யாழில் படையினர் விவசாயம் செய்து அவற்றை விற்பனை செய்வது இல்லை

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வசமிருக்கின்ற பொதுமக்களின் காணிகளில் படையினர் விவசாயம் செய்து, அதனை சந்தைகளில் விற்பனை செய்வது இல்லை என angajanவிவசாய பிரதி அமைச்சர் அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவ்வாறு படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால் அதனை உடனடியாகத் தான் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். கோவில் வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது பொதுமக்களின் காணிகளில் படையினர் விவசாயம் செய்வதால் பல்வேறு பாதிப்புக்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அங்கு விவசாய பிரதி அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் படையினர் வசமிருக்கின்ற காணிகளை விடுவிப்பதற்கு வழங்க வேண்டும் என படையினர் கோரியிருக்கின்ற போது அதற்கு எவ்வளவு நிதி வேண்டும் என ஆராய்ந்து அதனை அரசாங்கம் வழங்க வேண்டு மென்று கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் சொல்லி இருக்கின்றனர்.

படையினர் வசமிருக்கின்ற காணிகளில் எங்கள் மக்கள் தான் வேலை செய்கின்றனர். அங்கு செய்யப்படுகின்ற விவசாய உற்பத்திப் பொருட்களை குறிப்பாக மரக்கறி வகைகளை இங்குள்ள சந்தைகளில் விற்பதில்லை. அவர்கள் தங்கள் தேவைகளுக்காகவே அதனைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனாலும் இராணுவத்தினரால் உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படுவது தொடர்பில் வடக்கு மாகாண சபையில் இருந்த போதே நான் பேசியிருக்கின்றேன். அத்தோடு விவசாய அமைச்சரையும் சந்தித்து அண்மையில் பேசியிருக்கின்றேன். மேலும் படையினர் மேற்கொள்ளும் விவசாயத்தையும் பார்த்திருக்கின்றேன்.

ஆனால் அவர்கள் செய்கின்ற உற்பத்திகள் இங்குள்ள சந்தைகளுக்கு வரப் போவதில்லை. அத்தோடு அவர்கள் தொடர்ந்தும் அந்த உற்பத்திகளைச் செய்யமுடியாது. ஏனெனில் மக்களின் காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என ஐனாதிபதி கூறியிருக்கின்றார்.

அதற்கமைய காணிகளும் விடுவிக்கப்பட இருக்கின்றது. அதுவரையில் அந்தக் காணிகளில் அவர்கள் விவசாயம் செய்தாலும் பரவாயில்லை. ஏனெனில் மக்களிடம் அக் காணிகள் கையளிக்கப்படும் போது அந்தக் காணிகள் வளப்படுத்திய காணிகளாக விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும். ஆகவே இதன் பயன் மக்களையே சென்றடைய இருக்கின்றது.

இதேவேளை மருதனார் மடம் மற்றும் திருநெல்வேலி சந்தைகளில் இராணுவத்தினரின் வாகனங்களில் இராணுவச் சீருடையுடன் வந்தே இராணுவத்தினர் மரக்கறிகளை விற்பனை செய்வதாக ஊடகவியியலாளர்கள் தெரிவித்த போது அதனை மறுத்த அங்கஐன் இராமநாதன் இதற்கான ஆதாரம் இருந்தால் உடனடியாக அதனைத் தான் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

இச் சந்திப்பின் முடிவில் இந்த விடயம் தொடர்பில் மாவட்ட இராணுவத் தளபதியுடனும் தொலைபேசியில் உரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Theneehead-1

   Vol:17                                                                                                                               23.10.2018