்பட்ட பின்னர் மட்டகளப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக இவ் வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் தெரிவித்தார். இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 06 வயதிற்கும் 12 வயதிற்கும் உட்பட்டவர்கள் எனவும் தற்போதைய நிலையில் ஆபத்தான நிலையில் இருந்து அவசர சிகிச்சை நிலைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பணிப்பாளர் முருகானந்தன் தெரிவித்துள்ளார். மேலும் இச் சம்பவம் தொடர்பில் மட்டகளப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

_____________________________________________________________________________________________

தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா சிரத்தையுடன் செயற்பட்டு வருகிறது அந்நாட்டின் உதவி, ஒத்தாசைகள் என்றும் எமக்குத் தேவை

sritharan-2candi_symb1பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி யின் பொதுச் செயலாளரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் இக்கட்சி சார்பாகப் போட்டி யிடும் முதன்மை வேட்பாளருமாகிய திருநாவுக்கரசு ஸ்ரீதரன் வழங்கிய செவ்வி இது.தமிழ்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் 30 வருட காலத்துக்கும் மேலாக போராடிவரும் அமைப்பே பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி. இது ஆரம்ப காலத் தில் ஒரு போராட்ட இயக்கமாகப் பரிண மித்துப் பின்னர் அரசியல் இயக்கமாகப் பரிணமித்துக் கொண்டிருக்கும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் இம்முறை புளொட் அமைப்பினருடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொள்கின்றது. மக்கள் தமது தலைமைகளைத் தேர்ந்தெடுப்பதில் தெளிவாக இருத்தல் வேண்டும். தவிர அனைவருமே தமது வாக்குரிமையைப் பயன்படுத்தவேண்டும். வெறுமனே வாய்ப்பந்தல் போட்டு மக்களை ஏமாற்றும் தலைமைகளை விரட்டியடிக்க வேண்டும். மக்கள் யதார்த்த பூர்வமான, நடைமுறைச் சாத்தியமான தீர்வு குறித்து சிந்திக்கவேண்டும். தாம் பழக்கப்பட்ட கட்சிக்குப் போடாது சிந்தித்துப் போடவேண்டும். ஒரே கட்சியில் பலரை அனுப்புவது மக்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். இம்முறை மக்கள் அனைத்துக் கட்சிகளில் இருந்து பிரதிநிதிகளைத் தேர்வு செய்யவேண்டும். அப்போதுதான் பிழைகள் விடமாட்டார்கள். வெளிநாடு களுக்குச் செல்லாது தொகுதியிலேயே இருப்பார்கள். (மேலும்)  25.03.10   

_____________________________________________________________________________________________

அரசியல் பாடம்

 தாயகக்குரல் 24.03.2010

உலக மனச்சட்சியை தட்டியெழுப்பி எமது தேசியம் தாயகம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றுக்காக குரல் கொடுக்க, சர்வதேச அரங்கில் எமது விடையங்களை எடுத்துக் கூறத்தக்க தெளிந்த அரசியல் புலமையாளர்கள், கல்வியாளர்கள் தேவையென யாழ்மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். இவருடைய கருத்தை நோக்கும்போது இனப்பிரச்சினை ஆரம்பித்த காலத்தில் இருந்து தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய சேர் பொன்.அருணாசலம், சேர் பொன். இராமநாதன், ஜீ.ஜீ. பொன்னம்பலம், செல்வநாயம் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயல்பட்ட ஏனைய தலைவர்களும் அரசியல் புலமை இல்லாதவர்கள். தமிழ் மக்களின் பிரச்சினை இன்னமும் சர்வதேசத்தின் அங்கீகரத்தை பெறவில்லை. ஆகையால் இனப்பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணமுடியவில்லை என்று பேராசிரியா சொல்ல வருகிறாரா என்ற கேள்வி எழுகிறது. இனப்பிரச்சினையும் இந்திய வம்சாவழியினரான மலையக மக்களின் குடியுரிமைப் பிரச்சினையும் சமகாலத்தில் தோன்றியது . இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் மொழிப்பிரச்சினை ஆரம்பித்திருந்த போதிலும் சுதந்திரத்திற்கு பின்னர்தான் அரசியல் அரங்கிற்கு வந்தது. ஆனால் மெத்தப் படிக்காத மலையக மக்களின் தலைவர்கள் தங்கள் மக்களின் குடியுரிமையை பறித்தவர்களிடமே திரும்ப பெற்றுள்ளனர். ​ (மேலும்)  25.03.10   

_____________________________________________________________________________________________

மீள்குடியேற்றப்படாத கிராம மக்கள் இன்று மன்னாரில் போராட்டம்

  மாந்தை எள்ளுப்பிட்டி, பெரிய நாவற்குளம் கிராம மக்களை மீள் குடியமர்த்துமாறு கோரி, மன்னார் அரச செயலகத்திற்கு முன்னால் பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடி இன்று போராட்டம் நடத்தினர். மன்னர் அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றையும் அவர்கள் கையளித்தனர். 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து அப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து, மன்னர் பகுதிகளில் சுமார் 20 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். தற்போது பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். அயலிலுள்ள திருக்கேதீஸ்வரத்திலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். அடம்பன், பாப்பமோட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களும் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். எனினும் தாம் இதுவரை மீள்குடியேற்றப்படாமை குறித்தே மேற்படி போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதாக அம்மக்கள் தெரிவித்தனர்.

_____________________________________________________________________________________________

லண்டனில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.6 ஆயிரம் அபராதம்

லண்டன்,​​ மார்ச் 24:​ லண்டனில் பான் பராக் உள்ளிட்ட போதைப் பாக்குகளை மென்று பொது இடங்களில் துப்புவோருக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ​ லண்டனில் வசிக்கும் இந்தியர்கள்தான் பான் பராக் உள்ளிட்ட போதைப் பாக்குகளை மென்று பொது இடங்களில் துப்பி வைப்பதாக புகார் எழுந்தது.​ இந்தியர்களின் இந்தச் செயலை தடுப்பதற்கு லண்டன் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.​​ லண்டனில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பிரென்ட் நகராட்சி,​​ பொது இடங்களில் பான் பராக் எச்சிலை துப்புவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கையை உடனே அமல்படுத்திவிட்டது. ​ ""பிரென்ட் நகராட்சிக்கு உள்பட்ட வெம்ப்லே பகுதியில் எங்கு பார்த்தாலும் பான் பராக் கறையாக உள்ளது.​ இது பார்ப்பதற்கே அருவருப்பாகவுள்ளது.​ இந்த நிலை தொடர்ந்தால் நகரின் அழகு கெட்டுவிடும்.​ பின்னர் பிரென்ட் நகராட்சி என்றாலே சுகாதாரமற்றது என்ற எண்ணம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுவிடும்.​ (மேலும்)  25.03.10   

_____________________________________________________________________________________________

அடைக்கலம் தேடும் பின் லேடன் மகன்

ரியாத்,​​ மார்ச் 24:​ அல் காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனின் மகன்,​​ அகதியாக வாழ அடைக்கலம் தேடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பின் லேடனின் குடும்பத்தார் தெஹ்ரானிலிருந்து வெளியேற ஐக்கிய அரபு அமீரகம்,​​ கத்தார் ஆகிய நாடுகள் உதவவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின் லேடனின் மகன்கள் 2001-ம் ஆண்டு முதல் ஈரானிலுள்ள தெஹ்ரானில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.​ இதில் ஒசாமாவின் மகனான உமர் பின் லேடனின் 2 மகன்களின் குடும்பத்தார் மட்டும் கடந்த 3 மாதங்களில் விடுதலை செய்யப்பட்டு சிரியாவுக்கு அனுப்பப்பட்டனர். மற்றவர்கள் தொடர்ந்து தெஹ்ரான் நகரிலேயே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.​ இந்நிலையில் ஏ.எஃப்.பி.​ செய்தி நிறுவனத்துக்கு பின் லேடனின் மகன் உமர் பின் லேடனிடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:​ 2001-ம் ஆண்டு முதல் எங்களின் குடும்பத்தார் வீட்டுக் காவலிலேயே வைக்கப்பட்டுள்ளனர். (மேலும்)  25.03.10   

_____________________________________________________________________________________________

இலங்கையில் கண்ணி வெடிகளை அகற்ற இந்தியாவுக்கு ரூ.​ 18 கோடி செலவு

landmineகொழும்பு,​​ மார்ச் 23: இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளுக்காக இந்தியா ரூ.​ 18 கோடி செலவிட்டுள்ளது. ​ இந்த தகவலை இந்தியத் தூதரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. ​ விடுதலைப்புலிகளை எதிர்த்து இலங்கை ராணுவம் மேற்கொண்ட சண்டை கடந்த ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது.​ விடுதலைப் புலிகள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. ​ இந்த சண்டையின்போது வடக்கு,​​ கிழக்கு பகுதிகளில் வசித்த தமிழர்களை,​​ இலங்கை ​ அரசு சிறப்பு முகாம்களுக்கு மாற்றியது. ​ போர் முடிவுக்கு வந்ததால்,​​ முகாம்களில் வசிக்கும் தமிழர்களை அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்தும்படி இலங்கையை இந்தியா வலியுறுத்தி வருகிறது.​ முகாமில் உள்ளவர்கள் அனைவரையும் சொந்த இடங்களுக்கு உடனடியாக அனுப்பிவிடமுடியாது,​​ வடக்கு,​​ கிழக்குப் பகுதிகளில் புலிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடிகளை முழுமையாக அகற்ற வேண்டியிருப்பதால் தாமதம் ஏற்படும் என்று இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்திருந்தார். (மேலும்)  24.03.10   

_____________________________________________________________________________________________

 வேண்டுகோளும் எமது செயற்திட்டங்களும்

வரும் பாராளுமன்றத் தேர்தலில் சயேட்சையாக போட்டியிடும் இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தேர்தல் விஞ்ஞாபனம்.

அன்பார்ந்த மக்களே

தமிழ் மக்கள் மத்தியில் வாழும்  உரிமைகுறைந்த எமது மக் களின் சமூக சமத்துவத்துக்காகவும் ஏனைய நலன்களைப் பேணுவதற்காகவும் தீவிர அக்கறையுடன் செயற்பட்டுவந்த ஒரு தாபனம் அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை. இந்தச் சபையின் மதிப்புக்குரிய பெருந்தலைவராக இருந்து அரும்பணியாற்றியவர் திரு. எம்.சி. சுப்பிரமணியம் அவர்கள். அன்னாரின் பாராளுமன்ற நியமன உறுப்பினர் பதவி, உரிமை குறைந்த எமது மக்களின் பிரச்சனகளை  அரசு மட்டத்தில் எடுத்துச் செல்வதற்கும், அதற்கான பரிகாரத்தைக் காண்பதற்கும் வெகுவாய்ப்பாக அமைந்திருந்தது. கடந்த 30 ஆண்டுகால அரசியல் நிலைமைகள் காரணமாக அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் கட்டமைப்புகள் யாவும் சிதைந்து மகாசபை வலுவிழந்து போயிற்று என்பது யாவரும் அறிந்த உண்மை. இன்று உருவாகியிருக்கும் புதிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு  எமது மகாசபை மீண்டும் புத்துயிர் பெற்று  சமூகப் பணியில் ஈடுபடுவதற்கு முன்வந்திருக்கின்றது. (மேலும்)  24.03.10   

_____________________________________________________________________________________________

விடுதலைப் புலிகளை ஒழித்த இலங்கை ராணுவத்தினரின் யுக்திகளை வங்கதேச தளபதி இலங்கை பயணம்

கொழும்பு:விடுதலைப் புலிகளை ஒழித்த இலங்கை ராணுவத்தினரின் யுக்திகளை தெரிந்து கொள்ள, வங்கதேச ராணுவ அதிகாரிகள் கொழும்பு பயணம் மேற்கொண்டுள்ளனர். இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒடுக்க அந்நாட்டு ராணுவம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடியது. கடந்த மே மாதம் புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டனர்.இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்ட போர் முயற்சிகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக, வங்கதேச ராணுவ தளபதி முகமது உல் ஹக் தலைமையிலான ராணுவ அதிகாரிகள் குழுவினர், கொழும்பு வந்துள்ளனர். இலங்கை ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரியாவை அவர்கள் சந்தித்து பேசினர்.இலங்கை ராணுவத்தினர் புலிகளுடன் சண்டையிட்ட யாழ்ப்பாணம், முல்லைத் தீவு, வன்னி பகுதிகளை வங்கதேச ராணுவ அதிகாரிகள் பார்வையிட உள்ளனர்.

_____________________________________________________________________________________________

யாழ்குடாநாட்டுக்கான குடிநீர்த் தேவைக்கு இரணைமடு குளத்திலிருந்து நீர்

iraniamaduஇன்னும் ஐந்து ஆண்டுகளில் யாழ். மாவட்டம் நன்னீர் குடி தண்ணீருக்காக பெரும் கஷ்டத்தினை எதிர்நோக்கி - நெருக்கடிக்கு உள்ளாகவுள்ளது. நன்னீர் குடிதண்ணீரை தேடி மக்கள் கிராம - நகர இடம்பெயர்வும், நகர - கிராம இடம்பெயர்வும் விரைவில் மாறிமாறி ஏற்படவுள்ளது. மேற்படி அபாய அறிவிப்பினை தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் தகவல் வெளியிட்டுள்ளது. நிலத்தடி நன்னீர் வளங்கள் மிக மோசமான அளவில் வறட்சி தன்மை அடைந்து வருகின்றது. யாழ். மாவட்டத்தில் கோடை காலத்தில் 12,885 கன மீற்றர் தண்ணீரும் மாரி காலத்தில் 34,960 கன மீற்றர் தண்ணீருமாக பெறப்படுகின்றது. இத்தண்ணீர் தேவையானது மொத்த தேவையில் 30 வீதம் கூட மக்களுக்கு சென்றடையவில்லை. யாழ். மாவட்டம் வளர்ச்சி - அபிவிருத்தி அடைந்த நிலையில் 2028 ஆம் ஆண்டில் 88,500 கனமீற்றர் தண்ணீரை குடிப்பதற்கு ஒருநாளுக்கு மட்டும் தேட வேண்டும். அதே நேரம், 2058 இல் 177,740 கனமீற்றர் குடிதண்ணீர் மிக அவசரமாக தேவைப்படும் நிலை ஏற்படவுள்ளது. (மேலும்)  24.03.10   

_____________________________________________________________________________________________

தலைசிறந்த தளபதியென புகழ்ந்துவிட்டு எனது கணவனை "முட்டாள்  என்பதா? ஸ்ரெய்ட் ரைம்ஸ் பேட்டி குறித்து அனோமா கவலையுடன் ஜனாதிபதிக்குக் கடிதம்

 தனது கணவர் அரசியல் தெரியாத முட்டாள் எனவும் அவருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாதெனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிங்கப்பூர் "ஸ்ரெய்ட் ரைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கும் கருத்துகளுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தங்களின் கோழைத்தனமான முடிவுகளுக்காகத் தனது கணவர் ஒருபோதும் காலடியில் விழுந்து மன்னிப்புக் கோரமாட்டார் எனவும் தெரிவித்துள்ளார். அனோமா பொன்சேகா நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள கடிதமொன்றிலேயே மேற்கண்டவாறு விசனத்தை வெளியிட்டிருக்கிறார்.நீதி விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னரேயே அவருக்கான தீர்ப்பை எழுதியிருப்பது புதுமையானதொரு விடயம் எனவும் அனோமா பொன்சேகா சுட்டிக்காட்டியிருக்கிறார்.அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது; சிங்கப்பூரில் வெளியாகும் ஸ்ரெய்ட் ரைம்ஸ் பத்திரிகைக்கு நீங்கள் அளித்த பேட்டி விபரம் இலங்கை ஊடகங்களில் வெளியானதை என்னால் பார்க்க முடிந்தது. அந்தப் பேட்டியில் எனது அன்புக் கணவரான ஜெனரல் சரத் பொன்சேகா "அரசியல் அனுபவமில்லாத முட்டாள் எனத் தெரிவித்திருப்பதைக் கண்டு நானும் எனது குடும்பமும் கவலையும் வேதனையும் அடைந்தோம். (மேலும்)  24.03.10   

_____________________________________________________________________________________________

திலீபன் நினைவுத் தூபி உடைக்கப்பட்டது

நல்லூர் பருத்தித்துறை வீதியிலுள்ள திலீபன் நினைவுத் தூபி உடைத்து அழிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபன் ஞாபகார்த்தமாக நல்லூர் மேற்குப் பக்க வீதியில் தூபி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இத்தூபி யுத்த காலத்தில் ஓரளவு சேதமாக்கப்பட்டே காணப்பட்டது. இந்நிலையில் ஏ – 9 பாதை திறக்கப்பட்டதும் தென்னிலங்கை வியாபாரிகள் இவ்விடத்தில் தமது விற்பனை நிலையங்களை உருவாக்கினர். தற்போது திடீர் என நினைவு தூபி முற்றாக அழிக்கப்பட்டு கற்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் காணப்படுகின்றது.தூபி இருந்த அடையாளமே இல்லாத நிலையில் இவ்விடம் ஆக்கப்பட்டுள்ளது.

_____________________________________________________________________________________________

2010இன் 2 ஆவது மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக இலங்கை தெரிவு

 உலகில் மக்கள் விரும்பிச் செல்லக்கூடிய மிகச் சிறந்த 25 சுற்றுலாப் பகுதிகளில் 2010ஆம் ஆண்டுக்கான தேர்வில், இலங்கை இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. ' National Geography' என்ற பிரபல சஞ்சிகை உலகலாவிய ரீதியில் இயற்கை அழகு நிறைந்த இடங்கள் தொடர்பில் ஆராய்ந்து இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிப் பேரலைத் தாக்கம் மற்றும் யுத்தத்தின் பின்னர் நாடு பழைய சூழலுக்குத் திரும்பியிருப்பதாகவும் இலங்கையின் இயற்கைச் சூழல் ரசிக்கக் கூடியதாக இருப்பதாகவும் அந்த சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் முதலாவது இடத்தை நேபாளம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

_____________________________________________________________________________________________

பிரபல பாடகர் அகோனின் விசா நிராகரிப்பு

இலங்கையில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகைதரவிருந்த பிரபல சர்வதேச பாடகரான அகோனின் விசா இலங்கை அரசினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர் இலங்கையின் தேசிய மதமான பௌத்த மதத்தை அவமதித்தமையினாலே அகோனின் விசா நிராகரிக்க பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

_____________________________________________________________________________________________

தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் மூன்றிலொன்றாகக் குறையும்!

சம்பந்தன்  - சுரேஸ் தோல்வியின் விளிம்பில்!!

- வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)

sambanthan_r2010 ஏப்ரல் 08ம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம், ஏற்கெனவே இருந்த 22 உறுப்பினர்களிலிருந்து 7 அல்லது 8 ஆகக் குறையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுயாதீனமான சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வுகள் பெரும்பாலும் வடக்கு – கிழக்கிலுள்ள தொகுதிகளில் வாழும் வயதும் அனுபவமும் வாய்ந்த வாக்காளர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளன. கடந்த பொதுத்தேர்தல் (2004 ஆண்டு) நடந்த காலத்தில், வடக்கு கிழக்கில் புலிகளின் ஆதிக்கம் உச்சக் கட்டத்தில் இருந்தது. அதனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பைத் தவிர ஏனைய கட்சிகள் அப்பிரதேசங்களில் சுதந்திரமாகப் போட்டியிடக்கூடிய நிலைமை இருக்கவில்லை. அதுமாத்திரமின்றி தமிழ்ப் பொதுமக்களுக்கும் தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கவில்லை. தமிழ் மக்களது வாக்குகள் புலிகளினால் துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்டு, புலிகளினால் தமது பினாமிகளாக தேர்தலில் நிறுத்தப்பட்ட கூட்டமைப்பினருக்கு போடப்பட்டு, கள்ள வாக்குகளினால் கூட்டமைப்பின் 22 பிரதிநிதிகளைப் பாராளுமன்றம் அனுப்ப, வழி சமைக்கப்பட்டது. (மேலும்)  23.03.10   

_____________________________________________________________________________________________

புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான பிரதிநிதிகள் சுதந்திரபுரம் மக்களுடன் சந்திப்பு-

plote-2வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்) மற்றும் புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் இன்றுமுற்பகல் வவுனியா சுதந்திரபுரம் கிராமத்திற்கு விஜயம் செய்து அப்பகுதி மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது தமது கட்சியின் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், இப்பணிகளை துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்காக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர்களுக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலின்போது மக்கள் ஆதரவினை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்றுமாலை வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள புளொட் காரியாலயத்தில் பொதுமக்கள் சந்திப்பொன்றும் இடம்பெற்றது. இதன்போது கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், அவர்களின் அத்தியாவசிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் புளொட் தலைவர் உள்ளிட்ட வேட்பாளர்கள் விளக்கமளித்ததுடன், தமது பணிகளைத் தொடர்வதற்கு நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவினை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

_____________________________________________________________________________________________

Opposition no challenge to UPFA

In an interview with Daily News SLFP General Secretary and Agriculture and Mahaveli Development Minister Maithripala Sirisena said the UPFA does not have a challenge from the Opposition political parties at the upcoming Parliamentary election. He was hopeful that the SLFP led UPFA would win a sufficient number of seats in Parliament to continue the dynamic development program started under the Mahinda Chinthana policy of President Mahinda Rajapaksa  (Read) 23.03.10

_____________________________________________________________________________________________

அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் உலக நீர் தின விழா

உலக நீர்தின விழா இன்று திங்கட்கிழமை அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. மடு வலையகல்வி வலையத்துக்கு 11 பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். ஐரோப்பிய ஒனறியத்தின் அனுசரணையுடன் மன்னார் சேவலங்கா மன்றம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான உயர்ஸ்தானி கைபிளாஸ்டன், மன்னார் அரசாங்க அதிபர் நிக்கொலாஸ் பிள்ளை, மடு வலய கல்வி பணிப்பாளர். செபஸ்ரியாம் பிள்ளை 215ஆவது படைபிரிவின் பிரிகேட் கொமாண்டர் விக்கும் லியானகே, மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரபாகர மூர்த்தி, மன்னார் சேவலங்கா மன்றத்தின் இனைப்பாளர் பிரதீபன் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது பாடசாலை மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கும் பரிசில்கள் வழஙகப்பட்டன. 

_____________________________________________________________________________________________

Quarter of Lankans are diabetic

There is a possibility that 50 percent of the total population of Sri Lanka would get affected by diabetes by 2020. At the moment 25 percent of the total population of Sri Lanka (one in every four Sri Lankans) suffer from diabetes. Between five and 10 percent of Sri Lankan schoolchildren suffer from type II diabetes at the moment, a Healthcare and Nutrition Ministry spokesman said. According to the spokesman, around 15 percent of schoolchildren are in the pre-diabetes stage at the moment. At present the Government spends the highest amounts of funds to treat Non Communicable Diseases (NCDs). The annual expenditure on the treatment for heart aliments is Rs. 4.5 billion and the annual expenditure on cancer treatment is Rs. four billion. The Government annually spends Rs. 3.5 billion to treat Kidney patients. Non Communicable Diseases in Sri Lanka are on the rise at an alarming rate and it will become the main health hazard for Sri Lankans within the next 10 years. Diabetes heart disease, high blood pressure, cancer, eye problems are among the most common NCDs that affect Sri Lankan population. Lack of exercise, bad and non traditional food habits, stress and many other factors contribute to the increase of NCDs in Sri Lanka, he said.

_____________________________________________________________________________________________

சிரச வலையமைப்பு தலைமையகம் மீது தாக்குதல்:16 பேர் கைது

கொழும்பு, கொம்பனித் தெரு பிறேபுரூக் பிளேசிலுள்ள சிரச வலையமைப்பு தலைமை அலுவலகம் மீது சற்று முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கங்காராமை பக்கமிருந்து வந்த 30 பேர் கொண்ட பிரதி அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள் கற்களை வீசி இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து தற்பாதுகாப்புக் கருதி அலுவலக ஊழியர்கள் அக்கற்களால் மீண்டும் குண்டர்களை நோக்கி வீசியுள்ளனர். குண்டர்களால் வீசப்பட்ட கற்களால் அலுவலகக் கண்ணாடிகள், சொத்துக்கள் மட்டுமன்றி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தற்போது அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் இதுவரை 16 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக சிரச வலையமைப்பு எமக்கு உறுதி செய்துள்ளது. சிரச தொலைக்கட்சி அலுவலகத்தில் சம்பவம் நடைபெற்ற சமயம் 250 பேர்வரை கடமையில் ஈடுபட்டிருந்ததாக அவ்வலையமைப்பு மேலும் தெரிவித்தது.

_____________________________________________________________________________________________

பிரதான கட்சிகளே தமிழர்களைக் கொன்றன : யாழ். கிளைக் காரியாலய திறப்பு விழாவில் சோமவன்ச _

  "கடந்த காலங்களில் ஐ.தே.க., ஐ.ம.கூ. ஆகியனவே தமிழ் மக்களைக் கொன்றனரே அன்றி ஜேவிபி அல்ல என்று சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் உள்ள உடுப்பிட்டியில் ஜே.வி.பி. கட்சியினர் தமது கிளைக் காரியாலயத்தை நேற்று திறந்து வைத்தனர். இந் நிகழ்வு நேற்று கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த சோமவன்ச அமரசிங்க மேலும் தெரிவிக்கையில், "கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும், தற்போதைய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் பல அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்தன. எனினும் ஜே.வி.பி. இதுவரையில் ஒரு தமிழரையேனும் கொலை செய்யவில்லை. தற்போது அழைக்கப்பட்டு வருவது போல, ஜே.வி.பி. ஒன்றும் இனவாத கட்சி அல்ல. கடந்த 1983ஆம் ஆண்டு, ரோஹன விஜேவீர தலைமையில் ஜே.வி.பி. செயல்பட்ட போது, யாழ்ப்பாணம், சுன்னாகம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கட்சிக் காரியாலயங்களைக் கொண்டிருந்தது. (மேலும்)  23.03.10   

_____________________________________________________________________________________________

வடக்கு-கிழக்கில் இம்முறை வாக்குகள் சிதறும் சூழ்நிலை

வடக்கு,கிழக்கில் முடிசூடிக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இம்முறை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலிலும் கூட வடக்கு,கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் தனது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. ஆனாலும், அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகளுக்கு அமைய அவர்களுக்கு 2004 இல் கிட்டியிருந்த பெறுபேறுகளை ஈட்டிக்கொள்ள இயலுமா என்பது சிக்கலுக்குரியதாகவே உள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்தியிருந்த கருத்து இங்கு நோக்கத் தக்கதாகும். அதாவது, ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி தொடர்பாக சிறுபான்மையினச் சமூகங்களின் வாக்குகள் பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றன என்றவாறு அது தெரிவித்திருந்தது. மேற்படி தேர்தலின்போது அவர்கள் ஒத்துழைப்பு வழங்கிநின்ற ஜெனரல் சரத் பொன்சேகா சிறுபான்மையினங்கள் பெருமளவில் வாழும் வடக்கு , கிழக்கில் வெற்றியீட்டிக்கொண்டிருந்தாலும் கூட, ஒட்டுமொத்த ரீதியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கே வெற்றி கிட்டியது. மேற்குறித்த பெறுபேறுகளுக்கு அமைய நோக்கும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐ.தே.கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி. உள்ளடங்கும்  பல்வேறு கட்சிகள் ஒருங்கிணைந்து பெற்றுக்கொண்ட வாக்குகளின் விகிதாரசாரமானது, 2004 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2010 ஆம் ஆண்டில் குறைவடைந்துள்ளதைக் காட்டி நிற்கிறது.  (மேலும்)  22.03.10   

_____________________________________________________________________________________________

ஊடகம் இனியும் பூடகமில்லை! 

(பாகம் ஐந்து)

எஸ்.எம்.எம்.பஷீர்

anasஇளைய அப்துல்லாஹ் என்பவர் பிரித்தானியாவில் உள்ள "தீபம்" தொலைக்காட்சியல் பணிபுரிபவர். இவர் எழுத்தாளராக கவிஞராகவிருப்பினும் ஊடகவியலாளர் என்றவகையில் புலிகளின் புளுகுப்பிரச்சார "தீபத்துக்கு" இவரும் எண்ணையை ஊற்றினார். தானும் புலிகளால் விரட்டப்பட்ட ஒரு " முஸ்லிம்" என்று கூறி முஸ்லிம்களுக்குள் அனுதாபம் தேடியவர் , பின்னர் ஏன் புலிகளின் பிரச்சாரத்துக்கு துணை போனார். ஆனால் இவர் புலிகளை எதிர்த்தவரோ அல்லது புலிகளுக்கு எதிராக குரல் கொடுத்தவரோ அல்ல , மாறாக புலிகளை வடமாகாண முஸ்லிம் வெளியேற்றத்துக்காக மட்டும் தனது எழுத்தில் "கண்டித்தவர்". ஆனால் வடபுல முஸ்லிம்களிடம் இவர் பற்றிய பின்னணி பற்றி உசாவினால் யாருக்கும் அவரை பெரிதாக தெரிந்திருக்கவில்லை. தனது நூலொன்றின் அறிமுகத்தில் "இலங்கை முஸ்லிம்களுடைய அடையாளத்தை பலர் விளங்குவதில்லை. அவர்கள் தமிழ் பேசுவதால் தமிழர்களல்ல...இஸ்லாமியர். அவர்களின் அடையாளம் தனித்துவமானது. அவர்கள் தனி இனம்." என்று எழுதியர் இவர்தானா என்று சந்தேகப்படுமளவுக்கு பின்னர் புலிபபரணி பாடியதாக கூறப்படுகிறது.  (மேலும்)  22.03.10   

_____________________________________________________________________________________________

உலக நீர் தினம் இன்று நாம் இழைத்த துரோகங்களுக்கு நாமே பரிகாரம் தேடும் நிலைமை!

சாரதா மனோகரன்

"நாம் மீண்டும் ஆதி மனிதர்களாக வேண்டும். அறிவியல் முற்றாக மறக்கப்பட வேண்டும். மனிதன் மீண்டும் தீர்க்கதரிசன அறிவைப்பெற வேண்டும். இயற்கையின் மொழி நம் மொழியாக வேண்டும். இதற்கு அறிவோ விவாதமோ தேவையில்லை. அறிக்கையும் தேவை யில்லை. முழுமையாகச் செயற்படும் மனம் மட்டுமே தேவை. அப்போது மலர்ச்சி ஏற்படும். அந்த மர்ச்சியையே நான் மறுமலர்ச்சியென்பேன்" என்ற ஒஷோவின் வரிகளை இணையத்தில் வாசிக்கக் கிடைத்தது. அந்தக் கூற்றின் அர்த்தம் இன்றைய நாளிற்கு மிகவும் அவசியமானது. இயற்கை வளங்களுக்கொல்லாம் முதன்மையானதும் அடிப்படையானதுமாகக் காணப்படுவது நீர்வளமாகும். அதுமட்டுமன்றி உயிர்களின் தோற்றத்துக்கும் நிலைப்புக்கும் கூட நீர் இன்றியமையாததென விஞ்ஞானம் கூறுகிறது. (மேலும்)  22.03.10   

_____________________________________________________________________________________________

உலக வளர்ச்சிக்கேற்ப நாட்டையும் மக்களையும் உயர்த்துவதே எமது நோக்கம்

மலையக மறுமலர்ச்சிக்கென விசேட கருத்திட்டம் பெருந்தோட்ட தரிசு நிலங்களை பகிர்ந்தளிக்க முடிவு

நுவரெலியாவில் ஜனாதிபதி உரை

rajapaksha-1உலக வளர்ச்சிக்கேற்ப நாட்டையும் நாட்டு மக்களையும் உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கான பலமான பாராளுமன்ற பலத்தைப் பெற்றுத்தர சகலரும் ஆதரவு வழங்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன, மத, குல, மாகாண பேதமின்றி ஒரே நாடு ஒரே மக்கள் ஒரே நீதி என்ற ரீதியில் ஆட்சி செலுத்துவதே தமது நோக்கமெனவும் தெரிவித்த ஜனாதிபதி குறுகிய அரசியல் நோக்கங்களுக்கப்பால் சகலருக்கும் சம உரிமை சம அந்தஸ்து வழங்குவதே தமது கொள்கையெனவும் தெரிவித்தார். மலையக மக்கள் ஏனைய பகுதி மக்களைப் போன்றே சகல உரிமைகளையும் பெற்று வாழ வேண்டியவர்கள். அதனை நிறைவேற்றுவது தமது பொறுப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நுவரெலியா குதிரைப் பந்தயத்திடல் மைதானத்தில் நடைபெற்றது. (மேலும்)  22.03.10

_____________________________________________________________________________________________

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது

பாராளுமன்றத் தேர்தல் 2010 தேர்தல் விஞ்ஞாபனம்

தமிழ் மக்களின் இன்றைய நிலைமை

candi_symb1DPLF-E1இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்கள் சிறுபான்மையினர்கள் என்பதால் காலம்காலமாக பற்பல இனரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அடிப்படை உரிமைகள்; ரீதியாகவும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். சொல்லொணாத் துன்பங்களாலும் இழப்புக்களாலும்; வாழ்வில் மிகவும் நொந்து போயிருக்கிறார்கள்; விரக்தியின் எல்லைகளுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, கடந்க பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் பட்ட துன்பங்களும் இழப்புக்களும் வேதனைகளும், சோதனைகளும் கணக்கலடங்காது. தமிழ்மக்களின் உடனடித் தேவைகள். இன்று பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டு விட்டது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல வாழ்க்கை மீளமைய வேண்டும். (மேலும்)  22.03.10     பிரதியெடுக்க

_____________________________________________________________________________________________

 புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட புளொட் வேட்பாளர்கள் பொதுமக்கள் சந்திப்பு-

நங்கூரம் சின்னத்தில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரான கந்தையா சிவநேசன் (பவன்), பிரான்சிஸ் ரஞ்சித் ரூஸ்வோல்ட் (ஆசிரியர்), துரைசாமி சுந்தர்ராஜ் (சிவசம்பு), வரோனிகா (இந்திரா) மற்றும் புளொட் முக்கியஸ்தர்கள் இன்றுமுற்பகல் மன்னார் குஞ்சுக்குளம் மற்றும் பெரியமுறிப்பு பகுதிகளுக்கு விஜயம்செய்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அங்கு பொதுக்கூட்டங்களையும் நடத்தியிருந்தனர். இதன்போது கட்சி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள், எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பில் மக்களுக்கு எடுத்துக் கூறினர். இக்கூட்டங்களில் பெருமளவு பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து முருங்கன் புளொட் காரியாலயத்தில் முன்னாள் கழக அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கான கூட்டமொன்றும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து வவுனியா வேப்பங்குளம் பகுதியின் ஊர்மிளா கூட்டத்தில் புளொட் வேட்பாளர்கள் பொதுக்கூட்டமொன்றினையும், வெளிக்குளத்தில் பிரமுகர்களுடனான சந்திப்பொன்றையும் நடத்தினர். இக்கூட்டங்களில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்), புளொட் முக்கியஸ்தரும் முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான வை.பாலச்சந்திரன், வவுனியா நகரசபை எதிர்க்கட்சி தலைவரும் புளொட் முக்கியஸ்தருமான ஜி.ரி.லிங்கநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

_____________________________________________________________________________________________

யுத்தத்தால் அவயங்களை இழந்தோருக்கு செயற்கை அவயங்களை பொருத்த இந்திய நிறுவனம் உதவி

இலங்கை வந்துள்ள இந்தியாவின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பகவான் மகாவீர் விக்லாங் சகாயதா சமித்தி நிறுவனத்தின் செயற்கை அவயவங்களைப் பொருத்தும் குழுவொன்று மனிக்பாம் ஆனந்தகுமாரசாமி நலன்புரி நிலையத்தில் போரினால் பாதிக்கப்பட்டு அங்கங்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைப் பொருத்தும் பணியில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக ஈடுபட்டுள்ளது. சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வந்துள்ள இந்தக் குழு, ஒரு மாத காலம் தங்கியிருந்து செயற்படும் என்றும் சுமார் 1200 பேர் இதன் மூலம் நன்மையடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கும் இந்த மனிதாபிமான உதவி கிட்டியுள்ளது. இராணுவத்தின் தடுப்பு பராமரிப்பில் உள்ள பலர் இதற்காக செட்டிகுளம் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். கிளிநொச்சியில் இயங்கிவந்த செயற்கை அவயவங்களைப் பொருத்துகின்ற வெண்புறா நிறுவனத்தின் உதவியோடு செயற்கை அவயவங்களைப் பெற்றிருந்த பலர் யுத்த மோதல்கள் காரணமாக நாட்பட்டு பழுதடைந்த செயற்கை அவயவங்களுடன் வாழ்ந்து வருவதாகவும், அவர்களில் பலருக்கு தகடுகளினால் ஆன செயற்கை அவயவங்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கின்ற சிலர், ஜெய்ப்பூர் நிறுவனத்தின் புதிய செயற்கை அவயவங்கள் கிடைப்பது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டிருக்கின்றார்கள்.

_____________________________________________________________________________________________

முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு கிரிக்கெட் பயிற்சி

அரசாங்கத்தின் புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சுமார் 320 சிறுவர்கள் யுத்த நிலைமையிலிருந்தும் மீட்சிபெறுவதற்கு கிரிக்கெட் உதவுமென்று அதிகாரிகள் நம்புகின்றனர். இந்தச் சிறுவர்களில் சிலர் புலிகளிடம் பயிற்சி பெற்றவர்களாகும். ஏனையவர்கள் சிறுவர் தொழிலாளர்களாகப் பணியாற்றியவர்களாகும். யுத்தத்திலிருந்தும் இவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் ஆதரவுடன் ஒருவார கால பயிற்சி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்களை உளரீதியாக ஆற்றுப்படுத்துவதற்கும் குழுரீதியாகப் பணியாற்றுதல் போன்ற பெறுமானங்களை அவர்கள் கற்றுக்கொள்வதற்கும் இயல்பு வாழ்வை அவர்களுக்கு மீள ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இது உதவுமென்று அதிகாரிகள் தெரிவித்தனர்."எனக்கு இது விருப்பம். இப்போது எமக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. படிப்பு,விளையாட்டில் ஈடுபட நேரம் கிடைத்துள்ளதென 15 வயதுடையதான தர்மரெட்ணம் என்ற சிறுவன் ராய்ட்டர் செய்திச் சேவைக்குக் கூறியுள்ளான். புலிகளுக்கு டீசல் இயந்திரங்களை பழுதுபார்க்கும் பணியில் தான் ஈடுபட்டிருந்ததாகவும் கிளிநொச்சியில் இருந்ததாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான். மாற்றத்திற்கான கிரிக்கெட் நிகழ்ச்சித் திட்டத்தில் ஏற்கனவே சித்திபெற்றுள்ள 24 சிறுவர்களில் 18 பேர் முன்னாள் போராளிகள் ஆகும். இந்தப் பயிற்சி ஒருவார காலம் வழங்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறினர். (மேலும்)  21.03.10

_

Home / Page-2 / Page-3 / Page-4 / Page-5

wanni

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி் தேர்தல் விஞ்ஞாபனம்

புலிகளின் யுத்தத்தால் சீரழிந்து போன வடபகுதி நூலகங்கள் அரசால் புனரமைக்கப்படுகின்றன!

வன்முறையாளர்களுக்கும ் பிரிவினையாளர்களுக்கும ் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!