a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           02.03.2010

வடக்கில் த.தே. கூ வேட்பு மனுத்தாக்கல்: மட்டக்களப்பு- அம்பாறை வேட்பு மனுத்தாக்கல்கள்

- B.B.C News

இலங்கையின் வடக்கே வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று தாக்கல் செய்திருக்கின்றது. அத்துடன் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியாகிய புளொட் அமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய கே.இராஜ குகனேஸ்வரன் தலைமையிலான சுயேச்சை குழுவும் வவுனியாவில் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன. 90தமிழ் தேசியக் கூட்ட்மைப்பு பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என்.சிவசக்தி ஆனந்தன் ஆகியோருடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மன்னார் மாவட்ட மூத்த நாடாளுமன்ற உறுப்பினராகிய எஸ்.சூசைதாசனும் முக்கியமாக இடம்பெற்றிருக்கின்றார்கள். அதேவேளை, வன்னி மாவட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சிவநாதன் கிஷோர், சதாசிவம் கனகரட்ணம் ஆகியோருக்கு இம்முறை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (மேலும்) 25.02.10

__________________________________________________________________________________________________

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்  தோழர் உ.ரா.வரதராசன் மறைவு

- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் உ.ரா. வரதராசன் மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வயது 65. அவரது உடல் பிப்ரவரி 23 செவ்வாயன்று காலை 11 மணியளவில் கட்சி யின் மாநிலக்குழு அலுவலகத்தில் கட்சித் தோழர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது. மாலை 3 மணியள வில் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்று கட்சியின் மாநிலக்குழு தெரிவித்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது:-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உன்னதமான தலைவர்களில் ஒருவரும், மிகச் சிறந்த போராளியும், சிஐடியு தலைவருமான உ.ரா.வரதராசன் அவர்கள் மரணமடைந்து விட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த துயரத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். (மேலும்) 25.02.10

__________________________________________________________________________________________________

கனடிய புலிகளின் கோஷ்டி மோதலின் பிரதிபலிப்பே ‘உதயன்’ பத்திரிகை மீதான தாக்குதல்!

கனடா கந்தசாமி

அண்மையில் கனடாவிலிருந்து வெளிவரும் ‘உதயன்’ பத்திரிகைக் காரியாலயம் தாக்கி சேதமாக்கப்பட்ட செய்தி, கனடிய ஆங்கில ஊடகங்களிலும், உலகம் முழுவதுமுள்ள தமிழ் ஊடகங்களிலும் ஒரு முக்கிய செய்தியாக வெளியாகியிருந்தது. இந்தத் தாக்குதல், ‘இனம் தெரியாத’ ;நபர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் செய்திகள் குறிப்பிட்டன. கடந்த காலங்களில், அதாவது மே 18, 2009 ஆணடிற்கு முன்னர், தமிழ் ஊடகங்களில் ‘இனம் தெரியாத’ என்ற சொல்லு புலிகளைக் குறிப்பதற்கே பாவிக்கப்பட்ட ஒன்று என்பது, அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்கு தெரிந்த ஒரு விடயமாகும். ஏனெனில் புலிகள் உரிமை கோரமுடியாத சூழ்நிலையில் கடந்த காலத்தில் செய்த கொலைகள் எல்லாவற்றையும், ‘இனம் தெரியாத நபர்களினால் செய்யப்பட்ட கொலைகள்’ என்ற சொற்பதத்தின் மூலமே, தற்பொழுது சந்தேகமற புலி ரவுடிகளால் தாக்குதலுக்குள்ளான கனடிய ‘உதயன்’ முதல் எல்லா தமிழ் ஊடகங்களும் குறிப்பிட்டு வந்துள்ளன. கனடிய உதயன் பத்திரிகை தற்பொழுது தாக்குதலுக்குள்ளானதற்கு, அது அப்படியொன்றும் புலிகளுக்கு எதிரான பத்திரிகை என்பது காரணமல்ல. (மேலும்) 24.02.10

__________________________________________________________________________________________________

தமிழ்த் தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களாகப் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். வேறு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பு ‘ரிக்கற்’ வழங்காததால் ஒதுங்கியுள்ளனர். தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களில் யாருக்கு ‘ரிக்கற்’ வழங்குவது யாருக்கு வழங்குவதில்லை எனத் தீர்மானிப்பதற்குக் கூட்டமைப்பின் தலைமைக்கு உள்ள உரிமையைக் கேள்விக்கு உட்படுத்தும் நோக்கம் எமக்குச் சிறிதளவேனும் இல்லை. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘ரிக்கற்’ வழங்காததற்குக் கூட்டமைப்புத் தலைமை கூறிய காரணம் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொதுவான விடயமாக இருப்பதால் அதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தமிழ்த் தேசியம் பற்றிப் போதுமான அளவு பேசாததாலேயே ‘ரிக்கற்’ மறுக்கப்பட்டதெனக் கூட்டமைப்புத் தலைமை கூறியதெனச் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூறினார்கள்.  (மேலும்) 24.02.10

__________________________________________________________________________________________________

தொண்டர் நிறுவனங்களூடாக பணம் கொடுத்து ஜனநாயகத்தை சீர்குலைக்க சில நாடுகள் முயற்சி வருகை தந்த இரு தூதுவர்களிடம் கொழும்பு புகார்

நாட்டில் ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்காக சர்வதேச உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களூடாக சில நாடுகள் நிதி வழங்குவதாக வருகை தந்திருக்கும் இரு தூதுவர்களிடம் நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பு புகார் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் விசேட தூதுவர் ஜோன் மக்கார்தி மற்றும் சூடான் தூதுவர் கதிர் கரோன் அஹமட் ஆகியோருடனான தனித் தனியான சந்திப்புகளின்போது இந்தக் கவலையை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். அவர் எந்தவொரு நாட்டினதும் பெயரைச் சுட்டிக் குறிப்பிட்டிருக்கவில்லை. ஆயினும், பெப்ரவரி 10 இல் சிங்கப்பூரின் ஸ்ரெய்ட் ரைம்ஸுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அளித்த பேட்டியின் பின்னணியில் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ள கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமையுமென ஊகிக்கப்படுகிறது. முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் சதிப்புரட்சித் திட்டக் குற்றச்சாட்டுத் தொடர்பாக ஸ்ரெய்ட் ரைம்ஸுக்கு அளித்த பேட்டியில் கோதாபய ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார். (மேலும்) 24.02.10

__________________________________________________________________________________________________

பொன்சேக்காவின் நிவாரண கோரிக்கை உச்ச நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

இராணுவ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவை நிபந்தனையுடனோ அல்லது நிபந்தனையின்றியோ விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்டிருந்த வேண்டுகோளை உச்ச நீதிமன்றம் நேற்று (23) நிராகரித்தது. அடிப்படை மனித உரிமை மீறும் அறிக்கையொன்றை விடுக்குமாறு கேட்டு ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் இருவர் தாக்கல் செய்திருந்த மனுவில் நிவாரணம் வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அம்சங்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரரான சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ சட்டத்தின் கீழ் இடம்பெறும் விசாரணையின்போது சாட்சியம் வழங்கப்பட்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில், விடுதலை செய்யும் நிவாரணத்தை பெற்றுத்தர முடியாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதில் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க, உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஜகத் பாலபட்டபெந்தி மற்றும் கே. ஸ்ரீபவன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (23) விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சரத் பொன்சேகா கேட்டுள்ள மற்றைய நிவாரணம் ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் சுட்டிக்காட்டினார். (மேலும்) 24.02.10

__________________________________________________________________________________________________

தமிழ் முற்போக்கு - ஜனநாயக சக்திகளின் ஐக்கியத்தை வலியுறுத்திய ரொறன்ரோ கருத்தரங்கு!

கனடாவிலிருந்து எஸ்.சிவபாலன்

பெப்ரவரி 21ம், 2010 அன்று கனடாவின் ஸ்காபரோ நகரில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் பங்கு பற்றிய அனைவரும், தமிழ் மக்களின் அரசியலில் கடந்த 60 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்ற தமிழ் பிற்போக்கு சக்திகளை, குறிப்பாக அவற்றின் தற்போதைய பிரதிநிதியான தமிழ் தேசியக்கூட்டமைப்பை சகல அரங்குகளிலும் தோற்கடிப்பதற்காக, தமிழ் மக்கள் மத்தியிலுள்ள இடதுசாரி – ஜனநாயக சக்திகள் ஐக்கியப்பட்டுச் செயற்பட வேண்டும் என்ற கருத்தைப் பலமாக வலியுறுத்தினர். ‘கனடிய தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு மன்றம்’ முதன்முதலாக ஏற்பாடு செய்த கருத்தரங்கிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டது. இக் கருத்தரங்கிற்கு மூத்த இடதுசாரித் தொழிற்சங்கவாதி எஸ்.தருமராசன் தலைமை வகித்தார். அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, தான் வாழும் புலம்nhயர் நாட்டிலிருந்து தாயகம் சென்று, சுமார் நான்கு மாதங்கள் வரை அங்கு தங்கியிருந்து பல்வேறு தமிழ் - முஸ்லீம் - சிங்கள அரசியல் தலைவர்களைச் சந்தித்து உரையாடி, பல விடயங்களையும், கண்ணோட்டங்களையும் திரட்டி வந்துள்ள பிரபல ஊடகவியலாளர் எஸ்.மனோரஞ்சன் அவர்களுடான ஒரு சந்திப்பை கனடிய தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொண்டவர்கள் பலரே மேற்கண்ட அபிப்பிராயங்களை முன் வைத்தனர்.  (மேலும்) 23.02.10

__________________________________________________________________________________________________

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த எம். பிக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு  பட்டியலில் இடமில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பிக்களுக்கு அக் கட்சியின் வேட்பாளர்களாகப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடமளிக்கப்பட வில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் எம். பி. தங்கேஸ்வரி கதிராமன் தெரிவித்தார். தமிழ் தேசியத்திற்காகக் குரல் கொடுத்தவர்களுக்கே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட த. தே. கூ. பட்டியலில் இடமளித்திருப்பதாக முன்னாள் எம். பியான இரா. சம்பந்தன் கூறியுள்ளார். ஆனால் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தமிழ் தேசியத்திற்காகப் பேசிய எமக்கு த. தே. கூ. வேட்பாளர் பட்டியலில் இடமளிக்காதது ஆச்சரியமாக உள்ளது என்றும் அவர் கூறினார். தமிழ் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொண்ட பாரிய அபிவிருத்திகளுக்குத் தம்மால் பங்களிப்பு செய்ய முடியாமல் போனது. இதனையிட்டு பெரிதும் கவலை அடைகிறேன் எனவும் அவர் கூறினார். (மேலும்) 23.02.10

__________________________________________________________________________________________________

பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்த மேலும் ஆவணங்கள் தேவை: இந்தியா 

  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரிழப்பை உறுதிப்படுத்த மேலதிக ஆவணங்கள் தேவை என இந்தியா, இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்குத் தொடர்பான விசாரணைகளுக்காக இந்த ஆவணங்கள் தேவைப்படுவதாக மத்திய புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர். மரபணு பரிசோதனையின் மூலம் பிரபாகரனின் உயிரிழப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், பிரபாகரனின் உயிரிழப்பு தொடர்பிலான இலங்கையின் ஆவணங்கள் இந்திய நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப் போதுமானதாக அமையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்திய ஆவணத்தினை இலங்கை வழங்கியுள்ளதாக சி.பி.ஐ. தமக்குத் தெரிவித்ததாக இந்திய உட்துறை அமைச்சர் இம்மாதம் தெரிவித்திருந்தார்.  எனினும் அவ் ஆவணங்கள் பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்கு போதுமானதாக இல்லாமையால் சி.பி.ஐ. இன் பல்தரப்பு ஒழுக்காற்று கண்காணிப்பு முகவர் மேலும் சில ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு இம்மாதம் இரண்டாவது வாரத்தில் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

__________________________________________________________________________________________________

சீனரின் நண்பரான இந்திய மருத்துவர் ஷாந்தாராம் கோட்னிஸ் (1910 - 1942)

கடந்த 1938-45ம் ஆண்டுகளில் சீனாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது சீன மக்களுக்கு உதவும் வகையில் இளம் மருத்துவர் ஷாந்தாராம் கோட்னிஸ் (Shantaram Kotnis) பிறந்த ஊரான இந்தியாவை விட்டு சீனாவுக்கு வந்து அவருடைய சிறந்த மருத்துவ சிகிச்சை நுட்பத்தின் மூலம் சீன மக்களுக்கு உதவி வழங்கினார். மிகப் பல சீனர்கள் அவரை நன்றாக அறிந்து கொண்டுள்ளனர். அவருடைய அணுகுமுறை பண்பு நலன் சிகிச்சையளிப்புத் திறன் ஆகியவை சீன மக்களின் உள்ளத்தில் ஆழப்பதிந்து விட்டன. அவரின் உடன்பிறப்புகள் சீனாவிலான அவரது போராட்ட வாழ்க்கைக் கதைகள் பற்றி எப்படி மதிப்பிடுவதை தெரிந்து கொள்வோமா? மும்பை நகரின் தெற்கில் அமைந்த சாதாரண ஒரு மாடி வீட்டில் மருத்துவர் ஷாந்தாராம் கோட்னிஸின் மூன்றாவது தங்கை மனோரமா கோட்னிஸ், ஐந்தாவது தங்கை வத்சலா கோட்னிஸ் இருவரும் வாழ்கின்றனர். அவர்கள் இப்போது மூதாட்டிகள். அப்போது அவர்களது சகோதரர் ஷந்தாராம் கோட்னிஸ் இந்தியாவை விட்டு சீனாவுக்கு சென்ற போது அவர்கள் குழந்தையாக இருந்தனர். (மேலும்) 23.02.10

__________________________________________________________________________________________________

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

.B.B.C News

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். அந்த அமைப்பின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என். சிறிகாந்தாவும், செயலாளராக தானும் செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படுவதாலேயே தாம் அதிலிருந்து விலகி புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடம் மறுக்கப்பட்டவர்கள் மற்றும் அதிருப்தியடைந்தவர்கள் இந்த அமைப்பில் சேரலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக இந்த தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். (மேலும்) 23.02.10

__________________________________________________________________________________________________

கனேடிய 'உதயன்' பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்

 கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை அலுவலகம் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக த ரொரண்டோ ஸ்ரார் இணையத்தளம் செய்திவெளியிட்டுள்ளது. தாக்குதலுக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பத்திரிகையின் தலைமை ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாக இலங்கை- கனடா வணிக பேரவை மற்றும் கனேடிய தமிழர் ஒன்றியத்தின் தலைவர் குல செல்லத்துரை தெரிவித்துள்ளார்.. இந்தத் தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை – கனேடிய வர்த்தகப் பேரவையின் தலைவர் செல்லத்துரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய சந்திப்பு குறித்த செய்திகள் அப்பத்திரிகையின் முதற் பக்கத்தில் வெளியானதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமையப் பெற்றுள்ளதென செல்லத்துரை குறிப்பிட்டுள்ளார். அமைதியான முறையில் வாழ்வதற்காகவே கனடாவிற்கு வந்ததாகவும், தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட முடியாத நிலை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

__________________________________________________________________________________________________

ஜ.தே.கூ.வின் வெற்றிக் கிண்ணத்தில் களம் இறங்குகிறார் சரத் பொன்சேகாசட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ ஊடாக தீர்மானத்தை அறிவித்தார்.

ஜனநாயக தேசியக் கூட்டணியின் வெற்றிக் கிண்ணம் சின்னத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.தனது தீர்மானத்தை அவரின் சட்டத்தரணியும் முன்னாள் எம்.பி.யுமான விஜேதாச ராஜபக்ஷ மூலம் கட்சிகளின் தலைவர்களுக்கு (எதிரணிக் கட்சிகளின்) அவர் அறிவித்திருக்கிறார். இதனை விஜேதாச ராஜபக்ஷ நேற்று உறுதிப்படுத்தினார்.பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக விரைவாகத் தீர்மானம் எடுக்குமாறு ஜெனரல் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுள்ள நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகாவிடமிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐ.தே.மு.வில் யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதென இந்த முன்னணியிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு என்பன தீர்மானம் எடுத்து வேட்பாளர் பட்டியலையும் 90 சதவீதம் பூர்த்தி செய்திருக்கும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் யாவும் ஒரே அணியில் ஒன்று சேர்ந்தது போன்றதொரு ஏற்பாட்டை பொதுத் தேர்தலிலும் மேற்கொள்வது தொடர்பாக துரிதமாக முடிவு எடுக்குமாறு ஐ.தே.க. ஜெனரல் பொன்சேகாவிடம் கேட்டிருப்பதாக பி.ரி.ஐ. செய்திச் சேவை நேற்று ஞாயிற்றுக் கிழமை தெரிவித்தது. (மேலும்) 23.02.10

__________________________________________________________________________________________________

2/3 பெற்று அரசியலமைப்பு மாற்றம்: வடக்கு, கிழக்கு, மலையகத்தில் பாரிய அபிவிருத்தி

rajapaksha le-ficaroபொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று அரசியல மைப்பை மாற்றுவதுடன் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் பாரிய அபிவிருத்தியை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இம்முறை அமைச்சரவையை சிறியதாக்கும் அதேவேளை, இளைஞர்களுக்கு முன்னுரிமையளிப்பதும் தமது எதிர்பார்ப்பாகுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்நாட்டில் அரசியல் செய்ய எவருக்கும் உரிமையுண்டு. தனிப்பட்டவர்களைப் பாதிப்படையச் செய்ய நாம் தயாரில்லை. அவ்வாறு அரசியல் நடத்தவும் முடியாது. எவரும் அரசியல் நடத்தும் சுதந்திரம் இந்நாட்டில் உள்ளது என்பதை மக்கள் அறிவர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மலையக மக்கள் வெள்ளையர்களின் ஏகாதிபத்திய போராட்டத்திற்கு முகங்கொடுத்தவர்கள். அவர்களின் தாக்குதல்களில் பலியானார்கள். அத்தகையவர்களைக் கொன்று குவிக்கும் அளவிற்கு வெள்ளை ஏகாதிபத்தியம் கொடூரமானதாகத் திகழ்ந்தது. அந்த வகையில் ஊவா மக்கள் உறுதியானவர்கள். டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார போன்றவர்கள் தாம் பதவி வகித்த கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்கள். ஒரு பாராளுமன்ற சபாநாயகரைக் கூட எம்மால் நியமிக்க முடியாத நிலையில் சபாநாயகராக நியமனம் பெற்றவர் அவர். இம்முறை இளையோர் பலர் எம்முடன் உள்ளனர். கடந்த முறை மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நாம் பெற 19 ஆசனங்கள் எமக்குக் குறைவாக இருந்தன. இம்முறை அதனை நாம் பெற்று மூன்றிலிரண்டு பெரும் பான்மையை நாம் பெற்றுக்கொள்வது மிக உறுதி. (மேலும்) 22.02.10

__________________________________________________________________________________________________

ஐ.ம.சு.மு வேட்பாளர் பட்டியல்கள் இன்று முதல் கையளிக்க ஏற்பாடு

    * முதல் பட்டியல் கம்பஹாவில் இன்று தாக்கல்

    * மு.கா.இன்று முடிவு

    * ரி.எம்.வி.பி வடக்கு, கிழக்கில் தனித்துப் போட்டி

பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியல்கள் இன்று (22) முதல் கட்சி முதன்மை வேட்பாளர்களினால் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஐ. ம. சு. முன்னணி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கம்பஹா மாவட்ட வேட்பாளர் பட்டியல் ஐ.ம.சு முன்னணி கம்பஹா மாவட்டக் குழுத் தலைவர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று கம்பஹா மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட உள்ளது. ஏனைய மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் தினங்களில் குழுத் தலைவர்களினால் கையளிக்கப்படும் எனவும் அவர் கூறினார். கம்பஹா மாவட்ட வேட்பு மனுத்தாக்கலைத் தொடர்ந்து ஐ.ம.சு. முன்னணியின் முதலாவது கூட்டம் அமைச்சர் மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கம்பஹா நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது. (மேலும்) 22.02.10

__________________________________________________________________________________________________

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அதிகார பகிர்வுதான் தீர்வு அதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்- திமுக

 இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அதிகார பகிர்வு ஒன்றுதான் நிரந்தரத் தீர்வு என்றும் அதற்கான அரசியல் தீர்வு காண முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தி.மு.க. பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலேயே இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. நிறைவேற்றப்பட்ட ஏனைய தீர்மானங்கள் வருமாறு: இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பவும், அவர்களது நல்வாழ்வுக்கான உதவிகள் இலங்கை அரசினால் வழங்கப்படவும், மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். ஏற்கனவே உறுதி அளித்தபடி இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது ஒன்றுதான் நிரந்தர வாழ்வுக்கு வழி வகுக்கும் என்பதால், அதற்கான அரசியல் தீர்வு காண்பதற்கு தேவையான முயற்சிகள் அனைத்தையும் மத்திய அரசு விரைவில் மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும். (மேலும்) 22.02.10

__________________________________________________________________________________________________

தொழிலாளர்களின் நலன்களில் அதிக அக்கறை வேண்டும்

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் ஒரு முக்கிய படிப்பினையை நமக்கு ஊட்டியுள்ளது. அதன்படி இன்னும் வரும் ஏழாண்டு களுக்கு இதே ஜனாதிபதியின் கீழ்தான் ஆட்சியமைய போகிறது. ஆகவே நாம் ஆளுங்கட்சியின் கரங்களை உயர்த்துவதே இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் கடமையாகும். நடைபெற்ற தேர்தலில் மலையகச் சமூகம் அதிலும் குறிப்பாக தமிழ் சமூகம் வாக்களிக்கவில்லையென காரணங்காட்டி சில அரச காரியாலயங்களில் உதாசீனப்படுத்தப்படுவதை அனுபவ ரீதியாக அறிய முடிந்தது. ஆதலால் நாம் அவதானமாக செயற்பட வேண்டும். பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில் பெருந்தொகையானோர் நம்மவர்கள் ஆசிரியர்களாகவும் அரச ஊழியர்களாகவும் உள்வாங்கப் பட்டதோடு, தபால் விநியோகம், வீதி புனரமைப்பு, வீடமைப்புகளும் ஓரளவாது முன்னெடுக்கப்படுகின்றன. எனவே நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் இவைபற்றி சிந்தித்து மலையகத்தின் அபிவிருத்திக்கான வழிமுறைகளை காண வேண்டும். வடக்கு கிழக்கில் தமிழர் கூட்டணி எதிரணியில் இருந்து எதிர்வாதம் புரிய முடிந்தளவிற்கு அம்மாகாண அபிவிருத்தியை செய்ய முடியவில்லை. அதேவேளை அங்கிருந்த முஸ்லிம் பிரதிநிதிகள் அரசின் பணிகளோடு இணைந்து போனதால் பல்வேறு வாய்ப்பு வசதிகளை நமது சமூகத்திற்கு பெற்றுக்கொடுக்க முடிந்தது. எனவே எதிர்வரும் தேர்தலில் நாம் எதிர்காலம் பற்றிய சிந்தனையோடு வாக்களிப்பதோடு நமது சார்பாக போட்டியிடும் சரியானவர்களை இனங்கண்டு தெரிவு செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டும். நமக்குத் தேவை சமூகத்தின் சுதந்திரமான சுபீட்சமே! (மேலும்) 22.02.10

__________________________________________________________________________________________________

தமிழ் மக்களுடைய பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒற்றுமையாக செயற்படக்கூடிய ஒரு நிலைமை உருவாக்கப்படவேண்டும்.

- த.சித்தார்த்தன்  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)

தேர்தல் சம்பந்தமாக தமிழ்க் கட்சிகளிடையே ஒரு ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்ற ரீதியில் நாங்கள் பல தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். இருந்தாலும் இந்த கூட்டுச் சம்பந்தமான பேச்சுக்களை அடிப்படையிலேயே தேர்தலை நோக்கியதாகவே அனைத்துக் கட்சிகளும் பார்க்கின்றன. தத்தமது கட்சிக்கு கூடுதலான வேட்பாளர் பங்கீடு மற்றும் தத்தமது கட்சியின் வெற்றியை உறுதி செய்யக்கூடிய வகையிலான கூட்டுக்கள் அமைவதிலுமே அனைத்துக் கட்சிகளும் முனைப்புக் காட்டி வருகின்றன. அனைத்து கட்சிகளும் தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி கூறி வருகின்றபோதிலும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளின் தீர்வுக்கான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்த கூட்டமைப்பு முயற்சிகள் நடைபெறவில்லை. இருந்தாலும் தமிழ் கட்சிகள் கூடியளவுக்கு ஒன்றுபட்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதையே நாங்களும் முழுமையாக விரும்புகிறோம்.  இதனடிப்படையில் நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடாத்துகின்றோம். ஆனால் எப்படியிருந்தபோதிலும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக தேர்தலுக்கு முகம்கொடுக்கக்கூடிய வாய்ப்பு குறைவாகவே காணப்படுகின்றது. (மேலும்) 22.02.10

__________________________________________________________________________________________________

காதோடு காதாக

ஜனாதிபதித் தேர்தலில் தீர்க்கதரிசனமின்மையால் தப்புக்கணக்கு போட்டுவிட்ட ஒரு சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுத் தேர்தலில் தமது சாணக்கியத்தை உரசிப்பார்க்க முயன்று வருகிறார்கள் போல் தெரிகிறது. அந்தவகையில் முஸ்லிம் மக்களின் அபிமானத் தலைவரென்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஓர் அரசியல் கட்சியின் தலைவர், நாட்டின் அதிமுக்கிய பிரமுகருக்குத் தொலைபேசி அழைப்பொன்றை எடுத்துள்ளார்.
‘உங்களைச் சந்திக்க வேண்டும்’....

‘ஏன் என்ன விடயத்துக்காகச் சந்திக்க வேண்டும்?’....

‘எனது பாதுகாப்பு விடயமாகச் சந்தித்துப் பேசவேண்டும்’...

  ‘இப்பொழுதுதான் பாதுகாப்பு பிரச்சினை இல்லையே. பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது. நீங்களும் விரும்பிய இடமெல்லாம் சென்றுவருகிaர்கள், உங்களுக்கு வேண்டியவற்றையெல்லாம் பேசுகிaர்கள். ஆகவே, பாதுகாப்பு தொடர்பாகப் பேசுவதில் அர்த்தமில்லை என நினைக்கிறேன்’... என்று அவரது செயற்பாட்டைப் புரிந்துகொண்டவராய் அதிமுக்கிய பிரமுகர் பதில் அளித்துள்ளார். ஆனால், அந்தத் தானைத் தலைவர் விட்டபாடில்லை!
‘இல்லை, இல்லை... நான் உங்களைச் சந்தித்துச் சில விடயங்கள் பற்றிப் பேச வேண்டும்!’

 ‘இப்படித்தான் சொல்லிவிட்டு வருவீர்கள். பின் வெளியில் சென்று என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் அவதூறாகப் பேசுவீர்கள்’.... இதற்கெல்லாம் நேரமில்லை...’ என்று கனத்த குரலில் கூறிவிட்டுத் தொலைபேசியைத் துண்டித்தாராம் அதி முக்கிய பிரமுகர்.

__________________________________________________________________________________________________

தமிழ் மக்களுக்கு முக்கியத்துவமான தேர்தல்

நடக்கவிருக்கும் பொதுத் தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தீர்மானகரமானது என்றும் சவாலை உணர்ந்து தமிழ் மக்கள் செயற்பட வேண்டும் என்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்து ஊடகங்களில் வெளியாகியிருந்தது. உண்மையிலேயே இப்பொதுத் தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இலங்கை சுதந்திரமடைந்து அறுபத்திரண்டு வருடங்கள் கழிந்துவிட்டன. தமிழ் மக்களின் இருப்பு தொடர்பானதும் அவர்களின் தனித்துவ அங்கீகாரம் தொடர்பானதுமான பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தது. அன்று முதல் இன்று வரை தமிழ் மக்களின் அரசியல் தலைமை குறிப்பிட்ட ஒரு அரசியல் செல்வழியைச் சார்ந்ததாகவே இருந்து வருகின்றது. தலைசிறந்த மூளைசாலிகள் எனக் கருதப்பட்டவர்கள் இக் காலப் பகுதியில் அத் தலைமைப் பீடத்தை அலங்கரித்திருக்கின்றார்கள். அப்படியிருந்தும் தமிழ் மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை. சரியாகக் கூறுவதானால், பிரச்சினை நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்தே வந்திருக்கின்றது.   (மேலும்) 22.02.10

__________________________________________________________________________________________________

நாடாளுமன்றத் தேர்தலை கண்காணிக்க 8000 உள்நாட்டுக் கண்காணிப்பாளர்கள்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை கண்காணிக்க 8000 உள்நாட்டுக் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் சகல மாவட்டங்களுக்கும் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்படவுள்ளனர். உள்நாட்டு கண்காணிப்பாளர்குளில் 1500 பேர் சுயாதீனமாக இயங்கக் கூடியதாகவும் பொதுவான கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர். கண்காணிப்பாளர்களை தயார்படுத்தும் நடவடிக்கைகளில் பவ்ரல் அமைப்பு ஈடுபட்டிருப்பதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. 

__________________________________________________________________________________________________

தேர்தல் வேட்புமனு தாக்கல்

- தாயகக்குரல்

19ம் திகதி தொடக்கம் 26ம் திகதி வரை வேட்புமனு தாக்கல் செய்யமுடியும்.   தேர்தல் களத்தில் இறங்குவற்கு அரசியல் கட்சிகள் தயாராகி தமது வேற்றி வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்த பொதுத்தேர்தலில் 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்திற்கு 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்கள் தேர்தலில் தெரிவு செய்யப்படுவர். அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல் மூலம் 29 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். அதாவது நாடு முழுவதும் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்படுவர். வடக்கில்; யாழ்ப்பாணத்தில் இருந்து - 9 உறுப்பினர்கள், வன்னியில் - 6 உறுப்பினர்கள், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை - 4 உறுப்பினர்கள், மட்டக்களப்பு - 5 உறுப்பினர்கள், திகாமடுல்ல - 7 உறுப்பினர்கள் என மொத்தம் 31 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். கிழக்கில் மூவின மக்கள் தொகை  விகிதாசாரத்தில் அதிக வித்தியாசம் இல்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் இரு அணிகளிடையேதான் தீவிர போட்டி காணப்பட்டன. ஆனால் இந்த அணிகளில் உள்ள கட்சிகள் பொது தேர்தலில் தமது தனித்துவத்தை பேண தனியாக போட்டியிடலாம் எனத் தெரிகிறது. பொதுத் தேர்தலில் பல்வேறு கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுவது மாத்திரமல்ல தனித்தனிக் கட்சிகள் உள்ளே விருப்பு வாக்கை பெறுவதில் வேட்பாளர் மத்தியில் கடுமையான போட்டி காணப்படும். (மேலும்) 21.02.10

__________________________________________________________________________________________________

கட்சிகளின் அங்கீகாரம் பற்றிய மீளாய்வு வேண்டும்

இலங்கையில் எத்தனையோ அரசியல் கட்சிகள் களத்துக்கு வந்து போய்விட்டன. சில கட்சிகள் வந்த சுவடே தெரியாமல் மறைந்துவிட்டன. தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் உள்ளவற்றிலும் பெரும்பாலானவை பெயரளவில் மாத்திரம் உள்ளவை. இக் கட்சிகள் இடைக்கிடை சின்னத்தை யாருக்காவது இரவல் கொடுப்பதைத் தவிர வேறெந்த செயற்பாட்டிலும் ஈடுபடுவதில்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுள் சில கட்சிகள் மாத்திரமே தொடர்ந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அரசியல் அரங்கிலிருந்து மறைந்து போவதற்குப் பல காரணங்கள் உள்ளன. கட்சித் தலைமையுடன் கருத்து வேறுபாடு தோன்றியதால் ஆரம்பிக்கப்படும் கட்சிகளில் பெரும் பாலானவை நீடிப்பதில்லை. சுயலாப நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் தீவிரமான அரசியலில் ஈடுபடுவதில்லை. தெளிவானதும் நிலையானதுமான கொள்கை இல்லாமல் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் கட்சிகள் காலப்போக்கில் மக்களால் நிராகரிக்கப்பட்டுவிடுகின்றன. (மேலும்) 21.02.10

__________________________________________________________________________________________________

தனிவழி போகும் தன் திட்டத்தை கைவிட்டது தமிழ்க் காங்கிரஸ் ஆனால் வேட்பாளர் தெரிவில் கூட்டமைப்புடன் முரண்பாடு

தனி வழி போகும் தனது திட்டத்தை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கைவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து இந்தப் பொதுத் தேர்தலையும் சந்திப்பதற்கு அக்கட்சி முடிவு செய்தமையை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நிலவிய குழப்பம் ஓரளவு முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தமிழ்க்காங்கிரஸ் கட்சி தனது சார்பில் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்கள் குறித்து முன்னுக்குப் பின் முரணான விதத்தில் பெயர்களை மாற்றியதால் கூட்டமைப் புக்கும் அக்கட்சிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை செயலாளராகக்கொண்ட அகில இலங் கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி, அண்மைக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைமையோடு முண்டிக்கொண்டிருந்தமையை அடுத்து, எதிர்வரும் தேர்தலில் அக் கட்சி கூட்டமைப்பை விட்டுத் தனி வழி போகக்கூடும் எனப் பரவலாகப்  பேச்சடிபட்டது தெரிந்ததே. இவ்விவகாரம் தொடர்பாக  அக்கட்சிக் கும் கூட்டமைப்புக்கும் இடையில் இடம் பெற்ற பல சுற்றுப் பேச்சுகள் ஆரம்பத்தில் இழுபறியாக நீடித்தபோதிலும் நேற்று முன் தினம் இரவு கடைசியாகப் பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலைமை ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. (மேலும்) 21.02.10

__________________________________________________________________________________________________

India is my relation, the others are friends'

Mahinda Rajapaksa, a powerful and popular head of government and state, has the way cleared for him for the next six years and more. In a recent conversation with N. Ram lasting three-and-a-half hours at Temple Trees in Colombo, he covered, and answered questions on, a range of subjects. Excerpts from his on-the-record comments and responses: I was not surprised [by the margin of victory, nearly 18 percentage points]. Because in the Provincial Councils, if you count the majority, it was 2.5 million. I knew that if you took 1 million out of that, I would have won with 1.5 million. And I knew what the pulse of the people in villages was. Even in Colombo district, outside the municipal area, they gave me a good majority. I knew from the start that my majority would be there. And I am not surprised about the North-East results. I was encouraged by that. I had the election, I knew that people must vote, they must be given a chance to elect their own President. Twenty-six per cent, I am satisfied with it. In every village, I got some votes, didn't I? (Read) 21.02.10

__________________________________________________________________________________________________

உலக மக்கள் ஒன்றுகூடுவோம்!

- தே. லட்சுமணன்

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் புவிசுற்றுச்சூழல் சுகாதார அறிவியல் துறையின் முனைவர் டாக்டர் கிரிக் ஆங்ஸ்மித் என்பவர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் 19.1.2010 அன்று உரையாற்றிய போது சில அதிர்ச்சி தரும் தகவல்களைத் தந்துள்ளார். அந்த உரையில் உலக சுகாதார அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பை மேற்கோள் காட்டியுள்ளார். வளரும் நாடுகளில் சுற்றுச்சூழல் சீர்கேட்டினால் ஏற்படும் நுரையீரல் நோயினால் ஓர் ஆண்டுக்கு 9.50 லட்சம் குழந்தைகளும், 6.50 லட்சம் தாய்மார்களும் அகால மரணம் அடைகிறார்கள். இதற்குக் காரணம் “கார்பன்” புகையை அதிகமாக உட்கொள்ளுகிறார்கள். பருவநிலை நமக்கு எதிராக மாறி வரும் சூழலில், சமையல் செய்யப் பயன்படுத்தும் “ஸ்டவ்” உமிழும் கார்பனும் தாய்மார்களையும், குழந்தைகளையும் சுகாதார ரீதியாக பாழ்படுத்துகிறது. இதுவே அவர்களின் ஆயுளைக் குறைத்து, மரணப்படுக்கையில் கிடத்திவிடுகிறது என்கிறார்.  (மேலும்) 21.02.10

__________________________________________________________________________________________________

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!

வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)

ஏப்ரல் 08ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறப் போவதையொட்டி, நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் சுறுசுறுப்புடன் செயற்பட ஆரம்பித்துள்ளன. அதற்குக் காரணமில்லாமல் இல்லை. இலங்கையைப் பொறுத்தவரையில், ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகிவிட்டால், அவரது வாழ்க்கை பூலோக சொர்க்கமாகி விடுவதே அதன் காரணமாகும். அதற்காக ‘நாட்டைக் காப்பேன், இனத்தைக் காப்பேன், மொழியைக் காப்பேன், மதத்தைக் காப்பேன்’ என, பல்வேறு நாடகங்களை அரசியல் கட்சிகள் அரங்கேற்ற ஆரம்பித்து விடும். அதிலும் இந்த விடயத்தில் நமது (இலங்கை - இந்திய) தமிழ் அரசியல் கட்சிகளின் வீர சாகசங்களோ, சாதனைகளோ கணக்கிலடங்காதவை.  அந்த ‘வீர வரலாற்றின்’ தொடர்ச்சியாக, மீண்டுமொரு முறை ‘வரலாற்றுத் திருப்பமுள்ள’ தீர்ப்பை, இலங்கை பொதுத்தேர்தலில் தமக்கு வழங்கும் படி, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்களைப் பார்த்துக் கேட்டிருக்கிறார். அவர் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களைப் பார்த்துத் துணிச்சலுடன் இப்படிக் கேட்டதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இலங்கை 1948ல் அந்நியரிடம் இருந்து சுதந்திரம் அடைந்த நாள் முதல், தமிழர்களுக்கு தலைமை தாங்கிய அனைத்துத் தலைமைகளும் - அதாவது தமிழ் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் தேசியக்கூட்டமைப்பு (இது பாசிசப் புலிகள் உருவாக்கிய பினாமி அமைப்பு) என அனைத்துக் கட்சிகளுமே, தமிழ் மக்களிடம் இவ்வாறு கேட்டு பாராளுமன்றம் சென்று, தமது சொந்த நலன்களையே பார்த்து வந்துள்ளதின் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியே சம்பந்தனின் தற்போதைய வேண்டுகோளுமாகும். இந்த சுயநல அரசியலையே தமிழ் தேசியவாதிகள் சிலர், ‘தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட வரலாறு’ என்றும் வர்ணித்துக் கொள்கின்றனர். (மேலும்) 19.02.10

__________________________________________________________________________________________________

தவறான பாதையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

பாராளுமன்றத் தேர்தலுக்காகக் கூட்டணி அமைப்பதில் எதிரணிக் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன. இக்கட்சிகளுக்கிடையே கொள்கை உடன்பாடு எதுவும் இல்லை. கலாசார, பொருளாதார, சர்வதேச விடயங்களிலும் சமூக நோக்கிலும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் இந்த உத்தேச கூட்டணியில் பிரதான கட்சிகளாக உள்ளன.  பொதுவான வேலைத் திட்டம் பற்றிய அக்கறை இவர்களுக்கு இல்லை. பொதுவான சின்னம் பற்றியே பேச்சுவார்த்தை நடத்துகின்றார்கள். பாராளுமன்ற ஆசனங்களைத் தவிர வேறெந்த நோக்கமும் இல்லாத கூட்டணி என்று இதைக் கூறலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தக் கூட்டணியுடன் தன்னை இனங்காட்டுவது இக் கூட்டமைப்பின் உண்மையான நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்புகின்றது  (மேலும்) 19.02.10

__________________________________________________________________________________________________

தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்னரே பெருந்தொகைப் பணம் பெட்டகத்தில் வைப்பு. பொன்சேகாவின் பணமென அசோகா திலகரட்ன தகவல்

* நகை வைக்கும் பெட்டகத்தில் பணம் வைக்கப்பட்டது ஏன்?

* 2000 டொலர்களை மாத்திரமே நம்முடன் வைத்திருக்க முடியும்

* ஆர்ப்பாட்டம் நடத்துவதால் சட்டத்திலிருந்து தப்ப முடியாது?

தேர்தல் நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்னரே சரத் பொன்சேகா பெருந்தொகைப் பணத்தை வங்கியின் பெட்டகத்தில் வைத்துள்ளமை தெரியவந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். சரத் பொன்சேகாவின் புதல்வி அப்சரா பொன்சேகா கூறியதற்கிணங்க, பொன்சேகாவின் அலுவலகத்திலிருந்தே அந்தப் பணத்தைக் கொண்டு பெட்டகத்தில் வைத்ததாக ஜெனரல் பொன்சேகாவின் மருமகனின் தாயாரான அசோகா திலகரட்ன கூறியுள்ளார். அவை தன்னுடைய பணம் அல்லவென்றும் அவர் கூறியுள்ளதாகக் கூறிய அமைச்சர் பீரிஸ், ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதிருக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். (மேலும்) 19.02.10

__________________________________________________________________________________________________

ஜெனரல் பொன்சேகா விவகாரமும் மகா சங்கமும்

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை அரசாங்கம் கைது செய்யாமல் விட்டிருந்தால் அவரைப் பற்றி நாட்டு மக்கள் பெருமளவுக்குப் பேசாமல் இருந்திருக்கக்கூடும். ஊடகங்களில் தலைப்புச் செய்திகளை அவர் ஆக்கிரமிப்புச் செய்வதற்கு வாய்ப்பும் இருந்திருக்காது. அத்துடன் அவரைப் பொதுவேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்திய எதிரணிக் கட்சிகளுக்கு ஆர்ப்பாட்டங்களைச் செய்வதற்கு ஆரவாரமான ஒரு கோஷம் கிடைக்காமல் போயிருக்கவும் கூடும். அரசாங்கம் ஜெனரல் பொன்சேகா விவகாரத்தைக் கையாளுகின்ற முறை அரசியல் ரீதியில் நோக்குகையில் விவேகமுடையதாக இல்லை என்பதே பரவலான அபிப்பிராயமாக இருக்கிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய ஆதரவாளரான ஜெனீவாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் தயான் ஜெயதிலக பொன்சேகா விவகாரத்தை "பூரணமான பெருந்தவறு  என்று வர்ணித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. எதிரணிக் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு உத்வேகமுடையவையாக இல்லை. மக்களை அணிதிரட்டுவதில் இந்தக் கட்சிகளுக்கு இருக்கின்ற இயலாமையைத் தெளிவாகவே காணமுடிகிறது. (மேலும்) 19.02.10

__________________________________________________________________________________________________

ஜனநாயகத்தைப் புரிந்து கொள்வதும் அதைப் பேணுவதும் எப்படி?

-    உமா. தங்கேஸ்வரன்

தமிழ்ச் சூழலில் ஊடகச் செயற்பாடு என்பது சார்பு அரசியலுக்குரியதாகவே இருக்கிறது. பொது வெளி நோக்கிய ஊடக முறைமை தமிழில் துறைசார்ந்ததாக இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்பது ஊடகத் தறைசார்ந்த பலருடைய அபிப்பிராயமாகும். செய்தி அளிக்கை முறைமை, ஆசிரியர் தலையங்கங்கள், செய்திக் கட்டுரைகள், பத்திகள், விவரணக்கட்டுரைகள், அரசியற் கட்டுரைகள் போன்றவற்றில் விதிவிலக்கான சில போதுகளைத் தவிர, பொதுப்போக்கென்பது சார்பு நிலைப்பட்டே இருக்கின்றன என்பது வெளிப்படையானது. இந்தச் சார்பு நிலையை கேள்விகளற்று, விமர்சனமில்லாமல் ஏற்கக் கூடிய ஒரு உளவியல் தமிழ் மக்களிடமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த நிலைகுறித்து எந்தப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை. யாருக்கும் இதுவொரு விவகாரமாகப் புலப்படுவதும் இல்லை. ஆனால் இதுதான் அடிப்படைப் பிரச்சினையே. ஜனநாயகம் என்பது பலவிதமான நிலைப்பாடுகளுக்கும் கருத்துகளுக்கும் இடமளிப்பதாகும். கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்வதாகும். எதிர்க்கருத்துக்கும் மாற்றுக் கருத்துகளுக்கும் இடமளிப்பதன் மூலமே அறிவையும் ஜனநாயகத்தையும் வளர்த்துக் கொள்ள முடியும். மக்கள் தெரிவுகளை மேற்கொள்வதற்கு அதுவே வாய்ப்பளிக்கும். மக்களின் சுதந்திர வெளியை ஜனநாயகமே உருவாக்கும். அதுவே பாதுகாக்கும். இதற்காகவே ஊடகங்கள் தொழிற்படவேண்டும். (மேலும்) 19.02.10

__________________________________________________________________________________________________

இந்தியாவின் கைகள் கத்தியும் பூச்செண்டும்

-     கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

இலங்கை அரசியல் மிகவும் கொந்தளிப்பான ஒரு நிலைக்கு மீண்டும் வந்துள்ளது.ஜனாதிபதித் தேர்தல், அதைத் தொடர்ந்து அந்தத் தேர்தல் பற்றிய குற்றச்சாட்டுகள், இப்போது ஜெனரல் சரத் பொன்சேகாவின்; கைது, இந்தக் கைதுக்கு எதிரான ஆர்;ப்பாட்டங்கள் என அடுத்தடுத்து பரபரப்பான நிகழ்ச்சிகள்@ பரபரப்பான செய்திகள்.யுத்தம் முடிந்தாலும் நாடு அமைதிக்கோ வழமைக்கோ திரும்பவில்லை. ஜனநாயகத்;தைச் சுற்றி ஆயிரக்கணக்கான கேள்விக்குறிகளே நிற்கின்றன. ஒரு மாதத்துக்;குள் ஒரு ஊடகவியலாளர் கடத்தப்பட்டு தகவல் இல்லாத நிலை. இன்னொரு ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அரசாங்கத்துக்கெதிரான குற்றச்சாட்டுகள், கண்டனங்களோடு தெருவில் இறங்கியிருக்கிறார்கள் சனங்களும் ஊடகவியலாளர்களும். வடக்கு கிழக்கிலிருந்த கொந்தளிப்பான நிலைமையும் பரபரப்புகளும் இப்போது தெற்குக்கும் மேற்குக்குமாக நகர்ந்திருக்கிறது. இது இப்படி இன்னும் ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகள் தெற்கிலும் மேற்கிலும் நீடிக்கக் கூடும். இந்தக் காலஎல்லை சிலவேளை கூடிக்குறையலாம். ஆனால், இந்த நிகழ்ச்சிப் போக்கில் மாற்றமிருக்காது. (மேலும்) 19.02.10

__________________________________________________________________________________________________

Sri Lanka will not be sold

Sri Lanka is not prepared to be sold in order to regain the GSP plus facility from the European Union and will maintain its policy stand instead of giving in to any unfair demands, Central Bank Governor Ajith Nivard Cabraal told Daily Mirror online. In an interview with the website this evening the Governor also noted that the country will not be hurt by the loss of the GSP Plus concession from the EU as all the remedial measures have been taken to maintain the economy minus the trade concession. “I agree that for us the GSP+ concession being removed is a risk. However on October 29th last year we informed the entire country on how we would deal with the loss of the GSP+ and how we have prepared ourselves. We have reiterated that position today,” Cabraal said. (Read) 19.02.10

__________________________________________________________________________________________________

கூட்டமைப்பு எம்.பிக்களாக இருந்த பன்னிருவருக்கு இம்முறை கல்தா?

இதுவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் எம்.பிக்களாக இருந்த 12 பேருக்கு இந்தத் தடவை வேட்பாளர் நியமனம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக அரிதாக உள்ளதாகத் தெரியவருகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை கொழும்பில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,  தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கஜேந் திரகுமார் பொன்னம்பலம், ஈழமக்கள் புரட் சிகர விடுதலை முன்னணியின் செயலா ளர் நாயகம் சுரேஷ்பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் செயலாளர் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய ஐவரும் கூடி தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து ஆராய்ந்தனர். (மேலும்) 17.02.10

__________________________________________________________________________________________________

இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் ஏற்றுமதி வரிச் சலுகையை இடைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

-B.B.C.News

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிவரும் ஜி.எஸ்.பி. பிளஸ் எனப்படும் இறக்குமதி தீர்வை சலுகையை ஆறு மாதங்கள் கழித்து தற்காலிகமாக நிறுத்துவது என்பதாக முடிவுசெய்துள்ளது. நல்ல ஆளுகை, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுக்காக வளர்ந்துவரும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் சலுகை இந்த ஜி.எஸ்.பி பிளஸ் ஆகும். மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட ஐ.நா.வின் மூன்று உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை காண்பித்த பெரிய குறைபாடுகளே இந்த முடிவுக்குக் காரணம் என்று ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது. இந்த சலுகை நிறுத்தத்தினால், இலங்கையில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கு ஏற்றுமதிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று இலங்கையின் ஏற்றுமதித் துறையினர் தெரிவித்துள்ளனர். 2009 ஆம் ஆண்டு டிசம்பரில், ஐரோப்பிய ஆணைக் குழுவினால் வெளியிடப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த சலுகை இடைநிறுத்தத்ததுக்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக சலுகை நிறுத்தம் இன்னும் 6 மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

__________________________________________________________________________________________________

தமிழீழக் கனவு இன்னும் கலையவில்லை: இலங்கை ராணுவ தலைமைத் தளபதி

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் போரில் மாண்ட போதிலும், தனித் தமிழீழத்தை வலியுறுத்துபவர்களின் கனவு இன்னும் கலையவில்லை என, இலங்கை ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜகத் ஜயசூரியா கூறினார். இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள கல்லாடி, தொப்பிகலா, வாகரை, புன்னானி ராணுவ முகாம்களுக்கு கடந்த வாரம் சென்ற ஜயசூரியா ராணுவ வீரர்கள் மத்தியில் பேசுகையில் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது: விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்களும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களும் இன்னமும் தமிழீழம் குறித்து விவாதித்து வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு, மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்ட போதிலும், தமிழீழம் குறித்த அவர்களது கனவு கலையவில்லை. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தற்போது கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காகவே ராணுவ வீரர்கள் பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளனர்; போரிடுவதற்காக அல்ல. நமது நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு ராணுவத்துக்கு உள்ளது. (மேலும்) 17.02.10

__________________________________________________________________________________________________

வவுனியாவில் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு தனி பாடசாலை

இலங்கையின் வடக்கே வவுனியாவில், உறவினர் நண்பர்களது வீடுகளில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த சுமார் நான்காயிரம் மாணவர்களுக்குத் தனியான பாடசாலைகளில் கல்வியூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வவுனியா காமினி மகாவித்தியாலயத்திலும், நெலுக்குளம் மகாவித்தியாலயத்திலும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் மாத்திரம் 2600 மாணவர்கள் கல்வி கற்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த மாணவர்கள் ஏற்கனவே வவுனியா மாவட்டப் பாடசாலைகளில் இணைந்து கல்வி கற்று வந்த போதிலும் இடநெருக்கடி உட்பட பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக இவர்களுக்குத் தனியான பாடசாலைகளை வவுனியாவில் அமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

__________________________________________________________________________________________________

அடிமைகளாக என்றாலும் ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என நினைத்தால் அது தவறு.

- சம்பந்தன் கூற்று.

பதில்

பிரபாகரன் புதுக்குடியிருப்பில் இருந்த போது அவர் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தார் - அப்போது ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்பு 22 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனி தனி கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு என்ன வேண்டுகோள் விடப்போகிறீர்கள் பிரபாகரனையும் அவருடைய சகாக்களையும் எப்படி மீட்பது மக்களை காப்பாற்றுவது தொடர்பாக கதைக்க அழைப்பு விட்டார். அதை உதாசினம் செய்தவர்கள் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இப்போது அறிக்கை விடுகிறார்கள். ஜனாதிபதியுடன் பேசினால்தான் எமது இனத்துக்கும் எமது மண்ணுக்கும் விடுதலை பெற்றுக் கொடுக்கலாம் காரணம் அவர் எமது நாட்டின் ஜனாதிபதி. அவருடன் கதைத்துப் பேசினால்;தான் எமது பிரச்சினைகளை தீர்க்க முடியும். இதில் இந்தியா சம்பந்;தப்பட்ட நாடுகள் நோர்வே அமெரிக்கா அரசியலில் இனக்கமான ஒரு பேச்சு வார்த்தையை நடத்தலாமே தவிர பிரச்சனையை தீர்க்க முடிவு சொல்ல மாட்டார்கள். மறுபடியும் மக்களை ஏமாற்ற கூட்டமைப்பு முனைகிறது. இப்படியே வீர வசனங்களை சொல்லிச்சொல்லி தமிழ் மக்களை மீண்டும் சிறைகளுக்கு செல்ல முயற்சி செய்கிறார்கள். இவர்களுடைய வீர வசனத்தால் விடுதலை பெற இருந்த சிறை கைதிகளின் விடுதலை மறுபரிசீலனைக்கு விடப்பட்டது.  (மேலும்) 17.02.10

__________________________________________________________________________________________________

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மீண்டும் மோதல்! மேலும் சிலர் வெளியேறலாம்.?

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம், ஈழமக்கள் புரட்சிக்கர விடுதலை முன்னணித் தலைவர் பத்மநாபா, தமிழீழ விடுதலைக் கழகத் தலைவர் சிறீ சபாரத்தினம் ஆகியோர் புலிகளால் கொல்லப்பட்டு மேற்கூறிய அமைப்புக்களின் செயற்பாடுகள் புலிகளால் தடைசெய்யப்பட்ட பின்னர், மேற்கூறிய அமைப்புக்களின் தலைவர்கள் தமது உயிருக்குப் பயந்து எவ்வித செயற்பாடுகளுமின்றி இருந்தனர். பாராளுமன்றம் செல்ல வேண்டுமானால் புலிகளின் அனுமதியின்றி தேர்தலில் நிற்க முடியாது. எனவே தமது தலைவர்களை புலிகள் அநியாயமாக கொன்றிருந்தாலும், புலிகளின் காலில் விழுவதன் மூலம் மட்டும்தான் பாராளுமன்றம் செல்ல முடியுமென்பதால் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட தமது தலைவர்களின் பிணத்தைக் கடந்து சென்று புலிகளின் காலில் விழுந்தார்கள்; சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோர்கள். புலிகளும் அவர்களை ஒன்றிணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். ஐரோப்பிய யூனியன் உட்பட உலக நாடுகளுமே கண்டித்து எள்ளி நகையாடுமளவிற்கு கள்ளவோட்டுப் போட்டு தேர்தலில் மோசடி செய்தார்கள் புலிகள். சம்பந்தன், சுரேஷ், அடைக்கலநாதன் போன்றோர் பாராளுமன்றம் சென்றார்கள். (மேலும்) 17.02.10

__________________________________________________________________________________________________

ஒற்றுமையை நோக்கி ஒரு காலடி!  

 - பாலன்

மக்களை நேசிக்கும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு!

அன்புடையீர் 

 தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெறுவற்கான எமது 30 வருடங்களுக்கு மேலான விடுதலைப் போராட்டம் பல்வேறு வடிவங்களும் மாற்றங்களும் அடைந்துள்ளது. ஏமது மக்களின் நலன்களை மனதில் கொண்டே நாம் போராட முனைந்தோம் ஏன்பதில் எள்ளவும் ஜயமில்லை. எனினும்; இவற்றினூடாக எமது மக்களுககு சாதிக்க முடிந்தவை என்ன என்பது அனைவரும் தெரிந்ததே. இதன் பக்க விளைவுகளாகவேனும் எமது சமூகத்தற்கு என்ன நன்மைகள் ஏற்பட்டன என்பதும் கேள்விக்குரியதே.. இப்போராட்டங்கள் எமது இனத்திற்கு எற்படுத்திய சீரழிவுகள்; இழப்புகள் வேதனைகள் காலத்தால் அழிக்க முடியாத கவலையை ஊட்டுவன. இருப்பினும் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் எமது நடைமுறை நம்பிக்கையான மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.  எமது துரதிஸ்ட வரலாற்று நிகழ்வுகளுக்கு பல காரணங்களைக் காட்ட முடியும். எனினும் இவற்றில் முதன்மையானதும் தொடர்ந்தும் எம்மால் பேணி பாதுகாக்கப்படுவதும் பாறாங் கல்லாக இடையில் கிடந்து எம்மை தடக்கி விழுத்துவதும் ஒற்றுமையின்மை என்பதாகும். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டமே! எமக்கிடையிலான பிரிவினைகள் தகராறுகள் பிடிவாதங்கள் என்பனவே எமது தோல்விக்கு அடிப்படையாக அமைந்தன. 
(மேலும்) 17.02.10

__________________________________________________________________________________________________

திர்வரும் பாராளுமண்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் இணைந்து போட்டியிடும் கிழக்கு மக்கள் ஐக்கிய முன்னணி ( ஈ பீ யு எவ் )

ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ் ) ஆகிய இரு அமைப்புக்களின் கூட்டறிக்கை

கிழக்கு மாகாணத்தில் வாழும் புத்திஜீவிகள் கல்விமான்கள் பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் புலம்பெயர் வாழ் கிழக்கு மாகாண நலன்விரும்பிகள் ஆகியோருடன் நீண்ட நாட்களாக மேற்கொண்ட கருத்துப்பரிமாற்றங்களில் இருந்து பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பின்வரும் முக்கிய கொள்கைகளின் கீழ் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கிழக்கு மக்கள் ஐக்கிய முன்னணியும் ( ஈ பீ யு எவ் ) ஈழவர் ஜனநாயக முன்னணியும் (ஈரோஸ் )இணைந்து எதிர்வரும் பாராளுமணறத் தேர்தலில் போட்டியிடுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை கிழக்கு மாகாண மக்களுக்கு அறியத்தருகிண்றோம். (மேலும்) 16.02.10

_________________________________________________________________________________________________

விழிப்புணர்வுகருத்தரங்கு                             

கந்தளாய் நிருபர்  எம்.ஜே.அன்வர் அலி.  

                             2010.02.15

 

kaathankudi காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் UNDP நிறுவனத்தினால் அமைக்கப்பட்டு வருகின்ற மலசலகூட அசுத்த நீர் சுத்திகரிப்பு சம்பந்தமான திட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில்; விழிப்புணர்வை ஏற்படு;த்தும் கருத்தரங்கும் கலந்துரையாடலும் 2010.02.13ம் திகதி சனிக்கிழமை காத்தான்குடி வாசிகசாலை கேட்போர் கூடத்தில் காத்தான்குடி பிரதி நகரமுதல்வர் அல்ஹாஜ்.S.H.M அஸ்பர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. UNDP  நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகர் திரு.விக்ரமஆராச்சி  பொறியியலாளர் K.L.M.றசீன் ஆகியோரால் விளக்கவுரை வழங்கப்பட்டது.  மேற்படி நிகழ்வில் காத்தான்குடி நகரசபை UNDP இணைப்பாளர் M.T.A.றகுமான் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் புஹாரி மற்றும்  அரச உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.         வெளிநாடுகளில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மலசலகூட அசுத்தநீர் சுத்திகரிப்புத் திட்டத்தினை  பேராதனை மற்றும் மொறட்டுவ பல்கலைக்கழகங்களால் பரீட்சிக்கப்பட்டு வெற்றியடைந்த பின்னர் இலங்கையில் முதன் முறையாக பரீட்சார்தமான முறையில்; காத்தான்குடியில் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். (மேலும்) 15.02.10

__________________________________________________________________________________________________

ரணிலின் தீர்மானம் குறித்து சிறுபான்மை கட்சிகள் அதிருப்தி

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டாமென சில சிறுபான்மையினக் கட்சிகளின் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுத்த வேண்டுகோளை அவர் நிராகரிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு நடந்து கொண்டமை ஏமாற்றத்தை யும் அதிர்ச்சியையும் இக்கட்சித் தலைமைகளுக்கு ஏற்படுத்தியுள்ளதாக நம்பகரமான செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்குமிடையில் நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. அனைவரும் ஒள்றிணைந்து போட்டியிடுவது குறித்தும் இங்கு விரிவாகப் பேசப்பட்டது. இது தொடர்பில்“ ஐக்கிய தேசிய முன்னணிக்குள் ஓர் இணக்கப்பாட்டைக் காணும் வரைக்கும் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டி யிடுவது குறித்து தீர்மானமெதனையும் எடுக்க வேண்டாமென மனோ கணேசனும் ரவூப் ஹக்கீமும் ரணில் விக்கிரமசிங்கவைக் கேட்டிருந்தனர். (மேலும்) 15.02.10

__________________________________________________________________________________________________

சிறுபான்மைத் தமிழர் மகாசபைக்குள் நுழைய T.N.A முயற்சி

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான  ஏற்பாடுகள் முன்பராக நடக்கத்தொடங்கிவிட்டது. பல்வேறு கட்சிகளும் தமது அரசியல் வேலைகளை செய்வதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த காலங்களில் இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் போன்றஅமைப்புகள் எமது சமூகத்தில் நிலவிவரும் சாதியத்திற்கு எதிரான  சமூக விடுதலைப் போராட்டங்களை  மேற்கொண்டு வந்தது. அப்போராட்ட காலத்தில் அவ் அமைப்புகளுக்கு எதிராகவும் சாதிய சமூகத்தை பேணுகின்ற கட்சியாகவும் செயல்பட்டது தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் என்பதை நாம் அறிவோம். இவ்விரு யாழ் மேலாதிக்க மனம்படைத்த கட்சிகளின் சிந்தனையைக்  கடைந்தெடுத்த ‘நுரை’ தான் இன்றைய TNA என்பதில் யாரும் சந்தேகம் கொள்ள முடியாது.  இன்றைய யாழ்ப்பாண சனத்தொகையில் அதிகப் பெரும்பான்மையாக உள்ள சமூகம் தலித்துக்கள் தான். அதே நேரம்   ‘தமிழ்  தேசிய வேள்விக்கு’ பலிகொடுக்கப்பட்ட  பெரும்பான்மை இனமும் தலித்துக்கள்தான். (மேலும்) 15.02.10

__________________________________________________________________________________________________

மீள்குடியேற்றம்: 2500 பேர் இவ்வாரத்தினுள் சொந்த இடம் அனுப்பிவைப்பு

பொதுத் தேர்தலுக்கு முன்பதாக வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரையும் மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்று தெரிவித்தார். மீளக்குடியமர்த்தப்படுவதற்காக வவுனியா நிவாரணக்கிராமங்களில் தற்போது சுமார் 70 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே இருக்கின்றனர். இவர்களை கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா வடக்கில் மீளக்குடியமர்த்துவதற்கான பணிகளை அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் இணைந்து துரிதகெதியில் முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை இவ்வாரத்தினுள் மாத்திரம் 2500 பேர் மீளக் குடியமர்த்தப்பட விருப்பதாகவும் அரச அதிபர் கூறினார். மூன்று தினங்களுக்கு ஒரு முறை என்ற வகையில் நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.  (மேலும்) 15.02.10

__________________________________________________________________________________________________

இலங்கை பெளத்த பீடாதிபதிகளின் நேரடி அரசியல் தலையீடு

- B.B.C.News

இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள, முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதித்தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட வருமான சரத்பொன்சேகா அவர்களை விடுதலை செய்யுமாறு இலங்கையின் நான்கு முக்கிய பௌத்த பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன ஆகிய பௌத்தபீடங்களின் பீடாதிபதிகள் இணைந்து இந்தக் கோரிக்கையை எழுத்து மூலம் விடுத்திருக்கின்றார்கள். முன்னதாக நாட்டில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் நிச்சயமற்ற நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக இந்த நான்கு பீடாதிபதிகளும் பிப்ரவரி 18 ஆம் தேதி கண்டியில் மாநாடு ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதற்கடுத்தபடியாக சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை விடுத்துள்ளனர்.இலங்கையின் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முன்னின்று செயற்பட்ட சரத் பொன்சேகாவுக்கும், ஜனாதிபதிக்கும் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்சவுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடு இலங்கையின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதாக இந்த பீடாதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.

____________________________________________________________________________________________________

குறுகிய சிந்தனையே எமது பின்னடைவுக்குக் காரணம் முன்னாள் பிரதியமைச்சர்

வீ. புத்திரசிகாமணி:-

குடியுரிமை ரத்து முதல் தவறாக அமைந்தது

புளோட் அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்

1948 இல் நாடு சுதந்திரமடையும் பொழுது பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்தே காணப்பட்டது. உலக யுத்தத்தில் இலங்கை பாதிக்கப்படாமை, எமது ஏற்றுமதிப் பொருட்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பு, தேயிலை, தென்னை, இறப்பர் போன்ற பொருட்கள் அப்போது ஏற்றுமதி செய்யப்பட்டமை, போன்ற காரணங்களை இதற்கு காரணமாகக் கூறலாம். அசிய நாடுகளைப் பார்த்தால் ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் இரண்டாவது உலக யுத்தத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டன. அந்த நாடுகள் அதிலிருந்து மீட்சி பெறுவதற்காக துரிதமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தன. மக்களும் ஒத்துழைப்பு வழங்கினர். ஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரையில் அனைத்தும் கிடைக்கின்றதால் எதையும் தேட வேண்டியதில்லை என்ற சோம்பல் மனோபாவம் நிலவி வந்திருக்கிறது. (மேலும்) 15.02.10

__________________________________________________________________________________________________

Tamil minorities to act with caution

V. Anandasangaree

Permit me to bring to your notice certain matters that I feel as relevant at this juncture The minority communities in Sri Lanka today  are facing the worst crisis not specifically in one field but almost in all fields that concern the humans. While all other minority communities have a fair amount  of representation in Parliament only the Tamils of the North and the East have no proper representation,  about which I do not want to elaborate at this juncture. Our problems have got accumulated over a period of several years.  Thuggery, intimidation, fraud and large scale impersonation  at all elections since 1989, resulted in the failure of the people to elect the representatives of their choice. It is the threat of arms that elected the people’s  representatives these 20-30 years not only to Parliament but also to almost all other Democratic Institutions. If the government is really serious about restoring democracy at all levels in the North and the  East, it should take action. (Read) 15.02.10

__________________________________________________________________________________________________

வெற்றிலைக்கேணி மாதா கோயில், படையினரின் முகாமாக மாற்றப்பட்டது கண்டு யாழ். ஆயர் அதிர்ச்சி

- வெற்றிலைக்கேணி யில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க ஆலயமான கப்பல் ஏந்திய மாதா கோவில் படையினரின் முகாமாக மாற்றப்பட்டுள்ளதாக யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார். அண்மையில் வன்னி மற்றும் வடமராட்சி ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்ட ஆயர், வடமராட்சி கிழக்கில் உள்ள வெற்றிலைக்கேணியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கப்பல் ஏந்திய மாதா கோவில் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளதை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார். தேவாலயம் மிகப்பெரும் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ள விவகாரத்தை ஊடகங்க ளுக்கோ அல்லது வேறு அமைப்புக்களுக்கோ தெரிவிக்க வேண்டாம் என இராணுவம் ஆயருக்கு உத்தரவிட்டுள்ளது. வன்னிப் பகுதிக்கு சென்ற ஆயர் அங்கு உள்ள பெருமளவான தேவாலயங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வெற்றிலைக்கேணி மாதா ஆலயம், மிகப் பெரும் இராணுவத் தளமாக மாற்றப்பட்டுள் ளதுடன், அதனை சுற்றி வேலிகளும், காவல் நிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

____________________________________________________________________________________________________

அரசியல் தீர்வு பற்றி இவர்கள் பேசுவது தமிழ் மக்களின் துரதிஷ்டம்

கடந்த சில நாட்களாக சரத் பொன்சேகாவின் கைது தான் சூடான விவகாரம். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின் சோர்ந்து போயிருந்த எதிரணிக்காரர்கள் அவல் கிடைத்தது போல நன்றாக மெல்கிறார்கள்.  பொன்சேகாவின் கைதுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே. வி. பியும் கடந்த புதன்கிழமை உச்ச நீதிமன்றத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. உச்ச நீதிமன்றத்தை எதற்காகத் தேர்ந்தெடுத்தார்களோ தெரியாது. இது பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தெரிவாக இருக்கலாம். நீதிமன்றத்துடனும் நீதியரசர்களுடனும் முரண்படும் பாரம்பரியம் அந்தக் கட்சிக்குத் தாராளமாக உண்டு. ஜே. ஆர். ஜயவர்த்தன புதிய அரசியலமைப்பை நடைமுறைக்குக் கொண்டுவந்த வேளையில் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் எல்லோரையும் இராஜினாமா செய்ய வைத்துத் தான் விரும்பியவர்களை நியமித்தார். அரசாங்கத்துக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் வீடுகளுக்குக் கல்லெறிந்த கதையும் உண்டு. இந்த ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டதென்பதை விளங்கிக் கொள்வதற்கு அதிக நேரம் எடுக்காது. எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டமென்றால் அமைதியாக எதிர்ப்பைத் தெரிவித்திருக்கலாம். (மேலும்) 15.02.10

__________________________________________________________________________________________________

பொதுத் தேர்தல்

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து ஜனாதிபதி பதவி ஏற்கும் காலம் 2010 நவம்பர் 19ம் திகதி என அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்து பொது தேர்தல் அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டபடி பாராளுமன்றம் நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டதாக அரசாங்கவர்த்தமானி தெரிவிக்கின்றது. வர்த்தமானி அறிவித்தலின்படி பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறும். வேட்புமனு தாக்கல் இம்மாதம் 19 திதி முதல் 26ம் திகதி வரை இடம்பெறும். பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட முன்னமே பிரதான கட்சிகளின் தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடிக்க தொடங்கிவிட்டன. வேட்பாளர்களை கட்சிகள் அறிவிக்கமுன்னரே வேட்பாளர் என சிலருடை தேர்தல் சுவரொட்டிகள் தலைநகரெங்கும் காணப்படுகின்றன. ஜனாதிபதி தேர்தலில் இரு வேறு அணிகளாக செயற்பட்ட கட்சிகளின் கூட்டு பொதுத் தேர்தலில் தொடருமா என்பது சந்தேகமே. குறிப்பாக எதிர்கட்சிகள் கூட்டாக போட்டியிடுவதானால் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பதில் அவர்களிடையே முரண்பாடு காணப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சின்னமான அன்னமா? அல்லது பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானையா பொது தேர்தல் சின்னம் என்பதுதான் எதிர்கட்சிகளிடையே தோன்றியுள்ள இழுபறி நிலைக்கு காரணமாகும். (மேலும்) 13.02.10

__________________________________________________________________________________________________

மரணமடைந்த யாழ். பல்கலைக்கழக மாணவன் மாணவி தொடர்பாக விஷமத்தனமான செய்திகள்! பெற்றோர் விசனம்!!

யாழ். இருபாலை பெரியகுளத்தில் சடலங்களாக மீட்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவனினதும் மாணவியினதும் மரணங்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக மரணமாணவர்களின் பெற்றோர் கடும் விசனத்தை வெளியிட்டுள்னர். தற்கொலை செய்துகொண்டவர்களின் பெற்றோர் வவுனியா அகதி முகாமில் இருப்பதாகவும் மாணவன் அவயவத்தை இழந்தவர் என்பதுடன் எவ்வித உதவியுமற்ற நிலையில் தாம் தற்கொலை செய்துகொள்வதாக எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மேற்படி செய்திகள் புலிகளின் இணையச் செய்திகளிலேயே முதலில் வெளிவந்ததுடன் வழமைபோலவே உள்ளுர் பத்திரிகைகள் அதனை அப்படியே பிரசுரித்திருந்தன. ஆயினும் தமது மரணத்திற்கு தாமே காரணம் என்ற விடயம் மட்டுமே அக்கடிதத்தில் காணப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது. (மேலும்) 13.02.10

__________________________________________________________________________________________________

அரச அதிகாரிகளிடமும் மனமாற்றம் வேண்டும்.

‘அரச கரும மொழி அமுலாக்கம்...’ இது அடிக்கடி நமது காதுகளில் ஒலிக்கும் வார்த்தை. நமது நாட்டில் மொழி அமுலாக்கம் முழுமையாக நடைமுறையில் இருக்கிறதோ? இல்லையோ? அரசாங்க மட்டத்தில் இது பேசப்பட்டு வரும் சொல்லாகிவிட்டது. இந்த நாட்டில் தமிழும், சிங்களமும் அரச கரும மொழிகள். அரசியல் யாப்பிலும் இது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. என்றாலும், தமிழ் மொழியை அரச கரும மொழியாக நடை முறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் இதுவரை தீர்ந்ததாக இல்லை. ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மொழி அமுலாக்கலுக்கான கொள்கைகளை பிரகடனப்படுத்தினார்களேயொழிய நடைமுறைப்படுத்தலில் இருந்த தடைகளை அகற்ற முயலவில்லை. ஆனால், ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசு எடுத்திருக்கும் யதார்த்தத்துடனான நடவடிக்கை புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மொழி அரசகரும மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதும் பல்வேறு காரணங்களால் அது முழுமையாக நடை முறைப்படுத்தப்படவில்லை. இதற்கு, தமிழ் மொழி பயிற்சி வழங்கக் கூடிய போதிய வேலைத் திட்டங்கள் இல்லாமையும், அரசாங்க நிறுவனங்களில் தமிழில் செயலாற்றக் கூடியவர்கள் பற்றாக்குறையாக இருப்பதும் முக்கிய காரணங்களாக அமைகின்றன. (மேலும்) 13.02.10

__________________________________________________________________________________________________

பொன்சேகாவின் கைது இராணுவ ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கை எதிர்க்கட்சித் தலைவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் சம்பந்தமாகக் கலந்துரையாடப்பட்ட போதும் சரத் பொன்சேகாவின் கைது தொடர்பிலேயே விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ; சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளமை எவ்வகையிலும் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதொன்றல்ல. இராணுவ ஒழுக்கம் மற்றும் இராணுவ சட்டத்திற் கிணங்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யாகும் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த ஜனாதிபதி, தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன் சேகாவுக்குத் தேவையான சகல வசதிகளும் எவ்வித குறைபாடுகளுமின்றி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் கைது செய்யப்பட்டமை சம்பந்தமாக நீதிமன்றத்திற்குச் செல்வதற்கும் உரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. (மேலும்) 13.02.10

____________________________________________________________________________________________________

வெற்றி தோல்விகள் எப்படிச் சமன் செய்யப்பட வேண்டும்?

-கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன

தமிழர்களிடம் இருக்கின்ற இந்தப் பொதுக்குணம் அவர்கள் எங்கே எத்தகைய நவீன வசதிகள், கல்வி வாய்ப்புகளுடன் வாழ்ந்தாலும் இலகுவில் விட்டுப் போவதில்லை. விதிவிலக்காக சிலர் இருந்ததாலும் அவர்களை இலகுவில் இந்த இனவிவகாரங்களைச் சொல்லி சீண்டிவிட்டால் போதும் உடனே அத்தனை நரம்புகளும் சிலிர்க்க பொங்கியெழுந்து விடுவார்கள். இதுதான் அநேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த உணர்ச்சி அரசியலில் உணர்ச்சிக்கு வெளியே அறிவு பூர்வமாகச் சிந்திக்கும் ஆட்கள் உடனடியாக எதிர்க்கணியத்துக்குள் தள்ளப்பட்டுவிடுவார்கள். அவர்களின் மீது வசைபாடுதல்கள், புறக்கணிப்புகள், எதிர்ப்புகள் என்றவகையான எதிர் நடவடிக்கைகள் தாராளமாக நடப்பதற்கும் இதுவே காரணம். இதனால்தான் விமர்சனமற்ற அரசியல் முறைமை தமிழ்ச் சூழலில் கொண்டாடப்படுகிறது. விமர்சனம் என்பது பரிமாணங்களையுடையது. பரிணாமத்தையுடையது. அது அறிவு சார்ந்தது. விஞ்ஞானபூர்வமானது. அறிவை நிராகரிக்கிற அரசியலில், உணர்ச்சி அரசியலில் விருப்பு வெறுப்புகள், அணிகள், குழுக்களுக்கே முன்னுரிமை இருக்கும். அதன் தெரிவுகள் எப்போதும் உணர்ச்சி நிலை நின்றே தீர்மானிக்கப்படுவதால், பல சந்தர்ப்பங்களிலும் அது யதார்த்தத்தை விட்டு விலகியே நிற்கிறது. இந்தத் தடவை ஜனாதிபதித் தேர்தலின் போதும் இதுதான் நடந்திருக்கிறது. (மேலும்) 1.02.10

____________________________________________________________________________________________________

ஆயுதம் ஏந்தியோர் தேர்தலில் போட்டியிட முடியாது : முரளிதரன்

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ஆயுதம் ஏந்தியிருக்கும் எவரையும் போட்டியிட அனுமதிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் வினாயகமூர்த்தி முரளிதரன் அறிவித்திருப்பதாக அவரது ஊடகப் பேச்சாளர் எமது இணையத் தளத்துக்கு தெரிவித்தார். ஆயதங்களைக் களைந்து வன்முறைக் கலாசாரத்தைக் கைவிட்டு ஜனநாயக வழியில் இருப்போரே கிழக்கு மாகாணத்தில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவர் என அவர் மேலும் தெரிவித்ததாக ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

__________________________________________________________________________________________________

தேர்தலில் போட்டியிட்டதற்காக பொன்சேகாவுக்கு விசேட சலுகைகள் வழங்க சட்டத்தில் இடமில்லை

நாட்டில் கலவரம் வெடிக்கும் என்பதாலோ அரசியல் காரணங்களுக்காகவோ சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்டத்தினை அமுல்படுத்தாமல் இருக்க முடியாது. சட்டத்தின் முன் அனைவரும் சமனாகும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதற்காக அவருக்கு விசேட சலுகை எதனையும் வழங்க சட்டத்தில் இடமில்லையென ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (11) தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, நாட்டில் அமுலில் உள்ள சட்டத்தின் பிரகாரமே சரத் பொன்சேகா மீது இராணுவ நீதிமன்றத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராணுவ சட்டம் 1949 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்படுத்தப்படுகிறது. இராணுவ ஒழுக்கவிழுமியங்களை பாதுகாப்பதற்காக இந்தச் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் நோக்கமோ தலையீடோ கிடையாது. (மேலும்) 12.02.10

____________________________________________________________________________________________________

'He was definitely planning a coup'

Ravi Velloor interviews Sri Lanka's Defence Secretary on the former Army Chief.

SOON after Mahinda Rajapaksa took charge as president of Sri Lanka in late 2005, he appointed younger brother Gotabaya, a former infantry officer, to the critical post of Defence Secretary. At Cabinet meetings, Mr Gotabaya would listen as the debates swirled on how to tackle the Tamil Tiger separatist insurgency that had roiled his nation for a quarter century. Many thought a political settlement was the only way out. "Gotha", as he is known, was convinced otherwise. He soon set about beefing up the military, organising the weapons and other supplies needed to take on the world's deadliest guerilla force. Arms came from the Ukraine, China and Pakistan. Valuable intelligence inputs came from India, whose former prime minister, Rajiv Gandhi, had been assassinated by a woman Tiger.
 (Read) 12.02.10

____________________________________________________________________________________________________

ஜி..எஸ்.பி சலுகை நீக்கப்படலாமென்ற பயப்பிராந்தி அவசியமற்றது

ஆடைக் கைத்தொழில் துறை முக்கியஸ்தர்கள் கருத்து; புதிய உலக சந்தை வாய்ப்பை தேடுமாறும் வேண்டுகோள்

மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஜி. எஸ். பி. பிளஸ் வரிச் சலுகை நீக்கப்படலாம் என்று இலங்கையில் காணப்படும் பயப்பிராந்தி அவசியமற்றது. இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் புதிய உலக சந்தை வாய்ப்புகளை தேடிப்பெற வேண்டும். நேற்று முன்தினம் கொழும்பு ஹில்டன் ஹோட்டல் அரங்கில் இடம்பெற்ற சர்வதேச ஆடைத் தொழில் கண்காட்சி தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின் போது அங்கு உரையாற்றிய ஆடைக் கைத்தொழில் துறை முக்கியஸ்தர்களினால் இக்கருத்து முன்வைக்கப்பட்டது. செம்ஸ் குளோபல் நிறுவனத்தின் தலைவரும் குழும முகாமைத்துவ பணிப்பாளருமான மெஹ்ரூன் இஸ்லாம் இது தொடர்பாக தெரிவிக்கையில், ஜி. எஸ்.பி. பிளஸ் சலுகை சுனாமி அனர்த்தத்தின் பின்னர் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒன்றெனவும் இச்சலுகை இல்லாவிட்டால் வேறு வழியே கிடையாது எனக் கருதுவது தவறான அணுகுமுறை எனவும் குறிப்பிட்டார். (மேலும்) 12.02.10

____________________________________________________________________________________________________

பொன்சேகாவின் கைதை அரசியலாக்கி தேர்தலில் பயன்படுத்த எதிர்க்கட்சி முயற்சி’ கைது அரசியல், தனிப்பட்ட ரீதியானதொன்றல்ல!

இராணுவச் சீருடையிலிருந்து கொண்டே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை, முப்படைகளின் தளபதிக்கு எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபட்டமை, இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற படையினரை ஆயிரக்கணக்கானோருக்குப் பாதுகாப்பளித்தமை, இராணுவ ஆயுதக் கொள் வனவுகளில் இடம்பெற்றுள்ள மோசடிகள் என பல்வேறு குற்றச் சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டே சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிணங்க முறைப்படி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசாரணைகள் முடிவுறும் வரை இது குறித்து கருத்துக்களை வெளி யிடக்கூடாது. இன்னும், விசார ணைகள் முற்றாக நிறைவடைய வில்லை என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும். இராணுவ சட்டதிட்டங்களின்படி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி யொருவர் இராணுவ சட்டதிட்டங் களை மீறுவாறேயாகில் இராணுவப் பொலிஸாரால் அவர் கைது செய்ய ப்பட்டு சம்பந்தப்பட்ட குற்றச் சாட்டுக்கள் நிமித்தம் இராணுவ நீதிமன்றத்தில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது வழமையான தொரு நடைமுறையாகும். (மேலும்) 11.02.10

____________________________________________________________________________________________________

உச்ச நீதிமன்று முன் ஆர்ப்பாட்டம்: குழப்பம் விளைவிக்க ஐ.தே.க., ஜே.வி.பி முயற்சி: கல்வீச்சில் 3 பொலிஸ் உட்பட ஐவர் காயம்; 12 வாகனங்கள் சேதம்

கொழும்பு, புதுக்கடை உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயன்ற ஐ. தே. க., ஜே. வி. பி. ஆதரவாளர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்ட போது அவர்கள் கற்களை வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். சுலோகங்களை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு கற்களை எறிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நடத்திய தாக்குதல்களில் பொலிஸார் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் கல்வீச்சுக்களால் மூன்று பொலிஸாரும், இரண்டு சிவிலியன்களும் படுகாயமடைந்துள்ளதுடன் 12 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார். பொலிஸாரின் எட்டு வாகனங்களும், பொதுமக்களின் நான்கு வாகனங்களையுமே ஆர்ப்பாட்டக்காரர்கள் சேதப்படு த்தியுள்ளனர் எனத் தெரிவித்த அவர், நிலைமையை கட்டுப்படுத்த கண் ணீர்ப்புகைப் பிரயோகம் செய்யப் பட்டதாகக் கூறினார். (மேலும்) 11.02.10

 

Home /Page -1 /Page-2 / Page -3 / Page-4 / Page-5 / Page-6 /Page-7 /

wanni

ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கும், 1970 பொதுத் தேர்தல் முடிவுக்கும் உள்ள ஒத்த தன்மைகள்!

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தெரிவித்திருக்கு ம் செய்திதான் என்ன?