a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           02.03.2010

இரண்டு கனவுகளின் போர் முடிந்தபின் இலங்கைத் தீவின் தலைவிதி எப்படி அமையப் போகிறது?

-கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

நம்முடைய நினைவுகள் முக்கியமானவையா? அல்லது எங்களுடைய கனவுகள் முக்கியமானவையா? என்று ஒரு நண்பர் கேட்டார். இந்தக் கேள்விக்கு உடனடியாக என்ன பதிலைச் சொல்லலாம்?  இலங்கைத் தீவின் இனப்பிரச்சினை, அதற்கான தீர்வு, அதற்குரிய வழிமுறைகள், இலங்கையின் எதிர்காலம், தமிழ் பேசும் மக்களின் நிகழ்கால - எதிர்கால வாழ்க்கை போன்ற முக்கியமான பல விசயங்கள் இந்த நினைவுக்கும் கனவுக்குமிடையில் தங்கியிருக்கின்றன. அதேவேளை இந்த நினைவுகளாலும் கனவுகளாலும்தான் இலங்கையே இரத்தக்களரியாகியது. இன்னும் இருதுருவ நிலைப்பட்டு தமிழ் - சிங்கள இனங்கள் இருப்பதற்கும் இந்த நினைவுகளும் கனவுகளும்தான் காரணம். இப்போது நடந்து முடிந்துள்ள (26.01.2010) ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளும் துருவ நிலைப்பட்டே இரண்டு இனங்களும் இருக்கின்றன என்பதையும் காட்டுகின்றன. இது அமைதிக்கான புள்ளி இன்னும் மிகத் தொலைவிலேயே இருக்கிறது என்பதையே உணர்;த்துகின்றது. (மேலும்) 11.02.10

____________________________________________________________________________________________________

சரத் பொன்சேக்கா கைது

முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க் கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளருமான சரத் பொன்சேக்கா இராணுவ பொலிஸாரினால் நேற்றிரவு கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார். இராணுவ குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே விசாரணைகளுக்காக இவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  இராணுவ சேவையிலிருந்தபோது அரசியல் தொடர்பாக கலந்துரையாடியமை, அரசாங்கத்திற்கெதிராக சூழ்ச்சிகளை மேற்கொண்டமை மற்றும் அரசியல் விதிமுறைகளை மீறியமை தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படை யாக வைத்தே விசாரணைகளை முன் னெடுப்பதற்காகவே இராணுவ பொலி ஸாரினால் சரத் பொன்சேக்கா கைது செய்யப்பட்டுள்ளாரெனவும் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்´ இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவதற்காக கைது செய்யப்பட்டி ருக்கும் சரத் பொன்சேக்கா அவரது அலுவலகத்தில் வைத்தே கைது செய்யப் பட்டதனையும் அவர் சுட்டிக்காட்டினார். (மேலும்) 11.02.10

____________________________________________________________________________________________________

Sarath Fonseka detained

Sri Lanka’s former Army Chief and Opposition presidential candidate, General Sarath Fonseka, was detained by a team of investigators late on Monday night for “certain fraudulent acts and military offences” from the ‘safe house’ he had been living in since he lost the January 26 election. Three days after the poll outcome, the government accused the commander-turned-politician of plotting a coup to overthrow President Mahinda Rajapaksa and assassinate his family members. In what is regarded as one of the biggest shake-ups in the post-independence history of the island nation, the President, in recent days, ordered a reshuffle of the top brass of the military and at least 30 supporters of the retired General have been either detained or taken for questioning. Military spokesman Prasad Samarasingha confirmed that the retired General was taken into custody for “certain fraudulent acts” and “committing military offences” for which, he said, there was some evidence and investigations were in progress. (Read) 11.02.10

____________________________________________________________________________________________________

உலக நாடுகளின் முதலீடுகளை கவரும் பிரபல கேந்திர சந்தையாக இலங்கை

ரஷ்யாவில் கெளரவ டொக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்ட விழாவில் ஜனாதிபதி

வியாபார உலகில் நாம் இப்போது கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கையானது உயர்ந்த மட்டத்தில் உள்ளது. சக்தி, மனித வளம், வங்கி நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான எதிர்கால திட்டங்கள் ஏற்கனவே பூரணப்படுத்தப்பட்டுள்ளன. இந் நிலையில் வறுமை பிரச்சினையும் குறைந்து வருகிறது. அது மட்டுமன்றி சர்வதேச ரீதியில் நாம் வளர்ந்து வரும் நடுத்தர வருமானத்தை பெறும் சந்தையை கொண்டுள்ளதாக கணிக்கப்படுகிறது. இந்த காரணங்களால் உலக நாடுகளின் பல்வேறு முதலீடுகளில் இலங்கை பிரபல சந்தை கேந்திரமாக மாறி வருகிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவில் நட்புறவு பல்கலைக்கழகம் ஜனாதிபதிக்கு கெளரவ டொக்டர் பட்டம் வழங்கி கெளரவித்ததையடுத்து உரையாற்றியபோது தெரிவித்தார். தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:- ரஷ்யாவின் நட்புறவு பல்கலைக்கழகம் எனக்கு வழங்கிய டொக்டர் பட்டம் எனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி அல்ல. அது இலங்கை மக்கள் அனைவருக்கும் கிடைத்த பொதுவான வெற்றியாகும். இந்தப் பட்டம் வழங்கப்படுவதற்கு உலக சமாதானத்துக்கு நாம் ஆற்றிய பங்களிப்பே காரணம் என்று பட்டம் வழங்கல் தொடர்பான குறிப்பில் கூறப்பட்டுள்ளது. (மேலும்) 11.02.10

____________________________________________________________________________________________________

Elect politicians who love the country not lavish businessmen’:

Unite to develop the country

JHU Parliamentarian Ven. Athureliye Rathana Thera said the people in the North and the East provinces through the election results have given a strong message to the President that the Government should implement a program to win over the people in the North and the East. Ven. Rathana Thera in an exclusive interview with the Sunday Observer said the people in the North and the East have also requested the President to free them from the Tamil nationalism in the same way he rescued them from LTTE terrorism.  (Read) 11.02.10

____________________________________________________________________________________________________

தேர்தல் வெற்றியின் பின் ரஷ்யாவுக்கு ஜனாதிபதி முதலாவது வெளிநாட்டு விஜயம்

rajapksha in russiaஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ரஷ்யாவுக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.இரண்டாவது பதவிக்காலத்துக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி, தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக ரஷ்யாவைத் தேர்ந்தெடுத்திருப்பது தொடர்பாக அரசியல் இராஜதந்திர வட்டாரங்களில் கவனிக்கப்படாமல் விடப்படவில்லை. ஜனாதிபதியின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பாக ஆய்வாளர்களும் இலங்கை தொடர்பான      அவதானிப்பாளர்களும் நிச்சயமாக அர்த்தங்களை எடுத்துக் கொள்ளக்கூடும் என்பது நிச்சயமான விடயம். ஆனால், ரஷ்ய ஜனாதிபதியிடமிருந்து விடுக்கப்பட்ட அழைப்பு நீண்டகாலமாக இருந்து வருவதே சாதாரணமான உண்மையாகும். ஜனாதிபதியின் விஜயத்தின் போது இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன என்று ஜனாதிபதி ராஜபக்ஷவின் நெருங்கிய உதவியாளர் இந்து பத்திரிகைக்கு கூறியுள்ளார். ஜனாதிபதியின் முதலாவது பதவிக்காலமான 4 வருடங்களில் தனது வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாக மரபு ரீதியான கொள்கை கடைப்பிடிக்கப்பட்டிருக்கவில்லை. 2006-2009 இதற்கிடையிலான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை துரிதப்படுத்துவதற்கு வழிகாட்டுவதாகவே வெளிநாடுகளுடன் ஜனாதிபதி முன்னெடுத்த உறவுகள் அமைந்திருந்தன. (மேலும்) 07.02.10

____________________________________________________________________________________________________ __________

பிரபாகரன் வசித்த ரகசிய இடம் கண்டு பிடிப்பு ஏராளமான ஆயுதங்கள், ஆவணங்கள் பறிமுதல்

கொழும்பு:விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரன் வசித்த ரகசிய இடத்தை, இலங்கை பாதுகாப்பு படை கண்டு பிடித்தது. அங்கிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.இலங்கை பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தி:விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என கருதப்படும் ஆறு பேரை, இலங்கை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், வன்னி பகுதியில் இலங்கை போலீசின் சிறப்பு பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர். இதில், விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் வசித்த, ரகசிய இடம் கண்டுபிடிக்கப்பட்டது.அங்கு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்கள் அனைத்தும், பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடையவை. தற்போது நடந்து வரும் விசாரணைக்கு, இது பெரிதும் பயன்படும் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை படையினர் அணியும் உடைகள், கண்ணி வெடிகள், 300கிலோ வெடி மருந்துகள், கையெறி குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கடைசி கட்ட போரின் போது, பிரபாகரன் இங்கு தான் பதுங்கியிருந்ததாக கூறப்படு´கிறது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

____________________________________________________________________________________________________ __________

ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. ஐ.நா.வின் மூன்று சாசனங்களை மீறியதன் காரணமாகவே இலங்கைக்கு எதிராக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சம்பிரதாயபூர்வமான நடவடிக்கைகளை இம்மாத இறுதியில் மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணக்கம் கண்டுள்ள போதிலும் மேற்படி தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இன்னும் 6 மாத காலம் எடுக்கும் என்று ஒன்றியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்பி சலுகையைth தக்க வைத்துக் கொள்வதற்கு அல்லது அதனை மீளப் பெறுவதற்கு ஏதுவான நடவடிக்கைகன இலங்கை மேற்கொள்ளவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று ராஜதந்திரி ஒருவர் சர்வதேச செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவாக்கப்பட்ட சலுகைத் திட்டத்தின் (ஜீ.எஸ்.பி.) கீழ் 16 வறிய நாடுகள் வர்த்தக சலுகைகளை பெற்றுக் கொண்டுள்ளன. இச்சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு சமூக மற்றும் மனித உரிமை பேணல் போன்ற விடயங்களில் கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இலங்கைக்கு வர்த்தக சலுகைகளை நிறுத்துவதற்காக கடந்த வாரம் எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தை, பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி ஒன்றுகூடும் ஐரோப்பிய நிதியமைச்சர்கள் அங்கீகரிக்கவுள்ளனர். (மேலும்) 07.02.10

____________________________________________________________________________________________________ __________

நடிகர் ஜெயராம் வீடு தாக்குதல்: சீமான் மீது வழக்கு

சென்னை:நடிகர் ஜெயராம் வீடு தாக்கப்பட்ட சம்பவத்தில், சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.நடிகர் ஜெயராம் மலையாள "டிவி' ஒன்றுக்கும், தமிழ் வார பத்திரிகை ஒன்றுக்கும் தமிழ் பெண்களை பற்றி இழிவான கருத்துகள் கூறியிருந்தார். இதை எதிர்த்து, 25 பேர் கொண்ட கும்பல் ஒன்று, நேற்று முன்தினம் சென்னை, வளசரவாக்கம், ஜானகி நகர் லட்சுமி தெருவில் உள்ள ஜெயராம் வீட்டில் தீப்பந்தம் வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், அவரது அலுவலகம் மற்றும் காரை சேதப்படுத்தினர். வளசரவாக்கம் போலீசார் விசாரித்ததில், இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள், சீமானின், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. சம்பவத்தில் ஈடுபட்ட அவ்வியக்கத்தைச் சேர்ந்த 12 பேர், கைது செய்யப்பட்டனர்.இத்தாக்குதல் சம்பவத்தை தூண்டியதாக, இயக்குனர் சீமான் மீது நேற்று காலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீஸ் நுண்ணறிவுப் பிரிவினர் எச்சரிக்கை அனுப்பியிருந்தும், நடிகர் ஜெயராம் வீடு மீதான தாக்குதலை தடுக்கத் தவறியதற்காக வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., இடமாற்றம் செய்யப்பட்டனர். நடிகர் ஜெயராம் மன்னிப்பு கேட்டு விட்டதால், பிரச்னையை விட்டு விடுவது நல்லது. சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு, நடிகர் வீட்டில் புகுந்து பெண்களை பயமுறுத்தியும், வீட்டிற்கு தீ வைத்த செயல்களையும் காவல்துறை வேடிக்கை பார்க்காது' என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

____________________________________________________________________________________________________ __________

ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வை காண முடியும்”

புளொட் தலைவர் த. சித்தார்த்தன்

“தமிழர்கள் தவறாக வழி நடத்தப்பட்டுள்ளனர்” ஈ. பி. ஆர். எல். எப். பொதுச் செயலாளர்

தி. ஸ்ரீதரன்

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களில் பெரும்பாலானவர்களின் பிரதிபலிப்புக்கள் பற்றி பல்வேறு வியாக்கியானங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. எனினும் முக்கியமான விடயம் என்னவெனில் தேசிய அளவிலான தேர்தல் ஒன்றில் தமிழ் மக்கள் பல தசாப்தங்களுக்குப் பின்னர் வாக்களித்தது என்பதே இங்கு முக்கியமான விடயம். ஜனாதிபதியும் அதனை குறிப்பிட்டிருந்தார். தேர்தல்களில் மக்களை பங்குபற்ற ஊக்கப்படுத்தப்படுவது சமூக விழிப்புணர்ச்சி நடவடிக்கையின் ஒரு முக்கியமான அம்சமாகும். நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் ஒரு பகுதியினர் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கின்றனர். ஜெனரல் பொன்சேகாவே வெற்றி பெறுவார் என வதந்தி பரப்பப்பட்டதும் இதற்குக் காரணமாகும். எனினும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஆன்மீகத் தலைவர்கள், தமிழ் புத்திஜீவிகள், யாழ். பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஆகியன பொறுப்புணர்வுடன் கூடிய அறிக்கைகளை விடுத்திருந்தனர். பகிஷ்கரிப்பதோ, தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதோ தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் பயக்கப் போவதில்லை என அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனாலும் மாற்றம் வேண்டும் என்ற கதை பரவலாக இருந்தது. ஆனால் விமோசனத்துக்கான வழி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. (மேலும்) 07.02.10

____________________________________________________________________________________________________ __________

பழைய கதை இன்றும் தொடர்கிறது

ஒன்றுபட்ட போராட்டத்துக்கென வெளிக்கிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிளவுபட்டு நிற்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு மேற்கொண்ட முடிவின் விளைவே இது. பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவுக்குக் கூட்டமைப்பைத் தள்ளியவர்கள் இரண்டு முன்னாள் பிரமுகர்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது. இவர்களில் ஒருவர் பல்கலைக் கழகத்துடனும் மற்றவர் நீதித் துறையுடனும் சம்பந்தப்பட்டவர்கள். வெற்றிக் காற்று மற்றப் பக்கம் வீசுகின்றது என்று கூட்டமைப்புத் தலைமையை இவர்கள் நம்ப வைத்திருக்கின்றார்கள். இந்த முடிவினால் கூட்டமைப்பு மூன்றாகப் பிளவுபட்டுவிட்டது. இந்தப் பிளவு பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது எனக் கூற முடியாது. முன்னாள் பிரமுகர்கள் பிழையாக வழிநடத்தும் அளவுக்குக் கூட்டமைப்புத் தலைமை தடுமாற்றத்தில் இருந்ததா எனச் சிலர் கேட்கலாம். ஏமாற்றம் தடுமாற்றத்துக்கு வழிவகுப்பது வழமை. இவர்கள் புலிகளை முழுக்க முழுக்க நம்பினார்கள். புலிகள் தனிநாடு பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுடன் சங்கமம் ஆகினார்கள். அதில் பலத்த ஏமாற்றம். (மேலும்) 07.02.10

____________________________________________________________________________________________________ __________

தோழர் இளங்கோ மறைவு

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

elangoகடந்து வந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் இன சமூகங்களின் ஐக்கியத்திற்காகவும் சமூக சமத்துவத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்தவர் தோழர் இளங்கோ. சாவக்கச்சேரி நுணாவிலை பிறப்பிடமாகக் கொண்ட தோழர் இளங்கோ (கணபதிபிள்ளை ரவீந்திரன்) தனது சமூகப் பணிகளுக்காக தனது பல்கலைகழக கல்வியைகூட துறந்தவர். யாழ் பல்கலைகழகத்தில் வர்த்தகத்துறை மாணவர் அவர். மக்களை விழிப்படையச் செய்வதற்கான கலை வடிவங்களின் ஊடான பிரச்சாரங்களை தனது சக தோழர்களுடன் சேர்ந்து முன்னெடுத்தவர். வீதி நாடகங்களை நடாத்தியவர். தனது நெஞ்சுக்கு நீதியாக அவர் வாழ்ந்தவர். எமது சமூகத்தின் சராசரி மனிதர்கள் போல் உலகத்தின் ஏதோவொரு மூலைக்குச் சென்று அவர் மிக சௌகரியமாக வாழ்ந்திருக்க முடியும். பல்வேறு உடல் உபாதைகள் மத்தியில் துன்ப துயரங்களின் மத்தியில் அவர் நாட்டில் சக தோழர்களுடன் தோழராக வாழ்ந்தவர். 1986 புலிகள் இயக்கம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை தொடுத்த போது தோழர் இளங்கோவும் புலிகளால் கைது செய்யப்பட்டார். அவர் அனுபவித்த சித்திரவதைகளும், அவர் காண நேர்ந்த கொடுமைகளும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. (மேலும்) 07.02.10

____________________________________________________________________________________________________ __________

தமிழர்களின் வாக்குகளுக்குள் மறைந்துகொள்ள முயற்சிக்கிறார் ரவூப் ஹக்கீம்

- அமைச்சர் அதாவுல்லாவுடன் ஒரு நேர்காணல்

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தமிழ் மக்களின் வாக்குகளில் மறைவதற்கு முனைகிறார். அவர் கூறுவதில் எதுவித உண்மையுமில்லை. பெரும்பான்மையான முஸ்லிம் வாக்காளர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே வாக்களித்துள்ளார்கள் என தேசிய நீர் வழங்கல் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் 1,10,500 முஸ்லிம் வாக்குகளும் திருகோணமலையில் 79 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 54,600 முஸ்லிம் வாக்குகளுமாக மொத்தமாக 2,16,100 வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் அம்பாறை மாவட்டத்தில் 55,000 முஸ்லிம் வாக்குகளும், மட்டக்களப்பில் 30,000 முஸ்லிம் வாக்குகளும், திருகோணமலையில் 36,000 முஸ்லிம் வாக்குகளுமாக மொத்தமாக 1,21,000 வாக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வாக்காளர்கள், முஸ்லிம் காங்கிரஸ் வாக்காளர்கள் சரத் பொன்சேகாவிற்கு 95,100 வாக்குகளே கிடைத்திருக்கின்றன. (மேலும்) 07.02.10

____________________________________________________________________________________________________ __________

வளர்ச்சிக்கு ஆதாரமான கண்டி - யாழ்ப்பாணம் நெடுஞ்சாலை

a9இலங்கையின் முக்கிய நெடுஞ்சாலையான ஏ-9, போக்குவரத்துக்கு திறக்கப் பட்டுள்ளது, தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் யாழ்ப்பாணம் - கண்டியை இணைக்கும் ஏ-9 நெடுஞ்சாலை, யாழ்ப்பாணம் கோட்டை அருகே துவங்கி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம் மாவட்டங்களுக்குள் இணைப்பை ஏற்படுத்துகிறது. உள்நாட்டுப்போர் தீவிரமடைந்திருந்த போது, சாலையின் ஒரு பகுதியை ராணுவமும், மற்றொரு பகுதியை புலிகளும் முடக்கி வைத்திருந்தனர். இதனால், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கு தரை வழி போக்குவரத்து முடங்கியது. உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து, அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இச்சாலை திறக்கப் பட்டுள்ளது. இதில் கொழும்பு, திரிகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா என முக்கிய நகரங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன; இவற்றில் கூட்டம் அலைமோதுகிறது. கொழும்பு - யாழ்ப்பாணம் இடையே பயணிக்க, 13 மணி நேரம் வரை ஆகிறது. (மேலும்) 06.02.10

____________________________________________________________________________________________________ __________

சுவிஸ் ரகசிய கணக்கு தகவல்கள் கசியுமா? ஐரோப்பிய நாடுகள் ஆர்வம்

சுவிஸ் வங்கிகளில் உள்ள ரகசியக் கணக்கு தகவல்கள், "சிடி' மூலம் கசியும் வாய்ப்பு உருவாகியிருப்பதால், சுவிட்சர்லாந்து நாட்டுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

steuersünderஇந்தியர்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் , தாங்கள் முறைகேடாகச் சேர்த்த கறுப்பு பணத்தை, சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் போட்டு வைத்துள்ளனர். இவர்களை பற்றிய விவரங்களை, சுவிஸ் வங்கிகள் வெளியிடுவதில்லை; அவற்றை ரகசியமாக வைத்திருக்கும். இந்நிலையில், வரி ஏய்ப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வரும் ஜெர்மனி அரசு, சுவிஸ் வங்கிகளில் பணத்தை டிபாசிட் செய்துள்ள தங்கள் நாட்டவர்களின் பெயர்களை வெளியிட வேண்டுமென, வற்புறுத்தி வருகிறது. இதற்கு சுவிஸ் அரசாங்கமும், வங்கிகளும் செவி சாய்க்கவில்லை. முதலில் அமெரிக்கா போட்ட அதிரடி சட்டம், அதற்கு அடுத்த நடவடிக்கைகளால் தன்னிடம் கணக்கு வைத்திருக்கும் சில அமெரிக்கர் பெயர் பட்டியலை வெளியிட, சுவிஸ் வங்கிகள் முன்வந்தன. அந்த நடவடிக்கைகள் முடிவடையும் முன், ஜெர்மனியும் சில ஐரோப்பிய நாடுகளும் அடுத்தடுத்து தகவல் திரட்ட முன்வந்திருக்கின்றன. சுவிட்சர்லாந்தின் கெடுபிடி கண்டு எரிச்சலடைந்துள்ள ஜெர்மன் அரசு, தங்கள் நாட்டில் வரி மோசடி செய்து, சுவிஸ் வங்கிகளில் பணம் போட்டு வைத்துள்ளவர்களின் பெயர் மற்றும் விவரங்களை, சிலர் மூலம் ரகசியமாக, "சிடி' மூலம் பெறப் போவதாகக் கூறியுள்ளது. (மேலும்) 06.02.10

____________________________________________________________________________________________________ __________

 நளினி விடுதலை தொடர்பான மேல்முறையீடு:​ சுப்பிரமணியன் சுவாமிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை,​​ பிப்.5:​ நளினி விடுதலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ""நளினி விடுதலை தொடர்பாக பத்திரிகைகளில் சுவாமி தெரிவிக்கும் கருத்துகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவது போல் உள்ளன.​ இது தொடர்ந்தால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள நளினி,​​ கடந்த 19 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.​ முன் கூட்டியே விடுதலை கோரி நளினி தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு நிராகரித்தது. இதை எதிர்க்கும் வழக்கில்,​​ ""சட்டப்படி ஆலோசனை குழுவைக் கூட்டி நளினி விடுதலை தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்'' என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ""ராஜீவ் கொலை வழக்கில் நளினியின் தூக்குத் தண்டனை,​​ ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.​ இதே வழக்கில் நளினி மீண்டும் மன்னிப்பு கோர முடியாது.​ இதுதொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று கோரி சுப்பிரமணியன் சுவாமி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். (மேலும்) 06.02.10

____________________________________________________________________________________________________ __________

வளர்ச்சிப் பணியில் பங்கேற்க வாருங்கள் : வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு இலங்கை அழைப்பு

கொழும்பு,பிப்.5: விடுதலைப்​ புலி​களுடனான போரினால் சீர்குலைந்த வடக்குப் பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணியில் பங்கேற்க வாருங்கள் என்று வெளிநாடு வாழ் ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது. ​ அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ரோகித பொகலகாம வெள்ளிக்கிழமை இந்த அழைப்பை விடுத்தார். மேலும் அவர் கூறியது:​ 30 ஆண்டுகாலம் புலிகளுடன் தொடர்ந்து நடந்த போரினால் நாட்டின் வடக்குப் பகுதி ​ முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.​ அப்பகுதிக்கும் உலக நாடுகளுக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.​ இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் முடங்கியுள்ளது. ​ தற்போது அப்பகுதி புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் வளர்ச்சிப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.​ சுற்றுலா,​​ மீன்பிடித் தொழில்,​​ வேளாண்மை உள்பட பல்வேறு துறைகளை மேம்படுத்த அரசு அடையாளம் கண்டுள்ளது. ​ யாழ்ப்பாணத்தில் மொத்தம் 6 லட்சம் பேர் வசிக்கின்றனர்.​ இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ​ வடக்குப் பகுதியின் வளர்ச்சிப் பணியில் பங்கேற்க வெளிநாடு வாழ் தமிழர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.​ இதை அரசு அறியும்.​ முதலீடுகளை செய்து வளர்ச்சிப் பணியில் பங்கேற்க விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு வரவேற்கிறது. ​ வெளிநாடு வாழ் ஈழத்தமிழர்களிடம் இருந்து மட்டுமல்லாது உலக நாடுகளிடம் இருந்தும் அரசு முதலீடுகளை வரவேற்கிறது.​ முதலீடுகளை ஈர்க்கும் விதத்தில் வடக்குப் பகுதியின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.​ யாழ்ப்பாணம் தகவல் தொழில்நுட்ப மையமாக உருவாக்கப்படும்.​ அங்கு துணைத் துதரகத்தை அமைக்கும் பணி நடந்து வருகிறது என்றார் ரோகித பொகலகாம.

____________________________________________________________________________________________________ __________

புலிகளை அழிக்க உதவிய' விஜயபாகு' இளைஞர் படை

கொழும்பு :விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக் கட்ட போரின்போது, இலங்கை ராணுவத்தின் "விஜயபாகு' படைப்பிரிவினர் பாராட்டத்தக்க வகையில் செயல்பட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை:ராணுவத்தில் "விஜயபாகு' என்ற படைப்பிரிவு உள்ளது. முற்றிலும் இளைஞர்களை கொண்ட இந்த படைப்பிரிவு, முன்பு இலங்கையை ஆண்ட விஜயபாகு மன்னரின் பெயரில் ஏற்படுத்தப்பட்டது. கடந்தாண்டு மே மாதம் நடந்த புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரின் போது, இந்த படைப் பிரிவினர் அசாத்திய திறமையுடன்,  துணிச்சலாக செயல்பட்டனர். குறிப்பாக, விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் முல்லைத் தீவில் இருந்து தப்பிச் செல்லும் முயற்சியை இவர்கள் முறியடித்தனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இலங்கை பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், "முல்லைத் தீவில் நடந்த இறுதிக் கட்ட சண்டையின்போது, விஜயபாகு படைப் பிரிவினர், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற சிறிய எண்ணிக்கையிலான விடுதலைப் புலிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதில், புலி தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது மனைவி மதிவதனி ஆகியோரும் அடங்குவர்' என, தெரிவித்துள்ளது.

____________________________________________________________________________________________________ __________

ஜனநாயகத்தை பாதுகாக்க வாக்களித்த மக்களுக்கு நன்றி

புதையுண்டு போகவிருந்த ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும், அதள பாதாளத்தில் விழவிருந்த நாட்டை மீட்பதற்கும், தவறான பாதையிலிருந்து நாட்டை நல் வழிப்படுத்துவதற்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். குரோத மனப்பான்மையுடனும், இறு மாப்புடனும், பழிவாங்கும் எண்ணத்துடனும் தேர்தலில் போட்டியிட்டு தோல் வியை ஒப்புக் கொள்ள முடியாத காரணத்தால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சியினர் முன் வைக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகியோர் தேர்தல் நேர்மை யாக நடைபெற்றது என்றும் முறைகேடுகள் நடைபெறவில்லை என்றும் கூறியுள்ளனர். எனினும், சரத்பொன்சேகா உள்ளிட்ட குழுவினர் மட்டும் தேர்தல்களில் மோசடிகள் நடைபெற்றதாக கூறுகின்றனர். நடந்து முடிந்த தேர்தலில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களில் தனித் தனியாக தேர்தல் ஆணையாளரின் கையொப்பத்துடன் கூடிய முடிவுகளின் பிரதிகள் வழங்கப்பட்டன. (மேலும்) 06.02.10

____________________________________________________________________________________________________ __________

வடக்கு, கிழக்கு அரசியல் தீர்வு அவசியமில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம் - ஜாதிக ஹெல உறுமய

வடக்கு, கிழக்குக்கு அரசியல் தீர்வு தேவை என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல் தீர்வு என்று ஒன்று தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம். எனினும் வடக்கு, கிழக்குக்கு அரசியல் தீர்வு தேவை என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். ஆனால் நாட்டின் தென்பகுதி அனுபவிக்கின்ற மாகாண சபை முறைமை வடக்கிலும் நிறுவப்படவேண்டும். எனவே வடக்கு மாகாண சபை அமைக்கப்படுவதை நாங்கள் ஆதரிக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மாகாண அமைச்சர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது, வடக்கில் மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்பட்டு அங்கு மாகாண சபை அமைக்கப்படும் என்று மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன. (மேலும்) 06.02.10

____________________________________________________________________________________________________ __________

மீள முடியுமா?

americaபராக் ஒபாமா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அமெரிக்காவில் மட்டும் அல்ல,​​ உலக அளவிலும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.​ அமெரிக்கர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவார்,​​ ஆப்பிரிக்க,​​ ஆசியக் கண்டங்களில் உள்ள வறிய நாடுகளுக்கு உதவுவார் என்றெல்லாம் பேசப்பட்டது.​ இராக்,​​ ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்க ராணுவம் தலையிட்டதால் ஏற்பட்ட நெருக்கடிகளைக் குறைப்பார் என்றும் கூறப்பட்டது.​ இவை எதுவுமே நடைபெறவில்லை. அவர் பதவிக்கு வந்து ஓராண்டு முடிவடைந்ததை ஒட்டி மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் அவருடைய செல்வாக்கு வெகுவாகச் சரிந்திருப்பது தெரியவந்தது.​ இந்த பட்ஜெட் தாற்காலிகமாக அதிபர் ஒபாமாவின் செல்வாக்குச் சரிவைச் சற்றுத் தடுத்து நிறுத்துமே தவிர,​​ நிரந்தரத் தீர்வாக இருக்குமா என்பது கேள்விக்குறி. அமெரிக்காவின் மிகப்பெரிய பலவீனம் சந்தைப் பொருளாதாரத்தைத் தாரக மந்திரமாகக் கொண்டிருப்பதுதான்.​ மக்களின் ஆடம்பர மோகத்தையும் திட்டமே இல்லாமல் செலவழிக்கும் மனோபாவத்தையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் ​ கொள்ளை லாபம் ஈட்டும் வர்த்தக நிறுவனங்கள்தான் அமெரிக்க அரசின் நிதிக் கொள்கையைத் தீர்மானிக்கின்றன.​ குடியரசுத் தலைவரும் ஆட்சியும் மாறினாலும்,​​ தனியார் முதலாளிகளுக்குச் சாதகமான பொருளாதாரக் கொள்கையை அமெரிக்காவில் மாற்றிவிட முடியாது என்பதுதான் யதார்த்த நிலை.​ ​(மேலும்) 05.02.10

____________________________________________________________________________________________________ __________

உதயன்", "சுடர் ஒளி" ஆசிரியருக்கு கிஷோர் எம்.பி. கொலை மிரட்டல்!

"உதயன்", "சுடர் ஒளி" பத்திரிகைகளின் ஆசிரியருக்குத் தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர். இச்சம்பவம் நேற்று மாலை 5.15 மணியளவில் இடம்பெற்றது. முன்னதாக நேற்றுக்காலை 11 மணி யளவில்  024  2222068 என்ற வவுனியா தொலைபேசி இலக்கத்திலிருந்து "சுடர் ஒளி" கொழும்பு அலுவலகத்துடன தொடர்புகொண்ட சிவநாதன் கிஷோர், ஆசிரியர் வித்தியாதரனை விசாரித்துள்ளார். அச்சமயம் அவர்  ஆசிரிய பீடத்தில் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டதும், தமக்கு எதிராக "உதயன்", "சுடர் ஒளி"யில் விமர்சனச் செய்திகள் பிரசுரிக்கக்கூடாது என்ற தொனியில் ஆசிரிய பீட உறுப்பினருக்கு அவர் அறிவுறுத்தியிருக்கின்றார். தாம் எதையும் பகிரங்கமாகவே செய்பவர் என்றும், மற்றவர்களைப் போல எதையும் ஒளித்துக்கொண்டு போய் அரசுடன் சேர்ந்து செய்பவரல்லர் என்றும் அவர் குறிப்பிட்டார். தம்மைப் பற்றிச் செய்தி வெளியிடுவதை நிறுத்தும்படியும் இறுக்கமான தொனியில் அவர் கூறினார். எந்த விடயம் குறித்தும்  அலுவலகத்துக்கு வந்த ஆசிரியர் பின்னர் அவரிடம் கூறும்படி ஆசிரிய பீட பணியாளர் அவருக்குத் தெரிவித்தார். (மேலும்) 05.02.10

____________________________________________________________________________________________________ __________

அர்ப்பணிப்பு, ஊழலற்ற சேவை மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும்

கண்டி சுதந்திரதின விழாவில் ஜனாதிபதி உரை

rajapkshaஎமது தாய்நாட்டையும் நாட்டு மக்களையும் குறுகிய சிந்தனையுடன் நோக்க வேண்டாமென நான் எப்போதும் தேசிய :wரி’>: ஏகாதிபத்தியவாதிகளுக்குக் கூறிவைக்க விரும்புகிறேன். வடக்கு, கிழக்கை மீட்டு பாரிய அபிவிருத்தியை அப்பிரதேசங்களில் முன்னெடுத்துள்ளோம். கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் திட்டங்கள் மட்டுமன்றி நாடு முழுவதிலும் தற்போது பாரிய அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு ஜனநாயக உரிமைகளை இழந்திருந்த வடக்கு மக்களுக்கு நாம் மீண்டும் ஜனநாயக உரிமையைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். அதுவே எமது அண்மைக்கால பெருவெற்றி எனக் குறிப்பிட முடியும். அப்பிரதேச மக்கள் சுதந்திரமாக நடமாட தமது பிரதேசத்தைக் கட்டியெழுப்ப வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பிரஜைகளையும் வலிமைப்படுத்தக்கூடிய தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கும் பட்சத்தில் மக்கள் தாம் சொந்தக் காலில் நிற்கும் நிலை உருவாகும் என்பதே எனது நம்பிக்கை. மஹிந்த சிந்தனை எதிர்கால தரிசனத் தினூடாக அப்பிரதேசத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். அரசியல் தலைவர்கள் மக்களைத் தவறான வழியில் வழி நடத்தக்கூடாது. இந்நாட்டில் இனி மத, இன, பிரதேச நீதியான குறுகிய நோக்குடைய அரசியல் வேண்டாம். சகோதரத்துவம், சமாதானம், சகவாழ்வு, அபிவிருத்தி, சுபீட்சம் இதுவே எமது நோக்கம். நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்நாட்டைக் கட்டியெழுப்புவோம். (மேலும்) 05.02.10

____________________________________________________________________________________________________ __________

2010 பாராளுமன்றத் தேர்தலும் கிழக்கு மாகாண அரசியலும்!

சத்யம்

இலங்கை அரசியலின் இந்த வருட ஆட்டத்தின் முதலாவது இன்னிங்க்ஸ் முடிந்து இரண்டாவது இன்னிங்க்ஸ்க்கான ஆயத்த வேலைகளும் மிகவும் ஜரூராக ஆரம்பித்து விட்டன. அணி அமைப்பதிலும் ஆள் திரட்டுவதிலும் கட்சிகள் மீண்டும் முனைப்புக் காட்ட தொடங்கி விட்டன. வழக்கம் போல தமிழ்க் கட்சிகளும் தாவலுக்குத் தயாராகின்றன. புலிகளின் அரசியலையே தொடர முயலும் சம்பந்தன் தலைமையிலான த.தே.கூ. அமைப்பினரும் தமது அரசியல் ஞான சூனியத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் அக்கறை காட்ட ஆரம்பித்து விட்டனர். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, கிழக்கிற்கான ஒரே தமிழ் கட்சியான த.ம.வி.பு. இந்தத் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகின்றனர் என்பது கிழக்கு மாகாணத் தமிழரையும் (ஒரு பகுதி) முஸ்லிம்களையும் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான கேள்வியாகவே படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் தற்போதுதான் முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பின்னோக்கிப் பார்ப்பது த.ம.வி.பு. களின் அடுத்த கட்ட நகர்வுக்கு அவசியமானதென நினைக்கிறேன். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கு மற்றும் வடக்கு மாகாண மக்கள் பெருமளவில் வாக்களிக்காவிட்டாலும் வாக்களித்தவர்களில் பெரும்பான்மையினர், தே.த.கூ. அமைப்பினரின் அரசியல் வங்குரொத்துத்தன்மைக்கு துணை போயிருப்பதைத் தெளிவாக உணரக்கூடியதாக உள்ளது. (மேலும்) 05.02.10

____________________________________________________________________________________________________ __________

"இனி ஒரு விதி செய்வோம்"

- எஸ். எம். எம். பஷீர்

(இக்கட்டுரை ஒரு சிங்கள கல்விமானின் கருத்தினை புலப்படுத்துவது மட்டுமல்ல, இவ்வாறான கருத்துக்களை பல சிங்கள புத்தி ஜீவிகள் இடதுசாரிகள் , சாமான்ய சிங்கள மக்கள் என பல மட்டத்திலும் கொண்டிருக்கின்றனர் . ஆனால் மறுபுறத்தில் தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகள் தீவிர தேசியவாதம் சுயநிர்ணய உரிமை போன்ற சுலோகங்களை உச்சரித்து சக சிங்கள சமூகத்துடன் வாழத் தடைகளை மட்டும் அடையாளப்படுத்தி சிறுபான்மை சமூகத்தை “சிறுபான்மையாக்கி” அந்நியப்படுத்தி உயிர்வாழும் சூழலில் இக்கட்டுரையினை  இதன் உட்கி்டக்கையை  புரிந்து கொள்ள முடிந்தவர்களுக்காக தமிழாக்கம் செய்துள்ளேன். ).

“மக்கள் தமது நன்றியறிதலை வெளிப்படுத்தியுள்ளார்கள்” என்ற தலைப்பில் வெளியான கருத்தாக்கத்தின் சுருக்கத் தமிழாக்கமே இக்கட்டுரையாகும். இதனை முன்னாள் ராஜரீய சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும்   கே. கொடகே ( K. Godage)  தி ஐலன்ட் (The Island) பத்திரிகையில் எழுதியிருந்தார்.ஜனாதிபதிதேர்தலில் வெற்றியீட்டிய மகிந்த ராஜபக்ச எவ்வாறு வெற்றியீட்டினார் எனபது பற்றி  சாதாரண பொது மக்களிடம், குறிப்பாக நாட்டுப்புற மக்களிடம் தான்  உசாவி பெற்ற கருத்துக்களை அடிப்படையாக கொண்டு அவரது கருத்தாக்கம் அமைந்திருக்கிறது என்பது மட்டுமல்ல மகிந்த ராஜபக்ச தனது இந்த பதவிக்காலத்தில்  எவ்வாறு புரையோடிப்போன நாட்டை சீரழிக்கும் பல நோய்களை நீக்கலாம் என்பது குறித்தும் தனது கருத்துக்களையும் முன்வைத்திருக்கிறார். இவரது எதிபார்ப்புகளை ஆலோசனைகளை பற்றி  ஓன்று தெளிவாகிறது; அதுதான் இலங்கை தனது முரண்பாடு நோயிலிருந்து சுகமடையவேண்டும், (மேலும்) 04.02.10

____________________________________________________________________________________________________ __________

சுதந்திர தினத்தை முன்னிட்டு 1,753 கைதிகள் விடுதலை

இலங்கையின் 62 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 1,753 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒன்று முதல் மூன்று வருட காலம் வரையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நபர்களுக்கு இரண்டு வார கால தண்டனைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்டம் மற்றும் அபாரதப் பணத்தை செலுத்த முடியாதவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. குறிப்பாக போகம்பரை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகளே அதிக எண்ணிக்கையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

____________________________________________________________________________________________________ __________

சேவையை தொடர்வார் தேர்தல் ஆணையாளர்.  எதிரணியினரும் விரும்புவதாக கூறுகிறார்

நீதிமன்றத்திடம் வாக்குகள் மீள எண்ணப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டு அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் அதனைச் செய்ய வேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்கிறது.இதனிடையே பாராளுமன்றத்தின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது. இதற்கிடையில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம். அவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் பொதுத் தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. தேர்தல் திணைக்களத்திலுள்ள எனது அதிகாரிகளும் ஊழியர்களும் என்னைச் சந்தித்து பாரிய பொறுப்பை எம்மிடம் தந்து எம்மை நெருக்கடி நிலைக்குத் தள்ளிவிட வேண்டாமெனவும் தங்களைக் கைவிட வேண்டாமெனவும் கோரிக்கை விடுத்து இன்னும் சிறிது காலம் பதவியில் தொடருமாறு கோரினர். இதேபோன்று எதிர்க்கட்சிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் என்னைச் சந்தித்தபோது உடனடியாகப் பதவி விலகவேண்டாமெனவும் என்மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்து பதவியில் தொடருமாறும் கேட்டுக்கொண்டனர். இவற்றையெல்லாம் பரிசீலித்த நிலையில்தான் பொதுத் தேர்தல்வரை பதவியில் தொடர முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார். தேர்தல் திணைக்களத்தின் தனது 35 வருட பதவிக்காலத்தில் இந்த ஜனாதிபதித் தேர்தலின் போதே மிகமோசமாக விமர்சிக்கப்பட்டதாக விசனம் தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க 26 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் நிறையவே வதந்திகள் பரப்பப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். (மேலும்) 04.02.10

____________________________________________________________________________________________________ __________

வடகிழக்கு மகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், வவுனியா மாவட்ட பிரதிநிதியுமான தோழர் செந்தில் (கண்ணன்) அவர்களின் தாயார் மறைவு

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவரும் வவுனியாவை வதிவிடமாக கொண்டவரும்மான திருமதி சின்னம்மா ஐயம்பிள்ளை (ஐயம்பிள்ளை டீச்சர்) 03/02/2010ல்   வவுனியாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற திரு.வேலுப்பிள்ளை ஐயம்பிள்ளை  அவர்களின் அருமை மனைவியும், காலஞ்சென்ற திரு திருமதி சிதம்பரப்பிள்ளை அவர்களின் அருமை மகளும் ஆவர் . இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், ஏற்றுக்கொள்ளவும். ஈமைகிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்..

தகவல்களுக்கு ..   
 
Canada 416 791 6733  or 905 890 1909
Swiss    41 758 4108
Uk        44 208 423 9984
Srilanka  77 068 7530  or  777 335 473

____________________________________________________________________________________________________ __________

முந்தைய ஒப்பந்தப்படி இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் ​பகிர்வு: கருணாநிதி கோரிக்கை

karunanithi6சென்னை,​​ பிப்.3:​ இலங்கையில் ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டவாறு தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்து தரப்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரினார்.  சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது: திமுக செயற்குழு,​​ பொதுக்குழு கூட்டங்கள் இந்த மாதம் 20}ம் தேதி நடக்கும்.​ இப்போதுள்ள அரசியல் நிலவரங்கள் குறித்தும்,​​ தேவைப்பட்டால் பென்னாகரம் இடைத்தேர்தல் குறித்தும் இதில் விவாதிக்கப்படும். ​ இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட உறுதி மொழியை நிறைவேற்ற இலங்கை அரசு முன்வர வேண்டுமென வலியுறுத்தியும்,​​ அதற்கு ஆவன செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும். ​ தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை தருவதாக காஞ்சிபுரம் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.​ மத்திய அரசும் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளது. (மேலும்) 05.02.10

____________________________________________________________________________________________________ __________

சமத்துவ உரிமைகளை சகலரும் அனுபவிக்கும் இலங்கையை கட்டியெழுப்புவோம்

ஜனாதிபதி சுதந்திர தினச் செய்தி

Mahinda_11225e”வேறுபாடுகளை மறந்து சுதந்திரத்தினதும், அபிவிருத்தியினதும் முழுமையான நன்மைகளைப் பெறவும் சமத்துவமான உரிமைகளை எல்லோரும் சமமாக அனுபவிக்கவும் கூடிய ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக நம்மை அர்ப்பணித்துச் செயற்படுவோம்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இன்று கொண்டாடப்படும் இலங் கையின் 62வது சுதந்திர தின கொண்டாட்டம் கடந்த வருடம் எமது நாட்டை விட்டும் பயங்கரவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெறும் முதலாவது கொண்டாட்டம் என்றவகையிலும், எமது மக்கள் ஜனநாயகத்திற்கான தங்க ளது அர்ப்பணத்தை மிக உறுதியாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தியிருக்கும் ஒரு சூழ்நிலையில் நடைபெறும் ஒரு கொண்டாட்டம் என்ற வகையிலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. அறுபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னர் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரம் இப்போது மிகவும் அர்த்தம் நிறைந்ததாகவுள்ளது. காரணம் எமது சுதந்திரத்தின் அரைவாசிக்காலப் பகுதியை ஆட்கொண்டு, எமது நாட்டின் இறைமைக் கும் ஆள்புல எல்லைக்கும் பாரிய அச்சுறுத்தலாக இருந்துவந்த பிரிவினைவாத பயங்கரவாதிகளிடமிருந்து நாம் முழுமையாக விடுதலை பெற்றுள்ளோம். (மேலும்) 05.02.10

____________________________________________________________________________________________________ __________

மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய முயன்றதாக கூறி பலர் கைது

இலங்கையில் அவசரககால சட்டத்தின் கீழ் சுமார் 40 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு சொந்தமான தினசரி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய எதிர்கட்சிகள் தீட்டிய சதித்திட்டத்தில் இவர்கள் தொடர்புபட்டிருந்தார்கள் என்று அரசு கூறுகிறது. கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவ அதிகாரிகள் அல்லது படைவீரர்கள். அரசியலில் ஈடுபட்டார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு 10க்கும் அதிகமான அதிகாரிகள் சமீபத்தில் கட்டாய ஓய்வில் அனுப்பட்ட சம்பவத்துக்கு பிறகு இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டபட்டன என்பதை மறுக்கும் எதிர்கட்சியினர், கடந்த வாரம் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பிறகு அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது என்றும் கூறுகிறார்கள். அரசின் ஊதுகுழலாக செயற்பட்டுவரும் டெய்லி நியூஸ் எனும் தினசரி, ஜனாதிபதி மற்றும் இதர சிலரை கொலை செய்ய முயன்றார்கள் என அது கூறும் செயற்பாட்டில், இவர்கள் ஈடுபட்டிருக்கக் கூடும் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. 

____________________________________________________________________________________________________ __________

பொதுத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்

03.02.2010 தாயகக்குரல் 

பொதுத் தேர்தலைச் சந்திக்க அரசியல் கட்சிகளும் தயாராகிவிட்டன. ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்த கட்சிகளில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணிஇ முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன யானைச் சின்னத்தில் கூட்டாக கேட்கலாம் என தெரிகிறது. வடக்கில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களில் பொதுசன ஐக்கிய முன்னணியுடன் கூட்டாக பங்குபற்றிய ஈ.பி.டி.பி. பொது தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. தாங்களும் தனித்து போட்டியிடுவது தொடர்பாக ஆராய்வதாக கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய வெற்றி என கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என தம்மை பிரகடனப்படுத்திக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்து வடக்கு கிழக்கில் போட்டி போட்டு பிரச்சாரக் கூட்டங்களை நடத்தியது. தமிழர்களின் தேசியம் சுயநிர்ணயம் தன்னாட்சி என்பவற்றைப் பெறுவதற்கு தொடர்ந்தும் போராடுவது என்ற தீர்மானம் தமிழரசுக் கட்சியின் மகாநாடு என்ற பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் டிசெம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் நிறைவேற்றியுள்ளதாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தனர். அதன் பின்னரே சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதாக முடிவெடுத்ததாக அறிவித்தனர்.  (மேலும்) 05.02.10

____________________________________________________________________________________________________ __________

தேர்தல் பெறுபேறுகளில் எவ்விதமான முறைகேடுகளும் இடம்பெறவில்லை: ஆணையாளர் தயானந்த நேற்று அறிவிப்பு

  • அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு
  • முடிவுகளை ரத்துச் செய்ய எவ்வித காரணமும் இல்லை
  • நீதிமன்று ஆணையிட்டால் மாத்திரமே வாக்குகள் மீள எண்ணப்படும்

வடக்கில் வாக்களிப்பு வீதம் மிகக் குறைவு எனப் பலர் பிரசாரம் செய்வதில் உண்மை இல்லை. உண்மையில், இங்கு வாக்காளர்களாகப் பெயரைப் பதிவு செய்து கொண்டுள்ள பெருமளவானோர் ஐரோப் பிய நாடுகளில் வாழ்கிறார்கள். இடம் பெயர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் வைத்திருக்க வேண்டுமென 1988இல் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பிரகாரம்தான் புலம்பெயர்ந்த மக்களின் பெயர்களும் இன்னமும் பேணப்படுகின்றன. இதற்குத் தேர்தல்கள் செயலகமோ, மாவட்ட அதிகாரிகளோ பொறுப்பில்லை. 2005ஆம் ஆண்டு 560,000 பேர் பதிவாகியிருந்ததுடன் 2008 இல் 720,000பேர் பதிவாகியுள்ளனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பிரஜாவு ரிமை பெற்றவர்கள், மரணமடைந்தவர்கள் போன்றோரின் பெயர்கள் நீக்கப்பட்டதுடன் 18வயதைப் பூர்த்தி செய்தவர்களின் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டன. இதற்கேற்பவே வாக்காளர்கள் தொகை 720,000ஆக அதிகரித்தது. வன்னியில் மக்கள் வாக்களிப்பதற்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்தோம். அதனால், பஸ் போக்குவர த்தை ஏற்பாடு செய்வதில் சற்றுத் தாமதம் ஏற்பட்டு விட்டது. வேறு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. எல்லா இடங்களிலும் தேர்தலை நடத்தினோம். தேர்தல் தினத் துக்கு முன்பு சட்டத்திற்குப் புறம்பாகச் சிலர் செயற்பட்டுள்ளார்கள். (மேலும்) 05.02.10

____________________________________________________________________________________________________ __________

ராஜபட்சவை கொல்ல சதி:​ பிரிகேடியர் உள்பட 37 ராணுவத்தினர் கைது

இலங்கை அதிபர் ராஜபட்சவை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர்,​​ கர்னல் உள்பட 37 பேர் கைது ​செய்யப்பட்டுள்ளனர்.​ சிறப்பு போலீஸ் படை அவர்களை கைது செய்துள்ளது. இத் தகவலை பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி,​​ அரசு பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ​ அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து இவர்கள் பிடிக்கப்பட்டனர்.​ தேர்தலின்போது ராஜபட்சவை கொலை செய்ய தீட்டப்பட்ட சதி குறித்து கூடுதல் விவரங்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொன்சேகா அலுவலகத்திலிருந்து ஆயுதங்களும் பணமும் கொழும்பில் உள்ள கோவிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.​ இது தொடர்பாக 2 தமிழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.​ கைது செய்யப்பட்டவர்களுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்றும் போலீஸப்ர் விசாரித்து வருகின்றநர்.​ இந்த சதி விசாரணை தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரிகள் 2 பேரையும் போலீஸப்ர் தேடி வருகின்றனர். இதற்கிடையே அதிபர் தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் சரத் பொன்சேகா தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளார்.

____________________________________________________________________________________________________ __________

இலங்கை ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் நவம்பரில் துவங்கும்- உச்ச நீதிமன்றம்

.B.B.C News

இலங்கையின் ஜனாதிபதி பதவிக்கு இரண்டாவது தடவையாகத் தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் பதவிக்காலம் இந்த ஆண்டு அதாவது 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாவதாக இலங்கையின் உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது. இந்தத் தகவலை ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டிருப்பதாக அரச தகவல் திணைக்களம் இன்று கூறியிருக்கின்றது. தமது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மிஞ்சி இருக்கின்ற நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதற்கமைய கடந்த மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே மீண்டும் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையாளர் அறிவித்திருந்தார். எனினும் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த நாட்டு மக்கள் அவரை 6 வருடங்களுக்கு ஜனாதிபதியாகத் தெரிவு செய்திருந்ததைச் சுட்டிக்காட்டி சில சட்ட வல்லுனர்கள் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அவரது பதவிக்காலம் அடுத்த வருடம் அதாவது 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதியே ஆரம்பமாகின்றது என வாதிட்டு வந்தார்கள். (மேலும்) 04.02.10

____________________________________________________________________________________________________ __________

தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிரணி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவித்தும் அதேவேளை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டம் ஒன்றை எதிர்க் கட்சிகளின் கூட்டணி இன்று ஏற்பாடு செய்துள்ளது. இன்று பி. ப. 3.00 மணிக்கு கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள், ஜே. வி. பி. தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சிகளின் அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் என பல தரப்பினரும் கலந்து கொள்ளவுள்ளனர். 

____________________________________________________________________________________________________ __________

16400 வாக்குகள் வீணடிக்கப்பட்டது ஏன்?

-ஈழப்பிரியன்

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்து பலரும் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து விட்டார்கள். தமிழ் மக்கள் மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை செய்து முடித்துவிட்டார்கள் என்றே பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். ஆனால் அந்த தேர்தலில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பற்றி யாரும் கருத்தில் கொள்ளாததால் இதனை எழுதவேண்டியாகியிருக்கின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இரண்டு தடவைக்கு மேல் பதவி வகித்த சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்ததுமே அவரை நோக்கி பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவர் ஜனாதிபதியிடம் பணத்தை வாங்கிக் கொண்டுதான் இந்த முடிவுக்கு வந்தார் என்று மற்றுமொரு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேரடியாகவே குற்றம்சாட்டினார். சிவாஜிலிங்கம் கிட்டத்தட்ட துரோகியாகவே ஆக்கப்பட்டார். தன்னை துரோகி அல்ல என்று நிரூபிப்பதற்காக சிவாஜிலிங்கம் பாடாதபாடு பட்டபோதிலும் அது முடியாமல் போயிற்று. வேலுப்பிள்ளையின் சடலத்தை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அவர்மீது கருணை காட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அதுவும் நடைபெறவில்லை. கடைசியில் அவர் பெற்ற வாக்குகள் வெறும் மூவாயிரம் மட்டுமே.  (மேலும்) 04.02.10

____________________________________________________________________________________________________ __________

பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் புரிந்துணர்வுடன் தனித்து போட்டியிட முடிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு

tna muslim-1பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்துப் போட்டியிடுமெனத் தெரிவித்த அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், அதேசமயம் தமிழ்முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்கு பங்கம் ஏற்படாமல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவோம் எனவும் சுட்டிக்காட்டினார். தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளையும் உரிமைகளையும் பாதுகாத்து எமது மக்கள் பெரும்பான்மை சமூகத்தோடு சம உரிமையுடன் வாழும் சூழ்நிலையை உறுதிப்படுத்துவதற்காகவே முஸ்லிம் காங்கிரஸுடன் புரிந்துணர்வு அடிப்படையில் ஒன்றுபட்டிருப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து நேற்று திங்கட்கிழமை கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நடத்திய கூட்டுச் செய்தியாளர் மாநாட்டிலேயே ஆர்.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையைப் பலமானதாகக் கட்டியெழுப்பும் ஒரேநோக்கத்துடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஒன்றுபட்டிருப்பதாகவும் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களையும் இதனோடு இணைத்துக் கொண்டு எமது ஒற்றுமைப் பலத்தை உறுதிப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்த அவர் செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;வரக்கூடிய பொதுத்தேர்தல் தொடர்பில் நாம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றோம். (மேலும்) 04.02.10

____________________________________________________________________________________________________ __________

ஜனாதிபதியின் பதவிக்காலம் நவம்பர் 19 முதல் ஆரம்பம் : நீதிமன்றம் அறிவிப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அடுத்த பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றிலிருந்து ஆறுவருட காலம் அவர் தமது பதவியில் நீடித்திருப்பார். இத்தகவலை நீதிமன்ற வட்டாரங்கள் உறுதிப்படுத்யுள்ளன

____________________________________________________________________________________________________ __________

62 வது சுதந்திர தின வைபவம்: கண்டியில் நாளை கோலாகலம்: தலதா மாளிகையிலிருந்து ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு உரை

இலங்கையின் 62வது சுதந்திர தின பிரதான வைபவம் நாளை காலை கண்டியில் மிக கோலாகலமாக நடைபெறவுள்ளது. கண்டி தலதா மாளிகை வளவில் நடைபெறவுள்ள சுதந்திர தின பிரதான வைபவத்திற் கான சகல ஏற் பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் முப்படை மற்றும் பொலிஸாரின் ஒத்திகைகளும் இடம்பெற்றன. சுதந்திர தின பிரதான வைபவம் மற்றும் தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியை முன்னிட்டு எதிர்வரும் 10ம் திகதி வரை திட்டமிட்ட வகையில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்முறை சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளுக்கென பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸாருடன், பொலிஸாருக்கு உதவியாக முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டு ள்ள னர். சுதந்திர தின த்தை முன்னிட்டு சமய வழிபாடுகள் இடம்பெற்று வருவதுடன் நாளை முதல் எதிர்வரும் 10ம் திகதி வரை பள்ளேகளவில் தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியும் நடைபெறவுள்ளது.  (மேலும்) 04.02.10

____________________________________________________________________________________________________ __________

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் நிலைப்பாடு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரும் உரிமையை தமிழர் விடுதலைக் கூட்டணி நிராகரிக்கிறது.

ananthasangaryத.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்களை குறிப்பாக சமஷ்டி கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த திருவாளர்கள் மாவை சேனாதிராஜா, ஆர்.எம். இமாம், செல்வம் அடைக்கலநாதன், வினோதரலிங்கம், சுரேஷ்பிரேமச்சந்திரன் ஆகியோரை இலகுவாக உணர்ச்சியடையக்கூடிய தமிழ் பேசும் மக்களை தப்பாக வழி நடத்த வேண்டாமென மிக பணிவாக கேட்டுக் கொள்கிறேன. ஜனவரி 26ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லீம் மக்கள் எடு;த்த பொது நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவித்து அறிக்கைகள் விட்ட தலைவர்களின் செயற்பாடு அநாவசியமற்றதும், நிலைமையை மேலும் மோசமடைய செய்யும் எனவும் கூறி வைக்க விரும்புகின்றேன். த.தே.கூ இனர் எமது அப்பாவி மக்களை பல தடவைகள் ஏமாற்றுப் பயணத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதனால் அவர்கள் அடைந்த பலன் சிங்கள மக்களின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தி அவர்கள் அனைவரையும் ஒரு பக்கம் சார வைத்துள்ளது. எனக்குத் தெரிந்த வைகயில் தமிழ் ஈழம் அமைந்து விடுமோ என்ற பீதியை சிங்கள மக்களின் சிந்தனையில் உருவாக்கியது. அவர்கள் தாம் எடுத்த தீர்மானத்தை மக்களிடம் விடாது தீர்வுக்கு விடாது பல இடங்களிலும் கொக்கரித்தமை சிங்கள மக்களை விழிப்படையச் செய்துள்ளது. (மேலும்) 03.02.10

____________________________________________________________________________________________________ __________

இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டியது ஜனாதிபதியின் தலையாய கடமையாகும்   -புளொட்-

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்கள் பெற்ற மாபெரும் வெற்றியையிட்டு எமது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம். எமது கட்சியின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை ஆதரித்த தமிழ் மக்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இத்தேர்தலில் தமிழ்மக்கள் குறைந்தளவிலேயே மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்திருந்தாலும் இந்த நாடு முழுவதற்குமான ஜனாதிபதி அவரே என்பது யதார்த்தமாகும். மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான கௌரவமான தீர்வை காண்பேன் என நாட்டு மக்களுக்கு தெரிவித்திருந்தார். இதற்கான ஆணையை மிகப் பெரும்பான்மையான மக்களும் வழங்கியுள்ளார்கள். எனவே இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டியது அவரது தலையாய கடமையாகும். இந்த இரண்டாவது ஆட்சிக்காலத்தில், ஏற்கனவே அவர் எமக்கு உறுதியளித்தவாறு இதனை நிறைவேற்றுவார் என நம்புகிறோம். ஆயுதப் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள இன்றைய நிலையில், இனப்பிரச்சினைக்கான தீர்வானது ஐக்கிய இலங்கைக்குள்தான் என்பதும் ஜனாதிபதியுடன் பேசித்தான் தீர்வு காணவேண்டும் என்பதும் இன்று சகல தமிழ் அரசியல் தலைமைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய யதார்த்தமாகும்.  (மேலும்) 03.02.10

____________________________________________________________________________________________________ __________

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நோர்வே அமைச்சர் சொல்ஹெய்ம் வாழ்த்து

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வெற்றியீட்டிள்ளமை குறித்து நோர்வே சுற்றாடல் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் வாழ்த்துத் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் நோர்வேயும் இலங்கையும் நீண்டகால இருதரப்பு உறவுகளைக் கொண்டவை. இலங்கையுடன் அபிவிருத்தி மற்றும் நீடித்த அமைதி என்பவற்றை முன்னேற்றும் வகையில், எமது ஒத்துழைப்பு தொடரும். தேர்தல் அமைதியாக நடந்தமைக் குறித்து நாம் கவனத்தில் கொண்டோம். இருந்தபோதிலும் அவ்வப்போது இடம்பெற்ற வன்முறைகள் தேர்தல் சட்டதிட்டங்களை மீறும் வகையிலான சம்பவங்கள் தொடர்பில் நாம் கவலையடைந்துள்ளோம். எனவே, இலங்கையின் ஜனநாயக பாரம்பரியங்களுக்கு ஏற்ப இவ்வகையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நாம் கோருகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தமது செய்தியில், தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெளிவான முடிவு கிட்டியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் நாட்டில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்த சரித்திர ரீதியான வாய்ப்புக் கிட்டியுள்ளது. (மேலும்) 03.02.10

____________________________________________________________________________________________________ __________

லங்கா பத்திரிகையை மூட அரசு எடுத்த நடவடிக்கையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இலங்கையிலிருந்து வெளியாகும் லங்கா வாராந்திர பத்திரிகையின் அலுவலகத்தை மூட இலங்கையின் காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையை கொழும்பிலுள்ள ஒரு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே வி பி கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தாகக் கூறப்படும் அந்த பத்திரிகையில் அலுவலகத்தை மூட இலங்கையில் குற்றத் தடுப்பு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். நீதிமன்றம் அரசின் உத்தரவை ரத்து செய்திருந்தாலும் அதன் ஆசிரியர் இன்னமும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசின் உத்தரவுகளுக்கு அடிபணியாத ஊடகங்களுக்கு எதிராக அரசு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகாக உள்ளூர் ஊடக அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்த பத்திரிகையில் வெளிவந்த சமீபத்திய கட்டுரை ஒன்று பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து அரசு மேற்கொண்டுவரும் விசாரணைகள் சம்பந்தமான் விதிமுறைகளை மீறியுள்ளது என்று குற்றப் புலனாய்வு துறையின் இயக்குநர் பிபிசியிடம் தெரிவித்தார்.

____________________________________________________________________________________________________ __________

மன்னார் நகரப்பகுதியில் மீண்டும் இராணுவ காவல் நிலையங்கள்

மன்னார் நகரப் பகுதியில் அகற்றப்பட்டிருந்த இராணுவ காவல் நிலையங்கள் மீண்டும் அமைக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் மீண்டும் அச்ச நிலை தோன்றியுள்ளது. மன்னார் நகரப் பகுதியில் உள்ள பல இராணுவ காவலரண்கள் அகற்றப்பட்டு சோதனை கெடுபிடிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் மீண்டும் காவலரண்கள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்ற நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பல விதமான கெடுபிடிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

____________________________________________________________________________________________________ __________

'பிரபாகரன் இறப்புச் சான்று வழங்கப்பட்டுவிட்டது': ப.​ சிதம்பரம்

prabaவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இறப்புச் சான்றை இலங்கை அரசு இந்தியாவிடம் வழங்கிவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.​ சிதம்பரம் தெரிவித்தார். பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இலங்கை அரசிடமிருந்து கிடைத்துவிட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பு ​(சிபிஐ)​ என்னிடம் தெரிவித்தது என்றார் அவர். தில்லியில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை இலங்கை அரசு இதுவரை தரவில்லை என்று சிபிஐ சிறப்பு விசாரணைக் குழு தலைவர் பி.என்.​ மிஸ்ரா கூறியிருந்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அளித்த பதிலில் அவர் இவ்வாறு கூறினார். ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் ப.​ சிதம்பரம் இதை மறுத்துள்ளார்.​ பிரபாகரன் இறப்புச் சான்று ஏற்கெனவே கிடைக்கப்பெற்றுவிட்டதாக சிபிஐ தெரிவித்ததுள்ளது என்று அவர் கூறினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். (மேலும்) 03.02.10

____________________________________________________________________________________________________ __________

அபிவிருத்தியும் சமாதானமும் நாட்டின் அவசிய தேவைகள்

தேர்தல்களில் வெற்றியும் தோல்வியும் சகஜம். தோல்வி அடைபவர்கள் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அமைதியாகத் தங்கள் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதுதான் நியாயமானது. ஆனால் இலங்கையின் தேர்தல் வரலாறு இவ்வாறாக இல்லை. தோல்வி அடைந்தவர்கள் தங்கள் தோல்வியை நியாயப்படுத்துவதற்காக நொண்டிச் சாட்டுகள் கூறுவது வழமையாகிவிட்டது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இதே கதைதான். தோல்வியை நியாயப்படுத்துவதற்காக எதிரணித் தலைவர்கள் பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள். தேர்தல் நியாயமாக நடைபெற்றது என முன்னர் கூறிய எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ இப்போது முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குத்துக்கரணம் அடிக்கின்றார். ஏனைய எதிரணித் தலைவர்களும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள். ஆனால் இக்குற்றச்சாட்டுகள் எல்லாம் ஒரே மாதிரியானவையாக இல்லை. அரச ஊடகங்கள் பக்கச் சார்பாகவும் தேர்தல் விதிகளை மீறியும் நடந்து கொண்டன என்பது சிலரது குற்றச்சாட்டு. கணனியைப் பயன்படுத்தித் தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டுள்ளன என்பது இன்னொரு சாராரின் குற்றச்சாட்டு.  (மேலும்) 03.02.10

____________________________________________________________________________________________________ __________

தமிழர், முஸ்லிம்களின் நலன்களுக்காக குரல் கொடுக்க வலுவான கூட்டணி அவசியம்

த எக்கனோமிஸ்ட

இன ரீதியாகப் பிளவுபட்டுள்ள நாட்டில் ராஜபக்ஷ வெற்றியடைந்ததற்குப் பிரதான காரணம் சிங்களவர்கள் அவரை நேசிப்பதாகும்.

பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், ராஜபக்ஷவின் நிலைமை சிறப்பாகவுள்ளது. ஆனால், அவரின் அரசியல் எதிராளிகள் சிதறிப்போயுள்ளனர். தற்போதிருப்பதிலும் பார்க்க அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மேலும் ஸ்திரமான அரசாங்கமொன்றை அமைக்க முடியுமென சுதந்திரக் கட்சியும் அதன் நேச அணிகளும் எதிர்பார்க்கும். இதன் மூலம் தற்போதுள்ள அமைச்சரவையின் எண்ணிக்கையில் அரைவாசி ஆக்குவதற்கு ஜனாதிபதிக்கு இயலுமானதாக இது அமையும். அத்துடன், அரசியலமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதற்குப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும். அவருடைய அலுவலக அதிகாரங்களைக் குறைப்பது முக்கியமான விடயமாக எதிராளிகளால் பேசப்பட்டது. ஆனால், அவர் அதனைச் செய்யப் போவதில்லை. 1978 இற்குப் பின்னர் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கப் போவதாகக் கூறிவந்த போதிலும் அதனை அவர்கள் செய்யவில்லை. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையேயுள்ள பிளவுகள் இலங்கையில் பாரியதொரு பிரச்சினையாகவுள்ளது.இது தொடர்பாக ராஜபக்ஷ எதனைச் செய்யப் போகிறார் என்பது நிச்சயமற்றதொன்றாக உள்ளது. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவுகொண்ட யுத்தத்திற்கு இதுவே அடிப்படைப் பிரச்சினையாக இருந்தது. விடுதலைப்புலிகள் இல்லாமல் சென்றுவிட்ட நிலையிலும் இந்தப் பிரச்சினை மறைந்துபோய் விடவில்லை. இத்தேர்தலில் நல்லிணக்கம் தொடர்பாக பேச்சு எதுவும் காணப்படவில்லை. இது தேவையான விடயம் என அநேகமான சிங்களவர்கள் பரிசீலனை செய்வதில்லை என்பது துன்பமான உண்மையாகும். இல்லாவிடில் வரலாறு வேறொன்றையே முன்வைக்கும். (மேலும்) 03.02.10

Home /Page -1 /Page-2 / Page -3 / Page-4 / Page-5 / Page-6 /Page-7 /

wanni

ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கும், 1970 பொதுத் தேர்தல் முடிவுக்கும் உள்ள ஒத்த தன்மைகள்!

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தெரிவித்திருக்கு ம் செய்திதான் என்ன?